மூடநம்பிக்கை என்னும் மனநோய்!!!!குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தம்பதிகள்


நண்பர்களே,சான்றோர்களே !!!! அப்பாவி குழந்தைகளின் மீதான வன்முறை பெடோபைல் கொலைகாரர்களாலும், சைக்கோக்களாலும், மந்திரவாதிகளாலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது, மூட நம்பிக்கைக்கு மதம் கிடையாது, என்பதற்கு சான்றாய் மேலும் ஒரு நரபலி சம்பவம்.
மூட நம்பிக்கையின் உச்சமாக ,தங்களின் உடல்நிலை சரியாக வேண்டி ஒரு அப்பாவி ஒன்றரை வயது தலைச்சன் பிள்ளையை சைக்கோ-கணவன் மனைவி இருவர் சேர்ந்து கடத்திக்கொண்டு போய்  ,கழுத்தை அறுத்து, நரபலி கொடுத்து,ரத்தத்தை சேகரித்து அதை வறுத்தும், தலையை சிறிய எவர் சில்வர் தூக்கில், அடைத்தும், உடலை பெரிய எவர் சில்வர் தூக்கில் திணித்து அடைத்தும், தலையை கடற்கரையில் சென்று புதைத்தும், பிஞ்சு உடலை வீட்டுக்குளேயே புதைத்தும் உள்ளனர்,

பின்னர் ஒரு வாரத்துக்கு தினமும் அந்த இடத்திற்கு சென்று பூஜையும் செய்துள்ளனர்.இது நடந்தது எங்கோ ஒரு தேசத்தில் இல்லை,நம் தமிழகத்தில் தூத்துக்குடியில்.இதனால் சொல்லவருவது என்ன என்றால் ?!!! 

ந்த விஞ்ஞான உலகிலும் நிலவும் நரபலி கொடுக்கும் மூடநம்பிக்கையால் இன்று ஒரு குடும்பம் குழந்தையை இழந்து புத்திர சோகத்தில் தவிக்கிறது, ஒரு கணவன் மனைவி  மூடநம்பிக்கை எனும் சைக்கோத்தனத்தால் கொடிய கொலைகாரர்கள் ஆகிவிட்டனர். இவர்களின் குற்றத்தை எடுத்து விசாரிக்கும் நீதிபதிகள் தங்கள் வீட்டில் இதுபோல நேர்ந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ?!! அதை கொடுக்கவேண்டும். குழந்தையை கொல்லும் கொலைகாரர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்வதையும் நடைமுறைப்படுத்தலாம், அப்போதாவது இதுபோல  குற்றங்கள் நடப்பதை தடுக்கலாம்.

ஆகவே நாம் பெற்ற பிள்ளைகளை அதுவும் தலைச்சன் பிள்ளைகளை கண்கொத்திப்பாம்பாக  பத்திரமாக கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்  உள்ளோம். இது போல எங்கும் நடக்கலாம். முக்கியமாக மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகம் எப்போது வேண்டுமானாலும் இதுபோல விழிக்கும்.!!!

இந்த விஞ்ஞான யுகத்தில் இனியேனும்:-

1.வெள்ளிக்கிழமை பையன் பிறந்தால் ரவுடியாவான்
2.சனிக்கிழமை பெண்குழந்தை பிறந்தால் பரத்தையாவாள்.
3.செவ்வாய்க்கிழமை பெண் சமைஞ்சா புருஷனுக்கு ஆகாது.
4.புனர்பூசத்தில் குழந்தை பிறந்தால் ஹார்ட் பேஷண்ட் ஆகும்.
5.செவ்வாய், வெள்ளிக்கிழமை கூலி கொடுக்ககூடாது,ஆனால் வாங்குவேன்.
6.இருட்டினபிறகு பணம் கொடுக்ககூடாது,ஆனால் வாங்குவேன்.
7.ஆறு மணிக்குமேல ஊசி .விராட்டி,வைக்கோல் விக்ககூடாது
8.மூல  நட்சத்திரத்தில பொண்ணு பிறந்தா வாழ்க்க நல்லாஇருக்காது.
9.அமாவாசைல குழந்தைபிறந்தால் திருடனாவான்.
10.பையன் குழந்தைக்கு ரெட்டைசுழி இருந்தா இரண்டு தாரம்.
11.நாய் குட்டி வாய் கருத்திருந்தா அது திருட்டு நாய்.
12.காதுல முடி இருந்தால் கஞ்சன்.
13.கால் இரண்டாம் விரல் கட்டை விரலை விட பெரிசா இருந்தால் மனைவிக்கு அடங்கியவன்.
14.ஆடி மாசம்,வீடு மாறக்கூடாது,ஆடிமாசம் பீடை மாசம்.ஆடி மாசம் புருஷன் பொண்டாட்டி சேரவேக்கூடாது, 
15.சனிப்பிணம் தனியாகப்போகாது,நான்கு பேரைக்கூட்டிக்கிட்டு தான் போகும்.
16.திங்கட் கிழமை போய் சாவு துக்கம் கேட்டால் நமக்குதிருப்பி அடிக்கும்.
17.பூனை குறுக்கால போககூடாது.
18.சாவு,யானை குறுக்கால் போகலாம்.ஆனால் கைம்பெண் போகக்கூடாது.
19.குழந்தைக்கு கழுதைபால் கொடுத்தால் பேச்சு சீக்கிரம் வரும்.
20.நரி முகத்தில் விழிச்சால் செல்வம்.
21.தலையில பல்லி விழுந்தால் மரணம்.
22.வெளியே போறப்ப எங்க போறேன்னு கேட்கக்கூடாது. 
23.இரவில் பாம்பு என்று உச்சரிக்கக்கூடாது.
24.மூல நட்சத்திர பெண்னை கல்யாணம் செய்தால் மாமனார் இறந்து விடுவார்
25.திங்கட் கிழமை பயணம் திரும்பா பயணம்
26.கூட்டுத்தொகை எட்டு என வரும் வண்டியையோ, மனையையோ வாங்க கூடாது
27.தெருக்குத்து உள்ள வீட்டுக்கு குடிபோகக்கூடாது
28.கிணறுக்கு எதிராக வீட்டின் வாசல் இருக்க கூடாது
29.ஒரு மலையாளி ஆயிரம் கொலையாளிக்கு சமம்.
30.கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே!!!
31.ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி.
32.ரோஹிணி நட்சத்திரத்தில் ஆண்மகவு பிறந்தால் தாய் மாமாவுக்கு ஆகாது.
33.ஆயில்யம் நட்சத்திர மாப்பிள்ளை மாமியாருக்கு ஆகாது


[நண்பர்களே உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் அனுப்புங்க-சேர்த்துவிடுகிறேன்]

இன்னும்!!!!...இது போல காலத்துக்கு ஒவ்வாத பல பிக்காலித்தனமான சிந்தனைகளை அறவே விட்டுவிடுங்கள். மக்களே!!!..
=========0000=========
துரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்கம் இருந்தது. பத்தாண்டுக்கு முன், முத்தையாபுரத்தை சேர்ந்த அசன்மரக்காயர் மகள் சையது அலி பாத்திமாவிற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. பாத்திமா நஸ்ரின் என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன், மனைவியை விட்டு பிரிந்தேன். தாயின் பாதுகாப்பில் மகள் உள்ளார். மனைவியை பிரிந்ததால், மனம் வருத்தப்பட்டேன். 

தனால், சமையல் வேலைக்கு செல்லவில்லை. என் மீது குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். எப்போதாவது வேலைக்கு சென்று, மது குடித்து வந்தேன். காசு இல்லாத நேரம் மனம் வருத்தப்படும். பட்டினியோடு திரிவேன். உடல் நிலை மோசமடைந்தது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள், ஏர்வாடி தர்கா சென்றால், உடல் குணமாகும்; கெட்ட பழக்கம் மாறிவிடும் என்றனர்.

ரண்டாவது திருமணம்:ஐந்தாண்டுகளுக்கு முன், ஏர்வாடி சென்று தர்காவில் தங்கினேன். அங்கு தரும் உணவை சாப்பிட்டேன். ஒரு மாதத்திற்கு முன், என்னைப்போல் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற ரமீலாபீவி, ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். அவருக்கு பல உதவிகளை செய்தேன். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. தர்காவிலேயே, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏர்வாடியில், 200 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.தர்காவிற்கு வருவோர் கொடுக்கும் காசுகளை சேகரித்து வந்தேன். அந்த வருமானத்தில் “சோமாஸ்’ செய்து, ரமீலாவிடம் கொடுத்து விற்று வரச்சொல்வேன். அதில் கிடைத்த வருமானத்தில் சாப்பிட்டோம். தலை பிள்ளையை கொன்று ரத்தத்தை எடுத்து ஒரு குழாயில் அடைத்தும், அந்த குழந்தையின் தலையை தனியாக எடுத்து, கடற்கரையில் புதைத்து வைத்து, ரத்தத்தை பூஜை செய்து கடலில் எறிந்தால் உடல் நிலை சரியாகும் என சிலர் சொல்ல கேட்டேன்.இது குறித்து ரமீலாவிடம் கூறினேன். அவரும், இதுபோல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். சமயம் வரும்போது செய்வோம் என முடிவு செய்தோம். ஏர்வாடியில் சோமாஸ் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, பல தர்காக்களுக்கு சென்று பாத்தியா ஓதி வந்தோம்.

ர்காவில் குழந்தை கடத்தல்:கடந்த ஜூன் 30ம் தேதி கோரிப்பாளையம் தர்காவிற்கு வந்தோம். அங்கு தங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காக, பணம் கட்ட வேண்டும் என்றனர். எனக்கும், ரமீலாவிற்கும் சேர்த்து தலா 150 ரூபாயை தர்காவில் செலுத்தினேன். தர்காவில் 41 நாட்கள் தங்கலாம் என்றனர். கடந்த ஜூலை 1ம் தேதி தங்கினோம். கைக்குழந்தையுடன், பெண்ணும், பாட்டி ஒருவரும் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தையை கடத்த திட்டமிட்டோம். இதற்காக, குழந்தைக்கு அருகிலேயே நாங்களும் படுத்துக் கொண்டோம்.இரவு 10 மணிக்கு தர்காவின் கதவுகளை பூட்டினர். அதிகாலை நான்கு மணிக்கு குழந்தை அழுதது. குழந்தைக்கு தாயார் பாலூட்டினார். பின், குழந்தையை படுக்க வைத்து, அருகிலேயே அவரும், பாட்டியும் படுத்துக் கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு பாங்கு சொல்லும் போது, கதவை திறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தையை கொன்று நரபலி:மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

னது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
=========0000=========
நன்றி தினமலர்,தினமணி

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் இரட்டைத்தன்மை!!!:(

ருமை நண்பர்களே,சான்றோர்களே!!!! தமிழ் நாட்டின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களின் வலைத்தளங்கள் தமிழில் இல்லை, என்பதை நீங்கள் அறிவீர்களா? பல்கலைக்கழகங்கள் கல்வியை வியாபாரம் செய்கிறது என்பது சரியாகவே இருக்கிறது,


ன் நண்பர் ஒருவர் நான் தமிழ்குடிதாங்கி என்று எண்ணி, சேர் பெர்சன் மற்றும் டீன் என்னும் ஆங்கில வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை கேட்டார், தோ உடனே அனுப்புகிறேன்.என்று நானும் பொறுமையாக ஒவ்வொரு பல்கலைகழகத்தின் வலைத்தளமாக சென்று தேடிப்பார்த்தால் எதிலும் தமிழ் இல்லை,

சும்மா சொல்லக்கூடாது, பெரும்பான்மையான பல்கலை வலைத்தளங்களில் காண்போரை கவர்ந்திழுக்கும் தோன்றி மறையும்  மாணவர் சேர்க்கை விளம்பரங்கள் கூட ஆங்கிலத்திலேயே உள்ளன, மனோன்மணியம் சுந்தரனார் என்னும் நீண்ட தமிழ்ப்பெயரை பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் அந்த பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் சென்றால் , அது  கூட தமிழில் இல்லை, என்ன கொடுமை?!!!, இதை விடக்கூடாது என்று பொறுமையாக தேடிய பின்னர் பாரதிதாசன் பல்கலைகழகம் மட்டும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாய் பொருள் கொண்டிருந்தது. அதிலும் நான் தேடிய இந்த சொற்கள் கிடைக்கவில்லை.

டைசியில் எனக்கு தெரிந்த விதத்தில் ஒரு  இலங்கை அகராதியில் பார்த்து அந்த நண்பருக்கு மொழி பெயர்த்து கொடுத்தேன்,பல்கலைக்கழகங்களுக்கு இந்த இரட்டைத்தனமை நாரப்பிழைப்பு தேவையா?இவர்களே இப்படி ஒதுக்கினால் ,மாணவர்கள் எப்படி தமிழை  விரும்பி படிப்பார்கள்?!!!
தோ அந்த மொழி பெயர்ப்பு:-[யாராவது இது தவறு என்றால் திருத்துங்கள்]

dean=பல்கலைக்கழக போதனா பீட தலைவர்

chair person=அமர்வு செயற்குழு உறுப்பினர்

ந்த பல்கலைக்கழகங்கள் தரும் சான்றிதழை பார்த்திருக்கிறீர்களா?!!! அதில்   மட்டும் யாருக்கும் புரியாதபடிக்கு இளங்கலை - கணிணிப்புலம், இளங்கலை - உயிரி அறிவியல் புலம்,  முதுகலை-கட்டிடக்கலைப்புலம் என்று .வெளிமாநில நிறுவனத்தாருக்கோ,வெளிநாட்டு நிறுவனத்துக்கோபுரிந்து கொள்ள முடியா மொழியில் கொடுப்பார்களாம், நாம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அட்டெஸ்டேஷன் வாங்கி கற்பூரம் அடித்து அவர்கள் முன் சத்தியம் செய்ய வேண்டும் இது நான் படித்து வாங்கினேன் என்று
வாயில நல்லா வருது!!!தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தி முடிந்த கையோடு ஒரு ஆணையை எல்லா பலகலைக்கழகத்துக்கும், ஏனைய அரசு அலுவலகத்துக்கும் அனுப்பியிருந்தால் அது அழகு!!!. கோடிகளை கொட்டி செலவு செய்தவர்களுக்கு ஆயிரங்களை செலவு செய்து தமிழில் வலைத்தளம் செய்வது கடினமா?!!!!யோசிங்க ஆபீஸர்!!!
=============00000==============
நீங்களும் தமிழை இதில் தேடிப்பாருங்க.


=============00000==============
டிஸ்கி:-
இங்கே அரபு நாட்டின் ஏனைய வலைதளங்களில் அரபிக் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே வலைத்தளம் அமையப்பெற்று இருக்கும்..நான் கூட என் பதிவின் பெயரை இரண்டு மொழியில் வைத்துள்ளேன்!!!ஏன்?நான் ஆங்கில பதிவர்கள் பலருக்கும் போய் பின்னூட்டமிடுகிறேன்,அப்போது அவர்களுக்கு இது யார் ? என்ன பெயர் என்று குழப்பம் வரக்கூடாது, என்பதால் தான்.நான் ஆங்கில, தமிழ் இரண்டு மொழியிலும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளங்கள் அமைப்பதையே முன்/வழிமொழிந்து கெஞ்சி கேட்டு வரவேற்கிரேன்,நான் சத்தியமாக,மருத்துவர் ஐயா கட்சி இல்லை..மக்கள் தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை..

 =============00000==============

கழுதைக்கு கற்பூர வாசனை தெரியவே வேண்டாம்!!!!:(


ழுதைக்கு கற்பூர வாசனை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அது மாற்று இனத்தின் மீது இப்படி ஒர் வன்முறையை பிரயோகிக்காது. மனிதர்கள் என்று கூறிக்கொண்டு சில கொடியவர்கள் தெற்கு  ரஷ்யாவின் அசோவ் கடற்கரையில் ஒரு அப்பாவி கழுதையை பாராசூட்டில் கட்டி ஏற்றி,மோட்டார் படகில் இணைத்து , அரை மணி நேரம்  பாராக்ளைடிங் செயததையும், அதை அங்கே குழுமியிருந்த பல கொடியவர்கள் காப்பாற்றாமல் போட்டோ,வீடியோ எடுத்ததையும் நீங்களே பாருங்கள்!!!. 

யாரும் போலீசுக்கு கூட தெரிவிக்காமல் மும்முரமாக வீடியோ எடுத்துள்ளனர், கழுதை மரண பயத்தில் அலறியது ஊருக்கே கேட்டதாம்,கழுதையை இவர்களின் மோட்டார் படகு கீழே இறக்கி விடுகையில் அது  கடல் நீரில் ஏறத்தாழ  மூழ்கியே போனதாம்,பின்னர் மூச்சு திணறியபடியே அதன் கால்கள் தரதரவென உரசிய படி தரையைத் தொட்டதாம், மக்களில் சிலர் அதை கண்டு கைகொட்டி சிரிக்க, அங்கே இருந்த குழந்தைகள் மட்டும் இது தவறு என்று பெற்றோரிடம் அதை காப்பாற்ற சொல்லி அழுதது ,எனப்  படித்தேன். மனிதம் உயிரோடு இருக்கிறது என இன்னும் நம்புகிறீர்களா?!!!

கழுதையைக் கட்டி பறக்கவிடும் கொடியவர்கள்,காணொளி யூட்யூபிலிருந்து:-

த டின் ட்ரம்[1979] [மேற்கு ஜெர்மனி] [The Tin Drum] [ கண்டிப்பாக 18+]

ந்த படம் டின் ட்ரம் பார்த்து முடித்தபோது எத்தனையோ கேள்விகள் காட்டாற்று வெள்ளமாய் உயர்ந்து எழுந்தன?!!! நாம் வாழும்  பூமியில் தான் எப்படியெல்லாம் மனிதர்கள்?!!! எத்தனை ரகமான மொழி, மனிதர்கள்? மதங்கள்? என்ன மாதிரியெல்லாம் கலாச்சாரம், தெரியாத சமூகத்தில் அறியப்படாத கதைகள் தான் எத்தனை? எத்தனை?!!! ஒரு பெண்ணால் சமூகத்தில் ஒரே சமயத்தில் இருவருக்கு மனைவியாய் வாழமுடியுமா? அதை சமூகம் தான் ஏற்குமா?!!!சரி விடுங்கள் கணவனாவது ஏற்பானா? மாமா நேருவுக்கும் , மவுண்ட்பேட்டன் மனைவி இலியானாவுக்கும் இதேபோல வெளிப்படையான முக்கோணக்காதல் இருந்ததாய் படித்தது தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!!!

ரு சிறுவனால் தன் உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மூன்று வயதிலேயே நிறுத்துதல் என்பது தான் ஆகக்கூடியதா?!!!பின்னர் தன் 20 வயதில் இனிமேல் வளர்வேன் என தீர்மானித்தல் தான் இயலுமா? தான் இடைவிடாது வாசிக்கும் தகரமேளத்தை யாரேனும் பிடுங்கநேர்ந்தால்,அருகே உள்ள கண்ணாடி சாமான்களை பார்த்து அடித்தொண்டையில் நாராசமாய் அச்சிறுவன் கத்ததுவங்க,அந்த கண்ணாடி பொருட்கள்,சன்னல்கள் அடுத்த நொடியே பொடிபொடியாய் நொறுங்குவது இயலுமா?நம்மை கதை நடக்கும் இடத்துக்கே கைபிடித்து அழைத்துப்போய் ஆம்!!!சாத்தியமே என சொல்லுகிறது இப்படம்,..

தில் ஆஸ்கர் என்னும் சிறுவனாய் வந்த டேவிட் பென்னெண்ட்  பிரதான பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார், இப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு 11வயது, இப்படத்தில் இவரே 3வயது சிறுவனாயும் 16வயது சிறுவனாகவும்  20வயது இளைஞனாகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருப்பார்.

ரு படைப்பாளியின் கற்பனைத்திறனுக்கு உச்சமாய் இந்த ஜெர்மானிய சினிமாவை சொல்லுவேன்,
என்ன அருமையான விந்தையான் டார்க் ஹுயூமரை இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் கையாண்டிருக்கிறார்,

இப்படம் 1959ஆம் ஆண்டு வெளி வந்து  நோபல் பரிசு பெற்ற  , நாஜி போர் குற்றவாளியான கன்தர் க்ராஸின் [Günter Grass] டின் ட்ரம் என்னும் புதினத்தை மிக அழகாய் உள்வாங்கி, கவித்துவமாய் இயக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு வெளியானது, 1980 ஆம் ஆண்டின் சிறந்த வேற்று மொழித்திரைப்படத்துக்கான ஆஸ்கரையும், கோல்டன் பாம் உட்பட ஏனைய விருதுகளையும் வென்றது. 71 வயதான இயக்குனர் வோல்கர் ஸ்ச்லோண்டோர்ஃப் [Volker Schlöndorff  ] 38 படங்கள் இயக்கியுள்ளார். மிகச்சிறந்த படைப்பாளி, இவர் படைப்புகள் , மேற்கு ஜெர்மானிய திரையுலகின் பலமும் பெருமையும் ஆகும். அதில் ஆகச்சிறந்த படம் இது.
=======0000========
படத்தின் கதை:-
இந்த படம் மிகப்புதுமையாக,கருவில் இருக்கும் குழந்தை உற்சாகமான குரலில் தன்னை நமக்கு அறிமுகம் செய்து கொள்வதுடன் துவங்குகிறது, முதலில் சிறுவன் ஆஸ்கரின் பாட்டியை பற்றிய அறிமுகம்:-

தை 1925ல் ஃப்ரீ சிட்டி ஆஃப் டான்சிக் என்னும் குட்டி நாட்டில் துவங்குகிறது, அங்கே கஷுபிய கிருஸ்துவ இனத்தை சேர்ந்த நடுவயதுப்பெண் உருளைக்கிழங்கு விளையும் நிலத்தில் கிழங்கு அறுவடை செய்து கூடையில் சேகரித்து கொண்டிருக்க, அங்கே போலீசாரால் துரத்தப்படும் ஒரு குள்ளர் ஓடி வந்து, இந்த பெண்மணியிடம் கெஞ்சி அவளின் பாவாடைக்குள் ஒளிந்துகொள்கிறார்.

ள்ளே ஒளிந்த குள்ளர் சும்மாவா இருந்தார்?!!!.  சப்தமில்லாமல் மேற்படி விவகாரத்தையும் துவங்குகிறார். இந்த பெண்மணியிடம் தப்பி ஓடிய குள்ளரை பற்றி விசாரிக்க வந்த போலீசாரை வேறு வழியில் திசை திருப்புவதற்குள் அவளுக்கு தாவு தீர்ந்துவிடுகிறது, அதன் பின்னர் அவர்கள் இருவர் ஒரு வருடம் நெட்டையும் குட்டையுமாய் சேர்ந்து வாழ்ந்து,அவள் கருவில் இருக்கும் ஆஸ்கரின் அம்மா ஆக்னெஸ் ஐ  பெற்று எடுக்கிறாள்.

ரு நாள் மீண்டும் குள்ளரை போலீஸ் துரத்திபோய் சுட்டுவிட, அவர் குண்டடி பட்டு ஆற்றில் குதிக்கிறார். அதன் பின்னர் அவர் தென்படவேயில்லை, அவர் எங்கோ அமெரிக்காவில் போய் நடிகராகிவிட்டார், என ஒரு வதந்தி உலவுகிறது. அதன் பின் பாட்டி காய்கறி விற்கும் சந்தைக்கு, எப்போது போலீஸ் யாரையேனும் தேடிவந்தாலும், அப்பெண்மணியின் மூன்று தடித்த பாவாடைகளையும்  லஜ்ஜையில்லாது தூக்கிப்பார்த்து சோதிக்கிறது.,  ரொம்ப சோதனைடா சாமி!!!

ஸ்கரின் அம்மா ஆக்னெஸ் [ஏஞ்சலா வின்க்லர்], முறைப்படி ஒரு ஜெர்மானியன் ஆல்ஃப்ரெட்ஐ[மரியோ அடார்ஃப்] திருமணம் செய்திருந்தாலும், தன் போலந்து உறவுக்காரன் ஜேன்னிடம் [டேனியல் ஓல்ப்ரிடிஜிஸ்கி] காதலும்,காமமும் கொண்டிருக்கிறாள் , அந்த விடயம் அவள் கணவனுக்கும் தெரிந்தே இருக்கிறது, இருந்தும் அவன் தன் அழகிய மனைவியை தனக்கு கிடைத்த பொக்கிஷமாய் கருதுவதால் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். ஆக்னஸ், ஜேனிடம் உடலுறவு கொண்டு ஆஸ்கரை  சுமக்க ஆரம்பிக்கிறாள்.

பிரசவவலி எடுக்க,குழந்த வெளியே வர அடம் பிடிக்க, அவள் வேடிக்கையாக குழந்தை ஆஸ்கரிடம் நீ வெளியேற ரொம்ப அடம்பிடிக்காதே!!! உனக்கு மூன்று வயதாகும் போது சிகப்பும்,வெள்ளை வர்ணமும் அடித்த பளபளப்பான தகர மேளம் வாங்கித்தருகிறேன்!!!,என உறுதி கொடுத்தது தான் தாமதம், குழந்தை ஆஸ்கர் சறுக்கிக்கொண்டு வெளியே வந்து விழுகிறான், இவனை கல்லுளிமங்கன், விடாக்கண்டன் என  எத்தனை அழைத்தாலும் தகும்.மேலே படியுங்க!!!

ஆஸ்கருக்கு 3 வயது:-
வள் அம்மா வாக்களித்தபடியே ஒருஅழகிய தகரமேளத்தை இவனுக்கு பரிசளிக்கிறாள், மேசைமேலே சீட்டு ஆடிக்கொண்டிருக்கையிலேயே, ஆக்னஸின் காதலன் ஜேன் மேசைக்கடியில் காலகளை  ஆக்னஸின் தொடைக்குள் நுழைக்கிறான்,இதை மேசைக்கடியில் ஒளிந்திருக்கும் ஆஸ்கர் பார்க்கிறான்,பிஞ்சு மனதில் இது தவறு என்று படுகிறது,தானும் வளர்ந்தபின் இதுபோல கூடாக்காமம் பழகுவோமோ? என பயந்தவன், அவனின் ஜெர்மானிய தகப்பன் பீர் எடுக்க போன போது கதவு திறந்து வைத்த பாதாள அறைக்குள் படியில் இறங்குகிறான்,மேளத்தை கீழே எறிந்தவன்,செல்லார் அலமாரியை உதைத்து தள்ளிவிடுகிறான். பின்னர், முதுகு தெறிக்க கீழே விழுந்து அடிபட்டுகொள்கிறான், தன் வளர்ச்சியையும் அந்த புள்ளியிலேயே நிறுத்துகிறான்.ஜெர்மானிய கணவன் இருக்கும்போதே வீட்டுக்குள் எப்போ பார்த்தாலும் போலந்துகார ஜேன் இவளுக்கு தொட்டு தடவி பியானோ சொல்லித்தருகிறான்.

ஆஸ்கருக்கு 4 வயது:-
 ப்போது வீட்டுக்குள் சதா மேளம் வாசிக்கும் ஆஸ்கரிடமிருந்து அவனின் ஜெர்மானிய அப்பா மேளத்தை பிடுங்க,அது தகரம் கிழிந்திருந்தமையால் அவர் விரல் காயம் பட்டு ரத்தம் வர,அவர் அவனை ஏசியவர்,மேலும் வலுகூட்டி பிடுங்க,ஆஸ்கர் செய்வதறியாமல்,அறையில் இருந்த க்ராண்ட்ஃபாதர் கடிகாரத்தை பார்த்து கத்த,கண்ணாடி நொறுங்கி விழுகிறது, மேலும் விளக்கையும் கத்தியே உடைக்கிறான். எல்லோருக்கும் பயந்து வருகிறது,

ஆஸ்கருக்கு 6வயது:-
 ப்போது பள்ளிக்கு சென்றவன்,அங்கேயும் பாடத்தை கவனிக்காமல்,மேளம் அடிக்க,டீச்சர் அதை பிடுங்க,டீச்சரின் கண்ணாடியை பார்த்து வீல்ல்ல் என்று அடிக்குரலில் கத்தியவன், அது நொறுங்கி சிதறி ரத்தம் வெளியே தெறிக்க,புளங்காகிதம் அடைகிறான். இவனின் நிலையால் கவலையடைந்த ஆக்னஸ் இவனை பெரிய சிறப்பு மருத்துவரிடம் காட்ட,அவரும் மேளத்தை பிடுங்க,அங்கே இருந்த ஃபார்மாலின் திரவம் அடங்கிய புட்டிகளில் மிதக்கும் குழந்தை,பாம்பு,முதலை,ஆமை,நோக்கி இவன் கத்த,அத்தனையும் உடைந்து சிதறுகிறது. மருத்துவர் வியந்து இவனைப்பற்றி மருத்துவ ஜர்னல் பத்திரிக்கையில் எழுதுகிறார்.இவன் புகழ் பரவுகிறது.
ஆஸ்கருக்கு 11வயது:-

வ்வொரு வியாழன் அன்றும் ஆக்னஸ், நகருக்குள் அவசரமாய் சென்று, போஸ்ட்   ஆஃபீஸில் வேலை செய்யும் ஜேன், வாடகைக்கு எடுத்த விடுதி அறைக்கு செல்வாள், அங்கே காமவேட்கையுடன் காத்திருக்கும் அவனுடன் உடல்பசியை தீர்த்துக் கொண்டதும், நகரிலேயே பொம்மைக்கடை வைத்திருக்கும் யூத நண்பர் மார்கஸ்ஐயும் சந்திப்பாள், மார்கஸ் இவளின் மீதான ஒருதலைக்காதலால் இவளுக்கு சவுரிகள், பட்டு கையுறைகள்,  பட்டு காலுறைகள், செருப்புகள், தொப்பிகளை மலிவு விலைக்கு கொடுத்து ஜொள்ளுவது வழக்கம்.


க  ஏற்கனவே ஆன்லைனில் இருவருடன்  கடலை போடும் இவளுக்கு , மார்கஸ் ஆஃப்லைனில் மூன்றாவதாய்  கடலை போடுகிறார்.!!!இந்த வியாழன் ஆஸ்கருக்கு உடைந்த தகரமேளத்தை மாற்றித் தருகிறேன் என கூட்டிப் போகிறாள்,மார்கஸிடம் இவனுக்கு மேளம் வாங்கி கொடுத்து விட்டு ,பார்த்துக்கொள்ளச் சொன்னவள், 
ஜேனிடம் சென்று அவசர உடலுறவு கொள்ளப் போகிறாள்.மகன் ஆஸ்கர் அம்மாவை பின் தொடர்ந்து போனவன்,அம்மாவின் இந்த ஓடுகாலிப் போக்கிற்கு மிகுந்த சினம் கொள்கிறான். அங்கே உள்ள மணிக்கூண்டின் உச்சி மாடிக்கு ஏறியவன்,படபடவென மேளம் கொட்டிக்கொண்டே தொலைவில் உள்ள கண்ணாடி சன்னல்களை பார்த்து கத்த, அவை உடைந்து சிதறுகிறது.

ஆஸ்கருக்கு 12.5 வயது:-
ஸ்கர் இப்பொது ஆக்னஸ்,ஜெர்மானிய அப்பாவுடன் சர்கஸ் சென்றவன்,அங்கே குள்ளர்கள் வித்தைகள் செய்வதை ஆர்வமாய் பார்க்கிறான், காட்சி முடிந்தவுடன் 70வயதுதலைமை குள்ளரை சந்தித்தவன்,அவரிடம் தன் மேளம் அடிக்கும் திறமையையும்,கத்தி கண்ணாடி உடைக்கும் திறமையையும் பரிட்சித்து காட்ட அவர்கள்,வியந்து தங்களுடன் வருமாறு அழைக்க,இவன் மறுத்து தன் திறமை தன்னிடமே இருக்கட்டும் என்கிறான்.
 
ருநாள் ஆக்னஸ்,கணவன்,காதலன்,ஆஸ்கர் சகிதம் கடற்கரை செல்ல ,
அங்கே வைத்து ஜேனும் ஆக்னஸும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சில்மிஷம் செய்கின்றனர், அவளின் இன்னொரு கணவனும் அதை கண்டு கொள்ளவில்லை, அப்போது அங்கே கரை ஒதுங்கிய நீர்யானையின் தலை ஒருவரின் தூண்டிலில் சிக்க,அவர் அதை இழுக்கையில் , மூவரும் வேடிக்கை பார்க்க,நீர்யானையின் பெரிய தலைக்குள்ளே 20க்கும் மேற்ப்பட்ட விலாங்கு ரக மீன்கள் தலைக்குள்ளே இருந்து பாம்பாய் நெளிகின்றன, 
தைப்பார்த்த ஆக்னஸ் அருவருத்து வாந்தி எடுக்க, ஜெர்மானிய கணவர் தனக்கு ஈல் என்னும் விலாங்கு ரக மீன்கள் பிடிக்குமென்பதால் காசு தந்து கைநிறைய வாங்கி வந்தவர், அன்று முழுக்க மீன் உணவு கள் தயாரிக்கிறார்,இவளையும் வீணாக்காமல் சாப்பிட வற்புறுத்த, இவள் மறுக்கிறாள், சண்டை முற்ற, கைகலப்பாக அவள் வெடித்து அழுகிறாள், காதலன் ஜேன் உள்ளே சமாதானம் செய்ய வந்தவன் அவளுக்கு கிளர்ச்சியூட்டி புணர்ந்தும் விடுகிறான்,இந்த காட்சியையும் வார்ட் ரோபிற்குள் ஒளிந்திருக்கும் ஆஸ்கர் பார்க்கிறான்.உடலுறவு முடிந்தது ஆக்னஸ் வேகமாய் வந்து மீன் துண்டங்களை விழுங்குகிறாள்.
 
ப்போது டான்சிக்கில் முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்கிறது,இது போலந்தின் ஆளுகையிலிருந்த நகரமென்றாலும் இப்போது ஜெர்மனியின் போலந்தின் மீதான வெற்றியால் இங்குள்ள மக்களுக்கும் ஜெர்மானிய விசுவாசம் பிடிக்கிறது,ஆக்னஸின் ஜெர்மானிய கணவன் நாஜி கொ செ வாக  செயல்படுகிறான்,தன் இறைச்சி கடையை பகுதி நேரமாகவும்,கட்சிப்பணியை முழுநேரமாகவும் பார்க்கிறார். இது ஜேனுக்கு மிகவும் கவலையளிக்கிறது.

ஆஸ்கருக்கு 14 வயது:-
ப்போது ஆக்னஸ் ஜேன் மூலம் மீண்டும் கருத்தரிக்கிறாள்,தன் போலந்து காதலனை கடைசியாய் சந்தித்தவள், அவனுக்கு இனி எதிர்காலமில்லை என்றதால் மிகவும் நொறுங்குகிறாள், இனி பிடிக்காத கணவனுடன் வாழவேண்டுமே!!! என வெதும்பியவள்,தனக்கு பிடிக்காத ஏராளமான டின்னில் அடைக்கப்பட்ட மீன்களை அசுரத்தனமாய் விழுங்கத் தொடங்குகிறாள். அப்போதும் உயிருக்கு ஒன்றும் ஆகாமல் போக, சந்தையிலிருந்து விற்பனைக்கு வந்த மீன்களை அறுத்து பச்சையாய் விழுங்குகிறாள், 

ணவன் பயந்து போய் அவள் அம்மா பாவாடைக்காரியை அழைத்துவர அவள் இவளுக்கு அறிவுறை சொல்லியும் பலனில்லை,அவளின் அம்மா,வெளியே வந்து ஜெர்மானிய கணவனிடம் ஆக்னஸ் கருத்தரித்திருப்பதாய் சொல்ல, கழிவறைக்குள் நுழைந்து பூட்டிக்கொண்டு ரத்தவாந்தி எடுக்கும் ஆக்னஸிடம் இவர் கெஞ்சுகிறார், குழந்தை யாருடையது!!! என்றாலும் கவலையில்லை, நான் அதற்கு அப்பனாயிருக்கிறேன்,ஆனால் தற்கொலை செய்யாதே!!!  என்கிறார். ஆனால் அவள் செவிக்கு அது எட்டாமலேயே இறந்தும்விடுகிறாள்.

ப்போது இரு கணவர்களும், சவ வண்டியில் இவள் சவப்பெட்டியை வைத்துக்கொண்டு அழுதபடி வர, அருகே ஆஸ்கர் விடாமல் மேளம் அடிக்கிறான். அங்கே யூதகாதலரும் வந்து சேர்ந்துகொள்ள அவர் யூதர் என்பதால் எல்லோராலும் விரட்டப்படுகிறார். ஆஸ்கர் அவரிடம் சென்று தன் தகர மேளம் கிழிந்துவிட்டதாகவும் புதிது வேண்டும் என்று சொல்கிறான்,ஆக்னஸின் கல்லறையின் முன்பு மண்டியிட்டு அழுது தீர்த்தவர், கடைக்கு சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டு,கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலையும் செய்து கொள்கிறார்.ஜெர்மானிய ராணுவமும் கடைக்கு உள்ளே நுழைந்து பொருட்களை சூறையாடுகிறது.ஆஸ்கர் உள்ளே புகுந்தவன் ஒரு புதிய தகரமேளத்தை,எடுத்துக்கொண்டு அடிக்கதுவங்குகிறான்.
க்னஸின் போலந்துக்காதலன் ஜேன் தீவிரவாதப்படையில் இணைந்து போஸ்ட் ஆஃபீஸில் பதுங்கியபடி ஜெர்மானியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறான். அவனிடம் பாசத்துடன் தேடிப்போய் ஆஸ்கரும் இணைந்து கொள்கிறான்,அவனையும் அவன் கூட்டாளிகளையும் அலேக்காக கைது செய்த ஜெர்மானியர்,ஜேனை கூட்டிப்போய் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுவிட, ஆஸ்கர் அநாதையாகிறான், தன் இன்னொரு அப்பாவிடம் போனவன், எந்தவித ஒட்டுதலும்  இல்லாமலே இருக்கிறான்.

ஆஸ்கருக்கு 16 வயது:-
ப்போது ஜெர்மானிய அப்பாவின் இறைச்சி கடையை கவனிக்க விவசாய குடும்பத்தில் இருந்து 16 வயது  அழகிய பெண் மரியாவை[ காத்ரினா தால்பாக்] ஆஸ்கரின் பாட்டி அழைத்து வர,ஆஸ்கர் அவளுடன் ஒருதலைக்காதல் வளர்க்கிறான்,அவள் ஆஸ்கருக்கு 16 வயது என்பதை நம்ப மறுக்கிறாள்,ஒரு நாள் கடற்கரைக்கு இருவரும் குளிக்க போக,மணலில் படுத்திருக்கும் இவளிடம் ஆஸ்கார் சில்மிஷம் செய்ய தொடங்குகிறான்,இவள் கையில் சர்பத் தூள் கொட்டி,அதில் எச்சில் துப்புகிறான்,

து பொங்கி வர, அதை அவள் நக்க, இவனுக்கு கிறக்கமாகிறது,பின்னர் குளித்து உடைமாற்ற அறைக்குள் நுழைந்தவனுக்கு மரியாவே உடையை மாற்றிவிடுகிறாள், அவளும் ஆடைகளை அவிழ்த்துபோட்டு இவன் முன் அம்மணமாய் நிற்க, இவன் வெறியாகி விறுவிறுவென அவள் யோனியில் போய் முகம் புதைக்கிறான், சிறுவனிடம் இதை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனை ஓங்கித்தள்ள,அவன் முகம் வாடிப்போகிறான்.இவள் அவனுக்கு ஆறுதல் கூறி தேற்றியவள், இவன் விஷமக்காரன் என புரிந்துகொள்கிறாள், அவன் வாயில் ஒட்டியிருந்த ரோமத்தையும் துடைக்கிறாள்.


ன்று இரவு இவனின் ஜெர்மானிய அப்பா, ராணுவ நிகழ்ச்சிக்கு போக, ஆஸ்கரை அவள் துணைக்கு வைத்துக்கொண்டு ஒரே கட்டிலில் படுத்துக்கொள்கிறாள், ஆஸ்கர் அவளின் தொப்புளில் சர்பத் தூள் கொட்டி உமிழ்ந்தவன்,அது அமிலம் போல கொப்பளிக்க, அவளுக்கு கிளர்ச்சி ஊற்றெடுக்க,இன்னும் இருக்கு என்று மெல்ல சர்பத் தூளுடன் கீழே இறங்குகிறான், பின்னர் புணர்ந்தும் விடுகிறான்.பொல்லாத விஷமக்காரன்.


ஸ்கரின் அப்பா, ஆக்னஸ் இறந்த பின் காமத்துக்கு வடிகால் இன்றி தவித்தவர், 16 வயது மரியாவிடம் ஆசைவார்த்தைகள் காட்டி மயக்கி அநேக நேரம் வெறித்தனமாய் உடலுறவு கொள்கிறார்.இதை ஒருநாள் பார்த்த ஆஸ்கருக்கு கோபம் தலைக்கேற,அப்பனை பின்னால் சென்று பாய்ந்து மேளத்தால் அடிஅடியென்று அடிக்கிறான்.அப்பாவுக்கு இவனை பிடிக்காமல் போகிறது, இவனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்.இபோது அப்பா ஜெர்மானிய படையில் உயர் அதிகாரியாகிறார்.மரியாவையும் மணக்கிறார். 

ஸ்கரின் குழந்தையை மரியா வயிற்றில் சுமக்க ஆரம்பிக்கிறாள்,இது மரியாவுக்கு மட்டும் தெரியும்,அவன் முரட்டு அப்பா ,மரியா சுமக்கும் இக்குழந்தை தன்னுடையது என்று பெருமை கொள்கிறார். இப்போது மரியாவுக்கு ஆஸ்கரை சுத்தமாக பிடிக்காமல் போகிறது,அவன் ஒரு சமயம் சர்பத் தூளை பழைய படி அவள் கையில் கொட்டி எச்சில் உமிழ,அவள் அதை சுவைப்பதற்கு மாறாய் இவனை அடிக்க,அவன் அவளை வயிற்றில் ஓங்கி கையால் உதைக்கிறான்.

ப்போது தனிமையில் வாடும் ஆஸ்கர், ஆக்னஸின் தோழியின் வீட்டுக்கு செல்ல,அவள்.இவனை அழைத்து ஆறுதல் படுத்தவேண்டி ,ஆஸ்கரை மார்பில் சாய்த்துக்கொண்டு தேற்றுகிறாள்,குளிரெடுத்தால்,போர்வைக்குள் வா, என அவள் சொன்னது தான் தாமதம்,ஆஸ்கர் அங்கேயும் போய் மேற்படி வேலை செய்து விடுகிறான்.


ஆஸ்கருக்கு 17 வயது:-
இப்போது மரியாவுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது,அதை ஆஸ்கர் தன் மகனைபோலவே ஆசையாய் கவனித்துக்கொள்கிறான்,கொஞ்சுகிறான் . அவனின் 3ஆவது பிறந்த நாளுக்கு  சிகப்பும்,வெள்ளை வர்ணமும் அடித்த பளபளப்பான தகர மேளம் வாங்கித்தருகிறேன் என்று ஆசையாய் சொன்னவன் வீட்டை விட்டும் வெளியேறுகிறான்,!!! யார் கண்ணிலும் படாமல் வெறுத்து ஒதுங்குகிறான்.


1.ஆஸ்கர் எங்கே போனான்?போனவன் திரும்பினானா?
2.மரியாவை கைபிடித்தானா?
3.முரட்டு ஜெர்மானிய அப்பாவுக்கு என்ன ஆனது?
4.மீண்டும் அந்த சர்கஸ் கார குள்ளர்களை சந்தித்தானா?
5.ஆஸ்கர் வாழ்வில் காதல் குறுக்கிட்டதா?
6.மகனுக்கு மேளம் பரிசளித்தானா?மீண்டும் வளர்ந்தானா?

போன்றவற்றை டிவிடியில் பாருங்கள். கற்பனைக்கில்லை கட்டுப்பாடு , பிரம்மாண்டம் என்றால் என்ன என்று நிச்சயம் உணர்வீர்கள்!!!!.


லக சினிமா காதலர்கள் வாழ்வில் தவறவிடக்கூடாத ஒரு படம், இயக்குனரின் உழ்ளன்[Ulzhan -2007 ] படமும் விரைவில் பதிவாய் எழுதுகிறேன். படத்தின் முதுகெலும்பே இகோர் லூதெரின் மிக அருமையான ஒளிப்பதிவு தான், ரம்மியமான இசை மௌரிஸ் ஜேன்,என்னியோ மார்ரிக்கோனை ஒத்த படைப்பு. புதின ஆசிரியர் கந்தர் க்ராஸ்  முன்னாள் நாஜி போர்குற்றவாளி என்பதாலோ என்னவோ, ஒவ்வோரு காட்சியிலும் குரூரம்,வன்முறை,காமம் கொப்பளிக்கிறது!!! தனிமையில் காண வேண்டிய படம்!!!
=======0000========
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-


படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Volker Schlöndorff Produced by Franz Seitz Anatole Dauman Written by Volker Schlöndorff Jean-Claude Carrière Franz Seitz Adapted from the Novel The Tin Drum by Gunther Grass Starring David Bennent Mario Adorf Angela Winkler Daniel Olbrychski Katharina Thalbach Charles Aznavour Release date(s) (West Germany) May 3, 1979 (USA) 11 April 1980 Running time 142 min Country West Germany Yugoslavia Poland Language German Polish Russian Italian Kashubian =======0000========

ரூபாய்க்கு புதிய வடிவம் கொடுத்த தமிழர்!!!

|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
ர்வதேச அரங்கில் நாம் தன்னிறைவு பெற்று முன்னேறுகிறோம் என்பதற்கு சான்றாக, இதோ நம் நாட்டு பணமான ரூபாயின்  புதிய குறியீட்டுக்கு இன்று யூனியன் கேபினட் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது,எத்தனை பெருமை?!!!ப்ரிடிஷ் பவுண்ட்,அமெரிக்க டாலர், ஜப்பானிய யென்  மற்றும் யூரோவுக்கு மட்டுமே இதுவரை சர்வதேச சந்தையில் குறியீடுகள் உண்டு,

 ப்போது அது  நம் தாய் திருநாட்டிற்கும்  கிடைக்கப்பெற்றுள்ளது, இனி வெகு விரைவில் இந்த குறியீட்டை கணிணி கீபோர்டுகளிலும், மென்பொருள்களிலும் காணலாம், இனி நம் ரூபாயையும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோநேசியா, நேபால் , ஸ்ரீலங்கா போன்ற மிக குறைந்த மாற்று-மதிப்பு கொண்ட  நாடுகளின் ரூபாயையும் ஒப்பிட மாட்டார்கள்.நாம் அவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிவோம்!!!.

ந்த குறியீட்டை திறம்பட  வடிவமைத்திருப்பது  IIT ல் பணி செய்து வரும் 32 வயது  D.உதயகுமார். என்னும் சென்னைத் தமிழர், இவர் B.Arch. அண்ணா யுனிவர்சிட்டியில் முடித்துவிட்டு ,M.des, IIT மும்பையில் முடித்து , அங்கேயே  PHD யும் முடித்துள்ளார்.

கில இந்திய அளவில் 3000 போட்டியாளர்கள் வடிவமைத்த குறியீடுகளில் இருந்து 5 குறியூடுகள் இறுதிகட்டத்துக்கு முன்னேறி  இவரின் குறியீடு அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசுத்தொகையாக  2,50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் ஏனைய மாநில டிசைனர்களை , தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார், இன்னும் 500 வருடமானாலும் இதை யாராலும் மாற்றமுடியாது!!!

வர் மென்மேலும் வெற்றி பெற இத்தருணத்தில்  நாமும் வாழ்த்துவோம்., பெருமைப்படுவோம். இந்த குறியீட்டை அவர் தேவநகரி எழுத்தான |ரா| வில் இருந்து வடிவமைத்தாராம். கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் பேட்டியில் கூறினார்.

 இது குறித்த யூட்யூப் காணொளி:-

========0000=========

|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

த ஜாப்பனீஸ் வைஃப்[The Japanese Wife][2010][இந்தியா][15+]

டத்தின் பெயரைப்பார்த்துவிட்டு யாரும் ஜப்பானிய மேட்டர் படமோ? என்று நினைக்க வேண்டாம் , நம்ம பாரதத்தில் எடுக்கப்பட்ட மகத்தான படம் இது!!!....
ங்களுக்கு பேனா நட்பு நினைவிருக்கிறதா? உங்களுக்கு பேனா நண்பர்கள் இருந்திருக்கிறார்களா? பத்து வருடங்களுக்கு முன்பு வரை பிரபல பத்திரிக்கைகள் சில,  இதற்கென்றே கடைசிப்பக்கத்தை ஒதுக்கியிருந்தனர். எனக்கு அதன்          மூலம்  4 பேனா நண்பர்கள் இருந்தனர், ஆனால் காலப்போக்கில் யாரும் தொடர்பில் இல்லை. இப்போது ஆர்குட், ஃபேஸ்புக், யாஹூ,கூகிள் என இருந்தாலும் அந்த முகம் தெரியாத நண்பர்களின் கடிதங்கள் தந்ததைப்போல பரவசம் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒன்றின் வளர்ச்சி தான் இன்னொன்றின் வீழ்ச்சி, அப்படிப்பட்ட பேனா நட்பை வைத்து இப்படி ஓர் அழகிய படம் தந்திருக்கின்றனர்.!!! உடனே காதல்கோட்டையையும், பொக்கிஷத்தையும் நினைக்கவேண்டாம்!!!.

சுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சி கோலோச்சும்  இப்படியோர் காலகட்டத்தில் இப்படியோர் காதல் கதையா?!! என நிச்சயம் வியக்க வைக்கிறது, இந்திய பேரலல் சினிமாவின் ஈடு செய்ய முடியா ஆளுமையான ராஹுல் போஸ் இதிலும் உணர்ந்து செய்திருக்கிறார். இதுவரை இவரை கவனிக்கவில்லை என்றால் இனியேனும் கவனிப்பீர்கள், அப்படி ஓர் பாதிப்பை நமக்குள்  இவரின் ஸ்நேஹமோய் பாத்திரம் மூலம் ஏற்படுத்துகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் பதேர் பாஞ்சாலியில் துர்காவினால் கிடைத்த தாக்கம், இதிலும் ஒருவருக்கு கிட்டும் என்பது திண்ணம். ஒவ்வொரு காதலர்களும், கணவன் மனைவியும்  வாழ்வில் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

டத்தின் லொக்கேஷன்கள் இதுவரை நாம் பார்த்திராத ஒன்று,!!!பாரதம் தான் எத்தனை விதமான நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது!!!, இதில் மேற்கு வங்காளத்தையும் பங்களாதேஷையும் இணைக்கும், சுந்தர்பன் என்னும் ஆறும் காடும் சேரும் பலேஷ்வர் நதிதீரத்தின் நடுவே அமைந்த தீவுத்திட்டில், கதை நடக்கிறது,  துஷார் காந்திரே மற்றும் விக்ரம் ஸ்ரீவத்ஸவாவின் ஓளிப்பதிவு மிக ரம்மியம். படத்தில் பாடல்களே இல்லை,மெதுவாக சென்றாலும் அபர்ணா சென்னின் சற்றும் தொய்வில்லா திரைக்கதையும் , இயக்கமும் நம்மை உற்சாகம் கொள்ளச் செய்கிறது, சாகர் தேசாயின் பிண்ணணி இசை மிகவும் இனிமை. ஆக மொத்தத்தில் ப்ரில்லியண்டான  மினிமலிச-ட்ராமா வகை திரைப்படம் இது.

========0000==========
படத்தின் கதை:-
1985ஆம் ஆண்டு, சுந்தர்பன் என்னும் மின்சாரமில்லா கிராமத்தில்  படம் துவங்குகிறது . மழைக்காலத்தில்  யாரும் உள்ளேயோ ,வெளியேவோ , வரவோ,போகவோ முடியாத ஒரு ஊர் !!, ராட்சச கொசுக்கள் வேறு, 30 வயது ஸ்நேஹமொய் [ராஹுல் போஸ்] அங்கேயே வசிக்கும் எளிய பிராமண குடும்பத்தை சேர்ந்த கணக்கு வாத்தியார்.,மறுகரைக்கு படகு பிடித்து சென்று பாடம் நடத்தி வருகிறார். கூச்சசுபாவமாதலால் நண்பர்களே இல்லை, இவருக்கு ஒரு வெகுஜன இதழ் மூலம், 21வயது ஜப்பானிய பெண் மியாகியின் [சிகுசா டகாகு ]பேனா நட்பும் கிடைக்கிறது,

ண்ணற்ற கடிதங்களின் மூலம் இவர்கள் நட்பு மேம்படுகிறது, இருவருமே வங்காளம்/ஜப்பான் - ஆங்கில மொழி அகராதியை பார்த்து,படித்து,பொருள் உணர்ந்து அதன் பின்னே கடிதம் எழுதுகின்றனர்.இதன் மூலம் இருவருக்கும் இனம்புரியா பரவசமும் தொற்றிக்கொள்கிறது,இவளுக்கு கடிதம் எழுத ஆகும்  செலவுக்கே , ஸ்நேஹமொய் ட்யூஷனும் எடுக்கிறார்.அவள் புகைப்படம் அனுப்புகிறாள். இவரையும் எடுத்து அனுப்பகேட்டவள், இவருக்கு போலராய்டு கேமராவும் தபாலில் பரிசளிக்கிறாள்.

பெற்றோரை சிறுபிராயத்திலேயே சூராவளி வெள்ளத்தில் இழந்த ஸ்நேஹமொய் பெரியம்மாவின் அன்பும் பராமரிப்பிலுமே வளர்ந்தவர், பெரியம்மா மாஷி [மவுஷுமி சேட்டர்ஜி] , இவருக்கு உறவுக்கார பெண்ணான பதின்ம வயது சந்தியா வை [ரைமா சென் ] மணம் பேச,இவர் மியாகிக்கு அதை எழுதுகிறார்.

வளோ இவரின் உண்மையான நட்பில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டு ,இவரை விரும்புவதாய் சொல்கிறாள், இவரும் அதற்கு மனமுவந்து சம்மதிக்க, தபாலிலேயே திருமணமும் செய்துகொள்கின்றனர் . எப்படி?!!! அவள் இவருக்கு  வெள்ளி மோதிரம் அனுப்ப, இவர் அவளுக்கு குங்குமமும், கண்ணாடி கைவளையல்களும் அனுப்புகிறார். அவளின் வீட்டிலேயே இருக்கும் சிறிய மளிகைக் கடையை கவனிக்கிறாள், அவளின் ஒரே அண்ணன் யோகோஹோமாவுக்கு மணமாகி சென்றுவிடுகிறான்,  வயதான படுத்த படுக்கையான விதவை அம்மா இருப்பதால் , அவளின் உடம்பு தேறியவுடன் இவள் இந்தியா வருவது என முடிவாகிறது,

வருக்கோ 100டாலர் மதிப்பில் கூட சம்பளம் இல்லாததால் இவராலும் ஜப்பான் செல்ல முடியவில்லை, மனைவிக்கு உண்மையானவராய் இருப்பதால் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, கொடிய பிரிவுத்துயரை தீர்க்க அவளின் கடிதத்தை வைத்துக்கொண்டு  விடுமுறை நாளில் காலியாய் இருக்கும் படகில் அமர்ந்தபடி கரமைதுனம் செய்தே தீர்க்கிறார்.

ப்படியே கொடிய 15 வருடங்கள் ஓடிவிடுகிறது, இவரின் வீட்டுக்கு இப்போது 8வயது சிறுவன் பால்டுவும்,அவனின் அழகிய இளம் கைம்பெண் அம்மா சந்தியாவும் போக்கிடம் இன்றி வர, இவருக்கு நாளடைவில் பால்டு மீது தந்தைக்குண்டான பாசம் வருகிறது, அழகிய கைம்பெண் சந்தியா மிகவும் வெகுளி, கூச்சசுபாவி, இவரின் துணிமணிகளை துவைத்து, இஸ்திரி செய்து, இவரின் அறையை சுத்தம் செய்கிறாள், ஆனால் பேசுவதில்லை, முகத்தை பார்ப்பதுமில்லை. தன் அழகிய முகத்தை கூட காட்டுவதில்லை,

வருக்கு அவள் மீது பரிவு பிறக்கிறது, இப்போது  காற்றாடி திருவிழா நடக்கிறது, சந்தியா மாஞ்சா போடுவதற்கு பாட்டில்களை பொடிசெய்கிறாள், அதில் குங்குமம் கலந்து நூலுக்கு மாஞ்சா ஏற்றுகின்றனர், பால்டுவுடன் இணைந்து தன் மனைவி 15ஆம் வருட பரிசாய் அளித்த, பலவகையான காற்றாடிகளை வைத்து போட்டியிலும் பங்குபெறுகிறார். அதில் இவர் உள்ளூர் ஆட்களிடம் தோற்றாலும் இதன் மூலம் சிறுவன் பால்டுவையும், சந்தியாவையும் உளமாற மகிழ்வித்தது தான் மிச்சம் என்று தன்னை தேற்றிக்கொள்கிறார்.[இந்த காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது, ஒருவருக்கு கைட் ரன்னர் படம் கொடுத்த பரவசத்தை இந்த காட்சியும் தரவல்லது]

ப்போது மிகப்பெரிய சோதனையாக,மியாகியின் அம்மா காலமாகிவிடுகிறார். மியாகிக்கும் உடல்நலன் மோசமாக பாதிக்கப்படுகிறது, அவள் அண்ணன் வீட்டுக்கே போகிறாள், இவர் தொடர்ந்து அவளுக்கு அங்கே கடிதம் எழுதியும், காசில்லா நிலையிலும் ஐஎஸ்டி பேசியும் வருகிறார். அவளுக்கு நோய்கான உபாதைகளையும் அவளின் வலி, வேதனையையும் கவனமாய் எழுதி குறித்துக்கொண்டவர், அக்கறையுடன் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, அலோபதி என எல்லா மருந்துகளையும் தேடி அலைந்து வாங்கி தபாலில்அனுப்புகிறார். இதற்காக அலையவே 6 மாதங்கள் வேலைக்கு விடுப்பு எடுக்கிறார். மியாகியும் நம்பிக்கையுடன் அவற்றை உட்கொள்கிறாள்.பெரியம்மாவுக்கு இதனால் பொறுமை எல்லை மீறுகிறது.

ப்போது சிறுவன் பால்டுவுக்கு 9 வயது, அவன் அம்மா சந்தியா அவனுக்கு உபநயனம் செய்விக்க  விரும்புகிறாள், அதற்கான செலவுகளுக்கு தன் நகையை பக்கத்து கரையில் உள்ள நகைக்கடையில் அடகு வைக்கவும், பூஜைசாமான்கள், காய்கறிகள் வாங்கவும், ஸ்நேஹமொய்யுடன் படகேறுகிறாள், அவள் இவருக்கு படகில் அமர இடம் பிடிக்க, இவர் அவளுக்கு வெயிலுக்கு குடைபிடிக்கிறார், படகிலிருந்து இறங்க உதவுகிறார், அவரின் மென்மையான அருகாமை அவளுக்கு பிடிக்கிறது, நட்புக்கும் காதலுக்கும் இடையேயான சின்ன இழை  இவர்களுக்குள் ஓடத் துவங்குகிறது.!!!

டைத்தெருவில், காய்கறி, விளக்கு, பூ, பழம் வாங்கிவிட்டு, இவள் நகை அடமானம் வைக்கபோக, இவர் பேல் பூரிக்காரனிடம் பேல்பூரி தயாரிக்க கேட்கிறார்,அங்கே திரும்ப வந்தவள் உரிமையாய் சாப்பிடும் நேரத்தில்  நொறுக்குத்தீனியா?!!,பக்கத்தில் ஓரு மலிவு உணவுவிடுதி உள்ளது சாப்பாடு சாப்பிடுவோம், என அழைத்து போகிறாள். அங்கே இருவருக்கும் மீன் பறிமாறப்படுகிறது, இவள் கைம்பெண் என்பது தெரியாமல் அவளுக்கும் இலையில் மீன் வைத்துவிட்டனர், இவள் கைம்பெண் உணவை வீணாக்ககூடாது, என்று சொல்லிக்கொண்டே சாதாரணமாய் இவர் இலைக்கு அவற்றை தள்ளுகிறாள், இவர் அதை மறுக்காமல் உண்ணுகிறார்.அவளுக்கு ஓர் திருப்தி.மகிழ்ச்சி.

ரும் வழியில் எதேதோ சிந்தனைகள்,சந்தியாவுக்கு இவரின் அருகாமை மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது, இப்போது இவரிடம் நன்கு பேச த் துவங்கியும் விட்டாள். இவருக்கு அவள் பிறை முகம் இப்போது நன்கு காணக்கிடைக்கிறது,  மிஞ்சிப்போனால் 30 வயது இருக்கலாம்!!!கடவுளே.

ரவு,சந்தியாவின் அழுகுரல் கேட்டு எழுந்தவர்,கீழே போய்ப் பார்க்க,சந்தியா அவள் வயதுக்கே உரிய ஏக்கத்திலும், சுயபச்சாதாபத்திலும்  வாசலில் அமர்ந்து வெடித்து  அழுகிறாள்.இவர் அருகே அமர்ந்ததும் இவர் தோளில் சாய்ந்து  முட்டிக்கொண்டு அழுகிறாள். இவர் தேற்றுவதற்காக அவள்  தோளை விகல்பமில்லாமல் பிடித்தது தான் தாமதம், சுயநினைவுக்கு வந்தவள், முகத்தை வெட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடுகிறாள், இவருக்கோ குற்ற உணர்வு, இதை மனைவியிடம் மறைக்ககூடாது என கடிதம் எழுத வார்த்தைகளை தேடித் தேடி தோற்றுப் போனவர் , எழுதியும் விடுகிறார். குற்ற உணர்வின்  உச்சத்தில் இருந்தவரிடம் சிறுவன் பால்டு மனைவியின் புதிய கடிதத்தை தர, இவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சி.

மியாகிக்கு வந்திருப்பது ரத்த புற்றுநோயாம், அவள் இப்போது கீமோதெரபி எடுக்கிறாளாம், இவள் உயிர் பிழைக்க 50% சாத்தியக்கூறு உள்ளதாய் டாக்டர்கள் சொன்னார்கள்,என்கிறாள், கணவனிடம் எதையும் மறைக்ககூடாது என்று எண்ணி,இவருக்கு தன் ரிப்போர்ட்டுகள்,ஸ்கேன்களை அனுப்புகிறாள்.

வருக்கு மனைவி மியாகி இறந்துவிடுவாளோ?!!!என அச்சம் உண்டாகிறது, 15வருடம் பார்க்காத பெண்ணிடம்,எழுத்திலும்  கொண்டுவரமுடியாத முடியாத ஓர் பாசம் கொண்டிருக்கிறார்., உடனே கொல்கத்தாவின் புகழ்பெற்ற  கோனாலஜிஸ்டிடம் ஓடுகிறார்.

இனி என்ன ஆகும்?

1,ஸ்நேஹமொய் ஜப்பான் போனாரா?மியாகியை சந்தித்தாரா?
2.ஸ்நேஹ மொய் சந்தியாவை கைபிடித்தாரா?
3,மியாகி புற்றுநோயிலிருந்து குணமடைந்தாரா?
போன்றவற்றை டிவிடியில் பாருங்கள்.இந்த படத்தை ஒருவர் வாழ்நாளில் தவறவிடவே கூடாது என்பேன்.
========0000==========
பேரலல் சினிமா வளர்ச்சி, பார்வையாளர்களின் தொடர் தேடலிலும், ஊக்கத்திலுமே  அதிகம்  சாத்தியமாகிறது, ஆகவே மாற்று சினிமாக்களை பார்த்து ஆதரியுங்கள்.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
========0000==========

========0000==========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-

Directed by Aparna Sen
Written by Kunal Basu (story)
Aparna Sen (screenplay)
Starring Rahul Bose
Raima Sen
Moushumi Chatterjee
Chigusa Takaku
Music by Sagar Desai
Editing by Raviranjan Maitra
Distributed by Saregama Films
Release date(s) 9 April 2010[1]
Running time 105 minutes
Country India
Language English, Japanese, Bengali

========0000==========

ஹல்லாபோல் [Hallabol][ஹிந்தி][2008] உரக்க கத்து

ந்த படம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்,மோலிவுட் என எல்லா வுட்டுக்குமே பொருந்தும் என்னுமளவுக்கு அம்சமான ஒரு டெம்ப்ளேட் கொண்டது. ஏனென்றால் நாமும் இந்தியர்தானே!!!,அடுத்தவனுக்கு நடந்தால் செய்தி !நமக்கு நடந்தால் விபத்து, என நினைப்போர் தானே!! இதில் செமையாக அந்த மனநிலை மனிதர்களை  சுளுக்கெடுத்துள்ளனர்.

நான்,ரேஸ்,டஷன்,சிங் இஸ் கிங்,மிஷன் இஸ்தான்புல், ஹை ஜாக், பூத் நாத், தோஸ்தானா  போன்ற பல மரண மொக்கைகளை நண்பர்களுக்காக வெண்திரையில் பார்த்து தொலைத்ததால் இனி ஹிந்திப்படமே தியேட்டரில் பார்ப்பதில்லை, என்றிருந்தேன்,  சரி ப்ரிண்ட் நன்றாய் இருக்கே!!! என்று, இந்த  படத்தை நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தேன்,  சும்மா சொல்லக்கூடாது, செம வேகம்,உண்மை ஒளி காட்சிக்கு காட்சி ,வசனத்துக்கு வசனம் வீசுகிறது. அஜய் தேவ்கனுக்கு பிவோட்டலான ரோல், கரணம் தப்பினால் அவர் தான் வில்லன் என்னும்படியான பாத்திரம், இந்த மனிதரின், ஓம்காரா, பகத்சிங், யூ மீ அவ்ர் ஹம்  பார்த்திருக்கிறேன். இதிலும் நன்றாக தன் நடிப்பு முத்திரையை  அழுத்தமாய் பதித்துள்ளார். காமெடிக்கென தனி ட்ராக் வைக்காமல் அதையும் தானே அடித்து ஆடியுள்ளார், இவரின் எடுப்பாக வரும் சஞ்சய் மிஸ்ராவுடன் இணைந்து கலக்குகிறார்.

பிற்பாதியில் சிறிது நாடகத்தனமிருந்தாலும், நம்ப முடிகிறது. வசனங்கள் செம கூர்மை, நட்ராஜ் சுபரமணியனின் கதையோடு ஒன்றிய  ஒளிப்பதிவு அட்டகாசம்,சுக்விந்தர் சிங்கின்  இசையும் அருமை, அதிகம் பாடல்களில்லை,, அப்படியே  வந்தாலும் லாஜிக்கலாய் வருகிறது, இந்த படத்திலும்  இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி சாதித்திருக்கிறார்.ய ஒர்த்திவாட்ச். 

ஜய் தேவ்கனின் குருவாய் வந்த பங்கஜ் கபூருக்கு தன் கலைவாழ்வில் சொல்லிக்கொள்ளக்கூடிய வேடம் இதில், முன்னாள் சம்பல் கொள்ளைக்காரன், ராஜா அரிச்சந்திரா நாடகம் பார்த்து ஆயுதம் கீழே போட்டு, சரணடைந்து, தண்டனை அனுபவித்தவர் இந்நாள் வரை சமூகவிழிப்புணர்வு தூண்டும்  ஹல்லாபோல் என்னும் வீதிநாடகங்கள் போட்டு வருகிறார்,  வயிற்றுக்காக  மெக்கானிக் ஷாப்பும் வைத்துள்ளார். [இந்த சித்து கதாபாத்திரம் 1989 ஆம் ஆண்டு அரசியல்வியாதிகளின் அடியாட்களால் சுட்டுகொல்லப்பட்ட சஃப்தார் ஆஷ்மியின் பிரதியேயாகும்.]

படத்தின் கதை:-
மசரெட்டி கார் வைத்திருக்கும் பாலிவுட்டின் உச்ச நடிகர் சமீர்கான் ஒரு கதாநாயகன் எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார்.
1.காசு வாங்கிக்கொண்டு கண்ட ,கண்ட விளம்பரங்களிளும் நடிக்கிறார்.தன் அஷ்ஃபக் என்னும் இயற்பெயரை சமீர்கான் என மாற்றிக்கொள்கிறார்.
2.ஷூட்டிங் நேரத்திலேயே கேரவனில்,ஆடிஷன் என்று சொல்லி வாய்ப்பு கேட்டு வலிய வந்து விருந்தாகும் இளம் பெண்களை அனுபவிக்கிறார். அவர்களையே  புதிய படத்துக்கு நாயகியாய் பரிந்துரைக்கிறார்.
3.தன் கௌரவத்துக்கு பாதகம் வருமென்று எந்த உதவியும் யாருக்கும் செயவதில்லை. முடிந்தவரை கால்ஷீட் தொதப்புகிறார்.
4.தன்னை யாரும் முந்திவிடக்கூடாது என்று .சக நடிகர் நன்கு நடித்த காட்சிகளை கூசாமல் நீக்கச் சொல்லுகிறார்.
5.பழத்த பழமான இயக்குனர் ஒருவருக்கு நடிக்க கால்ஷீட் தருவதாய் நீண்டகாலம் அலையவிட்டு ஏமாற்றுகிறார்.
6.தன் கூத்துப்பட்டறை குரு  சித்து இவரிடம் ஓர் ஏழைப்பெண் கற்பழிக்கப்பட்ட சமூகபிரச்சனைக்கு தெருக்கூத்து நடத்த இரண்டு நாள் கால்ஷீட் கேட்கிறார். இவர் பழசை மறந்து !!!நன்றிகெட்டு வர முடியாது என்று விடுகிறார்.
7.காதல் மனைவி ஸ்னேகாவுக்கு [வித்யாபாலன்] துரோகம் செய்கிறார். மகனுக்கு தந்தையாய் எந்த கடமையையும் செய்வதில்லை.என அடுக்கலாம்.
8.எல்லாவற்றுக்கும் மேலாக அழகிய பெண் எழுத்தாளர் ஒருவரை அமர்த்தி, அண்டப்புழுகுகளுடன் சூப்பர் ஸ்டார் சமீர் கான் என்னும் சுயசரிதையும் வெளியிடுகிறார்.
=========0000==========
இவர் போடுவது சூப்பர் ஹீரோ வேடம்,ஆனால் பக்கா பயந்தாங்கொள்ளி என்பதாய் ஒரு சம்பவம் நடக்கிறது, [ஜெசிக்கா லால் சம்பவத்தை இதில் அழகாய் கோர்த்துள்ளனர்]
பாலிவுட்டின்  புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஒருவர் பெரிய மதுபான விருந்து கொடுக்க, அங்கே மிகப்பெரிய திரைப்பிரபலங்கள், சாமியார்கள்,அரசியல்வியாதிகள்  குழுமுகின்றனர், கிளப்பில் பார் மெய்டாக  நடனமாடும்    பெண்ணிடம் பெரிய அரசியல்வியாதியின்  மகனும்,  சாராய ஆலை அதிபர் மகனும் வம்பு செய்து படுக்கைக்கு அழைக்க, அவள் மறுத்து ஒதுங்கியவள், அங்கே விருந்தில் இருந்த சமீர்கானிடம் தங்கையுடன் சென்று ஆட்டொக்ராப் வாங்குகிறாள்,

மீர்கான் அவளுக்கு ஷிம்லா காட்டன் காலேஜ் நாடகத்தில் தான் முதல் பரிசு வழங்கியதை நினைவுகூர்ந்து கனிவாய் பேச, சகோதரிகள் மகிழ்கின்றனர், தங்கை  மறுநாள் பரிட்சை என்பதால் முதலில் வீட்டுக்கு போக, சமீர் அவளை சினிமாவில் முயற்சிக்க சொல்கிறார். பின்னர் கழிவறை சென்றவர், அங்கே இருவர் கோகெய்ன் உட்கொள்வதை பார்க்கிறார், 

லை கோதி ,வெளியேறியவர், அங்கே உதவி என்று சற்றுமுன் தன்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்கிய பெண்,கண்ணாடி சுவரை அடித்து இவரிடம் கெஞ்ச, வியர்க்கிறார். இவருக்கு கையறுநிலை, உதவிசெய்து பிரச்சனையில் சிக்க மனமில்லை, எனக்கென்ன?!!! என இவர் இருக்க, அவள் தலையில் குண்டடி பட்டு  ஹீரோ தன்னை காப்பாற்றுவான்,  என்ற நம்பிக்கை பொய்க்க துடிதுடித்து சாகிறாள். அந்த கோகெய்ன் போதை ஆசாமிகள் கொன்ற திமிருடன் கிளப்பிலிருந்து நெஞ்சை நிமிர்த்தி வெளியேற, சாமியார் உட்பட அத்தனை பிரமுகர்களும் அதை வேடிக்கை பார்க்கின்றனர்.
=========0000==========
மறுநாள் இந்த கொலை குறித்து ஸ்டுடியோவில்,முகேஷ் திவாரி [போக்கிரி இன்ஸ்பெக்டர்] மற்றும் ஜாக்கி ஷெராப் பேசும் நீண்ட வசனம் படு யதார்த்தம்,
சுருக்கமாக சொன்னால் ஜாக்கிஷெராஃப், கொலையை ஒருவன் பார்த்திருந்தாலும் இன்றைய சாக்கடை அரசியல் சமூகத்தில் வெளியில் சொல்லாமலிருப்பதே உத்தமம்,இல்லையென்றால் சாட்சி சொன்னவன் பெயர்  கெடும், குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை,  என்கிறார். பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளை பற்றிய செய்தி என்றால் ஒப்புக்கு 2 நாள் பேசுவார்கள், அடுத்த நாளே அது கார்பெட்டுக்கு அடியில் போய்விடும், 

ல்மான்கானுக்கு சம்மன், அமீர்கானுக்கு பிடி வாரண்ட் என பிரபல நடிகர்களை தான் தொடர்ந்து உருவுவார்கள், அவர்கள் தான் ஈஸி டார்கெட் ,என்கிறார்.இதைக் கேட்டு இன்னும் குழம்பும் சமீர்கான்,

போலீஸ் விசாரணையிலும் நடிக்கிறார்,தனக்கு அந்த கொலையான பெண்ணை முன்னமே தெரியாது என்கிறார், அவளின் தங்கை வந்து அருகில் நிற்க பொய் சொல்லமுடியாமல் கண்ணாடியை அணிந்துகொள்கிறார். எத்தனையோ பேருக்கு ஆட்டோக்ராஃப் போடுவதால் தான் யாரின் முகத்தையும் பார்ப்பதில்லை, பேனா,பேப்பர், கைகளை மட்டுமே பார்ப்பேன் என்கிறார்,

செத்தவள் நொடியில் செத்தாள்,இவருக்கோ மனநிம்மதி போயிற்று,ஆறுதல் சொல்ல வீட்டில் கூட ஆளில்லை,மனைவி இவரின் பிறபெண்களுடனான உடல்தவறுகளால் நொறுங்கியவள், ஒப்புக்கு இவர் மகனுக்கு மட்டுமே அவள் தாயாய் இருக்க, இவரின் குருவை அவமதித்து துரோகமும் செய்தமையால் இவரின் அப்பா அம்மாவும் கோபித்துகொண்டு சொந்த ஊருக்கே சென்றவர்கள் இவரிடம் மட்டும் பேசுவதில்லை. அனாதையாய் விடப்படுகிறார். தான் தன் குடும்பத்தினரிடமிருந்தும் உண்மையான நண்பர்களிடமிருந்தும் எவ்வளவு அந்நியப்பட்டுவிட்டோம் என கதறுகிறார்.
காப்பாற்றாத குற்ற உணர்வு குறுகுறுக்க, இறந்த பெண்ணின் தங்கையை அழைத்து பணம் 10லட்சம் தந்து நடந்ததை மற, இதை கொண்டு நன்றாய் படி , மன அமைதி கொள், என்று அறிவுரை சொல்கிறார், அவள் பணத்தை ஏற்காமல் திருப்பிகொடுத்து உங்களால் முடிந்தால் இதைவைத்து மன அமைதி பெற பாருங்கள்.  என்கிறாள்.போனவள் தன் ஒரு கிட்னியை விற்று பணம் பெற்று பெரிய வக்கில் வைத்து,வழக்காடுகிறாள்,இருந்தும் சாட்சிகள் யாருமே இல்லை. அவர்கள் இருவர் தான் குற்றவாளி என தெரிந்தும் அவர்களை தண்டிக்கமுடியா நிலை!!!.

வரால் இப்போது நாடகத்தனமான, யதார்த்தமில்லாத, வாழ்வியலுக்கு ஒவ்வாத வசனங்களை  படப்பிடிப்பிலும், டப்பிங்கிலும் பேசமுடியவில்லை, நிறைய டேக்குகள் வாங்குகிறார். எல்லோரிடமும் எரிந்து விழுகிறார். இவருக்கு இந்த வருடமும் சிறந்த இளம் நடிகருக்கான விருது ஸ்ரீதேவி,போனிகபூரால் தரப்படுகிறது,அந்த விழாவில் இவர், தாம் பெற்ற விருது தனதல்ல, அந்த நடிகனுடையது என இவரின் பெரிய படத்தை சுட்டிக் காட்டுகிறார் . உண்மையில் தான் ஒரு போலி,சாதாரணன் என்கிறார்,கூட்டம் இதற்கும் கைதட்டுகிறது, விருதை வீட்டில் கொண்டு வைக்க வந்தவர், தான் அணிந்திருக்கும் முகமூடி மீது வெறுப்படைந்து எல்லா விருதுகளையும் கீழே தள்ளிவிட்டு கதறுகிறார்.

றுநாள் காலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்றவர், அந்த அரசியல்வியாதியின் மகன் மீதும், சாராய ஆலை மகனுக்கு எதிராயும்  சாட்சியம் சொல்கிறார். இவர் மீது வெளியே வருகையில் முட்டை அடிக்கப்படுகிறது, போலீசாரே இவரை சாட்சியத்தை திரும்ப பெறுமாறு வற்புறுத்துகின்றனர், அன்று இரவே இவரின் மகனின்  அறை தீவைக்கப்பட்டு மகனின் கையிலும் தீக்காயம்படுகிறது. 

ப்போது குடும்பத்தினருக்கு ஆபத்து,என்னும் பயம் ஆட்டிப்படைக்க நாளை காலை அடையாளம் காட்டபோகவேண்டும் என்ற நிலை, சாலையில் இவர் காரில்  போகையிலேயே மிரட்டல் அழைப்புவர, காரை,சிக்னல் விழுந்ததும் வீட்டுக்கு திருப்ப சொன்னவர், அங்கே சன்னல் வெளியே டூவிலரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையின் வாடியமுகத்தை பார்க்கிறார். சிக்னல் விழ, அவள் இவர் கார் முன்பே வண்டியை போட்டுக்கொண்டு சாலையிலேயே மயங்கி விழுகிறாள், அவளை மருத்துவமனையில் சேர்த்து அவள் கிட்னி தானம் செய்ததையும் அதனால் நோய்தொற்று ஆனதையும் தெரிந்து கொள்கிறார். நொறுங்கிப்போகிறார். இனி என்ன நேர்ந்தாலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என முடிவு செய்தவர், போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த இரண்டு கயவர்களையும் சரியாக அடையாளம் காட்டுகிறார்.

இனி என்ன ஆகும்?!!!.
இன்னும் 1.5 மணி நேரம் படம் இருக்கிறது, இனி மேல் வரும் சுவாரஸ்யங்களுக்காக படத்தின் முழுக்கதையை சொல்லவில்லை.
1,சமீர்கான் அந்த கயவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்தாரா?
2,தன் குரு சித்துவிடம் மன்னிப்பு கேட்டாரா?
3.தன் மனைவி,மகன் பெற்றோருடன் சேர்ந்தாரா?
போன்றவற்றை நெகிழ்ச்சியான காட்சிகளுடன் டிவிடியில் பாருங்கள்.ஒரு சோற்றுப்பதமாக சமீர்கான் , ஒரு கொலையாளியின்  அரசியல்வாதி அப்பன் வீட்டிற்குள் சென்று, அவன் கண்முன்பே,விலைஉயர்ந்த பெர்சிய கார்பெட்டில் மூத்திரம் போகும் காட்சி, யாரும் தவறவிடக்கூடாத காட்சி அது!!!! அதை ப்ரில்லியண்டாய் எடுத்திருப்பார்கள்.[“கார்பெட் பிஸ்ஸர்” என்னும் இதே போல ஒரு யுக்தியை கோயன் பிரதர்ஸின் |த பிக் லபோவ்ஸ்கி| என்னும் படத்திலும்  உபயோகித்திருப்பர்]


நிஜவாழ்வில் அந்த கிளப்பில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜெசிக்கா லாலின்,கோகெய்ன் கொலையாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் வழக்கு நடந்த பின்னர் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது ,உங்களுக்கு நினைவிருக்கலாம்!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=========0000==========

=========0000==========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Rajkumar Santoshi
Produced by Samee Siddiqui
Written by Rajkumar Santoshi
Starring Ajay Devgan
Vidya Balan
Pankaj Kapoor
Music by Sukhwinder Singh
Cinematography Nataraja Subramanian
Editing by Steven Bernard
Release date(s) 11 January 2008
Running time 150 mins
Language Hindi
Budget 210,000,000 INR
=========0000==========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)