கேரளா கஃபே [Kerala Cafe] [மலையாளம்] [2009]

அருமை நண்பர்களே!!!
நலம் தானே? இங்கே 2 மாதங்களாக மீண்டும் அமீரகத்தில் வேலையில் உள்ளேன், 8 மணிநேர வேலையும்,5 மணிநேர பயணமாக வாழ்க்கை ஓடுகிறது, பயணத்தில் ஊடே நிறைய படம் பார்க்க  மீள் பார்வை பார்க்க நேரம் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் உண்டு.

அப்படி மீள் பார்வை பார்த்ததில்,கேரளா கபே என்னும் படம் அநேகம் பேரால் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு படைப்பும் உண்டு,10 படைப்பாளிகள் ஒன்றாகக் கூடி மலையாள சினிமாவுக்குச் செய்த ஒரு உன்னத போர்ட்ஃபோலியோ எனலாம், உலகம் ஒரு நாடக மேடை ,இங்கு எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ஒரு நடிகர் தான், ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் தரப்பட்டு அதில் செவ்வன நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் நாம் என்பது தான் எத்தனை உண்மை? மலையாள திரை உலகினை பார்க்கையில் வியப்பும் பொறாமையும் ஒருங்கே ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

ஒன்றை மிஞ்சும் மற்றொரு படைப்பை  கண்டு இன்னும் தேடத்துடிக்கிறது நெஞ்சம்.மிடுக்கன்மார்கள்,ரசம் கொண்ட மனிதர்கள்.எப்படி எல்லாம் கதை வடிக்க சாத்தியப்படுகிறது இவர்களால்,படத்தின் மாந்தர்கள் அனைவருமே அன்றாடம் நாம் வாழ்வில் எங்கோ எப்படியோ காணும் பிறவிகள் தாம்.அழுகை ஆனந்தம், வியப்பு, கோபம் என மாறி மாறி நம்மை பயணிக்கச்செய்யும் ஓர் உயர்ந்த படைப்பு.எவ்வளவு நல்ல படைப்பை பார்க்க நேர்ந்தாலும் உடனே எழுதிவிட கைவர மாட்டேன் என்கிறது, உள்ளுக்குள்ளேயே அசைபோட்டு ட்ராஃப்டில் வைத்து வெளியிடுவதற்குள்ளே மாமாங்கம் ஆகிவிடுகின்றது.

படத்தின் முத்தான பத்து இயக்குனர்கள் லால் ஜோஸ், ஷாஜி கைலாஷ், அன்வர் ரஷீத், ஷ்யாமா பிரசாத், உன்னி கிருஷ்ணன், நடிகை ரேவதி, அஞ்சலி மேனன், பத்ம குமார், சங்கர் ராமகிருஷ்னன், உதய் ஆனந்தன் ஆவர்.

கேரளா கபே என்னும் பெயர் போகிற போக்கில் வைத்து விடவில்லை,கேரளா கஃபே ஒரு ரயில் நிலைய உணவகம்,ஒரு காலை தொடங்கி இரவு வரை ஒரு ரயில்வே உணவு விடுதியில் வந்து போகும் மாந்தர்கள் கீழ்வரும் பத்து கதைகளில் சம்மந்தப்படுவோர் ஒரே இழையில் கூடும் இடம், இப்படத்தின் 10 கதைகளுடைய களங்கள் வெவ்வேறானவை ஆனால் அவற்றை ஒன்றாய் இணையச்செய்யும் புள்ளி தான் இந்த கேரளா கஃபே.

படத்தின் 10 கதைகளே இருந்தாலும் அவற்றின் ஏனைய மாந்தர்கள் ஒன்றாய் சந்தித்து ரயில் பிடிக்கச் செல்லும் நிகழ்வு எனக்கு 11ஆம் கதையாய்த் தோன்றியது,உலக சினிமா என்று கர்வப்பட்டு சொல்லக்கூடிய படைப்பு,என்ன தான் அரசியல்,மொழி,இனத்தால் வேறுபட்டாலும்,முல்லை பெரியாற்றின் தண்ணீர் தர மறுத்தாலும்,அகில இந்திய அளவில் தமிழனுக்கு துரோகம் நினைத்தாலும் சேட்டன் மார்களை இடது கையால் புறம் தள்ளிவிட்டு நல்ல சினிமா பற்றி சிந்திக்க முடியவில்லை.

1.நோஸ்டால்ஜியா

பத்ம குமார் இயக்கியது,துபாயில் வசதியாய் இருக்கும் திலிப் நவ்யா நாயர் தம்பதிகளுக்கு எல்லாம் இருந்தும்,சமூகத்தில் இன்னும் நன்றாக வாழ் வேண்டும் என்னும் வெறி உந்த திலீப் தன் இரு மகள்களை 2 லட்சம் ஃபீஸ் கட்டி தன் ஊரில் உள்ள கான்வெண்ட் போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டு வருகிறார்,தன் தாய் தந்தை வாழும் பரம்பரை தரவாடு வீட்டை 25 வில்லாக்களாக மாற்றிக்கட்டி விற்க தன் பெற்றோர் அனுமதி இன்றி பில்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பண பரிவர்த்தனையும் செய்கிறார்.

 துபாயில் வேலை செய்யும் நண்பனிடம் தன் குடும்ப கஷ்டத்தை சொல்லி 3லட்சம் கடனும், தன் குறைந்த படிப்பிற்கு ஏற்ற வேலையும் கேட்டு அவ்வப்போது நச்சரிக்கும் கேரளா கஃபேயில் சர்வராக வேலை செய்யும்  நண்பனுக்கு சாமர்த்தியமாக டிமிக்கி கொடுக்கும் திலீப்பை நாம் இதில் பார்க்கிறோம், அவனுக்கு வருடத்தில் 11 மாதம் பாலைவனத்தில் கழிந்தாலும் அதுவே மனதுக்கு பிடிக்கிறது,அநேக நாட்கள் அதை வைது தாய்நாட்டை பார்த்து ஏங்கினாலும், அவன் தாய் நாட்டில் இறங்கியவுடன் அந்த பற்று போய்விடுகிறது, தாய் நாட்டை ஏசத்துவங்கிடும் ஒரு ஜென்மம்.

அவன் மனம் மீண்டும் அப்பாலைவனம் செல்லவே தவிக்கிறது,அதை இந்த கதையின் ஊடாக நன்றாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.இவனின் பணத்தாசைக்கு இவனது 2 மகள்களின் எதிர்கால டாக்டர் படிப்பையும், விமரிசையாக செய்ய எண்ணும் அவர்களின் திருமணத்தையுமே காரணமாக சொல்லி வரும் தந்தைமார் உலகின் பொதுவான படைப்பு.

2.ஐலாண்ட் எக்ஸ்ப்ரெஸ்
ஷங்கர் ராமக்கிருஷ்ணன் இயக்கியது சுகுமாரி, ப்ரித்விராஜ், ஜெயசூர்யா, ரகுமான்கான் ஏனையோர் நடித்தது. கதிகலக்கும் ஒரு கதை, நம் குடும்பத்தில் 21 வருடங்கள் முன்பு யாரேனும் ரயில் பயணத்தில் ரயில் பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து இறந்துபோன 120 பேர்களில் ஒருவராய் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப்பார்க்கவே வயிற்றை பிசைகிறது அல்லவா?, ஆனால் இது எங்கோ நடக்கும் யதார்த்தம் தானே? தினசரி நாளிதழ்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் இதுபோல படிக்கிறோம் தானே?அது போல 21 வருடங்களாய் குறிப்பிட்ட அதே நாளில் அந்த ஆற்றுக்கு பாலத்தின் கீழே கூடி அவ்விபத்தில் உயிர் விட்டோருக்கு நீத்தார் கடன் கொடுக்கும் ஒரு சாராரின் கதை இது,

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு படைப்பு.இதில் உயிர் நீத்த நண்பனால் அன்று விபத்தில்  ஆற்றில் காப்பாற்றப்பட்ட ப்ரித்விராஜ் நண்பனுக்கு தான் எழுதிய புத்தகத்தை சமர்பிக்க அந்த ஆற்றுக்கு தோழியுடன் வருவது அழகு,அதே ஆற்றில் தன் மகனை இழந்த சுகுமாரி,தன் தாயை இழந்த ராணுவ வீரன் ஜெயசூர்யா இருவருக்கும் ரயில் நிலைய காத்திருப்பாளர் அறையில் நிகழும் பாசப்பிணைப்பான காட்சிகள் மிக நன்றாக வந்திருந்தது,அந்த ரயிலை ஓட்டியவர் குற்ற உணர்வின் உச்சத்தில் தனி அறையில் வசிப்பது பாந்தம்,இதனூடே மனைவியை பறிகொடுத்த ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் வீரர் ரகுமான்கானின் கதையும் சொல்லப்படுதல் அழகு.
3.லலிதம் ஹிரண்யம் 
ஷாஜி கைலாஷுக்கும் சுரேஷ் கோபிக்கும் என்ன ஒரு ஜென்மாந்திர தொடர்போ? எவ்வளவு படம் ஒன்றாக செய்திருக்கின்றனர்,இதுவும் மகத்தான ஒன்று. சுரேஷ் கோபி, ஜோதிர்மயி மற்றும் தான்யா நடித்துள்ள கதை ,மிகவும் வித்தியாசமான கதை. கணவனின் வேறொரு பெண்ணுடனான உடல் தொடர்பை கணவனின் உயிருடன் இருந்த போதும் இறந்த பின்னரும் மன்னிக்கும், அவனுக்கு அளித்த சத்தியத்தை காப்பாற்றும் ஒரு பெண்ணின் கதை, கணவன் செய்த தவற்றை சிறு குழந்தை செய்த தவற்றுடன் ஒப்பிட்டு மன்னிக்கும் ஒப்பற்ற மனைவியின் கதையும்கூட, சக்களத்திக்கு தன் கணவனுக்கு பின்னர் மனைவியே வாழ்க்கை  தரும் படம். நிச்சயம் பாராட்ட வேண்டிய படைப்பு.
 4.ம்ருத்யுஞ்ஜயம்  (மரணத்தை வெல்லுதல்)

உதய் ஆனந்த்  இயக்கியது, இயக்குனர் ஃபாஸில் மகன் பாஹத் ஃபாஸில், திலகன், ரீமா கல்லிங்கல் நடித்தது,ஒரு பாரம்பரியம் மிக்க பாழடைந்த வீட்டில் இருக்கும் பேய்களும்,அதை டாகுமெண்டரி எடுக்க வரும் ஒரு நவநாகரீக இளைஞனும், அவ்வ்வீட்டுக்கு பாத்தியதைப்பட்ட மந்திர தந்திர விற்பன்ன முதியவரும், அவரது பேத்தியையும் சுற்றி பின்னப்பட்ட திகில் கதை, இறுதியாய் முதுகுத்தண்டில் ஐஸ் கட்டியை வைத்தால் போல சில்லிட வைக்கும் படைப்பு. திலகன் எப்பேர்ப்பட்ட ஒரு ஆளுமை,நான் சொன்னேன்ல கேட்டாயா?  எக்காளம் பேசிய இளைஞன் பிணத்திடம் போய் பேய் இருந்துச்சுல்ல?!!! என்று பார்க்கும் ஒரு தொனியும் இறுமாப்பும், அதை மறக்கவே முடியாது.

5.ஹாப்பி ஜர்னி

உஸ்தாத் ஹோட்டல் திரைக்கதை ஆசிரியர் அஞ்சலி மேனன் இயக்கியது, ஜகதி ஸ்ரீகுமார் பாத்திரம் நாமே பல காலம் நம் வாழ்வில் செய்திருப்போம், நித்யா மேனன் கதாபாத்திரம் எதிர்பாராத ஒன்று,இன்றைய நவநாகரீக மங்கைகள் என்ன புத்தி சாருர்யமும் மதி நுட்பமும் கொண்டவராக இருக்கின்றனர்,அது போல ஒரு பெண்ணிடம் வாய் கொடுத்து பல்பு வாங்கும் நடுத்தர சபலிஸ்ட் பாத்திரம் ஜகதிக்கு,என்ன நடிகன்,இந்த வேடமெல்லாம் எம்மாத்திரம் இவருக்கு.

கூடவே சிரிப்பும் லேசான பயமுமாய் நாமும் பயணிக்கிறோம்.நல்ல திறமையான ஆக்கம்.கேரளா கபேயில் உணவு மேசையில் வந்து அமரும் ஜகதியின் அருகே ஒரு நவநாகரீக நங்கை வந்து அமர அவர் அலறி அடித்துக்கொண்டு வேறு மேசைக்கு ஓடும் காமெடி எல்லோரையும் கவரும் என்பேன்.இது போல மனைவியை ஏய்க்கும் யாரும் ஒருகணமாவது யோசிப்பர்,
 6.அவிராமம்

உன்னி கிருஷ்ணன் இயக்கியது , சித்திக், ஸ்வேதா மேனன் நடித்த படம்.என்ன ஒரு ரசமான நடிகை?!!!ஒழிமுறி படத்தில் காளிப்பிள்ளை கதா பாத்திரமே இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை, என்ன ஒரு நல்ல படைப்பு என வியக்க வைக்கும்,ரிசசன் பாதிப்பால் மனமுடையும் கணவன் என்றுமில்லா திருநாளாக மனைவியை தாய்வீட்டுக்கு சந்தோஷமாக ரயில் ஏற்றிவிட்டு வரும் கதை, மனைவிமார்களை கணவன்மார்களால் எக்காலத்திலும் ஏமாற்றவே முடியாது,காலத்துக்கும் கூடவே வரும் ஒரு ஒப்பற்ற பந்தம் அவள்.

கணவனின் முகத்தடுமாற்றத்தை கண நேரத்தில் கிரகித்து அவன் வாழ்வில் தடுமாற நினைக்கும் அந்த முக்கியமான தருணத்தில் வந்து அழைப்பு மணியை ஒலிக்கும் அந்த வல்லமை நல்ல மனைவிக்கு தான் கை வரும், ப்ரைவேட் ஃபினான்ஸில் ஏதாவது மாட்டிக்கொண்டாயா?என்று அவனுக்கு வரும் போன் அழைப்பை அவன் ஏற்று பேசும் தொனியிலேயே கண்டு பிடிக்கும் அந்த கணம் முக்கியமானது, பெண்களுக்கு எல்லா ரகசியங்களையும் உடனே தெரிந்து கொண்டுவிட வேண்டும், அது பல சமயங்களில் நன்மையிலும் முடிகிறது என்பது மன நிறைவை தருகிறது, இது போல சம்பவம் எல்லா தடுமாற்றம் கொண்ட கணவன்களது வாழ்விலும் நிகழ்ந்தால் அது வரமாகும்.மார்வெல்லஸ் படைப்பு

7.ஆஃப் ஸீஸன்

ஷ்யாமா பிரசாத் இயக்கியது , ரிசசன் பாதிப்பு தான் இதற்கும் கதைக்களன். ரிசசன் கொடுமையால் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே நாதியற்றிருக்க இந்தியாவுக்காவது போய் வேலை தேடுவோம் என வரும் போர்ச்சுகீஸு நாட்டு தம்பதியிடம் தன் வழமையான கைவரிசையை காட்டி பல்பு வாங்கும் டூரிஸ்ட் கைடின் கதை, இதில் ஒரு தெரு நாய் நடிகர்களை விட மிக நன்றாக நடித்திருந்தது.ஒரு திருஷ்டியான பாகம் எனலாம்.
8.ப்ரிட்ஜ்

ஒரு மகனால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டியையும் தூக்கி எறியப்பட்ட ஒரு பூனை குட்டியையும் இணைக்கும் கதை, உஸ்தாத் ஹோட்டல் இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியது, கல்பனா, ஆதாமிண்ட மகன் அபு பட புகழ் சலீம் குமார் நடித்தது. இதில் ஒரு பூனைக்குட்டி   மிக அருமையாக பங்களித்திருந்தது, சிறுவன் நடிப்பு மிக அருமையாக இருந்தது , இரு புறக்கணிக்கப்பட்ட ஜீவன்கள் ஒன்றை ஒன்று நைச்சியமாக பற்றிக்கொள்ளும் கதை. இதே கதையில் வேறொரு இழையில் வரும் தாயிழந்த சிறுவன் தந்தைக்கு பயந்து வளர்க்கும் தெருப்பூனை,தந்தையால் குப்பையில் வீசப்பட, மகன் பூனைமேல் பாசமிகுதியால் ஜுரத்தில் பிதற்றும் தருணம் நம் நெஞ்சம் நோகும்.

மிகவும் சக்தி வாயந்த மனதை நகர்த்துகின்ற ஒரு படைப்பு, நாம் அன்றாட வாழ்விலே சாலையில் காணும் கைவிடப்ப்பட்ட முதியோர்கள் எப்படி அங்கே வந்து சேர்ந்திருப்பர்?!!!,அவர்களுக்கு இந்த  உலகம் எப்படி அடைக்கலம் தந்தது என்பதை டீடெய்லாக சொல்லும் படைப்பு இது,அன்று ஒரு நாள் வயதான பார்வை மங்கிய தன் அம்மாவுக்கு விருப்பமாக எல்லா கடமையையும் அவளின் கைபிடித்து நகரத்துக்கு கூட்டிச்சென்று செய்யும் மகன், அப்படி ஒரு புள்ளியில் மனம் மாறிவிட்டு, அவளை திரையரங்கின் இடைவேளையில் தன் வறுமையின் கையாலாகாத்தனத்தின் உச்சத்தில் தனியே விட்டுவிட்டு திரும்புகையில் அவருடன் சேர்ந்து நாமும் அழுவோம். அன்வர் ரஷீத்துக்கு இது தன்னிகரில்லாத போர்ட்ஃபோலியோ.
9.மகள் 

நடிகை ரேவதி இயக்கிய படம், இது ஒருங்கே ஏழ்மை,சட்ட விரோத தத்தெடுத்தல், கட்டாய விபச்சாரம் என மூன்று தளங்களிலும் பயணிக்கிறது, நாகர்கோயிலில் நடக்கும் கதை, பெரும்பகுதி தமிழிலேயே எடுக்கப்பட்ட்டுள்ளது, தவிர மலையாளிகள் பாஷாபிமானம் இல்லாமல் சப் டைட்டில் கூட இல்லாமல் தமிழ் வசனங்களை அனுமதிப்பது நீண்ட நாளாகவே வியப்பளிக்கிறது. மற்றொரு உதாரணமாய் சமீபத்திய டயமண்ட் நெக்லேஸ் படத்தில் வரும் தமிழ்பேசும் நர்ஸ் கதாபாத்திரத்தை சொல்வேன்.

ஏழாம் உலகம் புதினத்தில் பழனியில் ஒரு சேரியின் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கும் தம்பதியினர்,  பழனியின் திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர் சிறுமிகளை கடத்தி வந்து கண்களில் திராவகம் ஊற்றி,சூடு வைத்து குருடாக்கி முகம் சிதைத்து அண்டர்க்ரவுண்ட் பிசினஸாக செய்வர். பண்டாரத்திடம் உருப்படிகளாக அவர்களை வாங்கிக் கொள்ள  வற்புறுத்துவர், பண்டாரம் அரைமனதுடன் அவர்களை வாங்கவும் பயமாயிருக்கும், வாங்காமல் விடவும் மனமிருக்காது அப்படி ஒரு மனநிலையில் 3000 என்றால் வாங்கலாம் என்பார்.

அப்படி ஒரு டார்க்தீம் இதில், கல்லுடைக்கும் தொழில் செய்யும் தம்பதியரின் மூன்று குழந்தைகளில் மூத்த மகள் இனி தத்துப்போகிற இடத்திலாவது நன்றாயிருப்பாள், தம்பியை தங்கையை பள்ளியில் படிக்க உதவிசெய்வாள் என ஊர் பேர் தெரியாதவரிடம் பணம் பெற்றுக்கொண்டு பெற்றோரே விற்கும் அவலம், அந்த பிஞ்சை கேரளா கஃபேயின்  ஃபேமிலி ரூமில் வந்து அப்பெண்ணுக்கு தூக்கமாத்திரை தந்து தூங்கச்செய்து வேறொரு விபச்சார பிம்பிடம் விற்கும் கொடூரம்,அவளை பெரும் தொகை கொடுத்து வாங்கி தோளில் தூக்கிசெல்லும் விபச்சார பிம்ப்பாக வரும் காமெடி நடிகர் சசி கலிங்காவை மறக்கவே முடியாது.ஒரு சாதாரண மயிலிறகு கூட இதில் கவிதையாக நடித்துள்ளது.

10.புறம் காழ்ச்சல்கள்

லால் ஜோஸ் இயக்கியது ,ஒரு மனைவியால் கைவிடப்பட்ட கணவன் சீனிவாசனின் நினைவலைகளில் விரிகிறது,மொத்த பத்தில் இது முத்தானது, கடந்த கால நினைவலைகளில் மூழ்கி தன் மனைவி வேலை பார்த்த அணைக்கட்டு அலுவலகத்தை பல வருடங்கள் கழித்து வெளியே நின்று பார்க்க பஸ்பிடித்து வரும் ஒரு பாத்திரம் .

தான் ஓரு ஊர், மனைவி ஓர் ஊர் என வேலை செய்கையில் மனைவி அணைக்கட்டு அலுவலகத்தில் முறை தவறிப்போய்விட இவரின் ஏமாற்றத்தை சொல்லும் கதை, சட்டென வேறொரு புள்ளியில் பயணிக்கிறது, சக கோபக்கார பயணியான மம்முட்டி  5 நிமிட தேநீர் இடைவெளிக்காக நிறுத்தப்பட்ட பேருந்தை, அதட்டல் போட்டு இயக்கச் செய்து இவர் அருகே வந்து அமர்கையிலேயே தொடங்கும் விறுவிறுப்பு, இறுதிக்காட்சியில்  அதற்காக சொல்லப்படும் நியாயம் நம் நெஞ்சில் சம்மட்டி அடியாக இறங்குகிறது.

மம்முட்டிக்கு இந்த நடிப்பு அல்வா சாபிடுதல் மாதிரி, கூடவே சீனீவாசன் வேறு , சீனிவாசன் சக உள்ளூர் பயணி மம்மூட்டியிடம் சகஜமாய் பழக வேண்டி கேட்கும் கேள்விகள் , இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எத்தனை அடி உயரம்? மம்மூட்டி எனக்கு தெரியாது,

உடனே அவர் விட்டுவிடாமல் அவர் இந்த அணை நீர்மட்டம் இவ்வருடம் எவ்வளவு உயரம் எனக் கேட்க, கோபமான மம்மூட்டி இறங்கிப்போய் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே?!!! என்னும் பதிலும் செம கலக்கல், இறுதியாய் கேரளா கஃபேவின் உணவு மேசையில் சீனிவாசன் தன் டைரியில் எழுதும் குறிப்பில் அன்றைய நினைவலைகளில் தன் ஊர் பேர் மனைவி எல்லாம் மறந்து அந்த முகம் மட்டுமே உடன் வருவதாய் எழுதும் இடம் மிக அருமை.

உலக சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத கொண்டாடவேண்டிய படத்தில் இதுவும் ஒன்று, எழுதாமல் விடுவதைக் காட்டிலும் தாமதமாகவேனும்  எழுதுவது நன்று என எழுத வைத்த ஒரு படம். டோண்ட் மிஸ் இட்!!!

புறம்காழ்ச்சல்கள் கதையின் யூட்யூப் காணொளி:-படங்கள் நன்றி கூகுள்,விக்கிபீடியா,யூட்யூப்
======00000======

மை ப்யூட்டிஃபுல் லாண்ட்ரெட் [My Beautiful Laundrette][1985][ஆங்கிலம்] [இங்கிலாந்து] [15+]அருமை நண்பர்களே!!!
நலம் தானே? இந்த மை ப்யூட்டிஃபுல் லாண்ட்ரெட் படம் பார்த்தேன்,பகிர வேண்டும் என்ற உந்துதலை அளித்த ஒரு படம். இது ஒருங்கே ஒரின சேர்க்கை, நிறவெறி, காமம், காதல், நட்பு, அரசியல், குடியுரிமை, பஞ்சம் போன்றவற்றை தாட்சண்யமின்றி அலசுகிறது, ஒரிஜினாலிட்டி உள்ள திரைக்கதை, பிரிட்டனில் ஆசியர்களின்  வாழும் சூழல் போன்றவை படம் பார்ப்பவரை ஒன்றச்செய்து கட்டிப்போட்டு விடும். 1987ன் சிறந்த ஒரிஜினல் கதைக்கான ஆஸ்கர் நாமினேஷனையும் ஹனிஃப் குரேஷிக்கு பெற்றுத்தந்துள்ளது. பேரலல் சினிமா, இண்டிபெண்டண்ட் வகை சினிமாக்களில் நடிக்கும் ரோஷன் சேத், சையத் ஜஃப்ரி போன்ற ஜாம்பவான்கள் நடித்த படம். மேலும்  ஜானி என்னும் ஒரு முக்கிய பாத்திரத்தில் டேனியல் டே லேவிஸ் (there will be blood)  நடித்த படம்.

1980களின் மார்கரெட் தாட்சரின் வேடிக்கையான ஆட்சியின் போது இங்கிலாந்தில் நடக்கும் கதைக்களம் ஆகையால் அரசியல் எள்ளல்களுக்கு பஞ்சமில்லை. உலகில் நாம் எங்கே சென்றாலுமே நாம் இந்தியர்களையும் நம்மிடமிருந்து பிரிந்த பாகிஸ்தானியர்களையும் சர்வ நிச்சயமாக பார்க்கலாம், இப்படம் முழுக்க இங்கிலாந்தில் வந்தேறிய பாகிஸ்தானியர்களின் வாழ்வியல் சூழலை அலசுகிறது.

படத்தில் பிரதான பாத்திரமான ஹுசைன்  பாகிஸ்தானிய முன்னாள் பத்திரிக்கையாளர், வாழ்ந்து கெட்டவரும், ரயிலில் விழுந்து மாண்ட மனைவியை இழந்தவருமான  ஒரு அப்பா, லண்டனின் நெருக்கடியான , மெட்ரோ அடிக்கடி கடக்கும் ஒரு சேரிப்பகுதி குடியிருப்பில் வசிக்கிறார், சதா வோட்காவையும் சிகரெட்டையும் சுவைத்துக்கொண்டு படுக்கையிலேயே எந்த பிடிப்பும் இன்றி வாழ்கிறார், இவர் பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு வேறு நெருங்கிய நண்பராயிருந்தாராம்.

இவரது மகனாக ஓமர் கிடைக்கும் அற்ப வேலைகளை செய்து கொண்டு, படிப்பிற்காக ததுங்கினத்தோம் போடுகிறான், அவனது நண்பர்கள் வேலையில்லாமல் வீதிகளில் பொறுக்கித்தனம் செய்பவர்கள், அவர்களைப் போலவே தன் மகனும் வயது வந்தோருக்கு அரசு வழங்கும் டோல்(dole) என்னும் உதவித் தொகை பெறும் வரிசையில் நிற்பதை அவர் விரும்பவில்லை. 

இவரின்  மகன் ஓமர் ஏழை இங்கிலாந்து சேரி வாசியான ஜானி (டேனியல் டே டேவிஸ்) என்பவனுடன் மிகுந்த நட்பும் ஓரினச்சேர்க்கை உறவும் கொண்டிருக்கிறான். ஜானி மிகவும் தெளிவானவன், சேரிவாசியாகையால் ஓமர் அவனை வைத்து நிறைய நிழலான காரியங்களை சாதிக்கிறான். பணத்தேவை ஏற்படுகையில் இவனது மூளையையும் அவனுடைய உழைப்பையும் வைத்து பொருள் ஈட்டுகிறான். இவர்களின் உறவின் மீது சந்தேகப்படும் அப்பா ஹுசைன் ஓமரை தன் ஒன்றுவிட்ட சகோதரன் நாசர் வீட்டுக்கு விடுமுறைக்கு அனுப்புகிறார். அங்கே சென்ற ஓமர் கார்களை கழுவி சம்பாதிக்கிறான்.


இவனது சித்தப்பா நாசர் ஒரு ஸ்த்ரி லோலர்,மனைவியும் மூன்று மகள்களும் வாய்ந்த அவர் ஒரு மேல்தட்டு பாகிஸ்தானி,தாட்சரின் ஆட்சியில் பூர்வ குடிகளான இங்கிலாந்து வாசிகளே அனுதினம் அல்லலும் , துயரமும்  படுகையில் இவரும் , இவரது நண்பர் சலீமும் எளிதாகவும் அதிகமாகவும் பணம் சம்பாதிக்கத் தகுந்த எல்லாவழிகளிலும் பணம் ஈட்டுகின்றனர்,அதில் ஹெராயின் கடத்தலும் அடக்கம்.ஓமரை அவனுக்கு தெரியாமல் தங்கள் கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.

பங்குதாரரான சலீம் ஓமரை முழுதாக நம்பவில்லை.ஒரு சமயம் ஓமர் வாங்கி வந்த வீடியோ கேசட்டை பெற்றுக் கொண்ட சலீம் ,ஓமரை வீட்டில் காத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியே செல்ல அந்-நேரத்தில் ஓமர் சலீமது அறையில் துழாவி ஒரு வீடியோ கேசட்டை இயக்குகிறான்,பின்னர் தன் நண்பன் ஜானிக்கும் தொலைபேசுகிறான். இதையெல்லாம் நோட்டம் விட்ட சலீம் ஓமரை கீழே தள்ளி கண்களிலேயே காலை வைத்து அழுத்தி துன்புறுத்தி எச்சரித்து வெளியேற்றுகிறான்.

மேலும் சலீமுக்கு ஏழை இங்கிலாந்து வாசிகள் என்றாலே ஒரு அசூயை,அவர்களை எங்கே பார்த்தாலும் வெறுத்து காரி உமிழ்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான். ஒரு சமயம் அப்படி சலீமும் அவன் மனைவியும்  இங்கிலாந்து சேரி வாசிகளிடம் வசமாக  மாட்டிக் கொள்கையில் ஓமர் இவர்களை தன் நண்பன் ஜானி அங்கே அவர்களின் கும்பலில் இருப்பதைக் கண்டு,  அவனிடம் குழைந்து பேசி இவர்களை காப்பாற்றுகிறான். இந்த ஜெர்க்ஸ் (jerks) கும்பல் நமக்கு க்ளாக் ஒர்க் ஆரஞ்ச் படத்தின் மால்கம் மெக்டவல் nightly orgies கேங்கை அச்சு அசலாக நினைவூட்டுகிறது.இவர்களிடம் மாட்டிய எந்த வேற்று இனத்தவனும் உருப்படியாக வீடு போய் சேர முடியாது என்பதை உறுதியாகச்சொல்வேன்.

 ஓமரின் சித்தப்பா நாசருக்கு ராச்சல் என்னும் இங்கிலாந்து முதிர்கன்னியுடன் உடல் தொடர்பும் உண்டு.அவளை தன் அலுவலகத்துக்கே பகல் வேளைகளில் அழைத்து வேண்டிய படி இன்பம் துய்க்கிறார். இது ஓமருக்கும் தெரிகிறது. நாசர் ஓமரை நன்றாக வேலை வாங்கிக்கொண்டு ஒரு பழைய காரை உபயோகிக்கச் சொல்லி தருகிறார். விரைவில் தன் வீட்டுக்கும் ஓமரை கூட்டிப்போகிறார். அங்கே நாசரின் குடும்பம் மேல்தட்டு இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்கள் வாழுகிற சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதை காண்கிறான், அவர்களின் பேச்சில் இருந்து பாகிஸ்தானில் இருப்பதை அவர்கள் கேவலமாக கருதுவதை காண்கிறான்.அவர்கள் சோசியலிசத்தையும், கம்யூனிசத்தையும் எள்ளி நகையாடுகின்றனர்.இவர்கள் பாரம்பரிய முஸ்லீம்கள் போல ஐந்து வேளை தொழுவதில்லை, மேலும் நாசருக்கு வீட்டுக்குள் அவரது மனைவி மகள்களிடமிருந்து மரியாதை இல்லாத சூழலே நிலவுகிறது,

நாசரின் வீட்டில் கேளிக்கை மது விருந்து நடக்கையில் ஓமரும் நாசரின் மகள் தானியாவும் அறிமுகமாகின்றனர்,அவர்கள் சிறு வயதில் பார்த்திருந்தாலும் ஓமரின் ஆகிருதியும் அழகும் தானியாவை உணர்ச்சியூட்டுகிறது,அவனுடன் உறவு கொள்ள துடிக்கிறாள் அவள்,அவனை விரைந்து மணம் முடிக்கவும் விரும்புகிறாள்.  ஓமருக்கு பணம் சம்பாதிக்க ஆதாரமாக ஒரு பணக்கார பெண் தேவைப்படுகிறாள், அதற்கு வேண்டி தானியாவை விரும்புவது போல் நடிக்கிறான் ஓமர். மற்றபடி அவனுக்கு ஜானியுடனான ஓரின சேர்க்கை உறவே முக்கியம்.

அங்கே விருந்தில் தன் அப்பாவுடைய நண்பர்களிடம் ஓமர் நீண்ட நேரம் பேசுகையில் அவனை திசை திருப்பி தன் அறைக்கு அழைக்க வேண்டி ஜன்னலுக்கு வெளியே தானியா தன் டிஷர்டை மேலே  மடித்து தூக்கி அவளது இளம் மார்பகங்களை ஓமருக்கு காண்பித்து மேலே வருமாறு அழைக்கிறாள் , இதிலிருந்து பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்களான அவர்கள் இங்கிலாந்தில் எவ்வளவு கலாச்சார சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பது நமக்கு விளங்குகிறது.

ஒரு சமயம் ஓமரின் சித்தப்பா நாசர், ஜானியை தன் வாடகை தாரர் ஒருவன் காலி செய்ய மறுக்கும் ஃப்ளாட் ஒன்றிற்கு அவனை வைத்து காலிசெய்ய வேண்டி அழைத்துப் போகிறார்,அங்கே நாசருக்கும் அங்கே வசிக்கும் இங்கிலாந்து கருப்பின பூர்வகுடி கவிஞனான் வாடகைதாரருக்கும் கைகலப்பு முற்ற ஜானி  முன்னின்று உதவி அவனை தூக்கி வெளியே போடுகிறான், பின்னர் அவரிடம் கேட்கிறான், பாகிஸ்தானியனான நீ இப்படி இங்கே வந்து அடக்குமுறையும்  ஆக்கிரமிப்பும் செய்கிறாயே? இது உனக்கே நியாயமா? என்று. அதற்கு நாசர் இப்படி பதிலளிக்கிறார். that country's been sodomized by religion. என் நாடு பாகிஸ்தான் என் மதத்தினால் குதப்புணர்ச்சி செய்யப்பட்டது,நான் பணம் சம்பாதிக்கவே இங்கே வாழ்கிறேன்,அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்,எனக்கு அதில் ஏழை பணக்காரன்,ஆசியன் ஆங்கிலேயன் வேற்பாடு இல்லை என்கிறார்.

இங்கிலாந்தில்,  நாசருக்கு ஒரு பழைய ஓய்ந்து உழன்ற தானியங்கி லாண்டரி இருக்க அங்கே அதை கழுவி பெருக்கி பராமரிக்க ஓமரை நாசர் அழைத்துப்போகிறார்,அங்கே  அதை நிர்வகித்து லாபம் ஈட்டித்தருவதாக உறுதியளித்து சாவியை வாங்குகிறான் ஓமர்.அங்கே அட்டகாசம் செய்யும் உள்ளூர் இங்கிலாந்து போக்கிர் பொறுக்கி சிறார்களை அடித்து துவைத்து வெளியே எறிய ஜானியை தன் லாண்டரியில் வேலைக்கு சேர்க்கிறான் ஓமர்.
அந்த லாண்டரி மிகவும் பழுதடைந்து உள்ளது,அதை மாற்றி அமைக்க பணம் தேவைப்படுகையில் சலீம் ஒரு விலாசம் கொடுத்து பொருளை வாங்கி வர அனுப்புகிறான்,அங்கே போனால் ஒரு பாகிஸ்தானிய பத்தான் பெரிய வெண்தாடியில் இருக்க, இவன் முன்பாக அவன் அந்த ஒட்டு தாடியை பிரிக்கிறான், ஓமரிடமும் அதை தந்து அனுப்புகிறான். அதை வாங்கி வந்து ஓமரும் ஜானியும் பார்க்கையில் அதில் ஹெராயின் பொட்டலங்கள் இருக்கிறது,அதை ஜானியின் உதவியால் சந்தையில் சரியானவர்களுக்கு விற்று பெரும் பொருளீட்டுகிறான் ஓமர். சலீமிடம் குறும்புடன் வெறும் தாடியை கொண்டு போய் கொடுக்கும் ஓமர் , அவன் அதை தனி அறையில் சோதித்துப் பார்க்கையில் நகைக்கிறான். சலீம் இவனின் திருட்டுத்தனத்தை கண்டுகொள்ளவில்லை, அவனின் பங்குதாரர் நாசரின் மகளை ஓமர் திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறபடியால் விட்டு விடுகிறார், ஆனால் தொடர்ந்து நோட்டம் விடுகிறார்,


அந்த பணத்தைக்கொண்டு ஓமரும் ஜானியும் லாண்டரியை நவீனமாக அலங்கரித்து உள் அலங்காரம் செய்கின்றனர். திறப்பு விழாவின் போது நாசரும் சலீமும் வர நேரமாகிவிட,அந்த நேரத்தில் லாண்டரியின் உள்ளே உள்ள அறைக்குள் சென்று ஓமரும் ஜானியும் உறவு கொள்கின்றனர். வெளியே அப்போது நாசரும் அவரின் காமுகி ராச்சலும் வந்துவிட லாண்டரியின் அலங்காரத்தை வியந்து பார்த்த பின்னர் ஷாம்பெய்ன் அருந்திவிட்டு நடனமாடுகின்றனர்.வெளியே தம் துணிகளை துவைப்பதற்காக ஏழை இங்கிலாந்து வாசிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அங்கே அறையில் ஓமரும்,ஜானியும்  உள்ளே அறைக்குள் ஒன்றாக இருப்பதை நாசர் பார்த்து சந்தேகிக்கிறார். அங்கே ராச்சல் லாண்டரியை மக்கள் உபயோகத்துக்காக திறந்து வைக்கிறாள். நாசரின் மகள் தானியா ஓமரின் அழைப்பின் பேரில் அங்கே வந்தவள் ராச்சலை பார்த்து கொதிக்கிறாள்.

அங்கேயே வைத்து அவளை திட்டுகிறாள்,இது பொறுக்காத ராச்சல் அங்கேயிருந்து அழுதபடி வெளியேறுகிறாள்.இதன் பின்னர் நாசருக்கு நிம்மதி பறிபோகிறது,தானியாவின் அம்மா ராச்சலுக்கு எலியைக் கொண்டு ஒருவகையான பில்லி சூனியம் வைக்கிறாள்,அதில் ராச்சலுக்கு உடல் முழுக்க சொறியும் தேமலும் திடீரென தோன்றுகிறது. மேலும் ராச்சலின் வீட்டில் நாற்காலிகளும் மேசைகளும் நகர ஆரம்பிக்கின்றன,இதனால் மிகவும் பயந்து போன ரேச்சலுக்கு இது நாசரின் மனைவி வேலை என புரிகிறது,அவள் நாசரிடம் முறையிட்டு விட்டு , ஊரை விட்டே அன்று வெளியேறுகிறாள்.

அன்றே நாசரின் மகள் தானியாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்,வெளியேறியவள் ஓமரின் லாண்டரிக்கு வந்து ஓமர் எங்கே என்று ஜானியிடம் கேட்கிறாள்,அவன் வெளியே சென்றிருப்பதாக ஜானி சொல்ல,ஜானியை தன்னுடன் ஓடி வர முடியுமா?விரும்பிய படி வாழலாம் ,அதற்கான பணம் என்னிடம் உள்ளது என்கிறாள்.இதன் மூலம் நாம் தானியாவுக்கு உடல் தொடர்புக்கும் பாதுகாப்புக்கும் ஒரு ஆடவன் வேண்டுமே அன்றி அது யார் என்பதில் அக்கரை இல்லை எனப்புரிகிறது

அதே நேரத்தில் ,ரேச்சலின் பிரிவால் மிகவும் மனமுடைந்த நாசர்,வெகு நாட்கள் கழித்து படுக்கையிலேயே வாழ்க்கையை கழிக்கும் ஹுசைனைப் போய் பார்க்கிறார்,எனக்கு எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை என்கிறார், ஹுசைன் அவரை தேற்றுகிறார்,தன் மகன் கல்லூரியில் சேர்ந்து நன்றாக படிக்க வேண்டும் ,பின்னர் நல்ல பெண்ணாக பார்த்து மணம் செய்ய வேண்டும் அது அவரது மகள் தானியாவாக இருந்தால் நல்லது என கோடியும் காட்டுகிறார். ஆனால் எல்லாம் கிடைத்தும் எதுவுமே கிடைக்காதது போல தானியா வீட்டை விட்டு வெளியேறி தனக்குப் பிடித்தபடி வாழப் போகிறாள்,அவளை ரயிலடியில் வைத்துப்பார்க்கும் தந்தை நாசர் கத்தி அழைத்ததும் தானியா விரைந்து மறைகிறாள்.

முந்தைய நாள் இரவு சலீம் ஜானி ஓமர் மூவரும் காரில் பயணிக்கையில் சலீம் ஜானியின்  சேரி வாழ் வெள்ளையன் ஒருவனை சாலையில் பார்த்து மேலும் ஆத்திரம் அதிகரித்து அவனது பாதத்தில் காரின் டயரை நொடியில் ஏற்றி இறக்கி வேகமாக செல்கிறான்,அவன் ஜானியின் நண்பன் வேறு,ஜானிக்கு இதை விட ஒரு அவமானம் இருக்க முடியாது. இதன் மூலம் ஜானியின் உள்ளார்ந்த வெறுப்பை சம்பாதிக்கிறான் சலீம்,மறு நாள் ஓமரைப் பார்க்க சலீம் லாண்டரிக்கு வருகிறான். அங்கே வெளியே காத்திருந்த ஜானியின் சேரி வாழ் நண்பர்கள் சலீமின் விலையுயர்ந்த காரை அடித்து துவைக்கின்றனர்.பின்னர் சலீம் ஆத்திரம் கொண்டு வெளியே வர அவனை அடித்து துவைக்கின்றனர்.அதில் வேண்டா வெறுப்பாக நண்பர்களை தடுக்க வந்த ஜானியும் பலத்த காயமடைகிறான்,சலீம் பலத்த காயங்களுடன் உயிர்  பிழைக்க தப்பித்து ஓடுகிறான்.

அங்கே வரும் ஓமர் காயமடைந்த  நண்பனை தேற்றுகிறான்.ஜானியின் நண்பர்கள் லாண்டரி கடையின் வெளிப்புற கண்ணாடியை ஆத்திரத்தில் உடைத்தும் விடுகின்றனர். ஜானி , பிறப்பால் ஆங்கிலேயனான தான்,த ன்  ஆசிய நண்பன் ஓமரால் இழுத்த இழுப்புக்கெல்லாம் விலை போவதை உணர்கிறான், இருந்தும் அவனின் களங்கமில்லா நட்பும் , ஓரினச் சேர்க்கையும் அவனை மீண்டும் ஓமருக்கு அடிமையாக்குகிறது, அவனை எந்த சந்தர்ப்பத்திலும் இழப்பதை அவன் விரும்பவில்லை. சாலையென்றும் பாராமல் அவன் தோள்பட்டைகளை ஓமர் நக்கி சுவைக்கிறான். உள்ளே அறைக்குள் அழைத்துப்போகிறான். இப்போது ஓமர் நண்பனின் காயங்களை நீர் கொண்டு கழுவுவது போலவும்,ஒருவரின் மேல் ஒருவர் நீரை வாரி இறைத்துக்கொள்வது போன்றும் படம் முடிவுறுகிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல ஒரு நாடு என்பது பல நிறைகளையும் பல குறைகளையும் ஒருங்கே தன்னிடத்தில் கொண்டது தான்  என்பதை  இப்படம் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்.இங்கிலாந்தின் வேற்று முகத்தை இப்படியோர் பாகிஸ்தானிய சமூகத்தின் கண்ணோட்டத்தில் கிழித்தது போன்று வேறெந்த படமும் கிழித்திருக்குமா? என்பது சந்தேகமே!! நம் பாலிவுட் ஆசாமிகளும் 100க்கு 30 படம்  லண்டனுக்கு போய் அங்கே வைத்து ஹிந்திப்படக் குப்பைகளை எடுத்துத் தள்ளி அசுத்தம் செய்கின்றனர், ஆனால் உண்மைக்கு வெகு அருகே பயணிக்கும் யதார்த்த உலகின்  மாணிக்கம் போன்ற இப்படம் போல ஒன்றாவது தேறுமா? என்றால் என் பதில் இல்லை!!! என்பது தான்.

படத்தில் ஒரு முக்கியமான ஒரு விஷயம் நுரைக்குமிழி எழும்பும் (bubble) சத்தம் படத்தில் மிக அருமையாக தீம் மியூசிக்காக வெளிப்பட்டுள்ளது.இதே போல முயற்சிகளை ரன் லோலா ரன் படத்தில் பார்த்தும் கேட்டும் உள்ளேன்.


படத்தில் இருந்து ஒரு காட்சி:-(இப்போதெல்லாம் யூட்யூபில் முதல் 20 செகண்டுக்கு த்ராபையான விளம்பரம் போட்டு தொல்லையளிக்க ஆரம்பித்து விட்டனர்)

ரெட் டாக்[Red Dog] [ஆஸ்திரேலியா][2011][ஆங்கிலம்]

ருமை நண்பர்களே!!!
உலகில் எந்த நாட்டிலேனும் தெரு நாய்க்கு சிலை உள்ளதா?மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பரா என்னும் மாகானத்தில் டாம்பியர் என்னும் பாலைவனச் சிற்றூரில் , மேலே சொன்ன ரெட் டாக் என்னும் தெரு நாய்க்கு வெங்கலச்சிலையும், கல்வெட்டும், இணையத்தில் அதன் வரலாற்றை சொல்லும் வலைத்தளமும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வலைத்தளம் காண இங்கே செல்லவும்.

அப்படி இந்த ரெட் டாக்கிடம் என்ன தான் சிறப்பு?1970களில்  வாழ்ந்த இந்த ரெட் டாக் தன்நம்பிக்கை மிகுதியாய் கொண்ட ஒரு தெருநாய்.அதற்கு எஜமானர்கள் என யாரும் கிடையாது,நிறைய நண்பர்கள் உண்டு, முழு உலகமே அதன் எல்லை. நம்மிடையே வாழும் தெருநாய்களில் காணமுடியாத வினோத குணமாக , அடிக்கடி ஊர்விட்டு ஊர் செல்லவும் ,எல்லா வகை வாகனங்களிலும் ஏறி பயணம் செய்யவும் மிகுந்த ஆசைகொண்ட நாய் இது.சாலையில் நடுவே பயமின்றி அமர்ந்துகொண்டு வேகமாக எதிர்ப்படும் கார், பேருந்து, லாரி,ட்ரக், போன்றவற்றின் ஓட்டுனர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து ஹிட்ச் ஹைக் செய்து லிஃப்ட் வாங்கி விரும்பிய இடம் வரை பயணித்து இறங்கும் லாவகம் இதற்கு கை வந்த கலை.

இந்த ஒரு தகுதியே போதுமே இதற்கு எண்ணிலடங்கா நண்பர்களை தேடித்தர.இது பயணித்த தூரத்தை யாரும் ட்ரான்ஸ்மிட்டர் கொண்டு கணிக்காவிட்டாலும்,அந்த மாகாணத்தைச் சேர்ந்த மாந்தர்கள் இந்த ரெட்டாக்கை நான் இதை மாலில் வைத்துப்பார்த்தேன்,நான் இதை பாரில் வைத்துப்பார்த்தேன். நான் என் ஊரில் இதை ஹோட்டலில் வைத்துப்பார்த்தேன்.என்று வியந்து பாராட்டி அதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

படம் ஒரு இரவில் துவங்குகிறது,  வயலில் கங்காருவுக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த உணவை தெரியாமல் தின்றுவிட்டு உயிருக்கு போராடும் ரெட்-டாக்கை கருணைக்கொலை செய்ய முயன்றும் அதன் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் , அதன் நண்பர்கள் கண்ணோட்டத்தில் ஃப்ளாஷ் பேக் விரிய ரெட்-டாக்கைப் பற்றி நாம் அறியத் துவங்குகின்றோம்.

சிறிய குட்டியாக டாம்பியர் என்னும் பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள கனிமச் சுரங்கங்களின் தொழிலாளர் குடியிருப்புக்கு ரெட்டாக் வந்து சேர்ந்து, அங்கே பணிபுரியும் 80க்கும் மேற்ப்பட்ட நாட்டினர்களிடம் நேசம் கொண்டு பழகுவதையும்,அதற்கு ஆறு வயதாகையில் அங்கே பஸ் ஓட்டுனராக பணிபுரிய வந்த ஜான் என்பவனை தன் எஜமானனாக தெரிவு செய்வதையும் நாம் காண்கிறோம் ,விதவிதமான ஃப்ளாஷ் பேக் சம்பவங்களின் முடிவில் ரெட்-டாக் நம் மனதில் நின்றுவிடுகிறது.அந்த சுவையான சம்பவங்களின் கலவைகளை நீங்களும் காணத் தவறாதீர்கள்.ஒரு நாள்  ஜான் இரவுப்பயணத்தில் கங்காரு மேல் பைக் மோதி விபத்துக்குள்ளாகி இறந்துவிட,அவன் வெளியே செல்லும்முன்னர் ரெட்டாக்கை பார்த்து நான் திரும்ப வரும் வரை இங்கேயே இரு என்று சொன்னதால் அது சுமார் ஒரு மாத காலம் எங்கேயும் செல்லாமல் அவன் கண்டெய்னரின் வாசலிலேயெ அமர்ந்து காத்திருக்கிறது.

 பின்னர் ஒரு  கட்டத்தில் தானே ஜானை தேடிக்கண்டுபிடிப்பதென்ற உறுதியுடன் ஆஸ்திரேலியாவின் மாகாணம் மாகாணமாக பயணித்து சுமார் 8000 மைலகள் நீள அகலமாக சுற்றுகிறது, பின்னர் ஒரு போர்க்கப்பலிலும் ஏறி லிஃப்ட் கேட்டு ஜப்பான் வரை சென்று விட்டு அங்கேயும் எஜமானனைக் காணாததால் திரும்ப டாம்பியருக்கே திரும்புகிறது ரெட்டாக்.வரும் வழியில் தான் கங்காருவுக்கு வைக்கப்பட்ட விஷ உணவை பசிமிகுதியில்  தின்றுவிடுகிறது.இப்படி உயிருக்கு போராடியபடி இருக்கும் ரெட்டாக்கைப்பற்றி நண்பர்கள் அவ்வூருக்கு வந்த ஒரு ட்ரக் ட்ரைவரிடம் நெகிழ்ச்சியுடன் விவரிப்பதைத் தான்  நாம் இதுவரை வியப்புடன் பார்த்திருக்கிறோம்.

எல்லோரும் மிருக மருத்துவர் வரும் வரை ரெட்டாக் பற்றி பேசியபடியே இருக்க அங்கே மருத்துவர் வந்துவிட,ரெட்டாக்கை பார்க்க அவர்கள் உள் அறைக்கு செல்ல அங்கே ரெட் டாக்கை காணவில்லை,எல்லோரும் ஒவ்வொரு இடம் திசை வைத்து தேட ஆரம்பிக்கின்றனர்.அது இரவு வரை கிடைக்கவேயில்லை,தன் இறுதி நேரம் நெருங்கியபோது அது எஜமானனைத் தேடிக்கொண்டிருந்தது. அதை மறுநாள்  டாம்பியர் வாசிகள் கண்டுபிடித்தபோது அது இறந்து போயிருந்தது,அதன் எஜமானன் ஜானின் கல்லறை முன்பாக.தன் நெடுநீண்ட பயணத்தின் முடிவில் தன் எஜமானின் கல்லறையை கண்டுபிடித்ததை கண்ட டாம்பியர் வாசிகள் கதறுகின்றனர்,எப்போதாவது தான் இது போல சில படங்கள் நம்மை நெகிழச்செய்கின்றன.உண்மை விசித்திரத்தை விட விந்தையானது என்பது தான் எத்தனை உண்மை?
டாம்பியரில் ரெட்-டாக் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஒரு பயணி

====0000====

ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!

அருமை நண்பர்களே !!!!
நலம் தானே?!!! நீண்ட நாட்களாய் எதுவும் இங்கே எழுத முடியவில்லை,வீட்டுக்கு வருவதற்கே இரவு 9-00மணி ஆகிவிடுகிறது,அதற்கு மேல் பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டுவதற்குமே நேரம் கிடைப்பதில்லை,இருந்தும் சில நல்ல படங்கள் பார்த்தும் எழுத நினைத்தும்,அது இயலவில்லை.கிடக்கட்டும்.வார இறுதிகளில் படிப்புமிப்போது சேர்ந்து கொண்டது.

கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி மனைவிக்கு பிரசவவலி போலஎடுக்க இசபல் மருத்துவமனையில்அனுமதித்து 2 நாள்வைத்திருந்தும் அவர்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு வலியும் குழந்தையின் பொசிஷனும் அமையவில்லை என மனைவியை திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர் ஸ்கேன் ரிப்போர்டில் மே1ஆம் தேதி என் மனைவிக்கு பிரசவ தேதி என குறித்து கொடுத்தனர்,அன்று மயிலை இசபல் மருத்துவமனையில் மனைவியை சேர்த்தும் பிரசவ வலி வரவில்லை,என் மனைவியை கவனித்த டாக்டர் ஜே.எஸ் லட்சுமி சுகப்பிரசவத்துக்கு ஆனவரை முயற்சி செய்வோம் என்றார், இருந்தும் கிலி அடங்கவில்லை,சிசேரியன் செய்தால் மனைவி பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்குமே என கவலையிலேயே இருந்தேன்,கூடவே வேலை பளுவும் சேர்ந்து ஆட்டியது.

மே 2ஆம் தேதி புதன் கிழமை காலை டிபன் எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றவன்.உடன் இருந்த என் பெரியம்மாவிடம் மனைவி எங்கே எனக்கேட்க இனிமா கொடுத்துள்ளனர்,இன்னும் 1 மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றனர்.ராம ராம என்னும் நாமத்தை  இதுவரையில் 10000 முறை எழுதியிருப்பேன், அதில் கவனத்தை குவித்து மேலும் எழுத ஆரம்பித்தேன், சுகப்பிரசவம் ஆகி என் மகனை செவிலியர் கொண்டு வந்து என்னிடம் காட்டினர்,என்ன குழந்தை என்று பாருங்கள்,அது சரியாக குறிப்பிட்டுள்ளதா? என என்னிடம் சரிப்பார்த்து கையொப்பமிடச்சொன்னார்கள்.எனக்கு மகன் பிறந்ததை பார்த்து உணர்ந்து கொண்ட அக்கணத்தை வாழ்வில் எப்போதுமே மறக்க இயலாது,அன்று ஏகாதசி வேறு,ராம ராம இடவிடாது எழுதியதை அங்கீகரித்து மகனை ஏகாதசியன்று பிறக்க வைக்கத்தான் போனமுறை மனைவிக்கு பொய்வலி வந்து பிறப்ப்பு தள்ளிப்போனது என புரிந்தது. மகனைப்பார்த்த பின்னர். உடம்பில் அப்படி ஒரு தைரியமும்,தெம்பும் குடிகொண்டது,உடனே செவிலியர், மகனை உள்ளே கொண்டு போய்விட்டன்ர்.ரூமுக்கு அட்மிஷன் அட்டை போட்டுவிட்டு வரச்சொல்லி செவிலியர்கள் வேலைகொடுக்க,போகும் வழியிலேயே போனில் தென்பட்ட அத்தனை நம்பர்களுக்கு பேசி விஷயம் சொன்னேன்.

இன்று மாலை மகனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தோம்.இப்போது தாயும் சேயும் நலமாய் உள்ளனர்,வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை புண்ணியாஜலம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டு மகனை வாழ்த்த வேண்டும் என வேண்டுகிறேன்.

மகனுக்கு மறைந்த என் அம்மா கீதா அவர்களின் நினைவாக கீதப்ப்ரியன் என வைக்கத்தான் திட்டமிட்டேன்,ஏற்கனவே என் பெயர் கார்த்திக்கேயன் பெரியதாக உள்ளது,அதை கீதப்ப்ரியனுடன் இணைத்தால் இன்னும் பெரிதாகிவிடும்,தவிர ஆண்குழந்தைக்கு ஜெயக்குமார் என பெயரிட்டாலே ஜெயா என கூப்பிடுகின்றனர்,இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்க்க கீதேஷ் என பெயரிடலாம் என நினைக்கிறேன்.சிறியதாய் அழகாய் உள்ளது இப்பெயர்,ஆனால் அர்த்தம் பெரிதாய் உள்ளது.கீதையின் கடவுள்.மகாவிஷ்ணுவின் பெயருமாக உள்ளது,ஆகவே இதையே மகனுக்கு வைக்க எண்ணியிருக்கிறேன்.
என் மகன் உலகில் முதல்நாள்  தங்கிய அறை ஒரு ரெகார்டுக்காக:)

என் கைபேசி எண்:-9840419602
இதில் எனக்கு பேசுங்கள் விலாசம் அனுப்பி வைக்கிறேன்,புண்ணியாஜலம் முடிந்த பிறகு போட்டோவை எடுத்து போடுகிறேன் நண்பர்களே,ஒரு சில வேலைகளை முடித்து நிம்மதி கொண்டபின்னர் நிச்சயம் வலையில் எழுதுவேன்.என் மகள் வர்ஷினிக்கு  7 வயதாகிறது,அவள் மகனை மிக நன்றாக பார்த்துக்கொள்கிறாள்,என நினைக்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
மீண்டும் சந்திப்போம்.
=====0000=====

மௌன குரு|தமிழில் ஓர் உலக சினிமா!!!

அருமை நண்பர்களே!!!
நல்ல படங்கள் வருவதே மிக அரிதாகிவிட்ட காலம் இது, சமீபத்தில் மௌனகுரு படம் பார்த்தேன்,மிகவும் சிலாகித்தேன்,சமீபகாலத்தில் கண்ட மிக தரமான ஆக்‌ஷன் த்ரில்லர்,மிக இண்டெலிஜெண்டான  ஒரு ஆக்கம்!!! எப்போதோ பார்க்க வேண்டியது,சனிவிலகிய அன்றே மீண்டும் பிடித்தது போல மயக்கம் என்ன என்னும் திராபையை பார்த்ததால் எந்த படத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இதை மிக தாமதமாய் பார்த்தது. என்னளவில் சமீப காலத்தில் வெளியான உயர்ந்த படைப்பு இது, ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் ஊடாக மிக அருமையான கருத்துக்களையும் சொன்ன படம். உலக சினிமா என சொல்வதற்கேற்ற தகுதியுள்ள படம்.

அமெரிக்க இரட்டை இயக்குனர்கள் கோயன் பிரதர்ஸின் ஃபார்கோவுக்கு ஈடான காட்சியாக்கங்கள்,முக்கியமாக உமா ரியாஸின் நடிப்பு மிக இயல்பான ஒன்று, ஃபார்கோவில் ஜோயல் கோயனின் மனைவி ஃப்ரான்கஸ் மெக்டார்மெண்ட் செய்த துப்பறியும் அதிகாரி பாத்திரத்துக்கு ஈடாக அப்படி ஒரு இயல்பான நடிப்பை பார்த்ததில்லை.அதில் ஒரு கோமாளித்தனம் இருக்கும்.இவரிடம் இல்லை,ஆனால் அனைத்து பாத்திரப்படைப்பும் மிக நேர்த்தி .ஃபார்கோவில் முடிந்து விட்ட காட்சியை மேட்ச் செய்வது போல அடுத்த காட்சி தொடங்கும், அதை இவர் பெரிதும் இன்ஸ்பைர் ஆகியிருக்கிறார் என நினைக்கிறேன்,அவற்றுள் பல காட்சிகள் நன்றாக இருந்தன,மஹேஷ் முத்துசாமியுடன் இணைந்து இவர் ஒளியமைப்பில் நிறைய உழைத்தது புரிந்தது,சாலையில் நாம் விளக்கு அணைக்கப்பட்ட காரில் பயணிக்கையில்,நாம் விளக்கு கம்பத்தை கடக்கும் போதோ?அல்லது அருகே செல்லும் வாகனம் கடக்கும் போதோ நம்மீது வெளிச்சம் கவிழும்,அதை கூட பிரமிக்கத்தக்க வகையில் பயன்படுத்தி முக்கிய பாத்திரங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர்.இப்படத்துக்கு விகடன் எப்படி விமர்சனம் செய்தனர் என அறிய ஆவல் மேலிடுகிறது,அவர்கள் வேட்டை படத்துக்கும் இதைப்போல படத்திற்கும் ஒரே அளவு மதிப்பெண் கொடுப்பவறாயிற்றே?!!! ,

என்கவ்ண்ட்டர் காட்சியில் துப்பாக்கி வேலை செய்யாமல் போய் நாயகன் உயிர் தப்புவது தமிழுக்கு புதிது,நம் வழக்கத்தில் வில்லனின் துப்பாக்கியில்  ரவை வெளியேறுகையில் சாக வேண்டிய நாயகன் அதை பல்லால் கடித்து பற்றி பிடிப்பது தான் நடக்கும்,இண்டர்வல் ப்ளாக்குக்கு முன்னரோ அல்லது எந்த கேப்பிலுமோ  ஐடம் சாங்கே இல்லை,அதற்கே சபாஷ்.

பேராசை பெரு நஷ்டம்,குற்றவாளி தப்ப முடியாது,பலநாள்திருடன் ஒருநாள் அகப்படுவான் போன்ற மெசேஜையும் அருமையாக இப்படத்தில் சொன்ன சாந்தகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனதுக்குப் பிடித்தமான வேலையை குறைந்த வருவாயில் செய்வதை பலரும் விரும்புவதில்லை,இனி மாணவர்கள் சிறிதேனும் யோசிப்பர்.படத்தில் அந்த தெரெசா எம்ப்ராய்டரியை வைத்து இப்படி ஒரு மேசேஜை டெவலப் செய்தது மிகஅருமை,சின்ன சின்ன விஷங்கள் வைத்து டெவலப் செய்வது தான் சினிமாவே அன்றி அந்நிய மொழி படத்தில் இருந்து உருவி நம் சூழலுக்கு ஒவ்வாத காட்சிகளை படைப்பது அல்ல .

பெரிய நிம்மதி!!! படத்தின் நாயகன் ,செல்வராகவன்  மற்றும் இன்ன பிற பட இயக்குனர்களின்  க்ளிஷே நாயகர்கள் போலானதோர் தட்டையான திராபையான பாத்திரம் அல்ல. வானத்தையும் பூமியையும் லோ ஆங்கிளில் காட்டி நம்மை வதைக்கவுமில்லை,முகத்தில் கோணிப்பை மாட்டிக்கொண்டு  அடுத்தடுத்து வரிசையில் யாரும் வந்து உதை வாங்கவுமில்லை. முக்கியமாக எங்கேயிருந்தும் மூலக்கதையை திருடவில்லை. மனநிலை பிழண்றவர்களை மதிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கே ஒரு நன்றி. இவருக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கெட்ட போலீஸ்காரர்களின் மிக இயல்பான நடிப்பு,டயலாக் டெலிவரிகள், ஒளியமைப்பு என மார்வெல்லஸ் ஒர்க் அது,அதன் இயக்குனர் சாந்தகுமார் எப்படி இருப்பார்? என பார்க்கத் தேடினேன், உடனே இந்த பேட்டி கிடைத்தது, நல்ல பாதுகாக்க வேண்டிய கட்டுரை, தெனாலிக்கு நன்றி, எழுத்துப் பிழைகளை நீக்கி வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்., எனக்கு படத்தைப் பற்றி சிலாகித்து கேட்க நிறைய கேள்விகள் உண்டு, ஆனால் இதில் அவை கேட்கப்படவில்லை,

ஹாலிவுட் சினிமாவின் மலினமான பிரதிகளாக, பார்வையாளரை செருப்பாலே அடிப்பது போன்ற அதிமேதாவித்தனமான, லூசுத்தனமான படங்கள் வரும் வேளையில் இதுபோல இயக்குனர் படைப்புகள் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,நல்ல வேளையாக இயக்குனர் 15 கோடி வாங்கும் சப்பைக் கிறுக்கர்களிடம் கால்ஷீட் கேட்டு மோசம் போகவில்லை, பின்னர் இயக்குனர் தன்னை எங்கும் சமாதானம் செய்து கொள்ளாமல் இப்படி ஒரு படைப்பை தந்திருக்கமுடியாது.ஒரு நல்ல படத்துக்கு என்னை விட யாரும் தாமதமாக விமர்சனம்  எழுத முடியாது.:)))தாமதத்துக்கு வருந்துகிறேன்.எழுதாமலே போவதை விட தாமதமாகவேனும் எழுதுவது நல்லது தானே?!!!


தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் குறிஞ்சி மலர் பூக்கும். வளர்ந்து வரும் தமிழ்பட நாயகன் அருள்நிதியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு , அறிமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்கியிருக்கும் மௌனகுரு படத்தை, சந்தேகமில்லாமல் ஒரு மிடில் சினிமா என்று சொல்லி விடலாம். தமிழ் கமர்ஷியல்  சினிமாவின் வழக்கமான வரையரைகளை உதறிவிட்டு, ஆனால் கமர்ஷியல் சினிமாவை கைதட்டி விசிலடித்து ரசிக்கும் அதே ரசிகர்களை இருக்கையில் ஆணியடித்து அமர வைத்துவிடும் ஜாலத்தை மௌனகுரு படத்தின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் சாந்தகுமார்.

சினிமா இயக்குனர்களின் மீடியம் என்பதை சாந்தகுமார் போல அபூர்வமாக, ஆனால் காலம் தோறும் பல புதுமுகங்கள்  நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், மாஸ் மசாலா ஹீரோக்களின் பிடியில் சிக்குன்டு கிடக்கும்  தமிழ் சினிமா அவ்வப்போது தனது உண்மையான முகத்தை பார்த்துக் கொள்கிறது. மௌனகுரு போன்ற படங்களின்  மூலம் அவ்வப்போது தன்னை புதுபித்துக் கொள்ள முயற்சி  செய்கிறது.  மௌனகுரு இயக்குனரை தெனாலிக்காக சந்தித்தோம்!

 மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு சின்ன ஊரில் இருந்து உங்கள் படத்தின் நாயகனை நீங்கள் சென்னைக்கு அழைத்து வரும்போதே  தெரிகிறது நீங்கள் நிச்சயமாக நகரத்து மனிதர் அல்ல என்று?

நிச்சயமாக! நான் கிராமத்துக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு கர்வம் உண்டு. அம்மா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம். அப்பா குற்றாலாம் அருகில் சிவகிரி. இரண்டு ஊர்களிலுமே நான் வளர்ந்திருக்கிறேன். அதேபோல நான் பள்ளிக்கல்வி பயின்ற திருப்புவனமும் ஒரு சிறுநகரம். அதன்பிறகு கல்லூரிக் கல்விக்குத்தான் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன். மதுரைக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருந்தாலும் எனது பார்வையில் தமிழ் வாழ்கையின் எல்லா கூறுகளையும் தனக்குள் இன்னும் தக்கவைத்திருக்கும் ஊர் என்று சொல்வது சரியாக இருக்கும்.

பாலா உட்பட அமெரிக்கன் கல்லூரி நிறைய பேரை தமிழ் சினிமாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. நீங்கள் அங்கே படிக்கும்போதுதான் சினிமாவுக்கான தூண்டுதல் கிடைத்ததா?

இல்லை. எனக்கு சினிமா மீதான ஆர்வம் 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே வந்துவிட்டது. ஆனால் அமெரிக்கன் கல்லூரியில் நிறைய உலக சினிமாக்களை திரையிடுவார்கள்.  நண்பர்கள் பார்க்க விடமாட்டார்கள். ஆனால் அவர்களையும் மீறி நான் பார்ப்பதுண்டு. பைசைக்கிள் தீவ்ஸ் உட்பட சினிமா மீடியத்தின் வலிமையை புரியவைத்த பல படங்களை அங்கேதான் நான் பார்த்தேன். நானும் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விரும்பினார்கள்.

அவர்களுக்காக பி.எஸ்.சி விலங்கியல் படித்தேன். ஆனால் எனது விருப்பம் சினிமா என்பதைப் புரிந்துகொண்ட பிறகு என்னை அவர்கள் தடுக்கவில்லை. ஆனால் இதற்கும் முன்பு நான் பள்ளியில் படிக்கும்போதே எனது சினிமா ஆர்வத்தை புரிந்துகொண்டு என்னை தரமான தமிழ்ப்படங்களை பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டுப் போவாங்க! ’இது பீம்சிங் படம், இது ஸ்ரீதர் படம், இது கே.பாலச்சந்தர், இது மகேந்திரன் படம்’ன்னு ஒவ்வொரு இயக்குனருக்குமான வித்தியாசங்களை எனக்குச் சொல்லிக் கொடுப்பார். சினிமா இயக்குனரோட மீடியம்ன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான்! சினிமான்னு இல்ல எதுல எனக்கு சந்தேகம்னாலும் க்ளினிக்கலா எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க. எல்லா வகையிலேயும் அவங்கதான் என்னோட முதல் குருன்னு சொல்லணும்!

உங்க அம்மா இப்போ எப்படி ஃபீல் பன்றாங்க?

அம்மா இப்போ உயிரோட இல்லை. கேன்சர் அவங்கள பறிச்சிடுச்சு! திருப்புவனம்ங்கிற ஒரு சின்னஞ்சிறு நகரத்தில வாழ்ந்துகிட்டு சினிமாவை எனக்கு பவர்ஃபுல் மீடியம்ன்னு அவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. பாட்டும், டான்ஸும் இருந்தாபோதும்ன்னு படமெடுக்க நிறையபேர் இருக்காங்கப்பா… ஆனா மகேந்திரன் ஒருத்தர்தான் இருக்கார். நீ படமெடுக்கனுன்னு நினைச்சா அந்த மாதிரி எடுன்னு அம்மா சொல்லிக் கொடுத்ததை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. அம்மா மாதிரி எத்தனை தாய்மார்கள் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்களை விரும்ப்பி இருக்காங்கன்னு! அவங்க இப்போ இருந்திருந்தா, எனக்கு கிடைக்கிற பாராட்டுகளைப் பார்த்து அழுது தீர்த்திருப்பாங்க. ஆனா, முதல் நாள் படம் ரிலீஸாகி பாராட்டுகள் வந்தப்போ மனைவிக்குக் கூட தெரியாம நான் அம்மாவை நினைச்சு ரகசியமா அழுதேன்!

உங்கள் நாயகன் குறைவாகவே பேசுகிறான். கொஞ்சமாகப் பேசினாலும் அழுத்தமாகப் பேசுகிறான். உங்கள் குணமும் அதுதானோ?


இப்போது கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறேன். ஆனால் அடிப்படையில் நான் கூச்சசுபாவமான ஆள்! எனது பால்யம் முழுக்க என்னை வீட்டுக்குள்ளேயே வைத்துதான் வளர்த்தார்கள். நான் தெருவில் இறங்கி நண்பர்களோடு விளையாடப் போனால் தவறான வார்த்தைகளை, கொச்சையான வார்த்தைகளை கற்றுக்கொண்டு வந்துவிடுவேன் என்று நினைத்தார்கள் அப்பாவும் அம்மாவும். அது ஒரு வகையில் சரிதான்! என்னை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தாலும் எனது எல்லா சந்தேகங்களுக்கும் மிகச்சரியான விளக்கம் தருவார்கள். சிறு வயதிலேயே எனக்கு வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். வாசிக்க வாசிக்க இன்னும் இறுக்கமான ஆளாக மாறினேன். எதிலும் ஒரு நிதானம் வந்து உட்கார்ந்து கொண்டது. அம்மாவின் மரணமும், என் உயிர் நண்பன் மார்டீன் மரணமும் என்னை மேலும் தனிமைப்படுத்திவிட்டது. எனது நண்பன் கண் இமைப்பதற்குள் மாரடைப்பால் இறந்து போனான். மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் என் மடியிலேயே இறந்துபோனான். நாம் சந்திக்கிற இழப்புகள் நம்மை அமைதியாக்கி விடுகின்றன. அதுவே காலப்போக்கில் குணமாகி விடுகிறது என்றாலும் நமது தனிப்பட்ட குணங்களை எல்லா கதாபாத்திரங்கள் மீதும் அப்ளை பண்ணமுடியாது.

சென்னைக்கு வந்தபிறகு நேரடியாக உதவி இயக்குனர் ஆனீர்களா?

இல்லை! திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு பிரசாத் ஸ்டூடியோ நடத்திவரும் 3 டி அனிமேஷன் டிப்ளமோவை ஓராண்டு படித்தேன். அப்போதுதான் சுசி.கணேசனின் அறிமுகம் கிடைத்து, அவரது முதல் படமான விரும்புகிறேன் படத்தில் ஆறு மாத காலம் வேலை செய்தேன். அதன்பிறகு கரு. பழனியப்பன் இயக்கிய ’டிவிஎஸ் ஸ்கூட்டி’ கார்பரேட் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தேன். அப்புறம்தான் தரணியிடம் ‘தில், தூள், கில்லி’ படங்களில் வேலை செய்தேன்.

தரணி ஒரு மாஸ் மசாலா இயக்குனர்! ஆனால் உங்கள் பாதை வேறாக இருக்கிறது? ஆனால், குருவின் பேரைக் காப்பாத்தணும் என்று இங்கே கற்பிக்கப்படுகிறதே?

குருவிடம் இருக்கும் நல்ல குணங்களை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக சொன்ன விஷயம் அது! நானே தரணியிடம் சொல்லியிருகிறேன். ’சார் நான் உங்க அசிஸ்டெண்ட்ன்னு சொன்னா தில், தூள் மாதிரி ஸ்கிரிப்ட் இருக்கான்னு கேக்குறாங்க?’ன்னு சொன்னா அவரும் சிரிப்பார். உண்மையில் ஒரு திறமையான இயக்குனரிடம் வேலை செய்வதன் மூலம் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாமே தவிர, கிரியேட்டிவிட்டி என்பது தனிமனித தேடல் சார்ந்து உருவாவதுதான்!

மௌனகுரு எப்படி உருவானது?

நேஷ்னல் ஜியாகரபி சேனல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டு போராளிகளை என்கவுண்டர் செய்வதற்காக பின்னால் கைகளை கட்டி அவர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்தார்கள் ராணுவ வீரர்கள். அப்போது அந்த இரண்டு முகங்களிலும் வந்துபோன ஆயிரம் உணர்ச்சிகளை பார்த்தபோது அந்த அதிர்ச்சி அப்படியே எனக்குள் கடந்துபோனது. சிலநொடிகளில் உயிரை இழக்கப்போகிற அந்த இரண்டு பேரின் எண்ண அலைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோதுதான் மௌனகுரு உருவானது. இந்தக் காட்சியோடு, ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு இருபுறங்களிலும் சிலுவையில் தொங்கவிடப்பட்ட இரண்டு பேரோடு கூடிய அந்தக் கல்வாறி கொலைக்களம் ஒரு ப்ளாஷ் போல என் கண் முன்னாள் வந்து போனது. மரணத்தின் விளிம்பில் அதை முத்தமிடக் காத்திருக்கும் மூன்று பேர், அந்த இடத்துக்கு வருவதற்கு முன்னாள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்பதை ரிவைண்ட் செய்து பார்த்தேன். இண்டர்வெல் பிளாக்கில் இருந்து கதை கிடைத்தது.

இந்தக் கதையை எழுதி முடித்தவுடனேயே அருள்நிதிதான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டீர்களா?

நிச்சயமாக இல்லை! அருள்நிதி உதயன் படத்தில் முதலில் நடித்திருந்தால் முதலில் அவர் மீது எனக்கு அத்தனை ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், வம்சம் படத்தில் கையில் கத்தாழையை வைத்துக் கொண்டு ஒரு கிராமத்துப் பையனின் வெகுளித்தனமும், தெனாவட்டுமாக பார்த்தபோது இவர்தான் மௌனகுரு என்று முடிவு செய்தேன். உதயநிதி ஸ்டாலின் உட்பட நிறைய பேருக்கு கதை சொல்ல வேண்டியிருந்தது. எனக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அவஸ்தையே எழுதி முடித்த கதையை வாயால் இரண்டைரை மணிநேரம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது. தமிழ்சினிமாவில் இருக்கும் மிகத் தவறான முட்டாள் தனமான எதிர்பார்ப்புகளில் இதுவும் ஒன்று.

கதைக்கான ஒளிப்பதிவை தருவதில் மகேஷ் முத்துசாமி தன்னை நிரூபித்தார். ஆனால் மௌனகுருவில் இயக்குனரின் கண்கள் வழியாக ஒவ்வொரு ஷாட்டையும் வடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது...

உண்மை! அதற்குக் காரணம் என்னுடைய டீட்டெய்ல் ஸ்கிரிப்ட். இருநூற்றி ஐம்பது பக்கங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். மகேஷ் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருந்தது. அதனால் கதைக்கான ஒளிப்பதிவை கொண்டுவருவதில் இன்னும் சுதந்திரமாக எங்களால் பணிபுரிய முடிந்தது.

திரை வாழ்க்கையில் சவாலான தருணமாக அமைந்த கணங்கள்?

சினிமாவில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஒவ்வொரு கனமும் சவாலான கணம்தான். ஒரு பட வாய்ப்பு கிடைத்து, அடையாளம் பெறுவதற்கு 14 ஆண்டுகளை செலவிட வேண்டி வந்திருக்கிறது. 24 வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். இந்த பதினாலு ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் வாடகைக்கும் வயிற்றுப் பாட்டுக்கும் ஓடிய நாட்கள் அதிகம். கிரியேட்டிவிட்டி நம்மிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்கள் சவாலான நாட்கள்தான். பசியோடு இருப்பவனுக்கு கற்பனையின் சிறகுகள் விரியாது. முறியும்!

பேப்பர் கப் பயங்கரம்!!!

அருமை நண்பர்களே!!!
பேப்பர் கப் என ஒன்று சர்வ சாதாரணமாக தேநீர் விடுதிகளிலும்,பழரச நிலையங்களிலும்,நம்  இல்ல விழாக்களிலும்,ரயில்களிலும், அலுவலகங்களிலும் புழங்குகிறது, நம் அனுதின வாழ்வில் அதற்கு ஈடான மாற்றே இல்லை எனவும் ஆகிவிட்டது, இப்போது ஒரு படி மேலே போய் பேப்பர் இலைகளும் புழங்க ஆரம்பித்து விட்டன, நல்ல பேப்பர் கப்புகளுடன் ஈசி மனி செய்ய வேண்டி சில கயவர்களால் மட்டமான தரம் கொண்ட சீன தயாரிப்பு பேப்பர் கப்புகளும் தாராளமாய் கிடைக்கின்றன, விலை குறைவு என கருதி அதையே பெரும்பாலான வியாபாரிகள் வாங்கி உபயோகிப்பர் என்பது விதி.

சுகாதாரம் பேணுவதற்கு நாம் விரும்பி கேட்டு உபயோகிக்கும் பேப்பர் கப்பில் ஈரம் உரியாமல் இருப்பதற்காக கப்பின் உள்ளேயும் வெளியேயும் மெழுகு[Cetyl palmitate]  கோட்டிங் தடவப்படுவதை காணலாம்,அதனால் நம் உடம்புக்கு தீங்கு நிச்சயம் ஏற்படும் என்பது கண்கூடு.இனி அலுவலகங்களில் தேநீர் குடிப்போர் தங்களுக்கென ஒரு பீங்கான்  கோப்பையை வைத்துக்கொள்ளுவது நல்லது, வெளியிடங்களில் பேப்பர் கப்பை தவிர்ப்பதும் நிச்சயம் பலனளிக்கும்.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாமே!!!,கீழே உள்ள இது உங்கள் இடம் கட்டுரையை படியுங்கள்.இதை வெளியிட்ட அன்பருக்கு மிக்க நன்றி!!! நான் இன்றே என் பீங்கான் கோப்பையை வாங்கப்போகிறேன்.இந்த சுட்டியில் பேப்பர் கப் செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.

பேப்பர் கப் ஒழிக!
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
— எச்.விஜயகுமார்,சென்னை.

பெட்டி ப்ளூ[Betty Blue][ஃப்ரெஞ்சு][1986][18+++]

அருமை நண்பர்களே!!!
நலம் தானே?!!!,கடுமையான பணிச்சுமையின் காரணமாக வலைப்பூவில் எழுதுவது இயலவில்லை,நண்பர்களின் பதிவுகளை படித்துவிட்டு கருத்து இடுவதும் கூட பல சமயம் இயலவில்லை,கூகிள் சேடில் உரையாடுவதும் கூட அரிதாகிவிட்டது,ஷார்ஜாவில் இருக்கையில் இணையத்தையும் என்னையும் பிரிக்கமுடியாது,அங்கே எனக்கு கேபின் ஃபீவர் வந்து சைக்கோ ஆகிவிடும் அளவுக்கு வேலையே இல்லாத நிலை இருந்தது. இங்கே வேலையையும் என்னையும் பிடிக்கமுடியாதபடிக்கு ஒரு அமைப்பு,போன மாதம் சென்னை திரைப்பட விழாவில் நண்பர் சுந்தர் பாஸ் கொடுத்ததால் சுமார் 6 படங்கள் ஆர்வமாய் பார்த்தும் எழுத முடியவில்லை,இனியாவது எழுத முயற்சி செய்கிறேன்.

நண்பர் தல ஹாலிவுட் பாலா சென்னை வந்தும் சென்று பார்க்க கூட முடியவில்லை.புத்தக திருவிழாவுக்கு இருதினங்கள் போயிருந்தேன். நல்ல ஒரு தருணம் அது.இசைஞானியின் என்றென்றும் ராஜா நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் மனதுக்கு இனிய நிகழ்ச்சி அது.ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 12.30 வரை நீடித்தது.அதை ஜெயா டிவியிலும் ஒளிபரப்பினார்கள்.அதை பார்க்கமுடியாதவர்கள் இந்த டாரண்ட் சுட்டியில் தரவிறக்கி   கண்டு களிக்கலாம்.

நீண்ட நாட்களாக மனதை விட்டு நீங்காத படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை,சமீபத்தில் பார்த்த பெட்டி ப்ளூ,மிக உன்னதமான ஒரு சுகானுபவத்தியும்,துயரையும் ஒருசேர வழங்கியது,நம் வாழ்வில் எல்லாமே இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது,அதில் இன்பமும் துன்பமும் அடக்கம். படத்தின் ஒவ்வொரு காட்சியுமே அப்படி இன்பத்தில் துவங்கி துன்பத்திலோ,அல்லது துன்பத்தில் துவங்கி இன்பத்திலோ முடியும் வண்ணம் அமைந்துள்ளது, காமத்தை ஒரு அற்புத கலையம்சமாக பாவித்து,விரசமின்றி இயக்கும் கைவண்ணத்தை எல்லா இயக்குனர்களுமே பெற்றுவிடமுடியாது, அது இந்த படத்தின் இயக்குனர் Jean-Jacques Beineix ற்கு மிக லாவகமாக கைவந்துள்ளது, எரொடிக் படம் எடுப்பது மிகவும் கடினமான காரியம்,அதுவும் ஒருபடம் எரொடிக் கல்ட்-கிளாசிக்காக அமைய வேண்டுமானால் ஒரு இயக்குனர் அதற்கு எத்தனை மெனக்கெடவேண்டும்?!!!

இது போன்ற ஒரு எரோடிக் க்ளாசிக் படத்தை யாரேனும் தம் வாழ்நாளில் பார்த்திருப்பார்களா?!!!இது போல படங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கிறதா?!!!சந்தேகம் தான்.ஃப்ரெஞ்சு சினிமாவில் இவ்வகை திரைப்படங்களுக்கு கிட்டும் உயரிய வரவேற்பும் கவனிப்பும் ஊக்குவித்தலும் சொல்லிலடங்காதது.அந்த உத்வேகத்தில் தான் இது போன்ற படங்கள் அங்கே வெளியாகின்றன என சொல்வேன்.இதே போன்ற இன்னொரு எரோடிக் படம் என்று தி ட்ரீமர்ஸ் என்னும் ஃப்ரெஞ்சு படத்தையும் சொல்லுவேன்.இந்த படத்தை ஒருஉலக சினிமா ரசிகர் பார்க்காமலிருப்பது கண்ணிருந்தும் குருடனாயிருப்பதற்கு சமம் என்று துணிவாய்ச் சொல்லி முடிக்கிறேன்.

எரோடிக் க்ளாஸிக் படங்களுக்கும் போர்னோக்ராபிக் படங்களுக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரிவதில்லை,நம்மில் ஏனையோருக்கு படத்தில் அப்பட்டமான கலவிக்காட்சிகள் இருந்தாலே அது போர்னோ படம் தான், அதைத்தவிர படத்தில் வரும் கலை சார், உணர்வு சார் விஷயங்களின் முக்கியத்துவங்கள் புரிவதில்லை, இப்படி பல படங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பார்வையாளர்களின் அங்கீகாரம் பெறாமலே போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஃப்ரெஞ்சு மொழிப் படம் தான் பெட்டி ப்ளூ(betty blue) இதன் மூலப்பெயர் 37°2 le matin(அதாவது காலை37.2°C [99°F])இந்த தட்பவெட்ப அளவு தான் கர்பிணிப் பெண்ணின் காலைநேர உடற்சூடாம்.

படத்தில் வரும் கதாபாத்திரமான பெட்டி(Betty) பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம், ஒரு நேரம் பார்க்கையில் நிலவின் குளுமையும், திடீரென எரிமலையின் வெம்மையும் வாய்க்கப்பட்டவள், இவளுக்கும், முன்னாள் எழுத்தாளன் இந்நாளில் கிடைத்த வேலையை செய்து வயிற்றைக் கழுவும் ஸோர்க்-ற்கும் துவங்கும் திடீர் உறவுமுறையும்(relationship),அது வலுவுற்று இருவரும் அடையும் எல்லையில்லா காமக்களியாட்டங்கள்,சிறிதும் இலட்சியமில்லா வாழ்க்கையை இருவரும் எதிர்கொள்ள நேரும் தருணங்கள் எனபடம் நம்முள் பல வித்தியாசமான உணர்வலைகளை நிச்சயம் எழுப்பிச்செல்லும்.வாழ்வை அணு அனுவாய் ரசிப்பது எப்படி என கற்றுத்தரும்.

இப்படம் ஒரு நிறைந்த நன்பகலில் பெட்டிக்கும் ஸோர்க்கும் ஆன  உச்சகட்ட உடலுறவின் பிண்ணணியில்,நாயகன் ஸோர்க்கின் வாய்ஸ் ஓவரில் ஃப்ளாஷ் பேக்கை விவரிப்பதுடன் துவங்குகிறது.இவ்விருவரும் ஆழ்ந்து அனுபவித்து திளைத்த ஆரோக்கியமான காதல் காமக்களியாட்டங்களும்,ரசனையான விழாமாலை பொழுதுகளும்,மது மயக்கங்களும், வாழ்வை எதிர்கொள்ளும் தருணங்களும்,ஸோர்க் ஒரு முன்னாள் எழுத்தாளன் என்பதை அறியவரும் பெட்டி அவனின் படைப்புகளை ஒரே மூச்சில் படிப்பதும்,அதை தட்டச்சு செய்து ஒவ்வொரு பதிப்பகத்தாருக்கும் அஞ்சலில் அனுப்பிவிட்டு அப்படைப்புகள் நிச்சயம் அச்சில் ஏறும் ஸோர்க் ஒரு எழுத்தாளன் ஆவான்,என எண்ணும் அவளின் நம்பிக்கையும்,அது தந்த மகிழ்ச்சியும்,அதை கொண்டாடுவதும்  காலத்தால் அழியாத ஒவியங்கள்.அந்த நம்பிக்கை பொய்க்கையில் பெட்டிக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா நோயும் நம்மில் உண்டு பண்ணும் தாக்கத்தை எழுத்தில் வடிக்க இயலாது,தான் கருத்தரித்திருக்கிறோம் என்னும் பூரிப்பை ஸோர்க்கிடம் உரைக்கும் தருணமும்,அது பொய்க்கையில் தன் வலது கண்ணையே நோண்டி எறியும் கொலவெறியும் ,அப்பப்பா!!!! புயல்கூட தோற்கும். இதைப் போன்ற தைரியமான ப்ரில்லியண்டான கலவிக்காட்சிகள், இது போன்ற எரோடிக் க்ளாசிக் படம் ஒன்றில் பார்ப்பது இதுவே முதல்முறை.

படத்தின் முடிவு எதிர்பார்த்தது போல இருந்தாலும்,மிகுந்த அதிர்ச்சியை தோற்றுவிக்கும். வழமையான திரைப்படங்களில் நாம் காணும் சம்பிரதாயமான காட்சியமைப்புகள், க்ளிஷேக்கள்,நெஞ்சை நக்கும் தாலாட்டுக்கள் அறவே இல்லை. இவ்வளவு துணிச்சலான படம் 1986லேயே ஃப்ரெஞ்சு சினிமாவில் சாத்தியமாயுள்ளது, ஆனால் நாம் இங்கே மதராசபட்டணம்,தெய்வத்திருமகள் போன்ற மலினமான தழுவல் காவியங்களையே படைத்துக்கொண்டிருப்பதையே மகா சாதனையாக கருதுவதை எண்ணி அயற்சியும் ஏற்படுகிறது, பெட்டி ப்ளூ சீக்கிரமே பார்த்துவிடுங்கள், பெட்டியும் ஸோர்க்கும் முழுக் கதையை இங்கே எழுதுவதை நீங்கள் படிப்பதை விட நீங்களே படத்தைப் பார்த்துவிடுங்கள், தனிமையிலோ, அல்லது தம்பதியாகவோ பாருங்கள். மனமுதிர்வும் புரிதலும் கொண்டோருக்கான படம், சாருவின் வாசகர்கள் தாராளமாக பார்க்கலாம். இயக்குனரையும் நடிகர்களையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.படம் தரவிறக்க சுட்டி, இப்படத்தை எங்கள் தல ஹாலிவுட் பாலா தனது 18+ல் குறிப்பிடாததை எண்ணி வியக்கிறேன்.
====

====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)