கட்டுமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பைசா கோபுரத்தின் கரைந்த படிகள்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள், சுற்றுலா பயணிகள் தான் இங்கே கரைப்பார், இத்தாலியின் உலக அதிசயம் பீஸா நகரின் சாய்ந்த கோபுரத்தின் மணிக்கூண்டின் 294 பளிங்கு படிகளும் இப்படி கரைந்து போய் தான் உள்ளது,4° பாகை சாய்வு மட்டுமே அதன் குறையல்ல, இது போல பல குறைகள் கொண்டது தான் பீஸா கோபுரம்.

தில்லி பிரகதி மைதானில் இடிக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் பெருமைமிகு மூன்று கட்டிடங்கள் பற்றி அறிவோம்

2023 மே மாதம் பிறந்தால் இந்தியாவின் பெருமை மிகுந்த நவீன கட்டிடக்கலையின் அம்சமான மூன்று 
கட்டிடங்கள் அதன் அருமை தெரியாமல் இடிக்கப்பட்ட நிகழ்வு நடந்து ஐந்து வருடங்களாகிறது,

புகழும் மக்கள் செல்வாக்கும் மிகுந்த  நல்ல குடிமகனை ஊரறிய தூக்கில் ஏற்றிக் கொன்றதற்கு ஒப்பான அவலத்தை இங்கு எழுகிறேன், இது செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு தருவது போன்றதே,ஆனாலும் இதை யாரேனும் அறியாதவர் அறியட்டும் என எழுதுகிறேன் .

பாரீஸுக்கு ஐஃபிள் டவர் எத்தனை பெருமையோ தில்லிக்கு இந்த பிரகதி மைதானின் இந்த மூன்று  பரீட்சார்த்த கட்டிடங்கள் அத்தனை முக்கியம், உலகின் மிகப் பெரிய brutalism பாணி காங்க்ரீட் முக்கோணச் சட்டக இழுவிசை உத்திரங்களைக் (space frame tensile structures ) கொண்ட கட்டிடங்கள் இவை.

1.Hall of Nations (சர்வதேச கண்காட்சி அரங்கு)

2.Nehru Pavilion (நேரு கண்காட்சியம் அரங்கு )

3.Hall of Industry (தொழில்துறை கண்காட்சி அரங்கு )

சுதந்திர இந்தியாவின் கால் நூற்றாண்டு பயணத்தை அகில உலகிற்கும்  அறிவிக்கும் வண்ணம் இந்த கட்டிட வளாகம் 3 நவம்பர் 1972 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது, இந்தியாவின் முக்கியமான கட்டிடக்கலைஞர் ராஜ் ரிவால் (raj rewal) அவர்கள் மற்றும் இந்தியாவின் முக்கியமான கட்டிட பொறியாளரான மகேந்திர ராஜ் ஆகிய இருவரின் நொலைநோக்கு பார்வையில் உருவான பிரம்மாண்டமான பரீட்சார்த்த முயற்சி இது, 

பெரிய கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் எந்த நவீன உபகரணங்கள் இல்லாமல் கிடைத்தவற்றைக் கொண்டு இத்தனை பிரம்மாண்டம் வரவழைத்துக் கட்டப்பட்டது.

இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப இந்த பெருமைமிகு கட்டிட வளாகத்தை கட்டிடக்கலைஞர் ராஜ் ரிவால் அவர்கள் வடிவமைப்பு போட்டியில் வென்று வடிவமைத்து கட்டுமானம் செய்கையில் அவரின் வயது 36,செயற்கரிய சாதனையை செய்திருந்தார் அவர்.

தில்லியின் ஹூமாயூன் சதுக்கத்தில் இருந்து உந்துதல் பெற்று இந்த வடிவமைப்பு நிகழ்ந்தது, சமமற்ற ஆனால் சமச்சீரான எண்கோணத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 3.4மீ விட்டம் கொண்ட நெடுவரிசைகள் போன்ற எண்கோண வெற்று வட்ட வடிவ தண்டின் மீது 22மீ உயரமும், தெளிவான இடைவெளியும் 44மீ. கொண்ட ஒரு மைய மண்டபமாக இது அமைந்திருந்தது.
இந்த அமைப்பு Cast-in-situ RCC ஸ்லாப் மற்றும் 50 செமீ விட்டம் கொண்ட 408 எண்ணிக்கையிலான  Cast-in-situ கான்கிரீட்  இழுவிசை கிராதிகள்மீது நிறுவப்பட்டது.

இக்கட்டுமானத்தில் ஏறத்தாழ 4,380 கன சதுர மீட்டர் காங்க்ரீட் பயன்படுத்தப்பட்டது, 750 மெட்ரிக் டன் வலுவூட்டப்பட்ட எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டது, இன்று இது போல பரீட்சார்த்த கட்டிட வளாகம் கட்ட வேண்டும் என்றால் 3000 கோடி இந்திய  ரூபாய் திட்ட மதிப்பு வரும்.

உதாரணத்துக்கு சொன்னால் எளிமையின் அழகியல் பிரம்மாண்டத்தை பறைசாற்றிய கட்டிட வளாகம், பூச்சு வேலை அற்ற இழுவிசை கிராதிகள் ,ஆனால் 45° பாகைக்கு shuttering செய்ததில் அத்தனை துல்லியம், precast என்ற ready made தொழிற்நுட்பம் இன்றி கைகளால் கலவை கலந்து , பாகை திருத்தி கொரடு கொண்டு வரைபடங்களுக்கேற்ப  கம்பி வளைத்து சாரம் மரப்பலகங்கள் அடித்து வார்த்து காங்க்ரீட் கலந்து நிரவி 18 மாதங்களில் கட்டப்பட்டது, எப்படி எகிப்து  பிரமிடின் துல்லியம் தொலைவில் போகப்போக தெரியுமோ? அப்படி இந்த கைத்தறி பாணி பிரம்மாண்ட கட்டிடத்தின் நேர்கோடுகளை 0°, 45° துல்லியத்தை நேர்த்தியை, தொலைவில் போகப்போக ஒருவர் உணரலாம், அருகில் நெருங்கிப் பார்க்க சொரசொரவென காதி உடையில் தறிப்பிசிறுகள் போல மரப்பலகம் அடித்து வார்த்த தோற்றநயத்தை (texture) காணலாம்,

உள்ளது உள்ளபடி அழகு என்ற உயரிய ரசனை கோட்பாடின் படி உருவான ஒப்பற்ற கட்டிட வளாகம், அதன் மேன்மை, ரசனையை அறியாதவர்களால் குற்றம் சாட்டப்பட்டு தரைமட்டமானது துயர வரலாறு.

நேருவின் அருங்காட்சியம் ஒரு மக்கள் தலைவரின் அருங்காட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கிணங்க வடிவமைப்பட்டது, 

ஆட்சி மாறுகையில் காட்சி மாறும் என்பதற்கிணங்க மே 2014 மத்தியில் ஆட்சி மாறியதும்  நெடுநாள் நிலுவையில் இருந்த  நீதிமன்ற தீர்ப்பு கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு  எதிராக பேரிடியாக வந்தது, மேல் முறையீட்டுக்கு இடமின்றி ஒரு வார காலத்தில் இடித்து அழிக்கப்பட்டது.

சண்டிகருக்கு அடுத்து காங்க்ரீட்டில் பிரம்மாண்டமான பரீட்சார்த்தங்கள் செய்து புணைந்த முயற்சி, இந்த பிரம்மாண்டத்தை உணர இந்த கண்காட்சி வளாகத்தின் நிலத்தின் பரப்பளவை ஒருவர் அறிந்தால் போதும் ,150 ஏக்கர் (~ 625,000 சதுர மீட்டர்) காங்க்ரீட் கூரை போர்த்திய பரப்பளவு 9500 சதுர மீட்டர்(102200 சதுர அடி).

சமகால கட்டிடக்கலையின் அதிசயம் கட்டிடக்கலை படிக்கும் மாணவர்கள் தவறாமல் தங்கள் ஐந்து வருட கல்விக்காலத்தில்  அகில இந்திய சுற்றுலாவின் போது சென்று வந்த முக்கியமான கட்டிடம்,கட்டிடக்கலை பயிலும் கடைசி   ஐந்து வருட மாணவர்கள் மட்டும் தடவிப்பார்த்து கண்டுகளிக்காமல் போன சமகால நவீன கட்டிடக்கலையின் அதிசயம்.

இணைப்பில் படங்கள் ஒவ்வொன்றாக பார்த்து இந்த அருமை புரிந்து கொள்ளாமல் இடிக்கப்பட்ட பெருமைமிகு கட்டிட வளாகத்துக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறேன்.

சண்டிகர் சட்டசபை நுழைவாயில் கதவு

இன்று கட்டிடக்கலையில் AI என்ற Architectural Intelligence புகுத்தி நினைத்துப் பார்க்கவே தயங்கும் வடிவமைப்புகளை செய்கிறோம், அத்தகைய பிரம்மாண்டங்களை 60 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திர இந்தியாவில் செய்தனர்.

சண்டிகர் முழுக்க பரீட்சார்த்தம் , அதுவும் துணிவு மிக்க பரீட்சார்த்த பாணி கட்டிடக்கலையை ஃப்ரெஞ்சு கட்டிடக்கலைஞரும் நகரவடிவமைப்பாளருமான 
Le corbusier மற்றும் Pierre Jeanneret இணைந்து இழைத்து இழைத்து வடிவமைத்தனர், இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களின் பஞ்ச சீலக் கொள்கையை உள்வாங்கி அதன் அம்சங்களை பிரதிபலித்தனர்.

இந்த சட்டசபை கட்டிடம் 2016 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இதை அருமை தெரியாமல் இடித்து தள்ளுவது என்பது கனவிலும் நடக்காது.

இந்த சட்டசபை நவீன இந்திய கட்டிடக்கலையின் பெருமை எனலாம், சட்டசபை நீளம் அகலம் உயரம் என அனைத்தும் அதி பிரம்மாண்டத்தை பறைசாற்றுகிறது, சட்டசபை கூடாத நாட்கள் முழுக்க கட்டிடக்கலை பயிலும் மாணவர்கள் கல்வி சுற்றுலா வந்து ஆராயும் இடமாக உள்ளது.

சட்டசபை unfinished creative work அல்லது brutalism பாணியில் RCC கொண்டு cast in situ பாணியில் ஆர அமர ரசித்து உருவாக்கப்பட்டன, புருவமுயர்த்தும் விகிதாசாரம் கொண்டவை, காங்க்ரீட் மேலே ஆங்காங்கே உபயோகித்த வண்ணங்கள் அதிரவைப்பவை.

இந்த சட்டசபையின் கதவு pivot door, நடுநிலையான மேலும் கீழுமான  கீல்களில் பலநூறு கிலோ எடையை தாங்கி நிற்கிறது என்றால் நம்ப முடியாது.

சட்டசபை கோட்டை வாயிலின் பிரதான பிரம்மாண்ட நுழைவாயிலின் கைப்பிடி துவங்கி ஒவ்வொன்றையும் தனித்துவமாக மிகச்சிறப்பாக Le Corbusier வடிவமைத்தார், இந்தியாவில் அவர் தங்கி இருக்கையில்  கவனித்த விஷயங்களை தொகுத்து கதவில் இரு புறங்களிலும் வரைந்தார், நுழைவு வாயிலின் மேல் பாதி சூரியனின் திசையையும் இயக்கத்தையும் சித்தரிக்கிறது.

இந்த பிரம்மாண்டமான கதவு 8 மீட்டர் (26 அடி ) நீளம் , 8 மீட்டர் உயரம் , 0.3 மீட்டர் (1அடி )அகலம் கொண்டது, பரப்பளவில் 64 சதுர மீட்டர் (688 சதுர அடி ) கொண்டது, ஒரு 2BHK அடுக்ககத்தின் பரப்பளவு),இந்த 55 பலகங்கள் ஒவ்வொன்றும் பிரத்யேகமாக ஃப்ரான்ஸில் உள்ள Le corbusier ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான ஓவியமாக தீட்டப்பட்டு  இங்கு  விமானத்தில் கொண்டு வந்து ஒருசேரப்பிணைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது, 

ஒரு இந்தியாவின் புதிய மாநிலத்துக்கு  ஐரோப்பிய வடிவமைப்பாளரை அமர்த்தி  அவருக்கு முழு கலை சுதந்திரம் நம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் தரப்பட்டது, பிரம்மாண்ட கோட்டை கோட்டை வாசல் கதவை சட்டசபை வடிவமைப்புக்கு கட்டியம் கூறும் வண்ணம் அதிநவீனமாக வடிவைத்து நிர்மாணித்தார் 
Le corbusier அவர்கள்.

இக்கதவு துடிப்பான வண்ணங்களால் காண்போர் வியப்பூட்டும் படி உருவாகியுள்ளது, கதவு மேல் மற்றும் கீழ் பகுதிகளாக அழகாக பிரிக்கப்பட்டுள்ளது.  
மேல் பாதியானது இந்த பிரபஞ்சத்துடனான மனிதனின் உறவை சித்தரிக்கிறது , 
சூரிய பயணத்தின் வருட சங்கராந்தி, சந்திர கிரகணங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் ஓவியங்கள் மேலடுக்கில் காணலாம்.  கீழ் அடுக்கில்  விலங்குகள் ,  இயற்கை வடிவங்கள் உள்ளன.  ஒரு பாலைவனத்தின் சூழல்,  பசுமைசோலையின் சூழல், நதி, மரங்கள், காளைகள் மற்றும் ஆமையை சித்தரிக்கிறது, மேலும் கதவின் மையத்தில் உள்ள போதி மரம் ஞானக்கனிகளைத் தருகிறதாக கதவை வடிவமைத்திருந்தார் Le corbusier அவர்கள்,

60 வருடங்களை நெருங்கும் பிரம்மாண்டம், இன்னும் காண்போருக்கு , வியக்கவும் கற்கவும்,  விஷயம் பொதித்து வைத்து இருக்கும் பிரம்மாண்டம் சண்டிகரின் நகர அமைப்பு, அதன் சட்டசபை, அதன் அரசு கட்டிடங்கள் என ஒவ்வொன்றும்.

அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவர் வடிவமைத்த யஹ்யா மெர்சண்ட் மற்றும் நாடோடிக்காற்று திரைப்படம்

அமீரகத்தில வேலை பார்க்கையில் வேலைமீது ஓவர் பில்டப் தரும் நபர்களை மலையாளிகள் பாவனாயி என்று கிண்டல் செய்வதை கவனித்துள்ளேன்,தமிழில்
 "கதாநாயகன்" பார்த்தவர்கள் ஒருமுறை மூல வடிவமான நாடோடிக்காற்று (1987) பாருங்கள்,ஒரு க்ளாஸிக் என்பதன் அர்த்தம் அறியலாம் .

நாடோடிக்காற்றில் சிரிப்பு ஓவர்பில்டப் வில்லன் பாவனாயி  கதாபாத்திரம் உலகெங்கும் மலையாளிகளிடம் அப்படி புகழ்பெற்றது, 

அது போலவே சிரிப்பு ஃப்ராடு கஃபூர் இக்கா (மாமுக்கோயா) கதாபாத்திரம் உலகெங்கும் மலையாளிகளிடம் அப்படி புகழ்பெற்றது.

கள்ளத்தோணியில் கொச்சினில் இருந்து துபாயில் செல்ல முயன்று மெட்ராஸில் இறக்கிவிடப்பட்ட மோகன்லாலும் சீனிவாசனும் வில்லன் திலகனின் கடத்தல் தொழிலுக்கு தங்களையும் அறியாமல் அத்தனை குழப்பமும் நஷ்டமும் விளைவிப்பர், அந்த இரு வேலையில்லா பட்டதாரிகளை கொல்ல பம்பாயின் புகழ்பெற்ற பெய்ட் கில்லரான பாவனாயியை (இயற்பெயர் பி.வி.நாராயணன் ) (கேப்டன்ராஜ்) பெரும்பணம் தந்து தருவிப்பார் திலகன், பாவனாயி பெட்டியில் வில் அம்பு, மலபார் கத்தி, RDX பாம்ப், டேப்ரிக்கார்டர் பாம்ப், துப்பாக்கி என அனைத்தும் profesional ஆக வைத்திருப்பார், இவரும் திலகனும் கொலைசதிக்கு திட்டம் தீட்டுகையில் சிரிப்பு சரவெடியாக இருக்கும்.

மோகன்லால் காய்கறி விற்கும் தள்ளு வண்டியில் RDX பாம்ப் வைப்பார் பாவனாயி, அதில் தப்புவார் மோகன்லால்.

இரண்டு நாள் தான் கான்ட்ராக்ட் தந்த  அபாயின்மெண்ட் என்பதால் அடுத்து சீனிவாசனை கொல்ல விழைவார் பாவனாயி ,இசை அமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு ஒருவர்  டேப்ரிக்கார்டரில் குண்டு வைத்து தபாலில்  அனுப்பி அவர் இயக்கியதும் வெடித்ததே அதே டெக்னிக்கில் சதி செய்வர் , இங்கே சாலையில் அனாதையாக இருந்த டேப்ரிக்கார்டரை பார்த்ததும் அதை ஆன் செய்யாமல் கொண்டு போய் அடகு வைக்க மார்வாடி கடைக்கு செல்வார் சீனிவாசன், பாவனாயிக்கு மார்வாடி கடையில் வெடித்தால் விபரீதம் என்பதால் கடைவாசலில் வைத்து தன் கையாளை வைத்து பெரும் பணம் தந்து டேப்ரிக்கார்டரை திரும்ப வாங்கி வருவார்.

இறுதியாக இருவரை சர்கிள் இன்ஸ்பெக்டர் அழைத்ததாக ஆள்விட்டு அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவருக்கு வரசொல்லி, பெட்டியை திறந்து காட்டியவர் எப்படி சாக ஆசைப்படுகிறீர்கள் என்பார், 

அங்கே 12 ஆவது மாடியில் சண்டை நடக்கையில் இவர்கள் மீது பாய்கிறேன் என்று கைப்பிடி கம்பியில் பாய்கையில் குறிதவறி தரையில் விழுந்து இறப்பார் பாவனாயி .

1987 ஆம் ஆண்டு அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவரின் படங்களைப் பாருங்கள், அந்த கல்வெட்டு மீது கூட நம் ஆட்கள் எப்படி கைவரிசை காட்டி உள்ளனர் பாருங்கள், இந்த கோபுரத்தை வடிவமைப்பதற்கு முன் அகில இந்திய அளவில் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டது, அதில் வென்றவர் இந்தியாவின் பழம்பெரும் கட்டிடக்கலைஞரான காலஞ்சென்ற திரு. யஹ்யா மெர்சண்ட் (Yahya Merchant) (1903-1990)ஆவார், மும்பையின் சர்JJ காலேஜ் ஆஃப் ஆர்கிடெக்சர் என்ற பெருமைமிகு கல்லூரியில் பயின்றவர். அவரது பெருமைமிகு தனித்துவமான படைப்புகள்,  பொதுகட்டிடங்கள்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நவீன இந்திய கட்டிடக்கலைக்கு பெருமை சேர்ப்பவை, 

இந்த விஸ்வேஸ்வரையா கோபுர வடிவம், துபாயின் புர்ஜ் அல் அராப் கட்டிட வடிவத்தின் முன்னோடி எனலாம், காரணம் புர்ஜ் அல் அராப் கட்டிடத்தின் படத்தை முதலில் 2000 ஆம் ஆண்டு ஒரு காலண்டரில் பார்க்கையில் நம் விஸ்வேஸ்வரையா டவர் தான் நினைவுக்கு வந்தது, வளைவான structural spines நிறுவி  மொத்த தளங்களை தாங்கிப்பிடிப்பது இரண்டு கட்டிடங்களும் கொண்ட ஒற்றுமை, anna nagar tower ல் ஐந்து  structural spine இருக்கிறது , burj al arab ல் நான்கு  structural spine இருக்கிறது . Quaid-e-Azam Mausoleum நினைவுச் சின்னத்தை வடிவமைத்தவர் யஹ்யா மெர்சண்ட்.

1968 ஆம் ஆண்டு மக்கள் உபயோகத்துக்கு 60 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்ட தொலைநோக்கான கட்டிடக்கலையைக் கொண்ட நூறடி உயர கோபுரம், எப்படி சுவற்றில் பெயர்களை எழுதி கிறுக்கி வைத்திருக்கின்றனர் பாருங்கள் நம் மக்கள், கல்வெட்டில் ஆர்கிடெக்ட் பெயரைக் கூட அவரின் மேன்மை அறியாமல் மார்க்கரால் மெழுகி தன்பெயரை எழுதி வைத்திருந்தனர் என்று இணைப்பு படம் ஒவ்வொன்றாக பாருங்கள், நான் முதலில் 1998 ஆம் ஆண்டு செல்கையில் இன்னும் கோரமான வசைகள் சுவர்களில்  எழுதி இருந்தது, இன்று பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முழுக்க கிரில்களால் மூடி சுவர்களில் கலை வேலைபாடுகள் செய்து புதிய தரை வேய்ந்து சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் திறந்துள்ளனர், இனியாவது மக்கள் கிறுக்க கொண்டுவரும் கரிக்கட்டிகள் பென்சில்கள் கைப்பற்றப்பட வேண்டும்.இனி ஒரு மாமாங்கம் இந்த கோபுரத்தை பூட்டி வைக்கும் அவலம் நேர வேண்டாம்.

மொட்டை மாடி கைப்பிடி சுவர் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?

ஒரு வீட்டுக்கு மொட்டைமாடி கைப்பிடிச்சுவர் அல்லது பால்கனி கைப்பிடிச் சுவர் என்பது மிகவும் முக்கியமானது , அதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது கைப்பிடி சுவரின் உயரம், 

மொட்டை மாடி கைப்பிடி சுவரின் உயரம் கண்டிப்பாக 3'6" கண்டிப்பாக இருக்க வேண்டும், (1050 மிமீ, 105 செமீ, 1.05 மீ) சமீபத்தில் உறவினர் ஒருவர் தன் ஒப்பந்ததாரர் நண்பரிடம் நம்பி தன் வீட்டை கட்டத் தர , அவர் வெறும்  2'6" உயரம் கைப்பிடி சுவர் கட்டி 1950₹ / சதுர அடி ஒப்பந்தத்துக்கு இந்த உயரம் தான் செய்ய முடியும் என சொல்லியிருக்கிறார், 

நான் அவரிடம் இது மிகவும் ஆபத்தானது, உடனே குடி போகும் முன் கூடுதல் 1 அடி உயர சுவரை எழுப்பி குடி போகச் சொன்னேன்,ஏன் என விளக்கினேன், எத்தனையோ பேர் இப்படி உயரம் குறைவான மொட்டைமாடி கைப்பிடி சுவரில் அமர்ந்தவர்கள் அப்படியே முழங்கால் பிரட்டி விட்டு தலை இடுப்பு எலும்பு முறிந்ததை சொன்னேன், 

2'6" என்பது கால் மூட்டுகளின் சராசரி உயரம் , 3'6" என்பது இடுப்பின் சராசரி உயரம், எப்போதும் இந்த எளிய விஷயத்தை வீடு கட்டுபவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும், இந்த 3'6" என்பது தட்டு ஓடு என்ற வெதரிங் கோர்ஸ் அமைப்பார்களே அதன் மேலிருந்து தடுப்பு சுவர் மேல் மட்டம் வரை ஆன உயரம் ,எனவே வீடு கட்டுபவர்கள் ரூஃப் ஸ்லாப் மீது தடுப்பு சுவர் அமைக்கையில் 4'0 (1200மிமீ, 120 செமீ, 1.2 மீ) கட்டுவதை சரிபார்க்கவும்.

சரி பால்கனி தடுப்பு சுவர் உயரம் என்ன என்பதை பார்க்கலாம், பால்கனி க்ரில்கள் முழிக்க மூடுவது சிறந்ததும்,அதிக பாதுகாப்பானதும் ஆகும், முழுக்க மூடாத பால்கனி என்றால் தடுப்பு சுவர் finished floor என்ற டைல் வேய்ந்த தரையில் இருந்து மேல்மட்ட உயரம் 4'0(1200மிமீ, 120 செமீ, 1.2 மீ) கட்டுவதை சரிபார்க்கவும்.

கைப்பிடி சுவரின் மேல்மட்டத்தை எப்போதும் flat ஆக 0° பாகை மட்டத்தில் பூசுவது தவறு, காரணம் அதில் மழைநீர் தேங்கி உள்ளே இறங்கி அறைக்குள் இறங்க ஆரம்பிக்கும், இதை இருபது வருட பழைய வீடுகளில் நன்கு காணலாம், இணைப்பு படத்தில் உள்ளது போல கைப்பிடி சுவரின் மேல் வாட்டம் வெளியே நீர் வடியுமாறு அமைப்பதே சரியான முறை,உடன் drip course காடி அமைப்பது அவசியம், இது போல கட்டினால் ஐம்பது வருடங்கள் ஆனாலும் மொட்டை மாடி கைப்பிச் சுவரில் ஓதம் பாயாது, விரிசல் வராது,மொட்டை மாடி கைப்பிடிச் சுவர் 4.5" தடிமன் கொண்ட சுவர் என்றால்  ஒவ்வொரு  10' c/c துறைக்கும் 9"x9" post அமைப்பதை உறுதி செய்யவும்.

கைப்பிடி சுவர் கட்டுவேலை செய்கையில் கவனமாக english bond அல்லது stretcher bond அமைக்கவும், கட்டுவேலை கலவை 1:6 விகிதத்தில் அமைய நீண்ட ஆயுள் தரும்.

கைப்பிடி சுவர் பூச்சு வேலை செய்கையில் , நல்ல தரமான முதல் தர சூளை செங்கற்கள் பயன்படுத்தவும், கலவை இடுவதற்கு நல்ல குடிக்கும் தரத்தில் உள்ள நீரை வாங்கி பயன்படுத்தவும், 1:5 கலவை அமைத்து பூசவும் , வெளிப்புற சுவர் என்பதால் மொத்த தடிமன் 18 மிமீ முதல் 20 மீமீ பூசவும், முதல் சுற்றில் 6 மிமீ பூசி கீறல் போட்டு அடுத்த சுற்றில் 12 மிமீ பூச சிறந்த பிடிமானம் இருக்கும், சென்னை போன்ற வெப்ப மண்டலம்  பிற மழை மண்டல பகுதிகளுக்கும் ஏற்ற முறை இது, 

லட்சங்கள் கோடிகள் செலவழித்து வீடு கட்டுபவர்கள் இந்த கைப்பிடி சுவர் விஷயத்தில் சிக்கனம் மெத்தனம் காட்டுவதை பார்க்கிறேன்,

மொட்டைமாடி கைப்பிடி சுவரும் வெதரிங் கோர்ஸ் ஓடுகள் வேய்ந்த பரப்பும் சந்திக்கும் இடத்தில் கண்டிப்பாக cant tiles என்ற வகை skirting இணைப்பு படத்தில் காட்டியவாறு அமைக்க வேண்டும், இது மழைநீர் ரூஃப் ஸ்லாப் உள்ளே இறங்கி கசியாமல் கைப்பிடி சுவர் சுற்றளவில் ஒரு தடுப்பரண் போலவே காக்கிறது.pressed tiles ஓரம் உடையாமல் காக்கிறது.

 முகத்துக்கு நெற்றி போல உங்கள் வீட்டுக்கு இந்த கைப்பிடி சுவர் எனக் கொள்க, பல பழைய கட்டிடங்களில் முறையாக கட்டுமானம் செய்யாததால் கைப்பிடி சுவர்கள் விரிசல் விழுந்து ஸ்பாஞ்ச் போல நீர் தேக்கி ஸ்லாப் உள்ளே அனுப்பி அறைக்குள் ஓதம் பாய்ச்சுவது கண்கூடு என்பதால் இந்த பதிவு.

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339

#sustainability ,#sustainable_living,#go_green,#refurbished,#table_side_unit,#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

நீங்கள் வாங்கும் அடுக்ககத்திற்கு எப்படி Invoice Bill கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.

நீங்கள் வாங்கும் அடுக்ககத்திற்கு எப்படி Invoice Bill கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.

நீங்கள் ஒரு அடுக்ககம் வாங்கப்போனால் எப்படி உங்கள் தலையில் மிளகாய் அரைக்கின்றனர் என்று பொறுமையாக படியுங்கள்.

நீங்கள் கிராம் கணக்கில் வாங்கும் தங்க நகைக்கும் சதுரடி கணக்கில் வாங்கும் அடுக்ககத்திற்கும் அதன் Invoice பில் தொகையில் நிறைய ஒற்றுமை உள்ளது.

இது பெருங்களத்தூர் GST road ல் உருவாகி வரும் அடுக்குமாடி குடியிருப்பு.

இந்த Invoice பில் 2.5 BHK (அதாவது 2 படுக்கை அறை + 1 study ) அடுக்ககத்திற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரியில் விளம்பரம் செய்யப்பட்ட விலை = 4995₹/ சதுரடிக்கு

நீங்கள் அந்த builder ன் booking office ற்கு போனவுடன் அது 5205 ₹ / சதுரடி ஆகிவிடுகிறது 

ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்தது 4 ஆம் மாடியாம், (எனவே கட்டுமான பொருட்களை lift செய்ய வேண்டி கூடுதலாக 210₹ / சதுரடி உங்களிடம் பெறப்படுகிறது)(மாடி மேலே போக போக இந்த தொகை கூடும்)

சரி உங்கள் அடுக்கத்தின் கார்பெட் ஏரியா(அதாவது சுவர்கள் சேர்க்காத தரைதளப் பரப்பு) 1038.5 சதுரடி

உங்கள் super built up area 1455 சதுரடி (சுவர் பரப்புக்கு இந்த 416.5 சதுரடியாம் (4 சதுரம்,~ 1 cent), இந்த 416.5 சதுரடிக்கு 1 bhk flat வரும் என்று படிக்காதவர்களுக்கு கூட தெரியும்) 

சரி இப்போது பெருக்கல் கணக்கு

1,455×5,205.       =7573275
கார் பார்க்கிங் =  225000
மொத்தம்           =7798275
இதற்கு 5% ஜிஎஸ்டி வரி =389914
ஆக மொத்தம் = ₹8188189

இத்துடன் முடியவில்லை

க்ளப் ஹவுஸ் கட்டணம். (நீச்சல்குளம், jogging track, playground)       = ₹100000
development fees   (திட்ட அனுமதி தொகை) 54/ சதுரடி =   ₹78570
sewage plant,diesel genset,etc  =144/சதுரடி = ₹209520

இவை எல்லாம் சேர்த்தால் = ₹545230
இத்துடன் மேலே உள்ள தொகை ஜிஎஸ்டி நீங்கலாக கூட்டினால் = ₹8343505

இத்துடன் முடியவில்லை

ஒப்பந்த தொகை ₹8343505 க்கு  5 % ஜிஎஸ்டி வரி = ₹417175

ஆக மொத்த தொகை = ₹8760680

இத்துடன் முடியவில்லை

இதற்கு legal fee = ₹29500
corpus fund (அதாவது முறைவாசல் கட்டணம்) = ₹75000
maintainance charges (அதாவது மற்றொரு முறைவாசல் கட்டணம்) = 36/ சதுரடி = ₹61808

மொத்த கட்டணம் = ₹166308

இந்த மொத்த கட்டணத்தை அந்த மொத்த கட்டணத்துடன் கூட்டினால் வரும் தொகை = ₹8926989

ஆக மொத்தம் எண்பத்தொன்பது லட்சத்து இருபதாயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தொன்பது ரூபாய் மட்டுமே

இப்போது நீங்கள் தரும் அதிக விலையை கணக்கிடுவோம்

₹8926989 ÷ 1455= 6135 ₹

விளம்பரம் செய்யப்பட்ட விலை ₹ 4995 ஐ இதில் கழித்தால் 1140₹ வருகிறது

இவர்கள் செய்த வெட்டி விளம்பரச் செலவினங்களுக்கு உங்கள் கணக்கில் இருந்து ஒரு சதுரடிக்கு 1140₹ திருடப்படுகிறது.

தவிர super built up area என்ற வகையில் சுமார் 300 சதுரடி அதிகம் வைத்து கணக்கிட்டுள்ளனர், நியாயமாகப் பார்த்தால் ஆயிரம் சதுரடி carpet area அடுக்ககத்துக்கு 10 சதம் சுவர் பரப்பு வரலாம் = 1100,

அத்துடன் 10 சதம் common area வந்தால் 110 சதுரடி = ஆக மொத்தம் 1210 சதுரடி அதிக பட்சம் வரலாம், ஆனால் இவர்கள் 1455 சதுரடி புரட்டு கணக்கு காட்டுகின்றனர்.
ஆக உங்கள் பணத்தை 360° சுற்றுபோட்டு திருடுகின்றனர்.

காதுள்ளவன் கேட்கக்கடவன்,உங்கள் பாடுபட்ட பணத்தை இப்படி பேராசை கொண்ட கட்டுமானர்கள் கட்டும் அடுக்ககங்களில் கொண்டு போய் முடக்கும் முன் நன்கு யோசியுங்கள்.

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339

#அடுக்ககம்

கோடாலிமனையில் திறம்பட வீடு வடிவமைப்பது எப்படி?

கோடாலி வடிவ மனையை வாங்காமல் தவிர்க்க வேண்டும், அது பூர்வீக சொத்து பாகம் பிரிக்கும் போது கிடைத்த சொத்து என்றால் வடகிழக்கில் தென்கிழக்கில் வாசல் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், கோடாலி மனையில் எக்காரணம் கொண்டும் எல்லை மீது அணைத்து இடம் விடாமல் கட்டக்கூடாது, க்ரில் வைத்த பால்கனி போன்றவை விதிவிலக்கு, பால்கனிகளை சுவர் எழுப்பி மூடக்கூடாது, 

கோண சூத்திரக்கோடு தென்மேற்கு முதல் வடகிழக்குக்கு  பாதைக்கு ஒன்றும் மனைக்கு ஒன்றுமாக வரைந்து பார்த்து அக்கோட்டின் மீது கீழ்நிலை நீர் தொட்டி,செப்டிக் டேங்க், ஆழ்குழாய் கிணறு அமையாமல் பார்த்து வடிவமைக்க வேண்டும், இது தவிர மனையின் நடுப்புள்ளி கண்டறிந்து சக்தி சக்கரம் வைத்து 360 கோடுகள் வரைந்து நல்ல சக்தி வரும் பாகத்தில் கதவுகள் ஜன்னல்கள் அமைக்க வேண்டும்.

கோடாலி மனையில் சமையலறை  தென்கிழக்கில் மட்டும் வர வேண்டும், தென்மேற்கில் கஜானா அல்லது ஒப்பனை அறை வர வேண்டும், குடும்பத்தலைவர் படுக்கை தெற்கில் தலை வைக்குமாறு அமைய வேண்டும், கோடாலி மனையில் அமையும் படுக்கைகள் தெற்கில் அமைவது வீரியமான வாஸ்து தோஷம் களையும்,குடும்பத்தாருக்கு ஆரோக்கியத்தை தரும்.

கோடாலி மனையில் வடக்கு பார்த்து நுழைவது போல வாசல் கதவு அல்லது கிழக்கு பார்த்து நுழைவது போல வாசல் கதவு வைப்பதே சரி, கோடாலி மனை அல்லது எந்த மனையிலும் வடகிழக்கில் மாடிப்படிகள் அமைக்க கூடாது முதல் விதியாக தென்மேற்கில் அமைக்கலாம்,அது முடியாத பட்சத்தில் தென்கிழக்கில் அமைக்கலாம், வடமேற்கு மூன்றாவது  பட்சம், இதில் தென்கிழக்கில் மாடிப்படிகள் மின்தூக்கி அமைக்கப்பட்டு, மனை மற்றும் வீட்டின் உயரமான பகுதியாக மேல்நிலை நீர் தொட்டி தென்மேற்கில் அமைக்கப்பட்டுள்ளது, அது போல வடகிழக்கில் மொத்த மழைநீர் வடிந்து வெளியேறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது, கிழக்கு பார்த்த பூஜை அறை, பெரிய சமையலறை சிறிய பால்கனி, குடும்பத்தலைவர் படுக்கை அறைக்கு சிறிய பால்கனி என வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடு வடிவமைக்கையில் உடன் interior design ஒருங்கே சரியான ergonomics அளவில்  ஃபர்னீச்சர்களை வரைந்து வடிவமைக்க வேண்டும்,சுவற்றில் படுக்கை அமைகையில் symmetry அமைய வேண்டும், நல்ல காற்று உள் நுழைந்து பிராண சக்தி தந்து வெளியேற இரண்டு ஜன்னல்கள் அமைக்க வேண்டும், படுக்கை அறை வெளியே இருந்து பார்க்கையில் படுக்கை அறை தெரியங்கூடாது, 

இந்த கோடாலி மனை பரப்பளவு - 1759 சதுர அடி

GF தரைத்தளம் ஒற்றை படுக்கை அறை வீடு  மற்றும் பொதுப்படிகள் மின்தூக்கி கீழ்நிலை நீர்தேக்க தொட்டி செப்டிக் டாங்க் பைக் பார்க்கிங் கொண்டது, கட்டுமான பரப்பளவு 755 சதுர அடி, 

FF,SF முதல் மாடி, இரண்டாம் மாடி விசாலமான இரட்டை படுக்கை அறை வீடு  மற்றும் பொதுப்படிகள் மின்தூக்கி கொண்டது, கட்டுமான பரப்பளவு 1056 சதுர அடி ஒரு தளத்துக்கு, , 

மொட்டை மாடி, பொதுப்படிகள் மின்தூக்கி பராமரிப்பு அறை கொண்டது, கட்டுமான பரப்பளவு 140 சதுர அடி , மொட்டை மாடியில் 8 வடிவ நடைபாதை, சோலார் சக்தி பேனல்கள் 2 கிவாட் உற்பத்திக்கு, வார இறுதி கொண்டாட்டங்களுக்கு barbeque , உணவு மேஜை,சிறுவர் விளையாட்டு இடம், ac external unit வைக்க இடம், மேல் நிலை நீர் தொட்டிகள் இரண்டு எண்ணிக்கையில் அமைய வேண்டிய இடம் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டது, இதை bespoke design, passive design, vasthu, fengshui intergrated interior design என எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம், landscape design இன்னும் இதற்கு செய்யவில்லை , குடும்பத்தார் ராசி நட்சத்திரப்படி வடிவமைக்கப்படுகிறது அதற்கு தனி plan பகிர்கிறேன்.

#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

Desire Path | விருப்பமான பாதை என்றால் என்ன?

Urban design மொழியில் இதை Desire path என்று  வழங்குவர். ஒரு வழித்தடம் உருவாக்கும் போது Desire path க்கான வாய்ப்பை முதலில் கவனிக்க வேண்டும், இருக்கும் பட்சத்தில் அதையே முதன்மை வழித்தடமாக தெரிவு செய்ய வேண்டும். அதைத்தாண்டி அழகு உள்ளிட்ட மற்ற புற காரணங்களுக்காக நாம் அமைக்கும் எந்த வழித்தடமும் தோல்வி அடையும் என்பது ஒரு கோட்பாடு.  அதை மீறினால் இப்படித்தான்.

Privacy Screens என்ற அழகிய தற்காலிக அறைத்தடுப்புகள்

வீட்டின் பெரிய வரவேற்பறையை இரண்டாக தடுப்பதற்கு மிகவும் செலவு குறைந்த வழி இது போன்ற Privacy screens ஆகும்.

மரம், மூங்கில் , ப்ளைவுட்,ஸ்டீல், அலுமினியம் என எதிலும் கூட இதன் சட்டகத்தை செய்து விடலாம், bifold என்ற மடக்கும் வகை  ஆதலால் எளிதாக மடக்கி வைத்து விட முடியும்.

பெரிய படுக்கை அறையில் 4 படுக்கைகள் இட்டு மாணவர்கள் அல்லது மாணவியருக்கு வாடகைக்கு விடுகையில் எளிதாக இது போல படுக்கையை சுற்றி Privacy screens அமைத்து தர மிகவும் பலனளிக்கும், அனைவரின் அந்தரங்கமும் காக்கப்படும்.

வரவேற்பறை மற்றும் உணவு உண்ணும் அறையை பிரிக்க மிகவும் ஏற்றவை privacy screens, இதனால் காற்றும் வெளிச்சமும் அறைக்குள் சுழன்று வெளியேறும்,சுவர் அமைக்கையில் அதிக இடம் எடுக்கும்,சுவர் நிரந்தரமானது,எண்ணியபடி அறையை பலநோக்கு உபயோகம் செய்ய முடியாது ஆனால் privacy screens மிகவும் பலனளிக்கும் அறைக்கு பெரிய தோற்றத்தை தரும், பராமரிக்கவும் எளிதானது.

Privacy screens like these are a very cost-effective way of dividing the large living room of the house into two.

 Its frame can be made of wood, bamboo, plywood, steel, aluminum, etc. The bifold folding type makes it easy to fold.

 If you have 4 beds in a large bedroom and rent it out to students, it is very effective to set up privacy screens around the bed like this, everyone's privacy will be protected.

 Privacy screens are ideal for separating the living room and dining room, so that air and light can flow into the room, taking up a lot of space when erecting a wall, the wall is permanent, the room cannot be used as intended but privacy screens are very effective, they give the room a bigger look and are easy to maintain.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (157) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)