புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு அஞ்சலி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32)இன்று நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரை விட்டுள்ளது, யானைக்கு நீரழிவு ரத்த கொதிப்பு ஏதுமின்றி ஆரோக்கியமாக இருந்தது என சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.,வனத்தில் வாழும் யானை,காலில் கண்ணாடி துண்டு ஏறாமல் இருக்குமானால் 65 வயது வரை வாழும்,நகரசூழலில் 45 வயது வரை வாழும். 

கோயில் யானைகளுக்கு பழங்கள், பானகம், ஃபில்டர் காபி,ரஸ்னா , அதிரசம் சர்க்கரைப் பதார்த்தங்கள்  இவற்றை பக்தர்கள் ஆசையுடன் வாங்கித் தந்து அதன் உயிருக்கே உலை வைத்து விடுகின்றனர்.

யானைகளுக்கு உரிய நடைபயிற்சியும் அவசியம், கோயில் யானை லட்சுமி குளிர் காலத்தில் நடைபயிற்சியில் உயிரை விட்டது மர்மமாக உள்ளது.

இறுதி மரியாதை செய்திகள் படங்களைப் பார்க்க மனதைப் பிசைகிறது, கோயில் யானை லட்சுமிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அகல் விளக்கு | 1979 | மதுரையில் முழுதும் படமாக்கப்பட்ட சினிமா

அகல்விளக்கு (1979) படத்தில் "ஏதோ நினைவுகள்" என்ற காலத்தால் அழியாத தாசேட்டாவின் பாடல் பிடிக்கும், படம் முழுக்க மதுரை நகருக்குள் எடுத்திருந்தனர், இதற்குப் பின் முழுப்படமும் அப்படி  யாரும் மதுரைக்குள் எடுக்கவில்லை என நினைக்கிறேன்.

ரவுடிகளால் வெட்டிக்கொல்லப்பட்ட தோழர் லீலாவதி போல ஒரு நேர்மையான தோழர் தனுஷ்கோடியாக விஜயகாந்த், படத்தின் முதல் காட்சியிலேயே திருப்பரங்குன்றத்தில் கல் மண்டபம் ஒன்றின் அருகில் வைத்து ரவுடிகளால் அடித்து துவைத்தும் வெட்டவும் படுகிறார்,அவ்வழியே சென்ற கண்ணாடி போட்ட டாக்டர் ,S. விஜயலட்சுமி இவரை தன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்,ஷோபா அங்கே நிர்வாகத்துக்கு தெரியாமல் இட்லி பொட்டலம் கொண்டு வந்து விற்கிறார்.அவர்களுக்குள் காதல் அரும்பி மணமுடிக்கின்றனர்.

 விஜயகாந்த் தனது நன்னடத்தையால் மக்கள் ஆதரவுடன் சுயேச்சையாக மீன் சின்னத்தில் நின்று மேயராக வெற்றி பெறுகிறார்.இவரது உறவினர்கள் மக்களுக்கு  காரியங்கள் சாதிக்க இவர் பெயரைச் சொல்லி சுமார் 3.5 லட்சத்தை ஏமாற்றிவிட்டு இவர் மனைவி ஷோபா மீது பழி போட்டு விடுகின்றனர், ஷோபா வீட்டை விட்டு கணவரால் வெளியேற்றப்படுகிறார்.சில நாட்களில் உண்மை தெரியவர விஜயகாந்த் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு , வைகை ஆற்றின்   நடுவே உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்,இறுதியில் பணத்தை அடித்த  உறவினர்களே மனம் திருந்தி மக்கள் பணத்தை கொண்டு வந்து பொதுவில் ஒப்படைக்கின்றனர்.

படத்தில் இசைஞானி இசை மட்டுமே upto the mark உள்ளது , பின்னர் ஷோபா நடிப்பும்  வாசுதேவ்  ஒளிப்பதிவும் , மீதி எல்லா துறையுமே அப்படி பஜனை பாடியுள்ளனர், மதுரை பாஷையில் சொன்னால்  மஞ்சள் குளித்துள்ளனர்,

 இந்தப் படத்தின் பிலிம் பெட்டியையும் போஸ்டரையும் மதுரை பொன் லாட்ஜில் ஒரு வினியோகஸ்தர் அலுவலகத்தில் பார்த்துள்ளேன், எனக்குத் தெரிந்து இந்தப்படம் மதுரையைச் சுற்றி அப்போதிருந்த  சுமார் 55 தியேட்டர்களில் எதிலும் மறு வெளியீடே போனதில்லை, விஜயகாந்தின் ரைஸ்மில் அடுத்த காம்பவுண்டான சென்ட்ரல் சினிமாவில் கூட இப்படம் போட்டதில்லை , இது முழுக்க மதுரையில் எடுத்த படம் என்று இன்று தான் தெரியும், 

படத்தில் ஏதோ நினைவுகள் தவிரவும் 3 பாடல்கள் உள்ளன, நல்ல ராகத்தில் மெனக்கெட்டு அமைத்தவை கேட்க கேட்க மிகவும் பிடிக்கும்,ஒரு தேர்தல் பிரசார பாடலில் அப்போது பாவலர் சகோதரர்கள் எப்படி மாட்டு வண்டியில் இசைபாடி  தேர்தல் பிரசாரம் செய்தனர் என காட்டியிருப்பார்கள்.

படத்தில் ஆரம்ப காட்சிகள் முழுக்க செந்தில் நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் நடக்கிறது, அதில் ஒரு இலக்கிய தரமாக டார்க் ஹ்யூமர் காட்சி வைக்கிறேன் என்று ஒரு நோயாளி பிறந்த நாளன்று தீக்குச்சியால். காது குடைந்தவர் ஏற்கனவே குடைந்து காதுக்குள் மண்டியிருந்த தீக்குச்சி மருந்தில் குச்சி உரசி தீப்பிடித்து காது கருகி இறந்து போகிறாராம்.

ஷோபா அவர்களின் கடைசி படம், இதில் அவர் பெயர் நவநீதம், அவரை ஆரம்பத்தில் சித்திகொடுமையால் மதுரையின் பிரதான குடிசைத் தொழிலான இட்லியை கடனுக்கு விற்க வைத்து அப்படி அலைக்கழிக்கிறார் இயக்குனர், இறுதியில் தான்  அவருக்கு விடிவே வந்தது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டை மாடியில் படப்பிடிப்பு நடத்தினர் என்று பார்த்தால் இதில் மதுரை மீனாட்சி கோபுரத்தினுள்ளே சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்,பெரிய முக்குருணி விநாயகர் முன்பு தான் விஜயகாந்த் ஷோபா திருமணமே நடக்கிறது.

விஜயகாந்திற்கு இதில் s.n.சுரேந்தரின் இரவல் குரல், சீனியர் ஷோபா பெயர் தான் முதலில் வருகிறது.

PS: விஜயகாந்த் அப்போது நல்ல இயக்குனருக்காக, சினிமாவில் தன் திருப்பத்துக்காக காத்திருந்த சமயம்,அவர் ஒரு களிமண் போல தன்னை ஒப்படைத்திருந்தார், இயக்குனர்  R.செல்வராஜ் அவரை mould செய்யத் தவறிவிட்டார்,சினிமாவில் சாதித்த நண்பர்களான இசைஞானி, பாரதிராஜா என பலர் அருகில்  இருந்தும் இப்படத்தை விட்டேத்தியாக கோட்டை விட்டார்.

#அகல்விளக்கு,#விஜயகாந்த்,#ஆர்செல்வராஜ்,#ஷோபா

பாட்டாவே படிச்சிட்டாங்களா?

பாட்டாவே படிச்சிட்டாங்களா?

நேபாள மன்னருக்கு நடந்த சுவாரஸ்யமான சவுண்டி சடங்கு

படத்தில் யானை மீது அமர்ந்திருப்பது துர்கா பிரசாத் சப்கொடே என்ற சவண்டி பிராமணர், இந்து மதத்தில் பிராமணர்களின் ஈமைச் சடங்கில் சவண்டிகர்ணம் என்பது ஒரு மிக முக்கியமான சடங்கு, 

nepalese royal massacre என்று தேடிப் படியுங்கள்,எந்த thriller க்கும் குறைவில்லாத படபடப்பைக் கொண்டிருக்கும்,  இந்த நேபாள அரச வம்ச படுகொலைச் சம்பவம்  2001 ஜூன் 1 ஆம் தேதி இரவு  9-00 மணிக்கு தொடங்கியது, 

இளவரசர் தீபேந்திரா தன் காதலி தேவ்யானி ராணா ( குவாலியர் ராஜ வம்சம் )உடனான திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர்களான மன்னர் பீரேந்திரா,ராணி ஐஸ்வர்யா , மற்றும் விருந்தில் கலந்து கொண்ட உற்றாரை எந்திரத் துப்பாக்கியால் சுட்டபின் தன்னையும் தலையில் சுட்டுக் கொண்டார். 

கோமாவில் தீவிர சிகிச்சையில் மூன்று தினங்கள் இருந்த பின் தீபேந்திரா இறந்தார்,இவர் கோமாவில் இருந்த நிலையிலேயே இவர் மன்னராக அமைச்சர்களின் ஒட்டு மொத்த முடிவுடன் முடி சூட்டவும் பட்டார், கோமாவில் முடிசூட்டப்பட்ட முதலும் கடைசியுமான மன்னர் தீபேந்திரா தான்,அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் இரு மன்னர்கள் மரணமடைந்தது அரச வரலாற்றுக்கு தீராத களங்கம்.

அன்றைய இரவில்  மட்டும் அரண்மனையில் மொத்த உயிர்பலி 10, காயமடைந்தோர் 5, ஒரு எந்திரத் துப்பாக்கி மற்றும் 3 விதமான கைத்துப்பாக்கி கொண்டு வெறிபிடித்தபடி உலவி சுமார் 15 நிமிடங்கள் எடுத்து ஒவ்வொருவரையும் துரத்தி ரசித்து நின்று சுட்டார் தீபேந்திரா, 

நான் சமகாலத்தில்  கண்ணுற்ற மோசமான துர்மரணங்களில் இதுவும் ஒன்று.
இந்த படுகொலை சம்பவத்துக்கு பல conspiracy theory சொல்லப்படுகிறது. அதையும் தேடி வாசியுங்கள்.https://www.news18.com/news/books/book-claims-indian-role-in-nepal-palace-massacre-356128.html

நேபாளத்தில் ஷா ராஜாங்கத்தில் மன்னர் அகால மரணமடைந்தால் பதினொன்றாம் நாள்  ஈமைச் சடங்கு கர்ம காரியங்களின் நிறைவின் போது அபூர்வமான  இந்த "katto khane" என்ற அசைவ சாப்பாடு போட்டு மன்னரை வழியனுப்பும் சடங்கு வழக்கத்தில் உள்ளது.

இந்த ஈமைச் சடங்கு காத்மண்டுவில் பாக்மதி ஆற்றங்கரையில் கல்மோச்சன் காட் படித்துறையில் நடந்தது 

அகால மரணமடைந்த மன்னரின் பாவங்களை இந்த சடங்கின் மூலம் சவண்டி பிராமணர் ஏற்று மன்னரின் ஆத்மாவை இங்கு பூஉலகில் தறிகெட்டு அலைய விடாமல் நேராக சொர்க்கத்திற்கு அனுப்புவதே இந்த சடங்கின் நோக்கமாகும்.

வயதான மெலிந்த சைவ உணவுப் பழக்கம் மட்டுமே உள்ள சவுண்டி பிராமணரைத் தேடி  அழைத்து வந்து, அவருக்கு,இறந்து போன மன்னர் பெயரைச் சூட்டி,அவரை தலைக்கு குளிக்க வைத்து, அவருக்கு மன்னர் உபயோகித்த உயர்தர ஆடைகளை, கண்ணாடி,வாட்சு,செருப்புகள்,அணிகலன்கள், வாசனா திரவியங்களை அணிவித்து , வேத மந்திரங்கள் ஓதி, தலை வாழை இலை விரித்து 84 வகையான மாமிச உணவு பதார்த்தங்களை சாப்பிடச் செய்கின்றனர் ,ஆமாம் அசைவ உணவு பதார்த்தங்களைத் தான்.

பின்னர் தாம்பூலம் தரிக்க வைத்து, மன்னர் குடும்பத்தின் தூரத்து உறவினர்கள் ஆசி வாங்குகின்றனர்,  பட்டத்துக்கு வரும் ராஜா ராணி மகன் மகள் மாப்பிள்ளை பேரன் இவர்கள் இந்த வழியனுப்புதலில் கலந்து கொள்ளமாட்டார்களாம்,
எக்காரணம் கொண்டும் புதிய ராஜாவுக்கு துர்லட்சணங்கள், துர்சகுன நிழல் எதுவும் விழக்கூடாது என்று அவர்களை இந்த "katto khane" சடங்கில் இருந்து விலக்குகின்றனராம்.

பின்னர் பொன்னாடையால் அலங்கரிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்ட சவண்டி பிராமணருக்கு பொன் பொருள், கால்நடைகள், ஊருக்கு வெகு தூரத்தில் வெளியே பரந்த நிலம், வீடு , தானியங்கள்  கணக்கின்றி தருகின்றனர்,பின்னர் சவண்டி பிராமணரை கம்பீரமான பட்டத்து யானையில் ஏற்றி நேபாள பள்ளத்தாக்கின் கடைக்கோடி எல்லையில் சென்று இறக்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுகின்றனர்.

இங்கே படத்தில் காணும் ஈமைச் சடங்கு நடந்து 20 வருடங்கள் ஆகிறது, அப்போதே அந்த சவண்டி பிராமணருக்கு வயது 75,  இன்று 95 வயதில் அந்த பிராமணர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை,

நேபாளம் அப்போது உலகின் ஒரே இந்து அரசாங்கம் (2008 வரை only Hindu kingdom 2008 மே 28 ல் இருந்து இன்று வரை Federal Democratic Republic of Nepal ) இப்படி வெளிப்படையாக இந்த சடங்குகளைச் செய்தனர், 

ஆனால் இது போன்ற சடங்குகளை அகால மரணமடைந்த நம் முன்னாள் பிரதமர் , முன்னாள் முதல்வருக்கு  வெளிப்படையாக இங்கே செய்ய முடியாது, இது ஜனநாயக நாடு,நம்  இறையான்மை இந்திய அரசியல் சட்டம் இது போல  சடங்குகளை ஏற்காது, மக்கள் மன்றத்தின் அவைக் குறிப்பில் எழுதாது,நம்  நீதி மன்றத்தில் பேய் பிசாசு ஆத்மா பித்ரு கர்மம் என்று வாதிட முடியாது.

நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை வினோதங்கள்,எத்தனை எத்தனையோ சம்பிரதாயங்கள், நீர்குமிழி படத்தில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று மிகச் சரியாக எழுதியிருப்பார் கவிஞர் சுரதா,அந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .

PS: மேலே படத்தில் இருக்கும் யானை மோதி பிரசாத் ஒரு கொலைகார யானையாம், ராயல் சித்வான் மிருகக் காட்சி சாலையில் தன் வயிற்றின் கீழாக மகன் பிறக்க வேண்டுதலுக்காக சுற்றி வந்த Kali Bista என்ற பெண்மணியைச் சுழற்றி தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்று விட்டதாம், அந்த பெண்மணியின் மூன்று மகள்கள் அனாதையாகினராம்.

தரவுகள்:
https://www.outlookindia.com/website/amp/final-rites-per-traditional-ritual/211974
http://edition.cnn.com/2001/WORLD/asiapcf/south/06/11/nepal.hindu.ceremonies/index.html

https://www.indiadivine.org/content/topic/1083597-katto-ceremony-in-nepal/

https://en.wikipedia.org/wiki/Nepalese_royal_massacre
https://en.wikipedia.org/wiki/Katto
 #தீபேந்திரா,#பீரேந்திரா,#ஷா_வம்சாவளி,#நேபாளம்,#காத்மண்டு,#படுகொலை,#katto_khane

தெற்கு பார்த்த வாஸ்து இல்லாத பழைய மனை


விற்பனைக்கு உள்ள இந்த பழைய வீட்டை நேற்று சென்று பார்த்தேன். கிணறு மட்டுமே வாஸ்துவுக்கு இருந்தது, அறைகள் எதுவும் வாஸ்துவிற்கு இல்லை,நல்ல அருமையான சுற்றுச்சூழல்,3'set back, சுற்றிலும் மரங்கள், சுற்றிலும் நல்ல வீடுகள்,அரை கிரவுண்டு,இருபது வருட பழசு,makhrana white  marble முழுதும் ,நல்ல மர கதவுகள் , ஜன்னல்கள்  , தெற்கு பார்த்த மனை வாஸ்து படி வடிவமைக்க மிகவும் உகந்தது , 

ஆனால் வீட்டு உரிமையாளர்கள் தான்தோன்றித்தனமாக கட்டிவைத்து இப்போது விற்க வந்துள்ளது.நான் என்னை அழைத்துப் போனவரிடம் வாங்க வேண்டாம் என சொல்லிவிட்டேன்.

Ground Floor
NE ஈசான்யத்தில்.         - சமையலறை 
SE அக்னி மூலையில் - கழிப்பறை
SW கன்னி மூலையில் - கார் பார்க்கிங், நீர்தேக்க தொட்டி

First Floor
NE ஈசான்யத்தில்.         - படுக்கையறை  
SE அக்னி மூலையில் - படுக்கையறை 
SW கன்னி மூலையில் - மூன்றடி தாழ்வான ஒரு study room,அதற்கு மேல் sloping roof
NW-HeadRoom மீது நீர் தேக்கத்தொட்டி

வீடு நன்றாக உள்ளது, வாஸ்து நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தான் சரிவரும் , முழுதும் மாற்றியமைக்க நிறைய செலவாகும் என கூட்டிப் போனவரிடம் சொல்லி விட்டேன்.

PS: கிராமத்தில் திறந்த வெளியில் குடிசைக்கு வெளியில் விறகு அடுப்பு வைப்பவர்களுக்கும் , சாமிக்கு படையல் பொங்கல் வைப்பவர்களுக்கு மட்டும் ஈசான்யத்தில் அடுப்பு வரலாம், 

திருநெல்வேலி ,கும்பகோணம் மற்றும் சில ஊர்களில்  சிலர் மூடிய வீட்டிலும் கூட ஈசான்யத்தில் சமையலறை வைக்கின்றனர் அது தவறு, சமையலறை எப்போதும் அக்னி மூலை (1ஆம் தேர்வு )அல்லது வாயு மூலையில் (2ஆம் தேர்வு )தான் வர வேண்டும் , கிழக்கு பார்த்து தான் சமைக்குமாறு அடுப்பு மேடை அமைய வேண்டும்.சிலர் தெற்கில் அமைக்கின்றனர் (அது அபர காரிய சமையல் செய்யும் திசை என அறியாமல்)

அதே போல வீட்டின் பூஜை அறை என்றால் அது ஈசான்ய மூலையில் மட்டுமே வர வேண்டும், அது வாஸ்து தேவன் தலை வைத்து தூங்கும் மூலை,அங்கு பூஜை அறை வைப்பது மிகவும் நல்லது, கிழக்கு பார்த்து பூஜை மாடம் வைத்து இறைவன் படங்கள் வைத்து விக்ரஹங்கள், விளக்குகள் வைத்து வழிபட வேண்டும்,கிழக்கு பார்த்து படங்கள் அமைக்க முடியாத பட்சத்தில் மேற்கைப் பார்த்து  விக்ரஹங்கள், விளக்குகள் வைத்து வழிபட வேண்டும், வீட்டார் விழுந்து நமஸ்கரிப்பது கிழக்கை அல்லது மேற்கை நோக்கி இருக்க வேண்டும், 

சிலர் தவறாக வடக்கு தெற்கு பார்த்து பூஜை அறையை நிறுவிவிட்டு லட்சுமி கடாட்சம் இல்லை என அலுத்துக் கொள்வர், வடக்கு கயா இருக்கும் திசை, திவசம் ,திதி , சிரார்த்தம் செய்கையில் நமஸ்கரிக்கும் திசை, தெற்கு  எமன் இருக்கும் திசை, திவசம் ,திதி , சிரார்த்தம் செய்கையில் நீத்தோருக்கு காரியம் செய்கையில்  நமஸ்கரிக்கும் திசை, எனவே நம் விஷயம் தெரிந்த முன்னோர் தெற்கில் தலை வைத்து படுக்காதே ஆயுள் குறைவு, தெற்கைப் பார்த்து இலை போட்டு அமர்ந்து உண்ணாதே என்று சொல்லிக் கொண்டே இருந்தனர், வீட்டில் யாரேனும் மரணித்தால் மட்டுமே  தெற்கில் தலை வைத்து கிடத்தி வைப்பார்கள், தெற்கில் அணையாத படிக்கு விளக்கு வைப்பார்கள், 

முழுக்க மூடிய மிகப் பெரிய பூஜை அறையில் நான்கு திசை சுவர்களிலும் சுவாமி படங்கள் வரலாம்,சிறிய மூன்று புறம் சுவர்கள் உள்ள பூஜை அறைகளில் தெற்கு பார்த்து சுவாமி படங்கள் மாட்டுவதை தவிர்க்கவும்.

ஈசான்யத்தில் மேற்கு பார்க்க கடவுளர் படங்கள் அமைத்த பூஜை அறை மிகவும் விஷேசமானது, ஆனால் நிறைய பேர் அதன் அருமை அறியாததால்  ஏற்பதில்லை  ,இது வசிப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் தருவது, இதை கண்கூடாக உணர்ந்துள்ளேன், மயிலை கபாலீசுவரர் மற்றும் மதுரை நன்மை தருவார் கோவில் மூலவர்கள் மேற்கைப் பார்த்து அருள் பாலிப்பவர்கள்,பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வங்கள்.

NE என்ற ஈசான்யத்தில் வீட்டில் நுழைவாயில் கதவு வைப்பது,Hall , sump அமைப்பது ,bore well அமைப்பது, லட்சுமி கடாட்சம் தரும், அங்கு car parking அமைத்தால் அது (slump ) லேசான சரிவில் வருமாறு அமைக்க வேண்டும், கண்டிப்பாக ஈசான்யத்தில் சமையலறை வரக்கூடாது, இளம் தம்பதிகள் புழங்கும் படுக்கை அறை ,கழிப்பறை , குளியலறை வரக்கூடாது,இது தீராத வாஸ்து தோஷத்தை தரும் .

வேண்டுமானால்  குழந்தைகள் படுக்கை அறை,நடமாடும் பெரியவர்கள் படுக்கை அறை (bedridden ஆன பெரியவர்கள் அறை அல்ல ) library, கிழக்கு பார்த்த study,work stn அமையலாம் ,

வடமேற்கு மூலை வழியே செல்வம் நுழைகிறது, அதை குறுக்கவோ அடைக்கவோ கூடாது,மேற்கு வருணன் திக்கு,அதை ஒட்டிக் கட்டுவது, மனையில் நிலத்தடி நீர் வளத்தை வற்றச் செய்யும் அமைப்பு.

தெற்கை விட வடக்கில்  அதிக இடம் அமைந்தால் மிகவும் விசேஷம், மேற்கில் இடம் விடாமல் அணைத்து வீடு கட்டுவது தோஷம் , மேலும்   அங்கே தான் வீட்டின் கழிவறைகள் அமைய வேண்டும் , அதன் சேம்பர்கள் அதன் மேன்ஹோல் அமைய வேண்டும், 

கிழக்கில் கழிவறை மேன்ஹோல் சேம்பர் கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.  

வடமேற்கு வளர்ந்த ப்ளாட் ஆக இருக்குமானால் , அதில் தெற்கை விட இடம் குறைவாக விடுவது தோஷம் ஆகும், 

வடக்கு குபேரன் திசை, அங்கு இடம் விடாமல் மூடுவது பணவரத்தை தடை செய்யும், வடகிழக்கு ஈசான்யம் அதில் அமைந்து விட்ட நீர் நிலை போர்வெல்லை எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது, வடகிழக்கில் திறப்பு உள்ளது விசேஷம், ஆண் சந்ததி தரும் அமைப்பு, குடும்பத்தலைவன் ஆயுளை ஆரோக்கியத்தை கூட்டும் அமைப்பு.

கோணல் ப்ளாட்டில் வீடு கட்டும் போது அதிக கவனம் தேவை, அதில் எந்த கோணல் பகுதியையும் உபயோகிக்காமல் வீடு கட்டினால் எந்த திக்கிலும் பஞ்சபூத ஆற்றல் தடைபடாது.

===
Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#வாஸ்து, #தெற்கு_பார்த்த_வீடு,#south_facing_house,#vasthu

அண்ணாத்தே | பாலிகமி | நகைச்சுவை| polygamy


அண்ணாத்தே படத்தின் காமெடி புதுமையாக உள்ளது,polygamy அடல்ட் காமெடியை அதன் விரசம் வெளியே தெரியாமல் வசனங்களில் அபிமான நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட திதி கன்னட படத்தின் சென்சுரி கவுடா குணாதிசயத்தை நம் காளையன் அண்ணாத்தேக்கு தந்திருக்கிறார் இயக்குனர்.

அண்ணாத்தேயின் முறைப்பெண்கள் மீனாவும் குஷ்பூவும், அண்ணாத்தே இவர்களை ஒரு சேர பத்து வருடங்களுக்கு முன்பு வரை முறையே காலி டெண்ட் கொட்டாயிலும் , இருட்டு கரும்புத்தோப்பிலும் வைத்து சுகித்திருக்கிறார், வெளியே அவரின் தம்பிகள் பொரி உருண்டை, கடலை மிட்டாய் கையூட்டு பெற்று காவல் காத்திருக்கின்றனர், அது தான் அவருக்கு பெயர் காளையன் போல .

முறைப் பெண்களை பல பல வாறு சென்டிமென்ட் வசனம் பேசி பத்து வருடங்களுக்கு முன்பு கழித்துகட்டி கைகழுவியிருக்கிறார் அண்ணாத்தே.

அண்ணாத்தே அவர்களை சடுதியில் கைகழுவிவிட்டாலும் அவர்களால் அண்ணாத்தேயை மறக்கவே முடியவில்லை, லிவிங்ஸ்டன் பாண்டியராஜன் என்று ஒப்புக்கு இரண்டு வெத்து வேட்டு கணவர்களுக்கு மனைவியாக வாழ முடியவில்லையாம், அதனால் பாருங்கள், தம் உதவாக்கரை காவல்காரத் தம்பிகள் முறையே சத்யன் , சதீஷ் இருவருக்கும் அண்ணாத்தேயின் தங்கை தங்க மீனாட்சியை பெண் கேட்டு வந்து ஐந்து நாட்கள்  அண்ணாத்தே வீட்டில் டேரா போடுகின்றனர், பழைய காதலரை அப்படி சைட் அடிக்கின்றனர். முறைப்பெண்களின் தம்பிகளில் ஒருவரான சத்யன் தீனிவெறியர், மற்றொருவரான சதீஷன் பணிப்பெண் வெறியர்.

தத்தம் தம்பிகளுக்கு அண்ணாத்தேயின் தங்கை தங்க மீனாட்சிக்கும்  காதல் வர குடும்ப சகிதம் பாடுபடுகின்றனர்.
இருந்தும் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விடுகிறது.

அதனால் அவர்கள்  தினத்தந்தி க்ரைம் செய்தி பாணியில் அண்ணாத்தேயை மடக்கி வாய் விட்டே கேட்கின்றனர், மீனா, ம் என்று சொல்லுங்கள்  என் புருஷனை  விவாகரத்து செய்து விட்டு உங்களை மணக்கிறேன் என்கிறார்.

குஷ்பூவோ, கண்ணை மட்டும் காட்டுங்கள்  என் புருஷனை  உலக்கையால் அடித்துக் கொன்று விட்டு உங்களுடன் வருகிறேன் என்கிறார்.

மிகவும் முன்னேற்றமான polygamy காமெடியை குடும்பப் படத்திற்குள் கச்சிதமாக வைத்துவிட்டார் இயக்குனர், இந்த படத்தை யாரும் முழுதாகப் பார்க்காதது இயக்குனருக்கு வசதியாகிவிட்டது.எதிர்காலத்தில் இது போல நகைச்சுவை ட்ராக் எழுதக்கூடியவர்களுக்கு நல்ல கிராக்கி உண்டு.

நம் தலைவர் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்டும் கூட
https://www.facebook.com/750161339/posts/10157852490801340/

#நாட்டுக்கு_ஒரு_நல்லவன்.

தாய் மதம் விடும் சடங்கு

தாய்மதம் விடுவோர் இப்படி நெடுங்காலம் தம் குடும்பம் வழிபட்ட கடவுளர் படங்களை கோயில்  குளத்தில் விட்டுவிடுகின்றனர்,இதே படங்கள் கோயில் படக் கடையில் ,ஃப்ரேம் படக் கடையில் இருந்தால் அதன் மதிப்பு தனி, ஆகி வந்த பிறர் வழிபட்ட படங்களை பொதுவில் யாரும் சீண்ட மாட்டார்கள், அது குப்பைக்குத் தான் போகும்.

பிடித்த கடவுளரை பிடித்த மதத்திற்கு மாறி வழிபடுவது அவரவர் உரிமை, வல்லடியும் பெருங்காற்றும் பெருந்துயரும் வராத குடும்பம் உண்டா? மந்திரம் கால் மதி முக்கால் என்ற தாரக மந்திரத்தை ஒருவர் பின்பற்றினால் போதும்,கஷ்டமே வராது, உழைப்பு தான் அந்த மதி முக்கால், ஆசியும் அதிர்ஷ்டமும் தான் அந்த கால்.

இப்படி கடவுளரை புறக்கணிப்பதால் தெய்வ நிந்தனை செய்வதால் எல்லாம் சரியாகிடுமா? ஆகாது, ஒருவொருவனும் அவனவன் விதியை சுமந்து அலைகிறான், எத்தனை போற்றினாலும் இறைவன் புகழ் இம்மி உயராது, எத்தனை தூற்றினாலும் இறைவன் புகழ் குறையாது (எல்லா இறைவனும் ஒன்றே, எல்லா இறையுருவுக்கும் இது பொருந்தும் ).

முக்கால் கிணறு தோண்டியவர்களுக்கு தேவை இன்னும் கால் கிணறு தோண்ட நீர் கிடைக்கும் என்ற  நம்பிக்கை மட்டுமே.

எந்த கோயிலுக்கு போனாலும் இப்படி நிறைய சாமிபடங்கள் சிலைகள் என வைத்துவிட்டுப் போகின்றனர், கோயில் நந்தவனத்துக்குள் ஒரு துளசி கன்று , ஒரு வில்வகன்று, ஒரு மாங்கன்று என எதுவும் வாங்கி நட மாட்டார்கள், ஆனால் வீட்டில் வேண்டாதவற்றை அங்கே கொண்டு வந்து வைத்து விட்டு போகின்றனர்.

புது வீடு குடி போகிறவர்களும் கூட இது போல பழைய ஆகி வந்த கடவுளர் படங்களை பொது இடங்களில் கொண்டு வந்து வைக்கின்றனர், புதிதாக படங்கள் வாங்குவார்களாம், இது எல்லாம் என்ன மனநிலை என்றே புரியவில்லை.

தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் | மாடம்பாக்கம்

Sri Arulmighu Dhenupureeshwarar Thirukovil,மாடம்பாக்கம்

தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சிறிய சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்,இந்த அபூர்வமான வெள்ளை வண்ண லிங்கத்தின் வடிவம் ஒரு கொழு கொம்பு போல் உள்ளது, இரண்டு அங்குல அகலம் அரையடி உயரத்தில் உள்ளது, இந்த சுயம்புவுக்குத் தான் எல்லா வகை அபிஷேகங்களும்.

சுயம்பு லிங்கம் உள்ள கருங்கல் பீடத்தில்  பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது, லிங்கத்தின் மீது வெள்ளி உலோகத்தினால் ஆன சிறிய மண்டபம் போன்ற அமைப்பும்,அதன் மீது நாகாபரணமும் அபிஷேகம் முடிந்தவுடன் அணிவிக்கப்படுகிறது, 

மூர்த்தி சிறியது, ஆயினும் கீர்த்தி பெரியது,தூங்கானை மாட அமைப்பு கர்ப்ப கிரகம் கொண்ட கோவில்,மிகவும் அழகிய அம்பாள் தேனுகாம்பாள் மூலவர் உயரம் மூன்றடிதான், ( விகிதாச்சாரம் )

 தூங்கானை மாடத்தில் பெரிய விஷ்ணுவும், அதன் நேர்எதிரே வரதராஜ பெருமாளும் ஸ்ரீதேவி,பூதேவி தாயாரும், அடுத்து காசி விசுவனாதர்,விசாலாட்சி, அடுத்து முருகன் வள்ளி தெய்வயானை சந்நதிகள்,பிரம்மன்,சண்டிகேசர்,துர்க்கை சந்நிதிகள் உட் பிரகாரத்திலேயே அமைந்துள்ளன,தட்சிணாமூர்த்தி திருமேனியின் தலைமீது ஆல மரம் இங்கு இல்லை,துர்க்கை இங்கு  கிளி வைத்துள்ளார்,

கோவில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

இன்று 9-30 மணிக்கு நான் போகையில் அபிஷேகம் ஆரம்பம் ஆனது, அப்போது மட்டுமே சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.

இது புதன் பரிகாரஸ்தலம், வக்ரதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலம்,தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு,சண்டியை வதம் செய்யும்  சரபேசுவரர் வழிபாடு பிரசித்தி பெற்றது.

கோவில் UNESCO கட்டுப்பாட்டில் உள்ளது,தேனுபுரீஸ்வர்ர் கோவிலுக்கு அடுத்த block ல் 18 சித்தர் பீடமும், உலகின் பெரிய மரகதலிங்க மேருவும்,ஷேஷாத்ரி சுவாமிகள் சந்நிதி, குருவாயூரப்பன் சந்நிதி அமைந்துள்ளது, 

இந்த மாடம்பாக்கம் 18 சித்தர் பீடத்தில் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் மேரு நிறுவும் முன்  சேஷாத்ரி சுவாமிகளின் சந்நிதியை நிறுவினர்,அங்கு சுவாமிகளின் தத்ரூபமான கற் சிலை உண்டு,  அடுத்தடுத்து பிரம்மாண்டமான அப்பணி  நிறைவேறி   20 வருடமாகிறது.

#தேனுபுரீஸ்வரர்கோயில்,#மாடம்பாக்கம்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)