reservoir dogs(1992)(18+)ரிசர்வாயர் டாக்ஸ்

ரிசர்வாயர் டாக்ஸ் (நீர்த்தேக்க நாய்கள்)
-----------------------------------------------------------

ஏழு அன்னியர்கள்,கொள்ளையடிக்க ஒன்று கூடுகின்றனர்.ஒருவருக்கு மற்றொருவர் பெயரோ ஊரோ, தெரியாது. ஆனால் அவர்களின் வண்ணம் தெரியும்.நாய் நீந்துகையில் முழு உடலை நீருக்குள் வைத்து தலையை மட்டும் தூக்கி  நீந்தும்.அதுபோல தங்கள் பெயரை , ஊரை மறைத்து இவர்கள் கொள்ளைக்கு புறப்பட்டதால் நீர்தேக்க நாய்கள்,என பெயர் வந்ததாம்.

1992 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளோடு வெளிவந்த
குவென்டின் டாரன்டினோவின் முதல் படம்,
அவர் எழுதி ,இயக்கி கொள்ளையரில் (mr.பிரவுன்)ஒருவராய் நடித்தும் இருக்கிறார்.
படத்தில் நிறைய மேல்தட்டு ரசனை கொண்டோருக்கான நகைச்சுவையும் ,
ஊசிப்பட்டாசு வெடித்து சிதறுவது போல வசனங்களும் உண்டு.
புரிந்தால் நன்கு ரசித்து சிரிக்கலாம்.
இந்த படத்திலும் எடிட்டிங்கில் nonlinear storyline.வகை யுத்தியை பயன்படுத்தியுள்ளனர்.
இசையில் தான் ஒரு நல்ல ரசிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
படம் முழுவதும் K-Billy's "Super Sounds of the '70s",ஆல்பத்தை பயன்படுத்தி கிரங்கடித்துள்ளார்.
வைர நகை கடை கொள்ளையை மையமாக வைத்து படம் நகர்ந்தாலும்,
ஒரு காட்சியிலும் அந்த கொள்ளையை காட்டாமல் கதையை நகர்த்தி சென்றுள்ளார்.
(வாயாலே
ருசியான வடைசுடுதல் போல)
கொள்ளைக்கு முன்பும் பின்புமான கொள்ளையர்களின் மன நிலையை சாமர்த்தியாமாய் காண்பித்தும், பல நுட்பங்களையும் கையாண்டுள்ளார். இந்த படத்தில் நிறைய செய்திகளை நமக்கு சொல்லாமல் சொல்கிறார். வல்லவன் வாழ்வான். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான். கண்ணால் பார்ப்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.போன்று. இன்னும் பல.


இந்த படத்திற்கான ஒப்பனை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இதில் நிஜ ரத்தத்தை குண்டு துளைத்து ரத்தம் வெளியேறும் காட்சிகளுக்கு பயன்படுத்தினாராம். ஒரு காட்சியில் தன்னிடம் மாட்டிக்கொண்ட போலீஸ் காரனை நாற்காலியில் கட்டிபோட்டு ஒரு சைக்கோ கொள்ளையன் (mr.blonde)அவரின் வலது பக்க காதை அறுப்பான். அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தவும் போவான். இது போன்ற காட்சிகள் எல்லாம் மிக தத்ரூபமாக எடுக்கப்பட்டு நம்மை உண்மையோ? என்று நம்ப வைக்கின்றன.


குருதிப்புனல்,மற்றும் ஹாஸ்டல் போன்ற சித்திரவதை புகழ் படங்களுக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். படத்தில் நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் இல்லா mr.orange joe வின் கேங்கில் இணைந்த பின் போலீசின் உதவியுடன் பக்கம் பக்கமாக நகைச்சுவை வசனங்களை பேசி அந்த கேங்கையே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறான். நடக்கும் காட்சிகளை காட்டாமல் விட்ட இயக்குனர், mr.orange joe விடம் விடும் புருடாவுக்கு காட்சி வைத்து கவிதை படைத்திருக்கிறார்.(வாலி படத்தில் ஜோதிகா வரும் சீன் போல)


அப்புறம் joe கொள்ளைக்கான திட்டத்தை விளக்கி ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்கையில் mr.பிங்க் எழுந்து தமக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை, (பிங்க் என்பது ஓரின சேர்க் கையாளரை குறிக்கும் வண்ணம்) ஆகவே எனக்கு மாற்றிக் கொடு என்று வியாக்கியானம் பேச. joe கண்டிப்பான குரலில் நீ ஒரு ஓரினசேர்க்கையாளன் தானே ?அதிலென்ன சந்தேகம்,மூடிக்கிட்டு அமர்வதேன்றால்,இரு ,வந்தால் என்வழி,போனால் தெரு வழி என்று சொல்வார் பாருங்கள். இந்த மாதிரி நகைச்சுவை காட்சிகளை முழு நீள காமடி திரைப்படங்களிலும் நாம் காண்பது துர்லபமே.


படம் முழுவதும் புனை பெயர்களையே கதாபாத்திரங்களை அழைக்க பயன்படுத்தியது "very proffesionalism" இது தான் நுட்பமான படைப்பு என்பது. மிக வேகமான திரைக்கதை. சீட்டுக்கட்டை கலைத்து போட்டது போல கோர்வை இல்லாத காட்சிகள், அவற்றை வேண்டிய இடத்தில் சந்திக்க வைப்பது என்று , இயக்குனர் மனதில் நின்றுவிட்டார்.

படத்தின் கதை

-----------------------------
கோட்டு சூட்டுகள் அணிந்த ஆறு பேர்களான
Mr. Blonde (Michael Madsen),
Mr. Blue (Eddie Bunker),
Mr. Brown (Quentin Tarantino),
Mr. Orange (Tim Roth),
Mr. Pink (Steve Buscemi),
Mr. White (Harvey Keitel).

அவர்களுடன் டி ஷர்ட் அணிந்த லாஸ் ஏஞ்சல்சின் பிரபல கொள்ளையர் தலைவன் Joe Cabot (Lawrence Tierney), ம் அவரது மகன் "Nice Guy"என்ற Eddie (Chris Penn). ம் பர்கர் கிங்கில் காலை சிற்றுண்டி சாப்பிடுவது போல கதை ஆரம்பிக்கிறது. அப்போது joe வின் மகன் Madonna's "Like a Virgin", என்ற ஆல்பத்தை பற்றி சிலாகித்து புகழ்கிறான்.மெய் மறக்கிறான். சிற்றுண்டி முடித்து பில்லை Joe செலுத்துகிறார். டிப்சை மற்ற ஏழு பேரிடமும் தலா ஒரு டாலர் தலைக்கு வீதம் கொடுக்க சொல்லுகிறார். பிங்க் என்பவன் தாம் எப்போதும் டிப்ஸ் கொடுப்பதில்லை என்று வியாக்கியானம் பேச,அவர் அவனை கண்டிப்பான தொனியில்
கஞ்சத் தேவடியாப்பயலே... . ஊரோடு ஒத்துவாழ்.


நீ தரும் டிப்சை வைத்து தான் இந்த பணிப்பெண்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர் .நான் உன் சிற்றுண்டிக்கு பணம் தந்திருக்கிறேன். நீ ஒரு டாலர் தர அழுகிறாயே? என்று செல்லமாக திட்ட,அவன் பணம் தருகிறான். பின்னர் எல்லோரும் வெளியேறுகின்றனர்.


காட்சி மாறி

 
இப்போது Mr. White ஒரு வெள்ளைய பெண்ணிடம் திருடிய காரில், காரை திருடுகையில் வெள்ளையப் பெண்ணால் வயிற்றில் சுடப்பட்ட, Mr. Orange ஐ பின்சீட்டில் கிடத்தி, ஒற்றைக்
கையால் அவனை சமாதான படுத்திக்கொண்டே, ஒற்றைக் கையால் வண்டியை வேகமாக ஓட்டிச்சென்று, அவர்களின் ரகசிய சந்திப்பு இடமான, ஒரு பழைய கிடங்கு கட்டிடத்திற்கு சென்று, அவனை கை தாங்கலாக அழைத்துபோய் தரையில் கிடத்துகிறார்.

Joe வந்ததும் வயிற்றில் உள்ள குண்டை எடுக்க மருத்துவரை அழைத்து வரலாம் என்கிறார்.
அவன் வலியில் கதறுகிறான். இவர் அவனுக்கு சமாதானம் சொல்கிறார்.நீ வயிற்றில் தான் சுடப்பட்டாய், நீ இன்னும் இரண்டு நாள் கூட மன உறுதியால் தாக்கு பிடிக்கலாம், இருப்பதிலேயே கொடுமையான வலி எது தெரியுமா? (kneecap)கால் மூட்டு எலும்பில் குண்டு துளைத்து படும் வேதனை தான். என்று தன் அனுபவத்தை சொல்ல. பின்னர் அவனுக்கு தன் அசல் பெயரையும் ஊரையும் சொல்கிறார். பின்னர் அவனுக்கு தலை வாரி விடுகிறார். 


இவன் தன்னை ஏதேனும் ஒரு ஆஸ்பத்திரி வாசலில் தூக்கி போட்டு விட்டு செல். நான் யாரிடமும் உண்மையை சொல்லமாட்டேன் என்று கதற. அப்போது கதவு திறந்து Mr. பிங்க் கொள்ளையடித்த வைரங்கள் அடங்கிய பையுடன் உள்ளே வந்து, கோபமாக கத்துகிறான்,
தான் தப்பி வரும்போது உயிரை காத்துக் கொள்ள மூன்று போலீஸ் காரர்களை சுடவேண்டியதாகிவிட்டது.என்கிறான். இவரும் கொள்ளையடித்து விட்டு தப்பி வருகையில் போலீஸ் சுட்டதில், Mr. பிரவுன் இறந்து விட்டான்,என்றும். காரை பிடுங்குகையில் ஒரு வெள்ளைய பெண்மணி சுட்டதில் Mr. Orange உயிருக்கு போராடுகிறான் என்கிறார்.


இவன் மற்ற அனைவரும் எங்கே?தலைவன் joe எங்கே? என கோபமாக கேட்கிறான். joe வை சந்தேகிக்கிறான். அவன் தான் போலீசில் இருந்து தன்னையும் தன் மகனையும் காத்துக் கொள்ள பழைய கூட்டாளிகளை திட்டமிட்டு மாட்டி விட்டிருப்பான். என்றும் கருவுகிறான்.
Mr. White அவனை சமாதானப்படுத்துகிறார். பின்னர் Mr. Blonde உள்ளே வருகிறான். (இவன் joe வுக்கு மிகவும் விசுவாசி) கொள்ளையடித்து விட்டு வரும் வழியில் mr.ப்ளூ போலீஸ் சுட்டதில் இறந்து விட்டான், என்றும்.தான் மூன்று போலீசை சுட்டு விட்டதாகவும்.


மற்ற பங்காளிகளில் யார் இறந்தது ?யார் உயிருடன் உள்ளார்? என்ற விபரங்களை கேட்கிறான். தங்கள் கும்பலுக்குள்ளே இருக்கும் கறுப்பாடு யார் என்று விவாதிக்கிறனர். அப்போது Mr. பிங்க் மற்றும் Mr. Blonde இருவரும் நீதான் கறுப்பாடு என்று அடித்துக் கொள்ள. இவன் பிரித்து விடுகிறான். அப்போது என்னை சந்தேகப்படாதே. நான் கொள்ளையடிக்கப்போன இடத்தில் தப்பிக்கும் போது ஒரு போலீஸ் காரனையே பிடித்து காரின் டிக்கியில் போட்டு கடத்திக் கொண்டு வந்திருக்கிறேன். அவனை விசாரிப்போம்.உண்மை தெரியும் என்கிறான். mr.blonde முதலில் அவனது சுண்டு விரலை அறுப்போம்,


அவன் எதையும் சொல்லும்.மனநிலைக்கு வருவான்,பின்னர் அவனின் ஆட்காட்டி விரலையும் அறுப்போம். அவன் தான் போட்டிருப்பது பெண்கள் அணியும் உள்ளாடை என்பதையும் சேர்த்தே விளம்புவான் . என்று சொல்லி சிரிக்க. இப்போது அந்த போலீஸ் காரனை கட்டிப் போட்டு மூவரும் அடிக்க, joe வின் மகன் "Nice Guy" உள்ளே வருகிறான். இப்படியா திருட்டு கார்களை வெளியில் நிப்பாட்டுவீர்கள்,?பார்க்க பழைய கார் ஷோரூம் போலிருக்கு. அறிவு இல்லையா என்கிறான். போலீஸ் எப்படி? விபரம் சேகரித்து சுற்றி வளைத்தது என்பதை joe சிறிது நேரத்தில் கண்டு பிடிப்பார், இப்போது என்னுடன் வந்து திருட்டு கார்களை கொண்டு போய் அப்புறப்படுத்த உதவுங்கள் என்று அழைத்துபோகிறான்.போலீஸ் காரனை ஏன்? பிடித்துக் கொண்டு வந்தாய் என கோபிக்கிறான். Mr. Blonde ஐ மட்டும் காவலுக்கு விட்டு கிளம்ப, அவன் வெறியுடன் போலீஸ் காரனை நெருங்கி விசாரிக்க , அவன் தாம் வேலைக்கு சேர்ந்தே 8 மாதம் தான் ஆகிறது என்றும், தாம் சாதாரண கடைநிலை போலீஸ் என்றும் கதற. தன்னிடம் மேலதிகாரிகள் துப்புகளை பற்றி சொல்ல மாட்டார்கள் என்கிறான். அவன் பரவாயில்லை எனக்கு உண்மை வேண்டாம் , உன் உயிர் தான் வேண்டும் என்று துப்பாக்கியை கொண்டு சுடப் போக. அவன் மிரள.


ரேடியோவில் K-Billy's "Super Sounds of the '70s", which is playing "Stuck in the Middle With You" என்னும் பாடலை அலற விடுகிறான். அதற்கு ஏற்ப நடனமும் ஆடிக்கொண்டே இவன் அவனின் வாயை டேப்பால் ஒட்டி, அவனின் சவரக் கத்தியால் வலது காதை அறுக்கிறான். பின்னர் அதை தரையில் வீசி எறிகிறான். அவன் துடி துடிக்க,எங்கேயும் போகாதே என்று சொல்லிவிட்டு இவன் வெளியே செல்கிறான். காரின் டிக்கியை திறந்து பெட்ரோல் கேனை கொண்டு வந்து போலீஸ் மேல் ஊற்றி லைட்டரைக்கொண்டு கொளுத்த எத்தனிக்க. Mr. Orange ரத்த வெள்ளத்தில் இருந்து எழுந்து அவனை 10 ரவுண்டுகள் சுட்டு மீண்டும் சரிகிறான்.
போலீஸ் காரனிடம் தானும் ஒரு போலீஸ் தான் என்கிறான். இவன் தெரியும் என்கிறான். 2 தெருக்கள் தள்ளி ஒரு பெரும் போலீஸ் படையே joe வின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அது வரை நீயும் பொறு நானும் பொறுக்கிறேன் என்று சொல்ல. 

போலீஸ் காரன் அழுது கொண்டே என்ன மயிரை பிடுங்குகின்றனர்.?

அவன் என்னை அடித்து துவைத்து என் காதையும் அறுத்திருக்கிறான். என்ன மயிறு போலீசு என்கிறான். அவன் அவனை டேய் ,நானும் இங்கே செத்துக் கொண்டிருக்கிறேன். சும்மா இல்லை. வயிற்றில் குண்டு வாங்கி ஒரு லிட்டர் ரத்தத்திற்கும் மேலாக வெளியேறிவிட்டது.
மூடிக்கொண்டிரு என அதட்டுகிறான். இது ஒரு வருட திட்டம். என்று தான் எப்படி போய்? joe வின் கேங்கில் இணைந்தேன் என்பதை அவனுக்கு விளக்குகிறான். (குருதிப்புனலில் தனுஷ் என்பவன் பத்ரி கேங்கில் இணைவது போல) பின்னர் அவன் அமைதியாக. கதவை திறந்து மூவரும் உள்ளே வர ,


"Nice Guy" என்ன கொடுமைடா இது? என்று இறந்து போன Mr. Blonde ஐ காட்டி கேட்க, இவன் போலீஸ் காரனின் காதை அறுத்து, பின்னர் அவனை கொளுத்தி கொல்லப் பார்த்தான் என்றும் பின்னர் நீங்கள் மூவரும் வந்ததும் உங்களை கொன்று வைரங்களை தானே அபகரிக்க திட்டம் போட்டதால், தாம் அவனை கொன்றேன் என்று சொல்ல. பூ ...இந்த போலீசுக்குபோயா?என்று கோபத்தில் போலீஸ்காரனை சுட்டு கொல்கிறான். பின்னர் உண்மையை சொல் Mr. Blonde ஐ போல ஒரு விசுவாசியை பார்க்க முடியாது என்றும்,அவன் கொடுத்ததை வாங்கிக்கொள்பவன். எமக்காக அவன் நான்கு வருடம் சிறை சென்று திரும்பினான் என்றும் சொல்லி மிரட்ட. joe உள்ளே வருகிறார்.


வந்தவர் Mr. Orange தான் கருப்பு ஆடு என்று போலீஸ் துறையிலிருந்தே தகவல் வாங்கி விட்டதாக சொல்லி அவனை சுட எத்தனிக்க. Mr. White அவனை சுடக் கூடாது , எக்காரணம் கொண்டும் ஒரு அப்பாவியை தண்டிக்காதீர்கள், என்று இவரை குறி வைக்க. "Nice Guy" என் அப்பாவையே எதிர்க்கிறாயா? என்று அவனை குறி வைக்க, Mr. பிங்க் எவ்வளவோ தடுத்தும் பலனில்லாமல் விலகி ஒளிந்து கொள்ள. கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் சுட்டு கொள்கின்றனர்.


(joe வை Mr. White ம்
Mr. White ஐ "Nice Guy" ம்
"Nice Guy" ஐ Mr. Orange ம்)

 
அதில் joe வும் அவரின் மகனும் அதே இடத்தில் உயிர் விட, Mr. பிங்க் வைரங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அகல்கிறான். Mr. White தன் மடியில் Mr. Orange ஐ கிடத்தி தன்னால் மருத்துவ உதவி செய்ய முடிய வில்லை என மன்னிப்பு கேட்க, இவன் தன்னிடம் இவ்வளவு இறக்கம் காட்டும் அவனுக்காவது உண்மை சொல்லுவோம் என்று நான் ஒரு போலீஸ் ... என்னை மன்னித்துவிடு என்கிறான். இவன் மிரண்டு போய். அய்யோ joe வை போய் சுட்டோமே .. என்று இவன் Mr. Orange ஐ கன்னத்தில் துப்பாக்கியை வைத்து சுட, கதவை திறந்து வழக்கம் போல் லேட்டாய் வந்த போலீசு Mr. White ஐ சுட்டுத் தள்ள. அங்கே கிடங்கே ரத்த ஆறாக காட்சி தருகிறது.


K-Billy's "Super Sounds of the '70s", which is playing "Stuck in the Middle With You" by Stealers Wheel. என்னும் பாடல் பின்னணியில் அலற பெயர் போடப்படுகிறது. நமக்கு ஒரு நல்ல கேங்ஸ்டேர் படம் பார்த்த திருப்தியுடன் பலவித பரவசங்கள் கிடைக்கின்றன. இதில் மருந்துக்கு கூட கதாநாயகியோ , படுக்கை அறை காட்சிகளோ கிடையாது.ஆனால் நிலமெல்லாம் ரத்தம். படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைக்கிறீர்களா? அவர்கள் எங்கே ஐயா நடித்தார்கள்? ஒவ்வொருவரும் அந்த வண்ணங்களாகவே மாறி விட்டனர். நாம் என்னவோ ஒளிந்திருந்து நடப்பதை பார்கிறோமோ ? என்ற பதட்டமும் வராமல் இல்லை. இதையெல்லாம் பார்த்து விட்டு நம்மூர் படங்களை பார்ப்பதால் தானோ என்னவோ? எல்லோருக்கும் பிடிப்பது நமக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது. மீண்டும் ஒரு நல்ல படத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

Directed by
Quentin Tarantino
Produced by
Lawrence Bender
Written by
Quentin Tarantino
Starring
Harvey Keitel
Tim Roth
Steve Buscemi
Chris Penn
Michael Madsen
Lawrence Tierney
Eddie Bunker
Quentin Tarantino
Cinematography
Andrzej Sekula
Editing by
Sally Menke
Distributed by
United States:
Miramax Films/Lionsgate
United Kingdom:
Rank Film Distributors
Canada:
Maple Pictures
Release date(s)
October 23, 1992
Running time
98 minutes
Country
United States
Language
English

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகிள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி

4 comments:

கோபிநாத் சொன்னது…

ஆகா..தல..இந்த படத்தின் விமர்சனத்தை ஏற்கனவே எங்கோ படிச்சிருக்கிறேன்.

ஆனால் உங்கள் வேகமான நடை அப்படியே கற்பனை பண்ணி பார்க்க முடியுது...கலக்கல் நடை தல ;)

அப்புறம் இந்த படத்தை எங்கிட்டு பார்த்திங்க அப்படின்னு விபரம் சொன்னால் நாங்களும் பார்ப்போம்ல்ல...;)

பின்னோக்கி சொன்னது…

2 வருடங்களுக்கு முன், இந்த படத்தை ட்வுன்லோடு செய்து, கொஞ்சம் நேரம் பார்த்தேன். படம் புரியவில்லை என நிறுத்தி விட்டேன். இன்னொருமுறை பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் கோபி நாத்,
வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் பின்னோக்கி,
வருகைக்கு நன்றி,படம் கண்டிப்பாக பாருங்க,பிடிக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)