A23 சாம்சங் போன் வாங்காதீர்கள்


சாம்சங் A 23 4G,5G என வாங்க எண்ணுபவர்கள் தயவு செய்து வாங்காதீர்கள், அல்லது இந்தியாவில் வாங்காதீர்கள், காரணம் இதில் inbuilt ஆக screen recorder இல்லை, inbuilt ஆக multi  clip board இதன் keyboard ல்இல்லை, மிகுந்த தண்டமான போன், நீங்கள் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் A23 android version 13 க்கு 5.1 UI version update ல் இந்த இரண்டு வசதிகளை கொண்டு வர முடியவில்லை, எனக்கு மிகுந்த ஏமாற்றம் தந்த மாடல் A23, 

நான் ஒரு போன் வாங்கினால் 5 வருடங்கள் உபயோகிப்பேன், முன்பு என் சாம்சங் A6+ மாடலை அமீரகத்தில் வாங்கினேன் , அதில் இருந்த inbuilt screen recorder இந்த புதிய A23 மாடலில் இல்லை, முன்பு என் A6+ ல் இருந்த multi inbuilt ஆக clip board இந்த புதிய A23 மாடலில் இல்லை,இந்தியாவில் தயாராகும் சாம்சங் லென்ஸ் தரம் மட்டமானது, காரணம் இந்தியருக்கென்று தயாரித்து சந்தைப்படுத்தும் மெத்தனத்தை இந்த A23 ல் கண்டேன், வருடங்கள் ஆக ஆக தரம் உயரும் பயனர் வசதிகள் உயரும் என எண்ணி தான் நாம் ஒவ்வோருவரும் நினைத்து அதே brand அதே series ,latest model ,வாங்குவோம், ஆனால் நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு a6+ ல் உணர்ந்த தரம் எதுவும் இதில் இல்லை, படங்கள் தரம் எல்லாம் zoom செய்து எடுக்கையில் pixel ஆகி பல்லிளிக்கிறது,

சமீபத்தில் நண்பர் சாம்சங் M33 5G  வாங்கினார் ,அதில் இந்த inbuilt screen recorder மற்றும் ,multi clip board keyboard வசதிகள் இருந்தன, samsung தளம்,amazon தளத்தை விட flipcart ல் 1000₹ விலை குறைவிறைவு இவை கண்டு உணர்ந்தவை, இப்போது charging cable தருகின்றனர்,ஆனால் adapter தருவதில்லை,அட்டை பெட்டி அளவும் எடையும் குறைந்துவிட்டது.

 சாம்சங் A Series ஐ விலை அதிகம் வைத்து விற்கிறது ,ஆனால் பயனர் வசதிகளை குறைத்து ஏமாற்றுகிறது,  சாம்சங் M series ஐ விலை குறைத்து  விற்கிறது ,ஆனால் பயனர் வசதிகளை அதிகம் தருகிறது என்பது நிரூபணமாகிறது.

புளி சாதத்துக்குள் முட்டை வைத்து இது பிரியாணி என விற்பவன் போவான் போவான் ஐயோன்னு போவான், இந்த பதிவு நான் ஏன் சாம்சங் வாங்கப் போறேன் ?, நான் ஏன் நடுராத்திரியில் என்று கேட்பவர்களுக்கானதல்ல .

தென்மேற்கு வாசல் கொண்ட அலுவலகம் வாஸ்து குறைபாடு தீர்வு

தென் மேற்கு வாசல் அலுவலகத்துக்கோ அல்லது வீட்டுக்கோ அமைவது விரையஸ்தானத்தில் வாசல் அமைவதற்கு ஒப்பாகும்.

தேனாம்பேட்டையில் பழைய மாடி வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றி வளைத்து வாடகைக்கு விட்டவர்கள், அதீத வாடகையும் அதீத முன்பணத்தையும் வாங்கிக் கொண்டவர்கள், மிக முக்கியமான வாஸ்து மாற்றங்களை செய்யாமலே வாடகைக்கு விட்டுள்ளனர், வாடகைக்கு எடுத்தவர்கள் கணவன் அமிலம் சார்ந்த சுத்தம் செய்யும் சாதனங்கள் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துகிறார், 

மனைவி மருத்துவமனை சார்ந்த நோய் கண்டறியும் ஊசிகள் test kit இன்னபிற மருந்துகள் இவற்றை சந்தைப்படுத்துகிறார், கடன் மேல் கடன் , ஆறுமாதம் ஆகியும் கொள்முதல் செய்த பொருட்களுக்கான தொகையை வாங்கிய வாடிக்கையாளர்கள் தராமல் இழுத்தடித்து பல லட்சம் வாராக்கடனாக இருக்க, DfD சென்று வாஸ்து பார்த்தோம்,

 அலுவலகத்தின் தலைவாசல் சிறிய இரும்பு கேட் தரைதளத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பாகத்தில் இருந்தது, மாடியில் முதல் தளத்தில் அலுவலக நுழைவு கதவு தென்மேற்கில் அமைந்திருந்தது, தெற்கில் நீண்ட க்ரில் இருந்தது, தென்மேற்கில் அலுவலகத்தின் ஆதார சக்தி சென்று சேர வேண்டிய தென்மேற்கில் நீளமான க்ரில், உடன் பிரதான் நுழைவு வாயில், அதன்  பின்பு ஈசான்யத்தில் கழிவறை கோப்பை, 

அதை உடனே மாற்றி pantry இருந்த அறையில் மாற்றி வைத்தோம், முதலாளி இருக்கைகள், தொழிலாளி இருக்கைகள், எத்தனை ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும், எத்தனை ஜன்னல்கள் நிரந்தரமாக மூடி வைக்க வேண்டும்,புதிய Safe, file storage  அமையவேண்டிய இடங்கள் தெளிவாக குறித்துத் தரப்பட்டன,

 வாஸ்து தீர்வுகளுக்குண்டான உரிய வர்ணங்கள் அந்தந்த சுவற்றில் தீட்டப்பட்டன,ஒன்றரை மாதங்களில் நிலுவையில் இருந்த கடன்கள் முற்றிலும் வசூலாகிவிட்டன, வங்கியில் பத்துலட்சம் ரூபாய்க்கு over draft தொகை collateral எதுவுமின்றி கிடைத்தது , சண்டித்தனம் செய்த ஊழியர்கள் அத்தனை பவ்யமாக சொன்னபடி கேட்கின்றனர், சுணங்கவில்லை, சம்பளம் 1 ஆம் தேதியே அனைவருக்கும் தந்துவிட்டோம், அதன் பின் கணவன் மனைவி நாங்கள் நல்ல தொகையை நெடுநாட்களுக்குப் பின்னர் சம்பளமாக எடுத்துக் கொண்டோம் என்று மனமார நன்றி கூறினார் வாடிக்கையாளர், நான் என் வாடிக்கையாளர் விபரங்களை privacy கருதி வெளியிடுவதில்லை, 
ஆத்மார்த்தமாக செய்யும் 
எதுவும் ஜெயிக்கும் என்பதை கண்டநாள் இன்று. 

Placing a south west Main door in an office or home is similar to placing a door in corner of loss.

 Those who rented out an old storied house in Thenampettai converted it into an office, paid exorbitant rent and advance, rented it without making any major Vastu changes, renter's husband markets acid-based cleaning products,

The wife is marketing hospital-based diagnostic injections, test kits and other medicines, loan after loan, customers who have bought the goods for six months without paying and have to pay several lakhs a week, we went to DfD and saw the vastu.

 The main door of the office was a small iron gate in the south-west corner of the ground floor in the Rahu part, on the first floor the office entrance door was located in the south-west, there was a long grill in the south, in the south-west a long grill in the south-west where the source energy of the office should go and store and recharge, along with the main entrance gate, and then the toilet commode in the north east,

We changed it immediately and moved it to the room where the pantry was, boss seats, worker seats, how many windows should be kept open, how many windows should be permanently closed, the places where the new safe, file storage should be placed were clearly indicated.

The appropriate colors for Vastu solutions were painted on the respective walls, the outstanding debts were completely collected in one and a half months, an overdraft amount of ten lakh rupees was received from the bank without any collateral, the employees who did the work were asking as they were told, they did not shrink, the salary was given to everyone on the 1st day of the month, after that we, husband and wife, received a good amount.  The customer thanked me wholeheartedly that we have received the salary after many days, I do not publish my customer details considering privacy.
 Do it soulfully
 Today is the day to see that anything can win.

#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

ஒரு மனை அல்லது வீட்டின் திசைகளுக்கு உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால் குடும்பத்தாருக்கு வரும் நோய்கள்




ஒரு மனை வாங்கும் முன்னரும் ஒரு வீடு வடிவமைக்கும்  முன்னரும்  மிகுந்த கவனமாக வாஸ்து நிபுணர் மூலம் வாஸ்து பார்க்க வேண்டும், வடிவமைக்க வேண்டும்,

காரணம் ஒரு மனை அல்லது வீட்டின்
திக்கு திசைகளுக்கு  உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால்
குடும்பத்தாருக்கு தீராத  நோய்கள் இன்னல்களைத் தர நேரிடும்,

வரும் முன் காப்போம் என்பதே வாஸ்து மற்றும் ஃபெங்ஷூய் உரைக்கும் உயரிய தத்துவமாகும். மனை மற்றும் வீட்டின் வாஸ்து குறைபாட்டால்  பாதிக்கப்படும் உடல் உறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மனை அல்லது வீடு வடிவமைக்கையில் மெத்தனம் கூடாது.

1.சூரியன் (பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை அதிபதி)
மனையில் அல்லது வீட்டில்  பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும் ஜுரம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும்.

2.சந்திரன் (தென்கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் அடிக்கடி ஏற்படும்.

3.செவ்வாய் (தெற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தெற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்பு அடிக்கடி ஏற்படும்.

4.புதன் (வடகிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடகிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கும் ஆண் வாரிசுகளுக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் அடிக்கடி ஏற்படும்.

5.குரு (வடக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் இவை அடிக்கடி ஏற்படும்.

6.சுக்கிரன் (கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு பெண் வாரிசுகளுக்கு கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

7.சனி (மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் மேற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படுதல் அடிக்கடி ஏற்படும்.

8.ராகு (தென்மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்மேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் அடிக்கடி ஏற்படும்.

9.கேது (வடமேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடமேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு இவை அடிக்கடி ஏற்படும்.

Before buying a plot and before designing a house, one should carefully check and design the Vastu by a Vastu expert.

The reason is a plot or a house
Grahas belonging to Dikku directions, due to deficiency of Vastu
Unresolved diseases may bring hardships to the family,

Preserving before coming is the overriding philosophy of Vastu and Feng Shui texts.  Every one of us should know the body parts which are affected by Vastu deficiency of plot and house and should not be complacent while designing the plot or house.

1.Sun (Brahmasthana and lord of east direction)
If Brahmasthan and east direction are afflicted in house or house, the family members especially men will often suffer from diseases like constipation, indigestion, insomnia, eye diseases, blood pressure, heart disease, asthma, stomach bugs and fever.

2. Moon (South East Lord)
If the south-east corner of the house or house is afflicted, mental illnesses, emotional disturbances, rapid heartbeat, blood pressure, tuberculosis, anemia, phlegm, phlegm, sexually transmitted diseases, gastric ulcer, diabetes, intestinal ulcer often occur in the family, especially in women.

3. Mars (South Lord)
If the south direction is afflicted in the house or house, the family members, especially the males, are often affected by hemorrhoids, diabetes, stomach and intestinal diseases, depression, skin diseases, heart disease, nervous breakdown, measles, accidents and weapons.

4. Mercury (North East Lord)
If the north-east corner of the house or house is afflicted, heart diseases, blood pressure, peptic ulcer, cancer, skin diseases, nervousness, gastric ulcer are frequent in the family, especially in males and male heirs.

5. Guru (Lord of North)
If the north direction is affected in the house or house, throat related diseases, thyroid, measles, rheumatism, jaundice, nerve related diseases, paralysis, lower rheumatism, diabetes often occur in the family especially in men.

6. Venus (Lord of the East)
If east direction is affected in house or house, eye, ear and nose diseases for family especially women, female heirs.  Lung disease, cough, ulcer, heart disease, blood pressure, sexually related diseases will occur.

7.Saturn (West Lord)
If the west direction is affected in the house or house, mental illness, epilepsy, brain damage, skin disease, long-term ailments, kidney disease, bile, intestinal disease, accident often occur in the family especially men.

8.Rahu (Southwest Lord)
If the south-west corner of the house or house is affected, the family members, especially the women, will often suffer from high acid secretion, stomach disorders, indigestion, insomnia, brain disease, intestinal ulcer, skin diseases.

9. Ketu (North West Lord)
If the north-west corner of the house or house is afflicted, cancer, rheumatism, skin diseases, cholera, nervous breakdown, kidney disorders often occur in the family especially in males.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

தினமலர் என்றால் காழ்ப்பு


தினமலருக்கு பெண்கள் முன்னேற்றத்தில் மாற்று திறனாளிகள் முன்னேற்றத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் எத்தனை காழ்ப்பு பாருங்கள்,

 இவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வந்து லங்கர் கட்டை உருட்டுபவர்களை வழிந்து பாராட்டுவதை காணலாம் மற்றவர்களுக்கு எதுகை மோனை குசும்பு தான், கோயில் விடுதலை , இலவசம் ஒழிப்போம் என சரடு விடும் மோடி மஸ்தான்களை பாராட்டுவர், கோடாலிக்காம்பு என்ற அடைமொழிக்கு பொருத்தமான ஒரு நாளிதழ் என்றால் அது தினமலர் தான், மாற்று மதத்தார் மீதான இவர்கள் வன்மம் வரலாற்றுப்புகழ் மிக்கது,தமிழ்நாட்டின் அவமானம்.

The World's Fastest Indian | அந்தோணி ஹாப்கின்ஸ்

The World's Fastest Indian

இது இந்தியரைப் பற்றிய படம் அல்ல,Indian என்ற 1920 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க ரேஸ் மோட்டார் சைக்கிள் பற்றிய படம்.

உலகில் எந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரருக்கும் மோட்டார் சைக்கிள்  ரேஸின் மெக்காவான Bonneville Salt Flats ற்கு தன் மோட்டார் சைக்கிளைக் கொண்டு சென்று அதன் முழு வேகத்திறனை பரிசோதிக்கும் ஆசை இருக்கும்.

அப்படி நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவின்  Utah பாலைவனத்திற்கு 11,636 km பயணித்து வருகிறார் 68 வயது Burt Munro,இவர் உடன் கொண்டு வரும் இந்தியன் மோட்டார் சைக்கிளின் வயது 47 ,
உலகசாதனை நிகழ்த்த வயது படிப்பு இவை ஒரு தடையில்லை என்று தன் சாதனை மூலம் உலகிற்கு உரைத்தவர் பர்ட் மன்ரோ.

பர்ட் மன்ரோ தன் மோட்டார் சைக்கிளில் utah பாலைவனத்தில் உள்ள  Bonneville Salt Flats என்ற உப்பு படிம நிலப்பரப்பிற்கு பல இடர்களைத் தாண்டி வந்து சேர்கிறார், அந்த  இயற்கை race track நிலப்பரப்பில் 325 கிமீ உச்ச வேகத்தில் தன் மோட்டார்சைக்கிளில் பயணித்து உலக சாதனை நிகழ்த்துகிறார்,

இது  பர்ட் மன்ரோ என்ற நியூசிலாந்து நாட்டு அமெச்சூர் மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரரின் உண்மைக்கதை, இது 1967 ஆம் ஆண்டின் கதைக்களம், 

நியூசிலாந்து நாட்டுக் கிழவர்  பர்ட் மன்ரோவாக நம் ஹானிபல் லெக்டர் புகழ் அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்துள்ளார்,பிரிட்டீஷ் நடிகர் ஊரக நியூசிலாந்து வாசியாகவே மாறியது போலவே  இருக்கும் இவரின் தோற்றம் ,

அந்தோனி ஹாப்கின்ஸ் அற்புதமான நடிகர், இது அற்புதமான படம் ,அவசியம் பாருங்கள்.

#the_worlds_fastest_Indian,#anthony_Hopkins,#burt_munro

தாயே உனக்காக | முறையான காப்புரிமை பெற்ற உலக சினிமா முதல் தழுவல்

தாயே உனக்காக (1966) என்ற திரைப்படத்தில் அபூர்வமான ஒரு பணியை கண்டேன், ரஷ்ய  Ballard of a Soldier மூலக்கதைக்கு கதை உரிமையை அளித்த  சோவெக்ஸ்போர்ட் நிறுவனத்தாருக்கு ரோலிங் டைட்டிலில்  நன்றி தெரிவித்ததைப் பாருங்கள்,தமிழ் சினிமாவில் அபூர்வமான போக்கு இது.

காமத்திருடன் கண்ணா

படம் : விஸ்வரூபம் (2013)
இசை : ஷங்கர் – எஷான் - லோய்
பாடியவர்கள் : கமல்ஹாசன், ஷங்கர் மகாதேவன்
பாடல்வரிகள் : கமல்ஹாசன்

தக தக தக.... தின தின தின...
நக நக நக.... திகிட தான தான தான...
திக்கிட திக்கிட தகின்ன தான...
தாகுடு தான...
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தாணு தாணு கேந்தாணன்
தாணு தாணு கேந்தாணன்
தாணு தாணு கேந்தாணன்
அதிநவநீத அபிநயராஜா...
கோகுலபால கோடிப்ரகஷா...
விரகனரக ஸ்ரீரட்சக மாலா...
எத்தனைமுறை நான்ஏங்கி சாவேன்
இத்தவனை என்னை ஆட்கொல்வாயா
சூடிய வாடலை சூடிய வாகள
வாடிய சிந்தைக்கு திரும்பதா
பூதகியாக பணிதிடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் ஆயா நீ வா

ஆயா... மாயா...

ஆயர்தம் ஆயா நீ வா

ஆயா... மாயா...

ஆயர்தம் ஆயா நீ வா

ஆயா... மாயா... வா…

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா ..... கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
கமதநிஸ நித பம கம ரிகரிஸ
உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா

திம் திம் திர திண்ணா

நடன பாவ ஸ்ருதிலய கங்கா

திடுகிட திம் திர திண்ணா

சரிவர தூங்காது வாடும்
அனுதினமும் உனக்காக ஏங்கும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

கிடுத கிடு திம்... கிடுத கிடு திம்
தடுகிட... த.... தடுகிட....த
தடுகிடத தடுகிடத தடுகிடத.... தக் தக் த

ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ... பின் இருந்து வந்து எனை... தகிட தின்
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா
இனி நீ... இனி நீ...
கண்ணா தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ.... இனி நீ...
இது நேராமலே நான் உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

தகதக தகதிம் தகதக தகதிம்
தகதக திம் தகதக திம்  தக திம் தக திம்
தோங் தோங் தகதக திம்
தகதிம் திரிங்கிட தோம் தகதரிகட

தகதரிகட தகதரிகட தகதரிகட
தகதரிகட தகதரிகட தகதரிகட 
ராஜா ராஜா ராம்

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

தொழில் போட்டியும் அவலநிலையும்


தினமும் செல்லும் யோக ஆஞ்சனேயர் கோயில் அமைந்திருக்கும்  இருபதடி  அகல தெருவில் எதிரெதிரே புதிய மச்சு வீடுகள், வீட்டுப் பெண்கள் தத்தம் வீட்டு வாசலில் மேஜையிட்டு வெற்றிலை மாலை , துளசி மாலை,தாமரைமொட்டு, பூக்கள் இவை கட்டி விற்பர்,

அண்டை வீட்டார் தான் என்றாலும் கோயில் திறந்திருக்கும் நேரத்தில்  அப்பெண்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் , எதுவும் தேவைக்கு மீறிய உற்பத்தி என்றால் அங்கு பெரும் வியாபார போட்டி வந்து விடும், சனிக்கிழமை ஏகாதசி விசேஷ தினங்கள் எல்லாம் அமளி துமளி ஆகும், அப்படி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு புரணி பேசி வியாபாரம் செய்வர்,வியாபாரம் முடிந்ததும் மீண்டும் தோழமையாகிடுவர்.

நான் தினமும் 20₹ க்கு துளசி அல்லது வெற்றிலை மாலை வாங்குவேன் ஒரே பெண்மணியிடம் தான் வாங்குவேன், போன வருடம் முதன் முதலில் இங்கே எங்கள் திருமணநாள் அன்று போகையில் கோயில் பிரதான கதவுக்கு தொட்டடுத்து கடை வைத்திருக்கும் குண்டு ஆள் அழுகிய துளசி மற்றும் தேங்காயை தந்து விட்டான்,

கோயிலில் மாற்றி வரச் சொன்னார்கள், மாற்றித் தருகையில் மிகவும் சுணங்கினான்,தரிசனம் முடித்து வந்து கொடுங்கள் என்ற டெக்னிக்கில்  மொத்தம் 150₹ பக்கம் வாங்கி விட்டான் என்பதால் , அவனிடம் அதன் பின் எதுவுமே வாங்கியதில்லை, இந்த ஒரே பெண்மணியிடம் தான் தினமும் வாங்குவோம்.

இன்று போகையில் கோயிலின் உரிமையாளர் நடிகரின் மனைவி வழக்கம் போல தரிசனம் செய்ய வந்திருந்தார், 
அவரைச் சுற்றி பூக்கார பெண்மணிகள் கலவரமாக நின்று கொண்டிருந்தனர், இது தான் காரணம், இந்த குண்டு ஆள் தொடர்ந்து அழுகிய துளசி,பூமாலை, தேங்காய் என தந்து நீண்டகாலம் பணம் பறிப்பதால் நிறைய புகார்கள் நடிகர் வரை போயுள்ளன,

 எத்தனை சொல்லியும் அந்த ஆள் திருந்தவில்லை, அழுகல் பொருள் இனி தந்தால் கடை வைக்க வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை, கள்ளுளி மங்கன் தோற்றான், விபூதிப்பட்டை,எலுமிச்சை அளவு குங்கும பொட்டு ,  ருத்திராட்ச மாலை  என மாட்டிக் கொண்டு நான் ஜகத்குரு என்னிடம்  ஆசி வாங்கிப் போனால் தான் ஆஞ்சனேயர் வரம் தருவார் என புருடா விட்டு பக்தர்கள் தலையில் கைவைக்கும் வயசன்,லபலப என யார் வந்தாலும் பேசியபடியே கையில்  பொருட்களை திணித்து விடுவான்,முன்னாள் பர்மா பஜார் வியாபாரியாரிப்பான் போல. 

நடிகர் இத்தனை பெரிய தனித்துவமான  கோயில் கட்டியும் கூட எப்படி ஒரு ஆளால் பிரச்சனை பாருங்கள்,அவன் கோயில் வாசலில் இனி அழுகல் கடை வைக்க கூடாது என்பதால்  அங்கு தத்தம் வீட்டு வாசலில் பூக்கடை வைத்திருந்தவர்களையும் இனி பூக்கடை வைக்ககூடாது என சொல்லும் நிலை,காரியம் பெரிதா வீரியம் பெரிதா என பொறுமை காக்கும் நிலை.

அந்த வீட்டுப் பெண்கள் விடியலில் சென்று பூ,துளசி,இத்யாதி வாங்கி வந்து சிறியதாக  ஈட்டிய வருமானத்தில் இந்த குண்டு ஆளால் இன்று முதல் மண் விழுந்து விட்டது, 

எத்தனை பெரிய நடிகர்,அவர் நினைத்தால் எத்தனை பெரியவர்களிடமும் பேசலாம்,இந்த விஷயத்தை அரை நொடியில் தீர்க்கலாம்,  ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நெருப்பு போல , அதிகம் அணுகாமலும் அதிகம் அகலாமலும் தான் இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்ததால் யாரிடமும் எதற்கும் போய் நிற்கவில்லை எனப் புரிகிறது,சாக்கடையில் கல் வீசினால் சாக்கடை நம்மீது தான் படும் என்பதால் பலரும் இதுபோல தருணங்களில் சகித்துப் போக வேண்டி உள்ளது .

இன்று முதல் கோயில் உள்ளேயே அர்ச்சனை பொருட்கள் விற்கின்றனர், கோயில் வரும் பக்தர்களை வெளியில் இருந்து எதுவும் பூஜை பொருட்கள் வாங்கி வரவேண்டாம் என்று கோரிக்கை வைத்து நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

கல்கி பத்திரிக்கையில் அந்நாள் வதந்தி | பைலட்களுக்கு வேலையில்லை

இன்று IT படித்தவர்களை பொட்டி தட்டுபவர்கள் என கிண்டல் செய்வது போல அந்நாளில் பைலட்கள் வேலைகிடைக்காமல் போர்ட்டர்களாக உள்ளனர் என கல்கி 6-3-1977 இதழில் கிளப்பி விட்டதைப் பாருங்கள், இன்றைய வாட்ஸப் பல்கலையின் முன்னோடிகள்.

"கல்கத்தா விமான நிலையத்தில் இரண்டு போர்ட்டர்கள் இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் போர்ட்டர்கள் அல்ல. விமானம் ஓட்டத் தெரி்ந்த, லைசென்ஸ் உள்ள இரண்டு பைலட்டுகள்! பைலட் வேலை கிடைக்காததால் போர்ட்டர் வேலை மூலம் மாதம் 300 முதல் 600 ரூபாய் வரையில் சம்பாதிக்கிறார்களாம். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிம்மி"

பள்ளிகளில் மரக்கன்று நடுதலுக்கு என்று ஒரு பாடவேளை அமைத்தால் சுற்றுச்சூழலுக்கு எத்தனை நன்மை விளையும்?


பள்ளிகளில் மரக்கன்று நடுதலுக்கு என்று ஒரு பாடவேளை அமைத்தால் சுற்றுச்சூழலுக்கு எத்தனை நன்மை விளையும்?மரக்கன்றுக்கு geotag,  ஒரு ஒரு மரக்கன்று நட்டதற்கும் மதிப்பெண், அது செழித்து வளர்வதை ஆவணப்படுத்த record, அதற்கு மதிப்பெண்கள் என எத்தனை நன்றாக இருக்கும்?

பசுமை அதிகரித்து  காங்க்ரீட் காடுகளின் பெருக்கம் விகிதாசாரமாக குறைந்தால் எத்தனை நன்றாக இருக்கும்.

நாம் ஒவ்வொருவருமே அந்நாளின் ஃபாரெக்ஸ் பேபி தானே?

நாம் ஒவ்வொருவருமே அந்நாளின்  ஃபாரெக்ஸ் பேபி தானே? அப்போது போட்டோ ஸ்டுடியோக்களில் குழந்தைகளை ஃபாரெக்ஸ் பேபி போல படமெடுங்கள் என கொண்டு விட்டு படமெடுத்து சட்டமிட்டு வீட்டு சுவற்றில் மாட்டிருப்பார்கள்.

Refill pack (Air sealed) தமிழ்நாட்டில் அறிமுகமாகி 46 வருடங்களாகிறது,

1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கியில் வெளியான ஃபாரெக்ஸ் விளம்பரம் இது, அது நாள் வரை டின்னில் வந்தது நவீன ரீஃபில் பேக்கில் 50 பைசா விலை குறைவாக அறிமுகமாகையில் மக்களின் தயக்கம் போக்க இந்த திட உணவு மாவை எப்படி வேறு கொள்கலனில் கொட்டி இறுக்க மூடி வைக்க வேண்டும் என்ற அதி முக்கிய குறிப்பு பாருங்கள்.

"ஃபாரெக்ஸ் இன்று
புத்தம் புதுவித ரிஃபில் பெட்டியினுள் வருகிறது.-- சாவதேச பேக்கிங் தொழில்நுட்பத்திலே அதி நூதனமான முறை இது.
சுகாதார பாதுகாப்பு அதிகம்"

இன்று வணிக சந்தையில் டின்கள் வழக்கொழிந்து கண்ணாடி பாட்டில்கள் வழக்கொழிந்து reusable plastic container வழக்கில் உள்ளன, காற்றுபுகாத refill pack வாங்குவதே இன்றும் சிக்கனமானது.

முதல் குரல் திரைப்படத்தில் புத்தம் புது பூமி வேண்டும் பாடலின் துவக்க இசை


"முதல் குரல்" திரைப்படம் ரோலிங் க்ரெடிட் பார்க்கையில் உறைந்து போய்விட்டேன், இது இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசை அமைத்த திரைப்படம், இது ஆகஸ்ட் 14 1992 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.

இதில் "திருடா திருடா" திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான "புத்தம் புது பூமி வேண்டும்" பாடலின் flute  prelude வருகிறது, இணைப்பில் கேட்கலாம்,
திருடா திருடா 1993 ஆம் ஆண்டு 13 நவம்பர் வெளியாகி உள்ளது  .

அன்று பல இசை அமைப்பாளர்களுக்கு கீபோர்ட் வாசித்த இசைப்புயல் தன் சொந்த ட்யூனை சந்திரபோஸ் அவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும், முதல் குரல் திரைப்படம் வெளியாக தாமதமாகியிருக்க வேண்டும், அந்த இடைவெளியில் ரோஜா வெளியாகி, திருடா திருடா வெளியாகி புகழின் உச்சிக்கு சென்றிருக்க வேண்டும் நம் இசைப்புயல்,

 அப்படி தனது சொந்த  ட்யூனை  மீண்டும் திருடா திருடா திரைப்படத்துக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும் என எண்ணுகிறேன், காரணம் இந்த ரோலிங் க்ரெடிட்டில் இந்த prelude தான் நிமிர்ந்து உட்கார வைக்கிறது,அதன் பின் சாதாரண loop போலவே உள்ளது. 

இதை முன்பு கவனித்தவர்கள் இந்த trivia பற்றி முன்பு தெரிந்தால் கருத்திடவும்.

+2 CBSE பொது தேர்வுகள் நிறைவு

இன்றுடன் மகளுக்கு +2  CBSE பொது தேர்வுகள் முடிந்து விட்டன (computer science ),பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தமான காலம் அது நல்லபடியாக கடந்தது, இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரிய நிம்மதி எனக்கு, 

மந்திரம் கால் மதி முக்கால் என்பதால் ஒவ்வொரு பொது தேர்வு அன்றும் திருநீர்மலை சென்று வேண்டி வந்தேன், மகளுக்கு இன்னும் JEE mains தேர்வு உள்ளது ,  அதன் பின்னர் JEE advanced தேர்வு உள்ளது,Professional தேர்வுகளில் பாதி கிணறு தாண்டி உள்ளார், மூன்று மாதங்களாக Fiitjee வகுப்புகளுக்கு செல்லவில்லை, வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் செல்ல வேண்டும்.

JEE advanced தேர்வு NEET தேர்வை விடவும் கடிமானது, நூற்றுக்கணக்கில் reference  புத்தகங்கள் ஒவ்வொன்றும் கிலோ கணக்கில் இருக்கிறது,  சீன பல்கலைகழக நுழைவுத்தேர்வான GAOKAO உலகின் எந்த நுழைவுத் தேர்வையும் விட மிகவும் கடினமானது, GAOKAO வுக்கு சமமானது JEE advanced தேர்வு.

நல்லபடியாக JEE mains தேர்வு , JEE advanced தேர்வு முடிந்தவுடன் விரிவாக அனைத்தையும் எழுதுகிறேன்.

இங்கே JEE mains JEE advanced போட்டி தேர்வுகள் எதற்கானவை? யார் அதில் சேரலாம்? அதில் படித்தால் என்ன இளங்கலை படிப்பு படிக்கலாம் என எழுதியுள்ளேன்.

JEE Main, JEE Advance போட்டித் தேர்வுகள் பற்றி அனுபவ பகிர்வு

நேற்று மகளின் +2 பொது தேர்வு நிறைவு பெற்றதற்கு வந்த வாழ்த்துகள் எங்களுக்கு புதிய உத்வேகம் தந்தன, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகும் என்பதன் அர்த்தம் அறிந்தேன்,வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி .

JEE Mains , JEE Advanced தேர்வுகள் அதன் பயிற்சி விபரங்கள் பற்றி சிலர் கேட்டிருந்தனர் ,அவர்களுக்காக இந்த பதிவு.

"JEE mains" போட்டித் தேர்வு  மதிப்பெண்களை வைத்து  இந்தியா முழுக்க உள்ள  31 நகரங்களில் உள்ள  NIT (National Institute of Technology) ல் சேரலாம்.

"JEE mains" போட்டித் தேர்வு  மதிப்பெண்களை வைத்து   இந்தியா முழுக்க   25 நகரங்களில் உள்ள  IIIT (Indian Institute of Information Technology) ல் சேரலாம் 

JEE advanced போட்டி தேர்வு மதிப்பெண்களை  வைத்து இந்தியா முழுக்க  23  நகரங்களில் உள்ள IIT ல் (Indian Institute of Technology)  சேரலாம்.

Delhi Technological University போல இதர பல அரசின் பெருமைமிகு தொழிற்நுட்ப நிறுவனங்களில் சேரலாம்.

நான் இதில் VIT போன்ற தனியார் நிகர்நிலை பல்கலை, பொறியியல் கல்லூரிகளை பற்றி குறிப்பிடவில்லை, அங்கும் இந்த JEE mains, JEE advanced மதிப்பெண்களை வைத்து மாணாக்கர்கள் சேரலாம்.

JEE mains மற்றும் JEE advanced  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிக்காலம் சுமார் 3 வருடங்கள் வரும், ஒரு மாணாக்கர் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் இளங்கலை  படிக்க எண்ணுபவர்  அவர் 95% மதிப்பெண்களுக்கு மேல் பள்ளி தேர்வுகளில் வாங்குபவர் என்றால் இந்த பயிற்சியில் தாராளமாக சேரலாம்.அர்த்தமாக இருக்கும்,

 குறிப்பாக இந்த பயிற்சியில் சேர மாணவர்கள் சுய விருப்பம் அவசியம், பெற்றோர் அழுத்தம் அறவே கூடாது, எனக்கும் என் மனைவிக்கும் இந்த JEE விபரங்களை நுணுக்கமாக படித்து சொன்னது எங்கள் மகள் தான், நாங்கள் இது வரை எந்த அழுத்தமும் தந்ததில்லை, இந்த துறை படி அதுவே சரி, என திணித்ததில்லை, அது நமக்கு ஒத்து வராது என தடுத்ததில்லை.

சில பள்ளிகளில் தினமும் வகுப்பு முடிந்த பின் integrated ஆக இந்த JEE பயிற்சி தருகின்றனர், என் மகள் பள்ளியில் அந்த பயிற்சி தருவதில்லை,நாங்கள் வசிப்பது பம்மல், பள்ளி இருப்பது குரோம்பேட்டை, எனவே எங்களுக்கு அருகாமையில் உள்ள JEE பயிற்சி மையம் என்றால் K.K.நகர் ராமசாமி சாலையில் உள்ள Fiitjee ஆகும்.

என்மகள்   9 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் , ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் FiitJEE மையம் நடத்தும்  bigbang ஸ்காலர்ஷிப் தேர்வு எழுதி 50% பயிற்சி கட்டண சலுகை பெற்றார், மகளிர்க்கான சலுகையான 25% பயிற்சி கட்டண சலுகையும் சேர மொத்தம் 75% பயிற்சி கட்டண சலுகை பெற்றார், ஒவ்வொரு வார இறுதி சனி , ஞாயிறும் முழு நேர வகுப்பு உண்டு, பண்டிகை விடுமுறை குறுக்கிட்டால், அதற்கு ஈடு செய்ய வார நாட்களில் மாலையில் வகுப்பு உண்டு, சனி மாலை 4-30 முதல் 8-30, ஞாயிறு காலை 9-30 முதல் 4-30 ,என வாரா வாரம் வகுப்புகள் உண்டு, வாரா வாரம் தேர்வுகள் உண்டு,இது தவிர வாரநாட்களில் மாலை வேளைகளில் TAB ல் பாடம் நடக்கும், தேர்வுகள் நடக்கும், 95 சதம் வருகை அவசியம், Fiitjee வகுப்பறைக்கு உள்ளே சென்ற மாணவர்கள் வகுப்பு முடிந்த உடன் தான் வெளியே வரமுடியும்.

ஒரு குழந்தைக்கு ஸ்பூனில் ஊட்டுவது போல துவங்கி தானே சாப்பிட வைப்பது தான் இப்பயிற்சியின் தத்துவம்,  10,11,12 ஆம் வகுப்புகளில் அவர்களின் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கும் maths ,physics, chemistry பாடங்களுக்கேற்ப JEE advanced, JEE mains பாடங்களை இலகுவாக அனுகுவதற்கு தீவிரமான பயிற்சி அளிப்பார்கள், இதனால் 10th, 11,12 வகுப்புக்கு வெளியே ட்யூஷன் சேர அவசியம் இருக்காது, byjus போன்றவை சேர வேண்டாம், எனவே இந்த JEE பயிற்சிக்கட்டணம் 100% தகும் என்பேன்,அவர்கள் இந்த மூன்று வருடங்களுக்கு சுமார் 100 reference புத்தகங்களுக்கு மேல் தருகின்றனர், அவற்றை படித்து கணக்கு புதிர் நீக்கி பயிற்சி செய்தால் பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம், படிப்பில் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி , கண்டிப்பாக இது மாணாக்கரின் தன்னார்வம் கோருகிற பயிற்சி,பெற்றோர் கட்டாயத்துக்காக சேர்ந்தால் நிச்சயம் மாணாக்கர்கள் அழுத்தம் தாளாமல் வெளியேறி விடுவர்.

எனவே என்னால் முடிந்தது சரியான நேரத்துக்கு பள்ளியில் இருந்து வீடு, வீடு முதல் பயிற்சி மையம்,பயிற்சி மையம் முதல் வீடு, மறுநாள் பயிற்சி மையம் என கண்ணும் கருத்துமாக மகளை கொண்டு விடுவேன், இதற்கு தான் priority, மற்றவை அடுத்த பட்சம் என வகுத்துக் கொண்டேன், இப்படி கொண்டு விட்டு கூட்டி வர முடிந்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம், காரணம் பல நாட்கள் வார இறுதி சாலை வாகன நெரிசல், கனமழை என வாட்டும்,அப்போது பெற்றோர் பயிற்சி முடிந்து திரும்பாத மாணாக்கரை நினைத்து பரிதவிக்க வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் 95% மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தனியார் பயிற்சி மையங்களில் சேர முழுத்தொகைக்கும் கூட ஸ்காலர்ஷிப் கிடைக்கும், அந்த ஸ்காலர்ஷிப் தொகை மூன்று லட்சம் ரூபாய் இருக்கும், ஆனால் வேறு வழியில்லை, 
நாம் உதவி கேட்க தயங்கக் கூடாது, எத்தனையோ நல்ல உள்ளங்கள், அரசு பள்ளியில் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்,சிறு நிறுவனங்கள் இன்று JEE ஸ்காலர்ஷிப் தருவதற்கு தக்க மாணவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், உங்கள் முன் சமூக ஊடகம் உள்ளது, தகுதி உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் உங்கள் தேர்வுத் தாள்களை பிரதி எடுத்து வையுங்கள், தர அட்டையை பிரதி எடுத்து வையுங்கள், வகுப்பு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியரிடம் நற்சாட்சி பத்திரம் ,சிபாரிசு கடிதம் கேட்டுப் பெறுங்கள்.

அதன் பிறகு JEE main நுழைவுத்தேர்வுக்கு நான்கு வருட பயிற்சி தரும் Fitjee, Allen , Ahaguru, Resonance, Chate,PACE ,Bansal போன்ற நிறுவனங்களில் உங்களுடைய நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள், அதில் பயிற்சி கட்டண சலுகைக்கு நுழைவுத் தேர்வுகள் எழுதுங்கள், நன்கு படிக்கும் மாணவர்களால் 50% வரை கூட கட்டண சலுகை தேர்வெழுதி பெற முடியும்,நன்கு படிக்கும்  மாணவியருக்கு 25% சதம் கட்டண சலுகை மகளிர் முன்னேற்றத்துக்காக கூடுதலாக கிடைக்கும்.

9,10,11,12 ஆம் வகுப்புகளில் பள்ளிப்பாடம் உடன் இந்த JEE coaching ற்கும் சனி ஞாயிறு தினங்களில் செல்ல வேண்டி வரும்,நிறைய பயண அலைச்சல் இருக்கும், தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி வரும், கடும் உழைப்பு கோரும் பயிற்சி,ஆனால் IIT க்குள் நுழைந்து விட்டால் ஒரு மாணவர் உழைத்த உழைப்பிற்கு வாழ்நாளுக்கும் பலனிருக்கும் .

CBSE மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நுழையும் IIT , IISC நிறுவனங்களுக்குள் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில்  நுழைய வேண்டும் என்பதே என் விருப்பம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதலை முன்னெடுப்பை தாருங்கள்,ஒன்று பத்தாக,பத்து நூறாக, நூறு ஆயிரமாக, ஆயிரம் லட்சமாக வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருகுவர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற அரசாணை உள்ளதை நினைவில் வைப்போம், நம் மாணவ மணிகளுக்கு ஊக்கமும் உத்வேகமும் தருவோம்.

அரசுப்பள்ளியில் படித்து ஐஐடி, ஐஐஎஸ்சி,எய்ம்ஸ்-ல் இளநிலை பயில்வதற்கான முழு செலவை மாநில அரசே ஏற்கும்,6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியை பெறலாம் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
18|03|2022-2:00PM

பின்குறிப்பு: உங்கள் குழந்தைகளை JEE பயிற்சியில் சேர்க்க விழைவோர் ஒருமுறை இங்கே K.K. நகர் சென்று விசாரிக்கவும்,பல தகவல்கள் தருவர்,எனக்கு சேத்துப்பட்டு , நுங்கம்பாக்கம் பிற மையங்கள் பற்றி தெரியவில்லை, competitor பயிற்சி நிறுவனங்கள் பற்றி தெரியவில்லை.

Fiitjee Towers, DR, 51, Ramaswamy Salai, K. K. Nagar, Chennai, Tamil Nadu 6000780, 44 4213 5965

 இதற்கென்றே குணமான ஒருவரை நியமித்துள்ளனர்,அவர் தமிழகமெங்கும் உள்ள மற்ற பயிற்சி மையங்கள் பற்றிய தகவல்களையும் தருவார்,ஒரு முறை பெற்றோர் சென்று வாருங்கள்,அடுத்த முறை ஐயங்களை குழந்தைகளுடன் சென்று கேளுங்கள்,அதன் பின் அவர்கள் தந்த brochure ஐ ஒன்று விடாமல் படிக்க சொல்லுங்கள்,படியுங்கள், JEE விண்ணப்ப படிவம் 30 பக்கம் இருக்கும், படிப்பவரும் பெற்றோரும் என 90 கையொப்பம் இட வேண்டி வரும், Exit ,Instalment ,Fullpay என மூன்று options உள்ளது,நீங்கள் மூவர் சேர்ந்து என்ன option சேருவது என முடிவு செய்யுங்கள், அதற்கு இந்த நேரே சென்று விசாரிப்பது மிகவும் பயனளிக்கும்,

எனக்கு business calls மட்டுமே ஏற்று பேச முடியும் என்பதால் கமெண்ட்ஸில் உங்கள் ஐயங்களை எழுதவும், நிச்சயம் பதிலளிக்கிறேன், அது பிற பெற்றோருக்கும் FAQ போல அமையும்.

Desire Path | விருப்பமான பாதை என்றால் என்ன?

Urban design மொழியில் இதை Desire path என்று  வழங்குவர். ஒரு வழித்தடம் உருவாக்கும் போது Desire path க்கான வாய்ப்பை முதலில் கவனிக்க வேண்டும், இருக்கும் பட்சத்தில் அதையே முதன்மை வழித்தடமாக தெரிவு செய்ய வேண்டும். அதைத்தாண்டி அழகு உள்ளிட்ட மற்ற புற காரணங்களுக்காக நாம் அமைக்கும் எந்த வழித்தடமும் தோல்வி அடையும் என்பது ஒரு கோட்பாடு.  அதை மீறினால் இப்படித்தான்.

சீனவாஸ்து சாஸ்திரம் வீட்டு அமைதிக்கு சொல்லும் புல்லாங்குழல் தீர்வு

வீட்டில்  பிரதான வாயில் கதவின் மீது உட்புறமாக சுவற்றில் சிகப்பு கயிறு கட்டிய புல்லாங்குழலை நிலையாக சிகப்பு கயிற்றில் கட்டி பொருத்தி வைப்பது வாஸ்து தோஷம் நீக்கும் அமைப்பாகும், நீங்காத செல்வம் நிறைந்து இருப்பதற்கு இணெப்பு படத்தில் உள்ளது போல மூன்று சீன காசுகளை புல்லாங்குழல் வாய் ஊதும் துளை அருகே சிகப்பு பட்டுக் கயிற்றால் கட்டியிருக்கவும்.

வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகள் கூச்சல் குழப்பம் அடிதடி நிகழ்கிறது என இருப்பவர்கள் இந்த எளிய மாற்றத்தை செய்து பார்க்கவும், விரைவில் அத்தனை அமளி துமளிகள் நீங்கி லயமுடன் செல்வ வளத்துடன் வாழ்க்கை நகரும் என்பது சீனவாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷீய் தரும் எளிய அபாரமான தீர்வாகும்.

வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் புல்லாங்குழலை இப்படி சிகப்பு கயிறில் கட்டித்தொங்கவும் விடலாம்,இதுவும் குடும்ப அமைதி மற்றும் ஒற்றுமைக்கு ஃபெங் ஷீய் தரும் எளிய தீர்வாகும்.

Fixing a flute tied with a red rope on the wall inside the main gate of the house is a Vastu dosha removal system, for eternal wealth, tie three Chinese coins with a red silk rope near the mouth of the flute as shown in the picture.

 For those who are always fighting, screaming and chaos at home, try this simple change, soon all the worries will be gone and life will move with rhythm and prosperity. This is a simple and great solution given by the Chinese art of Feng Shei.

 A flute can be hung on the north and east walls of the house with a red rope tied like this, which is also a simple feng shui solution for family peace and harmony.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (350) தமிழ் சினிமா (249) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (129) மலையாளம் (79) சென்னை (76) கட்டிடக்கலை (72) கட்டுமானம் (66) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) வாஸ்து (44) கலை (42) ஆன்மீகம் (39) உலக சினிமா (33) சினிமா (33) ஃப்ராடு (28) தமிழ்சினிமா (24) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) இசை (12) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) பாலிவுட் (10) விருமாண்டி (10) அஞ்சலி (9) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) அரசியல் (8) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) மோசடி (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நகர வடிவமைப்பு (3) நகைச்சுவை (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சாதிவெறி (2) சிந்தனை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விஜய்காந்த் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)