ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமாவாசை திதி


அமாவாசை திதி : அமாவாசை திதிக்கு சிவன், பராசக்தி ஆகிய இருவரும் அதிதேவதை ஆவார்கள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்கள் செய்ய உகந்த திதி இது . இயந்திரம் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் அமாவாசை அன்று தொடங்கலாம்.

Amavasai Tithi : For Amavasai Tithi both Shiva and Parashakti are deities.  On the new moon day, one can perform prayers and rituals  to the ancestors.  This is an auspicious day for charity too.  All kind of mechanical work machinery works can be started on Amavasai day.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

ஆஞ்சனேயர் கீதாஞ்சலி | பாலமுரளிகிருஷ்ணா | தேவா | திருப்பத்தூரான்


ஐந்து வருடங்கள் முன்பு சோளிங்கர் போகையில் சின்னமலை படிகளில் பக்திபடங்கள் விற்கும் கடையில் "வெண்ணெய சாத்தி நின்றோம் ஹனுமந்தா ஆஞ்சனேயா " பாடல் ஒலித்தது, அட நம் பாலமுரளிக்கிருஷ்ணா அவர்கள் குரல் என்று அமர்ந்து கேட்டுவிட்டு படிகள் ஏறினேன்.

திரும்ப வருகையில் " வாயு புத்திரனே ஆஞ்சனேயா " பாடல் ஒலிக்க அதையும் கேட்டு விட்டு சிடியை வாங்கிக் கொண்டு காரில் கேட்டபடி வீடு வந்தோம்.

முழுக்க முழுக்க பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தமிழில் ஆஞ்சனேயர் மீது  பாடிய பக்திப்பாடல்கள் இவை, அத்தனை அற்புதமாக இசையமைத்திருக்கிறார்   தேனிசைத் தென்றல் தேவா, கவிஞர் திருப்பத்தூரான் வரிகள் ஒவ்வொன்றும் ஆத்மார்த்தமானவை, அனுமன் சரிதத்தை உரைத்து மனதுக்கு உரம் தந்து காக்கிறது.

மொத்தம் எட்டு பாடல்கள் அத்தனையும் அற்புதமானவை, வெவ்வேறு அழகிய ராகங்களால் கட்டமைக்கப்பட்டவை,
5.5 நிமிடம் நீளுபவை,மனிதில் ரீங்காரமிடுபவை,நிச்சயம் உங்கள் தினசரி play list ல் அமரும் .

1.ராமனின் நாமத்தை பூமிக்கு சொல்லவந்த நாயகன் நீயல்லவா?

2.சேது அணைக்கரையிலே ராம ஜெபம் செய்யும் அனுமந்தனே

3. வாழ்க்கையில் சுகம் ஏதும் அறியாதவன், ராமன் வைகுந்தம் அழைத்த போதும் தொடராதவன்.

4.ஓம் அஞ்சனையின் மைந்தா நமோ நமோ ஓம் ஆஞ்சனேயனே நமோ நமோ

5.காலங்கள் தோறும் ராமனைப்பாடி வாழ்கின்ற தூயவனே.

6.வாயு புத்திரனே ஆஞ்சனேயா, தவவலிமையில் சிறந்தவனே ஆஞ்சனேயா

7.வெண்ணைய சார்த்தி நின்றோம் அனுமந்தா ஆஞ்சனேயா, வடமாலை சூட்டி நின்னோம் அனுமந்தா ஆஞ்சனேயா.

8.ஆஞ்சனேயர் அஷ்டோத்திரம்

வீட்டில் ஒலிக்க விடுங்கள் ஆத்மபலம் பெருகும்,மனசஞ்சலம் ஓடும், சனி இன்னல்கள் குறையும்.

இங்கே juke box
https://youtu.be/ZiurkbLLUug

சென்னை சுற்றத்தில் உள்ள 85 சித்தர் ஜீவ சமாதிகள்

தமிழ் நாட்டில் சென்னையில் தான் சித்தர்களின் ஜீவ சமாதிகள் அதிகம் உள்ளது,  சுமார் 85 சித்தர்களின் ஜீவ சமாதிகள், திருவண்ணாமலையில் 21 சித்தர் ஜீவ சமாதிகள் உள்ளது, அப்படி என்றால் தமிழ் நாடு முழுவதும் எத்தனை சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் என்று பாருங்கள், இப்பட்டியலில் காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் அமைந்த சித்தர் ஜீவசமாதிகள் சேர்க்கப்படவில்லை.

வடசென்னை , தென்சென்னை, மேற்கு சென்னை, கிழக்கு சென்னை மார்க்கத்தில் அமைந்துள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள் விபரங்கள் இங்கே தந்துள்ளேன், சித்தர் ஜீவ சமாதிகள் நோக்கிய தேடலில் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டின் அருகாமையில்  எந்த சித்தர் ஜீவசமாதி உள்ளது என கண்டறிந்து சென்று நேரம் கிடைக்கையில் சென்று வாருங்கள், சித்தர் ஜீவ சமாதி முன்பு எதுவும் வேண்டத் தேவையில்லை,தியானம் அறிந்திருக்கத் தேவையில்லை, கண்மூடி பிரார்த்தியுங்கள்,  எண்ணியது நடக்கும்,குழப்பம் நீங்கி உள்ளம் தெளிவாகும்,  நல்லதே நடக்கும். 

திருவொற்றியூர்

1.பட்டினத்தார்

கடற்கரையையொட்டி பட்டினத்தார் கோவில் வீதி சமாதிக்கோயில் -ஆவணி உத்திராடம் குருபூஜை.

2. பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்

பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம் -சமாதிக் கோயில்.

3 .ஐகோர்ட் சாமி (எ) அப்புடுசாமி

பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் சமாதிகோயில்.

4.அருள்மிகு யோகீஸ்வரர் சாமி

வடிவுடையம்மன் கோயில் அருகில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

5. பரஞ்சோதி மகான்

டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 
4, தங்கம் மாளிகை அருகில் சமாதி.

6.ஞானப்பிரகாச சாமிகள்
வடக்கு மாட வீதி 145/30ல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

7. மௌனகுரு சாமிகள்
கடற்கரையோரம் சமாதிக்கோயில்.

8.முத்துக்கிருஷ்ண பிரம்மம்
ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி-கார்த்திகை சதயம் குருபூஜை.

9. ஞானசுந்தரபிரமம்
முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தரபிரமம் சமாதி உள்ளது. சித்திரை உத்திராடம் குருபூஜை.

ராயபுரம்

10. குணங்குடி மஸ்தான் சாயபு காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில்
உள்ளது.

11.ஞானமாணிக்க வாசக சிவாசாரியார் சித்தர்
மன்னார்சாமி கோயில் தெரு, பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி.

வியாசர்பாடி

12. சிவப்பிரகாச சாமி
இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோயிலில் சமாதிக் கோயில்.

13. கரபத்திர சிவப்பிரகாச சாமி
1ஆவது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில் சமாதி-பங்குனி உத்திராடம் குருபூஜை.

பெரம்பூர்

14. அந்துகுருநாத சுவாமிகள்
மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோயிலில் சமாதிக் கோயில்-பஞ்சலோக வடிவமும் உள்ளது-பங்குனி அல்லது சித்திரை அவிட்டத்தில் குருபூஜை.

15. மதனகோபால சாமி
மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு, ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிக் கோயில்.

16.சந்திரயோகி சுவாமி
மங்களபுரம் ஐந்துலைட் அருகில் சமாதிக்கோயில்.

17. வேர்க்கடலை சுவாமி
அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்-மார்கழி சித்திரை குருபூஜை.

18. மதுரை சாமி
செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரைசாமி மடத்தில் சமாதிக் கோயில்.

19. மயிலை நடராஜ சுவாமி
கொளத்தூர்-பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம் சமாதி உள்ளது.

ஓட்டேரி

20.ஆறுமுக சுவாமி
173/77 டிமல்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு - ஓட்டேரி மயானத்தில் சமாதிக் கோயில் - உருவப்பட
பூஜை.

புரசைவாக்கம்

21. வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதிக் கோயில்.

22. ஈசூர் சச்சிதானந்த சாமி
கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதிக்கோயில்.

எழும்பூர்

23.மோதி பாபா
422, பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

வில்லிவாக்கம்

24. அனந்த ஆனந்த சுவாமி 
25. சபாபதி சுவாமி
பாலியம்மன் கோயில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சமாதிக்கோயில்-ஐப்பசி
திருவாதிரை குருபூஜை.

நுங்கம்பாக்கம்

26.கங்காத சுவாமி
ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

27. நாதமுனி சாமி
ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனிசாமி மடத்தில் சமாதிக் கோயில்.

28. பன்றிமலை சாமி
5, வில்லேஜ் ரோடில் 'ஒம் நமச்சிவாய' என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

29. ஆதிசேஷானந்தா
நுங்கம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம் ஆதிசேஷானந்தா கோயிலில் சமாதி.

30. வீரமா முனிவர்
(இத்தாலிய கிருத்துவ சபை ஊழியர் Constanzo Beschi அல்லர்)
நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல் நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோயில்.

கோடம்பாக்கம்

31. ஸ்ரீபரமஹம்ச ஓங்கார சாமி
அசோக் நகர்- சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நகர் சாமியார் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ச ஓங்கார சாமி பீடம்.

வடபழனி

31. அண்ணாசாமி, 
32.ரத்தினசாமி, 
33.பாக்கியலிங்கம் சாமிகள்

வடபழனி முருகன் கோயில் உருவாக காரண கர்த்தாக்கள்-இவர்களது சமாதிக்கோயில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில் உள்ளது.

மைலாப்பூர்

34,திருவள்ளுவர்
35.வாசுகி அம்மையார்
இருவரது சமாதிகளும் லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில் உள்ளன.

36. அப்பர் சாமிகள்
171, ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்கிருத கல்லூரி எதிரில் மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

37.குழந்தைவேல் சுவாமி
S.D.P.கில்டு பில்டிங்-சித்திரகுளம், மைலாப்பூரில் உள்ளது.

38.முத்தையா சாமிகள்
குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்
உள்ளது.

ஆலந்தூர்

39. தாடிக்கார சுவாமி
ஆலந்தூர் E.B.அலுவலகம் மேற்கே தாடிக்காரசாமி தெரு-பழைய எண். 23-24 இடையே சந்து.
உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிக் கோயில்-சிவலிங்க பிரதிஷ்டை.

40. குழந்தைவேல் பரதேசி

ஆலந்தூர் E.B. அலுவலகம் பின்புறம், 53, சௌரித் தெரு, மெட்ரிக் மேனிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிக்கோயில்.

கிண்டி

41. சங்கு சித்தர் சிவலிங்க நாயனார்
M.K.N. ரோடு 
36ஆம் எண் சங்கு சித்தர் சிவலிங்க நாயனார் சமாதிக்கோயில்.
சிவலிங்க பிரதிஷ்டை இதனுடன் இவரது சீடர்கள் 
42.ஸ்ரீகொல்லாபுரி சாமி, 
43.ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி, 
ஆனி பௌர்ணமி குருபூஜை.

44. சத்யானந்தா கோழீபீ சித்தர்
பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில் சமாதி உள்ளது.

திருவான்மியூர்

45, பாம்பன் சாமிகள்
கலாசேஷத்ரா அருகில் திருமட வளாகத்துள் பாம்பன் சாமி சமாதி ஆலயம்-முருகன் பிரதிஷ்டை.

46. வால்மீகி
மருந்தீஸ்வரர் கோயில் எதிரில் சிறிய கோயில்.

47. சர்க்கரை அம்மாள்
75, கலாக்ஷேத்ரா ரோடு-சமாதிக்கோயில்.
அம்மையார் திருவுருவம்.

வேளச்சேரி

48. சிதம்பரசாமி (எ) பெரியசாமி
காந்தி சாலை திருப்பம்-1, 
வேளச்சேரி மெயின் ரோடு சமாதிக்கோயில்-சிவலிங்க பிரதிஷ்டை

ராஜகீழ்ப்பாக்கம்

49. சச்சிதானந்த சற்குரு சாமிகள்
அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி

50. நாகமணி அடிகளார்
கந்தன்சாவடி பஸ் ஸ்டாப்-நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோயிலுள் சமாதிக்கோயில்.

நங்கநல்லூர்

51.மோனாம்பிகை
52.ஞானாம்பிகை
53.சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21, பொங்கி மடம் மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)
ஸ்டேட் பாங்க் காலனி, சென்னை.

சிட்லபாக்கம்

54. சாயி விபூதி பாவா
83, முதல் மெயின் ரோடு, H.C. நகர் - சிட்லபாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதிக்கோயில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோயில்.

55. ஸ்ரீ திருமூர்த்தி பகவான் ஜீவசமாதி. 8-குளக்கரை விநாயகர் கோயில் அருகில் வன்னி மரத்தடி

தாம்பரம்

56.எதிராஜ ராஜயோகி
ஊரப்பாக்கம் அருகில் கரணை புதுச்சேரியில்
இவரது சமாதி உள்ளது.

படப்பை

57.துர்க்கைச் சித்தர்
ஜெயதுர்கா பீடம் கோயில்-சாமிகளின் சமாதி:
கோயில்.

பெருங்களத்தூர்

58.ஸ்ரீமத் சதானந்தசாமி
ஆலம்பாக்கம் சதானந்தபுரம்-பெருங்களத்தூரில் சமாதிகோயில்-தை மகத்தில் குருபூஜை.

புழல்

59.நிகண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்ப சாமிகள் ஆசிரமம்-ஜீவ சமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலம்-அருகில் சீடர் கோவிந்தராவ் சமாதி.

காரனோடை

60.மல்லையா சாமிகள்
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப் பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிக்கோயில்-சாமிகளின் கற்சிலை பிரதிஷ்டை.

61.அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதிக்கோயில்
ஆவணி 1ஆம் தேதி குருபூஜை.

அலமாதி

62. மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோயிலுள் சமாதி உள்ளது.

63.கோவண சாமி
அலமாதீஸ்வரர் கோயில் அருகில் சமாதி.

பூதூர்

64.ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம்-ஒரக்காத் ரோட்டில் 6 கி.மீ. பூதூர் கிராமம்-மேற்கு பகுதியில் தர்ச உள்ளது.

பஞ்சேஷ்டி

65. புலேந்திரர் (அகத்தியரின் சீடர்)
ரெட்ஹில்ஸ் - பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது, இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க பிரதிஷ்டை.

அம்பத்தூர்

66.ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண் சித்தர் மடம்-13, குமாரசுவாமி தெரு வரதராசபுரம், அம்பத்தூர்-அக்டோபர் 10ஆம் தேதி குருபூஜை.

வடதிருமுல்லைவாயில்

67.அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாட வீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் சமாதி-கார்த்திகை மிருகசீரிடம் குருபூஜை.

68. மாசிலாமணி சுவாமி
சோளம்பேடு 
தாமரைக்குளம்
ஆஞ்சநேயர் கோவிலில் சமாதி.

பூந்தமல்லி

69.கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் 
சிவன் சந்நதிக்கு
வலப்புறம் தூணில் உள்ளார்.

70. பைரவ சித்தர்
பஸ் நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சமாதி.

71.கருடகோடி சித்தர்
பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர் காட்டிலிருந்து
1 கி.மீ. தூரத்தில் சுந்தரவரத பெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் சமாதிக்கோயில்.

ஸ்ரீபெரும்புதூர்

72. அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்-வி.ஜி.பி. ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி-உயரமான சமாதி மேடை சுவாமிகளின் சிலை.

வெள்ளறை கிராமம்

73.ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் சமாதி.

மாங்காடு

74.சர்வசர்ப்ப சித்தர்
மாங்காடு-போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோயிலில் சமாதி உள்ளது.

புதுப்பட்டினம் (E.C.R.)

75. மாயவரம் சித்தர்சாமி
76.மாதாஜி சித்தர்
E.C.R. சாலை புதுப்பட்டினம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள்- இருவருக்கும் சமாதிக்கோயில்.

கோவளம்

77.ஆளவந்தார் சாமி
கோவளம் - நெமிலி V.G.P. தாண்டி பீகாவரம் அருகில் நெமிலியில் இவரது சமாதி.

திருக்கழுக்குன்றம்

78. மகான் சுப்பையா சாமிகள்
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வடபுறம் அன்னக்காவடி விநாயகர் திருக்கோயில் அருகே சமாதி, மார்கழி சதய நட்சத்திரம் குருபூஜை.

திருக்கச்சூர்

79.குழந்தை வேலாயுத சித்தர்

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ. தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோயில் அருகில் சமாதிக்கோயில்.

அப்பூர்

80.பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர்-ஒரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ் நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோயில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் சமாதி. 

திருப்போரூர்

81. சிதம்பரசாமி

திருப்போரூரிலிருந்து 2 கி.மீ. கண்ணகப்பட்டு
சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதி கருவறை சிவலிங்க பிரதிஷ்டை-வைகாசி பௌர்ணமி குருபூஜை.

செம்பாக்கம்

82. இரட்டைச் சித்தர்கள்
செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி
சாலையில்
செம்பாக்கம்- ஸ்ரீபொன்னம்பல சாமிகள் 

83. ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது சமாதிகள் உள்ளன. 

கூடுவாஞ்சேரி

84. மலையாள சாமி
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் பின்புறம் சமாதி. அருகில் வயல் வெளியில் தியாகராயசாமி சமாதி.

அச்சரப்பாக்கம்

85. முத்துசாமி சித்தர்

அச்சரப்பாக்கம்-கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ. தூரத்தில் நடுப்பழநி முருகன் கோயில் உள்ள குன்று. முருகன் கோயில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துசாமி சமாதி மண்டபம்-சிவலிங்க பிரதிஷ்டை

© Geethappriyan | DfD

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தங்ககவசம் கோட்டோவியம்

மதுராந்தகம் ஏரியை அடுத்த ஞானகிரி ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில்

இன்று எனக்கு ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ அரங்க நாத சுவாமி திருக்கோவில், ஞானகிரி மலை, மலைப்பாளையம், கருங்குழி, மதுராந்தகம் கோவில் செல்ல ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

எத்தனையோ முறை சென்னைக்கு விரைவு வழிச்சாலையில் திரும்பும்  வழியில் கடல் போன்ற மதுராந்தகம் ஏரியை கடக்கையில்  தொலைவில் இந்த ஞானகிரிமலையை பார்த்துள்ளேன், இன்று தான் இந்த மலையில் வீற்றிருக்கும் மூன்று ரங்கநாதர்களையும் ஒருங்கே சேவிக்கும் நல்வாய்ப்பு அமைந்தது.

இந்த ஞானகிரிமலைக்குச் செல்ல 250 கரடு முரடான கருங்கல் பாறை படிகள் உள்ளன,இப்போது மலைப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அடிவாரம் முதல் மலைக்குச் செல்ல சிமெண்ட் சாலை அமைத்து வருகின்றனர்,உடன் இந்த கரடுமுரடான படிகளையும் திருத்தி சீரமைக்க திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர் இந்த தனியார் கோவிலின் அறங்காவலர்கள், இப்போது உள்ள கப்பி ரோடு கோவிலின் வெளிமண்டபத்தின் படி மேடை வரை நீள்கிறது.இருசக்கர வாகனம் கார்கள் செல்ல முடியும், சற்று மேடான சாலை , அதை நன்கு சீரமைத்து சிமெண்ட் சாலையாக மாற்றப் போகின்றனர், அது நடந்தால் பக்தர்கள் எளிதாக மூன்று ரங்கநாதர்களையும் சேவிக்க முடியும்.

இந்தக் கோவிலில் மட்டுமே உலகில் முதல்முறையாக மூன்று ரங்கநாதர் சந்நிதிகள் உள்ளது, 

1) 450 வருட பழமையான ஆதி ரங்கநாதர் சந்நிதி
2) 22 வருட பழமையான அனுகிரக ரங்கநாதர் சந்நிதி
3)20 வருட பழமையான அழகிய ரங்கநாதர் சந்நிதி

இக்கோவிலுக்கு கொடிமரம் இன்னும் அமைக்கப்படவில்லை,ரங்கநாதர் சித்தத்தில் விரைவில் அமையும் ,பலிபீடங்கள் முறையாக அமைந்து உள்ளது.

பிரதான கோவிலுக்குள் அழகிய ரங்கநாதர்  11' நீள மூலவர் கிழக்கு (கருங்குழி ) பார்த்தும், அனுக்ரஹ ரங்கநாதர் 11' நீள மூலவர் தெற்கு (மதுராந்தகம் ) பார்த்தும் பள்ளி கொண்டிருக்கிறார்கள்,அழகிய ரங்கநாதருக்கு நான்கு அழகிய திருக்கரங்கள் உண்டு.

ஏரிக்காத்த ராமர் உற்சவர் கருணாகரபெருமாள் இங்கு வருடா வருடம் எழுந்தருளல் செய்ய உற்சவ மண்டபம் அமைந்துள்ளது, 

மலை அடிவாரத்தில் கற்படிகளின் துவக்கத்தில் விநாயகர் , ஜெயவீர ஆஞ்சனேயர் தனி  சந்நிதி உண்டு.
மலைக்கோவிலில் தன்வந்திரி சந்நிதி,லட்சுமி நரசிம்மர் சந்நிதி,  சக்கரத்தாழ்வார் தனி சந்நிதி, 
முடி காணிக்கை தர வசதி உண்டு, சுத்தமாக பராமரிக்கப்படும் ஆண் பெண் கழிவறைகள் உண்டு,கேன் வாட்டர்  குடிநீர் வசதி உண்டு.

மலை மீதிருந்து பார்க்கையில் மதுராந்தகம் ஏரி முழுக்க மிக அற்புதமான 360° பருந்துப்பார்வை பார்க்க முடிகிறது.

Trekking சென்று வழிபாடு செய்யும் IT பக்தர்கள் இந்த அழகிய மலைக் கோவிலைச் சென்று பார்க்கத் தவறாதீர்கள்.

எத்து நூல் எண்ணாயிரம் பொன் என்பார்கள்,அதாவது இறைவன் திருப்பணிக்கு வாங்கும் marking நூல் மட்டுமே எண்ணாயிரம் பொன்னுக்கு வாங்க வேண்டி வருமாம், இந்த கோவிலின் அறங்காவலர் நாராயணன் பாகவதர் ஆடு மேய்த்து வந்த காலத்தில் இருந்து ஆதி ரங்கநாதருக்கு தினமும் தன்னால் முடிந்த அபிஷேகம் ஆராதனை செய்து வந்தவர், மெல்ல இத்தனை பெரிய கோவிலை கட்டி எழுப்பி உள்ளார்,

முறையான  ஏட்டுக்கல்வி இல்லாத  நிலையில் தன்னால் முடிந்த எல்லை வரை சென்று அதற்கான அதிகாரிகள் ,ஆணையர்களைப் பார்த்து இந்தக் கோவிலுக்கு முறையான திட்ட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை  வாங்கியதை என்னிடம் பகிர்ந்தார்,

இந்த கோவில் உருவாக சகாயம் ஐஏஎஸ், மற்றும் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் உதவியதை மனமாறப் பகிர்ந்தார், அவருடைய தொடர்பு எண்கள் இங்கே தந்துள்ளேன், அடியாருக்கு அடியாராக பக்தர்களிடம் உதவிகள்  வாங்கி நேர்மையாக செலவிட்டு  இந்த கோவிலை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளார்.இந்த திருப்பணிக்கு வேண்டி தன் சொத்துக்கள் அனைத்தையும் இதில் செலவழித்திருக்கிறார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம பாடசாலையில் பயின்ற இரு பட்டாச்சார்யார்கள் உற்சவருக்கு தினமும் காலை 9-30 மணிக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்கின்றனர், அத்தனை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

ஆதி ரங்கநாதரை கோனார் சமூகத்தைச் சேர்ந்த மூத்த அடியார் ஒருவர் அத்தனை அழகாக திருவாராதனை செய்கிறார், அவர் தன் முன்னோர்கள் விட்டுச் சென்ற உள்ளங்கை அளவுள்ள கல் விக்ரஹத்தில் கிருஷ்ணர் தலை , பசு என திருப்பி திருப்பி காண்பித்தார், அவர் மிகுந்த ஐக்கியத்துடன் இறைவனுக்கு சமைத்து அற்பணித்த அக்கார அடிசலை பிரசாதமாகத் தந்தார், அத்தனை சுவை, நமது பக்தியை கேள்வி கேட்கிறது அந்த உளமார்ந்த இறைசேவை.

மதுராந்தகம் ஏரியை இந்த மலை மேல் இருந்து பார்ப்பதற்கு ஸ்ரீரங்கத்தின் கொள்ளிடம் ஆற்றைப்  பார்ப்பது போலவே அத்தனை அழகாக உள்ளது.

கூகுள் மேப் லிங்க்
Shri Ranganathar Temple Malaipalayam

https://maps.app.goo.gl/AG1i7ExQdk9b9oFW9

கோவில் தரிசன நேரம். 

வாரநாள் காலை 10.30 முதல் 12.00
சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும்.

2022 ஆம் ஆண்டின் உற்சவ நாட்கள் விபரங்கள் அறிய அறங்காவலர் நாராயணன் பாகவதர் அவர்களின் 
எண் 9443251323, 

whatsapp எண்

கோவிலுக்கு பொருளதவி செய்ய நினைப்பவர்கள் இந்த Gpay உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டு எத்தனை சிறிய தொகை என்றாலும் அனுப்பலாம்.
திரு.N. முகுந்தன்   (இவர் நாராயண பாகவதர் அவர்களின் மகன்.)
8220155585

#கருங்குழி, #மதுராந்தகம், #ஆதிரங்கநாதர்_கோவில்

மகா சிவராத்திரி கெருகம்பாக்கம் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில்.

இன்று மாலை மகா சிவராத்திரிக்கு கெருகம்பாக்கம் திருநீலகண்டேஸ்வரர் மற்றும் ஆதி காமாட்சி திருக்கோயில் சென்று   தரிசனம் செய்து வந்தோம்.

நேற்று யோக ஆஞ்சனேயர் கோயில் வாசலில் யாரோ ஒரு பக்தர் சிவ சிவ எழுத சொல்லி இரண்டு தாள்கள் தந்தார்,
இது வரை ராம ராம ,ஸ்ரீ ராமஜயம் மட்டும் எழுதியுள்ளேன்,சிவசிவ எழுதுவது இதுவே முதல் முறை,  அதில் இரண்டு தாள்கள் back to back சிவ சிவ என் மனைவிக்கும் சேர்த்து இன்று காலை எழுதிவிட்டு மாலை கோயில்  சென்றோம்.,

முதலில் யோக ஆஞ்சனேயர் கோயில் சென்று விட்டே சிவன் கோயில் சென்றோம், மாலை கோயிலில் அத்தனை பக்தர் கூட்டம், ஆதிகாமாட்சி சந்நிதி எதிரே நாங்கள் இரண்டு பேர் நிற்க மட்டும் இடம் இருக்க சரியாக திரை விலகியது, அம்முகிற கூட்டத்தில் அத்தனை எளிதான திவ்ய தரிசனம் எங்களால் நம்பவே முடிவில்லை,சுவாமி தரிசனம் செய்து கோயில் வலம் வந்து பிரசாதம் வினியோகிக்க வாங்கி சாப்பிட்டோம், திவ்யமாக இருந்தது, இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துகள்.

1937 ஆம் ஆண்டு மற்றும் சமகால திருச்சி மலைக்கோட்டை தாயமானவர் சுவாமி கோயில் படிமண்டபம்

முதல் படத்தில் 1937 ஆம் ஆண்டின் திருச்சி தாயுமானவசுவாமி படி மண்டபம் பாருங்கள் ,யானை கட்டி இருப்பர்,வாழைதார் வேண்டுதலுக்கு இங்கே பழம் விற்கும் சமகால படங்கள் பாருங்கள்.

2019 ஆம் ஆண்டின் குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் திருக்கோயில்

2019 ஆம் ஆண்டின் குன்றத்தூர் கந்தழீஸ்வரர் திருக்கோயில் ,சேக்கிழார் கட்டியது

2019 ஆம் ஆண்டு குன்றத்தூர் கோயில்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (250) ஆஸ்கர் (201) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)