தி பல்லாட் ஆஃப் த பஸ்டர் ஸ்க்ரக்ஸ் The Ballad of Buster Scruggs.
ஹெய்ல் ஸீஸர் பிடித்த காட்சி2
https://youtu.be/gRT-KZwOLLQ
இது ஹெய்ல் ஸீஸர் படத்தில் வரும் மிக அருமையான காட்சி, ஸ்டுடியோ அதுவரை தங்கள் கவ்பாய் படத்தில் நடித்து வந்த ஹோபி டோய்ல் (Alden Ehrenreich) என்ற நடிகரின் ஆக்ஷன் நடிகர் இமேஜை ஒரே இரவில் மாற்றி அவரை பால் நியூமேன் போல மெத்தட் ஆக்டிங் வல்லுனராக மாற்ற தீர்மானிக்கிறது.
அவரை ஸ்டுடியோ தயாரிக்கும் மற்றொரு காதல் தோல்வி அடைந்தவன் கதையில் பிரதான நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்கிறது.
இதன் இயக்குனர் லோரென்ஸ் நம்முடைய மனம் கவர்ந்த ரால்ப் ஃபியான்ஸ், இதில் ரோமன் பொலன்ஸ்கி போன்ற ஒரு அமெரிக்காவில் படம் இயக்கும் ஜரோப்பிய இயக்குனர், இவர் தலையில் இந்த கவ் பாய் நடிகர் ஹோபி டோய்ல் கட்டப்பட அவருக்கு வசன உச்சரிப்பை சொல்லித் தரும் இந்த காட்சி அபாரமானது, எத்தனை அழகாக படமாக்கப்பட்ட காட்சி இது?!!!
Would that it were so simple?
என்ற இவ்வசனமே கோயன் சகோக்களின் இப்படத்துக்கு டாக்லைனாக இருந்திருக்க வேண்டும்,தங்கள் ஒவ்வொரு படத்திலும் ஒரு சிக்னேச்சரான வசனத்தை வைப்பார்கள் , இதில் வுட் தட் இட்வேர் ஸோ ஸிம்புள்? என்ற டங் ட்விஸ்டர்.
கடைசியாக பொறுமை இழந்த இயக்குனர் லோரென்ஸ்,வசனத்தை that was complicated என்று மாற்றி ஹோபியை பேச வைத்து, தன்னை சமாதானம் செய்து படமாக்கியவர் ஸ்டுடியோவை திருப்தி செய்வார்.
ஹெய்ல் ஸீஸர் பிடித்த காட்சி1
https://youtu.be/qJzZK5eMrfo
கோயன் சகோதரர்களின் ஹெய்ல் ஸீஸர் படம் ஹாலிவுட்டின் ஸ்டுடியோக்களை துணிவுடன் விமர்சனம் செய்யும் படைப்பு,
இது 1959 ஆம் ஆண்டு நடக்கும் கதைக்களம், இதன் முன்பே ஸ்டுடியோக்களை சித்தரித்து ஹாலிவுட்டில் படங்கள் நிறைய வந்திருந்தாலும் இது போல ஸ்டுடியோக்களின் முகத்திரையை கிழித்து விமர்சனம் செய்ததில்லை.
கோயன் சகோதரர்களின் முந்தைய படைப்பான பார்ட்டன் ஃபிங்க் படத்தில் ஸ்டுடியோக்கள் தமக்கு திரைக்கதை உருவாக்கும் வழமையான போக்கை வெகுவாக கிண்டல் அடித்திருப்பார்கள்.
இதில் ஸ்டுடியோ சம்மந்தப்படிருக்கும் ஒவ்வொரு துறையையும் கிண்டல் செய்து விமர்சித்துள்ளனர்.
இதில் ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான ஸ்டுடியோவின் ஃபிக்ஸர் கதாபாத்திரத்தில் ஜோஷ் ப்ரோலின் நடித்திருக்கிறார்,
இவர் கோயன் சகோக்களின் ஆஸ்தான கம்பெனி நடிகர் போன்றவர், இதன் முன்பு நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென் , மற்றும் ட்ரூ க்ரிட் படங்களில் வந்தவர்,
கார்ஜ் க்ளூனி இப்படத்தில் ஸ்டியோவின் ஆஸ்தான வளர்ந்த கம்பெனி நடிகர்,இவர் தற்போதைக்கு ஸ்டுடியோவின் பந்தயக் குதிரை போன்றவர். ஸடு்டியோ தற்போது இவரை வைத்து ஹெய்ல் ஸீஸர் என்ற சரித்திரப் படத்தைத் தயாரிக்கிறது, ஸ்டுடியோ பிடித்த பிடிக்கெல்லாம் உருமாறும் களிமண் போல தன்னை அற்பணித்திருக்கிறார் க்ளூனி.
அன்று கார்ஜ் க்ளூனி படப்பிடிப்பில் மன்னன் ஸீஸராக நடித்துக் கொண்டிருக்கையில் , அவர் அருந்தும் டம்மி ஒயினில் , படப்பிடிப்பில் நடிக்கும் எக்ஸ்ட்ராக்கள் இருவரால் மயக்க மருந்து கலக்கப்படுகிறது,
அதை வசனம் பேசிய படி முழுவீச்சில் அருந்திய க்ளூனிக்கு மயக்கம் வருகிறது, அவர் பேச வேண்டிய வசனமும் ஸ்டுடியோ நிர்வாகத்தால் மாற்றப் பட, அவர் வசனத்தை உரு போட்டபடி வெளியேறி கழிவறை சென்று திரும்புகையில், எக்ஸ்ட்ராக்கள் இருவரால் கடத்தப்படுகிறார்,
அந்த எக்ஸ்ட்ராக்களுக்கு கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பிருக்கிறது, அவர்களின் சித்தாந்தத்தால் பீடிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் கம்யூனிஸம் வேரூன்ற வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த கடத்தலுக்கு உதவுகின்றனர்,
க்ளூனி ஸ்டுடியோவுக்கு திரும்ப வேண்டும் என்றால் 100000 டாலர் பிணையாகக் கேட்கின்றனர், அவரை மாலிபு என்ற இடத்தில் கடற்கரை சொகுசு மாளிகை ஒன்றில் கொண்டு சேர்க்கின்றனர்,
அங்கே கண்விழிக்கும் க்ளூனி, அங்கே நடக்கும் ரகசிய கம்யூனிஸ்ட் அனுதாபிகளின் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொள்கிறார்,
அந்தக் குழுவில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு சொற்ப வருமானத்துக்கு வேலை செய்யும் சிறந்த கதாசிரியர்கள், துணை நடிகர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்கள் திரண்டிருப்பதைப் பார்க்கிறார்,
ஸ்டியோக்கள் அவர்களை உபயோகித்து பல மில்லியன் டாலர்கள் ஈட்டியதையும், தன்னையும் சுரண்டிக் கொண்டிருப்பதையும் மெல்ல அறிகிறார், அவர்களுள் ஒருவராக மாற எத்தனிக்கிறார்.கடத்தலுக்கு ஒத்துழைத்து உடன் படுகிறார்.
ஒரு வழியாக ஸ்டுடியோவின் சக வீர தீர நடிகர் ஒருவர் துப்பறிந்து க்ளூனியை மீட்டு வருகிறார், ( வழமையான கோயன் படங்களின் கோட்பாடின் படி ஸ்டுடியோவால் தரப்பட்ட பிணைப்பணமான 100000 டாலர்கள் கொண்ட பெட்டி யாருக்கும் பயனின்றி கடலுக்குள் போய்விடும்)
ஸ்டியோவுக்குள் வந்து ஃபிக்ஸர் ஜோஷ் ப்ரோலின் மேசையின் மீது கால் வைத்த படி கம்யூனிச சித்தாந்தங்களை வியந்த படி பேசுகிறார் க்ளூனி, அக்காட்சியில் தன் ஸ்டுடியோ முதலாளியும் ஸ்டுடியோவும் இவரால் சீண்டப்பட்டு காயப்பட்டதில் வெகுண்டு எழுந்த ஜோஷ் ப்ரோலின் கார்ஜ் க்ளூனி என்ற மக்கள் மனதில் பிரம்மாண்டமாக பதிந்த ஒரு நட்சத்திர நடிகரை ஆறு முறை அழுத்தமாக அறைவதைப் பாருங்கள் ,
அதுவும் டைட் க்ளோஸப்பில் படமாக்கப்பட்ட காட்சி இடையே அவருக்கு க்ளூனியை முழு வீச்சில் எச்சரித்து இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் வசனங்களும் உண்டு, க்ளூனி கௌரவவே பார்க்காமல் ஏற்ற பாத்திரமாக மாறும் மகா நடிகர் என்பதற்கான மற்றொரு சான்று,
இது கோயன் சகோக்களுடனான இவரின் நான்காம் படம்,இவருக்கு கோயன்கள் வழங்குவது எல்லாமே ஒரு மாதிரி மறை கழன்ற, அல்லது விட்டேர்த்தியான மைய நாயகன், அல்லது துணை கதாபாத்திரங்களே.(ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ?, இன்டாலரபிள் க்ரூயல்டி, பர்ன் ஆஃப்டர் ரீடிங்)
ஜோஷ் ப்ரோலினுக்கு இதில் ஸ்டுடியோவின் பிரதான ஃபிக்ஸர் வேடம், அதை திறம்பட செய்திருக்கிறார், நம் சென்னை ஸ்டுடியோக்களிலும் இவர் போல எத்தனை ஃபிக்ஸர்கள் இருந்திருக்க வேண்டும்,ஸ்டுடியோக்கள் கோலோச்சிய காலத்தில் எத்தனை நடிகர் , நடிகைகளை , பிற வல்லுனர்களை ஆட்டுவித்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
கோயன் சகோக்களின் ரசிகர்கள் தவறவிடக் கூடாத படம்,
இன்சைட் லூவின் டேவிஸ் [Inside Llewyn Davis] [2013] [அமெரிக்கா]
கோயன் சகோதரர்கள் க்ளிஷேவிலேயே ஊறியவர்கள்,திளைப்பவர்கள், ஆனால் அவர்களுடைய கிளிஷேக்கள் ரசிக மனம் கவர்பவை,இதில் லூவின் [Llewelyn ]என்னும் பெயரே நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென் படத்தில் ஜோஷ் ப்ரோலின் செய்த லூவின் மாஸ் [Llewelyn Moss] என்னும் பெயரிலிருந்து பிறந்தது தான்.
படத்தில் லூவீனின் கையில் இருக்கும் ஜிஞ்சர் வகைப் பூனையின் பெயர் Ulysses, இது ஒரு ஆண் பூனை, நம் நாயகன் லூவின் எந்த இலக்குமில்லா இசைப் பாடகன்,வாழாமலே கெட்டவன் என்னும் பதம் சரியாக இருக்கும், காற்றைக் குடித்து, எதிர்ப்படுவோரிடம் சிகரட் கடன் வாங்கி குடித்து, வருமானத்துக்காக காஸ்லைட் என்னும் பப்பில் எப்போதாவது கிடைக்கும் சோலோ பெர்ஃபார்மர் வாய்ப்பில் கிடார் இசைத்து நாட்டார் பாடல்கள் பாடி,கிடைக்கும் சொற்ப காசில் வயிற்றைக் கழுவி,வாங்கிய கடன்களை அடைக்கிறான்.இது தான் லூவினின் பயோடேட்டா.
இவன் சந்திக்கும் நபர் ஆணோ பெண்ணோ,கேட்கும் முதல் கேள்வியே?உன் வீடு எங்கே?வீட்டில் கவுச் [சோஃபா] [couch] உள்ளதா? அன்று இரவு அங்கே தான் தூங்குவான்,கவுச்சில் யாரேனும் வழக்கமாகத் தூங்குவதாக இருந்தாலும் கவலையில்லை, இவனுக்குத் தூங்க தரை போதும், வாழ்வில் திருப்புமுனையே இன்றி தத்தளிக்கிறான்,
தன் நண்பனும் இசையில் பார்ட்னருமான மைக் இவனைப் போன்றே அதிர்ஷ்டமின்மையாலும் வாழ்வின் விரக்தியினாலும்,அடுத்தடுத்த தோல்விகளாலும் உழன்றவன் ப்ரூக்ளின் ப்ரிட்ஜிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான், இவனின் சென்ற வருடம் வெளியான ஆல்பமான Inside Llewyn Davis எல்பி இசைத்தட்டுகள் கூட சரியாக விற்கவில்லை,
அதை வெளியிட்ட ரெகார்டிங் கம்பெனி கிழவர் தன் நஷ்டத்திலும் கூட இவன் செலவுக்கு சொற்ப பணம் தந்து உதவி வருகிறார்.ஒரு கட்டத்தில் வாழ இடமில்லாதவனுக்கு ஒரு பெட்டி நிறைய இவனுடைய எல்பி ரெகார்டு ஆல்பங்கள் இவனிடமே திரும்பத் தரப்படுகின்றன,வைக்க இடமின்றி ஒண்ட இடம் கொடுத்த நண்பனின் வீட்டில் கிடைத்த இடத்தில் அவற்றை கொண்டு அடைக்கும் படியான வறுமை.ஆனால் அவை எல்லாமே டார்க்ஹ்யூமர் நகைச்சுவை தொனிக்க சொல்லப்பட்டிருக்கிறது, சாதாரண வெகுஜன சினிமாவில் காணமுடியாத டார்க்ஹ்யூமர்கள் அவை.
மொத்தத்தில் லூவின் டேவீஸ் உப்பு விற்கப் போனால் மழை பெய்து,மாவு விற்கப்போனால் காற்றடித்தும் தொலைகிறது,அத்தனை தரித்திரம். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நாம் லூவின் டேவீஸின் ஃபோக் பாடலான Hang Me, Oh Hang Me என்னும் மனமயக்கும் நம்பருடன் துவங்குகிறது, அடுத்த காட்சியிலேயே லூவின் நேற்று அதே பப்பில் வம்பு செய்த பெண்மணியின் கிழட்டுக்கணவனால் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறான்,இவனால் எதிர்தாக்குதல் செய்யவோ தன்னிலை விளக்கம் அளிக்கவோ கூட தெம்பில்லை,
இதன் மூலம் ஏனென்று கேட்க நாதியற்ற அவன் நிலையை ,ஒரே காட்சியினூடாக நாம் விளங்கிக்கொள்கிறோம், இப்போது காலையில் அவன் ப்ரொஃபசர் வீட்டில் கண்விழிக்கிறான், விடியலிலேயே வேலைக்குச் சென்றுவிட்ட அவருக்கு ஒரு நன்றிக்குறிப்பு எழுதிவைத்து அகல்கையில் அவரின் வளர்ப்புப் பூனை இவனுடனே கதவிடுக்கில் வெளியேறுகிறது,அதை தாவிப் பிடித்து விட்டாலும் திரும்ப உள்ளே அனுப்பமுடியாதபடிக்கு கதவு அடைத்துக்கொள்கிறது,
வேறு வழியின்றி தன்னுடனே அப்பூனையை அழைத்துச் செல்லும் லூவினின் பின்னால் நாமும் அலைகிறோம், அவனின் ஒருவார காலத்தை நாமும் உடனிருந்து வாழுகிறோம். ஒரு படம் என்பது அது கொண்டிருக்கும் காட்சிகளால் ஒரு பார்வையாளனை எப்படி வசீகரித்து கட்டிப்போடவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு .
கோயன் சகோதரர்கள் படத்தில் படுக்கையறைக்காட்சிகள் பெரும்பாலும் இராது, இருந்தாலுமே அது கதையின் போக்கினூடே வந்து செல்லும், எந்த இடைச்சொருகலோ ஆபாசமோ இன்றியிருக்கும்,ஆனால் அக்காட்சிகளில் டார்க்ஹ்யூமர் தலைவிரித்தாடும்,அதற்கு குறைவே இருக்காது, இதற்கு உதாரணமாக ஃபார்கோ படத்தில் வரும் இரட்டைக் கொலைகாரர்கள் ஒரு மோட்டலின் ஒரே அறையில் வைத்து இரு விலைமாதருடன் உடலுறவு கொள்ளும் காட்சியையும், பர்ன் அஃப்டர் ரீடிங் படத்தில் கார்க் க்ளூனி தன்னுடைய பேஸ்மென்ட் லேத் பட்டறையில் வைத்து உருவாக்கும் டில்டோ ராக்கிங் நாற்காலியும் ஒரு உதாரணம்,
இன்டாலரபிள் க்ரூயல்டி படத்தில் வரும் கள்ளக்காதலும்,த மேன் ஹூ வாஸ் நாட் தேர் படத்தில் வரும் வயது முதிர்ந்தவன் மற்றும் சிறுபெண் இடையே ஆன உறவையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம்,இப்படத்தில் படுக்கையறைக் காட்சிகள் எதுவுமே காட்சிகளாக வராமல் வார்த்தைகளாக வருகின்றன, நம் நாயகன் லூவின் கிடைக்கும் இடத்தில் தூங்கி,கிடைக்கும் மங்கையரைப் புணர்பவன், அது அவனுடன் பப்பில் உடன் கிடார் வாசிக்கும் அல்லது பார்வையாளராய் இருந்து இசை கேட்கும் யாராயினும் இருக்கலாம்,
லூவினின் முன்னாள் காதலியும்,இன்னாள் நண்பனின் மனைவியுமான ஜீன் கருத்தரித்திருக்கிறாள். அந்தக் கருவுக்கு காரணம் தன் கணவன் ஜிம்மா அல்லது ,சென்ற மாதத்தில் இவளது வீட்டில் அடைக்கலம் கேட்டுத் தங்கிய லூவனா?எனக் குழம்புகிறாள்,
அது,லூவினுடையதாக இருக்கும் பட்சத்தில் அதைக்கலைக்க எண்ணுகிறாள்,ஜிம்முடையது என்னும் பட்சத்தில் அதை பெற்றெடுக்க எண்ணுகிறாள், ஆனால் அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியாததால் அதை கலைக்க எண்ணுகிறாள், தன் இழிநிலையால் லூவினை கண்டபடிக்கு ஏசியவள்,கருவைக் கலைக்க அவனிடமே பணம் கேட்கிறாள்,
இனி யாரை நீ புணர்ந்தாலும் இரட்டை ஆணுறை போட்டு புணரவும் என அறிவுறை சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றுகிறாள்,லூவினால் ஒன்றும் பேச முடிவதில்லை, வாழ்வில் தொட்ட எதுவுமே துலங்காத தனக்கு காதலும் ,குடும்பமும் ஒரு கேடா ? என்று ஜீனை ,தன் நண்பன் ஜிம்மிற்கு [ஜஸ்டின் டிம்பர்லேக்] விட்டுக் கொடுத்தும் விட்டான், அவ்வப்பொழுது இவனது அன்பை ஜீனின் மீது பொழிந்தாலும்,அவள் இவனை கண்டமேனிக்கு ஏசுகிறாள், அவனை லூசர் என்கிறாள். அருவருக்கிறாள், இருந்தும் இவளது வீட்டில் தான் லூவின் அடிக்கடி சென்று அடைக்கலம் கேடுத் தங்குகிறான்,அவளது வீட்டில் தான் இவனது கிடாரும்,இன்னபிற வஸ்துக்களையும் வைத்திருக்கிறான்.
அன்று அப்படித்தான் தான் முந்தையநாள் சென்று தங்கிய ப்ரொஃபஸர் வீட்டுப் பூனையை தன்னுடனே கொண்டு வந்தவன் அதை யார் பராமரிப்பில் எங்கே விடுவது எனத் தெரியாமல் இங்கே கூட்டி வந்து விடுகிறான், இவன் தங்குவதற்கே சலித்துக்கொள்ளும் ஜீன், இவன் கொண்டுவந்த பூனையை சேர்ப்பதாயில்லை,
அந்த வீட்டின் சூழல் அந்த ஜிஞ்சர் ரக பூனையான Ulysses ற்கு பிடிப்பதில்லை,அங்கே லூவின் ஜன்னல் கதவைத் திறந்தது தான் தாமதம் ,வெளியே குதித்து ஓடிவிடுகிறது பூனை.அது அடங்க மறுக்கும் ஒரு பூனையாகும்,லூவின் ப்ரொஃபசர் வீட்டுக்குள் இருந்து வெளியேறியவன் அந்தப் பூனையுடன் பத்திரமாக நடைபோட்டு மெட்ரோ ரயிலில் ஏறி ஜீனின் வீடு வருவதற்குள் பாடாய்படுத்திவிட்டது,
இப்போது எங்கோ ஓடி ஒளிந்தும் விட்டது,தெருவில் சென்று தேடுகிறான் லூவின் , பூனை அகப்படவில்லை, ப்ரொஃபசரின் கல்லூரிக்கு போன் செய்தவன் அவர் அங்கே பாடம் எடுத்துக்கொண்டிருக்க அங்கே ரிசப்ஷனில் நான் லூவின் ப்ரொஃபஸரின் பூனையை வைத்திருக்கிறேன், பூனையைத் தேடவேண்டாம் என அவரிடம் சொல்லுமாறு கேட்கிறான்,எப்படியும் பூனையை தேடிக் கண்டு விடுவோம் என நம்பி பொய் உரைக்கிறான்.
ஆனால் பூனை கிடைக்கவில்லை,மீண்டும் ப்ரொஃபஸருக்கு போன் செய்து பொய் உரைக்கிறான்,இப்போது ஜீனின் கணவன் ஜிம் எழுதி இசையமைத்த ஒரு பாடலை கொலம்பியா தியேட்டரில் சென்று கிடார் இசைத்துப் பாடி,ரெகார்ட் செய்கிறான் லூவின்,இப்படி அடிக்கடி தனக்கு வாய்ப்பு பிடித்துத் தரும் ஜிம்முக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் வந்து போனாலும்,யதார்த்த நிலை நினைவுக்கு வர அதைப் புறந்தள்ளுகிறான், அந்தப் பாடல் பதிவின் முடிவில் கிடைத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து ஜீனை ஒரு காஃபிஷாப்பில் வைத்து ரகசியமாக சந்திக்கிறான்.
அவள் விட்டகுறை தொட்டகுறையாக மீண்டும் லூவினை ஏசத் துவங்குகிறாள், பல பெண்களை புணர்ந்து கர்ப்பமாக்கிய பாவத்துக்கு நல்ல கதிக்கே போகமாட்டாய் என மண்ணைவாரித் தான் அவள் தூற்றவில்லை, அவனை அடித்தால் கூட அப்படி காயப்பட்டிருக்கமாட்டான் லூவின்.அப்போது காஃபிஷாப்பின் வெளியே வைத்து அந்தப் பூனை ஓடுவதைப் பார்த்து பகீரதப்பிரயத்தனப்பட்டு ஓடி அதைப் பிடிக்கிறான்.
பூனைக்கு பால் வார்க்கிறான்.அன்றே ஜீனை மருத்துவரிடம் கூட்டிச் சென்று காட்டியவன், தனிமையில் அவருக்கு தான் ஊருக்குச் செல்வதால் முன்பே முழுப்பணம் தர எத்தனிக்க,அவர் வாங்க மறுக்கிறார்,இவன் குழம்பியவன் இதற்கும் ப்ரோபோனோ [இலவச சேவை] செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா? எனக் கேட்க,
தலையாட்டி மறுத்தவர், நீ போனமுறை ஒரு பெண்ணைக் கூட்டி வந்தாயே? அவளுக்கு பணம் தந்தாய் அல்லவா?அவள் கருக்கலைப்பு செய்யும் முடிவை கைவிட்டு,ஆர்தர் என்னும் அவளது ஊருக்கேச் சென்று குழந்தையை பெற்றுக்கொண்டாள்,
அந்தப் பணத்தை திரும்பத் தர தேடினால் உன் விலாசம் என்னிடம் இல்லை, இரண்டு வருடம் ஓடிவிட்டது,நீ எப்படியும் இங்கே வருவாய் அப்போது கழித்துக்கொள்ளலாம் என எண்ணினேன்,அதனால் இம்முறை அந்த தொகையை இதற்கு கழித்துக்கொள்கிறேன் ,வரும் சனிக்கிழமை ஜீனுக்கு கருக்கலைப்பு என்கிறார்.
லூவினுக்கு 2வருடம்முன்னர் தான் தந்தையாகியதற்கு கொண்டாடுவதா? எத்தனையோ செலவு இருக்க இப்படி என்றோ புணர்ந்ததற்கு 200 டாலர் தண்டம் அழ நேர்ந்து, அது ரத்தானதை நினைத்து மகிழ்வதா?அல்லது,தன் முன்னாள் காதலி தன்னிடம் குழந்தை பெறப்போவதையும் பெற்றதையும் சொல்லிக்கொள்ளாமலே தன் ஊரில் சென்று புள்ளியாய் மறைந்ததை எண்ணி துக்கிப்பதா?என விளங்காத கையறுநிலை.
அன்று மாலையே பூனையைத் தூக்கிக் கொண்டு ப்ரொஃபசர் வீட்டு மணியை அடிக்க,அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். பூனையை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டவர்,அங்கே குழுமியிருக்கும் நண்பர்களை லூவினுக்கு அறிமுகப்படுத்துகிறார்,
தன் மனைவி அருமையான சமையல் ரெசிபி ஒன்றை தயாரிப்பதாகவும்,இவனும் இங்கே சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டவர்.இவனைப் பாடச்சொல்லி கேட்கிறார், இவன் தயங்க, இவனை அங்கே இருப்பவர்களும் பாடச்சொல்லிக் கேட்க ,இவன் கிடார் இல்லை எனச் சொல்லுவான் எனத் தெரிந்த ப்ரொஃபசர் தன்னுடைய சில்வர் டோன் ப்ராண்ட் கிட்டாரை,நீ வாசிப்பாய்தானே?என்று கேட்டுவிட்டு,கொண்டுவந்து வாசிக்கத் தருகிறார்,
இவன் சுரத்தே இன்றி "Fare Thee Well" என்னும் ஒரு பாடலை கிடார் வாசித்துத் துவங்க,அது பார்ட்னருடன் ,அதாவது இருவர் பாடவேண்டிய பாடல், 2 வரிப்பாடுகையிலேயே அவனுடன் அப்பாடலை இணைந்து பாடிய நண்பன் மைக்கின் நினைவு வந்து விடுகிறது,
ப்ரொஃபஸரின் மனைவி,ஒரு ஆர்வக்கோளாறு பிடித்தவர்,மைக் பாட வேண்டிய பகுதியை நான் பாடுகிறேன் என தாளமிட்டுப் பாட ஆரம்பிக்க, இவனுக்கு சட்டென்று கோபம் தலைக்கேறுகிறது, குய்யோ முறையோ என கத்துகிறான்,
தன் கோட்டை விருட்டென அணிந்தவன் கிளம்ப எத்தனிக்கிறான்,நான் க்ளப்பில் பாடுபவன் தான்,அது எனக்கு பிழைப்பு,அதை வைத்துத் தான் என் தேவையை பூர்த்தி செய்கிறேன்,என தத்துபித்து அங்கே உளறுகிறான்,ப்ரொஃபசரின் மனைவி இதை எதிர்பாராதவர் ஓ என அழத்துவங்குகிறார்,
கோபமிகுதியாலும் அவமானத்தாலும் உள்ளே சென்றவர், மேலும் வீறிடுகிறார், அந்த வரவேற்பறையே நடு நடுங்குகிறது,வேகமாக வெளியே வந்தவர் ,இது என்ன? என்று பூனையைக் காட்டி லூவினை நோக்கிக் கேட்க,அவன் உங்கள் பூனை என்கிறான்,அவர் இல்லவே இல்லை,
இது என் பூனை கிடையாது,அவ்வளவு ஏன் இது ஆண் பூனை கூட கிடையாது,ஆண்பூனை தான் என்றால் இதன் விதைப்பை எங்கே? என்று கேட்டு திகைக்கிறாள்,எல்லோரையும் திகைக்க வைக்கிறாள்,பூனையை லூவினிடமே பலவந்தமாகத் திணிக்கிறாள்,
இப்போது கொட்டும் மழையில் தன் வாய்க்கொழுப்பினால் வாங்கிக்கட்டிக்கொண்டதை எண்ணி நொந்தபடி, தன் கேஸ்லைட் பப்பின் வாசலில் காரில் சிகாகோவுக்கு பயணிக்கும் இரண்டு இசைக்குழு சகாக்களைப் பார்க்கிறான்,பூனையை தெருவில் அநாதையாக விடவும் மனமில்லை, சிகாகோவில் இருக்கும் ஒரு ஆர்கெஸ்ட்ரா தியேட்டரின் பப்பில் சென்று சோலோ பெர்ஃபார்மர் வாய்ப்பு கேட்க நாளை கிளம்ப இருந்தவன்,அந்த சகாக்கள் எங்கே செல்கின்றனர் எனக்கேட்க, அவர்களும் சிகாகோ போவதை அறிந்தவன் அவர்களுடன் இன்றே பயணிக்கிறான்.
இனி என்ன ஆகும்?
திரைப்படத்தில் பாருங்கள் நண்பர்களே,படம் ஆரம்பம் முதல் முடிவு வரை அதகளம் தான்,இரு சிங்கங்கள் சுமார் இரு வருடம் கழித்து களமிறங்கி அடித்து விளையாடிய படம், இப்படத்துக்கு கொடுக்காத விருது விருதே அல்ல, இப்படத்தினால் தான் விருதுக்கு பெருமையே தவிர, ஆஸ்கர் என்னும் விருதின் அளவுகோல் கொண்டு இப்படத்தை அளக்கலாகாது,எனக்கு படத்தை முழுதும் எழுத ஆசை தான்,ஆனால் நீங்களும் படத்தை அனுபவிக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தினால் இங்கேயே நிறுத்தி விடுகிறேன்.படம் இப்புள்ளியில் ஒரு சிறப்பான ரோட் மூவியாக பரிமாணம் பெறுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.
படம் தரவிறக்க சுட்டி:-
http://torrentz.eu/4ced61e54e0eebce3f7a37c0ddf6a912095a02c7
http://www.nonesuch.com/albums/inside-llewyn-davis
ப்ளட் சிம்புள்[1984][18+] BLOOD SIMPLE
கோயன் பிரதர்ஸ் பரீட்சார்த்தமான பல முயற்சிகளுக்கு பெயர் போனவர்கள், இவர்களின் உலகம் தனி உலகம்,எக்காரணம் கொண்டும் இவர்கள் கமர்ஷியல் சினிமாவுக்காக தங்களை சமாதானம் செய்து கொண்டதில்லை.அப்படி ஒரு முதல் பரீட்சார்த்தமான முயற்சி தான் ப்ளட் சிம்பிள்.ப்ளட் சிம்பிள் 1984ஆம் ஆண்டு கோயன் பிரதர்ஸ் கதை, திரைக்கதை தயாரிப்பு ,இயக்கத்தில் வந்த நியோ நாய்ர் த்ரில்லர் வகைப்படம், இது அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டியூட்டின் ஆகச்சிறந்த 100 த்ரில்லர் படங்களில் 98 ஆம் இடத்தில் உள்ளது. மேலும் கோயன் சகோதரர்களின் முதல் படம், இயக்குனர் பார்ரி சோனன் ஃபீல்டுக்கும் ஒளிப்பதிவாளராக முதல் படம், அவர் பின்னாளில் இயக்கிய மென் இன் ப்ளாக், வைல்ட் வைட் வெஸ்ட் போன்றவை பற்றி நீங்கள் அறிவீர்கள். கார்ட்டர் பர்வெல்லின் மிரட்டல் இசை சொல்லவே வேண்டாம். கோயன் பிரதஸுடன் இணைந்து இவர் 13 படங்கள் செய்துள்ளாராம்.
எப்போதும் முதல் படத்தை கொடுக்கும் இயக்குனர்கள் தங்கள் முழுத்திறமையையும் கொட்டி படமாக்குவர். அது சில சமயம் எடுபடும், பலசமயம் எடுபடாது,அப்படி அதிகம் பேர் பெரிய திரையில் கண்டுகொள்ளாத அரிய படம், இதுவும் டிவிடியில் எண்ணிலடங்கா திரை ரசிகர்கள் கண்டுகளித்த ஒரு படைப்பே, இதில் பயன்படுத்திய பல காமிரா யுத்திகள் நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்னுக்கு சற்றும் குறைந்ததல்ல, நறுக்கு தெரிக்கும் வசனங்கள், மிரட்டும் ,படபடப்பு கூட்டும் காட்சியமைப்புகள், மெதுவாய் நகர்ந்தாலும் எதிர்பார்ப்பை தூண்டும் திருப்பங்கள், என ஒரு பெர்ஃபெக்ட் த்ரில்லர் எனலாம்.கோயன் பிரதர்ஸ் எப்போதும் இயக்குனர் ஸ்டான்லி க்யூப்ரிக்கின் படைப்புகளை சிலாகிப்பார்கள், இவர்களது படைப்புகளிலும் அவை நடிகர்களின் ஐ லெவல் க்ளோசப் ஷாட் காட்சிகளாக வெளிப்பட்டிருக்கும். இப்படத்திலும் வாஷ்பேசின் குழாயிலிருந்து நீர்த்துளி விழுவதைக் கூட வித்தியாசமாய் எடுத்திருப்பார்கள். இவர்களின் படத்தை கவனித்து பார்த்தால் 10 பதிவு எழுத மேட்டர் இருக்கும். எப்போதும் ஒவ்வொரு விஷயத்தையும் டீட்டெய்லாக சிந்திப்பவர்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் இப்படம்.
============000============
பெரும்பாலும் கோயன் பிரதர்ஸின் படங்கள் ஒரு வித அங்கலாய்பான நேரேஷனுடன் துவங்கும்.அப்படி இப்படத்தில் லாரன் விஸ்ஸர் என்னும் ப்ரைவேட் டிடெக்டிவ் பேசும் முதல் வசனம்.
The world is full of complainers. But the fact is, nothing comes with a guarantee. I don't care if you're the Pope of Rome, President of the United States, or even Man of the Year--something can always go wrong. And go ahead, complain, tell your problems to your neighbor, ask for help--watch him fly. Now in Russia, they got it mapped out so that everyone pulls for everyone else-- that's the theory, anyway. But what I know about is Texas...And down here... you're on your own.......============000============
படத்தின் கதை:-
எதனால் கணவனை வெறுக்கிறாய் என அப்பி யிடம் இவன் கேட்டதற்கு, அவன் ஒரு குதப்புணர்ச்சி விரும்பி, நான் ஒரு முறை நீ ஏன் இப்படி ஆனாய் ? என கேட்டதற்கு , என்னை மனநல மருத்துவரிடம் கூட்டிப் போனான், மருத்துவர் எனக்கு ஒன்றுமில்லை என சொன்னதற்கு மருத்துவனை மாற்றிவிட்டான். என்கிறாள். ரே ஹுஹூம் என்று இதை அலட்சியமாக கேட்கிறான்.இப்போது அப்பிக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்பட, முன்பு கணவன் மார்ட்டி தனக்கு பரிசளித்த இத்தாலியன் லேடீஸ் பிஸ்டலை மார்ட்டியின் வீட்டுக்குள் இருவருமாக நுழைந்து எடுத்துக்கொண்டு வருகின்றனர். அப்பி பிஸ்டலை தன் கைப்பையில் வைத்துக்கொள்கிறாள்.
மார்ட்டி துப்பாக்கியை தன் அறையில் தேடியவன் கோபமாகி,இவர்களின் வீட்டுக்குள் விடியலில் நுழைகிறான். அங்கே வந்த அப்பி செல்ல நாயைக் கண்டு அதை கொஞ்ச,பின்னால் இருந்து இவன் இவளை கழுத்தை நெரித்து கொல்ல எத்தனிக்கிறான், சுதாரித்த அப்பி லாவகமாக, மார்ட்டியை விதைக்கொட்டையில் உதைத்தவள், அவன் துடிக்கையிலேயே இவனின் ஆட்காட்டி விரலையும் பலமாக பிடித்து திருப்பி ஒடித்தும் விடுகிறாள், அங்கே துப்பாக்கியோடு வந்த ரே இவனை துரத்த கறுவிக்கொண்டே காரை கிளப்புகிறான் ,மார்ட்டியின் செல்ல அல்சேஷன் நாயும் காருக்குள் லாவகமாக பாய்கிறது.(அருமையான காட்சியது)படுவேகத்தில் காரை விரட்டியவன் எதிர்திசையில் காரை செலுத்த, அது ஒரு முட்டு சந்து, போன வேகத்தில் காரை திருப்பிக்கொண்டு வந்து இருவரையும் மீண்டும் திட்டி விட்டு அகல்கிறான். இப்போது முறிந்த விரலுக்கு ஸ்பெஷல் ஸ்டீல் ப்ரேஸிங் போட்டுக்கொண்டு திரியும் இவனை. எல்லோரும் கேவலமாக பார்க்கின்றனர். ஒரு இளைஞன் இவனைப்பார்த்து Hey mister, how'd you break your pussyfinger? எனக்கேட்கிறான்.அமெரிக்காவில் ஆட்காட்டி விரலை ஒடித்துக் கொண்டால் மகா கேவலம் போலும்.
அவமானத்தாலும்,பொறாமையாலும் துடித்தவன். டிடெக்டிவ் லாரன் விஸ்ஸரை அணுக, அவர் அடடா!!! உன்னால் இன்னும் ஒரு மாதத்துக்கு மலம் கூட துடைக்க முடியாதா? என லொல்லு செய்கிறார். இவன் ஆத்திரத்தின் உச்சத்தில் 10,000 டாலர் தருகிறேன்,அவர்களின் பிணம் கூட கிடைக்க கூடாது, எனக்கு வேலையை முடித்த பின்னர் ஆதாரத்தை காட்டு ,பணத்தை வாங்கு,நடையை கட்டு என்கிறான். அலிபி உருவாக்குவதற்கு ஏதுவாக மீன்பிடிக்க செல்வதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு ஒரு வாரம் ஃபிஷ்ஷிங் கேம்ப் போகிறான். - டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் கள்ளக் காதலர்களை கொன்றாரா?
- இவரிடம் 10,000டாலர் பணம் வாங்கினாரா?
- வாடகை கொலைகாரனை நியமித்துவிட்டு மார்ட்டியால் நிம்மதியாய் இருக்க முடிந்ததா?
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
ஒவ்வொரு காட்சியும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஒரு சோற்று பதமாக இந்த கிளை மாக்ஸ் காட்சியை சொல்லுவேன். அது படமாக்கப்பட்ட விதத்தையும் டார்க் ஹ்யூமரை என்ன அழகாக ஒவ்வொரு காட்சியிலும் இவர்கள் புதைத்து வைக்திருக்கிறார்கள் என்றும் பாருங்கள்.
============000============
============000============
டார்க் ஹ்யூமரின் உச்சம்-ஹட்சக்கர் ப்ராக்ஸி[1994]
தன் கம்பெனி தயாரிப்புகள் அமோக விற்பனையாகின்றன,கம்பெனி பங்குகள் இரண்டு மடங்கு அதிக விலை போகின்றன,இந்த வருடம் கம்பெனியில் நல்ல லாபம் ஈட்டியது. என ஆண்டறிக்கை வாசிக்கப்பட மிகவும் உணர்ச்சி வசப்பட்ட டைரக்டர் தன் சங்கிலி கடிகாரத்துக்கு சாவி கொடுக்கிறார்.க்யூபன் சிகாரை உரிஞ்சுகிறார்.பின்னர் நாற்காலி மீது ஏறி நீண்ட மேசையில் ஓடியவர், கண்ணாடி சன்னலை உடைத்துக்கொண்டு 45ஆம் மாடியில் இருந்து ஆகாயத்தில் கலந்து அனுபவித்து கீழே குதிக்கிறார். இதற்கு 1958 ஆம் ஆண்டின் அசல் நியூயார்க் நகர , ஆர்ட் டெக்கோ,மற்றும் மாடரன் பாணி ஸ்கைலைன் கட்டிடங்களை மாடலாய் வடிவமைத்த கோயன் பிரதர்ஸ் ,பின்னர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அந்த கம்பெனி டைரக்டர் 30 நொடிகள் அந்தரத்தில் பயணித்து மண்ணில் மோதி தலைசிதறுவது போல் வடிவமைத்திருந்தாராம்.(ஒருவர் 45மாடிகள் குதித்து கடக்க 7நொடிகள் எடுக்குமாம்) இது சற்றே நாடகத்தன்மைக்காக நேரம் கூட்டப்பட்டதாம். இது 1975ல் பான் அமெரிக்கன் கட்டிடத்தின் 44ஆம் மாடியில் இருந்து யுனைட்டட் ஃப்ரூட்ஸ் கம்பெனியின் டைரக்டர் குதித்து இறந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட காட்சியாம்.மனிதனுக்கு அதிக சந்தோஷமும் ஆபத்து தான் என்பது தான் எவ்வளவு உண்மை?
அந்த தற்கொலை சம்பவத்துக்கு பின்னர் கம்பெனியின் போர்ட் ஆஃப் டைரக்டர் கிழங்களுக்குள் நடக்கும் விவாதத்தையும் உற்றுநோக்குங்கள். அதில் உச்ச கட்டமாக உயிருக்கு மதிப்பளிக்காத அந்த போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஒருவரான பால் ந்யூமேன் எரிகின்ற க்யூபன் சிகாரை வீணாக்குவது முட்டாள்தனம் என அதை வீணாக்காமல் உரிஞ்சுவதும், கம்பெனியில் மொத்தம் எத்தனை தளங்கள் உள்ளன?என கேட்கப்பட, ஒரு கிழம் 45 எனவும்.இன்னொரு கிழம் இல்லை இல்லை 44 இதில் ஒன்று மெஸ்ஸனைன் ஃப்ளோர் ,அதை கணக்கில் சேர்க்கக்கூடாது என்பதும் சரியான கலக்கல் காட்சிகள்.இப்படத்தில் அப்பாவி பட்டதாரியாய் வரும் டிம் ராபின்ஸ் (ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்) தான் நகைச்சுவையிலும் சூரப்புலி என நிரூபித்த படம்.படம் அனுபவித்து பாருங்கள்.
உங்களுக்காக அந்த வசனங்கள் :-
Board Member 1: He could have opened the window.
Board Member 2: Waring Hudsucker never did anything the easy way.
Board Member 3: (weeping) Why? Why did he do it? Everything was going so well
Sidney J. Mussburger: What am I, a head shriker. Maybe the man was unhappy?
Board Member 3: He didn't look unhappy.
Board Member 4: He didn't look rich.
Board Member 5: Waring Hudsucker was never an easy man to figure out. He built this company with his bare hands, every step he took was a step up, except of course this last one.
Sidney J. Mussburger: Sure, sure he was a swell fella, but when the president, chairman of the board and owner of 87% of the company stock drops 44 floors...
Board Member 6: 45.
Board Member 7: Counting the mezzanine.
இப்படம் மேலே சொன்ன அதிமேதாவித்தனமான நகைச்சுவை காட்சிகளாலேயே எல்லா தரப்பு மக்களையும் சென்று சேராமல் பாக்ஸ் ஆஃபிஸில் சுருண்டதாம். இருந்தும் எண்ணற்ற ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களின் விருப்பதேர்வாக உள்ளது இப்படம்.
=============0000==============
அந்த போர்ட் ரூம் காட்சிக்கான யூட்யூப் காணொளி:-
=============0000==============
நன்றி:-ஐஎம்டிபி,யூட்யூப்,விக்கிபீடியா,கூகிள்
நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் [18+][2007]No Country for Old Men
இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஹாலிவூடின் "பெர்ஃபெக்ஷன்" வகை திரைப்பட பிரம்மாக்கள்.பளாக் ஹுயூமர் ராஜாக்கள்.சகோதர இயக்குனர்கள் கோயன் பிரதர்ஸ், இவர்கள் படைப்புகள் நம்மை யூகிக்க தூண்டுபவை. அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்று நம்மை குழப்புபவை, ஆனால் பிடிப்பவை. என்ன அழகாக செயற்கையாக பின்னணி இசைசேர்ப்பே இல்லாமல், கார்மக் மெக்கார்த்தியின் நாவலை சுவை குறையாமல் படமாக்கியுள்ளனர்? ஷூ ஓசை, வாகன உறுமல், நாய் உறுமல், ரேடியட்டர் சத்தம்,சிலிண்டர் சத்தம் போன்றவை மட்டும் உபயோகித்து இந்த அற்புத படைப்பை தந்து 4 ஆஸ்கரும் வாங்கியிருக்கிறார்கள்? நம்மை கதை செல்லுமிடமெல்லாம் கூட்டி செல்லும் காமிரா கோணங்கள். அருமையான எடிட்டிங். என்று ஒவ்வொரு பிரேம்களையும் பார்த்து பார்த்து செதுக்கிய தரம். எதை சொல்லுவது எதை விடுப்பது?
எண்பதுகளில் மேற்கு டெக்சாஸ் மாகணத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ஷெரீப் டாம் பெல் (டாமி லீ ஜோன்ஸ்) தன் 25 வருட ஷெரிஃப் வேலையில் கண்ட மிக கொடூரமான சம்பவங்களை நமக்கு பகிர்வது போல துவங்குகிறது படம்.தன் தந்தையும் தாத்தாவும் வக்கிலுக்கு படித்துவிட்டு ஷெரிஃபாக இருந்தனர் என்றும் அவர்கள் காலத்தில் இது போல கொலை, கொள்ளை ,அக்கிரமங்கள் அதிகம் இல்லை,அவர்கள் துப்பாக்கி கூட வைத்துக்கொண்ட தில்லை , ஆனால் என் நிலைமை பாருங்கள் சமீபத்தில் 14வயது பெண்ணை கொன்ற இளைஞனை நான் மின்சார நாற்காலிக்கு அனுப்பினேன்.அவனை அப்படி அனுப்பவில்லை என்றால் அவன் மீண்டும் கொலை செய்வான்.இது போல நிறைய சம்பவங்கள்.அப்படி ஒருவன் தான் ஆண்டன் சிகர்.என நிறுத்த.
முன் தினம் இரவு பாரில் நடந்த கொலைக்காக சந்தேகத்தின் பேரில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட ஆண்டன் சிகர் (javier bardem)ஒரே போலீஸ்காரர் கொண்ட போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் தன் மேலதிகாரி டாம் பெல்லுக்கு தொலைபேசுகையில் தன் கை விலங்கால் அவர் கழுத்தை நெறித்து கொன்று பின்னர் தன் பிரதான ஆயுதமான கேட்டில் கன் (அமெரிக்காவில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்துக் கொல்வதற்கு முன்னர் ஒரு தீயணைப்பான் போல உள்ள இதை வைத்து மாட்டை தொட்டு க்ளிக்கினால் மாடு நிலைகுத்தி நின்று பரலோகம் போய்விடும்.பின்னர் அறுக்க ஏதுவாயிருக்கும்) எடுத்துக் கொண்டு போலீஸ் காரை திருடிக் கொண்டு அகல்கிறான்.
நெடுஞ்சாலையில் முன்னே சென்ற காரை போலீஸ் ஹாரன் தந்து நிப்பாட்டி,வயது முதிர்ந்தவரை வெளியில் வருமாறு அன்புடன் பணிக்க,அவர் பயத்துடன் என்னையா?ஆபீசர் என்கிறார்.அவர் வெளியே வந்ததும் இவன் அவரை அன்புடன் நெருங்கி கொஞ்சம் தலையை நிமிருங்கள்,கொஞ்சம் என்று பணிக்க அந்த குழாயை அவர் நெற்றியில் வைத்து அழுத்த பால்ரசு குண்டு வெளியேறி அவருக்கு நெற்றிக்கண் திறக்கிறது.பின்னர் குண்டு சிலிண்டருக்குளேயே திரும்புகிறது.இப்போது அந்த காரில் டல்லாஸ் நோக்கி போகிறான் அந்த வித்தியாச சைக்கோ.வறண்ட பாலைவனம்:மான் வேட்டைக்கு வந்த வெல்டர் மாஸ் ( ஜோஷ் ப்ரோளின்) தன் தொலைநோக்கியில் தூரத்தில் ஒருஉயர்ரக வேட்டை நாய் (பிட் புல்) குண்டடியுடன் நொண்டியடிப்பதை பார்த்து,அங்கு விரைய.நிறைய வேட்டை நாய்களும்,முன்னிறவு மெக்ஸிகன் பிரவுன் டோப் போதை மருந்து பரிமாற்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர் உடலுமாய் காட்சி தர,ஈ மொய்க்கிறது.ஒரு பிரவுன் டோப் பார்சல்கள் நிறைந்த ஃபோர்ட் பிக்கப் காரில் இருந்த டிரைவர் குற்றுயிராய் இருக்க, அவரிடம் நெருங்கி அவரின் விசை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு.அவரிடம் பணம் எங்கே?மற்றவர்கள் எங்கே?
என்று கேட்டவன்.அவர் அக்வா (தண்ணீர்) என்கிறார்.இவன் என்னைடம் நீரில்லை என்று சொல்லிவிட்டு அவனின் மேகசினையும் எடுத்த்டுக்கொண்டு விலகுகிறான்,பின்னர் மரத்தடியில் ஒருவன் ஒரு லெதர் சாட்செலுடன் அமர்ந்திருப்பதை கண்டு நோட்டமிட்டு,
நீண்ட நேரம் அசைவின்றி இருக்கவே ,அவன் இறந்திருக்க கூடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நெருங்கிச் சென்று.அவனின் சில்வர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு அவனருகில் இருந்த ஸாட்செல் ஐ (லெதர் சூட்கேஸ்)திறக்க அதில் இரண்டு மில்லியன் டாலர் புதிய நோட்டுக்கள் இருப்பதை காண்கிறான்.(உள்ளே பணம்செல்லுமிடம் சொல்லும் டிரான்ஸ்மீட்டர் இருப்பதை உணராமல் )அதை எடுத்துக் கொண்டு போய் தன் ட்ரெயிலரில் பதுக்குகிறான்.தன் மனைவி பணம் எப்படி வந்தது என்று கேட்டு இவன் சொன்னதும்.மனைவி கார்லா (கெல்லி மெக்டொனால்ட்) மருள்கிறாள்.இரவு தூங்குகையில் அந்த கார் டிரைவர் நீர் கேட்டு தான் நீர் இல்லாததால் கொடுக்க இயலாமையை நொந்துகொண்டு அவருக்கு நீர் அளிக்க கேன் தண்ணீருடன் பாலைவனம் விரைகிறான்.மனைவியிடம் தான் ஒருவேளை திரும்பவில்லையென்றால் தன் அம்மாவை தான் மிகவும் நேசித்ததாய் சொல் என்கிறான்.அவள் குழம்பி அவள் தான் இறந்துவிட்டாளே? என கேட்க,அப்போது நானே அவளை நேரில் பார்த்தால் சொல்கிறேன் .என்கிறான். அந்த பாலைவனம் சென்றவன். அங்கே ட்ரக் டிரைவர் சுடப்பட்டு இறந்திருக்க.இவன் சுதாரிப்பதற்குள் ,தூரத்தில் இவனின் ட்ரக் டயர்கள் சுடப்பட்டு காற்று வெளியேறும் ஒலி கேட்கிறது,
பதுங்கியவன் அங்கே மற்றொரு டிரக்கின் வெளிச்சத்திட்டு தெரிய ,அது நகர்ந்து மேலே ஒருவன் சுட்டுக்கொண்டே இவனை துரத்த.இவன் விழுந்து எழுந்து முட்டிபெயர்ந்து பல் உடைந்து தலை தெறிக்க ஒரு ஆற்றில் உருண்டு நீந்தி மறுகரை அடைந்து தன்னை கடைசிவரை பின்னால் துரத்தி வந்த வேட்டை நாயை நனைந்த ஸில்வர் துப்பாக்கியை சூடாக்கி ஊதி சுட.அதோ குண்டு கிளம்பி நாய் சுருள்கிறது.பொழுதும் விடிகிறது.உடம்பை துளைத்த சிறு கற்களையும் ,முள்ளையும் எடுத்து சட்டையை கிழித்து காயத்திற்கு கட்டி வீடு வருகிறான்.பயந்து போன மனைவியிடம் 2 மில்லியன் டாலர் பணத்துக்காக நீ கொஞ்ச காலம் தலைமறைவாகமாட்டாயா? இனி நீ வால்மார்ட்டிற்கு வேலைக்கு போகவேண்டாம். என்று தேற்றியவன் மனைவியை ஒடெஸ்ஸா என்னும் ஊரில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்கு பஸ் ஏற்றிவிட்டு மாஸ் அகல்கிறான். புதையல் காத்த பூதமாகிறான்.
காட்சி மாறி:-
டெக்சாஸின் ஒரு பெட்ரோல் பங்கில் கல்லாவில் இருந்த முதியவர் சிகரை நோக்கி நட்புடன் நீங்கள் வந்த பாதையில் மழை போல?என்று வாயை விட.உங்களுக்கு எப்படி தெரியும் என்றவன்.இவர் நான் உங்களை பார்த்திருக்கிறேன் . என்றதும் உனக்கு அது பற்றி என்ன வந்தது என மடக்கியவன்.இவன் அவரை நெருங்கி சூரிய காந்தி விதைகளை மென்று கொண்டே நீங்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறீர்கள்?டல்லாசில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?இவர் நான் 20 வருடங்களாக இங்கே இருக்கிறேன்.இதற்கு முன்னர் டெம்பிள் டெக்ஸாஸில் இருந்தேன். திருமணமாகி என் மனைவின் அப்பாவுடைய இந்த பெட்ரோல் பங்கினை பார்த்துக்கொள்கிறேன் என மருண்டவர்.
என்றும் யாராலும் மறக்க முடியாத "கால் இட்" காட்சி காணொளி:-
-------------------------------------------
-------------------------------------------
எனக்கு கடையை மூட வேண்டும் என சொல்ல.இவன் எப்போதும் எத்தனை மணிக்கு மூடுவீர்? இவர் இருட்டும் போது, இப்போது இருட்டி விட்டதா? எப்போது தூங்கப்போவீர்? இவர் 9-30 மணிக்கு. இவன் அப்டியென்றால் அந்த நேரம் வருகிறேன்.இவர் நான் தூங்கும் போது ஏன் வருகிறீர்.இவன் இந்த பங்கிற்கு பின்னால் இருப்பது தானே உன் வீடு.என்றவன், இவர் இன்னும் மருள.இதுவரை எவ்வளவு அதிகமான தொகையை காயின் டாஸில் பிணையாக வைத்திருப்பீர்? கிழவர்.நான் பிணையே வைத்ததில்லை.சரி இப்போ வையுங்கள். இதில் தான் உங்கள் வாழ்வே அடங்கியுள்ளது. பிரெண்டோ என்கிறான். நாணயத்தை சுண்டி போட்டு பூவா தலையா? சொல்லுங்கள் என காசை விரல்களால் பொத்த.(இந்த காட்சிக்கே இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கும்.எவ்வளவு ஆங்கில படம் பார்த்தாலும் இது போன்ற ஒரு நடிப்பு முன் நிறுத்தப்படவில்லை.ஈடு செய்ய முடியவில்லை .என்ன தெனாவெட்டு.சிரிப்பை வெளியிடா கண்களில் குறும்பு.தாடையை மென்று கொண்டே "கால் இட்" என்று கேட்க.
அந்த கிழவர் (gene jones) தான் வாழ்ந்த கலைவாழ்க்கைக்கு அர்த்தமாக இந்த ஒரு காட்சியை சொல்லிக் கொள்ளலாம்.அப்படி ஒரு மருட்சியை கண்களில் காட்டியிருப்பார்.இது போல சின்ன சின்ன விஷயங்களால் தான் இது படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது என்பேன். முடிவில் கிழவர் தலை என்று சொல்லி உயிர் பிச்சை பெறுகிறார்.குறும்பன் சிகர் அவரிடம் தான் தந்த காசை கல்லாவில் போடாதீர்,என்று சொல்ல,அவர் திகைத்து ,வேறு எங்கே போட? இது உங்கள் உயிரை காத்த காசு.இதை கல்லாவில் போடாதீர் ,பின்னர் அது சாதாரண காசுகளுடன் கலந்து விடும் என்று சொல்லி அகல்கிறான்.
இப்போது அந்த மெக்ஸிகன் பிரவுன் டோப் கடத்தல் முதலாளி பணத்தை தேட சிகரை வாடகை கூலியாக அமர்த்துகிறான்.அவனுக்கு சம்பவ இடத்தை காட்ட சொல்லி தன் ஆள் இருவரை அனுப்ப,அங்கு விரைந்த சிகர் மாஸின் ட்ரக்கின் விஐடி டேக்கை (காரை அடையாளம் காணும் பட்டை) நெம்பி எடுத்துக் கொண்டு,பணம் இருக்கும் இடம் காட்டும் டிரான்ஸ்பாண்டரையும் பெற்றுக் கொண்டு பின்னர் அவர்கள் இருவரையும் சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் திருடிய காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுகிறான்.அந்த விஐடி டேகின் எண்ணை வைத்து மாஸை தேட புறப்படுகிறான்.
காட்சி மாறி:-
பொழுது விடிகிறது.ஷெரீப் டாம் பெல் தன் ட்ரக்கில் இணைக்கப்பட்ட கூண்டில் குதிரையில் ஏறிக்கொண்டு கூட தன் சக அதிகாரியையும் கூட்டிக் கொண்டு.அந்த பாலைவனம் சென்று துப்பு துலக்குகின்றனர்.அங்கே அதற்குள் அந்த ப்ரவுன் டோப் பார்சல்கள் இருந்த ட்ரக் காலி செய்யப்பட்டிருக்கிறது. அங்கே மாஸின் ட்ரக்கை கண்டதும் இது மாஸ் என்பவனுக்கு சொந்தமான வண்டி. என்று சொல்லி ஷெரிஃபும் அவரின் சகாவும் மாஸின் வீடு போகின்றனர்.
இப்போது சிகர், மாஸ் குடியிருக்கும் ட்ரெய்லர் செல்கிறான்,அங்கே இவனுக்கு மாஸின் டெலிபோன் பில் கதவுக்கு அருகே கிடைக்க, எடுத்துக்கொண்டவன் ,ஃப்ரிட்ஜில் இருந்து பால் எடுத்து பருகுகிறான்.பின்னர் மாஸின் குடியிருப்பு அஸோசியேஷன் அலுவலகம் செல்கிறான்.அங்கு ரிசெப்ஷனில் இருந்த குண்டு பெண்மணியிடம் (கோயனின் படங்கள் அனைத்திலும் ஏன் ரிசப்ஷனிஸ்ட் பெண்கள் குண்டாக ஓவர் மேக்கப்புடன் நகைப்புக்கிடமாக இருக்கின்றனர்?) மாஸ் வேலை பார்க்கும் அலுவலக விபரம் கிடைக்காமல் போக ,அவளை சுட்டுக்கொல்ல நினைத்தவன்,உள்ளே கழிவறையில் ஃப்ளஷ் சத்தம் கேட்டு இரண்டு சாவு வேண்டாம் என விலகுகிறான்.டெலிபோன் பில்லில் இருந்த எண்களை வைத்து மாஸின் சொந்த ஊர் ஒடெஸ்ஸா என்று அறிகிறான்.அங்கிருந்து அகல்கிறான்.பின்னர் அவ்வூருக்கு காரை விடுகிறான்.சிறிது நேரத்தில் ஷெரிப் டாம் பெல்லும் அவர் சகாவும் மாஸின் வீடு வந்து அப்போது தான் உடைக்கப்பட்ட கதவின் லாக்கை பார்த்து சிகர் வந்து போனதை கண்டு பிடிக்கின்றனர்.இப்போது இருவரையும் தீவிரமாக தேடுகின்றனர்.டாம் பெல் சிகர் விட்டுப்போன மிச்சப் பாலை பருகுகிறார்.
இப்போதுஆரம்பிக்கிறது பூனை சுண்டெலி ஆட்டம்:-
மாஸ் டாக்ஸி பிடித்து ஒரு மோட்டல் சென்று இரண்டு அறை எடுத்து ஒன்றில் தான் தங்கி,மற்றொன்றில் பணத்தை ஏசி ஷாப்டில் கிரில்லை கழற்றி உள்ளே தள்ளி ஒளித்து வைக்கிறான்.வேட்டை துப்பாக்கியும் ,ரவையும் ,கூடாரம் அடிக்கும் அலுமினிய குழாயும் வாங்கி வந்து அதில் யாருக்கும் சந்தேகம் வாரா வண்ணம் நவீன குழல் துப்பாக்கியும் ,சாட்செல்லை வெளியே எடுக்க தொரட்டியும் தயாரிக்கிறான்.
காட்சி மாறி:-
இப்போது டாம் பெல்லுக்கு சிகரால் கொல்லப்பட்ட முதியவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வர,அதில் குண்டு துளைத்தது உண்மை,ஆனால் குண்டு காணவில்லை என இருக்க,குழப்பமடைகின்றனர்.அவனின் ஆயுதம் குறித்து ஆராய்கின்றனர்.பின்னர் மாஸின் மனைவியை ஒடிஸ்ஸா என்னும் ஊர் சென்று ஒரு உணவகத்துக்கு வரவழைத்து சந்திக்கிறார். உன் கணவனை சரணடைய சொல்,அந்த மாஃபியாக்காரர்கள் மிகப் பொல்லாதவர்கள்.மாடுகளை அறுப்பதற்கு முன்னர் ஒரு வகை ஆக்ஸிஜன் சிலிண்டர் துப்பாக்கியைக் கொண்டு உடம்பில் சல்லடை போடுகின்றனர். அதை இப்போதெல்லாம் மனிதனை கொல்ல உபயோகிக்கின்றனர்.இன்னும் இதுபோல நிறைய கேஸுகள் என் அனுபவத்தில் என அவளுக்கு பயமூட்டுகிறார்.உங்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு.மாஸ் எப்போது போன் செய்தாலும் எனக்கு தெரிவி.என தன் அட்டையை கொடுத்து விட்டு செல்கிறார்.
காட்சி மாறி:-
இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி சிகரின் நடவடிக்கையால் மிகவும் நொந்து போகிறார்.சிகர் தனக்கே வாழைப்பழம் கொடுத்ததை எண்ணி வியந்தவருக்கு,பணத்தை தேட கார்சன் வெல்ஸ் (வுட்டி ஹாரல்சன்-செவென் பவுண்ட்ஸ்) என்பவன்,தான் சிகரை பார்த்திருக்கிறேன்,அவனின் குணாதிசயம் எனக்கு தெரியும் என்றதும். பொறுப்பை ஒப்படைக்க அவன் சிகரையும் மாஸையும் தேடி புறப்படுகிறான்.அவன் போனதும் அதே பொறுப்பை மெக்ஸிக்கர்களான நான்கு பேர் கொண்ட கும்பலிடம் விட்டு மாஸின் மனைவியை கண்காணி என்று சொல்லுகிறான்.
காட்சி மாறி:-
சிகர் மாஸின் மனைவி சொந்த ஊருரான ஒடெஸ்ஸாவுக்கு பயணிக்கையில் மாஸ் தங்கியுள்ள மோட்டலை கடக்க, டிரான்ஸ்பாண்டர் அலறுகிறது, காரை உள்ளே செலுத்தி வேவு பார்த்து பார்க் செய்கிறான். இப்போது கையில் பெரிய நவீன சைலன்சர் குழல் துப்பாக்கியும் வைத்திருக்கிறான். உள்ளே சென்று அறை எடுக்கிறான். தன் பெரிய பூட்ஸுகளை கழற்றியவன்.பூனை போல காரிடரில் நடக்க பணம் இருக்கும் அறை அருகே செல்ல சத்தம் அதிகரிக்க. ட்ரான்ஸ்பாண்டரை அணைத்தவன், ஒரு அறைக்குள் லாக்கை உடைத்தெறிந்து நுழைகிறான்,
உள்ளே கட்டிலில் ஒருவன் எழுந்து சுட இவன் விலகி அவனை சுடுகிறான்.பின்னர் கழிவறை மரசுவற்றை சுட்டுத்தள்ள ,ஒருவன் சுருண்டு மடிகிறான்.உள்ளே நுழைந்தவன் பாத்டப்பில் பயந்து பதுங்கிய ஹோமோ ஒருவன் என்னை விட்டுவிடு ”மேட்”என்று கெஞ்ச.உனக்கு எப்படி நான் ஹோமோ என தெரியும் ? என்று ஷவர் கர்டனை மூடி அவனை சுடுகிறான். பின்னர் அங்கு பணத்தை வெறியுடன் தேடுகிறான்.
பக்கத்து அறையில் இருந்த மாஸ் சுதாரித்து பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு முதியவர் காரில் ஹிட்ச் ஹைக்கிங் செய்து (லிஃப்ட் கேட்டு) தொலைவில் உள்ள இன்னொரு ஹோட்டல் சென்று இறங்கி அறை பதிவு செய்து.மேனேஜருக்கு 100டாலர் பணம் தந்து என்னை தேடி யார் வந்தாலும் எனக்கு தெரிவி.என்கிறான்.பணம் வந்ததும் தூக்கம் போன கதை தான்.ஸ்டாச்சலை பிரித்து பணக்கட்டை ஆராய்ந்தவன் அப்போது தான் பணக்கட்டுக்கு உள்ளே குடைந்து வைக்கப்பட்டிருக்கும் அந்த டிரான்ஸ்பாண்டர் எமனை கண்டு வெளியே வைக்கிறான்.தன் அறைக் கதவையே குறி பார்க்கிறான்.
இப்போது சிகர் இங்கும் வந்து விடுகிறான். ஹோட்டல் மேனேஜரை கொன்றுவிட்டு.மெல்ல காரிடாரில் நடந்து ட்ரான்ஸ்பாண்டர் கருவியின் உதவியுடன் ஒவ்வொரு கதவாக மோப்பம் பிடிக்கிறான்.இவன் மேனேஜருக்கு போன் செய்ய ரிங் போகிறது . இவன் அறை விளக்கை அணைக்கிறான்.இவன் அறை கதவிடுக்கில் சிகரின் கால் தெரிகிறது.மாஸ் ஆயத்தமாகிறான். சிகர் லாவகமாக அடுத்த கதவின் அருகே சென்றுவிட,மாஸ் அப்பா என்று மூச்சு விட ,அப்போது சிகர் கதவின் லாக்கை கேட்டில் கன் வைத்து பிளக்க அந்த லாக் பறந்து இவன் மேல் விழ,இவன் திரும்ப சுட்டுவிட்டு பணத்துடன் சன்னல் வெழியே குதித்து ஓடி,அவன் துரத்த,இவன் ஒளிந்துகொண்டு ஹோட்டல் மேனேஜர் அறை வந்து பார்க்க,அங்கே பூனை மட்டும் அமைதியாய் பாலை குடிக்க,மேனேஜர் கொல்லப்பட்டிருக்கிறார்.
விரைந்து வெளியேறியவன், சுதாரித்து அங்கே வந்த காரை மறித்து,உள்ளே ஏற ,சிகர் அந்த ஓட்டுனரை தலையில் சுட்டுக்கொல்ல,மேலும் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்க,இவனுக்கு வயிற்றின் ஓரத்தில் குண்டு துளைத்து நிறைய ரத்தம் வெளியேற, இவன் லாவகமாய் காரை இயக்கி சாலையில் மெல்ல கடக்கிறான்,சிகர் சுட்ட குண்டுகளால் நிலைகுலைந்தவன் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த இன்னோரு காரின் மேல் வண்டியை மோத ,மெதுவாய் இறங்கி பதுங்கியவன்,சிகரின் மேல் வெறியேறி அவன் வர காத்திருந்து அவனை மூன்று ரவுண்டு சுட,சிகருக்கு தொடையில் பலத்த காயம் பட்டு அங்கேயிருந்து ஓடி ஒளிகிறான்.இப்போது மாஸ்அந்த காரில் ஏறி இயக்குகிறான்.
மிகுந்த வலியிலும் மெக்ஸிக்கோ எல்லை செல்ல,அங்கே ஆற்று பாலத்தில் நடந்து வந்த சிறுவரிடம் அவன் அணிந்திருந்த கோட்டை 500 டாலர் தந்து வாங்குகிறான்.அவர்களிடம் பீரையும் வாங்கி அருந்தியவன்.ஸாட்செல்லை மெதுவாக பாலத்தின் தடுப்பு வேலியில் ஏறி அங்கு இருக்கும் ஆற்றங்கரையில் அடையாளம் வைத்துக் கொண்டு வீசுகிறான்.மெல்ல இறங்குகிறான்.மயக்கம் வர , வாந்தி எடுக்கிறான்.
- மாஸ் உயிர் பிழைத்தானா?
- அவனின் மில்லியனர் கனவு நனவானதா?
- மாஸ் தன் மனைவியுடன் சேர்ந்தானா?
- இடைத்தரகன் கார்சன் வெல்ஸ் என்ன ஆனான்?
- ஷெரீஃப் டாம் பெல் நிம்மதியாக ஓய்வு பெற்றாரா?
- வித்தியாச சைக்கோ சிகர் என்ன ஆனான்?
போன்றவற்றை டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
காட்சி மாறி:-
சிகர் இப்போது அடிப்பட்ட சிங்கமாக வலியில் துடிக்கிறான். எந்த மருத்துவமனைக்கும் போக முடியா சூழ்நிலை.ஒரு மருந்துக்கடை முன்னே நின்ற காரின் பெட்ரோல் டாங் மூடியை திறந்து. பஞ்சு உருண்டைகளை உள்ளே போட்டு தன் சட்டை கிழிசலை கிழித்து அதை பெட்ரோல் டாங்கில் முக்கி தீ வைக்க சிறிது நொடியில் கார் வெடிக்கிறது.கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க,மருந்து கடை உள் சென்று மிக சரியாக பார்த்து மரத்து போகும் ஊசி,பஞ்சு,கிருமி நாசினி,ஆல்கஹால் கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கிளினிக்கில் நுழைந்து,நோயாளி அறையின் கழிவறையில் புகுகின்றான்,
பிளாஸ்டிக் பேப்பர் விரித்து தன் பெரிய ஷூக்களை ரத்தம் வடிய கழற்றியவன்.தன் பேண்டை கிழித்து எறிகிறான்.பாத்டப்பில் தண்ணீரில் நீந்தியவன்,வெளியேறி கால்களை நீட்டி அம்மணமாக தரையில் அமர்ந்து ,அந்த குண்டு காயத்தை சுற்றி மூன்று முறை மரத்துப்போகும் ஊசி போட்டவன் ,ஸ்டெரிலைஸ் செய்த கத்தியை வைத்து குண்டை கீறி, லாவகமாக நெம்பி எடுத்து. கட்டு போடுகிறான். வலி குறைய ஊசி போட்டுக்கொள்கிறான். கிளினிக்கில் இருந்த பேஷன்ட் ஒருவரின் உடையை அணிந்து வீறு கொண்டு கிளம்புகிறான்.
காட்சி மாறி:-
கார்சன் வெல்ஸ் மருத்துவமனையில் மாஸை சந்தித்து பணம் எங்கே? அதை என்னிடம் தந்துவிடு,உனக்கு அதில் பங்கும் சிகரிடமிருந்து பாதுகாப்பும் தருகிறேன் என்று சொல்கிறான். மாஸ் தன்னிடம் இருந்த பணம் போதையிலும் பெண்களிடம் போனதிலும் செலவாகிவிட்டது, என்று சொல்லி மழுப்புகிறான். கார்சன் சிகரை பற்றி உனக்கு தெரியாது,அவன் எத்தனுக்கு எத்தன். அவன் யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன்.அவனை பார்த்தும் உயிரோடு இருப்பவர்கள் நான் ,அப்புறம் நீ,அவன் இப்போது உன் மனைவியை தேடி அவள் ஊருக்கு போவான், அவளையும் உன் மாமியாரையும் கொலைசெய்வான் என பயமுறுத்திவிட்டு மாஸை மனம் மாறினால் பேசு என தன் ஹோட்டல் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு அகல்கிறான்.
பின்னர் கார்சன் வெல்ஸ், மாஸ் குண்டடிபட்டு மயங்கி விழுந்த இடம் சென்று சோதனையிட, தடுப்பு வேலிக்கு அப்பால் ஆற்றங்கரையில் புதருக்குள் ஒளிந்திருக்கும் சேட்செல்லை பார்க்கிறான். போலீசுக்கு தெரியாமல் எப்படி? அந்த எல்லையோர வேலியை தாண்டி ஆற்றை அடைவது? என யோசிக்கிறான். தன் ஹோட்டல் அறைக்கு போகிறான்.படியேற ,பின்னாலேயே சிகர் துப்பாக்கியுடன் நிற்கிறான். மனதிற்குள் தன் கதை இன்று முடிந்தது என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைகிறான்.கார்சன் அவனிடம் தன் ஏடிஎம்ல் 14,000 டாலர்கள் பணம் உள்ளதாயும், தன்னுடன் வந்தால் அதை எடுத்து தருவதாயும் சொல்ல,அவன் ஏளனமாய் பிச்சைக்காசு வேண்டாம்.சாட்சலில் இருந்த பணம் எங்கே? என கேட்டவன், அது ஆற்றங்கரையில் இருப்பதாய் சொல்லியும் நம்பாமல், மாஸின் மருத்துவமனை எங்கே என அறிகிறான். பணத்தை அவனிடம் எப்படியும் வாங்கிவிடுவேன், என்கிறான்.அப்போது போன் மணியடிக்க, நான்காவது மணியில் கார்சனை அவன் எதிர்பாரா நொடியில் சைலன்சர் துப்பாக்கியால் சுடுகிறான்.
பின்னர் ரிசீவரை எடுத்தவன்.போனில் எதிர்முனையில் மாஸ் பேச.உனக்கு நான் யார் என்று இந்நேரம் தெரிந்திருக்கும், உன் மனைவி உனக்கு உயிருடன் வேண்டும் என்றால் அந்த பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடு என்று மிரட்ட.(சிகர் போன் பேசுகையில் தன காலடியில் ரத்தம் நகர்ந்து வருவதை கண்டு தன கால்களை தூக்கி மெத்தை மேல் வைப்பான், மீண்டும் பேச்சை தொடர்வான் கிளாஸிக்கான காட்சியது ) மாஸ் நான் அதற்கு முன் உன்னை கொன்று பின்னர் தூக்கில் போட்டு விடுவேன் என பதில் சொல்லி போனை பலமுறை அடித்து சாத்துகிறான்.
காட்சி மாறி:-
சிகர் இப்போது மெக்சிக்கன் ப்ரவுன் டோப் கடத்தல் முதலாளியின் அலுவலக கதவின் லாக்கரை உடைத்து,உள்ளே நுழைந்து அவனை கழுத்தில் சுட்டு கொன்றவன்.அருகே இருந்த அக்கவுண்டண்டை,இன்னும் யார் அந்த பணத்தை தேடுகிறார்கள் என கேட்டு அவனுக்கு உயிர்பிச்சை அளித்து விட்டு வருகிறான்.போகும் வழியில் கார் பழுதாகிவிட.அங்கு உதவிக்கு வந்த ஒரு கோழிகள் வண்டி டிரைவரை கொன்று அந்த காரில் எல் பாசோ என்னும் நகரம் போகிறான்.
காட்சி மாறி:-
மாஸ் இப்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறியவன், ஆற்றங்கரையில் உள்ள செக்போஸ்டிற்கு மருத்துவ உடையுடன் வர,போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறான்.உன்னிடம் உடை கூட இல்லை நீ எப்படி அமெரிக்க எல்லை போகிறாய்.என அவர் கேள்விகள் கேட்க,இவன் தான் ஒரு எக்ஸ் மிலிட்டரி சர்வீஸ் மேன், இரண்டு முறை போரில் இருந்திருக்கிறேன், வியட்நாம் போரில் 1966 முதல் 1968 வரை இருந்தேன். எனசொல்லி அவரிடம் நம்பிக்கையை பெற்று, எக்ஸிட் பெற்று வெளியேறுகிறான். பின்னர் துணிக்கடை சென்றவன் ஆடம்பர துணிவகைகளும், தொப்பி, ஷூக்கள் வாங்குகிறான். அதை அணிந்தவன் ஆற்றங்கரை அருகே சென்று சாட்செல்லை எடுத்துக்கொண்டு பொது தொலைபேசியில் இருந்து கார்லாவுக்கு போன் செய்கிறான்.
தான் எல் பாசோவில் இருப்பதாகவும் அம்மாவை கூட்டிக் கொண்டு இங்கு வந்து விடு என்றும் கூறுகிறான்.அவள் இங்கு வந்தவுடன் அவளிடம் அந்த சாட்சலை தந்து அவளை ஒரு உல்லாசத்தீவிற்கு அனுப்பிவிடுவேன்,அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அங்கே அவளுடன் வந்து சேர்வேன் என்கிறான். தான் தங்கப்போகும் ஹோட்டல் முகவரியை கூறுகிறான்.அவள் தன் கணவனின் உயிரைக்காக்க பக்தி சிரத்தையுடன் செரிப் டாம் பெல்லிற்கு தகவல் சொல்ல அவர் அங்கு வர விழைகிறார்.
காட்சி மாறி:-
கார்லா தன் தட்டு முட்டு சாமான்களுடன் எல்பாஸோ செல்லும் பேருந்து நிலையத்துக்கு டாக்ஸியில் வர மெக்சிக்கர்களான நான்கு பேர்,கார்லாவை பின் தொடந்து வந்து அவர்களின் சாமான்களை இறக்க உதவுகின்றனர் ,அழகாய் பேச்சு கொடுத்து அவர்கள் செல்லுமிடம்,ஹோட்டல் விலாசம் கேட்டுக்கொள்கின்றனர். நாங்களும் அந்த பகுதி வாசிகள் தான் என்று சொல்கின்றனர் , அன்புடன் இவர்களை ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்புகின்றனர். கார்லாவின் புற்று நோயாளியான அம்மா எல்பாசோ காரர்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்? என வியக்கின்றனர். இவர்களுக்கு முன் அந்த ஹோட்டலுக்கு மெக்சிக்கர்கள் காரில் விரைகின்றனர்.
காட்சி மாறி:-
இப்போது மாஸ் ஹோட்டல் அறையில் குதூகலமாய் மனைவிக்கும் அவள் அம்மாவுக்கும் காத்திருக்கிறான்.பணத்தை ஒரு வழியாக மீட்டு கொண்டு வந்து ஹோட்டல் அறையின் ஏசி ஷாப்டின் உள்ளே வைத்தாகி விட்ட மகிழ்ச்சி வேறு, மனைவியை எதிர்பார்த்து ஜாலிமூடில் இருந்தவனுக்கு பக்கத்து அறை அழகி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே பீர் அருந்த கூப்பிட ,இவன் மறுக்கிறான்.பீரில் ஆரம்பிக்கும் வேறு எங்கோ போய் முடியும் என்கிறான்.
அங்கு வந்த மெக்சிக்க கும்பல் அவனை அடித்து உதைத்து பணம் எங்கே?என கேட்டு மாஸை துன்புறுத்தி ,நீச்சல் குள அழகியை அவன் காதலி என எண்ணி சுட்டுக்கொன்று குளத்தில் மிதக்க விடுகின்றனர்.அதில் நடந்த கைகலப்பில் மாஸ் மெக்ஸிக்கன் ஒருவனை கொல்ல ,மாஸிடம் பணம் பற்றிய பதில் வராததால் அவனையும் சுட்டும் கொன்று அறையை குலைத்து போட்டு தேடியும் பணம் கிடைக்காமல் போலீஸ் வரும் சத்தம் கேட்டு இடத்தை விட்டு அகல்கின்றனர்.இப்போது மூன்று பிணம், ஷெரிஃப் டாம் பெல் மாஸ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து துணுக்குறுகிறார். உள்ளூர் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து துப்பு துலக்குகிறார்.
இப்போது கார்லாவும் அவள் அம்மாவும் ஹோட்டலுக்குள் நுழைய.தன் கணவன் பிணமாய் கிடக்கும் காட்சியை கண்டு கார்லா வெடித்து அழுகிறாள்.அப்போது ஷெரிப் டாம் பெல் கார்லாவை தேற்ற வழியின்றி திகைக்கிறார்.பிரேத பரிசோதனை முடிந்து உள்ளூர் போலீஸ் அதிகாரியிடம் பணம் படுத்தும் பாட்டை பற்றி அங்கலாய்த்தவர், அன்று இரவு ஒரு அனுமானத்தில் சிகர் கண்டிப்பாக மாஸின் அறையில் பணம் தேட வருவான் என நினைத்தபடி நுழைகிறார்.
அதே போல ஏசி கிரில் கழற்றி வைக்கப்பட்டுள்ளது.சிகர் இருட்டில் இவரை பார்க்கிறான்.ஆனால் சுடவில்லை.இவருக்கும் சிகர் உள்ளே தான் இருக்கிறான் என தெரியும்ஆனால் அவனை பிடிக்கவில்லை.உள்ளே நுழைந்தவர், கழிவறை விளக்கை போடுகிறார்.அறையை நோட்டமிடுகிறார். இன்னும் மூன்றே நாளில் விருப்ப ஓய்வு பெறும் தமக்கு எதற்கு? இந்த வீண் உயிர் பணயம் !!என கதவை மூடிவிட்டு நல்ல பிள்ளையாக ,தன் மாமா வீட்டிற்கு சென்று தாம் ஓய்வு பெறப்போகும் செய்தியை சொல்கிறார்.டாம் பெல்லின் மாமா முன்னாள் சிறை அதிகாரி,டாம் பெல்லின் இன்னொரு ஷெரிஃப் மாமாவுக்கு கடமையை செய்கையில் சமூக விரோதிகள் சுட்டு வீட்டு வாசலிலேயே இறந்ததை நினைவுகூர்கிறார்.
நல்ல வேளை உனக்கு அப்படி ஏதும் ஆகவில்லை என்று சொல்கிறார். இப்போது உள்ள கயவர்கள் நவீன ஆயுதங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் பணத்தை தேடி அலைந்து, நிறைய குற்றங்கள் செய்கின்றனர். இந்த விளையாட்டு நமக்கு சரிப்படாது. இப்போதெல்லாம் முதியோருக்கு காலமில்லை என்கிறார்.முத்தாய்ப்பாக.
காட்சி மாறி:-
புற்றுநோயாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து வேதனையிலும் இறந்த தன் தாயை அன்று தான் சவ அடக்கம் செய்துவிட்டு நிறைய கடன்களுடன் மன வேதனையில் வீட்டுக்குள் ஓய்வெடுக்க கார்லா நுழைகிறாள், ஏற்கனவே படுக்கை அறையில் ஒயிலாக சிகர் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்கிறாள். அவனிடம் தன்னிடம் பணம் இல்லை, தான் இப்போது கடனாளி, தன் அம்மாவின் ஈமைச்சடங்கிற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என மன்றாட.சிகர், அது பற்றி எனக்கு கவலையில்லை. உன் கணவனுக்கு நான் உன்னை கொல்வதாய் வாக்களித்திருக்கிறேன். அவன் பணத்தை தந்து உன்னை மீட்க தவறிவிட்டான். நான் அவனிடம் சொன்ன படி உன்னை கொல்லப்போகிறேன்.
என்று கூறி காசை சுண்டி போட்டு பூவா தலையா? என கேட்கிறான்.அவள் மிகுந்த துக்கத்தில் பதில் சொல்லாமல் இருக்க. அவளை சுட்டு கொல்கிறான்.(படத்தில் இக்காட்சி கிடையாது,ஆனால் மெக்கார்த்தியின் நாவலில் உண்டு)
பின்னர் பதட்டத்தில் காரை விரட்டிக் கொண்டு நான்கு ரோடு கூடும் சந்திப்பில் வேகமாய் இடம் வலம் பாராமல் செல்ல ,அங்கு வலப்புறம் வந்த கார் இவன் காரில் மோதி அந்த கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரலோகம் போக ,இவனுக்கு முழங்கை உடைந்து எலும்பு வெளியே துருத்திக் கொண்டு வலிக்கத் தொடங்க.காரிலிருந்து வெளியேறுகிறான்.தூரத்தில் போலீஸ் சைரன் கேட்கிறது.
அங்கு வந்த இரு சைக்கிள் சிறுவர்களிடம் சிறுவன் அணிந்திருந்த டீ ஷர்டை கேட்கிறான். அவன் இவனுக்கு உதவ டீஷர்டை கழற்றி கொடுக்க , அதை முடிச்சு போடச் சொல்லி வாங்கியவன் உடைந்த கைக்கு தூளி கட்டிக்கொண்டு நூறு டாலர் தந்து யாரிடமும் தன்னைப்பற்றி சொல்லக்கூடாது என்று எதிர்திசையில் விந்தி விந்தி நடந்து , பணத்தை பாதுகாக்க கிளம்புகிறான். அந்த வித்தியாச சைக்கோ.இப்போது அந்த இரு சிறுவர்கள் பணத்துக்காக சண்டைபோட ஆரம்பிகின்றனர்.
இந்த படம் பார்த்த அனைவரும் பபூன் போல தோற்றமளிக்கும் ஆண்டன் சிகருக்கு விசிறியாகவே ஆகிவிடுவார்கள்,என்றால் மிகை இல்லை.என்னை கேட்டால் இந்த நூற்றாண்டின் மனம் கவர் வில்லன் என்றே சொல்லுவேன்.என்ன நண்பர்களே சரி தானே?படத்தில் படுக்கையறை காட்சிகளே கிடையாது. ஆனால் கலை நுட்பத்துடன் கூடிய மிகைப்படுத்தப்பட்ட ரத்தம், வன்முறை, தத்ரூபமான சதை கிழிசல்கள்.காயங்கள்,உண்டு. ஆகவே சிறுவர்களுக்கு ஆன படம் இல்லை.என் உலக சினிமா தேடலுக்கு இந்த படமே ஆழமாக பிள்ளையார் சுழி போட்டது என்றால் மிகையில்லை.| Best Achievement in Directing Ethan Coen Joel Coen |
| Best Motion Picture of the Year Scott Rudin Ethan Coen Joel Coen |
| Best Performance by an Actor in a Supporting Role Javier Bardem |
| Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published Joel Coen Ethan Coen |

