The Life of David Gale (2003) த லைப் ஆப் டேவிட் கேல்

(டேவிட் கேலின் வாழ்க்கை)2003(18+)

_________________________________________________________________________________
ருமை நண்பர்களே ..சான்றோர்களே ...
மரண தண்டனை குறித்த உங்கள் கருத்து என்ன?
மரண தண்டனை வேண்டாமா?அல்லது வேண்டுமா?

சமீபத்தில் சக நண்பரின் வலைப்பூவில் விருமாண்டி படம் இந்த படத்திலிருந்து தான் தழுவி எடுக்கப்பட்டது என்று படித்தவுடன்,எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

என்ன?படத்தில் கெவின் ஸ்பேசியா ?கேட் வின்ஸ்லேட்டுமா?என மிக ஆவலாய் பட்டை சாராயம் காய்ச்சுவதுபோல டவுன்லோடு செய்து சுடசுட பார்த்த படம்.வாவ்..கிரேட்... .
யாரும் ஏமாற்றவில்லை.பெர்பெக்ஷன்..
கமலஹாசன் இன்னும் உறுதியாக மனதில் நாற்காலி போட்டு அமர்ந்து விட்டார்.
ஒரு சிறு திரியை வைத்து விருமாண்டி என்னும் காவியத்தை படைத்த விதம்
மாஸ்டர் பீஸ்..


இனி படம் பற்றி:-
-----------------------------------------------------------------------------------------------------
ஹார்வர்டில் தங்கபதக்கம் வென்ற ,மிக ஒழுக்கமான பல்கலைக்கழக தத்துவ பேராசிரியர் கேல்(Kevin Spacey).பகுதிநேரமாக மரண தண்டனை ஒழிப்பு ஆணையத்தில் தலைமை அதிகாரியாக வேறு தொண்டு செய்கிறார்.சக தொண்டு அதிகாரி கான்ஸ்டன்ஸ் (Laura Linney)இவர் மேல் உயர்ந்த மதிப்பும் இணை இல்லா நட்பும் வைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டு அமெரிக்கத் தூதரின் மகளை மணம் முடித்து நான்கு வயதில் அழகிய பாலகனும் உண்டு.ஒழுக்கம் கெட்ட மனைவி வருடத்துக்கு ஐந்து முறை காதலனுடன் சுற்றுலா சென்று விடுகிறாள்.
இவர் தனிமையை போக்க மதுவை நாடுகிறார்.
ஒருநாள் கல்லூரி விரிவுரை முடிந்து பெர்லின் (Rhona Mitra)எனும் மாணவி இவரை இச்சையுடன் நெருங்கி எனக்கு நீங்கள் Aகிரேடு போட்டு உதவி செய்யுங்கள் ,
நான் உங்களுக்கு படுக்கையில் உதவுகிறேன் என்கிறாள்.
இவர் பதிலடியாக நீ நன்றாய் படி அதுவே எனக்கு செய்யும் உதவி என்கிறார்.

சில மாதம் கழித்து கல்லூரி மாணவர் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளும் மதுபான விருந்தில் கலந்துகொண்டு அருமையாக நகைச்சுவைகளை அள்ளிவிடுகிறார்.கைதட்டல் விசில் களேபரத்திலிருந்து விடுபடுகிறார் .

பின்னர் கழிவறையில் தன்னால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட பெர்லினை பார்த்து அகல நினைக்க ,அவள் நான் இனி கல்லூரியில் இல்லை .உங்கள் மாணவியும் இல்லை.என் கடைசி ஆசையையாவது நிறை வேற்றுங்கள் என இவருக்கு கிளர்ச்சியூட்டி.மிருகத்தனமான வன்முறையுடன் கூடிய புணர்ச்சியை கேட்டுப் பெறுகிறாள்.வலுக்கட்டாயமாக குத புணர்ச்சி செய்ய கோருகிறாள்.
தன் தோள் பட்டையை கடிக்க சொல்கிறாள்.அவள் இவரது தொடையில் நகக் குறியையும் பதிக்கிறாள்.விருந்தும் முடிகிறது.இவர் கதையும் முடிகிறது.

மறு தினம் செனேடரிடம் மரண தண்டனை குறித்த காரசார நேர்முக தொலைக்காட்சி பேட்டியில் கலந்து கொண்டு விட்டு புறப்பட ,போலீசாரால் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப் படுகிறார்.மனைவி இது தான் சாக்கு என்று குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து தன் செல்வாக்கான அப்பன் வீடு செல்கிறாள்.இவர்கள் குடியிருக்கும் வீட்டையும் விற்று விடுகிறாள்.ஸ்பெயினில் வேறு திருமணம் செய்ய ஆயத்தமாகிறாள்.

ஸ்பெயினில் இருக்கும் திருமண சட்டங்கள் இவருக்கு சாதகமாக இல்லை.
மகனுடன் கூட பேச வழியில்லை.

கேல் குடிக்கு அடிமையாகிறார்.கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட இவரை கான்ஸ்டன்ஸ் தவிர உலகமே வெறுத்து ஒதுக்குகிறது.இவர் அடிக்கடி அவளை பார்க்க வீட்டுக்கு வருவது அவள் கணவன் டஸ்டிக்கு பிடிக்கவில்லை.
சந்தேகமும் இவர்கள் நட்பின் மேல் பொறாமையும் கொள்கிறான்.

கேலுக்கு கல்லூரி வேலை காலியாகிறது.
மரண தண்டனை ஒழிப்பு நிறுவன வேலையும் காலியாகிறது.
ஆசை மகனை பார்த்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது.
உண்ண உணவில்லை,உறைவிடமில்லை,உடலுறவில்லை,
தன் பழைய காரிலேயே தங்கிக் கொண்டு மகன் நினைவாக ஒரு கரடி பொம்மையை வைத்துக் கொண்டு அலைகிறார்.

ஒரு காபி நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலைக்கு சேர்ந்து பிழைப்பையும்
வழக்கையும் கவனிக்கிறார்.

கான்ஸ்டன்ஸ் வீட்டில் போய் அவ்வப்பொழுது மரண தண்டனை ஒழிப்புக்கு
உதவுகிறார்.கற்பழிப்பு புகார் தந்த பெர்லினோ எங்கே ஒழிந்தாலென தெரியவில்லை ?ஒரு நாள் கான்ஸ்டன்ஸ் இவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழ,இவர் பதறி மருத்துவமனையில் சேர்க்கிறார்.

மருத்துவர்கள் இவரிடம் கான்ச்டன்சுக்கு ரத்த புற்றுநோய் உள்ளது.அவள் இனி
சேவைகளில் தன்னை அலைக்கழிக்க கூடாது என்று சொல்ல,இவர் நிலை தடுமாறுகிறார்.ஒரு நம்பிக்கை ஒளியும் அணைந்தே விட்டது.

ஓர் இரவு கான்ச்டன்சின் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் போது அவள் பேச்சு வாக்கில் நான் வாழ்வில் எல்லா இன்பங்களையும் போதிய மட்டும் அனுபவித்துள்ளேன். உடலுறவைத் தவிர .. என நிறுத்துகிறாள்
பின்னர் நாக்கை கடித்துக் கொள்கிறாள்.

உன்னிடம் அப்படி சொல்லியிருக்கக் கூடாது.எது என்னை அப்படி சொல்ல வைத்தது ? என புரியாமல் தன்னையே கடிந்து கொள்கிறாள்.

இவர் அவள் கையை பற்றிக் கொண்டு நீ கேட்டதில் தவறில்லை. அதற்காக குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. ஒரு உயிர் நண்பனிடம் அதை நீ உரிமையுடன் கேட்டுப் பெறலாம் , என தேற்றி உடலுறவு கொள்கிறார்.இந்த கவனிப்பினால் அவள் மனம் குளிர்ந்து போகிறாள்.

தன் நண்பனுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும்.அவனுக்கு பழைய கவுரவமும் வேலையும் கிடைக்க வேண்டும் என மன கணக்கு போடுகிறாள்.
பின்னர் கேல் உடை மாற்றி அவள் வீட்டு புல் வெளியில் சென்று படுத்துக் கொள்கிறார்.தூக்கம் கண்ணை சொருகுகிறது.

தன் நண்பனை வீண் பழியிலிருந்து காப்பற்ற திட்டமிட்ட கான்ஸ்டன்ஸ்
காவல்துறைக்கும் நீதித் துறைக்கும் பாடம் புகட்ட எண்ணுகிறாள்

இதுதான் தலைப்பு:-

அப்பாவிகள் எப்படி குற்றவாளிகளாக மாற்றப்படுகின்றனர்?
---------------------------------------------------------------------------------------------
வீடியோ காமிராவை சமையலறையில் இயக்கத்தில் வைத்த கான்ஸ்டன்ஸ்
கையுறைகளை அணிகிறாள்.ஆடைகளை களைகிறாள்.போலீஸ் பயன்படுத்தும் கை விலங்கின் சாவியை விழுங்கி நீர் அருந்துகிறாள்.பின்னர் வாயை டக்ட் டேப் கொண்டு ஒட்டிக் கொள்கிறாள்.தலைக்கு பிளாஸ்டிக் பை கொண்டு போர்த்தி அதையும் கழுத்தை சுற்றி டக்ட் டேப் கொண்டு ஒட்டிக் கொள்கிறாள்.

போலீஸ் பயன்படுத்தும் கை விலங்கை கைகளை பின்னால் வைத்து பூட்டிக் கொள்கிறாள்.பின்னர் தரையில் விழுந்து புரளுகிறாள்.சரியாக இரண்டு நிமிடத்தில் நண்பனுக்கு உதவ பெருமையுடன் உயிர் விடுகிறாள்.

அவள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
உண்மையான சைக்கோவான அவள் கணவன் டஸ்டி
வீடு வந்து விபரீதம் உணர்ந்து காமிராவை இயக்கி உண்மை அறிகிறான்.பின்னர் காமிராவையும் காசெட்டையும் ஒளித்து வைக்கிறான்.

கை ரேகைகளை சம யோஜிதமாய் அழிக்கிறான்.இந்த பாடையும் ஒரு மரண தண்டனை ஒழிப்பு அதிகாரியே.சந்தேக புத்தியும் பொறாமையும் அவனை இந்த பாதகம் செய்ய தூண்டின.

இப்போது கேல் சைக்கோ கொலைகாரன் என்ற பட்டத்துடன் ,
தன் தோழியை கற்பழித்து ,அவளுக்கு விலங்கிட்டு , அவள் தப்பிக்கக் கூடாது என்று சாவியை விழுங்க வைத்து , பின்னர் பிளாஸ்டிக் பை கொண்டு முகத்தை
மூடி மூர்சையாக்கி கொன்றதாக சாட்சிகள் ருசுவாகி மரண தண்டனையும் பெறுகிறார்.

மூன்று நீதி மன்றங்களும் அவரது மேல் முறையீடுகளை ரத்து செய்து விட்டது.இவருக்கு ஆறு வருடங்களாக உயிர் ஊசலாடி ஒரு வழியாக இன்னும்
நான்கு தினங்களில் விஷ ஊசி என உறுதி செய்கின்றனர்.

கேல் தன் மகனுக்காகவும் மனைவிக்காகவும் பணம் அனுப்ப எண்ணி தன் கதையை முதல் முறையாக ஒருவருக்கு சொல்லுவது என்ற முடிவுடன்
ஒரு பிரபல் டிவிக்கு பேட்டியாக தர முன்வருகிறார்.
அதற்கு ஈடாக ஐந்து லட்சம் டாலர்கள் அவர் வக்கிலிடம் தரப்படுகின்றது.

பிட்சி ப்லூம் (Kate Winslet) என்னும் அழகிய /புத்திசாலி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் இவரைப் பற்றி பேட்டி காண வருகிறார்.அவர் மூன்று நாட்களுக்குள் பேட்டியை
முடித்துக் கொள்ள வேண்டும் .என நிர்பந்திக்கப்படுகிறார்.

முதல் நாள் கேலை அப்பாவி என நம்பாதவர் இரண்டாம் நாள் நம்பிக்கை கொள்கிறார்.கேல் அவளிடம் கான்ஸ்டன்ஸ் எதோ நன்மை குறித்தே தற்கொலை செய்துள்ளாள்,ஆனால் அந்த ஆதாரம் தான் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அது என்ன என்று நீ கண்டு பிடிக்க வேண்டும் என வேண்டுகிறார்.

அவள் நீண்ட யோசனைக்கு பின்னர் சம்மதித்து, அந்த மர்ம முடிச்சுகளை ஆமை வேகத்தில் அவிழ்கிறாள்.அவளை பின் தொடர்ந்த டஸ்டி வீடியோ காசெட்டின் ஒரு பகுதியை மட்டும் அவளுக்கு அனுப்புகிறான்.
நேரம் அதிகமில்லை.

கான்ஸ்டன்ஸ் வீடு செல்ல அது மியூசியமாக்கப் பட்டு ஒரு பார்வையாளருக்கு இருபத்து டாலர் என வசூலிக்கப்படுகிறது.
அங்கு சென்று புலன் விசாரணை செய்து துப்பு துலக்குகிறாள்.
டஸ்டி தான் வீடியோ காசெட்டை வைத்திருக்கிறான் என்று கண்டுபிடித்து
அவன் வீடு சென்று காசெட்டை கைப் பற்றி டெக்சாஸ் சிறை நெருங்க கார் பழுதடைகிறது.பின்னர் தாமதிக்காமல் ஓடியே சிறை வளாகம் செல்ல, பொழுதும் சாய்கிறது.அங்கு ஏற்கனவே கூடியிருந்த மக்கள் முன் சிறை அதிகாரி உரை ஆற்றுகிறார்.

கேலுக்கு எண்பத்து மூன்று டாலர் செலவில் விஷ ஊசி போட்டு 6-12 pm டெக்சாஸ் நேரப்படி சிவலோகப்பதவி வழங்கப்பட்டதை விளக்குகிறார்.
அவர் என்ன சோப்பு போட்டு குளித்தார்?
என்ன உணவு சாப்பிட்டார்?
என்ன ஆடை அணிந்திருந்தார் என அதிகாரி வர்ணிக்க .

இவள் வெடித்து விம்மி அழுகிறாள்.
ஆறு வருட காலம் கடந்து கிடைத்த இந்த கேசட்டை என்ன செய்வது ? என யோசித்து டிவி நிகழ்ச்சியாக வெளியிடுகிறாள்.

டி ஆர் பி ரேடிங் கூடி அமெரிக்காவெங்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் காரர்களும் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகும் அளவுக்கு கேள்வி கேட்கப்படுகின்றனர்.மக்கள் அனுதாப அலை வெள்ளமாக பெருக்கெடுக்கிறது.

இதே நேரத்தில் டஸ்டி ரைட் தலை மறைவாகிறான்.உலக போலீசு அவனை வலை வீசி தேடுகிறது.அவன் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கேலின் வக்கீல் ப்ரேக்ச்டன் பெலியூ தந்த ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்களையும் ,
கேல் சிறையில் இருந்த போது பெர்லின் அவருக்கு மன்னிப்பு கேட்டு எழுதிய கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டையையும் ஸ்பெயின் நாடு சென்று கேலின் மனைவிக்கு டோர் டெலிவரி செய்துவிட்டு அகல்கிறான்.

கிராதகி குற்ற உணர்வுடன் வாழ்த்து அட்டையை படித்து.புது கணவனுக்கும்
காட்டுகிறாள்.இனி எஞ்சி உள்ள வாழ்நாளை குற்ற உணர்வுடன் கழிக்க வேண்டிய
நிலை தனக்கு வந்ததை எண்ணி நொறுங்குகிறாள்.
________________________________________________________

கெவின் ஸ்பேசி பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை
அமெரிக்கன் பியூட்டி மற்றும் யூசுவல் ஸஸ்பெக்ட்ஸ் படங்களுக்கு
ஆஸ்கர் வென்ற மேதை.திரையில் வாழ்பவர். அதிக படங்கள் செய்யாவிட்டாலும் அனைவரின் மனம் கவர்ந்தவர்.

கேட் அழகான அற்புதமான நடிகை இவர் பிறந்த மேனியாக நடிக்காத படங்களில் இதுவும் ஒன்று.ஹாலிவூடில் படு சிக்கலான கதா பாத்திரங்களை ஏற்று அதற்கு உயிர் கொடுப்பவர் இதெல்லாம் ஜுஜூபி. என்று ஊதி தள்ளுகிறார்.

லாரா லின்னி -கான்ஸ்டன்சாகவே வாழ்ந்து மடிந்த அற்புத நடிகை .

இயக்கம் ஆலன் பார்க்கர் பழுத்த பழமான இயக்குனர் உருக்கமான திரைக்காவியங்களை வடிப்பதில் கை தேர்ந்தவராம்.

கதை சார்லஸ் ரன்டல்ப் இளம் கதாசிரியர் நிறைய டிவி சீரியல்களுக்கு எழுதியவராம்

இசை அலெக்ஸ் / ஜேக் பார்கர் -அற்புத இசையமைப்பு ,காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டி சஸ்பென்சை தக்க வைக்கிறது.
__________________________________________________________________________

படத்தின் முன்னோட்ட காணொளி:-


_______________________________________________________________________
Directed by
Alan Parker
Produced by
Alan Parker
Nicolas Cage
Nigel Sinclair
Written by
Charles Randolph
Starring
Kevin Spacey
Kate Winslet
Laura Linney
Gabriel Mann
Matt Craven
Music by
Alex and Jake Parker
Cinematography
Michael Seresin
Editing by
Gerry Hambling
Distributed by
Universal Pictures
Release date(s)
February 21, 2003
Running time
130 min.
Country
USA
Germany
Language
English
Spanish

12 comments:

சென்ஷி சொன்னது…

விரிவான விமர்சனத்திற்கு நன்றி மாம்ஸ்.. ஓட்டு குத்தியாச்சு!

டிவிடியில இந்த படமும் இருந்தது. பட் பார்க்க மூட் இல்லை :-(

ராஜராஜன் சொன்னது…

நல்ல விமர்சனம் ... கதையின் ஓட்டம் பார்த்தல் 18+ தான் பார்க்கணும் போல இருக்கே ,,,

ஷண்முகப்ரியன் சொன்னது…

முழுக் கதையையும் படித்தேன்,கார்த்திகேயன்.சுவையாக எழுதி உள்ளீர்கள்.

தண்டனைச் சட்டம் பற்றிய பல எண்ணங்கள் மனதில் ஓடின.

கோபிநாத் சொன்னது…

\மக்கள் அனுதாப அலை வெள்ளமாக பெருக்கெடுக்கிறது.
\\

படத்தை பார்த்துட்டு உங்க விமர்சன அலையும் பெருக்கெடுத்து ஓடுது தல ;))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…

அருமை நண்பர் சென்ஷி தொடர் வருகைக்கும் அற்புத கருத்துக்கும் நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…

அருமை நண்பர் ராஜ ராஜன் தொடர் வருகைக்கும் அற்புத கருத்துக்கும் நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…

வணக்கம் அய்யா
தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும்
மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…

அருமை நண்பர் கோபி நாத் தொடர் வருகைக்கும் அற்புத கருத்துக்கும் நன்றி.

கோபிநாத் சொன்னது…

\\அற்புத கருத்துக்கும் நன்றி.\\

தல

இது உனக்கே ரொம்ப ஓவராக தெரியல...ஏதாச்சும் சொல்லிட போறேன். என்னாத்த அற்புத கருத்து சொல்லியிருக்கேன்னு இப்படி ஒரு கொலைவெறி என்மேல.!

நீங்க அடங்கவே மாட்டிங்களா!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கார்த்திக் வழக்கம்போல ஒரு நேர்த்தியான விமர்சனம்.

உலவு.காம் (ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…

அருமை நண்பர் செந்தில்வேலன் தொடர் வருகைக்கும் அருமையான ஊக்கத்துக்கும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)