இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"துடுகு கல நன்னே தொர" பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல்


"துடுகு கல நன்னே தொர"
 என்ற தியாகையரின் பஞ்சரத்ன கீர்த்தனையில் வரும் என்ற சுந்தரத்தெலுங்கு கீர்த்தனை பாடல் அற்புதமானது, இதை பல கர்னாடக இசை மேதைகள் தம் வாழ்நாளில் பாடி சிறப்பு செய்துள்ளனர், யூட்யூபில் ஒவ்வொரு மேதைகள் பாடிய வடிவமும் இந்த ஐந்து கீர்த்தனைகளாக சுமார் ஒரு மணிநேரம் நீளும் வடிவம் கிடைக்கிறது, அத்தனையும் முத்து.

இப்பாடலை கேட்க ஆரம்பித்தால் இதன் இனிமை காரணமாக நிறுத்தவே முடியாது, அப்படி கேட்கத் துவங்கி இறுதியாக பொருளை அறிந்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்,லயித்து கேட்பவர்கள் மனதில் அமைதி ததும்பும். 

பாடல்:-

துடுகு கல னன்னே தொர

கொடுகு ப்ரோசுரா எம்தோ
துடுகு கல னன்னே தொர

கடு துர்விஷயாக்றுஶ்டுடை கடிய கடியகு னிம்டாரு
துடுகு கல னன்னே தொர

ஶ்ரீ வனிதா ஹ்றுத்குமுதாப்ஜ வாம்க்மானஸாகோசர
துடுகு கல னன்னே தொர

ஸகல பூதமுல யம்து னீவை யும்டக மதிலேக போயின
துடுகு கல னன்னே தொர

சிருத ப்ராயமுன னாடே பஜனாம்றுத ரஸவிஹீன குதர்குடைன
துடுகு கல னன்னே தொர

பர தனமுல கொரகு னொருல மதினி
கரகபலிகி கடுபு னிம்ப திரிகினட்டி
துடுகு கல னன்னே தொர

தனமதினி புவினி ஸௌக்யபு ஜீவனமே
யனுசு ஸதா தினமுலு கடிபெடி
துடுகு கல னன்னே தொர

தெலியனி னடவிட க்ஷுத்ருலு வனிதலு ஸ்வவஶமௌட குபதஶிம்சி
ஸம்தஸில்லி ஸ்வரலயம்பு லெரும்ககனு ஶிலாத்முடை
ஸுபக்துலகு ஸமானமனு
துடுகு கல னன்னே தொர

த்றுஷ்டிகி ஸாரம்பகு லலனா ஸதனார்பக ஸேனாமித தனாதுலனு
தேவாதி தேவ னெரனம்மிதினி காகனு பதாப்ஜ பஜனம்பு மரசின
துடுகு கல னன்னே தொர

சக்கனி முக கமலம்புனனு ஸதா னா மதிலோ ஸ்மரண லேகனே
துர்மதாம்த ஜனுல கோரி பரிதாபமுலசே தகிலி னொகிலி துர்விஷய
துராஶலனு ரோயலேக ஸதத மபராதினை சபல சித்துடைன
துடுகு கல னன்னே தொர

மானவதனு துர்லப மனுசு னெம்சி பரமானம்த மொம்தலேக
மத மத்ஸர காம லோப மோஹமுலகு தாஸுடை மோஸபோதி காக
மொதடி குலஜுடகுசு புவினி ஶூத்ருல பனுலு ஸல்புசுனும்டினி காக
னாராதமுலனு ரோய ஸாரஹீன மதமுலனு ஸாதிம்ப தாருமாரு
துடுகு கல னன்னே தொர

ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை ஸுதுலகை கொன்னாள்ளு
தன ததுலகை திரிகிதி னய்ய த்யாகராஜாப்த இடுவம்டி
துடுகு கல னன்னே தொர கொடுகு ப்ரோசுரா எம்தோ
துடுகு கல னன்னே தொர

பல்லவி:
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் (துடுக்குத்தனங்கள்) நிறைந்த என்னைத் தலைவரே (ராமா!)
கொடுகு ப்ரோசுரா எம்தோ
பொருள்: காப்பாற்ற உம்மால் ஆகுமா? (இது என்ன ஆச்சரியம்!)

அனுபல்லவி:

கடு துர்விஷயாக்றுஶ்டுடை

பொருள்: மிகவும் கெட்ட விஷயங்களால் கவரப்பட்டு,

கடிய கடியகு னிம்டாரு
பொருள்: நொடிக்கு நொடி (தவறுகளால்) நிறைந்து இருக்கும்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 1:

ஶ்ரீ வனிதா ஹ்றுத்குமுதாப்ஜ

பொருள்: லட்சுமி தேவியின் இதயத் தாமரைக்கும்,

வாம்க்மானஸாகோசர

பொருள்: வாக்குக்கும் (பேச்சுக்கும்), மனதிற்கும் எட்டாதவரே,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 2:

ஸகல பூதமுல யம்து னீவை யும்டக

பொருள்: எல்லா உயிர்களிலும் நீரே (இறைவனாக) இருக்கிறீர் என்ற உண்மையை,

மதிலேக போயின

பொருள்: என் அறிவில் கொள்ளாமல் (மறந்திருந்தேன்),

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 3:

சிருத ப்ராயமுன னாடே

பொருள்: சிறு வயதிலேயே ( இளம் பருவத்திலிருந்தே),

பஜனாம்றுத ரஸவிஹீன

பொருள்: பஜனை என்னும் அமுதச் சுவையை இழந்து,

குதர்குடைன

பொருள்: வீண் தர்க்கம் செய்யும் குதர்க்கவாதியாக ஆனேன்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 4:
பர தனமுல கொரகு னொருல மதினி

பொருள்: பிறர் செல்வத்திற்காக (ஆசைப்பட்டு) மற்றவர்களின் மனதில்,

கரகபலிகி கடுபு னிம்ப திரிகினட்டி

பொருள்: துன்பத்தை உண்டாக்கி (மனதை உருக்கி) வயிறு நிரப்ப அலைந்தேன்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 5:

தனமதினி புவினி ஸௌக்யபு ஜீவனமே

பொருள்: செல்வத்தாலும் அதிகாரத்தாலும் உலக இன்ப வாழ்க்கைதான்,

யனுசு ஸதா தினமுலு கடிபெடி

பொருள்: என எண்ணி எப்போதும் நாட்களைக் கழித்தேன்,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
 
சரணம் 6:

தெலியனி னடவிட க்ஷுத்ருலு வனிதலு

பொருள்: அறியாத வழிப் பயணத்தில் உள்ள அற்பர்களுக்கும் பெண்களுக்கும்,

ஸ்வவஶமௌட குபதஶிம்சி

பொருள்: அவர்கள் என்னிடம் வசமாவதற்குத் தப்பான வழியைக் காட்டி (உபதேசித்து),

ஸம்தஸில்லி ஸ்வரலயம்பு லெரும்ககனு

பொருள்: மகிழ்ச்சி அடைந்து, ஸ்வரம் (ஒலி) மற்றும் லயம் (தாளம்) பற்றிய அறிவில்லாமல்,

ஶிலாத்முடை
பொருள்: கல் போன்ற மனம் உடையவனாகி,

ஸுபக்துலகு ஸமானமனு

பொருள்: நல்ல பக்தர்களுக்குச் சமமாக என்னையே சொல்லிக் கொண்டு அலைந்த,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 7:

த்றுஷ்டிகி ஸாரம்பகு லலனா ஸதனார்பக

பொருள்: கண்களுக்கு இனிமையான மனைவிகள், வீடுகள், மக்கள் (பிள்ளைகள்),

ஸேனாமித தனாதுலனு
பொருள்: சேனை (படை) போன்ற அளவில்லாத செல்வம் முதலியவற்றை (இவற்றையே),

தேவாதி தேவ னெரனம்மிதினி காகனு

பொருள்: தேவாதி தேவனே என நம்பினேன்; ஆனால்,
பதாப்ஜ பஜனம்பு மரசின

பொருள்: உன் தாமரைத் திருவடிகளைப் போற்றுவதை (பஜனையை) மறந்த,

துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 8:
சக்கனி முக கமலம்புனனு ஸதா னா மதிலோ

பொருள்: அழகிய உன் முகத்தாமரை எப்போதும் என் மனதில்,

ஸ்மரண லேகனே

பொருள்: நினைவில் இல்லாமல்,

துர்மதாம்த ஜனுல கோரி

பொருள்: கெட்ட அகந்தைக் கொண்ட மனிதர்களை விரும்பி,

பரிதாபமுலசே தகிலி னொகிலி

பொருள்: துன்பங்களால் மாட்டிக் கொண்டு வருந்தி,

துர்விஷய துராஶலனு ரோயலேக

பொருள்: கெட்ட விஷயங்களின் தீய ஆசைகளைக் கைவிட முடியாமல்,

ஸதத மபராதினை

பொருள்: எப்போதும் குற்றம் செய்பவனாய்,

சபல சித்துடைன

பொருள்: நிலையற்ற மனம் கொண்டவனாய் இருந்த,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
 
சரணம் 9:
மானவதனு துர்லப மனுசு னெம்சி

பொருள்: மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்று எண்ணாமல்,

பரமானம்த மொம்தலேக

பொருள்: பேரின்பத்தை அடைய முடியாமல்,

மத மத்ஸர காம லோப மோஹமுலகு

பொருள்: அகந்தை, பொறாமை, ஆசை, பேராசை, மயக்கம் (மோகம்) ஆகியவற்றுக்கு,

தாஸுடை மோஸபோதி காக

பொருள்: அடிமையாகி ஏமாந்தேன்; மேலும்,

மொதடி குலஜுடகுசு புவினி

பொருள்: உயர்வடிவாகப் பிறந்தும் உலகில் உள்ள,

ஶூத்ருல பனுலு ஸல்புசுனும்டினி காக

பொருள்: தாழ்வானவற்றை ஏற்று செய்து கொண்டிருந்தேன்; மேலும்,

னாராதமுலனு ரோய

பொருள்: அறிவுக்கு ஒவ்வாத வழிமுறைகளைக் கைவிடாமல்,

ஸாரஹீன மதமுலனு ஸாதிம்ப தாருமாரு

பொருள்: சாரம் இல்லாத மதங்களைப் பற்றிப் பேசுவதில் ஈடுபட்டதால், அலைந்து திரிந்த,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

சரணம் 10 :
ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை

பொருள்: மனைவிக்காக சில நாட்கள், சொத்துக்காக சில நாட்கள்,

ஸுதுலகை கொன்னாள்ளு

பொருள்: பிள்ளைகளுக்காக சில நாட்கள்,

தன ததுலகை திரிகிதி னய்ய

பொருள்: அவளுக்காகவும் இவனுக்காகவும் அலைந்து திரிந்தேன் ஐயா,

த்யாகராஜாப்த இடுவம்டி

பொருள்: தியாகராஜரின் அன்பரே! இதுபோன்ற,

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே!

கொடுகு ப்ரோசுரா எம்தோ

பொருள்: காப்பாயா? இது என்ன ஆச்சரியம்!

துடுகு கல னன்னே தொர

பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே

இது போலவே மற்ற நான்கு கீர்த்தனைகளான

ஜகதா நந்தகாரகா
சாதிஞ்சனே
கன கன ருசீரா
எந்தரோ மஹானுபாவுலு

 எழுத வேண்டும்.

புதுப்பாடகன் | 1990 | தாணு


புதுப்பாடகன் (1990) திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை , பாடல்கள் இயக்கம் என ஆறு துறையும் கலைப்புலி S.தாணு செய்தார்,  

திரைப்படத்தின் பூஜை ஆடியோ விளம்பரம் இவற்றுக்கு  பயன்படுத்திய பெயர் தெருப்பாடகன், ராவுத்தர் ஃபில்ம்ஸில் பெயர் சென்டிமெண்ட் தோல்வி பயத்தால் இறுதி நேரத்தில் பெயர் மாற்றி வெளியிட்டனர்.

1990 ஆம் ஆண்டு இசைஞானி இசையில் சுமார்  32 தமிழ் படங்கள் வெளியானது,இருந்தும் இப்படத்தின் 12 பாடல்களில் 5 பாடல்கள் 

(1.மலைய குடைஞ்சு பாதைய வச்சேன்
2.அத்த பொண்ணு வாடி
3.அதிகாலை நான் பாடும் 
4.ஏபுள்ள எங்கிருக்க?
5.காதோரம் கனகாம்பரம் )

மிக  இனிமையாக அமைந்து ஒளியும் ஒலியும் ஒளிபரப்பில் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது, 

படத்தின் கதை அப்போதைய டி.ராஜேந்தர் காலத்து ஓவர் சென்டிமெண்ட் காதல் தோல்வி படங்களின் பஞ்சாமிர்த கலவை என்பதால் படம் ஓடவில்லை, 
 தாணுவுக்கும் இசை அமைப்பாளர் என்ற பெயரை பின்னாளில் வாங்கித் தரவேயில்லை,இன்றும் கூட தாணு ஒரு இசை அமைப்பாளர் என்றால் பலரால் நம்ப முடியாது, இன்றும் இந்த பாடல்களை சந்திரபோஸ் ஹிட்ஸில் அடக்கி விடுவர், தாணுவின் கூலிக்காரன் திரைப்படத்துக்கு டி.ராஜேந்தர் இசை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயல் இசை நாடகத்துக்கு அன்றைய நாள் மதிப்பு பாருங்கள்


8-9-1936 ஆம் வருடத்திய D.K.பட்டம்மாள் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி மைலாப்பூர் சங்கீத சபாவில் நடந்ததை அறிவிக்கும் சுவரொட்டி இது.

அன்று ஆண்கள் கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என தம்மை நிலைநாட்டிய மூவரில் D.K.பட்டம்மாள் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

ஏறக்குறைய 87 ஆண்டுகளுக்கு முன்பு, இயல் இசையும் நாடகமும்  எப்படி செழித்தோங்கியது என்பதன் உதாரணம் , சுதந்திரத்திற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு, சபாக்களில்  கட்டணம் தந்து நுழைவுச்சீட்டு வாங்கிப் பார்த்துள்ளனர் பாருங்கள்.

முன்பதிவு இருக்கை - 1ரூ
முதல் வகுப்பு இருக்கை  - 12 அணா
இரண்டாம் வகுப்பு - 8 அணா
சிறார்களுக்கு   - 4 அணா

ஆஞ்சனேயர் கீதாஞ்சலி | பாலமுரளிகிருஷ்ணா | தேவா | திருப்பத்தூரான்


ஐந்து வருடங்கள் முன்பு சோளிங்கர் போகையில் சின்னமலை படிகளில் பக்திபடங்கள் விற்கும் கடையில் "வெண்ணெய சாத்தி நின்றோம் ஹனுமந்தா ஆஞ்சனேயா " பாடல் ஒலித்தது, அட நம் பாலமுரளிக்கிருஷ்ணா அவர்கள் குரல் என்று அமர்ந்து கேட்டுவிட்டு படிகள் ஏறினேன்.

திரும்ப வருகையில் " வாயு புத்திரனே ஆஞ்சனேயா " பாடல் ஒலிக்க அதையும் கேட்டு விட்டு சிடியை வாங்கிக் கொண்டு காரில் கேட்டபடி வீடு வந்தோம்.

முழுக்க முழுக்க பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தமிழில் ஆஞ்சனேயர் மீது  பாடிய பக்திப்பாடல்கள் இவை, அத்தனை அற்புதமாக இசையமைத்திருக்கிறார்   தேனிசைத் தென்றல் தேவா, கவிஞர் திருப்பத்தூரான் வரிகள் ஒவ்வொன்றும் ஆத்மார்த்தமானவை, அனுமன் சரிதத்தை உரைத்து மனதுக்கு உரம் தந்து காக்கிறது.

மொத்தம் எட்டு பாடல்கள் அத்தனையும் அற்புதமானவை, வெவ்வேறு அழகிய ராகங்களால் கட்டமைக்கப்பட்டவை,
5.5 நிமிடம் நீளுபவை,மனிதில் ரீங்காரமிடுபவை,நிச்சயம் உங்கள் தினசரி play list ல் அமரும் .

1.ராமனின் நாமத்தை பூமிக்கு சொல்லவந்த நாயகன் நீயல்லவா?

2.சேது அணைக்கரையிலே ராம ஜெபம் செய்யும் அனுமந்தனே

3. வாழ்க்கையில் சுகம் ஏதும் அறியாதவன், ராமன் வைகுந்தம் அழைத்த போதும் தொடராதவன்.

4.ஓம் அஞ்சனையின் மைந்தா நமோ நமோ ஓம் ஆஞ்சனேயனே நமோ நமோ

5.காலங்கள் தோறும் ராமனைப்பாடி வாழ்கின்ற தூயவனே.

6.வாயு புத்திரனே ஆஞ்சனேயா, தவவலிமையில் சிறந்தவனே ஆஞ்சனேயா

7.வெண்ணைய சார்த்தி நின்றோம் அனுமந்தா ஆஞ்சனேயா, வடமாலை சூட்டி நின்னோம் அனுமந்தா ஆஞ்சனேயா.

8.ஆஞ்சனேயர் அஷ்டோத்திரம்

வீட்டில் ஒலிக்க விடுங்கள் ஆத்மபலம் பெருகும்,மனசஞ்சலம் ஓடும், சனி இன்னல்கள் குறையும்.

இங்கே juke box
https://youtu.be/ZiurkbLLUug

Wind Chimes என்ற காற்றாடி மணிகளின் பயன்கள்

தூக்கம் இன்றி தவிப்பவர்கள், இடைவிடாத எண்ண ஓட்டத்தின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்பவர்கள் வீட்டின் வரவேற்பறையின் சீலிங்கிலும்  படுக்கை அறையின் சீலிங்கிலும் காற்றாடி மணிகள் (wind chimes ) வாங்கி மாட்டுங்கள் , இரண்டு அடி உயரம் கொண்டவை ஐநூறு ₹ வரும்,(இந்த range ல்  தான் மணியோசை வரும்)

 உங்களுக்குள் செய்யப்போகும் மாற்றத்துக்கு இந்த செலவு மிகவும் தகும், எங்கள் வீட்டில் பல வருடங்களுக்கு முன் இருந்த wind chimes கால ஓட்டத்தில் தொலைந்து விட்டது, நீண்ட நாள் வாங்க நினைத்தும் கைகூடவில்லை, இரண்டு  வெவ்வேறு விதமான  காற்றாடி மணிகள் ஒரு மாதத்துக்கு ஆன்லைனில் வாங்கி மின்விசிறிக்கு அருகில் இருந்த கொக்கியில் மாட்டி விட்டேன், வரவேற்பறையில் இரண்டு மின்விசிறிக்கு நடுவே இருந்த காற்றாடி மணிகள் அப்படி ஆடி இசை எழுப்பி மனதை இதமாக வைக்கின்றன,படுக்கை அறையில் 
a/c blower காற்று  அதன் மீது படுகையில் இன்னும் அதிக ஆட்டம்,  மனதை இந்த இதமான மணியோசை ஒருமுகப்படுத்துகின்றன.படுக்கை அறையில் தூக்கம் வராமல் தவிக்கும் பிரச்சனை எனக்கு எப்போதும் இருந்ததில்லை, இப்போது இன்னும் நல்ல தூக்கம் கிடைக்கிறது, 

இந்த காற்றாடி மணிகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், கெட்ட அதிர்ஷ்டத்தை போக்கவும்  சீன வாஸ்துவான ஃபெங் ஷுய் பரிந்துரைக்கும் பிரதானமான தீர்வு.

அதிலிருந்து வெளிப்படும் மென்மையான டிங் டிங் சத்தத்தை ஆங்கிலத்தில் tintinnabulation என்கின்றனர் , 

நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டில் நிலைத்திருக்க  உதவுகிறது, பணச்செழிப்பை ஈர்க்கிறது. காற்றாடி மணிகள் பயன்பாடு சீனாவில்  கிமு 1100 க்கு முந்தையது, 

அப்போது குழாய் வடிவ வெங்கல மணிகள் உருவாக்கப்பட்டன.  ஆசியா முழுவதிலும் காற்றாடி மணிகள் கோயில்களிலும் புத்த மடாலயங்களிலும் eaves board ன் அடியில்  தொங்கவிடப்பட்டு அந்த புனிதம்  பாதுகாக்கும் அரணாகவே விளங்கியது.  

காற்றாடி மணிகள் எழுப்பும்  ஒலி தீய எண்ணங்கள் அதாவது எதிர்மறை ஆற்றலை விரட்டி விடுகிறது , நல்லவர்களை  மட்டும்  நம் வீட்டில்  அழைக்கும் என்று கருதுகின்றனர்.

காற்றாடி மணிகள் நமக்கு பிடித்தவர்களுக்கு பரிசு வழங்க ஒரு நல்ல தேர்வு. காற்றின் ஓசையின் ஒலி எவ்வளவு சிறப்பாகவும் இனிமையாகவும் இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக அது வீட்டிற்குள் அதிர்ஷ்டத்தின் நுழைவை ஈர்க்கிறது என்கின்றனர்.  

இதன் மூலம் எழும் நேர்மறை ஆற்றல் குடும்ப உறுப்பினர்களை முழுதாக ஆக்கிரமிக்கிறது.வீட்டில் சண்டை சச்சரவு குறையும், 

ஒருவரைப் பீடித்த துரதிர்ஷ்டங்கள் மற்றும் தரித்திரங்களைத் தடுப்பதிலும், வீடு அல்லது அலுவலகத்தில் வசிப்பவர்களிடையே நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதிலும் இந்த காற்றாடி மணிகள் வாஸ்து மற்றும் ஃபெங் சூய் உலகில் முக்கியமாக பரிந்துரைக்கப்படுகின்றன, எத்தனை பெரிய காற்றாடி மணிகள் வாங்குகிறோமோ அத்தனை வலுவான இசை எழும்பும், அத்தனை பலன்கள் நமக்கு கிடைக்கும். 

உலோகத்தால் செய்யப்பட்ட காற்றாடி மணிகளை  வடமேற்குப் பகுதியில் பொருத்த பரிந்துரைக்கின்றனர்.  மூங்கிலால் செய்யப்பட்ட காற்றாடி மணிகளை   கட்டிடத்தின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் தொங்கவிட பரிந்துரைக்கின்றனர். 

 ஒருவர் புகழையும் அங்கீகாரத்தையும் அடைய விரும்பினால், இந்த  காற்றாடி மணிகளை   வீடு அல்லது அலுவலகத்தின் தெற்குப் பகுதியில் மாட்டப் பரிந்துரைக்கின்றனர்.

உலோகத்தால் செய்யப்பட்ட காற்றாடி மணிகள் அவற்றின் காலங்கடந்த உழைக்கும் தன்மை  மற்றும் அதிக ஒலி, துல்லியம் காரணமாக உலகெங்கிலும்  பிரபலமாக உள்ளன. 

உலோகத்தால் செய்யப்பட்ட  காற்றாடி மணிகளை மட்டுமே குறிப்பிட்ட டோன்கள் மற்றும் குறிப்புகளுக்கு டியூன் செய்ய முடியும் என்கின்றனர்.  உலோகத்தால் செய்யப்பட்ட மெட்டல்காற்றாடி மணிகள் பலவிதமான மெல்லிசைகளில் வருகின்றன, 

மேலும் நன்கு பெயரெடுத்த பாடல்கள் மற்றும் இசை விற்பன்னர்களின் இசை தீம்களுக்கு கூட அவற்றை டியூன் செய்யலாமாம். 

 உலோகத்தால் செய்யப்பட்ட  காற்றாடி மணிகள் நீர்ப்புகா தன்மை கொண்டவை, துருவை எதிர்ப்பவை.

tintinnabulation என்ற பெயர்ச்சொல், காற்றில் வரும் மணிஓசை போன்ற அழகிய இசையைக் குறிக்கிறது.  

உங்கள் வீட்டில் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளுக்கு நிச்சயம் இந்த இசை பிடிக்கும், எடுத்தவுடன் 3000₹ க்கு காற்றாடி மணிகள் வாங்க வேண்டாம், மனைவி திட்டுவார்கள், முதலில் 500₹ யில் தொடங்கி 1000₹ 1500₹ என்று முன்னேறுங்கள்.இது நிச்சயம் நல்ல , நியாயமான  செலவு.

ஓசை குறைவாக இருந்தால் சீன ஓட்டை காசு மூன்றை சிகப்பு கயிறில் இணைத்துக் கட்டி பெண்டுலத்தில் கோர்க்கவும், காற்றில் இழுத்து ஆடி நல்ல ஓசை வரும்.

#windchimes ,#காற்றாடி_மணிகள்

Mr.X from Bombay" (1964 ) திரைப்படத்தில் வரும் "khoobsurat haseena" பாடல் பற்றி

"Mr.X from Bombay"  (1964 ) திரைப்படத்தில் வரும் "khoobsurat haseena"  கிஷோர்தா,லதாஜி பாடி, நாயகி கும்குமுடன்  நடித்த  அற்புதமான க்ளாசிக் பாடல்,இப்பாடலின் இசை லக்‌ஷ்மிகாந்த் ப்யாரிலால்,பாடல் வரிகள் கவிஞர் ஆனந்த் பக்‌ஷி.


இப்பாடலை ஷாரூகான் நடித்த பாஸிகர் படத்தில் "Aye Mere Humsafar" என மிக அழகாக மீள் உருவாக்கம் செய்திருந்தார் அனுமாலிக்,பாடல் வரிகள் Gauhar Kanpuri, பாடியது அல்கா யக்னிக் மற்றும் வினோத் ரத்தோட்.

இன்று இது போல ரசனையுடன் மீள் உருவாக்கம் செய்யக்கூட இசையமைப்பாளர்கள் இல்லை ,இரண்டு வருடம் கீபோர்ட் படித்துவிட்டு பத்து லட்சம் முதலீட்டில் பத்தடிக்கு பத்தடி ஸ்டுடியோ நிர்மானித்து விட்டால் இசையமைப்பாளராம்.  

கிஷோர் தா அற்புதமான பாடகர், கதாநாயகராக ,துணை நடிகராக  அவர் எத்தனையோ படங்களில் நடித்தும் உள்ளார், ஆனால் தான் எதில் பாண்டத்யம் பெற்றிருக்கிறோம் என உணர்ந்திருந்த்தால் நடிப்பிற்கு முழுக்கு போட்டு கடைசி வரை பாடி வந்தார்.
https://indianexpress.com/article/entertainment/music/kishore-kumar-the-singer-who-hated-acting/

#கிஷோர்_தா,#Mr_from_Bombay,#பாஸிகர்,#baazigar,#Aye_Mere_Humsafar
#கிஷோர்_தா,#Mr_from_Bombay,#பாஸிகர்,#baazigar,#Aye_Mere_Humsafar

உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992) படத்தின் ரோலிங் டைட்டிலில் இசைஞானிக்கு வந்த நன்றி நவிழ்தல்

உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992) படத்தின் ரோலிங் டைட்டிலில் இசைஞானிக்கு வந்த நன்றி நவிழ்தல் இது.

கடல் அலையை காட்டி அது freeze ஆக 2000 நாட்களுக்கு பிறகு  என்று காட்டி,  அடுத்து இசைச் சக்கரவர்த்தி இசைஞானியுடன் இணைந்து என இசைஞானிக்கு பெரிய ரோஜா மாலை இடுவதை  காட்டி அதன் பின் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் துவங்க ரோலிங் க்ரெடிட் துவங்க காலை குயில்களே பின்னணி இசை  ஓடுகிறது.

2000 நாட்கள் பிரிவுக்கு காரணம் சுவாரஸ்யமானது இங்கே.

https://m.facebook.com/story.php?story_fbid=10158700486491340&id=750161339&mibextid=Nif5oz

https://m.facebook.com/photo.php?fbid=10153215467641340&id=750161339&set=a.10150246709671340&mibextid=Nif5oz

பொண்டாட்டி தேவை | ரோலிங் டைட்டில் | நன்றி கார்ட் | LP cover | 1990

மௌன ராகம் | என்கவுண்டர் காட்சி | இசைஞானி

இந்த காணோளியை இங்கே பாருங்கள்

இது மௌளனராகம் படத்தில் மனோகர் ( கார்த்திக் ) அத்தியாயத்தின் climax காட்சியின்  பின்னணி இசை,இசைஞானி இந்த காட்சிகளைப் பார்த்து விட்டு எத்தனை தாக்கம் வருமாறு பின்னணி இசை சேர்த்துள்ளார்,

இந்தக் காட்சியை இசையின்றி பார்த்தேன் எனக்கு ஒரு தாக்கமும் ஏற்படவில்லை, இசையுடன் பார்த்தால் அங்கே மனோகர் திவ்யா என நிஜ மனிதர்களாக  முன் நிற்கின்றனர், 
goose bumbs வருகிறது என்றால் மிகையில்லை,அந்த சூழலின் உணர்ச்சிகளை prominent ஆக நமக்கு கடத்துகிறார் இசைஞானி, இந்த encounter காட்சியை ராஜாஜி ஹாலில் எடுத்திருப்பார்கள்,கார்த்திக்கின் காஸ்ட்யூம்ஸ் 35 வருடங்கள் கடந்தும் இன்றும் outdate ஆக வில்லை பாருங்கள்,white cotton full shirt,double pocket, dark blue straight pocket denim,black & white sports shoe .

மனோகர் படியேறியவர் சுடப்படுகையில் rear, front என்று காட்சி முதுகில் துளைக்கும் நெஞ்சில் வெளியேறும் தோட்டாவைக் காட்டுகிறது, பின்னர் top angle அவர் சரிந்து படிகளில் உருள்வதைக் காட்டுகிறது, PC ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவு.

இந்த லிங்கில் இரண்டு இசை ஆர்வமிக்க சகோதரர்கள் இருவர் இரண்டு கீபோர்ட்களில் வாசித்து fan cover செய்திருந்தனர், இரண்டையும் பாருங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2891298254297006&id=100002505786472

#மௌனராகம்,
#pc_ஸ்ரீராம், #திவ்யா,#மனோகர்,#இசைஞானி,#மணிரத்னம்,#ராஜாஜி_ஹால்

மனதில் உறுதி வேண்டும் | பாரதியார் | இசைஞானி | கே.பாலசந்தர் | தாசேட்டா


மகாகவி பாரதியின் படைப்புகளை தன் படைப்புகளில் எங்கெல்லாம் பயன்படுத்த வழியிருக்கிறதோ அங்கெல்லாம்,மிக அழகாக பயன்படுத்தியவர் இயக்குனர் சிகரம்.ஒரு க்ளாஸிக்கை எப்படி உருவமும் பெருமையும் சிதையாமல் பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு கை வந்த கலை. தமிழ் சினிமாவில் பாரதி மற்றும் திருவள்ளுவரின் படைப்புகளை மிக அதிகமாக மரியாதை செய்தவர் அவரே.

இதோ பாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடல்.இது நாட்டை என்னும் ராகத்தில் அமைந்தது.

மனதி லுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின்  சிந்து பைரவி படத்தில் வந்த பாடல் இங்கே இது முழுக்க பாரதியார் இயற்றியது,தாஸேட்டா இசைஞானியின் இசையில் பாடியது

http://www.youtube.com/watch?v=oqhZ4b9M9CM

இயக்குனர் கே.பாலச்சந்தரின்  மனதில் உறுதி வேண்டும்  படத்தில் வந்த பாடல் இங்கே,இதுவும் பாரதியார் இயற்றிய பாடலே,அங்கங்கே அனுபல்லவி,சரணத்தில் வாலியின் பேனா பாரதியாரின் வரிகளை சரளமாக உள்வாங்கி படைத்தது.இதுவும்  தாஸேட்டா இசைஞானியின் இசையில் பாடியது

http://www.youtube.com/watch?v=Qw40A1XijVE

கவிஞர் வாலி பற்றி இசையமைப்பாளர் தேவா

நேற்று தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் பேட்டியைப் பார்த்தேன் ,அணையப் போகும் விளக்கை கவிஞர் வாலி அவர்கள் தூண்டிவிட்டு ஏற்றினார் என்று தான் சொல்ல வேண்டும் என்றார் தேவா , மனசுக்கேத்த மகராசா படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.சாந்திலால் நஹார்  இவரை ஒப்பந்தம் செய்யாமல் முகம் தராமல் மறுதலித்துக்கொண்டே இருக்கிறார், 

அவர் மகன் சிறுவன் இவர் ஆர்மோனியத்தை நோண்டியும், தபலாவை நொட்டியும் சேட்டை செய்ய, இவர் அதையும் பாராட்டி, நல்ல குரு கிடைத்தால் ,பையன் டாப்பாக வருவார் என்று சோப் வேறு போடுகிறார்,அவர் அப்போதும் ரசிக்கவில்லை, வாலி அவர்கள் வந்ததும் ,ஏதோ மெட்டு போட்டிருக்கார் என்று அலுப்பும் காட்டுகிறார், 

தேவா மெட்டைப் பாடிக்காட்டுகிறார் தன்னான்ன தானனன்னன,ஆரம்பம் நல்லாருக்கு, வயலெல்லாம் நெல்லாருக்கு  பின்னர் ஆத்து மேட்டு தோப்புக்குள்ள  என்று சந்த வரிகளைப்  போட்டு,இடையிடையில் எங்க இன்னொருக்க பாடு, நல்லாருக்குய்யா, அருமை, என்று சொல்லி இவர் வாழ்வில் விளக்கு ஏற்றியதை நன்றியுடன் சொன்னார் தேவா.

ரெட்ரோ இசையை சமகால படைப்பில் மீட்டெடுத்தல்

சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் டிஸ்கோ ராஜா தெலுங்குப் படத்திற்கு இசைஞானியின் அறிவுரையின் படி அந்தக் காலத்தைய 1980 களின் இசையை உருவாக்கியிருந்தார்,அதில் SPB அவர்களின் குரல் முக்கிய அடையாளம்,பின்னர் Bass கிடாரின் முக்கியத்துவத்தை ஒருவர் நன்கு உணரலாம்,அதற்காகவே இந்த சத்யா படத்தின் வலையோசை கலகல பாடலின் bass guitar cover ஐ தேடிச் சேர்ந்துள்ளேன்,இரண்டையும் கேளுங்கள்.

இப்படி பழைய காலகட்டத்துக்கு அப்போது வந்த திரைப்பட பாடல்களின் இசையை பயன்படுத்தாமல் புதிதாக உருவாக்குவது நல்லது, இது மிகுந்த ஆரோக்கியமான போக்கு, இதன் மூலம் தந்திக் கருவிகள் ,தோல்வாத்தியங்கள் , காற்று வாத்தியங்கள் அதை வாசிக்கும் கலைஞர்கள் என மீண்டும் ஸ்டுடியோக்கள் புதுவாழ்வு பெறும், சிந்தஸைசர் கொண்டு இசையை உருவாக்கும் போக்கு குறையும்,

முன்பெல்லாம் கேசட்டில் மண்டை ஓடு படம் வரைந்து piracy is killing music என அச்சாகியிருக்கும், இன்றைய இசையமைப்பாளர்கள் மென்பொருளைக்  கொண்டு இசையமைப்பதும் இசையைக் கொல்வது போலத் தான்.
#retro_music,#bass_guitar,#disco_raja,#இசைஞானி,#தமன்

மலேசியா வாசுதேவன் பாடிய இதயமே நாளும் நாளும் காதல் பேசவா பாடல் அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் இருந்து



இளையராஜாவின் இசையில் பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் முக்கியமான ரேர்ஜெம் இதயமே நாளும் நாளும் காதல் பேசவா என்னும் பாடல் அடுத்தாத்து ஆல்பட் [1985] படத்தில் இருந்து.

இது வேகமான கடினமான உச்சஸ்தாயி மெட்டுக்களால் கட்டமைக்கப்பட்ட பாடல் மிக அருமையாக ஜானகி அம்மா மலேசியா வாசுதேவனுடன் இணைந்து போட்டி போட்டுப் பாடியிருப்பார்,இப்பாடல் இன்றும் திரும்ப திரும்ப கேட்க பிடிக்க முக்கிய காரணம் மலேசியா வாசுதேவன் அவர்களின் மணிக்குரல் என்றால் அது மிகையில்லை

ஊட்டி தேயிலைத்தோட்டத்தின் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும்,அதில் காதலை எதிர்க்கும் பெற்றோரை மிரட்ட பூமிக்குள் காதலர்கள் தங்களை பூமிக்குள் புதைத்துக்கொள்வது போலபும்,தங்களைச் சுற்றி அக்னி வளையம் போட்டுக்கொள்வது போலவும் வித்தியாசமான சிந்தனையில் கேமரா ட்ரிக் ஷாட்கள் நிறைய கொண்டிருக்கும் வண்ணம் இயக்கியிருந்தார் ஜி.என்.ரங்கராஜன் .நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன்,செந்தாமரை,சுகுமாரி என காதலுக்கு எதிரி பெற்றோராக தோன்றியிருப்பார்கள்.

ஒளிப்பதிவாளர் டி.டி.பிரஷாந்த் நடிகை ஊர்வசியை மிக அழகாக காட்டியிருப்பார்.
இப்பாடலை இயற்றியவர் கவிஞர் பொன்னருவி
https://www.youtube.com/watch?v=gi63VBk345s




இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்
ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்..
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
வானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்
காற்று வீசும் நாள் வரை ஜோடியாக வாழுவோம்
நீரும் கூட பாடியே மாலை போடுதே
பூமி தீயை வாழ்த்தியே கீதம் பாடுதே
தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்….
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாடவா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவாஆஆ

தாஸேட்டாவுக்கு 75 ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்




நம் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் தாஸேட்டாவின் இசை,அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடனும்,மனநிம்மதியுடனும் முழு ஆயூள் வாழ ,இன்று அவரின் 75 ஆம்  பிறந்தநாளில் பெரிய கடவுள் அவரைக் காத்து  அருள்செய்யட்டும்

தாஸேட்டா பற்றிய குறிப்பு:-
ஏழு முறை தேசிய விருது பெற்றவரும் கான கந்தர்வன் என அழைக்கப்படுபவருமான கே ஜே யேசுதாசுக்கு இன்று 75 வது பிறந்த நாள். கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸின் (கே.ஜே. யேசுதாஸ்) கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர்.

ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார். 
 முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை' பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார்.
 மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.
 5 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வன்... இவையெல்லாம் யேசுதாசுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள். 
 இன்றும் தன் குரல் வளத்தை அப்படியே வைத்திருக்கும் 'தாசேட்டன்', தாமாகவே பாடுவதைக் குறைத்துக் கொண்டார். முக்கியமான பாடல்களை மட்டும் மறுக்காமல் பாடித் தருகிறார்.

  http://tamil.filmibeat.com/news/k-j-yesudass-turns-75-today-032700.html

தாஸேட்டாவின் தெலுங்குப் பாடல்களின் ஆச்சர்யமூட்டும் தொகுப்பு இது

கர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி? !!!

ருமை நண்பர்களே!!!
இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாருவின் மனம்கொத்திப்பறவை-13 ஆவது அத்தியாயமாக முழுக்க கர்நாடக இசைக்காக அற்பணிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நான் மிகவும் ரசித்த பத்தி |கர்நாடக இசைக் கச்சேரியில் தொடையில் தாளம் போடுவது எப்படி ?| என்பது தான் , சாரு அதை மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளார். இதை உங்களுக்கும் பகிரத்தோன்றியதால் பகிர்ந்தேன்.[நன்றி ஆனந்த விகடன்+கருந்தேள்]

சினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.

தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)