"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்"
ஒன்றரை ஜல்லி கொண்டு காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் சுமார் நூறு பேர்களின் பல்லை உடைத்த ASP பெயர் 'பல்'வீர்சிங், நல்லவேளையாக இவர் பெயரில் இப்படி ஒரு அர்த்தம் இவருக்கு இருப்பது தெரியவில்லை,தெரிந்திருந்தால் எத்தனை அவல பெருமிதம் கொண்டிருப்பார் இவர்,
NEET எழுதி dentistry துறைக்கு போக வேண்டியவர் ,போலீஸாகி போகிற வருபவர்கள் பல்லை உடைத்திருக்கிறார், பணி இடை நீக்கம் ஆகியுள்ளார், மேலும் பல நடவடிக்கைகள் இவர் மீது பாயக் காத்திருக்கின்றன.
இவரது SI உறவினர் ராஜஸ்தான் காவல்நிலையம் ஒன்றில் பிடிபடும் dacoit களை இப்படி பல்லை உடைத்து விடுவதை சிறு வயது முதல் pervert போல பார்த்து வளர்ந்திருக்கிறார், IIT ல் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து ஐந்து வருடங்கள் நல்ல வேலையில் இருந்தவர், மனதுக்குள் sociopath சிந்தனைகள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க, பல்லை உடைக்கும் வன்முறைக்கு மனமும் கையும் குறுகுறுக்கவே சிவில் சர்வீஸ் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார் , அம்பை காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்,
அப்படி காவல் நிலையம் வந்தவர்கள் சுமார் நூற்றுக்கணக்கானவர்களை கருங்கல் ஒன்றரை ஜல்லியால் பல்லை உடைத்திருக்கிறார், தட்டி உடைத்த கையோடு கருங்கல்லை வைத்து பல் ஈறுகள் கன்னத்தின் உள் சுவர்களை,உதடுகளை உரசி கிழித்துள்ளார், தன் இடது கை கொண்டு சிக்கியவர்களின் விதைப்பைகளை கசக்கி திருகி உள்ளார், லாடம் அடித்த பூட்ஸ் கால்களால் சிக்கியவர்கள் உயிர்நிலையில் மிதித்து கதறவிட்டுள்ளார், punching machine எந்திரம் கொண்டு காது மடலில் துளையிட்டு தூக்கியிருக்கிறார், இவரை நியாயமாக அவன் என்று தான் எழுத வேண்டும், ஆனால் சிவில் சர்வீஸ் தேறிய அதிகாரி என்பதால் கனத்த இதயத்துடன் இந்த 'ர்' விகுதி .
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவது விதி, அப்படி பொதுவில் சிக்கி பிடிபட்டிருக்கிறார் 'பல்' வீர்சிங், விசாரணைக்கு வந்தவர்கள் எத்தனை விளக்கினாலும் இவருக்கு புரியாதாம் செவிகளில் ஏறாதாம் பாருங்கள், காரணம் இவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாதாம், இரண்டு நிலைய காவலர்கள் தோள்களை அழுத்திப் பிடித்துக் கொள்ள இவர் dentist லாவகத்துடன் வெறும் கூரிய ஒன்றரை ஜல்லி கொண்டு விசாரணைக்கு வந்தவரின் பல்லைத் தட்டி வீழ்த்துவதில் வித்தகராம்.
இது போல மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கும் பல்வீந்தர் சிங் மாட்சிமிகு காவல்துறை சீருடை அணிய தகுதி அற்றவர், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை முயற்சி வழக்குகள் பதிந்து சிறை தண்டனை வழங்க வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் இது போன்ற மிருக குணம் கொண்ட அதிகாரிகளை விடக்கூடாது.
"பல்" வீர்சிங் நீங்கள் வலிய சரணடைந்து மனநல சிகிச்சைகள் ஏற்று சிறை தண்டனை அனுபவித்து, நீங்கள் பல்லை உடைத்த அத்தனை பேருக்கும் உங்கள் சம்பளத்தில் இருந்து implant செய்ய பணம் கொடுத்து மீண்டும் சரிசெய்வது உங்கள் மனசாட்சிக்கு நல்லதாகும், தார்மீக அறமாகும்.
உங்களுக்கு சிறை தண்டனைக்கு பின் காவல்துறையில் எதிர்காலம் என ஒன்று மிச்சம் இருந்தால் தான் என்ற அகந்தை விட்டு, சக உயிரை மதித்து திருந்தி வாழுங்கள்,