இன்று காலை குரோம்பேட்டை Sunshine பள்ளியில் மகளுக்கு Parents Teacher meeting இருந்தது, அதற்கு காரிடாரில் காத்திருக்கையில் புதிதாக இட்ட தரையில் காட்சி திறன் மாற்று திறனாளிகளுக்காக பள்ளி காரிடார் முழுவதும் தரமான tactile strips டைல்கள் பதிக்கப்பட்டிருந்ததை கவனித்தேன், அத்தியாவசியமான முன்னெடுப்பு இது.
எல்லா கதவுகளின் முன்பாகவும் cane movement bay அழகாக பதிக்கப்பட்டிருந்தது , நம் அரசு எல்லா பொது கட்டிடங்களிலிலும் இந்த tactile strips tiles கொண்டு தரை அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும், காரணம் காட்சி திறன் மாற்று திறனாளிகள் உயர்கல்வி பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்கு வருவர், தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வருவர், அந்த தேர்வு மையம் எத்தனை தொலைவில் இருந்தாலும் பேருந்து மாறி வந்து தேர்வெழுதுவதைப் பார்த்துள்ளேன்,
எனவே பயிற்சி வகுப்புகள், தேர்வுகள் நடக்கும் அரசு,தனியார் பள்ளிகள் , அரசு தனியார் கல்லூரிகள் காட்சி திறன் மாற்று திறனாளிகள் எளிதாக வகுப்பறைகள் அடையவும் மின்தூக்கியை அடையவும் கழிவறையை அடையவும் இலகுவானதாக இருக்க வேண்டும், அதற்கு இந்த tactile strips tiles தரை அவசியம்.
இது braille புள்ளிகள் போன்றது, அதை விரலால் தடவிப் படிப்பது போல, Guide Cane கொண்டு பார்வை குறைபாடுள்ளவர்கள் காரிடாரில் நடக்கையில் தொட்டு நடக்கும் பாதையை உணர்வார்கள்,cane movement bay என்பது கதவின் முன்பாக பெரிதாக இருக்கும் துறையாகும் ,யார் உதவியுமின்றி அந்த ஜனத்திரளில் பிரம்மாண்ட வளாகத்தில் நடப்பார்கள், வளர்ந்த நாடுகளின் மெட்ரோ, கல்லூரி,பல்கலைகழகம், காவல் நிலையம், உணவகம்,பேருந்து நிலையம் என எல்லா பொதுஇடங்களிலும் இது பதிக்கப்பட்டிருக்கும்,குடிமக்கள் அனைவரையும் உளமாற பாகுபாடின்றி மதித்தால் தான் அது வளர்ந்த நாடு.
எல்லா பள்ளி கல்லூரிகளிலும் கோடை விடுமுறை நாட்களில் அரசின் ஒரு சுற்றறிக்கை ஆணையில் இந்த tactile strips டைல்ஸ் அமைத்து விட முடியும், மாற்று திறனாளிகளை மதிக்கும் சமூகம் தான் வல்லரசு ஓட்டத்தில் பங்கேற்க நுழைய முடியும்.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873