த கிங்’ஸ் ஸ்பீச் [The King's Speech][2011][இங்கிலாந்து]


கிங்ஸ் ஸ்பீச் படம் ஜாக்கி அண்ணன் பதிவு பார்த்து ஆவல் ஏற மீண்டும் மீள் பார்வை பார்த்தேன், படம் ஒருவர் மிகப் பொறுமையாக ஆழ ஊன்றி டிக்‌ஷனரியுடன் பார்க்க வேண்டும், பல வழக்கொழிந்து போன ஆங்கில வார்த்தைகளைக் கொண்ட படம், ஜெஃப்ரி ரஷ் என்னும் மகா நடிகர், கொலின் ஃபர்த் என்னும் திறம் மிக்க நடிகரின் அதிரடிக் கூட்டணி, ஜெஃப்ரி ரஷ் க்வில்ஸ் படத்தில் மார்கஸ் டி சாட் என்னும் மறக்க முடியாத தோற்றத்தில் தோன்றியவர்,கொலின் ஃபர்த் சிங்கிள் மேன் என்னும் படத்தில் தன் ஓரினச்சேர்க்கையாள- வாழ்க்கைத் துணையை இழந்து தானும் உயிரை மாய்த்துக்கொள்ளப் போராடும் பாத்திரத்தில் தோன்றியவர். இந்தப் படம் பார்ப்பவர்கள் அதையும் அவசியம் பாருங்கள்.

இப்படம் 1925ஆம் ஆண்டு துவங்கி 1944 ஆம் வருட காலகட்டம் வரை சுழலும் இங்கிலாந்து அரச வம்சத்தைப் பற்றிய கதை, நம்மூரில் இதுபோல எல்லாம் படம் எடுப்பதென்பது கனவிலும் நடக்காது.புனிதப்பசுவான நேரு குடும்பத்தை பற்றி ஒரு படம் எடுக்க முடியுமா?எடுத்துவிட்டாலும்,பிள்ளையார் எறும்பு ஊறுவது போல ,வருடிக்கொடுத்து எடுப்பார்கள்.மிட்நைட்ஸ் சில்ட்ரென் படத்தில் சரிதா சவுத்ரி இந்திராகாந்தியாக வந்தாரே அது போல போல்டாக எடுக்க முடியுமா?

 இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ்[Colin Firth] [இப்போது இங்கிலாந்தை  ஆளும் ராணி Elizabeth II உடைய தந்தை,ப்ரிட்டிஷ் இந்தியாவின் கடைசி மன்னருமாவார்  ]இவருக்கு  பால்யத்தில் இருந்தே திக்குவாய் தான் தலையாய பிரச்சனை,தன் தந்தையிடம்,அண்ணனிடம், தம்பியிடம், புதியவரிடத்தில், மக்கள் சபையில் தொடர்ச்சியாக பேசவோ, ஏன்? எழுதியதைப் பார்த்துக் கூட பார்த்துப் படிக்கவோ முடியாது, நம்ப முடிகிறதா? அவ்வளவு ஏன்? தன் இரண்டு மகள்களைக் கொஞ்சும் போது கூட திக்கி திணறியே பேசுவார்,கதை சொல்வார்,

ஒரு கிருஸ்துமஸ் உரையின் போது மக்கள் முன்னிலையில் ரேடியோவில் உரையாற்றப் போய்விட்டு வார்த்தைகள் நாவிலிருந்து புறப்பட மறுக்க, திரும்பிப்பார்க்காமல் வெளியேறுகிறார்.இவரது வயதான அப்பாவே பின்னொரு சமயம் கிருஸ்துமஸ் உரையை மக்களுக்கு வழங்குகிறார். இதனால் எத்தனையோ முறை பெருத்த அவமானங்களையும் சந்திக்கிறார். இவர் பார்க்காத வைத்தியமே கிடையாது, இவர் மனைவி மற்றும் ஆர்ச் பிஷப் பரிந்துரப்படி எல்லா பரிசோதனைகளைச் செய்தும் தோற்கிறார்,

இப்போது தன் மனைவி  Elizabeth ,இதுவே கடைசி முயற்சி என கட்டாயப்படுத்த,அப்போது  ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்து வாழும், பேச்சு குறைபாடுகளை களையும் ஸ்பெஷலிஸ்டான லியோனல் லோக்[Geoffrey Rush ] என்பவரை சந்திக்கிறார்,இவர் ஒரு மருத்துவர் எல்லாம் கிடையாது, இவருக்கென்று உதவியாளர் கூட இல்லை,மிகவும் கண்டிப்பான ஒரு ப்ரொஃபெஷனல் இவர்,முன்னனுமதி இன்றி யாரையுமே பார்க்க மாட்டார், அவர் முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கு வெடிகுண்டு,கன்னிவெடி,பீரங்கி குண்டு தந்த சத்தம் தந்த அதிர்ச்சியினால் பேச்சுத்திறன பாதிக்கப்பட்டிருக்க,இவர் அவர்களுக்கு அளித்த புதுமையான  சோதனை முயற்சிகள் வெற்றியடைந்து அவர்கள் குணம் கண்டிருக்கிறது,அது தந்த நம்பிக்கையால் ஆறாம் ஜார்ஜின் மனைவி அவரை இங்கே கூட்டி வருகிறார். ஆனால் ஆறாம் ஜார்ஜுக்கு பொறுமை இல்லை, மன்னர் என்னும் திமிரும்,தன் குடும்ப விஷயம் வெளியே கசியக்கூடாதே என்னும் அவரின் பயமும் ஒருங்கே கிளம்ப அவரது சிகிச்சையில் நம்பிக்கை அற்றுப்போய் கிளம்பி விடுகிறார்,

அவர் இவருக்கு பேச்சு பரிசோதனை செய்தபின்னர் அதை பதிவேற்றி இலவசமாக ஒரு எல்பி ரெகார்டை கொடுக்கிறார்,அதை வாங்கிவந்தவர் அதை சில வருடங்கள் பொருட்படுத்தவேயில்லை, தான் எப்போதும் மக்கள் முன்னால் பேசவே முடியாது என்னும் நிலைப்பாடைக் கொண்டிருக்கிறார்.  ஆனால் இவரின் சகோதரர்களை ஒப்பிடுகையில் இவரின் அப்பாவுக்கு இவர் மீதே நம்பிக்கை அதிகம் உள்ளது.

இன்னிலையில் அப்பா மரணிக்கிறார்.அன்றைய தினம் குடும்பத்தாரும் ஆர்ச் பிஷப்பும் ஒன்று கூடி அடுத்த மன்னர் யார் என்று முடிவெடுக்கின்றனர். இவரை யாருமே ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.மிகவும் மனமுடைந்த அவர் அன்று எதேச்சையாக அந்த எல்பி ரெகார்டுகளை கேட்க,அவரின் சோதனையில் இவர் சரளமாக பேசியிருப்பதை அறிகிறார்,அன்றைய தினம் இவர் சத்தமான இசையுடன் ஹெட்போன் அணிந்து ஒரு மைக்கின் முன் நின்று கடினமான புத்தகத்தை படிக்க,அதை அவர் பதிவு செய்திருக்கிறார்,

இப்போது மீண்டும் லியோனல் லோக்கை சென்று தம்பதியாக சந்திக்கின்றனர்.லியோனல் மீண்டும் தன் சோதனைகளை துவக்குகிறார்,இவரின் சொந்த வாழ்க்கை பற்றியோ,இவரின் தாழ்வு மனப்பான்மை பற்றியோ,இவரது பால்யம் பற்றியோ கேள்வி கேட்டால் பதில் சொல்லுவது இல்லை,இவரை லியோனல் தொடக்கூடாது,மரியாதையாக ஸர் என விளிக்கும் படி பலமுறை கேட்டும் லியோனல் அவரை பெர்ட்டீ என்றே அழைக்கிறார்,ஒரு நட்பான சூழல் இருவருக்குள் அமைவதை ஆறாம் ஜார்ஜ் விரும்புவதே இல்லை,

இந்த சூழலிலும் லியோனல் இவரின் பேச்சுத்திறன் குறைபாட்டிற்கான முக்கிய காரணிகள் சிலவற்றை கண்டறிகிறார்.ஆறாம் ஜார்ஜின் அப்பா மிகவும் கோபம் நிறைந்தவர்,இவர் சிறுவனாயிருந்த பொழுது இவரின் பொழுது போக்கான மாடல்கள் செய்வதை அவர் விரும்பவில்லை,அவர் உலக நாடுகளின் அஞ்சல் தலைகளை சேமித்தமையால் குழந்தைகளும் அஞ்சல்தலைகளை சேமிக்க வற்புறுத்தியிருக்கிறார்,பாலகனாயிருந்த ஆறாம் ஜார்ஜுக்கு இடது கைப்பழக்கம் இருக்க,அவரை அப்பாவும் தாதிகளும் திட்டி திட்டி வல்து கைப்பழக்கத்துக்கு மாற்றியிருக்கின்றனர்,சிறுவயதில் இவரை வளர்த்த தாதி மிகவும் கொடியவள்,

அவளுக்கு அரண்மனையில் நிரந்தர வேலை வேன்டும் என்று இவரை அவர்கள் அப்பாவோ அம்மாவோ கொஞ்ச கேட்கும் போது குழந்தையை வெளியே தெரியாமல் கிள்ளிவிட்டு அவர்களிடம் கொடுக்க,அவர்கள் குழந்தை வீரிட்டு அழுவதை கண்டவுடன்,மன்னர் மன்னா குழந்தை என்னை ஒரு நிமிடம் கூட பிரிவதை விரும்பவில்லை பாருங்கள் என்று பசப்பும் நயவஞ்சகியாக இருக்கிறாள்,இவர் மீறி அவர்களிடம் அழாமல் போய்விட்டால் அன்று முழுக்க இவருக்கு உணவளிப்பதில்லை,அவளைப் புரிந்து கொள்வதிலேயே இவருக்கு பால்யத்தின் பெரும்பகுதி கரைந்துள்ளது,அதுவும் இவரின் திக்குவாய்க்கு முக்கிய காரணம் என லியோனல் கண்டறிகிறார்,
 
இருந்தும் அவருக்கு லியோனல் தன்னம்பிக்கை ஊட்டுவதையோ,அவர் அண்ணன் பற்றி பேசுவதையோ,ஆலோசனை சொல்வதொயோ ஆறாம் ஜார்ஜ் விரும்பவேயில்லை,அதை ராஜ துரோகம் என்கிறார்,ஒரு முறை அப்படி இவர் ஆலோசனை சொல்லப்போக அதை வெறுத்தவர்,இவரை எச்சரித்து, இவர் தன்னுள் ஆலோசனை என்னும் பெயரில் விஷவிதையை தூவுகிறார்,என குற்றம் சாட்டி இத்துடன் உன் சிகிச்சைகள் போதும் என பிரிகிறார். லியோனலுக்கு கையறு நிலை,எத்தனையோ முறை மன்னிப்பு கேட்பதற்காக அரண்மனைக்கு நடக்கிறார்,இருந்தும் பயனில்லை. சிப்பந்திகள் கூட மதிப்பதில்லை.

அப்பாவுக்கு பின்னர் குடும்பம் குழந்தைகள் என்று முழுத்தகுதியுடன் இருக்கும் இவர் ஆட்சி பீடத்தில் அமராமல்,திருமணம் ஆகாத தன் அண்ணன்  Edward VIII அமர ஆறாம் ஜார்ஜ் முழுமனதுடன் வழிகோலுகிறார், மன்னராக ஆட்சிப் பொறுபேற்ற அண்ணன் எட்வர்ட் இவரை கிள்ளுக்கிரையாகக் கூட மதிப்பதில்லை, இவரின் பேச்சுக் குறைபாட்டையும் அடிக்கடி எள்ளி நகையாடும் ஒரு இழிபிறவி அவர்.  மேலும் அவர்  2 முறை விவாகரத்தான Wallis Simpson என்னும் அரைகிழடான பெண்மணியை 3ஆவதாக மணக்க மிகவும் விரும்புகிறார்,அப்படி விவாகரத்தான பெண்மணியை மன்னர்  மணக்க முடியாத படிக்கு இங்கிலாந்தின் சட்டம் வலுவானதாயிருக்க காதலுக்காகத் தன் அரியணையை  ஒரே வருட ஆட்சிக்கு பின்னர் 1936 ஆம் ஆண்டு துறக்கிறார்,[ இது இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் சாபம் போலும், இதேபோல சார்லஸும் டயானா மறைவுக்குப் பின்னர்  கமீலா என்னும் விவாகரத்தான அரைக்கிழவியை திருமணம் செய்ததை  அறிவோம், அதற்காக அவர் எக்காலத்திலும் மன்னராக முடியாதபடிக்கு நிலை உள்ளதையும் உணர்ந்து அரியணை துறக்க தலைப்பட்டதையும் அறிவோம் ]

ஆறாம் ஜார்ஜ் இருக்கும் நிலையில் அரியணை ஒரு வலியைத்தரும் முட்கிரீடம்,வேறு வழியில்லாமல் அது எவ்வளவு தடுத்தும் இவருக்கே வர,இவரால் ஒழுங்காக மக்கள் முன்பாக எத்தனை மிடுக்காக ராஜ உடை அணிந்தாலும் வாள் ஏந்திக்கொண்டாலும்,சரளமானப் பேச்சு மட்டும் வரவில்லை,மக்கள் இவர் மீது மிகவும் அனுதாபப்படுகின்றனர். நாடு உக்கிரமான போரை எதிர்கொள்ளப்போகும் நிலையில் பேசவே முடியாத ஒரு அரசனா?கடவுளே மன்னரைக் காப்பாற்று என்ற வாசகங்களுடன் வீதிகளில் சுவரொட்டி ஒட்டுகின்றனர்,இப்போது அடிமேல் அடியாக பிரதம மந்திரி Clement Attlee இங்கிலாந்து போரில் ஈடுபடுவதை விரும்பாமல் ராஜினாமா செய்கிறார்.பின்னர் Winston Churchill பதவியேற்கிறார்.இதுபோல காலகட்டங்களில் வாயில் இருந்து வார்த்தை வராமல் சபையோர் மற்றும் மக்கள் முன்னர் மிகவும் அவமானத்தை சந்திக்கிறார்.மன்னர் குடும்பத்துக்கே தன்னால் நிரந்தர அவமானம் என்று மருகுகிறார்.

அப்படிப்பட்டவர் எப்படி தன் பேச்சுத்திறன் குறைபாட்டிலிருந்து  மீண்டார்?, வாழ்க்கை என்ன விக்ரமன் படமா? அதில் வருவது போல ஒரே பாட்டில் சமூகத்தில்  புகழும் செல்வமும் அடைவதற்கு?!!!தான் முன்னமே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த லயனல் லோக்கை  மீண்டும் தன் ஜம்பம் விடுத்துப் போய் சந்திக்கிறார், மன்னிப்பும் கேட்கிறார்.பின்னர் தன் சொற்பொழிவுக்கு அவருடன்  இணைந்து பலகட்ட சோதனைகளை செய்கிறார்.இவரின் புதிய பேச்சுத்திறன் பயிற்சியாளரை ஆர்ச் பிஷப்பிற்கும் மன்னர் குடும்பத்துக்குமேஎ பிடிப்பதில்லை,அதிலும் பல குறுக்கீடுகள்,நான் வேறொரு மருத்துவரை சிபாரிசு செய்கிறேன் என ஆளாளுக்கு கிளம்புகின்றனர். 

அதையெல்லாம் தாண்டி முதலில் ரேடியோவில் பின்னர் மக்கள் சபையில் எப்படி ஆறாம் ஜார்ஜ் படிப்படியாகத் தன் உளவியல் ரீதியான தடைகளை மீறி உரையாற்றினார், என்று மிக அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Tom Hooper, வாழ்வில் தன்னம்பிக்கை குறைபாடுள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மையால் வாடுவோர், திக்குவாய் என்னும் பேச்சுக்குறைபாட்டால் வாடுவோர் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.அடுத்து என்ன செய்யலாம் என்னும் ஒரு தெளிவைக் கொடுக்கும் படம்.

கடைசியாக மிகுந்த சாகசத்துடன் வானொலி உரையை முடித்த ஆறாம்ஜார்ஜிடம் லயோனல் லோக் எல்லாம் அற்புதமாக பேசினீர்கள்,இன்னும் உங்களுக்கு அந்த  W என்னும் எழுத்தை உச்சரிப்பதில் கஷ்டம் இருக்கிறது போல,என்று கருத்து சொல்ல,அதை மக்கள் பேசுவது நான் தான் என்று நம்ப வேண்டுமே என வேண்டுமென்றே செய்தேன் என நகைச்சுவையாக சொல்வார்,மிக அற்புதமான காட்சி அது,படம் அவசியம் பாருங்கள்.இது போல பல சுவாரஸ்யங்களை அனுபவியுங்கள்.யாருமே தவறவிடக்கூடாத படம்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

ஸக்ம் [Zakhm][ज़ख़्म] [ஹிந்தி][1998][இந்தியா]


மஹேஷ் பட் இயக்கிய Zakhm |ஸக்ம் [காயம்] ஹிந்திப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது, இது அவரின் சொந்த  வாழ்க்கையை தழுவி புனையப்பட்ட கதையும் கூட, படம்  மஹேஷ் பட்டின் சிக்கல் மிகுந்த பால்ய பருவத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது, 

பாலிவுட்டில் புகழின் உச்சியில் இருக்கும் இசையமைப்பாளர் அஜய் [அஜய் தேவ்கன்]யின் கண்ணோட்டத்தில் கதை சொல்லபடுகிறது,1992 ஆம் ஆண்டு பம்பாயில் இந்து முஸ்லிம் வன்முறை வெடித்து ,ஊரடங்கு உத்தரவு 23 மணி நேரம் அமலில் இருக்கிறது,எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு கண்,ரத்தத்துக்கு ரத்தம் என்று சுயநலம் கொண்ட அரசியல் வாதிகள் தூண்டிவிட்டு படுகொலைகள் அரங்கேறுகின்றன.அரசு மௌனசாட்சியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இவரின் மனைவி  கருத்தரித்திருக்கிறார்,இந்த மதக்கலவர சூழலில் இங்கே இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்வதை வெறுக்கிறார்,

தன் தாய் வீடான லண்டனுக்கு போக ஆயத்தமாகிறார்.அஜயையும் தன்னுடன் அழைக்கிறார்,ஆனால் அஜய்க்கு தன் அம்மா மீதும்,பிறந்த ஊரின் மீதும் அப்படி ஒரு வினோதமான பக்தி உள்ளது.அஜய்க்கு ஆனந்த் என்னும் தம்பி இருக்கிறான்,அவன் எந்நேரமும் சிவசேனா போன்ற ஒரு மதவெறிக்கட்சியில் கட்ட பஞ்சாயத்து செய்வதையே பெருமையாக நினைக்கிறான்,அங்கே அவனது தலைவனாக ராஜ்தாக்கரே போன்றே தோற்றம் கொண்ட சுபாத்தை நாம் பார்க்கிறோம்,இவன் பேசும் போது,ஏன் மூச்சு விட்டாலே விஷவிதைகளாக முஸ்லீம் துவேஷம் வந்து விழுகிறது,அவனது மகுடிக்கு தம்பி ஆனந்த் நடனமாடுகிறான்.அஜய் எத்தனை திட்டினாலும் கேட்பதில்லை.

படத்தில் இவரின் அம்மா ஒரு முஸ்லிம்,ராமன் என்னும் ஆச்சாரமான இந்து குடும்பத்தைச் சேர்ந்த  படஇயக்குனரோடு இல்லற பந்தம் கொண்டிருக்கிறார், ராமனின் அம்மா ஒரு சாதி மதத்தை போற்றிப் பாதுகாக்கும் பேய்,இவரின் அம்மா நான் இறந்த பிறகு நீ உன் விருப்பம் போல் அந்த முஸ்லிம் பெண்ணை மனைவியாக்கி இந்த வீட்டுக்குள் கூட்டிவா என வரட்டுப் பிடிவாதமாயிருக்க, ராமன் மற்றும் பூஜாபட் தம்பதிகள் ஊரரியாமல் சேர்ந்து வாழ்கின்றனர், அஜய் என்னும் 10 வயது மகனும் உண்டு,அஜயின் அப்பா எப்போது நம்மை அவர் வீட்டுக்கு கூட்டிப்போவார் எனும் ரீதியான  கேள்விகளுக்கு அவனின் அம்மாவால் விடை சொல்லமுடியவில்லை,அதே நேரம் இவர்களது காதல் மிக உயர்வானது என நம்புகிறார்,

ராமனை எப்போதுமே நிர்பந்திப்பதில்லை, இந்நிலையில் ராமன் தன் தாயின் தற்கொலை மிரட்டலில் பெயரில் ஒரு ஆச்சாரமான இந்துப் பெண்ணை மணக்கிறார்,குற்ற உணர்வுடன் அஜயின் அம்மாவிடம் மண்டியிட்டு நான் தோற்றுவிட்டேன்,என குமுறுகிறார்,அவள் இப்போதும் எந்த கோபமும் சாபமும் இன்றி அவரை ஏற்று அணைக்கிறாள், இப்போது ராமனின் இன்னொரு வாரிசும் இவரது வயிற்றில் வளர்கிறது,அதை இவள் ஒன்றுமே செய்வதில்லை, ராமனின் மேல் அவள் உயிரையே வைத்திருக்கிறாள். ராமன் தன் அம்மாவின் கட்டாயத்துக்கிணங்க வேறொரு பெண்ணை மணந்தாலும், அவரின் எண்ணங்கள் எல்லாம் இவர்களைப்பற்றியே இருக்கிறது, 

அஜயின் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் இப்போது இங்கே வருவதில்லை,அதே சமயம் வேறொரு பெண்ணிடமும் அவருக்கு உடலால் தொடர்பில்லை என்பதை அறிகிறோம்,அவளிடம் முதல் முஸ்லிம் மனைவியைப் பற்றியும், மகன் அஜயைப் பற்றியும் முழுதும் சொல்லிவிடுகிறார்,இந்நிலையில் அஜயின் அம்மாவிற்கு பிரசவ வலி வர,அவர் இப்போது ஒரு ஆண் மகவை பெற்றெடுக்கிறார்,இந்த செய்தியை அஜய் ராமன் வீட்டிற்கு தொலை பேசி வழியே சொல்ல,அவர் மனைவி அதை நெக்குருக கேட்கிறார், அவரும் தன் கணவரை மிக நன்றாக புரிந்து வைத்திருப்பதை நாம் அறிகிறோம்,இப்போதும் அவரது சாதி மதப்பேயான தாய குதிக்கிறாள்,அக்குழந்தைகளும்,அவளும் புழு பூத்து சாவார்கள்,என்று சபிக்கிறாள்,இவர் கோபத்திலும் விரக்தியிலும் காரை இயக்கி ஆஸ்பத்திரிக்கு விரைகையிலேயே லாரி மோதி கார் விபத்துக்குள்ளாகி இறக்கிறார்,

ராமனது இரண்டாம் மகவு வந்த அன்றே அவர் மரணமடைந்தது ராமனின் அம்மாவை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்ல, ராமனின் ஈமைச்சடங்கின் போது அங்கே பச்சைக்குழந்தையை தூக்கிக்கொண்டு அஜயின் துணையுடன் ராமனின் ஈமைச்சடங்கில் குழந்தையை காட்டி ஆசி பெற கனத்த இதயத்துடன் வருகிறார்.அங்கே ராமனின் அம்மா ,அவரை மிக இழிவாக பேசுகிறார், ஒரு முஸ்லிம் காலடி என் மகனின் ஈமைச்சடங்கின் போது பட்டு,தீட்டானதே,இனி அவன் எப்படி மோட்சத்துக்கு போவான் என ஏசுகிறாள்,

அஜய் தடுக்க அவனை அறைகிறாள்,ஆனால் ராமனின் இளைய மனைவி அம்மாவிடமிருந்து குழந்தையை வாங்கியவள் அணைத்து ஆதூரமாக ஆசியளித்து அனுப்புகிறாள், வாசலிலேயே அமர்ந்த அம்மா அவரது ஆத்மா சொர்க்கத்துக்கு போக வேண்டி அல்லாவிடம் இறைஞ்சி தொழுகிறாள். சிறுவன் அஜய்க்கு அன்று தான் தன் அம்மா ஒரு முஸ்லிம் என்பதே தெரியும், இத்தனை நாள் அவரை இந்து என்றே நினைத்திருக்கிறான்,அம்மாவை நெற்றி நிறைய பொட்டோடும்,தலை நிறைய பூவோடுமே பார்த்திருக்கிறான் அஜய்,அம்மா இப்போது மிகவும் தைரியம் கொள்கிறாள்,சிறுவன் அஜயிடம் தான் இறக்கும் வரை அம்மா ஒரு முஸ்லிம் என்பதை தம்பியிடமோ,யாரிடமோ சொல்லக்கூடாது,தான் இறந்த பின்னர் இவரை  முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்,அப்போது தான் இவர் ராமனுடன் சொர்க்கத்தில் இணைய முடியும் என வேண்டி சத்தியம் பெறுகிறார். இனி இந்த இந்து முஸ்லிம் மத துவேஷம் புரையோடிப்போன சமூகத்தில் குழந்தைகளை சிக்கலின்றி வளர்க்க வேண்டி தன்னை கிருஸ்துவர் என்றும் சொல்லிக்கொள்கிறார். ராமனின் நினைவாகவே மீத வாழ்நாளைக் கழிக்கிறார்,இப்போது வருடங்கள் ஓட,பிள்ளைகள் வளர்ந்து மிக நல்ல நிலைக்கு வந்து,அஜய்க்கு திருமணமும் ஆகிவிட்ட நிலை.அஜய் இப்போதும் தாயை மனைவியையும் விட மேலாக  நேசிக்கிறார்.மனைவியும் அதை நன்கு புரிந்து கொண்டு நடக்கிறாள்.

இப்போது பம்பாய் கலவரபூமியாயிருக்கிறது. அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று பாபர் மசூதி இடிப்பையும்,அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததையும்,இந்து முஸ்லிம் இரு தரப்பிலும் மக்கள் பலியானதையும்  திரும்பத் திரும்ப ஒளிபரப்ப  ,அங்கே உணர்ச்சி வெடிக்கிறது, ராமனின் அம்மா சர்ச் சென்று திரும்புகையில்  மதவெறியர்கள் சிலரால் இந்துப்பெண் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்படுகிறார் [இது மட்டும் சினிமாவிற்கு செய்த புனைவு] ,சிகிச்சை பலனளிக்காமல் 80 சதவித தீக்காயங்களுடன் இரு தினங்களில் இறந்தும் போகிறார். இப்போது ராஜ்தாக்கரே போன்ற தோற்றம் கொண்ட மதவெறி அரசியல் வாதி,இந்த சூழ்நிலையில் இவர் அம்மாவின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறான்,போலீசாரும் அவனுக்கு உடந்தையாக இருக்கின்றனர்,சரத் பவாரின் மாநில அரசு,பொம்மை போல வேடிக்கை மட்டும் பார்க்கிறது.ஊரெங்கும் கலவரம்,தம்பியிடம் அஜய்,அம்மாவை முஸ்லீமாக அடக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க,அவன் கேட்பதாயில்லை,இந்நிலையில் இவர் அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற முஸ்லிம் இளைஞனை இந்து மதவெறி ஆட்கள் அடித்து மண்டையை உடைக்க,அவனும் ஆஸ்பத்திரியிலேயே கட்டிலுடன் விலங்கிடப்பட்டு சேர்க்கப்படுகிறான்,தான் கொன்றது ஒரு முஸ்லிம் பெண்மணியை என அறிந்ததும்,ஐயோ பாவம் செய்துவிட்டேனே,என் மதத்தை காப்பாற்ற என் அம்மாவையே கொன்று விட்டேனே ,என்னை மன்னித்துவிடுங்கள்,என கதறும் இடம்,மிகவும் உணர்ச்சிகரமானது,

மத வெறி தலைவிரித்தாடும் காலம்,உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு பிணத்தின் மீது அரசியல் செய்யும் அரசியல் பன்றிகள்.அந்த காட்சியமைப்பை எந்த ஒரு சாதி மத கொலைகளுடனும் ஒருவர் பொருத்திப்பார்க்கலாம்,தனி நபர் சுக துக்கங்களில் அரசியல்வாதிகளின் அருவருப்பான தலையீடு எத்தனை ஆபத்தானது என நம் நெஞ்சம் பதறும் காட்சியது. 

அஜயின் அம்மாவின் சவ அடக்கத்தை  மகன்களும் மருமகளும் எப்படி சாத்தியமாக்கினர்? என்பதை படத்தில் பாருங்கள், எத்தனை சிக்கலான உறவுப் பின்னல்களின் கோர்வை என வியக்கிறேன் . தன் அம்மாவின் பாத்திரத்தில் தன் மகள் பூஜா பட்டையே நடிக்க வைத்துள்ளார் மஹேஷ் பட். இப்படத்தில் இவரது பாத்திரத்தில் நடித்த அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது, படம் 1992 இந்து முஸ்லிம் மதக்கலவரம் நடந்த 6 வருடம் கழித்து வெளியானது, மிகத் துணிச்சலான படம், படைப்பாளி எப்படி இருந்தால் என்ன? அவனின் படைப்பு தானே முக்கியம்?!!! படத்தில் இவர் முஸ்லிம் அம்மாவின் இந்துக்கணவனாக நாகார்ஜுனா மிக அருமையான நடிகர்,மிகப்பாந்தமாக ராமன் என்னும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார், அஜயின் மனைவியாக சோனாலி பிந்த்ரே, இவரின் தம்பியாக அக்‌ஷய் ஆனந்த் என்று மிகச் சிறப்பான காஸ்டிங்கை தன்னுள் கொண்ட படம்.

நடிகர் அஜய் தேவ்கன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,அவர் ஒருபுறம் சிங்கம்,ஹிம்மத்வாலா போன்ற வணிக ரீதியான படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் ரெய்ன்கோட், ஓம்காரா, ஹல்லாபோல், ஆக்ரோஷ், கங்காஜல், கம்பெனி என பரீட்சார்த்தம் கலந்த சினிமாக்களிலும் தன்னை முன்னிறுத்துபவர், அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்று தான் இப்படம், இதில் இசையமைப்பாளர் அஜயாக மிக அற்புதமாக பங்களித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் மஹேஷ் பட்டின் மிகவும் வெளிப்படையான பேட்டிக்கான சுட்டி இது ,அடுத்தவர்களின் அந்தரங்கம் தான் எத்தனை சுவாரசியமானது?!!! இவரது  மகள் பூஜாபட் மீது இவர் இன்செஸ்ட் உறவு வைத்துள்ளாரா?!!! என்னும் இந்த விவகாரமான போட்டோவால் எழுந்த கேள்விக்கு இவர் சொன்ன பதில் படியுங்கள் , ஹாலிவுட்டில் இருந்து இவர் திருடியதை எல்லாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுதல் , தன் வாழ்வில் சந்தித்த அடுக்கடுக்கான காதல் மற்றும் இல்லறத் தோல்விகள்,தன் நான்கு படங்கள் அடுத்தடுத்து தோற்றது,தன் வழிகாட்டியான U.G. கிருஷ்ணமூர்த்தி [ஜிட்டு அல்ல] தன் கடைசி நாட்களில் மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக மடிய இவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் இவர் சிதை மூட்டியது, என ஒளிவு மறைவில்லா பேட்டி இது. வழ வழா கொழ கொழா என பிரபலங்களிடம் கேள்வி கேட்கும் நிருபர்கள் அவசியம் படித்து தம்மை திருத்திக்கொள்ளவும்  உதவும்.

படத்தில் வரும் கலி மே ஆஜ் சாந்த் நிக்லா என்னும் மரகதமணி இசையமைத்த பாடலின் காணொளியை அவசியம் பாருங்கள்,எளிமையான இனிய பாடல்,அதே போல எளிமையான அழகிய காட்சியாக்கம், அனைவருக்கும் பிடிக்கும்.

பிஃபோர் த ரெயின்ஸ் [Before the Rains][2007][இந்தியா]


ந்தோஷ்சிவன் இயக்கிய பிஃபோர் த ரெயின்ஸ் என்னும் படம் மீண்டும் பார்த்தேன்,சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மகர மஞ்சு, உருமி என ஏகம் குப்பைகள், இது மற்றும் டஹான் மட்டுமே தப்பிப்பிழைத்த படங்கள் என்பேன், 2001 ஆம் ஆண்டு வெளியான  யெல்லோ ஆஸ்பால்ட் என்னும் இஸ்ரேலிய நாட்டுப் படத்தை திரைவிழாக்களில் கண்டு மிகவும் சிலாகித்த சந்தோஷ் சிவன் அதற்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக அப்படத்தைத் தழுவி தயாரித்து இயக்கிய படம் பிஃபோர் த ரெய்ன்ஸ்.படத்தின் சிறப்பே அதன் கதை,லொக்கேஷன் மற்றும் காஸ்டிங் என்பேன்.

யெல்லோ ஆஸ்பால்ட்-மூலப் படத்தின் போஸ்டர்
யெல்லோ ஆஸ்பால்ட் என்னும் இஸ்ரேலியப் படமும் நான் பார்த்திருக்கிறேன், அது நிகழ்காலத்தில் நடக்கும் கதை, அரேபியப் பாலைவனத்தின் சூழலில் நடக்கும் நெறியில்லா காதலையும் காமத்தையும் பறைசாற்றும் படம், இப்படம் ப்ரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியில் மலபாரில் நடக்கும் கதை, ஆனால் அதே நெறியில்லா காதலும் காமமும் மட்டும் உண்டு. இதுவரை நான் கண்ட ரீமேக் படங்களில் மூலத்தை விட மிக அற்புதமாக வந்த தழுவல் இது தான் என்பேன். இப்படத்தை பாலா பார்த்திருந்தால் பரதேசி படத்தினை இன்னும் நன்றாக கொண்டு வந்திருக்க முடியும், உள்ளூரில் எடுக்கப்பட்ட உலகசினிமாவின் தரத்துக்காக சொன்னேன். பரதேசியில் செழியனின் ஒளிப்பதிவு மிக அருமையாக இருந்தும் பொருந்தாத காஸ்டிங், செட், கதை, திரைக்கதையினால் விழலுக்கு இறைத்த நீரானது எல்லோருக்கும் தெரிந்ததே.

1937 ஆம் ஆண்டு, மலபார் பிரதேசம், மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடே பழங்குடிகள் வசிக்கும் ஓர் அழகிய மலைக்கிராமம், ஊரினூடே ஆறும், அருவியும் கொண்ட எழில் பரப்பும் உண்டு, சுதந்திரப் போராட்டம் சூடு பிடித்திருக்கும் காலகட்டம், ஏற்கனவே அடர்ந்த காடுகளை அழித்து ஆங்கிலேய அதிகாரிகளின் டீ எஸ்டேட்டுகளும் ,அவற்றுக்கான சாலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன,

இப்போது குறுமிளகு,ஏலக்காய்,லவங்கம்,பட்டை போன்றவற்றை பயிரிடத் தோதான நிலப்பரப்பை தேர்ந்தெடுத்து அதற்கு தனியார் மலைச்சாலை உருவாக்கி, அவற்றை ஆங்கிலேயெ கனவான்களுக்கு தனித்தனி எஸ்டேட்டுகளாக பிரித்து விற்க, ஹென்ரி மூர் [Linus Roache ]என்னும் ஆங்கிலேய டவுன்ப்ளானிங் இஞ்சினியர் அவ்வூருக்கு வருகிறார்,இவருக்கு என்று எழில் கொஞ்சும் ஒரு ஆங்கிலேயெ கிராமப்புர வீடு போல அமைத்துக் கொள்கிறார், அழகிய மனசாட்சிக்கு பயந்த மனைவி லாரா [Jennifer Ehle], புத்திசாலியான மகன் பீட்டர் என்று அழகிய குடும்பம்,

சஜ்ஜனி,லாரா,பீட்டர்
நம்பிக்கையான உதவியாளன் டீ.கே,நீலன் [ராகுல் போஸ்] அழகிய வேலைக்காரி சஜ்ஜனி [நந்திதா தாஸ்] என வாழ்க்கை சாஹேப்புக்கு மிக ரம்மியமாகப் போகிறது, இவரின் நம்பிக்கையான உதவியாளன் நீலனின் உழைப்பை கண்டு மெச்சிய மூர் சாஹேப் அவனுக்கு தன்னுடைய ப்ரிடீஷ் பிஸ்டலை பரிசளிக்கிறார்.அவனுடைய உதவியின்றி சாலை திட்டமிடுதல் பணி நடந்தேறியிருக்காது என்று புகழ்கிறார், வரும் மழைக்காலத்துக்கு முன்பாக திட்டமிட்டபடி சாலையை அமைக்க இவனையே பெரிதும் நம்பியிருப்பதாகச் சொல்கிறார், அமைக்கவிருக்கும் சாலைக்கு அவனுடைய பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என அதீதமாகப் புகழ்கிறார்.

நீலன் நேர்மையும் நல்ல உழைப்பும் கொண்டவன்,ஆங்கிலம் நன்றாக பேச ஆரம்பித்திருக்கிறான், இப்போது நல்ல வேலையும், அதற்கேற்ற சம்பளமும், மூர் சாஹேப்பின் வீட்டின் அவுட் ஹவுஸிலேயே இவனுக்கு தங்கும் இடமும் கிடைக்க மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான், தன் வயதான அப்பா, அம்மாவை அடிக்கடி தன் கிராமத்திலும் சென்று பார்த்து வருகிறான், இவனுக்கு உறவிலேயே பெண் நிச்சயிக்கப்பட்டிருக்க,அவன் திருமணத்தில் பிடிப்பின்றி இருக்கிறான். இவன் அப்பா [திலகன்] தான் அவ்வூரின் தலைவர், அவருக்கு மகன் ப்ரிட்டிஷாருக்கு பணியாளாக இருப்பது பிடிப்பதில்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதையே விரும்புகிறார்.

மூர் சாஹேப்பின் மனைவியும் ,மகனும் ஒரு மாதம் கோடை விடுமுறையை கழிக்க லண்டன் செல்கின்றனர், ஒரு பழமொழி சொல்லுவர். கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி தேடும் ஆணின் நெஞ்சம் என்று, இவர் முரணாக தன் பேரழகு வேலைக்காரி சஜ்ஜனிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து, அவளின் கணவன் அவளுக்கு காட்டாத அன்பை திகட்ட திகட்ட பொழிந்து, அவளை மடித்து வழிக்கு கொண்டு வந்து விடுகிறார், வீட்டுக்குள் புணர்ந்து திகட்டிய பின்னர் இயற்கை சூழலிலும் புணர எண்ணியவர்கள், மலைத்தேன் எடுக்க ஒருவரும் அறியா வண்ணம் ஜீப்பில் சென்று  அருவி திட்டுக்கு மேலே ரசித்துப் புணர்கின்றனர். அதை இரு சிறுவர்கள் மாங்காய் பறிக்க வந்துவிட்டு பார்த்தும் விடுகின்றனர்.

அன்றைய தினம் வீடு திரும்பி மற்ற காரியம் முடிக்க மிகவும் தாமதாமாகி விட்டபடியால், மூர் சாஹேப் நீலனை அழைத்து, சஜ்ஜனியை அவளின் கிராமத்தில் விட்டு வரச் சொல்கிறார், சஜ்ஜனி மீது நீலனுக்கு பள்ளிப் பிராயத்திலிருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கிறது, ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். சஜ்ஜனி பெற்றோர் இல்லாதவள், ஒரே தம்பி மனஸ் [இந்த்ரஜித் சுகுமாரன்] மட்டும் தான், ஊரின் பெரியவர்கள் சஜ்ஜனிக்கு பொருத்தமான துணையாக சற்றே வயது முதிர்ந்த, எழுதப் படிக்காத ரஜத் [லால்] ஐ திருமணம் செய்து வைத்தும் விடுகின்றனர்.

இருவருக்கும் ஏழாம் பொருத்தம், அழகிலோ, அறிவிலோ, ரசனையிலோ ஒத்துப்போவதில்லை, தவிர ரஜத் வெகு முரடன் வேறு, அடிப்பவன், பெண்ணடிமையை விரும்புபவன், இவற்றிற்கெல்லாம் எதிர் மறையாக அதீத அழகுணர்ச்சிக்கு ரசனையுடன் அன்பை பொழியும் மூர் சாஹேப்பிடம் சஜ்ஜனி விழுந்து விடுகிறாள், பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று தெரிந்தாலும் அவள் அதற்கெல்லாம் பயப்படவில்லை, சாஹேப் தன்னுடன் ஓடி வந்து கூட வாழ்வான் என்று நம்பியிருக்கிறாள்.

அன்று நீலன் சஜ்ஜனியை வீட்டில் விட்டு வர, ரஜத் இவனை வெறுப்பாக பார்த்தவன், சஜ்ஜனியிடம் ஏன் தாமதம் ? எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறாய்? என்று கதவடைத்துவிட்டு அடித்து துன்புறுத்தி விசாரிக்கிறான், அவன் பிடியில் இருந்து விலகி துரிதமாக இரவுக்கு சமைத்தும் விடுகிறாள், அங்கே சஜ்ஜனியின் தம்பி மனஸ், நீலனைப் பார்த்தவன் இரவு கட்டாயமாக அங்கே சாப்பிட்டுப்போகச் செல்கிறான்,இருவரும் பால்ய சிநேகிதர்கள், அங்கே நீலன் சாஹேப் தனக்கு பரிசளித்த ப்ரிடிஷ் பிஸ்டலை நண்பனுக்கு பெருமையுடன் காட்டுகிறான், அவன் அதை வியப்பு மேலிட தடவிப் பார்க்கிறான்.

இப்போது கோடை விடுமுறை முடிந்து மூர் சாஹேப்பின் மனைவியும், மகனும் வந்துவிடுகின்றனர்,அவளுக்கு மூர் சாஹேப் இருக்கும் இடமே சொர்க்கமாகப் படுகிறது, தான் உல்லாசமாக குளிப்பதற்கு ஒரு பீங்கான் குளியல் தொட்டியையும் லண்டனிலிருந்து இறக்குமதி செய்து இவர்களின் குளியலறையில் நிறுவுகிறாள். நீலன் நிறைய படிப்பதை அறிந்து அவனுக்கு பெட்டி நிறைய புத்தகங்களையும் லண்டனிலிருந்து கொணர்ந்து பரிசளிக்கிறாள், இப்படி அங்கே அனைவருக்கும் மிக அன்பான எஜமானியாக நடந்து கொள்கிறாள். சாஹேப்பின் மனைவி எத்தனை நல்லவள் என்றாலும் வேலைக்காரி சஜ்ஜனிக்கு அவள் சக்களத்தியாகவே படுகிறாள். இப்போது மூர் சாஹேப்பிடம் மிகவும் அன்பையும் கோபத்தையும் ஒருங்கே  பொழிய ஆரம்பித்து விடுகிறாள் சஜ்ஜனி, சாஹேப்பும் அதை தடுக்கவில்லை,யுத்த களத்திலும் இரட்டை சந்தோஷம் காண்கிறார் சாஹேப்.

இப்போது வழக்கம் போல தாமதமாக வீட்டுக்கு போகும் சஜ்ஜனி,பூனை போல சமையல் செய்கிறாள், வெந்நீர் விளாவி,கணவன் ரஜத்தின் களைத்த கால்களுக்கு ஒத்தடமும் கொடுக்க விழைகையில், அந்த மூர்க்கன், இவளை நீ தேன்காட்டுக்குள் போனாயா?!! கண்ட சாட்சியுண்டு,மறைக்காதே!!! என்று கேள்விகளால் துளைத்து அடித்து துவைக்கிறான்,அவள் மௌனம் சாதித்தவள் சாஹேப்பின் பெயரை காட்டிக்கொடுக்கவேயில்லை, இனி அடி பொறுக்க முடியாது என்னும் நிலையில் தப்பி ஓடுகிறாள்.

இப்போது,சாஹேப் தன் வீட்டில் வைத்து தனக்கு சாலைப் பணிக்கு வங்கிக்கடன் வாங்கித்தரும் குடும்ப நண்பர் சார்லஸுக்கு இரவு விருந்து அளிக்கிறார். அப்போது இவரின் நாய் மிகவும் குலைக்க,இவர் திருடன் நுழைந்திருக்கக்கூடும் என்று தன் ரைஃபிளுடன் சென்று பார்க்க,அங்கே பலத்த ரத்த காயங்களுடன், சஜ்ஜனி இருட்டில் புதர் அருகே படுத்திருக்கிறாள், சாஹேப்பிடம் இனி தன்னால் பொறுக்க முடியாது, கணவனும் ஊராரும் சேர்ந்து தன்னை தூக்கில் ஏற்றி கொன்றுவிடுவர், தன்னுடன் ஓடி வந்து எங்கேயாவது கண்காணாத இடம் போய் வாழ வருமாறு அழைக்கிறாள், இவரை மிகவும் விரும்புவதாயும், இவரின் அன்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்கிறாள்,சஜ்ஜனி.சாஹேப் அதை ரசிக்கவில்லை.

இப்போது துப்பாக்கியுடன் போன மூர் சாஹேப்பை காணவில்லை என்று லாரா ,சார்லசைப் போய் பார்க்க அனுப்ப, அவர் அந்த பண்ணையை சுற்றித்தேடுகிறார், சஜ்ஜனியை அப்படியே தூக்கி வந்த மூர் சாஹேப் நீலனின் அவுட் ஹவுசுக்குள் நுழைகிறார், எப்படியாவது இவருக்கு உதவ நீலனை வேண்டுகிறார். தனியே அழைத்து பணம் தந்து அவளை கண்காணாத இடத்துக்கு கொண்டு போய் விடச் சொல்லுகிறார், நீலன் அவளை ஜீப்பில் அழைத்துப்போய் ஆற்றில் ஒரு படகுக்காரனிடம் பேசி அவளை வடக்கே ஏதாவது தொலைவான ஊரில் கொண்டு போய் விடுமாறு சொல்கிறான்,

படத்தில் வரும் மலைச்சாலை உருவாக்க காட்சி
இவள் சாஹேப்புடன் தன்னுடன் படகில் இணைந்து கொள்வார் என நினைக்க, நீலன் அவர் வரமாட்டார்,அவருக்கு சாலை,அதனால் கிடைக்கும் பணம்,அவர் மனைவி,அவர் மகன் தான் முக்கியம்,நீ அவரை மறப்பது தான் நல்லது என்று, பணத்தை அவளிடம் திணித்து கண்காணாத இடம் போகச் சொல்கிறான், ஏற்கனவே உன்னை ஊரும் உறவும் ஒதுக்கியது போலத்தான், எஞ்சியிருப்போரையாவது நிம்மதியுடன் வாழவிடு என கெஞ்சுகிறான் நீலன். அவள் கடைசி வரை நம்பவேயில்லை,சாஹேப்பின் அன்பை இவள் பெற்றதை பொறுக்காத நீலன் தான் இவர்களை பிரிக்கிறான் எனக் கொதிக்கிறாள்,அப்படியென்றால் ஊருக்குள் வா என்று நீலன் இழுக்க வேறு வழியில்லாமல் படகில் ஏறி பயணிக்கிறாள்.

இப்போது சஜ்ஜனியைக் காணவில்லை என்று அவளின் தம்பி மனஸ் மூர் சாஹேப்பின் வீட்டிற்கே தேடி வருகிறான், நீலனிடம் ஏதாவது தெரியுமா? எனக்கேட்கிறான்.இவர்கள் நேற்றே அவள் கிராமத்துக்கு திரும்பி விட்டாளே, என பதிலுரைக்கின்றனர்,

அன்று இரவு அதே போல நாய் குலைக்க,குதிரையும் ஓலமிட சாஹேப்பைத் தேடி யட்சினி போல சஜ்ஜனி நீலனின் அவுட் ஹவுசுக்குள்ளே வந்து குத்துக்கல் போல அமர்ந்து கொள்கிறாள், நீலன் என்னடா ஒண்ட வந்த பிடாரியாக திரும்பி விட்டாளே!!! என பயந்து போகிறான், சத்தம் கேட்டு சாஹேப்பும் அங்கே வர, சஜ்ஜனி ஓடிப்போய் அணைத்துக்கொள்கிறாள், நீலனைப் பற்றி புகார் செய்கிறாள்,சாஹேப் அவளை விலகியவர்,நீலனிடம் சொல்லி நான் தான் உன்னை வெளியூருக்கு அனுப்பச்சொன்னேன், நீ இங்கே இருந்தால் ஊரார் இங்கே வந்து உன்னை, நீலனை, என்னை என் குடும்பத்தையே அழிப்பார்கள், விலகிவிடு என்கிறார், அவரால் அவள் கண்ணை பார்த்து பேசமுடியவில்லை, அதை சாக்காய் வைத்து,என்னை விரும்பவில்லை என்று கண்ணைப்பார்த்து சொல்லுங்கள் என்கிறார்,சாஹேப் நான் உன்னை விரும்பவில்லை என்று சொல்ல,அங்கே நீலனின் ப்ரிட்டீஷ் பிஸ்டால் வெளியே இருக்க ,அதை சட்டேன்று எடுத்து தன் நெஞ்சில் பதித்து சுட்டுக்கொண்டு சரிகிறாள் சஜ்ஜனி.எல்லாம் முடிந்து விடுகிறது,சஜ்ஜனியை தோளில் அணைத்து கேவுகிறார் சாஹேப்.பின் தலை தெரிக்க வீட்டுக்குள் போனவர்.

அங்கே,மூரின் மனைவி கிராமபோனின் பலத்த சத்த இசையுடன் குளியல் தொட்டி நீரில் உல்லாசமாய் குளித்துக்கொண்டிருப்பதால் அவளுக்கு துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை என அறிகிறார்,இவர் அவளிடம் குதிரை லாயத்தின் தாழ்ப்பாள் பெயர்ந்து விட்டபடியால நானும் நீலனும் அதை இரவே சரி செய்யப்போகிறோம், நீ பூட்டிக்கொண்டு தூங்கு என்று சட்டையை மாட்டிக்கொண்டு வருகிறார்,

இப்போது நீலனுக்கும் சாஹேப்புக்கும் பிணத்தை மறைப்பதைத் தவிர வேறு வழியில்லை,சாஹேப்பின் நெறி தவறிய உறவு சஜ்ஜனியின் தற்கொலையில் முடிந்து, ஊராரின் கொலைவெறியை தூண்டி விட்டால் என்ன ஆகும் என அஞ்சுகிறான், சாஹேப் கல்லை கட்டி ஆற்றில் விட்டு விடுவோம் என்று சொல்ல, நீலனுக்கு ஜலசமாதி செய்வது பிடிக்கவில்லை, தற்கொலை செய்துகொண்ட அவளின் ஆன்மா அலையாமல் இருக்க அதை எரியூட்டுவதே சிறந்தது என்கிறான். ஆனால் சாஹேப் அந்த சிதையின் புகை நம்மை காட்டிக்கொடுத்துவிடும், என மறுத்து போர்வையில் சஜ்ஜனியை சுற்றி நிறைய கற்களை அதனுடன் அடுக்கி, அதை ஆற்றில் மூழ்கடிக்கின்றார்

இனி என்ன ஆகும்?
சஜ்ஜனியை தேடும் அவளின் சகோதரனுக்கு சஜ்ஜனியின் சவம் கிடைத்ததா?
சஜ்ஜனி சுட்டுக்கொண்ட நீலனின் துப்பாக்கியை அவர்கள் என்ன செய்தனர்?
தன் விருப்பத்திற்குரிய வேலைக்காரி சஜ்ஜனி காணாமல் போனதை அறிந்த சாஹேப் மனைவி லாரா என்ன செய்தார்?
தன்னிடம் அடிவாங்கி ஓடிப்போன மனைவி சஜ்ஜனியை ரஜத் தேடினானா?
மிகவும் கட்டுப்பெட்டியான அந்த கிராம மக்கள் ஓடிப்போன சஜ்ஜனியைப் பற்றி என்ன நினைத்தனர்?
சாஹேப்பின் ஒரே கனவான அந்த மலைச்சாலைப் பணிகள் நிறைவேறியதா? போன்றவற்றை படத்தில் பாருங்கள்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இரு கண்கள் , பார்வையாளர் நெஞ்சை விட்டு அத்தனை எளிதில் அகலாத படம், படத்தில்  Mark Kilian இசையும் காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உறவாடும் மாயாஜாலத்தைப் பாருங்கள். படத்தில் ராஜா ரவிவர்மா தன் தைல ஓவியங்களில் உபயோகப்படுத்திய எஃபெக்டுகளும், டோன்களும் நந்திதாதாஸின் தோன்றும் ஃப்ரேம்களில் பின்பற்றப்பட்டு,அதை உபயோகப்படுத்தி, அவரை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அத்தனை அழகாக ஒரு சகுந்தலை ஓவியம் போல காட்டியுள்ளார் சந்தோஷ் சிவன்.

படத்தின் ஒளிப்பதிவுக்கு இன்ஸ்பிரேஷனாக பதேர் பாஞ்சாலிக்கு ஒளிப்பதிவு செய்த Subrata Mitra.வின் புகழ்பெற்ற ஆக்கங்களை கிரகித்து உள்வாங்கி காட்சியமைத்திருப்பதும், அது தந்த அற்புதமான ரிசல்டுமே இதன் கூடுதல் சிறப்பு, ராகுல் போஸ் நடிப்பைப் பற்றி ஒருவர் சிலாகிக்காமல் இருக்க முடியாது,பேரலல் சினிமாவின் நம்பிக்கை ஒளி,இவரின் ஜாப்னிஸ் வைஃப், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் வரிசையில் இதுவும் இவரின் நடிப்புக்கு சிறந்த போர்ட்ஃபோலியோ, இவரின் அப்பாவாக திலகன், நண்பனாக ஸ்ரீஜித் சுகுமாரன்,வேலைக்காரி சஜ்ஜனியாக நந்திதா தாஸ் அழகிய வேலைக்காரி வேடத்துக்கென்றே பிறந்தவர் போல,தொடர்ந்து அழகி,1947 எர்த்,பின்னர் இந்தப்படத்திலும் அழகிய வேலைக்காரி வேடம் இவருக்கு, சஜ்ஜனியின் கோபக்கார கணவனாக லால்,மூர் சாஹேப்பின் நல்ல மனைவி லாராவாக Jennifer Ehle என்று மிக அற்புதமான காஸ்டிங், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று மிக அற்புதமான உருவாக்கப்பட்ட படம்.உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படைப்பு.


படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

ஸ்லீப்பிங் ப்யூட்டி [Sleeping Beauty][2011][ஆஸ்திரேலியா][18+]

ஸ்லீப்பிங் ப்யூட்டி என்னும் ஆஸ்திரேலிய நாட்டுப் படம் மீண்டும் பார்த்தேன், இதை வால்ட் டிஸ்னியின் ஸ்லீப்பிங் ப்யூட்டி படத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம், ஐஸ் வைட் ஷட், மல்ஹால்லண்ட் டரைவ் போன்ற படங்களை போன்றே மிகவும் புதிரான படம்,  பார்வையாளர்களுக்கு எழும் பல வினாக்களுக்கு படத்தில் விடை இல்லை, எல்லாம் நம் யூகத்துக்கே விடப்பட்டுள்ளன,மிகவும் பரீட்சார்த்தமான படம்.பெண் இயக்குனர் Julia Leigh ற்கு இது முதல் படம்,லூசி என்னும் பிரதான கதாபாத்திரமாக வந்த  Emily Browning ஆகச்சிறந்த நடிகை.

படத்தின் கதை:-
20 வயது லூசி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கணிதம் இளங்கலை மாணவி, ஒரு சாயலில் சிண்ட்ரெல்லா, அலைஸ், ஸ்னோ ஒயிட் கதாபாத்திரங்கள் போன்ற உடலமைப்பும் கொண்டவள், ஆனால் உறுதியில் மலை போன்றவள். இவளின் படிப்புக்கு பணம் கட்ட யாருமில்லை, அம்மா ஒரு போதை அடிமை, ஆன்லைனில் ஜோதிடம் சொல்பவள், அவளுக்கு பல்கலை மாணவியான இவள் தன் க்ரெடிட் கார்டு எண் கொடுத்து அவ்வப்போது உதவ வேண்டிய நிலை, 

பல்கலையில் பாடம் முடித்தவுடன் மருத்துவக் கல்லூரி ஆராய்சிக் கூடத்தில் சோதனை எலியாக வேலை செய்கிறாள், பின்னே ஒரு காஃபி ஷாப்பில் வேலை,அதன் பின்னே ஒரு ஆஃபீஸில் போட்டோ காப்பி எடுத்து பைண்டிங் செய்யும் வேலை, இறுதியாக இரவு நேர பாரில் கம்ஃபர்ட் கேர்ள், அது தான் ஹைக்ளாஸ் எஸ்கார்ட் வேலை. பணம் சம்பாதிக்க எதிர் படும் எல்லா வேலையையுமே செய்கிறாள். எதிர்ப்படும் எவருடனுமே அருவருப்பின்றி புணர்கிறாள். இவள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளப் பெண்ணும் அவளின் ஓசி ஸ்டே காதலனும் இவளை வெறுக்கின்றனர்,

வீட்டின் கழிவறையை கூட சுத்தம் செய்ய சொல்கின்றனர், அதிலும் குற்றம் குறை கண்டுபிடித்து இவளாக காலி செய்ய வைக்க நேரம் பார்க்கின்றனர். லூசி எல்லாவற்றையும் பொறுத்து போகிறாள், அவளுக்கு அந்த பகாசுர ஆஸ்திரேலிய நகரத்தில் வாழ்க்கை நடத்த அதீத பணம் தேவையாக இருக்கிறது, அதற்கு எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறாள். போதை மருந்து பழக்கம் இருந்தாலும் பேலன்ஸ்டாக இருக்கிறாள். பல ஆண் படுக்கையறை நண்பர்கள் இருந்தும், இதுவரை யாரும் காதலனில்லை

லூசி மிகவும் விரும்பும் ஒரு பேர்ட் மேன் [bird man[ என்பனை நாம் பார்க்கிறோம், அவனை இவள் அடிக்கடிப் போய் பார்க்கிறாள், அவன் போதைக்கு அடிமையாகி மீளமுடியாமல் சிகிச்சையும் எடுக்க வசதியில்லாமல் வாழும் ஆள், அவன் கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடவேண்டும் என்றால் கூட , அதில் ஜின்னையும் இவள் கலந்து தந்தால் தான் சாப்பிடுகிறான், அப்படி ஒரு போதையில் ஊறியவன், ஆனால் அவனிடம் இருக்கும் பறவைகளையும் , விலங்குகளையும் பற்றிய அபாரமான அறிவினால் லூசி ஈர்க்கப்பட்டு , அவனையே சுற்றி வருகிறாள். அடிக்கடி கரும்பையும் தந்து அதைத் தின்ன காசையும் தருவது போல தன்னைத் தந்து வருகிறாள்.

இப்போது தன் பல்கலைகழக சிற்றிதழில் ஒரு வினோதமான விளம்பரம் பார்க்கிறாள், அதற்கு போன் செய்கிறாள், ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பண்ணை வீட்டிற்கு அவர்கள் லூசியை வரச்சொல்ல, அங்கே செல்கிறாள், இவளின் சிறுமியும் அல்லாத இளம்பெண்ணும் அல்லாத உடற்கட்டு கண்டவுடனே க்ளாரா என்னும் ஹைக்ளாஸ் தரகர் பெண்மணிக்கு பிடித்துவிடுகிறது,வழமையான ஆஸ்திரேலிய பெண்கள் போல இவள் உடலில் எங்குமே டாட்டு வரைந்து கொண்டிருக்கவில்லை, முளைக் காம்பிலோ, புருவத்திலோ, தொப்புளிலோ, யோனியிலோ பியர்சிங் என்னும் துளையிடுதல் செய்யாதது க்ளாராவுக்கு வியப்பளிக்கிறது,

லூசியின் தொடையில் ஒரு மரு இருக்க,அதையும் அவள் லேசர் சர்ஜரி செய்து அகற்றியதை அறிகிறாள். க்ளாரா தரபோவது லூசி  ஈடுபட்டிருக்கும் அதே தொழில் தான் ஆனால் வழங்கும் பெயர் தான் வேறு, சில்வர் சர்வீஸ் இன் லிஞ்ஜெரி , டூபீஸ் அணிந்து பணக்கார கணவான்களுக்கு உணவும் மதுவும் பரிமாறுதல், சிலசமயம் எஸ்கார்ட் வேலை இருக்கும் ஆனால்   இவளின் பிறப்புறுப்போ, குதமோ எக்காரணம் கொண்டும் புணரப்படாது என க்ளாரா உறுதியளிக்கிறாள்.

அதற்கு ஒரு மணிநேரத்துக்கு 250 டாலர் என பேசப்படுகிறது, நேரம் தவறாமையும், கேள்வி கேளாமையும், ரகசியம் காத்தலும் மிக முக்கியம், தவறினால் தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் இது தான் நிபந்தனைகள். எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொள்கிறாள் லூசி. இவளுக்கு க்ளாராவின் செலவிலேயே வேக்ஸிங், நெய்லிங் எல்லாம் செய்யப்படுகின்றது.இவளுக்கு மொபைல் போன் செலவினப் படியும் வழங்கப்படுகிறது.

மறுநாளே மொபைலில் அழைப்பு வர தயாரானவள்,அதே பண்ணைவீட்டுக்கு சொகுசு காரில் அழைத்து வரப்படுகிறாள்,அவளுக்கு சாரா என்று பெயரும் சூட்டபடுகிறது, அன்று அவளுக்கு வயதான கிழ கணவான்களுக்கு உணவு பரிமாறும் வேலை என்று அறிகிறாள், க்ளாராவும் அங்கே சக பறிமாறும் ஊழியை, அவளுடன் மூன்று பேரிளம் பெண்கள் கருப்பு நிற டூபீஸ் உடையில் மார்பகங்கள் மட்டும் வெளியே துருத்தித் தொங்க உணவு மேசைக்கு பின்னர் தயாராக நிற்கின்றனர்.

 இவளுக்கு மட்டும் வெள்ளை டூபீஸ் உடை ,மார்பகம் மூடியிருக்க காம்புகள் மட்டுமெ வெளியே தெரியும் படி, இலை மறைவு காய் மறைவாக வடிவமைக்கப்பட்ட உடை, ஏற்கனவே நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கும் இவளிடம் உன் யோனியின் கன்னித்திரையின் வண்ணத்திற்கு பொருந்தும் படி உன் உதட்டுக்கு சாயம் பூசு என்கிறாள் க்ளாரா, இவள் ஆச்சர்யப்பட்டவள், அதை உடை விலக்கிப் பார்க்காமலே ஏதோ ஒரு வண்ணம் உதட்டுக்கு பூச,அவளை செல்லமாய் இது விளையாட்டல்ல என்று எச்சரித்தவள்,அவளின் உடையை விலக்கிப்பார்த்து பின்னர் நயத்துடன் உதட்டுக்கு சாயம் பூசுகிறாள். இவளின் தோற்றம் உணவு மேசையில் இருக்கும் கிழகணவான்களை வெகுவாகக் கவர்கின்றது,

க்ளாரா அன்றைய மெனுவை வாசிக்க, மூவர் உணவு இடது புறமாக பறிமாற,இவள் மதுவை இடது புறமாக பறிமாறி வருகிறாள்,அன்றைய தினம் அங்கே ஒரு கிழகனவானின் மனைவியின் நினைவு தினம் என்று நாம் அறிகிறோம்,அவள் நினைவாகவே வாழும் அந்த கிழம்,சக கிழங்களை கூட்டி இதுபோல ஒரு நிறைவேறாத ஆசையை க்ளாராவின் சில்வர் சர்வீஸ் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறது,அவளுக்கு கவர் நிறைய டாலர்கள் சம்பளமாக தரப்பட்டு வீட்டிலும் சொகுசு காரில் கொண்டு விடப்படுகிறாள்.

வீட்டுக்கு வந்தவள் உலகம் செழிக்க உதவும் பணத்தை எண்ணி வியக்கிறாள்,அதை அடுக்கியவள்,100 டாலர் பில் ஒன்றை கொளுத்தியும் பார்த்து மகிழ்கிறாள்,அதை சம்பாதிக்க தன்னை பணம் படுத்திய பாட்டிற்கு பதிலடி தரும் விதமாக அதை கொளுத்தியதாக நாம் அறிகிறோம்.

இப்போது வழக்கமாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்கிறாள் லூசி, வீட்டு உரிமையாள பெண்மணி இவளுக்கு ஏதாவது குறை சொல்லி கடிதம் எழுதி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளாள், இவள் போட்டோ காப்பி எடுக்கும் ஆஃபீசில் இவளுக்கு வேலை தரும் பெண்மணியும் இவளை வேலையை விட்டு தூக்குவதை குறியாக வைத்துள்ளாள். இவளுக்கு மீண்டும் க்ளாராவிடமிருந்து அழைப்பு வருகிறது, இப்போது உணவு பறிமாறுதல் வேலை இல்லை, உடம்பு பறிமாறுதல், ஆனால் இவளின் பிறப்புறுப்போ, குதமோ புணரப்படாது என்று மீண்டும் உறுதியளிக்கிறாள்.

இவளுடன் இரவை கழிக்கப்போகும் கனவான் ப்ளாக்மெயில் செய்யப்படாமல் இருக்க இவளுக்கு புரிதலின் பேரில் மயக்க மருந்து கலந்த தேநீர் தரப்படுகிறது, பின்னர் ஆடை களைந்தவள் ஓர் பெரிய அறையில் இருக்கும் பெரிய கட்டிலில் போர்த்திப் படுக்கவைக்கப்பட்டு, தூக்கத்தில் ஆழ்த்தப்படுகிறாள். அங்கே சென்ற வாரம் உணவு பறிமாறிய அதே பணக்கார கிழம் வந்து,ஆடை களைந்து இவளை தடவி, தழுவி பின்னர் அருகே படுத்து விட்டு விடியலில் எழுந்தும் போகிறது, இவளுக்கு பெரும் பணம் சம்பளமாக கிடைக்கிறது. இவளுக்கு இரவு தூக்கத்தில் நடந்தது எதுவுமே நினைவில்லை, சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கிறது,

இப்போது இவளின் வீட்டு உரிமையாள பெண்ணும் அவளின் ஓசி காஜு காதலனும் எதிர்பட்டு  இவளுக்கு அறையை காலி செய்ய 2 வாரம் அவகாசம் தருகின்றனர். இவளுக்கு வாழ்க்கையில் எதற்குமே புகார் இல்லை, வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்பவள்.மிக உயர்தர கம்யூனிட்டியில் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுக்கிறாள், ஆனால் இண்டீரியர் எதுவுமே செய்யவில்லை, அப்படியே விட்டுவிடுகிறாள், இப்போது மீண்டும் தான் மிகவும் விரும்பும் பேர்ட் மேனை சென்று சந்திக்கிறாள், அவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்வாயா? எனக் குழந்தை போல கேட்கிறாள், அவனும் குழந்தை போல உறுதி அளிக்கிறான்,

இவனின் டீடாக்ஸிஃபிகேஷன் சிகிச்சை செலவை தான் ஏற்கிறேன்,தன்னிடம் அதற்கான பணம் இருக்கிறது என தேற்றுகிறாள்,அவன் டீடாக்ஸிஃபிகேஷன் சிகிச்சை மீது நம்பிக்கை போய்விட்டதென்று சொல்கிறான்,டிவியில் அப்போது ஹாப்பிங் மவுஸ் எனப்படும் கங்காரு ராட் பற்றிய ஆவணப்படம் காட்டப்பட,இவர் அதன் குணநலன்கள் பற்றி இவளுக்கு விளக்கிச் சொல்கிறார்,இவள் ஆதுரத்துடன் அணைத்துக்கொள்கிறாள்.

இப்போது மீண்டும் க்ளாரா அழைக்க,சோதனைச்சாலையில் தன் தொண்டைக்குள் இருந்து வயிறு வரை சொருகப்பட்ட குழாயை பிடுங்கிவிட்டு மொபைலை எடுத்து பேசிவிட்டு மாலையில் அதே பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் செல்கிறாள்,அதே மருந்து,அதே கட்டில்,அதே மயக்கம்,வேறு ஒரு தடித்த கிழம்,அதற்கு புணறுதலில் மிகுந்த விருப்பம்,ஆனால் க்ளாராவின் நிபந்தனையின் பேரில் கட்டுப்படுத்திக்கொள்கிறது,தூங்கும் அவளை பலவாறாக நக்கி சுவைக்கிறது,சிகரட்டை பற்றவைத்து இழுக்கிறது,

மீண்டும் சுவைக்கிறது,புணர வழியில்லையே என்ற கோபத்தில் தூங்கும் இவளின் காது மடலுக்கு பின்னால் சிகரட்டால் சூடு வைக்க,அவள் ஆழந்த தூக்கத்தில் எறும்பு கடித்தாற் போல முனகுகிறாள்,பின்னர் கிழம் இவளை பலவாறாக தடவி தழுவுகிறது,விடியலில் எழுந்தும் போகிறது,இவளுக்கு பெரும் பணம் சம்பளமாக கிடைக்கிறது.அன்றும் இவளுக்கு இரவு தூக்கத்தில் நடந்தது எதுவுமே நினைவில்லை,சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கிறது,

இப்போது லூசி தான் போட்டோ காப்பி எடுக்கும் ஆஃபிஸுக்கு வேலைக்கு போகிறாள், அங்கே இவளுக்கு மயக்கமாக இருக்க தரையிலேயே படுத்துக்கொள்கிறாள்,அதை இவளின் அதிகாரி பெண், இவளைப் பார்த்து விட்டு வழக்கம் போல கறுவுகிறாள். இரவுகளில் லூசிக்கு தூக்கமே வருவதில்லை, எப்போதுமே பிறந்த மேனியாக தூங்கும் இவளுக்கு,மேற்படி சம்பவங்களுக்கு பின்னர் ஆடைகளின்றி படுத்தால் தூக்கம் சிறிதும் வருவதில்லை, 

மறுநாள் மீண்டும் க்ளாரா மொபைலில் அழைக்க,கணித வகுப்பில் இருந்து பாதியிலேயே அடித்துபிடித்துக் கிளம்பி,அதே பண்ணை வீட்டுக்கு அதே சொகுசு காரில் செல்கிறாள்,அதே மருந்து,அதே கட்டில்,அதே மயக்கம், ஆனால் வேறு ஒரு தடித்த குடுமி போட்ட கிழம்,WWF ல் வரும் வீரன் போல இருக்க,அவனிடம் இப்போது கூடுதல் நிபந்தனையாக நோ பெனட்ரேஷன்,நோ மார்க்ஸ் என்றும் உறுதியாகச் சொல்கிறாள் க்ளாரா,

கிழம் மயக்கத்திலிருக்கும் இந்த மலரைப் பார்த்ததுமே துள்ளிக் குதிக்கிறது, அவளை தூக்கி தட்டாமாலை சுற்றுகிறது, கவ்வுகிறது, கீழே போடுகிறது, கட்டிலில் வைத்து உருட்டுகிறது, விடியலில் எழுந்தும் போகிறது, இவளுக்கு பெரும் பணம் சம்பளமாகக் கிடைக்கிறது. அன்றும் வழமையாக இவளுக்கு இரவு தூக்கத்தில் நடந்தது எதுவுமே நினைவில்லை,சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கிறது,காரில் செல்லும் போதே மிகவும் களைப்பாக உணர்கிறாள்.

இப்போது முதல் வேலையாக சிறிய ஸ்பை கேம் ஒன்றை வாங்குகிறாள். கணித வகுப்பில் வைத்து அது இயங்குவதை சோதிக்கிறாள். அதன் நேர்த்தியில் திருப்தியுருகிறாள்,பின்னொரு சமயம் ரயிலில் பயணிக்கையில் லூசி, அங்கே அநேக இடம் காலியாயிருந்தும் ,அங்கே அசந்து தூங்கும் ஒரு பெண்மணியின் அருகே நெருங்கி அமர்கிறாள், அவள் தூங்குவதை நோட்டமிட்டவள்,அவளின் தாடையை இறகு போல வருடுகிறாள். தூக்கம் ஒரு வரமானது, தன்னைச் சுற்றி நடப்பதே ஒருவர் அறியாமல் என்னமாய் ஒரு மயக்கத்தில் ஆழ்த்துகிறது என்று எண்ணி வியக்கிறாள்,

அவளுக்கு மொபைலில் மீண்டும் அழைப்பு வர, இந்த முறை இவளின் அபிமான பேர்ட் மேன் பேசுகிறார், தான் நிறைய மாத்திரைகள் விழுங்கியிருப்பதாகவும், உடனே இவளைக் காணவேண்டும் என்கிறார், அங்கே அவள் பேர்ட்மேன் செத்துக் கொண்டிருப்பதை காண்கிறாள், அவர் இவளின் சட்டையை அவிழ்க்கச் சொல்ல, அவிழ்த்து விட்டு அவருடனே படுத்துக் கொள்கிறாள், பேர்ட் மேன் இவளை தழுவிக்கொள்ள,இவள் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுக்கிறாள்.அவருக்கு விருப்பமில்லாத வாழ்க்கைக்கு அவரை இவள் கட்டாயப்படுத்தவில்லை.முதலுதவிக்கு கூட்டிசெல்லவில்லை என அறிகிறோம்.

இப்போது பேர்ட் மேனின் தேங்க்ஸ் கிவிங் [காரியம்] நிகழ்ச்சி நடக்கின்றது, அங்கே வைத்து இவனின் பழைய நண்பன் ஒருவனை காண்கிறாள், அங்கே மது அருந்துகையில் என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா? என மீண்டும் ஒரு குழந்தையைப் போலக் கேட்கிறாள்?அவன் இவளிடம் பாம்பு போல சீறுகிறான், நீ உன் வாழ்வின் பொன்னான தருணங்களை இழந்துவிட்டாய், உன் சித்தம் போகும் போக்கிற்கு நீ இன்னும் நன்றாக அனுபவிப்பாய், பார்,என்று இகழ்கிறான்.

இப்போது தான் போட்டோ காபி செய்யும் ஆஃபீஸுக்குள் லூசி தாமதமாக நுழைய, அங்கே இவளின் அதிகாரியே காப்பியரில் வேலை செய்கிறாள், இவளிடம் உன்னை வேலையை விட்டு நான் தூக்கி விட்டேன் என்று அகந்தையுடன் , கூற இவள் அகந்தையுடன் நன்றி என்கிறாள், தான் வேலை செய்யும் காஃபி பாருக்கு சென்று அன்று வேலை செய்த பின் ,மேசை நாற்காலியை துடைத்து அடுக்குகிறாள், பின்னர் அதன் உரிமையாளன் தந்த போதை மாத்திரைகளை இருவரும் உட்கொண்டபின்  நீச்சல் குளத்தில் நீந்துகின்றனர்,அடுத்து தன் ஸ்டுடியோவில் சென்று புணர்ந்த பின் ,நீண்ட நாளுக்கு பின்னர் ஆடைகளின்றி நன்கு உறங்குகிறாள் லூசி.

 இப்போது விடியலில் மொபைல் அழைப்பு வர,வெளியே சொகுசு காரின் டிரைவர் காத்திருப்பதை க்ளாரா அவளுக்கு  சொல்கிறாள்,2 நிமிடத்தில் தள்ளாடியபடி தயாராகிறாள் லூசி,இவளுக்கு முந்தைய நாள் உட்கொண்ட போதை மருந்தின் பிடி இன்னும் விலகியிருக்கவில்லை,எப்படியோ அவள் அந்த கேமராவையும் எடுத்து பையில் போட்டுகொள்கிறாள்,இது போல அவள் அவஸ்தை பட்டதில்லை, முதல் முறையாக உடம்பு ஒவ்வாமை கொண்டிருக்கிறது காரை ஓரம் நிறுத்தி  வாந்தி எடுக்கிறாள். இன்று என்ன நடக்கும்? தான் என்ன செய்யப்படுகிறோம் என்பதை எப்படியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று உறுதி பூணுகிறாள்.

இனி என்ன ஆகும்?!!! இவள் கேமராவை நிறுவி அந்த அறைக்குள் அரங்கேறும் ரகசியத்தை தெரிந்து கொண்டாளா? இவள் உடம்பு வழமையான அந்த போதை தரும் தேநீரை ஏற்றுக்கொண்டதா? அவள் அந்த நிழல் உலகில் இருந்து மீண்டு வந்தாளா? போன்றவற்றை படத்தில் அவசியம் பாருங்கள். 

ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஐஸ் வைட் ஷட், டேவிட் லின்ச்சின் மல்ஹால்லண்ட் ட்ரைவ், 13 ட்ஸமெட்டி போன்றவற்றை ஒத்த ஒரு கதைக்களமும் , இயக்கமும், படம் பார்க்கும் போது நமக்கு நிறைய கேள்விகள் பிறக்கும், அவற்றிற்கு நான் என்னளவில் தீர்வு கண்டு எழுதியும் உள்ளேன், டிஸ்க்ரேஸ், ப்யூட்டிஃபுல் கேட், ரெட் டாக் போன்ற ஆஸ்திரேலிய சினிமாக்கள் பற்றி ஏற்கனவே இந்த தளத்தில் எழுதியுள்ளேன், அதையும் பாருங்கள், உலக சினிமாவில் ஆஸ்திரேலிய சினிமாவின் பங்கு மெச்சத்தக்கது, அங்கும் வெகுஜன சினிமாக்கள் வருகின்றன என்றாலும் வெளியாகும் 10க்கு 5 சினிமாக்கள் உலகசினிமாவாக இருப்பதே அதன் பலம் மற்றும் பெருமையாக நினைக்கிறேன்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து;-

ஆமென். [Amen.][2002][ ஃப்ரான்ஸ்]

யக்குனர் காஸ்டா கவ்ராஸின் ஆமென் [ஃப்ரென்சு] படம்  இன்று மீண்டும் பார்த்தேன், யூத இனப்படுகொலைகளைப் பற்றி இதுவரை வெளிவந்த சுமார் 60 உலகப்படங்களில் மிகவும் முக்கியமான படம், இனப்படுகொலை பற்றி மிக  விரிவாக அலசுகிறது படம், இதே இயக்குனரின் EDEN IS WEST என்னும் தன் நாட்டினை முற்றிலும் தொலைத்து ஃப்ரான்ஸுக்குள்  சட்டவிரோதமாக குடிபெயர்ந்து அனுதினமும் செத்து செத்து பிழைக்கும் அகதியின் கதையையும் அவசியம் பாருங்கள்,

போர் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தினால் உலகெங்கிலும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து இன்னலுறும்  ஏழை மனிதனின் அவதியை நேரில் நாம் கண்ணுறுவது  போல் சித்தரித்திருப்பார், எந்த நாட்டின் அகதியையும் அதில் ஒருவர் பொருத்திப் பார்க்கலாம். இயக்குனரும் போரினால் ஃப்ரான்ஸுக்குள் புலம்பெயர்ந்த ஒரு அகதி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா காட்சிகளின் மீடியம் என்னும் கூற்றுக்கேற்ப  முதல் காட்சியிலேயே ஜெனிவா நாட்டில் இயங்கிய லீக் ஆப் நேஷனின் , யூத இனப் படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்குப் பரைசாற்றுகிறது படம். 1936 ஜெனிவா, ஸ்டீஃபன் லக்ஸ் என்னும் யூதர் ஒருவர் சபைக்குள்ளே அதிரடியாக நுழைகிறார், நாஜி ஆக்கிரமிப்பு போலந்தில் யூதமக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படுகின்றனர் , இனியேனும் நடவடிக்கை எடுங்கள் நியாயமாரே!!!. என்னும் வாசகங்கள் கொண்ட காகிதங்களை சபையினரை நோக்கி வீசி எறிகிறார், உங்கள் இதயத்தை தொட எனக்கு வேறு வழி தெரியவில்லை, என்று தன் துப்பாக்கியால் நெஞ்சில் குறிவைத்து சுட்டுகொண்டு சரிகிறார், சபையினர் நிலைகுத்தி நிற்கின்றனர், ஸ்டீஃபன் லக்ஸ் பற்றி படிக்க ,பின்னர் படம் ஜெர்மானிய கத்தோலிக் மிஷனரியின் யூத இனப்படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்கு மெல்ல பரைசாற்றுகிறது,

அடுத்ததாக ஹிட்லரின் ஆணையின் பேரில் ஜெர்மனி எங்கிலும் இருந்த ஊனமுற்றோர், மனநிலை குன்றியோர், பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் ஒன்று திரட்டப்பட்டு கருணைக்கொலை என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக அறையில் அடைத்து, கார்பன் மோனாக்ஸைடு வாயு உட்செலுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், குடும்பத்தாருக்கு அவர்கள் உடல்கள் கூட தரப்படவில்லை,மரணச் சான்றிதழ் அறிக்கையும், சாம்பல் ஜாடியும் மட்டுமே தரப்படுகிறது, உலகப்போரில் அதிரடியாக போராடிவரும் ஜெர்மனி நாட்டின் உடனடி நலனுக்கும் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும்  ஹிட்லரின் இந்த நடவடிக்கை மிக அவசியமானது என்று எல்லா சர்ச்சுகளிலும் வாராந்திரத் தொழுகையின் போது கத்தோலிக்க கிருஸ்துவ மிஷனரியினர் மூளைச்சலவையை செவ்வனே செய்கின்றனர், அதையும் மிக அருமையாக அலசுகிறது படம். பின்னர் நேசநாடுகள் அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸின், யூத இனப்படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தை நமக்கு காட்சிகளின் மூலமாகவும் வசனங்களின் மூலமாகவும் மெல்ல பறைசாற்றுகிறது,

நடப்பது இனப்படுகொலை எனத்தெரிந்தும் எங்கே நாம் எதிர்த்தால் ரோமாபுரியும் வாடிகனும் கையகப்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்படுமோ? என்று அஞ்சி எந்த முடிவுமே கடைசி வரை எடுக்காத போப் பியஸ் XII [Pope Pius XII] ன்  யூத இனப் படுகொலைகளின் மீதான கள்ள மௌனத்தையும் பறைசாற்றுகிறது. இப்படி நுனி முதல் ஆணி வேர் வரை அலசிய படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும்,

கர்ட் கெர்ஸ்டெய்ன்-ஸைக்ளோன் -B டின்களுடன்
நாஜிப்படையில் மரைன் எஞ்சினியராக வேலைக்கு சேர்ந்த கர்ட் கெர்ஸ்டெய்ன் இங்கே நமக்கு அறிமுகமாகிறார், இவர் உக்கிரமான போரில் ஈடுபட்டிருக்கும்  ஜெர்மனி ராணுவத்துக்கு ஏற்ற இன்றியமையாத ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கிறார், எதிரி நாட்டு ராணுவத்துடன் போராடும் விரர்கள் நல்ல குடிநீர் இன்றி நோயால் பீடிக்கப்பட்டு இறந்து போவதை தடுக்க இவர் போர்க்களத்தில் மோட்டார் துணையால், மற்றும் கை பம்பினால் இயங்கும் கழிவு நீரை குடிநீராக மாற்றும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார்,அது அவருக்கு குறுகிய காலத்தில் மிகுந்த புகழைப் பெற்றுத் தருகிறது.


இன்னொரு ஆராய்ச்சியாக ஸைக்ளோன் -பி என்னும் மிகக்கொடிய அபாயகரமான ரசாயனத்தைக் கொண்டு ,அப்போது வேகமாய் பரவி வந்த டைபஸ் என்னும் விஷகாய்ச்சல் உண்டு பண்ணும் பேரசைட்டுகளை அழிக்கலாம் என்று ஒரு ஆய்வறிக்கையையும் சமர்ப்பிக்கிறார், அதாவது வீரர்கள் தங்கும் பேரக்ஸுகளை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறிய அளவில் அந்த பேரக்ஸின் கூரையில் உள்ள திறப்பில் இந்த ரசாயனத் துகளை கொட்டவேண்டும்,ஒரு மணி நேரம் கழிந்த நிலையில் மூடிய அறைக்குள்ளே காற்றில் பரவிக்கலந்த ஸைக்ளோன் -பி உதவியால் அந்த பேரக்ஸ் கூடமே கிருமிகளற்றுப் போயிருக்கும்,இதனால் வீரர்களுக்கு டைபஸ் நோய்தொற்றை அடியோடு குறைக்கலாம் என்பது தான் இவரின் மற்றொரு ஆராய்ச்சி,

இப்போது நாஜி அரசு நடத்தும் கருணைக்கொலை முகாமை நாம் திகிலுடன் பார்க்கிறோம்,  இப்போது ஒரு மிகக் கொடூரமான இனவெறி கொண்ட விக்டர் ப்ராக் என்னும் நாஜி டாக்டரும் அங்கே நமக்கு அறிமுகமாகிறார் ,கர்ட் கெர்ஸ்டெயின் அக்கா மகள் பெர்த்தா மனவளர்ச்சி குன்றியவள், அவளும் அந்த கருணைக்கொலை ஸீஸனில் கூட்டிவரப்படுகிறாள், அக்குழந்தைக்கு அந்த நயவஞ்சக டாக்டரை எதனாலோ பிடித்துப்போகிறது,முகம் பார்த்து சிரிக்கிறாள்,அவனும் பொய்யாய் சிரிக்க, அவளின் ரிப்போர்டுகளை இன்னொரு டாக்டர் அவனிடம் காட்டி ,என்ன இவள் செலக்டடா?என்று வினவ!!!, அந்த டாக்டர் கண்களை சுருக்கி,தலையை வேகமாக ஆமோதிப்பது போல அசைப்பான், அக்குழந்தை என்னவோ தன்னை அவர்கள் விளையாடக்கூட்டிப் போவது போல நினைத்துக் கொண்டு அந்த மெடிகல் ரெகார்ட் ஃபைலை மார்போடு தழுவிக்கொண்டு மரண வரிசையில் செல்லும். மிகவும் கனமான காட்சி அது.

கர்ட் கெர்ஸ்டெய்னின் ஸைக்ளொன் - பி கொண்டு டைபஸ் விஷகாய்ச்சல் பரப்பும் கிருமிகளை அடியோடு அழித்தல் என்னும்  ஆராய்ச்சி மிகவும் வரவேற்பை பெறுகிறது, ஆனால் அதில் ஒரு பெரிய மாற்றமாக, விஷமக்கார நாஜிப்படை அதிகாரிகள்,ஆக்கபூர்வமான அதை அழிவுக்கு பயன் படுத்த விழைகின்றனர், இவரின் ஆராய்சிகளை சற்றே மேம்படுத்தி மின்னல் வேகத்தில் கேஸ் சேம்பர்கள் போலந்தில் நிறுவப்படுகின்றன,

அதில் முதன் முதலாக ஒரு கேஸ்சேம்பருக்கு இவரை அனுப்பி பாரவையிடச் செய்கின்றனர் நாஜி உயர் அதிகாரிகள், இவர் வெளியே இருந்து பார்க்கையில் அது ஒரு பேரக்ஸ் போன்றே இருக்கிறது,கதவில் உள்ள கண்ணாடி துவாரம் வழியே பார்க்கையில் இவருக்கு உள்ளம் கொதிக்கிறது, இதயமே நின்று விடுவது போல உணர்கிறார், உள்ளே நூற்றுக்கணக்காணோர் அடைபட்டிருக்க, அனைவருமே தலைமுடியை ஒட்ட வெட்டப்பட்டு, அம்மணமாக்கப்பட்டிருக்கின்றனர்,

ஒரு காட்சியாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, மகன், மகள், பேரக்குழந்தைகள் என கைகோர்த்த படியே இறுக்க அணைத்துக் கொண்டிருக்கின்றனர், நீரால் முதலில் குளிப்பாட்டப்பட்ட , அவர்கள் மீது ஸைக்ளோன் -பி  கூரையின் திறப்பு வழியே, கவசமுகமூடி அணிந்த நாஜிக்களால் கொட்டப்படுவதையும், அவர்கள் மூச்சுத்திணறி, கீழே கூட விழ முடியா வண்ணம் அடைபட்ட கூட்டத்தின் மீதே சாய்ந்து இடிபாடுகளில் சிக்கி இறப்பதையும் காண்கிறார். மிகவும் அருவருப்புக்கும் , கையாலாகாத் தனத்துக்கும் உள்ளானவர், உடனே ஜெர்மனிக்கு செல்லும் ரயிலில் முன்பதிவு ஏதும் இன்றி ஏறுகிறார், அங்கே பரிசோதகர் இவரின் அதிர்சிக்குள்ளான தோற்றம் கண்டு உடம்பு சரியில்லையா?!!! என வினவ?ஏன்?  நாஜி அதிகாரி  ஒருவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகாதா என்ன? என்று பதிலுரைக்கிறார்.

உலகமே ரயிலில் பயணிக்கிறது, ரயிலில் இடமில்லை, அதோ அங்கே நடைபாதையில் ஸ்விஸ் நாட்டு தூதுவர் இருக்கிறார், அவருடன் இணைந்து கொள்ளுங்கள் என்கிறார் பரிசோதகர். அவர் அந்த ஸ்விஸ் நாட்டு தூதுவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அன்று மட்டும் 3000 பேர் கேஸ் சேம்பரில் அடுத்தடுத்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டதை ஆவேசத்துடன் பகிர்கிறார். அதற்கு உண்டான ஆதாரங்களான ரசீதுகளை,வரைபடங்களை அவரிடம் தந்து லீக் ஆப் நேஷனின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகிறார்.


தெரிந்தோ தெரியாமலோ இனப்படுகொலை துவங்கிய ஆரம்ப நாட்களில் நாஜிப்படை உயர் அதிகாரிகள், அடிமட்ட அதிகாரிகள் , இனப்படுகொலை கூடத்தை வடிவமைத்த கட்டிடக்கலை வல்லுனர் போன்றோரின் சந்தேகங்களுக்கு இவர் மிக அருமையாக பதிலுரைக்கிறார். அதன் மூலம் ப்ரேக் நாட்டில் நூற்றுக்கணக்கான ஸைக்ளோன் -பி தயாரிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன, இவருக்கு புலி வாலைப் பிடித்த கதையாக இவரால் நாஜிப்படைக்கு உண்மையாக நடக்கவும் முடியவில்லை, இனப்படுகொலைக்கு சாட்சியாகவும் இருக்கவும் மனமில்லை,


இப்போது ஜெர்மனியில் இருக்கும் தலைமை கத்தோலிக்க கிருஸ்துவ மிஷனரியின் குருமாரை நேரில் சென்று யூத இனப்படுகொலையின் ஆதாரங்களையும் தன் விலாச அட்டையுடன் கொடுக்க முயல,அங்கே இவரை ஏசுகின்றனர், எள்ளி நகையாடுகின்றனர், இவரின் விடாப்பிடியான தர்க்கங்களின் முடிவில் நான் ஏதாவது செய்யப்பார்க்கிறேன் ,என்று வெளியே அனுப்பி கதவையும் சாத்துகின்றனர், கிருஸ்துவ மிஷனரியினருக்கு, ஜெர்மானிய கத்தோலிக்கர்கள் மற்றும் ரய்ச்சின் காணிக்கையாக பெரும்பொருள் சேருகின்றது, அதை அவர்கள் எக்காரணத்திற்காகவும் இழக்க தயாராகவே இல்லை,


ஆகவே இவரை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. இதனாலெல்லாம் மனம் தளர்ந்துவிடவில்லை கெர்ஸ்டெய்ன். தன் அண்டை வீட்டாரை, நண்பர்களை, நம்பிக்கையான அரசு அதிகாரிகளை, தான் வழிபடும் சர்ச்சின் தலைவர், பொருளாளர் என தன் வீட்டிலேயே ரகசிய கூட்டம் நடத்தி நடந்து வரும் இனப்படுகொலையை தடுக்க உதவி கேட்கிறார். யாரும் ஒத்துழைக்கவேயில்லை.

இப்போது ரிக்கார்டோ ஃபோன்டானா என்னும் முக்கிய கதா பாத்திரத்தை நாம் பார்க்கிறோம், இவர் இளம் மத குருமாராக பட்டப்படிப்பு முடித்து,பெர்லினில் இருக்கும் கிருத்துவ மிஷனரியின் தலைமை மதகுருமாரிடம்,உதவியாளராக பணிபுரிபவர், இவரின் குடும்பம் காலம் காலமாக வாடிக்கன் மடாலயத்தில் பணிசெய்து வருவதால்,அவர் தந்தைக்கு போப்பிடமே மிகவும் செல்வாக்கு இருக்கிறது, அவர் எளிதாக போப்பை பார்த்து பேசிவிடவும், யாரையும் கூட்டிப்போய் அறிமுகம் செய்யவும் முடியும். அன்றைய தினம் கர்ட் கெர்ஸ்டெய்ன் தான் கேஸ்சேம்பரில் கண்ணுற்றவற்றை புகாராக அளிக்கும் போது இவரும் உடனிருக்கிறார். ஒரு எஸ் எஸ் அதிகாரி நாஜிக்களைப்பற்றி மிக தைரியமாக புகார் அளிக்கிறாரென்றால் அந்த புகாரில் இருக்கும் நம்பகத்தன்மையை இவர் உணர்கிறார்.

அங்கே கர்ட் கெர்ஸ்டெய்ன் விட்டு  வந்த விலாச அட்டையை எடுத்து பாதுகாக்கிறார்.  பின்னர் ஒரு நாள் கர்ட் ஹெர்ஸ்டெய்ன் வீட்டுக்கு வந்து நட்பாகிறார், தன்னால் முடிந்த வரை இனப்படுகொலையை களைவதற்கு உதவுகிறேன் என்று உறுதியளிக்கிறார். தன் தலைமையிடம் கூட சொல்லாமல் வாடிகன் செல்கிறார். அங்கே நேசநாடுகளின் தூதுவர்கள் ,பெரிய அரசியல் தலைவர்களுடன் உரையாடும் தன்  வாய்ப்பை தந்தையின் மூலம் பெறுகிறார்.இருந்தும் பலனில்லை.


இவரின் புகார்களை கேட்ட யாருமே அதை  தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களின் மேலான உடனடி நோக்கம் கடவுள்மறுப்பு கம்யூனிச ரஷ்யா ஜெர்மனியுடன் நடக்கும் உக்கிரமான போரில் தோற்கடிக்கப் படவேண்டும், போரை முடிவுக்கு கொண்டு வந்த நல்ல பெயர் அனைத்தும் அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸ் மூவருக்கே கிடைக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. சிறிதும் மனம் தளராத ரிக்கார்டோ ஃபோன்டானா வாடிகன் திருச்சபையில் போப் தரிசனம் தரும் தர்பாருக்குள் அதிரடியாக நுழைகிறார், அங்கே பக்தர்கள் ஒவ்வொருவராக போப்பிற்கு தண்டம் செலுத்தி வணங்கி, அவர் கையை முத்தமிட இவரும் அதே வரிசையில் இணைகிறார், போப்பை வணங்கியவர்   இனப்படுகொலை தீவிரத்தையும், போப் சொன்னால் ஜெர்மானிய கத்தோலிக்கர்கள், மற்றும் மிஷனரிகள்,நேச நாடுகள் அதை செவிமடுத்து கேட்க இருக்கும் வாய்ப்பையும் தாழ்மையுடன் நினைவூட்டுகிறார்,

எல்லாவற்றையும் கேட்ட போப், இத்துயரமான போர் சூழலில் பலியாகும் ஒவ்வொரு உயிருக்கும் என் இதயம் ரத்தத்தை கண்ணீராக விடுகிறது,நாட்டு மக்களின் நன்மைக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அதை திருச்சபை மூலம் செய்வோம், நீ உடனே பெர்லினுக்கு திரும்பி உன் திருச்சபை காரியங்களை கவனி என்கிறார். ரிக்கார்டோ ஃபோன்டானா மனம் மாறவில்லை, சதா இனப்படுகொலைகளை தடுப்பது பற்றியே சிந்திக்கும் இவரை தேற்ற அவரது தந்தை உனக்கு ஒரு ஆச்சரியமளிக்கும் செய்தி சொல்ல இருந்தேன், ஆனால் நீயே முந்திக்கொண்டாய், வரும் கிருத்துமஸ் நன்னாளில் போப் வழங்கும் உரையில் யூத இனப்படுகொலை பற்றிய கண்டனமும் வருத்தமும் இடம் பெற்றிருக்கும் ,என்று தெம்பூட்டி அவரை திரும்ப பெர்லினுக்கு அனுப்புகிறார்.


இப்போது கர்ட் கெர்ஸ்டெய்னுக்கு நாஜிப்படையில் தலைமை லூட்டினென்ட் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கிறது, விருப்பமே இல்லாமல்,எல்லா கேஸ் சேம்பருக்கும் ஸைக்ளோன் -பி ரசாயன டப்பாக்களை பார்வையிட்டு, அங்கீகரித்து விலைக்கு வாங்குவது இவரது வேலை, இவர் இனப்படுகொலையை குறைக்கும் வண்ணம் தன் பணிக்காலத்தில் நிறைய ஸைக்ளோன் -பி சரக்குகளை அவை தரமாயிருந்தாலும் வேண்டுமென்றே தரமில்லாதவை,செல்லாது,செல்லாது என்று திருப்பி அனுப்புகிறார், தன்னால் ஆன இந்த ஒரு துரும்பை கிள்ளிப்போட்டு, இன்னும் அதிகம் பேர் ஒரேநாளில் மடிவதை சற்றே தள்ளிப்போடுகிறார்.

இப்போது ரிக்கார்டோ ஃபோன்டானா கர்ட் கெர்ஸ்டெய்னை சந்திக்கிறார். போப் வரும் கிருத்துமஸ் நன்னாளில் ஐரோப்பா  மக்களிடம் ரேடியோவில் வாழ்த்து செய்தி தரும் போது, யூதர்களின் இனப்படுகொலை குறித்த கண்டணத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்வார் என்று நம்பிக்கை அளிக்கிறார், ஆனால் கிருத்துமஸ் நன்னாளில் போப்பின் லத்தீன் மொழி வாழ்த்து செய்தியை வாட்டிகன் ரேடியோ ஒலிபரப்ப, அதை ரிக்கார்டோ ஃபோன்டானா ஜெர்மனில் மொழிபெயர்த்து கர்ட் கெர்ஸ்டெய்னுக்கு உடனே சொல்கிறார். அதில் எந்த ஒரு இடத்திலுமே யூதர்களோ, ஜிப்ஸிக்களோ, இனப்படுகொலை என்றோ வாசகம் இல்லாமல் இருப்பதை கண்டு துணுக்குறுகின்றனர், தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்கின்றனர்.

இனி பொறுப்பதில்லை, இனப்படுகொலைக்கு நேரடி சாட்சியான கர்ட் கெர்ஸ்டெய்னை வாடிகனுக்கு கூட்டிப்போய் போப்புடன் நேரடியாக உரையாடவிட்டு மன்றாட வேண்டி , தன் தந்தையுடன் பேசி ஏற்பாடு செய்கிறார் ரிக்கார்டோ ஃபோன்டானா,மிகுந்த கெடுபிடிகளுக்கு பின்னர்  கர்ட் கெர்ஸ்டெய்னை  தன்னுடன் காரில் வாடிகனுக்கு அழைத்துப் போகிறார். நாஜிக்கள்  ரோமுக்குள்,அங்கே நாஜிக்கள்   வாடிகனுக்குள் புகுந்து யூதர்களை சிறை பிடிக்க கொத்து கொத்தாக கணக்கெடுப்பதை கண்ணுறுகின்றனர். போப்பை யாருமே அன்று சந்திக்க முடியாத படிக்கு  வாடிகன் அரண்மனை முழுக்க நாஜிக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்,

 ரோமில் இருக்கும் கிருத்துவ மதத்துக்கு ஏற்கனவே மதம் மாறிய யூதர்களையும் திரட்டி கொல்ல நினைக்கிறான் ஹிட்லர். அதை தடுக்க லஞ்சமாக 50கிலோ தங்கக் கட்டிகளையும் வாடிகன் வாழ் யூதர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர் நாஜிப் படையினர் , ஆனாலும் திடீரென மனம் மாறி ஹிட்லரின் ஆணைக்கு பயந்த நாஜி அதிகாரிகள், அன்றைய தினம் 1000 பேரை முதல்கட்டமாக ஒன்று திரட்டி கேஸ்சேம்பருக்கு ரயிலில் ஏற்றி அனுப்ப ஆயத்தமாகின்றனர், இரும்பு இதயம் கொண்ட போப்பையும், கூட இருக்கும் குருமார்களையும் இனி மேலும் தன்னால் கரைக்கவே முடியாது என்று முடிவெடுத்த ரிக்கார்டோ ஃபோன்டானா, அவர்கள் முன்பாகவே தன் கிருத்துவ மதத்தை புறக்கணிக்கும் விதமாக யூதன் எனக் குறிக்கும் ஸ்டார் ஆஃப் டேவிட் என்னும் நட்சத்திர குறியை தன் உடையில் அணிந்து கொள்கிறார்,அது மதத்துரோகம் என்கின்றனர் போப்பும்,சக குருமார்களும், இவர் பணியவில்லை.

அன்றிரவு  1000 பேர் கொண்ட யூதர்களுடன்  ரிக்கார்டோ ஃபோன்டானாவும் மரண ரயிலில் ஏறி விடுகிறார், பின்னர் அதில் ஆஷ்விட்ஸ் சென்ற அவர் கேஸ் சேம்பரில் விழும் பிணங்களை அப்புறப்படுத்தி எரியூட்டும் பணியையும்  செய்கிறார். இறைவனின் கொடிய தீர்ப்புக்கு தானே சாட்சியாக நிற்கிறார். வேறு வழியின்றி மறுநாள் கர்ட் கெர்ஸ்டெய்ன் பெர்லின் திரும்பி தன் குடும்பத்தாரையும் சந்திக்கிறார். ஸ்டாலின்க்ராடில் இரண்டு லட்சம் நாஜி ராணுவத்தினர் ,கொல்லப்பட்டு 1லட்சம் நாஜி ராணுவத்தினர் போர் கைதிகளாக பிடிக்கப்பட்டதையும் அறிகிறார்.

இப்போது ஆஷ்விட்ஸுக்குள் தானே முன்வந்து நுழைந்த ரிக்கார்டோ ஃபோன்டானாவை விடுவிக்கக் கோரி வாட்டிகனில் இருந்து வேண்டுகோள் கடிதம் வந்தும் அவரை விடுவிக்காமல், அவர் பிணத்தை எரியூட்டும் வேலைக்கு தள்ளப்படுகிறார். அங்கே பிணத்தை எரிக்கும் இடத்தில் கொடூர நாஜிக்களின் மன நிலையும், அதனை எதிர்த்துப் போராடும் வலிவற்ற யூதர்களின் மன நிலையையும் தன் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்க்கிறார். சாவைக் கூடச் சலனமின்றி வரிசையில் நின்று ஏற்றுக் கொண்ட அந்த யூத மக்களின் மன நிலையை ஆயாய்கிறார்,

அடக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை, அடங்கிப் போனோர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து தானும் இவர்களுடன் மடிவதே போப்பின் மௌனத்துக்கும் ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் தவற்றுக்கும் தண்டனையாக இருக்கும் என்று தன் மரணத்தை இன்முகத்துடன் நோக்கியிருக்கிறார் ரிக்கார்டோ ஃபோன்டானா.அன்று ஒரு நாள் கர்ட் கெர்ஸ்டெய்ன் நாஜி ராணுவ தலைமை ஜெனரல் ஹிம்லரின் கையெழுத்தை போலியாக போட்டு,  ரிக்கார்டோ ஃபோன்டானாவுக்கு ஒரு விடுதலை அறிக்கையை தயாரிக்கிறார்,

அதைக் கொண்டு ஆஷ்விட்ஸுக்குள் நுழைகிறார். அக்கடிதம் கண்டவுடன் பயந்து போன அதிகாரிகள்  ரிக்கார்டோ ஃபோன்டானாவை இவர் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகின்றனர், ஆனால் அவருக்கு கோழை போல தப்பி ஓட மனமில்லை, நான் இங்கேயே இவற்றிற்கு சாட்சியாய் இருப்பேன் , இறப்பேன் என்று உறுதியாக இருக்கிறார். அந்நேரம் ஹிம்லரின் கடிதத்தை ஆராய்ந்த நாஜிப்படையின் கொடுங்கோல் டாக்டர் விக்டர் ப்ராக் அது போலியானது, என்று கண்டுபிடித்து. ரிக்கார்டோவை கேஸ் சேம்பருக்கு உடனே அனுப்பி கதையை முடிக்க  ஆணையிடுகிறார்.ரிக்கார்டோ உயிரோடு இருந்தால் தான் ஒருபோதும் வாட்டிகனில் சென்று அடைக்கலம் கேட்க வழியிருக்காது என்னும் பயமே அதற்கு காரணம்.

கர்ட் கெர்ஸ்டெய்னை தன்னுடனே காருக்கு இழுத்து வருகிறார்.இவருடன் காரில் வரும் போது எல்லாமே முடிந்து விட்டது, சாட்சியங்கள் எதுவுமெ இல்லாதபடிக்கு புதைத்த பிணத்தைக் கூட நோண்டி எடுத்து எரியூட்டுகிறோம், கேஸ் சேம்பர்கள், எரியுலைகள் கூட  இன்று இடிக்கப்படும், நீயும் எங்காவது வேறு நாட்டுக்கு தப்பிச்சென்று அடைக்கலம் கேள், நானும் வாட்டிகன் செல்ல எண்ணுகிறேன் என்கிறார், சுமார் 6 வருடங்கள் இவர் மீது கொண்ட அபிமானத்தினாலும் நட்பினாலுமே தான் இவரை நாஜிக்களின் கோர்டில் ஒப்படைக்காமல் விடுவிப்பதாக சொல்கிறார்.

ரிக்கார்டோ ஃபோன்டானா
இப்போது கட் கெர்ஸ்டெய்ன் பெர்லினுக்குள் வந்து மீண்டும் தன் வீட்டாரைச் சந்திக்கிறார், எந்நேரமும் ரஷ்ய செம்படையும், நேசநாட்டுப் படையும் ஜெர்மனிக்குள் புகுந்து தன்னை போர் குற்றங்களுக்காக கைது செய்யும், அதற்கு முன்பாக தாமே சரணடைந்து தன் பாவங்களை கழுவப் போகிறேன், என்று மனைவியிடமும் குழந்தைகளிடமும்  சொல்லி விட்டுப் புறப்படுகிறார், இனி எப்போதும் திரும்பப்போவதில்லை என்னும் முடிவுடன் தன் மனைவியை ஆரத்தழுவி முத்தமிடும் காட்சியும்,அப்போது அவளின் கண்ணில் தெரியும் காதலும்,நெஞ்சுரமும் மிக அற்புதமான ஒரு காட்சி அது.

பின்னர் நாம் ஆஷ்விட்ஸின் கேஸ் சேம்பரையும் எரியுலையையும் கண்ணுறுகிறோம், அங்கே ஒரு வயதான யூதர் ,சற்று முன்னர் கேஸ் சேம்பருக்குள் அனுப்பப் பட்டவர்களின் துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருக்கையில் அதில்  ரிக்கார்டோ ஃபோன்டானாவின் மதகுருமார் அணியும் கருப்பு அங்கியையும், அதில் அவர் பிணைத்துக்கொண்ட ஸ்டார் ஆஃப் டேவிட் பட்டையையும் எடுத்து ஏற இறங்கப் பார்க்கிறார். இந்த ஒற்றைக் காட்சியில் நாம் நெஞ்சம் உடைகிறோம். ரிக்கார்டோ ஃபோன்டானாவின் நேரம் வந்து விட்டதை உணர்த்திய அற்புதக் காட்சி அது.

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர,  ஃப்ரென்சு ராணுவத்தாரிடம் சரணடைந்து ,போலந்தில் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி இவர் விரிவாக தக்க ஆதாரங்களுடன் ஃப்ரென்ச், ஜெர்மன் மொழிகளில்  கொடுத்த முதல் தகவல் அறிக்கை ’’கெர்ஸ்டெய்ன் அறிக்கை ’’ என்று அழைக்கப்படுகிறது,அதில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய ஒவ்வொரு அதிகாரியின் பெயரையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

கொடுங்கோல் டாக்டர்
இந்த அறிக்கை  போர்குற்றம் பற்றி விசாரிப்பதற்கென்றே துவங்கப்பட்ட நூரம்பர்க் விசாரனை மன்றத்துக்கு [Nuremberg Trials] இனப்படுகொலையில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை  கணக்கிடவும் ,குற்றவாளிகளை கண்டறிந்து சுற்றி வளைக்கவும்   பேருதவியாக இருந்தது, கெர்ஸ்டெய்ன் தன் முதல் தகவல் அறிக்கையை சமர்பித்த பின்னரும் மனசாந்தி அடையாமல் தான் விருப்பமில்லாமல் நாஜிப்படையின் இன அழிப்புக்கு சுமார் 6 வருடங்கள் பணிசெய்த குற்ற உணர்வு மிகவும் வாட்ட, தான் வீட்டுக்காவலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலையும் செய்து கொள்கிறார் , இப்போது அந்த கொடுங்கோல் டாக்டர் தன் நாஜி உடையைக் களைந்து விட்டு வாட்டிகனுக்கு சென்று அடைக்கலம் கேட்பதை நாம் பார்க்கிறோம், போரின் விளைவுகளால் தான்  ஜெர்மனியிலிருந்து உயிர் தப்பி அகதியாக வந்திருப்பதாகவும், தனக்கு மருத்துவம் தெரியும் என்றும் சொல்கிறார், வாடிகனில் அவர் போப்பின் உதவியாளர் மூலம் அகதியாக ஏற்கப்பட்டு, மருத்துவத் தொண்டு புரிவதற்கு அர்ஜெண்டினா அனுப்பி வைக்கப்படுவதை நாம் அங்கே பார்க்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் அர்ஜெண்டினாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய அவர் நூரம்பர்க் நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு  2 June 1948 அன்று தூக்கில் போடப்பட்டதாகப் படித்த பின் தான் என் மனம் ஆறியது.

கர்ட் கெர்ஸ்டெய்னின் மனைவி பெரும் போராட்டங்களுக்குப் பிறகு சுமார் 20 வருடங்கள் நடந்த வழக்கு விசாரணைகளின் முடிவில்,  கெர்ஸ்டெய்னின்  பணிக்காலத்தில் இனப் படுகொலையை நிறுத்தக்கோரி அவர் முதலில் சந்தித்த ஸ்விஸ் நாட்டு தூதுவரின் சாட்சியம், அவர் வாடிகன் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக ரோமில் போப்பிற்கு நெருக்கமான சிலரின் சாட்சியம், மற்றும் தகுந்த ஆவணங்களின் துணை போன்றவற்றின் உதவியால் கர்ட் கெர்ஸ்டெய்ன் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு ,இறந்த தன் கணவருக்கு பொதுமன்னிப்பும் பெற்றுத்தருகிறார்.அவருக்கு பென்ஷனும் கிடைக்கப்பெற்றார் என்று படித்தேன்.

படத்தை நிச்சயம் பாருங்கள்,நண்பர் உலக சினிமா ரசிகன் ஆமென் படம் பற்றிய விரிவான தொடர்களை எழுதி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும், அவர் பதிவில்  படத்தின் சிறப்பு மிக்க காட்சியாக்கங்கள் விவரணையாக கிடைக்கும்.அதையும் படியுங்கள்.நண்பர் ஒருவர் இப்படி பெரிய விக்கி கட்டுரை போல எழுதுவதால் என்ன பயன் என்று கேட்டார்.ஒரு சிறப்பான படம் பற்றியும்,வரலாற்று சம்பவத்தை நினைவு கூற வேண்டியும் 10பக்கம் எழுதினாலும் அர்த்தமுள்ளது தான் என்று சொன்னேன்.ஏன் எனக்கும் பின்னாளில் இதை படித்து நினைவு கூற வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-

ப்ளாக் ஃப்ரைடே ब्लैक फ्राईडे [ஹிந்தி][Black Friday] [2004]


ப்ளாக் ஃப்ரைடே படம் இன்று தான் சப்டைட்டிலோடு மறுமுறை பார்த்தேன், அட்டகாசமான ஒரு டாகுமெண்டரி+இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், எழுத்தாளர் எஸ்.ஹூசைன் சைதி எழுதிய ப்ளாக் ஃப்ரைடே என்ற புத்தகத்தை தழுவி மிட் டே பத்திரிகை தயாரித்து வெளியிட்டுள்ளனர். தேவ்.டி கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் புகழ்- அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கிறார். எந்தவிதமான காம்ப்ரமைசோ, அரசியல் கட்சிகளுக்கு சொம்போ இல்லாமல் எடுக்கப்பட்ட படம். மிகுந்த நெஞ்சுரத்துடன் கருப்பு வெள்ளி நிகழ மூல காரணிகளான அரசியல்வாதிகள் அத்வானி,பால்தாக்கரே போன்றோர் பெயர்களை படத்தின் அநேக காட்சிகளில் ம்யூட் செய்யாமல் சொன்ன ஒரே படம், புகழ் பெற்ற உலக சினிமாவான ’The Battle of Algiers" க்கு நிகரான ஓர் இந்திய சினிமா ஆனால் இப்படம் வெளியான போது எத்தனை பேர் பார்த்திருப்பார்?என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கி அதிகாரபூர்வமாக வெளியான முதல் படம்,அவரின் முந்தைய வெளிவராத படமான பாஞ்ச் தந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் இத்தனை வீர்யமான கதைக்களனில் இறங்கியதற்கே நன்றி சொல்ல வேண்டும். படம் இயக்குகையில் வந்த எத்தகைய மிரட்டலுக்கும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை. படத்தை குவெண்டின் படங்களில் வருவது போல அழகாக அத்யாயமாக ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்து வழங்கியிருக்கிறார், நாம் இர்ரிவர்சிபிள் படம் பார்த்திருப்போம்,

 அதே போலவே சம்பவம் நடக்கும் காலம் துவங்கி அதன் பின் விளைவுகள், விசாரணைகள், பின்னர் அதன் ஊற்றுக்கண் என்று மிக அற்புதமாக நான் லினியரில் சொன்னப்படம்.படத்தின் ஒளிப்பதிவு நம் ஊர் நட்ராஜ் சுப்ரமணியம்,மிக அற்புதமான ஒளிப்பதிவு.இதை திரையரங்கில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என நினைக்க வைத்தது,அந்த சேஸிங் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் மேட்ச் செய்து இழைத்த இடங்கள்,மிகவும் தரமாக இருந்தது,பல காட்சிகள் வெறும் கண்களுக்கும்,முகத்துக்கும்,கால்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.

மும்பாய்,பம்பாய் என்று அழைக்கப்பட்டபோது நடந்த மனித குலத்தின் மிக அசிங்கமான செயல் கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993. அதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமன் என்னும் அயோக்கியனால் உருவாக்கப்பட்ட போராளிகளில்  ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொள்வதில் இருந்து படம் துவங்குகிறது, இன்னும் 3 நாட்களில் மும்பையின் பல முக்கிய இடங்களில் ஆர்டிஎக்ஸ் வகை டைம் பாம்கள் வெடிக்கப் போகின்றன என்ற தகவலை போலீசார் கேட்காமலேயே கக்குகிறான். அவனை மும்பை போலீசார் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேயில்லை,எள்ளி நகையாடி மேலும் அடித்து துவைக்கின்றனர்.

கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993,அன்றைய தினம் மதியம் 1:30முதல் 3:40 மணியிடையே ஸாவேரி பஸார், ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார், ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் , என 11 இடங்களில், ரிசர்ச் டெவலப்டு எக்ஸ்ப்ளோசிவ் என அழைக்கப்படும் RDX டைம் பாம்கள் மேற்சொன்ன 11 இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து பயங்கர சத்தம் மற்றும் தீஜுவாலையுடன்  வெடித்தன, மாஹிம் மீனவர் காலனி குடியிருப்பு பகுதியில் மட்டும் ஸ்பெஷலாக 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன, ஆக மொத்தம் உயிரிழப்பு அரசின் கணக்குப்படி 257, படுகாயமடைந்து கைகால்கள் இழந்தோர் எண்ணிக்கை சுமார் 713.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 காங்கிரஸ் -நர்சிம்மராவ் ஆட்சிக்காலத்தில், அயோத்தியில் 400 வருடங்களுக்கும் மேலாய் இருந்த பாபர் மசூதி சுமார் 6முதல் 8மாத கரசேவகர்களின் தீவிர திட்டத்தினாலும், அத்வானி போன்ற அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும் தரைமட்டமானது,நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் தலைகுனிவு அது, அதன் பின்னர்  இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது, அதில் மும்பையில் 1992 டிசம்பரில் நடந்த முஸ்லீம்களின் வன்முறையில் சுமார் 275 பேர் பலியாயினர்,

அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் பால்தாக்கரேவின் சிவசேனா கட்டவிழ்த்த கலவரமும் மனித குலத்திற்கே வெட்கக்கேடான செயல்,அதில் சிவசேனா நடத்திய கோர தாக்குதலில் மாஹிம் பகுதியைசேர்ந்த சுமார் 575பேர் பலியாயினர்,நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தெருக்களுக்கு இழுத்து வந்து வன்புணர்வு செய்யப்பட்டனர். போலீசாரும் சிவசேனாவுடன் கைகோர்த்து கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்களை சுட்டுக்கொன்றனர். சரத் பவார் தலைமையிலான மஹாராஷ்டிர அரசு இப்படுகொலைகளை கண்டுகொள்ளவில்லை,

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ ரத்தத்துக்கு ரத்தம் என்னும் பழிவாங்கலுக்கு திட்டமிடுகிறது,மாஹிமில் நடந்த கலவரத்தில் அங்கே கள்ளக்கடத்தல், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த டைகர் மேமனின்[பவன் மல்ஹோத்ரா] அலுவலகம் தீக்கிறையாக்கப்படுகிறது, அடிப்படையிலேயே டைகர் மேமன் மிகவும் மூர்க்கன்.தன் கார் கண்ணாடியை கிரிக்கட் ஆடி உடைத்தான் என்ற காரணத்துக்காக சிறுவனையே கதிகலங்க அடிக்கும் ஒரு மேனியாக்,

ஒரே இரவில் அவனின் அலுவலகம் தீக்கிரையான கோபத்தில் ஐஎஸ் ஐ மற்றும் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு குழுவுடன் ஐக்கியமாகிறான்,பழிக்கு பழி வாங்க மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று அங்கே வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது,அதற்கு யார் யார் ஸ்பான்சர் என்று தெரிவு செய்கிறான்,டைகர் மேமனுக்கு துபாயில் நிறைய கள்ளக்கடத்தல், மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரங்களும்,அலுவலகங்களும்,நிறைய குடியிருப்பு வீடுகளும் உள்ளன,அங்கே ஒரு பெரும்புள்ளி,

மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பில் முதலில் அத்வானியையும்,பால்தாக்கரேவையும் டைம்பாம் வைத்து சிதறடித்துக்கொல்லவே திட்டம் தீட்டப்படுகிறது,ஆனால் டைகர் மேமன் அதை மட்டும் விரும்பவில்லை, இந்த அரசியல்வாதிகள் கொல்லப்படுதல் மிகவும் ஆபத்தானது, அது அவர்களுக்கு தேசத்தியாகிகள் என்னும் பட்டத்தை பெற்றுத் தந்துவிடும், அது கூடாது, இசுலாமியர்களின் உயிர்களுக்காகவும், பறிபோன சகோதரிகளின் கற்புக்காகவும் ஒவ்வொரு இந்துவும் தண்டிக்கப்படவேண்டும், மும்பை பற்றி எரிய வேண்டும் என்கிறான், அதற்கு மும்பையின் மிகப்பெரிய கடத்தல்காரனான தாவூத் இப்ராஹிமுடன் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது,

இதற்கு நான் ஏன் உதவ வேண்டும் என இருமாந்திருந்தவருக்கு உடனடி அதிர்ச்சியாக ஐஎஸ் ஐ அமைப்பால் இந்திய பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தாவூத் இப்ராஹீமின் கடத்தல் வெள்ளிக்கட்டிகள் திருடப்படுகிறது , அவன் ஆட்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இத் தகவலை அவனுக்கு தொலைபேசியிலும் தெரிவிக்கின்றனர்,அதே நேரத்தில் அவனுக்கு ஒரு குரியரும் வருகின்றது, அதை பிரித்துப் பார்க்கிறான் தாவூத், அதில் மாஹிம் பகுதியில் மதக்கலவரத்தில் வன்புணர்ந்து கொல்லப்பட்ட இசுலாமிய சகோதரிகளின் உடைந்த வளையல் துண்டுகள்,ஒரு வெற்றிலை பெட்டி போன்ற ஒன்றில் அடைக்கப்பட்டு இருக்கின்றன, கூடவே ஒரு கடிதத்தில் இதற்கு பழிவாங்க நீ என்ன துரும்பை கிள்ளிப்போடப்போகிறாய்?!!! என்று எழுதியிருக்கிறது.

இப்போது தாவூத் இப்ரஹீமின் நேரடி தலையீட்டால் டைகர் மேமனுக்கு மும்பையின் திறக்காத கதவுகள் கூட மரியாதையோடு திறக்கின்றன, இப்போது கருப்பு சோப்பு என்ற பேரில் ஆர்டிஎக்ஸ் கட்டிகள் டன் கணக்காக மும்பையின் ஜனசந்தடி மிக்க ஒரு கட்டிட நிறுவனத்துக்கு சொந்தமான கோடவுனிலும், மற்றொரு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிலும் கருவாட்டுக்கூடைகளுக்கிடையே அடுக்கப்படுகின்றன, இந்த கடத்தல் இறக்குமதியில் போலீசாருக்கும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் பெரும்பணம் கைமாறுகிறது, தாவூத் இப்ராஷீமை அன்னதாதாவாக கருதி சலாம் போடும் அதிகாரிகள் மும்பையில் மிக அதிகம்.

இப்போது டைகர் மேமன் துபாயில் வேலை வாங்கித்தருவதாக நெருக்கமான கூட்டாளிகளிடம் சொல்லி நம்பகமான மாஹிம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி முஸ்லிம் இளைஞர்களை தான் நடத்தும் இரவுப் பார்ட்டி ஒன்றிற்கு அழைக்கிறான்.அங்கே கூடும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் தனித்தனியாக நேர்முக மூளைச்சலவை செய்கிறான் டைகர் மேமன்,கூடவே மதரீதியான வாசகங்களை மூளைச்சலவைக்கு தூவி மெருகேற்றுகிறான், இப்போது அனைவரையும் அறைக்குள் கூட்டி முழக்கமிடுகிறான், மும்பைக்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்கிறான்,

இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நம்மை எந்த இந்துவும் இனி கண்ணைப்பார்த்து பேச பயப்படவேண்டும், நம் பெயரைக்கேட்டாலே வேட்டியில் மூத்திரம் இருக்க வேண்டும் என்கிறான், இந்த ஜிஹாத்தைப் பற்றி வீட்டார் உட்பட, யாரிடமும் மூச்சு விடக்கூடாது ,அப்படி வாயை விட்டால் முதலில் அவன் குடும்பத்தார் கொல்லப்படுவர்,பின்னர் துரோகிகள் கொல்லப்படுவர் என்கிறான், அனைவரிடமும் சத்தியமும் வாங்குகிறான், அடுத்த ஓரிரு  வாரங்களிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிகாதிகள் அனைவரின் பாஸ்போர்டையும் பெற்றுக் கொண்டு துபாய்க்குள் அழைக்கிறான் டைகர் மேமன்.
அங்கேயிருந்து பாகிஸ்தானுக்குள் எந்தவிதமான விசா கெடுபிடிகள் இல்லாமலே நுழையும் ஜிகாதிகளுக்கு மேலும் மூளைச்சலவை செய்யப்படுகிறது, ஓட்டம்,துப்பாக்கி சுடுதல்,ஆர்டிஎக்ஸ் கட்டியுடன் டெட்டனேட்டரை இணைத்தல்,டைமரை உயிரூட்டுதல் போன்ற இன்றியமையாத பயிற்சிகள் அளிக்கப்பட்டு மீண்டும் துபாய் அழைக்கப்பட்டு பின்னர் மும்பைக்குள் கூட்டி வரப்படுகின்றனர்,ஜிகாதிகளின் பாஸ்போர்டை யாருக்கும் திரும்பத் தரவில்லை டைகர் மேமன்,யாரும் அறியா வண்ணம் அவற்றை தீக்கிறையாக்குகிறான்,

இப்போது துரித கதியில் மாஹிம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெகு அருகாமையில் இருக்கும்  ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பான பேஸ்மெண்டில் வைத்து ஜிகாத்திகளின் தீவிரமான உழைப்பில் 13க்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் டைம் பாம்கள் இரவு பகலாக செய்யப்படுகின்றன,அவற்றை திருடிக்கொண்டு வரப்பட்ட மாருதி கார்,வேன்கள்,ஸ்கூட்டர்களில் நிறுவுகின்றனர்,

அவற்றை தலா நான்கு பேர்களாக பிரித்து மும்பையின் மிகுந்த ஜனநெரிசல் பகுதிகளான ,ஸாவேரி பஸார்,ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார்,ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் என சந்தேகத்துக்கு இடமின்றி நிறுத்திவிடுகின்றனர்.அது ஒன்றன் பின் ஒன்றாக மதியம் 1-30 மணி முதல் 3-40 மணி வரை வெடிக்க ஆரம்பிக்கின்றன,அதில் 12ஆவதாக மந்த்ராலயம் கட்டிடத்தை தகர்க்க கொண்டு போன சிகப்பு மாருதி கார் டைகர் மேமனின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது,இந்த காரை டைகர் மேமன் பயன் படுத்தாமல் விட்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான டைகர் மேமனையும்,அவன் ஜிகாதிக்களையும்,தாவூத்தையும் போலீசாரால் நெருங்கியே இருக்க முடியாது என்பது இவ்வழக்கை விசாரித்த போலீசாரின் பலமான கணிப்பு,

அந்த மாருதி வேனில் நிறுவப்பட்ட 50கிலோ ஆர்டிஎக்ஸ் அன்று வெடித்திருந்தால் குறைந்தது 200 பேர் பலியாகியிருக்கக்கூடும்,ஜிகாதிகள் நால்வரில் ஒருவன் ,காரை வெடிக்கவேண்டி பார்க் செய்ய மந்த்ராலயம் செல்லும் வழியிலேயே டெட்டனேட்டரை சோதிக்க அந்த பாரமானி,வெள்ளை சிகப்பு என ஏறுமுகமாயிருக்கிறது, இவர்களில் டெட்டனேட்டரில் திறம்பட தேர்ந்த ஒரு எலக்ட்ரீஷியன் மிகவும் பயந்தவன், காரை நிறுத்து ,டெட்டனேட்டரில் பழுது, நமக்கு ஆபத்து என்று கத்துகிறான், அந்நேரம் பார்த்து இவர்களின் மற்றொரு குழு பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வந்த காரில் இருந்த டைம் பாம் வெடித்து சிதற,ஒரு குண்டு வெடிப்பு எப்படி இருக்கும்,என்பதை நிஜமாக கண்ணுறுகின்றனர்,
அருகே ஒரு வழிப்போக்கனின் பாதம் மட்டும் பெயர்ந்து வந்து விழுகிறது, சில்லிடுகிறது,உலகே ஒரு கனம் நின்றிருக்க,அந்த நால்வரில் ஒருவன் மட்டும் கத்துகிறான், போதும்,ஆணியே புடுங்க வேண்டாம் போதும், வண்டியை ஓரம் கட்டு டாக்ஸி பிடி,நாம் வெளியேறுவோம் என்று வெளியேறுகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு காரில் செல்லும் நால்வர் மாஹிம் மீனவர்காலனி குடியிருப்பு பகுதியில் இறங்குகின்றனர், அங்கே 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்குகின்றனர், இது டைகர் மேமனின் அலுவலகம் எரிக்கப்பட காரணமாக இருந்த மாஹிம்வாசிகளுக்கு டைகர் மேமனின் அன்புப்பரிசு என்று நாம் அறிய வருகிறோம்.

மறுநாள் அந்த சிகப்பு மாருதி வேன் அனாதையாக நிற்பதை உணர்ந்த ஒரு முதியவர் போலீசாருக்கு சொல்ல,பாம் ஸ்குவாடுகள் ஆர்டிஎக்ஸை கைப்பற்றுகின்றனர். அங்கே தான் அல்லா நல்லவர் வசம் தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை போலீசாருக்கு துளிர்விடுகிறது, எப்பேற்பட்ட ஒரு க்ளூ அது? இதை போலீஸ் அதிகாரி ராகேஷ் மரியா [கேகே மேனன்] பாதுஷா கான் என்னும் விசாரணை கைதி இவரிடம் தங்கள் ஜிகாத் வெற்றி பெற்றது குறித்து பெருமையுடன் பேசுகையில் பதிலடியாகக் கொடுப்பார், அல்லா ஜிகாத்தை எப்போதும் விரும்பியதில்லை, தனி நபர் விரோதத்துக்காக ஒட்டு மொத்த மதத்தையே அழிக்க நினைப்பவருக்கு அல்லா துணையிருப்பதில்லை, அதனால் தான் அவர் அந்த சிகப்பு மாருதி வேனை வெடிக்காமல் செய்துவிட்டார், என்று உரைக்கும் இடம் மிக அருமையான ஒன்று.

குண்டு வெடிப்புகளுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே டைகர் மேமன் குடும்பத்தாருடன் துபாய்க்கு சென்றுவிடுகிறான், அங்கிருந்த படியே ஜிகாதிகள் ஒவ்வொருவரையும் அடுத்தடுத்து இயக்குகிறான், ஒவ்வொரு ஜிகாதியையும் முதலில் ராம்பூர், ராஜஸ்தானின் டோங், அங்கிருந்து ஜெய்பூர், அங்கிருந்து கொல்கத்தா என்று போனிலேயே கட்டளையிட்டு இடம் மாற்றுகிறான், ஒவ்வொருவரும் சேர்ந்து தங்காமல் பிரிந்து தங்க கட்டளையிடுகிறான், அதில் போலீசார் எப்படி ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்தனர் என்று நமக்கு காட்ட உதாரணமாக பாதுஷா கான் [ஆதித்ய ஸ்ரீவத்சவா] என்பவனின் பின்னால் மட்டும் நாம் பயணிக்கிறோம்,

அவனுடனே அவன் கிராமமான ராம்பூர்,ராஜஸ்தானின் டோங், ஜெய்பூர், கொல்கத்தா என்று நாமும் உடன் அலைகிறோம்,ஜெய்பூரில் வைத்து சகாக்களை சந்திக்கும் அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்சியாக கிடைக்கிறது, ஜிகாதிகளுக்கு துபாயில் வேலை என்பது கனவு ,ஏமாற்று வேலை என்பது தெரிகிறது,அடுத்ததாக பங்கெடுத்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் வெறும் 10ஆயிரம் கூலியாக தரச்சொல்லி டைகர் மேமன் சொன்னதும் தெரிகிறது, அனாதை போல அலைகிறான், ஒவ்வொரு ஊருக்கும் போகும் போதும் இவனும் அவன் கூட்டாளியும் டைகர் மேமனுக்கு அழைக்கின்றனர், இரவோடு இரவாக இவனது கூட்டாளி இவனிடமிருக்கும் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்று விடுகிறான், பின்னர் கொல்கத்தாவில் சென்று முதலில் ஒரு லாட்ஜில் தங்கியவன்,பணம் கரைந்த நிலையில் வேறொரு மலிந்த லாட்ஜில் முன் பின் தெரியாத ஐவருடன் தங்குகிறான்,அப்படி ஒருநாள் போலீசாரிடம் வசமாக மாட்டுகிறான்.

போலீசார் விசாரணையின்போது  போலீசார் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர், மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகள் டிசிபி ராகேஷ் மரியாவை எள்ளளவும் அசைத்துவிடவில்லை, போலீசார் இப்படி 24 மணிநேரமும் எந்திரமாக உழைக்க வித்திட்ட அந்த விசாரணை கைதிகளை அடியோடு வெறுக்கிறார், அதில் நல்லவன் கெட்டவன், முஸ்லீம் இந்து என எதுவுமே பார்ப்பதில்லை, விசாரணைக் கைதிகளை விசாரிக்கையில் பலசமயம் அவர்களின் வீட்டாருமே பார்வையாளர்களாக இடம் பெற்றிருக்கின்றனர், அதில் வீட்டு பெண்டிர் பலரும் போலீசாரின் பாலியல் ரீதியான துன்புருத்துதல்களுக்கு ஆளாகின்றனர்,அங்கே பெண்களின் மார்புகளை தடவுதல்,ஆடை உரித்தல், குடும்பத்தையே கேவலப்படுத்தும் மிக அசிங்கமான வசவுகள் என ஏகப்பட்ட வக்கிரங்களுக்கு விசாரணைக் கைதிகளின் குடும்பத்தார் உள்ளாகின்றனர்,

அதில் ஒரு விசாரனை கைதியாக ராஜ்குமார் குரானா என்பவர் போலீசாரால் லாக் அப்பில் வைத்து மிகக் கொடூரமாக விசாரிக்கப்படுகிறார், அவர்  ஸ்டமக் என்னும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர், அவருடனான விசாரணையின் போது அவரின் மனைவி மகள்களிடம் போலீசார், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கின்றனர், பெயிலில் வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டாரையும் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். போலிசாரின் நான்காம் தரமான விசாரணை எத்தனை கொடூரமாயிருந்தது என்று இங்கே ஒருவர் மன தைரியம் இருப்பின் பொறுமையாகப் படிக்கலாம்.

இச்சம்பவம் மும்பை போலீசாருக்கு மிகுந்த அவப்பெயரை உண்டாக்குகிறது, பின்னர் இந்த வழக்கு விசாரணையை சடுதியில் சிபிஐ  ஏற்று விசாரிக்கின்றது, அதில் மொத்தம் 122 பேர்களைத் தவிர ஆயுதங்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஊழல் அரசு அதிகாரிகள் சுமார் 60 பேர்களின் பெயர்களும் சேர்க்கப்படுகிறது, 13 ஆண்டுகள் வழக்கு விசாரனை நடந்து 122 விசாரணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் தண்டிக்கப்படுகின்றனர், 29க்கும் மேற்பட்டோர் இன்னமும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர், என்று எண்ட் க்ரெடிட் கார்ட் போடுகையில் சொல்கின்றனர். கடைசியாக டைகர் மேமனின் தம்பி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அங்கே அவர்கள் குடும்பம் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாக வசிப்பதாகச் சொல்கிறான். அவனது பேட்டியும், பாகிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே காட்டப் படுகின்றன.படத்தில் 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு,அதில் டைகர் மேமனாக தோன்றிய பவன் மல்ஹோத்ராவின் நடிப்பை ஒருவர் மறக்கவே முடியாது,பாலிவுட்டின் அண்டர்ரேட்டட் நடிகர், இவரின்Salim Langde Pe Mat Ro படம் தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான சத்யா கதாபாத்திரத்தை ,ஹிந்தியில் மிக அழகாக செய்திருப்பார்,பாலிவுட்டின் சோதனை முயற்சி சினிமாக்களில் இவரை நாம் பார்க்க முடியும்,

கண்ணுக்கு கண் என்னும் சித்தாந்தம் உலகையே குருடாக்கிவிடும் ["An eye for an eye will make the whole world blind." ] என்னும் காந்தியின் வாசகத்துடன் படம் முடிகிறது.அதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் இனி இது போல் அவலங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்

இதே போல நாம் வாழும் காலத்திலேயே நிகழ்ந்த  துக்கவரலாற்று சம்பவமான  26 நவம்பர் 2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலை வெளிச்சம் போட்டு காட்டிய ராம் கோபால் வர்மாவின் The Attacks of 26-11 என்னும் படமும் ஒருவர்  நிச்சயம் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசேபூரில் கிடைத்த புகழும் பெருமையும் அனுராக்கிற்கு 2007 வருடமே இப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பேன், அத்தனை நெஞ்சுரமான படம். படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது தூக்கம் வரவழைக்கும், ஒரு இழவும் புரியாது, இவன் யார்? அவன் யார்? என்று குழப்பும்,சப் டைட்டிலுடன் பார்த்தால் முக்கியமான படத்தை பார்க்கிறோம்  என்ற எண்ணம் ஆட்கொள்வதை ஒருவர் உணரலாம்.
"An eye for an eye will make the whole world blind."

- See more at: http://www.merinews.com/article/iblack-fridayi-avant-garde-rarity/124251.shtml#sthash.TIqwzmdR.dpuf

.
படத்தின் முக்கிய காட்சியின் காணொளி யூட்யூபில் இருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)