ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முள்ளும் மலரும் விஞ்ச் கார் -ரோப்வே


நம் மனதில் நீங்கா இடம்பெற்ற இந்த முள்ளும் மலரும் விஞ்ச் -ரோப்வே, ரோப்கார் மற்றும் அதன் லொக்கேஷன்கள் ஊட்டியின் சின்காரா பவர் ஹவுஸ் முதல் க்ளென்மார்கன் வரையேயான 3கிமீ தூரமுள்ள ரோப்வே தடத்தில் படமாக்கப்பட்டன என்று  படித்தேன்.

ஊட்டியில் வழிகாட்டிகள் இதை முள்ளும் மலரும் விஞ்ச் கோர்ட் என்றே சொல்வார்கள், இந்த  பிரதேசத்தை முதன் முதலில் தனது கேமராவில் ஒளிப்பதிவு செய்து திரையில் காண்பித்தவர்கள் இரு மகேந்திரர்கள்.ஒளிப்பதிவாளர்  பாலுமகேந்திரா, இயக்குனர் பாலு மகேந்திரா.

PS: இதை கெத்தை geddai விஞ்ச் என்றும் பலர் ஆணித்தரமாக விவாதிக்கின்றனர், 

கெத்தைக்கும் க்ளென்மார்கனுக்கும் சாலை மார்க்கமாக 85 கிமீ உள்ளது, இரண்டு வெவ்வேறு மலைப்பகுதிகளில் அமைந்த நீர் மின் நிலையத்திற்கான விஞ்ச்கள், 

 இணையத்தில் இரு விதமான கருத்து உள்ளது, இது குறித்து மூத்த சினிமாகாரர்கள் அல்லது உள்ளூர் வாசிகள் தெளிவுபடுத்த கேட்டிருந்தேன், ராஜநாயஹம் சார் இதை கெத்தை என்று இன்று உறுதிப்படுத்தினார், 

அவர் பதிவை படங்களைப் பாருங்கள். அவர் உறுதிப்படுத்தினால் மாற்றுக் கருத்தே கிடையாது

க்ளென்மார்கன் கெத்தை இது இரண்டும் ஒரே போன்ற விஞ்ச் பாதைகள் என்பதால் நேர்ந்த தர்க்க குழப்பம்,அதிக பேர் வாக்களித்த  இந்த படப்பிடிப்பு பிரதேசத்தை ஊட்டியின் கெத்தை என்றே உறுதிப்படுத்துகிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2019/07/blog-post_24.html?m=0

#பாலு_மகேந்திரா,#விஞ்ச்,#கெத்தை, #க்ளென்மார்கன்,#ropeway,#glen_morgan

முள்ளும் மலரும் | 1978 | மொழி மாற்ற முயற்சிகள் ஒரு ஆய்வு

முள்ளும் மலரும்(1978), வேனலில் ஒரு மழா( 1979), ப்யாரி பெஹனா(1985) மூன்று வடிவத்தைப் பார்த்தபின் முள்ளும் மலரும் தான் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது, தமிழில் இருந்த அழகியல் , யதார்த்தமான எளிமை, க்ளாசிக் தன்மை, subtleness, minimalism என மீள் படைப்புகளில் பின்பற்றப்படாதது நம் துர்அதிர்ஷ்டம்.

முள்ளும் மலரும் தான் இதில் சந்தேகமின்றி மாஸ்டர்பீஸ், காளி கதாபாத்திரம் செய்த மூவரில் ரஜினி அற்புதமான நடிகர், அவர் தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டி தன்னை விட்டுக் கொடுத்து விட்டவர்,"சார்,ரெண்டு கையும் ,ரெண்டு காலும் போனாக்கூட காளிங்கறவன் பொளச்சுக்குவான் சார்,கெட்ட பய சார் அவன் " என்னும் வசனத்தை அவர் பேசுகையில் தான் அதன் வீரியம் புரிகிறது.

மலையாளத்தில் காளி கதாபாத்திரத்தில் மதுவிற்கு பதிலாக காளி கதாபாத்திரத்தில் ஜெயனை நடிக்க வைத்திருக்கலாம் இயக்குனர், மிதுன் நடிப்பும் காளி வேடத்தில் நன்றாக இருந்தது,ஆனால் அந்த தங்கைப் பாசத்தை, பாசத்தின் வெளிப்பாடான கர்வத்தை கண்ணில் தேக்கி வைத்து பிரதிபலித்தவர் ரஜினி மட்டுமே.

மலையாள வடிவத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் மது தன் சிறப்பான நடிப்பால் வாசு என்ற பாத்திரத்தை செய்திருந்தாலும், அவரிடம் அந்த வேகம்,இளமை ,குறும்பு,தீ இல்லை. 
படாபட் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தனர்,அப்பாத்திரம் மேலும் சிறப்புற்றது.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் எண்டே ராஜ்ய கொட்டாரத்தில் மதிலுகளில்லா என உருவம் பெற்றது (என் அரண்மனைக்கு சுவர்கள் இல்லை)இப்பாடலை தாசேட்டா பாடினார்.

ராமன் ஆண்டாலும் பாட்டை தமிழில் எஸ்பிபி பாடினார்,
https://youtu.be/tweD2O2WWT8

அதன் இந்தி வடிவ பாடலை கிஷோர் தா பாடியுள்ளார், 
https://youtu.be/8dCQf91cffA

மலையாள படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பியே எழுதினார், அவர் இப்படத்தின் இயக்குனரும் கூட, படத்தின் ஒளிப்பதிவு பழம்பெரும் ஒளிப்பதிவு இயக்குனர் கே.ஏ.விஜயம்

மூன்று படத்திலுமே ஊட்டி க்ளென்மார்கன் விஞ்ச் ஸ்டேஷனில் தான் காளியின் பணியிடமாக கதைக்களம் அமைத்திருந்தனர்.

இந்தியில் காளியின் பெயர் காளிச்சரண்,மிதுன் சக்ரபொர்த்தி தான் காளிச்சரண்,படாபட் வேடத்தில் பத்மினி கோலாபுரி நடித்தார்.

முள்ளும் மலரும் படத்தில் ரஜினி,படாபட்டுக்கு டூயட் இல்லை,அது குரங்குகள் குடித்துவிட்டு ஆடுவது போல இருக்கும் என்பதால் டூயட் வைப்பதில் உடன்பாடு இல்லை என்றார் இயக்குனர் மகேந்திரன், மலையாள வடிவமான வேனலில் ஒரு மழா படத்தில் டூயட் வைத்தனர், https://youtu.be/jheuGwFqGn0

ப்யாரி பெஹனா படத்திலும் டூயட் வைத்துள்ளனர், 
தமிழ் வடிவத்தில் காளியை சீண்ட அவன் கைக்கடிகாரத்தை எடுத்து படாபட் ரவிக்கைக்குள் போட்டுக்கொள்வார், இந்தியில் அக்காட்சியில் மாற்றமில்லை,
https://youtu.be/JlXPTiBrF5o
மலையாளத்தில் கைக்கடிகாரத்துக்குப் பதில் சாவிக்கொத்தாக மாற்றியிருந்தனர்.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலின் இந்தி வடிவம் இது .பாடலை ஆஷா போன்ஸ்லே,கிஷோர்தா பாடினார்கள்.
https://m.youtube.com/watch?v=whUdIlliTqY&feature=share

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலின் மலையாள வடிவம் இது அயலா பொரிச்சதுண்டு என வடிவம் பெற்றது .பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.
https://youtu.be/8BE3quMJkzI

முள்ளும் மலரும் படத்தின் இந்தி வடிவத்தில்  வடக்கில்  ராக்கி கட்டும் திருவிழா பிரசித்தம் என்பதால் ராக்கி திருவிழா பாடலை வைத்தனர்,விபத்தில் அடிபட்ட கையைக் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வெளியூர் சென்ற அண்ணன் காளி இதில் தனியனாக ரயிலில் வந்து இறங்குகிறான்,கருப்பு போர்வை போர்த்திய அண்ணனைக் கண்டு ஓடுகிறாள் தங்கை தன்வி அஸ்மி.
https://m.youtube.com/watch?v=UtAZPwX_TLM&feature=share

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடலின் மலையாள வடிவத்தில் , பூஜைக்கொருங்கி நிற்கும் பொன்னம்பல மேடு என்ற பாடலாக உருவானது, தாசேட்டா பாடியது,தமிழில் சரத்பாபு ஷோபா மற்றும் தோழியரை ஜீப்பில் வைத்து ஓட்டுவார்,இதில் நாயகி ரோஜாரமணி நாயகன் ஜெயன் ஜீப் ஓட்டுவதை வேடிக்கை பார்க்கிறாள்.
https://youtu.be/2lURwL9AWVE

அடி பெண்ணே!!! பாடலின் மலையாள வடிவத்தில் ஷோபா நடித்த தங்கை கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ரோஜாரமணி நடித்தார், இவர் கோகிலா படத்தில் பணிப்பெண் கதாபாத்திரம் செய்தவர், சரத்பாபு நடித்த லாபாயிண்ட் இஞ்சினியர் கதாபாத்திரத்தில் ஜெயன்,

இந்த ஏது பந்தல் கண்டாலும் அது கல்யாண பந்தல் பாடலைப் பாடியது
வாணிஜெயராம் அவர்கள்.
https://youtu.be/jheuGwFqGn0

மலையாளத்தில் இசை எம்.எஸ்.வி.அவர்கள், தமிழில் படாபட் ஜெயலட்சுமிக்கும் ரஜினிக்கும் டூயட் கிடையாது, இதில் உண்டு,படாபட் வேடத்தில் ஸ்ரீவித்யா நடித்தார், நிறைவாகவே இருந்தது.

இந்தியில் இசை பப்பி லஹரி, இதில் சிறு வயது காளி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார்.சரத்பாபு கதாபாத்திரத்தில் வினோத் மெஹ்ரா நடித்திருந்தார்,இவருக்கு இந்தி வடிவத்தில்  கோட் மாட்டி விட்டனர்.

இப்படத்தின் இசையில் இசைஞானி இசையே மாஸ்டர் பீஸ், எம்எஸ்வி அவர்கள் பழைய மெட்டுகள் எதையும் உபயோகிக்கவில்லை, அனைத்து பாடல்களையும் புதிதாகவே படைத்திருந்தார்.பின்னணி இசையையும் அவர் தன் பாணியில் தான் தந்திருந்தார்,1985 ஆம் ஆண்டு வந்த இந்தி வடிவத்தின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன,ஹிட் அடித்தன,ஆனால் பின்னணி இசை மனதில் நிற்கவில்லை, 

ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா அவர்கள் அழகியல் என்றால் என்ன என்பதை மெய்ப்படுத்திக் காட்டினார், நேச்சுரல் ஒளியமைப்பில் ஜாலங்கள் செய்திருந்தார், மலையாளத்தில் வி.ஏ. விஜயம் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது, இந்தியில் பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கான ஒளிப்பதிவாக மாற்றி செய்திருந்தனர்.

மூன்று படங்களிலும் அந்த மலினமான மளிகைக் கடை காமெடி ட்ராக் தவறாமல் இடம் பெற்றது, இந்திப்படத்தில் வீரு தேவ்கன் ஸ்டன்ட் மாஸ்டர் என்பதால் சண்டைகள் அதிகமாக இருந்தது.

இந்தி வடிவத்தில் பெயர் போடுகையில் ஒரு பாடல் சேர்த்திருந்தனர், தங்கைக்கொரு அண்ணனின் பாட்டு அது, பாடியது எஸ்.பி.பி அவர்கள்.
https://youtu.be/M7t2VlLzDNQ

கடைசியாக இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று இயக்குனர் மகேந்திரனின் பெருந்தன்மை, முள்ளும் மலரும் படத்தின் கதைக்கான க்ரெடிட்டை உமாசந்திரனுக்கு தந்து நல்ல ஒரு துவக்கத்தை ஏற்படுத்தினார், அது மலையாளத்திலும், இந்தியிலும் கூட அவருக்கு மூலக்கதைக்கான க்ரெடிட்டை பெற்றுத் தந்தது.

#முள்ளும்_மலரும்,#வேணலில்_ஒரு_மழா,#ப்யாரி_பெஹனா,#ரஜினி,#மது,#ஜிதேந்திரா,#ரீமேக்,#விஞ்ச்,#க்ளென்_மார்கன்,#ஊட்டி,#மகேந்திரன்,#இசைஞானி,#எம்எஸ்வி,#பாலு_மகேந்திரா

சைவம் அசைவம் | ரஜினி கமல்

சிநேகிதரில் நல்ல சிநேகிதர் கெட்ட சிநேகிதரே இல்லை, உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என்பதே சரியாக இருக்கும்.

நம் உயர்ச்சிக்கு எப்படி நாமே பொறுப்போ, நம் வீழ்ச்சிக்கும் நாமே பொறுப்பு.

தலைவர் ஆரோக்கியமாக இருப்பதால் அரசியலில் குதித்து சேவை செய்தால் சும்மா அதிரும்.

தயிர்சாதம் சாப்பிடுபவர்கள் ஆப்பம் பாயா சிக்கன் 65  சாப்பிடுபவர்களை பகடி வதை செய்வது தவறு, உணவு தீண்டாமை இது என்பதை தலைவர் உணர வேண்டும்.

தலைவர் ஆரோக்கியமாக இருக்க முதற்காரணம் தலைவரின் குடும்ப மருத்துவர்,தலைவரின் இந்தியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த  Nephrologists, தலைவரின் nutritionist என இந்த பட்டியல் நீளும்.

மருதநாயகம் திரைப்படத்தில் கமல்ஹாசன் பாறையை உருட்டியபோது , எருமை மாடு மீது அமர்ந்து பயணித்த போது அவருக்கு வயது 43 , விருமாண்டியில் ஜல்லிக்கட்டு  காளையை அடக்குகையில் அவருக்கு வயது 50, மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் மரணக்கிணற்றில் வாகனம் ஓட்டி சாகசம் செய்து அந்தரத்தில் பறந்து சுவரில் மோதி இடுப்பெலும்பை உடைத்துக் கொண்ட போது அவருக்கு வயது 51, 34 ஆம் முறையாக அவருக்கு நிகழ்ந்த எலும்பு முறிவு அது, அவர் அசைவ உணவு ஆர்வலர், அவரே சமூகத்திற்கு உணவு போஷாக்கு பற்றி பாடமெடுக்க முழுத்தகுதி கொண்டவர் , ஆனால் நம் தலைவர்  சைவ உணவை மட்டும்  உயர்த்திப் பிடிப்பது போல பேசுவது சரியல்ல என்பதை அவரை சுற்றி உள்ளவர்கள் அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

தலைவர் ரசிகர்களின் மேலான கவனத்துக்கு


தலைவர் இரசிகர்களின் மேலான கவனத்துக்கு

பொது அறிவிப்பு

எங்கள் வாடிக்கையாளர் சார்பாக,

 ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், எண்.18, ராகவ வீர அவென்யூ, போயஸ் கார்டன், சென்னை - 600086 இல் வசிக்கிறார், இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான/ அதிகம் பாராட்டப்பட்ட  வெற்றிகரமான நடிகர்களில் முதன்மையான ஒருவர்.

எங்கள் வாடிக்கையாளர் பல தசாப்தங்களாக பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.  ஒரு நடிகராகவும் தனித்துவமான மனிதனாகவும் அவரது தனித்துவமான நளினமான கவர்ச்சியும், தனி  இயல்பும் அவருக்கு உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்களால் அழைக்கப்படும் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்துள்ளது என்றால் மிகையில்லை. 

 திரையுலகம் முழுவதும் அவர் பெற்ற ரசிகர் பட்டாளமும் மரியாதையும் ஒப்பிடமுடியாதது மற்றும் மறுக்க முடியாதது.  அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு நிகழும்  களங்கம், சேதம் அல்லது மீறல் இவை பல துறைகளில் எதிரொலிக்கும், மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளருக்கு பெரும் இழப்பையும் அது ஏற்படுத்தும்.

எங்கள் வாடிக்கையாளர் பிரபல அந்தஸ்தைக் கொண்ட நபர் ஆவார், எனவே அவரது ஆளுமையின் அனைத்து விதமான அம்சங்களிலும் "ஆளுமை/பப்ளிசிட்டி/பிரபல உரிமைகள்" இவை உள்ளடங்கி உள்ளது.  பல்வேறு இணைய தளங்கள் மற்றும் மின் ஊடகங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்பு, சிறு குறு பத்திரிக்கையாளர்கள் எங்கள் வாடிக்கையாளரின் பெயர், குரல், படம், புகைப்படம் மற்றும் கேலிச்சித்திரம், கலைப் படம், கணினி AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கிய படம் மற்றும் பிற குணாதிசயங்களை தங்களை பிரபலப்படுத்துவதற்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்கள் வாடிக்கையாளரின் மேலான கவனத்திற்கு வந்துள்ளது. 

பொதுமக்கள் மத்தியில்  அவர்களின் கவனத்தை பெறுவதற்கும், அவர்களின் உள்ளத்தை கவர்வதற்கும் ஊடக கவனத்தை எப்போதும் தன்வசம்  இழுப்பதற்கும் வாடிக்கையாளர் படங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பொதுமக்களை எப்போதும் கவர்ந்திழுப்பதை செய்கின்றனர்.  எங்கள் வாடிக்கையாளர் சூப்பர் ஸ்டார் என்று நாடெங்கிலும் பிரபலமாக அறியப்படுகிறார்.

மின் ஊடகங்கள்  மற்றும் அச்சு ஊடகங்கள் எதுவாயினும்  எங்கள் வாடிக்கையாளரின் புகைப்படம், வாடிக்கையாளரின் பெயர், வாடிக்கையாளரின் தனித்துவமான புகைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளரின் தோற்றம் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளருக்கு மட்டுமே சொந்தம் அவை  தனித்தன்மை வாய்ந்தவை என்றும், யாரேனும் வாடிக்கையாளரின்  அங்கீகாரமின்றி பயன்படுத்துவது பொதுமக்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று எங்கள் வாடிக்கையாளர் நினைக்கிறார். 

எங்கள் வாடிக்கையாளர் ஒருவரே தனது ஆளுமை, பெயர், குரல், உருவம், தோற்றம் மற்றும் இன்ன பிற குணாதிசயங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நபர் என்று எங்கள் வாடிக்கையாளர் உறுதிபடக் கூறுகிறார்.மேற்சொன்னவற்றை   அங்கீகாரமின்றி பயன்படுத்துதல் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் / அல்லது எங்கள் வாடிக்கையாளர்  என்ற உச்ச ஆளுமையின் எந்த அம்சங்களையும் பின்பற்றுதல் (அவரது பெயர், குரல், படம் மற்றும் எங்கள் வாடிக்கையாளருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புடைய பிற தனித்துவமான கூறுகள் உட்பட எதையும்) அல்லது வணிக ரீதியாக அதைப் பயன்படுத்துதல்  எங்கள் வாடிக்கையாளரின் ஒப்புதல் மற்றும் / அல்லது வெளிப்படையான அங்கீகாரம் இல்லாமல் எதுவாக இருந்தாலும்.

 மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளில், எங்கள் வாடிக்கையாளரின் ஆளுமையின் அனைத்து அம்சங்களிலும் (அவரது பெயர், குரல், படம் மற்றும் பிற தனித்துவமான கூறுகள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்ல) எங்கள் வாடிக்கையாளரின் ஆளுமை/விளம்பரம்/பிரபல உரிமைகளை யாராவது மீறினால் நடவடிக்கைக்குரிய குற்றம் , என்று இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.  எங்கள் வாடிக்கையாளருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புடையது).  எங்கள் வாடிக்கையாளரின் உரிமைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின்படி எங்கள் வாடிக்கையாளர் சிவில் மற்றும் கிரிமினல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்பது இந்த அறிவிப்பின் நோக்கம் ஆகும்.

 நாள்:28/01/2023

 இடம்: சென்னை

 சுப்பையா இளம்பரிதி

 வழக்கறிஞர்

 எண்.364, பழைய எண்.210, லாயிட்ஸ் சாலை, குருபம் கோர்ட்ஸ், பிளாட் எண்.5, தரை தளம், கோபாலபுரம், சென்னை - 600 086.

தொலைபேசி:044 28352995/28352996

PS: இணைப்பு படத்தில் உள்ளது தலைவரைப் போலவே வேடமிட்டு நடிக்கும் நூற்றுக்கணக்கான பேரில் ஒரு உதாரணம்.

புதுக்கவிதை |1981| நாயகன் எழுச்சி காட்சி

புதுக்கவிதை (1982) படத்தில் நாயகன் அதிகார வர்க்கத்துக்கு எதிராக பொங்கி எழும் காட்சி இது, நரம்புகளை முறுக்கேற்றும் படி இருக்கும்,ரஜினி மற்றும் தேங்காய் சீனிவாசன் அபாரமான combo என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

ரஜினியை கருப்பன் என்றார் என்று பணக்கார வாரிசு ஜோதி வந்த காரை ஓட்டுனர் தேங்காய் சீனிவாசன் பாதி வழியில் விட்டுச் செல்வார், அவரை டைகர் எஸ்டேட் எஜமானி சுகுமாரி அல்லக்கையை ஏவி வுட்டு சாட்டையால் அடிப்பார்,  பாமரேனியன் நாயை கொஞ்சியபடி குருரதையுடன் வேடிக்கை பார்ப்பார்.

குடிசையில் படுத்திருக்கும் தேங்காய் சீனிவாசனை பைக்ரேஸில் கோப்பை ஜெயித்து  வந்த ரஜினி பார்க்கையில் உடம்பில் சாட்டையால் அடித்த காயங்களை பார்த்து கொதித்து கையோடு சித்தப்பா தேங்காய் சீனிவாசனை பைக்கில் ஏற்றி கூடவே ஒரு நாட்டு நாய்குட்டியை மடியில் கிடத்தி அந்த ஏவிஎம் பங்களா செட்டிற்குள் பைக்கில் நுழைந்து சென்டர் ஸ்டாண்ட் இட்டு நிறுத்த,  சித்தப்பா பைக்கில் அமர்ந்து நாட்டு நாயை கொஞ்சிய படி அந்த அல்லக்கை பீமராஜு ரஜினியிடம் சாட்டையில் அடிவாங்குவதை வேடிக்கை பார்ப்பார், இதில் பைக் ஸ்டார்ட் செய்கையில் worm eye view ல் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் shot வைத்ததைப் பாருங்கள், hero worship shots ,editing ,slow motion கொண்ட திரைப்படங்கள் இன்று திகட்டிவிட்ட காலம்,அன்று இப்படி தான் துவங்கியிருக்கிறது, hero worship திரைப்படங்களுக்கு பாதை அமைத்துத் தந்த இயக்குனர் என்றால் S.P.,முத்துராமன் அவர்கள் தான், ஏற்றி விட்ட ஏணி, கரை கடத்திய தோணி, இன்று 100 கோடி நாயகர்கள் வாங்க காரணகர்த்தா.

இதே பாமரேனியன் நாய் இதே கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி பட்டுப்புடவை காஸ்ட்யூம்,கால் மேல் கால் கொண்ட எஜமானி கதாபாத்திரத்தை ஸ்ரீ வித்யாவும் மாப்பிள்ளை திரைப்படத்தில் செய்தார்.

புதுக்கவிதை | 1981| ஃபார்முலா படங்கள் | நாயகன் ஆராதனை|

புதுக்கவிதை (1982) படத்தில் நாயகன் அதிகார வர்க்கத்துக்கு எதிராக பொங்கி எழும் காட்சி இது, நரம்புகளை முறுக்கேற்றும் படி இருக்கும்,ரஜினி மற்றும் தேங்காய் சீனிவாசன் அபாரமான combo என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

ரஜினியை கருப்பன் என்றார் என்று பணக்கார வாரிசு ஜோதி வந்த காரை ஓட்டுனர் தேங்காய் சீனிவாசன் பாதி வழியில் விட்டுச் செல்வார், அவரை டைகர் எஸ்டேட் எஜமானி சுகுமாரி அல்லக்கையை ஏவி வுட்டு சாட்டையால் அடிப்பார்,  பாமரேனியன் நாயை கொஞ்சியபடி குருரதையுடன் வேடிக்கை பார்ப்பார்.

குடிசையில் படுத்திருக்கும் தேங்காய் சீனிவாசனை பைக்ரேஸில் கோப்பை ஜெயித்து  வந்த ரஜினி பார்க்கையில் உடம்பில் சாட்டையால் அடித்த காயங்களை பார்த்து கொதித்து கையோடு சித்தப்பா தேங்காய் சீனிவாசனை பைக்கில் ஏற்றி கூடவே ஒரு நாட்டு நாய்குட்டியை மடியில் கிடத்தி அந்த ஏவிஎம் பங்களா செட்டிற்குள் பைக்கில் நுழைந்து சென்டர் ஸ்டாண்ட் இட்டு நிறுத்த,  சித்தப்பா பைக்கில் அமர்ந்து நாட்டு நாயை கொஞ்சிய படி அந்த அல்லக்கை பீமராஜு ரஜினியிடம் சாட்டையில் அடிவாங்குவதை வேடிக்கை பார்ப்பார், இதில் பைக் ஸ்டார்ட் செய்கையில் worm eye view ல் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் shot வைத்ததைப் பாருங்கள், hero worship shots ,editing ,slow motion கொண்ட திரைப்படங்கள் இன்று திகட்டிவிட்ட காலம்,அன்று இப்படி தான் துவங்கியிருக்கிறது, hero worship திரைப்படங்களுக்கு பாதை அமைத்துத் தந்த இயக்குனர் என்றால் S.P.,முத்துராமன் அவர்கள் தான், ஏற்றி விட்ட ஏணி, கரை கடத்திய தோணி, இன்று 100 கோடி நாயகர்கள் வாங்க காரணகர்த்தா.

இதே பாமரேனியன் நாய் இதே கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி பட்டுப்புடவை காஸ்ட்யூம்,கால் மேல் கால் கொண்ட எஜமானி கதாபாத்திரத்தை ஸ்ரீ வித்யாவும் மாப்பிள்ளை திரைப்படத்தில் செய்தார்.

மாங்காடு அடுத்த கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் படப்பிடிப்புகள்

Kovur Sundareswarar Temple

மாங்காட்டை அடுத்த கோவூரில் சுந்தரேஸ்வரர் கோவில் மிகப்பழமையானது, தொண்டை மண்டலத்தின் சிவாலயங்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம் (தூங்கானை மாடம்)கொண்ட கோவில் இது, கல்விக்காரகன் புதன் பரிகார ஸ்தலமும் கூட, இரு வாரங்களுக்கு முன் சென்று படங்கள் பகிர்ந்திருந்தேன், 

இதன் ஏழு நிலை ராஜ கோபுரம் புதுமையானது, பால்கனி போன்ற வடிவமைப்பு எல்லா நிலை கோபுர வாசல்களிலும் நான்கு புறங்களிலும் கொண்டு தனித்துவமான கட்டிடக்கலையுடன் விளங்குகிறது,

உள் பிரகார சுவற்றில் கல்வெட்டுக்கள் பல கொண்ட கோவில், ஆனால் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ்பெற்றது போல இது புகழ்பெறவில்லை, ஆனால் இதுவும் இறைசித்தமே,அவன் விரும்பினால் தான் கூட்டம் திரளும்,அவன் அமைதியை வேண்டினால் குடத்தினுள் இட்ட தீபமாக அமைதியாக அருட்பாலிப்பான்.

நேற்று ஃபேஸ்புக்கில் மனிதன் படத்தின் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருக்கையில் பழைய செங்கல்சூளையை விலைக்கு வாங்கி ரகுவரன் நடத்தும் தனியார்  சிறை மற்றும் வெடிகுண்டு தொழிற்சாலையை வேவு பார்க்கச் செல்கிறார் ரஜினி ,

இந்த கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் கோபுரத்துக்குள் ஏறி அதன் பால்கனி வழியே பைனாகுலரில் வேவு பார்ப்பதைக் கவனித்தேன்,உடனே இதை பகிர்ந்தேன்,நம் ஆட்களுக்கு வருஷம் 16ல்  குஷ்பூ குளித்த குளம் என்றால் நூறு வருடங்களானாலும் மறக்காது, அது போல மனிதன் படத்தில் ரஜினி ஏறிய கோபுரம் இது.

இதற்கு செல்ல நினைப்போர் யாரையும் கேட்காமல் கூகுளில் kovur sundareswarar temple என்று  mapsல் தேடி direction அழுத்தி routeஐ start செய்து போய் வாருங்கள், காலை 7-00 முதல் 11வரை, பின்னர். 4-00 முதல் 8-00 வரை இக்கோயில் திறந்திருக்கும்.

சினிமாக்காரர்கள் ஷூட் செய்ய  அருமையான லொக்கேஷன் , ராஜகோபுரத்தின் எதிரே மாட வீதி , அசோக மரங்கள் ,சிதிலமுற்ற பழமையான திண்ணை அக்ரகார வீடுகள் உள்ளன.

மனிதன் படம் பற்றி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10157852490801340&id=750161339

#கோவூர்,#சுந்தரேஸ்வரர்_கோவில்

தப்புத்தாளங்கள் | தப்பிடதாளா |1978 | திரைப்படம் | கே.பாலசந்தர்


































http://geethappriyan.blogspot.com/2015/01/1978-1.html?m=1

http://geethappriyan.blogspot.com/2015/01/1978-2.html?m=1

http://geethappriyan.blogspot.com/2015/01/1978-3.html?m=1

#தப்பிட_தாளா,#தப்புத்தாளங்கள்,#கழுகன்,#கே_பாலசந்தர்,#BS_லோகநாத்,#சரிதா,#ரஜினிகாந்த்,#தப்பிடதாளா,#விஜயபாஸ்கர்,#கவிஞர்_கண்ணதாசன்,
#சுந்தர்ராஜ்,#தேவு,#சரசு,#சோமா,#மேரி,#அனந்து,#கமல்ஹாசன்,#ஹுன்சூர்_கிருஷ்ணமூர்த்தி


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)