கலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க ...
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பாஅப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காதுஉன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட் கீபிடப்டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
__________________________________________________

டிஸ்கி:- இது எனக்கு மெயிலில் வந்தது, நன்றாக இருந்ததால் இங்கு பதிவிட்டிருக்கிறேன்.இதில் பாதி பரவலாக கேட்ட ,படித்த ரகம். இருந்தாலும் நினைவூட்டி சிரிக்க வைக்கும். எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. உங்கள் பாராட்டுக்கள் எழுதியவருக்கே சேரும்

அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து

Wise Sayings By Famous People
நீங்கள் வாழ்வில் நல்ல வாய்ப்பை தவறவிட நேர்ந்தால்
கண்களுக்கு கண்ணீர் திரையிட்டுக் கொள்ளாதீர்கள்......

அதன் மூலம் உங்கள் முன்னே இருக்கும் இன்னொரு
நல்ல வாய்ப்பும் தெரியாமல் போகக்கூடும் ......
Wise Sayings By Famous People
பிறரது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிக எளிது.
ஆனால் நம் வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.....

நீங்கள் நடக்கும் கட்டாந்தரைக்கு கம்பளம் விரிக்க நினைப்பதை விட
உங்கள் கால்களுக்கு செருப்பு போட்டுக்கொள்வது நன்று ......
Wise Sayings By Famous People
தவறுகள் நிகழ்கையில் வலி மிகுந்ததாகும்.....

காலப்போக்கில் தவறுகளால் கண்ட படிப்பினைகள்
உங்களின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுக்கும்......
Wise Sayings By Famous People
உங்களை எக்காரணம் கொண்டும் உலகில் எவருடனும்
ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.....
அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமரியாதையாகும்.....

Wise Sayings By Famous People
ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதனுக்கு பி
ன்னாலும்
ஒரு வலிமிகுந்த உண்மைக் கதை இருக்கும்......

ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் மகிழ்ச்சியான,
வெற்றிகரமான முடிவே இருக்கும்.....

வலியை ஏற்றுக்கொள்
வெற்றியை எட்டிப்பிடி.....

Wise Sayings By Famous People
தோல்வி அடைகையில் உறுதியாயிறு
வெற்றி பெறுகையில் அமைதியாயிரு.....


தங்கத்தை உருக்கினால் தான் நகை செய்ய முடியும்.
பித்தளையை அடித்தால் தான் கம்பி செய்ய முடியும்.

கல்லை செதுக்கினால் தான் சிலை செய்ய முடியும்.
அதீத துயரம் அனுபவித்தவனுக்கே வாழ்கையின் அருமை தெரியும்.
Wise Sayings By Famous People
ஒரு தவறான தொடக்கத்தை மீண்டும் பின்னால்
சென்று திருத்துவது கடினம்

ஆனால் யார் வேண்டுமானாலும் திட்டமிட்டு செயலாற்றுவது
மூலம் வெற்றியை அடையலாம்......
Wise Sayings By Famous People
தீர்வுகாணக் கூடிய சோதனை குறித்து
கவலை கொள்ளத் தேவையில்லை......

தீர்வேயில்லாத சோதனை குறித்து
கவலை கொண்டு ஆகப்போவது ஏதுமில்லை.....

Wise Sayings By Famous People
சாவியில்லாத பூட்டுக்களை யாரும் தயாரிப்பதில்லை.
அது போலவே
தீர்வே இல்லாத சோதனைகளை
கடவுள் மனிதனுக்கு கொடுப்பதில்லை......
Wise Sayings By Famous People

முகத்தை ஒளித்துக் கொள்வதனால் எதுவும் ஆகப்போவதில்லை.
ஆனால்
பிரச்சனையை முகம் கொண்டு எதிர்நோக்குவதால்
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன...........

யாரை பற்றி
யும் குற்றம் சொல்வதைவிட
நம்மில் குற்றம் இருந்தால் அதை மாற்றிக்
கொள்வது மூலம் சமாதானம் கிடைக்கிறது .....

இன்சைட் ( INSiDE ) குறும்படம்

மன நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எப்படி ?அதே புராதான முறைப்படி சிகிச்சை அளிக்கின்றனர்,மனநோயாளிகளின் நகைச்சுவை உணர்வு,அளிக்கப்படும் சிகிச்சை அவர்களுக்கு உண்மையாகவே குணமளிக்கிறதா?
போன்ற நமக்கு நாமே எழுப்பிக்கொள்ளவேண்டிய வினாக்களின் விடையை நகைச்சுவையாய் சொல்லும் குறும்படம்
கண்டிப்பாய் பாருங்கள் :-
நீளம் - 5.08 நிமிடங்கள்
இயக்கம்-ட்ரெவோர் சான்ட்ஸ் (Trevor Sands)

நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்

இனவெறி களைவோம் - ஸ்டிரேஞ்சர்ஸ் (2004) குறும்படம்
____________________________________________________

ஸ்டிரேஞ்சர்ஸ் (2004) இயக்கம்-எரேஸ் டாட்மோர் , கை நாட்டிவ்
____________________________________________________

படத்தின் மொத்த நீளம் -7.11 நிமிடங்கள்
படத்தின் காட்சிகள் நீளம் - 6.15 நிமிடங்கள்.
ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத சக்திவாய்ந்த விடயத்தை இந்த 6.15 நிமிட
இஸ்ரேலிய குறும்படம் சொல்லிவிடும் என்பதில் ஐயமில்லை.

பெர்லினில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பாலஸ்தீனிய அரபு இனத்தவனும் , ஒரு இஸ்ரேலிய யூத இனத்தவனும் மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரிடுகிறது.
தங்கள் நாட்டில் நடக்கும் அரசியல் கொலைகளால் ஒருவர் மேல் மற்றொருவர் துவேஷம் கொண்டிருந்தாலும்.
அடுத்த ஸ்டேஷனில் ரயிலில் ஏறிய உள்ளூர்வாசிகளான "skinheads" என்னும்
இனவெறியர்களிடமிருந்து தப்பிக்க அரசியல்,இனம்,மதம் மறந்து மனிதம் மட்டுமே குறிக்கோள். என ஒருவருக்கொருவர் எப்படி உதவுகின்றனர்?
உயிர் பயம் எப்படி ஒற்றுமையை தோற்றுவிக்கின்றது?

என்பதே படம் சொல்லும் பாடம்.
கண்டிப்பாய் பாருங்கள் :-

நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
_______________________________________________________________

strangers (2004)

This is a short film, Strangers (2004), about the racial divide between Arabs and Jews and what brings them together. Like in the short film, i look forward to a new day when we all can transcend from the unfortunate divide to face a common enemy.

This is an interesting short movie. Its an ideal opportunity for a Arab and a Jews guy to unite. It really makes a sense. This should be and example for Arabs and Jews to identify their differences.

* Colour, 35 mm
* Israel, USA, 2003, 7 min
* Section: Forum of Independents

* Director: Guy Nattiv,Erez Tadmor
* Screenplay: Guy Native, Erez Tadmor
* Dir. of Photography: Rami Agami
* Music: Eyal Glazner, Eyal Kazav
* Designer: Jerry Shay
* Editor: Yuval Orr
* Producer: Guy Native, Erez Tadmor
* Production: Fox Searchlight Pictures

Cast
Guy Eliayahoo, Ooky Etinger, Guy Loel, Gil Rimer, Sami Samir

Synopsis
Night. Paris. Two strangers in the underground. One is Jewish, the other Moslem. The only thing that connects them is their mutual fear.

About the director

Erez Tadmor and Guy Nattiv are young writers and directors from Israel. They both graduated from film school in Tel Aviv. Strangers was entered in the short film competition at the 2004 Sundance festival and in the Panorama section at the 2004 Berlinale.
_______________________________________________________________

பொக்கிஷம் திரைபடத்தின் கலை இயக்கம் ஒரு பார்வை!!!!

சேரன் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை, அவரின் இயக்கத்தில் வந்த எந்த படமும் எதாவதொரு நல்ல செய்தியை சொல்லாமல் விட்டதில்லை, அவர் என்றுமே விட்டேத்தியாக படம் எடுத்ததில்லை. அவரின் டூரிங் டாக்கீஸ் முழுவதும் படித்திருந்தால் அவர் இந்த உயரத்திற்கு வர எத்தனை உழைத்திருப்பார் என்பது விளங்கும். பொக்கிஷம், தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் மிகையில்லை, தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த மாற்றுசினிமா என்றும் சொல்லலாம். உலகசினிமா நம் தமிழகத்திலும் எடுக்கமுடியும் என்பதற்கான அறிகுறி, இது போன்ற மாற்று சினிமாக்களை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க முன்வந்ததும், எங்குமே சமாதானம் செய்துகொள்ளாமல் நேர்த்தியாக இயக்கியும் நடிக்கவும் துணிந்தது நல்ல முயற்சி. சரி விடுங்கள்,காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல இப்போது கல்லடி சேரனுக்கு,அவர் இந்த படத்தின் கருவை கொரிய படத்தில் இருந்து திருடிவிட்டார் என்று, அது ஒரு அப்பட்டமான பொய்யே.தவிர தானம் வந்த மாட்டைத்தான்  மக்கள் பல்லை பிடித்துப்பார்ப்பார்கள் என்பது அறிவோம்.

யாரோ ஒரு வலைப்பூ நண்பர் தனது வலைப்பதிவில் பொக்கிஷம் விமர்சனத்தில் அப்படமே எடுக்க மொத்தமே 25 லட்சம் ரூபாய் தான் ஆகியிருக்கும் .என்று மதிப்பிட்டிருந்தார்.என் வீட்டு பாத்ரூமை சற்று பெரிதாக்கி கோப்பை மாற்றி டைல்ஸ் ஓட்ட எனக்கு ஒரு லட்சம் ரூபாய் ஆனது. அப்படிப்பட்ட ஒரு விலைவாசி உள்ள நாட்டில் இருந்து கொண்டு அந்த நண்பர் இதை எப்படி எழுதினார் என வியந்தேன்?

படம் ரொம்ப மெதுவாய் போகிறது என்பதை எல்லாம் ஒரு குறையாய் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். கொஞ்சம் போல ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு,ஸ்பானிஷ் படங்கள் பார்த்து அதற்குண்டான பொறுமை எனக்கு வந்துவிட்டது.இன்றைய மக்களுக்கு பொறுமைக்கு பதிலாக பொறாமையே நிறைந்து காணப்படுகிறது.

டைரக்டர் நடித்தால் பிடிக்காது , அவர் முகம் முதிர்ந்துவிட்டது என்னும் கொள்கையும் ஏற்புடையதாய் இல்லை.இப்போது உள்ள விஜய்,சிம்பு, விஷால்,பேரரசு,சுந்தர்.சி போன்ற மகா எரிச்சல்களுடன் ஒப்பிடுகையில் சேரன் எவ்வளவோ தேவலை. அவர் தூணைப்பிடித்து மூக்கை உறிஞ்சி அழும் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்துவிட்டு தன் மிகை நடிப்பையும் சற்று திருத்திக்கொண்டாலே போதும். .நன்றாய் மிளிர்வார். சேரன் அடுத்த படமும் கதாநாயகனாகவே நடிக்கட்டும். எப்போதும் அழகானவன் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்ற அசிங்கமான மனப்பான்மையை ஒருவர் மாற்றிக்கொள்ளவேண்டும்.
1. பஸ்
பழைய பாணியிலான பஸ்கள் தேவைப்பட்டதும், சென்னையில் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடும் வண்டிகளைத் தேடினோம். எதுவும் அமையவில்லை. பழைய பஸ்களை வாங்கி தற்போது உபயோகப்படுத்தி வரும் கல்லூரிகளில் எதிர்பார்த்தமாதிரி இல்லை. எனவே, மதுரை, கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பஸ்களைத் தேடியும் கிடைக்கவில்லை. தஞ்சை, திருச்சி பகுதிகளில் சில பஸ்கள் எதிர்பார்த்தமாதிரி இருந்தும், வாடகைக்கு கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. இந்நிலையில், காரைக்காலில் ஒரு தனியார் பஸ் நிறுவனம் வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பஸ்களை வாடகைக்குத்தரவும், பஸ்களில் மாற்றங்கள் செய்து கொள்ளவும் அனுமதி தந்தனர். பின்னர், இரண்டு பஸ்களை எடுத்து வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் வண்ணங்கள், பொருட்கள் பெயர்ப்பலகைகள், இருக்கை அமைவு முறை என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்தோம். இரவு, பகலாக வேலைசெய்து நான்கு நாட்களில் தயார்செய்தோம்.
2. சென்னை வீடு
நாயகன் வசிக்கும் வீடு கதைப்படி சென்னையில், 1970ம் காலகட்டத்தியதாக இருக்க வேண்டும். பழைய சென்னையான, மைலாப்பூர், தி.நகர், வடசென்னை பகுதிகளில் நிறையத் தேடியும் எதிர்பார்த்த மாதிரி இல்லை அல்லது நாங்கள் விரும்பும் வீடுகளைத் படப்பிடிப்புக்குத் தருவதற்கு வீட்டு உரிமையாளர்கள் முன்வரவில்லை. இறுதியில், கோபிசெட்டிபாளையத்தில் அப்படியொரு வீடு அமைந்தது. சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியாக அந்தத்தெருவையே மாற்றி, வீட்டிலுள்ள நவீனப் பொருட்களை அகற்றி, முழுமையான பழைய வீடாக மாற்றினோம். இதற்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது.
3. பூட்டு
கல்கத்தா, சென்னை, நாகூர் என்று நாங்கள் படப்பிடிப்பு நடத்திய எந்தப் பகுதியிலும் பழையகால பூட்டுகள் கிடைக்கவில்லை. கடையில் விற்கப்படும் பூட்டுகள் தற்போது வட இந்தியத் தயாரிப்பாக இருக்கிறது. தவிர, திண்டுக்கல் பூட்டுகள் உற்பத்தி அறவே குறைந்து விட்டது. எனவே, பூட்டுகளைத் தேடியலைந்து கிடைத்த ஏமாற்றத்தையடுத்து, ஒவ்வொரு வீடாகச் சென்று பழைய பூட்டுகளை சேகரித்துப் பயன்படுத்தியுள்ளோம்.
4. லெனின்பெட்டி
கதாநாயகன் லெனின், பயணத்திற்காக பழைய மாதிரி தோல்பெட்டி தேவைப்பட்டது, சென்னையில் பாரிஸ், பூக்கடைபஜார், அண்ணாசாலை, தி.நகர் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் அதுபோன்றதொரு பெட்டி கிடைக்கவில்லை. எனவே, தோல் மற்றும் ரெக்ஸின் பொருட்களைப் பயன்படுத்தி அதுபோன்றதொரு பெட்டியை உருவாக்கினோம்.
5. டைரி
படத்தின் இதயத்துடிப்பு டைரிகளும், கடிதங்களும்தான். 1970-ம் காலகட்டத்திய டைரிகளை வடசென்னைப் பகுதிகளிலுள்ள பழைய கடைகளில் தேடிக் கிடைக்கவில்லை. கடந்த 2008 டைரி வாங்குவது கூட சிரமம் என்று தெரிந்தது.  டைரி சேகரிப்பாளர்களிடம் விசாரித்தும் எழுதப்படாத எந்த டைரியும் கிடைக்கவில்லை. மேலும், 1970, 1971, 1972, 1973, 1974 ஆண்டுகளின் டைரிகள் மூன்று பிரதிகள் ஒரேமாதிரி வடிவமைப்பில் தேவைப்பட்டதால், ஐந்தாண்டு டைரிகளையும் டிசைன் செய்து, அதைப் பிரிண்ட் செய்வதற்காக, நவீன ரக பிரிண்டர் ஒன்றை விலைக்கு வாங்கி 15 நாட்கள் இரவு, பகலாக பணி செய்து உருவாக்கினோம்.
6. கடிதங்கள்
மிக முக்கியமான, கடிதங்களை, அஞ்சலகப் பொருட்களை நாமே தயார்செய்து விடுவது என்பதில் முன் கூட்டியே முடிவு செய்திருந்ததால், 1970ம் காலகட்டத்திய இன்லேண்ட், போஸ்டல் கவர்களை தேடிக் கண்டுபிடித்தோம். பின்னர், அதுபோன்ற மாதிரிகளை உருவாக்கி, சிறப்பு அனுமதியோடு பிரிண்ட் செய்தோம்.
7. ஹல்தியா ஹார்பர்
மேற்கு வங்கத்தில் நதிமுகத்துவாரத்தில் அமைந்திருக்கும் இயற்கைத் துறைமுகம் ஹல்தியா ஹார்பர். அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு இடத்தைப் பார்வையிடச் சென்ற இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் புகைப்படம் எடுத்தபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, கேமராக்களைப் பறித்துக் கொண்டனர். மொழிப் பிரச்னை பெரிதாக இருந்த நிலையில், அங்கு கண்டெய்னரில் சரக்கு ஏற்றி இறக்கும், கிரேனில் பணிபுரிந்த தமிழர் ஒருவர், இயக்குனரை அடையாளம் கண்டு, உதவி செய்தார். ஹல்தியா ஹார்பரில் நடந்த முதல் படப்பிடிப்பு ‘பொக்கிஷம்’ தான்.
8. போஸ்டல் சீல்
போஸ்ட் ஆபிஸில் சீல் குத்தும் மர உருளைகள் மற்றும் தேதி சீல்களை தபால் துறையினர் தர மறுத்து விட்டனர். எனவே, அதுபோன்ற மாதிரிகளை உருவாக்கினோம். மரத்தில் கடைசல் செய்து பிடியும், அச்சுக்களுக்கு ரப்பரில் மாதிரியும் உருவாக்கினோம்.
9. மருத்துவமனை ஓவியங்கள்
சீதாலட்சுமி மருத்துவமனை வரவேற்பு ஹாலில், சுவர்களை அலங்கரிக்க பாரம்பர்ய முறையிலான ஓவியங்கள் தேவைப்பட்டது. ஒரே நாளில் அந்த வரவேற்பறை பணிகளை முடிக்க வேண்டியிருந்ததால், உடனடியாக சுற்றுவட்டாரத்தில் விசாரித்து, கோபியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று அங்கிருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பாரம்பர்ய தஞ்சாவூர் ஓவியங்களை கொண்டு வந்து பயன்படுத்தினோம்.
10. பெஞ்சுகள்
மருத்துவமனை வரவேற்பு ஹாலில் மரத்திலான சாய் பெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முதலில் திட்டமிட்டிருந்தது வயரினால் பின்னப்பட்ட ‘எஸ்’ டைப் சேர்கள். அது சரியாக அமையாததால், மரத்தில் ஒரே மாதிரி சேர்களை அமைக்க முடிவு செய்து, பள்ளி, கல்லூரிகளில் தேடியதில் நவீனமாக மட்டுமே கிடைத்தது. பழைய பாணியில் கிடைக்காததால், ஒரே நாள் இரவில் சுமார் பத்து தொழிலாளர்கள் சேர்ந்து எட்டு சேர்களை உருவாக்கினார்கள்.
11. காலண்டர்
படத்தில், சென்னை, கல்கத்தா, நாகூர், காரைக்கால் என்று எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் காலண்டர்களை நாங்களே உருவாக்கினோம். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தேதி, கிழமை உள்ளிட்ட எல்லா விபரங்களுமே உண்மையானவை. குறிப்பாக, நாகூர் வீட்டில் இருக்கும் காலண்டரில் இருக்கும் முஸ்லிம் மாதங்கள், ஆண்டுகள் எல்லாமே தீவிர ஆய்வுக்குப் பிறகு 1970-ல் என்ன இருந்ததோ அதையே பயன்படுத்தியிருக்கிறோம். காரைக்கால் கல்லூரியில் திருவள்ளுவர் காலண்டர், கல்கத்தா வீட்டில் துர்கா காலண்டர் என்று எல்லாமே ஒரிஜினலைப் போன்ற விபரங்கள் உடையவையே.
12. புத்தகங்கள்
மருத்துவமனை, நதீராவின் வீடு, லெனின் கல்கத்தா வீடு, லெனினின் சென்னை வீடு ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து கிடைத்த பழையவற்றை, மெருகேற்றி அல்லது நகலெடுத்துப் பயன்படுத்தியுள்ளோம். பல புத்தகங்களின் முகப்புகளை நாங்களே உருவாக்கினோம்.
13. பாடப்புத்தகங்கள்
நதீரா மற்றும் அவரது தங்கை, லெனினின் தம்பி, நதீரா தோழி மற்றும் கல்லூரிப்பெண்களுக்கான பாடப்புத்தகங்கள் முழுவதும் உருவாக்கப்பட்டவைதான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பழைய பாணியிலான முகப்பை மாதிரியாக வைத்தும், தமிழ்நாடு நூற்பதிப்புக் கழகத்தின் பழைய புத்தகங்களை முன்மாதிரியாக வைத்தும் உருவாக்கினோம்.
14. கீதாஞ்சலி புத்தகம்
படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாகூரின் கீதாஞ்சலி புத்தகம், கல்கத்தாவில் வாங்கப்பட்டது. கல்கத்தாவில் தாகூரின் வீடு மற்றும் அவருடைய விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் பெரிதான முயற்சிக்குக் பின்னர் பழைய பாணியிலான ‘கீதாஞ்சலி’ புத்தகங்கள் நான்கு பிரதிகளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம்.
15. கம்யூனிச புத்தகங்கள்
கம்யூனிச புத்தகங்கள் சிலவற்றை நண்பர்களிடம் தேடியலைந்து வாங்கினோம். சிலவற்றை தோழர்கள் கொடுத்தனர். மேலும் பலவற்றை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அமைந்திருக்கும் ம.சிங்காரவேலர் நூலகத்தில் இரவலாகப் பெற்று பயன்படுத்தியுள்ளோம். லெனின் சென்னை இல்லத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும், மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ புத்தகங்களை நாங்களே உருவாக்கினோம்.
16. இலக்கியப் புத்தகங்கள்
நிலா நீ வானம் பாடலின் ஒரு சரணத்தில் தமிழின் இலக்கியப் புத்தகங்கள் தேவைப்பட்டன. எனவே, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பாரதியார் கவிதைகளை உருவாக்கினோம். அதின் முகப்பு அட்டைகள் மற்றும் எழுத்துருக்களில் எந்த நவீனத்தன்மையோ அல்லது 1970க்கு பிற்பட்ட விஷயங்களோ வந்துவிடாமல் முழுவதும் பழைய பாணியில் உருவாக்கினோம்.
17. நோட்டுகள்
கல்லூரி மற்றும் பள்ளி நோட்டுப்புத்தகங்கள் முழுவதும் ஒரிஜினல், அவற்றை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. அறுபது வருடங்களாகச் செயல்பட்டு வரும் ஒரு நோட்டுப்புத்தக விற்பனைக்கடையில் ஒரு ஓரத்தில் கண்டும் காணாமல் கிடந்த பழைய பாணி நோட்டுகளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம்.
18. விளம்பர போஸ்டர்கள்
மருத்துவமனை கேண்டீன், காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் முழுவதும் 1970ம் காலகட்டத்திய விஷயங்களை உள்ளடக்கி ஒரிஜினல்கள். மாதிரிகள் முன்வைத்து அவற்றை நாங்கள் புதிதாகத் தயாரித்தோம்.
19. சினிமா போஸ்டர்கள்
படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள் நாங்கள் உருவாக்கி, பிரிண்ட் செய்தவைகள். 1970-ம் காலகட்டத்திய படங்களில் சிலவற்றின் போஸ்டர்கள் கிடைக்கின்றன. ஆனால், அவை வண்ணத்தில், நவீன எழுத்துருக்களைக் கொண்டிருக்கின்றன. எனவே, பழைய போஸ்டர் விளம்பரங்களிலிருந்து உருவாக்கப்பட்டவையே அவை.
20. பணம், காசுகள்
பழைய பணம், நாணயங்களை மாதிரியாக வைத்து, நாணயங்கள் சேகரிப்பாளர்களிடம் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. பழைய நூறு ரூபாயின் தற்போதைய விற்பனை விலை ஆயிரம் ரூபாய்.
21. தொலைபேசி
பழைய மாதிரி நீண்ட வளைவில்லாத கேபிள்கள் கொண்ட போன்கள், பழம்பொருட்கடைகளிலும், சினிமா செட் ப்ராப்பர்டிஸ் கடைகளிலும் வாங்கப்பட்டவை.
22. அக்னாலட்ஜ்மெண்ட் கார்டு
தபால் சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்தும் இந்த கார்டை, முன்மாதிரியை வைத்து முறைப்படி அனுமதி பெற்று பிரிண்ட் செய்தோம்.
23. பஸ் டிக்கெட்
பழைய பாணியிலான வண்ணத்திலான, ஒரு நிறத்தில் அச்சுக்கோர்ப்பு மையத்தில் அச்சிடப்பட்ட பஸ் டிக்கெட்டுகளை, நாங்களும் அச்சுக்கோர்த்து அதன்படி உருவாக்கினோம்.
24. லெனின் சிலை
நாயகனின் வீட்டில் புத்தக அலமாரியில் இருக்கும் லெனின் சிலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் அலங்கரித்துக் கொண்டிருந்த ஒன்று. அது ரஷ்யாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த அன்புப் பரிசு.
25. தபால் பெட்டிகள்
இருவேறு தபால் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று கொல்கத்தாவில் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த 4 அடி உயரமுள்ளது. மற்றொன்று தகரத்திலான தொங்கும் பெட்டி. மேற்கண்ட பொருட்கள், தபால் துறையினர் தரவில்லை. எனவே, முன்மாதிரியை வைத்து நாங்களே வடிவமைத்தவைதான் இவைகள்.

26. டிராம்

கல்கத்தாவின் வடக்குப் பகுதியின் இன்றும் டிராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவை நவீன பாணியில் இருக்கின்றன. படத்துக்காக, ஒரு டிராம் வண்டியை ஒரு நாள் முழுதும் வாடகைக்கு எடுத்து, ஓரிரவில் அதற்கு வண்ணம் பூசி, சின்னம் வரைந்து, உள்புறங்களை மாற்றியமைத்தோம்.

27. துர்கா பூஜை

கல்கத்தா மண்ணின் விழாவான துர்கா பூஜை அங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ‘பொக்கிஷம்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் அங்கு துர்கா பூஜை விழா. படத்துக்காக, ஒரிஜினல் பூசாரி, ஒரிஜினல் முரசு அடிப்பவர்களைப் பயன்படுத்தியுள்ளோம். ஒரிஜினலாக துர்கா பூஜை கொண்டாடப்பட்டு படமாக்கப்பட்டது.


28. துர்கா சிலைகள்

துர்கா, பிள்ளையார், முருகன், சரஸ்வதி, லெட்சுமி என்று ஐந்து சாமி சிலைகள் ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டது. முறைப்படி அவற்றுக்கு பூஜை செய்து, கொண்டுவரப்பட்டது. இந்த சிலைகள், வைக்கோல், மூங்கில், களிமண் ஆகியவற்றைக்கொண்டு பழைய மாதிரியில் உருவாக்கப்பட்டவை.

29. கோலம்

துர்காபூஜை நடந்த திறந்தவெளி மண்டபத்தில் சுமார் 20 அடி அகலம் - 20 அடி நீளம் கொண்ட கோலம் வரைவது வழக்கம். படப்பிடிப்பின்போது, கோலம் வரையும் தொழிலாளர்கள் கிடைக்காததால், சுமார் 13 மணிநேரம் செலவிட்டு கோலத்தை நாங்களே வரைந்தோம்.

30. பூ அலங்காரம்

துர்கா பூஜைக்காக வழியெங்கும், விழா மண்டபமெங்கும் பூக்களை சரஞ்சரஞ்மாக தொங்கவிடுவது கல்கத்தா வழக்கம். சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவில் பூக்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டன. இந்த பூக்கள் முற்றிலும், 1970ம் காலகட்டத்திய இந்தியப் பூக்கள்தான். தற்போதைய இறக்குமதிப் பூக்களைப் பயன்படுத்தவில்லை.

31. வாழைப்பழம்

மருத்துவமனையில், வாழைப்பழங்கள் முற்றிலும் 1970ம் காலகட்டத்தில் வழக்கிலிருந்த ரகங்கள் மட்டுமே. 1980ல் அறிமுகமான பச்சை வாழைப் பழங்களைப் பயன்படுத்தவில்லை.

32. பிரட்

மருத்துவமனையில் கொடுக்கப்படும் பிரட் மற்றும் கவர்களுக்காக, பழைய டைப்பில் ரொட்டி தயாரிக்கச் சொல்லி வாங்கி வந்தோம். 1970ல் இருந்த மாடர்ன் பிரட் கவரின் மாதிரியை வைத்து நூற்றுக்கணக்கில் பிரிண்ட் செய்து பயன்படுத்தினோம்.

33. பெட்

மருத்துவமனையில் உபயோகப்படுத்திய பெட்கள், இரும்பிலான முற்றிலும் 1970ல் பயன்படுத்தப்பட்டவைகளே. டிராலி, வீல்சேர் ஆகியவைகளும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவையே.

34. உபகரணங்கள்

ஊசி, சிரிஞ்ச், மருந்து பாட்டில்கள், கத்தரி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை உபகரணங்களும் 1970ல் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல்கள் தான்.

35. சேர்கள்

படம் நெடுக பயன்படுத்தப்பட்டிருக்கும் சேர்கள், இரும்பு மற்றும் மரத்திலான பழையவைகள். தேடிப்பிடித்து கொண்டு வந்தோம்.

36. விக்டோரியா ஹால்

கல்கத்தாவின் தாஜ்மஹாலான விக்டோரியா ஹால் தற்போது டிரஸ்டினால் பராமரிக்கப்படுகிறது. பலத்த கண்காணிப்பில், தொன்மம் சற்றும் மறையாதிருக்கும் அந்த மாளிகையின் முன்பு படப்பிடிப்பு நடத்த பெரிதும் முயன்று அனுமதி வாங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்தி படப்பிடிப்பை எடுத்தோம்.

37. ஜீ.பி.ஓ

கொல்கத்தாவின் பழம்பெருமைகளில் ஒன்று கொல்கத்தா ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் எனப்படும் ஜீ.பி.ஓ., பிரிட்டிஷ் காலகட்டத்திய அந்தப் பெரும் கட்டிடம் இன்றும் மத்திய தபால் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. நிறையப் போராட்டத்துக்குப் பின்னர் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது.Image

38. ஜீ.பி.ஓ., பொருட்கள்

கல்கத்தா ஜீ.பி.ஓ. வில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில், தபால் மை, தபால் சீல்கள், தபால் முத்திரை குத்துமிடத்தில் காட்டப்படும் தபால் பொருட்கள் அனைத்தும் அங்கு கேட்டு வாங்கிப் பயன்படுத்தியவை.

39. தபால் சாக்கு

தபால்களை மாநில வாரியாக ஏற்றி அனுப்பும் துணிப்பைகள் அனைத்தும் எங்களால் உருவாக்கப்பட்டவை. துணிப்பை, சீல், அரக்கு, நூல் என்று முறைப்படி அனைத்துப் பைகளும் தயாரிக்கப்பட்டன.

40. ஒற்றைப்படகு

கதைப்படி தேவைப்பட்ட ஒற்றைப்படகுக்காக, ஒரு மரப்படகை தேடிப்பிடித்து வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். பயன்பாட்டில் இருந்து கொண்டிருந்த அந்தப் படகின் நிறத்தை மாற்றி, தோற்றத்தை மாற்றி, கடற்கரைக்கு இழுத்து வந்து படமாக்கினோம்.

41. மழைப்பொழிவு

‘பொக்கிஷம்’  படத்தில் மழை பொழியும் காட்சிகள் அனைத்தும், நிஜ மழையில் எடுக்கப்பட்டவேயே. கொல்கத்தாவில், தெருவெங்கும் வெள்ளம் வழிந்தோட, கேமராவை தண்ணீரில் வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. நாகூரில், காரைக்காலில் என்று வரும் காட்சிகளும் இயற்கை மழையில் நனைந்தவை.

42. நாகூர் தர்கா

தொன்மை மிக்க நாகூர் தர்காவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பொக்கிஷம். நாகூர் தர்கா நிர்வாகிகளின் பேரன்பு கலந்த ஒத்துழைப்புடன், இறை மாட்சிக்கு துளியும் களங்கம் வந்து விடாமல், மிக்க பொறுப்புணர்வுடன் அங்கு படப்பிடிப்பு வெவ்வேறு இரு தினங்களில் நடத்தப்பட்டது.

43. நாகூர் வீடுகள்

லெனின் நினைத்து பார்க்கும் காட்சிக்காக நாகூர் தர்கா எதிரே மற்றும் பக்கவாட்டில் அமைந்திருக்கும் இரண்டு வீடுகளில் படப்பிடிப்பை நடத்தினோம். இரு வீடுகளுமே நாற்பதாண்டுகள் பழமை நிறைந்தவை.

44. திட்டச்சேரி வீடு

நதீராவின் வீட்டுக்காக, ஒரிஜினல் முஸ்லிம் வீட்டைத்தேடி, கீழக்கரை, உத்தமபாளையம், நாகூர் பகுதிகளில் சுற்றியலைத்து கடைசியில் நாகூர் அருகே திட்டச்சேரியில் கண்டடைந்தோம். நாகூர் - நன்னிலம் சாலையில் இந்த ஊர் இருக்கிறது. ஊர் முழுக்க பாரம்பர்யம், பழமை வழியும் நீண்ட வீடுகள் இருக்கின்றன.

45. கல்கத்தா வீடு

கல்கத்தாவில் லெனின் வீடாகக் காட்டப்பட்டிருப்பது, துர்கா பூஜை நடப்பது, பூமிநாதன் வீடு ஆகிய அனைத்தும் அமைந்திருப்பது ‘லா ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய மாளிகையில்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜமீன் மாளிகை இது.

46. சிலை செய்யுமிடம்

கல்கத்தாவில் தொன்மம் நிறைந்த பகுதிகளில் ஒன்று குமாரடோலி. இங்குதான் சிலைகள் செய்யப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் நூற்றுக்கணக்கில் சிலைகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். பூமிநாதன் சிலை செய்வது இங்கு படமாக்கப்பட்டது.

47. கப்பல்கள்

ஐஸ்வர்யா, இந்திய அரசின் எண்ணெய்க் கப்பல் ஆகியவற்றில் முறைப்படி அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா கப்பலின் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் தமிழர்களாக இருந்து எல்லா உபகரணங்களையும் வழங்கினர்.

48. கப்பல் கேப்டன்

லெனின் அறிமுகக் காட்சியை அடுத்து கேப்டனுடன் லெனின் பேசுவார். அவர் ஒரிஜினல் கப்பல் கேப்டன். படப்பிடிப்பு நடந்த கப்பலின் கேப்டன் அவர். வேண்டுகோளை ஏற்று நடித்துக் கொடுத்தார்.

49. தரங்கம்பாடி கடற்கரை

நாகூர் கடற்கரையாக, தரங்கம்பாடி கடற்கரை காட்டப்பட்டுள்ளது. தரங்கம்பாடி கோட்டையைத் தாண்டி இருந்த விசாலமான வெளியில் படகை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

50. தரங்கம்பாடி பள்ளி

தரங்கம்பாடி நகரம் பல நூற்றாண்டுகள் பழமையானது. அங்கிருக்கும், கிறிஸ்தவ பள்ளியை, காரைக்கால் அவ்வையார் கல்லூரியாக மாற்றி அமைத்து, பைபிள் வாசகங்களை இரவு, பகலாக மறைத்து படப்பிடிப்பு நடந்தது.

51. பாடல் கம்போஸிங்

‘பொக்கிஷம்’ படத்துக்கான பாடல் கம்போசிங், கேரளாவின் ஆழப்புழாவில் நடந்தது. படகில் இசைக்கருவிகளுடன் நாள்முழுதும் தண்ணீரிலேயே சுற்றியலைந்து நான்கு நாட்களில் அத்தனை பாடல்களும் கம்போஸ் செய்யப்பட்டன.

52. துப்பட்டி

நாகூரின் தொன்மையான பெருமைகளில் ஒன்று துப்பட்டி. தற்போது முஸ்லிம் பெண்கள் அணியும், பர்தாவுக்கு இணையானது துப்பட்டி. வெள்ளை நிறத்தில், சுமார் 14 அடி நீளமுள்ள துப்பட்டி நாகூருக்கே உரிமையான விஷயம். இந்தப்படத்தில், முஸ்லிம் பெண்கள் முழுக்க, முழுக்க துப்பட்டி அணிந்தே நடித்திருக்கிறார்கள். இதற்காக, பல ஒரிஜினல் துப்பட்டிகளையும், அதைப்போன்ற சிலவற்றை நாங்களும் உருவாக்கினோம்.

53. கோபி கிணறு

லெனினின் சென்னை வீட்டில், துணி துவைக்கும் இடத்தில் ஒரு கிணறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததால், கிணறு ஒன்றை உருவாக்கினோம். அக்கம், பக்கத்தவர்கள் அதை நிஜக்கிணறு என்றே நம்பி விட்டனர்.

54. சீதாலட்சுமி மருத்துவமனை

1970ம் காலகட்டத்திய மருத்துவமனைக்காக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தேடியலைந்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த காலகட்டத்தில் கட்டப்பட்டு, அப்படியே இருக்கும் கோபி சீதாலட்சுமி மருத்துவமனையை தேர்வு செய்து, பல விஷயங்களை மாற்றியமைத்தோம்.

55. பெங்காலி பாடல்

படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஜ் மோனே..’ பெங்காலிப் பாடலுக்காக, கல்கத்தா சென்றிருந்தபோது அங்கு ஒரு பாடலாசிரியரைத் தேர்வு செய்து எழுதி வாங்கினோம். அவரை சென்னை வரவழைத்து, பாடலைப் பதிவு செய்தோம். தற்போது தமிழில் பாடிக்கொண்டிருக்கும் உஜ்ஜெயினி அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். அவர் கல்கத்தாவைச் சேர்ந்தவர்.

56. மணல் வீதி

நதீரா வீடு இருக்கும் தெரு, கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதாக கதையில் இருக்கிறது. மேலும், அந்தக் காலகட்டத்தை உணர்த்தவேண்டியிருந்ததால், தார் ரோட்டை, மணல் கொட்டி மணல்வீதியாக மாற்றியமைத்தோம்.

57. புறாக்கள் தர்ஹா

நாகூர் தர்காவில் நிறைந்திருக்கும் புறாக்களும் படத்தில் நடித்திருக்கின்றன. தர்காவுக்கு முன் நதீரா நிற்கும் ஷாட் எடுத்துக் கொண்டிருந்தபோது, நாங்களே எதிர்பாராமல், தர்காவில் இருந்த புறாக்கள் பறந்த வானம் முழுவதையும் நிறைத்தன. அதுபோல, லெனின் தர்காவில் விசாரித்துத் திரும்பும்போதும் அவரது தலைக்கு மேலே புறாக்கள் பறந்தன.

58. ஸ்டேட்ஸ்மேன்

கல்கத்தாவில் பயன்படுத்துவதற்காக ஆங்கில நாளிதழ் தேவைப்பட்டது. அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சாகிக்கொண்டிருக்கும் ‘ஸ்டேட்ஸ்மேன்’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, 1970ம் ஆண்டில் வெளியான நாளிதழை வாங்கி மறு உருவாக்கம் செய்தோம். அங்கு 50 ஆண்டுகால நாளிதழ்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

59. ஜனசக்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ம.சிங்காரவேலர் நூலகத்தில் பழைய ஜனசக்தி நாளிதழ்களை வாங்கி மறு உருவாக்கம் செய்தோம்.

60. தீக்கதிர்

மதுரையின் தீக்கதிர் அலுவலகத்தில், தீக்கதிர் பழைய லோகோ வாங்கி ரீபிரிண்ட் செய்தோம்.

61.ஓவியங்கள் - நியோ ரியாலிசம்

கல்கத்தா லெனின் அறையில் இடம்பெற்றிக்கும் பெரிய அளவிலான இரண்டு ஓவியங்கள் பழைய பாணியிலான நியோ ரியாலிசத்தைச் சார்ந்தவை. அந்த ஓவியங்களை, பழைய ப்ரேம் பாணியில் சட்டமிட்டு மாட்டி வைத்தோம்.

62. திட்டச்சேரி வீட்டுப் பொருட்கள்

நதீரா வீட்டில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பொருட்கள் அனைத்துமே, 1970 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்தவை. அந்தப் பொருட்களை திட்டச்சேரி, காரைக்கால் மற்றும் நிரவி ஆகிய ஊர்களில் வீடு, வீடாக தேடிச் சென்று வாங்கி வந்து பயன்படுத்தினோம். அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்.

63. மதுரை, காரைக்குடி பொருட்கள்

சைக்கிள் ஹெட்லைட், ஜூஸ்பிழியும் கண்ணாடி ஜூஸர், எனாமல் அடுக்கு கேரியர், பித்தளைச் சாமான்கள் மதுரை மற்றும் காரைக்குடியில் தேடியலைந்து வாங்கப்பட்டவை. 

64. காரைப்புயல்

காரைக்கால் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது, ‘நிஷா’ புயல் தாக்குதல் இருந்ததால் சுமார் ஒருவாரம் படப்பிடிப்பு நடக்கவில்லை. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புயல், காரைக்காலில் கரை கடந்தது. இருந்தாலும், படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி கடற்கரை, படத்தின் 2வது பாதிக்கு ஏற்றவாறு பொருந்தியிருந்தது.

65. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட்

நதீரா படிப்பது காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரியில். அவர் பஸ் ஏறும் காட்சிக்காக பஸ்ஸ்டாண்ட் தேடி தஞ்சை, திருச்சி, நாகை மாவட்டங்களில் பஸ் ஸ்டாண்ட்கள், தனியார் பஸ்டெப்போக்கள், அரசு பஸ்டெப்போக்களை தேடிப்பார்த்து சரிவராததால், காரைக்கால் பஸ் ஸ்டாண்டையே பயன்படுத்திக் கொண்டோம். அதற்கேற்ப, பஸ்ஸ்டாண்டிலிருந்த நவீனங்களை அலசி ஆராய்ந்து அகற்றினோம்.

66. ஹீரோயின் தோழி

நதீராவின் தோழி கேரக்டருக்காக, சென்னை, காரைக்கால், கோபி என்று பல பகுதிகளில் தேடியும் படப்பிடிப்புக்கு முதல்நாள் வரை கிடைக்கவில்லை. நதீராவின் தோழிகளாக நடிக்க வந்திருந்த கல்லூரி மாணவி ஒருவரே, தேர்வாகி தோழியாக நடித்தார்.

67. கல்கத்தா பெண்

கல்கத்தா லெனின் வீடு அருகில் வசிக்கும் பெண் கேரக்டருக்காக, கல்கத்தாவில் நான்கு நாட்கள் தேடியும் சரிவரவில்லை. கடைசியில், படப்பிடிப்புக்கு இரு தினங்கள் முன்னதாக தேர்வானவர்தான் படத்தில் நடித்திருக்கிறார். இவர், பெங்காலி டிவி தொடர்களில் பிரபலம்.

68. மவுத் ஆர்கன்

லெனின் வாசிப்பதற்காக பழைய பாணியிலான மவுத் ஆர்கனுக்காக, சென்னையின் அனைத்து இசைப்பொருட்கள் விற்பனைக் கடைகளில் தேடி கிடைக்கவில்லை. கடைசியில் திண்டுக்கல்லில் இருந்து நண்பர் ஒருவர் அனுப்பி வைத்த மவுத் ஆர்கனைத்தான் லெனின் படத்தில் வாசித்திருக்கிறார்.

69. குதிரை வண்டிகள்

குதிரை வண்டிகள் தமிழகத்தில் அரிதாகி விட்டன. கோபியில் கூண்டு வண்டிகள் தேடிப்பிடித்து கண்டுபிடித்தோம். காரைக்கால் படப்பிடிப்புக்கு, நாகப்பட்டினத்தில் இருந்து கூண்டு வண்டிகளை வரவழைத்தோம்.

70. சைக்கிள் ரிக்சா

கோபி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் ரிக்சாக்கள், திண்டுக்கல், மதுரையில் இருந்து லாரி மூலம் ஏற்றிக்கொண்டுவரப்பட்டவை.

71. இருசக்கர வாகனங்கள்

மருத்துவமனை காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும், 1970ம் காலகட்டத்தவை. அவற்றைப் பராமரித்து பாதுகாத்து வரும் ஒருவர் கோவையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து வரவழைத்தோம். லெனின் ஓட்டிச்செல்லும் மொபட் பிரெஞ்ச் நாட்டுத் தயாரிப்பு.

72. கல்கத்தா கைரிக்சா

தமிழகத்தில் ஒழிக்கப்பட்ட கைரிக்சாக்கள், கல்கத்தாவில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டோம்.

73. குல்மொஹர்

கதைப்படி தேவைப்படும், குல்மொஹர் மரத்திற்காக பல இடங்களில் தேடி, கடைசியில் திட்டச்சேரி பள்ளிவாசல் குளக்கரையில் கிடைத்தது. நதீரா கடிதம் படிப்பது இங்கு காட்சியாக்கப்பட்டது.

74. மோரிஸ் மைனர், டைகர், பென்ஸ், பியட்

காலம் மாறினாலும், கம்பீரம் குறையாத மோரிஸ் மைனர், பியட் கார்கள் காரைக்காலிலும், மோரிஸ் டைகர் கார் கல்கத்தாவிலும் பயன்படுத்தப்பட்டன. இரண்டையும் தேடிப்பிடித்து கொண்டுவந்தோம். கோபியில், பழைய பென்ஸ் காரை உபயோகப்படுத்தினோம்.

75. ஸ்டாம்புகள்

படத்தில் பயன்படுத்துவதற்காக 25க்கும் மேற்பட்ட, ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்டாம்புகளை முறையான அனுமதியோடு மறு உருவாக்கம் செய்தோம். காந்தி உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அத்தனை ஸ்டாம்புகளும் ஒரிஜினல் காலகட்டத்தைச் சேர்ந்தவை.

76. தபால் பொருட்கள்

மைக்குடுவை, மை, மை குத்தும் கட்டை, தேதி சீல், தபால் கவர்கள், காகிதங்கள் என்று தபால்துறை சார்ந்த அனைத்தையும் நாங்கள் உருவாக்கினோம்.

77. மரைன் என்ஜினியர் டிரஸ், சான்றிதழ்

லெனின் பயன்படுத்துவதற்காக மரைன் என்ஜினியர் உடை, அவரது சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும், 1970ல் மரைன் என்ஜினியராக பணிபுரிந்து தற்போது சென்னையில் வசிக்கும் ஒருவரிடம் வாங்கி மறு உருவாக்கம் செய்யப்பட்டவை.

78. பொக்கிஷப்பெட்டி

படத்தின் நாடித்துடிப்பான பொக்கிஷப் பெட்டிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளைப் பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பெட்டியே கடைசியில் பொக்கிஷப் பெட்டியானது. அந்தப்பெட்டியை, புதிதாகவும், பழையதாகவும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.

79. ஹவுரா பாலம்

காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் ஹவுரா பாலம், எப்போதும் ஜனநெருக்கடியில் காட்சி தரும் ஒன்று. லெனின் ‘சோலோ’ காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

80. கல்கத்தா டாக்சி

கல்கத்தா என்றாலே கை ரிக்சாக்களும், மஞ்சள் நிறத்திலான டாக்ஸிகளும்தான். இப்போதும் டாக்ஸிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், 1970ல் இருந்த மஞ்சள் மேலே - கருப்பு கீழே என்ற முறை மாறி கருப்பு மேலேயும், மஞ்சள் கீழேயுமாக இருந்தன. பத்து டாக்ஸிகளை வாடகைக்கு எடுத்து, பெயிண்ட் மாற்றினோம்.

81. கல்கத்தா குடைகள்

கல்கத்தாவில் பயன்படுத்தப்பட்ட குடைகள் அனைத்தும், பழைய பாணியிலானவை. கதர்த்துணியில், மரக்கைப்பிடியில், இரும்புக்கம்பிகளில் அந்தக் குடைகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தோம்.

82. காளிகாட்

கல்கத்தாவின் புகழ்பெற்ற காளி கோயில் இருக்குமிடம் காளிகாட். காளி கோயிலைச் சூழ்ந்திருக்கும் கடைகள் அனைத்திலும் பழைய பாணியிலான பொருட்களை வாங்கலாம். குடை, தகரப்பெட்டிகள், நார்க்கூடைகள் உள்ளிட்ட பெரும்பொருட்கள் இங்கும், சணல் பை உள்ளிட்ட பொருட்கள் குமாரடோலியிலும் வாங்கினோம்.

83. லெட்டர் பாக்ஸ் கல்கத்தா

கல்கத்தா நகரின் அனைத்து வீடுகளிலும், லெட்டர் பாக்ஸ் தொங்கிக் கொண்டிருக்கும். படத்திற்குத் தேவையான லெட்டர் பாக்ஸ், பழைய பொருட்கள் விற்கும் பல கடைகளில் ஏறி இறங்கி வாங்கி வந்தோம். லெனின் வீட்டு கேட்டில் இந்த பெட்டிதான் தொங்கிக் கொண்டிருக்கும்.

 84. புதுவை கல்வே கல்லூரி

பாண்டிச்சேரியில் உள்ள கல்வே கல்லூரி நூற்றாண்டுகள் பழமையானது. நதீரா போன் பேசுவது, பாடலின் சில காட்சிகள் காரைக்கால் கல்லூரியாக உருமாற்றப்பட்டு இங்கு படம்பிடிக்கப்பட்டது.

85. பனைமரச்சாலை

‘வரும் வழியெங்குமே..’ பாடலின் ஒரு ஷாட்டுக்காகவும், பஸ் போகும் வழியாகவும் பனைமரங்கள் நிறைந்த ஒரு சாலை தேவைப்பட்டது. மகாபலிபுரம் - திருப்போரூர் சாலையில் இது படமாக்கப்பட்டது. ‘மொழி இல்லாமலே..’ பாடலின் ஒரு பகுதி திட்டச்சேரி அருகே பனங்காட்டில் படமாக்கப்பட்டது.

86. துருக்கித்தொப்பி

சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான, குஞ்சம் வைத்திருக்கும் துருக்கித்தொப்பி மிகவும் புகழ்பெற்ற இஸ்லாமியச் சின்னங்களில் ஒன்று. காலத்தை குறிக்கும் வகையில், படம் முழுக்க துருக்கித் தொப்பி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொப்பிகளில் பாதி பாரிமுனை பகுதியில் விலைக்கு வாங்கப்பட்டவை. மீதி, நாகூர் பகுதி முஸ்லிம் நண்பர்கள் தந்தவை.

87. ஜாக்கெட் ஸ்பிரில்

கல்கத்தாவில் தற்போது பெண்கள் அணியும் ஜாக்கெட்டில் எந்த வேலைப்பாடுமில்லை. ஆனால், 1970ல் ஸ்பிரில் வைத்து அணிந்திருக்கிறார்கள். படத்திற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஜாக்கெட் தயார் செய்யப்பட்டன.

88. லெனின் ஷு-பெல்ட்

லெனினின் ஷு மற்றும் பெல்ட் ஆகியவை, பழைய பாணியில் எங்களால் தயார் செய்யப்பட்டவை. இப்போது இந்த மாதிரி கடைகளில் கிடைப்பதில்லை.

89. துணி பட்டன்

நர்ஸ் - கம்பவுண்டர் உடைகளில் பட்டனைச் சுற்றி துணி இருக்கும். அதே மாதிரி வகையில் துணிபட்டன் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தினோம்.

90. சிகை - மீசை
லெனின் மட்டுமல்லாது, படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள் அனைவருக்கும் படப்பிடிப்புக்கு முன்னதாக தலைமுடியை வெட்டி, மீசையைக் குறைத்தோம்.

91. போலீஸ், கண்டக்டர், டிரைவர்

போலீஸ், கண்டக்டர், டிரைவர் ஆகியோரது உடைகளை நாங்கள் தயாரித்தோம். இவர்களுடைய தொப்பி, யூனிபார்ம் துணி ஆகியவை 1970ம் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டவைகளின் மாதிரி.

92. நாகூர் பழக்கூடை

லெனின் தன் அப்பாவுடன், நதீரா வீட்டுக்கு வரும்போது கையில் வைத்திருக்கும் பழக்கூடை, நாகூரில் வாங்கப்பட்டது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்து தற்போது ஒழிந்து போன, பனை ஓலையில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய கூடை அது.

93. போஸ்ட் ஆபிஸ் வீடு

நாகூர் போஸ்ட் ஆபிஸாக காட்டப்பட்டிருப்பது நிஜ போஸ்ட் ஆபிஸ் அல்ல. ஒரே நாள் இரவில் உருவாக்கப்பட்டது. அங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் எங்களால் தயார் செய்யப்பட்டவை. பழைய கடிகாரம், காந்தி, நேரு புகைப்படங்கள் தேடிக்கொண்டுவரப்பட்டவை.

94. போஸ்ட்மேன் சீருடை – பேக்

போஸ்ட்மேன் சீருடையும், பேக்கும் பழைய பாணியில் உருவாக்கப்பட்டவை. அவர்களுக்குத் தொப்பி பழைய பாணியிலானது.

95. துறைமுகத் தொழிலாளர் சீருடை

துறைமுகத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அணிந்திருக்கும் நீல நிறத்திலான சீருடை அனைத்தும் புதிதாகத் தயார் செய்யப்பட்டவை. தற்போது ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் அணிகிறார்கள். 1970ல் நீல நிறத்தில் மட்டுமே இருந்தன.

96. லெனின் உடைகள்

லெனின் பயன்படுத்தியிருக்கும் சட்டை, பேண்ட், மற்றும் வெள்ளை ஜிப்பாக்கள் 1970ம் பாணியிலானவை. பேண்டின் அகலம் மற்றும் சட்டையில் மடிப்புகள் ஆகியவை அப்போது உண்டு. அவற்றை மனதில் கொண்டு தயார் செய்யப்பட்டவை அவை.

97. ஹீரோயின் மணிபர்ஸ்

நதீரா வைத்திருக்கும் மணிபர்ஸ்கள், பாசியினால் செய்யப்பட்ட பழைய காலத்தியவை. கோபி மற்றும் திட்டச்சேரியில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

98. குங்குமம்

நதீரா கண்ணாடி முன் வைத்துக் கொள்ளும் குங்குமம், பாரம்பர்ய முறைப்படி கையினால் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் குங்குமம். ஒரிஜினல் குங்குமம் மட்டுமே வேண்டுமென்று தேடி வாங்கப்பட்டது அது.

99. திட்டச்சேரி மரத்தூண் - ஹால்

நதீரா வீட்டில் ஹாலில் இருக்கும் நீல நிறத்திலான இரண்டு மரத்தூண்கள் ஒரே மரத்தில் தேக்கில் செய்யப்பட்டவை. அவற்றைச் செம்மைப்படுத்தி, நீல நிறத்தில் வண்ணம் தீட்டினோம். ஹாலின் மேற்கூரை மரத்தில் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடியது. அவற்றையும், சரிசெய்து பயன்படுத்தினோம்.

100. தொழுகை விரிப்பு

நதீரா மற்றும் அவரது குடும்பத்தினர் தொழும் தொழுகை விரிப்புகள், பழைய பாணியிலான கையினால் நெய்யப்பட்ட சித்திர வேலைப்பாடுகளுடன் கூடியவை. பல இடங்களில் தேடிப்பிடித்து அதைப் பயன்படுத்தியுள்ளோம்.
=====0000=====

த பேங்க் ஜாப் (18+)கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும்

வெணிலா புடிங் கொள்ளை.
இது மார்ச் மாதம் 2 ஆம் தேதி டூப்ளினில் நடந்த வங்கிக்(?) கொள்ளையை மையமாய் வைத்து புனையப்பட்ட நகைச்சுவை.
படித்து முடித்து விட்டு சிரிப்பு வராதவர்கள் மருத்துவரை பார்த்தல் நலம்.

ஓர் நள்ளிரவு,
முன்னரே வங்கியின் வாட்ச்மேன் மூலம் வங்கியின் அலாரம் செயலிழந்ததை அறிந்த ஐந்து கொள்ளையர்கள் ,வங்கி கதவை நவீன யுத்தியால் திறந்து மிகச் சாதுர்யமாக உள்ளே நுழைந்தனர் .
அங்கே மிகப் பெரிய காற்று புகா எலெக்ட்ரானிக் லாக்கரை கண்டனர்.
குளிர் வேறு அதீதமாயிருந்தது.
என்ன கருமம்டா இது ? என்று நன்கு போர்த்திக் கொண்டனர்.

லாக்கரை மிக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் திறந்து உள்ளே பார்த்தால்.
பணமோ,வைரங்களோ,நகையோ,தங்கக் கட்டிகளோ இல்லை.
மாறாக வெணிலா புடிங் அடைக்கப்பட்ட டப்பாக்கள் மட்டுமே இருந்தன.
மனம் தளரா கொள்ளையர்கள்.மற்ற காற்று புகா எலெக்ட்ரானிக்
லாக்கர்களையும் வெறியுடன் திறக்க எல்லாவற்றிலும் வெணிலா புடிங் அடைக்கப்பட்ட டப்பாக்கள் மட்டுமே இருந்தன.

நீண்ட போராட்டமாதலால் அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பசித்தது.
திருட வந்த இடத்தில் கை நனைக்க கூடாது என்ற கொள்கையை தளர்த்தி.
சுமார் 1500 வெணிலா புடிங் டப்பாக்களை ஐந்து கொள்ளையர்களும், வந்த வரையில் லாபம் என்று போட்டிபோட்டு உள்ளே தள்ளினர்.

கடைசியில் விதியை நொந்து கொண்டு வெளியேறிய கொள்ளையர்களுக்கு எஞ்சியது வயிறு அசவுகரியம் மட்டுமே.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளைக்கு பின்னர் :-

துப்பு துலக்குகையில்,ரெகார்டு செய்யப்பட ஒலி பதிவு வடிவத்தில் "ஒரு கொள்ளையன் ,அய்..."சாப்பிடுவதற்காவது கிடைத்ததே" என்று துள்ளியத்தை போலீஸ் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் போட்டு கேட்டு சிரிக்கின்றனர்.
வந்தவர்கள் சிரிப்பு திருடர்களோ? என சந்தேகிக்கின்றனர்.


மறுநாள் செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்தி:-
அயர்லாந்தின் பிரபல விந்து வங்கி உடைக்கப்பட்டது.
ஆயிரத்ஐநூறுக்கும் மேற்ப்பட்ட விந்து மாதிரிகள் சேதம்.
மனம் பிழர்ந்த கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது நகல்:-


இது அசல்:-

Funny!

The Vanilla pudding Robbery

This is just too funny not to share. Excerpted from an article which
appeared in The Dublin Times about a bank robbery
on March 2.
Once inside the bank shortly after midnight, their efforts at
disabling the security system got underway immediately.
The robbers, who expected to find one or two large safes filled with
cash & valuables, were surprised to see hundreds
of smaller safes throughout the bank.

The robbers cracked the first safe's combination, and inside they
found only a small bowl of vanilla pudding.

As recorded on the bank's audio tape system, one robber said, 'At
least we'll have a bit to eat.'

The robbers opened up a second safe, and it also contained nothing
but vanilla pudding. The process continued until
all safes were opened.

They did not find one pound sterling, a diamond, or an ounce of
gold. Instead, all the safes contained covered little
bowls of pudding.

Disappointed, the robbers made a quiet exit, each leaving with
nothing more than a queasy, uncomfortably full stomach.
The newspaper headline read:
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
' IRELAND 'S LARGEST SPERM BANK ROBBED EARLY THIS MORNING'....

Send this to anyone you think needs a good laugh!!!
_________________________________________________________________
பேங்க் ஜாப் பட விமர்சனம் என்று நம்பி வந்தவர்களுக்கு அந்த படத்தின் கானொளி

________________________________________________________________
டிஸ்கி:-
வெணிலா புடிங் எப்படி இருக்கும்?என்று கேட்கும் அப்பாவிகள்
கூகுள் சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதையும் இங்கு கொடுத்தால் விவகாரம் ஆகிவிடும்.

சிறை அதிகாரிக்கு காந்தி மகான் தந்த பரிசு...

இப்படியும் ஒருவரா?
இப்படியும் ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா? என்று எதிர்கால உலகம் சந்தேகப்படும்.-என்று சொன்னார் விஞ்ஞானி ஐன்ஸ்டின்.

யாரைப் பற்றி ? அவர் அப்படி என்ன அற்புதங்கள் செய்தார்?
அவருக்கு எவரிடமும் பகை இல்லை.
ஆனால் பல சுயநலவாதிகள் அவரை பகைவராக எண்ணியதுண்டு.

ஒரு சமயம் இந்தியாவில் விளைநிலத்தின் ஒருபகுதியில் அவுரிச் (ஒரு வகை தானியம்) சாகுபடி செய்ய கட்டாயப் படுத்தினார்கள் வெள்ளையர்கள்.அந்த வெள்ளையர்களில் ஒருவன் காந்தியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்தான் .

காரணம்?

அவர் அந்த ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக கட்டாய அவுரிச் சாகுபடிக்கு எதிராக குரல் கொடுத்தது தான்.ஏழை விவசாயி ஒருவர் அவரிடம் வந்தார்.
பாபுஜி.அந்த வெள்ளைகார துரை.உங்களை கொன்று போட துடித்துக் கொண்டிருக்கிறான்.நீங்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்கிறார்.

அமைதியாய் கேட்ட பாபுஜி.நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.சிறிதும் பயமின்றி.அன்றிரவே புறப்பட்டார்.எங்கே?சொந்த ஊருக்கா?இல்லை.
அவரை கொன்று போட துடிக்கும் வெள்ளையன் மாளிகைக்கு.
அவன் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய பாபுஜி.

அவன் யார் நீ? என கேட்க.

என்னைத்தான் நீங்கள் தேடிக் கொண்டிருப்பதாக கேள்விபட்டேன்.உங்களுக்கு எதற்கு சிரமம் என்று நானே வந்துவிட்டேன் என்கிறார். அவர்.
நீ சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.என்றான் வெள்ளையன்.
ஐயா , நான் தான் நீங்கள் கொல்ல விரும்பும் மனிதன் ,தனியாகத்தான் ஆயுதம்
ஏதுமின்றி வந்திருக்கிறேன்.

நீங்கள் விரும்பியபடி என்னை கொன்று போடலாம் என்கிறார்.வெள்ளையன் பயந்து போனான்.'இப்படியும் ஒரு மனிதரா?என்று வாயடைத்து நின்றான்.

அவர் தாம் அண்ணல் காந்தியடிகள்.

அவர் வாழ்கையின் ஒரு பகுதியை முதன் முதலில் புத்தகமாக எழுதிய
கே.கே டோக் , என்ற கிறித்துவ பாதிரியாருக்கு தான் அண்ணல் மீது எத்தனை ஈடுபாடு?

அந்த நூலில் ரோமன் ரோலந்தை நினைக்கையில் டால்ஸ்டாயின் நினைவு வருகிறது.
லெனினை பற்றி நினைக்கும் போது மாவீரன் நெப்போலியன் நினைவு வருகிறது.
ஆனால் இவரைப் பற்றி நினைக்கும் போது ஏசு நாதர் நினைவு தான் வருகிறது.
ஏசுநாதரைப் போல வாழ்கிறார்.
அவர் பேசியதை போலவே பேசுகிறார்.
அதற்காக அவர் என்றாவது ஒருநாள் தம் இன்னுயிரையும் கொடுத்தாலும் கொடுப்பார்.என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவர் சொன்னதும் உண்மை ஆனது.

அண்ணல் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல்வாதிகளின்
அட்டூழியம் கண்டு நிச்சயம் உள்ளம் கொதித்திருப்பார்.


காந்திஜி தந்த பரிசு

ஹாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில்
வசித்த காலம்...
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரைச் சிறையில் அடைத்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்திஜி படிப்பதற்காக, தமது நூலகத்தில் இருந்த சிறந்த நூல்களை சிறைசாலைக்கு அனுப்பி வைத்தார் ஸ்மட்ஸ்.


சிறையில் காந்திஜி காலணி தைக்கும் பணியைச் செய்து வந்தார். சிறையிலிருந்து அவர் விடுதலையானதும், ஜெனரல் ஸ்ம்ட்ஸை சந்தித்தார். அப்போது, தான் தயாரித்த ஒரு ஜோடி காலணியை ஜெனரலுக்கு பரிசளித்தார். நெகிழ்ந்து போனார் ஸ்மட்ஸ். பின்னாளில் காந்திஜியைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் சிறையில் அடைத்த அந்த மனிதரின் (காந்திஜி) மகத்தான தயாள குணத்தை முதன் முதலில் கண்டு கொண்டேன் அவர் தந்த பரிசு சாதாரண காலணிதான். எனினும், அவற்றின் மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை. அன்பு, தயாள குணம் ஆகிய இரண்டின் நினைவுச் சின்னமாகவே அவற்றைப் பார்க்கிறேன். எனவே, அந்தக் காலணிகளை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்'' என்றாராம்.
-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:-
இன்று என் அலுவலகத்தில் என் லைன் மேனேஜர் ஜஸ்டின் (பிரிட்) னிடம் பேசுகையில் :-
மகாத்மா காந்தியை பற்றி மிகவும் சிலாகித்தான்.
இங்கிலாந்தில் யாரையேனும் நல்லவரை பற்றி பிறருக்கு விளக்க வேண்டுமென்றால் "அவர் காந்தியைப்போல" என்று அடையாளம் காட்டுவார்களாம்.

ஆஹா .... அன்னார் இறந்து 61 ஆண்டுகள் ஆன பின்னும் நமக்கு என்ன பெருமை?
இதற்கு பெயர்தான் இறந்தும் பிறர் நினைவில் நீங்காமல் வாழ்தல் என்பது..

முற்பகல் செய்யின் - கலக்கல் கதைகள்(அசல் சென்னை வார்த்தை வழக்குகளுக்காக கெட்ட வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன....மன்னிக்கவும்.)

வேல்கண்ணன் என்னும் வீடு ப்ரோகரை (மன்னிக்கவும் மீடியெடேர்)
நாகவல்லியம்மன் கோவில் அருகில் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டோ,
சாந்தி குட்கா மென்று கொண்டோ, கூட படித்த நண்பர்கள் வேலைக்கு போய் வருகையில் வலுக்கட்டாயமாக பாதை மறிக்கப்பட்டு மொக்கை போட்டு அவர்கள் தாங்காமல்,
நான் கூல் டிரிங்க் வாங்கி தருகிறேன்,உட்டுடு என்று இவனுக்கு அழுதுகொண்டே வாங்கி தரும் போதோ பார்க்கலாம்,

இவனைப் போன்ற சக மீடியடர்களும் பல்லாவரம் போக அநியாய வாடகை
(40 ருபாய் )கேட்கும் ஆடோக்காரர்களும் அருகே இருப்பர்.
இவன் வாயை கிளறி புளங்காகிதம் அடைவர்,
அவ்வளவு கவிச்சை.
இவன் கண்கள் கடந்து போகும் சிறுமிகளை கூட அளவெடுக்காமல் விடுவதில்லை.எப்போதும் ஒரு தவ்ளத்தனமான பேச்சு ,பார்வை. இப்போது கத்திரி ஆகையால் வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவதாக கேள்வி..

வாயில் மென்று கொண்டிருக்கும் பபிள் கம்மை பார்த்தாலும் கேட்ப்பான்,
ஆசை படுவது எல்லாம் பெரிசு தான்,அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்திஎட்டு கதிர் அரிவாள் போல இவனுக்கு வியாபார யுக்திகள் பல ,
ஒன்றும் உருப்படியாயிருக்காது.

மனைவி எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை பார்க்க, பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மாமியார் தயவில் படிக்க,
துரை மூன்று வேலையும் நன்கு வயிறு முட்ட தின்பது ,ஒசிக்குடி,ஓசி பிரியாணி ,ஓசி டீ,
ஓசி அவுட் கோயிங் கால்,என ஓசி உபயத்தில் வண்டி ஓட.
இப்போது பரபரப்பாய் உள்ள உடனடி மீடியெடேர்தொழிலில் தானும் குதித்தான்,

இவனுக்கு தேர்தல் போது கவர் போட போவது,கவுன்சிலருக்கு கடைசி எடுபிடி காரியங்கள் செய்வது. பஞ்சாயத்தில் கடைகோடியாய் இருந்து கட்டிங் வாங்குவது ,
போன்றவை உபதொழில்,
வெள்ளை அடிக்க ஆள் பிடித்துக்கொடுத்தாலும் கமிஷன் வாங்கிக்கொள்வான்.
திருமணம் பதிவு செய்ய மூன்று பேரில் ஒருவனாய் கையெழுத்து போட அழைத்துப்போன நண்பனிடம் 500 பணம் கேட்டு வாங்கியவன்.

அவனுக்கு தனியாக சென்று வீடு காலியாக உள்ளது பற்றி தகவல் அறிவது பிடிக்காது,அவனுக்கு 15 இஸ்த்திரி வண்டிக்காரர்களும்,3 கேபிள் டிவி காரர்களும் ,பூக்காரர்களும்,பலசரக்கு கடை ஜெராக்ஸ் கடை,என தகவலளிப்பர் .
அந்த பல்லாவரம்,பம்மல் ,பொழிச்சலூர் ,அனகாபுத்தூர் ,சங்கர் நகர் எங்கு வீடு காலியாக ஆனாலும் தெரிந்துவிடும்,

கிடைக்கும் ஒரு மாத வாடகை பண கமிஷனை வீட்டுக்காரனை காட்டிய பார்ட்டி ,வீடு தேடியவனை கூட்டி வந்த பார்ட்டி,பக்கத்து தெரு வரை வந்த பார்ட்டி,வீடு வாசல் வரை வந்து நீ போ நான் இங்கயே நிக்கறேன் என்று கழண்ட பார்ட்டி என பங்கு போட்டு பிரிக்க ஒரு நாளுக்கு ஐந்நூறு தேறும்,
இவனுக்கும் இவன் கொடுக்கும் துப்பு மூலம் வாரத்திற்கு ஒரு ஆயிரம் கிடைக்கும்,
இவன் வாடிக்கையாளர் எல்லாம் ஐடி ,பேங்க்,மற்றும் நல்லா பணம் சம்பாதிக்கும் கூட்டம்,இவன் டுலெட் போர்டை கண்ட உடன்,(அ) கேட்டவுடன் வீடுகாரரை பார்த்துவிடுவான், முகத்தில் வெந்நீரை ஊற்றினாலும் போகமாட்டான்.
சார் 3500 க்கா சிங்கிள் பெட்ரூம் விடப்போறீங்க?என்ன சார் பொழைக்க தெரியாம?
என்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியா?அது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் ,
அப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,
அவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,
ரெண்டு பேரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,
அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,
என வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.

அப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,
இது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,
இதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,
ஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.
டூப் கூட போடலாம்.

அன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னா?என்று சொல்ல.
இவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க,
வீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,

அதற்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னு?என்று சொல்ல ,
இவன் அந்த ஆளை தனியே கூட்டிப்போய்,
இதோ பாருய்யா 3000 வாடகைக்கு பம்மல்ல வூடு கிடைக்காது ,
வோணும்னா அனகாபுத்தூர்ல கணேஷ் தேட்டராண்ட வேண்ணா ஒன்னு காலியாவுது.
உனுக்கு ஓகேன்னா நாளைக்கே பாக்கலாம்.
என்று சொல்ல வீட்டுக்காரர் தலை சுற்ற சுவற்றை பிடித்துக்கொண்டார்.

அதன் பின்னே மறுபடியும் நாகவல்லியம்மன் கோவில் அருகே வந்து கரண்ட் கட்டாகிஇருந்தாலும் இவனிடம் மாட்டிய நண்பர்களிடம் ஒரு மணி நேரம் மொக்கை போட்டு வீடு வந்தால் பசங்க படுத்து விட்டனர்,
மனைவி மட்டும் டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்க ,
இவன் வந்ததும்...

இன்னா ஓத்து துண்ணுட்டியா?
இவன், ம்ம்ம்......
அசிங்கமாக சிரித்தான்(வழிந்தான்).
இன்னா போவுது?
ம்ம்ம்......... நாடகம்.
இவன்,இன்னா கோவம் டா?

ம்ம்ம்......... வீட்டுக்காரன் வந்துட்டு போனான் ,
இவன்,இன்னாவாம் அவனுக்கு ?

வாடகை வர்ற மாசத்துலேந்து 4000 ரூபாவாம் ,
குடுக்க இஷ்டமில்லாட்டி வூட்ட காலி பண்ண சொல்லிட்டான்,
அடுத்த பார்ட்டி நாளைக்கே வர ரெடியாம் ,

இவன்,தெவ்டியாப்பய்யன்,...இன்னாடி இது தம்மாத்தூண்டு புறாக்கூண்டுக்கு
குடுக்கற 2000 மே அதிகம்டி,
நீ இன்னாடி சொன்ன?

................................மௌனம்.,,,,,பின்னர் ஆக்ரோஷமாகி
ம்ம்ம்...................... ,நீ தினம் பண்ணுற அநியாயம் இன்னிக்கு வீட்டுல காம்சிருக்குது.
நீ குடி கெடுக்கறதால இங்க இப்படியெல்லாம் நடக்குதுயா.
வாங்குற காசெல்லாம் எங்களுக்காவது குடுத்தியா?அல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..
இங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னா?
உன் வயிறு நிரம்பிடனும்,
துன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ..,
வாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...

புள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடா?
ஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்..
பாடு.......இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,
நாடகம் முடிந்ததும் ,இவன் தேனருவி சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்று?
அவன் எதற்கும் தொட்டு பார்த்துக்கொண்டான்.

தமிழக அரசு படம் போட்ட இலவச வண்ண தொலை காட்சியில் தேனருவி சானலில்
நீரில் நனைந்த நமீதா சரத்குமாரை பிணைந்து அர்ஜுனா ,அர்ஜுனா என்று பாட ,
இவன் உற்சாகமாக ,
படுத்திருந்த அவள் வேகமாக எழுந்து இவன் முகத்தில் எச்சில் துப்பி விட்டு போனாள்.

இவன் ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைத்து
ஒரே புழுக்கம்..... ஏசி போடனும்
என்று சாந்தி பாக்கை வாயில் பிரித்துக்கொட்டிக்கொண்டு பாடலை பார்க்க ஆரம்பித்தான்.
___________________________________________________________________
டிஸ்கி:-
இது குறித்து எழுத காரணம்.
என் பால்ய நண்பருக்கு என் விடுப்பில் வீடு தேட போய் நான் கண்ட அவலமான தரிசனமே ,ஒரு நல்ல வீட்டுக்காரரையோ,புரோக்கரையோ நான் சந்திக்கவில்லை.கடைசியில் பால்ய நண்பர் 3500 ரூபாய்க்கு வீடு கிடைக்காமல் ராணிப்பேட்டை சென்றுவிட்டார்.
அங்கிருந்து அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து எக்ஸ்பிரெஸ் ரயில் பிடித்து வேலைக்கு வருகிறார்.இப்போதும் என்னதான் பொருளாதார பின்னடைவு இருந்தாலும்,முன்பு போல புறநகரில் 3500 ரூபாய்க்கு வீடு கிடைப்பதில்லை .

இதில் உள்ள கெட்ட வார்த்தைகளை மறந்து விடுங்கள்.
நல்ல செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இது சிறுகதை போட்டிக்கு எழுதப்பட்ட கதையின் மீள்பதிவு.

துபாயில் கார் லைசென்சு எடுப்பது எப்படி? கலக்கல் கதைகள்

============0000=============
இது உண்மை சம்பவம்
க்கிய அரபு நாடுகளில், ஏன் ? இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச ஓட்டுனர் உரிமம் செல்லாது!!!! அவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஓட்டுனர் பயிற்சி வகுப்புகளும், தேர்வுகளும் ? ஒரு அமெரிக்கனோ, ஐரோப்பியனோ, பிரிட்டோ ,ஆஸ்திரேலியனோ, சவுத் ஆப்ரிக்கனோ ஏர்போர்டில் இறங்கியவுடன் ரென்ட கார் (rent a car) எடுத்து தங்கள் வீடோ, ஓட்டலோ, அலுவலகமோ போகின்றனர். ஆனால் நாம்? டாக்சி தான் பிடிக்கணும். கண்ணிருந்தும் குருடன் கதை தான்...

க்கிய அரபு நாடுகளில் வாகன ஓட்டுனர் உரிமம் எடுப்பது,கிழக்காசிய நாடுக்காரர்களான நமக்கெல்லாம் சிம்ம சொப்பனமே.!!! யாராலும் தேர்ச்சி அடைய முடியாத விதிமுறைகள். அதிர்ஷ்டம் வேண்டும் .தேர்வுகளில் .ஒழுக்கம் .நிதானம்,பொறுமை ,கவனம் மற்றும் விதிகளுக்கு கீழ்படிதல் வேண்டும் .ஏன் இந்த பாரபட்சம் என தெரியுமா?கீழே படியுங்கள்.

ப்படி உரிமத்துக்கு விண்ணப்பித்து ஆறுமுறை ஃபெயில் ஆகிய அன்பர் ஒருவர்.பொறுமை எல்லை மீறவே காவல்துறை உயரதிகாரியிடம் சென்று இந்தியர் மற்றும் எங்கள் அண்டை நாடுகள் என்ன அவ்வளவு கேவலமா? நாங்கள் நன்கு வாகனம் ஒட்டுவதில்லையா? அல்லது எங்கள் நாட்டில் நாங்கள் மாட்டு வண்டி ஒட்டுகிறோமா? ஏன் எங்கள் உரிமங்களை மதிக்க மாட்டேன் என்கிறீர்கள்? இத்தனை முறை ஏன் என்னை ஃபெயில் ஆக்க வேண்டும்?!!!என கொதித்தார்.

மேலும் நான் இண்டர்நேஷனல் உரிமம் வைத்துள்ளேன். இந்தியாவில் பத்து வருடங்கள் கார் ஒட்டியுள்ளேன். என்னை ஏன் உங்கள் தேர்வு அதிகாரிகள் ஆறு முறை பெயிலாக்கவேண்டும்? இதில் என்ன அரசியல் உள்ளது? என புலம்பினார். 

தற்கு அந்த காவல்துறை உயரதிகாரி, அமைதியாக, உங்கள் எல்லா உரிம ,சான்றிதழ்களின் நகல்களையும் எனக்கு கொடுத்து செல்லுங்கள். நான் உங்களுக்கு இதற்கான பதிலை திங்கள் அன்று சொல்கிறேன் என்று சுலைமானி கொடுத்து உபசரித்து அனுப்புகிறார். திங்கள் அன்று அன்பர் மீண்டும் அந்த அதிகாரியை காண அலுவலகம் செல்ல. அரைமணி நேரம் அமரவைக்கப்படுகிறார்.

பெயர் அழைக்கப்படுகிறது. உள்ளே சென்ற இவரை எதிர்நோக்கிய அதிகாரி, உங்கள் நாட்டில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறதா? லேன் டிசிப்பிளின் என்னும் கொள்கை எல்லா சாலைகளிலும் பின்பற்றப்படுகிறதா? சாலை பாதுகாப்பை ஒரு பொருட்டாகத்தான் மதிக்கிறீர்களா?!!!!......................அறவே இல்லை.

ன்று கேட்டவர்,கோபமாக ஒரு ப்ரவுன் கவரை தூக்கி அவர் முன் போட்டு பிரிக்க சொல்கிறார். பாருங்கள் உங்கள் நாட்டிலிருந்து உங்களுக்கு வேறொரு மாநிலத்தில் ஏஜெண்டு மூலமாக வெறும் 150 திர்காம் தந்து இண்டர்நேஷனல் உரிமம் மீண்டும் உங்கள் பெயரிலேயே எடுத்துள்ளேன்.அதற்கு எந்த ஆவனமும் தரவில்லை, வெறும், உங்கள்,மற்றும் தந்தை பெயரும் உங்கள் பிறந்த தேதியும் மட்டுமே தரப்பட்டது.அப்படி அழகாய் உள்ளது உங்கள் சட்டம் ஒழுங்கு.

ன்ன?, சென்னை காரரான நீங்கள் இதில் ராஜஸ்தானில் வசிப்பதாக உள்ளது என்கிறார். உரிமம் பெறும் நபர் எந்த தேர்வோ,சோதனையோ இல்லாமல் ஓட்டுனர் உரிமம் பெறும் அவலம் உங்கள் நாடுகளில் நிதர்சனம். நாங்கள் வங்க தேசத்து, இலங்கை,பாகிஸ்தான் உரிமமாயிருந்தால் வெறும் 75 திர்காம் கொடுத்து பெற்றிருப்போம். இறந்தவர்களுக்கு கூட உரிமம் வழங்கும் கூத்தும் நடக்கிறது உங்கள் நாடுகளில். இப்படி ஒரு சூழலிலிருந்து வந்துவிட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்களிடம் கோபமாய் கேள்வி கேட்கிறீர்கள்?

ங்கு நாங்கள் சட்டத்தையும்,போக்குவரத்து விதியையும் மதித்து தான் நடப்போம்.இஷ்டமிருந்தால் கீழ்படியுங்கள், இல்லையென்றால் பேருந்தில், டாக்ஸியில் செல்லுங்கள் என்றவர் , பின்னர் கண்டிப்பான குரலில் , நீங்கள் அந்த 150 திர்காமை கட்டிவிட்டு இங்கிருந்து செல்லலாம். என்கிறார்.

ம்மாள் முகத்தில் ஈ ஆடவில்லை. பணத்தை கட்டிவிட்டு தீவிரமாக உழைத்து அடுத்த தேர்விலேயே உரிமம் எடுத்தார். அந்த அதிகாரியையும் நேரில் சென்று இனிப்பு தந்து நன்றி சொன்னார். இப்போது தெரிகிறதா? ஏன் அரபு நாடுகள் சட்டத்தை ,விதிமுறைகளை மாதாமாதம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று? நம் மற்றும் நம் அண்டை நாட்டு பிராடுகளிடமிருந்தும் , மற்ற ஒருசில ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் தங்கள் நாட்டை காப்பாற்றவே.!!! இதை எழுதும் எனக்கு இது நியாயமாகவே படுகிறது. என்னை எம்ப்ளாய்மென்ட் விசாவுக்காக எவ்வளவோ சோதனை செய்துள்ளனர்.செல்லாது செல்லாது , ரூல்ஸ் மாறிவிட்டது என சோதித்துள்ளனர். ஆனால் எனக்கு இந்த கதையை கேட்டவுடன் இவர்களின் செய்கைக்கு கோபமே வருவதில்லை.மாறாக பாராட்டவே தோன்றுகிறது.

வ்வளவு ஏன்?இங்கே பணிபுரியும் நேர்மையான,ஒழுங்கான ஆண்கள் கூட சொந்த மனைவியையும் மகளையும் உள்ளே அழைக்க எவ்வளவு கெடுபிடிகள், எத்தனை சான்றிதழ்கள், அட்டஸ்டேஷன்கள்? சரிபார்ப்புகள், அலைச்சல்கள் !!! இவை இல்லை என்றால் நிறைய ஒழுக்கமற்ற விபச்சார புரோக்கர்கள் பெண்களை, மனைவி, சகோதரி, போன்ற போர்வையில் எளிதாக விசிட் விசாவில் கூட்டி வந்து அநியாயத்துக்கு விபச்சாரம் செய்கின்றனர். பணம் காய்ச்சி மரமாக இந்த நாட்டை இவர்கள் மாற்றாமல் இருக்கவே இந்த சட்டங்கள் என புரிந்த பின்னர் எனக்கு கோபமே வருவதில்லை. வெல்டன் ஆஃபீஸர்ஸ். ரோமில் ரோமனாய் இரு.
============0000=============

விதைப்பதையே அறுக்கிறோம்.-கலக்கல் கதைகள்ருநாள் பிரயன் ஆண்டர்சன் என்னும் நண்பர்
ஒரு வயதான பெண்மணி வழியில் டயர் பஞ்சராகிப் போன தன் பென்சு காரின் அருகில் நின்று போகும் வரும் வண்டிகளை கைகாட்டி உதவி கேட்டு கொண்டிருப்பதை பார்க்கிறார்.

தன் காரை அணைக்காமல் கதவை திறந்து இறங்கி,அந்த முதிய பெண்மணியை நெருங்கி,புன்னகைத்தும் கூட அவருக்கு நம்பிக்கை இல்லாமல் பதிலுக்கு புன்னகைக்க வில்லை.

அந்த அம்மா எதோ ஒரு அவசரத்திலும் பயத்திலும் இருப்பது நன்கு விளங்குகிறது.கடந்த ஒருமணி நேரமாக இந்த பெண்மணிக்கு யாரும் உதவவில்லை போலும்.குளிரில் வேறு நடுங்குகிறார்.
இருட்டிக் கொண்டு வேறு வருகிறது.

தன் தோற்றம் கண்டு அவருக்கு பசித்தவன் போலும், ஏழை போலும் தோன்றுகிறதோ?தம்மை அடித்து இருக்கும் பணத்தை பிடுங்கிக் கொள்வான் என நினைத்து விட்டாரோ?

இந்த குளிரில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அந்த பெண்மணி விரைத்தே இறந்து விடுவார்.எனவே என்ன நினைத்தால் என்ன என்று?

அவரை நெருங்கி
அம்மா என் பெயர் பிரயன் அண்டர்சன்,நான் உங்களுக்கு டயர்களை மாற்றி தருகிறேன்.நீங்கள் வெதுவெதுப்பாக காரின் உள்ளே அமருங்கள்.
இப்போ முடிந்து விடும் என்று சொல்லி விறு விறு விறுவென டயர் கழற்ற ஆரம்பிக்கிறார்.போல்டுகள் மிகவும் திருகூட்டப்பட்டிருந்ததால் உள்ளங்
கையில்,முழங்கையில் காயங்கள் பட்டு விடுகிறது.
கைகளும் கரியாகிவிடுகிறது.

புன்னகையுடன் அந்த பெண்மணியை நோக்கி முடிந்துவிட்டது என குரல் கொடுக்கிறார்.அந்த பெண்மணிக்கோ உயிர் போய் உயிர் வந்த சந்தோஷம்.
அவரை நோக்கி குனிந்து

நான் அவசரமாக செயின்ட் லூயிஸ் சென்றுகொண்டிருக்கும் போது இப்படி ஆனது. ஐயா , கடவுள் போல வந்து எனக்கு உதவினீர்கள்.
இதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை,என்று மேலும்

நான் உங்களுக்கு ,இதற்கு எவ்வளவு தரவேண்டும்?
எனக்கு எவ்வளவு தொகையானாலும் ஆட்சேபனை இல்லை.என்கிறார்.
இவர் புன்னகைத்து.

நான் இது பணத்துக்காக செய்த உதவியல்ல.
கடவுளுக்கு எனக்கு எப்படி யார் மூலம் தரவேண்டும் என்று நன்கு தெரியும் .
நான் அப்படித்தான் இதுவரை வாழ்ந்திருக்கிறேன்.என்று பணத்தை மறுக்கிறார்.
மேலும்.

உங்களுக்கு உண்மையிலேயே எனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றினால் ,அடுத்தமுறை கஷ்டத்தில் இருப்பவரை காண நேர்ந்தால்.வலிய போய் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்,அப்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

அந்த பெண்மணி காரை இயக்கி சாலையில் கலக்கும் வரை இருந்து விட்டு.மிகுந்த ஆத்ம திருப்தியுடன்.தன் காருக்கு வருகிறார்.

இப்போது மழை பிடித்துக் கொள்ள,
அந்த முதிய பெண்மணி சாலையோர உணவகம் கண்டு காரை உள்ளே செலுத்தி நிறுத்தி,உணவகத்திற்குள் நுழைந்து கதகதப்பான இடம் தேடி அமர்கிறார்.அது மிகவும் சிறிய எளிமையான உணவகம்,வெளியே இரண்டு பெட்ரோல் பும்புகளும் இருக்கின்றன.நிறைய கூட்டம்.

அதற்கு முன் இந்த பெண்மணி அப்படி ஒரு உணவகம் வந்ததில்லை.
இப்போது அங்கு வேலை பார்க்கும் பணிப் பெண் சுத்தமான பூத்துவாலையுடன் அருகில் வருகிறாள். இந்த பெண்மணியை அன்புடன் நெருங்கி, மழையில் நனைந்த இவரின் தலையை துடைத்து விடுகிறாள்.

அப்போது தான் இவர் அந்த பெண்மணியின் எட்டுமாத பேறுகால வயிற்றை.
கவனிக்கிறார்.என்ன ஒரு பிறவி?காலையில் இருந்து வேலை பார்த்துக் கொண்டு ,வயிற்றில் சுமையையும் வைத்துக் கொண்டு வீங்கிய கால்களுடன் எப்படி இந்த பெண்ணால் புன்சிரிப்புடன் இருக்க முடிகிறது?எப்படி முன் பின் தெரியாதவருக்கு கூட உதவ முடிகிறது?
என்று மனதுக்குள் பிரயன் ஆண்டர்சன்னையும் நினைத்துக் கொள்கிறார்.

பின்னர், இரவு உணவை முடித்து பில் வருகையில் , தட்டில் 100 டாலர் வைக்கிறார்.அந்த பெண் அதை எடுத்துப் போய் செலுத்தி,மீதம் தொகை கொண்டு வந்து இவரை தேட,இவர் வெளியேறியிருக்கிறார்.

அப்போது அந்த நாப்கினில் எதோ எழுதியிருப்பதை கண்டு வியப்புடன் அதை படிக்கிறாள்.படிக்கையில் நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறாள்.
அதில்,நாப்கினுக்கு கீழே இன்னும் நான்கு 100 டாலர் தாள்கள் உள்ளன.
நீ எனக்கு இதை திரும்ப தரவேண்டியதில்லை.

நான் ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடனை உன்னிடம் தீர்த்துக் கொண்டேன்.உனக்கு உண்மையில் எனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றினால்,இந்த உதவி சங்கிலி உன்னுடன் முடிந்து விடாமல் தொடரும்படி பார்த்துக் கொள்.என எழுதியிருந்தார்.

உணவகம் அடைக்கும் நேரம் நெருங்குகிறது.மனதில் சந்தோஷ பாரம்.
பாத்திரங்களை கழுவ வேண்டும்.மீதமுள்ள மேசைகளை கவனிக்க வேண்டும்.
எல்லா மேசைகளிலும் சர்க்கரை புட்டியில் சர்க்கரை நிரப்ப வேண்டும்.
களைப்பு அசத்தியது.

ஒரு வழியாக வீடு திரும்பி ,கட்டிலில் ஏறி , அந்த பெண்மணியையும்,கடிதத்தையும் அவர் செய்த உதவியையும் மனதுக்குள் அசை போடுகிறாள்.அந்த பெண்மணிக்கு எப்படி தெரியும்?
கணவன் மனைவி நாங்கள் ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட படும் பாடு.
அடுத்த மாதம் வரப்போகும் தன் பேறுகால சிகிச்சை செலவு?

இவர் உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?.
தன் கணவன் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்?
தூங்கும் போதும் எதிர்வரும் செலவுகளை எப்படி சமாளிப்போம் என்ற கவலையில் தூங்கும் தன் ஆசை கணவனுக்கு செல்லமாய் முத்தமிட்டு.
கவலைபடாதே பிரயன் ஆண்டர்சன் ,எல்லாம் சரியாகிவிடும்,
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். என்கிறாள்.

விவிலியத்தில் ஒரு புனித வசனம் உண்டு
து கொடுக்கப்படுகிறதோ அதுவே திரும்ப எடுக்கப்படுகிறது.
(Obadiah 15; Gal. 6:7)
விதைப்பதையே அறுக்கிறோம்.
நல்லதையே விதைப்போம்
போன்றன.
இது நகல்

இது அசல்

WHAT GOES AROUND COMES AROUND

One day a man saw an old lady,stranded on the side of the road, but even in the dim light of day, he could see she needed help. So he pulled up in front of her Mercedes and got out. His Pontiac was still sputtering when he approached her.

Even with the smile on his face, she was worried. No one had stopped to help for the last hour or so. Was he going to hurt her? He didn't look safe; he looked poor and hungry.

He could see that she was frightened, standing out there in the cold. He knew how she felt. It was that chill which only fear can put in you.

He said, 'I'm here to help you, ma'am. Why don't you wait in the car where it's warm? By the way, my name is Bryan Anderson .'

Well, all she had was a flat tire, but for an old lady, that was bad enough. Bryan crawled under the car looking for a place to put the jack, skinning his knuckles a time or two. Soon he was able to change the tire. But he had to get dirty and his hands hurt.

As he was tightening up the lug nuts, she rolled down the window and began to talk to him. She told him that she was from St. Louis and was only just passing through.. She couldn't thank him enough for coming to her aid.

Bryan just smiled as he closed her trunk. The lady asked how much she owed him. Any amount would have been all right with her. She already imagined all the awful things that could have happened had he not stopped. Bryan never thought twice about being paid. This was not a job to him. This was helping someone in need, and God knows there were plenty, who had given him a hand in the past. He had lived his whole life that way, and it never occurred to him to act any other way.

He told her that if she really wanted to pay him back, the next time she saw someone who needed help, she could give that person the assistance they needed, and Bryan added, 'And think of me.'

He waited until she started her car and drove off. It had been a cold and depressing day, but he felt good as he headed for home, disappearing into the twilight.

A few miles down the road the lady saw a small cafe. She went in to grab a bite to eat, and take the chill off before she made the last leg of her trip home.. It was a dingy looking restaurant. Outside were two old gas pumps The whole scene was unfamiliar to her. The waitress came over and brought a clean towel to wipe her wet hair. She had a sweet smile, one that even being on her feet for the whole day couldn't erase. The lady noticed the waitress was nearly eight months pregnant, but she never let the strain and aches change her attitude. The old lady wondered how someone who had so little could be so giving to a stranger. Then she remembered Bryan ...

After the lady finished her meal, she paid with a hundred dollar bill. The waitress quickly went to get change for her hundred dollar bill, but the old lady had slipped right out the door. She was gone by the time the waitress came back. The waitress wondered where the lady could be.Then she noticed something written on the napkin

There were tears in her eyes when she read what the lady wrote: 'You don't owe me anything. I have
been there too. Somebody once helped me out, the way I'm helping you. If you really want to pay me back, here is what you do: Do not let this chain of love end with you..'

Under the napkin were four more $100 bills.

Well, there were tables to clear, sugar bowls to fill, and people to serve, but the waitress made it through another day. That night when she got home from work and climbed into bed, she was thinking about the money and what the lady had written. How could the lady have known how much she and her husband needed it? With the baby due next month, it was going to be hard.....

She knew how worried her husband was, and as he lay sleeping next to her, she gave him a soft kiss and whispered soft and low, 'Every thing's going to be all right. I love you, Bryan Anderson .'

There is an old saying 'What goes around comes around.' (Obadiah 15; Gal. 6:7)

Today I sent you this story, and I'm asking you to pass it on. Let this light shine.
Don't delete it, don't return it. Simply, pass this on to a friend
Good friends are like stars....You don't always see them, but you know they are always there.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)