மம்மூட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மம்மூட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மலையாள கவிஞர் பிச்சு திருமலா வரிகளில் மைநாகம் பாடல் திருஷ்ணா படத்தில் இருந்து


மலையாளக் கவி பிச்சு திருமலா பாடல்கள் அசாதாரணமான கவித்துவம் மிக்க வரிகள் கொண்டவை, ஷ்யாம் மாஸ்டர் தனித்துவம் மிக்க புதிய இசையை தன் பாடல்களில் பரீட்சித்துப் பார்த்தவர், அவரின் அமரத்துவம் பெற்ற பாடல்கள் எண்ணிலடங்கா, மலையாளத்தில் இந்த மைநாகம் கடலில் நின்னுயருண்ணுவோ ? மிகவும் வரவேற்பைப் பெற்ற பாடல்.

நான் இந்த மைநாகத்தை மை = கருப்பு + நாகம் கருநாகம் என பொருள் கொண்டேன், இருந்தாலும் ஜானகியம்மாவின் இத்தனை அழகான பாடல் , என்ன கருநாகம் கடலில் இருந்து வளர்கிறதோ ? என பொருள் படிகிறதே ? என ஐயமுற்று, பல மலையாளிகளிடம் கேட்டேன், 

அவர்களால் இத்தனை அழகான , நுட்பமான பாடலின் வரிக்கு சரியான அர்த்தம் சொல்ல முடியவில்லை, நான் விடவில்லை, கூகிளில் என்ன தேடினாலும் மலையாள டிக்‌ஷனரியில் இந்த நேரடிப் பொருள் இல்லை, முயற்சியைக் கைவிடாமல் மைநாகம் என கூகுள் images ல் தேடினேன், 

விடை வந்தது, அது ஒரு myth மலையின் படம். ஓவியம், அதை தேடிப் போக, அது மைநாகன் என்ற பர்வதம் எனக் கண்டேன் , அதன் விக்கி பக்கம் இங்கே ,https://en.m.wikipedia.org/wiki/Mount_Mainak , இது தங்க மலையும் கூட, அதற்கு பறக்க சிறகுகளும் உண்டு, விரும்புகையில் வளரவும் தேயவும் முடியுமாம்.

மைநாகன் என்பவன் இராமாயண காலத்தில் மன்னன் ஹிமயனுக்கும் மேனகைக்கும் பிறந்த மகனாம், அவனின் சகோதரி பார்வதியாம், ஒரு சமயம் இந்திரனின் கடும் கோபத்திற்கு ஆளான மைநாகன் இந்திரனால் சிறகுகள் வெட்டப்பட்டான், உயிருக்கு அஞ்சி தென்னிலங்கை கடல் பகுதிக்குள் தலைமறைவானானாம்.

பின்னர் ஹனுமான் தயவால் மீண்டும் கடலில் இருந்து உயரே வளர்ந்தானாம்.

 அந்த மைநாகம் தான் கடலில் நின்னுயருன்னுவோ ? என பிச்சு திருமலா கவி உத்தேஷிச்சது என அவசானம் தேடித் தெளிந்தேன், இந்த பாடல் தாசேட்டா பாடிய வடிவம், 

ஜானகியம்மா சோலோவில் அத்தனை லயித்து பாடியிருப்பார்கள், எத்தனை தாலாட்டும் அரவணைக்கும் ஒரு பாடல் , அதன் உடன் பயணிக்கும் இசை என காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு பாடல். இடம் பெற்ற படம் த்ருஷ்ணா , வெளியான வருடம் 1981, ஜானகியம்மா பாடிய வடிவம் கீழே  காண்க, கரைந்து போவீராக.https://youtu.be/_0B72cx5_Co

விதேயன் ( 1994) | மம்மூட்டி | கோபகுமார் | அடூர் கோபாலகிருஷ்ணன்









 
மக்கள் புரட்சிக்கு முந்தைய கேரளம் அது, தோமி ஐந்து ஏக்கர் நிலமிருந்தும் ஏழை, அந்த வட்டாரத்தில் பாஸ்கர் பட்டேலர் என்ற பூர்ஷ்வா தெம்மாடியை மீறி ஒன்றும் சம்பாதிக்க முடியாது, 

ஒடுக்கப்பட்டவன் தான் பாடுபட்டு செதுக்கி சீரமைத்து கையப்படுத்திய சொந்த நிலத்தில் அசுரத்தனமாக உழைத்தாலும் இறுதியில் ஒன்றும் மிஞ்சாது, 

ஒடுக்கப்பட்ட சாதிக்காரன் தனக்கு அவ்வூரின் உயர்சாதிக்கார பூர்ஷ்வா  காலால் இட்ட பணியை தலையால் செய்ய வேண்டியது தலையாய கடமை என்பது அவன் ரத்தத்திலேயே ஊறியுள்ளது, 

கட்டிய மனைவியே ஆனாலும் பூர்ஷ்வா தெம்மாடி முதலாளி அவளைப் பெண்டாளக் கேட்டால் அவளைத் தந்தே தீர வேண்டும், திருமணத்தன்று இரவு புது மனைவியை அந்த பூர்ஷ்வா தான் முதலில் பெண்டாள்வான்.

அன்று தொம்மி பசிமிகுதியால் டீக்கடை வாசலில் குத்தி அமர்ந்திருக்கையில் அவனை அழைத்து மேல்விலாசம் கேட்கிறான் பூர்ஷ்வா தெம்மாடி பாஸ்கர் பட்டேலர்( மம்மூட்டி) .

படத்தின் முதல் காட்சி இது ,முதலாளியும் அவன் அடிமையும்  என்ற தத்துவத்தில் இயங்கும் கதை இது , இப்படித்தான் ஒருகாலத்தில் காம்ரேடுகளின் வருகைக்கு முன்பான பூர்ஷ்வாக்களின் கேரளம் இருந்தது,

இந்தப் படம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம், இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி செய்த பாஸ்கர் பட்டேலர் கதாபாத்திரம் பூர்ஷ்வா தெண்டி  கதாபாத்திரத்திற்கு ஒரு Standard ஆகவே மாறிப் போனது, 

இது பின்னால் பல படங்களில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது,அதில் தலப்பாவு படத்தில் அதுல் குல்கர்னி செய்த கிருஷ்ணதேவ சைவர் கதாபாத்திரத்திற்கு இதுவே வித்து, 

மம்மூட்டி பின்னாளில் பாலேரிமாணிக்யம் படத்தில் செய்த முரிக்கின்குன்னத்து முகம்மது ஹாஜி கதாபாத்திரத்திற்கு இதுவே வித்து.

இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணின் படங்களின் கதா மாந்தர்கள் ரத்தமும் சதையுமானவர்கள், இதில் எஜமான் பாஸ்கர் பட்டேலர்,அவனின் விதேய அடிமை தொம்மாவாக வந்த நடிகர் கோபகுமார் அவர் மனைவி சபீதா ஆனந்தை ஒருவர் மறக்கவே முடியாது

படத்தின் அற்புதமான ஒளிப்பதிவு மாங்கட ரவிவர்மாவுடையது,படம் கண்டிப்பாக பாருங்கள்.

முழுப்படம் இங்கே
https://youtu.be/1aHReUxEJOI

#அடூர்_கோபாலகிருஷ்ணன்,#மம்மூட்டி,#விதேயன்,#பூர்ஷ்வா,#தெண்டி,#தொம்மி,#பட்டேலர்,#மாங்கட_ரவிவர்மா

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

உத்தரம் | 1989 (விடை)|மலையாளம் | V. K. பவித்ரன் | M.T.வாசுதேவன் நாயர்





















உத்தரம் | 1989 (விடை) | V. K. பவித்ரன் | M.T.வாசுதேவன் நாயர்

இயக்குனர் K.G.ஜோர்ஜ் அவர்களின் யவனிகா திரைப்படம் போலவே ஒரு அற்புதமான investigation thriller உத்தரம், இங்கிலாந்து பெண் எழுத்தாளர் Daphne du Maurier எழுதிய அபாரமான சிறுகதை " no motive " அக்கதையில் லயித்த எழுத்தாளர் M.T.வாசுதேவன் நாயர் உத்தரம் திரைக்கதையை கச்சிதமாக எழுத அதை அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் V. K. பவித்ரன், யவனிகாவில் எப்படி தபலாக்காரன் ஐயப்பன் மர்மமாக காணாமல் போனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்காரியா (மம்மூட்டி) ஐயப்பன் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் விசாரித்து இறுதியில் ஐயப்பன் காணாமல் போன மர்மத்திரையை விலக்குவார், அப்படிப்பட்ட ஒரு அபாரமான த்ரில்லர் உத்தரம்,இயக்குனர் K.G.ஜோர்ஜின் இரகள் திரைப்படம் எப்படி ஒரு underrated classic படைப்போ அதே போலவே உத்தரம் திரைப்படமும் underrated classic.

முதல் காட்சியிலேயே ரப்பர் தோட்ட முதலாளி மேத்யூவின் மனைவி செலினா இரட்டைக்குழல் துப்பாக்கி முனையை மார்பில் பதித்து விசையை காலால் சுண்டி தற்கொலை செய்து  கொள்கிறாள், வெறும் 27 வயது,புதுக்கவிதைகள் அதாவது தரமான தத்துவார்த்தம் பொதிந்த புதுக்கவிதைகள் புனைந்து தரமான கவிதை தொகுப்பு வெளியிட்டவள் செலீனா, கணவன் மேத்யூசிடம் அத்தனை அன்பு கொண்டவள், குழந்தையின்மையைக் கூட குறையாகவே எண்ணாதவள், உலகை உலகத்தாரை இயற்கையை அப்படி நேசிப்பவள்,  கணவனுடன்  காலை உணவு சேர்ந்து உண்டவள் ,மேத்யூஸ் ரப்பர் தோட்டத்திற்கு பார்வையிட புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் இத்தனை கோரமாக தன் கதையை முடித்துக் கொண்டிருக்கிறாள்.

மனைவியின் தற்கொலைக்கு எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாததால், மேத்யூ தனது நண்பரான பாலுவை அழைக்கிறார், இருவரும் தில்லியில் டைம்ஸ் பத்திரிக்கையில் ஒன்றாக வேலை செய்தவர்கள், மேத்யூஸ் சப் எடிட்டராக இருந்தவர் இங்கே வந்து ரப்பர் கிருஷி  செய்கிறார்,

பாலு திருமணமாகாதவர்,நண்பர் மேத்யூஸுக்கும் அவர் மனைவி செலீனா காட்டிய நட்பிற்கும் அன்பிற்கும் மிகவும் கடமைப்பட்டவர், இவர் புதுக்கவிதைகளின் ஆராதகரும் கூட என்பதால் நண்பனை விட தனக்கு இந்த மர்மத்தை விடுவிக்கப்படவேண்டும் என நினைக்கிறார்.

செலீனா தற்கொலை செய்து இறந்தாலும் அதை கணவர் மேத்யூஸ் குடும்ப மானம் காக்க துப்பாக்கி துடைக்கையில் நேர்ந்த விபத்து என்று போலீஸில் பதிந்து வழக்கை புதைத்திருக்கிறார், இருந்தும் மனைவி இறந்த மர்மத்தை அறிய நினைக்கிறார், நண்பன் பாலுவுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார்.பாலு இந்த புலன் விசாரணையை துவக்குவதற்கு இரு வாரம் முன்பு தன் டைம்ஸ் பத்திரிக்கை வேலையை விட்டவர்,இங்கு நண்பனுக்காக நேரில் வந்து விட்டார்.

இந்த தனக்குப் பிடித்த கவிதாயினி தோழியின் தற்கொலையை அவள் குடும்பத்தார் தோழி பார்வதி உறைவிடப் பள்ளி  என ஒவ்வொருயிடமாக பயணித்து விசாரணை என்பதே தெரியாமல் நிறைய பொய்கள் சொல்லி நடித்து துப்பு துலக்கி  விசாரணை நடத்துகிறார்,  செலினா தற்கொலைக்கு பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறியும் ஒயிலான திடீர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாலகிருஷ்ண நாயரின் விசாரணையை இத்திரைப்படம் அத்தனை இயல்பாக பதிவு செய்திருக்கிறது,

படத்தின் ஒளிப்பதிவு ராமசந்திரபாபு அவர்கள், படத்தின் இசை ஜான்ஸன் மாஸ்டர், படத்தில் மேத்யூவாக நடிகர் சுகுமாரன் நடிப்பு ஒண்ணாந்தரம், சமையல்காரராக சங்கராடி, செலீனாவாக சுபர்ணா ஆனந்த் (இயக்குனர் பரதனின் வைஷாலி பட நாயகி ) செலீனாவின் உயிர்த்தோழியாக பார்வதி , செலீனாவின் தந்தை ஃபாதர் ரெவனன்டாக கரமன ஜனார்த்தனன் நாயர் என அற்புதமான cast கொண்ட படம், சினிமா ஆர்வலர்கள் மாணவர்கள்  no motive ஆங்கில் சிறுகதையை  கண்டிப்பாக தேடி வாசியுங்கள் ,இந்த gripping and moving thriller படத்தை தவறாமல் பாருங்கள்,

இந்த படத்தை  இன்னொரு முறை பார்த்தால் சிறிய சிறிய nuances பற்றி எழுதலாம், எம்.டி.வாசுதேவநாயரின் சிறிய சிறிய டீடெயல் அபாரமானது, ஒரு காட்சியில் நடிகை சுகுமாரியின் கணவர் நோயில் படுத்த படுக்கையாக இருக்கிறார்,அவர் அருகே அந்தரத்தில் தொங்கும் கயிறு,படுத்த படுக்கையாக இருக்கும் அவர் பிடித்து எழுவதற்கு,  இதை நிஜத்தில் சிறுப்பத்தில் ஒரு வீட்டில் பார்த்துள்ளேன், சினிமாவில் இப்போது தான் பார்த்தேன்.மௌனம் சம்மதம் போல மம்மூட்டி  துப்பறியும் ஏகம் படம் பார்த்தாலும் இதில் அத்தனை ஸ்டைல், அத்தனை நம்பகத்தன்மை அழகியலுடன் கைகூடியுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் வட்டம்பரம்பில் கிருஷ்ணன் பவித்ரன், இவர் திரைப்பயணம் அலாதியானது, அர்த்தமுள்ள ஐந்து படைப்புகள் மட்டும் தந்த படைப்பாளி,மனம் முழுக்க சினிமா ஆர்வம் கொண்டவர், இவர் கேரளத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்பட கல்லூரிக்குச் சென்று அனுமதி பெற முயன்றவர் , இரண்டு முயற்சிகளும் தோல்வியுறவே  புனேவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு அருகிலுள்ள புனே சட்டக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.அங்கே   சட்டம் படிப்பதற்குப் பதிலாக,சட்ட  வகுப்பை கட் அடித்து விட்டு உலக கிளாசிக் மற்றும் திரைப்படங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதைப் பார்க்க அவர் புனே திரைப்படக் கல்லூரியில் தனது முழுநேரத்தையும்  செலவிட்டார்.ஏகலைவன் போல கிடைத்த  இந்த வாய்ப்பை அவர் புனே திரைப்படக்கல்லூரி  மாணவர்களுடன் நட்பு கொள்ளவும், சினிமாவை நெருக்கமாக புரிந்து கொள்ளவும் பயன்படுத்தினார், இவர் தீவிர கம்யூனிஸ்ட்,இவரது  இயக்கத்தில்  முதலில் வெளியான திரைப்படம் யாரோ ஒராள் 1978 ஆம் ஆண்டு வெளியானது,  கபினி நதி  சுவன்னதுபோல் என்ற கம்யூனிஸ்ட் போராட்ட திரைப்படத்தை தயாரித்தவர் , உப்பு என்ற தலைசிறந்த திரைப்படத்தை 1986 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார்,பலி என்ற திரைப்படத்தை 1991 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார், இவரது கடைசி திரைப்படம் குட்டப்பன் சாட்சி 2002 ஆம் ஆண்டு வெளியானது,
26 February 2006 மறைந்தார், இவர் மனைவி நடிகை கலாமண்டலம் ஹேமாவதி.

படம் யூட்யூபில் உள்ளது
https://youtu.be/nxUt1exBXx8

#உத்தரம்,#மம்மூட்டி,#சுகுமாரன்,#ராமசந்திரபாபு,#ஜான்ஸன்_மாஸ்டர்,#பார்வதி,#VK_பவித்ரன்,#MT_வாசுதேவன்_நாயர்


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

த்ரிஷ்னா 1981 |மலையாளம் | ஐவி சஸி | M.T.வாசுதேவன் நாயர்

 த்ரிஷ்னா 1981 ஆம் ஆண்டு M.T.வாசுதேவன் நாயர் கதை திரைக்கதையில் ஐ.வி.சஸி இயக்கத்தில்  வெளியான மலையாள திரைப்படம்,இப்படத்தின் ஒளிப்பதிவு ஜெயனன் வின்சென்ட், இசை : ஷ்யாம் மாஸ்டர்.


இதே த்ரிஷ்னா என்ற பெயரில் இந்தியில் இரண்டு முறை திரைப்படங்கள் வந்துள்ளன, புத்தர் மறுபிறப்பு எடுக்க காரணிகள் என்று 12 விலக்க வேண்டிய நிதனாக்களை (முன் நிபந்தனைகள் ) போதித்திருக்கிறார், 








அதில் 8 வது நிதனா தான் " த்ருஸ்னா" அதாவது Craving , ருசியாக உண்பது, மது குடிப்பது, சல்லாபிப்பது போன்ற picnic மனநிலை உல்லாசத்துக்கு ஏங்குதல் இதன் பொருள், இந்தியில் வந்த இரண்டு படங்களும் இப்படமும் இந்த theme ஐ பொருத்தமாகக் கொண்டிருக்கின்றன, அதற்கேற்ற இப்பெயரையும் கொண்டிருக்கின்றன.


தாஸ் (மம்மூட்டி )ஒரு இளம் தொழிலதிபன், வாழ்வில் தோல்விகள் பல கண்டவன், தனக்கு பிடித்த எதுவும் கைக்கு கிடைக்கப்பெறாதவன், தந்தை உண்டாக்கிய தொழிற்சாலை இப்போது லாக் அவுட்டில் உள்ளது, இங்கிலாந்தில் வக்கீலுக்கு படித்தவன், இசை தெரியும், நிறைய  உலக இலக்கியம் படித்தவன், முப்பதுகளில் இருப்பவன் .


தன் மறைந்த தந்தை வாங்கி வைத்த உல்லாச  பங்களா இருக்கும்  ஊட்டிக்கு வாடகை காதலி ஜெயஸ்ரீ (ஸ்வப்னா ) உடன் வருகிறான், 


வரும் வழியில் தன் வெளிநாட்டு MG convertible ஸ்போர்ட்ஸ் காரை சூடு தணிக்க bonnet திறந்து வைத்து புகைக்கையில்  , ஜெயஸ்ரீயுடன் நல்ல நட்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை, அவள் தன் பெயரைத் தவிர எதுவும் அவனிடம் பகிர்வதாக இல்லை,அத்தனை மனம் கல்லாகியிருக்கிறாள்.அவளுக்கு  புகைக்க தந்தும், ஸ்காட்ச் ஊற்றித் தந்தும் சிருஷைகள் செய்தும் கூட அந்நியோன்யம் ஏற்படவில்லை.


ஊட்டி பங்களாவில் விசுவாசமான மேலாளர்   பரமேஸ்வரன் தாஸை

வரவேற்றவர்  தான் தன் மகன் கோபன் மற்றும் சமீபத்தில் சேர்த்துக் கொண்ட  துணைவி  கண்ணம்மாவிடம் முதலாளி  மணமுடித்து மனைவியுடன் வந்திருக்கிறார் , என்று பொய்சொன்னதாக சொல்கிறார், 


சுற்றத்தில் நல்ல தரவாட்டின் பெயரைக் காக்க அப்படி சொன்னதாக  சொல்கிறார், தாஸுக்கு வயது முப்பதாகிறதே? திருமணம் முடிக்க கூடாதா? என உரிமையில் உபதேசம் செய்கிறார், தாஸ் உபதேசம் வேண்டாம் என்று அகல்கிறான்.


ஜெயஸ்ரீ வாடகைக் காதலி தான் என்றாலும், சுய மரியாதை உள்ளவள், முதல் சரசத்திற்கு தயாராகையில் தாஸ் அவள் இணங்க மறுத்ததற்கு அவளை பரத்தேவ்டியச்சி என கோபத்துடன் திட்ட, அவள் bloody bastard என்கிறாள், அறையை விட்டு அகன்று தோட்டத்தில் சென்று பூக்களை ரசிக்கிறாள், தாஸ் தன் தடித்த நாக்கின் தவறை உணர்ந்தவன் அவளுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூவை காட்டி , மெல்ல நட்பாகி படுக்கைக்கு கொண்டு செல்கிறான்.


மறுநாள் காலையில் இவன் அப்பாவின் குடும்ப நண்பர்கள் பக்கத்து எஸ்டேட்டில் தங்கியிருப்பவர்கள் , கூட்டாக நடைபயிற்சி செல்கையில் ,பரமேஸ்வரன் மகன் கோபன் அவசரக்குடுக்கையாக அவர்களிடம் முதலாளியும் முதலாளி அம்மாவும் வந்துள்ளனர் என்று சொல்லிவிட  அவர்கள் வீட்டுக்குள்,  கூட்டமாக வந்து பெரிய கூடத்தில் சோஃபாவில் காத்திருக்கின்றனர்,


 தாஸின் படுக்கை அறைக் கதவு தட்டப்படுகிறது.,இனி என்ன?பொய் மேல் பொய்கள், மனைவி இன்னும் எழவில்லை என தாஸ் சொல்லி அவர்களை அனுப்பப் பார்க்கிறான்,


ஆனால்  ஜெயஸ்ரீ குளித்து புடவை அணிந்து ஆச்சர்யமூட்டுபடி அனைவருக்கும் தேநீர் கொண்டு வருகிறாள், எல்லாரும் ஜோடிப் பொருத்தத்தை வியக்கின்றனர், வந்த கூட்டத்தில் தன் தந்தையின் நண்பர் மகளான ஸ்ரீதேவி (ராஜலட்சுமி)என்ற கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணை அவளின் தோற்றம் மற்றும் வெளிப்படையான பேச்சிற்காக பார்த்தவுடன் பிடித்து விடுகிறது தாஸுக்கு, 


தன்னிடமும் எல்லோரிடமும் நன்றாக நடந்து கொண்டதால் ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்கிறான் தாஸ்.


 மறுநாள் ஊட்டியில் suicide பாயிண்ட் அருகே தனிமையில் பாடிக்களித்து இயற்கையை ரசிக்கும் ஸ்ரீதேவியிடம் சென்று பேசுகிறான் தாஸ், அவளுக்கு இரண்டு வயதில் நடந்த சம்பவங்கள் கூட நினைவிருப்பதாகச் சொல்கிறாள், 


தாஸின் செல்லப்பெயர் சிங்கன் என்பதை நினைவூட்டி வியப்பூட்டுகிறாள், தாஸிற்கு வீட்டிற்கே வந்து பாடமெடுத்த ஆசிரியர்களை உருவத்துடன் நினைவூட்டுகிறாள், தாஸுக்கு தன்னையும் ஒரு ஜீவன் மதித்து இத்தனை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


அடுத்த வாரம் ஸ்ரீதேவி வீட்டினர் தாஸையும் ஜெயஸ்ரீயையும் இரவு உணவுக்கு அழைக்கின்றனர்,ஜெயஸ்ரீ கிளம்ப ஆவலாக இருக்க,அவளை நீ விஸ்கி அருந்திவிட்டு இங்கேயே இரு என புறக்கணிக்கிறான்.


 தாஸ் அவளுக்கு தலைவலி என்று அவர்களிடம் சமாதானம் சொல்கிறான், அவர்கள் மசக்கையாக இருக்கும் என்றதற்கு மறுப்பும் சொல்லவில்லை, இரவு விருந்துக்கு பகலிலேயே சென்று அந்த குடும்பத்துடன் மணிக்கணக்கில் பேசி பாடி நேரம் செலவிடுகிறான்.


ஸ்ரீதேவி தாஸுக்கு சங்கீதத்தின் மீதான ஆர்வத்தை மெச்சி தன்னிடம் இருக்கும் வயலினைப் பரிசளிக்கிறாள்.


இரவு வீடு திரும்பிய தாஸ்,படுக்கையில் போதையில் சோர்ந்து கிடக்கும் ஜெயஸ்ரீயை எழுப்ப,அவள் சுருண்டு படுக்கிறாள், வயலினைப் பிரித்து சிறிதாக வாசிக்கிறான் தாஸ், அந்த இதமான சங்கீதம் ஜெயஸ்ரீயின் மனதை தொடுகிறது, அவன் அருகே வந்து அணைத்துக் கொள்கிறாள் ஜெயஸ்ரீ.


மறுநாள் டேப்ரிக்கார்டரில் டிஸ்கோ ஓடவிட்டு ஆடுகிறாள் ஜெயஸ்ரீ, அங்கு இதைப் பார்த்து வியந்து நிற்கும் பரமேஸ்வரனை என்ன? என்று கேட்கிறாள், 


அவர் போனதும் அவர் மகன் கோபன் வர,அவனை உள்ளே அழைத்து உடன் சேர்த்து ஆடுகிறாள், அப்போது தாஸ் உள்ளே வந்தவன் கோபமாக கத்த, கோபன் ஓடிவிடுகிறான், 


ஜெயஸ்ரீ தன்னை அடிமையாக நடத்துவதை விரும்பாதவள் கண்ணாடி டம்ளரை தாஸை நோக்கி வீச, அது  தாஸ் மீது படாமல் சுவற்றில் மோதி உடைகிறது, தாஸ் மிகவும் பொறுமையாக இதை கையாள்கிறான், 


நான் உன்னை ஒன்றும் சொல்லப்போவதில்லை, கடைசி நேரத்தில் நான் துணைக்கு இணை கேட்டதற்கு உன்னை என் தலையில் கட்டினானே என் நண்பன் அவனுக்கு வட்டியும் முதலுமாய் தந்து கொள்கிறேன் என்றவன், பரமேஸ்வரனை கோபமாக அழைத்து ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது, அதை மாற்று, உடைந்த சில்லுகளை சுத்தம் செய் என்கிறான்.


மறுநாள் தாஸிடம் இப்படி நடந்து கொண்டதற்கு வருந்தும் வகையில் தாஸின் அப்பாவின் நண்பர் குடும்பத்தினர் அத்தனை பேரையும் நேரில் சென்று  விருந்துக்கு அழைத்து நல்ல சாப்பாடு சமைத்து பரிமாறுகிறாள் ஜெயஸ்ரீ, 


இப்போது தாஸிற்கு ஸ்ரீதேவி மீது காதல் வருகிறது, தாஸ் வக்கீலும் ஆதலால் அவள் கணவனை சுமூகமாய் பிரித்து கைபிடிக்க ஆசை கொள்கிறான், ஜெயஸ்ரீ தனிமையில் நின்று ரசிக்கும் suicide பாயிண்டில் வைத்து அவளை விரும்புவதாகச் சொல்கிறான், 


அவளை மணமுடிக்க நினைப்பதைச் சொல்கிறான், இன்னொரு அதிர்ச்சியை பகிரட்டுமா? என்று கேட்டுவிட்டு, அவள் சரி சொன்னதும், தான் ஒரு womanizer, எந்தப் பெண்ணிடமும் கிடைக்காத அன்பும் நட்பும் இவளிடம் கிடைத்ததைப் பகிர்கிறான், 


தன் உடன் வந்த ஜெயஸ்ரீ , மனைவியல்ல ,வாடகை காதலி என்கிறான், இவள் மட்டும் தனக்கு மனைவியாக கிடைத்தால் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து தன்னாலும் எதிலேனும் சாதிக்க முடியும் என்கிறான்.அவள் தனக்கு சிந்தித்து முடிவெடுக்க சமயம் கேட்கிறாள்.


வீட்டிற்கு வந்த தாஸுக்கு ஜெயஸ்ரீயுடனான சதை மயக்கம் சுத்தமாக வடிந்தும் விடுகிறது, அவளிடம் அன்பான குரலில் தான் இப்போது ஸ்ரீதேவியுடன் காதல்வயப்பட்டிருப்பதாகவும்   தான் இங்கு இருந்து கிளம்ப நாள் ஆகும் என்றும் இவளை அவள் வீட்டுக்கு கிளம்பச் சொல்கிறான், ஆனால் ஜெயஸ்ரீக்கு இந்த புறக்கணிப்பு  எதோ செய்கிறது, தான் தனியே போக முடியாது என்று வீம்பு பிடிக்கிறாள்.


பரமேஸ்வரன் மகன் கோபனின் துர்அதிர்ஷ்டம் வரிய நிலை மீது இரக்கப்படுகிறாள் ஜெயஸ்ரீ, மனதுக்குள் சம வயதான கோபன் மீது காதல் கொள்கிறாள், அன்று ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்கிறாள், படகில் இறங்குகையில் கோபனை அணைக்கிறாள்.


நீண்ட தூரம் பேசி நடக்கின்றனர், அப்போது உன் எதிர்கால கனவு என்ன?இதே போல guide ஆகவே இருக்கப்போகிறாயா? எனக் கேட்கிறாள்? கோபன் இந்த வேலையில் இருக்கும் போட்டியை அலுத்துக்கொள்கிறான், 


என்றாவது நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கு பதில் இரும்பு பட்டறை வைத்து தினம் இருபது,முப்பது  ரூபாய் கிடைத்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்கிறான், லேத் பட்டறை வைக்க ஆயிரம் ரூபாய் கிடைத்தால் போதும், தனக்கு தொழில் தெரியும், வங்கியில் மேலும் கடன் கிடைக்கும் என்கிறான் கோபன்.


தனக்கு ஓட வேண்டும் போல உள்ளது என சொல்கிறாள் ஜெயஸ்ரீ.இருவரும் ஓடிக்களைத்து அமர்கின்றனர், அவள் மூச்சிறைக்கும் அழகு கோபனை சங்கடப்படுத்துகிறது. முதலாளி மனைவி என்று அவள் முன்னெடுப்புக்கு சிக்காமல் விலகுகிறான்.


அப்போது இதமாக மழைபெய்கிறது, கோபனை குளிருக்கு இதமாக அணைத்த ஜெயஸ்ரீ நான் முதலாளியின் மனைவியல்ல, வாடகைக் காதலி,பணமிருக்கும் யாரும் என்னை வாங்கலாம், நீயும் கூட ,என்று சொல்ல, 


 அதிர்ச்சியில் உறைந்து அவள் முகம் நோக்கி அருவருக்கிறான் கோபன், அவனின் அதிர்ச்சி காணப்பிடிக்காமல் அவமானம் கொண்டு வீட்டுக்கு மழையில் நனைந்தபடி ஓடுகிறாள் ஜெயஸ்ரீ.


இனி என்ன ஆகும் ? படம் கண்டிப்பாக பாருங்கள்.


இப்படத்தில் வரும் மைனாகம் கடலில் நின்னுயருன்னுவோ என்ற அற்புதமான பாடல் ஜானகியம்மா மற்றும் தாஸேட்டா பாடிய வடிவங்களில் உண்டு, அப்பாடல் பற்றிய என் முந்தைய பதிவு இது.

https://m.facebook.com/story.php?story_fbid=10158654053361340&id=750161339


இப்படத்தில் தான் மலையாள  சினிமாவில்  முழு வீச்சில் கதாநாயகன் அந்தஸ்து நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்தது, இப்படத்தில் மம்மூட்டியின் தாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது நடிகர் பாபு நம்பூதிரி, அவர் நடித்து சில நாட்களில் அவர் மாற்றப்பட்டு நடிகர் மம்மூட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டது சரித்திர நிகழ்வு, பாபு நம்பூதிரி ஒப்பற்ற நடிகர், தூவானத்தும்பிகள்  திரைப்படத்தில் பெண் தரகர் தங்கல் என்ற கதாபாத்திரம் அருமையாக செய்தவர், 


இப்படத்தில் இளம் மம்மூக்காவின் நடிப்பில் அனைவரும் கண்டுண்டு போவோம், கோபனாக நடித்த ராஜ்குமார் சேதுபதி நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர், இயக்குனர் பாரதிராஜாவின் டிக்டிக்டிக் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்வப்னா அழகும் திறமையும் ஒருங்கே அமைந்த நடிகை, 


இதில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்திருந்தார், பின்னாளில் இயக்குனர் பத்மராஜனின் தூவானத் தும்பிகள் திரைப்படத்தில் சுமலதா நடித்த க்ளாரா என்ற வாடகை காதலி கதாபாத்திரத்திற்கு முன்னோடியான கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்திருந்தார் ஸ்வப்னா.


வயது வந்தோருக்கான இந்த கல்ட் ரொமான்ஸ் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=10159444478311340&id=750161339

#த்ரிஷ்ணா,#ஐவி_சஸி,#எம்டி_வாசுதேவன்_நாயர்,#மம்மூட்டி,#ஸ்வப்னா,#ராஜலட்சுமி,#சங்கராடி,#ஊட்டி,#ஜெயனன்_வின்சென்ட்,#ஷ்யாம்_மாஸ்டர்,#பிச்சு_திருமலா

ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட்[ Pranchiyettan & the Saint] [ இந்தியா] [ மலையாளம்][2010]

நான் வியந்திருக்கிறேன்,மலையாளத்தில் மட்டும் எப்படி? , உச்ச நடிகர்களான மம்மூட்டியும், மோகன்லாலும், ஏனைய பல நடிகர்களும் ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறார்கள் என்று !!! உதாரணத்துக்கு 2010ல் மம்மூட்டி நடித்து வெளியான படங்கள்= 6, மோகன் லால் நடித்து வெளியான படங்கள்=3  . நம்மூரில் உச்ச நடிகர்கள், இளம் நடிகர்கள் பேதமில்லாமல் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்  தான் செய்கின்றனர், இயக்குனர்கள் சொல்லவே வேண்டாம்.  அதுவும் பலசமயம் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்ற படைப்புகளை தந்து விட்டு, என்னவோ கார்கில் போருக்கே சென்று வந்தது போல சினிமா ஷூட்டிங் முடிந்தபின்னர் அடிக்கும் ஓய்வுக்கொட்டம் இருக்கிறதே?!!!  மலையாள நடிகர்களைப் பார்த்து தேனியின் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை இவ்விஷயத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளலாம்.அதனால் தான் அங்கே வெறும் இரண்டே கோடி ரூபாயில் படைப்புகள் சாத்தியாமாகிறது.

சென்ற வாரம் மம்மூட்டியின் ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட் பார்த்தேன்.  இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான திரைப்படத்தை  ரஞ்சித் எப்படி இயக்க முடிந்தது? என்று மிகவும் ஆச்சர்யமும் பொறாமையும் எழுந்தது.திரைவிழாக்களுக்கு கூட விண்ணப்பிக்க தகுதியுள்ள படம்.  நம்மூரில் எப்போது இதுபோல நல்ல திரைப்படங்கள் குறைந்த பொருட்செலவில் வரும் ?!!! என்று ஏங்க வைக்கிறது. அருமையான, புதுமையான கதை இது,  ஒரு திரைப்படங்களின் கதையை இயக்குனர் யோசிக்க ஹவாய் தீவுக்குப் போய் அறை எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. நாம் வாழும் சூழலிலேயே ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என நிரூபித்த படம். அதை நகைச்சுவையாகவும் சமூக சிந்தனையுடனும் சொன்ன ரஞ்சித் மிகவும் பாராட்டுக்குரியவர்.

படத்தின்  கதை:-
அரிப்ராஞ்சி  என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அரிசிக்கடை ஃப்ரான்ஸிஸ் தனக்கு வாழ்வில் பெரிய அளவில் பொருட்செல்வங்கள் கிடைத்தும் ஏனைய முக்கிய செல்வங்களான கல்வி, நல்ல மனைவி, மக்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றிருக்கும் மனிதர். இவர் வாழ்வில் எடுத்த ஒரு அற்புதமான , இன்றியமையாத முடிவு, இறந்து போன அவரின் சொந்த பந்தங்களை, இயேசுவின் சீடரில் ஒருவரான ஃப்ரான்ஸிஸையே இவர் கண்முன்னே தோன்ற வைக்கிறது. உலகில் யாருக்குமே கிடைக்காத பெரிய செல்வம் இறை  தரிசனம். அது கிடைக்க அவர் அப்படி என்ன தான் சாதித்தார்?!!!

ப்ராஞ்சியெட்டனை சுற்றி அவர் தரும் காசுக்காகவும், அவர் தரும் உணவு, குடிக்காக எப்போதும் ஒரு காக்காய் பிடிக்கும் கூட்டத்தை நாம் பார்க்கிறோம். சமூக அந்தஸ்து வேண்டி அவர் தன் நண்பன் ஜோசுக்கு எதிராக கிளப் ப்ரெசிடெண்ட் பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக் கவ்வுகிறார். இளம் வயதில் தன் சக மாணவி ஓமனாவை அவன் இவரைப்பற்றி நிறைய போட்டுக்கொடுத்து  வெறுப்பை உண்டு பண்ணி தட்டிச் சென்ற அவமானமே இன்னும் இவரால் தாங்க முடியவில்லை. இனி எந்த பதவியும் வேண்டாமென்றாலும் அல்லக்கைகள் விடுவார்களா?

ப்ராஞ்சியெட்டன் இதுவரை நான்கு இதய அறுவை சிகிச்சைக்கு பண உதவியளித்திருக்கிறார்.அதை இவரே வாய்விட்டு வெளியே சொன்னாலும் கூட அது வெளியே யாருக்கும் தெரியாமல் போகிறது,அது தான் நேரம்.ஆனால் அது இறைவன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது புரியாமல் ப்ராஞ்சியேட்டன் சமூகத்தில் விரைந்து புகழ்பெற, கலை நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் கூட்டங்களுக்கு நிறைய பணம் நன்கொடையாக தந்தால் விழா தலைமை கிட்டும் என்று அல்லக்கைகள் சொல்ல , அதே போல பணம் தருகிறார் ப்ராஞ்சி. இருந்தும் விழா மேடையில் இவர் அமர்ந்திருந்த நாற்காலி படிப்படியாக பறிக்கப்பட்டு இவர் கடைசியாய் சென்று அமர , அதுவும்  ஒரு பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய எழுத்தாளருக்கு பறித்து தரப்படுகிறது, மிகவும் நொந்து போனவர் இவரின் அல்லக்கைகளால் மீண்டும் உசுப்பேற்றப்பட்டு இப்போது பத்மஸ்ரீ பட்டத்துக்கு ஆசை காட்டப்படுகிறார். அவர் கலைமாமணி விருது வாங்க ஆசைப்படிருந்தாலும் தமிழ் நாட்டின்  நகைப்புக்குரிய அவ்விருதை பத்தோடு பதினொன்றாக  கருணாநிதியின் கையாலேயே வாங்கியிருக்க முடியும்.ஆனால் பத்மஸ்ரீ என்றால் சும்மாவா?!!!

பத்மஸ்ரீ பட்டத்துக்கு,முதல் கட்டமாக ஒரு கதாசிரியனிடம்  சென்று ஒருலட்சம் ரூபாய் தந்து இவரைப்பற்றிய போலி ப்ரொஃபைல் ஒன்றை தயாரிக்கின்றனர், டெல்லியில் நல்ல அந்தஸ்துள்ள ஒரு அரசியல் தரகனைப் பிடித்து, ஒன்றரை கோடிரூபாய் கொடுத்து அவன் பத்மஸ்ரீ வாங்கித்தருவான் என்று நம்பியவர் கடைசியில் எமாந்தும் போகிறார். பதமஸ்ரீ பட்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். பார்வையாளருக்கு நிச்சயம் சந்தனம் மிஞ்சினால் ***யில் என்னும் பழமொழி நினைவுக்கு வருமளவுக்கு அட்டகாசம் செய்கிறார். அவ்விருது கிடைக்காமல் போக மிகவும் நொந்து போகிறார் ப்ராஞ்சியேட்டன்.அவரின் அல்லக்கை மேனன் மனம் தளாறாமல் இவரை செவாலியே விருதுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை சொல்லி உசுப்பேத்தி அடிவாங்கும் இடமெல்லாம், மிகவும் கலக்கல்.

இவருடனே தங்கியிருக்கும் ஒரு சமையல்காரர்[என்னபெயர்] செம வேடம். சதா ப்ராஞ்சியேட்டனைச் சுற்றி ஆட்கள் ஈமொய்பது போல இருக்க.அங்கே எதிர்ப்பட்டு, யாரெல்லாம் சாப்பிடப்போறா?இன்று யாருக்கெல்லாம் இங்க சாப்பாடு? இன்று யாருக்கெல்லாம் அரிசி உலையில் போடனும் என்று மாற்றி மாற்றிக் கேட்டு சிரிக்க வைக்கிறார். என்கடன் வடித்துக்கொட்டுவதே என்றிருக்கும் நிறைய உஸ்தாத்களை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது. இயக்குனர் ஓமனா [குஷ்பு] & ஜோஸ் [சித்திக்] கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் ஆதர்ச தம்பதிகளாக தோற்றமளிக்கும் பொய்யான மனிதர்களின்,அவர்களின் கள்ளக் காதல்களையும் நன்றாகக் கிழித்திருக்கிறார்.

சந்தேகச்சாவுகள் எப்படி சமூகத்தில் நிகழ்கின்றன?!!! நல்ல மனைவியர் கூட   சந்தேக புத்தி கொண்ட குடிகாரக் கணவனால்    கொலையுறுகின்றனரே?அது ஏன்?. ஆத்திரப்பட்டு கொலைகாரனான கணவன் அதன் பின்னர் படும் பாடு, அதன் பின்னர் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படும் பாடு. அதை மிகத் தெளிவாக அலசியிருக்கிறார் இயக்குனர் .படத்தில் பாலி [paulie] என்னும் 15 வயது சிறுவன் பாத்திரம், அவனது பெற்றோர் பாத்திரம் யாராலும் மறக்கவே முடியாது. பாலிக்கு ட்யூஷன் வாத்தியாராக வரும் ஜெகதி ஸ்ரீகுமார் செம ரகளை. அதே போல இண்டீரியர் டிசைனராக வந்த பிரியாமணியின் வேடம் மிகவும் அழகு.யதார்த்தம். ஒன்று ஒருவனுக்கு மறுக்கப்படுகின்றதென்றால் அவனுக்கு அதைவிட உயர்ந்த மற்றொன்று கிடைக்கப்போகிறது என்னும் விதி உண்டு, அதை உணர்த்தும் கதாபாத்திரம். சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு நடிகை முதுகில் எத்தப்பட்டு விழுந்திருப்பார் என்றால் அது ப்ரியாமணியாக தான் இருக்கும். செம காமெடி அந்த இடம்.

பெற்றால் தான் பிள்ளையா?!!! என்னும் சமூக சீர்திருத்தம் கூட நன்கு அலசப்பட்டிருக்கின்றது, 118கோடி பேர் வசிக்கும் நம் சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எத்தனையோ பேர் அடிப்படை வசதியற்று வாழ்கின்றனர், அவர்களின் நல்ல படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் வசதி செய்து தர சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் மனது வைத்தால் நிச்சயம் முடியும் என்பதை  போகிற போக்கில் பதிந்திருக்கிறார். சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த மீடியம். இதை வைத்து ஒருவனை முட்டாள் ஆக்கவும் முடியும். அதே முட்டாளை குணப்படுத்தவும் முடியும் என்பதை சொன்ன படம். வெகு நாட்களுக்கு பின்னர் நகைச்சுவையுடன் கூடிய சமூக சிந்தனைப்படம் பார்த்த திருப்தி கிட்டியது .


படத்தில் ப்ராஞ்சியேட்டன் மேடையேறுகையில், அவரின் மன உறுதியை குலைக்க அவரின் டாக்டர்-விரோதக்கார நண்பன் ஜோஸ், ஆமாம் நீ அந்த மாட்டுக்கொட்டகையில் வேலை செய்தவளின்  மார்பை  பிடித்து அழுத்தினாய் தானே?!!! அது இடதா அல்லது வலதா? என்கிறார். ப்ராஞ்சியேட்டன் திருதிருவென விழிக்க, அட இருப்பதே இரண்டு தானே? அதிலென்ன குழப்பம் என்று கேலிசெய்து விட்டு இறங்கிச்செல்கிறார். இது தான் சேட்டன்  குசும்பு போலும். இலை மறைவு காய்மறைவாக இருக்கவேண்டியவற்றை இப்படி சமூக சிந்தனையுடன் கூடிய நகைச்சுவைப்படத்தில் ஒரு ஆபாச வசனமாக வைக்கும் சின்ன புத்தி தேவையா ?!! எனப்பட்டது. என்ன தான் கேரளம் , இலக்கியங்களை வாசித்து தேர்ந்த ஒரு சமூகம்  என்றாலும் இப்படியா?!!!

படத்தின் இசையும் பாடலும்,ஒளிப்பதிவும் சராசரிதான் என்றாலும்.நடிப்பும் நகைச்சுவையும் சரிகட்டுகிறது.  படம் சொன்ன செய்திக்காகவே பார்க்கலாம். தாராளமாக இதை முறையாக உரிமை வாங்கி தமிழில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அப்படிப்பட்ட கதை.  ஆனால் தமிழில் எடுக்கையில் இக்கதையை உயிரோட்டத்தை குலைத்து ஹீரோவுக்காக மாற்றி அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்துவிடும். அதையும் யோசிக்கவேண்டும். சரிதானே நண்பர்களே!!!?
 ====0000====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====
திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Ranjith
Produced by Ranjith
Written by Ranjith
Starring Mammootty
Priyamani
Jesse Fox Allen
Innocent
Master Ganapathy
Siddique
Khushboo
Jagathy Sreekumar
Sasi Kalinga
Music by Ouseppachan
Cinematography Venu
Editing by Vijay Shankar
Studio Play House
Distributed by Play House Release
Release date(s) September 10, 2010 (2010-09-10)[1]
Country India
Language Malayalam
Budget Indian Rupee ₹1.9 crore (US$421,800)[2]
Gross revenue Indian Rupee ₹5.5 crore (US$1.22 million) in 80 days [3]
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (237) ஆஸ்கர் (173) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)