சென்னையில் தொடரும் தரமற்ற கட்டுமானங்களும் விபத்துக்களும்

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சென்னை, கொரட்டூரில் ஒரு மழைக்கு புதிதாகக் கட்டப்பட்ட நான்கு மாடிக்கட்டிடம் தரை மட்டமானது. விசாரணையில் அது ஒரு ஏரியின் மீது பொருத்தமில்லாத ஃபவுண்டேஷன் நிறுவி கட்டப்பட்ட கட்டிடம் என நிரூபனமானது, பின்னர் ஆழ்வார்பேட்டையில் நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான கட்டிடம் விரிசல் விடத்துவங்க, அதில் அரசு தலையிட்டு சுமார் 3மாதத்துக்கும் மேலாக மாநகராட்சி ஆட்கள் அக்கட்டிடத்தை இடித்துத் தள்ளினர்.
கட்டிடம் கட்டி முடித்த பின் கிடைக்கும் பெர்ஸ்பெக்டிவ் வியூ

இன்று பெய்த சில மணி நேர அடைமழையில் , சென்னை முகலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது, அந்த கட்டுமான நிலத்தில் இரண்டு டவர்கள் தலா 13 மாடிகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்க,ஒன்று மட்டும் இன்று அப்படியே பொலபொலவென இடிந்து விழுந்திருக்கிறது, 

ஆனால்   இடிந்து விழுந்த 13 மாடிக் கட்டிடத்தின் பெயரையும்,அதன் நிறுவனத்தின்  பெயரையும் விலாசத்தையும் வெளியிட தினசரிகளுக்கும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் இன்னும் என்ன தயக்கம்?,எனப் புரியவில்லை,  பத்திரிக்கை  தர்மத்தை இப்படியெல்லாம் காப்பாற்றியே ஆக வேண்டுமா?யாருக்கு பயம்? என்ன கவர் வாங்கி  விட்டார்களா?கொஞ்சமும் வெட்கமாக இல்லையா?
கட்டுமானப் படம்
 புதிய தலைமுறை தொலைக்காட்சி தவிர்த்த வேறு எந்த  ஊடகத்திலும் இடிந்து விழுந்த 13 மாடிக் கட்டிடத்தின் பெயர் ட்ரஸ்ட் ஹயிட்ஸ் ,ப்ரைம் ஷ்ரிஷ்டி டெவலப்பர் என்பதைக் குறிப்பிடவேயில்லை, அதன் Prime Sristi இணையத்தளத்தில்  இது பூகம்பம் தாங்கும் கட்டுமானம் [RCC Framed Structure with seismic design.]  என பொய் சொல்லியுள்ளனர், 

ஆனால் ஒரு மணிநேரம் பெய்த அடைமழையைக்  கூட இது தாங்கவில்லை. இதற்கு ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் [ structural consultant ] என ஒருவன் இருந்தால்? காவல்துறை ஏன் இன்னும் அவனை கைது செய்யவில்லை? ஏரி நிலத்தில் அடுக்ககம் கட்டுகையில் பைல் ஃபவுண்டேஷன் [pile foundation] மட்டுமே நிறுவி கட்ட வேண்டும்.அதுவும் ஒவ்வொரு பைலும் அந்த நிலத்தடியில் ஊடுறுவி பாறையைத் தொட்டு [ hard strata] முட்டி நிற்கும் வரை சம்மட்டி போன்ற எந்திரத்தால் அடிக்கப்பட்டு அதன் மேலே பைல் கேப் அமைத்து தூண்கள் [columns] அமைக்க வேண்டும், இவர்கள் ,என்ன விதமான ஃபவுண்டேஷன் அமைத்தார்களோ?இறைவனுக்கே வெளிச்சம்.
 
இதில் மற்றுமோர் முரண்நகை என்னவென்றால்,ஒரு கட்டிடத்துக்கு த ஃபெய்த் [இடிந்த கட்டிடம்] ,என்றும் மற்றொரு கட்டிடத்துக்கு த பிலீஃப் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் சத்தியமும் நம்பிக்கையும் பொய்யர்களிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதைத் தான் நாம் பூடகமாக இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும், விஞ்ஞான வளர்ச்சியும் கட்டுமான தொழிற்நுட்பமும் கோலோச்சும் காலத்தில் தரமற்ற கட்டுமானத்தாலும் கவனக்குறைவாலும் விளைந்த வெட்கக்கேடு இது.
கீப்ளானும் திட்ட முகவரியும்

இந்தக் கட்டுமான நிறுவனம் சென்னையில் இதற்கு முன்னர் எந்த கட்டிடமும் கட்டவில்லை,ஆக எந்த முகாந்தரமுமோ, ப்ரீக்வாலிஃபிகேஷனுமோ இல்லாமல் சென்னையில் சிம்மாசனமே இட்டிருக்கின்றனர் என்பது புலனாகிறது.இதற்கு எத்தனை அரசியல் பலம் கொண்டு உதவியிருக்க வேண்டும்?,இந்த கட்டிடத்துக்கு எத்தனை தனியார் வங்கிகள் கடன் வசதிகள் செய்து தந்திருக்கும்?அந்த வங்கிகள் மூலம் கடன் பெற்ற எத்தனை பேரின் தவணைகள் ஏற்கனவே துவங்கியிருக்கும்?அத்தனை பேரின் கனவுகளும் பாழ். எல்லாவற்றுக்கும் மூல காரணம் பேராசை,அது பெரு நஷ்டத்தில் முடிந்திருக்கிறது. இதே நிறுவனத்தார் மதுரையில் ஐந்து கட்டுமானங்களை முடித்துக் கொடுத்துள்ளனர்,அவற்றில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.  
அவை பின்வருமாறு,
 • Seetha Apartments,BB Kulam Madurai
 • Rajkamal Apartments,KK Nagar Madurai.
 • Lake view Homes,KK Nagar Madurai.
 • Lake view Hotel,KK Nagar,Madurai (www.lakeviewhotel.in)
 • Tatwa Darshan,P&T Colony,Madurai.  
நம்மூரில் மட்டுமே இது போன்ற அக்கிரமங்கள் நிரம்ப நடக்கும். தடி எடுத்தவன் தண்டல்காரன்,சாராய வியாபாரியெல்லாம் கல்வித்தந்தை, ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் கொத்தனார் மேஸ்திரி எல்லாம் இன்றைய ப்ரொமோட்டர். எத்தனை வெட்கக்கேடு? .

இடிபாடுகளில் சிக்கி இன்னுயிரை ஈந்து,எதிர்காலத்தில் அங்கே யாரும் எந்தக் குடும்பமும் சிக்கி சாகாமல் காத்த தமிழகம்,ஆந்திரா மற்றும் வடமாநில கட்டுமானத் தொழிலார்களுக்கு நல்ல நீதி கிடைக்கட்டும்,அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

இவர்களின் கட்டுமான சிறப்பம்சங்களின் ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்,இணையதளத்தை விரைவில் முடக்கிவிடுவர் என்பதால் தான் இங்கே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டுள்ளேன்.
 • இவர்களின் இணையத்தளத்தின்  எந்த பக்கத்திலும் இதன் ஆர்கிடெக்ட் யார்?
 • இதன் ப்ராஜக்ட் மேனேஜர் யார்?
 • இதன் ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் யார்?
 • இதன் சாயில் ரிபோர்ட் கன்சல்டண்ட் யார்?
 • இதன் ஃபையர் ஸ்ட்ரேடஜி கன்சல்டண்ட் யார்?
 • இதன் பைலிங் காண்ட்ராக்டர் யார்?
போன்ற முக்கிய விபரங்கள் குறிப்பிடவேயில்லை,அப்படி ஒரு வல்லுனர் குழு இருக்குமேயானால் அவர்கள் அனைவருமே பிணையில் வரமுடியா சட்டத்தில் கைது செய்ய்ப்பட வேண்டியவர்கள் ஆவர். மேலும் இக்கட்டிடம் காசு மிச்சம் செய்ய மேலே சொன்ன  வல்லுனர்களின் ஆலோசனையின்றி கட்டப்பட்டதா? என்னும் சந்தேகமும் வலுக்கிறது.

இனியேனும் அடுக்குமாடிக்குடியிருப்பில் வீடு வாங்குவோர் அதன் ஆர்கிடெக்ட் யார்?ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் யார்? நல்ல திட்ட மேலாண்மை  மற்றும் ஒழுங்கான கட்டுமான வரைபடங்களுடன் தான் தான் வாங்கும் கட்டிடம்  கட்டப்படுகின்றனவா?என்பதை சோதித்து அறியுங்கள். வரும் முன் காத்துக்கொள்ளுங்கள்.உங்கள் உரிமைகளை போராடியேனும் பெறுங்கள்.

 
கட்டிடத்தின் பெயரைப் பாருங்கள்? நகை முரணின் உச்சம்

இந்த உதவாக்கரை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த கவுன்சிலர்கள், அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்,இதன் உரிமையாளர் பாலகுருவை மிகக் கடுமையாக பிணையில் வரமுடியாத சட்டத்தில் தண்டிக்க வேண்டும்,உயிர்வலியை உணரவைக்க வேண்டும்,இதன் மூலம் எதிர்காலத்தில் கட்டுமானத்தின் போது கடைபிடிக்க வேண்டிய அவசியமான விதிகளையும் ஏற்பாடுகளையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இடி விழுந்ததால் தான் இக்கட்டிடம் தரைமட்டமானதாம்,அதனால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்கிறான் இதன் நிறுவனர் பாலகுரு என்னும் மடையன். ஆடத்தெரியாத தேவரடியாள் கூடம் கோணல் என்றாளாம், வெட்கம் கெட்ட பிணம் திண்ணி பாலகுருவுக்கு,உயர் அடுக்குமாடிக் கட்டிடத்தின் கட்டுமானத்தின் போது கட்டிடத்திலும் ,அதற்கு உதவும் க்ரேனிலும் இடிதாங்கி வைக்க வேண்டும் என்று தெரியாதா? !!! கேட்கிறவன் கேனையனானால் எருமைமாடு ஏரொப்ப்ளேனில் போகுமாம்.

 எதிர்காலத்தில் இது போல கட்டிடங்கள் சடுதியில் தரைமட்டமாகாமல் அந்த கடுமையான கட்டுமான விதிகளும் பாலகுரு போன்றோர் அடையும் தண்டனைகளும் துணைநின்று காக்கட்டும், இது பூனைக்கு மணி கட்ட வேண்டிய தருணம். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்,அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.

இனியேனும் அடுக்குமாடிக்குடியிருப்பில் வீடு வாங்க எண்ணுவோர் , L&T போன்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குங்கள். அவர்களின் கட்டிடங்களில் அவர்கள் தம் ஸ்பெஸிஃபிகேஷனில் சொன்னது போல மிகக்கடுமையாக விதிகள் பின்பற்றப்பட்டிருக்கும்.
இந்த உதவாக்கரை திட்டத்திற்கு கடனுதவி செய்த ஐசிஐசிஐ அயோக்கியர்கள்

L&T நிறுவனத்தின்  கட்டுமானத்தில், செண்ட்ரிங் ஷீட் அடிப்போம் அல்லவா? அதற்கு கூட எத்தனை தடிமனில் ப்ளைவுட்டும், ப்ரேசிங்கும், ஜாக்கும் அமையவேண்டும் என டிசைன் செய்வார்கள், வெவேறு வடிவமைப்புக்கென்றே மனப்பாக்கத்தில் உள்ள அவர்களில் அலுவலகத்தில் சுமார் 1000 பொறியாளர்கள் வேலை செய்கின்றனர்.

எனக்குத் தெரிந்து சென்னையில் L& T ஈடென் பார்க்,L& T எஸ்டான்ஷியா, ஹிராநந்தானி போன்றவை காலத்தை கடந்து நிற்கும், 15 வருடங்களுக்கு முன்னர் L& T அரிஹந்துடன் இணைந்து கோயம்பேட்டில் மெஜஸ்டிக் டவர் என்னும் 16 மாடிக் கட்டிடம் கட்டினர், அது இன்றும் எந்த சூழலையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. இப்போது அவர்கள் சொன்ன பூகம்பம் தாங்கும் தொழிற்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தியிருப்பார்கள் என்னும் முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

திருமண மண்டபம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள், கார்மெண்ட் ஃபேக்டரி,ஆலைகள், போன்ற அதிக மக்கள் புழங்கும் கட்டிடங்களின் ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்கை எப்போதும் ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியரிங்கில் பிஎஹ்டி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் வடிவமைப்பதே சரியாக இருக்கும். அதை 3rd party ஸ்ட்ரக்சுரல் கன்சல்டன்ட் ஒருவர் சோதித்து சான்றளிப்பது மிகவும் பலனளிக்கும்,இரட்டைப் பாதுகாப்பாக இருக்கும் , அதன் உரிமையாளர் மனநிம்மதியுடன் தூங்கலாம்.

ஆனால் இங்கே கம்பிகட்டும் தொழில் செய்யும் மேஸ்திரியே தங்கள் அனுபவத்தில் கம்பி வடிவமைப்பு செய்வதையும் பீம்கள் காலம் அளவுகளை முடிவு செய்வதையும் சிற்றூர்களிலும் கிராமப்புறங்களிலும் அதிகம் காண முடிகிறது.

முதலில் பணம் செலவாகிறதே என மண்பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்.
பின்னர் நீர் பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்,
பின்னர் கம்பிகள் பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்,
பின்னர் காங்க்ரீட் பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்,
column to column spanஐ ஏகத்துக்கும் அதிகமாக்குகின்றனர்,Slab thicknessஏகத்துக்கு குறைத்து மிச்சம் பிடிக்கின்றனர்.
அதே போன்றே cantileverஐயும் ஏகத்துக்கும் அதிகமாக்குகின்றனர்,
இதெல்லாம் சேர்ந்து மொத்தமாக வினையாக முடிகின்றது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கென்றே சிறப்பு வல்லுனர்கள் உள்ளனர்.

Repair, Structural strengthening மிகவும் நுட்பமாக செய்ய வேண்டிய வேலை,அதற்கு உதாரணமாக இங்கே இந்த மங்களூர் கல்லூரியின் கேஸ் ஸ்டடியின் பிடிஎஃப் ஃபைலை இணைத்துள்ளேன் http://www.drfixitinstitute.com/.../KVG%20case%20study... உங்கள் ஊரின் பெருநகரில் இருக்கும் ஸ்ட்ரக்சுரல் கன்சல்டன்டை அணுகினால் அவர்களே ப்ரீக்வாலிஃபிகேஷன் உள்ள ஸ்பெஷலிஸ்ட் கான்ட்ராக்டரை பரிந்துரை செய்வார்.மக்கள் பாதுகாப்பிற்கு பணம் செலவிட தயங்காதீர்கள்.
 


இங்கே அமீரகத்தில் துபாயில் எல்லா 8 மாடிக்கும் மேற்பட்ட டவர்களுக்கும் 3rd party check அமலில் இருக்கிறது,அங்கே இந்தியாவில் இது வந்ததென்றால் மிகவும் பாதுகாப்பான கட்டிடங்களை பெறலாம், ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் அலுவலகங்களுக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும்,தங்களை அப்டேட் செய்த்து போலவும் இருக்கும் 
 

கப்சா கரன்ட்! ஜூனியர் விகடனின் முக்கியமான கட்டுரை!!!

கடந்த மாத இறுதியில் தமிழக முதல்வர் ஓர் இனிய அறிவிப்பைச் செய்தார். 'ஜூன் முதல் தேதி முதல் மின்வெட்டு முழுவதுமாக நீங்கும்.’ அடுத்த வாரத்திலேயே பதிலடியாக டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். 'முதல்வர் அறிவிப்புக்குப் பின்னர்தான் மின்வெட்டு அதிகமானது’... உண்மை நிலவரம் என்ன?
 தமிழகம் முழுதும் திரட்டிய   'ஷாக்’ தகவல்கள் இவை...
'ஜூன் 1-ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மின்தடை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்’ என்று எப்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தாரோ, அதற்கு மறுநாளில் இருந்து மின்வெட்டு அதிகரித்து மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகத்தின் இப்போதைய மின்தேவை 13,000 மெகாவாட். அனல்மின் நிலையம், நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலமாகப் பெறப்படும் மின்சாரம் ஆகியவை தமிழகத்தின் மின்தேவைக்குப் போதுமானதாக இல்லை. நீர்மின் நிலையங்கள் செயல்படும் அளவுக்கு எந்த அணைகளிலும் போதுமான நீர் இல்லை என்கிற சோகம் ஒருபுறம் இருக்க, அனல்மின் நிலையங்கள் அடிக்கடி பழுதடைந்து படுத்துவிடுகின்றன. நீண்டகாலமாகிவிட்ட அனல்மின் நிலையங்களை அடிக்கடிப் பழுதுபார்த்து பராமரிப்பு செய்ய வேண்டிய நிலைமை இருப்பதால், பராமரிப்புக்காக அடிக்கடி மின் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கிறது.
இதைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றை முழுமையாகத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சேர்க்க போதுமான மின்பாதை வசதி இல்லை. இப்படியான சூழலில், தமிழகத்தின் மின்பற்றாக்குறை 2,000 முதல் 3,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. இப்படி இருக்க, 'மின்வெட்டு இருக்காது’ என்று எப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை!
நெல்லையின் சோகம்!
நெல்லை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் இரண்டு முதல் மூன்று மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. கிராமங்களின் நிலைமை மிகவும் மோசம். பகலில் மூன்று மணி நேரம், இரவில் மூன்று மணி நேரம் என மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் முடங்கிப் போய் இருக்கின்றன. சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறித் தொழில் பெரும் நட்டத்தை சந்திப்பதால், பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்புகளைத் தேடி கேரளாவுக்குச் செல்லும் அவலமும் உள்ளது.
விவசாயிகள் ஏற்கெனவே வறட்சியால் நிலைகுலைந்துப் போயிருக்கும் சூழலில், மின்பற்றாக்குறையால் ஏக்கப் பெருமூச்சுடன் விளைநிலைங்களிலேயே தவம் கிடக்கிறார்கள். இரவில் மின்சார மோட்டார்களை இயக்க வேண்டிய நிலைமை. அதுவும் பல நேரங்களில் நின்று நின்று வரும் கரன்ட், விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க செய்வதாகக் குமுறுகின்றனர்.
ஆனாலும், நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மூலமாக மின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று பலமாக வீசுவதால் கடந்த ஒரு வாரமாகக் காற்றாலைகளில் இருந்து இடைக்கும் மின்சாரம் கணிசமாக கூடியிருக்கிறது. கடந்த மாதத்தில் வெறும் 400 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, இப்போது 3,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்படி ஒரு பக்கம் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும், காற்றாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் மின்வெட்டு அதிகரித்து வருவதுதான் மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.  
மிரட்டி ஓடவைக்கும் சென்னை!
தமிழக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தை மட்டுமே கொண்ட சென்னைக்கு தமிழக மொத்த மின் உற்பத்தியில் 20 சதவிகித மின்சாரம் தேவைப்படுகிறது. சென்னையில் இருந்த சுழற்சி முறையிலான இரண்டு மணி நேர மின்வெட்டு ரத்தாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. பெரும்பாலான நேரங்களில் லோ வோல்டேஜ் மின்சாரம் சப்ளை ஆவதால் ஃபேன், மிக்ஸிகள், ஏசி மெஷின்கள் ஓடுவது இல்லை.  
''முன்பெல்லாம் இந்த நேரத்துக்குதான் கரன்ட் போகும்... இந்த நேரத்துக்கு கரன்ட் வரும்னு தெரியும். அதுக்கு தகுந்த மாதிரி கரன்ட்ல செய்யுற வேலைகளை முன்கூட்டியே முடிச்சு வச்சுடுவோம். இப்போ, எப்போ வரும்... எப்போ போகும் என்பது யாருக்கும் தெரியாது.
சென்னையில் பெரும்பாலான வீடுங்க புறாக்கூண்டுபோலத்தான் இருக்குது. இங்கே வசிக்கிறவங்களுக்கு 24 மணி நேரமும் கட்டாயம் கரன்ட் தேவை. ஃபேன், லைட் இல்லாம, வீட்டுக்குள்ள இருக்கவே முடியாது. பகலில் மின்சாரம் இல்லைன்னாலும் ஏதோ ஒருவழியில் சமாளிச்சிடலாம். ஆனா, இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுறதால, சரிவர தூங்க முடியலை. இன்னொரு பக்கம் கொசுக்கடி. மின்சார வாரிய அலுவலகத்துக்குப் போன் செஞ்சா, டிரான்ஸ்ஃபார்மர் ரிப்பேர், கேபிள் துண்டாகிடுச்சுன்னு விதவிதமான காரணங்களைச் சொல்றாங்க. வேலைக்காகத்தான் சொந்த ஊரை விட்டுட்டு வந்து இங்கே இருக்கோம். பேசாம சொந்த ஊரைப் பார்த்து கிளம்பிடலாமான்னு தோணுது'' என்று புலம்புகிறார்கள் சென்னைவாசிகள்.
சிவகங்கையின் திடீர் மின்வெட்டு!
சிவகங்கை மாவட்டத்தில் மின் தட்டுப்பாடு முன்புபோல இல்லை என்றாலும், முழுமையாக மின் தட்டுப்பாடு தீர்ந்துவிட்டதாக சொல்ல முடியாது. திடீர் திடீரென மின்சாரம் தடைப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த மின்வெட்டை பயன்படுத்தித்தான் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டினார்கள். அந்த அளவுக்குக் குற்றச் செயல்கள் மின்தடை நேரத்தில் நடப்பதால் மக்கள் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.
விழுப்புரத்தில் ஆறு மணி நேர மின்வெட்டு!
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் போன்ற நகரங்களில் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என மொத்தம் நான்கு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. சில நாட்களில் இது ஆறு மணி நேரமாகவும் நீடிக்கிறது. அதேபோல், கிராமப்புறங்களில் ஆறு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெரும் தொழில்சாலைகள் எதுவும் இல்லாத விவசாய பூமியான விழுப்புரத்தில் மின்வெட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது விவசாயிகள்தான். வயல்களில் நீர் இறைக்கத் தேவைப்படும் மூன்று முனை மின்சாரம் மூன்று மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. கத்திரி முடிந்த பிறகும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மின்வெட்டினால் வீட்டில் குடியிருக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
வெக்கையில் தவிக்கும் வேலூர்!
வேலூர் மாவட்டத்தில் முன்பெல்லாம் மின்வெட்டு நேரங்களை அறிவித்த மின்துறை இப்போதெல்லாம் கிடைத்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் பரவலான மின்வெட்டு உள்ளது. நகரப் பகுதியில் ஒரு மணி நேரமும், கிராமப்புற பகுதியில் இரண்டு மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருக்கிறது. வேலூர் வெயில் பிரசித்தம். அதனால், மக்களின் தவிப்பு சொல்லி மாளாது.
மின்வெட்டு நேரத்தின்போது தொழிலாளர்களுக்கு இடைவேளை விட்டு வந்த தொழிற்சாலைகள், இப்போதுள்ள திடீர் மின்வெட்டால் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். பெரிய தொழில் நிறுவனங்கள் இதில் இருந்து தப்பித்துக்கொண்டாலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகள் மின்வெட்டால் கடுமையாக பாதித்துள்ளனர்.
கடலூரில் மூன்று பேஸ் முடக்கம்!
கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு என்பது நகரத்தைக் காட்டிலும் கிராமப்புறங்களில்தான் அதிகமாக உள்ளது. நகரத்தில் 30 நிமிடங்கள் மின்வெட்டும் கிராமப்புறங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டும் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அடையும் பாதிப்பை​ட விவசாயிகளின் பாதிப்பு அதிகம். விவசாயிகள் பயன்படுத்தும் பம்ப்செட்டுகள் மூன்று பேஸ் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. இப்போது இரண்டு பேஸ் மின்சாரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால் பம்ப் செட்டுகள் இயக்க​ முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளார்கள்.  
திக் திக் திருவண்ணாமலை!
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஜூன் 4-ம் தேதி வரையில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடம் மின்சார நிறுத்தம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக மின்சாரம் வந்தாலும், இரவு நேரங்களிலும் மதிய நேரங்களில் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சந்தவாசல் பகுதியில் கடந்த வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் 10 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மும்முனை மின்சாரத்தில் வழக்கம்போல மின்தட்டுப்பாடு இருப்பதால், விவசாயிகளும் சிறுதொழில் செய்பவர்களும் எப்போதும்போல திக் திக் நிலையில்தான் இருக்கின்றனர்.
ராமநாதபுர ஐஸ் பிரச்னை!
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லை. அதேபோல் முப்போகம் விளையக் கூடிய விளைநிலங்களும் இல்லை. அப்படி இருந்தும் மின்தடை என்பது மற்ற மாவட்டங்கள் போலவே இங்கும் அமலில் உள்ளது. இதனால் நீண்ட கடற்கரைப் பகுதியைக்​கொண்ட இந்த மாவட்டத்தில் மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்களைப் பாதுகாக்கத் தேவையான ஐஸ் கட்டி உற்பத்தியில் பாதிப்பு ஏற்​படுகிறது. மின்தடை இருந்த காலத்​திலாவது குறிப்பிட்ட நேரத்தில் மின்​சாரம் இருக்காது என்பது தெரியும். அதனால் மின்சாரம் இருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப ஐஸ்கட்டிகளை உற்பத்தி செய்வார்கள். ஆனால், கடந்த ஒன்றாம் தேதிக்குப் பின்னர் மின்தடை அறவே நீக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின் எப்போது மின்சாரம் வரும், போகும் எனத் தெரியாத நிலையில் மின்தடை உள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்​கட்டிகள் முழுமையாக கெட்டியாகாமல் எளிதில் உருகிவிடும் நிலையிலேயே தயாராகிறது. இதனால் ஐஸ்கட்டி தொழிலகங்களுக்கு நட்டம் ஏற்படுவதுடன் மீனவர்களுக்கு வழங்கப்படும் ஐஸ்கட்டிகளுக்கான விலையும் கூடுதலாகிறது.
வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் ஓரளவு விவசாயப் பகுதியாக உள்ள திருவாடானையில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் முன்பிருந்த நிலையே தொடர்கிறது. இதேபோல் பருத்தி, மிளகாய் விவசாயம் நடைபெறும் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 10 நாட்களாக மின்தடை நீங்காததால் வருத்தத்தில் உள்ளனர்.
முதல்வர் தொகுதியிலும் மின்தட்டுப்பாடு!
திருச்சி  மாவட்டத்தில் மின்வெட்டு அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் புலம்புகிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான  ஸ்ரீரங்கத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்பைவிட இப்போது மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் எனவும் அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரை மின்சாரம் போய்விடுவதால், செய்வதறியாமல் தவிக்கின்றனர் ஸ்ரீரங்கவாசிகள். புறநகர்ப் பகுதிகளில் அதைவிடக் கொடுமை. மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் எனத் தெரியாது என்கிறார்கள்.  
காவிரி டெல்டா பகுதிகளி​லேயே காணப்படும் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கெனவே மாவட்டத்தின் முக்கியத் தொழிலான விவசாயம் நொடிந்துள்ளது. இப்போது தலை தூக்கியுள்ள மின் பிரச்னை விவசாயிகளைக் கூடுதலாக வதைக்கிறது. வாழை, வெங்காயம், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்குத் தண்ணீர் கட்டமுடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடுவிழா கண்டுள்ளதாகவும் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாகவும் புலம்புகிறார்கள், அப்பாவி மக்கள்.
டெல்டா மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்னை தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது. இந்த மின்சாரத்தை நம்பி குறுவை சாகுபடியைத் தொடங்கலாமா, வேண்டாமா என்பதுதான் டெல்டா விவசாயிகளின் நிலை. மும்முனை மின்சாரம் மட்டுமல்ல, அன்றாடத் தேவைகளுக்கான இரு முனை மின்சாரமும் கிராமப்புறங்களில் தட்டுப்பாடுதான். ஒரு லட்சம் ஆழ்குழாய் பம்புசெட்டுகளை நம்பி டெல்டா விவசாயிகள் விவசாயம் செய்துவருகிறார்கள். அவர¢களுக்கு 12 மணி நேரம¢ மும்முனை மின்சாரமும், 24 மணி நேர வீட்டு உபயோகத்துக்கு மின்சாரமும் சீராகக் கிடைக்க வேண்டும் என்றால், டெல்டாவுக்கு 500 மெகா வாட் மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும்.
சேலம் தொழிற்சாலைகள் பாதிப்பு!
எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது என்றே சொல்ல முடியவில்லை. அறிவிப்புக்கு முன்பு ஐந்து மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இப்போது அதைவிட அதிக நேரம் கட் செய்கிறார்கள். இதனால் தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. சேலத்தைப் பொறுத்தவரை பவர்லூம், சேகோ ஃபேக்டரி, வெள்ளிப் பட்டறை, ஸ்டீல் உற்பத்தி உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறுதொழில்கள் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.
நாமக்கல்லில் நேரம் தெரியவில்லை!
முன்பு 8 மணி நேரம் 10 மணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதால் அதற்கு தகுந்தாற்போல் தொழில் நிறுவனங்கள் பணிகளை செய்தன. இப்போது கால நிர்ணயம் இல்லாமல் மின்வெட்டு இருப்பதால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிவிட்டன.
நாமக்கல்லில் லாரி பாடி பில்டிங், வெல்டிங் பட்டறைகள், ஆட்டோ மொபைல்ஸ் வொர்க் ஷாப், பள்ளிப்பாளையம் பவர்லூம் தொழில்கள் என பல தொழில்கள் முடங்கிவிட்டன. நாமக்கல் பகுதிகளில் இயங்கிவரும் தனியார் பள்ளி நிர்வாகங்களும் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன.
விருதுநகரில் ஆகா!
விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜூன் 1-ம் தேதிக்கு முன், தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை மின்தடை இருந்தது. பிறகு ஜூன் 5-ம் தேதிக்குப் பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இப்போது தினமும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாக மின்தடை குறைந்துவிட்டது. இப்போது எவ்வளவோ தேவலாம் என்று கருதுகின்றனர் சிவகாசி உள்பட மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவன நிர்வாகிகள்.
மதுரையில் படுத்துவிட்ட நெசவுத் தொழில்!
மதுரை மாநகருக்குள் எந்த நேரம் மின்சாரம் போகும், எப்போது வரும் என்று சொல்ல முடியாது. புறநகர் பகுதிகளில் வழக்கம்போல காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு. மதுரையைப் பொறுத்தவரை சில்வர் பட்டறைத் தொழிலும் இரும்பு பட்டறைத் தொழிலும் பவர்கட்டால் படுத்துவிட்டது. நெசவுத் தொழிலாளர்கள் நிலையோ பரிதாபம்.
சமீபத்தில் பெய்த திடீர் மழையாலும் சூறாவளி காற்றாலும் சாய்ந்த மின்கம்பங்களை இன்னும் சரிசெய்யவில்லை. அதனால் கூடுதல் மின் பிரச்னையால் தவிக்கிறார்கள் மக்கள்.
தேனி மருத்துவமனையிலும் மின்வெட்டு!
இரவு, பகல் எல்லா நேரமும் மின் தட்டுப்பாடு இருக்கிறது. குழந்தைகள், வயோதிகர்கள் இரவு நேரங்களில் தடைப்படும் மின்சாரத்தால் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மருத்துவமனைகளின் நிலைமையும் இதுதான். விவசாயிகளின் நிலைமை இன்னும் சோகம். குறைந்த மின்னழுத்த மின்சாரம் வருவதால் பல இடங்களில் மோட்டார்கள் பழுதாகிவிட்டன.
கிருஷ்ணகிரியில் காரணம் தெரியாதவில்லை!
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது தவணை முறையில் மின்தடை ஏற்படுகிறது. 3-ம் தேதி அதிகபட்சமாக மூன்று மணி நேரம் மின்வெட்டு இருந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்த காரணத்தால் எண்ணற்ற மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனால் பல இடங்களில் மின்சாரம் இல்லாததற்கான காரணம் மின்வெட்டினாலா, கம்பங்கள் சாய்ந்ததனாலா என்பதே மக்களுக்குத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த மும்முனை மின்சாரத்தை இப்போது மேலும் இரண்டு மணி நேரம் அதிகரித்திருக்கிறோம் என்கிறார்கள் மின்வாரியத் துறையினர்.
தருமபுரியில் அப்பாடா!
இங்கு ஓரளவுக்கு மின்வெட்டு சரிசெய்யப் பட்டுவிட்டது என்கிறார்கள். ஐந்து நிமிடம், 10 நிமிடம் என்று ஏற்படும் மின்வெட்டுக்களைச் சேர்த்தால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருப்பது இல்லை. அதனால் மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
முதல்வரின் ஆணைக்கு அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள்... மின்சாரம்?
படம்: தி.விஜய்
போர்க்கால அடிப்படையில் திட்டங்கள்!
''தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் இப்போது கிடைக்கத் தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதா புதிதாகத் தொடங்கப்போவதாக அறிவித்த மின் திட்டங்களால் இல்லை. ஜெயலலிதா தனது அறிக்கையில் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.
 இந்த மின்சாரம் யாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமானால் அனைவரும் விவரங்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்'' என்று அனல் பறக்கப் பேசுகிறார்  டாக்டர் ராமதாஸ்.
பதிலுக்கு மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''முதலமைச்சர் ஜெயலலிதா மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையை நீக்கும் வகையில்  போர்க்கால அடிப்படையில் 2,500 மெகாவாட் மின்திறன் கொண்ட திட்டங்களை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார். முந்தைய மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தி திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா முடுக்கிவிட்டதன் காரணமாக ஐந்து புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியை தொடங்கி 2,500 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவு திறன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, நடுத்தர கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 500 மெகாவாட் மின்சாரம் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல், 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் இருந்து 562 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்து வருகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 15 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் இப்போது 222 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இது படிப்படியாக, ஆகஸ்ட் மாதம் முதல் 2 ஆயிரம் மெகாவாட் ஆக உயரும். மீதமுள்ள 1,330 மெகாவாட் மின்சாரம் வரும் 2015-16-ம் ஆண்டில் இருந்து கிடைக்கும். தி.மு.க ஆட்சியின் இறுதியில் 8 ஆயிரம் மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி, கடந்த 3 ஆண்டு காலத்தில்,  12,995 மெகாவாட் என்ற உச்ச அளவு மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவேற்றியுள்ளது.
2015-ல் 14,500 மெகாவாட் மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிச்சயம் நிறைவேற்றும். நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஆண்டு முழுவதும் கிடைக்கும் அனல்மின் சக்தியைக்கொண்டே தமிழகத்தின் மின் தேவை முழுமையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
கணக்கெல்லாம் சரிதான்... காத்து வரலையே
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)