நூறு பேர் பல்லை உடைத்த காவல்துறை அதிகாரி பெயர் பல்வீர்சிங்

"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்"

ஒன்றரை ஜல்லி கொண்டு காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் சுமார் நூறு பேர்களின் பல்லை உடைத்த ASP  பெயர் 'பல்'வீர்சிங், நல்லவேளையாக இவர் பெயரில் இப்படி ஒரு அர்த்தம்  இவருக்கு இருப்பது தெரியவில்லை,தெரிந்திருந்தால் எத்தனை அவல பெருமிதம் கொண்டிருப்பார் இவர்,
 NEET எழுதி dentistry துறைக்கு போக வேண்டியவர் ,போலீஸாகி போகிற வருபவர்கள் பல்லை உடைத்திருக்கிறார், பணி இடை நீக்கம் ஆகியுள்ளார், மேலும்  பல நடவடிக்கைகள் இவர் மீது பாயக் காத்திருக்கின்றன.

இவரது SI உறவினர்  ராஜஸ்தான் காவல்நிலையம் ஒன்றில் பிடிபடும் dacoit களை இப்படி பல்லை உடைத்து விடுவதை சிறு வயது முதல் pervert போல பார்த்து வளர்ந்திருக்கிறார், IIT ல் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து ஐந்து வருடங்கள்  நல்ல வேலையில் இருந்தவர், மனதுக்குள் sociopath சிந்தனைகள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க, பல்லை உடைக்கும் வன்முறைக்கு மனமும் கையும் குறுகுறுக்கவே சிவில் சர்வீஸ் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார் , அம்பை காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்,

அப்படி காவல் நிலையம் வந்தவர்கள் சுமார் நூற்றுக்கணக்கானவர்களை கருங்கல் ஒன்றரை ஜல்லியால் பல்லை உடைத்திருக்கிறார், தட்டி உடைத்த கையோடு கருங்கல்லை வைத்து பல் ஈறுகள் கன்னத்தின் உள் சுவர்களை,உதடுகளை உரசி கிழித்துள்ளார், தன் இடது கை கொண்டு சிக்கியவர்களின் விதைப்பைகளை கசக்கி திருகி உள்ளார், லாடம் அடித்த பூட்ஸ் கால்களால் சிக்கியவர்கள் உயிர்நிலையில் மிதித்து கதறவிட்டுள்ளார், punching machine எந்திரம் கொண்டு காது மடலில் துளையிட்டு தூக்கியிருக்கிறார், இவரை நியாயமாக அவன் என்று தான் எழுத வேண்டும், ஆனால் சிவில் சர்வீஸ் தேறிய அதிகாரி என்பதால் கனத்த இதயத்துடன் இந்த  'ர்' விகுதி .

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவது விதி, அப்படி பொதுவில் சிக்கி பிடிபட்டிருக்கிறார் 'பல்' வீர்சிங், விசாரணைக்கு வந்தவர்கள் எத்தனை விளக்கினாலும் இவருக்கு புரியாதாம் செவிகளில் ஏறாதாம் பாருங்கள், காரணம் இவருக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாதாம், இரண்டு நிலைய காவலர்கள் தோள்களை அழுத்திப் பிடித்துக் கொள்ள இவர் dentist லாவகத்துடன் வெறும் கூரிய ஒன்றரை ஜல்லி கொண்டு விசாரணைக்கு வந்தவரின் பல்லைத் தட்டி வீழ்த்துவதில் வித்தகராம்.

இது போல மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கும் பல்வீந்தர் சிங் மாட்சிமிகு காவல்துறை சீருடை அணிய தகுதி அற்றவர், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை முயற்சி வழக்குகள் பதிந்து சிறை தண்டனை வழங்க வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் இது போன்ற மிருக குணம் கொண்ட அதிகாரிகளை விடக்கூடாது.

"பல்" வீர்சிங் நீங்கள் வலிய சரணடைந்து மனநல சிகிச்சைகள் ஏற்று சிறை தண்டனை அனுபவித்து,  நீங்கள் பல்லை உடைத்த அத்தனை பேருக்கும் உங்கள் சம்பளத்தில் இருந்து implant செய்ய பணம் கொடுத்து மீண்டும் சரிசெய்வது உங்கள் மனசாட்சிக்கு நல்லதாகும்,  தார்மீக அறமாகும்.

உங்களுக்கு சிறை தண்டனைக்கு பின் காவல்துறையில் எதிர்காலம்  என ஒன்று மிச்சம் இருந்தால் தான் என்ற அகந்தை விட்டு, சக உயிரை மதித்து  திருந்தி வாழுங்கள்,

வெள்ளி அன்று தோன்றிய உதட்டு மச்சம் போன்ற அதிசய சுக்ரன்

சென்ற வெள்ளி அன்று இப்படி உதட்டுக்கு கீழ் மச்சம் போல இருந்த சுக்கிரன் சனி அன்று கழுத்துக்கு கீழ் மச்சம் போல ஒரே நாளில் இறங்கிவிட்டார்.

கண்டி கதிர்காமம் முருகன் ரகசியம் தெரியுமா?

"கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா" என்று கந்தசஷ்டி கவசத்திலும், "கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்" என்று கந்த குரு கவசத்திலும்  பாடப்படும் கண்டி கதிர்காமம் கந்தசுவாமி மிகவும் தனித்துவமான சந்நிதி கொண்ட கோயில்.

உருவ வழிபாடுக்கு மிகுந்த முக்கியம் தரும் இந்து மதத்தில் இறைவன் திருவுருவத்தை பக்தர்கள் பார்க்க முடியாத அபூர்வமான கோயில், நாட்டின் அதிபர் கூட மூலவரை தரிசிக்க முடியாத கோயில்.
சிங்கள பூசாரிகள் மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்து பக்தர்களுக்கு கனத்த திரையை ஓரமாக சிறிதே விலக்கி பித்தளை வேல்களை பிரசாதமாக வழங்குகின்றனர், எத்தனை பக்தர்கள் வந்தாலும் வேல்கள் வழங்கும்படி ஆலய நிர்வாகம் வேல்களை பூஜையில் எப்போதும் வைத்திருக்கின்றனர்.

தெனாலி திரைப்படத்தில் தெனாலி சோமன் கமல்ஹாசன் கூட கையில்  ஒரு பிரசாதமாக தந்த கதிர்காமம் கந்தசாமி வேல் எப்போதும் வைத்திருப்பார், அதை வாங்கி வைத்த  மனோதத்துவ நிபுனர் ஜெயராம்  கோட் பாக்கெட்டில் இருந்து திரும்ப வாங்குகிறேன் என அவரின் சட்டை பாக்கெட்டையே கிழித்து விடுவார் தெனாலி.

கமல்ஹாசன் என்றாலே Detail, ஆத்திகர்கள் பலருக்கும் தெரியாத இந்த வேல் பற்றிய சுவாரஸ்யத்தை ஒரு நாத்திகர் இருபது வருடங்களுக்கு முன்னால் தன் படத்தில் வைத்து அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார் பாருங்கள்.

PS: கோயில்பட்டி குமரேசன் மலை முருகன் கோயில்  கண்டி கதிர்காமத்தில் இருந்து மண் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்.

இங்கு மூலவர் வேல் தான்,  கண்டியில் திரையை மட்டுமே தரிசனம் செய்ய முடியும், கோயில்பட்டியில் பக்தர்களுக்கு தரிசனம் உண்டு ,
முற்காலத்தில் கோவில்பட்டியிலிந்து இலங்கை சென்று வணிகம் செய்து வந்த வணிகப்பெருமக்கள், இலங்கையிலுள்ள கண்டி கதிர்காமமுருகன் ஆலயத்தை வழிபாடு செய்து வியாபரம் செய்ய விரும்பினர். ஆனால், இவர்கள் செல்லும் நேரமெல்லாம் இவ்வாலயத்தின் நடை சாத்தப்பட்டிருக்கும். அதனால், ஏமாற்றமடைந்த வணிகப்பெருமக்களின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அத்திருத்தலத்திலிருந்து மண் எடுத்துவந்து, தம் நகரிலுள்ள அத்தைகொண்டான் பகுதியில் முருகப்பெருமானின் திருத்தலம் அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்பொழுது அங்குவந்த முனிவர் ஒருவர், ஆகம விதிகளின்படி அமைந்துள்ள இவ்வூர் மிகவும் சிறப்புவாய்ந்தது என்றும், முருகப்பெருமானின் ஆலயம் இங்குள்ள குன்றின்மேல் இருப்பதே சிறப்பு என்றும் கூறினார். அதன்படி இவ்வூரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள சொர்ணமலையின் மீது முருகப்பெருமானை வேல் வடிவில் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி, மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி, பைரவர் ஆகிய சந்நிதிகளையும் அமைத்து வழிபாடு செய்து கதிர்வேல்முருகனின் அருள்பெற்று  வந்தனர்.

நீங்கள் வாங்கும் அடுக்ககத்திற்கு எப்படி Invoice Bill கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.

நீங்கள் வாங்கும் அடுக்ககத்திற்கு எப்படி Invoice Bill கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.

நீங்கள் ஒரு அடுக்ககம் வாங்கப்போனால் எப்படி உங்கள் தலையில் மிளகாய் அரைக்கின்றனர் என்று பொறுமையாக படியுங்கள்.

நீங்கள் கிராம் கணக்கில் வாங்கும் தங்க நகைக்கும் சதுரடி கணக்கில் வாங்கும் அடுக்ககத்திற்கும் அதன் Invoice பில் தொகையில் நிறைய ஒற்றுமை உள்ளது.

இது பெருங்களத்தூர் GST road ல் உருவாகி வரும் அடுக்குமாடி குடியிருப்பு.

இந்த Invoice பில் 2.5 BHK (அதாவது 2 படுக்கை அறை + 1 study ) அடுக்ககத்திற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரியில் விளம்பரம் செய்யப்பட்ட விலை = 4995₹/ சதுரடிக்கு

நீங்கள் அந்த builder ன் booking office ற்கு போனவுடன் அது 5205 ₹ / சதுரடி ஆகிவிடுகிறது 

ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்தது 4 ஆம் மாடியாம், (எனவே கட்டுமான பொருட்களை lift செய்ய வேண்டி கூடுதலாக 210₹ / சதுரடி உங்களிடம் பெறப்படுகிறது)(மாடி மேலே போக போக இந்த தொகை கூடும்)

சரி உங்கள் அடுக்கத்தின் கார்பெட் ஏரியா(அதாவது சுவர்கள் சேர்க்காத தரைதளப் பரப்பு) 1038.5 சதுரடி

உங்கள் super built up area 1455 சதுரடி (சுவர் பரப்புக்கு இந்த 416.5 சதுரடியாம் (4 சதுரம்,~ 1 cent), இந்த 416.5 சதுரடிக்கு 1 bhk flat வரும் என்று படிக்காதவர்களுக்கு கூட தெரியும்) 

சரி இப்போது பெருக்கல் கணக்கு

1,455×5,205.       =7573275
கார் பார்க்கிங் =  225000
மொத்தம்           =7798275
இதற்கு 5% ஜிஎஸ்டி வரி =389914
ஆக மொத்தம் = ₹8188189

இத்துடன் முடியவில்லை

க்ளப் ஹவுஸ் கட்டணம். (நீச்சல்குளம், jogging track, playground)       = ₹100000
development fees   (திட்ட அனுமதி தொகை) 54/ சதுரடி =   ₹78570
sewage plant,diesel genset,etc  =144/சதுரடி = ₹209520

இவை எல்லாம் சேர்த்தால் = ₹545230
இத்துடன் மேலே உள்ள தொகை ஜிஎஸ்டி நீங்கலாக கூட்டினால் = ₹8343505

இத்துடன் முடியவில்லை

ஒப்பந்த தொகை ₹8343505 க்கு  5 % ஜிஎஸ்டி வரி = ₹417175

ஆக மொத்த தொகை = ₹8760680

இத்துடன் முடியவில்லை

இதற்கு legal fee = ₹29500
corpus fund (அதாவது முறைவாசல் கட்டணம்) = ₹75000
maintainance charges (அதாவது மற்றொரு முறைவாசல் கட்டணம்) = 36/ சதுரடி = ₹61808

மொத்த கட்டணம் = ₹166308

இந்த மொத்த கட்டணத்தை அந்த மொத்த கட்டணத்துடன் கூட்டினால் வரும் தொகை = ₹8926989

ஆக மொத்தம் எண்பத்தொன்பது லட்சத்து இருபதாயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தொன்பது ரூபாய் மட்டுமே

இப்போது நீங்கள் தரும் அதிக விலையை கணக்கிடுவோம்

₹8926989 ÷ 1455= 6135 ₹

விளம்பரம் செய்யப்பட்ட விலை ₹ 4995 ஐ இதில் கழித்தால் 1140₹ வருகிறது

இவர்கள் செய்த வெட்டி விளம்பரச் செலவினங்களுக்கு உங்கள் கணக்கில் இருந்து ஒரு சதுரடிக்கு 1140₹ திருடப்படுகிறது.

தவிர super built up area என்ற வகையில் சுமார் 300 சதுரடி அதிகம் வைத்து கணக்கிட்டுள்ளனர், நியாயமாகப் பார்த்தால் ஆயிரம் சதுரடி carpet area அடுக்ககத்துக்கு 10 சதம் சுவர் பரப்பு வரலாம் = 1100,

அத்துடன் 10 சதம் common area வந்தால் 110 சதுரடி = ஆக மொத்தம் 1210 சதுரடி அதிக பட்சம் வரலாம், ஆனால் இவர்கள் 1455 சதுரடி புரட்டு கணக்கு காட்டுகின்றனர்.
ஆக உங்கள் பணத்தை 360° சுற்றுபோட்டு திருடுகின்றனர்.

காதுள்ளவன் கேட்கக்கடவன்,உங்கள் பாடுபட்ட பணத்தை இப்படி பேராசை கொண்ட கட்டுமானர்கள் கட்டும் அடுக்ககங்களில் கொண்டு போய் முடக்கும் முன் நன்கு யோசியுங்கள்.

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339

#அடுக்ககம்

இயல் இசை நாடகத்துக்கு அன்றைய நாள் மதிப்பு பாருங்கள்


8-9-1936 ஆம் வருடத்திய D.K.பட்டம்மாள் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி மைலாப்பூர் சங்கீத சபாவில் நடந்ததை அறிவிக்கும் சுவரொட்டி இது.

அன்று ஆண்கள் கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என தம்மை நிலைநாட்டிய மூவரில் D.K.பட்டம்மாள் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

ஏறக்குறைய 87 ஆண்டுகளுக்கு முன்பு, இயல் இசையும் நாடகமும்  எப்படி செழித்தோங்கியது என்பதன் உதாரணம் , சுதந்திரத்திற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு, சபாக்களில்  கட்டணம் தந்து நுழைவுச்சீட்டு வாங்கிப் பார்த்துள்ளனர் பாருங்கள்.

முன்பதிவு இருக்கை - 1ரூ
முதல் வகுப்பு இருக்கை  - 12 அணா
இரண்டாம் வகுப்பு - 8 அணா
சிறார்களுக்கு   - 4 அணா

கோடாலிமனையில் திறம்பட வீடு வடிவமைப்பது எப்படி?

கோடாலி வடிவ மனையை வாங்காமல் தவிர்க்க வேண்டும், அது பூர்வீக சொத்து பாகம் பிரிக்கும் போது கிடைத்த சொத்து என்றால் வடகிழக்கில் தென்கிழக்கில் வாசல் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், கோடாலி மனையில் எக்காரணம் கொண்டும் எல்லை மீது அணைத்து இடம் விடாமல் கட்டக்கூடாது, க்ரில் வைத்த பால்கனி போன்றவை விதிவிலக்கு, பால்கனிகளை சுவர் எழுப்பி மூடக்கூடாது, 

கோண சூத்திரக்கோடு தென்மேற்கு முதல் வடகிழக்குக்கு  பாதைக்கு ஒன்றும் மனைக்கு ஒன்றுமாக வரைந்து பார்த்து அக்கோட்டின் மீது கீழ்நிலை நீர் தொட்டி,செப்டிக் டேங்க், ஆழ்குழாய் கிணறு அமையாமல் பார்த்து வடிவமைக்க வேண்டும், இது தவிர மனையின் நடுப்புள்ளி கண்டறிந்து சக்தி சக்கரம் வைத்து 360 கோடுகள் வரைந்து நல்ல சக்தி வரும் பாகத்தில் கதவுகள் ஜன்னல்கள் அமைக்க வேண்டும்.

கோடாலி மனையில் சமையலறை  தென்கிழக்கில் மட்டும் வர வேண்டும், தென்மேற்கில் கஜானா அல்லது ஒப்பனை அறை வர வேண்டும், குடும்பத்தலைவர் படுக்கை தெற்கில் தலை வைக்குமாறு அமைய வேண்டும், கோடாலி மனையில் அமையும் படுக்கைகள் தெற்கில் அமைவது வீரியமான வாஸ்து தோஷம் களையும்,குடும்பத்தாருக்கு ஆரோக்கியத்தை தரும்.

கோடாலி மனையில் வடக்கு பார்த்து நுழைவது போல வாசல் கதவு அல்லது கிழக்கு பார்த்து நுழைவது போல வாசல் கதவு வைப்பதே சரி, கோடாலி மனை அல்லது எந்த மனையிலும் வடகிழக்கில் மாடிப்படிகள் அமைக்க கூடாது முதல் விதியாக தென்மேற்கில் அமைக்கலாம்,அது முடியாத பட்சத்தில் தென்கிழக்கில் அமைக்கலாம், வடமேற்கு மூன்றாவது  பட்சம், இதில் தென்கிழக்கில் மாடிப்படிகள் மின்தூக்கி அமைக்கப்பட்டு, மனை மற்றும் வீட்டின் உயரமான பகுதியாக மேல்நிலை நீர் தொட்டி தென்மேற்கில் அமைக்கப்பட்டுள்ளது, அது போல வடகிழக்கில் மொத்த மழைநீர் வடிந்து வெளியேறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது, கிழக்கு பார்த்த பூஜை அறை, பெரிய சமையலறை சிறிய பால்கனி, குடும்பத்தலைவர் படுக்கை அறைக்கு சிறிய பால்கனி என வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடு வடிவமைக்கையில் உடன் interior design ஒருங்கே சரியான ergonomics அளவில்  ஃபர்னீச்சர்களை வரைந்து வடிவமைக்க வேண்டும்,சுவற்றில் படுக்கை அமைகையில் symmetry அமைய வேண்டும், நல்ல காற்று உள் நுழைந்து பிராண சக்தி தந்து வெளியேற இரண்டு ஜன்னல்கள் அமைக்க வேண்டும், படுக்கை அறை வெளியே இருந்து பார்க்கையில் படுக்கை அறை தெரியங்கூடாது, 

இந்த கோடாலி மனை பரப்பளவு - 1759 சதுர அடி

GF தரைத்தளம் ஒற்றை படுக்கை அறை வீடு  மற்றும் பொதுப்படிகள் மின்தூக்கி கீழ்நிலை நீர்தேக்க தொட்டி செப்டிக் டாங்க் பைக் பார்க்கிங் கொண்டது, கட்டுமான பரப்பளவு 755 சதுர அடி, 

FF,SF முதல் மாடி, இரண்டாம் மாடி விசாலமான இரட்டை படுக்கை அறை வீடு  மற்றும் பொதுப்படிகள் மின்தூக்கி கொண்டது, கட்டுமான பரப்பளவு 1056 சதுர அடி ஒரு தளத்துக்கு, , 

மொட்டை மாடி, பொதுப்படிகள் மின்தூக்கி பராமரிப்பு அறை கொண்டது, கட்டுமான பரப்பளவு 140 சதுர அடி , மொட்டை மாடியில் 8 வடிவ நடைபாதை, சோலார் சக்தி பேனல்கள் 2 கிவாட் உற்பத்திக்கு, வார இறுதி கொண்டாட்டங்களுக்கு barbeque , உணவு மேஜை,சிறுவர் விளையாட்டு இடம், ac external unit வைக்க இடம், மேல் நிலை நீர் தொட்டிகள் இரண்டு எண்ணிக்கையில் அமைய வேண்டிய இடம் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டது, இதை bespoke design, passive design, vasthu, fengshui intergrated interior design என எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம், landscape design இன்னும் இதற்கு செய்யவில்லை , குடும்பத்தார் ராசி நட்சத்திரப்படி வடிவமைக்கப்படுகிறது அதற்கு தனி plan பகிர்கிறேன்.

#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

படுக்கையின் பின்னே அமைந்த ஜன்னல்கள் தரும் துர்அதிர்ஷ்டம்


வீட்டை வடிவமைக்கையில் அறைகளின் உள்ளே அமையும் ஃபர்னீச்சர்களையும் சரியான நிஜ அளவில் வரைந்து தான் வடிவமைக்க வேண்டும்.

முதல் இரண்டு இணைப்பு படங்களில் உள்ளது போல  படுக்கைக்கு பின்னால் ஜன்னல்களை குருட்டாம்போக்கில் அமைக்கக்கூடாது,

உதாரணமாக ஒரு படுக்கை அறை 16 அடி அகலம் என்றால் ,அதன் நடுவில் தான் படுக்கை அமைய வேண்டும், படுக்கையின் அகலம் 6அடி போக மீதம் வரும் 10 அடியை இரண்டாக வகுந்து 4 அடி அகலத்துக்கு இரண்டு ஜன்னல்கள் அமைப்பதே சரியான முறை, 

இதன் மூலம் ஒரு ஜன்னலில் உள்ளே வரும் நல்லகாற்று அறைக்குள் சுழன்று பிராண சக்தி வழங்கி அடுத்த ஜன்னல் வழியே வெளியேறுவது கண்கூடு,வெறும் 10 அடி அகல அறை என்றால் தான் என்றாலும் இரண்டு எண்ணிக்கையில் 2 அடி அகல ஜன்னல்கள் அமைத்து படுக்கையை நடுவே அமைப்பதே சரியாகும்,

 இம்முறையில் வடிவமைப்பது மிகச்சிறந்த அழகிய symmetry  அந்த சுவற்றில் ஏற்படுத்தும் , வாஸ்து மற்றும் சீனவாஸ்து ஃபெங்ஷூய் பரிந்துரைக்கும் உற்ற தீர்வும் இதுவே.

இப்படி ஜன்னல்கள் குருட்டாம் போக்கில் படுக்கைக்கு பின்னே அமைப்பது asymmetry ஆக இருக்கும், அழகியலாகவும் இருக்காது, மிகுந்த அவலம் தரும் அமைப்பும் கூட, 

வீட்டிற்குள் வரும் அதிர்ஷ்டத்தை நல்வாய்ப்புகளை கெடுத்து விடும் அமைப்பு, கணவன் மனைவி ஒற்றுமை,குழந்தைகளிடம் அன்பு பாசத்தை சீர்குலைக்கும் அமைப்பு இது, 

பொறியாளர்கள் தாமே வடிவமைத்து வீடு கட்டித் தருகையில் அவர்களுக்கு aesthetics sense ,interior design knowledge , vasthu ,feng shui பற்றிய அடிப்படை புரிதல் இன்றியோ cost cutting  செய்யவோ ஓரு ஜன்னல் தான் அமைப்பர்,

எனவே வீடு கட்டுபவர்கள், அடுக்ககம் வாங்குபவர்கள் பொறியாளர்களுக்கு ,
ஒப்பந்ததாரர்களுக்கு இந்த முக்கிய அம்சத்தை புரியவைத்து  symmetry வரும்படி படுக்கைக்கு இருபுறமும் கண்களைப் போல சம அகலத்தில்  ஜன்னல்கள் அமைத்து நலமும் வளமும் பெற வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கமாகும்.

While designing the house, the furniture inside the rooms should be drawn and designed in correct size.

Windows should not be placed blindly behind the bed as in the first two attached pictures.

For example, if a bedroom is 16 feet wide, then the bed should be placed in the middle of it. If the width of the bed is 6 feet, divide the remaining 10 feet into two and make two windows of 4 feet width.

Through this design , the fresh air coming in through one window circulates into the room and gives the life energy and exits through the next window. Even if it is only a 10 feet wide room, it is correct to make two 2 feet wide windows and place the bed in the middle.

Designing in this way creates a beautiful symmetry on the wall, and this is the best solution recommended by Vastu and Chinese Vastu Feng Shui.

Setting the windows behind the bed in such a blind way will be asymmetry, not aesthetic, and even a very distressing arrangement.

When engineers design and build houses by themselves, design doesn't have aesthetics sense, interior design aspects, basic understanding of vasthu and feng shui, for  cost cutting aspect , they construct with one window.

So house builders, flat buyers, engineers,
 The purpose of this post is to make the contractors understand this important aspect and to get symmetry by installing windows of equal width like eyes on both sides of the bed to get health and prosperity.

#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

A23 சாம்சங் போன் வாங்காதீர்கள்


சாம்சங் A 23 4G அல்லது 5G என வாங்க எண்ணுபவர்கள் தயவு செய்து வாங்காதீர்கள், அல்லது இந்தியாவில் வாங்காதீர்கள், காரணம் இதில் 
1.inbuilt ஆக screen recorder இல்லை, 2.inbuilt ஆக multi clip board இதன் keyboard ல்இல்லை,
3.gallery உள்ளே மிகவும் slow ஆக படங்களை திறக்கும் , பூ மலருவது போல slow,8gb ram என பெயர் ஆனால் 4gb ram போன் வேகம் தான் உணர முடியும்.
4. 128 gb storage என்று பெயர் , ஆனால் class 10 வேகம் கொண்ட UHC வகை Storage நிச்சயம் இதில் இல்லை,

ஆகமொத்தம் மிகுந்த தண்டமான போன், நீங்கள் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் A23 android version 13 க்கு 5.1 UI version update ல் இந்த அடிப்படையான முதல் இரண்டு வசதிகளை கூட கொண்டு வர முடியவில்லை, 

எனக்கு மிகுந்த ஏமாற்றம் தந்த மாடல் A23, இந்த புத்தி வர செலவழித்த தொகை 20000₹, காரணம் 6 மாதம் முன்பு review எதிலும் இதை சொல்லவில்லை, அப்பட்டமான paid review, ஆகா ஓகோ,மானே தேனே பொன்மானே வகையரா.

நான் ஒரு போன் வாங்கினால் 5 வருடங்கள் உபயோகிப்பேன், officer training academy போல தினசரி drill, போனை to the extent வேலை வாங்குவேன் , முன்பு என் சாம்சங் A6+ (2017) மாடலை அமீரகத்தில் வாங்கினேன் , அதில் இருந்த inbuilt screen recorder இந்த புதிய A23 மாடலில் இல்லை, 
முன்பு என் A6+ல்  inbuilt ஆக multi clip board இந்த புதிய A23 மாடலில் இல்லை,அந்த வேகம் இதில் இல்லை, இவை சிறு உதாரணங்கள் தான்.

இந்தியாவில் தயாராகும் சாம்சங் லென்ஸ் தரம் மட்டமானது, காரணம் இந்தியருக்கென்று தயாரித்து சந்தைப்படுத்தும் மெத்தனத்தை இந்த A23 ல் கடந்த ஆறு மாத உபயோகத்தில் கண்டேன், வருடங்கள் ஆக ஆக தரம் உயரும் பயனர் வசதிகள் உயரும் என எண்ணி தானே நாம் ஒவ்வோருவரும் நினைத்து அதே brand அதே series ,latest model ,வாங்குவோம்,

 ஆனால் நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு a6+ ல் உணர்ந்த தரம் எதுவும் இதில் இல்லை, கேமராவில் படங்கள் தரம் எல்லாம் zoom செய்து எடுக்கையில் pixel ஆகி பல்லிளிக்கிறது,

சமீபத்தில் நண்பர் சாம்சங் M33 5G  வாங்கினார் ,அதில் இந்த inbuilt screen recorder மற்றும் ,multi clip board keyboard வசதிகள் இருந்தன, samsung தளம்,amazon தளத்தை விட flipcart ல் தான் 1000₹ விலை குறைவிறைவு இவை கண்டு உணர்ந்தவை,

இப்போது charging cable தருகின்றனர்,ஆனால் adapter தருவதில்லை,அட்டை பெட்டி அளவும் அட்டைபெட்டி எடையும் கூட குறைந்துவிட்டதையும் அறிந்தேன்.

 சாம்சங் A Series ஐ விலை அதிகம் வைத்து விற்கிறது ,ஆனால் பயனர் வசதிகளை குறைத்து ஏமாற்றுகிறது,  சாம்சங் M series ஐ விலை குறைத்து  விற்கிறது ,ஆனால் பயனர் வசதிகளை அதிகம் தருகிறது என்பதும் நன்கு நிரூபனமாகிறது.

புளி சாதத்துக்குள் முட்டை வைத்து இது பிரியாணி என விற்பவன் போவான் போவான் ஐயோன்னு போவான், இந்த பதிவு நான் ஏன் சாம்சங் வாங்கப் போறேன் ?, நான் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போறேன் என்று கேட்பவர்களுக்கானதல்ல .

தென்மேற்கு வாசல் கொண்ட அலுவலகம் வாஸ்து குறைபாடு தீர்வு

தென் மேற்கு வாசல் அலுவலகத்துக்கோ அல்லது வீட்டுக்கோ அமைவது விரையஸ்தானத்தில் வாசல் அமைவதற்கு ஒப்பாகும்.

தேனாம்பேட்டையில் பழைய மாடி வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றி வளைத்து வாடகைக்கு விட்டவர்கள், அதீத வாடகையும் அதீத முன்பணத்தையும் வாங்கிக் கொண்டவர்கள், மிக முக்கியமான வாஸ்து மாற்றங்களை செய்யாமலே வாடகைக்கு விட்டுள்ளனர், வாடகைக்கு எடுத்தவர்கள் கணவன் அமிலம் சார்ந்த சுத்தம் செய்யும் சாதனங்கள் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துகிறார், 

மனைவி மருத்துவமனை சார்ந்த நோய் கண்டறியும் ஊசிகள் test kit இன்னபிற மருந்துகள் இவற்றை சந்தைப்படுத்துகிறார், கடன் மேல் கடன் , ஆறுமாதம் ஆகியும் கொள்முதல் செய்த பொருட்களுக்கான தொகையை வாங்கிய வாடிக்கையாளர்கள் தராமல் இழுத்தடித்து பல லட்சம் வாராக்கடனாக இருக்க, DfD சென்று வாஸ்து பார்த்தோம்,

 அலுவலகத்தின் தலைவாசல் சிறிய இரும்பு கேட் தரைதளத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பாகத்தில் இருந்தது, மாடியில் முதல் தளத்தில் அலுவலக நுழைவு கதவு தென்மேற்கில் அமைந்திருந்தது, தெற்கில் நீண்ட க்ரில் இருந்தது, தென்மேற்கில் அலுவலகத்தின் ஆதார சக்தி சென்று சேர வேண்டிய தென்மேற்கில் நீளமான க்ரில், உடன் பிரதான் நுழைவு வாயில், அதன்  பின்பு ஈசான்யத்தில் கழிவறை கோப்பை, 

அதை உடனே மாற்றி pantry இருந்த அறையில் மாற்றி வைத்தோம், முதலாளி இருக்கைகள், தொழிலாளி இருக்கைகள், எத்தனை ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும், எத்தனை ஜன்னல்கள் நிரந்தரமாக மூடி வைக்க வேண்டும்,புதிய Safe, file storage  அமையவேண்டிய இடங்கள் தெளிவாக குறித்துத் தரப்பட்டன,

 வாஸ்து தீர்வுகளுக்குண்டான உரிய வர்ணங்கள் அந்தந்த சுவற்றில் தீட்டப்பட்டன,ஒன்றரை மாதங்களில் நிலுவையில் இருந்த கடன்கள் முற்றிலும் வசூலாகிவிட்டன, வங்கியில் பத்துலட்சம் ரூபாய்க்கு over draft தொகை collateral எதுவுமின்றி கிடைத்தது , சண்டித்தனம் செய்த ஊழியர்கள் அத்தனை பவ்யமாக சொன்னபடி கேட்கின்றனர், சுணங்கவில்லை, சம்பளம் 1 ஆம் தேதியே அனைவருக்கும் தந்துவிட்டோம், அதன் பின் கணவன் மனைவி நாங்கள் நல்ல தொகையை நெடுநாட்களுக்குப் பின்னர் சம்பளமாக எடுத்துக் கொண்டோம் என்று மனமார நன்றி கூறினார் வாடிக்கையாளர், நான் என் வாடிக்கையாளர் விபரங்களை privacy கருதி வெளியிடுவதில்லை, 
ஆத்மார்த்தமாக செய்யும் 
எதுவும் ஜெயிக்கும் என்பதை கண்டநாள் இன்று. 

Placing a south west Main door in an office or home is similar to placing a door in corner of loss.

 Those who rented out an old storied house in Thenampettai converted it into an office, paid exorbitant rent and advance, rented it without making any major Vastu changes, renter's husband markets acid-based cleaning products,

The wife is marketing hospital-based diagnostic injections, test kits and other medicines, loan after loan, customers who have bought the goods for six months without paying and have to pay several lakhs a week, we went to DfD and saw the vastu.

 The main door of the office was a small iron gate in the south-west corner of the ground floor in the Rahu part, on the first floor the office entrance door was located in the south-west, there was a long grill in the south, in the south-west a long grill in the south-west where the source energy of the office should go and store and recharge, along with the main entrance gate, and then the toilet commode in the north east,

We changed it immediately and moved it to the room where the pantry was, boss seats, worker seats, how many windows should be kept open, how many windows should be permanently closed, the places where the new safe, file storage should be placed were clearly indicated.

The appropriate colors for Vastu solutions were painted on the respective walls, the outstanding debts were completely collected in one and a half months, an overdraft amount of ten lakh rupees was received from the bank without any collateral, the employees who did the work were asking as they were told, they did not shrink, the salary was given to everyone on the 1st day of the month, after that we, husband and wife, received a good amount.  The customer thanked me wholeheartedly that we have received the salary after many days, I do not publish my customer details considering privacy.
 Do it soulfully
 Today is the day to see that anything can win.

#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

ஒரு மனை அல்லது வீட்டின் திசைகளுக்கு உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால் குடும்பத்தாருக்கு வரும் நோய்கள்
ஒரு மனை வாங்கும் முன்னரும் ஒரு வீடு வடிவமைக்கும்  முன்னரும்  மிகுந்த கவனமாக வாஸ்து நிபுணர் மூலம் வாஸ்து பார்க்க வேண்டும், வடிவமைக்க வேண்டும்,

காரணம் ஒரு மனை அல்லது வீட்டின்
திக்கு திசைகளுக்கு  உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால்
குடும்பத்தாருக்கு தீராத  நோய்கள் இன்னல்களைத் தர நேரிடும்,

வரும் முன் காப்போம் என்பதே வாஸ்து மற்றும் ஃபெங்ஷூய் உரைக்கும் உயரிய தத்துவமாகும். மனை மற்றும் வீட்டின் வாஸ்து குறைபாட்டால்  பாதிக்கப்படும் உடல் உறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மனை அல்லது வீடு வடிவமைக்கையில் மெத்தனம் கூடாது.

1.சூரியன் (பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை அதிபதி)
மனையில் அல்லது வீட்டில்  பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும் ஜுரம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும்.

2.சந்திரன் (தென்கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் அடிக்கடி ஏற்படும்.

3.செவ்வாய் (தெற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தெற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்பு அடிக்கடி ஏற்படும்.

4.புதன் (வடகிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடகிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கும் ஆண் வாரிசுகளுக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் அடிக்கடி ஏற்படும்.

5.குரு (வடக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் இவை அடிக்கடி ஏற்படும்.

6.சுக்கிரன் (கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு பெண் வாரிசுகளுக்கு கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

7.சனி (மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் மேற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படுதல் அடிக்கடி ஏற்படும்.

8.ராகு (தென்மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்மேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் அடிக்கடி ஏற்படும்.

9.கேது (வடமேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடமேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு இவை அடிக்கடி ஏற்படும்.

Before buying a plot and before designing a house, one should carefully check and design the Vastu by a Vastu expert.

The reason is a plot or a house
Grahas belonging to Dikku directions, due to deficiency of Vastu
Unresolved diseases may bring hardships to the family,

Preserving before coming is the overriding philosophy of Vastu and Feng Shui texts.  Every one of us should know the body parts which are affected by Vastu deficiency of plot and house and should not be complacent while designing the plot or house.

1.Sun (Brahmasthana and lord of east direction)
If Brahmasthan and east direction are afflicted in house or house, the family members especially men will often suffer from diseases like constipation, indigestion, insomnia, eye diseases, blood pressure, heart disease, asthma, stomach bugs and fever.

2. Moon (South East Lord)
If the south-east corner of the house or house is afflicted, mental illnesses, emotional disturbances, rapid heartbeat, blood pressure, tuberculosis, anemia, phlegm, phlegm, sexually transmitted diseases, gastric ulcer, diabetes, intestinal ulcer often occur in the family, especially in women.

3. Mars (South Lord)
If the south direction is afflicted in the house or house, the family members, especially the males, are often affected by hemorrhoids, diabetes, stomach and intestinal diseases, depression, skin diseases, heart disease, nervous breakdown, measles, accidents and weapons.

4. Mercury (North East Lord)
If the north-east corner of the house or house is afflicted, heart diseases, blood pressure, peptic ulcer, cancer, skin diseases, nervousness, gastric ulcer are frequent in the family, especially in males and male heirs.

5. Guru (Lord of North)
If the north direction is affected in the house or house, throat related diseases, thyroid, measles, rheumatism, jaundice, nerve related diseases, paralysis, lower rheumatism, diabetes often occur in the family especially in men.

6. Venus (Lord of the East)
If east direction is affected in house or house, eye, ear and nose diseases for family especially women, female heirs.  Lung disease, cough, ulcer, heart disease, blood pressure, sexually related diseases will occur.

7.Saturn (West Lord)
If the west direction is affected in the house or house, mental illness, epilepsy, brain damage, skin disease, long-term ailments, kidney disease, bile, intestinal disease, accident often occur in the family especially men.

8.Rahu (Southwest Lord)
If the south-west corner of the house or house is affected, the family members, especially the women, will often suffer from high acid secretion, stomach disorders, indigestion, insomnia, brain disease, intestinal ulcer, skin diseases.

9. Ketu (North West Lord)
If the north-west corner of the house or house is afflicted, cancer, rheumatism, skin diseases, cholera, nervous breakdown, kidney disorders often occur in the family especially in males.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

தினமலர் என்றால் காழ்ப்பு


தினமலருக்கு பெண்கள் முன்னேற்றத்தில் மாற்று திறனாளிகள் முன்னேற்றத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் எத்தனை காழ்ப்பு பாருங்கள்,

 இவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வந்து லங்கர் கட்டை உருட்டுபவர்களை வழிந்து பாராட்டுவதை காணலாம் மற்றவர்களுக்கு எதுகை மோனை குசும்பு தான், கோயில் விடுதலை , இலவசம் ஒழிப்போம் என சரடு விடும் மோடி மஸ்தான்களை பாராட்டுவர், கோடாலிக்காம்பு என்ற அடைமொழிக்கு பொருத்தமான ஒரு நாளிதழ் என்றால் அது தினமலர் தான், மாற்று மதத்தார் மீதான இவர்கள் வன்மம் வரலாற்றுப்புகழ் மிக்கது,தமிழ்நாட்டின் அவமானம்.

The World's Fastest Indian | அந்தோணி ஹாப்கின்ஸ்

The World's Fastest Indian

இது இந்தியரைப் பற்றிய படம் அல்ல,Indian என்ற 1920 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க ரேஸ் மோட்டார் சைக்கிள் பற்றிய படம்.

உலகில் எந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரருக்கும் மோட்டார் சைக்கிள்  ரேஸின் மெக்காவான Bonneville Salt Flats ற்கு தன் மோட்டார் சைக்கிளைக் கொண்டு சென்று அதன் முழு வேகத்திறனை பரிசோதிக்கும் ஆசை இருக்கும்.

அப்படி நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவின்  Utah பாலைவனத்திற்கு 11,636 km பயணித்து வருகிறார் 68 வயது Burt Munro,இவர் உடன் கொண்டு வரும் இந்தியன் மோட்டார் சைக்கிளின் வயது 47 ,
உலகசாதனை நிகழ்த்த வயது படிப்பு இவை ஒரு தடையில்லை என்று தன் சாதனை மூலம் உலகிற்கு உரைத்தவர் பர்ட் மன்ரோ.

பர்ட் மன்ரோ தன் மோட்டார் சைக்கிளில் utah பாலைவனத்தில் உள்ள  Bonneville Salt Flats என்ற உப்பு படிம நிலப்பரப்பிற்கு பல இடர்களைத் தாண்டி வந்து சேர்கிறார், அந்த  இயற்கை race track நிலப்பரப்பில் 325 கிமீ உச்ச வேகத்தில் தன் மோட்டார்சைக்கிளில் பயணித்து உலக சாதனை நிகழ்த்துகிறார்,

இது  பர்ட் மன்ரோ என்ற நியூசிலாந்து நாட்டு அமெச்சூர் மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரரின் உண்மைக்கதை, இது 1967 ஆம் ஆண்டின் கதைக்களம், 

நியூசிலாந்து நாட்டுக் கிழவர்  பர்ட் மன்ரோவாக நம் ஹானிபல் லெக்டர் புகழ் அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்துள்ளார்,பிரிட்டீஷ் நடிகர் ஊரக நியூசிலாந்து வாசியாகவே மாறியது போலவே  இருக்கும் இவரின் தோற்றம் ,

அந்தோனி ஹாப்கின்ஸ் அற்புதமான நடிகர், இது அற்புதமான படம் ,அவசியம் பாருங்கள்.

#the_worlds_fastest_Indian,#anthony_Hopkins,#burt_munro
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)