skip to main |
skip to sidebar
படங்களை பார்த்தீர்களா?போதுமா?பி பி சி யில் டாக்குமெண்டரியாக வந்த ஒன்று, இதற்க்கு யார் காரணம்?அரசா?பக்தர்களா?துறவிகள?வெட்டியான்களா? புண்ணியம் தேடி காசிக்கு போய் மண்டையை போட்ட ஆத்மாக்களா?வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா?இடத்தைக் கொடுத்தால் இப்படித்தான் மடத்தைப் பிடிப்பதா?மலங்கள் ,பிளாஸ்டிக் குப்பை கூளங்கள்,அழுகிய பூக்கள்,பூ மாலைகள்,பாதி எரிந்த பிணங்கள்(கங்கை நதி தீரத்தில் மொத்தம் 90 கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளதாம்,பிணத்தின் உறவினர் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து,பாதி வேகும் போதே நதியில் தள்ளிவிட சொல்லுகின்றனர் ,அப்போது தான் நேராக சொர்கமாம்,(பறவைகளும்,மீன்களும்,விலங்குகளும்,உடம்பை தின்னவேண்டுமாம்,திபெத்தில் மட்டும் தான் மனிதன் இறந்த பின்னர் மலை உச்சியில் சென்று உடம்பை கூறுபோட்டு பறவைகளுக்கு வைப்பர், என் என்றால் திபெத் பீடபூமி எங்கும் ஒரு அடிக்குமேல் தோண்ட முடியாது,விறகுகளும் கிடைக்காது,அதனால் வெட்டியானுக்கு பதில் அங்கு கசாப்பு காரன் ,ஆனால் எவ்வளவோ இறுதிச்சடங்கு வசதிகள் கொண்ட நம் நாட்டில் ஏன் இந்த அரைகுறை எரிப்பு வேலை? ) ,சாக்கடை கழிவுகள்,சாய கழிவுகள்(பனாரஸ் பட்டு),உணவு பண்டங்களின் மீதம்,மட்கிய மட்காத குப்பைகள்,என்று இந்த புனித நதியை நாறடித்துள்ளனர்,மண்ணின் பொறுமைக்கே எல்லை உண்டு என்று நாம் உணர பூகம்பத்தை அடிக்கடி கொடுத்து உணர்த்துகிறாள் பூமித்தாய்,நதி ஆக்ரோஷப்பட்டால்?தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பர்,இதை பார்த்தால்,அந்த பழமொழியே தோன்றியிருக்காது போலும். 























