அடூரின் எலிப்பத்தாயம் திரைப்படம் மற்றும் நடிகர் கரமன ஜனார்தனன் நாயர்

எலிப்பத்தாயம் திரைப்படத்தில் கரமன ஜனார்த்தனன் நாயர் செய்த உன்னி கதாபாத்திரத்தை ஒருவர் மறக்க இயலாது, எலிப்பத்தாயம் படத்தில் கதாபாத்திரங்களின்  குணாதிசயத்தைக் காட்ட ஒட்டுண்ணியான இவருக்கு வெள்ளை, சுயநலமியான மூத்த சகோதரி ஜானம்மாவுக்கு பச்சை , இவருக்காக  உழைத்து ஓடாகும் நடுத் தங்கை ராஜம்மாவுக்கு நீலம், எதிலும் பட்டும் படாமல் , காரியம் சாதித்து, நேரம் வருகையில் தப்பிக்கும் கடைசி தங்கை ஸ்ரீதேவிக்கு சிகப்பு என வண்ணங்களை அரத்தமுள்ளதாக தெரிவு செய்திருப்பார் இயக்குனர்  அடூர் கோபாலகிருஷ்ணன்.

உன்னி தன் ஏமாளித் தங்கையை தொட்டதற்கெல்லாம் ராஜம்மா, ராஜம்மா, ராஜம்மோவ் என ராகமாக விளிப்பது இன்னும் காதில் கேட்கிறது

 கரமன ஜனார்த்தனன் நாயர் தோன்றும் சிறு கதாபாத்திரத்தையும் மிளிர வைப்பார், திங்களாழ்சே நல்ல திவசத்தில் கவியூர் பொன்னம்மாவின் மூத்த மகன், கல்ஃபில் இருக்கும் இளைய மகன் மம்முட்டி , பெங்களூருவில் ப்ளாட் வாங்க தரவாட்டு வீட்டை விற்க நினைக்க, மும்பையில் அரசு ஊழியரான இவருக்கு அதை மறுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது, மனைவி ஸ்ரீவித்யா 20 வருடங்களாக வாடகை வீட்டிலேயே இருக்கிறோமே என்ற சராசரிப் புலம்பல்கள், என அருமையான வேடம்,தசரதம் படத்தில் மோகன்லாலின் கேர்டேக்கர் / மேனேஜர், அருமையாக செய்திருப்பார்.ரங் ரஸியா (rang rasiya ) (2008)

19 ஆம் நூற்றாண்டு ஓவியரான ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் நிரம்பியது, அவர் மீதான புனித பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது நிலைத்துவிட்டதால் அவர் மீதான உண்மையான மதிப்பீடுகள் நம்மிடம் இல்லை, இத்தனைக்கும் அவர் வரைந்த இறைவியர் படம் இல்லாத வீடுகள் குறைவு

ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாற்று நாவல், மராத்தி எழுத்தாளர் ரஞ்சித் தேசாய் எழுதி 1960களில் வெளியானது, அதை இயக்குனர் கேத்தான் மேத்தா ( மங்கள் பாண்டே படத்தின் இயக்குனர்) திரைக்கதை வடிவம் தந்து இயக்கி ரங் ரஸியா என்று இந்தியிலும், colours of passion என்று ஆங்கிலத்திலும் உருவானது, இது 2008 ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் வெளியானது, பொருளாதார நெருக்கடியால் அதன் பின் 6 வருடங்கள் கழித்தே 2014 ல் இந்தியாவில் வெளியானது

இப்படத்தில் ரவிவர்மாவின் பிறப்பு, வளர்ப்பு, ஐரோப்பிய தைல பாணி ஓவியத்தின் மீதான நாட்டம்,அப்பாணியில் புராதான கதை மாந்தரையும், இந்து கடவுளரையையும் முயன்று பார்த்து அவர் பெற்ற நிபுனத்துவம் ,  அதனால் அவர் பெற்ற அகில உலக கவனம், அவர் வரைந்த ஓவியங்கள் உருவான பின்னணி, அவர் சந்தித்த சங்பரிவார் அமைப்புகளின் அச்சுருத்தல்கள், தாக்குதல்கள், வழக்குகள் , இவரின் ஓவித்திற்கான மாடல்கள், அவர்கள் மீதான மையல், பெற்ற விருதுகள், இவரது இறைவியர் ஓவியங்களை வெற்றிகரமாக லித்தோக்ராஃப் பிரதிகளாக சந்தைப் படுத்திய விதம், ப்ளேக் நோய்  இந்தியாவில் பரவிய போது, இவர் இறைவியரை ஆடையின்றி வரைந்தது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு இவர் அடித்து துவைக்கப்பட்டு இவரின் அச்சுக்கூடம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், இவர் இந்திய திரை மேதை  பால்கேவுக்கு  முதல் திரைப்படம் உருவாக பொருளுதவி செய்தது என நிஜ சம்பவங்களை மிகுந்த அழகியலுடனும், காதல் காட்சிகளில்  சரசம், விரசம் ததும்பவும் படமாக்கியிருக்கிறார் கேத்தான் மேத்தா

ஜிஸ்ம் புகழ் நடிகர் ரந்தீப் ஹூடா ராஜா ரவி வர்மாவாக தோன்றியுள்ளார்,

நடிகை நந்தனா சென் மிகவும் துணிந்து இவரின் காதலி சுகந்தா வேடத்தில் தோன்றியுள்ளார், அவரின் துணிச்சலுக்கும் அற்பணிப்புக்கும் இந்த காஹே சத்தாயே ரெப்பியா என்னும் பாடலே சான்று

ரவிவர்மாவின் வாழ்க்கையை இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இயக்கி 2011ல் மலையாளத்தில் வெளியான மகரமஞ்சு ஒரு முழுமையில்லா முயற்சியாக அமைந்தது, அதில் ரவி வர்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை விட அவரின் காதல் களியாட்டங்களுக்கே முக்கியத்துவம் இருந்தது, சந்தோஷ்சிவன்  அதில் ரவிவர்மா, கார்த்திகா அவரின் காதலி சுகந்தா, காஸ்டிங்கில் சொதப்பிய படம், அதைவிட ரங்ரஸியா பல வகையிலும் முன்னோடியும், முழுமையான படைப்பும் ஆகும்.

இப்படத்தில் சந்தோஷ் சிவன், பல்கேரிய ஒளிப்பதிவாளர்  Christi bakalov, rali raltchev ஆகிய மூவரின்  ஒளிப்பதிவு இப்படத்தை நூற்றாண்டு காலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றால் மிகையில்லை,அதே போன்றே சந்தேஷ் ஷாண்டில்யாவின் இசையும்

காஹே சத்தாயே ரெப்பியா பாடல் இங்கே,வயது வந்த கலா ரசிகர்களுக்கு மட்டும்,

இவ்வருடம் மட்டும் ரந்தீப் ஹூடாவுக்கு சரப்ஜித், சுல்தான், லால்ரங், Do Lafzon Ki Kahani என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன, வித்தியாசமான சர்ச்சைக்குரிய  கதாபாத்திரங்களில் தன்னை அற்பணிக்கும் நடிகர் இவர், இவர் படங்களை தேடிப் பாருங்கள்.

https://youtu.be/shMisppv_yE

முழுப்படமும் யூட்யூபில் உண்டு,

டாரண்ட் இங்கே

https://torrentz.eu/fbec0ce7aba36def218f409b55fafc84eb2b1b48

இசையமைப்பாளர் ஔசப்பச்சன் தந்த நீ என் சர்க்க சௌந்தர்யமே

இசைஞானியின் கொக்கரக்கோ படத்தில் வரும் ,எஸ்பிபி பாடிய கீதம் சங்கீதம் பாடலை ஒருவர் மறக்க முடியாது,

அப்பாடலைப் படைப்பூக்கமாகக் கொண்டு பரதன் இயக்கி  1985ல் வெளியான காதோடு காதோரம் படத்தில் வரும் நீ என் சர்க்க சௌந்தர்யமே என்ற தாஸேட்டா மற்றும் லத்திகா பாடும் பாடல் இது.என்ன அற்புதமான பாடல் பாருங்கள்.

ஒரு படைப்புக்கு செய்யும் மரியாதை இப்படித்தான் ஆராதனையாக அமைய வேண்டும், அதை ஔசப்பச்சன்  நன்கு உணர்ந்து இப்பாடலை படைத்திருப்பதைப் பாருங்கள்.இது அவரின் முதல் படம்.

படத்தில் நாயகன் மம்முட்டி ஒரு வயலினிஸ்ட், ஔசப்பச்சன் மாஷே அடிப்படையில் வயலினில் விற்பன்னர்,நாயகன் வாசிக்கும் வயலின் போர்ஷன்களை அப்படி பார்த்துப் பார்த்து இழைத்து அழகூட்டியிருப்பார், வயலினால் சிரிப்பார், வயலினால் அழுவார், வயலினால் உருக வைப்பார்,

இப்பாடலின் வரிகள் ஓஎன்வி குருப்


பாடல் இங்கே

https://youtu.be/w3bRoJzmiGc

காதோடு காதோரம் மலையாளப் பாடல்

காதோடு காதோரம் தேன்சோரும் மாமந்த்ரம் என்ற பாடல் மிக அற்புதமான படைப்பு,

https://youtu.be/zmZVL_seRRs

இதற்கு இயக்குனர் பரதன் அவர்கள் தான் இசை, ஓ என்வி குருப்பின் வரிகளில் பாடகி லத்திகா பாடும் இப்பாடல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது, இதைக் கேட்கும் யாரும் இதை சித்ரா பாடியது என்றே நினைப்பார்கள்,

இதில் வரும் இசை பாணி நமக்கு ஜான்ஸன் மாஷேவையும், ரவீந்திரன் மாஷேவையும் நினைக்க வைக்கும், இவர்களின் இசையில் இசைஞானியின் தாக்கம் இருக்கும்,அவரை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தை இருவரின் படைப்புகளில் நாம் காணமுடியும்.தவிர இயக்குனர் பரதன் இசைஞானியின் ரசிகரும் கூட.

கடினமான ஏற்ற இறக்கங்களில் லாவகமாக பயணித்துத் திரும்பும் ஒரு அமைப்பு கைகூடிய பாடல் , குழலும் யாழும் தந்தி, தோல் வாத்தியங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும்.இருந்தும் உடன் பயணிக்கும்  பேஸ் கிட்டாருக்கு நின்று வழிவிடும்.இப்பாடலைக் கண்ணை மூடிக் கேட்டு கரைந்து போவீராக

இப்பாடலை லயித்துப் பாடிய பாடகி லத்திகாவும் ஜென்ஸி போலவே மாத சம்பள வேலையே சாஸ்வதம் என ஒதுங்கிக் கொண்டார்,

இவர்  இப்போது சுவாதித் திருநாள் கல்லூரியில் பேராசிரியர், இவர் பாடிய பல அருமையான பாடல்களின் க்ரெடிட்கள்  பாடகி சித்ராவைச் சென்று சேர்வது ஒரு புரியாத புதிர், நன்கு உன்னிப்பாக கேட்கையில் வித்தியாசம் புலப்படும், இவர் பாடகி சித்ராவிற்கு சீனியர், இயக்குனர் பரதனின் பெரும்பாலான படங்களில் பாடியவர், என இவருக்கு பெரிய மறக்கடிக்கப்பட்ட பின்னணி உண்டு.இவரின் தி இந்து பேட்டி இங்கே
http://m.thehindu.com/features/cinema/unforgettable-lathika/article304237.ece

பருவராகம் படத்தின் இசையமைப்பாளர் ஹம்சலேகா பற்றி

இசையமைப்பாளர் ஹம்சலேகா தமிழில் சுமார் பத்து படங்கள் செய்திருப்பார், அதில் பருவராகம் சூப்பர்டூப்பர் ஹிட், இப்படத்தின் அத்தனை பாடல்களும் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்தது, அப்போது கேசட் பதிவு செய்பவர்களின் முக்கிய தேர்வு பருவராகம், இப்படத்தை  பழைய தியேட்டர்கள் வருடா வருடம் செகன்ட் ரிலீஸ் செய்து கல்லா கட்டினர், எங்கு திரையிட்டாலும் கூட்டம் அலைமோதிய படம், ஹம்சலேகா இதில் 9 பாடல்கள் தந்திருந்தார்,பாடல் வரிகள் தமிழில் வைரமுத்து எழுதியிருந்தார்

இதில் எனக்கு மிகவும் பிடித்தவை
1. பூவே உன்னை நேசித்தேன்
2.கிளிகளே ராகம் கேளுங்களேன்
3.காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
4.ஒரு மின்னல் போல இங்க
5.ஏ மாமா வண்டி ஓட்டக் கத்துக்குடு மாமா
6.மோசக்காரனா நான் வேஷக்காரனா?
7.ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம்

இது தவிர 2 சிறிய பாடல்களும் உண்டு,இதில் காதல் இல்லை என்று சொன்னால் பாடல் தாஸேட்டா பாடியது,ஒரு மின்னல் போல பாடல் ரமேஷ் பாடியது இவர் பின்னாளில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆனார்,

அவரின் அப்பா மாணிக்க விநாயகம், (இவரின் விழிகளில் அருகினில் வானம் மிக அற்புதமான பாடல். )

மற்ற எல்லா பாடல்களையும் எஸ்பிபி ,ஜானகி பாடி அசத்தினர்

பருவராகம் கன்னடத்தில் ப்ரேமலோகா என்ற பெயரில் வெளியானது, ஜூஹி சாவ்லாவின் அடுத்த வீட்டுப் பெண் போன்ற எளிமையான அழகும் படத்தில் திகட்டத் திகட்ட வந்த ரொமான்ஸ் காட்சிகளும் இப்படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது, இப்படம் வெளியான ஆண்டு 1987, நான் முதலில் பார்த்தது 1989, அடுத்து ஒவ்வொரு வருடமும் எந்த தியேட்டர்களில் திரையிட்டாலும் போய் பார்த்திருக்கிறேன், தமிழில் இதே போல அடுத்ததாக  நிகழ்ந்த ஒரு லவ் ரொமான்ஸ் மேஜிக் என்றால் அது செம்பருத்தி தான்.

நாட்டுக்கொரு நல்லவன் என்றொரு திராபை படம், சினிமா படங்கள் கூட போரடிக்கும் என அப்படம் பார்க்கையில் தான் முதலில் விளங்கியது, அதற்கும் இவர்தான் இசை, அதிலும்  பாடல்கள் மிகஅருமையாக அமைந்தது.பார்க்கச் சகிக்காத ரஜினி படம், அதில் மற்றொரு காமெடி மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படத்தின் பெயரை உபயோகித்து விளம்பரத்துக்காக வீட்டுக்கொரு நல்லவன் (பப்பி லஹரி இசை) என்று ஒரு இந்தி டப்பிங் படத்தை தழுவி வெளியிட்டனர், அதை முந்தைய படம் தந்த உச்ச வெறுப்பில் ரஜினி ரசிகர்கள்  கூட சீண்டவில்லை

ஹம்சலேகா பாரதிராஜாவின் கொடி பறக்குது(சேலை கட்டும் பெண்ணுக்கொரு) , மற்றும் கேப்டன் மகளுக்கு (ஏதோ உன்னிடம் இருக்கிறது) இசையமைத்தார்.ஆர்.வி.உதயகுமாரின் புதியவானம் படம் ( ராக்குயிலே கண்ணுல என்னடி கோவம்?), பி.வாசுவின் வேலை கிடைச்சிடுச்சு ( நஞ்ச புஞ்ச நம்ம மண்ணுக்கழகு ரெண்டு கண்ணுக்கழகு), போன்றவை, இவருக்கு கன்னட சினிமாவில் நாத ப்ரம்மா என்ற பட்டம் உண்டு.இவர் கரநாடகாவில் இசைப் பல்கலைக் கழகமும் துவங்கி நடத்தி வருகிறார்.

நம்ரதா கி ஸாகர் (namrata ke sagar) (2008)

இசைஞானி இசையில் மகாத்மா காந்தியின் நம்ரதா கி சாகர் என்ற பஜன் , இந்த ஹிந்தி பஜன் பாடலின்  துவக்க வரிகளை

He Namrata ke sagar, teri apni namrata de
He bhagvan tu kabhi Madad ke liye aata hai?

இசைஞானி இதை எத்தனை கவனமாக உருக்கமாக ஆரம்பித்து வைப்பதைக் கேளுங்கள், உடன் இணைந்து தொடர்பவர் பண்டிட் பீம் சென் ஜோஷி,இந்த பஜனை அழகாக முடித்து வைப்பவரும் இசைஞானி தான்.

பின்னர் இதே துவக்க வரிகளை கவிதை போல வாசித்த அமிதாப் மிகவும் மிகவும் சிலாகிக்கிறார்.

இது ஆதித்ய பிர்லா குழுமத்தின் பெருமைமிகு தயாரிப்பு, ஆனால் எங்கும் அவர்கள் விளம்பரமில்லை, இந்த பஜனை காந்தி அவர்கள் பிர்லா குடும்பத்தினருடன் தங்கியிருக்கையில் இயற்றியது எனப் படித்தேன்,

இப்பாடலில் இசைஞானியின் பங்களிப்பு முக்கியமானது, 2008 ல் இது திருப்பதியில், நடிகர் மோகன்பாபு தலைமையில் வெளியாகியுள்ளது, இதை ஏன் அதிகம் பரப்புரை செய்யவில்லை எனத் தெரியவில்லை.இந்த தொகுப்பில் அஜய் சக்ரபொர்த்தியும் பாடியுள்ளார், அந்த 2 பாடல்கள் தேடிப் பகிர்கிறேன்

https://youtu.be/aqubTvPoyJw

புரவ்ருதம் ( puravrutham ) மலையாளம் (1988)

இயக்குனர் லெனின் ராஜேந்திரனின் புரவ்ருதம்  puravrutham (1988)  இடதுசாரி சிந்தனைகள் பேசிய அருமையான படம்,

நக்ஸலைட் புரட்சி உருவாவதற்கு முந்தைய கேரளத்தின் குக்கிராமத்தில் , தம் கூலியாட்களைச் சுரண்டிப் பிழைக்கும்  முதலாளியை, கடைசி வரை எதிர்த்து நின்று போராடும் ஓர் உண்மை  வீரனின் கதை,

ராமன் என்ற மைய கதாபாத்திரத்தில் ஓம்புரி, அவரின் மனைவியாக ரேவதி, இவர் தன் மனைவியை முதலாளிக்கு புரிந்துணர்வுடன் கூட்டித் தராத காரணத்தால் இவர் ப்ரஷ்டு செய்யப்பட்டு ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப் படுகிறார்.இவருக்கு  தங்க இடம் தரக்கூடாது, அருந்த கள் தரக்கூடாது, மளிகை தரக்கூடாது, சவரம் செய்யக்கூடாது, வைத்தியம் பார்க்கக் கூடாது என ஆயிரம் கெடுபிடிகள்.

இவர் அதையும் மீறி மனைவியுடன் விவசாயம் செய்கிறார்.யார். வந்தாலும் வீழ்த்துகிறார்.

இவரை அடக்கி ஒடுக்க வெளியூரில் இருந்து கூட்டி வரப்படும் களரிவீரனாக முரளி,ஊருக்குள் வந்தவர் ராமனின் அசல் வீரம் பார்த்து பிரமித்து அவனின் நண்பனாகிறார்,

அங்கே முதலாளியால் வன்புணர்ந்து விதவையாக்கப்பட்ட மாப்ளமார் சமுதாயப் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்,அப்பெண்ணை மணமுடிக்க விழைகிறார்.

இவர்கள் முன்னெடுத்தப் புரட்சி என்னவாகிறது? என்பது தான் மீதக் கதை, இது முதலாளி வர்க்கத்தின் வேடகைக்கு பலியான ஆயிரமாயிரம் ஏழைக் கூலிகளின் உண்மைக்கதை

ஓம்புரி, முரளி,  ரேவதி, பாபு நம்பூதிரி,கூலிகள் யார் திருமணம் செய்தாலும்  நைச்சியமாகப் பேசி முதல் ராத்திரியில் முதலாளிக்கே கூட்டித் தரும் கணக்காளனாக இன்னசன்ட்,

முதலாளியாக பாலன் கே நாயர் , மற்றும் கேபிஏஸி லலிதா என  அருமையான காஸ்டிங்கைக் கொண்ட படம்,

ராமசந்திரபாபு ஒளிப்பதிவு மிகுந்த ரசனையுடன் இருக்கும், வனக்காட்சிகள், வயல் பரப்புகள், மின்சாரமில்லாத ஓர் கிராமம், அதன் மனிதர்கள்  என அச்சு அசலாக காட்டியிருப்பார்,  கவளம் நாராயண பணிக்கர் நாட்டார் பாணியில் இசையமைத்துள்ளார்.

முதலாளிமார்கள் தங்களிடம் வேலை செய்த கூலிகளின் மனைவிமாரைப் பெண்டாள்வதை விதேயன், தலப்பாவு, பரதேசி போன்ற திரைப்படங்கள்  பேசியது, இது அதற்கெல்லாம் முன்னோடி

முழுப்படமும் இங்கே, சப்டைட்டில் இல்லை, ஆனாலும் புரியும், அவசியம் பாருங்கள்
https://youtu.be/vknslLCjjWs

செங்கோல் திரைப்படத்தில் வரும் பாதிராப் பால்கடவில் பாடல்

கிரீடம் படத்தின் இரண்டாம் பாகமான செங்கோலில் வரும் இந்த பாதிராப் பால்கடவில் அம்பிலிப் பூந்தோணி என்னும் பாடல் மிகவும் முக்கியமானது.

உலகத்தின் துயரையெல்லாம் ஒட்டுமொத்தமாக அனுபவித்த சேது மாதவன் (மோகன்லால்) மற்றும் அவர் தாய் தங்கை ஒரு டெம்போ வண்டியில்,  தாய் மாமன் (சங்கராடி) தரவாடிருக்கும் சொந்த ஊருக்குச் செல்கையில் வரும் இந்த பாடல்.

அது வரை இவர் அனுபவித்த காயத்தின் வலிகளுக்கெல்லாம் மருந்திடுவது போல அமைந்திருக்கும்,  சுயபச்சாதாபத்தால் விசும்பும் குழந்தையை அன்னையும் தந்தையும் மாற்றி மாற்றி தேற்றுவது போல இப்பாடலில் தாஸேட்டா மற்றும் சுஜாதாவின் குரல் ஆறுதல் தரும். தாய்மடியில் தலை வைத்து ஆறுதல் அடைவது போன்ற ஒரு உணர்வு ,  இதன் காரணம் உணர்வு ரீதியாக நம்மை படத்துக்குள் ஐக்கியமாக்கும் ஒளிப்பதிவாளர் வேணு அவர்களின் விஸுவல்கள், ஏ.கே.லோஹிததாஸ் மற்றும் சிபிமலயில் duo  நமக்களித்த அற்புதமான படைப்பு செங்கோல்.அதிலும் இப்பாடலை உருவாக்கி அதை சரியான தருணத்தில் படத்தில் நுழைத்த விதம்,சினிமாவில் பாடல்கள் ஏன் தேவை ? என்று நமக்கு உணர்த்தும்.

இதில் வரும் மான்டேஜ் ஷாட்கள் அபாரபான அழகியலைக் கொண்டிருக்கும்.மோகன்லால் தன் உயிர் நண்பன் நஜீபிடம் பேசிக் கொண்டிருக்கையில் தூரே தேங்காய்க் குலை விழும்,இவருக்கு புனர் ஜென்மம் அளித்த கீரிக்காடன் மகள்,எழுதிய கடிதத்தை லயித்து வாசித்து உறைந்திருப்பார், அக்கடிதம் பறந்து போகும், அதைப் பிடிக்க விழைவார்.

தன் காதலியும்  தாய் மாமன் மகளுமான பார்வதி புகுந்த வீட்டில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போயிருக்க, அவரின் மகளை இவர் சைக்கிளின் முன்னே வைத்து கதை பேசியபடி ஓட்டிச் செல்வார், பம்ப் செட்டில் குழந்தையை நனைய வைப்பார், சிறு பாலத்தின் மீது நின்று கீழே கடக்கும் வாத்துக் கூட்டத்தை இவர்கள் வேடிக்கைப் பார்ப்பர்,அவளுக்கு அல்லித்தளிரை  பறித்துத் தருவார்,

இன்னொரு காட்சியில் சொக்கிப்  போவோம், ஒரு காயல் கரை, அங்கே கட்டப்பட்ட வல்லம் ஒன்று முந்தைய நாள் மழையில் முழுக்க நிரம்பியிருக்கும், அங்கே இவரின் காதலி இந்து(சுர்பி)வின் நிழல் நீரில் விழும், பின்னர் இவரின் நிழல், ரம்மியமான காட்சி, வேணு அவர்கள் நம் மனதில் உயர்வார்.

தன்னால் கொல்லப்பட்ட கீரிக்காடனின் குடும்பத்துடன் மெல்ல புரிதலை வளர்த்து ஐக்கியமாவார் லாலேட்டன், தங்கள் நிலத்தில் விளைந்தவற்றை சுமந்து சென்று, அவர்கள் வீட்டு வாசலில் இறக்கி வைப்பார்.அவரின் வருங்கால மாமியார் சாந்தி கிருஷ்ணாவுக்கு இவர் மீது மரியாதை மெல்ல பிறக்கும்.இறுக்கமான முகம் பூ போல் மலரும்.

தன் அன்னையின் வைத்தியத்துக்காக தன் உடலை விற்று சம்பாதித்த தங்கை (உஷா) கசவணிந்து  நிலவிளக்கு ஏந்தி தீபம் தீபம் என்றபடி வாசலுக்கு வருவாள்.

மற்றொரு காட்சியில் அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவர்.இதில் தூக்கிட்டு இறந்து போன திலகன் மட்டும் சிறு  போட்டோவில் கூட எங்கும் தென்படமாட்டார், அவர் அரூபமாக இவர்களுடன் எல்லா ஃப்ரேம்களிலும் இருப்பார்.

இப்படி ஒரு நசிந்த குடும்பம் மெல்ல தேறி அடுத்த அடியை எடுத்து வைப்பதைச் சொல்லும் பாடல், இது கைதப்பரம் தாமோதரன் நம்பூதிரியின் பாடல் வரிகள், ஜான்ஸன் மாஷே அவர்களின் இசை.

இப்பாடல் பாருங்கள், கேளுங்கள், படத்தை தன்னால் பார்ப்பீர்கள்

https://youtu.be/a9irJV1s9vk

Tuhya Dharma Koncha? (Whats Your Religion?) துஹ்யா தர்மா கோன்சா ?(நீ என்ன மதம்? ) மராத்தி 2013http://youtu.be/nSmkzw71Cxo

துஹ்யா தர்மா கோன்சா ?(நீ என்ன  மதம்? ) படம் 2013ல் வெளியானது, மராத்தி சினிமாவின் நம்பிக்கை ஒளி இயக்குனரான சதீஷ் மன்வார் இயக்கியது, அவரின் காப்ரிஸ்சா பாவூஸுக்கு (மோசக்கார மழை) நிகரான மெய்கீர்த்தி நிறைந்த படத்தை இன்னும் காண வாய்ப்பு அமையவில்லை,

இந்த இரு தேசிய விருதுகள் வென்ற நீ என்ன மதம்? படத்தை மூன்று வருடங்களாக எல்லா சாத்தியமான வழிகளிலும் பார்க்கத் தேடுகிறேன் , கிடைக்கவில்லை,

இது கானக மஹாராஷ்டிரத்தில் சீரழிக்கப்படும் பழங்குடி இன குடும்பத்தின் கதை, மேல்கோட் என்கிற புலிகள் சரணாலய வனப்பகுதியில் புலியை வேட்டையாடியதாக பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் குடும்பத் தலைவன் , அவனை மீட்க எதற்கும் துணியும் அவன் மனைவி, அக்குடும்பத்தை சமூகமும் மதங்களும் வேட்டையாடும் கதை, இதன் ட்ரெய்லரே எத்தனை அருமையாக உள்ளது பாருங்கள்,இதை தேடியது போல எப்படத்தையும் தேடியதில்லை, ஏனெனில் மெய்கீர்த்திக்காக

இயக்குனர் இன்று வெளிட்ட போஸ்டில் கேட்டேவிட்டேன், என் விலாசம் அனுப்பினால் டிவிடி அனுப்புவதாக பதில் கூறினார், நான் சென்னை முகவரி தந்துள்ளேன், படம் பார்த்து விட்டு எழுதுவேன்.நன்றி இயக்குனர் சதிஷ் மன்வார் @ Satish Manwar

ஸைராத் ( sairat) 2016பெண்ணின் கர்ப்ப பாத்திரத்தை முன்வைத்து செய்யப்படும் கௌரவக் கொலைகளை நேர்மையாக பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியலில் சய்ராத் மராத்தி திரைப்படத்துக்கும் முக்கிய இடமுண்டு

இப்படத்தில் முற்பாதி மட்டுமே வணிக நோக்கில் அமைந்துள்ளது, படம் இவர்கள் கரும்புக்காட்டில் பதுங்கித் தப்புகையிலேயே வேறு வடிவம் பெற்றுவிடுகிறது, கிட்டத்தட்ட அந்த 45-60 நிமிடத்துக்கு பின்னணி இசை இல்லை,ஹைதராபாதின் குன்றுகள் நிரம்பிய நிலப்பரப்பில் நிஜமான சேரியை  தெலுங்குப் படங்களே இத்தனை நிஜமாக காட்டியதா தெரியவில்லை, குணா படத்தில் கமல் இந்த நிலப்பரப்பை சரியாக உள்வாங்கி செட் போட்டிருப்பார், சாங்கியா என்கிற நாகராஜோ நிஜமாகவே அச்சேரியை காட்டிவிட்டார்,எனக்கு இந்தியும் தெலுங்கும் புரிந்து கொள்ள முடியும், கஷ்டப்பட்டு மராத்தியையும் உள்வாங்கிக் கொண்டேன், இது சென்சார் காப்பி ப்ரிண்ட் ஆனால் சப்டைட்டில் இல்லை, படத்தை இங்கே நான் பார்ப்பதற்குள் போன வாரம் தூக்கிவிட்டனர், படம் இங்கு நல்ல வெற்றி, சாங்கியா தலைமையில் அரச்சியும், பர்ஷ்யாவும் இங்கே வந்திருந்த வீடியோவைப் பார்த்தேன், நமக்குத் தேவையானவை எல்லாம் கால தாமதமாகத் தான் கண்ணில் படும்

படத்தை விரிவாக விரைவில் எழுதுவேன்பரதம் (மலையாளம்) ரகுவம்ஸபதே பரிபாலயமாம் என்னும் மறக்க முடியாப் பாடல்https://m.youtube.com/watch?v=LQswhqFAzJA&feature=youtu.be

பரதம் படத்தில் வரும் ரகுவம்ஸபதே பரிபாலயமாம் முக்கியமான பாடல், அண்ணன் ராமனின் சிறப்பை பரதன் பாடுவது போன்ற பாடல், இது தாஸேட்டா தன் தனிக்கச்சேரிகளில் பாடும் பாடல், 

இது படத்தில் வரும் சிச்சுவேஷனும் அண்ணன் தம்பி பாசத்தை மிக அருமையாக பறைசாற்றும், 

அண்ணன் நெடுமுடி வேணுவின் குடிப்பழக்கத்தால் நின்று போன வெளியூர் கச்சேரி ஒன்றை, தம்புர் மீட்டும் தம்பி மோகன் லால் சடுதியில் பாடி குடும்பப் பெயரைக் காப்பாற்றுகிறார்.

அதிலிருந்து அண்ணனின் அந்திமம் துவங்குகிறது, ஆனால் இதற்கு மோகன்லால் காரணமல்ல, இனி அண்ணனை யாரும் புதிய கச்சேரிகளுக்கு ஒப்பந்தம் செய்யாமல், அதே வீட்டில் வசிக்கும் தம்பி மோகன்லாலையே கேட்கின்றனர், 

இது தான் இனி சாஸ்வதம் என அதை அண்ணனும்  குடும்பமும் ஏற்கிறது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவான மோகன்லால் தீவிரமாக கச்சேரிகள் செய்யத் துவங்கும் தருணம்

அண்ணனின் ஆசிர்வாதம் வாங்கி, கோவையில் சென்று முதல் கச்சேரி செய்கிறார், அண்ணன் குடி போதையில் தம்பி பாடுவதை பார்வையாளராக அமர்ந்து 
பார்த்தவர்,

 தன் பாட்டன், தந்தை தான் பாடியதையெல்லாம்  தூக்கி சாப்பிட்டு ஆலாபனை செய்யும் தம்பியை தள்ளாடியபடி மேடையேறிப் போய் உச்சி மோர்ந்து முத்தமிட்டு, தன் தங்க சங்கிலியையும் அணிவித்தபின் மேடை இறங்கியவர், மனதில் எந்த காழ்ப்புணர்வுமின்றி புதிய உதயம் ஒன்றைத் தேடிச் செல்வார்

மிக அற்புதமான காட்சி அது, லோஹிததாஸ் மற்றும் சிபி மலயில் இருவர் தந்த ஒப்பற்ற படைப்புகளில் பரதம் முதன்மையானது, மிகுந்த பரவசமானது,  அத்தனை அற்புதமான படைப்பு பரதம், 

லாலேட்டன், நெடுமுடி வேணு, லட்சுமி, ஓடுவில் உண்ணிகிருஷ்ணன் , முரளி, ஊர்வசி, கவியூர் பொன்னம்மா என மிக அருமையான காஸ்டிங் இப்படத்தின் பலம், ரவீந்திரன் மாஷேவின் இசை, தாஸேட்டனின் குரல் என இப்படத்தின் பாடல்கள் அத்தனை சிறப்பு பெற்றவை

படம் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்

ஸ்ட்ரா டாக்ஸ் 1971 (Straw dogs )


டஸ்டின் ஹாஃப்மேன் எனக்கு மிகப்பிடித்த நடிகர், இவர் ஸ்ட்ரா டாக்ஸ் 1971 படத்தில் ஒரு கணித ஆராய்ச்சியாளர் கதாபாத்திரம் ஏற்றிருப்பார், அத்தனை இயல்பாயிருக்கும், ஊரக இங்கிலாந்தில் தன் அழகிய மனைவியின் பாரம்பரிய வீட்டிற்கு விடுமுறைக்கு விலையுயர்ந்த ஜாகுவார் கன்வெர்டிபிளில் வருவார், நீண்ட விடுமுறைக்கு வேண்டி வீட்டை புராதான பொருட்களைக் கொண்டு உள் அலங்காரம் செய்வார்.

அவ்வூரில் இவர் மனைவியின் பழைய பள்ளித் தோழர்களுக்கும் ஊராருக்கும் இவர் பழம் போலத் தெரிவார்,அந்த நண்பர்கள் இவரது வீட்டுத் தொழுவத்தின் மேற்கூரை ஓட்டை மாற்ற பணிபுரிவர்,எத்தனை மெதுவாக வேலை செய்ய வேண்டுமோ அப்படி, அவர்களின் நோக்கம் இவர் மனைவியை எப்பாடு பட்டாவது அடைவது.அதற்கு கொம்பு ,சீவி விடுவது போல இவர் மனைவியும் அவர்கள் முன்பு அப்படி சிறப்பு தரிசனம் தந்து சீண்டுவாள், அவர்கள் பற்றி இவரிடம் புகார் கூறி சிண்டும் முடிவாள்

 இதனால் மேலும் கடுப்பானவர்கள் இவர் மீது தெரு நாய்க்கு உண்டான காய்ச்சலில் இருப்பர்,இவரை ஒவ்வொரு தருணத்திலும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பர், 

 இவரின் படித்த பாலிஷான புறத் தோற்றத்தை வைத்து எளிதாக ஏமாற்றி, வேட்டைக்கு அழைத்துப் போய் காட்டில் தனியே விட்ட அந்த குழு,

விரைந்து வந்து இங்கே வீட்டில் தனியே இருக்கும் மனைவியை ஒருவர் பின் ஒருவராக வன்புணர்ந்து விடுவர்,( இதில் அக்காட்சியில் அவளின் பழைய காதலன் அவளை வன்புணர்கையில் அதை விரும்பி ஒத்துழைத்தாளா? அல்லது கணவனை நினைத்துக் கொண்டாளா? என பட்டி மன்றமே இணையத்தில் உண்டு)

 அக்கொடியவர் குழு அத்துடன் நில்லாமல் இவரின் வளர்ப்புப் பூனையையும் தூக்கிலிட்டுக் கொன்று விடுவர், 

அது முதல் வீறு கொண்டு புது மனிதனாகப் புறப்படும் இவர், மெல்ல காய்நகர்த்தி  காதல் மனைவி பார்வையிலும் நம் மனதிலும் வீரனாய் உயருவார்,

இவரது வீட்டில் நடக்கும் கடைசி 20 நிமிட வன்முறைக் காட்சிகள்,துப்பாக்கிச் சூடு  காட்சிகள் என்றும் மறக்க முடியாது, அப்படக்குழுவாலே திரும்ப எடுக்க முடியாது

அந்த கொடிய நண்பர்களையும் ஊரின் பிற மூத்த அயோக்கியர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் புஷ்பம் போல அங்கே தண்டிப்பார், அட்டகாசமான அண்டர்ப்ளே என்றால் இப்படத்தில் டஸ்டின் ஹாஃப்மேன்  செய்தது தான்,

இதில் கணவன் மனைவிக்குள் அடுத்தடுத்து நிகழும் ரொமான்ஸ் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் . இந்த கல்ட் படத்தையும் ரீமேக் செய்து பின்னாளில் சோரம் போக வைத்தனர்

PS: இப்படத்தை தழுவி மலையாளத்தில் வெளியான வரத்தன் திரைப்படம் பற்றி இங்கே படியுங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=10156772621106340&id=750161339

சௌபர்ணிகாம்ருத வீஷிகள் பாடும் என்னும் அற்புதமான பாடல்

இசைக்கலைஞர்களுக்கு கண்கண்ட தெய்வம் தாய் மூகாம்பிகை, தமிழில் தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி எப்படி இசைஞானியின் குரலில் மூகாம்பிகையின் கருணையை போற்றிப் பாடியதோ, 

அதே போலவே மலையாளத்தில் கிழக்குணரும் பட்சி படத்தில் வரும் சௌபர்ணிகாம்ருத வீஷிகள் பாடும் என்ற பாடல் , இது ரவீந்திரன் மாஷேவின் இசையில் தாஸேட்டா பாடியது, படத்தில் லாலேட்டன் வளரும் இசையமைப்பாளர், அவர் சினிமாவில் சாதிக்கும் நல்ல நேரத்தின்  பின்னணியில் வருகிறது இப்பாடல், இது மலையாளிகளின் ஜனனி ஜனனி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)