சென்னையில் ஓர் குளிர்காலம்!!!

ருமை நண்பர்களே!!!

லம் தானே? இங்குதான் சென்னையில் விடுமுறைக்கு வந்துள்ளேன்,வேலையில் கூட நான் இத்தனை பிஸியாக இருந்ததில்லை, விடுமுறைக்கு வந்ததில் இருந்தே ஓயாத அலைச்சல்தான்.மதுரை சென்று வந்தேன், திருப்பத்தூர் சென்று வந்தேன்,ஹைதராபாத் சென்றுவந்தேன், சேலம் இன்று போகிறேன், இந்தமுறை 34நாட்கள் மொத்தம் விடுப்பு கிடைத்தது,மிகவும் அதிசயம்,எப்போதும் 2வாரம் மட்டுமே அதிகபட்சம் விடுமுறை தந்து அனுப்பும் நிர்வாகம் அதிசயமாக ஜனவரிக்குள் 2010 ஆண்டிற்கான விடுமுறையை செலவழிக்க சொல்லியது.எப்போதும் கடும் வெயிலில் விடுமுறைக்கு வந்து மாட்டிக்கொள்பவன் இந்தமுறை கடும்குளிரில் மாட்டிக்கொண்டேன், ஹைதராபாத் குளிர் வேறு ஆளையே புரட்டிப்போட்டது,கடும் இருமல் ஜலதோசம் ஆட்கொண்டது, ஜனவரி நான்காம் தேதி வரை விடுமுறை இன்னும் இருக்கிறது,

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு,சாருவின் 7புத்தகங்களையும் வாங்கினேன்,கனவுகளின் நடனம் என்னும் ஒரு புத்தகத்தில் அவர் கையெழுத்த்தும் போட்டு தந்தார்.அங்கே வைத்து நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் ராஜேஷையும் சந்தித்தேன்,மிகவும் மகிழ்ச்சியளித்தது,ஆயினும் சரியாக பேசமுடியாதபடிக்கு அவர் அவசர செல்போன் அழைப்பில் ஆழ்ந்துவிட்டார்,நண்பன் மயில்ராவணன்,அண்ணன் ஜாக்கி,அண்ணன் மணிஜி,தல கேபிள் சங்கர்,வண்ணத்துபூச்ச்சியார் என்று இன்னும் பல பதிவர்களை சந்திக்க முடிந்தது,காமராஜர் அரங்கில் சுமார் 900 இருக்கைகள் நிரம்பியிருந்தது,இதுபோல எந்த எழுத்தாளருக்கும் தமிழகத்தில் கூட்டம் திரண்டிருக்காது என்றே நினைக்கிறேன்.மயில் ராவணன் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டார்.வரும் வாரம் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவேண்டும்.

ஹைதராபாத் ரயில் பயணத்தில் வைத்து சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் என்னும் ஆன்மீக பிராது நித்தியானந்தன் பற்றிய புத்தகம் படித்தேன்,சும்மா சொல்லக்கூடாது,மிக அருமையான புத்தகம்,தேகம் படித்து மகா ஏமாற்றம் அடைந்திருந்த எனக்கும் அருமருந்தாயமைந்தது.புத்தகம் படித்து முடித்தபின்னர் வாசித்தவருக்கு ஏற்படும் நித்தியின் மீதான் கொலைவெறி அடங்க நாளாகும்,அவன் பிரித்த குடும்பங்கள் எத்தனை?சாமியாரினியாக்கிய பெண்கள் எத்தனை?பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும்.இதை என் உறவினர்கள் அத்தனை பேருக்குமே சிபாரிசு செய்தேன்,அத்தனை பேருமே அதை கண்கள் விரிய கேட்டு நித்தியானந்தனை 1008 அஷ்டோத்திர கெட்டவார்த்தைகளால் திட்டி  மனதில் உள்ள பாரத்தை இறக்கினோம்,
 
இன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒருவரை விமரசித்து ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே,சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதில் நித்தியானந்தன் தன் மோசடியை எப்படி துவங்கினான்?எப்படி நடிகைகளை வசமாக்கினான்?,ஏன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின்,பிடதியில் ஆசிரமம் துவங்கினான்?,அவரின் மனைவி மற்றும் 300 பேர்,நித்தியானந்தனுடன் கும்பமேளாவுக்கு தலைக்கு 1லட்சம் கொடுத்து மாட்டிக்கொண்டது எப்படி?நித்தியானந்தனுக்கும் ,ஏனைய மகா அவதார் பாபாஜி, காசி மாநகரத்தின் அகோரிகள், சாய்பாபா,போன்ற மகான்கள் எப்படி வேறுபடுகின்றனர்?என்று அடி ஆணிவேரையே உருவி ஆராய்ந்திருக்கிறார். இது குமுதம் ரிப்போரில் வெளிவந்திருந்தாலும் தொகுப்பாக படிப்பதில் உள்ள சுகமே தனி,படிக்காத தொடர்களை அருமையாக தொடர்ச்சியாக படிக்க முடியும்.புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் இடையே நம் நண்பர் கருந்தேள் ராஜேஷைப்பற்றியும் அவரின் மனைவியை பிடதி ஆசிரமத்திலிருந்து மீட்க உதவியதாக மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.

எல்லவற்றிற்கும் மேலாக கடைசி 29வது அத்தியாயத்தில் அவர் நித்தியானந்தனுக்கு முன்வைத்த 25 சாட்டையடி கேள்விகள், நித்தியானந்தனுக்கு நாக்கு என ஒன்றிருந்தால் அதைபிடுங்கிக்கொண்டு சாகட்டும், அவனை நடைபிணமாக்கும் இந்த சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம்,இதற்கு யாரும் முன்னுரை எழுதாது என்பது மாபெரும் துயரம், இதை ஆங்கிலத்தில் அதன் சாரம் கெட்டுப்போகாமல் மொழிபெயர்க்கவேண்டும் என்பதே என் அவா.நடக்குமா பார்ப்போம்?

இன்று இரவு சேலம் செல்கிறேன்,தேகம் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்,நான் இதுவரை சாருவின் எந்த புதினத்தையும் படித்ததில்லை,இது வேறு ஆட்டோஃபிக்‌ஷன் என்னும் வகை என்று சாரு சொல்கிறார்.முதன் முறை வாசித்ததில் இது சரோஜாதேவிக்கதை அல்ல என்று மட்டும் உணரமுடிந்தது,மிஷ்கின் இதை சரோஜாதேவி கதை என்று எப்படி ?உளரிக்கொட்டினார் என அறியேன்.

தேகம் புத்தகம் இலைமறைவு காய்மறைவாய் பேசும்,படிக்கும்,எழுதும் வெகுஜன வாசகர்களுக்கானது அல்ல,வீட்டில் வெளியில் கூட வைக்க முடியாதது,படித்தபின்னர் கூட யாராவது ஒத்த சிந்தனை உடைய நண்பருக்கு பரிசளித்துவிடவேண்டியது, இதில் எதுவுமே ஒளிவு மறைவில்லை,புட்டத்தை குண்டி என்றே சொல்கிறார்,விந்து,இந்திரியம்,ஸ்கலிதம் என்று தினத்தந்தியில் படித்ததை கொச்சையாக கஞ்சி என்றே சொல்கிறார்.தவிர ஆங்கில கலைச்சொற்களான கேட்டமைட்,சோடமைட்,குப்பியடித்தல்,குப்பி கொடுத்தல்,நாக்கில் இரும்பு குண்டுமணி மாட்டுவது எப்படி? ஆண்குறியில் வரிசையாக வளையங்கள் மாட்டுவது எப்படி?சென்னையில் உள்ள நவீன பார்கள் பற்றி என கலந்துகட்டி எழுதியிருக்கிறார், இதை ஆறு நாட்களில் எழுதியதாக படித்தேன், அதற்கான சத்து தான் தேகத்தில் இருந்தது. எனக்கு இந்த சிறு புதினம் தேகம் அவ்வளவாக தாக்கத்தை உண்டுபண்ணவில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.விரிவாக மீள்வாசித்தபின்னர் சந்தர்ப்பம்  கிடைப்பின் எழுதுவேன்,
 
ருமை நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டியிருப்பின் 09840419602வில் 4 ஆம் தேதிவரை பேசலாம், புகைப்படங்களை விரைவில் பகிர்கிறேன்.நன்றி

======0000======

ரோட்.மூவி[Road.Movie][रोड, मूवी][இந்தியா][2010][15+]


ருமை நண்பர்களே!!!

நீண்ட நாட்களாக எழுத நினைத்தும் எழுத முடியாமல் போன படம் தான் இந்த ரோட்.மூவி. மிக அருமையும் வித்தியாசமுமான கதை, திரைக்கதையை கொண்டுள்ள படம், இதை நகரும் சினிமா பாரடைஸோ என்று கூட சொல்லலாம்.  பாரதம் தான் எத்தனை விதமான நிலப்பரப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது?!!!  என நான் எண்ணி வியக்காத நாளே இல்லை, ஒரு இந்தியர் ஒரே மாதத்தில் உலக சுற்றுலா கூட சென்று வந்துவிடலாம், ஆனால்!!!!  முழு இந்தியாவை ஒரு மாதத்தில் நீள, அகலமாக சுற்றிவந்துவிடமுடியாது . அது அத்தனை எளிதல்ல என்பேன்.

கவல் தொடர்பு புரட்சியில் தன்நிறைவு பெற்றுள்ளோம் என்கிறோம் , வாரா வாரம் எங்கள் தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திலுமுள்ள, குக்கிராம மக்களுடனும் கூட வீடியோ கான்ஃபரென்ஸிங் நடத்துவோம் என ஒபாமாவிடம் புழுகு மூட்டையை அவிழ்த்துவிடும் கேடு கெட்ட அரசியல்வாதிகளை ,  குடிக்க நீரேயில்லாமல், உண்ண உணவில்லாமல்,  50டிகிரி செல்சியஸ் வெப்பமும் உப்புக்காற்றும் வாட்டும்  கட்ச்[kutch] மற்றும் ஜெய்சால்மீரீன் [jaisalmir] பரந்துவிரிந்து வறண்ட பிரம்மாண்டமான பாலைவனத்தில், அலையவிட்டும், மலம் கழித்தால் கழுவ நீரில்லாமல் கற்களை கொண்டும் துடைத்துக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.

ஹான்ஸ்ப்ரேர் தீவை , மலேசியாவின் ரப்பர் , பாமாயில் தோட்டங்களை, ஊழல் செய்து விலைக்கு வாங்கும் வசதிகொண்ட அந்த பிணம் திண்ணிகளால் ஒரு நாள்!!!, ஒரு நாள் கூட  இங்கே தாக்குபிடிக்க முடியாது என்பேன். தேசிய கீதம் படத்தில் வருவது போலவே அவர்களை கடத்தி கூட்டிச்சென்று இங்கே தான் வயிறு காயவிட்டு அடைத்து வைக்க வேண்டும்.இங்கே  உள்ள கிணற்றில் குறைந்தது 250 அடி ஆழத்தில் தான் குடிநீரே கிடைக்கிறது, எல்லா கிணற்றுக்குமே மூன்று கனத்த பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. கிணற்றுக்கு துப்பாக்கி ஏந்திய கொடிய கொலைகாரர்கள் பாதுகாப்புக்கு உண்டு. தண்ணீர் என்பது இங்கே பணம் கொழிக்கும் வியாபாரம். 


ங்கே மக்கள் மரணமடைந்தால் அது தாகத்தால் மட்டுமே இருக்கும்.  மக்கள்  இங்கே திருடுவது நீரை மட்டுமே. இந்த நடப்புகாலத்தில் கற்கால மனிதர்களை பார்க்கும்போது நாமெல்லாம் எத்தனை வசதிகளுடன் வாழ்கிறோம் என்று குற்ற உணர்வே ஏற்பட்டுவிட்டது, ஒரே தேசத்தில் ஏன் இந்த பாரபட்சம்? பின்னே ஏன்? நக்சலைட் உருவாகமாட்டான்? கட்டிடத்தின் விரிசலுக்கான ஊறுக்கண்ணை ஆராயாமல் அதன் மேல் சுண்ணாம்புபூச்சு மட்டும் அடிக்கும் போக்கைதான் மத்திய மாநில அரசுகள் தொன்றுதொட்டு கடைபிடிக்கிறது. 

இயக்குனர் தேவ் பெனகல்
ரொம்ப பொங்கிவிட்டேன், இப்போது கதைக்கு வருவோம். இவ்வளவு நேர்த்தியான பொழுதுபோக்கான திரைப்படத்தை எழுதி இயக்கிய தேவ் பெனகலை எவ்வளவு பாராட்டினாலும் நன்றி கூறினாலும் தகும். தேவ்-டி படத்தில் ஊதாரித்தனமான இளைஞன் வேடத்தில் வந்த அபய் தியால் இதிலும் அப்பாவின் தொழிலை வெறுக்கும், துடிப்பான  இளைஞனாக வருகிறார்.  படத்தின் 4 பிரதான பாத்திரங்களான இளைஞன் அபய் தியால், அழகிய நாடோடிப்பெண் தனிஷா சேட்டர்ஜி, நாடோடியான லாரி மெக்கானிக் சதிஷ் கௌஷிக், டீக்கடை சிறுவன் மொஹமத் ஃபைசலை வாழ்நாளில் மறக்கமுடியாது.
====0000=====
படத்தின் கதை:-
படத்தின் கதையை நான் மூன்று பகுதிகளாக பிரிப்பேன்.

1.எண்ணெய்:-
ட்டதாரி இளைஞன் விஷ்ணு, தந்தையின் ஆத்மா ஹேர் ஆயில்[ஹிமாமி நவரத்னா போன்றது] கம்பெனியில் மார்கெட்டிங் வேலை செய்ய மிகவும் பயந்தவன்,தப்பிக்க தருணமும் பார்க்க,  வீட்டின் அருகே உள்ள பழைய தியேட்டரை அதன் உரிமையாளர் ஒரு ஷாப்பிங் மால் கட்டும் அம்பானியின் வாரிசுக்கு விற்றுவிட, அங்கே தியேட்டர் வளாகத்தில்  இருக்கும் 1947ஆம் ஆண்டின் செவ்வி ரக ட்ரக் அனாதையாகிறது. அதை ஒரு வெளியூரில் உள்ள மியூசியத்துக்கு தியேட்டர் முதலாளியே ஓட்டிச்செல்ல முடிவு செய்கிறார், விஷ்ணு இடையில் புகுந்து, தான் அதை ஓட்டிச்சென்று பத்திரமாக மியூசியத்தில் சேர்க்கிறேன். என்கிறான்.அவரது நம்பிக்கையையும் பெறுகிறான். வீட்டில் அனுமதியும் பாடுபட்டு வாங்கிவிடுகிறான்.

விஷ்ணுவின் அப்பாவோ, அப்போதும் விடாமல் 2 அட்டை பெட்டிகள் நிறைய ஆத்மா ஹேர்ஆயில் பாட்டில்களை அவனிடம் கொடுத்து போகுமிடத்தில் உள்ள கடைகளில் மார்க்கெட்டிங் செய்யச் சொல்கிறார். அந்த ட்ரக் மிகப் புராதானமான, 2 விக்டோரியா வகை நடமாடும் ப்ரொஜகடர்களையும் கொண்டுள்ளது, அதை பற்றிய அருமை பெருமைகளை தெரியாமலே அந்த ஹைதர்கால பழசான ட்ரக்கை விஷ்ணு சபித்துக்கொண்டே ஓட்டிச் செல்கிறான்.


ழியில் டீக்கடை சிறுவன் ஒருவனையும் உதவிக்கு இருக்கட்டுமே!!! என்று ஏற்றிக்கொள்கிறான், ட்ரக் வழியில் ஒரு வறண்ட பாலைவனத்தில் பழுதாகிவிட, சிறுவன் பாலைவனத்தில் அலைந்து திரிந்தவன்,  ஒரு வயதான அழுக்கான நாடோடி மெக்கானிக்கை அழைத்துவர, அவரை விஷ்ணுவுக்கு பிடிக்கவில்லை, மெக்கானிக்கோ வண்டியை தான் பழுது நீக்கினால், தன்னை பாலைவனத்தின் நடுவே உள்ள அடுத்த ஊரில் திருவிழாவில் இறக்கி விட வேண்டும், என்ற நிபந்தனையில் அவர் விஷ்ணுவின் வண்டியை சரி செய்கிறார். 

ப்போது கேபினில் மூவர் அமர, வழி தவறி அலைந்தும் திரிந்தும் பயணிக்கின்றனர். ஒரு கட்டத்தில் மெக்கானிக்கின் வியர்வை நாற்றம் பிடிக்காத , ஏழைகளுடன் அறவே பழகியிறாத விஷ்ணு, மெக்கானிக்கும் ,சிறுவனும் வெட்டவெளியில் மலம் கழிக்கும் நேரத்தில், வண்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிட, அவனின் விதி வலியதாயிருக்கிறது, வண்டி பாலைவனத்தில் மீண்டும் பழுதாகிறது.

2. தண்ணீர்:-

ப்போது வீராப்பாக இவனின் வண்டியை கண்டும் அருகே வராத மெக்கானிக்கும்,சிறுவனையும் பகீரதபிரயத்தனப்பட்டு விஷ்ணு கெஞ்சி அழைத்து வந்தவன் , இனி இது போல சுயநலமாக நடக்க மாட்டேன், வண்டியை பழுது நீக்கிக்கொடு!!! என்கிறான். போகப்போக பாலைவனத்தில் எங்குமே ஒரு சொட்டு நீரி கூட கிடைக்கவில்லை, உணவும் சுத்தமாக கிடைக்கவில்லை. சாலைகளே இல்லை,வெப்பம் தகிக்கும். வரண்ட வெடிப்பு விட்ட பூமி தான்.  நிறைய கானல் நீர் தென்பட, நிறைய ஏமாந்தும்போகின்றனர். ஒரு கட்டத்தில் விஷ்ணு மிகுந்த சுயநலத்தோடு பாலைவனத்தில், கொண்டுவந்து பதுக்கியிருந்த நீரை தான் மட்டும் மடக்கென்று குடிக்கிறான். சிறுவனுக்கு கூட சொட்டு நீர்  கொடுக்கவில்லை. கொதிக்கும் ரேடியேட்டருக்குள் இருக்கும் நீரை மெக்கானிக் உரிஞ்சிக்குடிக்கையில் தான் நமக்கு அந்த தாகத்தின் விபரீதம் புரிகிறது.

த்தனை பரிதாபம்!!!.திக்குதெரியாத பாலைக்காட்டில் மாட்டிக்கொண்ட மூவர், மரண தாகத்தில்,அரை மயக்கத்தில் ட்ரக்கில் எங்கெங்கோ திசை மாறி போய்விட, அவர்கள் இப்போது ஒரு ஹைவே பேட்ரோல் லஞ்சப்பேய் போலீசாரிடம் மாட்டிக்கொள்கின்றனர். அவர்கள் விஷ்ணுவிடம் லைசென்சு, ட்ரக்குக்கான ஆர்சி புக், இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கீழே இறங்குமாறு கேட்க, எதுவுமே இல்லாத இவர்கள் வசமாக மாட்டிக்கொள்கின்றனர்.

போலீசார் இவர்களை ட்ரக்கை ,எங்கிருந்தோ திருடிக்கொண்டு போகிறீர்கள், உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். என்று குற்றம் சாட்ட, இவர்களுக்கு அந்த பாலைவனத்தினுள் அமைந்த பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன் வேறு பார்க்கையிலேயே குலைநடுங்கச்செய்கிறது. அப்போது புத்திசாலி மெக்கானிக் வண்டியில் சினிமா தியேட்டர் உள்ளது என்றும், அதில் உங்களுக்கு சினிமா திரையிட்டு நாங்கள் திருடர்கள் அல்ல என நிரூபிக்கிறோம், என்றும் சொல்கின்றனர்,

போலீசார் நல்ல படங்கள் போட்டால்  உங்களை விட்டுவிடுவோம், படம் மொக்கையாயிருந்தால் பிடித்து லாடம் கட்டிவிடுவோம், என்று மிரட்ட இரவில் போலீஸ் ஸ்டேஷனின் பாழடைந்த வெளிப்புறச்சுவற்றிலெயே ப்ரொஜெக்டர் வைத்து பாய்ச்சி படம் காட்டப்படுகிறது. அங்கே நிறைய ஊர்மக்கள் உற்சாகமாக குழுமிவிடுகின்றனர். போலீசாரோ? எந்த வித லஜ்ஜையுமேயில்லாமல் குடிவெறியில் கிராமத்து குடும்பப்பெண்களை படுக்கைக்கு கூட மிரட்டி அழைக்கின்றனர். ஒரு வழியாக அந்த போலீசார் நிறைய மது குடித்து விட்டு சாயவும், இவர்கள் விடியலில் ட்ரக்கை எடுத்துக்கொண்டு பறக்கின்றனர்.

3. கிணறு:-
வறண்ட பாலைவனத்தில் செல்லுமிடமெல்லாம், நீரைத் தேடிக்கொண்டே ட்ரக்கில் பயணிக்க, அங்கே குனிந்த தலையுடன் நீரைத்தேடும் பெண்கள் கூட்டத்தை பார்க்கின்றனர். அதில் ஒரு அழகிய நாடோடிப்பெண்ணை நிறுத்தி நீர் கேட்க, அவள் நீண்ட தயக்கத்துக்கு பின்னர் இடுப்பில் சொருகியிருந்த தோலால் செய்யப்பட்ட சுருக்குப்பையில் இருக்கும் நீரைத் தர, விஷ்ணு,மெக்கானிக்,சிறுவர் மூவரும்,நீர் அருந்தி உயிர்பிச்சை பெறுகின்றனர்,


பின்னர் அந்த இளம் நாடோடிப்பெண் கிராமம் கிராமமாக சென்று தண்ணீர் தேடுவதையும், அவள் கணவன் ஒரு ஊர் பணக்காரனின் கிணற்றின் பூட்டை உடைத்து தண்ணீர் திருடியதால் , கடப்பாரையால அடித்துக் கொல்லப்பட்டதையும் சொல்கிறாள், அவர்களுக்கும் நமக்கும் அந்த இளம் கைபெண்ணை பார்க்கையிலேயே கழிவிரக்கம் தொற்றிக்கொள்கிறது. விஷ்ணு அவளையும் ட்ரக்கில் ஏற்றிக்கொள்கிறான்.


வள் அவனுக்கு வழிகாட்டிக்கொண்டே பயணிக்கையில், கண்களாலும்,சிறு ஸ்பரிசங்களாலும் நிறைய பேசிக்கொள்கின்றனர். அவளின் மீது, மிகவும் சுயநலம் பிடித்த விஷ்ணுவுக்கு கூட கருணை பிறக்கிறது. வெய்யில் மேலும் வாட்டியெடுக்க,இருந்த நீரெல்லாம் செலவாகிவிடுகிறது, இனி நீரின்றி ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாத நிலை, சாலைகளைக்கூட கண்டே பிடிக்கமுடியவில்லை.  அந்த பாதையில் விஷ்ணு ஒரு கிணற்றை பார்த்தவன் , நாடோடிப்பெண் தடுக்க,தடுக்க கேளாமல்,கிணற்றின் பூட்டை உடைத்து,நீரை இறைத்து குடித்தும், நீரை பாட்டிலில் அடைத்தும் எடுத்து வருகிறான். 

வள் பயத்தில், பதறி அலறுகிறாள், ஆயினும் இப்போது உயிரைக்காத்துக் கொள்ள ,மூவருக்கும் வேறு வழி தெரியவில்லை,ஒரு பக்கம் போலிசாரின் பார்வையிலிருந்து தப்பவேண்டும், இன்னொரு பக்கம் மகா பயங்கர நீர் வியாபாரம் செய்யும் ரவுடிகளிடமிருந்து தப்பவேண்டும், ட்ரக்கையும் 2 நாளுக்குள் மியூசியத்துக்கு கொண்டுபோய் சேர்த்தும் விடவேண்டும். இனி என்ன ஆகும்.?!!! மிகவும் சுவையான திருப்பங்களுடன், விறுவிறுப்பாக செல்லும் இந்த படத்தை டிவிடியில் பார்த்துவிடுங்கள்,படம் தரவிறக்குவோருக்கான சுட்டி:-

நீண்ட நாளுக்கு பின்னர் நல்ல படத்தை பார்த்த அபார திருப்தியை வழங்கக்கூடிய அற்பணிப்பை கொண்டிருக்கும் படம் இது!!!. படத்தின் ப்ரொமோஷனுக்கான இந்த இணைய தளத்தில் படம் எடுத்த விதம், இடம், இயக்குனரின் நேர்காணல்கள் போன்றவை மிகவும் சுவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. அதையும் பார்த்துவிடுங்கள்.நல்ல படங்கள் ஓடாமல் போவதில் தவறில்லை, பாராமல் போவது தான் தவறு என்பேன்.ஆகவே இதை எப்படியாவது பார்த்துவிடுங்கள்.

தை ஆறு மாதம் முன்பே பார்த்துவிட்டாலும் ,உடனே எழுதமுடியாமல் போய்விட்டது, ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தேன். நிறைய நண்பர்களை பார்க்க சொல்லியிருந்தேன்,மீண்டும் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ பதிவிட்டுவிட்டேன். இதன் லொக்கேஷன் பார்க்க இயக்குனர் தேவ் பெனகல் அலைந்தது 1 வருடம். இதன் தயாரிப்பாளர் கிடைக்க தேவ் பெனகல் அலையாய் அலைந்தது 2 வருடங்கள்.

து வரை இந்த பாலைவனப்பகுதியில் எந்த திரைப்படமும் எடுத்ததில்லை. படத்தில் காட்டியது நிஜ போலீஸ் ஸ்டேஷனாம்.போலீசாரே  படப்பிடிப்புக்கு தோதாக ஆர்வகோளாறில் வெள்ளையடித்தும் விட்டார்களாம். வடைபோச்சே!!! என்று அதை மறுபடியும் படக்குழுவினர் பழசாக்கி படம் பிடித்ததாகப் படித்தேன்.  படத்தை ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டெநீரோ பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினாராம்.
====0000=====

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து
Directed by Dev Benegal
Produced by
Written by Dev Benegal
Starring
Music by Michael Brook
Cinematography Michel Amathieu
Editing by Yaniv Dabach
Release date(s) 5 March 2010 (2010-03-05)
Running time 95 minutes
Country India
Language Hindi
Budget Rs. 80 million ($2.5 million)
=====0000=====

லார்ஸ் அண்ட் த ரியல் கேர்ள் - 2007 லார்ஸும் நிஜமான பெண்ணும் - ஆங்கிலம்

து 2007 ஆம் ஆண்டு  Nancy Oliver கதையில்  ,  Craig Gillespie  இயக்கத்தில் , Adam Kimmel ஒளிப்பதிவில் , David Torn இசையில் வெளிவந்த அட்டகாசமான ட்ராமடி வகைத்திரைப்படம், படம் பார்ப்பவருக்கு ஒருசேர சிரிப்பு , அழுகை, அனுதாபம் ,போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய கதையும் கதாபாத்திரங்களும் அமையப்பெற்றது என்றால் மிகையாகாது. மெதுவாகச் சென்றாலும் இந்தப்படம் காண்போரை  நிச்சயம் கவரும்.

ன் இருபதுகளில் இருக்கும்  லார்ஸ்  (Ryan Gosling ) கூச்சமும் , தாழ்வு மனப்பான்மையின் உச்சமும் கொண்டவன், பிறப்பிலேயே தாயை பறிகொடுத்தவன், தந்தையின் அரவணைப்பும் இன்றி வாழ்ந்தவன், பெண்ணுடன் பழகும் வாய்ப்பு இருந்தும் ஒதுங்கிப்போகிறான்.ஊரில் வயதான பெண்மணிகளிடம் மட்டும் கொஞ்சமாக பேசுகிறான். தன் அம்மாவின் உல்லன் சால்வையை எப்போதும் ஏக்கத்துடன் அணிகிறான்.பெண்ணின் ஸ்பரிசம்  இல்லாமலே கனடாவின் குளிரிலும் வாழ்கிறான்.

பெண்ணின் ஸ்பரிசம் உடலுறவில் முடியும். அதன் மூலம் குழந்தை பெற்றால் துணையின் உயிருக்கே ஆபத்து என்னும் அபத்தமான பயத்தினை ஆழ்மனதில்  கொண்டிருக்கிறான்.உடன் பணியாற்றும் மார்கோ (KelliGarner) இவனின் அன்புக்கு ஏங்க , இவன் ஒதுங்கிப்போகிறான்.அவள் மீது இவனுக்கு உள்மனதில் அன்பு இருந்தாலும் வெளிக்காட்டாமல் இருக்கிறான்.தன் மனம் போன போக்கில் நடக்கிறான்.

மிக அன்பான தன் அண்ணன்  கஸ் (Paul Schneider ) மற்றும் அண்ணி காரெனிடம்  (Emily Mortimer ) கூட  அதிகம் பேசாமல்,பழகாமல்  கேரேஜ் வீட்டில் போய் தங்குகிறான். சரி பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டாலோ , திருமணமானாலோ  சரியாகிவிடும் என அண்ணனும் அண்ணியும் நினைத்திருக்க, இவன் வழிக்கு வருவதுபோல் தெரியவில்லை . அன்பான  அண்ணி கர்ப்பமாகிறார், இதை கேள்விப்பட்ட இவனுக்கு இன்னும் ஏக்கம் அதிகமாகி,இனி அண்ணியின் ஆதரவோ, சாஃப்ட்கார்னரோ தனக்கு கிடைக்காது என எண்ணிய லார்ஸ் தன் அலுவலக சகாவின் உதவியுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு அனாடமி கரெக்டட் செக்ஸ் டாயை (பாலுணர்வு இச்சை தீர்க்கும் பொம்மை) ஆர்டர் செய்து தருவிக்கிறான். அது ஒரு 5’6” உயரமுள்ள அழகிய இளம் பெண்போல தோற்றமளிக்கிறது.அதனோடு நில்லாமல் கிளர்ச்சியூட்டும் அங்கங்களும்,பெண்ணுறுப்பும் கொண்டுள்ளது,

தை வீட்டிற்கு தருவித்தவன் சும்மா இல்லாமல் உயிரற்ற அந்த பொம்மைக்கு பியங்கா என பெயரிடுகிறான் , அதை உயிருள்ள பெண்ணாகவே பாவித்து அண்ணியிடம் வெட்கத்துடன் அறிமுகப்படுத்துகிறான்,  அதை சக்கர நாற்காலியில் அமர்த்தி அவள் பிரேசில் நாட்டு பிரஜை, இண்டர்னெட்டில் பழகினோம் மேலும், பியங்காவிற்கு கால்கள் ஊனம் என்றும், அவளின் உடமைகளை ரயிலில் யாரோ திருடிவிட்டதால் அண்ணியின் உடைகளை,காலணிகளை தந்து உதவும்படியும் கேட்கிறான்,

மேலும் தாங்கள் இருவரும் நன்கு பழகும் வரை பியங்காவை மாடியிலிருக்கும் இறந்து போன தன் அம்மாவின் படுக்கை அறையிலேயே தங்க வைக்க அனுமதியும் கேட்டு வாங்குகிறான்.மூன்று வேளையும் அவளுக்கு உணவு தயாரிக்கும் வேலையும் அவளை குளிக்க வைத்து உடை மாற்றும் வேலையும் அண்ணிக்கு வாய்க்கிறது,லார்ஸின் அண்ணனுக்கு அவளை தூக்கிப்போய் படுக்கையில் , காரில் , வீல்சேரில் வைக்கும் வேலை வாய்க்கிறது.லார்ஸும் அவளுடனே உணவு மேசையில் அமர்ந்து அவளுக்கும் தட்டில் பரிமாறச் செய்து சாப்பிடுகிறான். லார்ஸின்  அண்ணன் இந்த முட்டாள் தனத்தை கண்டு கோபமுற்றாலும் மனைவியின் வேண்டுகோளின் படி அடக்கி வாசிக்கிறான்.

வர்கள் இவனுக்கு பிடித்துள்ள மன நோயை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெளியவைக்க முடியும் என்கின்றனர்.ஊரில் உள்ள அனைவரிடமும் லார்ஸ் மிக அன்புடன்  பழகியவன்,தாயில்லாப் பிள்ளை என்ற செல்லம் வேறு ,ஊரில் உள்ள அனைவரும் லார்ஸின் அண்ணன் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பொம்மைப் பெண்ணை உயிருள்ள பெண்ணாகவே நடத்துகின்றனர்.

தற்கிடையில் லார்ஸ்   நன்கு படித்த பியங்கா வீணாக வீட்டில் இருக்கக்கூடாது என தொண்டு நிறுவனத்தின் பள்ளிக்கூடத்தில் கல்வி போதிக்க கொண்டுவிடுகிறான். இதற்கிடையில் ஒருநாள் லார்ஸ் பியங்கா மிகவும் சோர்வாக இருக்கிறாள் என முறையிட அவளை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கின்றனர், இவர்களின் குடும்ப மருத்துவர் டாக்மரிடம் காட்ட, அவரும் இந்த நாடகத்தில் பங்கேற்று பியன்காவிற்கு குறைந்த ரத்தாழுத்தம் உள்ளது அவளை வாராவாரம் மருத்துவமனைக்குகூட்டி வரப் பணிக்கிறார். அவ்வேளைகளில் பியங்காவை வெளியில் அமரவைத்துவிட்டு இவனுக்கு கவுன்சிலிங் செய்கிறார். வெறும் கைகளுடன் அவனை தொட அவன் தொட்ட இடம் நெருப்பு போல எரிகிறது என்கிறான், அவனுக்கு படிப்படியாக டச் தெரபியும் தருகிறார். பெண் தீண்டினால் ஒன்றும் ஆகாது,ஸ்பரிசம் இனியது என புரியவைக்கிறார்.அவன் அலுவலகத்தில் மார்கோ வேறு நபருடன் டேட்டிங் செய்கிறாள், இப்போது இவனுக்கு அது மிகவும் உறுத்துகிறது.

*லார்ஸ் பியங்கா ஒரு பொம்மை என்பதை உணர்ந்தானா?
*மார்கோவை வாழ்க்கைத்துணையாக ஏற்றானா?
*வன் அண்ணன் , அண்ணியுடன் இணைந்தானா?

போன்றவற்றை வேடிக்கையான விந்தையான நிகழ்வுகளை,உடனே டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
முழுக்கதை வேண்டுவோர் காணொளியை தாண்டிவந்து படிக்கவும்:-
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
 படத்தின் காணொளி


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
சில நாட்களில் லார்ஸ் பியங்கா தன்னுடன் நேரம் செலவிடமாட்டேன் என்கிறாள் என புகார் கூறுகிறான். அண்ணியைப் பார்த்து  நீங்கள் பியங்காவை பார்த்துக் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்,சுய நலமாய் இருக்கிறீர்கள் என கோபமாக பேச, அண்ணி கோபமாக அவனுக்கு பதிலடி கொடுக்கிறாள். அப்போதும் அவனின் மன நிலையை குத்திப்பேசவில்லை, அண்ணன் கஸ்ஸிற்கு பொறுமை எல்லை மீறி பியங்கா ஒரு காம இச்சை தீர்க்கும் பொம்மை. என்று முகத்தில் அடித்தாற்போல புரியவைக்கிறான். அப்போதும் இவன் திருந்தியபாடில்லை. இவன் அலுவலகத்தில் மார்கோவின் காதல் முறிந்துவிட இவன் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான், அவளுடன் பவுலிங் பாயிண்டிற்கு சென்று அவள் உற்சாகமாக பவுலிங் விளையாட வேடிக்கை பார்க்கிறான் . பின்னர் வீடு வரை நடக்கையில் அவள் அவனை விரும்புவதாய் சொல்ல , இவன்  நாம் பியங்காவிற்கு துரோகம் செய்யக்கூடாது என அவளை விட்டு விலகுகிறான்.

ப்போது  பிரிய முடிவெடுத்து, முதன்முறையாக கையுறைகளை கழற்றிவிட்டு ஒரு பெண்ணுடன் கைகுலுக்குகிறான்.அப்போது ஏற்ப்பட்ட இளம் பெண்ணின் ஸ்பரிசமும் உள்ளங்கைச்சூடும் அவனுக்கு என்னமோ செய்கிறது.இந்த உணர்வு பியங்காவிடம் பழகுகையில் ஏற்படவேயில்லை என்பதை புரிந்து கொள்கிறான்.இவன் உள்மனதில் நாடகம் இறுதிக்கட்டத்திற்கு நகர்கிறது.

வீட்டிற்கு போனதும் பியங்கா பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறாள் என கூறி அந்த பொம்மையை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை கூட்டி செல்கிறான்.மருத்துவர் டாக்மர் பியங்கா கூடிய விரைவில் இற்ந்துவிடுவாள்,ஆகவே அவளின் கடைசி விருப்பம் ஏதேனும் இருந்தால் நிறைவேற்ற சொல்ல, இவன் அவளை கைதாங்கலாக அழைத்துபோய் வழக்கமாக அவளுடன் டேட்டிங் செல்லும் ஏரிக்கரைக்கு செல்கிறான். அங்கு அவளை முத்தமிட ,இவனுக்கு அந்த உற்சாகமோ கிளர்ச்சியோ எழவே இல்லை, என்ன இழவுடா இது ? வெறும் பொம்மை போல என உணர்ந்தவன்.

டனே பியங்கா இறந்துவிட்டாள் என எல்லோரிடம் சொல்கிறான். அவளுக்கு  நல்அடக்கமும்  நடக்கிறது, இவ்வளவு காலமும் தன் மனதுள் போட்ட நாடகமும் நிறைவடைகிறது.இவன் பாட்டுக்கு நடனமாடிய ஊரார் அனைவரும் பியங்காவின் சவ அடக்கத்தில் கலந்து கொள்கின்றனர்.

ப்போது அங்கே வந்த மார்கோ பியங்காவின் கல்லறைக்கு மலர்கள் தூவ , லார்ஸ் அவளின் கையைப்பிடித்தபடி ஒரு வாக் போகலாமா? எனக் கேட்டு, கூட்டிபோகிறான்.அதோ அவன் முழு ஆண்மகனாய் ஆகியே விட்டான். அண்ணன் அண்ணிக்கும் ஊராருக்கும் ஆனந்தக்கண்ணீர்.அவர்கள் இனி நடிக்க வேண்டாம் பாருங்கள்.

தில் லார்ஸாக வந்த ரயான் கோஸ்லிங் தத்ரூபமாக தன் நடிப்பை வெளிக்காட்டிய விதம் நிச்சயம் எல்லோரையும் கவரும். இவர் ஃப்ராக்சர் என்னும் படத்திலும் சர்.அந்தோனி ஹாப்கின்ஸுடன் போட்டியிட்டு நடித்திருப்பார்.இவர் படங்களில் நடிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும்.

ண்ணன் கஸ்ஸாக வந்த பால் ச்னீடர்  நடிப்பில் கலக்கியிருந்தார். இவர் ப்ராட்பிட்டுடன் இணைந்து  அசாசினேஷன் ஆஃப் ஜெஸ்ஸி ஜேம்ஸிலும் கலக்கியிருப்பார்.

ண்ணியாக வந்த எமிலி மார்டைமர் படு பாந்தம். நல்ல நடிப்பு இவர் ஏற்கனவே பின்க் பாந்தர், ரெட்பெல்ட் போன்ற படங்களில் நடித்தவர்.

டத்தின் இயக்கம் க்ரெக் கிலெப்ஸி , அற்புதம் மெதுவாய் செல்லும் இப்படிப்பட்ட கதையினூடே இழையோடும் அன்பு, கருணை, நகைச்சுவை , மெல்லிய சோகம் என சரியான படைப்பு. முள்ளின் மேல் போட்ட துணியை பக்குவமாய் கையாண்டிருக்கிறார்.கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால் காதில் பூசுற்றும் கதை,லூசுத்தனம் என்று தோன்றும் அபாயம் அதை திறம்பட வெற்றிகொண்டு சாதித்த குழுவுக்கு சபாஷ்.

பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும் மிக அருமை. உலக சினிமா ரசிகர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம். 106 நிமிடங்கள்= ஒர்த்திட்


படத்தில் வந்த கதாபாத்திரங்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் அறிய அழுத்தவும்

குட்டி ஸ்ராங்க்[Kutty Srank][2010][இந்தியா]കുട്ടിസ്രാങ്ക്


ண்பர்களே!!!,
குட்டி ஸ்ரான்க் படம் பார்த்தேன்.மலையாள சினிமாவில் இதுவரை நிறைய கலைப்படங்கள் வந்திருந்தாலும் இப்படம் ஒரு தனித்துவமான முத்திரை பதித்த படம் என்பேன். மிக அழகான நீர்நிலைகளின் மீது அமைந்த எழில் கொஞ்சும் பசுமையுடன் ஒட்டி உரையாடும் கதைக்களம்.ஒவ்வொரு ஊரும் தன்னகத்தே கொண்ட வித்தியாசமான மனிதர்கள், கலாச்சாரம் என வியப்பூட்டும் கதைக்களம்.

1940களில் தொடங்கும் கதையில் , நமக்கு படத்தின் ஆமைவேகம் முதலில் அயற்சியூட்டினாலும், அஞ்சலி ஷுக்லாவின் கைதேர்ந்த ஒளிப்பதிவும். ஜோசப் தாமஸின் இசையும்  மம்மூட்டி,பதமப்ரியா,கமாலினி முகர்ஜி,மீனாகுமாரியின் அபாரமான பங்களிப்பும் அப்படியே படத்துக்குள் நம்மை மெல்ல கூட்டிச்செல்கிறது. மம்மூட்டி குட்டி ஸ்ராங்காக [மோட்டார் படகு ஓட்டுனர் ] வருகிறார். 

வருக்கு தான் என்ன? சாதி,மதம், தன் பெற்றோர் யார் ? என்றே தெரியாது. அவர் இளமையில் பிறந்த ஊரான திருவாங்கூரை விட்டு வெளியேறியவர், சென்று வசித்த வெவேறு ஊர்கள் , சந்தித்த மனிதர்கள் , சந்தித்த பெண்கள் என விவரிக்கும் அருமையான காட்சிப்பெட்டகம் இப்படம் .படத்தில் நடப்புக்கால காட்சிகளில் மின்னல் தாக்கி கருகி கரை ஒதுங்கிய பிணமாகவே நடித்திருக்கிறார் குட்டிஸ்ராங்க்  மம்மூட்டி.

மூன்று மதங்களைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் பின் ஒருவராக பிணத்தை அடையாளம் காட்ட கடற்கறையில் அமைந்த போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். அப்படியே மெல்ல கதை விரிகிறது, விவரிக்க இயலாத வார்த்தை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ?!!! என்னுமளவுக்கு அப்படி ஒரு அழகு படம் முழுக்க வியாபித்திருக்கிறது.  .

இந்த குட்டி ஸ்ராங்க் திரைப்படம் மூன்று என்னும் மந்திரச்சொல்லால் வரையறுக்கப்பட்டுள்ளது.
அவை:-
மூன்று அழகிய பெண்கள்.
மூன்று மதங்கள்,
மூன்று ஊர்கள்,
மூன்று பருவநிலைகள்.

முதலில் ரேவம்மா:-
மூன்று பெண்களில் ஒருவரான ரேவம்மா [பத்மப்ரியா] இந்துமதத்தில் பிறந்து இலங்கையில் மருத்துவப்படிப்பு முடித்து தந்தையின் தொடர்ந்த கொலைபாதகங்களால் மனம் வெறுத்து , புத்த மத துறவியாக கோலம் பூண்டிருக்கிறார், பெற்றதாயையும், தன் உற்ற தோழனான சக புத்த பிட்சுவான பிரசன்னாவையும் கொன்ற கொடுங்கோல் ஜமீன் தகப்பனிடமிருந்து, அவரின் ஆஸ்தான அடியாள் மற்றும் படகோட்டி குட்டி ஸ்ராங்கின் உதவியால் ஊரைவிட்டு ஓடிவந்து மறைந்து வாழும் பெண் இவள். கரை ஒதுங்கிய பிணம் குட்டி ஸ்ராங்க் தான் என்று விம்மியபடி அடையாளம் காட்டுகிறாள்.அவன் மீது தான் வைத்திருக்கும் மதிப்பை நமக்கு விளக்கவும் ஆரம்பிக்கிறாள்.

முதல் கதை, ஒரு கோடைக்காலத்தில் ,இந்துக்கள் வசிக்கும் மலபார் எனும் ஊரில் காட்சி விரிந்து துவங்குகிறது. ஒவ்வொரு கால, இடத்துக்கும் மாறுபடும் வித்தியாசமான வெளிச்சமும். ஒளிப்பதிவும், பிண்ணணி இசை சேர்ப்பும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. அப்படி ஒரு நேர்த்தி. 

தில் சுத்தமாக முகச்சவரம் செய்யப்பட்ட ,எண்ணெய் தேய்த்து சீவப்பட்ட பாகவதர் கிராப்பில், பாகிஸ்தானி போன்ற குர்தா அணிந்து வந்த மம்மூட்டி முகத்தில் முதுமை தெரிந்தாலும், தன் 40களில் இருக்கும் கதாபாத்திரம் என்பதால் நம்ப முடிகிறது.  படத்தில் எவ்வளவுக்கு? அழகு நிறைந்துள்ளதோ அவ்வளவுக்கு வன்முறையும் உண்டு.   இந்த முதற்பகுதியில் வரும் ஒரு காட்சி:-  தன்னை எதிர்த்துப்பேசிய ஒரு தொழிலாளியை ரேவம்மாவின் அப்பா அடியாட்களைக்கொண்டு மரம் உரிக்கும் எந்திரத்திற்குள் அனுப்பி தோலை உரிக்கும் காட்சி மிகவும் கொடூரம் என்பேன். மற்றொரு காட்சியில் ,புத்த பிக்கு பிரசன்னாவை  குட்டி ஸ்ராங்க் தன் கைகளால் ரத்த்ம் வர அடித்து சாய்க்கும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சியையும் சொல்வேன்.

இரண்டாம் பெண் பெம்மெனா:-

டத்தின் அடுத்த பெண்மணியான பெம்மெனா [கமாலினி முகர்ஜி] இப்போது போலீஸ் ஸ்டேஷன் வந்து கரை ஒதுங்கிய பிணத்தை அடையாளம் காட்ட வருகிறாள், இவள் குட்டி ஸ்ராங்கின் மேல் ஒரு தலைக்காதல் கொண்டவள். படத்தின் இந்த நடுப்பாதி கிருஸ்துவ மதம் பரவியுள்ள கொச்சியின் சிற்றூரில் ஒரு மழைக்காலத்தில் பிரம்மாண்டமான நீர்நிலையில் விரிகிறது.

காலம் சென்ற, தேர்ந்த கொலைகாரன் என்று எல்லோரும் நம்பக்கூடிய குட்டி ஸ்ராங்க் கைதேர்ந்த ஒரு நாடக கலைஞன் என்றும் போலீசாருக்கு தெரியவருகிறது. இதில் மம்மூட்டி ராஜபாட்டை வேடமான பாரீஸ் நகர படைத்தளபதி ரோல்டனாக நடித்து எல்லோரின் மனம்கவர்ந்தவர். அவர் மீது பெம்மெனா கொண்ட காதல் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெம்மானாவை எவ்வளவு அழகாக காட்டமுடியுமோ அவ்வளவு  அழகாக காட்டியுள்ளார் அஞ்சலி சுக்லா. ஒரு காட்சியில் புட்டத்தை கூட காட்டி நடித்துள்ளார் கமாலினி.

ம்மூட்டி ஏற்ற ஒவ்வொரு பாத்திரத்துக்கும் வெளியிட்டிருக்கும் வித்தியாசமான நடிப்பு மெச்சத்தக்கது. இந்த பாதியில் முன்நெற்றியில் சுருளும் முடியுடன், மீனவன் தாடியுடன்,  லுங்கி அணிந்த மம்மூட்டி கலக்குகிறார். தன் நாடக ஆசான் லோனி [சுரேஷ் கிருஷ்ணா] மீது மரியாதையையும் தங்கையான பெம்மனாவின் மீதான ஈர்ப்பையும், தன் நாடகக்கலையின் மீதான மையலையும் அழகாக பிரதிபலித்துள்ளார்.  மம்மூட்டி இதில் கைதேர்ந்த  கூத்து  கலைஞனாக மாறி நடனம்  ஆடுகிறார்.அட்டைக்கத்திச்சண்டையும் போடுகிறார்.

தில் ஒரு  பயங்கரமான காட்சியாக:- 2 டன் எடையும், 10 அடி உயரமும் கொண்ட காங்க்ரீட் சிலுவையை , குட்டி ஸ்ராங்க் மற்றும் ஊரார் உதவியுடன் ராட்டினத்தில் சுற்றப்பட்ட  தடித்த நார்கயிற்றின்  துணையால் சர்ச்சின் கோபுரத்தில் ஏற்றுகின்றனர், அப்போது அங்கே ஏற்படும் சிறிய கவனச் சிதறலால் ராட்டினம் குலுங்கி நகர்ந்தும் விட, கயிறு விடுபட்டு, சிலுவை அப்படியே ஒரு மூதாட்டியின் மேல் விழுந்து அம்மூதாட்டி நசுங்கி செத்தும் போகிறாள். இந்த அளவுக்கு விவரணையை  இந்தியப்படங்களில் நான் கண்டதில்லை. 

ஷாஜி என்.கருண்
58 வயதான இயக்குனர் ஷாஜி என்.கருண் எதற்குமே தன்னை சமாதானம் செய்து கொள்ளவில்லை என்பேன். இவரின் இந்திய எமர்ஜென்சி  பற்றிய படமான பிறவி எல்லா கலைசினிமா விரும்பிகளும் வாழ்வில் பார்க்க வேண்டிய ஒன்று. அப்படத்தில் நீண்ட நாளாய் அன்னிய தேசத்தில் இருந்த மகன் , தாயகம் வந்த அன்றே சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் பிடித்துக்கொண்டு போய் விசாரணையின் போது லாக்கப் டெத் செய்யப்பட்டுவிட , அது தெரியாமல் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனாக தேடி அலையும் ஒரு  தந்தையின் உணர்ச்சிகளை பிற்பாதி 70களின் கொடிய நாட்டு நடப்போடு சேர்த்து தந்து காண்போரை கதிகலங்க செய்திருப்பார்.

மூன்றாம் பெண் காளி:-

டத்தில் இப்போது பிணத்தை அடையாளம் காட்ட வருகிறாள்  மூன்றாம் பெண் கதாபாத்திரமான இந்துப்பெண் காளி [மீனாகுமாரி], இவள் ஒரு செவித்திறன், பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளி,  கூடவே வரும் அவளின் அம்மா அவளிடம் கேள்விகள் கேட்டு போலீசாருக்கு சைகையாலேயே பதில் வாங்கி தருகிறாள். காளியைப்பார்த்த பெம்மனா அவள் குட்டி ஸ்ராங்கின் மனைவி என்று தான் அறிவேன் என்று ரேவம்மாவிடம் கூறுகிறாள்.  காளி  நான்கு  மாதம்  கர்ப்பிணியாக இருக்கிறாள்.

வளின் விவரிப்பில் படம் ஒரு பனிக்காலத்தில் துவங்குகிறது. குட்டி ஸ்ராங்க்  சிலுவை  விழுந்து  மூதாட்டி மரணமடைந்த துயரத்தால். தன் ஊரான திருவாங்கூருக்கு வர, அங்கே சிறுவயது முதலே ஊராரின் மூட நம்பிக்கையால் இன்னமும் வெறுத்து ஒதுக்கப்படும் காளியை காண்கிறான்.  உள்ளூர் பணக்காரர் நீரில் விழுந்துவிட அவரை காப்பாற்றி அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரின் படகையும்  இப்போது ஓட்டுகிறான்.

வருக்கும் நம்பிக்கையான அடியாளாகிறான். அப்படி அந்த பணக்கார எஜமானால் வெறுத்து ஒதுக்கப்படம் காளியை கொல்ல விழைந்தவன் காளியின் மருண்ட பார்வையாலும் , வெகுளித்தனத்தாலும், அவளின் மீதான பச்சாதாபத்தாலும் கொல்லாமல் விடுகிறான். ஒரு நாள் குட்டி ஸ்ராங்கினை விஷப்பாம்பு தீண்டிவிட அப்போது  அரும்பாடுபட்டு தென்னை ஓலையில் வைத்து இழுத்து வந்து  மருந்திட்டு காப்பாற்றி  உயிரளித்த காளியையே திருமணம் செய்து வாழ்ந்தவன்,  தன் நாடக ஆசானை சென்று பார்த்து வருவதற்காக திரும்ப கொச்சிக்கு போகிறான். அங்கே முன்பு தான் மிகவும் மையலுற்றிருந்த பெம்மனாவிடமிருந்து விலகியே இருக்கிறான். தன்னால் அப்பாவிப்பெண் காளிக்கு துரோகம் இழைக்க முடியாது என மிக உறுதியாக இருக்கிறான்.இந்த கடைசிப்பாதியில் தன் ட்ரேட்மார்க் க்ராப் முடியுடன், லேசான தாடியுடன்,  வேட்டி அணிந்த மம்மூட்டி கலக்குகிறார்.


தில் ஒரு காட்சியில்:-  சோன்பப்படி விற்பாற்களே!!!?, அது போல ஒரு பெரிய கண்ணாடி குடுவை ஜாடி, அதில் நிறைய சாராயம்..சுமார் 40 லிட்டர் கனமாவது இருக்கும். அதை தன் இரண்டு கைகளால் சாதாரணமாக தூக்கி அலைந்தபடி குட்டி ஸ்ராங்க் மது அருந்துபவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பான், கலை இயக்குனரின் திறனுக்கு அந்த ஒரு கண்ணாடி ஊரல் ஜாடியே சான்று என்பேன்!!!. தவிர பார்த்துப் பார்த்து போடப்பட்ட ஜமீன் அரண்மனை, 1940களின் மோட்டார் படகுகள், அதுவும் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும் தீம்களோடு. முற்பாதியில் வரும் பாழடைந்த ஓட்டு வீடு. அந்த கடற்கரை ஒட்டிய போலீஸ் ஸ்டேஷன். பெம்மனாவின் அழகிய காயல் புறத்தில் மீது அமைந்த ஓட்டு வீடு என கலை இயக்கத்துக்கு சான்றாக சொல்லிக்கொண்டே போகலாம்.

டத்தின் இந்த இறுதிப்பகுதியில் வைக்கப்பட்ட ஒரு பயங்கர காட்சியாக, குட்டி ஸ்ராங்க் காளியை கொல்ல அவளின் குடிசைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர, அவனைக்கண்டு மருண்ட அப்பாவி காளி பயத்தில் நின்றமேனிக்கு சிறுநீர் கழிக்கிறாள்.  காண்கையிலேயே நமக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.  இது போல காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால்,  படம் சிறந்த ஒரு முயற்சி!!! எனலாம்.  உலக சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டியபடம்.  தமிழில் இதுபோல மாற்று சினிமா முயற்சிகளை  மக்கள் ரசித்து வரவேற்க வேண்டும், அப்போது தான் இது போல படங்கள் தமிழிலும் எடுக்க முடியும்.

டத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும்,நேர்த்தியான உழைப்புக்கு முன்னர் நீர்த்துப்போகிறது.  நல்ல கதை. நல்ல திரைக்கதை,  நல்ல இயக்கம், நல்ல ஆக்கம், நல்ல உடையளங்காரம்,  நல்ல அரங்க அமைப்பு, நல்ல ஒளிப்பதிவு. நல்ல ஒலிக்கோர்ப்பு, நல்ல இசையமைப்பு என எதிலுமே சோடைபோகவில்லை. பெண்களின் கண்ணோட்டத்தில் விரியும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருப்பது அஞ்சலி சுக்லா என்னும் பெண் ஒளிப்பதிவாளர்.

அஞ்சலி ஷுக்லா
வர்  சிறந்த இந்திய இயக்குனர் & ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து 15 படம் உதவி ஒளிப்பதிவாளராய் இருந்துள்ளார்.  எந்த விதத்திலும்  குறை என்பதே இல்லை. ஆகச்சிறந்த தரம் ஒவ்வொரு ஃப்ரேமிலும்.  முக்கியமாக மூட் லைட்டிங்குகளை சொல்லியே ஆக வேண்டும். எல்லோரையும் போல பீரியட் படத்துக்கு உபயோகிக்கும் ஃபில்டர்களை இவர் உபயோகித்திருந்தால் நமக்கும்  இது 40களின் கதைக்களம் என்று உணர்ந்து கொண்டே இருக்க வைக்கும்.

னால், நம்மால் இந்த அளவுக்கு ஒன்றியிருக்கவே முடியாது. நம்மை படத்தின் ஒரு அங்கத்தினராகவே மாற்ற தான் இவர் அப்படி செய்யவில்லை என நினைக்கிறேன். இவரின் முந்தைய உதவி ஒளிப்பதிவு படமான் பிஃபோர் த ரெயின்ஸ் என்னும் சந்தொஷ் சிவன் இயக்கத்தில் வந்த பீரியட் படத்தில், ராஜா ரவிவர்மாவின் தைல ஓவிய வண்ணங்களின் மெருகையும் பொலிவையும் தரும் ஃபில்டர்களை, நந்திதா தாஸ் தோன்றும் காட்சிகளில் அவர் மீது பிரயோகித்திருப்பார். அது மிகவும் அற்புதமான விளைவாக இருக்கும். ஒரு ரசிகன் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு விளைவு அது என்பேன். ஆக மொத்தத்தில் 4 தேசிய விருதுகள் வாங்குவதற்கு தகுதியான படம் தான் இது!!!. படம் தரவிறக்க
======00000======
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Shaji N.Karun
Produced by Reliance BIG Entertainment
Screenplay by
  • Harikrishnan
  • P. F. Mathews
Story by Shaji N.Karun
Starring
Music by Isaac Thomas Kottukapally
Cinematography Anjuli Shukla
Editing by A. Sreekar Prasad
Distributed by Reliance BIG Entertainment
Release date(s) 23 July 2010 (2010-07-23)
Country India
Language Malayalam
Budget Rs. 60 million
 ======00000======

த ரீடர் [the reader] [2008] [18+] [Uk+Usa&Germany]


ந்த படம் த ரீடர் , படம் பார்ப்பவரை கரைத்து, மனதை நகர்த்தும் தன்மை கொண்டது, நான் லீனியர்  உத்தியை கொண்ட  இந்த ”ட்ராமா ,ரொமான்ஸ்” வகைப் படம் 1995ல் வெளியான பெர்னார்ட் ஷ்லின்க் என்பவர் எழுதிய “த ரீடர் ”என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு உன்னத படைப்பு. 

ல்லோருக்கும் சிறுவயதில் காதல் வந்திருக்கும், சிலருக்கு தன்னைவிட சிறுவயதினர் மீது வரும், சிலருக்கு தன்னை விட பெரியவர்கள் மீது வரும். அதை காதல்  என்று சொல்லுவதை விட இனக்கவர்ச்சி என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும். இளம் பிராயத்தில் தோன்றியிருந்தாலும் பசுமரத்தாணி போல மனதில் வேறூன்றியிருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் அழியாது.

து போல திரைப்படங்கள் நம் நாட்டிலும் திறம்பட தயாரிக்க முடியும் தான் என்றாலும்?  எந்த அளவுக்கு வணிக ரீதியாக வெற்றி பெறும் என்றே என்னால் கணிக்க முடியவில்லை, சரி வணிக ரீதியை விட்டு விடுங்கள், கலாச்சார தாலிபான்களை நினைத்தாலே இயக்குனருக்கு இது போல படம் மனதில் உதிக்கவே உதிக்காது.  தவிர, அந்த வகைப் படங்களுக்கு குத்தப்படும் பிட்டுப் படம் என்னும் முத்திரை இருக்கிறதே!!! அதைச் சொல்லுங்கள்,

தையும் மீறி 1978 ஆம் ஆண்டு பத்மராஜனின் கதையில் பரதன் இயக்கத்தில் வந்த ரதிநிர்வேதம் என்னும் மலையாள மொழிப்படம். அப்படம் 32 வருடங்களுக்கு முன்பான இந்திய பேரலல் சினிமாவுக்கு மாபெரும் தொலைநோக்கு என எண்ணி வியக்கிறேன். அதிலும் இதே போன்றே வயதில் மூத்த பெண்மணியின் மீது காதல் வயப்படும் விடலைப்பையனின்  கதையை கவிதையாக செலுலாய்டில் வடித்திருப்பார் இயக்குனர் பரதன்.  அதன் பின்  தமிழில் வெளிவந்த பாலுமகேந்திராவின் அழியாக்கோலங்கள். என இரண்டு படமும் எனக்கு இந்த படம் பார்த்த பின்னர் நினைவுக்கு வரத்தவறவில்லை.


====0000====
படத்தின் கதை:- வருடம்-1958, பெர்லினில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டம். ஹென்னா ஒரு அழகிய  36 வயது முதிர்கன்னி,ட்ராம் (யு பார்ன்) வண்டி கண்டக்டர்   , மிகப் புதிரானவள்.  தனியாக ஒரு மாடி வீட்டில் வசிக்கிறாள். மைக்கேல் 15வயது பள்ளி மாணவன், துறுதுறுப்பானவன், வசதியான ஜெர்மானியக் குடும்பம், பள்ளி சென்றவன் ஸ்கார்லெட் காய்ச்சல் வந்து  நடக்கவே முடியாமல் அவள் வீட்டு வெளியே வாந்தி எடுத்துவிட்டு அமர்ந்திருக்க,  இவள் அவனின் வாந்தியை கழுவி விட்டு   அவனை வீடுவரை கொண்டு விடுகிறாள்,

ரு நன்றிக்காக தன் வீட்டினரின் அறிவுரையின் பேரில் பூங்கொத்துக்கள் வாங்கிக்கொண்டு அவன் 3மாதம் கழித்து அவளை பார்த்து, நன்றி கூற வருகிறான்,ஆரம்பத்தில் அவள் அவனிடம் அதிகம் கண்டிப்பு காட்டினாலும், அவன் தொடர்ந்து பூனைக்குட்டி போல அவள் வீடு வர ஆரம்பிக்க,அவன் உலக இலக்கியங்கள் படிப்பதை அறிகிறாள். தான் காலால் இட்ட வேலையை அவன் தலையால் செய்ய துடிப்பதையும் அறிந்தவள் கனிகிறாள்.


ருநாள்  அவள்  குளிர் காய உபயோகிக்கும் கரியை மைக்கேல் கீழே இருந்து இரும்பு வாளியில் நிரப்பிக்கொண்டு தூக்கமுடியாமல் படியேறி வர, அவனின் கரி படிந்த முகத்தையும் ஆடைகளையும் கண்டவள், அவனைப்பார்த்து அபூர்வமாக சிரிக்கிறாள். அவனை ஆடைகளை களைய பணித்தவள் ஒரு கைதேர்ந்த தாதியைப்போல தேய்த்தும் குளிப்பாட்டிவிடுகிறாள் , மேலும் முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியை பார்த்தே கண்டுபிடிக்கும் ஆள்  நானடா, என்று அவனுக்கு  உணர்சியை தூண்டி உடல்லுறவும் கொள்கிறாள்,  அவனுக்கு நாளடைவில் பாடம் மனதில் பதியவில்லை,

ணவும் பிடிக்கவில்லை, பள்ளி விட்டதும் அவள் வீடுதான், அவளுக்கு கதை அடுத்தவரை படிக்க சொல்லி கேட்பதில் ஆனந்தம், அனுதினமும் பால் உறவுக்கு முன் அவனை புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளான “த ஒடிசி,The Odyssey, த லேடி வித் த லிட்டில் டாக்,[The Lady with the Little Dog,] அட்வென்சர்ஸ் ஆப் ஹக்கிள் பரி ஃபின், [Adventures of Huckleberry Finn,] மற்றும் டின் டின்  [Tintin] போன்ற புத்தகத்தில் இருந்து படிக்க சொல்லி கேட்டு பின்னர் உடல் உறவு, என தினமும் ஜமாய்கின்றனர். அவன் பள்ளியில் புதிதாய் வந்த மாணவி அவனை பார்க்க தொடங்க, அவனுடன் பழகத் துடிக்க, இவன் வெட்டிக்கொண்டு ஹென்னாவிடமே செல்கிறான், ஒரு சமயம் ஹென்னாவுடன் இரண்டு நாள் மிதி வண்டி பயணமும் செய்கிறான். அங்கே ஒரு உணவு விடுதியில் இவர்களின் ஜோடிப்பொருத்தத்தை உணவகப் பெண்மணி பார்வையாலேயே எள்ளி நகையாட இவளுக்கு குறுகுறுக்கிறது. அவளுக்கு தான் செய்வது ஒரு மிகபெரும் குற்றம் என விளங்காமல் இல்லை.இவனை கழற்றிவிட தருணம் பார்க்கிறாள்.


ஹெண்ணாவிற்கு அவள் ட்ராம் கம்பெனியில் பதவி உயர்வு கிடைக்க, இவன் பிறந்த நாள் அதுவுமாக சண்டை போட்டுவிட்டு, அவனை இப்படி பிடிவாதம் பிடிக்க்கிறாய்!!!!  என கோபத்தில் அறைந்தவள், பின்னர், போருக்கு பின் அமைதி, என்னும் கணக்காய் அவனைத்தேற்றி சமாதானமாகி பின்னர் உறவு கொண்டதும், அவனை அவன் நண்பர்களுடன் செல்லுமாறு சொல்லி வழி அனுப்பிவிடுகிறாள்,  அப்படியே வீட்டை காலி செய்து விட்டு  பறக்கிறாள்.. மைக்கேல் மிகவும் ஏமாந்து போகிறான், சிறு உள்ளத்தில் பெருங்காயம்...காதல் தோல்வியில் உழல்கிறான்.

7 வருடம் கழித்து:-
1966ம் வருடம் அவன் சட்டம் படித்துக்கொண்டிருக்கிறான், அவள் இன்னும் அவன் மனதில் நீங்காமல் இருக்கிறாள், சட்டம் படிக்கும் சக மாணவி அவனுக்கு வலிய நூல் விட இவன் நழுவுகிறான், திடீரென அவன் நேர்முக செமினார் வகுப்பில் முக்கிய வழக்கு நடக்கையில், ஜெர்மனிய நாஜி படையில் போலந்து நாட்டின் ஆஷ்விட்ஸ் என்னும் உலகபுகழ்பெற்ற இனப்படுகொலை களத்தில் மட்டும் , யூத மக்களும், இன்னும் பிற கைதிகளுமாக சுமார் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்,


தில் ஒரு கிளை வழக்காக டெத் மார்ச்  என்னும் சாகும் வரை நடக்கும் சித்திரவதை என்னும்  ஒரு வரலாற்று நிகழ்வின் போது, பெண்களும் சிறுமிகளும் அயராமல் சோறு தண்ணீர் உறக்கமின்றி வாட்டும் குளிரில் நடுங்கியபடி நடக்கும் போது, அமெரிக்க,ப்ரிட்டன் ஆகாய விமானங்கள் குண்டுகளை போட்டு தாக்கத் துவங்க. அப்போதும் கடமை தவறாத ஹென்னா தன் தலைமையில் இருந்த 300 பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டி,சர்ச் ஒன்றில் மந்தையாடுபோல அடைக்கிறாள்.


காய மார்க்க குண்டுவீச்சு தாக்குதலில் அந்த சர்ச்சும் தீக்கிறையாகிவிட யூதப் பெண்களும் குழந்தைகளும்  வெளியில் பூட்டப்பட்ட கதவை திறக்கச்சொல்லி  கண்ணீர் விட்டு கதறியும் பலனில்லை. ஹென்னாவின் கல்மனம் கதவின் பூட்டை திறந்தால் பெண்கள் தப்பிவிடுவார்கள் என்று நினைத்ததால் கதவை திறந்துவிடவேயில்லை. அவர்கள் கருகி இறந்தாலும் பரவாயில்லை தப்பிக்கக்கூடாது என்றிருக்கிறாள் . ஆக அன்று 300 பேர் தீக்கிரையாயினர்.

ன்ன கொடுமை என்றால்? 300 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு, இப்போது விசாரனைக்கு வருகிறது. சம்பவம் முடிந்து 22வருடம் ஆகி, 2000 பேர் அங்கு பணி புரிந்தும் 6பேர் மட்டுமே மாட்டி, வழக்கு நடக்க, அதில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் இவர்களை அடையாளம் காட்டுகின்றனர், குறிப்பாக ஹென்னா ஒரு வினோதமான காவலாளி என்றும், அவள் இளம் யூத சிறுமிகளை முடிந்த வரை காஸ் சேம்பருக்கு அனுப்பாமல், வயது முதிர்ந்தவரை மட்டும் எப்பொழுதும் தேர்வு செய்து காஸ் சேம்பருக்கு அனுப்புவாள் என்றும்,


சிறுமிகளை,கதை புத்தகங்களை கொடுத்து,சத்தம் போட்டு படிக்க சொல்லி கேட்கும் வழக்கம் கொண்டவள் என்றும் சொல்ல, நீதிபதி அப்படியா? என கேட்க இவள்  சிரத்தியாக,ஆமாம்,அப்போது தான் புதிதாய் வருபவருக்கு இடம் கிடைக்கும், முதியவரால் என்ன பயன் உண்டு? வாழ்ந்து முடித்தவரை தான் காஸ் சேம்பருக்கு அனுப்பியதில் எந்த தவறும் இல்லை என்றும் தீர்க்கமாக பதிலுறைக்க, கோர்டே அதிர்கிறது,அவளுக்கு மரணதண்டனை விதிக்க்க சொல்லிக்கேட்டு கூச்சலிடுகிறது.


வள் 22 வருடம் கழித்தும் தன் தவறுக்கு வருந்தாத இவளைக் கண்டு அனைவரும் கொதிக்க, மைக்கேல் மிகவும் வேதனையும் அருவருப்பும் ஒருங்கே கொண்டு.  நிறைய புகை பிடிக்கிறான்,  இது அவனின் ஆசிரியருக்கும் சக நண்பர்களுக்கும் சந்தேகமூட்டுகிறது, இன்னொரு நாள் விசாரனையில் மற்ற கைதிகள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு. இவளே அன்று  டெத்மார்ச்சின் போது நடந்த எல்லா குற்றத்திற்க்கும் காரணம், என்றும், இவள் கைப்பட தயாரித்த வேலை நேர அறிக்கையும், அதில் மற்ற விபரங்களும் உள்ளது, என்று சொல்லி தப்பிவிட,


நீதிபதியோ நீ தான் இந்த டெத்மார்ச்சுக்கு கூட்டிச்செல்ல  ஆட்களை தேர்வு செய்து அனுப்பிய பட்டியலை தயாரித்தாயா? என்று கேட்க, இவள், இல்லை, நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் என்று  வாதாடிச் சொல்ல,எதுவும் எடுபடவில்லை.

ம்பாத நீதிபதி கையெழுத்து பரிசோதனைக்கு, அவளை எழுதி காட்ட சொல்லி கேட்க, இவள் திகைத்து, சிறிது நேர அமைதிக்கு பின், கொடுக்கப்பட்ட  பேப்பரையும் பேனாவையும் முன் புறம் தள்ளியவள், தானே நடந்த தீ விபத்து சம்பவத்திற்க்கு முழுப் பொறுப்பு என்கிறாள், மைக்கேல் அழுகிறான், அப்போது அவனுக்கு ஒன்று  நன்றாய் விளங்குகின்றது,  அவள் படிக்காதவள், படித்தவள் போன்று தன்னை காண்பித்துக்கொள்பவள் என்னும் உண்மைதான் அது,  தீர்ப்பு  வருகின்றது,

ற்றவர்களுக்கு  6 வருட சிறை தண்டனை, இவளின் முக்கியத் தன்மையை கருதி, ஆயுள் தண்டனை என்று.  அவன் ஹென்னா பணிபுரிந்த ஆஷ்விட்ஸ் முகாமுக்குள் செல்கின்றான்,  அங்கு கண்ட காட்சி அவனை புரட்டி போடுகின்றது,  ஹென்னா இங்கு வேலை பார்த்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், எப்படி தன்னிடம் இப்படி உடலால் பழகியிருக்கிறாள்?.  என கொதிக்கின்றான்,  இருந்தும் இவளைப் பார்க்க மனது துடிக்க,  முன் அனுமதி பெற்று சிறைசாலைக்கு செல்கிறான்,  வாசல் வரை சென்று, அருவருப்பும் கோபமும் எழ விருட்டென வெளியேறுகிறான், ஹென்னா தன்னை காண வந்தது யாராயிருக்கும் ?  எனக் குழம்பியவள் தன் அறைக்குள் செல்கிறாள்,
====0000====
இனி என்ன ஆகும்? டிவிடியில் பாருங்கள். முழுக்கதையும் படிக்க காணொளியை தாண்டி வந்து படியுங்கள்:-

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-====0000====
தன் பின்னர் நீண்ட நாளாய் அவனை ஒருதலைக்காதல் செய்து வந்த, சக மாணவியின் அறை சென்று இன்று உன் கூட தூங்கவா? என்று கேட்கிறான், அவள் உற்சாகமாக.. இருவரும் உடலுறவு கொள்கின்றனர். (அவளை அவன் மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டான் என்று குறிக்கிறது) காட்சி மாறி நடப்பு காலத்தில் பயணிக்கிறது.. மைகேல் பெரிய வழக்கறிங்கராகிறான் , மனைவியுடன் விவாகரத்தும் ஆகின்றது , (எல்லாம் அவள் நினைவினால் வாழ்ந்ததால் என்று நமக்கும் விளங்கிக்கொள்ள முடிகிறது )   தன் மகள் கல்லூரியில் சட்டம் படிக்க,  விடுமுறையில் பெர்லின் வருகிறாள்,  அவள் தாய் வேறு ஊரில் , இவன் மகளிடம் அவ்வளவாக பேசியதில்லை,  மகளும் நன்கு வளர்ந்து விட்டாள், இவனுக்கு எல்லாமே வியப்பளிக்கிறது, இவன் அவளை சிறு பெண்ணாகவே எண்ணி இருந்திருக்கிறான்.


வலுடன் தன ஊரான Neustadt. ற்கு பல வருடங்கள் கழித்து செல்கிறான், அவள் ஞாபகம் வரும் என்பதால் அவன் அவ்வூருக்கு செல்வதையே  நீண்ட காலம் தவிர்த்தும் வந்திருக்கிறான், அவன் தந்தை இறந்த போதும் கூட சவ அடக்கத்துக்கு செல்லவில்லை,  வீட்டில் தன் அறையை சென்று பார்க்க, பழைய டைரிகளில் அவளின் நினைவுகள், அவளுக்கு படித்துக்காட்டிய புகழ்பெற்ற கதை புத்தகங்கள்.  என அவன் சிறுவயது நினைவலைகள் பீறிட்டு கிளம்ப ,  ஒரு பெட் டேப் ரிக்கார்டர்  ,மைக், காசெட்டுகள் ,வாங்கி அந்த கதைகளை,  ஒலிச்சித்திரம் போல உயிரோட்டமாக பதிவு செய்கிறான், அவளின்  சிறை முகவரிக்கு அனுப்புகிறான்,  அவளுக்கு பேரானந்தம் பெட் டேப் காசெட்டுகளை வாங்கியவுடன் கடிதம் இருக்கிறதா? எனப் பார்க்கிறாள், அனால் இவன் அவளுக்கு கடிதம் எழுத விரும்பவில்லை,  எழுத்தறிவிக்கவே விரும்புகிறான்,


தை இவள் உணர்ந்து சிறை வளாகத்திலுள்ள நூலகம் சென்று இவன் அனுப்பிய "தி லேடி அண்ட் தி லிட்டில் டாக் "புத்தகம் எடுத்து வந்து , கேட்கிறாள். பாஸ் செய்கிறாள், அதற்க்கு பொருத்தமான வார்த்தையை யூகிக்கிறாள் ,  பொருத்திப் பார்க்கிறாள். அடிப்படை கற்காமல் கதை புத்தகங்கள் மூலமாகவும், காசெட்டுகள் மூலமாகவும் படிக்கவும் , பின் மிக அழகாக எழுதவும் கற்கிறாள். தொடர்ந்து இவன் காசெட்டுகள் அனுப்புகிறான், ஆனால் கடிதம் அனுப்பவில்லை.


1988 ஆம் வருடம் அவளின் தண்டனை முடியும் தருவாயில், இவனுக்கு தொலைபேசி அழைப்பு சிறையில் வார்டனிடமிருந்து வர,  அவர் ஹென்னாவின் தண்டனை காலம் முடிந்து அவள் வெளியே வந்தால்.  நிச்சயம் அனாதை ஆவாள், ஆகவே அவளுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து, தங்குமிடம் தந்து கூட வைத்துக்கொள்ளும் படி மன்றாடிக் கேட்க. இவன் நீண்ட தயக்கத்துடன் சிறைக்கு சென்று அவளை சந்திக்கிறான், ஆனால் இவனால் சகஜமாக பேசமுடியவில்லை, ஒட்டவில்லை, எதுவோ? ஒன்று தடுக்கிறது,


னால் அவளை விட்டுவிடவும் மனமில்லை. அடுத்த வாரம் அவள் தண்டனை முடிந்ததும் வந்து அழைத்துப்போய். அவன் ஊரிலேயே தங்கவைத்து அவளுக்கு ஒரு குழந்தைகளை  கவனிக்கும் நர்செரியில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக சொல்கிறான். அவள் ஆமோதித்து அறைக்கு செல்கிறாள்,  ஆனால் அவளுக்கு இவனின் மாற்றம் கண்கூடாக உறுத்துகிறது, தான் எவ்வளவு பெரிய? தவற்றை இழைத்துள்ளோம் ,என மிகவும் வருந்துகிறாள்,


ரு முடிவுக்கு வந்தவளாய், அவளின் வாழ்நாள் சேமிப்பான 4000 பிரான்க்குகளை, தான் ஆஸ்விட்ஸ் முகாமில் காவலாளியாக இருந்தபோது, ஒரு யூத பெண்ணிடம் திருடிய டீ டின்னில் போட்டு வைத்து பாதுகாத்ததை , நாஜிப்படையின் ஆஸ்விட்ஸ் முகாமில் உயிர் பிழைத்த ஒரு யூதரின் கல்விக்கு தரச் சொல்லி,  உயில் எழுதியவள் , தூக்கு மாட்டியும்  இறக்கிறாள்.  மைக்கேலுக்கு இந்த விஷயம் கேட்டவுடனே துக்கம் தொண்டையை அடைத்தாலும்,  அவளின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடித்தவன் ஆஸ்விட்ஸ் காம்பில் இருந்து உயிர் தப்பி தற்போது வசதியாக, நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இலியானாவை நீண்ட பயணம் செய்து சந்திக்கிறான்,

லியானா இந்த பாவப்பட்ட பணத்தை வாங்க மறுக்கிறாள், பின் மைக்கேல் மிகவும் மன்றாட, இவர்கள் இருவருக்கும் என்ன உறவு? என ஆவலுடன் கேட்கிறாள், மைக்கேல் நீண்ட அமைதிக்கு பின்னர்  இவர்களின் இளம் வயது உடல் தொடர்பை கூறுகிறான். அவள் நீண்ட மௌனத்துக்குப்பின்னர். அந்த பணத்தை இருவருமே சென்று யூதர்களால் நடத்தப்படும், ஏழைக் யூத முதியோர் கல்வி உதவி நிறுவனத்திற்கு கொடுக்கலாம். என்று முடிவு செய்கின்றனர்.  இலியானா அந்த டீ டின்னை மட்டும் தான் வைத்துக்கொள்கிறாள்.

மைக்கேலுக்கு  இப்போது தான் ஒரு பெரும் பாரம் மனதை விட்டு இறங்குகிறது. பின்னொரு சமயம் தன் மகளை ஹன்னாவின் சமாதிக்கு அழைத்துச் சென்று. தன் இளம் பிராயத்து காதல் கதையை, முதல் முறையாய் ஒருவருடன் கூறுவது என்ற முடிவுடன் சொல்லத் தொடங்குகிறான்.

====0000====

து நிஜமாகவே என்னை மிகவும் உலுக்கிய படம்,எவ்வளவு பெரிய அதி பயங்கரத்தை செய்து விட்டு குற்றுணர்வு கொஞ்சமும் இன்றி சாதுவான பூனை மாதிரி சிறுவனுடன் உறவு கொள்ளும் ஒரு பாத்திரம், யாரும் செய்ய தயங்கும் சவாலான பாத்திரம். தினமும் கதை கேட்டல் பின் புணர்தல், என்ன ஒரு வித்தியாசமான உறவு முறைகள் , அவளது கதை கேட்கும் ஆர்வம். எல்லாதிற்கும் மேல்அவளுக்கு கடைசியில் ஏற்ப்படும் குற்ற உணர்வு தற்கொலைக்கு தள்ளுகிறது.

தான் திருடிய டீ டின் டப்பாவிலே பணம் சேர்த்து வைப்பது, KID KID என அழைத்துக்கொண்டே சிறுவனுக்கு உடலுறவு சொல்லித் தருவது, அவனை தலை முதல் கால் வரை தேய்த்து குளிப்பாட்டுவது, என்று கேட் நடிப்பு அபாரம்.
கேட்டின் தற்போதைய வயதிர்க்கேற்ற பாத்திரம், வயதான கேட்டின் ஒப்பனையும் அற்புதம். கேட் தனது நடிப்பு திறமையை ஆணித்தரமாக இம்முறையும் நிரூபித்துள்ளார் என்றால் மிகையில்லை. எல்லா படங்களிலும் நிச்சயம் பிறந்த மேனியாக ஒரு காட்சியிலேனும் வருவார். பெரும்பாலான படங்களில் முதியவருடன் ஜோடி சேரும் இவர். இதில் சிறுவனுடன் ஜோடி போட்டுள்ளார்.

ல வித்தியாசமான கதாபாத்திரங்களை கேட் செய்துள்ளார். அதில் பல சர்ச்சைக்குரியதும் கூட. ஏற்கனவே கேட் உலக சினிமாக்களில் பெற்றுள்ள பெயர் ஈடு செய்ய முடியாதது. சில
உதாரணங்கள்:- டைடானிக் (titanic), ஹோலீ ஸ்மோக் (holy smoke),தி குவில் (the quill), ஐரீஸ் (iris), எனிக்மா (enigma), ரேவல்யுஷனரி ரோட்ஸ் (revolutionary roads)  த ரீடர் கேட் ரசிகர்களுக்கும் உண்மையான கலை ரசிகர்களுக்கும் ஒரு நல்ல தீனி என்பதில் ஐயமே இல்லை.

ரால்ப் பியென்ஸ் பற்றி சொல்லவில்லை என்றால் என் ஜென்மம் சாபல்யம் அடையாது.. ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் யூதர்களை கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளும்,அமான் கோத் என்னும் நாஜிபடையின் கொடுங்கோல் அதிகாரியாக வருவார். ஒரு பெண் யூத பொறியாளர் தனக்கு முன் சத்தமாக முகாமின் பார்ரக்ஸ் கட்டுமானம் பற்றிய உண்மையை சொல்லிவிட்டாள். என்று அவரை மண்டியிட வைத்து சுடுவார், பின்னர் அவள் சொன்ன படியே மாற்றியும் கட்டச் சொல்லுவார். 


தில் தன் அழகிய வேலைகார  யூதப்பெண்ணிடம் ஆசையும் இருக்கும், ஆனால் ஒரு யூத பெண்ணிடம் போய் தான் விழுவதா? என்ற அருவருப்பும் இருக்கும்.  கடைசியில் கூட அவளை மட்டும் ஷிண்ட்லேர் எவ்வளவு பணம் தந்தும் ஷிண்ட்லேரிடம் அனுப்ப மனமிருக்காது, (அவளை நான் செம்படையிடம் பிடிபடும் முன்னே காட்டுக்குள் அழைத்துப்போய் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன், அனால் உன்னிடம் அனுப்ப மாட்டேன்,என்பார்.அதையும் மீறி பெரும்பணம் கொடுத்து ஷிண்ட்லர் அவளை வாங்குவார்.)

ந்தப் படத்தில் ஷிண்ட்லேரின் மொத்த பணம், அரிய சேகரிப்புகள் என அனைத்தையும் விடாமல் கறந்த பிறகே 1100 யூதர்களை அவருக்கு கொடுப்பார். கடைசியில் இவரை தூக்கு கயிற்றில் ஏற்றிய பிறகு செம்படையினர் அந்த மர முக்காலியை உதைப்பார்கள் , ஆனால் அது கீழே விழாது, மண்ணில் புதைந்திருக்கும், அப்புறம் அதை உடைத்து தூக்கில்போடுவார்.  (கடவுளுக்கு கூட இவர் எளிதாக சாக கூடாது என்பது போல காட்சி வைக்கப்பட்டது போல இருக்கும்)  தன் காட்டுமிராண்டித்தனத்தை கண் முன்னே கொண்டுவந்திருப்பார். இப்படத்தில் அதற்க்கு எதிர் மாறான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.அற்புதம்!!!

====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Stephen Daldry
Produced by Anthony Minghella
Sydney Pollack
Written by David Hare
Starring Kate Winslet
David Kross
Ralph Fiennes
Music by Nico Muhly
Cinematography Chris Menges
Roger Deakins
Editing by Claire Simpson
Distributed by The Weinstein Company
Release date(s) December 10, 2008
Running time 124 minutes
Country United States
Germany
United Kingdom
Language English
====0000====
இது என் செப்பனிடப்பட்ட மீள்பதிவு,வண்ணத்துப்பூச்சியாரின் த ரீடர் பட விமர்சனம்
என்னுள் இருந்த நினைவலைகளை கிளறிவிட்டுவிட,மீள்பதிவிடுகிறேன்.

நன்றி சூர்யா

[Gabhricha Paus] காப்ரிஸ்சா பாவூஸ் [மோசக்கார மழை][இந்தியா][2008]

=====0000===== 
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


(குறள் எண் : 1033)

விளக்கம் : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
 

=====0000===== 
ருமை நண்பர்களே,

மீபத்தில் தான் மராத்தி மொழியில் வந்த பேரலல் சினிமாக்கள் பார்க்கத்துவங்கினேன், அந்த அயராத்தேடலில் எனக்கு கிடைத்த முத்து தான் இந்த காப்ரிச்சா பாஸ். பாலிவுட் என்னும் பகல்கொள்ளைக்காரர்களால் உலக அரங்கில் எப்பேற்ப்பட்ட இந்திய கலைப்படைப்புகளை காணாமல் போகின்றன என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.  

ராத்திய சினிமாவின் நம்பிக்கை ஒளிப்பட்டியலிலும் சிறந்த இந்திய  இயக்குனர் பட்டியலிலும் இந்த இளம் இயக்குனர் சதிஷ் மன்வாருக்கும் ஒரு தனி இடம் காத்திருக்கிறது.  எல்லா நல்ல படங்களுக்கும் ஏற்படுமே மோசமான  தலைவிதி!!!அது  இந்தப்படத்துக்கும் வாய்த்திருக்கிறது,அது  என்னவா? படம் முடிந்தபின்னர் அதை விளம்பரம் செய்ய காசில்லாமல்,எத்தனையோ பேருக்கு படம் பிடித்தும் வாங்க முன்வராததால் நஷ்டத்துக்கு விற்க வேண்டியதாகிவிட்டது. 

இயக்குனர் சதிஷ் மன்வார்
னம் தளராத இந்த குழு இதை எல்லா  இந்திய சினிமா விழாக்களிலும் தொடர்ந்து திரையிட எல்லோரின் ஏகோபித்த பாராட்டுக்களையும் விருதுகளையும் அள்ளிவந்திருக்கிறது. பீப்லி லைவ் படம் பார்த்திருப்பீர்கள், அதில் எவ்வளவு பெரிய ஒரு சீரியஸான விவகாரத்தை நையாண்டி மேளமாக வாசித்துள்ளனர் என புரிந்தது,  ஆமாம்!!!! அப்போது தானே மக்களுக்கு விஷயம் சென்று சேர்கிறது, அப்போது தானே?!!! மன்மோகன் சிங் கூட நேரம் ஒதுக்கி அந்த படத்தை பார்த்த்து ரசித்து சிரித்தார். என்று என்னால் நெஞ்சு ஆற இயலவில்லை,

து மிகவும் சீரியஸான் விஷயம். நான் படம் பார்த்து அடைந்த, உணர்ந்த அந்த பாதிப்பை என்னால் எழுத்தில் கொண்டுவரமுடியாது. நான் கூட விவசாயக் கடன்கள் என்பதே வீண். அவை பணக்கார நிலச்சுவாந்தாரர்களால் நிரந்தர மோசடியும், விவசாய மானியங்கள் சலுகைகள்  என்பதே அவர்கள் கபளிகரம் செய்வதற்கே என்று எண்ணி கொதித்தும் வந்திருக்கிறேன்.அப்படி கொதித்து இது எல்லாம் யார் வீட்டுக்காசு?எவன் கட்டும் வரிப்பணத்தில் இந்த சலுகைகள் என்று என் முந்தைய பதிவில்  சாடியுமிருந்தேன்,அதையும் தாண்டி சிறு விவசாயிகள் மண்ணுக்கும் தங்களுக்குமான பாசபிணைப்பாக விவசாயத்தை கருதுவதை இந்தப்படத்தில் கண்ணாறக் கண்டேன்.உள்ளம் தெளிந்தேன்.

ன் நீண்டநாள் கேள்விகளுக்கான பதில்கள் இந்த படத்திலேயே இருக்கிறது, அரசாங்கம் விவசாயிக்கு வழங்கும் சலுகைகள் விவசாயிடமிருந்தே மறைமுகமாக பிடுங்கி எடுக்கப்படுகிறது என்னும் சுடும் உண்மையையும் உணரவைக்கிறது படம்.  இவ்வளவு சீரான,நேர்த்தியான, ஒழுங்கான , கலைக்கு மரியாதை செய்து சொல்ல வந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, ஆழமாக கையாளப்பட்ட படங்கள் வருவது மிக அபூர்வம். அந்த வகையில் இந்த படம் சாதித்துவிட்டது  உலகசினிமா தேடல் கொண்ட நண்பர்கள் அவசியம் இந்த படம் பார்த்து  பதிவாக எழுதி நிறைய பேர் தேடிக் காண வழிவகை செய்யவேண்டும்.

ந்த 1.5 மணி நேரப் படத்தின் பிரதான பலமே கதையும் திரைக்கதையும் என்பேன். படத்தின் கதையோடு ஒத்துழைக்கும், அபாரமான இயல்பான நடிப்பும்.  சமாதானமே செய்துகொள்ளாத ஒளிப்பதிவும், பிண்ணணி இசையும், திணித்தலில்லாத 2பாடல்களும் அபார அற்பணிப்பை பறைசாற்றும். இந்த படம் பார்த்துவிட்டு புதிய இளம் இயக்குனர்கள் மீது அபார நம்பிக்கை வந்துவிட்டது. தேசிய விருது தேர்வுக்குழுவில் இருக்கும் கிழடான, தட்டையான சிந்தனை கொண்ட  மேதாவிகள், தயவுசெய்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுங்கள்.அல்லது தகுதியானவர்களுக்கு பதவியை விட்டுக்கொடுங்கள்.


ந்த படங்கள் பார்த்து விட்டு அதிமேதாவி இயக்குனரின் பெயரை எழுத,ஏன் நினைக்கவே கூசுகிறது என்றால் பாருங்கள். படத்தில் பங்காற்றிய நடிகர்களான கிரிஷ் குல்கர்னி,சோனாலி குல்கர்னி, போன்றோர்களின் கால்தூசி பெறமாட்டார்கள் ஒலகநாயகர்களும் , தளபேதிகளும்!!! ,நடிப்பு என்றால் நடித்துக்கொட்டுவது என்றிருக்கும் ஆட்கள் முதலில் இப்படம் பார்க்க வேண்டும். நான் இங்கே இவ்வளவு ஆதங்கப்படுவதன் காரணம் புரியும். நல்ல படைப்பு காண்போரற்று போவது என்பது தான் உலகில் மிகப்பெரிய சோகம் என்பேன்.நான் கண்ட சில நல்ல மராத்திய சினிமாக்களின் பெயர்களைப் பகிர்கிறேன். உங்களுக்கும் நல்ல  மாற்று சினிமாக்களில் ஆர்வமிருப்பின் இவற்றை தயங்காமல் தரவிறக்கிப் பார்க்கலாம். அத்தனையும் மிகத்தரமான படங்கள்.
 ஹரிஸ்சந்த்ராஸ்சி ஃபேக்டரி [Harish Chandra Chi Factory] , போக்யா சத்பந்தே [Bokya Satbande], ஸெண்டா [Zenda], நிஷானி டவ அங்கதா [Nishani Dava Angatha], கோஷ்தா சோட்டி டொங்ரேவதி [Goshta Choti Dongraevadhi], கல்லித் கொந்தல் தில்லித் முஜ்ரா [Gallit Gondhal Dillit Mujra], மீ ஷிவாஜி ராஜே போஷ்லே போல்டாய்  [Mee Shivaji Raje Bhosle Boltoy], உலதால்[Uladhaal],  ஏக் தவ் தோபி பச்சாத்[Ek Dav Dhobi Pachad], மும்பைச்சா டப்பாவாலா [Mumbaicha Dabbewala] ஆபா ஸிந்தாபாத் [Aaba Zindabad], தத்கஸ் [Dhudgus], ஜிங் சிக் ஜிங் [Jhing chik jhing], வலு[Valu], விஹிர்[Vihir] , கந்த் [Gandh] ,கோ மலா அஸ்லா ஹவா[Gho mala asla hava] ,நட்ரங் [Natrang], தோஸ்ஸார்[Dhossar], ஆரம்ப்[Aarambh], ஜோக்வா [Jogwa], ஹுப்பா ஹுய்யா [Hupa Huiyya]


ஒரு ஏழை விவசாயி விவசாயத்தை துறக்க காரணிகள் யாவை?

த்திய மாநில அரசுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் 100 நாட்கள் கட்டாய  வேலை விவசாயம் செய்வதற்கு ஆட்களே இல்லாத ஒரு நிலையை உண்டாக்கிவிட்டது என்றால் மிகையில்லை. தொடர்ந்து வேலை செய்பவர்கள் நிரந்தர வேலை பெறுவார்கள் என்ற காட்டுத்தீ போன்ற வதந்திகள் சிறு விவசாயிகளை கூட 100 நாள் வேலைக்கு செல்ல தூண்டிவிட்டதும் ஓர் மறுக்கமுடியா உண்மை.

துவும் ,அங்கே நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த வேலை செய்தலும் போதுமானது, அதனாலேயே யாரும் கடினமான உடல் உழைப்பு கொண்ட விவசாய வேலை செய்ய வருவதேயில்லை. ஈசிமனி செய்ய ஆளாய் பறக்கும் ,

பகாசுரத்தனமான பேராசைகொண்ட இடைத்தரகர்கள், செய்யும் ஸ்பெகு‌லேட்டிவ் மார்க்கெட்டிங்கும் ஒருபுறம் விலையை கடுமையாக ஏற்றுகிறது. கிடைக்க வேண்டிய நேரத்தில் விவசாயக்கடன்கள் உண்மையான விவசாயிக்கு கிடைப்பதில்லை, மிக அபாயகரமான  கந்து வட்டியும் ஒரு பிரதானமான காரணம்.

த்திய மாநில அரசுகளின் கடன் தள்ளுபடிகள் கடுமையாக வேலை செய்யும் அநேகம் விவசாயிகளையும்  கடும் சோம்பேரிகள் ஆக்கிவிட்டது. அதற்கும் மேலாக இலவச திட்டங்களோ? விவசாய வேலை செய்யும் தேவையையே போக்கிவிட்டது , சிறு விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதும் ஒரு முக்கிய காரணம். ஒரு இளநீர் 5 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து  வாங்குகிறார்கள். அதில் அதில் விவசாயிக்கு கூலியாய் கிடைப்பது ஒரு ரூபாய் தான்.

னால் நமக்கு 20 முதல் 25  ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்கே போகிறது? 20 ரூபாய்? இது ஆரம்பம் மட்டுமே. மாநில, மத்திய அரசுகள் ஒரு மிகப்பெரும் அழிவை நாம் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்திவருவது கவலைக்குரியது. இரவு பகலாக வேலை செய்யும் விவசாயிக்கு கட்டிய கோவணம் கூட மிஞ்சுவதில்லை என்பதே உண்மை, ஏழை விவசாயி கடனை மட்டுமே சேர்த்து வைக்கிறான். சேர்த்து வைத்த கடனுக்கான கந்து வட்டிக்காக நிலத்தையே இழந்து நிர்கதியாக நிற்கின்றான்.

லர் வாழ்வில் நம்பிக்கையின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதில் வரும் நாயகன் க்ரிஸ்ணா போல மண்ணுக்கும் மனிதனுக்கும் உண்டான பாசப்பிணைப்பாக விவசாயத்தை எண்ணும் ஒரு சிலரால் தான் நாம்  இன்று வயிறாற உண்ண முடிகிறது. மொத்தத்தில் விவசாயம் இல்லாத எதிர்காலம் சூனியம் என்னும் பயம் வயிற்றை கலக்கச்செய்கிறது. யார் கண்டார்?அப்போது நாம் பணத்தாள்களை தின்னப்பழகியிருப்போமோ என்னவோ?!!.


நான் மேலே ஆதங்கப்பட்ட விடயங்கள் படத்தில் தீர்க்கமாக அலசப்பட்டிருக்கின்றன.  நண்பர்கள் முழுக்க படத்தை அனுபவிக்க வேண்டும் என்பதால்  படத்தின் கதையை சொல்லாமல் விடுகிறேன். கீழ்கண்டவை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா?!!! அது குறித்து யோசித்தாவது இருக்கிறீர்களா? எப்படியோ? படம் பார்த்த பின்னர் நீங்கள் விவசாயியை பார்க்கும் பார்வையே மிக உயர்வாயிருக்கும்.

1. ஏழை விவசாயி ஏன் தற்கொலை செய்து கொள்கிறான்? அவன் இறந்தால் அவன் குடும்பம் படும் இன்னல்கள் என்ன?
2.ஒரு ஏழை விவசாயிக்கு அரசு எத்தனை சதவிகித வட்டிக்கு விவசாயக்கடன் தருகிறது?
3.ஏழை விவசாயி தற்கொலை செய்து இறந்தால் அரசு எவ்வளவு இழப்பீடு தொகை தருகிறது?
3.ஏழை விவசாயி தன் வறண்ட கிணற்றுக்குள் போர்வெல் அமைக்க ஆகும் செலவு எவ்வளவு?
4.ஒரு ஏழை விவசாயி 7ஏக்கர் நிலம் வைத்திருப்பின்,தன் சக்திக்கு ஏற்ப,4 ஏக்கரில் பருத்தி பயிரிட நினைக்கிறான் என்று வையுங்கள்.
வன் விதை வாங்க ஆகும் செலவு என்ன?
வன் 4 ஏக்கர்  நிலத்தை உழ மாடுகள் வாடகைக்கு வாங்கினால் ஆகும் செலவு என்ன?
ப்படி மாடு கிடைக்காவிடில் 4 ஏக்கர் நிலத்தை உழ ட்ராக்டர் வாடகைக்கு எடுத்தால் ஆகும் செலவு என்ன?
5.ரு ஏக்கருக்கு பூச்சிமருந்து அடிக்க ஆகும் செலவு என்ன? 
6. ரு ஏக்கருக்கு நாற்றுநட,களை எடுக்க ஆகும் செலவு என்ன?
7.விளைச்சலை அறுவடை செய்து ஏற்றிச்செல்ல வண்டிக்கூலி என்ன?
8.ஒரு ஏக்கருக்கு எத்தனை குவிண்டால் பருத்தி கிடைக்கும்?
9.ஒரு குவிண்டால் பஞ்சின் சந்தை விலை என்ன?
10.இப்படி பார்த்துப்பார்த்து விதை விதைத்தும்,மழை பொய்த்தால் அல்லது பேய் மழை பெய்தால் விவசாயி என்ன செய்வான்?அவன் ஏன் தொடர்ந்து விவசாயம் பார்க்கிறான்?[இது தாய்க்கும் சேய்க்கும் உண்டான ஒரு பாசப்பிணைப்பு என இப்படம் உணர்த்துகிறது,அது யாருமே தவறவிடக்கூடாத ஒன்று]
11.மழை ஏன் பொய்க்கக்கூடாது? சரி மழை பொய்த்தால் தான் என்ன? போர்வெல் இருக்கிறதே,அதில் நீரிரைத்து பாசனம் செய்யலாமே?அதில் என்ன சிக்கல்?ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அரசு விவசாயியிடம் எத்தனை ரூபாய் வாங்குகிறது?
12.இலவச மின்சாரம் என்கிறார்களே!!!அது உண்மையிலேயே ஏழை விவசாயிக்கு  தரப்படுகிறதா?
13.ஆபத்தான சூதாட்டம் போன்றதா விவசாயம்?
14.மின்சாரம் ஒரு விவசாயியால் எந்த சூழ்நிலையில் திருடப்படுகிறது? 
போன்ற கேள்விகளுக்குண்டான பதிலகளை அறியுங்கள், நம் நாட்டில் விவசாயி ஒருவன் படும் அவலம் இந்த அளவுக்கு பட்டவர்த்தனமாய் சொல்லப்படேதேயில்லை எனலாம். இனி என்னளவில் உண்மையான ஏழை விவசாயிக்கு மானியம், கடன் தள்ளுபடி ,சலுகைகள் நிச்சயம் தேவை என அழுந்த உரைப்பேன்.
=====0000=====
காப்ரிஸ்சா பாவூஸ்=பொய்த்த மழை, ஆனால் பொய்காத படம்
 =====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Satish Manwar
Produced by Prashant Pethe
Written by Satish Manwar
Starring Sonali Kulkarni, Girish Kulkarni, Jyoti Subash, Veena Jamkar, Aman Attar
Cinematography Sudheer Palsane
Editing by Suchitra Sathe
Release date(s) 2009
Country India
Language Marathi
 =====0000=====
காப்ரிஸ்சா பாவூஸ் திரைப்படம் யூட்யூபிலிருந்து:-

 =====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)