கருத்த லெப்பை குறு நாவல் - கீரனூர் ஜாகிர் ராஜா

கீரனூர் ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை,படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கவிடாமல் பறக்கிறது,நாம் அதிகம் கேள்வியுற்றிராத யாரும் எழுதத் தயங்கும் சாயபுமார் சமூகத்தின் கதைக்களம்,ஜாகீர் ராஜா அதில் ஒரு அங்கம் என்பதால் எந்தத் தயக்கமும் இன்றி தனக்கு எழுத களம் அமைத்துக்கொண்டுள்ளார்,

குறிப்பிட்ட சமூகத்துக்கும் ,வட்டாரத்திற்கும் உரிய வட்டார வழக்கு எழுத்து நடை,சுய எள்ளல்கள்,டார்க்ஹ்யூமர்,யாரும் எழுத யோசிக்கும் வக்கிரம் இல்லாத பாலியல் மொழி ,அதில் புதைந்திருக்கும் குரூரம் நிஜம் என ஸ்ட்ராங்கான கண்டெண்ட், கேரளாவில் கயிறு திரிக்கும் கம்பெனி வைத்திருக்கும் ராவுத்தர்களும்,அவர்களிடம்  கணக்கெழுதவும்,எடுபிடி வேலைகளுக்கும் தமிழக எல்லையிலிருந்து போகும் லப்பைமார்களும்,அவர்களுக்குள் பிறவியிலேயே கனன்று கொண்டிருக்கும் உட்பூசலையும் மிக அழகாக எழுத்தில் வடித்திருக்கிறார் .

ஒரே ஊரில் வசித்து,ஒன்றாய் புழங்கி, ஒன்றாய் வழிபடும் ராவுத்தர்கள் லப்பைகளை வெறுக்கும் பிரதான காரணம்,அவர்கள் உண்ணும் மாட்டுக்கறியாம்,சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருக்கும் ராவுத்தர்கள் லப்பைகளை கீழாக எண்ணி,சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கருவருக்கும் இடங்கள் நாவலில் மிக நுட்பமாக சொல்லப்பட்டுள்ளன.

ஜாகிர்ராஜாவின் படைப்பில் எங்கும் சமரசம் என்பதே கிடையாது,  ஒருக்கால் பிற்போக்கு ஆசாமிகள்  எவரேனும் இவரைப் படிக்க நேர்ந்தால் தேடிப்போய் அடி சர்வ நிச்சயம்.எப்படி? சிறிதும் பயமோ தயக்கமோ இன்றி எழுதுகிறார் என ஆச்சர்யம் ஏற்படுகிறது,இவரின் பிற படைப்புகள் மீன்காரத் தெரு,வடக்கே முறி அலிமா, துருக்கித் தொப்பி. அதில் வடக்கே முறி அலிமா படித்து விட்டேன்,அதுவும் பல கலாச்சார அதிர்ச்சிகளை தோற்றுவிக்கும் நாவல்.

கதைக்குள் வரும் கதாபாத்திரங்களான அம்மா ஃபாத்துமா, அப்பா அம்பா,அக்காள் ருக்கியா,அவளின் பைத்தியக்கார கணவன் பதுருதீன், அவனின் அண்ணன் ஈசாக், கருத்த லெப்பை வளர்க்கும் பூனையான ஹிட்லர், சாம்பான் மாடத்து பாவா, கொடிக்கால் மாமு, சின்னப் பேச்சி,மிட்டாய் அமீது,அகமது கனி ராவுத்தர்,சிறுவன் அன்சாரி, நாணி, என்று சிருஷ்டித்து 70 பக்கங்களே கொண்ட குறுநாவலுக்குளே எத்தனை வீர்யமான ஒரு படைப்பை தந்திருக்கிறார் ஜாகிர் ராஜா. இதை விஸ்தரித்து இன்னும் விரிவாய் எழுதுவதற்கு  களமிருந்தும் இதை குறுநாவலாகவே வார்த்திருக்கிறார் ஜாகிர் ராஜா . ஒரு வேளை இதை நறுக்குத் தெரித்தார்போல சொன்னதனால் தான் இத்தனை பாதிப்போ என நினைக்கத் தோன்றுகிறது.

கருத்த லெப்பை ரொம்ப ஸ்ட்ராங்,முற்போக்கு வாசிப்பாளர்களுக்கு மட்டுமானது,கருத்த லப்பை நாவலின் விலை 50 ரூபாய் ,ஆழி பதிப்பகம் வெளியீடு, அகநாழிகை புத்தகக் கடையில் கிடைக்கும்.பத்துப் பக்கங்களுக்கு ஒரு எழுத்துப் பிழை உண்டு,ஆனாலும் படிக்க தடையில்லாத பிழைகள் தான் அவை.கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் இப்படி வெகு சில படைப்புகள் வெளியாகி ஆச்சர்யமூட்டுகின்றன.

ஜாகீர் ராஜாவின் எழுத்தாளுகைக்கு ஒரு உதாரணமாக இந்த 2 பக்கங்களைத் தந்திருக்கிறேன்,நாம் வாழும் சமூகத்தில் பெரிய மனிதர் போர்வையில் நீக்கமற நிறைந்திருக்கும் பீடோஃபீல்கள்  [Phedophiles] பற்றி தினத்தந்தியில் நிறைய படித்திருப்போம், ஆனால் அப்படி ஒரு குரூரமான பிறவியை நவீன இலக்கியத்தில் ரத்தமும் சதையுமாக காண வைக்கிறார் ஜாகிர் ராஜா,எத்தனை? சொற்சிக்கனம் , ஆனால் அது தோற்றுவிக்கும் விளைவைப் பாருங்கள், இது நானும் பாலியல் எழுதுகிறேன் என கிளம்பும் முன் ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது.


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் வலைத்தளம் இது
http://jakirraja.blogspot.ae/

ஜாகிர்ராஜாவின் மூன்று படைப்புகளை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, 
கருத்த லெப்பை ,விலை=50, 
வடக்கே முறி அலிமா=100,
காபிர்களின் கதைகள் தொகுப்பு விலை Rs.160,

மீன்காரத் தெரு =60 மருதா பதிப்பகம் வெளியீடு
ஜின்னாவின் டைரி = 150,எதிர் பதிப்பகம் வெளியீடு,
தேய்பிறை இரவுகளின் கதை=120 பாரதி புத்தகாலயம்,
துருக்கி தொப்பி=125,அகல் வெளியீடு, 

பொதுவாக ஜாகிர்ராஜாவின் ஆக்கங்கள் பேராசை இல்லாத பதிப்பகங்களால் தரமாக, பாக்கெட்டில் வைத்து பயணங்களில் படிக்கும் வண்ணம்  அச்சேறி வருகின்றன, கொடுக்கும் காசுக்கு மிகவும் மதிப்புள்ள படைப்புகள் அவை.

ஐயம் யுவர்ஸ் [ I Am Yours] [Jeg er din][2013] [ நார்வே][18+]


ஐயம் யுவர்ஸ் என்னும் நார்வே நாட்டுத் திரைப்படம் பார்த்தேன், ப்ரில்லியண்டான நடிப்பு, கதை,திரைக்கதை,இயக்கத்தை ஒருங்கே கொண்டிருக்கும் படம் இது.இது நார்வேகிய மொழி,ஸ்வீடிஷ் மொழி,உருது மொழி வசனங்கள் கொண்ட ட்ரைலிங்குய்ஸ்டிக் திரைப்படம்.இப்படம் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். படத்தின் இயக்கம் Iram Haq ,இவர் 40 வயது அழகிய பெண்ணுமாவார், அவருக்கு இது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண் மனம் ஒரு பெண்ணுக்குத் தான் புரியும் என்பது போன்ற அற்புதமான,தனித்துவமான படைப்பு ஐயம் யுவர்ஸ்.

இயக்குனர் Iram Haq
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் வசிக்கும் பாகிஸ்தான் பூர்வகுடியைச் சேர்ந்த மீனாவின் கதை இது, மீனா ஒரு வழமையான பெண் அல்ல,அவள் ஒரு காட்டாற்றைப் போன்றவள், அவளை சராசரி குடும்பப் பெண்ணைப் போல இருப்பாள் என நினைத்து  திருமணம் செய்து கொடுக்கின்றனர் அவளின் பாகிஸ்தானிய பெற்றோர்,

 அவளுக்கு சராசரியான மணவாழ்க்கை கசக்கின்றது, சதா வேலை வேலையென்றிருக்கும் ரசனையில்லாத  கணவனை விட்டுவிட்டு அந்நிய ஆடவனுடன் தொடர்பை விஸ்தரிக்க அவன் பிரிகிறான்,இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு, கோர்ட்டாரின் மணமுறிவு உத்தரவின் படி வாரயிறுதிகளில் மகன் ஃபெலிக்ஸை அழைத்து வந்து தன்னிடம் வைத்துக் கொள்கிறாள், முன்னாள் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமும்  ஆகிவிடுகின்றது, மணமுறிவு ஏற்பட்டு விட்டாலும் முன்னாள் கணவனுடன் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொள்ளாமல் நண்பர்கள் போலவே இருக்கின்றனர், அவனது புதிய மனைவியுடனும் அப்படியே.அவளும் மகன் ஃபெலிக்ஸை நன்றாக பார்த்துக்கொள்கிறாள்.

மீனா பிறப்பால் ஒரு கட்டுப்பாடான பாகிஸ்தானி என்றாலும் பிறந்து வளர்ந்தது நார்வே ஆதலால் நார்வேகிய மொழியைக் கற்று,ஒரு ஐரோப்பியப் பெண்ணாகவே தன்னைக் கருதி எந்த வித கட்டுப்பாடுகளுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்கிறாள்,

இவளின் அப்பா மீனாவை பாகிஸ்தானுக்கு அனுப்பி வளர்த்தால் மகள் பண்பாடு, கலாசாச்சாரத்துடனும் இருப்பாள் என்று அங்கே மனைவியுடன் அனுப்ப, அங்கே தன் பதின்ம வயதிலேயே உடல் வேட்கையால் தூண்டப்பட்டு  தன் அண்ணன் முறையுள்ள ஒருவனுடன் உறவு கொள்கையில் உறவினரால் கையும் கலவியுமாக பிடிபடுகிறாள் மீனா, அதிலேயே இவளில் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்து விட நிரந்தரமாக அப்பா வசிக்கும் நார்வேவுக்கு விரட்டப் படுகிறாள்.இது மீனாவின் முன்கதை.

இங்கே மணமுறிவுக்குப் பின்னர்  ஃப்ளாட் ஒன்றை வாடகைக்குப் எடுத்து வசித்து வருகிறாள், பகல் வேளைகளில் ஸ்டுடியோக்களுக்கு படையெடுத்து திரைப்பட வாய்ப்பும் தேடுகிறாள், தேவைக்கேற்ப ஆபத்தில்லா பொய்கள் சொல்கிறாள்,இரவு வேளைகளில் புதிது புதிதாக ஆடவரை டிஸ்கொத்தே பார்களில் சென்று பிக்கப் செய்து டேட் செய்து லஜ்ஜையின்றி சுகிக்கிறாள்,

கை ஏந்துவதில்லை, ஆனால் எல்லா ஆடவரும் இவளை உபயோகித்து விட்டு கை உதறுவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கின்றனர். இவளை சுகிப்பதற்கு அதிகபட்சம் ஒரு வைன் பாட்டிலும்,பீட்ஸாவும் வாங்கித் தந்தால் போதும் என்னும் ரீதியில் தான் அவர்களுக்கு இவளின் மீதான மதிப்பு இருக்கிறது. இதை படத்தின் முதல் காட்சியிலேயே நாம் கண்ணுறுகிறோம்.

படத்தின் முதல் காட்சியே நம்முள் ஒரு யதார்த்தமான அதிர்ச்சியை தோற்றுவிக்கிறது,அன்று எத்தனை முயன்றும் யாரும் சிக்காமல் போர்னோக்ராபி படங்கள் ஓவ்வொன்றாக பார்த்து அலுத்து  மீனா கரமைதுனம் செய்து ஆர்கசம் கொள்வதில் தான் துவங்குகிறது. இது அவளுக்கு புதிதல்ல, ஒவ்வொரு புதிய ஆடவனுடனும் பழகித் தோற்கும் போதும் மீனாவுக்கு நடக்கும் சாதாரண நிகழ்வே அது.

மணவாழ்க்கை கசந்த மீனா 27 வயதே ஆன அழகிய பெண், எந்த வித லஜ்ஜையும் அற்றவள், அவள் ஒரு துணை நடிகையும் ஆனதால்,எந்த ஒரு டிஸ்கொத்தே பாரிலுமோ, எந்த ஒரு இடத்தில் எதிர்ப்படும் ஆடவருடனுமோ தயக்கமின்றி பேச்சுக் கொடுத்து டேட்டிங்கில் இறங்கிட முடியும், மீனாவின் இந்த செயல் ஓஸ்லோ நகரில் பாகிஸ்தானிய குடியிருப்பில் வசிக்கும் அவளின் அப்பா, அம்மா,அவளின் பாட்டிக்கும் மிகுந்த சங்கடத்தையும் தீராத அவமானத்தையும் ஏற்படுத்துகின்றது, அம்மா எத்தனையோ முறை இவளுக்கு வேறு ஒரு பாகிஸ்தானி சமூகத்தில் மாப்பிள்ளை பார்க்கிறேன் , சம்மதம் சொல் என்கிறாள், ஆனால் மீனாவுக்கு அதிலெல்லாம் த்ரில் இல்லை, அவளுக்கு திருட்டு மாங்காய் தான் ருசிக்கிறது.

அக்குடும்பத்தின் அக்கம் பக்கத்தினர், இவர்களை சுத்தமாக ஒதுக்கி வைத்த படியால், மீனாவின் அம்மா மீனாவை முகத்திலேயே விழிக்காதே என ஒதுக்கி விடுகிறாள்.ஆனாலும் மனம் கேட்காமல் இவளுக்கு போனில் பேசுகிறாள்,வீட்டுக்கு வரவும் சொல்கிறாள்,வர வேண்டாம் என்றும் சொல்கிறாள்.  மீனாவுக்கு குடும்பத்தார் தண்ணீர் தெளித்து விட்டது ஒரு விதத்தில் ஆசுவாசத்தையே தருகிறது,

தன் அம்மாவின் கட்டாயத்தின் பேரில் மணந்த முன்னாள் கணவன் ஒரு ஆர்கிடெக்ட், அவன் மூலம் எந்த ஒரு வித்தியாசமான சுகத்தையும் முழுதாக அனுபவிக்கவில்லை மீனா, இவள் ஒரு கட்டுப்பாடற்ற சிட்டுக்குருவி, அவளுக்கு  வேகாபாண்ட் போல ஒரு கட்டற்ற ரிலேஷன் ஷிப் வேண்டும், அவன் இவளையும் இவளின் மகனையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவளின் இன்றைய நிஜமான எதிர்பார்ப்பாக இருக்கிறது

இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு திரைக்கதை ஆசிரியன் ஜெஸ்பர் என்பவனை சந்திக்கிறாள். அது ஒரு துணிக்கடை, அங்கே எந்த வித லஜ்ஜையுமின்றி இவள் தனக்கு வேண்டிய டாப்ஸ்களை ட்ரையல் ரூமுக்குள் செல்லாமலே ஒவ்வொன்றாக அணிந்து பார்க்கிறாள், அதைப் பார்க்கும் ஜெஸ்பர் ஆச்சர்யமடைகிறான், மெல்ல உடன் நடந்து பேச்சுக் கொடுத்து பழக ஆரம்பிக்க, இருவருக்கும் நிறைய ஒத்துப்போகிறது.அன்றே கவிஞர் இஸ்பென் சமாதி உள்ளிட்ட நிறைய இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து சுகிக்கின்றனர்,மறு நாளே ஜெஸ்பர் ஸ்வீடன் செல்கிறான். அவ்வார இறுதியில் ஸ்கைப் சாட்டிங்கில்,  தன்னால் எங்கும் நகர முடியாத படிக்கு வேலை இருப்பதால் மீனாவை ஸ்டாக் ஹோமுக்கு வரும்படி அழைக்கிறான்,

மீனா அவனிடம் தன்னுடன் மகன் ஃபெலிக்ஸும் இருப்பதாகச் சொல்ல , அவன் ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், அவனையும் ஸ்டாக்ஹோம் அழைத்து வரச் சொல்கிறான். அவள் ஜெஸ்பரை மிகவும் நம்புகிறாள், அவன் இவளின் சிறந்த துணையாக இருப்பான், என எண்ணியவள்.அவளுக்கு அவ்வாரம் வழமையாக டேட் செய்யும் நண்பர்கள் சுகிக்க அழைக்க செய்த அழைப்புகளை நிராகரிக்கிறாள். ஒரு நண்பன் இன்று உடனே பார்க்க இயலுமா? எனக் கேட்க , தான் ஏற்கனவே ஒருவரிடம் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக உண்மையை உரைக்கிறாள்.

மிகுந்த ஆசையுடனும்,ஆரவத்துடனும் ஃபெலிக்ஸை அழைத்துக்கொண்டு ஜெஸ்பரை பார்க்க ஸ்டாக்ஹோமில் அவனின் பழைய பரண் போன்ற ஒரு குடியிருப்புக்குச் செல்கிறாள் மீனா, அங்கே மகன் ஃபெலிக்ஸுடன் ஜெஸ்பர் நன்கு ஹெலிகாப்டர் விளையாட்டு விளையாடிக் களிப்பூட்டுகிறான்,ஆனால் அவன் தூங்கும் வரை ஜெஸ்பரால் மீனாவுடன் விரும்பியபடி சுதந்திரமாக நடந்து கொள்ள முடியவில்லை,

பின்னிரவில் நன்கு கூடிக் களிப்படைந்தவர்கள், அடுத்த நாள் செல்ல வேண்டிய இடங்களை திட்டமிடுகிறார்கள். அன்று இரவே இவர்களுக்கு இடையில் ஃபெலிக்ஸ் வந்து படுத்துக் கொள்கிறான். ஜெஸ்பருக்கு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தார் போலிருக்கிறது, அடுத்த நாள் மகன் ஃபெலிக்ஸின் பிறந்த நாளாகி விடுகிறது,

அன்று ஃபெலிக்ஸ் அவனுக்கு ஒரு பேட் மேன் முகமூடியும், உடைகளையும் பரிசளிக்கிறான், அதனால் மகிழ்ச்சியடைந்த ஃபெலிக்ஸ் ஜெஸ்பரை மிகவும் பிரியத்துடன் கட்டிக்கொண்டு ஐ லவ் யூ என திரும்பத் திரும்ப உரைக்க, ஜெஸ்பர் ஒரு தந்தைக்குண்டான பொறுப்பை ஏற்க தயங்கியவன், அவனிடம் எந்த புதியவருடனும் இந்த வார்த்தையை மீண்டும் சொல்லாதே!!! என கண்டிப்பு கலந்த குரலில் அறிவுறுத்துகிறான்.

அன்று வெளியே பிக்னிக் சென்றவர்கள் ஃபெலிக்ஸை விளையாட விட்டு விட்டு  ஒரு புதருக்குள் சென்று மரத்தடியிலேயே மழைச்சாரலில் நனைந்தபடி நின்றபடி உறவு கொள்கின்றனர், பின்னர் திரும்பிச் சென்று பார்க்கையில் ஃபெலிக்ஸ் அம்மாவைக் காணாததால் ஆத்திரம் கொண்டவன் மண்ணில் புரண்டு அடம் பிடிக்கிறான், நம் வீட்டுக்கு போக வேண்டும் என்கிறான், அங்கே ஜெஸ்பர் மிகுந்த சினம் கொள்கிறான், அன்று வீடு வந்தவுடன் மீனாவிடம் முகம் கொடுத்தே பேசவில்லை,இரவு ஃபெலிக்ஸை தூங்க வைத்துவிட்டு,அவனின்  போர்வைக்குள் வந்த மீனாவை ஜெஸ்பர் வரவேற்கவில்லை,அவளுடன் பேசவேண்டும் என்கிறான்.

தான் பெண் துணையேயின்றி நெடுங்காலம் தவித்திருந்ததாகச் சொல்கிறான், இது வரை தன்னை அம்மாவும் சகோதரியும் தம் ஆளுகைக்கு உட்படுத்தி இருந்தனர், இனியேனும் ஒருபெண் துணையுடன் சுகித்திருக்க வேண்டும் என எண்ணியதாகச் சொல்கிறான், அவனுக்கு மீனா நிச்சயமாக வேண்டுமென்றும் ஆனால் ஃபெலிக்ஸை ஏற்றுக்கொள்ள தான் தயாராக வில்லை என்றும் உரைக்கிறான்,மேலும் அவன் திரைக்கதை எழுத தனிமை வேண்டியிருக்கிறது என்கிறான்,அது அவளுக்கு மிகுந்த அவமானமாயிருக்கிறது, அந்த நடுநிசியிலேயே ஜெஸ்பர் எத்தனை சொல்லியும் கேட்காமல்  , அவனுடையக் காரைக் கடன் வாங்கிக்கொண்டு ஊரின் தொலைவில் இருக்கும் ஒரு கண்டெயினர் மோட்டல் வரை ஓட்டிச் செல்கிறாள்,

தூக்கமும் துக்கமும் அழுத்த, அங்கேயே நிறுத்தி தூங்குகிறாள், திடீரென எழுந்தவள், மகனைக் காணாமல் திடுக்கிட்டு தேட, நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் அவனை ஒரு ட்ரெய்லர் ட்ரைவருடன் பார்க்கிறாள், பீடோஃபைலோ என்று சந்தேகித்து நேரே ஆத்திரத்துடன் சென்றவள் டிரைவரைக் கோபமாக தள்ளி விட்டு மகனைக் கட்டிக்கொள்கிறாள், அவன் தனக்கு சுமையல்ல,தான் அவனிடம் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறேன் என்கிறாள், பின்னர் ரயில் பிடித்து ஓஸ்லோ நகர் வருகிறாள், ஃபெலிக்ஸை அவனுடைய தந்தையுடனும் சிற்றன்னையிடமும்  சேர்க்கிறாள்.

அடுத்த நாளே ஸ்கைப் சாட்டிங்கில் ஜெஸ்பர் வருகிறான்,ஆசை வார்த்தைகள் பேசுகிறான் ,தனக்கு அவளை இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்கிறான், அவள் இல்லாமல் தன்னால் உயிருடன் இருக்க முடியாது என்கிறான், பின்னர் மெல்லத் தயங்கி அவளுடைய மேலாடையை அவிழ்க்கச் சொல்லுகிறான், அவள் செய்ய, உள்ளாடையையும் அவிழ்க்கக் கேட்கிறான், அவள் செய்ய, கர மைதுனத்திற்கு தயாராகிறான்.ஆனால் அவன் பின்னால் கதவைத் திறந்து அவனின் பட இயக்குனர் அருகே வந்து கரடிபோல நிற்கிறான்,

மீனா அதிர்ச்சியுற்றவள் ஆடையால் போர்த்தி மூடுகிறாள், ஜெஸ்பர் அவனுக்கு அவளை அறிமுகம் செய்கிறான். இவள் மிகுந்த கலவரமடைகிறாள். விரைவில் ஓஸ்லோ நகரம் வந்து இவளைச் சந்திப்பதாக சொல்கிறான் ஜெஸ்பர், அவளுக்கு அது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது, அந்த வார இறுதியும் வந்து விடுகிறது, மகனை தன்னுடன் அழைக்க வேண்டிய தினம், முன்னாள் கணவன் வீடு சென்று ஃபெலிக்ஸை தன்னுடன் அழைத்துப் போகிறாள், மகனுடன் விரும்பிய உணவருந்துகிறாள், அவனுடன் விளையாடுகிறாள்,

 அவளுக்கு ஜெஸ்பர் அழைத்து மறுநாள் இரவு ஓஸ்லோ வருவதாகச் சொல்கிறான், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள் மீனா, மகன் உடனிருந்தால் ஜெஸ்பருடன் விரும்பியபடி உறவு கொள்ளமுடியாதே  என்று. மகனைக் கொண்டு போய் முன்னாள் கணவனின் ஆர்கிடெக்ட் ஆஃபீஸில் அவன் வேலைநேரத்தின் போது ஒப்படைக்கிறாள்,

தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யும் சொல்கிறாள், அவன் மீனாவைப் பார்த்து நம்பாமல் இதுவே அவளுக்கு தான் உதவும் கடைசி முறை, இனியேனும் கோர்ட்டின் உத்தரவை மதித்து நட என்கிறான், அவசர அவசரமாக சென்று புதிய உள்ளாடைகள் வாங்குகிறாள் மீனா, மேனியை நன்கு ஷேவ் செய்கிறாள், நகப்பூச்சு இடுகிறாள்.இவளை ஜெஸ்பர் போனில் அழைக்கிறான்,

தன்னால் இன்று ஓஸ்லோ வர முடியாது என்கிறான்,இவள் தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நான் ஃப்ளைட் பிடித்து அங்கே வருகிறேன், ஒரே மணிநேரத்தில் அங்கே ஸ்டாக் ஹோமில் இருப்பேன் என ஆர்வக்கோளாறாக சொல்கிறாள், ஆனால் ஜெஸ்பர் தன்னால் இவளுடன் இனி ரிலேஷன் ஷிப்பில் இருக்கவே முடியாது என்று ஒரு குண்டைப் போடுகிறான். தங்களால் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாதா? இனி   சிறந்த நண்பர்களாகவே இருப்போம் எனத் துண்டிக்கிறான். மீனாவுக்கு இதுபோல ஏமாற்றம் புதிதல்ல என்றாலும் அது ஜெஸ்பரிடமிருந்து என்னும் போது அதைத் தாங்க இயலவில்லை,

வெட்கத்தை விட்டு தான் முன்னாளில் டேட் செய்த ஒரு நண்பனுக்கு அழைத்தவள் அவனின் வீடு சென்று , அவனுடன் தன் உடல் வேட்கையை வெட்கத்தை விட்டு தெரிவித்து அவன் தயார் செய்கிறாள், அவன் ஒரு குதப்புணர்ச்சி விரும்பி,  ஆனால் அவள் அன்று திருப்தியுறவில்லை, மீனா தன் புதிய நண்பர்களுடன் எத்தனை உண்மையாக இருந்தாலும் அவர்கள் யாருமே மீனாவை நிரந்தரமான உறவாக எண்ணவில்லை, அவளை உபயோகித்துத் தூக்கி எறிய  நினைப்பது தொடர்கிறது, இதற்காகவெல்லாம் மீனா சளைக்கவில்லை.

அன்று மீனாவின் அம்மா இவள் வீட்டின் அழைப்பு மணியை அடித்தவள்,குடும்ப நண்பர்கள் இவள் அந்நிய ஆடவனுக்கு தெருவில் வைத்து கட்டித்தழுவி முத்தமிட்டதை கண்டு வந்து சொன்னதைச் சொல்லி வேதனையுறுகிறாள்.இதை கேட்டு கோபமான அப்பா,தன்னை அடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் இரவு வராததைச் சொல்லி அழுகிறாள்.இனியேனும் நல்ல இல்வாழ்க்கை வாழுமாறு கெஞ்சுகிறாள்.

இதற்கெல்லாம் சளைத்தவளா மீனா? மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்னும் இரட்டை வேடம் இனி கதைக்குதவாது என்று முடிவெடுக்கிறாள்.

 இனி என்ன ஆகும்?
  • மீனாவுக்கு நிரந்தரமாக அவளை பேணும் ஆடவன் உறவு கிடைத்ததா?
  • மீனாவின் மகன் ஃபெலிக்ஸ் என்ன ஆனான்?
  • ஜெஸ்பர் என்ன ஆனான்?
  • மீனாவின் பெற்றோர் அவளைப் புரிந்து ஏற்றுக்கொண்டனரா?
போன்றவற்றை படத்தில் பாருங்கள்,மிக விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு க்ரிப்பான திரைக்கதை இது, நம் ருத்ரையாவின் அவள் அப்படித்தான்,குமா [KUMA], ரஸ்ட் அண்ட் போன் [ Rust and Bone ] போல பெண்ணைச் சுற்றிச் சுழலும் அற்புதமான படைப்பு இது , அவசியம் பாருங்கள், படத்தில் மீனாவாகத் தோன்றிய நேபாளி-நார்வேகியப் பெண்ணான் அமிர்தா ஆச்சார்யாவின் பேட்டி இது, http://winteriscoming.net/2012/05/interview-with-amrita-acharia/படம் பார்த்தவுடன் அவசியம் படியுங்கள்.

படம் தரவிறக்க சுட்டி சப்டைட்டிலுடன் கூடியது
http://eutorrents.ph/index.php?page=torrent-details&amp%3Bid=76cf210ba33a91a0ed64974c1170f517bf316b07
படத்தின் ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து:-

ப்ரேக் [Prague][15+][இந்தியா]


ஹாலுசினேஷன் பட விரும்பிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ப்ரேக், செக் நாட்டின் தலைநகரான ப்ரேக்கை ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் டெரராக சித்தரித்திருப்பார்கள், ஹாஸ்டல் படத்தில்  ஒரு படி மேலே போய் ஸ்லோவாகியாவை குரூரிகளின் கொலை விளையாட்டுக்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறும் நாடு போல அதை சித்தரித்திருப்பார்கள். அனால் இப்படம் ப்ரேக் செக் நாட்டின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி படம் பிடித்திருக்கிறது.

ஐரோப்பாவை பிண்ணணியாக வைத்து எத்தனையோ பாலிவுட் குப்பைகள் வெளியாகின்றன,அவை ஃப்ரான்ஸை,ஸ்விட்ஸர்லாந்தை தான் சித்தரிக்கும், ஏழை ஐரொப்பிய நாடான செக்கிற்கெல்லாம் போகமாட்டார்கள். அதில் நாம் காணமுடியாத நிஜம்,நேர்த்தி இதில் உள்ளது.ஒரு வகையில் செக்+ஸ்லோவாக்கியா நாடு பல மர்மங்களாலும்,மூட நம்பிக்கைகளாலும் சூழப்பட்டது தான்,செக் நாட்டின் ப்ரேக் நகரை கதைக்களமாகக் கொண்டு நக்டரும் பாலிவுட்டின் இண்டிபெண்டண்ட் வகைப் படமான ப்ரேக் தரமான ஒரு ஹாலுசினேஷன் ஜானர் ரொமான்ஸ்-த்ரில்லர்  படம்,

ஷட்டர் ஐலேண்ட் ,மல்ஹாலண்ட் ட்ரைவ் போன்றே மிகுந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட படைப்பு, படத்தின் இயக்குனர் ஆஷிஷ் ஆர் ஷுக்லாவுக்கு இது தான் முதல் படம், இதற்கு முன் மேக்கிங் ஆஃப் தேவ்.டி என்னும் டிவி மூவி ஒன்றும், Corneliani என்னும் குறும்படம் ஒன்றும் இயக்கியுள்ளார், இப்படம் இந்தி,ஆங்கிலம்,செக் என மும்மொழிகளில் வசனங்களைக் கொண்டுள்ளது, மும்பையின் முண்ணனி கட்டிடக்கலை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ஆர்ஃபி தன்னுடைய இறுதியாண்டு தீஸீஸ் செய்ய செக் குடியரசு செல்கிறான்,

போலந்தைப் போலவே செக் குடியரசும் முதல் மற்றும்  இரண்டாம் உலகபோரால் மிகவும் சின்னாபின்னமான நாடு, போலந்தைப் போலவே இங்கும் இனவதை முகாம்கள் செயல்பட்டன, நாஜிப்படையின் கோரதாண்டவத்தாலும், அதையடுத்த உள்நாட்டுப் போராலும் அதீத உயிர்பலிகளின் கோரதாண்டவத்தை கண்ணுற்ற நாடு இது. ஜிப்ஸி இனமக்களை செக் மக்களே ஒன்று திரட்டி சிறைபிடித்து இனவதை முகாம்களில் அடைத்து ஹிட்லரின் பெயரால் இனப்படுகொலை செய்தனர் என்னும் நம்பிக்கையும் பரவலாக உண்டு.

பல போர்களையும், குடிமக்களின் துர் மரணங்களையும் சந்தித்த செக் நாட்டில் நீத்தாருக்கு ஒரு நினைவுச்சின்னம் வடிவமைப்பது தான் நாயகன் ஆர்ஃபியின் தீஸிஸ் டாபிக். அதற்காக செக் சென்றவன் அறையெடுத்து தங்கி,ஃபீல்ட் ஸ்டடி செய்து தீஸீஸ் செய்யும் அவன், அங்கே அவன் சந்திக்கும் மாந்தர்கள், அவனின் முன்னாள் & இன்னாள்  நட்புகள், அவனின் முன்னாள் & இன்னாள் காதலிகள்,அவனின் காதலிகளின் & நண்பர்களின் துரோகங்கள், போன்றவற்றை நயமான ஹாலூசினேஷன் பிண்ணணியுடன் பேசுகிறது.

அவன் செல்லும் செக் நாட்டின் வரலாற்றுப் புராதானமிக்க இடங்கள், அங்கே குறிப்பிடத்தக்க மனித எலும்புக்கூடுகளால் அமைக்கப்பட்ட ஒரு சர்ச். http://en.wikipedia.org/wiki/Sedlec_Ossuary , ஆர்ஃபியுடைய தீஸிஸ் டாபிக், அங்கே அவன் சந்திக்கும் செக் இனப் பெண் எலியானாவின்  வேண்டுகோளுக்கிணங்க ஜிப்ஸி மக்களின் நினைவுச்சென்னமாக மாறுகிற முக்கியமான கட்டங்கள் போன்றவை, உலகசினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டியவை.இது வரை இந்தியப் படம் எதுவும் செக் நாட்டின்    வரலாற்றுப் பிண்ணணியை இத்தனை அழகாக, நேர்த்தியுடன் பதிவு செய்ததில்லை. ஹாலுசினேஷன் பட விரும்பிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம். எத்தனை அருமையான உழைப்பு இந்த ப்ரேக் படக்குழுவினுடையது? மிகவும் தரமாக, ஆர்கிடெக்சரைப் பற்றி சீரியஸாக,  ஃபீல்ட் ஸ்டடி செய்து எடுக்கப்பட்ட படம் இதுவாகத் தான் இருக்கும்.

நம் அநேகம் படங்களில் ஆர்கிடெக்டை, ஆர்கிடெக் என்றே சொற் கொலை செய்வார்கள்,கதாநாயகன் கையில் ஒரு மினி ட்ராஃப்டரை கொடுத்து அவன் ஆர்கிடெக்சர் படிக்கிறான் என்று காட்டுவார்கள்,ஆர்கிடெக்சர் பற்றி தத்து பித்து என உளறுவார்கள். அந்த அளவுக்கு தான் அம்மூடர்களின் அற்பணிப்பு இருக்கும்,ஆனால் இதில் மிகுந்த ஈடுபாட்டுடன், ஃபீல்ட் ஸ்டடி செய்து ஆர்ட் டைரக்டர் ,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒருங்கிணைந்து இயங்கியுள்ளனர், இதே போலவே ஃபஹாத் ஃபாஸில்,ஆன் அகஸ்டின் நடித்த ஆர்டிஸ்ட் என்னும் மலையாளப் படமும் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியின் சூழலை, அதன் மாணவர்களை,  வாழ்வியலை நிஜமாக காட்டிய படம்,அதையும் அவசியம் பாருங்கள்.
இது படத்தின் ட்ரெய்லர் 

படம் தரவிறக்க சப்டட்டிலுடன் கூடிய சுட்டி
http://eutorrents.ph/index.php?page=torrent-details&id=e937e397a6861e856db68364cfb2fc9bb82bc965

படக்குழு விபரம் விக்கியிலிருந்து:-
Directed by Ashish R Shukla
Produced by Rohit Khaitan & Sunil Pathare
Story by Sumit Saxena & Ashish R Shukla
Starring Chandan Roy Sanyal
Elena Kazan
Arfi Lamba
kumar Mayank
Music by Atif Afzal
Cinematography Uday Mohite
Editing by Meghana Manchanda Sen
Distributed by PVR Pictures
Release dates
  • 27 September 2013
Running time 96 min
Country India
Language Hindi
English

அணுசக்தி வேண்டாம் - சுஜாதா!

(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது)

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
 

 முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-

 
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-

 
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-

 
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-

 
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-

 
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-

 
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-

 
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-

 
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-

 
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.

இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(Taken From :- சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?)

ஷூன்யோ ஆவ்ன்கோ:ஆக்ட் ஸீரோ [Shunyo Awnko: Act Zero][2013 ][பெங்காலி]


இயக்குனர் ன் ஷூன்யோ ஆவ்ன்கோ :ஆக்ட் ஸீரோ என்னும் பெங்காலி மொழிப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது, ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையை இந்திய அரசும் [49% பங்கு] லண்டனைச் சேர்ந்த கனிமவள நிறுவனமான வேதாந்தாவும் [51%] ஏலம் போட்டு அதன் கனிம வளங்களை அசுர கதியில் சுரண்டிக் கொண்டிருப்பது நாமறிந்ததே,

அங்கே மலையை தெய்வமாக எண்ணி அதன் காடுகளையும் அருவிகளையும்,ஆறுகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டு  வாழும் Dongria பழங்குடி மக்கள் அனுதினம் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றியும், அவர்களின் அரிய வாழ்வாதாரங்கள், பண்பாடு, கலாச்சாரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றியும் இந்திய அரசு கவலைப் படுவதில்லை, வெறும் 3000 பழங்குடியினருக்காக அந்த மலையை கைகழுவி விட்டு போட்டது போட்டபடி வெளியேற அவர்களின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள  பாக்ஸைட் வளக் கனவு விடுவதாயில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக வேதாந்தா நிறுவனமே இந்த மலையும் தொழிற்சாலையும் வேண்டாமென்று திரும்பிப் போனாலும் இந்திய அரசு அவர்களை விடுவதாக இல்லை, தவிர வேதாந்தா நிறுவனம் இதே போலவே ஆஃப்ரிக்காவின் ஏழை நாடான ஸாம்பியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுரங்கம் நிறுவி சுரண்டிக் கொண்டிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவன முதலைகள் என்றால் மிகையில்லை.

இங்கே நியாம்கிரியில் நன்கு  காலூன்றிவிட்ட அவர்களை   இனி தூக்கி எறிவது என்பது முடியாத செயல்.தம் நியாம்கிரி மலையைக் காக்க அப்பாவி பழங்குடியினரும் தம் சொந்த அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை. அனுதினமும் இந்திய ராணுவத்தினருடன் துப்பாக்கிச் சண்டை, மாவோயிஸ்டுகளின் துணையுடன் அவர்களை எதிர்த்து கொரில்லா தாக்குதல், மாவோயிஸ்டுகள், பழங்குடியினர், இந்திய ராணுவத்தினர் என ஆயிரக்கணக்கில் உயிர்பலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் தேன்கூட்டில் கல் எறிந்தது போலானதொரு நிலை.
 மாவோயிஸ்டு தீவீரவாதிகள் ஒருபுறம் ,பழங்குடி மக்களுக்கு யானையைச் செய்கிறேன் பூனையைச் செய்கிறேன் என ஆசை வார்த்தை மட்டும் காட்டும் வேதாந்தா கம்பெனி நிர்வாகம் மறுபுறம், இன்று நியாம்கிரியில் நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் யதார்த்தங்களை  தெளிவாகப் பேசுகிறது இப்படம், இதே கதையை பிண்ணணியாகக் கொண்டு பாலிவுட்டில் Chakravyuh உள்ளிட்ட எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் அவற்றில் நிரம்பியிருக்கும் போலியான ஹீரோயிசமும், சினிமாத்தனமும், சென்டிமெண்டுகளும்  க்ளிஷேத்தனமும் இப்படத்தில் அறவே இல்லை, 
 
அது தான் இப்படத்தை உலக சினிமாவாக மாற்றும் காரணி, படத்தில் கார்பொரேட்டுகளின் ஆடம்பரமும், உல்லாசமான சொகுசு வாழ்க்கையும், அப்பாவி ஏழைப் பழங்குடியினரின் அன்றாட அல்லல்களுக்கிடையேயான இயல்பு வாழ்க்கையும் சரிபாதியாக பிரிக்கப்பட்டு நான் லீனியர் பாணியில் வெவ்வேறு ஆக்ட்களாக தொகுக்கப்பட்டுள்ளது, படத்தின் திரைக்கதையும், Goutam Ghose ன் ஒளிப்பதிவும் , Anupam Roy ன் இசையும் ஒருங்கிணைந்து மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன என்றால் மிகையில்லை.
 
மிகவும் சிக்கலான ஒரு அரசு மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சனையை மிகவும் யதார்த்தமாக பிரதிபலிக்கும் ஒரு படைப்பு இப்படம். படத்தின் திரைக்கதை 6 ஆக்ட்களாக சொல்லப்படுகிறது 7ஆவதாக 0 ஆக்ட் படத்தின் முடிவாகச் சொல்லப்படுகிறது. படத்தின் வசனங்கள் அரசுக்கு எதிராக பழங்குடிகளும் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் யதார்த்தமான கேள்விகளால் நிரம்பியுள்ளது.அவற்றில் முக்கியமான இரண்டை இங்கே பகிர்கிறேன்,

1.இந்தியாவிலேயே இந்திய கனிம வள நிறுவனம் என்னும் பொதுத்துறை நிறுவனம் இருக்க 51 சதவிகித பங்குகளை வெளிநாட்டு நிறுவனமான வேதாந்தாவுக்கு தாரை வார்க்க என்ன காரணம்? இதற்கு நாங்கள் முறையாக டெண்டர் விட்டு தான் வேதாந்தா நிறுவனத்தை தேர்ந்தெடுத்தோம் என்று  கலெக்டர் சொல்லும் சப்பைக்கட்டை கேட்கும் போதே ஒருவருக்கு பற்றிக் கொண்டு வரும்.

2.சரி!!! நியாம் கிரி மலையில் மட்டும் தானா கனிம வளங்கள் உள்ளது?. ஏன் மும்பையின் உயர்குடி மக்கள் வசிக்கும் மலபார் ஹில்ஸ் பகுதியில் இல்லாத கனிம வளங்களா?!!!

தில்லியின்  உயர்குடி மக்கள் வசிக்கும் சாணக்யபுரியில் இல்லாத கனிம வளங்களா? கொல்கத்தாவின் உயர்குடி மக்கள் வசிக்கும் பகுதியான அலிப்பூரில் இல்லாத கனிம வளங்களா?!!! ஏன் அங்கே எல்லாம் மேட்டுக்குடி மக்கள் கனிம வளங்களுக்காக அரசால் வெளியேற்றப் படுவதில்லை?

ஏன் இந்தியாவில் அணை கட்டுவதாக இருந்தாலும்? தொழிற்ச்சாலைகள் அமைப்பதாக இருந்தாலும்? சுரங்கங்கள் தோண்டுவதாக இருந்தாலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதாக இருந்தாலும் களபலியாக பழங்குடிகளே குறி வைக்கப்படுகின்றனர்? இந்தியாவின் முன்னேற்றம், அந்நிய முதலீடு ஊக்குவிப்பு என்னும் போர்வையில் 100 வருடங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கு எதுவுமே இல்லாத படிக்கு  நம் நாட்டின் கனிம வளங்கள் அசுர கதியில் சுரண்டப்படுவது ஏன்?!!!

இந்தியா சுதந்திரம் அடைந்த 67 வருடங்களில் இப்படி தங்கள் வாழ்வாதாரங்களை , உறைவிடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எண்ணிக்கை 6 கோடி என்பது தெரியுமா?!!! அவர்கள் என்ன ஆனார்கள்? என்று எந்த அரசுக்காவது அக்கறை இருக்கிறதா? போன்ற கேள்விக் கணைகள்,புத்திசாலித்தனமான பெண் பத்திரிக்கையாளர் ஒருவரால் முன்வைக்கப்படுகிறது, அதற்கு அந்த கனிம நிறுவன உயர் அதிகாரியால் எந்த பதிலுமே சொல்ல முடிவதில்லை,

அந்த ராக்கா என்னும் பெண் பத்திரிக்கை செய்தியாளராக நம் கொங்கனா சென்  நடித்திருக்கிறார் ,அந்த வேதாந்தா கனிம வள நிறுவன உயர் அதிகாரி அக்னி போஸாக நடித்திருக்கிறார். அவரின் தனிமையில் உழலும் குடிக்கு அடிமையான மனைவி ஜில்லிக் என்னும் கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் கணவர் ஓயாமல் பயணங்கள் மேற்கொள்ள, இவர் தனிமைக்கு இரையாகிறார், இவர் திரைமேதை ஃபெலினி, மற்றும் ரபீந்த்ரநாத் தாகூரின் கவிதைகளுக்கு தீவிர ரசிகையாகவும் இருக்கிறார், தன் கணவனைப் போலவே தானும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியம் கொண்டிருக்கிறார்.விரைவில் ஒரு ஏர்ஹோஸ்டஸ் பயிற்சிப் பள்ளியை தன் முன் அனுபவத்திலிருந்து துவங்க ஆசை கொண்டிருப்பவர்.

இவர்களின் மணவாழ்க்கையில் எழும் ஊடல்களைக் களைவதற்கு மனாலி  சென்று ஒரு உயர்தர கெஸ்ட் ஹோமில் தங்கி, 2வார விடுமுறையை 2ஆம் தேன்னிலவு போல உல்லாசமாகக் கழிக்கின்றனர். அங்கே அந்த கெஸ்ட் ஹோமை நிர்வகிக்கும் இஸ்லாமிய தம்பதிகளாக முதிய விஞ்ஞானி  கபீர் சவுத்ரி  வேடத்தில் , நடித்திருக்கிறார்,இவர் தன் முதுமையால் சக்கர நாற்காலியில் விழுந்து விட்டிருந்தாலும், கம்ப்யூட்டரில் அப்டேட்டாக இருக்கிறார், ஹேக்கிங் மென்பொருள் ஒன்றை கண்டு பிடித்து அதை மேம்படுத்தியும் வருகிறார்.

அவரது மிகுந்த ஆச்சாரமான மனைவி லைலா கதாபாத்திரத்தில் Lolita Chatterji  நடித்துள்ளார். இவர்கள் நடத்தும் கெஸ்ட் ஹோம் மிகவும் புதுமையானது, இவர்களின் மகன் டாரா பிபிசி பத்திரிக்கை செய்தியாளன், காஷ்மீரில் நிலவி வரும் ராணுவ நடவடிக்கையால் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவன்.தன் மகன் முஸ்லிம் என்பதால் போலியாக இந்திய ராணுவத்தால் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாம் என லைலா உறுதியாக நம்புகிறார்,பல சமயம் அவருக்கு இதனாலேயே ஹிஸ்டீரியா போன்று வருகிறது, அவ்வேளைகளில் மாற்று மதத்தாரை, அவரது நம்பிக்கைகளை துவேஷிக்கிறார் .  அதோ தரையெல்லாம் என் மகனின் ரத்தம் என பதறுகிறார்,

 வேலைக்காரியிடம் சொல்லி தரையில் நீர் ஊற்றச் செய்து தரையை  தானே தேய்த்துத் துடைக்கிறார். ஆனால் மறுநாள் அவர் நேற்று நடந்த அமர்க்களங்களை சுத்தமாக மறந்து இயல்பான நிலைக்கு திரும்பி விடுகிறார், வந்திருக்கும் விருந்தினருக்கு ராயல் குசின் உணவு வகைகளை சமைத்துப் பறிமாறுகிறாள்.

இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரமாக பெரும்பாலான பழங்குடிகள் பற்றிய சித்தரிப்புகள் வரும் திரைப்படங்களில் டாக்டராக தோன்றும் இதிலும் நியாம்கிரி பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளிக்கும்   ப்ரபோல் ராய் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்போது வெளியான நீலாகாஷம் பச்சக்கடல் சுவர்ண பூமி என்னும் படத்திலும் பழங்குடிகளுக்கு உதவும் நல்ல மனம் கொண்ட டாக்டர் வேடம் பூண்டிருந்தார். படம் பார்க்கும் பார்வையாளர் மனதில் பதிந்து விடுவார்.

அவசியம் படத்தைப் பாருங்கள்,  நம் இந்தியாவில் இருக்கும்  இயற்கையின் சொர்க்கபுரியான மனாலியின் எழில் கொஞ்சும் அழகையும் மக்களின் வாழ்வியலையும்,ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையயும்,அதன் இயற்கை அழகினையும்,மாந்தர்களையும்,கொல்கத்தா நகர சூழலையும் வாழ்வியலையும், இயக்குனர் மிக அருமையாக படமாக்கியிருக்கிறார். படத்தை மேலே சொன்ன முக்கியமான 6 கதாபாத்திரங்களால் செதுக்கியிருக்கிறார் .

உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு படம், பொதுவாக பெங்காலி திரைப்படங்கள் போஸ்டரில் ஆங்கிலப் பெயரைக் கொண்டிருக்காது, அதே போல  பல நல்ல திரைப்படங்கள் கூட ஆங்கில சப்டைட்டில்களை கொண்டிருக்காது, அவ்வளவும் மொழிப்பற்றினால் தான்,அந்நிய விருதுகளை ஒரு பொருட்டாக கருதாத இன மானத்தினால் தான்  . இந்தப் படம் ஒரு காம்போஸிட் லிங்குஸ்டிக் படம், ஒரு சேர பெங்காலி, ஹிந்தி, உருது, ஆங்கிலம் என கதாபாத்திரங்களால் பேசப்படுகிறது, அதிர்ஷ்டவசமாக இதற்கு ஆங்கில சப்டைட்டில் கிடைத்தது.படம் அவசியம் பாருங்கள்.

இதன் ஆங்கில சப் டைட்டில் தரவிறக்க:-
http://www.subtitleseeker.com/2961236/Shunyo+Awnko%3A+Act+Zero/Subtitles/English/
படம் தரவிறக்க:-
https://torrentz.eu/8e73cc466f0489cd1d177b19ad4ff5b920a3d7f5

படத்தின் ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து

ஸக்காரியாயுடே கர்ப்பிணிகள் [സക്കറിയായുടെ ഗർഭിണികൾ ] [Zachariayude Garbhinikal] [மலையாளம் ][2013]க்காரியாயுடே கர்ப்பிணிகள் படம் பார்த்தேன், படத்தின் தலைப்பை பார்த்தவுடன் லால் தான் ஸக்காரியா,அவரின் மனைவிமார் ஒரே சமயத்தில் கர்ப்பம் தரித்தனரோ? என குழப்பியது, நல்ல வேளை அப்படி இல்லை,ஸக்காரியா [லால்] ஒரு கைனகாலஜிஸ்ட்,தனியார் மகப்பேறு மருத்துவமனையும் வைத்திருக்கிறார்,அவரிடம் தற்சமயம் மருத்துவ ஆலோசனை செய்து வரும் 4 +1 பெண்களின் கதை இது,அந்த +1 என்று சொன்னது ஸக்காரியாவிடம் வேலை பார்க்கும் ஃபாத்திமாவின் உபகதை.

இந்த 5 கதைகளுமே கேரளாவில் உண்மையாகவே நடந்தவை என்பதும் ஒரு சிறப்பு, செவிலியர் ஜாஸ்மின் ஜெனிஃபர் [கீதா ] 40 வருடங்களாக கர்த்தரின் சேவையில் வாழ்ந்தவர் கன்னி மேரியைப் போல ஆடவருடன் கலக்காமலே தாயாக விரும்புகிறார்,கேரளம் முழுக்க இது தான் பேச்சாக இருக்கிறது, 52 வயதான  பெண்மணியான இவர்  செயற்கை பரிசோதனைக்குழாய் கருத்தரிப்பு [artificial insemination. ]மூலம் கருத்தரிக்கிறார்,இவருக்கு ஸக்காரியா தான் ஆலோசனையும் தொடர் சிகிச்சையும் வழங்குகிறார்.

இன்னொரு பெண்ணான அனுராதா கோடீஸ்வர மோட்டார் ரேஸ் வீரரின் மனைவி,அவர் முன்பே ஆண்மை இழந்தது தெரியாமல் பணத்துக்காக வயதான அவரை திருமணம் செய்து கொள்ள , அவரோ ஒர் ரேஸ்  விபத்தில் தண்டுவடத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிவர,அவரின் நண்பன் ஒருவரின் கள்ளக்காதல் வலையில் விழுந்தவள் கருத்தரிக்கிறாள்,கரு 4 மாத வளர்ச்சி அடைந்துள்ள நிலை, இரட்டைக் குழந்தை வேறு, கருவை கலைக்கவே முடியாத நிலை,கணவன் இறந்தவுடன் அவரின் குழந்தையாக இதை வெளியுலகிற்கு அறிவிக்க எண்ணி அவரின் இறுதி நாட்களை எண்ணுகிறாள், ஆனால் அவர் அற்புதம் ஒன்று நிகழ தேறி வருகிறார், கள்ளக் காதலனோ கருவை கலைக்கவேண்டும் என்கிறான்,இவருக்கு ஸக்காரியா தான் ஆலோசனையும் தொடர் சிகிச்சையும் வழங்குகிறார்.

அடுத்த பெண்ணாக நம் ரேணிகுண்டாவில் பார்த்த சனுஷா,சாய்ராவாக வருகிறார்,இவர் 17 வயது +2 படிக்கும்  பள்ளி மாணவி,தான் சுமக்கும் கருவுக்கு காரணமானவர் யார் எனக் கேட்கக்கூடாது, கருவைக் கலைக்க அறிவுருத்தக் கூடாது, கருவினால் தன் படிப்பு பாதிக்கக்கூடாது,பிள்ளை பெற்றவுடன் அதை பிள்ளைப்பேறு இல்லாத நல்ல தம்பதியருக்கு தத்து கொடுக்க உதவ வேண்டும் என்னும் நிபந்தனைகளுடன் ஸக்காரியாவிடம் சிகிச்சைக்கு வருகிறாள்,இவள் கதையையும் பத்மராஜன் எழுதிய முக்கியமான சிறுகதையான மூவந்திக்கும் இயக்குனர் ஒரு அற்புதமான கனெக்‌ஷனை வைத்திருக்கிறார், அந்த சிறுகதையை அனிமேஷன் ஃப்ரேம்களாக படமாக்கியிருந்தார்,

அது கடைசி ரீலில் வரும்,அதனால் காபிரைட் வழக்கு பிரச்சனையில் மாட்டி,சாட்டிலைட் உரிமத்தில் சமரசம் செய்து கொண்டு படத்தை வெளியிட்டுள்ளார்,ஆனால் அந்த கனெஷன் மிகவும் அற்புதமான ஒன்று,இந்தப் படத்தை உலகசினிமாவாக மாற்றும் ஒரு தரமான இணைப்பு அந்த கனெக்‌ஷன்.சனுஷாவின் அப்பாவை நோட் செய்து கொள்ளுங்கள்,இந்த பீடோஃபைல், இன்ஸெஸ்ட் தகப்பன் வேடத்தில் நடிக்க எத்தனை நெஞ்சுரம் வேண்டும்,அதை தயங்காமல் சாதித்துக் காட்டியுள்ளார்   நம் ரவீந்தர்  ,அவர் கண்ணாடி போட்டு சிகையலங்காரத்தையும் மாற்றியதால் முதலில் அடையாளமே தெரியவில்லை.

மற்றுமொரு பெண்ணாக டாக்டர் ஸக்காரியாவின் மனைவி ஸூஸன்[ஆஷா சரத்]இவர்களுக்கு மணமாகி 20 வருடங்களாகவே குழந்தை இல்லை,சனுஷாவை பிள்ளைப்பேறுக்காக தன் வீட்டிலேயே தங்க வைக்கும் இவர் சனுஷாவை தன் குழந்தையைப் போல எண்ணி தாயாகாமலே தாய்மை அடைகிறாள்.அது மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது,தன் வயிற்றில் தலையனையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக போட்டோவுக்கு போஸ் தரும் அந்த தருணம், பிள்ளையில்லாதவர் வேதனையை சொல்லாமல் சொல்லும்.

அடுத்த பெண்ணாக ஃபாத்திமா[ரீமா கல்லிங்கல்]இதில் கொச்சையாக  மலையாளம் பேசுகிறார்[மெட்ராஸ் பாஷை போல],அதை அசல் மலையாளிகளுக்கு நன்கு இனம் காண முடியும், சூஸனைப் போன்றே இவரும் கர்ப்பிணி அல்ல, பெற்ற தந்தை விட்டு ஓடியிருக்க, வளர்த்த அம்மா நர்சிங் படிக்க வைத்து மரித்தும் போயிருக்க, தம்பியுடன் தனியாக வசிக்கிறாள், ஸக்காரியா கர்ப்பிணிகளுக்கு மட்டுமே மனமிறங்குபவர் , என்னும் உண்மையைக் கேட்ட மாத்திரத்தில் இவர் வேலைக்கு தாமதமாக வந்ததன் காரணத்தை கோபமாகக் கேட்கும் ஸக்காரியாவிடம் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமலே தான் கர்ப்பம் என்கிறார்,

இதனால் அவளுக்கு ஸக்காரியாவிடமும்,தன் வீட்டு எஜமானரிடமும்,  பேருந்திலும், சமூகத்திலும் பல சலுகைகள் கிடைக்கிறது, இவளுக்கு  இரவுப் பணியே வழங்கப்படுவதில்லை,  எல்லாவற்றிற்கும் மேலாக இவள் கணவன் விட்டு ஓடிப்போய்விட்டான் என்னும் பொய்யை நம்பிய சக ஊழியன் அஜ்மல் இவளுக்கும் இவளின் சிசுவுக்கும் வாழ்க்கை தர தயாராகிறான், அவையெல்லாம் மிகவும் யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

படம் அவசியம் பாருங்கள்,ஆபாசம் எங்குமே இல்லை, ஆனாலும் வயது வந்தோர் மட்டும் பார்க்க வேண்டிய படம், படம் தரவிறக்க லின்க்,சப்டைட்டிலும் உடன் கிடைக்கிறது.
https://torrentz.eu/328243ce434d01d5e3a5a3af17c5938972ebe7b0

காட்டின் [katyn ][2007][போலந்து][15+]


னப்படுகொலை என்றாலே நம் நினைவுக்கு வருவது யூதர்கள் இனப்படுகொலை தான், ஆனால் அதற்கு ஈடாக போலந்து நாட்டினரும் தம் இன்னுயிரை தம் நாட்டுக்காக ஈந்துள்ளனர், போலந்து நாட்டின் 70 ஆண்டுகால வரலாற்றை நாம் படித்துப் பார்த்தால் அது இரண்டாம் உலகப் போரில் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமானது புரியும், நாஜிப்படையினரும்,ரஷ்யரும் போலந்து நாட்டை பயங்கர சுடுகாடாக்கினர் என்றால் மிகையில்லை,

 போலந்து நாட்டின் புகழ்பெற்ற சினிமா இயக்குனரான Andrzej Wajda இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளியான படம் காட்டின், இவரின் தந்தையும் போலந்து ராணுவ வீரர்,  இந்த காட்டின் படுகொலைகளின் போது சுட்டுக் கொல்லப்பட்டவர் , அப்போது இயக்குனர் Andrzej Wajda க்கு 13 வயது, பிஞ்சு மனதில் நீங்கா வடுவாகப் பதிந்து விட்ட காட்டின் படுகொலை நினைவுகள், இத்திரைப்படத்தில் உக்கிரமாய் வெளிப்பட்டுள்ளது.சோவியத் ரஷ்யா உடைந்து 20 வருடங்கள் கழித்தே இந்த உன்னத படைப்பு போலந்து நாட்டின் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது,எத்தனை காலம் இது நீரு பூத்த நெருப்பாக போலந்து மக்களின் மனதில் கனன்று கொண்டிருந்திருக்கும்?!!!

வண்டியில்வரும் போலந்து ராணுவஅதிகாரிகளின்  பிணங்கள்
போலந்து நாட்டின்  குடியுரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு பல்கலைக்கழக பட்டதாரியும் கட்டாய ராணுவ சேவை செய்திருக்க வேண்டியது அவசியம், அப்போது தான் ஒருவருக்கு குடிமகன் அந்தஸ்தும் பட்டமும் ,தொழில் செய்ய உரிமமும் கிடைக்கும்,இரண்டாம் உலகபோரில் ஜெர்மனி முதலில் போலந்தை பிடித்துக்கொள்ள,பின்னர் 2 வார காலத்தில் ரஷ்யாவும் போலந்தைப் பிடித்துக்கொண்டது, சுமார் 11லட்சம் பேர் வரை போர்கைதிகளாக ஜெர்மனியாலும் ரஷ்யாவாலும் பிடித்துச் செல்லப்பட்டனர். 1939ன் இறுதியில் போலந்து ராணுவ வீரர்கள் சுமார் 22000 பேர்களை ரஷ்யாவுக்கு கைதிகளாக  பிடித்துக் கொண்டு சென்ற செம்படை,ஒரு வருடகாலம் நன்கு பராமரித்து, வெளியுலகத்துக்கு அவர்கள் சிறையில் கிருத்துமஸ் கூட கொண்டாடுவதாக ஆவணப்படம் எடுத்து காட்டுகிறது,
பாயிண்ட் ப்ளான்கில் சுடும் காட்சி
பகைவரைக் கூட மனிதாபிமானத்துடன் நடத்தும் ரஷ்யா என பொய்ப் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் அவர்கள் 22000 பேரை அடுத்தடுத்து காட்டின் என்னும் காட்டுக்குள் கூட்டிப்போய் சுட்டுக்கொன்று புதைத்திருக்கிறது செம்படை,அந்த மரணப் பட்டியலில் இருந்த 22000 பேரும் நன்கு படித்த மேதைகள் அவர்களில் டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், பைலட்டுகள், என ஒளிமயமான போலந்தை உருவாக்கத் தக்க சான்றோர்கள் இருப்பது போல  பார்த்துக்கொண்டனர்.அதை கவனமாக  நிறைவேற்றவும் செய்தனர்.

 இரண்டாம் உலகப்போர் உச்சத்திலிருக்கும் 1943களில் ஜெர்மனி ரஷ்யா செய்த காட்டின்  படுகொலைகளை [katyn massacre] கண்டறிந்து எதிர் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் சர்வாதிகாரி ஸ்டாலினின் அரசு அந்த படுகொலைகளை செய்தது நாஜிப்படைதான் என்று உலக நாடுகள் சபை முன்னர் முழங்குகிறது, ரஷ்யா உக்கிரமான போரின் முடிவில்  மீண்டும் நாஜிப்படையின் வசம் இருந்த போலந்தை முழுதாய் ஆக்கிரமிக்கிறது, போலந்தில் நிலவிய தனக்கு உகந்த சூழலைப் பயன்படுத்தி பொது மக்களிடம் காட்டின் படுகொலைகள் நாஜிப்படையினரால் நிகழ்த்தப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் இதற்குப் பின்னர் இருக்கும் சூத்திரதாரி சர்வாதிகாரி ஸ்டாலின் தான் என்பதை போலந்து மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்,
இது உண்மையான காட்டின் படுகொலையும்-கண்டுபிடிப்பும்

1940ஆம் ஆண்டு காட்டின் காட்டுக்குள் வைத்து தலையில் பாய்ண்ட் ப்ளான்கில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு  கும்பலாக புதைக்கப்பட்ட  போலந்து ராணுவ வீரர்களின் சடலங்கள் முறையாக ரஷ்யர்களால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு மிகவும் நல்லவர் போல நீத்தார்களின் பதக்கங்களையும், உடமைகளும் பல்கலைக்கழகங்களின் வழியே வீட்டாரிடம் ஒப்படைக்கத் தரப்படுகின்றன, ஆனால் அவற்றை அந்த பல்கலைக் கழகங்கள் வீட்டாரிடம் ஒப்படைப்பதில்லை, இப்போது பல்கலைக்கழகங்கள் தடையின்றி இயங்குவதற்கு ரஷ்யாவின் கனிவும் தயவும் தேவையாக இருப்பதால், அவை ஸ்டாலின் செய்த கடந்தகால படுகொலைகளை கண்டுகொள்வதில்லை, நிகழ்காலத்திலேயே கவலை கொள்கின்றனர்,  இருந்தும் அனு தினமும் ரஷ்யர்களின் செம்படை புரிந்த போர் குற்றங்களுக்கு எதிராக ஏதாவது சாட்சியம், தடயம் தோன்றிய வண்ணம் இருக்கின்றன,

ஜெர்மானிய வகை துப்பாக்கியில் இருந்து கிளம்பும்  குண்டு ஒருவரின் தலைக்குள் பாய்ண்ட் ப்ளான்கில் வெளியேறுவதால் மூளைக்குள் அது தங்குவதேயில்லை,அதனால் ஜெர்மானிய நாஜிப்படை  சுட்டு தான் அவர்கள் இறந்தனர் என்று ரஷ்ய செம்படையினர் சாதித்தனர், அந்த   பாணி ஜெர்மனியின் நாஜிப்படைக்கு உரிய கொலை புரியும் பாணியாகும், அதை ரஷ்யர்கள் பின்பற்றி சுமார் 22000 வீரர்களை அடுத்தடுத்து சுட்டுக் கொன்று மூன்று பெரிய சவக்குவியலாக அடக்கம் செய்திருப்பதும் மெல்ல வெளியுலகிற்குத்  தெரிய வருகிறது, ரஷ்யாவும் ஜெர்மனியும் 1990ஆம் ஆண்டு வரை பொருப்பேற்க மறுத்து வந்த நாம் அதிகம் கேள்வியுறாத, காட்டின் படுகொலைகளை உலகுக்குச் சொன்ன மிக முக்கியமான படம் இது,
சுட்ட வேகத்தில் குழியில் தள்ளும் காட்சி
யூத இனப்படுகொலைகள் எல்லோரையும் எளிதாக சென்றடைந்தது போல போலந்து கத்தோலிக்க மக்களின் படுகொலைகள், சீனமக்களின் இனப்படுகொலை, மற்றும் ஆஃப்ரிக்க,கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த  மக்களின் இனப்படுகொலைகள் அதிகம்  மக்களை சென்று சேரவில்லை, அதற்கு யாரும் மெனக்கெட்டு ஆவணக்காப்பும், விளம்பரங்களும் ,பிரச்சாரங்களும் செய்து சர்வதேச அரங்கில் தீவிரமாக வாதாடவுமில்லை, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையும் வாங்கித் தந்த பாடில்லை. இந்த காட்டின் படுகொலைகளுக்கு  இன்னமும் ரஷ்யா மனம் வருந்தவில்லை, என்பது தான் மாபெரும் துயரம்.
1943 ல் சவக்குழிகளை தோண்டிய போது
என்ன தான் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் நூரம்பர்க் விசாரணை மன்றம் அமைக்கப்பட்டாலும் நாஜிக்கள் சில நூறு பேர்கள் தண்டனை அடைந்தது போல ரஷ்யர்கள் செய்த போர் குற்றங்களுக்கு தண்டனை அடையவில்லை என்பது   வேதனையான விஷயம்,  அது இன்றும் போலந்து மக்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கிறது, இந்தப்படம் பார்ப்பதற்கு முன்னர் இந்த சுட்டிகளில் சென்று புகைப்படங்களைப் பாருங்கள், பின்னர் இதைப் பற்றி படித்து விட்டு ,சிறிது வரலாற்றுப் புரிதலுடன் ,காட்டின் திரைப்படத்தைப் பாருங்கள் , இரண்டாம் உலகப்போரின் உலகறியாத கொடூரங்களை உரக்கச் சொன்ன போலந்து நாட்டின் படைப்பு இது,70 வருடங்கள் கடந்த நிலையில் மிகவும் பலமாக ஒலித்திருக்கிறது,

உலக வரலாற்றில் முதலும் கடைசியுமான சாதனையாக ஸ்டாலினின் அல்லக்கையான Vasili_Blokhin என்னும் ஒருவன் ,தன் கையால் சுமார் 7000 பேரை காட்டின் படுகொலைகளின் போது ரிவால்வரால் சுட்டுக்கொன்று சாதனை படைத்திருக்கிறான். செம்படையின் கொடூரமான சாதனைகளுக்கு இவன் செயல்ஒரு சோற்றுப் பதம்
http://en.wikipedia.org/wiki/Katyn_massacre
http://en.wikipedia.org/wiki/Vasili_Blokhin
http://www.allworldwars.com/Katyn-Files.html#6
http://www.pbs.org/behindcloseddoors/in-depth/katyn-massacre.html
http://www.katyn.org.au/
காட்டின் படத்தின் ட்ரெய்லர்-யூட்யூபிலிருந்து

நார்த் 24 காதம் [North 24 Kaatham ] [നോർത്ത് 24 കാതം ] [2013][மலையாளம்]

 
நார்த் 24 காதம் இன்று தான் பார்க்க முடிந்தது,ஃபஹாத்தின் போர்ட் ஃபோலியோவில் மேலும் ஒரு தரமான படம்,இப்படியே போனால் ஃபஹாதின் படங்களைத் தான் வெரைட்டியானவை ,  தரமானவை என முத்திரை குத்த வேண்டியிருக்கும், அப்படி நல்ல படங்களாக அமைகிறது, படத்தில் நெடுமுடி வேணு என்னும் மகா நடிகரை வைத்துக் கொண்டே ஃபஹாத் சத்தமில்லாமல் நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்,

ஹாலிவுட்டின் நடிப்பு ப்ரம்மா ஜாக் நிக்கல்சனின் As Good as It Gets (1997) படத்தின் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஸார்டர்  பேஷண்ட் கதாபாத்திரத்தை நினைவூட்டும் படியான கதாபத்திரம்,ஆனால் தன் பாணியில் நேட்டிவிட்டியுடன் நடித்துப் பின்னிப் பிணைந்திருக்கிறார் ஃபஹாத்,இவர் இந்தப் படத்துக்காக எத்தனை ஹோம் ஒர்க் செய்திருக்க வேண்டும்? என மலைக்க வைக்கிறது,

மனிதர்.படத்தின்  கடைசி ரீலில் சுவாதி கேட்கும் எப்போவுமே இப்படித் தானா? சுத்த ராட்சதன் போல? என்னும் கேள்விக்கு மட்டும் தான் முதன் முதலாக படத்தில் சிரிக்கிறார்,[இவர் தன் சிகிச்சைக்காக செய்யும் லாஃபிங் தெரபி கணக்கில் சேராது] இப்படி ஒரு நசை போன்ற கதாபாத்திரத்தை லட்டு போல சாப்பிட்டுவிட்டார்.

இம்மானுயேல் படத்திலும் ஃபஹாத் ஏற்றது ஒரு சிடுமூஞ்சி மேலதிகாரி கதாபாத்திரம் தான்,அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம் காட்டியுள்ளார் ஃபஹாத்? இவருக்கு இப்படி ரோல்கள் அமைகிறதா?அல்லது இவர் இப்படி அமைத்துக்கொள்கிறாரா?என சந்தேகமாக இருக்கிறது.

ரகுவரன் ஒரு டிவிப் பேட்டியில் கதாநாயகனாக நடித்தால் 4 பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும்,4 சண்டைக்கு டிஷ்யூம் டிஷ்யூம் செய்வதைத் தவிர வித்தியாசம் எதுவும் காட்ட முடிவதில்லை என்பதால் ஹீரோ வேடம் வேண்டாம் என மறுத்தவர் தானே விரும்பி கதாபாத்திரங்கள் கேட்டு வாங்கி செய்ததாக சொன்னார்.அவருக்கு அமையாத வெரைட்டியான நாயகன் கதாபாத்திரங்கள் ஃப்ஹாத்துக்கு அடுத்தடுத்து அமைவது மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

சுவாதி ரெட்டிக்கு என்ன ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் நானி கதாபாத்திரம்? ஃப்ஹாத்துக்கு சமமான ஒரு பாத்திரம், பல சமயங்களில் ஃப்ஹாத்தையே தூக்கி சாப்பிடுகிறார் அம்மணி,ஃப்ஹாத்தின் ஹரிக்ரிஷ்ணன் என்னும் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான குணாதிசயமுள்ள கதாபாத்திரம் இவருக்கு,காம்ரேட் கோபாலனுக்கு ஒரு பேத்தியைப் போல ஒரு நலம்விரும்பிபோல வாஞ்சையுடன் உதவ களமிறங்கும் இடம் எல்லாம் இன்னும்  மனதில் நிற்கிறது.கேரளாவில் ஹர்த்தால் என்னும் கடையடைப்பு எத்தனையோ படங்களில் காட்டப்பட்டிருந்தாலும், இந்தப்படம்  சாமான்யனின் வாழ்க்கை ஹர்த்தாலினால் இன்னலுறும் கணங்களை பேசியது போல எந்தப் படமும் பேசியதில்லை.

மூத்த நடிகரான நெடுமுடிவேணு காம்ரேட் கோபாலனாக,கலங்கடிகிறார், இளம் நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்,காம்ரேட் சகாவான நெடுமுடிவேணு அன்பேசிவத்தின் கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கேரக்டர் ஸ்கெட்சையும், ஃப்ஹாத் ஃபாஸில் மாதவனின் கேரக்டர் ஸ்கெட்சையும் நினைவூட்டினர்,இதுவும் ஒரு ரோட் மூவியே.

நம் தலைவாசல் விஜய் மலையாளத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவது நமக்கு இழப்பே,அவருக்கு அது நிறைவைத் தருகிறது போலும்,இதில் ஃப்ஹாத்தின் அப்பாவாக வருகிறார்,ஃப்ஹாத்தின் அம்மாவாக கீதா.

படத்தில் ப்ரேம்ஜி அமரன் அவருடைய சரோஜா ஜீப்புடன் லம்பாடி வேடத்தில் தமிழில் பேசி நடித்திருக்கிறார்.தமிழரான இவர் மனைவி கட்ச் வளைகுடாவைச் சேர்ந்தவர்,அவர் கட்ச் மொழி மட்டுமே பேசுவார்,அவரிடம் பல மொழி வித்தகரான காம்ரேட் கட்ச் மொழியில் பேசுவது சின்ன ஆச்சர்யம்,காம்ரேட்டுக்கு 83 வயது நடக்கிறது எனச் சொல்வது தான் நம்ப முடிவதில்லை,ஒரு 10 கொல்லம் குறைத்திருக்கலாம்,

படம் எல்லோரும் அவசியம் பாருங்கள்,ஒரு அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் பேஷண்டை ஒரு ரயில் பயணமும் அதன் போக்கும் எப்படி நோயற்றவனாக மாற்றுகிறது,புதிதாய் எந்த மனிதருடனும் பழக  வெறுக்கும் ஒருவனுக்குள் எப்படி காதல் வந்து நுழைகிறது?எப்படி அவன் புதுப் பிறவி எடுக்கிறான் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கின்றனர்,படத்தின் இயக்குனர் அனில்ராதாகிருஷண மேனோனுக்கு இது முதல் படமாம்,மிக அருமையாக களமிறங்கியிருக்கும் அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். படத்தின் அருமையான இசை கோவிந்த் மேனோன்,ரெக்ஸ் விஜயன்.படத்தின் அருமையான ஒளிப்பதிவு ஜெயேஷ்நாயர்.

வடக்கு நோக்கி 384 கிமீ [1காதம்=16கிமீ]செல்ல பஸ், ஆட்டோ, கால்நடை, வல்லம், பைக், கப்பல்,ஆட்டோ  என பயணிக்கும் அருமையான ரோட் மூவி இது,டோண்ட் மிஸ் இட்

http://subscene.com/subti.../north-24-kaatham/english/838464 சப்டைட்டிலுக்கு

https://torrentz.eu/34977fd5fba70b1c42a66d7c157808318e6aa206
டாரண்டுக்கு


படத்தின் ஒரு பாடல் யூட்யூபிலிருந்து
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (378) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) உலக சினிமா (33) சினிமா (33) ஃப்ராடு (32) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) மோசடி (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)