நடிகர் குள்ளமணி | பொண்ணு ஊருக்கு புதுசு | கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன் (1989) திரைப்படத்தில் பழைய இரும்பு ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் காமெடியில் தோன்றிய நடிகர் குள்ளமணி,  பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் (1979) ருக்குமணி வண்டி வருது பாடலில் சுதாகர் சைக்கிள் கற்றுக்கொள்கையில் உடன் சைக்கிள் தள்ளியபடி தான் வருகிறார்.

இயக்குனர் கங்கை அமரன் இவரை சரியாக கரகாட்டக்காரனில் நினைவு வைத்திருந்து மீண்டும் கையில் சைக்கிள் தந்து தள்ள வைத்துள்ளார், நடிகர்  குள்ளமணி அபாரமான கொண்டாட்டமான முகபாவங்களை அந்த ஓடாத செவ்வி இம்பாலா 1960 ஸ்போர்ட்ஸ் செடான் படகு காரை சிலுக்குப்பட்டி கிராமத்திற்குள் பார்க்கையில் தருவார், கவுண்டமணிக்கு கெட்ட கோபம் தலைக்கேற வைப்பார்,செந்திலுக்கு பேரிச்சம்பழம் சாப்பிட வாய் ஊற செய்வார்.

கல்ட் காமெடி அந்தஸ்து பெற்றது இந்த பேரீச்சம்பழம் காமெடி, வாழைப்பழக் காமெடியை விட பேரீச்சம்பழ காமெடியே அவலநகைச்சுவையை திறம்பட பேசுகிறது.

நடிகர் குள்ளமணி வாழ்நாள் சாதனையாக இந்த காயலாங்கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்து விட்டார்.

பொய் சாட்சி (1982)

இயக்குனர் நடிகர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு, சின்னவீடு (அம்மா) போன்ற திரைப்படங்களில் கோவை சரளா நடித்திருப்பார்.

நடிகர் பாக்யராஜின் பொய்சாட்சி (1982) திரைப்படத்தில் சிறு வயது பாக்யராஜுக்கு கோவை சரளா தான் அக்கா, இவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் , ஊர் பண்ணையார் கோவை சரளாவை தோப்பிற்குள் வைத்து வல்லுறவு செய்ய எத்தனிக்கையில் பண்ணையாரை தலையில் தாக்கிவிட்டு தப்புகிறார் கோவை சரளா,பண்ணையாருக்கு உதவியாக ஊரே இவர்களை துரத்தி வர , தம்பியை தாவணி முந்தானையில் கட்டி வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆழம் மிகுந்த நெல்லித்துறை ஆற்றில் தள்ளி தானும் குதித்து விடுகிறார், தம்பி ஒரு கரையில் இவர் ஒரு கரையில் ஒதுங்கி ஒருவரை ஒருவர் இறந்ததாகவே பல வருடங்கள் கருதி வாழ்கின்றனர்,அதன் பின் நிகழ்காலத்தில் படம் நகர்கிறது.

வளர்ந்த அக்கா கதாபாத்திரத்தில் நடிகை சுமித்ரா நடித்துள்ளார், அக்கா கணவர் பீலி சிவத்தை கொலை வழக்கில் சிக்க வைக்க பொய் சாட்சி சொன்னதை நெல்லித்துறை வந்ததும் அறிகிறார் பாக்யராஜ்.

 நெல்லித்துறை சனிக்குளத்தில் பாக்யராஜ் தான் பொய்சாட்சி சொல்லி சம்பாதித்த பணம் பத்தாயிரம் ரூபாயை அப்படியே குற்ற உணர்வில் வீசி எறிகிறார்,

ஆனால் அக்கா குடும்பம் வாடகை வீட்டை விட்டு இடம்பெயர்ந்து போக்கிடம் இன்றி நெல்லித்துறை வனபத்ரகாளி அம்மன் அரசமரத்தடி நாகர் மண்டபத்தில் தங்கியிருப்பதை பார்த்து இவரும் உடன் தங்கி தான் தம்பி என்பதை மறைத்து உதவுகிறார்.

 தன் அக்கா , அக்கா மகள் ,அக்கா மகன் மூவரை காப்பாற்ற வேண்டி வேலை தேடுகிறார், பல பல பொய்கள், பல பல நகைச்சுவை அட்டகாசங்கள் செய்கிறார்,முடிவில் வேலை  கிடைக்காத கொடுமையால் சனிக்குளத்தில் முங்கி ஐந்து பைசா பத்து பைசா சில்லரை திருடுகிறார் பாக்யராஜ், அவருக்கு போட்டியாக ராதிகாவும் சனிக்குளத்தில் குதித்து  மூச்சடக்கி மூழ்கி சில்லரை திருடுகிறார்.

இப்படத்தில் பாக்யராஜ் வேலை தேடுகையில் 
பசுமாட்டை ஏரில் பூட்டி உழுவார்.

சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்கையில் தன் புத்தி சாதுர்யத்தை காட்டுகிறேன் என்று கருதி சாவி தொலைந்த சைக்கிள் பூட்டை முதலாளிக்கு உடனே திறந்து தருவார், உடனே வேலையும் போய்விடும்.

கொல்லன் பட்டறையில் வேலைக்கு சேர்ந்தவர் புரட்சி சமத்துவம் பேசிக்கொண்டே சம்மட்டி அடிக்கையில் கொல்லனின் கையை உடைத்து விடுவார்.

இப்படத்தில் பாக்யராஜ்  கண்ணாடி அணியாமல் நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரும் சனிக்குளம் சம்மந்தமான காட்சிகளை திருவிடந்தை கோயில் திருக்குளத்தில் வைத்து படமாக்கியுள்ளனர்.

எங்க ஊர் ராசாத்தி (1980)

எங்க ஊர் ராசாத்தி (1980) திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.பி.சைலஜா பாடிய "பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் " பாடல் மிகவும் பிரபலமானது, இசை கங்கை அமரன், பாடல் கவிஞர் முத்துலிங்கம், இயக்கம் n.s.ராஜேந்திரன், ஒளிப்பதிவு G.தியாகு.

இப்படத்தில் அந்த ஊரின் தாரித்ரியம் மிக்க இளைஞராக சுதாகர், அவர் விரும்பும் பெண் ராசாத்தியாக ராதிகா, 

ராதிகாவுக்கு அம்மா இல்லை மாற்றாந்தாயும் அப்பனும் சேர்ந்து பண்ணையாரிடம் வாங்கிய கடனுக்கு வட்டியையும் அசலையும் கட்ட முடியாமல் மகள் ராசாத்தியை பண்ணையாரின் மனநிலை பிழற்ந்த மகனுக்கு மணமுடித்து வைக்கின்றனர், 

காதலன் சுதாகர் வேலைதேடி பட்டணம் சென்றிருக்கையில் இந்த திடீர் திருமணம் நடந்து விடுகிறது, பண்ணையாரின் மகன் யாரை பார்த்தாலும் கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுபவன், அவன் தனக்கு கொள்ளி வைப்பான் என்று சகிக்க முடியாமல் சகித்துக் கொள்கிறார் பண்ணையார்,

 மகன் அறைந்தவரின் கால் பிடிக்காத குறையாக வீட்டுக்கு கூட்டிப் போய் தலைவாழை விருந்து வைத்து அனுப்பும் விசித்திர குணம் கொண்டவர், அடிபட்டவர் வயிறெரிய கூடாதாம் பாருங்கள், முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் போலவே தோற்றம் கொண்ட மாமனார். (படைப்பாளி குசும்பு ), 

மகன் முதலிரவில் மனைவியையும் கன்னத்தில் அறைய பெல்டை கழற்றி விளாசுகிறார், ராதிகா பற்றி தடுத்து,கணவனை உள்ளபடியே ஏற்கிறார், 

ராதிகாவின் மாமியார் காந்திமதி, கவுண்டமணி அவரின் தம்பி,அவரின் மனைவி சி.கே.சரஸ்வதி, காந்திமதி துணையுடன் பல தருணங்களில் கவுண்டமணி ராதிகாவை வல்லுறவு கொள்ளப் பார்க்கிறார், அப்போது ராதிகா கன்னத்தில் அறைந்து தப்புகிறார், பாஞ்சாலி கௌரவர்களிடம் வந்து சிக்கிய இக்கட்டான சூழலில் ராதிகா, ஒத்திசைய சொல்லும் மாமியார்,

இந்நிலையில் தான் ஊருக்குள் நன்கு சம்பாதித்து விடுப்பில் வருகிறார் சுதாகர், பெட்டியில் ராதிகாவுக்கு பட்டுப்புடவை, தங்கநகைகள்,பூ என அனைத்தும் கொண்டு வந்து தருகிறார், ஆனால் ராதிகா வாங்குவதில்லை, மனநிலை சரியில்லாத கணவனுக்கு துரோகம் செய்யவும் தன்னை கௌரவர்கள் போன்ற குடும்பத்தில் பணயம் வைத்த பெற்றோரை பழிவாங்கவோ விரும்புவதில்லை,stalk home syndrome  உதாரணம்.

நாளுக்கு நாள் கவுண்டமணி பல்லி இரைக்கு நாக்கு நீட்டுவது போல ஆங்காங்கே துரத்துகிறார், ராதிகா குளிப்பதை ஒளிந்திருந்து பார்க்க நினைத்து மனநிலை சரியில்லாத மருமகனை கூட்டு சேர்த்து எட்டிப்பார்க்க தன் மனைவி சி.கே.சரஸ்வதி குளிப்பது தான் பார்க்க கிடைக்கிறது,

 மருமகனை விட்டு அவன் மனைவி ராதிகாவை கோயிலுக்கு அழைத்து வர சொல்லி துகிலுரிய ராதிகா மீண்டும் கன்னத்தில் அறைந்து விட்டு தப்புகிறார்,துச்சாதனன் போன்ற  கவுண்டமணிக்கு  குந்தி பரிந்து வந்தது போல மாமியார் காந்திமதி தம்பிக்கு மீண்டும் பரிந்து பேசுகிறாள்,பண்ணையார் இதற்கு எல்லாம் வாய் திறப்பதில்லை.

 மனநிலை சரியில்லாத கணவனை விட்டு காதலனுடன் ஓடிப்போ என யோசனை சொல்லி கல்லானாலும் கணவன் கவுண்டமணியை தன்னிடம் தக்க வைக்க நினைக்கிறார் சி.கே.சரஸ்வதி.

அன்று நள்ளிரவில் பாஞ்சாலி சபதம் கூத்து நடக்கிறது,கூத்தில்  துச்சாதனன்  துகிலுரிகையில் கவுண்டமணி வெறி கொண்டு நன்கு குடித்து விட்டு வீட்டில் தனியே இருந்த ராதிகாவை வல்லுறவு செய்து விடுகிறார், 

கூத்தில் வைத்து கவுண்டமணி மனைவி கிருஷ்ண பரமாத்மா போல சென்று உன் மனைவியை என் கணவனிடமிருந்து காப்பாற்று என கிசுகிசுத்து அனுப்புகிறாள், 

இங்கே வல்லுறவுக்கு பின் ராதிகா அழுவதைப் பார்க்கிறான் கணவன், ரோஷம் தலைக்கேறுகிறது, அருகே கிடந்த சாராய குப்பியை உடைத்து கவுண்டமணியை துரத்திப் போய் குத்த விழைகிறான், 

 கவுண்டமணி கண்ணாடி குப்பியை பறித்து மருமகனை குத்த முனைகிறார்,அங்கே முன்னாள் காதலியின்  கணவன் உயிரை காக்க வேண்டி முன்னாள் காதலன் சுதாகர் முன்னால் பாய்ந்து விடுகிறார்.

ஊர் திடலில்  குத்துப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கிறார்,சுற்றி ஊர்ஜனம் வேடிக்கை பார்க்கிறது.

ராதிகாவின் மாமனார் தம்பி உன் கடைசி ஆசை என்னப்பா என்று கேட்கிறார், தன் பெட்டியை தந்து ராதிகாவுக்கு அவற்றை அணிவித்து அழைத்து வந்து காட்டினால் என் ஆவி நிம்மதியாக பிரியும் என்கிறார் சுதாகர்,

அதே போலவே அந்த அன்னதான பிரபு மாமனார் பண்ணையார் வீட்டுக்கு போனவர்,  வல்லுறவுக்குப் பின் ஆசுவாசமாக குளித்து பொட்டு வைக்க போன மருமகளிடம் இந்த பெட்டியை தந்து இவற்றை அணிந்து வாம்மா என கையோடு அழைத்துப்போய் சுதாகர் முன் நிறுத்துகிறார்,

சுதாகரின் ஆவி பிறந்த பலனை அடைந்து பிரிகிறது, (இனி ராதிகா கவுண்டமணியிடம் படப்போகும் இன்னல்களை சொல்லாமலே படம் நிறைகிறது)

இந்த படத்தின் கதை கலைமணி,டெண்ட் கொட்டகையில் முறுக்கு விற்று சினிமா கற்ற திரைக்கதை மேதை, தமிழ் சினிமா கடந்து வந்த பாதைக்காக இந்த பிற்போக்கு திரைப்படங்களை பார்க்க வேண்டி உள்ளது.

அதிமுஹூர்த்ததினம்

இன்று அதி முஹூர்த்த தினம் , இரண்டு திருமணம், இரண்டு கிரகபிரவேசம், ஒரு சஷ்டி அப்த பூர்த்தி, ஓரு பிறந்த நாள் விழா என அழைப்புகள் நீண்டது.

ஆனால் எதற்கும் போக முடியாதபடிக்கு வேலை கழுத்தை நெறித்தது, நான் அன்றாடம் காய்ச்சி, எனக்கு சனி ஞாயிறு அரசு விடுமுறை எல்லாம் இல்லை,  வெளியில் அனல் தகிக்கும் வெயில், காலையில் இயங்க ஆரம்பித்த ஏஸி மாலை வரை இயங்கியது, வேறு வழியில்லை, இந்த கோடைக்கு பயந்து ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு இன்ன பிற மலைவாசல் தலங்கள் செல்வது எல்லாம் தற்காலிக நிவாரணம் தான், ஏஸியை இயக்கி ஆசுவாசமாக வீட்டில் இருந்து பணிகளை முடிப்பதே புத்திசாலித்தனம், சுற்றுலாவுக்கு செலவழிக்கும் தொகையை  மின்சார கட்டணத்துக்கு செலவிட்டால் இந்த கடும் வெயிலில் இருந்து தப்பலாம்.

அமெரிக்க MIT பல்கலைகழகத்தின் நீர்நாய் மோதிரம் அறிவீர்களா?

அமெரிக்காவின் MIT (Massachusetts Institute of Technology) (1861 துவக்கம்) பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்றது, அதில் படிக்கும் மாணவர்கள் பிரத்யேகமாக Brass Beaver ( வட அமெரிக்க நீர்நாய்) பொறித்த மோதிரத்தை கல்வி காலம் முழுவதும் பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னும் அணிவது வழக்கம்,

நீர்நாய்கள் இயற்கையான பொறியாளர்கள் என்பதால் பொறியியலாளர்களுக்கு உலக அரங்கில் பெயர்பெற்ற MIT பல்கலைக்கழகம் தனது இலச்சினையாக கொண்டுள்ளது.

நீர் நாய்கள் மரக்கிளைகள், தாவரங்கள், பாறைகள் ,கற்கள், சேற்றைப் பயன்படுத்தி அணைகள்  தங்குமிடங்களைக் கட்டுகின்றன, சுரங்கம் தோண்டுகின்றன, பிற விலங்குகளுக்கு வசிக்க சுரங்க குடியிருப்புகள் கூட கட்டித்தருகின்றன, பிற விலங்கினங்களுடன் சண்டை இடுவதில்லை, இணக்கமாக வசிக்கின்றன.

MIT மாணவர்களின் மோதிரங்கள் தங்கம்,  வெள்ளி , எஃக்கு என அவர்களுக்குப் பிடித்த உலோக விருப்பத்திற்கு ஏற்ப அமைகின்றன, தங்கம் என்றால் இது போல 14 காரட் தங்கத்தில் தான் அமெரிக்கர்கள் ஆபரணம் செய்து அணிவர்,

அமெரிக்காவில் Balfour class jewely என்ற பழம்பெரும் நிறுவனத்தார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி இறுதிக்கு பிரத்யேக மோதிரங்கள், cuff pins ,tie pins தயாரிப்பவர்கள், அவர்கள் 1960 ஆம் ஆண்டு பல்கலை இறுதிக்கு தயாரித்தது இந்த MIT மோதிரம்.

நம் நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் MIT  Sloan School of Management ல் MBA படித்தவர், கட்டமைக்கப்பட்ட கடன் உறுதிப் பரிவர்த்தனைகளை வழங்குவதற்கான முறைகள் மற்றும் அமைப்புகள் பற்றி ஆய்வறிக்கை தந்து காப்புரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Iron man திரைப்படத்தில் Tony Stark அணிந்து வரும் பெருமைமிகு  MIT 87 பட்டதாரி மோதிரம் இணைப்பு படத்தில் பாருங்கள்.

அட்சய திருதியை

இந்த அட்சய திருதியைக்கு  2 Jade செடிகள்  வாங்கினேன், 2 துளசி கன்றுகள் வாங்கினேன் , 300₹ ல் பெரும் மன நிம்மதி கிடைத்தது, தங்கம் வாங்கினால் கூட இத்தனை மகிழ்ச்சி கிடைத்திருக்காது.

கடவுளே நம்ம பக்கம்

"கடவுளே நம்ம பக்கம்  " என்று உணர்ந்த தருணம் இன்று.

தினம் செல்லும் ஆஞ்சனேயர் கோயிலுக்கு பூ வாங்க 20₹ நோட்டும் ஆரத்தி தட்டுக்கு பத்து ரூபாய் நோட்டும் என் மாமனாரிடம் 10,20 கட்டாக வாங்குவேன்.

எப்போதும் 786 எண்கள் உள்ள தாள் உள்ளதா என சோதித்து,அப்படி இருந்தால் செலவழிக்காமல் தனியே எடுத்து வைப்பேன்,அத்தனை அதிர்ஷ்டமிகுந்த ரூபாய் தாள் அது.

இன்று 7 தாள்கள் அடுத்தடுத்து ஒரு கட்டில் கிடைத்தன, இது வரை இத்தனை 786 எண்கள் கொண்ட தாள்கள் ஒரே சமயத்தில் கிடைத்ததில்லை.

ஒரு முறை ATM ல் 786 எண் கொண்ட 500₹  கிடைத்தது, ஒரு முறை ATM ல் 786 எண் கொண்ட 100₹  கிடைத்தது,

என் மாமனாரிடம் உங்களுக்கு 786  வேண்டுமா? எனக் கேட்டேன், அத்தனை அதிர்ஷ்டமும் உங்களுக்கே  இருக்கட்டும்,நீங்களே வச்சுக்கங்க மாப்ள என்றார்.

சோன்பப்டிக்கு ஸ்பூன் கண்டுபிடித்தம்

உலகின் ஆகப்பெரிய சிக்கலுக்கு 2023 ஆம் ஆண்டில் தீர்வு கிடைத்துள்ளது,பாக்கெட்  சோன் பப்டிக்கு  server spoon (தோசை கரண்டி தத்துவம் ) கண்டு பிடித்துள்ளனர்.சும்மா சொல்லக்கூடாது, துண்டாகாமல் விண்டு போகாமல் வருகிறது.

பரந்தூர் ஏர்போர்ட்

என் தாய் மாமா ஒருவர் (திண்டுக்கல் வாசி) முதல் முறையாக மதுரை சென்னை விமானத்தில் அடுத்த மாதம் வருகிறேன் என்னை வரவேற்க வருவாய் தானேப்பா என்று விடிகாலை 4-00 மணிக்கு போன் செய்தார், இதே போலவே போன வருடம் விடிகாலை 4 மணிக்கு போன் செய்து திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ப்ளசரில் (காரில்)
 மகன்  (30 வயது ) அழைத்துப் போனான்பா என்றார்.

இவரின் தாயாரை (என் பாட்டி) நான் ஒரு முறை  சென்னை - ஹைதராபாதிற்கு விமானத்தில் அனுப்பி வைத்தவன், ஐம்பது முறைக்கு மேல் துபாய் - சென்னைக்கு விமானத்தில் வந்து போனவன் என்று தெரிந்தும் இந்த முதல் விமானப் பயண தாக்கலை விடிகாலை பீத்தலாக  சொன்னார். 4 மணிக்கு போன் வந்தால் என்ன துயர செய்தியோ என்று தானே போனை எடுப்போம்.

நான் சற்றும் யோசிக்காமல் மாமா லோக்கல் ஏர்போர்டை பரந்தூருக்கு மாற்றிவிட்டனர், உங்க (டிக்கட் புக் செய்த ) மகனிடம் எந்த ஏர்போர்ட் வரனும் என தெளிவாக கேளுங்கள், பரந்தூரில் இருந்து சென்னைக்கு cab  பிடித்தால் எப்படியும் 5000 ₹ வரும் பாத்துக்கங்க என்று சொன்னதை வெள்ளந்தியாக நம்பியும் விட்டார்.

இப்போது எல்லா உறவினர்களுக்கும் விடிகாலை போன் செய்து பரந்தூர் ஏர்போர்டுக்கு என்னை  வரவேற்க வருவீங்க தானே என்கிறார்.

PS: நான் யாரிடமும் குசும்பு காட்டுவதில்லை, இந்த மாமா என் அம்மா மறைவு, காரியம் என எதற்கும் வந்ததில்லை, பிற சகோதரி, சகோதரி கணவர்  மறைவுக்கும் கூட வந்தவரில்லை, இப்படிப்பட்டவரை மன்னித்து அவர் மனைவி இறந்த போது கொரோனா காலம் என்றும் பாராமல் நேரில்  சென்று என் பங்குக்கு  பத்தாயிரம் தந்து காரியங்கள் செய்ய உடன் நின்று உதவி விட்டு வந்தேன்,என் அம்மா வளர்ப்பு.

என்னிடம் இந்த பீத்தல் அவசியமற்றது,அதனால் தான் இந்த குசும்பு காட்ட வேண்டி வந்தது, ஆனால் இன்னும் கூட spontaneous ஆக தூக்கத்தில் வாயில் வந்த  பரந்தூரை நினைத்தால் சிரிப்பு நிற்கவில்லை.

Louis Malle | லூயி மாலியின் இராமேஸ்வரம் விஜயம்

1969 ஆம் (54 ஆண்டுகள் முன்) ஆண்டின் ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோயில் உலகின் நீண்ட பிரகாரத்தில் குட்டி யானை மீது அமர்ந்து ஹாண்டிகேமில் வண்ண ஒளிப்பதிவு  செய்யும் ஃப்ரெஞ்சு இயக்குனர் Louis Malle , இன்று travelogue செய்வதற்கு முன்னோடி, அர்த்தமுள்ள ஆவணப்படுத்தல் பணி இந்த Phantom India வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

மேலும்
https://fb.watch/k5Z3dV7o_h/?mibextid=Nif5oz

டிவிஎஸ் ஐ க்யூப் | TVS i qube | ஹப் மோட்டார் பெண்ட் எடுப்பது எப்படி?

Tvs iqube EV விலை  135000 ரூபாய்க்கு மேல் தான் விலை வருகிறது,rear wheel hub motor  Alloy wheel எத்தனை நெகிழ்ந்து வளைந்து போகும் தரத்தில் உள்ளது பாருங்கள்.

இப்படி Hub motor bend ஆகி விட்டால் ,ட்யூப்லெஸ் டயரில் காற்று நிற்காது,  மோட்டருடன் தான் RIM மாற்றும் படி TVS நிறுவனத்தின் மேலான நிபுணர்கள் தீர்வு சொல்கின்றனர்,
அந்த hub motor RIM set ன் நிகர விலை 30500₹, லேபர் சார்ஜ் + GST என எல்லாம் சேர்த்து 36000₹ வருகிறது,  36000₹ தந்தாலும் கூட இந்த யானை தந்தம் போன்ற உதிரி பாகம் உடனே கிடைத்து விடாதாம், 3 மாதங்கள் ஆகியும் 2 EV இங்கே சர்வீஸ் சென்டரில் காத்திருப்பில் உள்ளது என இன்று ஆதாரபூர்வமாக  அறிந்தேன், EV வாங்கும் போதும் காத்திருப்பு, வாங்கிய பின் உதிரிபாகம் வாங்கவும் காத்திருப்பு என அறியுங்கள்.

எனவே இந்த EV வாங்கியவர்கள் பூ போல ஓட்டவும், டபுள்ஸ் போக வேண்டாம், வெண்ணெய் போன்ற சாலைகளில் மட்டும் ஓட்டவும்.

இந்த டயரின் படங்கள் என்னைப்போல ஒருவரின் வாகனத்தின் படங்கள், இப்போதைக்கு ஒரு ஆசுவாசம் என்னைப் போல பலர் இப்படி பிரச்சனையில் உள்ளனர் என அறிந்தது தான்.

புரிஞ்சவன் பிஸ்தா, மின்னுவதெல்லாம் பொன் அல்ல.

அடேய் மார்க்கு!!!

மனிதர்களில் வக்கிரம் மிகுந்தவர்களை சமூக வலை தளங்களில் நிறைய  பார்க்கலாம், ஃபேஸ்புக் நிறுவனர் தன் பக்கத்தில் தன் மூன்றாவது குழந்தை படத்தை பதிவிட்டதில் வாழ்த்த கூட வேண்டாம், எத்தனை கீழான கருத்துகளை பதிவிடுகின்றனர் என போய் பாருங்கள்,அவர் அடுத்து நான்காவது குழந்தைக்கு அடிபோடுகிறார் என மலினமான கிண்டல், அடேய் மொழி விளி வேறு,அவர் ஹார்வர்ட் ட்ராப் அவுட்,அது சரி  ஹார்வர்ட் என்றால் என்ன தெரியும்? பெருமுதலாளிகள் எத்தனை குழந்தை பெறுகிறார்களோ அத்தனை எதிர்கால நிறுவனங்கள் என்பது கண்கூடு, எத்தனையோ பேருக்கான வேலைவாய்ப்பை தருபவர்கள் அந்த குழந்தைகள்.

முகப்புத்தகம்  நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ? அப்படி பலனை அள்ளித் தரும்,
நல்லதற்கும் பயன்படுத்தலாம், கெட்டதற்கும் பயன்படுத்தலாம், எத்தனையோ பேருக்கு ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்களை வழங்கி உள்ளது முகப்புத்தகம், அந்த நன்றி துளி கூட இல்லாமல் அவரின் குழந்தை படத்தை பகிர்கையில்  வக்கிர சேற்றை பயனாளிகள் வாறி அடிக்கின்றனர்.

புதிய வேலைக்கு ஆள் எடுக்கையில் HR 3rd party check என ஒரு வழக்கம் உள்ளது, அவர்களின் பணி சமூக இணைய தளங்களில் அந்த profile ஐ ஆராய்வர், சமூக இணையதளத்தில் ஒரு மோசமான கருத்து போதும் நல்ல எதிர்காலம் பாழாகி விடும்.

மலையாள நடிகர் மாமுக்கோயா மறைவு | அஞ்சலி


மலையாள சினிமாவின் ஒப்பற்ற காமெடி மற்றும் குணசித்திர நடிகர் மாமுகோயா அவர்கள் இறைவனடி சேர்ந்தார், அவருக்கு இதய அஞ்சலி, வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் அரங்கேற்றவேளை திரைப்படத்தில் நடிகர் ஜெய்கணேஷின் விட்டு சமையல்காரராக நடித்திருப்பார், அதில் இரவல் குரல், தமிழ் சினிமா நடிகர் கொச்சின் ஹனிஃபாவை பயன்படுத்தியது போல இவரை பயன்படுத்தவில்லை என்ற குறை நிரம்ப உண்டு.

பிரியமுள்ள கபூஃர் இக்கா போய் வாருங்கள்.

முன்பு மாமுக்கோயா பற்றி சிலாகித்து எழுதியது

புதுப்பாடகன் | 1990 | தாணு


புதுப்பாடகன் (1990) திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை , பாடல்கள் இயக்கம் என ஆறு துறையும் கலைப்புலி S.தாணு செய்தார்,  

திரைப்படத்தின் பூஜை ஆடியோ விளம்பரம் இவற்றுக்கு  பயன்படுத்திய பெயர் தெருப்பாடகன், ராவுத்தர் ஃபில்ம்ஸில் பெயர் சென்டிமெண்ட் தோல்வி பயத்தால் இறுதி நேரத்தில் பெயர் மாற்றி வெளியிட்டனர்.

1990 ஆம் ஆண்டு இசைஞானி இசையில் சுமார்  32 தமிழ் படங்கள் வெளியானது,இருந்தும் இப்படத்தின் 12 பாடல்களில் 5 பாடல்கள் 

(1.மலைய குடைஞ்சு பாதைய வச்சேன்
2.அத்த பொண்ணு வாடி
3.அதிகாலை நான் பாடும் 
4.ஏபுள்ள எங்கிருக்க?
5.காதோரம் கனகாம்பரம் )

மிக  இனிமையாக அமைந்து ஒளியும் ஒலியும் ஒளிபரப்பில் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது, 

படத்தின் கதை அப்போதைய டி.ராஜேந்தர் காலத்து ஓவர் சென்டிமெண்ட் காதல் தோல்வி படங்களின் பஞ்சாமிர்த கலவை என்பதால் படம் ஓடவில்லை, 
 தாணுவுக்கும் இசை அமைப்பாளர் என்ற பெயரை பின்னாளில் வாங்கித் தரவேயில்லை,இன்றும் கூட தாணு ஒரு இசை அமைப்பாளர் என்றால் பலரால் நம்ப முடியாது, இன்றும் இந்த பாடல்களை சந்திரபோஸ் ஹிட்ஸில் அடக்கி விடுவர், தாணுவின் கூலிக்காரன் திரைப்படத்துக்கு டி.ராஜேந்தர் இசை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)