திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தன்மாத்ரா [2005][இந்தியா]Thanmathra[அணு]

தந்தைகளின் பெருமை பேசும் படங்களில் நிச்சயம் இப்படத்துக்கும் நீங்கா இடமுண்டு, ஒவ்வொரு காட்சியும் உண்மைக்கு வெகு அருகே  பயணிப்பதால் நமக்கு காண்பது திரைப்படம், என்றே மறந்துபோய் அடுத்து என்ன நடக்கும்?!!  என சஸ்பென்ஸை தக்க வைக்கும் , அப்படி ஒரு நேர்த்தி உண்டு  ப்ளெஸ்ஸியின் ஆழ்ந்த அற்பணிப்பினுடன் கூடிய இயக்கத்தில்,


தன் குருநாதர் மலையாள திரையுலக ஜாம்பவான், பத்மராஜனின் கதையான ஓர்மாவை எடுத்து திரைக்கதை எழுதி அழகுக்கு அழகு சேர்த்துள்ளார். சேது ஸ்ரீராமின் காமிரா மிக அழகும் அருமையும், குறிப்பாக திரைக்கதையுடன் ஒட்டி உறவாடும் மூடுக்கு தகுந்தது போல மாறும் ஒளியமைப்பு குறிப்பிடவேண்டியதும் ஆகும் ,

இயக்குனர் ப்ளெஸ்ஸி
படத்தின் பாத்திரங்களின் அற்பணிப்பு,  அடடா!!!, அவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. மோகன்லால், வாவ்!!!என்ன ஒரு ஆளுமை, சமகால இயல்பான நடிப்பின்  அசைக்கமுடியாத  ட்ரெண்ட்செட்டர்!!! இவர் , சிரிக்கையில் நாமும் சிரிக்கிறோம், அழுகையில் உணர்ச்சிவசப்படுகையில் நாமும்.  இப்படி ஒரு கதாபாத்திரம் , அதை எடுத்தாண்ட விதம், அதன் மகத்தான ரிசல்ட், அடடா, வியந்துகொண்டே இருக்க வைக்கும். குறிப்பாக படத்தில் மோகன்லால், மீராவின் நேர்மையான திணித்தலில்லாத கெமிஸ்ட்ரி வியக்கவைக்கும், படத்தின் பக்காபலமாக அப்பா நெடுமுடிவேணுவும், நண்பன் ஜெகதி ஸ்ரீகுமாரும் இப்படி நமக்கு வாய்க்கவில்லையே என ஏங்கவைக்கும்.

கேரளமக்களின் கல்வி முறையில், மத்திய, மாநில அரசு வேலைகளே  இன்னமும் பிரதான தேர்வாகும் , ஆகவே அவர்களை இந்திய மாநிலங்களில் அதிகம் ஆட்சியாளர்களாக, அதிகம் காணமுடிகிறது. அப்படி ஐஏஎஸ் ஆகமுடியாமல் தோற்ற ஒரு தாத்தா, நெடுமுடிவேணுவும்,ஒரு அப்பா ரமேஷன் நாயரும் [மோகன்லால்] , தன் மகன்  மனுவை [அர்ஜுன்லால்] எப்படியும் ஐஏஎஸ் ஆக்கிவிடவேண்டும் எனக் கண்ட கனவு பலித்ததா?  என்பதை மிக அருமையாக மனதை நகர்த்தும் நவரசங்களுடன் கலந்து தந்துள்ளனர்.

படத்தின் கதை:-
கேரள சட்டசபையில் செகரெட்ரியாக பணியாற்றும் ரமேஷன் நாயர்  [மோகன் லால்] நேர்மையாக பணியாற்றி நல்ல பெயரெடுத்தவர், அழகிய மனைவி லேகா [மீராவாசுதேவன்],  படிப்பில் புலியாக மகன் மனு[அர்ஜுன்லால்],அழகு மகள்  மஞ்சு ,வாடகை வீட்டில் இருந்தாலும் கௌரவமான  சிறிய அழகான குடும்பம், மிகுந்த சிரமத்துக்கிடையில் தன் அலுவலக நண்பர் ஜோசப் [ஜெகதி ஸ்ரீகுமார்] மூலம் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கிறார். 

மகனின் படிப்பைப்பற்றியே சதா சர்வகாலமும் சிந்திக்கிறார். மகன் படிக்கையில் கூட அமர்ந்து வினா விடை நடத்தி கூடிப் படிக்கிறார். மொத்தத்தில் வேலை செய்யும் இடத்திலும்,மகனின் பள்ளியிலும், அக்கம்பக்கத்து குடித்தனவாசிகளும் ஆச்சரியப்படும், பொறாமைப்படும் ஆளுமையாக திகழ்கிறார். மகனை நண்பனாகவே நடத்துகிறார். மனைவியை தோழியாகவே நடத்துகிறார். மனைவியிடம் எதையுமே மறைத்ததில்லை,தன் இளமைக்கால அத்தை மகள் ஷோபாவின் மேலான காதல் உட்பட. அதுபோலவே மகனும் தன் பள்ளியில் காதலிக்கும் பெண்ணைப்பற்றி அப்பாவிடம் மட்டும் பகிர்கிறான். மனு பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான்,


ஒரு மனிதனின் வலப்பக்க மூளைதான் கடினமான கணக்குகள்,வாய்பாடுகள் சூத்திரங்களை நினைவு கொள்கிறது, அவற்றை எப்படி விருப்பமான பாடல்கள், சம்பவங்கள், மூலம் நினைவில் ஏற்றுவதன் மூலம் இடப்பக்க மூளையையும் உபயோகிப்பது?!!, என அப்பாவும் மகனும் பள்ளிகளில் விளக்கும் காட்சிகள் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளன எனலாம்.

நம் வீடுகளில் பல வருடங்கள் முன்பாக, ஹார்லிக்ஸ் வாங்கியதற்கு ஒரு பூப்போட்ட கண்ணாடி நீர் ஜாடி இலவசமாக வந்திருக்கும். அதை மனு ஒரு காட்சியில் குற்ற உணர்வின் மிகுதியால் கீழே போட்டு உடைத்து விட்டு அழுவான். அம்மா லேகா அது இலவசமாக வந்தது தான்டா ,என தேற்றுவாள், படத்தின் லாஜிக்கலான தள அமைப்புக்கு இக்காட்சி ஒரு உதாரணம். [எத்தனையோ படங்களில் நடுத்தர வீட்டை காட்டுகிறேன் என்று நாடகத்தனமாக லக்ஸுரியான லிவிங்ஸ்டைலை அமைத்துவிடுவர். அவர்கள் இதைபார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.]

தன் வயதான டீச்சர் அத்தை இறந்து விட, ரமேஷன் நாயர் வாடகைக்கார் அமர்த்தி குடும்பத்துடன் சொந்த கிராமம் சென்று வருகிறார். அப்பா நெடுமுடிவேணு அப்படி ஒரு பாசக்காரத் தந்தை, நீ ஏன் இவ்வளவு செலவு செய்துகொண்டு வந்தாய்? அத்தை உனக்கு அவள் மகளை மணமுடிக்காமல் துபாய் வேலைக்காரனுக்கு மணமுடித்தது மறந்துவிட்டதா? என கடிந்துகொள்கிறார்.உடனே குட்டிப்பேத்தி மஞ்சு அதனால் தானே அம்மா மருமகளாய் வரமுடிந்தது என மடக்குவது அருமை.இப்படி வசனங்கள் ஒவ்வொன்றும் அழகு,நாம் பல சமயத்தில் உபயோகிப்பவையே!!!


ரமேஷன், அத்தை மகள் ஷோபா [சீதா] குடிகாரக்கணவனிடம் படும்பாட்டை பார்த்து வருந்துகிறார். மனைவிக்கு அழகாக கொசுவம் வைத்து புடவை கட்டியும் விடுகிறார். நேரம் கிடைக்கையில் சமையலறையில்  புகுந்து நளபாகம் செய்தும் அசத்துகிறார்.அப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து கால் விரலுக்கு நெட்டும் எடுத்து விடுகிறார். ஷோபாவுக்கும் உள்ளூர தனக்கு இது போல ஆப்த கணவன் கிடைக்கவில்லையே என அதிக வருத்தமிருக்கிறது,

ஊருக்கு கிளம்புகையில், ரமேஷன் திருவனந்தபுரத்தில் ரெண்ட-காருக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், நண்பன் ஜோசப் மூலம் தான் விரைவில் ஒரு செகண்ட்  ஹாண்ட் கார் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும் அப்பாவிடம் அனுமதிக்குவேண்டி சொல்கிறார், மேலும் கிராம பூர்வீக வீட்டுக்கு எதிரேயே கார் வந்து நிற்கும் படி பாதையும்  அமைக்க சொல்லிகிறார், அப்பாவோ,?!! அதற்காக  பாக்கு தேக்கு மரங்களை வெட்ட முடியாது என்கிறார்.

உனக்குத்தான் ஜோசப் இருக்கிறானே!! அவனையே கேட்டு எல்லாம் செய், என பொய்யாய் கோபிக்க, ரமேஷன்,சரி உன் பாக்கு,தேக்கு மரத்தை கட்டி அழு, நான் அடுத்த முறை காரை வெளியிலேயே நிறுத்திக்கொண்டு இந்த நூறு படிகளை ஏறிவருகிறேன், என கோபமாக சொல்லிவிட்டு காரில் புறப்பட, மனைவி லேகா  ஏன்? இப்படி ஒவ்வொரு முறையும்,அப்பாவிடம் கோபித்து ஊருக்கு புறப்படுகிறீகள் எனக்கேட்க, அது அப்படித்தான்,அப்பா அப்போதுதான் என் பிரிவுக்கு வருந்தமாட்டார், இன்று முழுக்க என்னை திட்டி தீர்த்துக் கொண்டே கழிப்பார், பிரிவு மறந்து போகும், என ஆறுதல் சொல்லும் காட்சி அற்புதமான ஒன்று.

ரமேஷன் நாயர் தன் வாழ்வில் மனைவியை மிகவும் ரசிப்பதற்கும் , மதிப்பதற்கும் தான் 10ஆம் வகுப்பில் மனனம் செய்து பாட்டுப்போட்டியில் பாடிய பாரதியாரின்  காற்று வெளியிடைக்கண்ணம்மா என்னும் பாடலே காரணம்., என்று மகனின் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மிக அழகாக எல்லோருக்கும் அதை பாடியும் காட்டுகிறார்.


[படத்தில் காற்றுவெளியிடை கண்ணம்மா என்று துவங்கும்  பாடல் பரப்ப்ரம்ம ரூபா என்னும் மாண்டேஜ் பாடலாய்  கர்நாடக இசையில் பிரவாகமெடுக்கிறது] நம் தமிழர்கள் எத்தனைபேர் பாரதியார் பாடல்களை மனனம் செய்திருப்போம், அல்லது புரிந்து பாடியிருப்போம்.  இன்னொரு காட்சியில் திருக்குறளை மேற்கோள் காட்டி நிகழ்த்த முடியாதது ஒன்றுமில்லை என்பதும் கவிதை.

இப்படி நன்றாக போய்கொண்டிருந்த குடும்ப வாழ்வில் பேரிடி ஒன்று விழுகிறது, எப்படி தெரியுமா?அல்சிமெய்ர் என்னும் கொடிய நினைவு பிழறல் நோய் வடிவில்.
ரமேஷன் முக்கியமான ஒரு ஃபைலை வீட்டுக்கு   கொண்டு வந்தவர்,அதை  ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைக்கிறார். மனைவியுடன் உடலுறவு கொள்கையில், சுவற்றில்  பல்லியைப்பார்த்துவிட்டு கவனம் சிதறியவர்,அப்படியே எழுந்து ஒரு குச்சியால் சிறுவன் போல பல்லியை தட்டுகிறார். மனைவி லேகா நொறுங்கிப்போகிறாள்.காலையில் பல்துலக்குகையில் மகனின் டூத்ப்ரஷில் பல்விளக்குகிறார்.


இப்படியே சமகால நினைவுகள் சுத்தமாக வடிந்தவர் போலாகிறார். நினைவுகள் வருகின்றன, போகின்றன, எல்லாவற்றுக்கும்  உச்சமாக  ஸ்கூட்டரில் சாவியை டிக்கியில் டிஃபன் பாக்ஸ் வைக்க திறந்து பூட்டியவர், அதை எடுக்காமலே ஸ்கூட்டரை உதைத்து அது ஸ்டார்ட் ஆகவில்லை,என தள்ளிக்கொண்டும் வருகிறார்.


மகன் எடுத்துச்சொன்னதும் நம்பவில்லை, சாதிக்கிறார்.  மகனை பள்ளியில் விட வந்தவர், பள்ளி கடந்து போனது  தெரியாமல் ரோடு தாண்டி வந்துவிடுகிறார். மகன் இறங்கிக்கொள்ள, ஆஃபீஸ் விட்டுவிட்டது என நினைத்துக்கொண்டு காய்கறிக்கடையில் கீரையும், தக்காளியும்,காய்கறிகளும் வாங்கியவர், ஸ்கூட்டரை அங்கேயே மறந்து விட்டு ஆட்டோ பிடித்தவர் , போகுமிடம் சொல்லத் தெரியாமல் செகரெட்ரியேட் கட்டிடம் பார்த்து இறங்குகிறார். ஆட்டோகாரர் நிறைய சுற்றவைத்துவிட்டீர்கள், எனச்சொல்லி ரூ 200 கேட்கையில் திகைக்கிறார்.


ஆஃபீஸுக்குள் நுழைந்ததும் நண்பர் ஜோசப் எதிர்கொள்ள, குறுகுறுக்கிறார், சுயநினைவுக்கு வந்தவர் காய்கறியை எங்கே வைக்க?,என்று கேட்க அதை  ஜோசப் வாங்கிச்செல்ல, இவர் அவரின் பின்னே  ஆஃபீசுக்குள் நுழைந்தவர், பெண் ஊழியர்களுக்கு எதிரேயே சட்டையை கழற்றி கப்போர்டில் மாட்டுகிறார். பெண் ஊழியர்கள் அலற ரசாபாசமாகிறது, நண்பர் ஜோசப் பயந்தபடி ரமேஷன் சரக்கடித்திருக்கிறாரா? வாடை வரவில்லையே, ஓட்கா, ஜின் எதானுமா? கஞ்சாவா? என்று பயந்து கழிவறை கூட்டிச்சென்று முகம் கழுவ அனுப்ப,


உள்ளே வந்த ரமேஷன், மேலே ஷவர் இல்லாதது கண்டு திகைத்து பக்கெட் நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்ள, அங்கே வெளியே இவரின் ஸ்கூட்டரை இவரிடம் திரும்ப கொடுக்க எடுத்து வந்த காய்கறிக்காரர் ஜோசப்பிடம் சாவியை கொடுக்க, ரமேஷன் ஆவேசமாய் வெளியேறியவர். காய்கறிக்காரனை பிடித்து அடிக்கிறார். ஸ்கூட்டரை அவன் திருடிவிட்டான் என பிதற்றுகிறார். ஜோசப் இவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுக்கும் தகவல் அளிக்கிறார்.


ரமேஷனின் அப்பா பதறியபடி வந்து சேர்கிறார். மனு மாடல் எக்ஸாம்கள் மறுநாள் துவங்க, நான் போகமாட்டேன்,என்று அப்பாவின் தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறான்.  ஒவ்வொரு அணுவிலும்,அசைவிலும் அப்பாவையே உணர்கிறான்.  இப்போது படிப்பைவிட அப்பாவின் உடல்நலனே அவனுக்கு பிரதானம். அம்மா லேகா நொறுங்கிப்போகிறாள்.


இனி என்ன ஆகும்?
1.புத்திசாலியான ரமேஷன் எதனால் இந்நோய்க்கு ஆட்பட்டார்?
2.ரமேஷன் அல்செய்மெய்ர் நோயிலிருந்து விடுபட்டாரா?
3.ரமேஷனின் செகரெட்ரி வேலை என்ன ஆனது?
4.ரமேஷன் விரும்பியபடியே டபுள்பெட்ரூம் ஃப்ளாட்டும்,செகண்ட் ஹாண்ட் காரும்  வாங்கினாரா?
5.மகன் மனு ஐஏஎஸ் ஆஃபீஸர் ஆனானா?


போன்றவற்றை நெகிழ்ச்சியான சம்பவங்களின் கோர்வையுடன் டிவிடியில் பாருங்கள், இன்றைய தமிழ்படங்கள் அப்பாவை டேய் அப்பா, அவன், இவன், ஓத்தா,  என்றெல்லாம் சொல்லுவதை ஊக்குவிப்பது போல காட்சியமைப்பதை நியாயப்படுத்திவருகின்றன. இயக்குனர்கள் இது போல படங்களையும் பார்க்கவேண்டும், இப்படியும் தந்தை மகன் உறவை பின்ன முடியும் என யோசிக்கவேண்டும். அதனால் சமூகத்தில் ஆரோக்யமான மாற்றம் நிச்சயம் வரக்கூடும்.


படத்தில் நடித்த மீரா வாசுதேவன் இதற்காகவே 15கிலோ எடைக்கூடினாராம், படத்தில் இவர்களின் அன்னியோன்யம் கண்டு, இரண்டு வீட்டிலும் சண்டை வந்தாலும் வந்திருக்கும். அப்படி ஓர் யதார்த்தம்.ஒவ்வொரு காட்சியுமே பார்த்துப் பார்த்து செதுக்கியது நன்றாக தெரிகிறது, படத்தின் இசையும் பாடல்களும் பிண்ணணி இசையும் மிக அருமை,


ஒரு மருத்துவமனைகாட்சியில் இசைபுயலின் warriors of heaven and earth என்னும் இசைக்கோர்வையை அப்படியே  எடுத்து  மோஹன் சித்தாரா பயன்படுத்தியிருப்பார். மனதை உருக்கிவிடும்., மேலே நிலாக்காயல் , காற்று வெளியிடைக் கண்ணமாவும் கேட்க மிக இனிமை. சமகாலத்தில் ஒருபடம் ஒருவரை சிரிக்க, நெகிழ, அழ வைத்திருக்குமானல் அது இதுதான்.  நல்ல படங்களை பார்த்து சிலாகித்து, மோகித்து அதை டைரியில் எழுதுவது போலவே இதை எழுதுகிறேன். ப்லெஸ்ஸியின் பரம்மரம் விரைவில் எழுதப்பார்க்கிறேன்.


மேலே வெள்ளித் திங்கள் பாடல் யூட்யூப் காணொளி :-
====0000=====

களவாணி-மீண்டும் ஒரு யதார்த்த சினிமா!!!

நண்பர்களே,போன வாரம் தான் களவாணி படம் பார்க்க முடிந்தது, இந்த படத்தின் 20க்கும் மேற்பட்ட விமர்சனங்களை வலையில் படித்திருந்தமையால் இது ஒரு ஓவர்ரேட்டட் படமாக இருக்குமோ?!!! என்னும் தயக்கம் இருந்தமையால் பார்க்கணுமா? என யோசித்து , அட பார்ப்போமே!!!.  என பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது , அற்பணிப்பு, என்ற ஒற்றை சொல்லுக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள் படத்தின் கலைஞர்கள்.

இதை தியேட்டரில் பார்க்கவில்லையே!!!என மிகவும் வருத்தப்பட்டேன், பல பெரிய பட்ஜெட் குப்பைகளை தியேட்டரில் பார்த்து நொந்து போனதால் எது அசல?எது போலி? என்பதில் நிலவும் குழப்பத்துக்குள்ளேயே இதுபோல படங்களும் சிக்கிக்கொள்கின்றன. நான் கடைசியாக   4 முறை பார்த்த படம் என்றால் அஞ்சாதே, மற்றும் பொல்லாதவன், அதன் மேக்கிங்கில் மிரட்டியிருப்பார்கள், இயக்குனர்கள் மிஷ்கினும்,வெற்றிமாறனும். அதற்கு பின்னர், இந்த படம் தான் நான் அலுக்காமல் வெகுவாக  ரசித்து திரும்ப திரும்ப  பார்த்தது என்று சொல்லுவேன்.

அப்படி ஒரு வசீகரம் படத்தில். சற்குணம் இயக்குனராக கிடைத்ததற்கு தயாரிப்பாளர் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும், இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் கொடுப்பது எப்படி?!!! என அவர் ஒரு புத்தகமே போடலாம். இதை நண்பர் கருந்தேள் எழுதியிருந்தால் அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து மேய்ந்திருப்பார். பாராட்டுவதிலும், குறைகண்டால் குட்டி தீர்ப்பதிலும் மனிதர் தாராளம். இப்படம் சாரு எழுதி உயிர்மையில் வருகிறது, படிப்போம் என்றார். அட சூப்பர் மேட்டராச்சே !!! என்றேன். நான்.

இந்த படத்தை பற்றி அண்ணன் ஜாக்கி, நண்பர் செ.சரவணகுமார், நண்பர் பின்னோக்கி, நண்பர் செந்தில்வேலன் மற்றும் நிறைய பேர் அருமையாக வித்தியாசமாக எழுதியிருந்தனர். ஆகவே நான் எழுதாமல் விடுவதில் எந்த குறுகுறுப்புமில்லை. அவர்களின் விமர்சனங்களை வரிக்கு வரி அப்படியே வழிமொழிகிறேன்.

விமல் போன்ற நடிகனை பசங்க,தூங்காநகரம் போன்ற படங்கள் பார்த்துவிட்டு குறைத்து மதிப்பிட்டு விட்டுவிட்டேனே!!!அடடா?!!! எனத் தோன்றியது.இவர் கூத்துப்பட்டறை நடிகர் என்று இப்போது தான் தெரியும்,18வருடங்கள் ஹீரோவாக தோன்றியும் இன்னும் முகபாவனை உடல்மொழி என்பதே தெரியாத ஒரு ஓவர்ரேட்டட் நடிகன்,அல்லக்கைகளின் எடுப்பார் கைப்பிள்ளை இ.தளபேதி விஜயை ஒப்பிடுகையில் விமல் யதார்த்த நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.  விமலும் அந்த நாயகியும் அமர்க்களமான பெர்ஃபார்மன்ஸ்.  விமல் இனி மிக கவனமாக இருக்க வேண்டும். இதே போல கதையமைப்புடன் கூடிய படங்களாய் நடிக்கசொல்லி வாய்ப்புகள் குவியும், அதிலிருந்து கவனமாக தெரிவு செய்து நடிக்க வேண்டும்,

அந்த நாயகி ஓவியா, மிக அழகு, அருமையான நடிப்பு, முதல படமா?!!! சான்சே இல்லை, த கேர்ள் நெக்ஸ்ட் டோர்!!! என்ற சொல் சிறப்பாயிருக்கும் , சற்குணம் படத்தின் கலைஞர்களிடம் வேலை வாங்கியதிலேயே மிளிர்கின்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, படம் பார்த்த அனுபவம். எல்லா படத்துக்கும் இது கிடைத்து விடாது. படம் முடிந்த  உடனே நான் செய்த முதல் வேலை என் ப்ளாக்கரின் ப்ரொஃபைலில் பிடித்த படங்கள் பகுதியில் இந்த படத்தையும் கையோடு இணைத்தது தான்.

பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட, பாத்திரங்கள் ரெண்டு பென்சிலாவது வாங்கி குடுண்ணே!!! என்று சொல்லும் தங்கச்சி, சரியான பொருத்தமான பாத்திர தேர்வு, பூரா பணத்தையும் கேக்காம மூணு பங்கோட விட்டானே!!! என்னும் அம்மா, 2500 திர்காம்ஸ் குடுத்து லாப்டாப் வாங்குனேன்,கட்டிட வேலை முடிக்காம கெடக்கு பாத்து போட்டுகுடுங்க பாய், என்னும் இளவரசு என வாழ்ந்திருக்கின்றனர்.

கஞ்சா கருப்பு, பாலைவனத்து மழையை போல என்பேன், ஸ்டீரியோ டைப் காமெடியைப் பார்த்து பார்த்து நொந்த நமக்கு ஆகச்சிறந்த மாற்றாக விளங்குகிறார், இவரை இன்னும் நாம் நன்கு பயன்படுத்தலாம்!!!, செம ரிசல்ட் தருவார். என்பது என் எண்ணம். வில்லனாக வந்தவர் , என் பள்ளியில் கூடப் படித்த எதிரி மாணவன் போலவே இருக்கிறார். பார்க்கும் போதே எரிச்சல் வரும் ஒரு  விரோதக்கார முகம். மனிதர் என்னமா பெர்ஃபார்ம் செய்திருக்கிறார் ?!!! .  எங்க பல்லாவரம்,  பம்மல் ஏரியாவில் சபரிமலை சீசனில் மாலை போட்டுக்கொண்டு தவ்ளத்தனம் செய்யும் பயபுள்ளைகளை நினைவு படுத்துகிறார்.

மற்றபடி குறை என்று சொல்லவே முடியவில்லை, இருந்தால் தானே? சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு குறை கண்டுபிடிக்க முயன்று தோற்ற இன்னொரு படம். வெல்டன் டீம். இயக்குனர் சற்குணத்தின்  படங்களை இனி தேடிப்பார்க்கும் ஆவலை உண்டு பண்ணிவிட்டார்.!!! இப்படம் , இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு காரணமே, இவ்வளவு நல்ல படத்தை ஊடகத்தில் சிலாகிக்காமல் இருப்பது குற்றம் என்பதால் தான்.

தவிர, படம் பற்றி எழுதிய நண்பர்களின் பதிவுகளில், படம் பார்த்திராததால் முன்பே பின்னூட்டியிருந்தாலும், ரசித்தவற்றை பகிர முடியவில்லை. இது போல நல்ல படங்களையும் அவ்வபொழுது தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் ,  இயக்கும் இயக்குனருக்கும், வெற்றிபெறச்செய்யும் ரசிகர்களுக்கும்  மிக்க நன்றி.

விமல்பற்றிய ஒரு செய்தி:- சமீபத்தில் மீண்டும் காஞ்சிவரம் படம் பார்தேன் அதில் நடிகர் விமல் மினி ரமேஷ் என்னும் பெயரில் பிரகாஷ்ராஜின் மருமகன் ரங்கனாக அவர் வருவதை உறுதி செய்துகொண்டேன்,விமலின் ஃபில்மோக்ராஃபியில் இந்த மிக முக்கியமான படம் இல்லாதது கண்டு ஆச்சர்யமடைந்தேன். நண்பர்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்,குரலும் விமலது குரல் தான் அவர் ஏன் மினிரமேஷ் என அறிமுகமானார் என குழப்பமாக இருக்கிறது.
களவாணி=நியாயமான கூலி
=========0000==========
சாதித்த களவாணி குழுவினரின் பேட்டி:-

பாரிஸ்,டெக்ஸாஸ்[Paris, Texas][அமெரிக்கா][1984]

ரோட் மூவீஸ் என சொல்லப்படும் வகையான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மக்களின் மொழியை,வாழ்வை, சுற்றுச்சூழலை, கலாச்சாரங்களை சாலை வழியே  பயணித்து செல்லுலாய்டில் பதிவு செய்வதில் மிக முக்கிய பங்கு ரோட் மூவி ஜெனர்களுக்கு உண்டு,

இந்தியாவின் சிறந்த ரோட் மூவியாக அன்பே சிவத்தை சொல்வேன். இப்போது ஹிந்தியில் வெளிவந்த தேவ் பெனகலின் ரோட். மூவியும் ஒரு நல்ல உதாரணம். உலகின் சிறந்த ரோட் மூவிகளாக ப்லேன்ஸ்,ட்ரெய்ன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ், தெல்மா &லூயிஸ், த ட்ரான்ஸ்போர்டர்,  த லாஸ்ட் ரைட்,லிட்டில் மிஸ் சன்ஷைன்,த ட்ரூஸ் - முக்கியமாக பாரீஸ் , டெக்ஸாஸ் ஐ சொல்வேன்.

பாரீஸ் டெக்ஸாஸ் விம் வேண்டர்ஸ் என்னும் கைதேர்ந்த உலக-சினிமா இயக்குனரின் சிறந்த கல்ட் க்ளாஸிக் போர்ட் ஃபோலியோ என சொல்லப்படுகிறது  , இவர் படிப்பால் டாக்டர், ஆனால் சினிமாவின் மீதான காதலால் இயக்கத்தை உயிரினும் மேலாய் சுவாசித்து படங்கள் தருகிறார். இவர் பிறப்பால் ஜெர்மானியர் என்றாலும் உயிரோட்டமான அமெரிக்க படங்களைப் படைத்துள்ளார், எண்ணற்ற அமெரிக்க பேரலல் சினிமா ரசிகர்களையும் உலக சினிமா காதலர்களையும் கொண்டுள்ளார். 

இவர் படங்களில் பெரிய நடிகர்கள் இருக்க மாட்டார்கள்,ஆனால் இவரின் அறிமுகங்களிடம் பெரிய நடிகர்களே,பாடம் கற்கலாம்,அப்படி இருக்கும் இவரின் ட்ரெய்னிங்கும், டெடிகேஷனும். ஒவ்வொரு ஃப்ரேமையும் பெர்ஃபெக்‌ஷனாய் செதுக்கும் சிற்பி = வி ம் வே ண் ட ர் ஸ்.

வளர்ந்த நாடுகளில் தான் எப்படியெல்லாம்? பொழுது போக்க வழியிருக்கிறது!
சூதாட காஸினோக்கள், பார்கள், காமெடி ரொட்டின் பேச்சாளர் பேசும் உணவகங்கள் , கேளிக்கை விடுதிகள், எல்லா வகை சினிமாக்கள், பூங்காக்கள், கே-பப் எனப்படும் ஓரினச்சேர்க்கையாளர் விடுதிகள், ஸ்ட்ரிப் டீஸ் பார்லர்கள்,  செக்ஸ் டாய் கடைகள், விபச்சார விடுதிகள், செக்ஸ் படம் பார்க்க தனி பார்லர்கள்,மாலை நேரம் கிராக்கி பிடிக்கும் சாலையோர விலைமாதுக்கள் என எத்தனையோ வழிகள். 

இந்த படத்தில் நாம் பார்க்கப்போவது பீப்ஹோல் பார்லர்கள் எனப்படும். தீண்டாமை விபச்சாரம் , அதை இயக்குனர் விம் வாண்டர்ஸ் இந்த படத்தின் ஃப்ரேமுக்குள் கொண்டு வந்த விதமும், டீடெய்லும், பாத்திரப்படைப்பும், படத்தின் கடைசி வரை நம்மை அமர வைத்த சஸ்பென்ஸும், அட!!!! என  வயிற்றில் இனம் புரியா கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. இத்தனைக்கும் எங்கும் கத்தியில்லை, ரத்தமில்லை.பக்கம் பக்கமாய் வசனமில்லை,சோகமும் பிழியவில்லை.1980 களின் நோஸ்டால்ஜியாக்களை இப்படம் ஒவ்வொரு அமெரிக்கவாசிக்கும் தரவல்லது,

படத்தின் கதை:-

உணர்வுரீதியாக மனதில் வெற்றிடம் ஏற்பட்டு எதைத்தேடி போகிறோம்? என்றே தெரியாத 40 வயது ட்ராவிஸ் [ஹாரி டீன் ஸ்டாண்டன்], சிகப்பு பேஸ்பால் தொப்பி, ஒரு அழுக்கு ஓவர்கோட், சூட் , டை அணிந்து நான்கு ஆண்டுகளாக அசுரத்தனமாக நடக்கிறார். ஓரிடத்தில் வெயில் கொடுமையால் பாருக்குள் நுழைந்தவர், ஐஸ் கட்டிகளை தின்றுவிட்டு விழுந்து மயங்குகிறார்,

மருத்துவமனையில் இவரை சோதித்த டாக்டர் இவர் பையில் இருந்த கசங்கிய விலாச அட்டைவைத்து இவர் தம்பிக்குஅழைத்து பேச,   தம்பி வால்டுக்கோ [டீன் ஸ்டாக்வெல் ] ஆனந்தம்,  அவரின் அன்பான மனைவி ஆனியிடம்   [அரோர் கிலிமெண்ட்] விடயம் சொல்லி இறந்துபோனதாய் தான் நினைத்த அண்ணனைத்தேடி விமானம் ஏறி, பக்கத்து நகரில் இருந்து டெக்ஸாஸ் பாலைவனத்துக்கு, காரை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்,

அண்ணனின் இருப்பிடம் சென்றவர்,விடியலில் மயங்கி எழுந்த  அண்ணன் யாரிடமும் சொல்லாமல் போய்விட்டதை அறிகிறார்,டாக்டருக்கு  ஃபீஸை தந்துவிட்டு ,பாலைவனத்திலேயே தளராமல் காரில் சென்று தேட, அண்ணன் சித்தாந்தத்தால் உந்தப்பட்டவன் போல வெறிகொண்டு எங்கோ நோக்கி நடப்பதை பார்த்து,கெஞ்சி கூத்தாடி காரில் எற்றி கதவடைத்து,அண்ணனை மோட்டலுக்கு கூட்டிப்போகிறார்.

வழியில் இவர் சாதுர்யமாக பின்சீட்டில் கோழிபோல உடம்பை குறுக்கிக்கொண்டு இருக்கும் அண்ணணிடம் என்னகேட்டாலும் பதிலில்லை, அவருக்கு பேச்சு போய்விட்டதோ?செவிடா? அண்ணனை விட 15 வயது இளைய அண்ணிக்கு என்ன ஆனது?  என்ன அற்புதமான ஜோடிப்பொருத்தம்!!! என்று அனைவரும் வியந்தது!! இப்படியா ஆகவேண்டும்? அண்ணன் ஒரு சந்தேகப்பேர்வழி என தெரியும், அண்ணியை கொன்றிருப்பாரோ? எது கேட்டாலும் மௌனமாயிருக்காரே? அறையலாம் போலிருக்கே,அண்ணி நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்து அவர்களின் ஆசைமகன் ஹண்டரை விட்டிச்சென்றவள் என்ன ஆனாள்? அண்ணனுக்கு தெரியுமா?அண்ணன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

மோட்டலில் அண்ணனை தங்க வைத்துவிட்டு, பக்கத்து துணிக்கடையில் போய் அண்ணனுக்கு அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜீன்ஸ்,சர்ட்,புதிய தொப்பி,பூட்ஸுகள் வாங்கிவந்து பார்த்தால் கதவு திறந்துபோட்டு ஆள் எஸ்கேப், குழப்பத்தில் மறுபடியும் அலைந்து திரிந்தால்,தொலைவில் ரயில் போக அதே பாதையில் மராத்தான் ஓட்டம் ஓடும் அண்ணன்,இவர் ஓடிப்போய் , கெஞ்சி,கூத்தாடி, தரதரவென இழுத்து வந்து காரிலேற்றி கதவும் சார்த்தியாகிவிட்டது.அப்பா!!!

விமானம் ஏறும் போதா? அண்ணன் இப்படி முரண்டுபிடிக்கனும்? சின்னக்குழந்தை மாதிரி ,விமானத்தில் எல்லோரும் வால்டை செம திட்டு திட்ட, லாஸ் ஏஞ்சலஸுக்கா  கார் பயணமா? ஐயகோ 2 நாள் ஆகுமே, தொடர்ந்து ஓட்டனும், கொலைவெறி இருந்தாலும் அண்ணன் அவிழ்க்கப்போகும் புதிர் முடிச்சுக்காக பொறுத்த வால்ட் பொறுமை எல்லை மீறவும்!!!,எதாவது பேசேன் ,என சீறுகிறார் ,படம் ஆரம்பித்து 25ஆம் நிமிடம் பாரீஸ் என ட்ராவிஸ் மெதுவாக வாய் திறக்கிறார்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பாரீஸ் டெக்ஸாஸில் இடம் வாங்கியவர் அதை ஒரு போலராய்டு போட்டொவில் உள்ள ஹோர்டிங்கின் வாசகத்தை வைத்து தேடுகிறாராம்., மனைவியைப் பற்றி மனிதர் வாயே திறக்கவில்லை, பழைய வேலை, இவரின் கார், இவரின் மகன் எது பற்றியும் குசலம் விசாரிக்கவில்லை, எதோ புதிதாய் பிறந்தவர் போல இருக்கிறார்.தம்பி வால்ட் அண்ணனிடம் தான் சாலையோரம் உள்ள பெரிய ஹோர்டிங்குளில் உள்ள விளம்பர காண்ட்ராக்டுகள் எடுத்து செய்வதாய் சொல்கிறார்,இவர்,எனக்கு அவற்றில் சில மிகவும் பிடிக்கும் என்கிறார்.இருவரும் மொஜாவி பாலைவனம் வழியே சாலையில் பயணிக்கின்றனர். பசிக்கு உணவருந்தி, மோட்டலில் தங்கி மீண்டும் பயணிக்கின்றனர்.


இரவில் வீட்டுக்கு வந்தவர்,மகனிடம் அறிமுகப்படுத்தப்பட, மகன் ஹண்டர் கோபத்தில் சரியாய் பேசாமல் ஹை என்கிறான்.இவர் வீட்டில் சும்மா இல்லாமல் எல்லோரின் பூட்ஸுகளுக்கும் பளபளவென பாலீஷ் போட்டு வைக்கிறார், பாத்திரம் கழுவுகிறார். மிக வசதியான வீடு, தொலைவில் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்போர்ட் வேறு.அங்கே சென்று விமானங்களை வேடிக்கை பார்க்கிறார். புதிய இடம்,உடை,மக்கள்,அன்பான மைத்துனி ஆனி ,இவரின் மகன் 7 வயது ஹண்டர் என குற்ற உணர்வு நீங்கி தலையை நிமிர்ந்து பார்க்கிறார்.

மகன் ஹண்டர் தன் அப்பாவையும் அம்மாவையும் 8எம் எம் வீடியோ டேப்பில் பார்த்து வளர்ந்தவன், இருவர் மீதும் அப்படி ஒரு பாசத்தை வைத்துள்ளான், என்ன தான் சித்தப்பாவும் சித்தியும்,தாலாட்டி சீராட்டினாலும்,சிறுவயதிலேயே பெற்றோரை பிரிந்த துக்கம் அவனுக்கு அதிகம் உண்டு. அப்பாவிடம் மெல்ல நெருங்குகிறான்.ஒரு விடுமுறை நாளில் எல்லோரும் குழுமியிருக்க, இவர்கள் சுற்றுலா போன அந்த 8எம் எம் டேப்பை ப்ரொஜெக்டரில் தம்பி ஓட்ட, அண்ணன் ட்ராவிஸ்கு மனைவியை  அதில் கண்டவுடன் கண்கள் கலங்குகிறது, மகனை ஆறத்தழுவிக்கொள்கிறார். இவர் மனதில் ஏற்பட்ட வெற்றிடத்தால் மகனிடம் எப்படி பாசத்தை வெளிப்படுத்துவது?!!!, அவனிடம் எப்படி ஒரு பொறுப்பான தந்தையாக நடந்துகொள்வது ?!!! என நிறைய யோசிக்கிறார், வீட்டு பணிப்பெண்ணும் நிறைய டிப்ஸுகள் தர அதை பின்பற்றுகிறார், தம்பியிடமிருந்து கோட்டு சூட்டுகள், தொப்பி, லாங் பூட்சுகள் கடன் வாங்கி போட்டுக்கொண்டு ஒயிலாகப் போய் மகனை பள்ளியில் இருந்து கூட்டி வருகிறார்.

ஆசைமகனும் அப்பாவும் வாழ்வில் ஒன்று சேர்ந்துவிட்டனர்,அம்மா? !!! அம்மாவை மகனும்,ட்ராவிஸும் மறக்கவில்லை.இதற்கிடையே தம்பிக்கும் அவனின் மனைவிக்கும் பதட்டம் உருவாகிறது,பிள்ளையில்லாத இவர்கள்  ஹண்டரை சொந்த மகனாகவே வளர்த்துவிட்ட நிலையில் அண்ணன் வந்து அவனை அழைத்தால் அவன் போய்விடுவதா?என்று,

தம்பியின் மனைவி ஆனி, இவரை தனிமையில் சந்தித்து,  4 வருடங்களுக்கு முன் ஹண்டரின் அம்மா  ஜெனி [நடாஷ்ஜா கின்ஸ்கி] ஒரு விடியலில் ஹண்டரை[ஹண்டர் கார்சன்] ஒப்படைத்துவிட்டு,கேள்விகள் எதுவும் கேட்கக்கூடாது என சொல்லிவிட்டு, எக்காரணம் கொண்டும் ட்ராவிஸிடம் ஹண்டரை ஒப்படைக்க கூடாது என சென்று விட்டாள் என்றும்.

அதன் பின்னர்,ஒவ்வொரு மாதம் ஐந்தாம் தேதியும் ஹண்டரின் பேரில் அவள் திறந்த சேமிப்பு கணக்கில் குறைந்தது 5 டாலர் முதல் அதிகபட்சம் 100 டாலர் வரை போட்டும் வருகிறாள், அது என்ன வங்கி கிளை? என அறிந்து சொல்கிறேன், இவர் விரும்பினால் அவளை சென்று சந்திக்க வேண்டும் என்கிறாள். தான் விபரம் தந்ததாய் சொல்லக்கூடாது என்கிறாள்.

மறுநாளே,தம்பியிடம் மனைவியை தேடிப்போவதாய் சொல்லிவிட்டு,இவர் தம்பியிடமிருந்த பிக்கப் காரை எடுத்துக்கொண்டு , மகன் பள்ளி விட்டதும், அவனிடம் சொன்னவர், மகனும் வருவேன் என அடம் பிடிக்க, அவனையும் அழைத்துக்கொண்டு ஹூஸ்டன் என்னும் நகர் நோக்கி பயணம் தொடங்குகின்றனர். என்ன ஒரு பாசப்பிணைப்பான காட்சிகள் இனி,?!!!

பயணத்தினூடே வாக்கி டாக்கிகள், டிஷர்டுகள், டூத் ப்ரஷுகள், உணவு, பானங்கள் வாங்கிக் கொள்கின்றனர்.  மகன் தூங்கி விழ அவனை அழகாக தன் சீட்டிலேயே வைத்து இடுக்கிகொண்டு கார் ஓட்டும் அந்த காட்சியும், மகன் இவருக்கு தான் பள்ளியில் கற்றுக்கொண்ட விடயங்களைப்பகிர அவற்றை ஆவென வாய் பிளந்து கேட்டுக்கொள்ளும் ட்ராவிஸ்,என்ன ஒரு இயல்பான நடிப்பை முன்நிறுத்தியுள்ளார்?!!,

பிரிந்த மனைவியை பார்க்கப்போகும் பரிதவிப்பையும் ,பயத்தினால் வந்த படபடப்பையும் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். வழியில் தம்பிக்கும், ஆனிக்கும் போன் செய்தவர், பேச பயந்து போனை  சாதுர்யமாக ஹண்டரிடம் தர, ஹண்டர் லாவகமாய் சமாளிக்கிறான், போனை ட்ராவிஸிடம் கொடுக்க சொல்லி அவள் பதற, ஹண்டர் ரிசீவரை எளிதாய் சாத்தியும் விடுகிறான்.

வழியில் மோட்டலில் தங்கியவர்கள், அழகாய் அம்மாவை கண்டுபிடிக்கும் திட்டத்தை போடுகின்றனர். அம்மா அடுத்த நாள் ஐந்தாம் தேதி காலை எப்படியும் வங்கிக்கு வருவாள், ட்ராவிஸ் தான் காரிலேயே இருப்பேன் என்றும், ஹண்டர் வங்கி வாசலில் நின்று அம்மா வந்தவுடன் வாக்கி டாக்கியில் அழைக்க வேண்டும் என்றும்  சொல்ல,நீண்ட நேரமாகியும் வாக்கி டாக்கியில் மகன் பேசாததால்,ட்ராவிஸ் நன்கு தூங்கியும் விடுகிறார்,

அங்கே  சரியாக ஹண்டரின் அம்மா ஜெனி வந்து பணம் டெபாசிட் செய்துவிட்டு வெளியேறி, தன் காரில் புறப்பட, மகன் பதறி அப்பாவுக்கு பேச, ஒரு வழியாய் தூக்கத்தில் இருந்து எழுந்தவர், மகனின்,வழிகாட்டுதலின் பேரில் சாலையில் கலந்த அந்த சிகப்பு செவ்ரோலெட் காரை மகனுடன் தொடர்கின்றார், தவறாகி விட்டால் அடுத்த ஐந்தாம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என இவர் சொல்ல .

இவன் அப்போது எனக்கு எட்டு வயதாகிவிடும்,என்கிறான் குறும்பாய் .!!! பெரிய நெடுஞ்சாலை 10,000 காரில் எந்த கார் அவளது கார்?குழப்பத்தில், தேடி சந்தேகமேற்படாதவகையில் சரியாக பின் தொடர்கிறார்.அவளுக்கு இரண்டு கார் பின்னே சென்றவர்,அவள் க்ளீவ் லாண்ட் செல்லும் சாலையில் சென்று, ஷெபர்ட் ட்ரைவிற்குள் நுழைந்து சந்தில் புகுந்து ஒரு பழைய பப் கட்டடம் போன்ற ஒன்றில் நுழைந்து,இவர்கள் அவளை பார்ப்பதற்குள் மறைகிறாள். இருவரும் அவள் விட்டுச்சென்ற காரை ஆசையாக தடவிப்பார்க்கின்றனர்.

மகனை காருக்குள் வைத்து பத்திரமாய் இருக்கும் படி சொல்லிவிட்டு பப்பின் கதவை திறந்து படியேறி மேலே போனால் அது ஒரு ஸ்டாஃப் ரூம். விலைமாதுக்களுக்கென்றே பிரத்யேக பாரும், ஓய்வு அறையும்,அங்கே டைம் கீப்பரின் குரலும் கேட்கிறது, 22ஆம் நம்பர் பூத்தில் கஸ்டமர் வெயிட்டிங், உடனே ஆள் போகவும் என்று. இவர் அங்கே தொலைவில் தன் மனைவியை பார்த்து விடுகிறார்,

அவள் அப்படி ஓர் அழகு,இன்னமும் அவள் சிறு பெண்ணைப்போலவே இருக்கிறாள். இவருக்கு பதட்டம், அவளையே பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை, இவரிடம் ஒரு சிப்பந்தி, நீங்கள் இடம் மாறி வந்துவிட்டீர்கள், கீழே தான் பூத்கள் உள்ளது, என சொல்லி மரியாதையாய் அனுப்ப. கீழே வந்தவர்,  அங்கே இருந்த 8ஆம் எண் பூத்தில் உள்ளே போய் கதவை திறந்து சேரில் அமர, அங்கே டெலிபோனும் உள்ளது, pool side என்பது இவர் நுழைந்த பூத்தின் பெயர். விந்தையாக மெனுகார்டும் இருக்கிறது,


[இது ஒரு நவீன தீண்டாமை விபச்சார மையம்,ஆம்ஸ்டர்டாமில் உள்ளது போலவே வடிவமைத்துள்ளனர்! வாடிக்கையாளர்கள் அங்கே சென்று பணம் செலுத்திய பின்னர் அங்கே இருக்கும் 20க்கும் மேற்பட்ட இருட்டு அறைகளில் நுழைந்துகொண்டு, அறையின் ஒன்வே மிரர் வழியாக அறையின் கண்ணாடியின் அடுத்த பக்கம் இருக்கும் விலைமங்கையிடம், மெனுகார்டு பார்த்து அவளை நிர்வாணமாக்கி பாடவோ, ஆடவோ, கொஞ்சவோ, பாலியல் ஜோக்குகள் சொல்லவோ கேட்கவோ, கரமைதுனம் செய்யவோ சொல்லலாம், அப்படி ஒரு பார்லர் அது.]

ரிசீவர் எடுத்தவர், மறுமுனை  ஆண்குரல் யாரை அனுப்பனும்? என கேட்க, இவர் 25 வயதுள்ள ப்ளாண்ட் கேர்ள் எனக்கு முன்பே தெரியும்,அவளை அனுப்பு என சொல்ல, வேறொறு பெண் நர்ஸ் உடையில் உள்ளே வருகிறாள், இவர்,எடுத்ததும் நான் எதிர்பார்த்தது நீயில்லை,என்னை நீ பார்க்கிறாயா ? என கேடக? அவள் இல்லை, என் முகம் தான் எனக்கு கண்ணாடியில் தெரிகிறது என சொல்ல, இவர் மன்னிக்கவும்,என்று வெளியேறியவர்.

அடுத்த 4ஆம் எண் அறைக்குள் நுழைய அங்கே ஹோட்டல் என எழுதியிருக்கிறது. அங்கே போய் இவர் ரிசீவர் எடுத்தவுடன் சில நொடிகளில் இவரின் மனைவி ஜெனி சிரித்துக்கொண்டே இவரை வரவேற்று ஆசை வார்த்தைகள் பேசுகிறாள் ,தான் அமரலாமா? என அனுமதி கேட்கிறாள், தனக்கு மிகவும் அசதியாய் உள்ளது என்கிறாள். இவர் என்ன சொன்னாலும் கேட்கத் தயார் என்கிறாள். உடையை அவிழ்க்கப்போனவளை இவர் வேண்டாம் என நிறுத்த திகைக்கிறாள்.?!!!

1. என்ன கொடுமை பாருங்கள்? 4வருடங்கள் கழித்து ஒருவர் தன் மனைவியை இப்படி ஒரு நவீன விபச்சாரியாய் பார்த்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இனிதான் 80 நிமிட முக்கியமான காட்சிகள் உள்ளன, இது போல படம் எடுக்க முடியுமா?!!! எனக்கேட்க வைக்கும் காட்சியமைப்பும், உணர்வுரீதியான் ட்ரீட்மெண்டுகளும், படத்தின் சுவாரஸ்யத்தை நீங்கள் முழுதும் அனுபவிக்க  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

2.ட்ராவிஸ் தன் மனைவி ஜெனியிடம் தன்னை வெளிப்படுத்தினாரா?

3.மனைவி ஜெனிக்கும் ட்ராவிஸ்கும் அப்படி என்னதான் பிரச்சனை?

4.இவர்களின் பிரிவுக்கு , உண்மையில் யார் மீது தவறு இருக்கிறது?

5.ட்ராவிஸ்,ஜெனி,மகன் ஹண்டர் இணைந்தார்களா?

6.ட்ராவிஸ் எதற்காக பாரீஸ் டெக்ஸாஸ் பாலைவனத்தில் நிலம் வாங்க வேண்டும்?  போன்ற விபரங்களை படத்தின் டிவிடியில் பாருங்கள். படத்தில் ராப்பி முல்லரின் ஒளிப்பதிவை ஒருவர் ஆயுளுக்கும் மறக்க முடியாது, அப்போதைய பராண்டிங்குகளும், ஆடைகளும், நாகரீகமும், நிச்சயம் நல்ல நோஸ்டால்ஜியா இந்த படம். படத்தின் உயிரோட்டமான இசை-ரைகூடர் என்பவரின் கைவண்ணம், வாவ்!!!.மொத்தத்தில் உலக சினிமா காதலர்கள் தவற விடக்கூடாத படம் இது!!
========0000==========
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

======================
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Wim Wenders
Produced by Chris Sievernich, Don Guest, Pascale Dauman, Anatole Dauman
Written by L.M. Kit Carson, Sam Shepard
Starring Harry Dean Stanton, Nastassja Kinski, Hunter Carson
Music by Ry Cooder
Cinematography Robby Müller
Distributed by 20th Century Fox
Release date(s) 19 May 1984 (Cannes premiere)
France: 19 September 1984
USA: 9 November 1984
West Germany: 11 January 1985
Running time 147 minutes
Country United States
Language English
========0000==========
சிறு குறிப்பு:- இந்த படத்தைப்பற்றி கோணங்கள் என்னும் வலைப்பூவில் வெளியான அற்புதமான ஆங்கில பதிவை இங்கே காண்க:-


 ========0000==========

த அபு ட்ரிலஜி-1 பதேர் பாஞ்சாலி[இந்தியா]1955

உலக சினிமாவுக்கு இந்தியாவின்  பங்களிப்பு என்ன? என்ற கேள்விக்கு உடனே  எல்லோரின் நினைவுக்கும் வருவது:- அபு ட்ரிலஜி, அபுவின் முதல் பாகம் - பதேர் பாஞ்சாலி , பதேர் என்றால் சாலை | பாஞ்சாலி என்றால் வங்காள மொழியில் நாட்டுப்புறப்பாட்டு. [சாலையில் கேட்கும் பாட்டு]

எப்படி திடீரென? சத்யஜித் ரே  ஃப்லிம் மேக்கரானார்? அதுவும் எப்படி கிடைத்தது இந்த உலகப்புகழ்?, உலகின் எல்லா தலைசிறந்த சினிமா இயக்குனரும்,கலை விற்ப்பன்னரும் இவர் படைப்புகளை தேடிப்பார்த்து வியந்து, இதன் சாயலில்லாமல் எங்களால் இனி படம் செய்யமுடியாது என சொன்ன புகழ், பிறந்த பயனை அவர் அன்றே , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டார்!!!.என்றால் மிகையல்ல.

இந்தியராகிய நமக்கு தான், ஃபாரினர் ஒரு பண்டம் உசத்தின்னு சொல்லிவிட்டால், உடனே அது உசத்தின்னு சொல்லி நாமும் கோஷம் போடுவோமில்லையா!!  எனவே நானும், சின்ன வயதில் எத்தனையோ முறை  ஞாயிறு மதியம் தேசிய ஒளிபரப்பில் போட்ட , ஆர்ட் ஃப்லிம் என சகலரும் ஒதுக்கிய இந்த படத்தை தரவிறக்கி மிகவும்  பொறுமையுடன் பார்க்க ஆரம்பித்தேன். பதேர் பாஞ்சாலி முடிந்த பின்னர் அபரஜிதோ ,அது முடித்து அபுர் சன்சார் என இந்த படங்களை ஒரு பிரமிப்புடனான உந்துதலுடன் பார்க்க ஆரம்பித்தேன், ஆம்!!! சோறு தண்ணியே இல்லாமல்.
கருப்பு வெள்ளை+35 எம் எம், இதை பார்க்க  சிறிது பழக்கம் இருந்தால் போதும், வைட் ஸ்க்ரீன் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு 35 எம் எம் பிடிக்குமா? !!! இதை நிவர்த்தி செய்ய மீடியா ப்ளேயரில் வைட்ஸ்க்ரீன் ஸ்ட்ரெட்ச் செய்தேன் , அட ரம்மியம், என்ன சொல்லுவது? கலக்கல்.

அப்போது வெறும் 1.5 லட்சம் ரூபாயில் இப்படி ஓர் படைப்பா? இந்த ட்ரைலாஜிக்காக சத்யஜித் ரே அவர்கள் செலவிட்டது 1950-59 வரை ஒன்பது வருடங்கள்,வேறெந்த படங்களைப்பற்றியும் சிந்திக்காமல்  காலம் சென்ற ஓர் கல்கத்தா வாழ்ந்த ஏழை எழுத்தாளர் பிபூதிபூஷன் பண்டோபத்யாய் அவர்கள் எழுதிய பதேர் பாஞ்சாலி என்னும் சுயசரிதம் கலந்த புதினத்தை செதுக்கி படமாக்குவதிலேயே கழித்தார். இந்த படத்துக்கென அவர் ஒழுங்கான திரைக்கதை வடிவத்தை அமைத்துக்கொண்டதில்லையாம்,
அவர் மனதில் தோன்றும் அந்த புதினத்தின் பாகங்களையும், அந்த புதினத்தின் பாகங்களுக்கு இவர் ஸ்டோரி போர்டு சித்திரம் போல வரைந்து வைத்ததையும் கொண்டே படப்பிடிப்பை நடத்தியுள்ளார், தொடர்ந்து படமெடுக்க முடியாத பண நெருக்கடியும் இவரை வாட்ட.கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்தார். ஐந்து வருடத்தில் முதல் படம் ஒரு வழியாக முடிந்தது.

கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று . இவர் படத்தில் நடித்த அத்தனை பேரும் அமெச்சூர் நடிகர்களே. இவர் பதேர்பாஞ்சாலியில் உபயோகித்த உத்திகள் இன்றளவில் புகழ்பெற்ற இயக்குனர்களால் கையாளப்பட்டு வருகின்றன. அதில் பணிசெய்த கேமராமேன்  உட்பட  அனைவரும் புதுமுகங்களே! [ ஒரு சோற்றுப்பதமாக சிறுமி துர்கா பெரிய பானையிலிருந்து பூனைக்குட்டிகளை வெளியே தூக்குவாள்,அதில் பானையின் வாய் வழியே துர்காவின் முகத்தை பார்க்கலாம்,இதை தான் பின்னர் உலக சினிமா இயக்குனர்கள் இன்று வரை பின்பற்றி வார்ட்ரோபினுள் கேமிரா வைத்து அது வழியே நடிகரை பார்ப்பதுபோல் காட்சி வைக்கின்றனர்]


இந்த படம் மட்டுமல்ல!!! சத்யஜித்ரேயின் மொத்த படைப்புகளையும் மெர்ச்சண்ட் ஐவரி ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் நிறுவனத்தார். தேடித்தேடி ஆவண காப்பு செய்துவருகின்றனராம். அவருக்கு கிடைக்காத பெருமையே இல்லை எனலாம், இவர் வாங்காத விருது! என இருந்தால் இனி அறிமுகம் செய்தால் தான் உண்டு போலும் , நாம் ஒதுக்கி தள்ளிய இந்த படைப்பு நியூயார்க்கில்   8 மாதம் ஓடியுள்ளது. ஏன்? இப்படி ஒரு வெற்றி?, உலக சினிமாவில் ஆமை வேகம் தான் உசத்தியா?  ரே,  அப்படி என்ன அவர் சாதித்தார்?

நன்கு பாருங்கள் மக்களே!!! இந்த மனிதர் சினிமா எடுக்கவில்லை,ஒரு சாமானியனின் வாழ்க்கையை  எதோ நாம் பக்கத்து வீட்டில் குடியிருந்தபடி சிரிப்புடனும், ஆசையுடனும், கோபத்துடனும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார். படத்தில் யாரும் நடிப்பை தர தரவென பொழியவில்லை, பிழிய வில்லை, ரே அவர்களை நோக்கி இதுவாயிரு!!! என சொன்னபடி  அவர்கள் அதுவாய் மாறியுள்ளனர். இப்படித்தான்  சாத்தியமாயிற்று இந்த வெற்றி!!! ரேயை பற்றி படிக்க இணையத்தில் மிக அதிகம் உண்டு, எழுதி மாளாது, பின் வரும் பதிவில் மீதம் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்.

50களில் மேடை நாடகத்தனமான அரங்கங்களமைத்து, இசையும் பாடல்களும் படத்தில் திணிக்கப்பட்டு, நடிகர்கள் வானத்தையும், சுவற்றையும் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசும் பராசக்தி போன்ற படங்கள் அதிகம் எடுக்கப்பட்ட காலத்தில் மேற்கே இப்படி ஒரு ரியாலிச முயற்சி,ரேவுக்கு தான் என்ன ஒரு துணிச்சல்?

படத்தின் கதை:-

1920 களின் வங்காளத்தின் குக்கிராமம், அவ்வூரில் இரண்டே பிரிவினர், 1.ஏழை , 2.பணக்காரர், மூன்று தலைமுறையாக முன்னோர் வாழ்ந்த ஓட்டு வீடு பாழடைந்திருக்க, அதை சரிசெய்யக் காசில்லாமல், எந்த வேலைக்கு போனாலும் தன் சம்பளத்தை கொடு, என கேட்க திராணியில்லாத ஏழை பிராமணன் - ஹரிஹரன். [கனு பேனர்ஜி], பூஜாரியாகவும் , பிராமணார்த்தம் சாப்பிட்டும், ஓய்வு நேரத்தில் வங்காள கவிதைகள்,கதைகள் புணைந்தும் கூட  துக்கானி லேது!!! அதிர்ஷ்டகட்டை.

இவரின் மிகப்பொறுப்பான, கீழ்படிதலுள்ள அழகிய மனைவி சர்ப்பஜெயா [கருணா பேனர்ஜி] அப்படி ஒரு பதிவிரதை, கர்ப்பிணி வேறு, இவர்களின் அழகிய பெண்குழந்தை துர்கா [உமா தாஸ்குப்தா] பெற்றொருக்கு பயந்தவள், இருந்தும் சிறு வயதினுக்கே உரிய மிகுந்த சேட்டைகளுண்டு,

சுட்டிப்பெண் துர்காவுக்கு கொள்ளை பிரியம் யார் தெரியுமா? இவளின் விதவை அத்தைப்பாட்டி-இந்திர் [சுனிபலா தேவி ] தன் கூன்போட்ட முதுகோடே தன் வேலைகளை தானே செய்துகொள்ளும் ஒரு 80 வயது ஜென்மம். பாட்டி தனியே தன் எதிர் குடிசையில் சமைத்து சாப்பிட்டும் வருகிறாள். ஆசையாய் ஒரு மாங்கன்றையும் ஊன்றி வளர்க்கிறாள். எந்நேரமும் துர்கா வளர்ப்பு நாயோடும் பூனைக்குட்டிகளோடும் விளையாடுகிறாள்.

துர்கா,பாட்டியின் மூத்த மருமகள், ஹரிஹரணிடமிருந்து ஏமாற்றி பிடுங்கிய தோப்பில் இருந்து அவ்வப்போது கொய்யாக்களும், மாம்பழங்களும் எடுத்து வந்து உணவுக்கு கஷ்டப்படும் பாட்டிக்கு தருகிறாள், இருவரும் அப்படி ஓர் அன்பினை பொழிகின்றனர். இருட்டிய பின்னர் , எண்ணெய் விளக்கின் ஒளியில் பல் போன பாட்டி சொல்லும் பேய்க்கதைகள் துர்காவுக்கு உயிர். [ஒரு காட்சியில் கதை சொல்லும் பாட்டியின் நிழலை ரே அருமையாய் கையகப்படுத்தியிருப்பார்] பாட்டி மாங்கன்றும் துர்காவுடன் சேர்ந்து வளர, அதற்கு தான் தாகத்துக்கு நீர் அருந்தியது போக  செடிக்கும் வார்க்கிறாள்.


ஏனோ ? துர்காவின் அம்மா சர்ப்பஜெயா பாட்டியை ஏற்றுக் கொள்ளவே யில்லை, கூடுதல் சுமையென்றோ? பாட்டி அவ்வப்போது சர்ப்ப ஜெயாவின் சமையலறை சென்று மிளகாயும், தளிகை சாமான்களும் எடுத்து செல்வதாலோ? இருக்கும்!!!! இருக்கும். ஒரு நாள் கோபமிகுதியால் சர்ப்பஜெயா பாட்டியை ஏச, ரோஷம் கொண்ட பாட்டி தன் பழைய நைந்த பாயுடனும்,நெளிந்த சொம்போடும் வெளியேறி தெருவில் போய் வசிக்கிறாள்.

அபு[எ]அபராஜிதன் ஜனனம்:-
இப்போது சர்ப்ப ஜெயாவுக்கு பிரசவ வலி கண்டு அழகிய  ஆண்குழந்தையும் பிறக்கிறது, துர்கா எங்கிருந்தோ பாட்டியயும் அழைத்து வருகிறாள். ஹரிஹரனுக்கு மூன்று மாதமாக சம்பளபாக்கி 24 ரூபாய் வரவில்லை, நிலசுவாந்தாரரிடம் தன் சம்பளபாக்கியை கேட்கவும் திராணி இல்லை, சர்ப்பஜெயா உறவினரிடம் 5ரூபாய் கடன் வாங்கி செலவுகளை சமாளிக்கிறாள். பாட்டி தன் நைந்த கயிறுகளை சேர்த்து அழகாய் தொட்டில் செய்து பேரனை கிடத்தி,ராசகுமாரனாக பாவித்து அழகிய தெம்மாங்கு பாடல்களை பாடுகிறாள்.

சர்ப்பஜெயாவும் ஹரிஹரணும்  வரப்போகும் அபுவின் பிறந்தநாளை எப்படியாவது சிறப்பாய் கொண்டாட முயற்சிக்கின்றனர். இதற்கிடையே ஹரிஹரனுக்கு வேறொரு நிலசுவாந்தாரரிடம் பூஜாரி வேலை கிடைக்கிறது. செலவுகளை இழுத்துபிடித்து சமாளிக்கின்றனர், ஹரிஹரணுக்கு புகையிலை போட்டு ஹுக்கா இழுக்கும் பழக்கமுள்ளது, அவர் ஹுக்கா பிடித்துக்கொண்டே இரவில் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் கவிதைகள்,கதைகள் வடித்தாலும் , படிக்கத்தான் ஆளில்லை!!!மனைவி இவர் திருமணத்துக்கு முன்பிருந்த பனாரஸிலேயே போய் ஈமைச்சடங்கு புரோகிதம் செய்யலாமே என அறிவுறுத்த, அவர் முன்னோரின் வீடு இதை புறக்கணிக்கக்கூடாது,பணம் சேரும்,அப்போது சீரமைப்போம் என்கிறார்.


அபு வளர்தல்:-

இப்போது துர்கா பதின்ம வயதில்அடியெடுக்க,இவளின் அப்பா அம்மாவுக்கு வீட்டை பழுதுபார்க்க வேண்டிய செலவு இருப்பதால்,இவளின் திருமணத்தை பற்றி அவ்வளவாய் யோசிக்கவில்லை, அபுவுக்கு மூன்று வயது,பெண்கள் படித்து என்ன ஆகப்போகிறதென்று யோசித்தோ?பெண்கல்வி அங்கே புழக்கத்தில் இல்லாததாலோ அபு மட்டும் சில பர்லாங் தூரம் கடந்துபோய்,

ஒரு மளிகைகடையுடன் பிராமணர் நடத்தும் தரைப்பள்ளிக்கூடத்தில் படிக்கிறான், அங்கே படிப்பை விட பிராமண உபாத்தியாயர் செய்யும் கொணஷ்டையிலேயே இவன் கவனம் போகிறது, அவர் சதா இலக்கியத்தையும் , நாடகத்தையும் பற்றியுமே பேசுகிறார். இடையில் வியாபாரமும், உப்பில் சொருகப்பட்ட குச்சி கொண்டு பிள்ளகளுக்கு அடியும் பலே,பலே!!! [வேடிக்கையாக ஒருவர் தலைக்கு எண்ணெயை ஓஸி வாங்கி தேய்த்துக்கொண்டும் செல்கிறார்]

அபுவும் துர்காவும் தாயும் பிள்ளையும்  போல அப்படி ஒரு அன்பு, அபுவுக்கு  குளிப்பாட்டுதல், சோறூட்டுதல், தலைவாருதல், உடையணிவித்தல் என தாயாய் எல்லா பணிவிடையையும் செய்கிறாள் துர்கா, இருந்தும் அவளின் பொம்மை பெட்டியை மட்டும் அவன் தொட்டால் தீர்ந்தான், அடிதான். அதில் அவளுக்கு பிடித்தமான, சோவிகள், பாசிமணிகள், சிப்பிகள், புளியங்கொட்டை என எழைகளின் விளையாட்டு சாமான்கள் இருக்கின்றன.

துர்காவின் சக வயது தோழியுடன் அடிக்கடி விளையாடப் போகிறாள், அவளுக்கு திருமணம் நிச்சயமானது கேட்டு, இவளுக்கும் அந்த  திருமண  ஆசைகள் எழுகின்றன, ஆனால் வீட்டின் ஏழ்மையை உணர்ந்தவள், தனக்கு ஒருபோதும் திருமணம் ஆகாது!!! என உறுதியாய் நம்புகிறாள்.

அத்தைப்பாட்டியின் சாவு:-

இப்போது குளிர்காலமாதலால் இந்திர் பாட்டிக்கு இரவில் மிகவும் குளிர , பழைய நைந்த கோணிப்பையை வட்டமாய் ஓட்டை போட்டு அதில் தலையை நுழைத்துக்கொண்டு சாலவையாக அணிந்து குளிரிலிருந்து தப்புகிறாள். ஹரிஹரன் சம்பளம் வந்ததும் சாலவை வாங்கித்தருவதாய் சொன்னதை நம்பியவள்,ஒருகட்டத்தில் தாளாமல் மூத்த மருமகன் அளித்த பழைய போர்வை ஒன்றை போற்றிக்கொள்ள, சர்ப்பஜெயாவுக்கு வந்த கோபத்தில், போர்வை மட்டுமா அவர்களிடம் கேட்பது? அவர்களிடமே சாப்பாடும், இருப்பிடமும் கேட்டுக்கொள், என விரட்டிவிடுகிறாள்.

அங்கே சென்ற பாட்டிக்கோ ஏமாற்றமே மிச்சம், இங்கேயே மீண்டும் வந்த பாட்டியை சர்ப்பஜெயா மதிக்காமல் போக ரோஷம் கொண்ட பாட்டி கடைசியாய் தண்ணீர் வாங்கி குடிக்கிறாள். பின் வெளியேறியவள் ஒத்தையடிப்பாதையிலேயே அனாதைப்பிணமாய் செத்தும் போகிறாள்.

கரும்புத்தோட்டமும் ரயில் காணுதலும்:-

துர்காவின் பெட்டியிலிருந்து நெற்றிச்சுட்டியை அப்பு எடுத்து அணிந்துகொள்ள, கோபம் கொண்ட துர்கா, அவனை சீண்டி அடிக்கிறாள், அம்மா சர்ப்பஜெயா கன்றுக்குட்டி கட்டவிழ்த்து ஓடிவிட்டது என அதை தேடச் சொல்ல, துர்காவும், அப்புவும் தொலைதூரம் கன்றுக்குட்டியை தேடிப்போகின்றனர்.வழியில் கரும்பு ஒடித்து தின்கின்றனர். மின்சாரம் கொண்டு செல்லும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள் தென்பட, அதில் வரும் வினோதமான ஒலியை கேட்கின்றனர்.

தூரத்தில் இப்போது கூஎன சத்தம் கேட்க இவர்கள் என்னவென அங்கே இருப்பு பாதை நோக்கி செல்லும் முன்னரே ரயில் புகையை கக்கி கடந்து சென்றுவிடுகிறது. இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் வழியில் கன்றுக்குட்டியை அழைத்துக்கொண்டு, அனாதைப் பிணமான அத்தைப்பாட்டியையும் பார்த்து அழுதபடி , எழுப்ப முயன்று தோற்கின்றனர். இவர்கள் நினைவு தெரிந்து பார்த்த முதல் சாவு, நெஞ்சில் தீராத வடுவாய் பதிகிறது.இப்போது பாட்டியின் மாங்கன்றுக்கு அப்புவின் வயதும், உயரமும் இருக்கும்,ஆனால் நீர் விடத்தான் ஆளில்லை.

மிட்டாய் காரர் பின் செல்லல்:- 
மாதங்கள் உருண்டோட  , இவர்களின் பாழும் வீட்டிற்கும் எப்போதும் வரும் ஒரு மிட்டாய் வியாபாரி, ஒரு மூங்கில் கம்பில் இருபுறமும் பானைகளை கயிற்றில் கட்டிக்கொண்டு, அதில் பால் கோவா, பால் பேடா, ரசகுல்லா, குலோப்ஜாமுன்,என எச்சில் ஊறவைக்கும் பண்டங்களை சத்தம் போட்டு விற்க, துர்கா எப்போதும் அப்பாவிடம் காசு வாங்க தம்பியையே உபயோகிப்பாள், அவன் மிகுந்த செல்லமாதலால் எப்படியும் காசு பெயர்ந்துவிடும், இப்போது அம்மாவின் கண்டிப்பால் அப்பா பணம் தரத் தயங்க, இருவரும் மிட்டாய்க்காரரின் பின்னே போகின்றனர்,செல்ல நாயும் செல்கிறது.

அங்கே அவர் இவர்களின் உறவினர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவர்கள் தின்பண்டம் நிறைய வாங்கியும் ஒருதலைபட்சமாக இக்குழந்தைகளுக்கு தரக்கூடாது என கட்டளை இடுகின்றனர். அங்கே இவளின் உறவினர் பெண் ஒரு அழகிய பாசிமாலையை கோர்க்கிறாள், அதை பார்த்த துர்கா, அதை பற்றி விசாரிக்கிறாள். அம்மாவின் கண்டிப்பிருந்தும் இவளுக்கு ஒரு பால் பேடாவை யாரும் பார்க்காவண்ணம் இவளின் தோழி பின்னால் வந்து ஊட்டிச்செல்கிறாள் [குழந்தைகள்,குழந்தைகள் தான்,மிக அருமையான காட்சியது!]

பாசிமாலை திருட்டு:-
இப்போது சர்ப்பஜெயாவின் மூத்த ஓரகத்தி, இவள் குடிசைக்குள் தடாலென புகுந்து துர்காவின் விளையாட்டு சாமான்கள்  அடங்கிய பெட்டியை அற்பத்தனமாய் வெளியே எடுத்துவந்து சோதிக்கிறாள், அதைக் கொட்டி தேட, இவள் தேடி வந்தது தென்படவில்லை, அவமானத்திலும் கோபத்திலும் தவித்தவள், எங்கே துர்கா? அவள் என் மகளின் பாசிமாலையை திருடிவிட்டாள், அவள் தான் அதை அதை கடைசியாய் விசாரித்தாள், என்கிறாள்.

அந்நேரம் பார்த்து துர்கா திருட்டு கொய்யாக்களுடன் வீட்டுக்கு வர,அதை பறித்து கீழேபோட்ட உறவினர் பெண், அவளை அடிக்கப்பாய,சர்ப்பஜெயா தடுத்து, குழந்தையென்றால் பழத்துக்கு அலையும் தான், கொய்யாவில் உன் கொய்யா என பெயரா எழுதியுள்ளது? என வக்காலத்து வாங்க, அந்த பெண்மணி உன் வீட்டில் மொத்தம் இரண்டு திருடிகள், ஒன்று நீ,இன்னொன்று உன் மகள், என தூற்றிவிட்டு,என் பணம் 5 ரூபாயை சீக்கிரம் தரும் வழியைப்பார், என வெளியேறியவள். தெருவில் போவோர் வருவோரிடமும் இவளைப்பற்றி சொல்லி ஏசுகிறாள், சர்ப்பஜெயாவுக்கு வந்தகோபத்தில் துர்காவை அடித்து வெளியேற்றியவள், இருட்டியதும் மனமிறங்கி மகன் அப்புவிடம் சொல்லி திரும்ப வீட்டுக்குள் அழைக்கிறாள்.

இரவு ஹரிஹரன் 3மாத சம்பள பாக்கி 24 ரூபாயுடன் வருகிறார்.இப்போது இருவருக்கும் வீட்டை எப்படியாவது பழுது பார்க்கவேண்டும், இல்லை என்றால் வரும் மழைக்காலத்தை சமாளிப்பது கடினம், என்று சொல்ல, ஹரிஹரன் பக்கத்து நகரத்தில் வேலை தேடிப்போகிறேன் என சொல்கிறார், கண்டிப்பாக வேலை கிடைக்கும், கூலியும் நன்றாயிருக்கும், என ஆறுதல் சொல்கிறார். காலையில் பயணத்துக்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

பயாஸ்கோப்பு காணுதல்:-

இப்போது ஊருக்குள் ஒரு பயாஸ்கோப்பு காட்டுபவர் வந்திருக்க, அவரிடம் பிள்ளைகள் தேனைக்கண்ட ஈயைப்போல மொய்க்கின்றனர்,துர்காவும் தம்பி அபுவிடம் ஊருக்கு செல்லும் அப்பாவிடம் காசு கேட்கச்சொல்ல, அவரும் தருகிறார், தன் பிள்ளைகள், சென்னையையும், டில்லியையும், ஆக்ராவையும்,
ஜெய்பூரையும்   பயாஸ்கோப்பில் பார்த்து மகிழ்வதை  கண்டவர் புதிய ஊருக்கு தன் கட்டுசாதத்துடன் செல்கிறார்.


துர்காவின் தோழி திருமணம்:-

இப்போது ஊரே திரண்டு,யூனிபாரம் போட்டவர்கள் மேளம் தாளம்,ஆல்டோ வகை சாக்ஸபோன் வாசிக்க, கிலோக்கணக்காண கொழுத்த மீன்களை  ஒருவர் பெரிய அரிவாள்மனையில் நறுக்க, காயகறிகள் ஒருவர் நறுக்க, விமரிசையாய் துர்காவின் தோழி திருமணம் நடந்தேறுகிறது, இப்போது துர்காவின் ஆசைகள் பெருக்கெடுக்கிறது, அவளின் திருமணம் போல தன் திருமணம் நடந்தேறுமா? என்னும் எண்ணத்தை துர்கா தன் கண்களாலேயே நயமாய் வெளிப்படுத்துகிறாள். வாரம் ஒன்று உருண்டோட,துர்காவின் தந்தை வேறு நகரத்துக்கு போனவர் அங்கேயும் வேலை சரிவர கிடைக்கவில்லை,என கடிதம் எழுதுகிறார். வீட்டில் வாங்கிப்போட்ட மளிகை சாமான்கள் ரொம்ப நாள் காணாது!!!

பசுவை கறந்து தரும் இடைச்சி இவளிடம் பால் வற்றப்போகிறது, பசுவுக்கும் கொஞ்சம் தீனிகாட்டு என்கிறார், துர்கா பூனைக்கு பாலுக்கு பதில் நீர் மட்டும் வைக்கிறாள். இப்போது அழகாக விரதம் மற்றும் பூஜை முறைகளை துர்கா அம்மாவுக்கு பயந்து செய்யத்துவங்குகிறாள். 1 மாதம் உருண்டோட, துர்காவின் தந்தை கடிதத்தில் வேலை கிடைத்துவிட்டது , என்றும் விரைவில் ஊருக்கு வருகிறேன் என்கிறார்.

வீட்டில் இப்போது குந்துமணி அரிசி இல்லை என்பதை சர்ப்பஜெயாவின் ஓரகத்தி கண்டுவிட்டு, இவளை உரிமையுடன் கோபிக்கிறாள்,[ரே நேராக காட்சிக்கு போய்விடுகிறார், நீட்டி முழக்குவதில்லை]  என்னை அந்நியமாய் நினைக்காதே என்றவள், கையில் ரூபாயை திணிக்கிறாள், இவள் அழுதவள் மறுக்கிறாள், அதை கீழே போட்டுவிட்டு அவள் செல்கிறாள்.இப்போது அவள் உதவ வந்தும் ரோஷத்தால் சர்ப்பஜெயா மறுக்கிறாள்.கணவனின் வரவைக்கூறி  இப்போது ஒரு அஞ்சல் அட்டை வர அது இவளுக்கு மிக ஆறுதலாயிருக்கிறது.


பேய்மழைக்காலம்:-

வங்காளம் என்றாலே மழைக்கும் புயலுக்கும் பேர்போனதாயிற்றே!!! பேய்  மழை இங்கே விளாசி எடுக்கிறது, சிறுமி துர்கா மழையில் நனையும் ஆசையில் அபுவையும் அழைத்துக்கொண்டு  பெரிய புளிய மரத்தடிக்கு போகிறாள், அபு அங்கேயே குளிரில் நடுங்கி  நிற்க, இவள் துள்ளி குதித்து ஆசைதீர நனைகிறாள், தன் வயதின் எல்லா ஆசைகளும் பூர்த்தி அடைந்ததாய் உற்சாகம் கொண்டவள், வீடு திரும்ப, 4 நாட்கள் கடும் ஜுரம் வந்து படுத்த படுக்கையாகிறாள்.

இவளை சோதித்த மருத்துவர்,ஜன்னி கண்டுள்ளது, இன்னொரு முறை நனையலாகாது என்கிறார். இரவும் பேய்மழை,இவர்கள் வீட்டுக்கோ கதவு சன்னலில்லை, சாக்குப்பைதான். அதுவும் காற்றில் பிய்த்துக்கொள்ள. ஒற்றை எண்ணெய் விளக்கும் அணையப்போக,இவள் சாக்குப்பையை கட்டும்போதே துர்கா எதோ மரண பயத்தில் அழைத்து, குழந்தை போல அம்மாவின் அரவணைப்பை கடைசியாய் வேண்டுபவள் போல அம்மா என அணத்தி கைகளை தூக்குகிறாள், சர்ப்பஜெயா எதோ விபரீதம் என உணர்ந்தவள்,இவளை இறுக்க அணைத்து தேற்றுகிறாள். குழந்தை துர்க்கா அப்படியே உயிரையும் விட்டுவிடுகிறாள். விரைவில் வருவதாய் கடிதம் போட்ட ஹரிஹரன், இவர்களுக்காக பக்கத்து ஊர் சந்தையில் ஆசையாய் பொருட்களும் துணிமணிகளும் வாங்குகையிலேயே  இங்கே துர்காவின் சடங்குகள் முற்றுபெற்றிருக்கிறது.


புத்திர சோகம்:-

சோறு தண்ணீரில்லாமல் அழுது வீங்கிய கண்களுடனும்,கலங்கிய நெஞ்சமுடனும் பிள்ளைக்கு உணவுக்கு கீரை ஆய்ந்து கொண்டிருந்த சர்ப்பஜெயாவுக்கு ஓரகத்தி விட்டிலிருந்து ஒரு சிறுமி காய்கறிகள் கொண்டு வந்து தருகிறாள். மழை செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமில்லை, இந்த பாழடைந்த வீட்டை இன்னமும் சிதிலமாக்கிவிட்டது.

பின்னாலேயே துர்கா,துர்கா, அபு!!! என அழைத்தபடி ஹரிஹரன் வந்துவிட, இவள் எதுவும் பேசாமல் அவருக்கு வேண்டிய கூஜா, தண்ணீர், மேல் துண்டு, புகையிலை ஹுக்கா எடுத்து  வைக்கிறாள், முகத்தை மூடி முக்காடும் இட்டுள்ளாள். இவரின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவேயில்லை, அவரே தான் வாங்கிவந்த சாமான்களை ஒவ்வொன்றாய் ஆசையுடன் காட்டுகிறார். சப்பாத்திக்குழவியும், மனையும். மகாலட்சுமி படமும் இவளுக்கு. துர்காவுக்கு பனாரஸ் புடவை என ஆசையாய் காட்ட, சர்ப்பஜெயா பொங்கி வீரிட்டு அழுகிறாள்.

ஊரை ,வீட்டை புறக்கணித்தல்:-

இப்போது மிகுந்த மன விரக்தியில் சொந்த ஊரை, முன்னோர் வீட்டை, துறப்பதென்ற முடிவில், ஹரிஹரன் தன் கவிதைகளை, கதைகளை, தூசுதட்டி, தட்டுமுட்டு சாமான்களை, ஏறக்கட்டி எடுத்து வைக்கிறார் .ஊரார் சிலர் ஒன்று கூடி இவர் முன் அமர்ந்து ஊரைவிட்டு போவது நல்லாவா இருக்கு? நாங்கலெல்லாம் இல்லை?மூன்று தலைமுறையாக மனிதர்கள் வாழந்த வீடு, என சொல்ல, இவர் போதும் இந்த வீட்டை புறக்கணிப்பதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை,சதா ஆசைப்பெண் துர்காவின் முகத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் இந்த வீடு.போதும் !!! என்கிறார். எப்போதும் அடுத்தவரின் கையை எதிர்பார்க்கும் வாழ்வு, வாழ்வா? என்கிறார்.

உள்ளே பரணில் எதோ எடுக்க ஏறிய அப்பு, கொட்டாங்குச்சியை எடுக்க அதில் இவனின் உறவுப்பெண்ணின் பாசிமாலை இருக்க, திகைக்கிறான்,உயிரினும் மேலான அக்கா தன்னிடமும் சிலவற்றை மறைத்துள்ளாள். என நினைத்தவன், இறந்தபின்னர்கூட அவளுக்கு அவப்பெயர் வேண்டாம் என நினைத்து ஓட்டை ஜன்னல் வழியே குதித்தவன், அந்த பாசிமணியை தேங்கிய நீரில் எறிகிறான்., இப்போது பரம திருப்தி அபுவின் முகத்தில்.

கவலை தோய்ந்த மூன்று முகங்களும் கட்டை மாட்டு வண்டியில் கடையாணி ஓசையுடன்  செல்ல , இதுதான் சாக்கென்று ஒரு நீளமான பாம்பு இவர்கள் வீட்டுக்குள் மெல்ல நுழைவதையும் ரே காட்டத்தவறவில்லை, பண்டிட் ரவிஷங்கரின் சித்தார் ஓசை, எத்தனையோ சங்கதிகளை நமக்கு இப்போது சொல்லுகிறது. உண்மையிலேயே பாவம் துர்கா!!!.
விரைவில் அபரஜிதோவும் அபுசன்சாரும் எழுதப் பார்க்கிறேன்.
==========000===========
சிறு குறிப்பு:-
இந்த படத்தை பற்றி எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் தளத்தில்  பதேர் பாஞ்சாலி என்னும் பெயரில் எழுதிய விமர்சனம் இன்று   படித்தேன், மிக அழகான விவரணையும்,சிலாகிப்புகளும்.கண்டிப்பாய் சினிமா காதலர்கள் படிக்க வேண்டிய ஒன்று!!!அவரின் பதிவின் சுட்டி
அவரின் பெயரில்லா பழங்கள் என்னும் கட்டுரையை படிக்க சுட்டி

ய சீரியஸ் மேன் (18+)2009

a serious manதங்கள் எல்லா படங்களிலும் நீதிபோதனைக்கதைகள் சொல்லியே பழக்கப்பட்ட கோயன் ப்ரதர்ஸ் இப்போது கையிலெடுத்திருப்பது குடும்ப சப்ஜெக்ட்.அதுவும் ஆச்சாரமான யூத குடும்பத்துள் நிகழும் சுவையான சம்பவங்கள்,கூச்சல்கள் குழப்பங்கள் கலந்த டார்க்ஹ்யூமர் காக்டெய்ல் இது. 

தன் கடமையை சரிவர செய்வதாக நினைத்துக்கொண்டு தன்னை ஒரு சீரியஸ் மேனாக நினைத்து நம்மில் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லா படிச்சாச்சு, அடுத்து?, நல்ல வேலை கிடைச்சாச்சு,அடுத்து?, நல்ல அழகிய பெண்ணாய் பார்த்தாச்சு, அடுத்து?. பழகி திருமணமும் செய்தாச்சு அடுத்து?, குழந்தை குட்டிகளும் ஆயாச்சு,அடுத்து?, உடுக்க நல்ல உடையும், வசிக்க நல்ல வீடும் ,வீட்டாரோடு வெளியில் போய் வர நல்ல காரும்,வீடு நிறைய ஆடம்பரப்பொருட்களும் வாங்கிப்போட்டாச்சு,அடுத்து?

 குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடத்தில் கல்வியும்,மூன்று வேளை நல்ல உணவும் கொடுக்க முடிகிறது, வாராந்திர கேளிக்கைகளும் விருந்தும்  ,நட்பும்  சுற்றமும் குறைவில்லாமல்  உண்டு , அடுத்து? ஊரும் சுற்றமும் சமூகமும் மதிக்கும் படி வாழ நினைத்து சில பல  தியாகங்களும் செய்தாச்சு: இவன் நிஜத்தில் மன நிறைவு பெற்றானா? மனைவி உண்மையிலேயே சுகப்பட்டாளா?குழந்தைகள் உண்மையிலேயே சந்தோஷப்பட்டனரா? உண்மையிலேயே நாமெல்லாம் சீரியஸ் மேன் தானா? 

எத்தனை கஷ்டம் ஒருத்தன் சீரியஸ் மேனாய் வாழ்வது என்பது .மத்தளத்துக்கு இரண்டுபக்கம் தான் அடி . ஆனால் சீரியஸ் மேன்களுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி தான். என்ன அவரவர் வசதிக்கேற்ப அடி கூடும் குறையும்.நாம் அதிகம் கேள்விப்பட்டிராத பழகியிராத மதம் யூதமதம்.அதில் உள்ள சுவையான விஷயங்களை படம் நமக்கு போகிற போக்கில் டார்க்ஹ்யூமர் துணையுடன் விளக்கி விடுகிறது.உலகசினிமா காதலருக்கு மீண்டும் பரவசம் நிச்சயம்.
============================
படத்தின் கதை:- 
 படத்தின் ஆரம்பத்தில் பல நூற்றாண்டுக்கு முன்,ஒர் குளிர் பிரதேசத்தின் இரவில்  ஒரு குடும்பம் காட்டப்பட, அந்த கணவன் மனைவியின் விருந்தினர் என்று ஒரு வயதான ராப்பி (யூத குருமார்) ஒருவரை அழைத்து வர. மனைவி திகைத்து,அவர் இறந்து மூன்று வருடமாகிறது. வந்திருப்பது டிப்புக் (பேய்)  என்றவள். ஒரு கூரிய திருப்புளியை அந்த வயதான ராப்பியின் நெஞ்சில் சொருக. மிகுந்த வலியால் துடித்த அவர் . புலம்பியபடி வெளியே பனிப்பொழிவில் இறங்கி நடக்கிறார். கணவன் மிகவும் பயப்படுகிறான். அந்த மனிதரை நாளை ஊரார் கண்டுபிடித்து நம்மிடம் தான் வருவர்.என சொல்ல. காட்சி மாறுகிறது.

குடும்பத்தலைவனின் கடமை உழைத்துக்கொட்டுவது என்றிருப்பதால், அவனால் உலக மாயைகளை புரிந்து விளங்கி,தெளிவு பெற முடியவில்லை. ஆகவே அவன் பேயை விருந்தினராய் கூட்டி வருகிறான்.ஆனால் குடும்பத்தலைவி என்பவள் மேன்மையான குடும்ப பொறுப்புகளான குழந்தை பெறுதல்,வளர்த்தல்,அன்னமிடுதல் ,சுகம் தருதல் ,பெறுதல் என இருப்பவள், அதனால் தான்  அவளால் மாயைகளை புரிந்து வந்திருப்பது டிப்புக் (பேய்) என கண்டறிந்து திருப்புளியை அதன் நெஞ்சில் சொருகமுடிந்தது. என விளக்க இக்காட்சியை  கோயன் பிரதர்ஸ்படத்தின் ஆரம்பத்தில் வைத்துள்ளனர்.
=================


aseriousmanmoviestill
பிரதான படம் 1967ஆம் ஆண்டு வடக்கு டகோடாவில் துவங்குகிறது, லாரி கோப்னிக் (மைக்கேல் ஸ்டுல்ஹ்பர்க்) யூத மதத்தை சேர்ந்த இளங்கலை இயற்பியல் பேராசிரியர். நேர்மையானவரும் கூட. சமீப காலமாய் இருக்கும் லேசான அயற்சியினாலும் சோர்வினாலும்  முழு உடம்பு பரிசோதனை செய்து கொள்கிறார். அவரை பரிசோதிக்கும் மருத்துவர் செயின் ஸ்மோகராய் இருக்கிறார்,இவருக்கு ஒரு சந்தேகம் , முடிவுகள் தரும் வரை மருத்துவர் உயிருடன் இருப்பாரா?என்று. மனைவி ஜூடித் (சாரி லென்னிக்) ,அக்கால புத்திசாலி அழகி. சமீபத்தில் மனைவியை இழந்த குடும்ப நண்பரான  நடுத்தர வயதுள்ள சை ஏபிள் மேன் (ஃப்ரெட் மெலமெட்)ன் கனிவான பேச்சில் மயங்கி அவர் மீது காதல் வயப்படுகிறாள்.

SeriousManபேராசிரியர் லாரியிடம் அதிரடியாக இதை சொன்னவள்.இருவரின்  புரிதலின் பேரின் கெத் (யூத திருமண சட்ட விவாக ரத்து) மிரட்டி கேட்கிறாள். அதற்கும் இவரைக் கேட்காமல் டிவோர்ஸ் அட்டார்னியிடம் பேசி அப்பாயிண்ட்மெண்டும் வாங்கிவிடுகிறாள். புதிய காதலன் சை ஏபிள் மேன் வீட்டுக்கே வந்து இந்த ஏமாளி மனிதருக்கு ஒயின் பாட்டில் தந்து கட்டிப்பிடி வைத்தியம் செய்து நிதானமாக மனைவியை மற. ஒன்றும் அவசரமில்லை,உன் நிம்மதியும் நட்பும் எனக்கு எப்பொழுதும் தேவை என்கிறார்.

கூடவே பிறந்த பிரச்சனையாக நீரழிவு நோயும் சிறுநீரக கோளாறும்  கொண்ட வேலைவெட்டியில்லாத சகோதரன் ஆர்தர் (ரிச்சர்ட் கைண்ட் ) வேறு. இவர் வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டு விட்டு.முக்கால் வாசி நேரம் இவர் வீட்டு பாத்ரூமிலும் ,தூங்கும் போது  இவரின் கவுச்சிலும் குடிகொள்கிறார்.  அவரின் சொத்தான ஒரு டைரியில் பல ஹீப்ரு எண்களை எழுதி சங்கேத குறியீடுகள் கொண்ட காம்பினேஷன்கள் தயாரிக்கிறார்.அதை டவுனில் இருக்கும் சூதாட்ட விடுதிகள் சென்று பயன்படுத்தி அதிகுறுக்குவழியில் பணம் சம்பாதிக்கிறார்.

இவர்களின் பதின்ம வயது அழகு மகள் சாரா ( ஜெசிக்கா மெக்மேனஸ்) நீளமான மூக்கை சரி செய்ய பணம் சேர்க்கிறாள்,அதற்காக அவ்வப்பொழுது அப்பாவின் பர்சிலிருந்து பணம் திருடுகிறாள்,தினமும் இரவில் வெளியே செல்கிறாள்.சுயநலப்பேயாக அடங்காதவளாக இருக்கிறாள். டேனி(ஆர்ரொன் உல்ஃப்)அக்கா அப்பாவிடம் ஆட்டையைப் போட்ட பணத்தை திருடி கஞ்சா புகைக்கும் பதிமூன்று வயது மாணவன்,சமீபத்தில் பணம் திருடி வாங்கிய பாக்கெட் ரேடியோவில் காதுகேளாதவர் உபயோகப்படுத்தும் ஹெட்போன் சொருகி ஹீப்ரூ வகுப்பு நடக்கையிலேயே, மெய்மறந்து ஜெஃப்ஃபெர்சன் ஏரோபிளேன் பாடிய ”சம்படி டு லவ்” என்னும் பாடலைக் கேட்க,கையும் ரேடியோவுமாக மாட்டிக்கொள்கிறான். 

அந்த ரேடியோ உறையில் நேற்று தான் அக்காவிடம் திருடிய 20டாலரை ஒளித்து வைத்திருந்தான். பணத்தோடு ரேடியோவும் தலைமை ஆசிரியரிடம் சிக்கிக்கொள்ள,இவனும் நண்பனும் கள்ளசாவி போட்டு மேசையை திறந்து பார்த்து ஏமாந்து போகின்றனர். வீட்டுக்கு அருகே இருக்கும் கஞ்சா விற்கும் மூத்த குண்டு மாணவன் இவன் பாக்கி 20டாலர் தராததால் தினமும் இவனை அடிக்க வீடுவரை துரத்தி செல்கிறான்.

serious09jpg-47540d3011822b44_large
இவரின் பக்கத்துவீட்டு வேட்டைக்கார முரட்டு ஆளுக்கு யூதர்களே பிடிக்காது,அவனின் மகனை படிப்பை நிரந்தரமாய் நிறுத்திவிட்டு  தினமும் தன்னுடன் காட்டுக்கு அழைத்துப்போய் காட்டெருமை மற்றும் மான் வேட்டையாடி கொண்டு வருகிறான். அப்படிப்பட்ட ஆள்  இவரின் வீட்டு நிலப்பரப்புக்குள்ளும் வந்து புல் தோட்டம் போட்டு பராமரிக்கிறான். இவர் என்ன கேட்டாலும் அடிப்பது போல பேசுகிறான். பூச்சியைப்போல பாரக்கிறான். தன் விவாகரத்து வழக்குக்காக அட்டார்னியிடம் சென்றவர் இந்த வழக்கையும் இணைத்து நடத்துகிறார். ஒருபக்கம் இவரின் சம்பளம் சுறாவிற்கு சோளப்பொறியாக  கரைகிறது.

பேராசிரியர் லாரியின்  மனைவி இந்தமுறையும் இவரைக்கேட்காமலே சை ஏபிள் மேனையும் இவரையும் ஒரு உணவகத்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறாள்.இவளும் அந்த ஆளுடன் உரசிக்கொண்டு உட்கார்கிறாள். சை ஏபிள் மேனும் இவளும் ஒருமித்த குரலில் அன்பாக இவருக்கு கட்டளை இடுகின்றனர். அதாவது மகள் சாராவும் மகன் ஆர்ரோனும் எந்த நிலையிலும் அம்மாவின் புதிய திருமணத்தால் பாதிக்கக்கூடாது. அப்புறம் அவர்களின் பொல்லாத படிப்பு பாழாகிவிடுமாம்.ஆகவே பேராசிரியரும் அவரின் அண்ணனும் ஊருக்கு அருகே இருக்கும் ஒரு வாடகை குறைந்த, நீச்சல் குளம் கொண்ட  மோட்டலில் தங்கிகொண்டு இவர்களிடம் முன்னமே சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வந்து பிள்ளைகளை பார்த்துச் செல்லவேண்டும் என்பதே அது. அந்த ஏமாந்த சோனகிரி பேராசிரியர் லாரி இதற்கும் அரை மனதுடன் சம்மதித்து தன் அண்ணனுடன் மோட்டலுக்கு பெட்டி தூக்குகிறார்.

 இவரின் வகுப்பில் படிக்கும் க்ளைவ் என்னும் தென்கொரிய மாணவன் இயற்பியல் பாடத்தில் ஃபெயிலாகிவிட,இவரை அணுகி இவருக்கு தெரியாமல் ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக இவர் அறியாமல் மேசை மேல் வைத்துவிட்டு அகல்கிறான்.பின்னொரு சமயம் அவர் அவனை கூப்பிட்டு லஞ்சம் குறித்து பேச எத்தனிக்க அவன் தெரியாது என்கிறான். ஆனால் பாஸ் போடசொல்கிறான், அல்லது ரகசிய தேர்வு வைக்க சொல்கிறான்.இவருக்கு குழப்பமாயுள்ளது.லஞ்ச பண கவரை அலுவலக மேசை அறையிலேயே வைக்கிறார். அதைப்பற்றி புகார் சொல்ல எத்தனித்தவருக்கு இவர் மீது புகார் கடிதம் வந்துள்ளது என இவரின் டீன் சொல்லவும் மிகவும் வியர்க்கிறது.    
      
இவரின் கல்லூரியில் இவரின் வேலைக்காலம் முடிவடையும் தருணம் வந்துவிட்டது,இவரின் நேர்மையான அணுகுமுறையாலும் சிறந்த கல்வி போதிக்கும் திறனாலும் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவோம் என நினைத்திருந்தவருக்கு பேரிடியாக சை ஏபிள் மேன் அனானி பெயரில் இவரின் கல்லூரி நிர்வாகத்துக்கு மொட்டை கடிதங்களாக ஹைஃபை ஆங்கிலத்தில்  போடுகிறான்.இவர் ஒரு ஒழுக்கம் கெட்டவர் என்கிறது கடிதங்கள்.தேர்வு கமிட்டி என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழம்புகிறது,இவரை தன்னிலை விளக்கமும் கேட்கிறது. இவருக்கு தான் சிறுவயதில் ஒரே முறை சென்று பார்த்த செக்ஸ் படம் மட்டுமே களங்கமாக இருக்க முடியும் என்கிறார்.
தேர்வுக்கமிட்டியின் உறுப்பினரும் இவரின் நண்பருமான டீன் இவரை ஆறுதல் படுத்துகிறார்.

இரவு மோட்டலில் அண்ணனின் ட்யாலிசைசர் கருவி இயங்கும் சத்தம் கேட்டு எழுந்தவர். அண்ணனிடம் ஏதோ கேட்கப்போக அண்ணன் பொறாமையிலும், சுய பச்சாதாபத்திலும் அறையை விட்டு வெளியேறி கடவுள்  உனக்கு நல்ல கல்வி கொடுத்தார். மணவாழ்கை கொடுத்தார், குழந்தைகள் கொடுத்தார்.வீடும் வேலையும் கொடுத்தார் எனக்கு என்ன கொடுத்தார்? எனக்கு இந்த கொடிய நோயை கொடுத்தார். எனக்கேட்டு பரிகசிக்க.இவர் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்று தூங்க வைக்கிறார். விடியலில் எழுந்தவர் இரவு நாம் தர்க்கம் செய்தோமா?என கேனை போல கேட்கிறார்.மனதுக்குள் தன் அண்ணனுக்கு எப்படியாவது உதவ எண்ணுகிறார். 

 மகனுக்கு பதிமூன்று வயது நடப்பதால் யூத வழக்கப்படி அவனுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்க வேண்டும்,அதற்கு அவரின் மகன் புனித நூலான டோராஹ்விலிருந்து தினமும் வேத வாசகங்களை குறுக்குவழியில் கொலம்பியா ரெக்கார்டு கேட்டபடி மனனம் செய்கிறான்.இப்போது இவர் மோட்டலிலிருந்து கல்லூரி சென்றவர்,வழியில் அந்த கொரிய மாணவன் சைக்கிளில் போவதை பார்த்து கத்த, இவரின் கார் மேல் இன்னொருவன் காரை மோத சிறிய விபத்து நேர்கிறது. கடும் மன உளைச்சலில் அலுவலகத்துக்குள் நுழைந்தவர் , டெலிபோனில் இவர் மகன் டெலி மார்கெடிங்கில் தவணை முறையில் இவர் பெயர் தந்து வாங்கிய கொலம்பியா ரெக்கார்டுகள் கம்பெனி மேனேஜர், முதல் தவணை இன்னும் வரவில்லை.என மிரட்டல் விட. இவர் தான் ஆர்டர் செய்யவில்லை, தான் அந்த விலாசத்தில் இல்லை என ஒருவழியாக போனை துண்டிக்கிறார். இந்த காட்சி செம காமெடியாயிருக்கும்.(ஃபார்கோ படம் பார்த்திருந்தால் புரியும், அதிலும் இதே போல ஒரு மிரட்டல் காட்சி உண்டு)

இப்போது புதிய தலைவலியாக இவரின் அண்ணன் ஆர்தரை இரு டிடக்டிவ்கள் வீட்டுக்கே வந்து எச்சரித்து புகார் செய்கின்றனர். அவர் புதிய குறியீடுகளை பயன்படுத்தி கிளப்களில் சூதாடுவதாயும் இன்னொரு முறை மாட்டினால் சிறை என்றும் சொல்லிவிட்டு அகல்கின்றனர்.இவர் அண்ணனை கோபமாய் கேட்க அதில் இவரது மகனும் மகளும் சம்பந்தபட்டிருப்பது தெரிகிறது.

இவரது வாழ்வில் வசந்தமாக இவருக்கு விபத்து நடந்த அதே தினம் சை ஏபிள் மேனும் கார் விபத்தில் இறந்துவிட,அவருக்கு ஏற்கனவே நிறைய கடன் இருந்தமையால் எல்லா சொத்துக்களும்,இன்சூரன்ஸும் கடனுக்கே போகிறது. அந்த புதிய காதலனின் ஈமைச்சடங்கையும் கடன் வாங்கியாவது இவரையே பார்க்க சொல்கிறது யூத மதகுரு பீடம்.மனதால் நொந்து போன இவர் மதத்தினாலும் நோகிறார். தன் பிரச்சனைக்கு முடிவாக முதிய ராபியிடம் அருள்வாக்கு கேட்க சென்றவர் அங்கே அவர் மகனிடம் அருள்வாக்கு கேட்கிறார்.

அந்த இளம் ராப்பி இவரை மனதை தெளிவாக வைத்துக்கொள்ளும் படியும். பரந்த மனப்பானமையை வளர்த்துக்கொள்ளும் படியும் அறிவுறை சொல்கிறார். அன்று மீண்டும் மோட்டலுக்கே சென்று தூங்கியவர். மகன் காலையில் கல்லூரிக்கு மிக்வும் சீரியஸாக போன்செய்ய வீட்டுக்கு போகிறார். அங்கே தன் புதிய காதலனின் இழப்பிற்காக மனைவி சத்தம் போட்டு அழுவதை காண்கிறார். மகன் சை ஏபிள் மேன் செத்துபோனதால் அப்பாவுக்கான இடம் காலியாக உள்ளது எனக்கூறி வீட்டுக்கே வர சொல்ல, இவர் மீண்டும் வீட்டுக்கு பெட்டி தூக்குகிறார். மகன் டீவி ஆண்டெனாவை சரி செய்யச்சொல்லி வழக்கம் போல அப்பாவை ஏவுகிறான்.

serious_wideweb__470x336,0
டிவி ஆண்டெனாவை சரிசெய்ய கூரைஏறியவர் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி அவள் வீட்டு கொல்லையில்  முழு நிர்வாணமாக படுத்து சூரியக்குளியல் எடுத்துக்கொண்டே கஞ்சா புகைப்பதை பார்க்கிறார்.இவருக்கு பூட்டி வைத்த உணர்ச்சிகள் மேலிடுகிறது. அவளின் கணவன் வெளியூர் சென்ற நேரமாக சென்று பேச்சு கொடுத்தவர். அவள் முதலில் மதுவும் கஞ்சாவும் இவருக்கு புகட்டி. இவரின் சபலத்துக்கு தீனியாய் எடுத்ததுமே உடலுறவு வைத்துக்கொள்ள முன்வர , இவர் சுதந்திரமாக அவளுடன் உடலுறவு கொல்கிறார். இவருக்கு மனதின் ஓரத்தில் மனைவியை பழிவாங்கிய திருப்தியும் கிட்டுகிறது.

இப்போது இரண்டாம் முறையாக முதிய ராப்பியை பார்க்க போனவருக்கு முதியவரின் மகன் ராப்பி அருளுரை வழங்குகிறார். ஹெல்ப் மி என வாய்விட்டு இறைவனை கேட்க சொல்லுகிறார். தான் எப்போதும் சொல்லும் ஒரு பல் மருத்துவக்கதையையும் சொல்கிறார். எந்த பிரச்சனையாயிந்தாலும் ஒரு தீர்வு எப்போதும் இருக்கும், ஒரு நாள் அது தீர்ந்தே போகும் என்கிறார். அலுவலகத்தில் மேலும் இவருக்கு பிரச்சனை வலுக்கிறது, இவரது கொரிய மாணவனின் தந்தை வேறு இவரின் வீடு தேடி வந்து மிரட்டுகிறார்.மீண்டும் டெலிபோனில் இவர் மகன் டெலி மார்கெடிங்கில் தவணை முறையில் இவர் பெயர் தந்து வாங்கிய கொலம்பியா ரெக்கார்டுகள் கம்பெனி மேனேஜர் வேறு போன் செய்ய இவர் தான் சீட்டில் இல்லை என்கிறார்.

இப்போது அந்த கொரிய மாணவன் வைத்துவிட்டு போன லஞ்சபணத்தை தன் அண்ணனுக்கு கொடுத்து ,அவரை ஒரு ஏரிக்கு அழைத்துப்போய்,ஒரு துடுப்பு படகில் ஏற்றி, ஆரத்தழுவி விடை கொடுக்க, அங்கே வேட்டைக்கு வந்த பக்கத்து வீட்டு முரட்டு ஆள், அதோ ஒரு யூதன் படகில்,அவனை சுடு,என்று இவர் அண்ணனை சுட்டு தள்ளுகிறான்.இப்போது அப்பாவும் மகனும் இவரை சுட்டு தள்ள இவர் அலறி விழிக்கிறார். இப்போது லாரி கோப்னிக் கனவு கலைந்து எழுகிறார். கோயன் பிரதர்ஸ் போகுமிடமெல்லாம் யூதர்களுக்கு பரிதாபம் தேடவே இந்த காட்சியை வைத்தார் என நினைக்கிறேன். ஒருவேளை 1960களிலும்  யூத வெறுப்பு அடங்காமல் பரவலாக இருந்ததோ என்னவோ?

இப்போது கொரிய மாணவனின் தந்தை நிர்வாகத்திடம் லஞ்சம் பெற்றதாய் புகார் செய்வேன் என்கிறார்.  ஆனால் ல்ஞ்சம் தான் கொடுக்கவில்லை என மழுப்புகிறார். இன்னும் பெரிய சோதனையாக இவரின் அண்ணன் ஆர்தரை டிடெக்டிவ்கள் அவர் ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் கிளப்பில் ஓரினச்சேர்க்கைக்கு சிறுவர்களை பலவந்தப்படுத்திய குற்றத்துக்காக கைது செய்து அழைத்து செல்கின்றனர். இவர் உடனே தன் அட்டார்னி அலுவலகம் செல்கிறார். அங்கு வைத்து தன் வீட்டு நிலப்பிரச்சனை.மற்றும் தன் அண்ணன் ஆர்தருக்கு சிறப்பு கிரிமினல் அட்டார்னிக்கு ஆகும் ஃபீஸ் பற்றி பேசுகிறார். அந்த அட்டார்னி ஃபீஸாக ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கிறார். அப்போது இவரின் வீட்டு நில வழக்கை சர்வே செய்து வந்து புகையும் பைப்புடன் மேசையில் அலட்சிய போக்குடன் வந்து அமர்ந்த கிழ அட்டார்னி ஹார்ட் அட்டாக்கில் அப்படியே நாற்காலியில் இருந்து சரிகிறார்.இதுவும் கலக்கலான காமெடி சீன்.மிஸ் பண்ணாமல் பார்க்கவும்.
 ==================================
முழுக்கதையும் படிக்க நினைப்போர் இக்காணொளியை தாண்டி 
வந்து படிக்கவும்.



==================================
 இவருக்கு எதுவும் சரியாக படவில்லை, இரண்டு ராப்பிகளிடம் அருள்வாக்கு கேட்டவர். மூன்றாவதாய் ஏனும் வயது முதிர்ந்த ராப்பியிடம் அருளுரை வாங்கிவிட தீர்மானித்து அவரின் அலுவலகம் செல்ல,வெளியே இருந்த குண்டு காரியதரிசி,முதிய ராப்பி யாரையும் சந்தித்து ஆசி வழங்குவதில்லை என்றும் அவர் சிறார்கள் பங்கு கொள்ளும் ”பார் மிட்ஸ்வா” (யூத மத சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்படும் ஞானஸ்தானம்)நிகழ்சியில் வென்ற சிறார்களுக்கு பாராட்டும் வெகுமதியும் மட்டுமே வழங்குகிறார். என சொல்கிறாள். இருந்தும் இவர் விடாப்பிடியாக கெஞ்ச உள்ளே சென்று எதோ பேசியவள் ராப்பி பிஸியாக உள்ளார் என பதிலுரைக்கிறாள். இவருக்கு மிகவும் ஏமாற்றமாயிருக்கிறது. 

a-serious-man-475654105அடுத்த வாரமே தன் 13 வயது மகன் டேனியின் பார் மிட்ஸ்வா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவரின் மனைவியும், சமீபத்தில் பெயிலில் வந்த இவரது அண்ணன் ஆர்தரும், இவரின் மகளும் பெருமகிழ்சியுடன் அந்த நிகழ்சியில் கலந்துகொண்டு ஆர்வமாக மகன் ஒப்புவிக்கப்போகும் வேத வாசகத்தை கேட்க ஆவல் கொள்ள, கஞ்சா அடித்து விட்டு கிறக்கத்தில் வந்தவன் யூத குருமார்  டோராஹ் என்னும் பெரிய புனித துணிப் புத்தகத்தில் சுட்டிக் காட்டிய வரிகளை படிக்க கண்ணை கசக்கியவன் பேந்த பேந்த முழிக்கிறான்.

சபையே அமைதியாக, சுதாரித்தவன் கொலம்பியா ரெகார்டில் கேட்டு மனனம் செய்த வாசகத்தை குருட்டாம்போக்கில் அடித்துவிட, அது நிஜமாகவே சரியாய் இருந்து தொலைக்கிறது, இவனுக்கு ஞானஸ்தானம் செய்து கோப்பையும், இஸ்ரேலுக்கு குடியுரிமையும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது, இவன் மீண்டும் தன் 83 ஆம் வயதில் மறுபடியும் ஞானஸ்தானத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறான். நிகழ்ச்சி நட்க்கும் போதே பேராசிரியர் லார்ரியின் மனைவி ஜூடித் இவரிடம் தான் சமீபகாலமாக நடந்துகொண்டவைகளுக்கு தன்னை மன்னிக்குமாறு வேண்டுகிறாள்.

பேராசிரியரின் மகன் இப்போது முதிய ராப்பியிடம் பாராட்டு வாங்க செல்கிறான்,அவனை அழைத்து அமர்ச்சொன்னவர் ஒரு பாடல் வரியை சொல்லி இது என்ன பாடல் என கேட்க. இவன் தான் எப்போதும் ரேடியோவில் விரும்பிகேட்கும் பாடலான ஜெஃப்ஃபெர்சன் ஏரோபிளேன் பாடிய ”சம்படி டு லவ்” என்னும் பாடல் என்று சொல்ல. முதிய ராப்பி இவனிடம் இருந்து பறிக்கப்பட்ட ரேடியோவை திரும்ப தருகிறார். டேனி மிக மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறான்.அந்த ரேடியோவின் உறையிலேயே 20டாலர் தாள் இன்னும் இருப்பதை பார்க்கிறான்.

இப்போது பேராசிரியர் லார்ரி கல்லூரி அலுவலகம் வருகிறார்,அங்கு இவருக்கு இவரின் வழக்குகளை கவனிக்கும் அட்டார்னியின் அலுவலகத்திலிருந்து அண்ணன் ஆர்தரின் வழக்குக்கான கிரிமினல் லாயருக்கு பெரிய தொகைக்கு பில் வர, அதை கண் கொண்டு பார்க்க முடியாமல். இவருக்கு தலை சுற்றுகிறது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவர்  தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய ரெஜிஸ்ட்டர் புத்தகத்தை எடுத்து அவரின் கொரிய மாணவன் க்ளைவின் பெயருக்கு எதிரே F என இருந்ததை ரப்பர் கொண்டு அழித்தவர் C– என்னும் கிரேடை அதில் பென்சில் கொண்டு எழுதுகிறார். இப்போது அந்த லஞ்சப் பணக்கவரை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என எண்ண எத்தனிக்க, இவரின் தேர்வுக்குழு ஆணைய செயலாளர் உள்ளே நுழைந்து இவரிடம் வாழ்த்து சொல்லி, இவரின் வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது என்கிறார். இவருக்கு எதிராய் வந்த அனானி கடிதங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று சொல்லிவிட்டு அகல்கிறார்.

 இவருக்கு அப்பாடா என இருக்கிறது. கடவுள் எவ்வளவு பெரியவர்?. சோதனைகளை தந்தாலும் அதனிடமிருந்து மீளும் வழியையும் தந்து விடுகிறாரே!!! என வியக்க.இவரின் தொலைபேசி மணி அடிக்கிறது. இவர் இரு வாரங்களுக்கு முன் செய்து கொண்ட முழு உடம்பு பரிசோதனையை இவர் மறந்தே இருக்க, எதிர் லைனில் பேசிய அதிகம் சிகரட் பிடிக்கும் மருத்துவர். இவரை மிக அவசரமாக மருத்துவமனைக்கு வர முடியுமா?என கேட்கிறார். இவர் போனில் சொல்ல முடியாதா? என அப்பாவியாய் கேட்க . அவர் சொல்ல முடியாததால் தான் நேரில் அழைக்கிறேன் வெள்று என்கிறார்.

இவரின் மகன் இப்போது மீண்டும் காதில் ஏர்போன் மாட்டி ரேடியோ கேட்க. டோர்னொடோ வருவதால் அபாயமணி அடிக்கப்பட்டு எல்லொருக்கும் பள்ளி விடுமுறை அளிக்கப்படுகிறது. இவன் ரேடியோவின் உறையில் இருந்து 20 டாலரை எடுத்து அந்த கஞ்சா விற்கும் மூத்த மாணவனிடம் தர எத்தனித்து அவனை கூப்பிட. அவன் இப்போது திரும்பாமல் தூரத்தில் சுற்றி அடிக்கும் சுழற்காற்றை வேடிக்கை பார்க்கிறான். டேனியும் இப்போது அதை நன்றாக வேடிக்கை பார்க்கிறான். 
===================================
சீரியஸ் மேன்களுக்கு பிரச்சனைகள் ஓயவே ஓயாது தான் போல என்ன நண்பர்களே சரிதானே?உலகப்போர் திரைப்படங்கள் நீங்கலாக யூதர்களை சினிமாவுக்குள் பார்ப்பது அரிதே.அந்த வகையில்  இது  அசாதாரணமான படம். எப்போதுமே கோயன் பிரதர்ஸ் பார்வையாளர்களை தங்கள் நகைச்சுவை விருந்துக்கு அழைப்பர். அது பார்வையாளர்களுக்கு  புரியவில்லையா? கவலையே படமாட்டார்கள். உதாரணம்:- ஹட்சக்கர் ப்ராக்ஸி, இது ஒரு அட்டர் ஃபெயிலியர் படம், ஆனால் இன்னும் எண்ணற்ற மக்களின் விருப்பத்தேர்வு அது.  அந்த படத்தில் இருந்த மேதாவித்தனம் இதிலும் குறையாமல் உண்டு. இது ஒரு யதார்தமான  அதேசமயம் பரிட்சார்த்தமான உலக சினிமா என்றால் மிகை இல்லை.

படத்தில் லாரி கோப்னிக் ஆக வந்த மைக்கேல் ஸ்டுல்ஹ்பர்க் மிக நன்றாக நடித்திருந்தார். பல காட்சிகளில் நடிகர் டாம் ஹான்க்ஸை பிரதி பலித்தார். இந்த படத்திற்கு  டாம் ஹான்க்ஸையே போட்டிருந்தால் இன்னும் பல பேரை சென்று சேர்ந்திருக்கும்.ஸ்டார் வேல்யூவும் ஒரு படத்துக்கு இன்றியமையாதது தான். ஏனைய நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை நிறைவாய் செய்திருந்தனர்.ஒரே காட்சியில் வரும் குண்டு  ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணையும் சேர்த்து, சிரிப்பு மத்தாப்பு தான் போங்க. ஒளிப்பதிவு, இசையமைப்பு வழக்கம் போல பிக்சர் பெர்ஃபெக்ட்.சபாஷ் டு த டீம்.
=======================================


அடோன்மெண்ட்2007(18+)பிராயச்சித்தம்

அடோன்மெண்ட் என்ற பெயரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மெக்எவான் எழுதிய புதினத்தை தழுவி, 2007 ஆம் ஆண்டு, ஜோ ரைட்டின் இயக்கத்தில், க்ரிஸ்டபர் ஹாம்ப்டனின் திரைக்கதையில் வெளியான நான் லீனியர்- ரொமான்ஸ்,த்ரில்லர் உணர்ச்சி காவியம் இது.

ஒரு படம் பார்வையாளரை , தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பிரமிக்க வைக்க முடியுமென்பது தான் அடிக்கடி நிகழக்கூடியதா? அறவே இல்லை.  நம் வாழ்வின் அயல் சினிமா தேடலில் இது போன்ற படங்கள் எப்போதாவது தான் காணக்கிடைக்கும், படம் முடிந்து பலமணி நேரங்களுக்கு படத்தின் காட்சிகளும் கதாபாத்திரங்களும் நெஞ்சைவிட்டு அகலாது.கேட்ட இசை நம் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.ஆன் அண்ட் ஆன்.

படத்திற்கு போடப்பட்ட அரங்கு பற்றி பேசப்போனால். ஒரு பதிவே போதாது,ஒரு சோற்றுப் பதமாக தொடர்ந்து ஆறு நிமிடம் வருகின்ற டன்கர்க் எவாகுவேஷன் என்னும் இரண்டாம் உலகப்போரின் வரலாற்று சம்பவத்தின் போர்வீரர்களை திரும்ப அழைக்கும் நிகழ்வு அரங்கு,மிக மிக அதிசயம் என்பேன்.

அதில் காணும் ஆளில்லா ராட்டினமும் , கரை தட்டிய கப்பலும் , பழுதடைந்த கார்களும் ,ஒருகாலத்தில் இயங்கிய உல்லாசப் பூங்காவும் ,டாங்கிகளும் போர்ப்படைத் தளவாடங்களும், சிதிலங்களும்,போரின் எச்சங்களும் , மிச்சங்களும் ,அழைத்துப்போக வரும் கப்பலுக்காக ஏக்கத்துடனும் பசியுடனும் காத்திருக்கும் கவலை தோய்ந்த மூன்று லட்சத்து முப்பதாயிரம் படை வீரர்களுமே சாட்சி. (எப்படித்தான் அமைத்தாரோ? எப்படித்தான் இயக்கினாரோ?) கலை இயக்குனரை இதற்காகவே,கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

இந்த படத்தைப்பற்றி படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து விடுங்கள் நண்பர்களே! இது மூன்றே பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட அருமையான திரைக்கதை.”கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்” என்னும் கூற்றை அழுந்தச் சொன்ன படம். பாரபட்சமாக இசைக்கு மட்டும் ஆஸ்கார் வென்ற படத்தின் மயக்கும் இசை சேர்ப்பு உன்னதம், படத்தில் வந்த டைப் ரைட்டரும் நம்மை இசையால் தாலாட்டுகிறது. படத்தை நான்கு பாகங்களாய் பிரிக்கலாம்.

பாகம்-1
1935ன் கோடைக்காலத்தில் , ஊரக இங்கிலாந்தின், உல்லாச பண்ணை வீட்டில், படம் துவங்குகிறது,13வயது ப்ரையானி டால்லீஸ்(சவாய்ர்ஸ் ரொனான்) கவலைகள் என்றால் என்னவென்றே தெரியாத ,செல்வசெழிப்பான குடும்பத்து பிண்ணனி கொண்ட சிறுமி,நாடகங்கள் ,கதைகள் புணைந்து தட்டச்சு செய்து புத்தகமாய் வெளியிடும் கற்பனை வளமும்  ஆக்க திறனும் பெற்றவள்.காணும் எதையும் ஆராயாது ஏற்றுக்கொள்பவள். சமீபத்தில் “The Trials of Arabella”என்னும் கதையை எழுதி நாடகம் போட திட்டமிடுகிறாள்.

அவளின் அக்கா சிசிலியா(கெய்ரா நைட்லி) 20வயது அழகிய இளம் பெண்,கேம்ப்ரிட்ஜில் ஆங்கில இலக்கியம் படிக்கிறாள்.

தன் இருபதுகளில் இருக்கும் இவர்கள் வீட்டு பணிப்பெண்ணின் மகன் ராப்பி (ஜேம்ஸ் மெக்வாய்) கேம்ப்ரிட்ஜில் இளங்கலையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மேற்கொண்டு மருத்துவம் படிக்க விண்ணப்பித்து விட்டு  காத்திருக்கிறான்.

தன் எஜமானர் இளம்பிராயத்திலிருந்தே இவனின் கல்விக்கட்டணத்தை மனமாற ஏற்றுக்கொண்டதால் அவரின் பண்ணையில் கோடைக்கால தோட்ட வேலை செய்து நன்றிக்கடன் தீர்க்கிறான், இவனின் விதவை அம்மாவும் பண்ணை வீட்டில் சமையல் வேலை செய்து நன்றிக்கடன் தீர்க்கிறாள்.

இளம் பிராயம் முதலே இவனும் சிசிலியாவும் விளையாடியும் சண்டைபோட்டும் இருக்கின்றனர். சிசிலியாவின் மனதில் அவன் மேல் காதல் இருக்கிறது, இருந்தும் அவனை பிடிக்காதவள் போலவே நடந்துகொள்கிறாள். நேரம் கிடைக்கையில் அவனை சீண்டி சீறிவிழுந்து சண்டை போடுகிறாள். இவன் சிசிலியாவை சிறுவயது முதலே அறிந்தமையால் வெறுப்புக்கு மாறாக அபார அன்பே மிஞ்சுகிறது. அவளிடம் தன் காதலைச் சொல்ல பொன்னான நேரம் பார்த்து காத்திருக்கிறான்.

இப்போது இவர்களின் பண்ணை வீட்டுக்கு ப்ரையானியின் விவாகரத்தான அத்தையும் அவர்களின் 15வயது மூத்த  மகள் லோலாவும் (ஜூனோ டெம்பிள்), அவளின் இரட்டைப்பிறவி தம்பிகள் ஜாக்சனும், பியெரெட்டும் வருகின்றனர். லோலா பெற்றோரின் பிரிவையும் புதிய இடத்து  சுற்றத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ, இரட்டையர்கள் அப்பா வீட்டுக்கு எப்போ போவோம்? அப்பாவும் அம்மாவும் எப்போது சேர்வார்? என கேட்டு நச்சரித்து லோலாவை அவ்வப்பொழுது அடித்தும் கிள்ளியும்,கடித்தும் வைக்கின்றனர்.லோலா தான் தம்மை அப்பாவிடம் போகவிடாமல் பிடித்து அடைத்து வைப்பதாய் எண்ணுகின்றனர்.

இப்போது சிசிலியாவின் அண்ணன் லியோன்( பேட்ரிக் கென்னடி) கோடையை கழிக்க பண்ணைவீடு வருகிறான், உடன் தன் செல்வசெழிப்பான நண்பன் பால் மார்ஷலையும் கூட்டிவருகிறான், பால் மார்ஷலுக்கு பெரிய சாக்லேட் ஃபேக்டரி உள்ளது, அவர்கள் படைவீரர்களுக்கு சாக்லேட் ரேஷனில் கொடுக்கும் ஒப்பந்தத்தையும் எடுத்துள்ளனர். பால் மார்ஷல் லோலாவின் அழகில் மயங்குகிறான், அவளிடம் ஆசையாய் பேசி சாக்லேட் தந்தே  தன் வழிக்கு கொண்டுவந்தவன் அவளை ருசிக்க நாள் பார்க்கிறான்.ஒருபக்கம் யாருக்கும் தெரியாமல் இந்த இழை ஓடுகிறது.

செல்வந்த நண்பன் வரவை கொண்டாட பண்ணை வீட்டில் சிறப்பு விருந்துக்கு எஜமானர் டால்லீஸ் ஏற்பாடு செய்கிறார். ராப்பியும் அழைக்கப்படுகிறான். சிசிலியாவிடம்  தன் காதலை சொல்ல பொன்னான நேரம் பார்த்து காத்திருந்தவனுக்கு தன் எஜமானர் தன்னை மதிய உணவிற்கு அழைக்க, மிக அழகாக இரு காதல் கடிதங்கள் தட்டச்சுகிறான்.

ஒன்று,சிசிலியாவின் மீதான தன் காதலையும்,சமீப காலமாய் அவளுக்கு எதனாலோ தன் மீது வெறுப்பு உண்டான சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டு எழுதுகிறான். இன்னொரு கடிதம் அவளை தன் மனையாளாக பாவித்து மிக உரிமையுடன்,அவளை நாள் முழுதும் கூடி முயங்கியிருக்க வேண்டும் என்றும், அவளின் பனிவிழுந்த மலர்வனம் போன்ற ஈர யோனியில் முத்தங்கள் தரவேண்டும்,என்றும் காதல் கிறுக்குடன் எழுதுகிறான்.

நல்ல கோட்டு சூட்டு  உடைகளை அணிந்தவன், அவளுக்கு எழுதிய கடிதத்தையும் உரையில் போட்டு எடுத்துக்கொள்கிறான். வழியில் அக்கடிதத்தை சிசிலியாவிடம் கொடுக்க தயக்கம் ஏற்படவும், பண்ணைக்கு செல்லும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த ப்ரையானி டால்லீஸை பார்க்கிறான்.  சிசிலியிடம் கடிதத்தை விரைவாய் தர இயலுமா? என எனக்கேட்டு கொடுத்தும் விடுகிறான்,

இவள் ஏற்கனவே தன் உள்மனதில் ராப்பியை ஒரு ஸ்த்ரிலோலனாகவும் , காமக்கொடூரனாகவும் நினைத்திருக்கிறாள் ,[முன்னொரு சமயம் இதற்கு முத்தாய்ப்பாக எதேச்சையாய் சிசிலியாவின் கையில் இருந்த விலையுயர்ந்த பீங்கான் பூஜாடியை இவன் வாங்கிப்பார்க்க, இவன் அதை கவனமாய் கையாளாலதால் அதன் கைப்பிடி உடைந்து அருகே இருந்த நீரூற்றில் விழுந்துவிடுகிறது. சற்றும் தாமதியாமல் சிசிலியா தன் மேல் ஆடைகளை களைந்தவள், நீரில் இறங்கி அந்த உடைந்த கைப்பிடியை எடுத்து மீண்டும் நீருக்கு வெளியே வந்து இவனை சினந்து பார்த்துவிட்டு அவன் கையில் இருந்த மூடியையும் பறித்துக்கொண்டு, தன் வீட்டை நோக்கி நடக்கிறாள்,இதை மாடியில் தன் அறையில் இருந்து பார்த்த ப்ரையானி டால்லீஸ் தன் கற்பனை குதிரைகளை  தாறுமாறாக ஓட்டி இவன் மோசமானவன் என்ற முடிவுக்கு வருகிறாள்,லோலாவிடமும் அவனைப்பற்றி புகார் கூறியிருந்தாள்]

இவன் தந்த கடிதத்தை பிரித்து முழுவதும் படிக்து,வியர்க்கிறாள் (முன்பே ஒருமுறை விடலைப்பருவத்து வேட்கையாய் ராப்பி மீது காதல் வயப்பட்டவள், ராப்பியை சீண்ட நினைக்க, நீச்சல் தெரியாத இவள் நீரில் குதிக்க  , உடனே நீரில் குதித்த ராப்பி அவளை காப்பாற்றி , கோபமாய் திட்டுகிறான், அந்த எரிச்சல் வேறு இவள் மனதில் மண்டியிருக்கிறது ) இவனை போட்டுக்கொடுக்க தருணம் பார்க்கிறாள்.

ராப்பி தவறுதலாய் காமரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதத்தை சிசிலியாவிடம் தர சொல்லி கொடுத்திருப்பது நினைவுக்கு வந்ததும், நாக்கை கடித்துக்கொள்கிறான். தொலைந்தோம் என நினைத்தவன். நுனிபாதத்தில் பைய நடந்து விருந்துக்கு வருகிறான். வீட்டு அழைப்பு மணியின் கயிறை இழுக்க, மரண அமைதி. இவனுக்கு வயிற்றில் கிர்ரென இருக்க, மீண்டும் துணிந்து கயிறை இழுக்க, மணி ஒலித்து சிசிலியா வர, அவனை உள்ளே அழைக்கிறாள், இருவரும் வீட்டு நூலக அறைக்குள் அமைதியாய் நுழைய, ராப்பி கதவை சார்த்துகிறான். அவளிடம் தவறான கடிதத்தை தந்தேன், என சொல்ல, இவள் கடிதத்தை ப்ரையானி  படித்துவிட்டாள்,என்கிறாள்,

மற்றபடி இவன் எழுதியது தனக்கும் மிகவும் பிடித்தது என்றவள் அவனை ஆரத்தழுவி உதட்டில் முத்தமிடுகிறாள், இவனை உயிரினும் மேலாய் விரும்புவதாயும் ,அதை வெளிப்படுத்த தெரியாமல் தான் இவனை அவ்வப்பொழுது குத்திக்கிழித்ததாயும் , இவன் மேற்படிப்புக்கு மருத்துவம் படிக்கப்  போய்விட்டால் தன்னால் இவன் பிரிவை தாங்கவே முடியாதென்றும் அழுதபடி சொல்கிறாள்.

முத்தத்தில் ஆரம்பித்தவர்கள்,நூலறை புத்தக அலமாரிலேயே முயங்கி உறவு கொள்கின்றனர்.இருவரும் இன்ப உச்சத்தில் இருக்கையில் ப்ரையானி  கதவை  பூனைபோல திறந்து உள்ளே வந்துவிடுகிறாள்.தன் அக்காவை ராப்பி கட்டாயப்படுத்தி மேலே பரவி வன்கலவி செய்கிறான் என கருதியவள் அழுதுகொண்டே ”சிசிலியா” என்கிறாள்.

 இவர்கள் சுயநினைவுக்கு வந்தவர்கள் தன்நிலை உணர்ந்து ஆடைகளை சரி செய்து கொண்டு நகர்கின்றனர், காமப்பசி தீர்ந்து வயிற்றுப்பசி எடுக்க , உணவு மேஜையில் அருகருகே அமர்ந்து உண்ண ஆரம்பிக்கின்றனர். உணவின் போதே மேசைக்கு அடியில் இவர்களின் கைகள் ஆதூரத்துடன் பிணைந்தும் கொள்கின்றன. சில்மிஷங்கள் நடக்கின்றன.

=======================================
முழுக்கதையும் படிக்க நினைப்போர் இக்காணொளியை தாண்டி 
வந்து படிக்கவும்.



=======================================
உணவு மேசையில் லோலா ஏன் வாட்டமாய் இருக்கிறாள்? என எல்லொரும் கேட்க, அவளின் கைகளை சிறுவர்கள் பிராண்டி வைத்துள்ளனர்.அதனால் அவள் கையே சிவந்துவிட்டது. என பிரையானி சொல்ல,ப்ரயானி முந்திக்கொண்டு சொன்ன பதிலால் பால் மார்ஷல் உள்ளுர மகிழ்கிறான், ஏனென்றால் வெறியோடு லோலாவை தழுவுகையில் ஏற்பட்ட காயம் அது,அதற்குள் லோலா வெளியேறிவிட்டாள்.ராப்பி சிறுவர்களை நொந்து கொள்கிறான்.

 இப்போது ப்ரையானி  ராப்பியை நோக்கி கோபமாய் திரும்பி உன்னை விட அவர்கள் மோசமில்லை என வார்த்தைகளை வீசுகிறாள்,அவளின் அம்மா அவளை கண்டிக்கிறாள்,மாடிக்கு போய் அந்த சிறுவர்களை கூட்டி வா !என சொல்ல,மாடியேறியவள் சிறுவர்கள் இருவரும் லோலாவின் கொடுங்கோல் தனம் பிடிக்காததால் தன் தந்தையை தேடி போவதாய் ,கடிதம் எழுதிவைத்து விட்டு எங்கோ ஓடிப்போயிருக்கின்றனர்.

வீடே ரணகளப்படுகிறது. எல்லோரும் சிறுவர்களை தேட, ப்ரையானியும், சிசிலியாவும்,டால்லீஸும்,ராப்பியும் திசைக்கு ஒருவராய் தேட, ப்ரையானி வீட்டிற்கு பின்னே இருக்கும் படகு துறைக்கு சென்று விளக்கை அடித்து பார்க்க அங்கே புல்வெளியில் லோலாவை கிடத்தி ஒரு உருவம் உடல் உறவுகொள்ள, அவள் முழு சம்மதத்துடன் கூடினாளா? இல்லையா? என்றே தெரியாமல் . ப்ரயானி  பலமாய் கத்துகிறாள்.

அந்த சூட் அணிந்த உருவம் தலை தெரிக்க ஓடிவிட, செய்வதறியாத லோலா மூர்ச்சையாகிறாள். போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது, வந்த போலீஸ்காரர்களிடம்,லோலா ராப்பியால் கற்பழிக்கப்பட்டதாகவும், அதை தன் இரு கண்களால் பார்த்ததாகவும் சொல்லி சாதிக்கிறாள்.

சிசிலியா மட்டுமே இதை நம்பாத ஆள்.சிசிலியா எவ்வளவோ மன்றாடியும் பெரியவர்கள் யாரையும் நம்பவிடாமல் செய்துவிட்டது ப்ரையானி எல்லோருக்கும் காட்டிய ராப்பியின் கடிதம்.அதில் இருந்த விரசமான வார்த்தைகள் பெற்றோருக்கு பயங்கர கோபத்தை வரவழைத்தன,லோலாவும் வசதியாக தன்னை கற்பழித்தவன்,அவன் தன் கண்களை பொத்தி கற்பழித்ததால் தனக்கு அவனை அடையாளம் தெரியவில்லை,என சொல்லிவிட,போலீசார் விலங்குடன் ராப்பிக்காக காத்திருக்கின்றனர்.

இரட்டையர்களை தேடிப்போன ராப்பி நெடுந்தூரம் அலைந்து திரிந்து சிறுவர்களை கண்டுபிடித்து ஒருவனை தன் தோள் பட்டையில் ஏற்றி அமரவைத்தும்,இன்னொருவனை அரைத்தூக்கத்தில் பேசிக்கொண்டே நடத்தியும் கூட்டிக்கொண்டு வீடுவர, நன்றிக்கெட்ட பணக்காரர்கள் ஏழை பணக்காரன் வித்தியாசம் பாராட்டி அவனை,அவன் உதவியை சிறிதும் மெச்சாமல்,ராப்பியை போலீசார் கற்பழிப்பு குற்றத்துக்காக கைது செய்வதை வேடிக்கை பார்க்கின்றனர்.

சிசிலியா துடிக்கிறாள்.போலீசார் ராப்பியை கூட்டி செல்வதை பார்த்த அவனின் அம்மா கையில் வைத்திருந்த குடையால் போலீசாரின் வாகனத்தை அடிக்கிறாள்.எஜமானர்களை மண்ணை வாரி தூற்றுகிறாள்,கணவனை இழந்தவள் புத்திரசோகத்திற்கும் ஆளானாள்.

பாகம்-2
நான்கு வருடங்கள் கழித்து, ஜெர்மனியால் பீடிக்கப்பட்ட ஃப்ரான்ஸில் காட்சி துவங்க. மருத்துவப் படிப்பில் மண்விழுந்து , சிறைக்கு அனுப்பப்பட்ட ராப்பி, அரசு சிறைக்கைதிகளை நிபந்தனையின் பேரில் உலகப்போரில் போரிட ராணுவத்துக்கு தேர்வு செய்வதை கேள்விப்பட்டு,வலியப் போய் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருகிறான். ஃப்ரான்ஸை ஜெர்மனியின் நாஜிப்படை சுற்றிவளைத்து கைப்பற்ற, இவன் ஒரு வீட்டின் பரணில் தன் சகாக்கள் இருவருடன்  ஒளிந்திருக்கிறான்,

இவனுக்கு வரைபடங்கள் படிக்க தெரிந்ததாலும், ஃப்ரென்ச்சு மொழி தெரிந்ததாலும் ஒரு சிறு படைக்குழுவுக்கு  இவனே தலைமை ஏற்கிறான், ஒவ்வொரு நகரம், காடு, மலையாக நடந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே நடக்கிறான்.

பாகம்:-3.1
ராப்பி படையினருடன் நடக்கையில் கடந்தகால நினைவலைகளில் மூழ்குகிறான். தான் சிறை வந்ததையும்,அதை அடுத்த சில நாட்களிலேயே சிசிலியாவும் வீட்டாரைப்பிரிந்து லண்டன் வந்து செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் மருத்துவ தாதியாய் சந்தித்ததையும் அசைபோடுகிறான்.

ஒரு உணவு விடுதியில் சிசிலியா இவனை சந்தித்து கைகளைப் பற்றிக்கொண்டு தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகிறாள். இவன் துக்கம் தொண்டையை அடைக்க கையை உருவிக்கொள்கிறான். அவள் மீது எந்தவித கோபமும் இல்லை என்று தேற்றுகிறான், அவள் அவனுக்கு ஒரு உல்லாச தீவின் படம் கொண்ட வாழ்த்து அட்டையை கொடுத்து,அந்த தீவுக்கு இருவரும் சென்று திருமணம் செய்துகொண்டு,நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டு வாழ்வோம் வா,என கெஞ்சுகிறாள்.

இவன் எனக்கு தண்டனைக்காலம் இன்னும் இருக்கிறது,மேலும் தான் போருக்கு செல்கிறேன்,திரும்ப வருவேனா?எனத் தெரியாது ,எனக்காக காத்திருப்பாயா? என்றும் கேட்க, இவள் நிச்சயமாக!!! என கட்டித் தழுவிக்கொள்கிறாள், இவன் ஃப்ரான்ஸுக்கு செல்லும் தினத்தில் நேரே வந்து விடை கொடுத்தும் அனுப்புகிறாள்.

இப்போது 18வயது ப்ரையானி அதே செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு தான் படிக்கும் பாலிடெக்னிக் மூலம் செவிலியர் பயிற்சிக்கு வருகிறாள்,அங்கே சிசிலியா முக்கிய தலைமை தாதியாய் இருக்க குற்ற உணர்வு கொள்கிறாள், சிசிலியா இவளிடம் மிகுந்த கண்டிப்பு காடுகிறாள், அவளை டால்லீஸ் என்றே அழைக்கிறாள், அவளை எந்த சந்தர்ப்பத்திலும் தனிமையில் சந்திக்க மறுக்கிறாள், தவிர்க்கிறாள்.

ஒருநாள் போரில் தலையில் குண்டு துளைத்து ஓட்டை விழுந்த ஃப்ரென்சு வீரன் ஒருவன் உயிருக்கு போராடியபடி துடிக்க, பிரயானிக்கு ஃப்ரென்ச் தெரியுமாதலால் , அவனின் கையைபிடித்து உள்ளங்கை சூடு கொடுத்து தேற்றச்சொல்லி தலைமை செவிலியர் உத்தரவிட, இவள் முதல் முறையாக ஒருவனின் உள்ளங்கைகளை பற்றுகிறாள். ஆணின் உள்ளங்கை சூட்டை உணர்கிறாள், அவன் ராப்பியைப் போலவே இருக்க ,இவள் அவன் மீது கனிவும் கொள்கிறாள்.

அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் இவளை விரும்புவதாகவும், தான் பிழைத்து வந்தால், தன்னை திருமணம் செய்து கொள்வாயா? என அவன் கேட்க, இவள் துணிந்து சரி, என்கிறாள்,இவளுக்கும் அவனை பிடித்துள்ளதாக சொல்கிறாள், அவன் மனதால் தேறுகிறான்.

தன் தலையில் போடப்பட்ட கட்டின் இறுக்கம் மிகவும் வலிக்கிறது,என்றும் ,சற்று தளர்த்தும் படியும் கேட்க, இவள் தளர்த்துகிறாள், அப்போது தான் கொழ கொழவென இருக்கும் குண்டு துளைத்த ஓட்டையை பார்க்கிறாள். முதல் முறையாய் அதுபோன்ற கொடூரமான காயத்தைப் பார்க்கிறாள். அவனை கைகள் பிடித்து தேற்ற , அவன் விழிகள் நிலைகுத்தி இறந்தும் விடுகின்றான்.

பாகம்:-3.2
ராப்பி டன்கர்க் என்னும் கடற்கரை நகருக்கு மிக நீண்ட நடைபயணத்தின் முடிவில் வந்து சேர்கிறான்.அங்கே போரில் இங்கிலாந்து வீரர்கள் தோல்வி அடைந்ததையும் ஏற்கனவே ஊருக்கு திரும்பிச்செல்ல, மூன்று லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் காத்திருப்பதையும், யாருக்கும் குடிக்க நீரோ,உண்ண உணவோ கிடைக்காததையும் காண்கிறான்.

இவனும் அங்கே சென்று தன்னை பதிந்து கொள்ள எத்தனிக்க, அவர்கள் உள்ள ஆளுக்கே நீரில்லை, உணவில்லை, உன் சுற்று வரும் வரை காத்திரு,உனக்கு அடி பட்டிருக்கிறதா? அப்படி காயம் பட்டிருந்தால், அவர்களை கடைசியாக வரும் கப்பலில் ஏற்ற உத்தரவு என்கிறார்கள்.

அங்கே வீரர்கள் தங்கள் பசிக்காக போர்க் குதிரைகளை சுட்டுக்கொல்வதை பார்க்கிறான். ராப்பி மிகுந்த பசியால் , தாகத்தால் சுய பச்சாதாபத்தால் துடிக்கிறான். மருத்துவனாய் இருந்திருக்க வேண்டிய தான், இப்படி ராணுவத்தில் அடிமை வீரனாய் ஆக நேர்ந்ததே!!! என வேதனைப்படுகிறான்.

இங்கிலாந்து திரும்ப போனாலும் தன் ஊருக்குச் செல்ல முடியாது,சிறைக்கு தான் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வேறு வாட்ட, சிசிலியாவை நினைத்துக்கொள்கிறான். அவள் தந்த வாழ்த்து அட்டையில் இருக்கும் கடற்கரையும் பச்சை மலைத்தொடரும் கூடும் இடத்தில் இருக்கும் அழகிய வீட்டையும் நினைக்கிறான். இப்போது சிசிலியாவுடன் தானும் அங்கே இருப்பதாய்  நினைக்கிறான்.புழுங்குகிறான்.

அங்கு போரினால் சூறையாடப்பட்ட மதுபான விடுதியில் நுழைந்து உணவு தேட ஏமாற்றமே மிஞ்சுகிறது.அங்கே ஒரு ஆளில்லா திரையரங்கில் திரைக்கு பின்னால் நின்று,வீரர்கள் இயக்கி பார்க்கும் ப்ரொஜெக்டரில் இருந்து வரும் காதலர் சந்திப்பு காட்சியை பார்க்கிறான், இவனுக்கு சிசிலியாவின் நினைவு பீரிட்டு கிளம்புகிறது.

குளிரையும் பொருட்படுத்தாது வெளியே வந்தவன், தன் அம்மாவைப்போன்ற ஒரு பெண்மணியை பார்த்து, பின்சென்று உணவு கேட்க,அவள் இவனுக்கு உணவளிக்கிறாள், மிக நீண்ட தூரம் நடந்து வந்தமையால் புண்ணான இவன் பாதங்களை வெந்நீரில் கழுவி அழுத்தம் கொடுக்கிறாள், இவன் பருக ஒயின் புட்டிகளும் தருகிறாள், இருந்த பசியிலும் சோகத்திலும் நிறைய ஒயின் பருகியவன், உச்சக்கட்ட போதையில் ஷூக்களைக்கூட அணிந்து கொள்ளத் தோன்றாமல் தள்ளாடியபடியே கடலை நோக்கி செல்கிறான்.

இவனுடன் வந்த ராணுவ வீர நண்பன் இவனை தாங்கலாக அழைத்துச் சென்று பங்கரில் தூங்க செய்கிறான். ராப்பி சிசிலியாவை நீண்ட நாள் காக்க வைத்துவிட்டேன் ,இனி அது முடியாது,அவளை உடனே பார்க்க வேண்டும் என்கிறான். நண்பன் இவனுக்கு நன்கு போர்த்திவிட்டு அருகே தூங்க, மிகுந்த துக்கத்தில் இருந்தவன் அரைத்தூக்கத்தில் சத்தமாக கத்துகிறான்.

நண்பன் அவனிடம் நான் வெளியே சென்று பார்த்து வந்தேன் கப்பல்கள் வரும் அறிகுறி தென்படுகிறது. நாளை காலை எப்படியும் நாம் கப்பலில் ஏறிவிடுவோம், என்று ஆறுதல் சொல்ல. இவனுக்கு, மகிழ்ச்சி பிடிபடவில்லை, இப்போது சிசிலியா தந்த வாழ்த்து அட்டையை தீக்குச்சி நெருப்பில் பார்த்து உன்னிடம் விரைவில் வருகிறேன், உன்னை திருமணம் செய்வேன், தலை நிமிர்ந்து இருவரும் வாழ்வோம்!!! என மனதுக்குள் சொல்கிறான். நண்பனிடம் நாளை காலை என்னை 7மணிக்கு முன்பாக எழுப்பி விடுவேன் என சொல், அதன் பிறகு என் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வராது!!!!என்று சொல்லி விட்டு கண்களை மூடுகிறான்.

பாகம்:-3.3
பதினைந்து தினங்களுக்கு முன்னால்:-
இப்பொது ப்ரையானி பணிபுரியும் மருத்துவமனையில்  நியூஸ் ரீல் போர்ப் படம் காட்டப்படுகிறது, அதில் டன்கர்க்கில் போராடும் வீர்ர்களை பார்க்கிறாள், முடிவில் இங்கிலாந்தின் ராணி இவளின் அண்ணனின் நண்பன் பால் மார்ஷலின் சாக்லேட் ஃபேக்டரிக்கு விஜயம் செய்வதையும்  காட்ட, அருகே பால் மார்ஷலின் வருங்கால மனைவி என்று லோலாவையும் காட்ட இவளுக்கு  தட்டாமாலை சுற்றுகிறது.

அவர்கள் இருவரின் திருமணம் நடக்கும் தேவாலயம் சென்றவள்,அங்கே மணப்பெண் உடையில் லோலாவையும் பால் மார்ஷலையும் பார்க்க ,அவர்கள் வசதியாக முகத்தை  திருப்பிக் கொள்கின்றனர். இவள் செய்வதறியாது திகைக்கிறாள். அப்போது தான் தான் படகுத்துறையில் வைத்து லோலாவை கற்பழித்தது பால் மார்ஷல் எனவும், அவளின் இசைவின் படியே இருவரும் புணர்ந்ததும் தெரியவருகிறது.

வெடித்து அழுகிறாள்,ஒரு அப்பாவியை போலீஸில் மாட்டி விட்டு அவன் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே!!!! என பதறி துடிக்கிறாள், தன் அக்காவின் பன்றிகள் மேயும் அழுக்கான வாடகை வீட்டுக்கு விரைகிறாள். அவளின் முரட்டுத்தனமான வீட்டு உரிமையாளர் பெண்மணி,சிசிலியாவை கத்தி அழைக்க, சிசிலியா எதிர்ப்பட்டு  இவளை வாசலிலேயே பேசி வழி அனுப்ப பார்கிறாள்.

இவள் நான் உனக்கு கடிதங்கள் எழுதினேன், அதற்கு பதில் வரவில்லை, உன்னுடன் பேச வெண்டும் என கெஞ்சி உள்ளே நுழைகிறாள்.அவளிடம்,அன்று லோலாவை கற்பழிப்பது போல தான் கண்டது ராப்பியை அல்ல என்கிறாள்.

அங்கே உள் அறையில் இருந்த ராப்பி வெளியே வருகிறான். நீ என்ன செய்கிறாய் இங்கே? எனக்கேட்டவன் உனக்கு என்ன வயசாகிறது? ஒரு உண்மையை உன் உள்ளம் உணர உனக்கு ஐந்து வருடம் கேட்கிறதா? சிறை என்றால் எவ்வளவு கொடியது என தெரியுமா? போர்க்களம் எவ்வளவு கொடியது என தெரியுமா? ஐந்து வருடங்களுக்கு முன் உனக்கு சரியாய் தெரிந்த ஒன்று இன்று தவறாய் தெரிகிறதா? பதினெட்டு வயதில் பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து போர்களத்தில் செத்து மடிகின்றனர். என எரிந்து விழ.

இவள் அன்று லோலாவை கற்பழித்தது பால் மார்ஷல் என சொல்ல,சிசிலியா குறுக்கிட்டு உன்னை நம்ப முடியாது என்கிறாள். இது சத்தியம், பால் மார்ஷல், லோலா-அவர்கள் திருமணம் இப்போது தான் முடிந்தது என சொல்லி அழ, ராப்பியும் சிசிலியாவும் வெறுப்படைகின்றனர்.

இனி அவர்கள் இருவரும் கணவன் மனைவி,இந்த வழக்கு நிற்காது.எல்லாம் வீண்!!! என சொல்ல. இவள் வெடித்து அழுகிறாள்.இவ்வளவு நாள் அங்கு வேலை பார்த்த பணியாள் டேனி என்பவன் தான் இதை செய்திருப்பான் என இருவரும் நினைத்திருந்தோம் என்கின்றனர்.

இவர்கள் அவளை வீட்டை விட்டு வெளியே போ !!! என சொல்லியும் அங்கேயே அமர்ந்து இவர்கள் இருவரையும் கண்ணீருடன் கெஞ்சுகிறாள். மனமிறங்கிய ராப்பி, நடந்த விபரங்கள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி கையொப்பமிட்டு வா. அதை வைத்து என் தண்டனையை குறைக்க வழிபார்ப்போம், எனக்கு நாளைக்கே  மீண்டும் போர்க்கள பயணம் இருக்கிறது , என சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டு,சிசிலியாவை ஆரத்தழுவி கூடல் செய்கின்றான். கனத்த மனதுடன் கீழே இறங்கிச் சென்றவள் தெருவில் நின்று கண்ணீர் விடுகிறாள். அவனின் போன வாழ்வு இனி வராதே!!!என மனம் புழுங்குகிறாள்.
பாகம்:-3.4
வருடம் 1999

இப்போது 79 வயது ப்ரையானி தொலைக்காட்சிக்கு நேர்முக பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாள், திடுமென தான் விரைவில் ஓய்வு பெறப்போவதாய் அறிவித்தவள், சிறிது அனுமதி வாங்கி தன் நோய்க்கு மாத்திரை சாப்பிட்டுவிட்டு வந்து பேட்டியை தொடர்கிறாள். இவளின் வெளிவரப்போகும் அடோன்மெண்ட் என்னும்  21ஆவது நாவலே இவளின் இறுதி நாவலும் கூட என்கிறாள். தனக்கு வாஸ்குலர் டிமென்ஷியா என்னும் நோய் இருப்பதால் நினைவுகளும், வார்த்தைகளும் மறந்துபோகிறது அதுவே இவளின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறாள்.

ஒருவிதத்தில் இந்த நாவல் தான், தன் முதல் நாவலாய் இருந்திருக்க வேண்டும் என்கிறாள். தன்னுடைய பெயரையும் சேர்த்து இக்கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே நிஜம் என்றும், இவள் சிறு பருவத்தில் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காகவே இந்த நாவலை நிஜப்பெயர்களுடன் வெளியிட்டு பரிகாரம் தேடுகிறேன் என்கிறாள்.

மேலும் நாவலில் சொன்னது போல இவள் ராப்பியையும் சிசிலியாவையும் சந்தித்து மன்னிப்பு கேட்கவே இல்லை என்கிறாள், ஏனென்றால் ராப்பி ஜனவரி10,1940 அன்று தூக்கத்திலேயே செப்டிஸ்மியா என்னும் நோய் கண்டு இறந்துவிட்டான் என்றும், அவன் இறந்த சில மாதங்களிலேயே அவனின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த சிசிலியா, பல்ஹாம் என்னும் பாதாள ரயில் நிலையத்தில் நிறைய மக்களுடன் பதுங்கியிருக்கும் போது  ஜெர்மானிய ராணுவம் போட்ட ஆகாய வெடிகுண்டினால் ,தண்ணீர் குழாய்கள்  உடைந்து ரயில் நிலையம் முழுவது  நீர்  புகுந்து இறந்துவிட்டாள். என்றும் சொல்கிறாள்.

படிப்படியாக இந்த விபரங்களை சேகரித்தவள். வாழ்நாள் முழுவதும் இவர்களை ஒன்று சேரமுடியாதபடிக்கு செய்துவிட்டோம் என்ற  குற்ற உணர்வால் வாடி வந்திருக்கிறேன். என்கிறாள். எனவே தன் நாவலின் நான்காம் பாகத்தில், சேராமல் போன இளம் காதலர்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.என கேவிக்கொண்டே முடிக்கிறாள்.
பாகம்:-4
சிசிலியா தந்த வாழ்த்து அட்டையில் இருந்த அதே கடற்கரையும் பச்சை மலைத்தொடரும் கூடும் இடத்தில் அமைந்த அழகிய வீட்டில், இப்போது ராப்பியும் சிசிலியாவும் உல்லாசமாய் வசிக்கின்றனர்.ஐந்து வருடம் அடக்கி வைத்திருந்த காதலை கடற்கரையில் ஓடியாடியபடி ஆரத்தழுவியும் முத்தங்கள் பரிமாறிக்கொண்டும் மீட்டெடுக்கின்றனர். என ப்ரையானி  கிழவி சப்பைக்கட்டு கட்டி கதையை முடிக்கிறார். படம் முடிந்ததும் அக்காதலர் அனுபவித்த சொல்லோனாத்துயரம் நம் கண்களில் வந்துபோகத் தவறாது.

இது போல இன்னொரு படம் பார்க்கும் வரை இதன் தாக்கம் அடங்காது!!!அந்த பிரமிப்பூட்டும் காட்சிகளும்,ஆர்ப்பரிக்கும் இசையும். அந்த டைப்ரைட்டர் பொத்தானகள் தட்டப்படும் ஓசையை வைத்தே இந்த படத்திற்கு தீம் மியூசிக் வைத்த இசைஅமைப்பாளர் டரியோ மரியனெல்லியையும், பியானிஸ்ட் ஜேன் இவாஸ் திபாடெட்டையும் அணைத்துக்  கொள்ளத் தோன்றுகிறது.

இதில் சிசிலியாவாக வந்த ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்,டச்சஸ்,டோமினோ புகழ் கெய்ரா நைட்லி தான் ஒரு கைதேர்ந்த நடிகை என மீண்டும் நிரூபித்தபடம். இதில் ராப்பியாக வந்த லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லாந்தில் டாக்டர் கேரிகனாய் நடித்த ஜேம்ஸ் மெக் எவாய் ,மீண்டும் தன் சிறந்த உழைப்பை நமக்கு ஈந்துள்ளார். இவர் பேசாத காட்சிகளில் இவரின் நீலக்கண்கள் பேசுகின்றன. இது வரை இவரை கவனிக்கவில்லை எனில் இனியாவது தொடர்ந்து கவனியுங்கள்.  13 வயது ப்ரயானியாக வந்த சிறுமி சாயர்ஸ் ரொனான் நடிப்பு அபாரம், அய்யோ!!! சரியான வில்லத்தனம், என்னவொரு? அழுத்தக்காரி வேடம், இன்னும் கூட இவர் மேல் வெறுப்பு அகலவில்லை. அப்படி மனதில் பதிந்துள்ளார்.
=======================================
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (250) ஆஸ்கர் (201) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)