பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை!!!

நண்பர்களே!!!

நீங்கள் பல்லாவரம்,பம்மல் பொழிச்சலூர் அனகாபுத்தூர் வாசியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் பல்லாவரம் சந்தை பற்றி தெரிந்திருக்கும்.இங்கே பிரதி வாரம் வெள்ளிக்கிழமைகளில் சந்தை கூடிவிடும், வியாழன் இரவே ஜே ஜே என்று கூட்டம் பல்லாவரம் சந்தை ரோட்டை ஆக்கிரமித்து வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துவிடும்,  வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். பல்லாவரம் பஸ் ஸ்டாண்டிற்கு அருகே ஜனதா தியேட்டர்  பின்புறம் உள்ள, கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையில் தான் இந்த சந்தை  200 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வருகிறது. 

இங்கே பல்லாவரம் சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை, ஆமாம்ங்க நிஜமாத்தான் சொல்றேன். என்ன கருக்கலிலேயே போய்விடவேண்டும், உங்களுக்கு ஆண்டிக் [antique] பழமையான பொருட்களின் மீதான் சேமிப்பு வெறி இருந்தால் அங்கே நேராய் காலையிலேயே போய்விடுங்கள், பழங்காலத்தில் போரில் பயன்படுத்தப்படும் கேடயத்துடன் கூடிய வாட்கள், பெண்டுலத்துடன் அமைந்த கடிகாரம், மயில் வடிவிலான கத்தி ஸ்டாண்ட், மரத்தினால் செய்யப்பட்ட  உரல் போன்ற பாரம்பரிய மிக்க பொருட்கள்,பழைய கிராமபோன்,ஐந்து ரூபாய்க்கு  கூட விற்கப்படும் கொலம்பியா எல்,பி ரிக்கார்டுகள் , பழைய ஆயில் பெயிண்டிங் முதல் வாட்டர் கலர் வரை எல்லாம் சல்லிசாக கிடைக்கும். பழைய கலைப்பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்யும் சினிமாக்காரர்கள் ஏகம் பேர் வந்து வாங்கிப்போவதைப் பார்த்திருக்கிறேன். வியாபாரிகள்  ஏலம் மூலமாக  பொருட்களை இங்கே விற்பதில்லை.  பெரும்பாலும் பழுதடைந்த நிலையில்தான் அவை இருக்கும். பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு கேட்டு அசந்த நேரத்தில் கொத்திக்கொண்டு போய்விடுவர். ரேப்பர் பிரிக்காத வழக்கொழிந்து போன டிடிகே 60,90 ஆடியோ கேசட்டுகள். மூடுவிழா கண்டு குப்பைக்கு வந்த விஎஹ்செஸ் 180 கேசட்டுகள். என மலையாய் குவிந்திருக்கும்.

ழைய சாமான் சந்தைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வருவதால். அவர்களுக்கு போன் செய்து கேட்டு வாங்காவிட்டால் மட்டுமே அடுத்தவருக்கு அந்த பொருளை கொடுப்பதும் கூட நடக்கும். ஒரு முறை என் நண்பன் ஒரு ரே பான் கிளாஸ் கொஞ்சம் பெண்டாகியிருந்த நிலையில் வாங்கி அதை சரிசெய்து போட்டு திரிந்தான். டூப்ளிக்கேட்டாயிருக்கும் என பார்த்தால் அது மேட் இன் இடாலி, லைட் அடிடிவ் ரக கிளாஸாம், 100 ரூபாய்க்கு கிடைத்தது என்றான். 
சீ சீ என்ன தான் கடல்கடந்து வந்தாலும் நன்றாக சம்பாத்தித்தாலும் இது போல சங்கதிகளை காது கொடுத்துக் கேட்கும் ஆவல் போகவே மாட்டேங்கிறது!!!.... என் நண்பன் இந்த விடுமுறைக்கு போன போது தன் கடையிலேயே பிரவுஸிங் செய்து கொண்டிருந்தான், என்னடா மச்சான் இவ்வளவு பழைய கம்ப்ய்யூட்டரை வாங்கி வச்சி மேட்டர் படம் பாக்கற?!!... என்றது தான் தாமதம், அதில் அவன் ஒரிஜினல் ஓஎஸ் சந்தையிலேயே 50 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டிருக்கிறானாம். மொத்த செலவே 1800 ரூபாய் தான் ஆனது என்று அதிரவைத்தான், என் ஏனைய நண்பர்கள் மோட்டார் பைக் மட்கார்ட், க்ராபிக்ஸ், ஹெட் லைட் கன்சோல்,சைலென்சர்,ரியர் வியூ மிரர்.பெட்ரோல் டாங்க் மூடி.இண்டிகேட்டர் என எந்த பைக்குக்கும் எது மாற்ற வேண்டுமானாலும் பல்லாவரம் சந்தைக்கு போய் பிரவுஸ் செய்து விட்டுதான் புதுப்பேட்டைக்கே செல்வார்கள் என்றால் பாருங்கள்.
ன் நண்பன் இம்முறை நான் ஊருக்கு போகையில் ஐம்பது ரூபாய் கொடுத்து நரிக்குறவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை வாங்கி தன் கடையில் மாட்டி ஃப்லிம் காட்டிக்கொண்டிருந்தான். எல்லோரையும் பார்த்து சுட்டுடுவேன் என்று விளையாட்டுக் காட்டினான்.கூடவே கவ்பாய் தொப்பி வேறு 10 ரூபாய்க்கு,முடியல!!!....இது போல நிறைய கலைப்பொருட்கள் சில சமயம் சிக்கும். நம் அதிர்ஷ்டத்தை பொருத்ததும் கூட. என் நண்பனின் புத்தா ஹட் என்னும் கடையையே இது போல ஆண்டிக் கலெக்டர் ஷோகேஸாக ஆக்கிவிட்டிருக்கிறான்.நீங்கள் மட்டும்  பல்லாவரத்தில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் இருந்தால் என் நண்பன் ராஜகோபாலையும் அவனின் புத்தாஹட் கடையையும் நிச்சயம் தெரிந்திருக்கும். அங்கே சுமார் 15 வகையான சாண்ட்விச்சை சுடசுட மிகவும் சுகாதாரமாக தயாரித்துத்தருகிறான் என் நண்பன். ஹிஹி சின்ன இடையே சின்ன விளம்பரம்னு வச்சிக்குங்க. 

ப்புறம் குடும்பஸ்தர்கள் நிறைய பேரை வெள்ளிக்கிழமை சந்தையில் பார்க்கலாம். பெண்கள் அங்கே நேரடியாக விவசாயிகளிடமிருந்து பூண்டு, ஏலக்காய், கிராம்பு, லவங்கம் பட்டை போன்ற எல்லாம் மசாலா சாமான்களையும் சல்லிசாய் பேரம் பேசி வாங்குவார்கள்.சுற்று வட்டார கடை விலையை விட நல்ல லாபமிருக்கும், அப்பளம் வடகம். கலர் வடாம், மோதிர அப்பளம். சுண்டைக்காய் வத்தல், வெண்டைக்காய் வத்தல் , பஞ்சு மிட்டாய். குற்றாலத்துண்டு, கைத்தறி வேட்டிகள், ஜமுக்காளம் ,தென்னந் துடைப்பம், பனை ஓலை விசிறி என எல்லாம் கிடைக்கும் சந்தை இது. சமீபத்தில் பள்ளி மாணவர்கள் 10 ரூபாய்க்கு விற்கப்படும் செயற்கை வண்ணம் பூசப்பட்ட கோழி குஞ்சுகளை ஆசையாக வாங்கிச்செல்வதைப் பார்த்தேன். என் பால்ய பள்ளி வாழ்க்கை நினைவுக்கு வந்தது.


ரு சினிமா டீம் உள்ளே போய் ஹீரோவை வில்லன்கள் துரத்திபோய் சண்டைக்காட்சி எடுக்க மிகப்பாந்தமான இடம், இயக்குனர்கள் கவனிக்க!!!. சேர்க்காமலேயே மக்கள் கூட்டம் சாயும். முன்னொரு சமயம் பல்லாவரம் சந்தையில் விபச்சாரம் கொடி கட்டிப்பறந்தது, அந்த வேலிக்காத்தான் ஓங்கி வளர்ந்த நிலங்களை எல்லாம் இப்போது மத்திய அரசு கையகப்படுத்தி அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டி வருகிறது. அது திறந்தவுடன்    எப்படித்தான் ? போக்குவரத்தை அவர்கள் எதிர்கொள்வார்களோ தெரியவில்லை. நல்ல வேளையாக புறம்போக்கு நிலங்கள் அரசால்  கையகப்படுத்தப்பட்டதால்  இப்போது விபச்சாரம், வழிப்பறி நடப்பது இல்லையாம். சந்தையை ஒரு வருடமாக அன்னை தெரசா பள்ளி காம்பவுண்டு சுவர் வெளியே உள்ள இடத்திற்கு மாற்றியும் கூட கூட்டம் சமாளிக்க முடியாத அளவுக்கு பல்கி பெருத்துள்ளது, 

ம்பமாட்டீர்கள், அந்த பெருங்கூட்டத்திலும் ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 2லட்சம் பேர் உள்ளுக்குள் நுழைந்து போய்கொண்டும் வெளியேறிக்கொண்டும் வருவர்.பல்லாவரம் டு பம்மல் போக 50 ரூபாய் வாங்கும் ஆட்டோக்காரர்கள் அந்த கூடத்திலும் லாவகமாக ஊர்ந்து போய் விடுவார்கள். சுட்டெரிக்கும் வெயில், புழுதி மண்,என எதைப்பற்றியும் கவலைப்படாமல் காலை தொடங்கி இரவு 8-00 வரை ஜே ஜே என வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இங்கே இன்னும் மாடுகளுக்கு லாடம் அடிக்கப்படுகிறது,  மூக்கனாங்கயிறும் தார்க்குச்சியும் ஏன் கழுதைப்பால் கூட கிடைக்கிறது [குடித்தால் குழந்தைக்கு பேச்சு சீக்கிரம் வருமாம்?!!], பழைய டயர்கள். மரச் சக்கரமும் அச்சாணியும் கூட இங்கே வாங்க முடியும். தெருவில் நாம் எதையாவது வாங்கியபடி நடக்கும் நவநாகரீக மனிதர்களும்,கிராமவாசிகளும் , மிகப்புதிதாக சந்தைக்கு வந்த வாகனங்களில் கடக்கும் இளம்பெண்களும், ஆண்களும் என சந்தை எப்போதுமே எதிரும் புதிருமான அம்சங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. 

ன் நண்பன் ஒருவன் மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவன், தன் அபாச்சி பைக்கில் இருந்து இறங்கினான். டேய் மச்சான் இதோ பார்டா என்று ஒரு நீண்ட கண்ணாடி குடுவை போன்றதை உருவினான், எல்லோர் மேலும் தெளித்தான். செண்டாம், இருபது ரூபாயாம், சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே மணத்தது. இன்னொரு நண்பன் தன் ஆக்டிவாவில் இரண்டு பெரிய க்ரோட்டன்ஸ் ரக செடிகளை வைத்து ஓட்டிவந்தான், தலா 100 ரூபாய் என்று பெருமையாக சொன்னான். மச்சான் இங்க பேரம் பேசி பேரம் பேசி பிஸ்ஸாஹட்டில் கூட போய் பேரம் பேசுறாண்டா என்றான் மற்றொருவன், ஆக வெள்ளிக்கிழமையானாலே நண்பப்பயல்களுக்கு கொண்டாட்டம் தான் இதனால்.இந்த எந்திர யுகத்திலே நண்பர்கள் பேசிக்கொள்ள வாய்ப்பையேனும் இந்த வார சந்தை உருவாக்குகிறதே?அதற்கே நன்றி சொல்லவேண்டும் அல்லவா?!!!.

ப்புறம்,பிரியாணிக்கும் பெயர் போனது பல்லாவரம் ,சந்தை ரோட்டை சுற்றி சுமார் 10 சிக்கன் மட்டன் பிரியாணிக் கடைகள உள்ளன, காலை 11மணிமுதல் இரவு 11மணி வரை சுட சுட பிரியாணி கிடைக்கும்,கிர்கிர் என கரண்டியை தேய்த்து சோற்றை அள்ளி தட்டில் செட்டிங் செய்து கரண்டியை மீண்டும் தட்டு தட்டி, நம்மை நோக்கி நகர்த்துவார்கள். பல சமயம் கொசுறு கூட வாங்கி சாப்பிடலாம். சுவை நிச்சயம் நன்றாக இருக்கும்,பல்லாவரம் புழுதிக்காத்து கூட அந்த பிரியணியின் சுவைக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது என்பார்கள் எம் மக்கள். தைரியமாக மட்டன் என்று நம்பி சாப்பிட முடியும், நல்ல கொழுத்த ஆடுகள் வெள்ளிக்கிழமை சந்தையில் நயமான விலையில் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பிரியாணிக்கடைக்குள் போய் குடிகாரர் அல்லாதவர்களால் நிம்மதியாக பிரியாணி திங்கவே முடிவதில்லை,எங்கு பார்த்தாலும் மூக்குசளி சிந்திக்கொண்டும் செம ராவடியாக லுக் விட்டுகொண்டும் திரியும் குடிக்காரர்கள், முன்னவாவது பீரைத்தான் கூல்ட்ரிங்க் என்றனர். இப்போது ஹாட்டையே கூல்ட்ரிங்கில் நைசாக சேர்த்து விடுவார்கள் போல.

ல்ல பெரிய வாழைக்கருவாடு,நெத்திலி கருவாடு, சென்னாங்குன்னி, போன்ற எல்லாமே  ஒரு பக்கம் தார்ப்பாய் கூடாரம் அடித்து அதனடியில் அலுமினியம் போனி வைத்து குவிக்கப்பட்டு விற்கப்படும், யாரும் கூவவே வேண்டாம். லட்டுபோல விற்றுத் தீரும்.புதிதான காய்கறிகள், மூலிகைகள், கீரைகள். மரக்கன்றுகள், பூச்செடிகள். சோப்பு சீப்பு கண்ணாடி முதல் திருட்டு சைக்கிள், அரசு தரும் இலவச கேஸ் அடுப்பு, இலவச சைக்கிள், கேஸ் சிலிண்டர், ஏன்? 1000 ரூபாய்க்கு வாரண்டியுடன் தமிழக அரசு வண்ண தொலைக்காட்சிப்பெட்டி கூட  கிடைக்கிறது, அந்த 1000 ரூபாய் என்பது நேரமாக ஆக குறையுமே தவிர கூடாது. 

ல்லாவரம் சந்தையில் அநேகம் குடும்பத்தலைவிகள் வயர்க்கூடை சகிதமாக திரிந்து வாங்குவதில் முக்கியமானது, காகம் விரட்ட பயன்படும் கவட்டை, இது எதற்கென்றால் அவர்கள் காயவைக்கும் பொருள் பக்கத்தில் இதை வைத்து விட்டால் காகம் வராதாம்.  2 ரூபாய்க்கு கூட கிடைக்கும் ரமணிசந்திரன் ,சுபா, ப கோ பி , ராஜேஷ்குமார் மற்றும் காமிக்ஸ் கதைப்புத்தகங்கள், வற்றல்குழம்புக்கு போடும் வடகம்,நாட்டுக்கோழி, காடை,புறா நாட்டுக்கோழி முட்டை போன்றவை  மிகப் பிரசித்தம். 

வை ரொம்ப கஷ்டப்பட்டு கவனித்தாக்கும், என் மனைவியுடன் நான் மிகவும் பொறுப்பானவன் என்று காட்டிக்கொள்ள வாரமானால் சும்மா வேடிக்கை பார்க்க வேணும் அப்போதெல்லாம் கிளம்பிவிடுவேன். என் மகளை ஸ்கூட்டர் முன்னால் ஏற்றிக்கொண்டு மெதுவாய் கூட்டத்துக்குள்ளே வண்டியை உருட்டிப்போவதே த்ரில் தான், கூட்டம் என்பது சிலருக்கு அலர்ஜியாவது சிலருக்கு ஆனந்தமாக தோன்றுவது கூட்டத்தை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. எத்தனையோ பேர் முன்னால் போகும் வண்டியில் பின்னால் நூல்பிடித்தபடி செல்லவே பார்ப்பார்கள், அக்கம் பக்கம்  பார்க்கவோ, இறங்கி வேடிக்கைப் பார்க்கவோ துணியாத ஒரு எந்திர மனநிலை மக்களையே இப்போது நான் புற நகர் பகுதியில் பார்க்கிறேன்.  நகருக்குள் பசு மாடுகள், எருமை மாடுகள்,காளை மாடுகள், கிடாக்கள், நாட்டுக்கோழிகள், கிளிகள் ,லவ் பேர்ட்ஸ் என இன்னும் பார்க்க முடிவது அபூர்வம் தான். அந்த வகையில் பல்லாவரம் சந்தையை கண்ணுற்று ரசிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளே!!!

பல்லாவரம் சந்தையை யூட்யூபில் தரவேற்றிய நண்பருக்கு நன்றி.

127 ஹவர்ஸ்[127 Hours][2010][அமெரிக்கா]

ருமை நண்பர்களே!!!
127 ஹவர்ஸ் திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன்.என்ன ஒரு அருமையான படம்?!!!இது போல  பாறைப்பிளவின் இடையில்
நாம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?,நாம் அநேகம் பேர் பயத்திலேயே உயிரை விட்டுவிடுவோம், இப்படம் மூலம் சமாளிக்க முடியாத துயரம் என்று ஒன்றுமில்லை என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது. சமீபத்தில் நான் பார்த்ததில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு படம்  இதே போல மாட்டிக்கொள்ளும் கதை தான் .ஆனால் களம் வேறு.  சவப்பெட்டிக்குள் பணயக்கைதியாக ஒரு அமெரிக்க ட்ரக் டரைவர் மாட்டிக்கொள்ளும் பரீட்[Buried ]என்ற படம் தான் அது. இப்படம் 127 ஹவர்ஸ் உத்வேகத்தை அளிக்கும் ஆனால் பரீட் உத்வேகத்தை குலைக்கக்கூடும். அது தான் வித்தியாசம்.

மெரிக்காவின் காலராடா மாகாணத்தில் யூடாஹ்[utah] என்னும் பாலைவனத்தில் அமைந்திருக்கும் மிகக் குறுகிய ,மிக ஆழமான, பிளவுகளைக்கொண்ட மலைப் பள்ளத்தாக்கு அது. அந்தப்பள்ளத்தாக்கிற்கு அடிக்கடி வந்து போகும்
28 வயது ஆரன்  .தன் நண்பரிடம் கூட எங்கு போகிறேன் என சொல்லவில்லை,தன் அம்மாவின் வாய்ஸ்மெயில் அழைப்புகளைக்கூட எடுத்து பேசவில்லை,அவருக்கு மிகப்பிடித்தமான ப்ளூஜான் கேன்யானுக்கு [Blue John Canyon] போய் வார விடுமுறையை கழிக்க ஆவல் கொண்டவர்.நீர் பிடிக்கிறார்,கேமர,பேட்டரிகள்,கயிறு, நீர்ப்பை,தலையில் அணியும் ஃப்ளாஷ் லைட்,என எடுத்துக்கொண்டவர்,தன் ஸ்விஸ் ஹண்டர் கத்தியை தேட அது மட்டும் கிடைக்கவில்லை. இவர் கேன்யோனீயரிங் என்னும் மலையேறுதலில் கைதேர்ந்தவர்.மிகவும் ஆபத்தான இந்த சாகசம் புரியும் வெகுச்சிலரில் இவரும் ஒருவர். தன் மனைவியை இதனாலேயே ஒரு கட்டத்தில் பிரிந்தும் விட்டிருக்கிறார். தன் பெற்றோரிடமும் ஒட்டுதலில்லை. தனிமை விரும்பியாகவே  இருக்கிறார் ஆரன்.

ரியாக வெள்ளிக்கிழமை இரவில் தன்னுடைய 4x4 suv ல் இந்த யூடாஹ் கேன்யன்லாண்ட் தேசியப்பூங்கா  வந்தவர், குதூகலத்துடன் தன்னுடைய கியர் சைக்கிளில் ஓடோ மீட்டரை பொருத்திக் கொண்டு, வேகவேகமாக மிதித்து ப்ளூ ஜான் கேன்யான் நோக்கி விரைகிறார், இடையில் ஒரு பாறை தடுக்கி விழுகிறார். அதையும் புகைப்படமெடுக்கிறார். பிண்ணணி இசை ஒலிக்கிறது பாருங்கள் இசைப்புயல் தனித்து தெரிகிறார். நமக்கு அந்த ஒரு காரணத்துக்காகவே பெருமையாக இருக்கிறது. அவர் எங்காளு என கத்த தோணுகிறது.வழியில் க்ரிஸ்டி, மேகன் என்னும்  இரண்டு பெண்கள் தாங்கள் வந்த வழியை தவறவிட்டுவிட்டு தேட இவர் அவர்களுடன் நகைச்சுவையாக அறிமுகமாகி, வழிகாட்டுகிறார்.அங்கே மலையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய விரிசல் அது, மூன்று அடி அகலம் இருக்கும், அதனுள் மூவரும் இறங்குகின்றனர், ஆரன் பைய நகன்று நகன்று ஊர்ந்து, பின்னர் ஒரு துளைக்குள் குதிக்கிறார் பாருங்கள், அது 100 அடியாவது உயரமிருக்கும் அப்படி ஒரு உயரத்திலிருந்து குதித்து,குகைக்குள் இருக்கும் நீர்நிலைக்குள் குதித்து ஆட்டம் போடுகிறார். 

ன்ன அற்புதமான காட்சி அது?!!! கேமரா மேன் அந்தோனி டாட் மேண்டில் [Anthony Dod Mantle]  தனிஆவர்தனம் செய்கிறார்.சிறிய குகைக்குள்ளே இருந்து அப்படியே உயரக்கிளம்பி ஒரு நூறு அடி மேலே போய் இன்னும் விரிந்து ஃப்ரீஸ் செய்கிறார், நமக்கு உயிரே போகிறது, என்ன ஒரு வித்தை? மிக மிக ரம்மியம். நாம் அங்கே போக முடியாவிட்டாலும் நாமும் அங்கேயே இருப்பதைப்போன்ற பிரமை ஏற்பட்டது. ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அதில் இசைப்புயலின் இசை மிக சாதாரணம் என சொல்லி வந்திருக்கிறேன், இதில் அதை நிவர்த்தி செய்துவிட்டார். மிக மிக உயிரோட்டமான, துடிப்பான இசை. பல சமயம் நம்மை பயம் திகில் ஆட்கொள்வது  பின்னணி இசையால் தான்.

ரன், அந்த இரு பெண்களுடன் அந்த மலை இடுக்கு வழியே குதித்து கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு,அவர்களுக்கு விடை கொடுக்கிறார், நாளை இரவு அந்த ஒரு  பெண்ணின் வீட்டில் வார இறுதி கேளிக்கைகள் நடக்கிறபடியால் கலந்து கொள்ள பணிக்கப்பட, இவர் அதை குறித்து வைத்துக்கொள்கிறார், இவருக்கு அப்பெண்களையும்,அப்பெண்களுக்கு இவரையும் மிகவும் பிடித்து விடுகிறது. இப்போது இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையிலான மிகக் குறுகலான ஓர் இடைவெளியில் ஊர்ந்து சென்றுகொண்டு குதிக்கிறார் ஆரன் . ஒரு எதிர்பாராத கணத்தில் மேலே இருந்த ஒரு உருண்டு திரண்ட பாறை இவருடன் உருண்டு விழ. நொடியில் சுதாரித்த ஆரன், தலையை விலக்கி விட்டார்.ஆயினும் அப்பாறையுடன் இவரது வலது கை விரலகள் அழுத்தமாக சிக்கிக்கொண்டன. காற்று கூட புகாத இடைவெளி அது.தீர்ந்தார் மனிதர்.

தவி!!!! உதவி!!!! என இவர் எப்படி கூப்பாடு போட்டும் பயனில்லை, என்னென்னவோ கனவுகள் வருகின்றன. குரலெடுத்துக் கத்தியதில் பசிதான் எடுக்கிறது, மிச்சம் இருக்கும் சக்தியை சேமிக்கிறார். தன்னை திடப்படுத்துகிறார், இதுவும் கடந்துபோகும் என்கிறார். வலியைப் பொறுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன்னை விடுவிக்க திட்டம் தீட்டுகிறார் ஆரன். தன்னிடமிருக்கும் எல்லா உபகரணங்களையும் பாறை மீது பரப்புகிறார். எதெது? எப்படி உதவக்கூடும் என மதிப்பீடு செய்கிறார். தன் முனை மழுங்கிய சீனத்தயாரிப்பான பலநோக்கு பேனாக்கத்தியை நோட்டமிடுகிறார். 

ப்ளாஷ் லைட் வாங்கியதற்கு இலவசமாக கொடுக்கப்பட்டது அது, அதை எடுத்து வந்தமைக்கு மிகவும் நொந்து கொள்கிறார். அது கூட தன் அம்மா தனக்கு பரிசாய் கொடுத்தமையால் அதிகம் திட்டவில்லை. தன் மனைவியின் நினைவு, தங்கையின் நினைவு, அன்னை தந்தையின் நினைவுகள் ஒருங்கே வாட்ட, எங்கே? ஒருக்கால் குகையிலேயே இறந்துவிடுவோமோ?பூமிக்கடியில் சுமார் 65 அடி ஆழத்தில் இருக்கும் குறுகிய குகைக்குள் யாரும் தன்னை காப்பாற்றாமல் போவரோ? என அஞ்சியவர். தன் கேமராவை இயக்கி, பேசுகிறார். நண்பரே இதை யார் முதலில் கண்டு எடுக்கிறீர்களோ?!!! இந்த கேமராவை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்த டேப்பை என் நினைவாக என் அம்மாவிடம் சேர்த்துவிடுங்கள் என விசும்புகிறார். பாருங்கள், நமக்கு அடிவயிறு கலக்குகிறது.

மிக மிக அருமையான காட்சியாக்கம், அந்த மூன்றடி குகைக்குள் கிடைத்ததை வைத்து தப்பிக்க பிரயத்தனம் செய்கிறார், அபாரம்.மேலே தினமும் காலை 9-00 மணி வாக்கில் வரும் 15 நிமிடமே நிலைக்கும் சூரிய ஒளியையும், மேலே பறக்கும் 8-40 வாக்கில் பறக்கும் ஒரு பெரிய பருந்தையும் சுவைபட பகிர்கிறார். கொண்டு வந்த நீரை சேமித்து கணக்கு போட்டு பருகுகிறார்.ஒரு கட்டத்தில் நீர் சிதறிவிட துடிக்கிறார்.தவிர தன் கால்சட்டையிலேயே அரைத்தூக்கத்தில் ஒன்றுக்கு இரு முறை போய்விட்டதையும் கேமராவில் பகிர்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு பீர்,சிக்கன் எல்லாம் தூரத்தில் தெரிவது போல இவருக்கும் இவர் வேண்டாமென காரில் விட்டு வந்த ஆரஞ்சு ஜூஸ் பாட்டில் நினைக்கையிலேயே வாய் ஊறுகிறது. என்ன ஒரு இயல்பான நடிப்பு ஆரனுடையது?

ரு கட்டத்தில் தன்னுடலுடன் கயிறைக்கட்டி, தன் உடல் எடையைக் கொண்டே அந்த பாறையை மேலே இழுக்கப்பார்க்கிறார், ம்கூம். பலனில்லை. இவ்வாறே பாறை இளகும் , கையை விடுவிப்போமென  மிகப்பொறுமையாகக் காத்திருந்தார் ஆரன். நேரம் தான் கடக்கிறது, நீர் சுத்தமாக இல்லை, இப்போது தன்னுடைய சிறுநீரை தான் கொண்டுவந்த நீரசேமிக்கும் பையில் சேமித்து அதைக்கூட குடிக்கிறார். அருவருக்கிறார். அப்போது கூட அங்கே அருகே ஊரும் பல்லிகள் இவர் மலம் கழிக்காததால் தின்ன தீனி கிடைக்கவில்லை என குறைபட்டுக்கொண்டதாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் தன் கையில் துளையிட்டு  ரத்தத்தை கூட தாகத்துக்கு குடித்துப் பார்க்கிறார். அபாரம், இதோ முழுதாக ஐந்து நாட்கள் ஆகப்போகிறது, கேமராவில் எஞ்சியிருக்கும் பேட்டரி, தன் இப்போதைய நிலையை பதிவு செய்தவர்.சிறிதும் தாமதிக்கவில்லை,இனி கத்தவும் தெம்பில்லை, பாட்டும் கேட்டு உற்சாகம் அடைய வாக்மேனில் பேட்டரியுமில்லை, காதுக்கு அவ்வளவு சக்தியுமில்லை. கண் சொருகுகிறது. சுதாரிக்கிறார் ஆரன்.

ங்கே தன் சின்ன கத்தியை தவறவிட்டுவிடுவோமோ? என பயந்து அதற்கு  இப்போது ஸ்ட்ராப் போட்டுக் கொண்டவர். அதை எடுத்துத் தனது வலக்கையைத் தானே அறுக்கத் தொடங்குகிறார். சின்னச் சின்ன இளைப்பாறலுக்குப் பிறகு, சக்தியைத் திரட்டி கையை அறுத்துக்கொண்டே இருக்கிறார் ஆரன். நாம் தத்ரூபமான சதைக்கோளக் கிழிசலை கண்ணுருகிறோம், ரத்தமாக கொட்ட, இவருக்கு இப்போது அருவருக்கவேயில்லை. எலும்பைக் கூட மொண்ணைக் கத்தியை வைத்தே தேய்த்து தேய்த்து அறுத்து, ஒரு வழியாக பாறையின் பிடியிலிருந்து விடுபட்டவர், அந்த பதட்டத்திலும் அந்த பாறையிடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் கையை போட்டோ எடுக்கிறார் பாருங்கள். என்ன நெஞ்சுரம்? ஒற்றைக் கையைக்கொண்டு 65 அடி குகையினுள் புகுந்து குதித்து தத்தித் தத்தி ஏறுகிறார் ஆரன். மலை உச்சியை அடைந்தார். தாகம் மிகவும் வாட்ட  அதோ அங்கே தூரத்தில் பள்ளத்தாக்கினுள்ளே நீர் நிலையைப்பார்க்கிறார். 

ங்கே தன்னைப்போலவே மலையேறும் வீரர்கள் அடித்து வைத்த இரும்புக்கொக்கியை பார்த்தவருக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட,அதை முத்தமிடுகிறார். இப்போது செங்குத்தான் மலைபள்ளத்தாக்கில் சுமார் 100 அடி மெல்ல கயிறு  கட்டி இறங்குகிறார். அங்கே அழுக்கு நீர்க்குட்டையில் விழுந்தவர். முடிந்த அளவுக்கு நீரைப் பருகுகிறார், பாட்டிலில் நிரப்பிக் கொள்கிறார். நீண்ட நெடும் தூரம் நடந்தே தன் மிதிவண்டி நிறுத்தியிருந்த இடத்துக்கு விரைந்தவர். மயக்கம் வாட்ட தூரத்தே கணவன்,மனைவி அவர்களின் மகனும் செல்வதைப் பார்த்துவிட்டு கூக்குரலிட, அவர்கள் இவருக்கு நல்ல நீர் அளிக்கின்றனர். அவர்கள் இவரை ஆசுவாசப்படுத்துகின்றனர்.  இப்போது நால்வரும் பல மைல்கள் நடக்கின்றனர். அவர்களின் செல்போனில் சிக்னல் கிடைத்ததும் ஹெலிக்காப்டர் முதலுதவிக்கு தகவல் சொல்ல, அங்கே சில மணி நேர காத்திருத்தலுக்கு பின்னர் ஹெலிக்காப்டர் வருகிறது. ஆரன் அதில் ஏற்றப்பட்டு மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைக்கிறார்.

கையைத் துண்டித்துத் தப்பி வந்த ஆரன் ரால்ஸ்டனை அதற்குப் பிறகு தேடி வந்தது நீங்காப்புகழ். ”Between a Rock and a Hard Place” என்ற ஆரன் ரால்ஸ்டனின் வாழ்க்கை அனுபவத்தைத்தான் இயக்குனர் டேனி பாயில் 127 ஹவர்ஸாக இயக்கியும் இருக்கிறார். இதுவரை இப்படத்துக்கு கிடைத்த பாராட்டுக்களும் அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.

ரன் வேடத்தில் நடித்த ஜேம்ஸ் ஃப்ரான்கோ மிக நல்ல நடிகர். இவரின் பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் படத்தின் சுகபோகமான கஞ்சா குடியனும், கஞ்சா வியாபாரியுமான நகைச்சுவை வேடத்தை  ரசித்துப் பார்த்திருக்கிறேன். மனிதர் இதில் ஆரனாகவே வாழ்ந்திருக்கிறார். 2003-ம் ஆண்டு தன் வலது கையை இழந்தார் ஆரன். ஆனால், அதன் பின்
2005-ம் ஆண்டில்  காலராடோ பகுதியில் இருக்கும் 14,000 அடி உயர சிகரங்கள் அனைத்திலும் ஏறிய முதல் மனிதன் என்ற சாதனையும் அவர் படைத்துவிட்டார்  என்று படம் முடிகையில் எழுத்தாக போடுகின்றனர். என்ன ஒரு உத்வேகம் படைத்த மனிதர் இவர் என்று தோன்றியது. மிக அருமையான உத்வேகம் தரும் படம்.படத்தில் கரமைதுனம் செய்வது போலவும், கடைசி காட்சியில் கையை அப்பட்டமாக சிறு மொன்னைக்கத்தி கொண்டு குத்தி அறுப்பது போலவும் வருவதால் இது சிறுவர்களுக்கான படம் அல்ல. இசைப்புயல் இப்படத்துக்கு இசையமைத்தது இந்தியன் ஒவ்வொருவருக்கும் பெருமை தான். அதற்கு வாய்ப்பளித்தமைக்காகவே  இயக்குனர் டேனி பாய்லை மிகவும் பாராட்டவேண்டும்.

டத்தின் இசையை கேட்டுவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிஜ வாழ்வின் ஆரன் ரால்ஸ்டன் சிலாகித்து எழுதி அனுப்பியிருந்த பாராட்டு வரிகள் இதோ!!! மிஸ்டர் ஏ.ஆர்... நம்ப முடியாத ஆச்சர்யமூட்டும் இசை அனுபவத்தை எனது வாழ்க்கைக் கதையில் சேர்த்ததமைக்கு மிக்க நன்றிகள். உங்களுடைய ஒலிக்கோர்வை பின்னணியில் ஒலித்துக்கொண்டு இருந்திருக்குமேயானால், இன்னொரு 127 மணி நேரங்கள் நான் அந்த மலை இடுக்கில் கழித்திருக்கக்கூடும் - ஆரன் ரால்ஸ்டன்” யாருக்கு கிடைக்கும்?!!!  இப்படி ஒரு பாராட்டு பத்திரம், ஹாட்ஸ் ஆஃப் டு யூ ரஹ்மான்.

படம் தரவிறக்க சுட்டி:-

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Danny Boyle
Produced by Christian Colson
John Smithson
Danny Boyle
Screenplay by Danny Boyle
Simon Beaufoy
Based on Between a Rock and a Hard Place by
Aron Ralston
Starring James Franco
Music by A. R. Rahman
Cinematography Anthony Dod Mantle
Enrique Chediak[1]
Editing by Jon Harris
Studio Film4 Productions
HandMade Films
Distributed by Fox Searchlight Pictures (US)
Pathé (UK/France)
Release date(s) September 4, 2010 (2010-09-04) (Telluride)
November 5, 2010 (2010-11-05) (United States)
Running time 94 minutes
Language English

உதிரிப்பூக்கள் [Udhiri pookal] [இந்தியா] [1979] தமிழில் ஓர் உலகசினிமா!!!

கேந்திரன் தமிழ் சினிமாவின் நீங்காப் புகழ் வாய்ந்த இயக்குனர். இவரின் உதிரிப் பூக்கள் படத்தை  தமிழில் வெளிவந்த உலகசினிமா என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், மனதை விட்டு அகலாத கதா பாத்திரங்களுக்காகவும் அழகுணர்ச்சி மிகுந்த ரசனை மிகு காட்சியமைப்புகளுக்காகவும் போற்றப்படவேண்டிய, காலத்துக்கும்  கொண்டாடப்பட வேண்டிய படம் இது.
இயக்குனர் மகேந்திரன்

யக்குனர் மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற குறு நாவலை பாதி வரை படித்து மூடிவிட்டு அதனில் இருந்து உத்வேகமாகக் கொண்டு உதிரிப் பூக்கள்  திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கினார். ஆயினும் நேர்மையாக புதுமைப்பித்தனுக்கு டைட்டிலில் க்ரெடிட் கொடுக்கிறார். இந்தப்படம் வசூலில் இமாலய சாதனை புரிந்ததா? எனத் தெரியாது, ஆயினும் இது தமிழ் திரையுலக வரலாற்றின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்று!!!.

சைஞானியின் ”ஏய் இந்த பூங்காத்து தாலாட்ட” என்னும் மயக்கும் குரலில் மந்திர இசையில் படத்தின் பெயர் போடப்படுகிறது, படத்தின் உலகத்தரமான உள்ளடக்கத்துக்கு முன்னோட்டமாக இந்த பாடல் அமைந்திருக்கிறது, அதன் பின்னர் படத்தில் லட்சுமி பாடும்  ”அழகிய பெண்ணே,உறவுகள் நீயே” என்னும் பாடல் மறக்க முடியாத ஒன்று. இசைஞானிக்கு பேரலல் சினிமாக்களுக்கு இசையமைப்பது என்றாலே இன்பம் தான் போலிருக்கிறது, அவர் பாடுகையிலேயே ஆத்மார்த்தமான ஈடுபாட்டை நாம் உணரமுடிகிறது. பிண்ணனி இசை பிந்தைய 70களின் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு. கிராமிய மணம்  ததும்பும்  மனதை ஊடுருவும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும் இசையமைப்பு.

ந்தப்படத்தினை ஒருவர் ஆத்மார்த்தமாக அனுபவிக்க வேண்டும் என்பதால் படத்தின் கதையை நான் இங்கு சொல்லவில்லை. பிரதான பாத்திரம் சுந்தரவடிவேலு(விஜயன்): திரைக்கதையில் ஒரு உத்தி இருக்கிறது. யாருடைய பார்வையில் இருந்து கதை சொல்லப் படுகிறதோ?  அந்தக் கதாபாத்திரத்தின் மேல் நமக்கு நம்மை அறியாமலேயே அனுதாபம் வந்து விடும். மிகக் கொடியவன் கூட அவனது மனதின் வழியே பார்த்தால் அவன் நல்லவன் போல் தெரிவான். நாம் எல்லோருமே நமக்கு நமே நல்லவர்களாக இருக்கும் மனித மனத்தின் மாயம் இது. [நன்றி-ஷன்முகப்ப்ரியன்] இந்த உத்திக்கு முக்கிய உதாரணம் இப்படம் . சிரித்தே கழுத்தறுக்கும் வில்லன்களை  நாம் பார்த்திருப்போம். சிரிக்காமலேயே கழுத்தை அறுக்கும் வில்லனை இதில் பார்ப்போம்.அவ்வளவு ஏன்?இவர் வில்லனா?அல்லது கதாநாயகனா?என்றே நம்மை குழம்ப வைத்து விடும். விஜயன் என்னும் அற்புத நடிகரை நாம் இழந்து விட்டிருப்பது நன்றாகப் புரிகிறது.

வரை நிறம் மாறாத பூக்கள் துவங்கி, கடைசியாக 7 ஜி ரெயின் போ காலனி வரை ரசித்திருக்கிறேன். இரக்கமேயில்லாத வில்லன் , இவரை துரத்தி வரும் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறார். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறார். வெளியே வந்தால் ஊரார் அடித்தே கொன்றுவிடுவர். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவர்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறார். ''நான் எத்தனையோ தவறு செய்திருக்கேன். ஆனா, இப்போ உங்க எல்லாரையும் என்னை மாதிரி மாத்திட்டேன். அது தான் நான் செய்திருக்கும் பெரிய தவறு...'' என்று  சொல்லிவிட்டு,  தன் குழந்தைகளை அணைத்தவர், ''அப்பா குளிக்கப் போறேன்... நீங்க நல்லா படிங்க'' என்று கூறி விடைபெறுகிறார் பாருங்கள்!!!, அங்கே அந்தக் கொடியவனுக்காகவும் நாம் கண்ணீர் சிந்துகிறோம். இதே போலவே நான் இரக்கப்பட்டது ஹிட்லரின் கடைசி பனிரெண்டு நாட்களை கண்முன் நிறுத்திய டவுன்ஃபால் படத்தின் ப்ரூனோ கான்ஸ் ஏற்று நடித்த ஹிட்லர் பாத்திரத்துக்கு தான்.

சுந்தரவடிவேலுவின் மனைவி லட்சுமி (அஸ்வினி): இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்காகவே இவர் பிறந்திருக்கிறாரா?!!! அல்லது இந்தப் பாத்திரம் இயக்குனர் மகேந்திரனால் இவருக்காகவே படைக்கப்பட்டதா? என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ஒரு காட்சியில் ,மருத்துவ அதிகாரி சரத்பாபு ஒன்பது வருடத்துக்கு முன்னர்,  அவரை பெண் கேட்டு வந்த சம்பவத்தை நினைவூட்டுவார் பாருங்கள்.ஒரு விநாடி பூரிப்பை இதழோரத்தில் சிறு புன்னகையாய் மலரவிட்டு, அடுத்த கணமே,நமக்கு திருமணமாகிவிட்டதே!!!! அப்படி நினைப்பதே தவறு என்று முகம் மாறுவார் பாருங்கள் .நாம் மிக நல்ல நடிகையை இழந்து விட்டிருக்கிறோம். கொடுமைக்காரக் கணவன் சுந்தரவடிவேலு பூ வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்குப் போகத் தயாராக இருக்கச் சொல்லும்போது, மனைவி லட்சுமி மழை வருகிறதா?!!! என்று வானத்தை அண்ணாந்து பார்ப்பதும், அப்போது வான்னோக்கிய கேமராவில் மழை மேகம் திரண்டிருப்பதை காட்டுகிறார் மகேந்திரன் அது .உலகத்தரமான குறும்பு நகைச்சுவை.

லட்சுமியின் தந்தை (சாரு ஹாசன்): இவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட தகப்பன் பாத்திரங்கள் சோடை போனதேயில்லை, உதாரணம் வேதம் புதிது, தளபதி, அப்புறம் இதோ  இப்படம், நறுக்கு தெரித்தார் போலே தெளிவான வசன உச்சரிப்பு, 'நான் என் பெண்ணுக்கு தகப்பனாராகவே இருக்க விரும்பறேன்... புரோக்கரா இருக்க விரும்பலே...' என்று அவர்  யதார்த்தமாக இரண்டாம் பெண்ணை  சுந்தரவடிவேலுவுக்கு மணம்முடித்துத தர இயலாது என சொல்லும் இந்த இடம் மிக அருமை, இதைவிடக் நேர்த்தியாக ஒரு வசனம் உச்சரிக்கப்படமுடியுமா? என்று வியக்க வைக்கிறது,இது போல பல இடங்களில் மின்னுகிறார் சாரு ஹாசன்.

குழந்தை நட்சத்திரங்கள் ராஜா, பவானி (ராஜா, பேபி அஞ்சு): ராஜா, தந்தை சுந்தரவடிவேலுவைப்போலவே  சிரிக்காமல் அழுத்தமாகக் காட்சி அளிக்கிறான்.தங்கை பவானி பசிக்கும் போதும் சிரிக்கிறாள், தாய் லட்சுமி இறக்கும்போதும் சிரிக்கிறாள் அக்குழந்தை, அப்படி அது சிரிக்கச் சிரிக்க நாம் கலங்கியே விடுகிறோம். அப்பேர்ப்பட்ட குழந்தை நட்சத்திரம் அஞ்சுவை இப்போது பருத்த பெண்மணியாக சின்னத்திரையில் பார்க்கையில் நம்பவே முடியவில்லை, ராஜாவாக வந்த சிறுவன் பின்னாளில் அந்த ஏழு நாட்களில் பாக்யராஜுக்கு எடுபிடியாக வருவார், சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் தொடர்ந்து எஸ் எஸ் எல் சி எழுதும் பையனாக வருவார். இப்போது என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. ஆனால் வாழ்நாளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இப்படம் இருவருக்கும்.

எடிட்டர் பி.லெனின், மிக அருமையான எடிட்டிங்,மெதுவாக செல்லும் படத்தில் நிறைய கட் ஷாட்டுகள் கொண்டிருக்கின்றன, விஜயனையும்,லட்சுமியையும் ஏனைய நட்சத்திரங்களையும் நம் மனதில் நீங்கா இடம் பெறச்செய்கிறது இவரின் தொய்வில்லாத எடிட்டிங்.இப்படம் எனக்கு டெர்ரன்ஸ் மாலிக்கின் டேஸ் ஆஃப் ஹெவன் என்னும் ஆகச்சிறந்த ஹாலிவுட் ஆர்ட் ஹவுஸ் திரைப்படத்தின் தரத்தை நேர்த்தியை நினைவுபடுத்தியது.நம்மூரிலும் டெர்ரன்ஸ் மாலிக்குகள் இருந்திருக்கின்றனர் என நினைப்பதே பெருமைதான்.

ஒளிப்பதிவாளர் அசோக்குமார், இவர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருமாவார். 1979 களின் சினிமாவுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு கலைத்தன்மை பொதிந்த நீண்ட ஷாட்டுகள், டீடெய்ல்டான ஒளிப்பதிவு, 35 எம் எம் செலுலாய்டு கவிதையாய் அமைந்தது, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான  ஒளிப்பதிவு. இந்தப்படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைக்காமல் போனாலும் பின்னாளில் 1981ல் வெளியான மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளேதே படத்துக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் ஜீன்ஸ் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தது நினைவிருக்கலாம்.

ட்சுமியின் தங்கையாக வந்த மதுமாலினி மிகவும் அழகு, மருத்துவ அலுவலராக வந்த சரத் பாபு ஏனைய படங்களில் நாம் பார்க்கும் குணசித்திர கதாபாத்திரங்களைப் போல படம் முழுவதும் வராதது யதார்த்தமாகப்பட்டது, வாழ்வில் யாரோடும் நாம் ஒருகட்டத்துக்கு மேல் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. க்ளிஷேக்களை ஆனவரை பல இடங்களில் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்,அந்த சுந்தரவடிவேலு இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணை மணம் முடித்துக்கொண்டு வருகையில் பாடப்படும் பாடல்,மற்றும் லட்சுமியின் தங்கை ஆற்றங்கரையில் பாடும் பீப்பி பாடல் மட்டுமே வழமையான தமிழ் சினிமாவின் க்ளிஷேக்களை நினைவுபடுத்தியது, இந்த இரண்டு பாடல்களை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும், இன்னும் படத்தில் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. 
 நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள் சிவச்சந்திரன். குமரிமுத்து, சரத்பாபுவின் மனைவியாக வந்த பெண்மணியின் பெயர் தெரியவில்லை, அவரை இப்போது தொலைகாட்சி சீரியலில் மாமியாராக பார்த்தது. ஆசிரியராக வந்து  பல்பு வாங்குபவரை என்னால் நினைவு கூற முடியவில்லை,  மனோரமாவின் மகன் பூபதி இதில், சரத் பாபுவின் உதவியாளராக வந்துபோனார். படத்தில் பரீட்சார்த்தமாக நிறைய இரவுக் காட்சிகள்,மனதுக்குள்ளேயே  அசை போட வைக்கும்  கூர்மையான வசனங்கள் உண்டு. சுந்தர வடிவேலுவின் மன விகாரத்தின் உச்சமாக அவனிடம் குழந்தைகளை கேட்க வரும் மைத்துணியை துகில் உரிந்து நிர்வாணமாக்கி அழவைத்து விட்டு,நான் உன்னை துகிலுரிந்தது கற்பழிக்க அல்ல, உன்னை முழு நிர்வாணமாக முதலில் பார்த்தது நான் தான் என்னும் நினைப்பு உனக்கு ஆயுளுக்கும் இருக்க வேண்டும் அதற்காகத் தான் என்கிறார். மிகக்கொடிய பாத்திர சித்தரிப்பு சுந்தரவடிவேலு. நிறைய காட்சிகளில் நகைச்சுவை இழையோடி அப்பாத்திரத்தின் மீதே நமக்கு இரக்கமும் தோன்றி விடுகிறது. தனக்கு நீச்சல் தெரியாததால் தான் நிர்வகிக்கும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியனும் நீச்சல் அடிக்கக்கூடாது என நினைப்பது ஒரு சோற்றுப்பதம். ஒரு ஆற்றங்கரைக்காட்சியில் வைத்து விஜயன் சரத்பாபுவை புரட்டிப்போட்டு அடிப்பார்.ஆனால் இயக்குனர் மகேந்திரன் அதை காட்சிப்படுத்தவில்லை,ஓடும் ஆற்றையும்,மணலில் ஒரு சிறுவன் தலையை தூக்கி பார்ப்பதையும்,நெற்கதிரையும் காட்டுகிறார்.மறு காட்சியில் சரத்பாபு வாயில் கசியும் ரத்தத்தை கழுவுகிறார். தன் கீழே விழுந்த மூக்கு கண்ணாடியை எடுத்து அணிகிறார். பின்னர்  லட்சுமி விதவையாகக்கூடாது என்று தான் நான் திருப்பி அடிக்கவில்லை என்று சுந்தரவடிவேலுவிடம் சொல்லிவிட்டு அகல்கிறார். இது போல இன்றைய இயக்குனர்கள் உபயோகிக்கும் மேலான உத்திகளை அன்றே இயக்குனர் உபயோகித்துவிட்டார்.

ட்சுமியின் மரணத்தில், தமிழ்த் திரையுலகில் இதுவரை நாம் கண்டிராத யதார்த்தத்தைக் காண் கிறோம்.கணவன் தன் தங்கை மேல் ஆசைப்பட்டு என்ன என்ன விதத்தில் எல்லாம் கையாண்டு அவளையும் இரண்டாம் தாரமாக அடைய வழி பார்க்க, இதற்கு உடன்படாத லட்சுமியை பலவாறாக பழி தீர்க்கிறார் சுந்தர வடிவேலு. அவளை வாழாவெட்டியாக்குகிறார்,தனக்கு தேவையில்லை என்றாலும், வீம்புக்கென்றே இரு குழந்தைகளை தன்னுடனே அடைத்து வைத்துக்கொள்கிறார். ஏற்கனவே சீக்காளியான லட்சுமிக்கு புத்திர சோகமும் ஏற்படுகிறது. லட்சுமி எப்போது இறந்து போனாள்?!!! என்பதுகூட அருகில் இருப்பவர்களுக்குத் தெரியா  வண்ணம் இயற்கையாக, வாழ்க்கையோடு ஒட்டியதாக அமைந்திருக்கும் அக் காட்சியில் ஒரு சோகக் ஓவியத்தையே தீட்டியிருக்கிறார் இயக்குனர். தாயையும், தந்தையையும் இழந்துவிட்ட பின்னர் தனியாகக் ஆற்றங்கரையோரம் நடந்து செல்லும் இரு குழந்தைகளைக் காட்டிப் படத்தை முடித்து விட்டது மனதைப் புரட்டிப்போட்டது. இந்தப்படத்துக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது படம் வெளியான 1979ஆம் வருடம் தான் நானும் பூவுலகில் ரிலீஸ் ஆனேன். இந்தப்படத்தை பார்த்துவிட்டு எழுத வேண்டும் எழுத வேண்டும் என நினைத்து முடியாமல் போனது,ஒருவழியாக எழுதியும் விட்டேன்.யாராவது தமிழில் நல்ல சினிமா சொல்லு என சொன்னால் இதை தைரியமாக சொல்லுங்கள்.
உதிரிப் பூக்கள்=தமிழின் முதல் உலக சினிமா

குறிப்பு:- தமிழகத்தில் இப்படம் பார்க்க விழைவோர் அருகாமையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மோசர் பேயர் வெளியீடாக 28 ரூபாய்க்கு கிடைக்கிறது அதை வாங்கி புத்தக அலமாரியில் வைத்து கலெக்டர் டிவிடியாக பாதுகாக்கலாம்.

ப்படம் தரவிறக்க டாரண்ட் சுட்டியே கிடைக்கவில்லை. டிவிடியை வாங்க வழியில்லாதோர். இப்படம் யாரோ ஒரு நல்லெண்ணம் கொண்ட அன்பர் மூலம் தரவேற்றப்பட்டு 10 நிமிடங்கள் X 15 பாகங்களாக யூட்யூபில் காணக்கிடைக்கிறது. முழு அமர்வில் உட்கார்ந்து பார்க்க ஏற்றது. மெதுவாக சென்றாலும் தொய்வே இருக்காது.அதை அவசியம் பாருங்கள்.
இது படத்தின் முதல் பாகம்

நண்டு-திரைப்படம் பற்றி சிறு பார்வை:-
யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப இயக்குனர் மகேந்திரனுக்கு அடி சறுக்கிய படம் நண்டு,படத்தில் எத்தனையோ பிழைகள் உண்டு என்றாலும்,ஒரு நல்ல இயக்குனர் கவனம் சிதறுண்ட ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.எப்படியோ எடிட்டிங்கில் கூட பார்க்காமல் விட்டுவிட்டார்,ஆனால் படத்தை ரிலீசான பிறகு எப்போது பார்த்தாலும் வருந்தியிருப்பார். இதில் இந்த 14 நிமிட யூட்யூப் காணொளியை பாருங்கள்,பொறுமை இழந்து விடுவீர்கள்,யாரும் கன்டின்யூட்டி பார்க்கவில்லையோ ,யாரும் வசனங்களை சரிபார்க்கவில்லையோ என எண்ண வைக்கும் காட்சி. 

லக்னோவைச் சேர்ந்த நாயகன்,[ஆனால் நாயகன் துவங்கி,வீட்டு வேலைக்காரன் வரை எல்லோருமே தமிழ் பேசுகிற குடும்பம்] தன் கொடிய அப்பாவின் மேல் கோபப்பட்டு சென்னை வந்தவன் வேலைக்கு சேர்ந்து,உடன் பணிபுரியும் பெண்ணை மணந்து கொள்கிறான், சில மாதம் கழித்து தங்கை திருமணத்துக்கு லக்னோ போகிறான்,அங்கே லக்னோவில் அவனுக்கு குதிரை வண்டி ஓட்டுபவரும் கூட தமிழ் பேசுகிறார். இறங்கி வீட்டுக்குள் நுழைகிறான்,அங்கே அம்மா தமிழில் வரவேற்கிறாள், பேரனையும் வாங்கி அழகுத் தமிழில் கொஞ்சுகிறாள். பின்னர் மருமகளை அங்கே உள்ளோரிடம் ஹிந்தியில் அறிமுகம் செய்கிறாள். 

 அடுத்த காட்சி வருகிறது உள்ளே ஹாலில் அமர்ந்திருக்கும் மருமகளிடம் வந்த நாயகனின் அம்மா,என்ன சாப்பிடுகிறாய்? என ஹிந்தியில் பேசுகிறார், திடீரென அந்தப் புள்ளியில் அவர் தமிழை மறந்து விடுகிறார்,நாயகியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழிலேயே விழிக்கிறார்,ஹிந்தி தெரியாத்தால் அசடு வழிகிறார்,நாயகன் குறுக்கிட்டு மொழி பெயர்த்து சொல்லும் அந்த இடத்தை நன்கு ,வேண்டாம் வேண்டாம் சாதாரணமாக கவனியுங்கள்,இப்படி பல்பு வாங்கலாமா மகேந்திரன் சார்?!!! இதே போலவே மெட்டி படத்திலும் நிறைய பல்புகள் உண்டு,அது பின்னொரு சமயம் பகிர்கிறேன்,முள்ளும் மலரும் & உதிரிப்பூக்களுக்கு திருஷ்டி இரு படங்களும்,ஆனால் ராஜா சாரின் இசை ஒன்றினால் மட்டுமே இரு படங்களுமே நீங்கா புகழை இன்னும் கொண்டிருக்கின்றன. 

மை ஆர்க்கிடெக்ட் [My Architect] [2003] [அமெரிக்கா] ஒரு மகனின் பயணம்!!!

நண்பர்களே!!!
மை ஆர்கிடெக்ட் என்னும் அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் லூயி.ஐ.கான் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன். இது அன்பின், கட்டிடக்கலையின், துரோகத்தின், மன்னிப்பின் கதையாகும், உலகே நன்கறிந்தவரும்  மகனாகிய தானறிந்திராத ஓர் மனிதனைத்  தெரிந்து கொள்ள, ஓர் புறக்கணிக்கப்பட்ட மகன் உலகெங்கும் மேற்கொண்ட ஐந்து வருட பயணம், அதன் பின்னான அவன் தந்தையைப் பற்றிய புரிதலுமே இப்படம்.


ந்த ஆவணப்படம் பார்த்துவிட்டு கலங்காதவர்கள் என இருந்தால் அவர்கள் மனம் கல் என்பேன்,  இவ்வுலகில் தகப்பன் யார்? எனத் தெரிந்தும் அதை எங்கும் சொல்லிக் கொள்ள முடியாதவனை, அங்கீகாரமில்லாப் பிள்ளையை ஆங்கிலத்தில் பாஸ்டர்ட் என்பார்கள். அதுபோல நிலை ஒருவனுக்கு வாய்ப்பது வாழ்வில் மிகவும் துயரம் .  தகப்பன் பாசம் என்பதே நினைவில்லா  ஒரு மகன் தன் 36 ஆம் வயதில், 25 வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் தந்தை உலகம் போற்றும் மகத்தான அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர்  லூயி கானின் ரிஷிமூலத்தை தேடிப்போகிறார்.

டவுளே!!! என்ன ஒரு மகன் நாத்தேனியல் கான் ?!!! மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல்; மகன் தந்தைக்கு செய்யக்கூடிய உதவியானது, இவருடைய தந்தை இவரைப்பெற என்ன தவம் செய்தாரோ? என  எண்ணும் அளவுக்கு இருத்தல் வேண்டும் என்ற குறளுக்கான அர்த்தம் இவரால் கண்டேன். இவரின் தந்தை  தன் கடமையை சரிவர நிறைவேற்றாவிட்டாலும்,நாத்தேனியல் தன் தந்தையை அப்படி நேசித்திருக்கிறார். புரியாத புதிரான தந்தையை  பற்றி  தெரிந்துகொள்ள கேமராவை தூக்கிக்கொண்டு புறப்பட்டவர்.

லூயி.ஐ.கான்[Louis I. Kahn]
ந்தை லூயி ஐ. கானின் பூர்வீகம், ரஷ்யாவின் எஸ்டோனியாவில் அவர் பிறப்பு, அங்கிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவின் பிலடெல்பியாவில் அவர் வளர்ந்த சூழல், சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட கொடிய தீக்காயம். அனைவரது கேலி புறக்கணித்தலுடனேயான அவரின் கட்டிடக்கலை படிப்பு, அவரின் முதல் சட்டப்படியான விவாகம், அவரின் மூத்த மகள் பிறந்தது , இரண்டாம் உலகப்போரில் அவரது யூத இனம் அனுபவித்த இன்னல்கள். சுமார் 25 வருடங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள கட்டிடக்கலை அலுவலகங்களில் வேலைசெய்தும் சோபிக்காமல் போனது. ஏல் கட்டிடக்கலை பள்ளியில் சிறந்த கட்டிடக்கலை  பேராசிரியராய் வேலை பார்த்தது. மருத்துவ தாதியான  தன்  முதல் மனைவி எஸ்தரின் பேருதவியால் பிலடெல்பியாவில் தன் ஐம்பதாம் வயதில் துணிந்து   சிறிய கட்டிடக்கலை அலுவலகம்  திறந்தது.

சில நாட்களில் முதல் மனைவி எஸ்தரிடம் ஆத்மார்த்தமான  நாட்டமின்மை , ஓயாத கட்டிட வடிவமைப்பு வேலைகள், பின்னர் ஊரரியாமல், தன்னிடம் வேலைபார்த்த ஆர்க்கிடெக்ட் பெண் ஆன்னி டைங்கை[Anne Tyng] இரண்டாம் மனைவியாக்கிக் கொண்டு அவளுடனான இல்வாழ்க்கை அமைத்தது. அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதிலும் பிணக்கு வந்து இரண்டாமவளே விலகியது, பின்னர் ஊரரியா வண்ணம்  மூன்றாம் மனைவியான இவரது தாய் ஹாரியட் பாட்டிசனுடனான[Harriet Pattison] இல்லற வாழ்க்கை அமைத்தது, லூயிகானின் நாடோடித்தனமான வாழ்க்கைமுறை . காலத்தை வென்ற கலை ரசனை, கட்டிடக்கலையை தெய்வீகமாக கருதி அதை செயல்முறைப்படுத்தி அவர் சந்தித்த வெற்றி தோல்விகள்.

வாடிக்கையாளர்களிடம் அவர் கொண்ட மாற்று கருத்துக்கள், விவாதங்கள். அதனால் அவர் இழந்த கமிஷன்கள் [பெரிய லாபம் தரும் கட்டிட வடிவமைப்பு வேலைகள்] உலகெங்கிலும் அவருக்கு இருந்த மாணவர்கள். அவர் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மாணவர்களுக்கு எடுத்த பாடத்தின் மாதிரி அவரின் நிரந்தர நண்பர்கள், பகைவர்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை பயணித்து மிக அருமையான ஆவணப்படம் தயாரித்து இயக்கி வாழ்ந்து இருக்கிறார். இறுதியாக அவர் தன் தந்தை லூயி கான் தனக்காக தன் தாய்க்காக வாழாவிட்டாலும் உலகுக்காகவே வாழ்ந்து தன்னை அற்பணித்திருந்ததை புரிந்து கொண்டார். நாத்தேனியல் கான்  இந்த ஆவணப்படத்திற்காக சென்ற  எண்ணிலடங்காத இடங்கள்,தன் பிறப்பு சான்றிதழில் இருக்கும் லூயி கான் என்னும் தன் தந்தையின் பெயரைக் காட்டி சந்தித்த பெரிய கட்டிடக்கலை வல்லுனர்கள், லூயீ கானின் இரண்டாம் மனைவி ஆன்னி டைங், அவரின் மகள், இவரின் தாய். மூத்த மனைவி எஸ்தர் இறந்துவிட்டதால் அவரின் மகள். என இவர் எடுத்த ஒவ்வொரு பேட்டியும் மிகவும் உயிரொட்டமானது. தன் தந்தை வடிவமைத்த  கட்டிடங்களில் இவர் கண்ட   தந்தையின் சுவாசம், உயிர். அங்கே புழங்குபவர்களிடம் இவர் தந்தையைப்பற்றி பேசுகையில் , கேட்கையில் இவருக்கு ஏற்படும் ஆனந்தம், புளங்காகிதம் என எதைத்தான் சொல்லாமல் விடுவது? என எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு நெகிழ்ச்சியூட்டும்  படம்.

லூயி கான் பற்றி கட்டிடக்கலை மேதைகள் இப்படி சொல்கின்றனர்.
அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் பிலிப் ஜான்சன்[Philip Johnson],
what a `nice guy' Kahn was. `All the rest of us were bastards

சீன கட்டிடக்கலை வல்லுனர் ஐ.எம். பெய்.[ I.M. Pei ],
Kahn is my superior. `It's quality, not quantity, that matters,' Kahn may only have completed a few buildings,  but they are great masterpieces.
 
அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் ஃப்ரான்க் கெஹ்ரி [Frank Gehry ]
Kahn  is my original inspiration, that without Lou Kahn, I would not be. It's plain that the most famous architectural figures of our day are all in awe of this man. A failure morally, a man who couldn't do right by the people closest to him in his life, Louis Kahn is perhaps the greatest American architect. That fact emerges as powerfully as do his personal shortcomings.

இந்திய கட்டிடக்கலை வல்லுனர் பி.வி.தோஷி[B.V.Doshi]

louis kahn was a "highly cultivated soul". , "nothingness mattered to him ... the enigma of life mattered to him". louis kahn spoke of "matter in spiritual terms", which is precisely what many of my artist friends start doing when they get together.

தந்தையும் மகனும்
லூயி கான் வடிவமைத்த கட்டிடங்களை நூறு பதிவுகள் கொண்டு கூட எழுத்தில் எழுதிவிட முடியாது, அதை உள்வாங்கி ரசிப்பதற்கே பக்குவமும் முதிர்ச்சியும் வேண்டும். ஒரு கைதேர்ந்த ஓவியன் வண்ணம் தீட்டுவதைப் போல கட்டுக்கடங்காத பின்நவீனத்துவ கோட்பாடுகளுடன் அமைந்த பிரம்மாண்டம் தான் இவரது படைப்புகள், அபாரமான விகிதாச்சாரத்துடன், தேர்ந்த உள்ளடக்கம் கொண்டவை.  வானுக்கு ஏது எல்லை? கடலுக்கு ஏது எல்லை? அது போலவே இவரது படைப்புக்கள்  தெய்வீகமானவை, அங்கே நாம் சென்று நிற்கையிலேயே இது செயற்கையா? இது கட்டிடமா? இது கட்டப்பட்டதா? அல்லது பெயர்த்துக் கொண்டு வந்து வைத்தார்களா? இது எப்படி சாத்தியமானது என்று கேட்க வைக்கும். இன்றைய அவசர உலகில் எளிதில் நினைத்துப்பார்க்கவோ கடைபிடிக்கவோ முடியாத கட்டுமான பிரம்மாண்டம், காங்கிரீட் கவிதைகள்.

வர் கட்டுமானப்பொருளான செங்கல், காங்க்ரீட், இரும்பு, கண்ணாடி, அலுமினியம் போன்றவற்றை அளவின்றி நேசித்தார், அதனுடன் ஒளி, நீர்நிலை, மண், காற்று, ஆகாயத்தை இரண்டரக் கலந்தார்.  இவரது சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டி முடித்த 10 மீட்டர் விட்டம் கொண்ட ஆஜானுபாகுவான வளைவுகள். 50 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள ஓங்கு தாங்கான காங்கிரீட் கூரைகள். தூண்கள். உத்திரங்கள்.  ஒரு மனிதனின் உயரத்தை விட 50 மடங்கு உயரமுள்ள கட்டிடத்தின் காங்க்ரீட் மேற்கூரைகள், பரந்து விரிந்த நுழைவுவாயில்கள் என மூச்சு முட்டும். இவர் எதையுமே மூடி போட்டு மறைத்ததில்லை. இயற்கையோடு ஒத்த, கட்டுப்பட்ட, பிணைந்த ஒரு இசை போல ஒரு தியானம் போலான இவரது படைப்புகள், தன் முகத்திலுள்ள விகாரமான தீக்காயம் போன்றே இவர் கட்டிடங்களில் ஒழுங்கில்லாத வடிவங்களை அதிகம் அனுமதித்தார். அனாவசியமான அலங்கார பூச்சு வேலைகளை இவர் அடியோடு வெறுத்தார். இன்னும் இவரது படைப்புகள் உலகெங்கிலும் உள்ள கட்டிடக்கலைஞர்கள் பொதுமக்களால் கொண்டாடப்படுகின்றன,.

ண்மையான கலைஞனின் சாபம் ஓட்டாண்டியாக  சாவது, அதில் லூயி கானும் விதிவிலக்கல்ல, தனக்கு மூன்று இல்லறம் அமைந்தும் எங்கேயும் செல்லப்பிடிக்காமல், கடன்சுமை நெஞ்சை அழுத்த இப்போது நிச்சயம்  சாகப்போகிறோம் என உணர்ந்தவர் தன் பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் மற்றும் விலாசப் பக்கத்தை கிழித்து எங்கோ எறிந்திருக்கிறார். அப்போது 1974ஆம் ஆண்டு. கடைசியாக அவர் வந்த சென்று வந்த இடம் பங்களாதேஷின் டாக்காவும். இந்தியாவில் இன்றைய பின்நவீனத்துவ கட்டிடக்கலைக் கலைஞர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் அஹமதாபாதும் ஆகும் . அங்கே அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்  பி.வி.தோஷியின் வேண்டுகோளுக்கிணங்க இவர் வடிவமைத்தது தான்.

க்கட்டிடம் தான் அஹமதாபாதில் கட்டிடக்கலை தழைத்து சிறப்பதற்கும் மதிக்கப்படுவதற்கும் பிள்ளையார் சுழி. இவரின் மகத்தான சிஷ்யர் தான் இந்தியாவே போற்றும் பாலகிருஷ்ணன்.வி.தோஷி. அவருடனான அந்த கட்டிட வளாகத்துக்கு சென்று மேற்பார்வையிட்டவர். கட்டிடம் பற்றிய நிறைய ஆலோசனைகளை அன்று வழங்கியிருக்கிறார். பின்னர் அவருடைய குடும்பத்தாருடன் மதிய உணவு உட்கொண்டவர். மறுநாள் பென்சில்வேனியா ரயில்வே ஸ்டேஷனின் கழிவறையில் இறந்தும் போயிருக்கிறார். மூன்று நாட்களாக அவர் அடையாளமே காணப்படவில்லை. இவர் யார் என்று அடையாளம் தெரிந்தபின்னர் ஒட்டுமொத்த கட்டிடக்கலைஞர்கள் கதி கலங்கிப்போய் சவ ஊர்வலத்தில் ஒன்று திரண்டனர்.


ங்கே லூயி கானின் முறையில்லா மனைவிகள் இருவரும்,அவர்கள் மூலம் பிறந்த மகனும் மகளும் கலந்துகொண்டனர். அப்போது அவரின் மகன் நாதேனியலுக்கு வயது 11. தந்தை லூயி கானின் வயது 73 , என்ன என்ன கனவு கண்டிருக்கும் அந்த குழந்தை உள்ளம்?!!! .அந்த சவ ஊர்வலத்தில் கூட இவர்கள் அங்கீகரிக்கப்படவோ, கண்டுகொள்ளப்படவோ இல்லை,அவ்வளவு ஏன்?!!!யாரிடமும் பேசவேண்டாம், நீங்களும் லூயி கானுக்கு மனைவியர்  என்றோ, மகவுகள் என்றோ சொல்லவும் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். என்ன கொடுமை பாருங்கள்.

நாத்தேனியலின் அம்மா ஹாரியட் பாட்டிசன் ஒரு லேண்ட்ஸ்கேப் ஆர்கிட்டெக்ட். [தோட்டவியல் வடிவமைப்பாளர்] லூயி கானிடம் பணியாற்றுகையில் அவரின் அயராத கட்டிடக்கலை அற்பணிப்பின் பால் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டவர் , ஒரு கட்டத்தில் தன்னையே அவரிடம் அற்பணித்திருக்கிறார். அதன் பின்னர் வார இறுதி நாட்களில் மட்டுமே லூயி கான் இவர்களின் இல்லத்துக்கு இரவுக்கு மேல் வந்து விடியும் முன்னரே கிளம்பிப்போயிருக்கிறார், நாத்தேனியல் அவரை இரவில் மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறார். மிக அபூர்வமாக அவருடன் சென்ற சுற்றுலாக்கள்.அவருக்கு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கிறது. சிறு உள்ளத்தில் பெரும் காயமாக லூயி கான் திடீரென இறந்தும் விட்டார். செய்தித்தாள் பார்த்தே தன் தந்தையின் இறப்பை தெரிந்து கொண்டு அங்கே விரைந்தவர்களுக்கு, அவமானம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

லூயி கான் இறக்கையிலேயே அவருக்கு அரை மில்லியன் டாலர்கள் [ஐந்து லட்சம்] வங்கிக்கடன்  இருந்திருக்கிறது. அவரின் வாழ்நாள் சாதனையான வங்காளதேசத்தின் நாடாளுமன்ற வளாகத்தின் பணிகள் துவங்கி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்திய பாகிஸ்தான் போர் வேறு குறுக்கிட, மிகவும் வாடிப்போயிருக்கிறார்.லூயிகானைப்பற்றி பங்களாதேஷின் பிரபல கட்டிடக்கலை வல்லுனர் ஷுல்யர் வாரெஸ் [Shulyar Wares] இப்படி சிலாகிக்கிறார். கண்ணீர் உகுக்கிறார். அவரிடம்  நாத்தேனியல், லூயிகானின் இந்த கடைசி படைப்பு ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது, 10 நிமிடம் எடுக்கப்பட்ட படம் எடிட் செய்த பின்னர் 3 நிமிடங்கள்  வரும் என்றது தான் தாமதம். அதற்கு அவர் இப்படி சொல்கிறார்.

 `You would try to do justice to this building in ten minutes! To its spirit, its power, the ambiguities of its spaces!' ,It's not unusual for a great artist to fall short as a man, the one failure may be necessary for the other success. 

லகின் மிக ஏழை நாடு பங்களாதேஷ். அந்த நாட்டிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?என்று அவர்  கேட்டதேயில்லை, உலகின் இன்னொரு பெரிய முஸ்லீம்களின் தேசம் இது. லூயி கான் ஒரு யூதர். யூதருக்கும் முஸ்லீம்களுக்கும் ஜென்மப்பகை, ஆயினும் லூயி கான் இந்த வடிவமைப்பு வேலையை மிகவும் ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டார். ஏனைய அமெரிக்கர்கள் போல அந்த தேசத்தைப் பார்த்து எள்ளி நகையாடவில்லை. எங்கள் தேசத்தின் பெருமை இந்த கட்டிடம்,எங்களின் பொக்கிஷம் இது  என்கிறார்.

ன்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது அவருக்கு, அவர் உமக்காக வாழாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களுக்காக ஒரு நாட்டுக்காகவே வாழ்ந்திருக்கிறார், அதை நினைத்து நீங்கள் ஆயுளுக்கும் பெருமை கொள்ளலாம் என்கிறார். அவர் வடிவமைத்த இந்த கட்டிடம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது, இதை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனது, தாஜ் மகாலை கட்டவும் 22 ஆண்டுகள் ஆனது நமக்கு நினைவிருக்கலாம். இக்கட்டிடம் இல்லாமல் வங்காளதேசம் அதன் அரசியல் நிர்வாகம்  உருவாகியிருக்காது என்கிறார்.

நாத்தேனியலை  வெளியே ஓர் அதிகாலையில் சூழ்ந்து கொண்ட உள்ளூர் மக்கள் நீர் நிலை சூழ்ந்த அக்கட்டிடத்தை தாங்கள் மிகவும் நேசிப்பதாகவும், அங்கே உலவுவதற்கே மிகவும் பெருமைப் படுவதாகவும் கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவும் இசைசேர்ப்பும் மிக மிக அருமை, இவருக்கு இது முதல் ஆவணப்படம் தான்  என்றால் யாருமே நம்பமாட்டார்கள்.அப்படி ஓர் தரம், நேர்த்தி, தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்களே!!! அது மெய்தான். இப்படத்தில் லூயிகானுக்கு டாக்ஸி ஓட்டிய டாக்ஸி ட்ரைவரைக் கூட விடாமல் பேட்டி எடுத்துள்ளார். லூயிகான் ஒரு சமயம் American Wind Symphony Orchestra. வுக்காக ஒரு மிதக்கும் ஆர்கெஸ்ட்ரா கப்பலையும் வடிவமைத்துள்ளார். அந்த கப்பலுக்கும் போய் அதன் ஃப்ரெஞ்சு உரிமையாளர் ராபர்ட் ஆஸ்டின் போர்டியோவுக்கு[Robert Austin Boudreau] இன்ப அதிர்ச்சி தருகிறார் நாத்தேனியல், அவர் இவரை உச்சி முகர்கிறார். நான் உன்னில் லூயிகானைப்பார்க்கிறேன் என்கிறார். இது போதாதா ஒரு மகனுக்கு?

லூயி.ஐ.கானைப் பற்றி ஹிஸ்டரி ஆஃப் ஆர்க்கிடெக்சர் பாடத்தில் கட்டிடக்கலை மாணவர்கள், வல்லுனர், நிபுனர்கள் நிச்சயம் படிப்பார்கள், படித்திருப்பார்கள். அவர்களும் ,உலக சினிமா ரசிகர்களும் நிச்சயம் தவறவிடக்கூடாத படைப்பு இந்தப் படம். இது தந்த உத்வேகத்தில் நான் ஃப்ரான்க் லாயிட் ரைட், லீ-கார்பூசியர்,  ஃப்ரான்க்.ஓ.கெஹ்ரி, லூட்விக் மீஸ் வாண்டெர் ரோஹே , ஸாஹா ஹாதித். போன்றோர்கள் பற்றிய ஆவணப்படங்களை சரசரவென தரவிறக்கி விட்டேன். அதை பார்த்துவிட்டு என்னைக்கவரும் பட்சத்தில் நிச்சயம் எழுதுவேன். இப்படத்துக்கு 2004ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடவேண்டிய ஒன்று.
மை ஆர்க்கிடெக்ட்=  ஆவணப்படத்தில் ஓர் புரட்சி
====0000====
படம் தரவிறக்க சுட்டி;-

படத்தைப்பற்றிய  காணொளி டெட் டாட் காமிலிருந்து:-


====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Nathaniel Kahn
Produced by Nathaniel Kahn
Susan Rose Behr
Written by Nathaniel Kahn
Music by Joseph Vitarelli
Cinematography Robert Richman
Editing by Sabine Krayenbühl
Release date(s) 2003
Running time 110 minutes
Language English

கார்கோ 200 [Cargo 200 ][Груз 200] [2007][ரஷ்யா][கண்டிப்பாக18+]

ண்பர்களே!!!
இந்த படத்தைப்பற்றி எப்படி எழுத ஆரம்பிப்பது எனத்தெரியாமலே நாட்களைக் கடத்திவிட்டேன். சமகாலத்தில் நான் பார்த்த சைக்காலாஜிக்கல் த்ரில்லர் வகையரா படங்களில் இப்படத்துக்கே முதலிடம் தருவேன்.  ய ஹாண்டிங் மூவி என்பார்களே அதற்கு முழுத் தகுதியான படம்,உங்களுக்கு சைக்கோபாத் பற்றி தெரிந்திருக்கும், சோசியாபாத் பற்றி தெரியுமா?!!! படம் பார்த்து முடித்தவுடன் இயக்குனர் அலெக்ஸெய் பாலபொனோவின் அத்தனை படங்களையும் ஒரே மூச்சில் பார்க்கச் செய்யும் படைப்பு.ஒரு சாதாரண சினிமாவுக்கும் ஆட்டியர் படைக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?  என்று இந்தப்படம் பார்த்த பின்னர் புரிந்து கொள்வீர்கள். இது ஒவ்வொரு குடிமகனும் , அரசியல்வாதியும், தத்துவவாதியும்,சமூக ஆர்வலரும்,  மனோதத்துவ நிபுனரும் பார்க்க வேண்டிய படம் என்பேன்.

ன் தேசம் தவறிழைக்கும் போது அபார நெஞ்சுரம் கொண்ட படைப்பாளியால் தான் அதைத் தட்டிக் கேட்கமுடியும். அவனுக்கு வரும் அறக்கோபத்தின் வெளிப்பாடு ஒரு எரிமலையின் சீற்றத்தை விடவும் பயங்கரமாயிருக்கும், அப்படி  27டிசம்பர் 1979முதல் 15 பிப்ரவரி 1989ஆம் ஆண்டு வரையான கொடிய ரஷ்ய-ஆஃப்கன் போரின் போது ரஷ்ய மக்கள் அனுபவித்த சொல்லொனாத் துயரத்தின் ஒருசோற்றுப்பதமாக  1984 ஆம் ஆண்டின் பூலோக நரகம்- ரஷ்யா எப்படி இருந்ததுஎப்படி  இருந்தது ?!!!  என  வெடித்த ஓர் படைப்பாளியின் அறக்கோபம்  தான் இப்படம். மேலும்  இது நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபால்க்னர் 1931ஆம் ஆண்டில் எழுதிய சான்க்சுவரி[Sanctuary] என்னும் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஒப்பில்லா படைப்பும் ஆகும்.


ரு சொறி சிரங்கை குறுக்கு வெட்டு தோற்றம் செய்து பார்த்தால் நாம் சீழ், ரத்தம், அழுகிய சதைக் கோளத்தையே பார்ப்போம், அப்படிப்பட்ட மூர்க்கமான படைப்பு தான் கார்கோ200.  ஆனால் படத்தில் காட்டப்படும்  சம்பவங்கள் அத்தனையும்  கம்யூனிச ரஷ்யாவில் நடந்தவையே ஏன்?!!! இதை விட மோசமாகவே நடந்தது என்கிறார் இயக்குனர். இந்தப்படம் கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெரிவதைப்போன்ற முயற்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படம் ரஷ்ய சினிமாவின் மைல்கல் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள் பலர்.

கார்கோ 200:- பெயர்க்காரணம்- போரினால் நாயகர்கள் உருவாவதில்லை, பிணங்களே உருவாகின்றன: என்பதே இப்படம் சொல்லும் பாடம்.ஆஃப்கன் போரில் செத்து மடிந்த ரஷ்ய போர் வீரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது, சவப்பெட்டி தயாரிக்கவோ இறக்குமதி செய்யவோ நேரமோ பொருளாதாரமில்லாத கம்யூனிச அரசு , தாமதமாக துருபிடிக்கும் என்பதால் ஏசி ஷாஃப்டு  தயாரிக்கும் ஸின்க் தகடு [துத்தநாகம்]கொண்டு சவப்பெட்டி செய்தது, மேலே மூடுவதற்கு ஒரு பைன் மரப்பெட்டி. இதில் தான் செத்து மடிந்த வீரர்கள் ரஷ்யாவுக்கு பலநாட்கள்  விமானக் காத்திருத்தலுக்கு பின்னர் அனுப்பப்பட்டனர். அதைத்தான் ரஷ்யமொழியில் Gruz 200[கார்கோ 200] என்றிருக்கின்றனர் .
=====0000=====
படத்தின் கதை:-
1984ஆம் ஆண்டு, ஆஃப்கன் போரின் உச்சத்தில் கம்யூனிச ரஷ்யாவில் லெனின்க்ராட் என்னும் ஊருக்கு அருகே துவங்குகிறது படம். மிஷா [Iurii Stepanov] ஒரு தேசபக்திகொண்ட ராணுவ கர்னல், தன் கல்லூரி படிக்கும் மகள் லிசா,தன்அழகிய மனைவியுடனும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். சமூகத்தில் பார்க்கும் அனைத்துமே அவருக்கு நல்லதாகவே தெரிகிறது, ஆஃப்கன் போரே ஆஃப்கானிஸ்தானை மேம்படுத்த தான் என நம்புகிறார்.இப்போது ஏற்பட்டிருக்கும் உணவுப்பஞ்சம் கூட விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறார்.


வரது அண்ணன் ஆர்டெம் (Gromov)பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான நாத்திகம் பயிற்றுவிக்கும் பேராசிரியர். அவர் தன் தம்பியை நீண்ட நாட்கள் கழித்து வீட்டில் வந்து சந்திக்கிறார். தன் ஊரிலிருந்து உணவுப்பொருட்களை தம்பிக்கு நிறைய கொண்டு தருகிறார். மிஷாவின் பேச்சு தன் டிஸ்கோத்தே பித்து பிடித்த  மகள் லிசாவைப் பற்றியும் அவளின் காதலன் வலேர்ரி பற்றியும் திரும்புகிறது. அவன் ஆஃப்கன் போரில் பணிபுரிந்துவிட்டு இங்கே வந்து சொந்த தொழில் செய்வதாகவும், அண்ணன் ஆர்டெம் வைத்திருப்பதை விட நல்ல வேகமாய் செல்லும்  சலூன் ரக கார் வைத்திருப்பதாகவும் சொல்கிறார். 
லேர்ரி  இந்த இளவயதில் சம்பாதித்ததும் தான் இதுவரை சம்பாதித்ததும் சமம் தான் என வியக்கிறார். வலேர்ரியும் இவரின் மகள் லிசாவும் இப்போது வீட்டுக்குள் வர பரஸ்பரம் அறிமுகம் ஆகிறார்கள். பின்னர் மிஷாவின் மகளிடம் புகைப்படத்தில் இருக்கும் தன் டிஸ்கோத்தே பித்து பிடித்த கல்லூரிமகனின் போட்டோவை காட்டுகிறார் ஆர்டெம். பின்னர் பக்கத்து நகரில் இருக்கும் அம்மாவைப் பார்த்துவிட்டு தான் தன் ஊருக்கு போகிறேன் என்று அம்மா இருக்கும் லெனின்க்ராட் என்னும் ஊர் நோக்கி கிளம்புகிறார்


ழியில் ஆர்டெம்மின் , அரசு தயாரித்து விற்கும் ரியர் எஞ்சின்  ஸபரோசெட்ஸ்[Zaporozhets]  ரக கார் பழுதாகி நின்றுவிடுகிறது, மற்ற கார்களை போலல்லாமல் டிக்கி இருக்கும் இடத்தில் எஞ்சினும் எஞ்சின் இருக்குமிடத்தில் டிக்கியும் இருக்கிறது, ஆகச்சிரிப்பு தான், என்னென்னவோ கைவைத்தியம் செய்தும் சரியாகாமல் வெகு தொலைவில் தெரியும் பண்ணை வீட்டை நோக்கி நடக்கிறார். அங்கே இருளடைந்த வழியில் ஒரு விரைப்பானஆள் மோட்டார் சைக்கிளுடன் நிற்பதைப் பார்த்தவர், எனக்கு கார் பழுதுநீக்க உதவி வேண்டும் எனக் கேட்க அவன் முறைத்துவிட்டு அந்த வீடு நோக்கி கைகாட்டுகிறான். 


குறித்துக்கொள்ளுங்கள் அந்த முரட்டு ஆள் ஸுரோவ்வை [Aleksei Poluian] நாம் வாழ்வில் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்  . அவன் ஒரு சோசியாபாத், போலீஸ் அதிகாரி , ஆண்மையற்றவன், பண்ணைவீட்டுக்குள் அவனின் முன்னாள் மனைவி அண்டோனீனா ஓர் முன்னாள் சிறைக்கைதி அலெக்ஸியுடன் ஓடிவந்து குடும்பம் நடத்துகிறாள், இப்போது பிழைப்புக்கு கள்ளச்சாராயமும் விற்கிறாள்.அவளை வசமாக பழிவாங்க தருணம் பார்த்தே அனுதினமும் அங்கே வந்து காத்து நிற்கின்றான் ஸுரோவ்.


ப்போது  ஆர்டெம் பண்ணை வீட்டுக்குள் நுழைய அங்கே அங்கே முன்னாள் சிறைக்கைதியும் இந்நாள் கள்ளச்சாராய[ஓட்கா]வியாபாரியுமான அலெக்ஸி தன் இரட்டைக்குழல் துப்பாக்கியை துணிகொண்டும் ஊதியும் துடைக்கிறான். அவன் வீட்டுக்கு எந்நேரமும் வாடிக்கை குடிகாரர்கள் வந்து ஓட்கா அருந்திவிட்டும், வாங்கிக்கொண்டும் செல்வதைப் பார்க்கிறோம். ஆர்டெம் அப்படி ஒரு இடத்துக்குள் வந்து விட்டு மிகவும் மருண்டவர், அலெக்ஸியிடம் தன் காரை பழுது நீக்க உதவி கேட்கிறார். அலெக்ஸி மௌனமாக இருந்தவன், தன் வியட்நாமிய வேலைக்காரன் வரட்டும் என்கிறான், 


தற்குள் வேலைக்காரன் மது பாட்டில்களை கொண்டுவந்து வைக்க, மூவருக்கு ஊற்றுகிறான் அலெக்ஸி. மது குடித்தால் தான் காரை பழுது நீக்க உதவுவேன் என்று மிரட்டுகிறான். குடிக்கும் போதே அவர் அறிவியல் நாத்திக பேராசிரியர் என தெரிந்து கொண்டவன் அவரிடம் தனக்கு ஒவ்வாத கம்யூனிச சித்தாந்தங்கள், நாத்திகம், ஆப்கான் போர் பொது உடமை போன்றவற்றை எள்ளி நகையாடுகிறான். அங்கலாய்க்கிறான். அவருக்கோ போதை எல்லை மீறுகிறது, அவனின் பல கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாக அளிக்கிறார். அலெக்ஸியின் மனைவி இடைமறித்தவள், உனக்கு முற்றிவிட்டது, ஒழுங்காக படு என்கிறாள். அவன் கேட்கவில்லை, அலெக்ஸியின் மனைவி அண்டோனீனாவோ வியட்நாமியனை கண்டவாறு வேலைவாங்குகிறாள், அவனும் சளைக்காமல் செய்தவன், ஒருவழியாக இவரது காருக்கு வருகிறான். காரின் எஞ்சினை தேடியவன், கார்பரேட்டர் ஸ்பார்க் ப்ளக்கை கழற்றி தற்காலிகமாக ஊதித் தேய்த்து மாட்டி காரை கிளப்பித்தருகிறான். காரில் பெல்ட் வேறு மாற்றவேண்டும். வழிக்கு நிச்சயம் தாங்காது. 

நீங்கள் போகும் ஊர் மிகத்தொலைவு ஆதலால், அதிக தூரம் செல்லாதீர்கள்  கடை கிடையாது என்கிறார். போதையில் காரை அதிகதூரம் ஓட்டிச்செல்ல மனமில்லாத ஆர்டெம் தன் சகோதரன் மிஷா வீட்டுக்கே திரும்புகிறார். தன் மகள் லிசா காதலன் வலேர்ரி திரும்பி வராத மன உளைச்சலில் இருக்கிறாள் என்கிறார். நல்லவேளை மனைவி இரவு பணிக்கு போயிருக்கிறாள், என்று அண்ணனை சோஃபாவில் படுக்கவைக்கிறார். அண்ணன் வயிறுமுட்ட குடித்திருப்பதைக்கண்டு வியக்கிறார்.

ப்போது மிஷாவின் மகளின் காதலன் வலேர்ரி தான் எப்போதும் செல்லும் டிச்கொத்தேவுக்கு தனியாக செல்கிறான்.அரசால் தடைசெய்யப்பட்ட ஓர் இடத்தில் அப்படி ஒரு இளைஞர், இளைஞிகளின் ராண்டவு அது. அங்கே  உள்ளூர் கம்யூனிச பார்ட்டி தலைவரின் மகள் ஏஞ்ச்லிக்காவும் வருகிறாள் அவளுக்கு 18 வயது இருந்தாலே அதிகம், இன்னும் அவள் கன்னி தான், தன் காதலன் ராணுவத்தில் பாராட்ரூப்பர். ஆஃப்கானில் போரிட்டுக் கொண்டிருக்கிறான்,  விடுமுறையில் திருமணம். இப்போது தனிமை வாட்ட. வலேர்ரியை கண்டவள் என்னுடன் டிஸ்கோ ஆடுகிறாயா? என்கிறாள்.

வன் இதோ வருகிறேன் என ஒரு அழுக்கு கழிப்பறைக்குள் போனவன் கோக்னாக் [பிராந்தி] ஹாஃப் பாட்டில் அது, அதை அப்படியே குடிக்கிறான், அவளுடன் டிஸ்கோ ஆடுகிறான்,அவளை நான் உனக்கு ஒன்று காட்டுகிறேன் என தன் காரை காட்டி இது தீயாக பறக்கும் என்கிறான். அவளுக்கும் கோக்னாக் புகட்டுகிறான். உதட்டில் முத்தமிட்டவன், அவளை மார்பகங்களில் கைவைத்து  அழுத்தி முயங்க எத்தனிக்க,அவள் மறுக்கிறாள், திமிருகிறாள். கோக்னாக் வேறு தீர்ந்துவிட்டது, அவளை குடிக்கவைத்து பின்னர் முயங்கலாம் என திட்டமிட்டவன். ஒரு இருளடைந்த சாலையில் பயணித்து அலெக்ஸி இருக்கும் அதே பண்ணை வீட்டுக்கு வருகிறான். அங்கேயே காரில் அவளை விட்டுவிட்டு வீட்டுக்குள் போனவன் குடிகாரன் அலெக்ஸியிடம் ஓட்கா கேட்கிறான்,  நிறைய ரூபிள் தருகிறான்.  இப்போது அலெக்ஸிகும் வலேர்ரிக்கும்  நன்றாக போதை ஏறிவிட, வெளியே இருட்டில் காருக்குள் இருக்கும்  ஏஞ்ச்லிக்காவுக்கு பயமாக இருக்கிறது,இப்போது சோசியாபாத் ஸுரோவ் வேறு அவளை கார் கண்ணாடி வழியே ஆவலுடன் எட்டிப்பார்க்கிறான், இவள் பயத்தில் அலறியே விட்டாள்.


போலீஸ்காரன் ஸுரோவ்  இப்போது விலகி விட,மருண்ட ஏஞ்ச்லிக்கா தன் குதிகால் செருப்புக்களை அள்ளியவள் வீட்டுக்குள் ஓட்டமெடுக்கிறாள். அங்கே இவளை கூட்டிவந்த வெலெர்ரி மட்டையாகியிருக்க, அலெக்ஸியோ இவளை அருகே கண்டவன் மிகவும் காமுறுகிறான். அவளை விடாமல் துரத்த, அவன் மனைவி எதிர்ப்பட்டவள். ஏஞ்ச்லிக்காவை நோக்கி நீ என்ன விதைத்தாயோ அதைத்தான் அறுக்கிறாய் எனக்கூறி மிரட்டுகிறாள். உனக்கு என்ன  தைரியம் இருந்தால் இந்நாட்களில் முன் பின் தெரியாதவனுடன் புதிய இடத்துக்கு வருவாய்? !!! என்றவள் அடுப்பின் புகைப்போக்கி அருகே குளிருக்கு வாகாக மறைத்துவைக்கிறாள். கணவன் தள்ளாடியபடியே அவளை தேடிவர,அவள் பின்புறமாக ஓடிவிட்டாள் என்கிறாள். ஏமாந்தவன் போதைமிகுதியால் நாற்காலியிலேயே சரிகிறான். அவனை அவன் மனைவியும்,வியட்நாமியனும் தூக்கி கட்டிலில் தூங்கச்செய்கின்றனர்.


லெக்ஸியின் மனைவி அண்டோனீனா ஏஞ்லிக்காவை உலுக்கியவள். அவள் என் அப்பா ஒரு பெரிய கட்சித்தலைவர். அவர் தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார். என்னை எப்படியாவது வீட்டில் விட்டுவிடுங்கள். என்கிறாள். அவளோ? இப்போது நள்ளிரவு, இந்த கும்மிருட்டில் எங்கே போனாலுமே ஆபத்துதான். பின்புறம் தெரியும் மாட்டுத் தொழுவத்தை காட்டியவள்,அங்கே கன்றுபோட்ட மாடு இருக்கிறது, அதை தொந்தரவு செய்யாமல் அதன் பின்னே வைக்கோல் போர் இருக்கிறது, அங்கே சென்று ஒளிந்துகொள், நான் பின்னர் வந்து வெளியே பூட்டுகிறேன். காலையில் இந்த குடிகாரன் வெலேர்ரி எழுந்ததும் அவனுடன் அனுப்புகிறேன். என மிரட்டுகிறாள். இப்போது அவள் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு ஏஞ்ச்லிக்கா வந்துவிட்டிருக்கிறாள். அதேபோலவே ஓடிப்போய் மாட்டின் மீது விழுந்தவள் வைக்கோல் போருக்குள் பதுங்குகிறாள்.
லெக்ஸியின் மனைவி அண்டோனீனாவுக்கு எதோ பொறிதட்ட மாட்டுக்கொட்டகையில் அவளை ஒளித்து வைக்க வேண்டாம் என நினைக்கிறாள். தன் கணவனின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டவள், தொழுவத்துக்குள் சென்று ஏஞ்ச்லிக்காவை எழுப்புகிறாள். அவளை கூட்டிக்கொண்டு அருகே இருக்கும் ஒரு மதுக்கிடங்கு அறைக்குள் நுழைந்து அவளுக்கு இரட்டைக்குழல் துப்பாக்கியை கொடுத்து வெளியே பூட்டுகிறாள். இப்போது நிம்மதியாக வீட்டுக்குள் போய் தூங்கச்செல்கிறாள், இப்போது போலீஸ்காரன் ஸுரோவ் வியட்னாமிய வேலைக்காரனை கோபமாக அழைக்கிறான். அந்த அறையை திற சோதனை போடவேண்டும் என்கிறான், உள்ளே இருந்த ஏஞ்ச்லிக்கா துப்பாக்கியை காட்டி மிரட்டி,என் அப்பா ஒரு பெரிய கட்சித்தலைவர். என் காதலன் ஒரு பாராட்ரூப்பர். நெருங்காதே சுட்டுவிடுவேன் என்கிறாள்,


ஸுரோவ்வோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளிடமிருந்து துப்பாக்கியை லாவகமாய் பறிக்கிறான். ஏஞ்ச்லிக்காவை ஒருவித ஆவலோடு நெருங்குகிறான். அவள் தலையை அவிழ்த்தவன், மார்பை தடவுகிறான். அவள் பயந்து கண்மை கலைய அழுது மருண்டவள், வியட்நாமிய வேலைக்காரன் வேண்டாம், எஜமான் பாவம் என்று தடுக்கத் தடுக்க கேளாமல்,துப்பாக்கிக்கு குண்டுகள் போட்டு பின்னர் சாவகாசமாக அவனை சுட்டும் கொல்கிறான். ஏஞ்லிக்காவை நெருங்குகிறான். அவள் தான் இதுவரை கன்னி கழியவில்லை, என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்ச,துப்பாக்கியால் மிரட்டி,அவளின் பேண்டியை கழற்றச்செய்கிறான். நான்கு கால்களில் நில் என்று கட்டளையிட்டவன். ஒரு சிறிய வோட்கா பாட்டிலை எடுக்கிறான், அதைக்கொண்டு அவளை புணருகிறான். வெரோனிக்கா அலறுகிறாள். பண்ணைவீட்டுக்குள் இந்த சத்தம் கேட்டு அண்டோனீனா நெஞ்சுவெடித்து அழுகிறாள். எல்லாம் கைமீறிவிட்டது என்பது புரிகிறது.

பொழுது நன்றாய் விடிகிறது,கொடிய சோசியாபாத்உரல் [ural] ரக சைட் கார் பொருத்திய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டவன், அவளின் கையோடு விலங்கிட்டு சைட் காரில் பூட்டுகிறான். அவளுக்கு மிகுந்த உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.  குளிர் எலும்பையே துளைத்து வாட்டுகிறது என் காலணிகளை கொடு என்னை விட்டு விடு என கெஞ்ச, அவன் போய் காலணிகளை தேடி எடுத்துவந்து அணிவிக்கிறான். ஸுரோவ் வெரோனிக்காவை இப்போது தன் வண்டியை கிளப்பி ஓட்டிச் செல்கிறான். வெரோனிக்காவை கடத்திச் செல்வதை குடிபோதை தெளிந்து கண்விழித்த வெலெர்ரி ஜன்னல் வழியாக பார்க்கிறான். பின்னர் தன் புதர் மறைவில் நிறுத்தியிருந்த தன் காரை எடுத்துக்கொண்டு பேய் வேகத்தில் பறக்கிறான்.அவன் என்ன ஏஞ்ச்லிக்காவை காப்பாற்றவா போவான்?அவன் கவலை அவனுக்கு.


ஸுரோவ் போகும் வழியில் ஒரு பொது தொலைபேசியில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எண் சுழற்றி, அருகே ஓர் பண்ணை வீட்டில் வியட்நாமிய வேலைக்காரன் ஒருவன் சம்பளத் தகராரால் அலெக்ஸி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டான். என்று அனானியாக போட்டுகொடுத்து விட்டு வெரோனிக்காவுடன் அகல்கிறான். அப்போது ஒரு பாடல் பிண்ணணியில் ஒளித்து நம்மை புரட்டிப்போடுகிறது, நாம் பார்க்கும் புகைப்போக்கிகள், அழுக்கான வானம். பழைய பாழடைந்த கட்டிடங்கள், சுற்றுப்புறச்சூழல் கெட்டு அழியும் புறநகர்ப்பகுதி. பாலத்தின் மேல் செல்லும் ரயில் என மனதைப் புரட்டிப்போடும் காட்சியமைப்பு என்பேன்.


ப்போது லெனின்ஸ்க் என்னும் ஊருக்குள் நுழைகிறான் ஸுரோவ், தன்னுடைய மிகக்கேவலமான அரசு அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஏஞ்லிக்காவை அழைத்துச் சென்றவன், [இங்கே ஸுரோவ்வைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும், அவன் ஒரு சோசியோபாத் மட்டுமல்ல, தாய்பாசமுள்ள தனயன்.] ஏஞ்லிக்காவை தன் குடிக்கார அம்மாவிடம் அறிமுகம் செய்கிறான்,தன்னை விட்டுவிட்டு ஒரு ராணுவ வீரனுடன் இவள் ஓடிவிட்டாள், மனைவியை மிகவும் நேசிக்கும் நான் விடாமல் இவளை இங்கே தூக்கிவந்துவிட்டேன் பார்த்துக்கோ!!! என்கிறான். நீ எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்காதே, நீ பார்க்கும் அந்த கம்யூனிஸ்ட் பிரச்சார படங்கள் இவளுக்கு பிடிக்காமல் மீண்டும் ஓடிவிடப்போகிறாள் என்கிறான். ஏஞ்சிலிக்காவை கட்டிலில் பிணைத்து விலங்கிடுகிறான்,


ஞ்ச்லிக்கா தனக்கு மிகவும் உதிரப்போக்கு ஏற்ப்படுகிறது கழிப்பறைக்குப் போகவேண்டும் என்று சொல்ல, அவளுக்கு ஸுரோவ் பெட்பேன் கொண்டு வந்து தருகிறான். குடிக்க ஓட்கா மட்டுமே தருகிறான். சதா அவளை ஓட்கா போதையிலேயே ஆழ்த்துகிறான். தூரத்தில் தெரியும் அழுக்கடைந்த வானமும்,பாலத்தின் மேலே செல்லும் சரக்கு ரயிலும், பாலத்துக்கு கீழே செல்லும் மற்றொரு ரயிலும் ,தொலைவில் புகைபோக்கிகள் கக்கும் புகையும் நம்மை என்னவோ செய்கிறது.சோசியாபாத்தை இதுபோல எங்கும் இவ்வளவு டீட்டெய்லாக பார்த்ததில்லை.

ப்போது ஸுரோவ்வுக்கு அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வர கிளம்பிப்போனவன், பண்ணைவீட்டில் நடந்த வியட்நாமியன் கொலைக்காக அலெக்ஸியை கைது செய்கிறான், அப்போது தம்பி மிஷா வீட்டிலிருந்து தன் அம்மாவைப்பார்க்க காரில் செல்லும் ஆர்டெம் அந்த பண்ணைவீட்டை கடக்கிறார். அங்கே போலீசார் அலெக்ஸிக்கு விலங்கிட்டு இழுத்துச்செல்கின்றனர். ஆனால் இவரின் வேலைக்கு ஆபத்து என்று இறங்கி விசாரிக்காமல் போய்விடுகிறார் ஆர்டெம். தொலைக்காட்சி பார்த்து வியட்நாமியன் கொலையையும் அந்த இளம்பெண் ஏஞ்ச்லிக்கா கடத்தப்பட்டதையும் தெரிந்துகொள்கிறார். தன் சகோதரனுக்கு போன் செய்ய  அவரும் அங்கே மிகவும் பதட்டமாக பேசுகிறார், தன் கட்சித்தலைவரின் மகள் கடத்தப்பட்டதை சொல்கிறார். தன் மகளின் காதலன் வெலேர்ரியை காணவில்லை என்கிறார். அதனால் தன் மகள் மனமுடைந்திருக்கிறாள். என்கிறார். கட்சித்தலைவர் மகளை கடத்திய,  அதற்கு ஒத்துழைக்காத வேலைக்காரனை கொன்ற அலெக்ஸியை கைது செய்துவிட்டோம், விரைவில் அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார் மிஷா.


ப்போது ஆர்டெம் நினைத்தால் அலெக்ஸியை காப்பாற்ற வழியுண்டு. முதல்நாள் இரவு வெகுநேரம் ஆர்டெம் அவனுடனும் வேலைக்காரன் வெலேர்ரியுடனும் பேசிக்கொண்டிருந்ததால் இவர் சாட்சி சொல்லுவது செல்லும். ஆனால் இவரின் வேலைக்கு அது உளைவைக்கும் என்று மிகவும் அஞ்சுகிறார். அதனாலேயே மிகுந்த தெய்வ நம்பிக்கை உடைய அலெக்ஸிக்காக இவர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை.


ப்போது இந்த வழக்கு விரைந்து நடைபெறுகிறது, சோசியாபாத் கொலைகாரன் ஸுரோவ் ஏஞ்ச்லிக்காவின் கடத்தல் வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறான். சாதுர்யமாக சாட்சிகளை ஜோடித்து அலெக்ஸிக்கு மரணதண்டனையும் வாங்கித் தந்துவிடுகிறான் அவன். ஏஞ்ச்லிக்காவின் வீடு சென்று ஏஞ்ச்லிக்காவின் காதலன் ராணுவ பாராட்ரூப்பர் அவளுக்கு எழுதிய கடிதங்கள்,பிற நண்பர்கள் எழுதிய கடிதங்களை விசாரணைக்கு என்று சொல்லி அவளின் பெற்றோரிடமிருந்து வாங்கி வருகிறான்.இப்போது அலெக்ஸியின் மனைவி அண்டோனீனா நிர்க்கதியாக நிற்கிறாள், அவளை  சிறைச்சாலை வாசலில் வைத்து சந்திக்கிறார் ஆர்டெம்.மிகவும் மன்னிப்பும் கேட்கிறார். தான் மிகுந்த சுயநலத்துடன் நடந்து கொண்ட குற்ற உணர்வு தனக்கு ஆயுளுக்கும் போகாது என்கிறார். ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப்பட்டதால்  சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை போய்விட்டது என்கிறார். அண்டோனீனா மிகுந்த கவலையுடன் அங்கிருந்து அகல்கிறாள்.ப்போது தான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். கார்கோ 200 என்னும் ராணுவ வீரர்களின் பிணங்கள், இறந்தவருக்கு பெற்றோரோ, உறவினரோ இல்லாத பட்சத்தில் அந்தந்த ஊரின் போலீஸார் பொறுப்பில் தரப்பட்டு, சவ அடக்கம் செய்யப்படுகின்றன. எந்த போலீசாரும் அந்த சவ அடக்கம் செய்யும் பொறுப்பை வாங்க தயாரில்லை, என்றும் நாம் அறிகிறோம்.அதை ஏற்காது புறம் தள்ளுகின்றனர். அவர்கள் அந்த பொறுப்பை பெற்றுக் கொள்ள நிறைய பணமும் சலுகைகளும் அரசு உயர் அதிகாரிகளால் தரப்படுகின்றன. காவலர்கள் ஒவ்வொருவரும் அதீத அலட்சியமும், மெத்தனமும்  கொண்டிருக்கின்றனர்.

ப்படி சோசியோபாத் ஸுரோவ்வுக்கும் இன்று விமானத்தில் கார்கோ 200  வருகிறது. உயரதிகாரிகளின் கெடுபிடிகள் கெஞ்சல்களுக்கு பின்னர் வேண்டா வெறுப்புடன் ஸுரோவ் விமானநிலையத்தின் சரக்ககம் செல்கிறான். அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஆஃப்கானிஸ்தானுக்கு போர் செய்யச் செல்ல விமானம் ஏற குழுமியிருக்கின்றனர். அங்கே அப்போது விமானம் வந்துவிடுகிறது. அதிலிருந்து மொத்தம் ஆறு கார்கோ200 சவப்பெட்டிகள் இறக்கப்படுகின்றன, அதே விமானத்தில் காத்திருந்த ராணுவ வீரர்கள் மந்தை ஆடுகள் போல ஏற்றப்படும்  ஹைக்கூ கவிதை போன்றதோர் காட்சியை நாம் பார்க்கிறோம். யாரும் தவறவிடக்கூடாத காட்சியது.

படத்தின் ஒரு காட்சிக்கான காணொளி யூட்யூபிலிருந்து:-
  
                                                                                                                                 
ந்து இறங்கிய சவப்பெட்டிகளில்  திசைக்கு ஒன்றாக ஏற்றப்படுகிறது, ஸுரோவ்வின் வேனில் ஒரு சடலம் ஏற்றப்பட அது ஏஞ்ச்லிக்காவின் காதலன் சுக்கீனாவின் சடலம் என்று, ஆவணங்கள் மூலம் ஸுரோவ் அறிகிறான். மிகவும் கொண்டாடுகிறான்,அந்த சவப்பெட்டியை கொண்டு சென்று தன் வீட்டில் வைத்தவன். அந்த பைன் மரப்பெட்டியை தன் உதவிகாவலர்களை கொண்டு திறக்கச்செய்கிறான், பின்னர் அந்த துத்தநாக தகரப்பெட்டியை உளி வைத்து பிளக்கிறான்.அங்கே அந்த ராணுவவீரனின் பிணத்தின் சட்டையில் குத்தியிருக்கும் தங்கப்பதக்கத்தை பிய்த்து எடுக்கிறான். பின்னர் அந்த பிணத்தை தூக்கிச் சென்று ஏஞ்ச்லிக்காவின் கட்டிலில் போடுகிறான், வெடித்து அலறுகிறாள் ஏஞ்ச்லிக்கா. இனிமேல் அவன் உனக்கு திருப்தி தரமுடியாது,அதற்கு நான் வழி செய்கிறேன் என்றுவிட்டு வெளியேறுகிறான். தன் தொலைக்காட்சி பைத்தியமான அம்மாவிடம் அவளின் புதிய காதலன் சுக்கீனோ இறந்துவிட்டான், ஆகவே இனி ஏஞ்ச்லிக்கா எனக்குத்தான் என்று கொக்கரிக்கிறான்.
ப்போது ஸுரோவ்வின் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருத்தி தன் கணவன் குடித்து விட்டு தன் மண்டையை உடைத்துவிட்டான் ,கதவை உள்ளே தன் நண்பர்களுடன் பூட்டிக் கொண்டிருக்கிறான் என போனில் புகார் தர, அங்கே வருகிறான் ஸுரோவ்.கதவை உடைத்து ஸுரோவும் அவன் உதவியாளர்களும் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.அங்கிருந்த குடிகாரக்கணவன் ஏண்டா பன்றிகளா!!!, நான் நேற்று வேலைக்குப்போய் சம்பாதித்த பணத்தைக்கொண்டு இன்று என் நண்பர்களிடம் குடிக்கிறேன்.சூதாடுகிறேன்,அத்ற்கு எனக்கு உரிமையிருக்கிறது. என்று பாய்கிறான், ஸுரோவ் அவனை வலது புஜத்தில் சுடுகிறான். இப்போது மனைவி பாய்ந்து வந்து ஸுரோவை ஏசியவள் கணவனை தேற்ற, உன் கணவனை அடித்தே  கொன்று விடுவென் என்று சொல்லி கூட்டிச்செல்கிறான்.

வனைத் தன் வீட்டுக்கு கூட்டிவந்த ஸுரோவ் அந்த குடிகாரக்கணவனைக் கொண்டு கட்டிலில் விலங்கிடப்பட்டிருக்கும் ஏஞ்ச்லிக்காவை பின்புறமிருந்து புணரவிடுகிறான்.அருகே நாற்காலியில் அமர்ந்து அதை வெறியுடன் பார்க்கிறான்.இதைக்கூட ஏஞ்ச்லிக்காவுக்கு உதவவே தான் செய்வதாக நம்புகிறான்.அவளை திருப்திப்படுத்த தன்னால் முடிந்த குரூரமான வழிமுறைகளை பிரயோக்கிக்கிறான்.அதுதான் அங்கே விந்தையே.ஆனால் ஏன்ச்லிக்காவுக்கு தான் செய்யும் எந்த உதவியும் மகிழ்ச்சியளிக்கவில்லை எனத் தெரிகையில் அவன் சொல்லமுடியாத வேதனை அடைகிறான். உள்ளே இதெல்லாம் நிகழ்கையில் வெளியே அவன்  அம்மா எந்த கதறல் சத்தமும் தனக்கு கேட்காதது போல எதையோ கொரித்துக்கொண்டே சோவியத்தின் எஸ்ட்ரடா என்னும் வெரைட்டி ஷோக்களையும் அரசியல் சார் பிரச்சாரபாடல்களைய்ம் மிக ஆவலாய் தொலைக்காட்சியில் பார்க்கிறாள். இப்போது அந்த குடிகாரக்கணவனை சுட்டுக்கொல்கிறான் ஸுரோவ். வெளியே வந்தவன் அம்மாவிடம், ஏஞ்ச்லிக்கா இப்போது வந்தவனை விரும்பவேயில்லை, இன்னும் அந்த பாராட்ரூப்பரைத்தான் விரும்பிகிறாள் என்கிறான்,விசும்புகிறான்.ன் ஊருக்கு வந்த ஆர்டெம் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்.மனைவி லேனா இவரை சந்தேகப்படுகிறார், அவருக்கு பிற பெண் தொடர்பு  ஏதும் இருக்கிறதா?   என்று இவரையே கேட்கிறார். தன் மகன் ஸ்லேவா, இன்று இரவு வரமாட்டேன், விருந்துக்குப் போகிறேன் என்று சொல்ல, உனக்கு நாளை கல்லூரி இருக்கிறது,போகாதே என்கிறாள். அவன் பெற்றோர் பேச்சைக் கேட்டால் தானே?!!!


ப்போது ஆண்டனீனா தன் பண்ணைவீட்டுக்கு வந்தவள் மண்ணில் தான் புதைத்து வைத்திருக்கும் மக்கிய கோணிபோட்டு சுற்றிய குழல் துப்பாக்கியையும், ரவைகளையும் எடுத்து ஒரு கைப்பெட்டியில் போடுகிறாள் ,தன் முன்னாள் கண்வன் ஸுரோவ்வின் வீடு இருக்கும் இடம் செல்ல பேருந்து ஏறுகிறாள்.இப்போதும் நாம் தூரத்தில் அழுக்கேறிய எண்ணெய் டாங்குகள் இணைக்கப்பட்ட சரக்கு ரயிலைப்பார்க்கிறோம்.பிண்ணணியில் மீண்டும் அந்த பாடல் ஒலிக்கிறது.


ப்போது அலெக்ஸியை பார்க்க யாரோ சிறைக்குள் வந்திருப்பதாக சொல்லி ஸுரோவ்வின் உதவியாளர்கள் அவனை தனியாக கூட்டிச் வருகின்றனர் , காரிடாரில் நடந்து வருகையில் அலெக்ஸி எதிர்பாரா வண்ணம் அவனை பின்னந்தலையில் சுட்டு சாகடித்துவிட்டும் அகல்கின்றனர். அவர்கள் அகன்றதும் அங்கே மருத்துவன் ஒருவனுடன் வந்த ஏஞ்ச்லிக்காவின் தந்தை அலெக்ஸி இறந்ததை அந்த மருத்துவன் உறுதிப்படுத்த  சினம் ஆறுகிறார்.அவரால் நீதிபதி சொன்ன மரணதண்டனை  தேதி வரை பொறுக்கமுடியாத கோபம் அவர் கண்ணில் நாம் பார்க்கிறோம்.

ப்போது ஏஞ்ச்லிக்காவுக்கு அருகே அவளின் காதலன் சீருடையுடன் படுத்திருக்க,அவளின் அருகே அந்த குடிகாரனின் அழுகிய பிணம், முதுகில் துப்பாக்கி குண்டு துளைகளுடன் படுத்திருக்க, கதறிக்கொண்டிருக்கும் ஏஞ்ச்லிக்காவுக்கு அவளின் காதலன் ஆஃப்கானிஸ்தானின் போர்க்களத்திலிருந்து  எழுதிய கடிதங்களை அருகே நாற்காலி போட்டு அமர்ந்து  மூக்குக்கண்ணாடி அணிந்து குரூரமாக வாசிக்கிறான். வெறுப்பேற்றுகிறான். அருகே அந்த குடிகாரன் பிணம் புறமுதுகு காட்டி முதுகு முழுக்க தோட்டா துளைகளுடன் இருக்கிறது. ஏஞ்ச்லிக்கா அருகே படுத்திருக்கும் அவள் ராணுவ வீரனான காதலனின் பிணம். அந்த கடிதம் வாசிக்கும் நீண்ட காட்சி மிக முக்கியமானது என்பேன்.  அந்த கடிதங்கள் வாசிக்கப் படுகையிலேயே நமக்கு அந்த ஆஃப்கானிஸ்தான் போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் மனக்கண்ணில் ஓடுகின்றன. வீடு முழுக்க பிண அழுகல் நாற்றம். கொழுத்த ஈக்கள் பிணத்தை மொய்த்து சுற்றுகின்றன,


வெளியே அம்மா தொலைக்காட்சி பார்க்கிறாள். அந்த பின்புறம் திறந்து கிடக்கும் தொலைக்காட்சிப்பெட்டியின் திரையில் கூட ஈ மொய்க்கிறது. இப்போது வெளியே அழைப்பு மணியடிக்க ஸுரோவ்வின் அம்மா திறக்கிறாள்,வெளியே ஆண்டனீனா நிற்கிறாள். உன் மகன் எங்கே எனக்கேட்டவளுக்கு அதோ அறையில் அவன் மனைவியுடன் நிற்கிறான் என்கிறாள்,உள்ளே வந்தவள் துப்பாக்கிக்கு ரவையை போட,அவன் அம்மா கோப்பையில் மதுவை ஊற்றிக்கொண்டு மீண்டும் தொலைக்காட்சி முன் உட்காருகிறாள்.


ப்போது சட்டென கதவைத்தள்ளி உள்ளே சென்றவள் ஸுரோவ்வை சுட, அவன் பறந்து போய் தரையில் விழுகிறான்.ஏஞ்ச்லிக்கா இவளைப்பார்த்து என்னை காப்பாற்றுங்கள், எனக்கதற, அவள் மௌனமாக வெளியேறுகிறாள். விலங்கிட்ட கையுடன் ஏஞ்ச்லிக்கா கட்டிலிலிருந்து கீழே குதித்து அழுகிறாள், அங்கே அறைக்குள் இவள் காதலித்த ஒருவன் ,இவளை காதலித்த  இருவரின் பிணங்கள்.எதோ ஒரு விதத்தில் மூவருமே காதலர் தாம்.  இப்போது ஜன்னலின் வெளியே மீண்டும் அந்த அழுக்கு சரக்கு ரயில் போய்க்கொண்டே இருக்கிறது. ஸுரோவ்வின் அம்மா அசராமல் தொலைக்காட்சியில் சட்டசபைப் பிரசங்கம் பார்க்கிறாள்,அங்கே பிரதம மந்திரி Vitaly Vorotnikov சட்ட சபையில் பேசி முடிக்கிறார்.


ப்போது ஆர்டெம் ஒரு தேவாலயத்துக்குள் செல்வதைப் பார்க்கிறோம், அங்கிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியிடம் நான் கிருஸ்துவனாக மாற என்ன விதிமுறைகள்  செய்யவேண்டும் என அப்பாவியாக கேட்கிறார், அவள் விதிமுறைகள் அல்ல விழாக்கள்  செய்ய வேண்டியிருக்கும்.அங்கே மதபோதகர் வரும் வரை காத்திருக்கப் பணிக்க,ஆர்டெம் அங்கே சென்று அமர்கிறார்.இப்போது லெனின்கிராடின் ஒரு உள்ளூர் டிஸ்கோத்தே கிளப்பில் ஆர்டெம்மின் மகன் ஸ்லேவா உற்சாகமாக குழுவினருடன் பாப் இசைப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கிறான். அருகே அதே வெலேர்ரா தென்பட்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். டிஸ்கோ முடிந்தவுடன் அவனுக்கு தான் மது வாங்கித் தருகிறேன் என்றவன். வெளியே அழைத்துப் போகையில் இந்நாட்களில் ஒரு கேஸ் பீருக்காக இளம் பெண்கள் வலிய வந்து விருந்தாகிறார்கள், அப்படிப்பட்ட இளம்பெண்களை சுகிப்பதற்க்கு ஆயிரம் ஆயிரமாக பணம் தர தன்னிடம்  வாடிக்கையாளர்கள் உள்ளனர், உள்ளூர் வாசியான நீ மட்டும் என்னுடன் ஒத்துழைத்தால் சமூகத்தில் நாம் மிகநன்றாக வரலாம் ,  ஈசி மனி செய்யலாம் என்கிறான்.


பிண்ணணியில் இன்னும் அந்தப்பாடல் ஒலிக்க, இவையெல்லாம் நிகழ்ந்தது 1984ஆம் ஆண்டின் பிற்ப்பாதியில் எனப்போடப்பட்டு படம் முடிகிறது. இவ்வளவு தத்ரூபமாக சமூக அவல நிகழ்வுகளை எந்தப்படமும் சொன்னதில்லை. நிச்சயம் ஒவ்வொரு உலகசினிமா ரசிகனும் வாழ்வில் காணவேண்டிய திரைப்படம். இந்தப்படத்தை ஒருவர் மிஸ் செய்யவே கூடாது என்பேன்.
=====0000=====
படத்தை தரவிறக்க சுட்டி:-படத்தில் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Aleksei Balabanov
Produced by Sergei Selyanov
Written by Aleksei Balabanov
Starring Agniya Kuznetsova, Leonid Bichevin, Aleksei Poluyan, Leonid Gromov, Aleksei Serebryakov
Distributed by Soyuz-Video
Release date(s) 2007
Running time 89 minutes
Language Russian
English

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)