அகோன்டுக் [আগন্তুক ] [Agantuk AKA The Stranger][1991][பெங்காலி]


அகோன்டுக் 1991ஆம் ஆண்டு வெளியான படம்,இது சத்யஜித்ரேவின் கடைசிப் படம், ரே முதுமையாலும், நோய்வாய்ப்பட்டு தளர்வுற்றிருந்தபடியாலும் , இதன் பெரும்பான்மையான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டன  , வழக்கம் போல ரேவின் சினிமாவுக்கே உரிய அழகியலை ஒருவர் இதிலும் நன்கு உணர முடியும், மிஷ்கின் படங்களில் நாம் கால்களுக்கு மட்டும் முக்கியம் தந்து படமாக்கப்பட்ட ஷாட்களை பார்ப்போம், அந்த கால்களுக்கு முக்கியம் தந்து ஷாட் வைக்கும் நேர்த்தியை ரே தன் படங்களில் 90 களிலெயே மிக அருமையாக கையாண்டுள்ளார். அத்தனை சிறந்த எக்ஸ்பெரிமெண்டலிஸ்ட் ரே.

இதில் மன்மோகன் மித்ரா [உத்பல் தத்] மற்றும் அவர் வீட்டார் பேசும்  நீண்ட வரவேற்பறை உரையாடல்கள் மூலம் சத்யஜித் ரேவுக்குள் இருக்கும் சமூகம், மதம், ஜாதி, கடவுள், ஒழுக்கம், நாகரீகம் போன்றவற்றின் மீதான விஷய ஞானம் பார்வையாளருக்கு பிடிபடும், அவை கதையின் போக்கினூடே வரும், உரையாடல்களின் நுட்பத்தால் அவை பார்வையாளரை வசீகரிக்கும், உலக ஞானம் ஒரு சமுத்திரம் போன்றது ,அதை  சினிமாவுக்குள் சற்றும் மேதாவித்தனமோ திணித்தலுமோ இன்றி நுழைப்பது என ரேவிடம் ஒரு இயக்குனர் படிக்க வேண்டும்.

இப்படத்தை ரே தான் எழுதிய அதிதி என்னும் சிறுகதையில் இருந்தே படமாக்கியுள்ளார், படத்தில் இய்றகையான ஒளி அமைப்புடன்  எடுக்கப்பட்ட காட்சிகள், பார்வையாளர்களை கதையின் போக்கில் ஒன்றச்செய்து விடுகிறது. வழக்கமான ரேவின் படங்களைப் போலவே கொல்கத்தா தான் இதற்கும் கதைக்களம், தற்காலத்தில் ஒரு மேல்தட்டு குடுமபத்தில் நடக்கும் கதை, அனிலா  போஸ் [மமதா ஷங்கர்] 33 வயது குடும்பத்தலைவி, கணவன் சுதீந்த்ரா பன்னாட்டு கம்பெனியில் உயர் அதிகாரி, செழிப்பான குடும்பம், மிகுந்த ஜாக்கிரதை உணர்வும் லட்சியமும் உடையவர் சுதீந்த்ரா போஸ்     [திபாங்கர் டே],  ஒரே மகன் சாட்யாஜி , சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழும் இவர்களுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டர் வருகிறது,20 வருடங்களுக்கு முன்னர் நம் குடும்பங்களுக்கு வாரம் தவறாமல் வரும் இன்லேண்ட் லெட்டரை மறக்க முடியுமா?!!!

 அனிலாவுக்கு 35 வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவளின் தாய் மாமா மன்மோஹன் மித்ரா கடிதம் எழுதியிருக்கிறார்,இவர்கள் அறியாத ஒரு குடும்ப நண்பர் மூலம்  இவர்களின் விலாசம் கிடைத்தது என்கிறார். அதில் இத்தனை நாள் அறிவுத்தேடல்,உலகம் சுற்றல்,பணிகள் என இருந்து விட்டேன், என் பெற்றோர் இறுதிக்கடன் செய்ய கூட அங்கே வரமுடியவில்லை, உறவுகளின் தொடர்பை முற்றிலும் விலக்கியிருந்த நான் இப்போது என் ஒரே சொந்தமான உன்னைப் பார்க்க வருகிறேன், நான் ஆஸ்திரேலிய கண்டத்தை சுற்றிப்பார்க்க புறப்படும் முன்னர் , உன் வீட்டில் ஒரு வாரம் தங்கப் போகிறேன், இந்த அவசர யுகத்தில் யார் வீட்டுக்குள்ளும் விருந்தாளியாக நுழைந்து தங்குவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதது என அறிவேன்,

மன்மோகன் பேரனிடம் சொல்லும் மேஜிக் என்னும் வாக்கியம்
என்னை நீ பார்த்த நினைவு உனக்கிருக்காது,உன்னை நான் பார்த்த நினைவு எனக்கிருக்காது, இது ஒரு வகையில் உனக்கு ஒரு தண்டனை தான், நான் போலியான மாமாவா?, உண்மையான மாமாவா? என உன் கணிப்புக்கே விட்டு விடுகிறேன், நீ என்னை ஏற்றாலும் மகிழ்ச்சி, என்னை ஏற்காவிட்டாலும் மகிழ்ச்சியே, அன்பு ஆசிகள்-மன்மோஹன் மித்ரா என முடிகிறது கடிதம். கடிதம் அருமையான தூய பெங்காலி எழுத்து நடையில் பிழையேயின்றி இருக்கிறது, இது சுதீந்த்ராவுக்கு சந்தேகத்தை இன்னும் கிளப்புகிறது, அனிலாவுக்கு கணவரை மீறி ஒன்றும் செய்ய முடியாது, இருந்தும் 35 வருட தாய் மாமன் உறவையும் சந்தேகிக்க முடியாது,

தன் கணவர் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதையும்,அவர் அதனால் அவமானப்படுவதையும் சகிக்க முடியாது,மகன் சாட்யாவுக்கு என உயிரோடு இருக்கும் ஒரே தாத்தா அவர் மட்டுமே, வருவது உண்மையானவர் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? யாரிடம் உறுதி செய்து கொள்வது? இவை எல்லாம் சேர்ந்து அனிலாவை அச்சுறுத்துகிறது, கணவர் சுதீந்திரா முதலில் தனக்கு இவர் வருகையில் உடன்பாடு இல்லை என்றவர் ,மனைவியின் பச்சாதாபத்துக்கு உரிய தோற்றத்தினாலும், அவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தினாலும், அவரின் வருகைக்கு சம்மதிக்கிறார், மாமாவின் வருகைக்கு வீடே தயாராகிறது.

ரே இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ஸில்,ஒட்டப்பட்ட பயணிகள் பட்டியலில் மிக அருகாமையில் காட்டுகிறார், அதில் டைப் செய்யப்பட்ட மன்மோகன் மித்ரா என்னும் பெயர் கன்ஃபர்ம்ட் என்றிருக்கிறது, இப்போது மன்மோகன் மித்ரா படிக்கும் நாளிதழை மட்டும் நாம் பார்க்கிறோம்,பின்னர் அவருக்கு இரவு உணவு வருவதையும்,இரு கைகள் அவற்றை திறப்பதையும் பார்க்கிறோம், ரயில் கொல்கத்தா வந்தடைகிறது, இப்போது போர்டரின் கால்களையும், மன்மோகன் மித்ராவின் கால்களுக்கும் மட்டுமே க்ளோஸ் அப், நாம் தன் இலக்கை நோக்கி நடைபோடும் பூட்சு கால்களை மட்டுமே பார்க்கிறோம், டாக்ஸியில் மீட்டர் விழுகிறது,
இங்கே வீட்டில் குறித்த நேரத்தில் அனிலா தன் மகனை வாசலில் நிறுத்தி தாத்தா வந்தவுடன் குரல் கொடுக்க சொல்கிறாள் ,தன் கணவனின் ஆலோசனைக்கேற்ப வீட்டு வரவேற்பறையில் இருந்த பஞ்சலோக சிலைகளையும், யானை தந்தத்தால் செய்த பொம்மைகளையும் எடுத்து பீரோவில் வைத்து பூட்டுகிறாள், ஆனாலும் அதை அரைமனதுடனே செய்கிறாள்,  இப்போது டாக்ஸியில் இருந்து இறங்கிய மன்மோகன் மித்ராவை நாம் முழுதுமாய் பார்க்கிறோம், [இதில் மன்மோகன் மித்ராவாக தோன்றிய உத்பல் தத், ஹிந்தி மற்றும் பெங்காலி சினிமாவின் சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர், மிகச்சிறந்த நாடகக் கலைஞரும் கூட, இவரின் கோல்மால் ஹிந்திப் படத்தின் பவானி சங்கர் என்னும் முதலாளி கதாபாத்திரத்தை தான் தில்லுமுல்லு படத்தில் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தியாக தேங்காய் சீனிவாசன் செய்திருப்பார்.]

அனிலா மாமாவிடம் ஆசி வாங்கினாலும் அவரை மாமா என அழைக்க நா எழவில்லை, சாட்யாவும் தயக்கத்தின் மீதத்தினால் தாத்தா என அழைப்பதில்லை, இதை மன்மோகன் மித்ரா நன்கு உணர்ந்து கொள்கிறார், தான் பதில் கடிதம் எதிர்பார்த்ததாகவும், வராததால் இங்கே கிளம்பி வந்து விட்டதாகவும், இவளின் பதில் எதுவாக இருந்தாலும் ஏற்று தங்குவது, புறப்படுவதை முடிவு செய்து கொள்ள முடியும் என்கிறார், அனிலா அவரை அதற்கு அவசியமே இல்லை நீங்கள் இங்கே விருப்பம் போல தங்கலாம் என்கிறாள், மன்மோகன் மித்ரா அவளுக்கு தன் பாட்டி சொன்ன ஸ்ரீ கிருஷ்ணரின் 108 நாமாவளியில் இருந்து 4 வரியை பாடிக்காட்ட அவளுக்கு மிகுந்த நம்பிக்கை வந்து விடுகிறது,

மாமாவை மாடியில் இருக்கும் தன் காலம் சென்ற மாமனாரின் அறையில் தங்க வைக்கிறாள், குளித்து விட்டு வந்தவருக்கு அறுசுவை விருந்தை பறிமாறுகிறாள். தான் கல்கத்தா உணவு சாப்பிட்டு 35 வருடம் ஆகிறதை சொல்கிறார் மாமா, அவருக்கு தாயின் கையால் உண்ட உணவு நினைவுக்கு வருகிறது, பேரன் சாட்யா  தாத்தாவிடம் பிரியத்துடன் ஒட்டிக்கொள்கிறான், தன் நண்பர்களுக்கும் அவரை பின்னால் இருக்கும் தோட்டத்தில் வைத்து அறிமுகம் செய்கிறான்,அவர் அவனுக்கு தான் வைத்திருந்த வெளிநாட்டு காசுகளை அது எந்த நாட்டைச் சேர்ந்தது,அதன் பெயர் என்ன என விளக்கித் தருகிறார்.சாட்யா நாணயம் சேமிப்பவர்களை Numismatics என்பார்கள் என  விஷய ஞானத்துடன் சொன்னதைக் கேட்டு வியக்கிறார்,

அனிலா,மன்மோகன் மித்ரா,சாட்யா உணவு மேஜையில்
அவனுக்கும் அனிலாவுக்கும் தன் பயணத்தைப் பற்றி நிறைய சொல்கிறார், அனிலா அவரிடம் நீங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறினீர்கள்? எனக் கேட்க, அவர் அதற்கு இரண்டு விஷயங்கள் உந்துதலாக இருந்தன, தான் கற்ற ஜெர்மானிய மொழியில் இருக்கும் wanderlust[அலைந்து திரிபவன்] என்னும் சொல்லும், தான் பிஏ படிக்கையில் கண்ட நாளிதழில் வெளியான ஒரு ஆதிவாசி வரைந்த காட்டெருமையின் குகை ஓவியமுமே தன் வாழ்வின் லட்சியம்,  ஊர் சுற்றுதல் என்று இலக்கு நிர்ணயிக்க வைத்ததாக சொல்கிறார்,அதை முன்னிட்டு லண்டன் சென்றவர், அங்கேயிருந்து அமெரிக்கா, மற்றும் அனைத்து ஐரொப்பிய நாடுகள்,மற்றும் தான் படித்த இளங்கலை ஆந்த்ரோபோலஜி பட்டப்படிப்பு, அதன் பின்னர் ஐநாவில் ஆந்த்ரோபோலஜிஸ்டாக வேலை, அதன் பின்னர் சுமார் 41 பழங்குடிகள் நாகரீகங்களை தான் அவர்களின் இனத்தோடு இனமாக தங்கி ஆராய்ந்தது எல்லாவற்றையும் சுவை படச் சொல்கிறார்.

இதன் மூலம் மாமா தேசாபிமானம், பாஷாபிமானம்,மத அபிமானம்,ஜாதி அபிமானம், கடவுள் அபிமானம் விட்டவராக திகழ்வதை அனிலா அறிகிறாள், அவர் குடும்பத்தில் இத்தகைய மேலான நற்குணங்களுடன் உயிரோடு இருக்கும் ஒரே நபரான மாமாவை மிகவும் மதிக்கிறாள்,பேரனுக்கும் அவரை மிகவும் பிடித்துப் போகிறது, இப்போது அனிலாவின் கணவர் அலுவலகத்தில் இருந்து அழைக்கிறார், மாமா வந்ததை அறிந்தவர்,அவரிடம் பாஸ்போர்டை வாங்கி சோதித்துப் பார்க்கச் சொல்கிறார்,அனிலா மறுக்கிறாள்,வந்திருப்பது தன் மாமாவே தான் என்னும் நம்பிக்கை தனக்கு இருப்பதாக உறுதியாக கூறுகிறாள். அப்படி உங்களுக்கு வேண்டுமானால் அவரை சோதனை செய்து கொள்ளுங்கள் என்கிறாள்.

மாலை வேலை முடிந்ததும், சுதீந்த்ரா வருகிறார், மனைவின் வேண்டுகோளுக்கிணங்க மாமாவிடம் ஆசி பெற குனிந்தவரை மாமா தடுத்தவர் ,என் மேல் முழு நம்பிக்கை ஏற்பட்டவுடன் ஆசி வாங்குவதே நல்லது என்கிறார், மருமகனின் முகத்தில் சந்தேகம் குடிகொண்டிருப்பதை கண்டவர், தன் பாஸ்போர்டை எடுத்து அவரிடம் தந்து படிக்கச் சொல்லுகிறார். அதை படித்த சுதீர்ந்திரா அவரை மாமா தான் என நம்பிய அதே வேளையில் இடியாக ஒன்றைச் சொல்கிறார். இப்போது போலி பாஸ்போர்ட் தயாரிப்பதும் பெறுவதும் ஒன்றும் கடினமில்லை, யார் வேண்டுமானாலும் போலி பாஸ்போர்டை காட்டி தான் இன்னார் என சொல்லக்கூடும், உண்மையான நபரை புரிந்து கொள்ள சற்று காலம் ஆகும், இப்போது சொல், நான் என் பெட்டியைக் கூட திறந்து வெளியே எதையும் அடுக்கவில்லை, உன் சொல்லுக்காகத்தான் காத்திருக்கிறேன், இப்படியே கிளம்பிவிடுகிறேன், என்கிறார்,

சுதீந்திரா,அதெல்லாம் தேவையே இல்லை,என மழுப்பி கீழே மனைவியிடம் வருகிறார்.தனக்கு மாமாவை இன்னார் என கண்டுபிடிப்பதில் குழப்பம் இருப்பதாகவும், அதனால் தன் நண்பனும் நகைச்சுவை நடிகனுமாகிய சந்தாவையும் அவரின் மனைவியையும் மாமாவைப் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர வீட்டுக்கு அழையா விருந்தாளிகள் போல வரவழைக்கப் போகிறேன் என்கிறார்,மாலையில் அவர்கள் வந்ததும் மாமா தன் பயணம் பற்றியும் உலக அறிவு,சமூக சிந்தனை, தத்துவ விசாரங்கள் பற்றியும் மிக நுட்பமாக உரையாடுகிறார், கடைசியாக தன்  புத்திகூர்மையால் வந்திருப்பவர்கள்  எதேச்சையாக இங்கே வரவில்லை, சுதீந்திராவால் ஆழம் பார்க்க வரவழைக்கபட்டதை அறிகிறார். மனம் நோகிறார். அங்கே அனைவரும் மாமாவிடம் மன்னிப்பும் கேட்க அன்று சுமூகமாக இரவு உணவு அருந்துகின்றனர்.

மறுநாளே அனிலா முந்தைய நாள் ஒளித்து வைத்த பஞ்சலோக சிலைகளையும், தந்த சிலைகளையும் வரவேற்பறையில் திரும்ப பார்வைக்கு வைக்கிறாள், அவற்றை பார்வையிட்ட மன்மோகன்,நேற்று இவற்றை நான் பார்க்கவில்லையே என்கிறார், அனிலா அவை வேறொரு அறையில் இருந்தன,இன்று இடம் மாற்றியிருக்கிறேன் என சமாளிக்கிறாள். சந்தேகம் மறைந்து உறவு துளிர்விடும் அற்புதமான கட்டம் அது, ரே அதை மிக அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார். அன்று இரவு அனிலா அகதா க்ரிஸ்டியின் ஒரு க்ரைம் நாவல் ஒன்றை தூக்கம் வரும் வரை படிக்கிறாள், திடீரென அவளுக்கு பொறி தட்டுகிறது, இவரின் தாத்தா [அம்மாவின் அப்பா] சாகும் முன்னர் சொத்தை பாகம் பிரித்து உயில் எழுதியது அவளுக்கு நினைவிருக்கிறது,அதில் இவரின் மறைந்த மூத்த மாமாவுக்கும், அம்மாவுக்கும் பாகம் வந்ததும் நினைவிருக்கிறது,தாத்தா தன் இளைய மகன் மீது வைத்த  அளவு கடந்த பாசத்தை வீட்டார் சொல்லி அதுவும் நன்கு நினைவிருக்கிறது, அப்படியென்றால் இங்கே வந்திருக்கும் மாமா அன்று பிரிக்கப்பட்ட சொத்தில் தன் பாகத்தை வாங்கத்தான் இங்கே வந்திருக்கிறாரா? அந்த சொத்தில் மாமாவுக்கு பங்குண்டா?

அந்த சொத்தை நிர்வகித்த வக்கில் யார்? அதற்கு எக்ஸிக்யூட்டர் யார்?என பல குழப்பங்கள் ஒரு சேரக் கிளம்புகின்றன,கணவரிடம் இதைப் பகிர,அவருக்கு வந்திருப்பவர் போலியா, அல்லது நிஜமானவரா?என அறிய வேண்டிய கட்டாயத்துடன், மேற்கண்ட கேள்விகளும் சேர்ந்து கொள்கின்றன.உடனே டெலிபோன் டைரக்டரியில் இருந்து வக்கீலின் எண்ணை எடுத்தவர்,அவருக்கு அந்த அகால நேரத்தில் அழைக்கிறார், அவர் உயிருடன் இருப்பதையும் வீட்டார் மூலம் அறிகிறார் . மறு நாளே அவரைப் பார்க்க வர நேரம் வாங்குகிறார். அங்கே சென்றவர் ஒரு 85 வயது கிழ வக்கீலை பார்க்கிறார், அவருக்கு செவித்திறன் மிகவும் குறைந்து விட்டிருக்கிறது, ஒப்புக்கு ஒரு செவித்திறன் கருவியை அணிந்திருந்தாலும் அவருக்கு இவர் சொல்லும் எதுவுமே கேட்பதில்லை, அவருக்கு சுதீந்திரா கத்தி விளக்க திராணியற்றுப் போன நிலையில் தன் வெறும் உதட்டை அசைத்து மெதுவாக வாக்கியமாக கேள்விகளைக் கேட்க , அதை கிழவர் கிரகித்து பதில் சொல்கிறார். மிகவும் இயல்பான நடையில் அமைந்திருந்த நகைச்சுவைக் காட்சி அது,ரேவின் படங்களில் இருக்கும் யதார்த்தமான எள்ளல்களில் க்ளாசிக் தன்மையை நமக்கு உணர்த்தும்.

வக்கில் கிழவர், மாமா மன்மோகனுக்கு சொத்தில் பங்கு உண்டு, அச்சமயம் தான் சிங்கப்பூர் சென்றிருந்தமையால் வேறொரு எக்ஸிக்யூட்டர் நியமிக்கப்பட்டு, அது குறித்து மாமாவுக்கும் தெரிவிக்கப்பட்டதாக சொல்லுகிறார், இப்போது சுதீந்திராவுக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது, அப்போதே பாகம் பிரிக்கப்பட்டு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் போல வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட அத்தொகை மிகவும் பெரிய தொகை, இப்போது வட்டியுடன் பெருகியிருக்கும், அதை மன்மோகன் மித்ரா என்னும் பெயரில் போலியாக  ஒருவர்   அடித்துக்கொண்டு போவதில் சற்றும், உடன்பாடு இல்லை, வங்கியில் அடையாளத்தை நிரூபிக்க பாஸ்போர்ட் போதுமானது என வக்கில் சொன்னது வேறு இவருக்கு சந்தேகத்தை கூட்டுகிறது, எப்படி வந்திருப்பது உண்மையானவர் என கண்டுபிடிப்பது? தன் கிரிமினல்  வக்கில் நண்பர் செங்குப்தாவை அன்று மாலை வீட்டுக்கு அழைக்கிறார் சுதீந்திரா.

இனி என்ன ஆகும்?!!! மன்மோகன் மித்ரா உண்மையானவரா?போலியா? என்பதை வக்கில் செங்குப்தா கண்டறிந்தாரா? மாமா தன் சொத்துக்களை எக்ஸிக்யூட்டரிடமிருந்து பெற்றாரா? அவற்றை என்ன செய்தார்? மாமா ஆஸ்திரேலியா சென்றாரா? போன்றவற்றை படத்தில் பாருங்கள், செங்குப்தா , சுதீந்திரா, அனிலா  இவர்களுக்குடனான அந்த வரவேற்பறை உரையாடல்  மிகவும் முக்கியமானது. அங்கே அனிலா தம்பூர் என்னும் தந்தி வாத்தியத்தை மீட்டி பாடும் இறைவனின் மீதான பக்திப்பாடல் மிக அரிய, அழகான பாடல். அது தாகூரால் இயற்றப்பட்ட பாஸிலோ கஹாரோ பீனா என்னும் மிக இனிய பாடலாகும், வாழ்க்கையில் பணம் தான் பிரதானமா? உறவு என்பது என்ன? குடும்பம் என்பது என்ன? நாகரீகம் என்பது என்ன போன்ற கேள்விகளுக்கு மன்மோஹன் மித்ரா  தன் 35 வருட தனிமனிதனின் அறிவுத்தேடல் மூலம் சொன்ன பதில்களை அவசியம் பாருங்கள்,
மன்மோகன் மித்ரா மற்றும் அனிலா பாஸிலோ கஹாரோ பீனா பாடலின் போது

வாழ்வில் பயணம் செய்யாதவரை,குறுகிய மனப்பான்மை கொண்டோரை பெங்காலியில் குபோமாண்டுக் Kupomanduk [கிணற்றுத் தவளை] என்கிறார் மன்மோகன், அதே போல ஒரு உரையாடலில் சுதீந்த்ராவிடம் what is the Longest word in English? என்பார் மன்மோகன், சுதீந்த்ரா பள்ளியில் படித்துள்ளேன் மறந்து விட்டது என விழிக்க, அது FLOCCINAUCINIHILIPILIFICATION = SETTING LITTLE [OR] NO VALUE என்பதே இந்த நீண்ட 29 எழுத்துக்கள் உணர்த்தும் பொருள், இது தான் Civilization [நாகரீகம்] என்று முத்தாய்ப்பாக நிறுத்தி நகைப்புடன் முடிப்பார் மன்மோகன்,அது போன்ற பல சுவையான தருணங்களை ரே படத்தில் பொதித்து வைத்துள்ளார்.

இறுதிக்காட்சியில் வரும் கோல்[ kohl] பழங்குடியின் பாரம்பரிய நடனம்
இந்திய சினிமா வரலாற்றில் இது மிக முக்கியமான படம், உரையாடல் மூலமாகவே ஒரு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தும் கலை எல்லோருக்கும் கைவந்து விடாது, அந்த நேர்த்தியில் ரே தான் எத்தகைய ஆட்டியர்+Auteur
என்பதை இப்படம் மூலம் ஆணித்தரமாய் நிரூபிக்கிறார். உலக சினிமா ரசிகர்கள், தேடிப்பார்க்க வேண்டிய படம், இதை அடுத்த முறை டிடியில் ஒளிபரப்பும் போது தவறாமல் பாருங்கள். உத்பல் தத் சொற்பம் படங்களே செய்திருந்தாலும் அவரின் பெயரை இது போன்ற நல்ல தரமான படைப்புகள் மூலம் நிலைநாட்டியுள்ளார். படத்தின் ஒப்பற்ற இசையும் சத்யஜித் ரேவே செய்திருக்கிறார், படத்தின் உயிரோட்டத்துடன் கலந்த ஒன்று இதன் பிண்ணனி இசை.

அகோன்டுக்=டோண்ட் மிஸ் இட்!!!

அனிலா பாடும் பாஸிலோ கஹாரோ பீனா என்னும் ரபீந்த்ரநாத் தாகூரின் மிக அருமையான பாடல்

நீதியரசர்களா?நிதியரசர்களா?!!! பாகம் 2


சினிமாவில் காட்டப்படும் நீதிமன்றக் காட்சி போலத்தான் நிஜத்திலும் இருக்கிறது,இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரன்,விஜயேந்திரன் அனைவரும் நீதித்துறையுடனான 8 வருட தொடர் போராட்டத்துக்கு பின்னர் விடுதலை ஆகியுள்ளனர்,கூடவே கொலைக் குற்றம் சாட்டப்பட்ட,அப்ரூவராய் மாறிய, நாங்கள் தான் கொலை செய்தோம் என வாண்டடாக வண்டியில் ஏறிய அனைவருமே ஒருவர் மிச்சமில்லாமல் விடுதலை ஆகியுள்ளனர், 

இது  விருமாண்டி படத்தில் சின்னக்கோனார் பட்டியில் வைத்து கொண்டராசு நாயக்கரை, அவரின் கைக்குழந்தை,அவரின் உறவினர்கள்,அவரின் வேலையாட்கள் சகிதமாக  மொத்தம்  24 பேரை கொடூரமாக அரிவாள், ஏர், கடப்பாறை போன்ற ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும்  கொலைசெய்த கொத்தாளத்தேவரும், விருமாண்டியும் பின்னே அவர் சகாக்களும், சம்பவத்தை நேரில் பார்த்த  சாட்சியங்கள் எதுவும் ருசுவாகாததால்,  சந்தேகத்தின் பலனை எதிரிக்கு தந்து கொத்தாக விடுதலை ஆவார்களே?!!! அதே போலவே இருக்கிறது. ஒருக்கணம் இவர்கள் நீதியரசர்களா? நிதியரசர்களா? என சந்தேகம் வந்து போனது. 

நேற்று தான் காஸியாபாத் சிபிஐ நீதி மன்றத்தில் ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சுமார் ஐந்தரை வருடம் வழக்கு நடந்து ஒருவழியாக வெளியானது, சாட்சிகள் எதுவும் ருசுவாகாவிட்டாலும், சாட்சியங்களை அழித்த, மூடி மறைக்க முயன்ற குற்றத்துக்காகவும், குற்றத்தை ஒத்துக் கொள்ளாத கள்ளுளிமங்கத்தனத்துக்காகவும் தான் அந்த ஆயுள் தண்டனை தீர்ப்பு, இன்று அதற்கு கரும் புள்ளி போல நீதித்துறைக்கே களங்கம் போன்ற இந்த தீர்ப்பு பாண்டிச்சேரியில் இருந்து வெளியாகியுள்ளது.

சீ!!! இதை நினைக்கவே மிகுந்த அருவருப்பும், அயற்சியாயிருக்கிறது, ஏற்கனவே இதே பெயரில் போபால் விஷவாயு குற்றவாளிகளை நீதிபதிகள் இலேசான தண்டனை தந்து தப்ப விட்ட பொழுது எழுதினேன். அது பாகம்-1, இது பாகம் -2

நீதியரசர்களா?நிதியரசர்களா?!!! பாகம்-1

ஒரு நல்ல ஆத்திகனுக்கு மதகுருவின் தேவையே இல்லை , தன் விருப்பம் போல அவன் கடவுளைத் தொழுவான் ,மதகுரு போன்ற இடைத் தரகர்களால் பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள தூரம் தான் அதிகமாகும் , இன்றைய அவசரயுகத்தில் அவனவன் உள்ளத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டியது முக்கியம்.நீங்கள் எந்த மதகுருவிடம் சென்றாலும் இதைத் தான் போதிப்பார்கள், அந்த டெம்ப்ளேட் இங்கே.

குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள் !!!

இதை ஒருவரால் சுயமாக கற்றுணர முடியாதா?இதை கற்க ஒரு மதகுருவின் துணையும் ஆசியும் அவசியமா?இன்றைய சூழலில் இது போல எந்த ஒரு கார்பொரேட் சாமியாரின் டெம்ப்ளேட் மகுடிக்கும் மயங்காத நிஜ ஆசாமியாக இருக்க வேண்டும். போலி மத குருக்களால் அவர்கள் சார்ந்த மதத்துக்கே கேவலம் ,காஞ்சி பீடத்தை பிடித்த பீடை ஜெயேந்திரன் , சங்கர மடத்தை வம்புக்கு இழுக்கும் கருணாநிதி கூட கள்ள மௌனம் காத்து அநீதிக்கு துணை போயுள்ளார் ,சங்கர ராமன் மகனும் குடும்பத்தாருமே ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது,என் உயிர் வெல்லக்கட்டி என்று சாட்சியத்தின் போது பிறழ்ந்து விட்டிருக்கின்றனர். இன்று வெளியானது   தாமதிக்கப்பட்ட நீதிமட்டுமல்ல,  மறுக்கப்பட்ட நீதியும் ஆகும்.

கடிதங்கள் மட்டுமே எழுத விரும்பும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இதற்கு எதிராய் கால் கடிதம் கூட எழுத மாட்டார் எனத் தெரியும் , குற்றமில்லாதவர், தன் மீது நீதிமன்ற வழக்கு இல்லாதார் யாருமில்லை, யாரும் இங்கே உத்தமரில்லை , யாருக்கும் வெட்கமில்லை , எனவே யார் தவறையும் தட்டிக் கேட்க யாருக்குமே தகுதியில்லை , இனி அநீதியை பொறுக்காதார் யாராயினும் தாமாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் , புதிதாய் கொலைகாரர்களாவது உருவாகாமல் இருப்பர் !!!
=======0000========

இன்கார்[Inkaar][2013]தருண் தேஜ்பால் குறித்து இயக்குனர் சுதிர் மிஷ்ராவின் தீர்க்க தரிசனம்


பெரிய கார்பொரேட் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்கள் சக ஆண் ஊழியர்களிடம், உயர் அதிகாரிகளிடம் வழக்கமாக கேட்கும் பொய்யான வாக்குறுதிகளை, சபலம் தோய்ந்த வார்த்தைகளை,சக ஊழியருக்கு அல்லது  உயர் அதிகாரிக்கு அடிபணிய மறுக்கும் பட்சத்தில் அந்தப்பெண் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை, வேலை மீதான பழிவாங்கும்  நடவடிக்கைகளை,மிரட்டல்களை மிக நேர்மையாக  பதிவு செய்த படம் சுதிர் மிஷ்ராவின் இன்கார்|Inkaar [மறுத்தல் அல்லது மறுதலித்தல் ], இப்படம் 2013 ஜனவரி மாதம் தான் வெளியானது.

சுதிர் மிஷ்ரா ஹிந்தி மாற்று சினிமாவின் நம்பிக்கை ஒளி ,இவரின் ஹஸரான் க்வாய்ஷெய்ன் அய்ஸி இந்திய எமர்ஜென்சி குறித்தும், மார்க்ஸிஸம், நக்ஸல்பாரி குறித்தும், முக்கோண காதல், அமர காதல், சுயநலக் காதல் குறித்தும் நேர்பட பேசிய தனித்துவமான முயற்சி, அதில் கே.கே.மேனன் நடித்த சித்தார்த்தா என்ற கதாபாத்திரமும் சித்ராங்கதா சிங் நடித்த கீதா என்னும் கதாபாத்திரமும்,ஷைனி அஹுஜா தோன்றிய விக்ரம் என்னும் கதாபாத்திரமும் மாற்று சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

இன்காரும் அதே இயக்குனர் சுதிர் மிஷ்ரா,Hazaaron Khwaishein Aisi  படத்தில் கீதாவாக தோன்றிய  சித்ராங்கதா சிங், சர்ச்சைக்குரிய லஜ்ஜையில்லா வேடங்களில் மட்டுமே நடிக்கும் அர்ஜுன் ராம்பால்,மற்றும் அபிமான பாலிவுட் நட்சத்திரங்கள் தோன்றிய  பிரமாதமான படம்,அப்படியே இன்றைய தெகல்கா நிறுவனத்தின் தருண் தேஜ்பால் சம்பவத்தை திரையில் தோலுரித்துக் காட்டும்படியான படைப்பு என்றால் மிகையாகாது,இப்படத்தை செட் போட்டு எடுக்காமல் தத்ரூபத்துக்காக விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து மிக அருமையாக தீஸிஸ் செய்து எம் என் சி விளம்பர தயாரிப்பு நிறுவனங்களான Leo Burnett Worldwide மற்றும் Grey Worldwide இன் அலுவலகத்திலேயே அனுமதி பெற்று படம் பிடித்திருந்தார் சுதிர் மிஷ்ரா. படத்தை பார்த்தால் ஒருவர் அதன் ரியாலிசத்தை உணர முடியும்.

 இன்கார் வெளியாகி ஒருவருடம் கூட முடியவில்லை அதே போன்ற கேவலமான சம்பவம் ஸ்ட்ரீட் ரியலாக இந்திய கார்பொரேட் அரங்கில் நடந்திருக்கிறது,இது மிகவும் அருவருக்கத்தக்கது,அதுவும் நம் அபிமான ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டிநீரோ தன் மகளுடன் இந்தியா வந்திருந்த பொழுது,அவருக்கு காரியதரிசியாக செயல் பட்ட பெண்ணிடம் தருண் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்.
இன்கார் படத்தின் முன்னோட்டம்
தருண் தேஜ்பால்:-
இன்காருக்கும் தருண் தேஜ்பால் இச்சம்பவத்துக்கும் ஒரே வித்தியாசம் அந்தப் படம்  கார்பொரேட்  விளம்பரத் தயாரிப்பு நிறுவனத்தில் நடக்கும் கதை, நிஜத்தில் இது தெகல்கா என்னும் கார்பொரேட் பத்திரிக்கை நிறுவனத்தில் நடந்திருக்கிறது, படத்தில் வருவது போல துணிந்து புகார் தந்த அந்தப் பெண், எக்காரணம் கொண்டும் புகாரை திரும்ப வாங்காமல் இருக்க வேண்டும், சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கிடையே பணிக்குச் செல்லும் பெண்களுக்கு எதிரான அத்துமீறலாக தான் நாம் இதைப் பார்க்க வேண்டும், அவள் மட்டும் என்ன ஒழுங்கா?தனிப்பட்ட விரோதம், குரோதம் காரணமாகக் கூட  தருண் தேஜ்பாலை வீழ்த்தியிருக்கக் கூடும் என்ற ரீதியில் இதை பார்க்கக் கூடாது,

தருண் தேஜ்பால்
விசாரணையில் தருண் தேஜ்பால் அந்தப் பெண்ணின் சம்மதத்துடனே  அவரிடம் தான் உரிமை எடுத்துக் கொண்டதாக சொல்லி வழக்கை திசை திருப்பவில்லை, தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தனது சக பத்திரிகையாளரின் மகளாகவும், பின்னர் சக பத்திரிகையாளராகவும் அறிந்த பெண்ணின் நம்பிக்கையை உடைத்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தன்னுடைய எடை போடும் திறனில் ஏற்பட்ட பிறழ்வுக்காக வருந்துவதாக சொல்கிறார். இந்த பிறழ்வுக்கு பரிகாரமாக காந்தி போல, ஆறு மாதங்கள் தெகல்கா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாகவும் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டிருக்கிறார்,என்ன துணிச்சல் பாருங்கள்?அவரே தவறும் செய்து விட்டு அவரே தண்டனையும் தந்துகொண்டால் அதற்கு எதற்கு போலீஸ்,நீதித்துறை இவை எல்லாம்?தருண் தேஜ்பாலின் இந்த இழிசெயல் தண்டிக்கப்பட் வேண்டியது.

இதே நேரத்தில் பழைய சீனியாரிட்டி கொண்ட மகா கேடிகளையும் இங்கே இனம்கண்டு சரியாக தண்டிக்கவேண்டும்,சென்ற மாதம் காங்கிரஸ் எம் பி பீதாம்பர குருப் நடிகை ஸ்வேதா மேனோனிடம் ஒரு கணவன் தன் மனைவியிடம் உரிமையோடு நடப்பதைப் போல பொது மேடையில் வைத்து அவருக்கு பாலியல் தொல்லை தந்தார்,அதற்கு வீடியோ சாட்சியும் உண்டு,புகாரும் உண்டு,என்ன தண்டனை கிடைத்தது பீ..குரூப்புக்கு?

அவ்வளவு ஏன்? முன்னாள் ஆந்திர கவர்னர் நாராயண தத் திவாரி,என்னும் குடு குடு கிழம்[அப்போது 83 வயது] தன் ராஜ்பவன் படுக்கை அறையில் மூன்று கல்லூரிப் பெண்களுடன் த்ரீசம் ஆர்ஜியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டாரே?[காரியம் ஆவதற்கு பெறவேண்டிய லஞ்சமாக கல்லூரிப் பெண்களை தருவித்தாராம்]  2009 பிடிபட்டவருக்கு இன்னும் டிஎன் ஏ சோதனை   எடுத்து தண்டனை தருகிறார்கள் பாருங்கள்.இன்னும் பல உண்டு,இந்த இரு சாம்பிள் சம்பவங்கள்.  காங்கிரஸிற்கு இது ஒன்றும் புதிதல்ல என நினைக்க வைக்கிறது,பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு யாராவது பெரும்புள்ளி கடும் தண்டனை அடைந்தால் தான் சற்றேனும் மட்டுப்படும் என நினைக்க வைக்கிறது.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவரா பார்ப்போம்?!!!

ஆல் இன் ஆல் அழகுராஜா AKA ஆல் இன் ஆல் காண்டாமிருகம்ஆல் இன் ஆல் அழகுராஜா நேற்று தான் பார்த்தேன்,இது சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை முட்டாள் என நினைத்து எடுக்கப்பட்ட இன்னொரு படம், மற்றொன்று நையாண்டி, படத்தில் ஒரே சவசவ என பேசிக்கொண்டே இருக்கிறார்கள் கார்த்தியும், சந்தானமும் ,இதில் சந்தானம் தன்னை வாடா போடாவென கூப்பிடக்கூடாது என கார்த்தி ஸ்பெஷல் கண்டிஷன்  இயக்குனரிடம் போட ,சந்தானம்  அவரை நீங்க வாங்க  என செயற்கையாக அழைக்கிறார், ஹீரோக்கள் படத்தின் வசனத்திலும் கையை வைத்தால் இயக்குனர் என ஒருவர் எதற்கு தான் இருக்கிறார்?

கார்த்திக்கு 15 கோடி தந்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட்டதால், அவரை முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை காட்டி நம்மை சாகடித்துள்ளார் ராஜேஷ் , அதே போலவே சந்தானம் கால்ஷீட்டும் பவுன் கணக்கானபடியால் அதையும் கடைசி ஃப்ரேம் வரை, ஐயகோ!!! .என்னால் 3 மணிநேர அன் கட் வெர்சன் பார்க்க முடியவில்லை [ரொம்ப முக்கியம்] ,

ராதிகா ஆப்தே என்னும் நல்ல மராட்டிய நடிகை அவருக்கு 80களின் அம்பிகா கணக்காக விக்,காதுக்கு பூ எல்லாம் வைத்து அழகூட்டி ஒரு உருப்படியான பாடலுக்கு ஆடவிட்டு அடுத்த ரீலிலேயே மும்பைக்கு பேக்கப் செய்து விட்டனர், அதற்கு பின்னர் கடைசி டைட்டில் கார்ட் வரை ஆளைக் காணோம், சென்னை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் தீபிகா படுகேன பேசிய இழவுத் தமிழை விட மிக நன்றாக இருந்தது இவர் தமிழ், பாவம் இவர்   சிரத்தையுடன்  நிறைய ரிகர்சல் எல்லாம் செய்து தமிழ் பேசினாராம், ப்ரொமோவில் சொன்னார்,என்ன பிரயோசனம்?,நிகழ்காலத்தில் அவர் என்ன ஆனார்? என அவரின் முன்னாள் லவ் இன்ட்ரெஸ்ட் பிரபு கூட கிளைமேக்ஸில் கேட்பதில்லை,

நரேய்ன் போன்ற அருமையான நடிகர்  சமீபத்தில் வந்த இரு படங்களில் அடுத்தடுத்து மொன்னையாக்கப் பட்டுள்ளார்,ஒன்று நையாண்டி, மற்றொன்று இது, மிக நல்ல நடிகரான நாசருக்கும் அதே கதி,படத்தை சகித்துக்கொண்டு  பார்க்க வைக்கும் ஒரே பிடிமானம் காஜல் அகர்வால் தான்,இவரை ஸ்பெஷல் 26 படத்திலிருந்து மிகவும் பிடித்து போனது,கமர்ஷியல் மொக்கைகளில் கூட தன் பெஸ்டை தருகிறார் கண்ணழகி,ஆனாலும் இவரது போர்ஷன்களில் அத்தனை கற்பனை வறட்சி, இவரையும் அரைலூசு ஆக்கி புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறார் ராஜேஷ்.

இதில் சந்தானத்தை பெண்   வேடத்தில் அத்தனை விகாரமாக காட்டியுள்ளார் , எங்கோ இருக்கும் வாழ்ந்து கேட்ட முன்னாள் ஹீரோ சுதாகரை கூட கலாய்க்கிறாராம் சந்தானம்,அதே போலவே குட்கா முகேஷையும் கலாயக்க அது படத்தில் இல்லை   , பாவம், நல்ல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ,அவரை இந்த விகாரமான பெண் மீது பித்தம் கொண்டது போன்ற பாத்திரம் தந்து தண்டித்திருக்கிறார், அவ்வை சண்முகி போலவே க்ளைமேக்ஸில் சந்தானத்தின் ரவிக்கையை  அவிழ்த்து காஜலுக்கு காட்டுகிறார் கார்த்தி, நாராசம்!!! , சரண்யா பிரபு இருவருமே நன்கு வீணடிக்கப்பட்டனர் ,விவேக் ஹர்ஷன் எடிட்டிங்காம், நன்றாகவே ஓப்பி அடித்துள்ளார்,இவர் வாங்கிய சம்பளம் உண்மையிலேயே ஜீரணிக்குமா?!!!  அடுத்த முறையாவது ராஜேஷ் ப்ரோமோஷனுக்கு செலவிடும் நேரத்தை எடிட்டருடன் செலவிடுங்கள்,, அப்படி இல்லாவிட்டால் ஹீரோவாக நடிக்க வந்துவிடுங்கள் ,இந்தக்  கொடுமைக்கு அதை தாங்கிக் கொள்வோம் ,

ராஜேஷ் அடுத்த படத்திலாவது படம் பார்ப்பவனை முட்டாள் என கருதாமல் இருந்தால் சரி, இந்தப் படத்துக்கு எல்லாம் விளக்கம் வேண்டாம் தான் ,இருந்தாலும் தருகிறேன். ஒரே நாளில் சிட் பண்ட் விளம்பரப் படம் எடுக்கின்றனர், அதில் கேனைத்தனமாக மங்களம் சிட்பண்டுக்கு நான் கேரண்டி என்கிறார் காஜல், இந்த மொக்கை சேனலில் விளம்பரம் பார்த்து, மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஒரே நாளில் கட்டுகின்றனராம், அதை சிட்பண்ட் அதிபர் [பாவம் v.s. ராகவன்] ஒரே இரவில் எடுத்து ஓடுகிறாராம், அதை மக்கள் அதே இரவில் கண்டு பிடித்து ,விடியலில் முதல் வேளையாக விளம்பர மாடல் காஜல் வீட்டு வாசலில் நின்று கோஷம் போட்டு பணத்தை திருப்பி கேட்கின்றனராம், அவரின் அப்பா முழுப்பணத்தையும் செட்டில் செய்கிறாராம்.

கார்த்தி காஜலை வீட்டில் இறக்கி விட்ட அதே இரவில்  இது அத்தனையும் நடக்கிறதாம், காஜல்இரவு  காதலை சொல்வார் என போன் கால் எதிர்பார்த்த கார்த்தி, காஜல் உடனே வருமாறு சொல்ல ,நடு இரவில் அங்கே சென்றால் இவை அனைத்தும் அவருக்கு தெரிய வருகிறதாம்,இதை  படிக்கவே எத்தனை கேவலமாக இருக்கிறது?, அத்தனை கேவலமாக இயக்கியுள்ளார் ராஜேஷ். இதையெல்லாம் எழுதனும் என்று எனக்கு மட்டும் ஆசையா? காமெடி படம் என்றால் கன்டினியூட்டி முக்கியம் இல்லை என விட்டுவிட்டீர்களா?

ஏனையா, ஒரு இரவை முடியக் கூட விடமாட்டீர்களா? அப்படி என்ன அவசரம்? அதில் ஒரு ஜம்ப், இரவு - பகல் கண்டினியூட்டி எத்தனை முக்கியம் திரைப் படத்தில்? இத்தனை மிக்ஸ் அப் ஏன்? கன்டினியூட்டி பார்க்க அசிஸ்டெண்ட் டைரக்டர் யாருமே இல்லையா? இல்லை எல்லோருக்கும் இயக்குனர் ராஜேஷ் என்றால் சிம்ம சொப்பனமா? எம்.எஸ் பாஸ்கர் முன்பொரு படத்தில் நல்ல வசனம் ஒன்று பேசுவார், வேண்டா வெறுப்பாய் புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம் என்று, இந்தப்படத்தில் அவரும் இருக்கிறார், இந்தப்படம் அழகுராஜா அல்ல காண்டாமிருகம்.

இதில் ஒரே ஒரு ஆறுதல், கல்லில் நாரை உறிக்கும் பலே தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜாவைக் கூட ரைட்ராயலாக ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ், எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு என உணர்ந்தேன்,இதே K.E.ஞானவேல் ராஜா [இனிஷியல் ரொம்ப முக்கியம்] பீட்ஸா என்னும் பேரை மட்டும் வைத்துக்கொண்டு ,பீட்ஸாவின் இரண்டாம் பாகம் என நம்பிப் போன எத்தனையோ ரசிகர்களை ரைட்ராயலாக ஏமாற்றியியது நினைவருக்கும், புளிசாதத்துக்குள்ளே முட்டையை வைத்து பிரியாணி என சத்தியம் செய்தது போன்ற மோசடி அது,சரவணபவன் லோகோவைத் திருடி த்ராபையான ஓட்டல் துவங்கி உள்ளே ஊசிப்போன பண்டம் விற்றது போன்ற மோசடி அது,  நவீன ஜேப்படி அது!!!

பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்: சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டி:-[ஒரு நிரபராதியை மரண தண்டனையில் இருந்து மீட்க கருணையுள்ளத்துடன்  இதை ஷேர் செய்யவும்]

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து. பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:அதன் சுட்டி இங்கே
http://timesofindia.indiatimes.com/india/Ex-CBI-man-altered-Rajiv-death-accuseds-statement/articleshow/26283700.cms

9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது,

‘நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.ஒரு விசாரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல.
சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்


அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், சதி திட்டம் அரங்கேறியதாகதான் இதில் அர்த்தம் கொள்ளப்படும்.இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.

கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன.அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என்னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2வது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.

வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்கு காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பதால்தான்.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. துரதிருஷ்டவசமாக ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.

========000========

தெய்வத்தாய் அற்புதம்மாள்
=======0000=======
கடும் சிறைகளில்,மரண தண்டனையில் இருந்து விரைவில் விடுதலை ஆவோம் என்று ஏக்கத்தோடும் மரண பயத்தோடும் கழித்த பேரறிவாளனின் இளமையை இனி யார் கொடுப்பார்கள்?மகனுக்காக வயதான காலத்திலும் ஓடி ஓடி நீதி கேட்கும் தெய்வத்தாய் அற்புதம்மாளின் குடும்பம் படும் வேதனைகளை யார் அறிவார்கள்?காலம் கடந்தாவது கண் விழித்தானே தியாகராஜன்?நீதி வழங்கும் விடயத்தில் இப்படியான தில்லுமுல்லு செய்பவர்களை சமூகத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.அப்போது தான் நீதி தேவதையும் அக மகிழ்வாள்.

அபாய கரமான விஷமாங்காய் மடையா தியாகராஜா,100 குற்றவாளி தப்பினாலும்,ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று தேசப்பிதா காந்தி[நேரு குடும்பத்தின் வாரிசு அல்ல] சொல்லியிருக்கிறார் , அது உனக்கு தெரியுமா?!!!

நாசகாலா,நீ அன்று மாற்றி எழுதிய வாக்குமூல அறிக்கை ஒரு பாவமறியாத தாயையும் அதன் சேயையும் நடை பிணமாக்கியுள்ளது, தன் பதின்ம வயதில் சிறைக்குள் சென்ற அந்த இளைஞன் தன் முக்கியமான வாழக்கையையே தொலைத்துவிட்டானடா மகாபாவி, அந்தத் தாயும் அவரின் காலம் சென்ற கணவரும் அனுபவித்த புத்திர சோகம் நீ,உன் சந்ததி அத்தனை பேரும் பெற இறைவனை வேண்டுகிறேன் ,

கயவா,துர்மார்கா,மனித சந்ததி இருக்கும் வரை உன் கலங்கம் துடைக்க முடியாதது,அந்த பாலகன் இழந்த வாழ்க்கையை உன்னால் திரும்ப தர முடியுமா?இதற்கு துணை போன அக்கிரமக்காரர்கள் உள்ளதிலும் மோசமான நரகத்துக்கு போகட்டும்,நடைபிணமாய் வாழும் போதே நரகலை தின்னும் பேறும் கிடைக்கட்டும்.என வயிறெரிந்து சபிக்கிறேன்.வயிறெரிந்து சபிக்கிறேன்.
=======0000=======
தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்காக:-


Ex-CBI man altered Rajiv death accused’s statement

==================================
CHENNAI: First it was the judge who said giving death penalty to the Rajiv Gandhi assassination convicts would be double jeopardy; now the police officer who recorded Perarivalan's confession statement says he regrets having altered the words which eventually led to his conviction. On a day when a documentary on Perarivalan was released, former CBI SP V Thiagarajan said Perarivalan never said that he knew the battery he bought would be used to make the bomb that killed the former Prime Minister.

On record, the statement reads : "...moreover I bought two nine volt battery cells (Golden Power) and gave them to Sivarasan. He used only these to make the bomb explode." In an interview with TOI, Thiagarajan on Saturday said Perarivalan, in his confession before him, admitted that he purchased the battery. "But he said he did not know the battery he bought would be used to make the bomb. As an investigator, it put me in a dilemma. It wouldn't have qualified as a confession statement without his admission of being part of the conspiracy. There I omitted a part of his statement and added my interpretation. I regret it," he said, adding that if he had a chance, he would have corrected the mistake.

His attribution in the statement written in Tamil reads thus: "Ithu than Rajiv Gandhiyin kolakku payan paduthappettathu," which was translated in English thus: He used only these to make the bomb explode. While acquitting 19 accused in 1999, Perarivalan's was the only Tada confession statement that the Supreme Court upheld in the case finding it "believable."

Interestingly, Thiagarajan, a 1981-batch IPS officer has been accused of manipulating investigations for people in power. Then the Kochi SP, he allegedly asked CBI officer Varghese P Thomas who was investigating the death of Abhaya, a 22-year old nun in Kottayam in 1992, to stop the investigation into the murder angle, claiming that it was a clear case of suicide. Thomas left the service alleging that Thiagarajan wanted to make it appear as a suicide to protect the interests of some political leaders.

Recalling the day when Perarivalan's statement was recorded, at 11.30pm on August 14, 1991, Thiagarajan said he had two options. "Either record his statement as it is, or exercise my judgment, considering other corroboratory evidence." He said he chose the second. "As there was no other evidence on the bomb making, the court should have dismissed his statement (if it was not qualified with the alteration)," he said.

When asked why he regrets the decision 22 years later, Thiagarajan said, "Better late than never. I recorded this statement several months before the completion of the investigation. I never expected this punishment based on a confession statement since confessions of accused are not considered evidence. It was unfortunate that the investigation agency did not find anything about the making of the bomb or who made it and where," he said.

In the 55-minute documentary "Uyirvali - Sakkiyadikkum Satham," on the life of Perarivalan spanning from his childhood and the Rajiv Gandhi assassination case, Thigarajan says there were lapses in recording the statement under Section 15(1) TADA.

பி.ஏ.பாஸ் [B.A. Pass ] [बीए पास][2013][18+]


பி ஏ பாஸ், மோஹன் சிக்கா எழுதிய  ரயில்வே ஆண்டி என்னும் நெடுங்கதையை அப்படியே சாரம் கெடாமல் தழுவி வெளியான நியோ நுவார் வகை இந்திப்  படம், டாரண்டில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது, Ajay Bahl-ன் சற்றும் தொய்வற்ற இயக்கமும்  ஒப்பற்ற ஒளிப்பதிவும் படத்துக்கு இரு கண்கள், ஒரு நல்ல சிறுகதையை இவர் அளவுக்கு யாரும் இம்மி பிசகாமல் தழுவி நான் பார்த்ததேயில்லை, கதையில் வரும் வர்ணனைகள், சித்தரிப்புகள் அப்படியே படத்திலும் வருகிறது, 

நிகழ்கால தில்லியில் நடக்கும் மிகவும் யதார்த்தமான ஒரு படம், நாம் இங்கே அனுதினமும் சாலை விபத்துக்களில் குடும்பத்தினர் முழுமையாகவோ பாதியாகவோ  உயிரிழக்கும் கதைகளை கண்டும் கேட்டும் இருப்போம் [உதாரணத்திற்கு ராமேஸ்வரத்துக்கு தீர்த்தயாத்திரைக்கு  சாலை மார்க்கமாக வந்து கார் விபத்துக்குள்ளாகி இறந்து போன எத்தனையோ கதைகளை அறிவேன்]

 அந்த கோர விபத்துக்குப் பின்னர் ஒரு குடும்பம் எப்படி சின்னா பின்னமாகிறது? உயிர் நீத்தாரின் குழந்தைகள்,அவரது உறவினர்களால் எப்படி பந்தாடப்படுகின்றனர்?,சமுதாயத்தில் பருவ வயதில் ஆண்,பெண் குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு வளர்த்து கொண்டு வருவது எத்தனை பெரிய  அசகாய சாதனை? எனப் புரியும்.

பதின்ம வயது குழந்தைகளை சூறையாட சமூகத்தில் எததனை கோரமான இன்செஸ்டுகள், பீடோஃபைல்கள் காத்துக்கொண்டுள்ளனர் ,என்பதும்  நிதர்சனமாகப் புரியும். ஆகவே வாகனப் பயணத்திலும் , வாழ்க்கைப் பயணத்திலும்  ஒருவரின் அவசரமான  ,ஆவேசமான முடிவுகளிலிருந்தும் ஒருவரை  மிகவும் கவனமாக இருக்க வைக்கும் படம்.

ஜானி என்னும் சவப்பெட்டி தொழிலாளியின் பாத்திரத்தை மூலக்கதையில் ஹோமோசெக்சுவலாக சித்தரித்திருந்தார் மோஹன் சிக்கா,இயக்குனர் படத்தில் அவரை ஸ்ட்ரெய்ட்டாக சித்தரித்திருக்கிறார், பஞ்சாப்பில் அனாதைகள் பள்ளியில் படிக்கும் நாயகன் முகேஷின்  இரு சகோதரிகளும், அங்கு பள்ளியின் வார்டன் ஒரு லெஸ்பியனாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல்,சகோதரனிடம்  தஞ்சம் தேடி பஞ்சாபிலிருந்து தில்லிக்கு பஸ்ஸில் தப்பி வருவர்,அது மோஹன் சிக்காவின் மூலக்கதையில் இல்லை,படத்தின் க்ரிஸ்பான ஓட்டத்துக்கும் , ட்விஸ்டுக்கும் வேண்டி அந்த  முடிவை மட்டும் சிறிது மாற்றியிருந்தார் இயக்குனர்,கொஞ்சம் பிசகியிருந்தாலும் இது ஒரு மலையாள பிட்டுப் பட ரேஞ்சுக்கு மாறியிருக்க வேண்டியது,

இயக்குனரின் உலகத்தரமான ரசனை, ஆக்கத்திறன், படத்தில் அலோக்நந்தா தாஸ் குப்தா [அமித் த்ரிவேதியின் மானசீக சிஷ்யை] வின் பிண்ணனி இசை சேர்ப்பு,நடிகர்களில் சரிகா ஆண்டியாக தோன்றிய ஷில்பா ஷுக்லா,ராஜேஷ் ஷர்மா, முகேஷாக தோன்றிய ஷதப் கமல், ஜானியாக தோன்றிய திப்யேந்து பட்டாச்சார்யா போன்றோரின் ஒப்பற்ற நடிப்பு இவை  எல்லாம் சேர்ந்து படத்துக்கு கல்ட் அந்தஸ்தை  தந்துள்ளது,

படம் பற்றி நான் இங்கே மேலும் எழுதுவதை விட மோஹன் சிக்காவின் கதையை ஆங்கிலத்தில் ஒருவர் படித்துவிட்டு,அதற்கு சரவணனின் அற்புதமான தமிழாக்கத்தையும் படிப்பதே சிறப்பாக இருக்கும்,படத்தை உங்கள் விருப்பப்படி கதை படிக்கும் முன்னரோ பின்னரோ பாருங்கள்,

இந்த படம் வயதுவந்தோர் அனைவருமே அவசியம் பார்க்க வேண்டும் , இந்தியாவில் முதன் முதலாக வந்த ஜிகிலோவின் கதை இதுவாகத் தான் இருக்க வேண்டும் , அதை ஆபாசம் இன்றி எடுத்த விதத்தில் இதை  இலக்கியத் தரத்திற்கு உயர்த்தியிருக்கிறார் இயக்குனர் .  டோன்ட் மிஸ் இட்!!! ...

நான் தமிழில் சமீபத்தில் படித்த மிகச்சிறப்பான ப்ரொஃபெஷனலான தமிழாக்கம்    இதன் ஆங்கில மூலம் இங்கே

இந்த படம் பார்க்காவிட்டாலும் அந்த மொழிபெயர்ப்பு கதையை படித்து முடிந்தால் சரவணனுக்கு ஊக்கம் கொடுங்கள் ,

படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் இருந்து

ஜல்சாகர் [ জলসাঘর ][Jalsaghar AKA The Music Room][1958 ][பெங்காலி]1958 ஆம் ஆண்டு இயக்குனர் சத்யஜித் ரே  தன் முந்தைய படம் அபராஜிதோவின் வசூல் ரீதியான தோல்விக்கு பிறகு  தன்னை சற்றும் சமாதானம் செய்துகொள்ளாமல் செய்த பரீட்சார்த்தமான முயற்சி தான் ஜல்சாகர் என்னும் நியோ ரியாலிச திரைப்படம்.  [ஆங்கிலத்தில் த ம்யூசிக் ரூம்] இது 1950 ஆம் வருடம் இயற்றப்பட்ட ஜமீந்தாரிகள் ஒழிப்பு சட்டத்தைப் பற்றி   நேர்படப் பேசுகிறது.

ஆடிய ஆட்டமெல்லாம் ஆடி தன் சொகுசு வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கும் வங்காள ஜமீந்தார் சபி பிஸ்வாஸின் கதை இது, தன் தோப்பு துறவறங்கள் எல்லாமே அரசின் புதிய சட்டத்தால் பறிபோய் விட்ட பின்னும், ஆடல் பாடல் கேளிக்கைகளுக்கு பெரும் பொருள் செலவிடுகிறார் ஜமீந்தார், ஏழமை எப்படி இருக்கும்?  என்றே தெரியாமல் தன் முன்னோர்களின் சொத்தை  இழந்த பின்னரும், அவர்கள் ஜமீன்பெருமையை இன்னும் பேசி மனமகிழ்ந்திருக்கும் கடைசி எச்சம் அவர்,

இவரின் பாத்திரத்தை அப்படி தத்ரூபமாக படைத்திருப்பார் ரே, அத்தனை உள்வாங்கி நிஜமான ஜமீனாகவே உருமாறியிருப்பார் Biswambhar Roy, இவரின் மனைவி எத்தனை புத்தி சொல்லியும் இவர் மூளையில் ஏறுவதாக இல்லை, மகனுக்கும் இசை குதிரையேற்றம்,யானையேற்றம் பயிற்றுவிக்கிறார், இவரின் ஜமீனின் எச்சங்களாக வெள்ளை உயர் ஜாதிக் குதிரையும் ,யானையும் உண்டு, அதில் தினசரி இவரும் மகனும் சவாரி செய்வதே முக்கிய பொழுதுபோக்கு,

தன் ஜமீனின் விக்டோரிய அரண்மனை முறையான பராமரிப்பில்லாததால் பாழடைவது தெரிந்தும் அதற்கு பொருள் செலவிடாமல் அரண்மனைக்குள் தான் போற்றி பாதுகாக்கும் ஜல்சாகர் என்னும் இசை அறைக்கே அதிக பொருளும் நேரமும் செலவிடுகிறார், அதிலேயே அதிக சிந்தையாயிருக்கிறார், அங்கே ஒவ்வொரு மாலைப் பொழுதுமே ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் பெரிய விலையுயர்ந்த ஷாண்ட்லியர்களில் பொருத்தி வைத்து ஏற்றப்படுகிறது, எஜமான விசுவாசம் கொண்ட  வேலைக்காரன் மிகுந்த பிரியத்துடன் அதை செய்கிறான், உயர்ந்த வகை மதுவகைகள் முழு பாட்டில்களாக நகரத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அலங்கார கண்ணாடி குடுவைகளில் ஊற்றி வைக்கப்பட்டு, இசைவிருந்தின் போது கோப்பைகளில் பறிமாறப்படுவதை நாம் பார்க்கிறோம்,

ஜமீந்தார் தன் ஓய்வு நேரத்தில் ஓவியரை அழைத்து ,பெரிய தைல வண்ண போர்ட்ரெய்ட்டுகளாக தம்மை வரைய போஸ் தருகிறார்,பின்னாலே மனைவியின் அழுகை அவர் செவிகளை அடைவதில்லை.மகன் அருமையாக சங்கீதம் கற்று ஜதி சொல்கிறான்,அப்பா இசைக்கருவி மீட்ட அவன் வாய்பாட்டில் ஆலாபனை செய்ய,வீடே சங்கீத கோலம் கொண்டிருக்கிறது, ஜமீனின் மனைவி, மகனின் சங்கீத ஞானத்தால் மனமகிழ்ந்தாலும் கணவரின் ஊதாரித்தனத்தால் வருந்துகிறார்.

ஜமீந்தார் எநேரமும் புகைக்கும் வாசனை மலர்கள் மற்றும் புகையிலை அடங்கிய ஷீஷா வேலைக்காரனால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது,  இந்த பாழடைந்து கொண்டிருக்கும் அரண்மனைக்குள் எந்நேரமும் சித்தார் இசை கேட்டுக்கொண்டிருக்கும் படி முழு சம்பளம் தந்து இசைக்கலைஞன் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஜமீந்தாரரின் கணக்குவழக்கை பார்க்கும் பிராமணர், எத்தனையோ முறை எச்சரித்தும் அவர் அதையெல்லாம் கேட்பதாயில்லை, சொகுசு காரை விற்றாயிற்று,உயர்தர தேக்கு மர மேசை நாற்காலிகள்,புத்தக அலமாரிகள் ,உணவு மேசை போன்றவற்றை கூட ஒவ்வொரு மாத சம்பளத்துக்காகவும், மளிகை சாமான்களுக்காகவும் விற்க வேண்டிய அவல நிலை, அரசு பறித்துக்கொண்டது போக முன்னோர் துயில் கொள்ளும் சமாதி நிலம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது, இன்னும் கூட வீட்டார் ஜமீந்தார் உண்பதில் குறை வைக்கவில்லை, உடுத்துவதில் குறை வைக்கவில்லை,

இந்நிலையில் தன் தந்தை உடநலம் குன்றியிருப்பதால் அவரைப் பார்க்க ஜமீந்தாரின் மனைவி புறப்படுகிறார்,ஜமீந்தாரரை அழைக்க அவர் நிலபுலன்களை பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால் வர இயலாது என காமெடி செய்கிறார், பணிவான மனைவியே இதுகேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள், தன் மகன் பின்னே குதிரையில்   பவனி வர  இவர் முன்னே  பல்லக்கில் படகுத்துறை நோக்கி செல்கிறார், அங்கிருந்து ஆற்றில் பாய்மரம் வாயிலாக தாய்வீடு செல்கிறார், சில வாரங்கள் கழிந்த பின்   அவர் ஜமீந்தாரின் ஊருக்கு திரும்ப வருகையில் பெய்த திடீர் மழையால் , ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் , கடும் சுழலில் படகு சிக்க மனைவியும் மகனும் பலியாகிவிடுகின்றனர்,  ஜமீந்தாருக்கு மனையாள் சோகமும், புத்திர சோகமும் ஒருங்கே வாட்ட, அவர் சுமார் 4 வருட காலமாக தன் மாடி அறையை விட்டு இறங்குவதேயில்லை,பாதி நேரம் மொட்டை மாடியிலேயே கழிக்கிறார்.

இந்நிலையில் அரசின் புதிய சட்டங்களை தமக்கு தோதாக வளைத்து ஊரில் புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கின்றனர், அவர்கள் தம் வீடுகளில் டீசல் ஜெனரேட்டர் போடுவதும் ,நிரந்தர மின்சார கனெக்‌ஷன் தருவதும், தம் வீட்டு விஷேஷங்களுக்கு பேண்ட் கோஷ்டி,க்ராமபோன் ஏற்பாடு செய்து அலற விடுவதுமாக இவரின் ஒவ்வொரு விடியலுமே இருக்கிறது, இவரின் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றுக்கு செல்லும் பாதையில் இவரிடம் அனுமதி பெற்று பெரும்பணம் ஈட்டும் மணல் காண்ட்ராக்டர் கங்கூலியின் லாரிகள் நிமிடத்துக்கு ஒன்றாக பறக்கின்றன, [மணல் சுரண்டலை ரேவின் கேமரா நேர்த்தியாக உள்வாங்கி நமக்கு தருகிறது, தன் படைப்பில் உலகத்தரமான சர்க்காசிசம் பயின்றவர் ரே என புலப்படும்]

அன்று, புதிய பணக்காரன் கங்குலி ஜமீந்தாரை , முறையாகப் பார்த்து தன் வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைக்கிறான்,அங்கே இசை அறை உள்ளதா என கேட்கிறார்,ஜமீந்தார்,அவன் இருக்கிறது,அதில் புகழ்பெற்ற நாட்டியக்காரியின் கதக் நடனம் வைத்திருக்கிறேன், வந்து சிறப்பித்து தர வேண்டும் என அழைக்கிறான் கங்கூலி, ஜமீந்தாருக்கு வீம்பும் அகம்பாவமுமாக இருக்கிறது, 4 வருடங்களாக அடங்கி ஒடுங்கி இருந்தவரை ஒரு புதுப்பணக்காரனின் டாம்பீகம் அசைத்து விடுகிறது,

 வலிய மாடியை விட்டு இறங்கியவர் இரும்புப் பெட்டியை திறக்கிறார் மனைவியின் கடைசி நகையை விற்று தன் பாழடைந்த இசை அறையை மீண்டும் திறக்கிறார்,அதை  பொலிவுடன் புதுப்பிக்கிறார், மீண்டும் ஆயிரக்கணக்கில் மெழுகுவர்த்திகள் வாங்கப்பட்டு ஷாண்ட்லியரில் சொருகப்பட்டு குதூகலமான வேலைக்காரனால் அவை ஏற்றப்படுகின்றன, உயர்ந்த வகை மது வகைகள் ,உணவுவகைகள், வாசனா திரவியங்கள்,வாங்கி வரப்படுகின்றன, இதைக் கண்டு உள்ளம் களங்குகிறார் ஜமீனின் நலம் விரும்பும் கணக்காளர், அவரால் ஜமீந்தாரை எதிர்த்தும் பேச முடிவதில்லை,

இந்த விருந்து முடிந்து விட்டதென்றால் ஜமீந்தாரர் சுத்தமாக வழக்கொழிந்து விடுவார்.விசுவாசமான வேலைக்காரர்களுக்கு கடைசி சம்பளம் தரக்கூட காசுகிடையாது, ஆனால் ஜமீந்தார் இரும்புப் பெட்டியில்  வெல்வெட் சுருக்குப்பையில் மீதம் இருக்கும் பொற்காசுகளை அப்படியே எடுத்துக்கொண்டுவிட்டார், தன் பிரதான போட்டியாளனான கங்கூலியுடன் செல்வம் ஈட்டுவதில் போட்டி போடமுடியாத ஜமீந்தார் அவனை கேளிக்கைக்கு செலவிடுவதில் தோற்கடிக்க எண்ணுவதை கணக்காளர் அறிந்திருக்கிறார்,

 அவரால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை,ஆனால் எந்த கவலையுமில்லாத வேலைக்காரன் ஓடியாடி மது பறிமாறுகிறான், கதக் ஆட்டமும், ஹிந்துஸ்தானி கஜல் இசையும் விடிய விடிய நடைபெறுகிறது, ஆட்டக்காரிக்கும்,இசைக்கலைஞருக்கும் சம்பளமாக 200 ரூபாய் பேசப்படுகிறது,அங்கே கதக் ஆடிய ஆட்டக்காரி காரியத்தில் மிகத்தேர்ந்தவளாகையால் ஜமீந்தார் மனதையும் குழுமியுள்ள இதர பணக்காரர்களின் மனதையும் நன்கு அறிந்திருக்கிறாள்,அனைவரும் சொக்க ஆடுகிறாள். ஜமீந்தாரர் கைகளில் மல்லிகை சரம் சுற்றப்பட்டிருக்க, அவர் வசதியாக திண்டுகளில் சரிந்து கொண்டபடி தன் கடைசி ஆட்டத்தை பார்க்கிறார்,ஷீஷா உறிஞ்சுகிறார்.

ஓரக்கண்ணால் கங்கூலியை எகத்தாளமாகப் பார்க்கிறார், வேலைக்காரன் ஜமீந்தாருக்கும் ஏனையோருக்கும் ஓடி ஓடி மது வகைகளை ஊற்றுகிறான், உயர்தர வறுவல் பலகாரங்கள் பறிமாறுகிறான், புகைமயமாகிறது இசை அறை, வேலைக்காரன் ஓரமாக நின்று ஆட்டத்தை ரசிக்கிறான், ஜமீனே நாசமாகப் போனாலும் ஜமீந்தார் ஆட்டம் பாட்டமுமாக சந்தோஷமாக இருக்க வேண்டும், தான் இப்படி இசை ,நடனம் பார்க்க வேண்டும் என ஆசை கொண்டிருக்கிறான், ஆனால் அவன் ஒரு விசுவாசி அதில் சந்தேகமேயில்லை, ஷீஷாவை ஒயிலாக  உறிஞ்சி புகைத்துக் கொண்டே ஆட்டம் பார்க்கிறார் ஜமீந்தார், இப்போது ஆட்டம் பலத்து ஓங்கி முடியவும் அவளின் பாதங்கள் அங்கே ஜதி போடுவதை நிறுத்துகின்றன, அருகே அமர்ந்த கங்கூலி ,வாரே வா,சபாஷ் என தன் கையில் இருக்கும் பொற்காசுகளை விசிற எத்தனிக்கிறான் ,அவனின் கையை தன் ஊன்றுகோலால் பின்னுக்கு இழுக்கிறார் ஜமீந்தார்,

கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் தான் முதல் பரிசு தர வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?என புதுப்பணக்காரனை அற்ப தோரணையில் ஏளனம் செய்து விட்டு, தன் வெல்வெட் சுருக்குப் பையை அவளை அருகே அழைத்து தருகிறார் ஜமீந்தார், அவள் வணங்கி அதை ஏற்கிறாள், கங்கூலி முகம் கருக்கிறது, ஜமீந்தாருக்கு அற்ப சந்தோஷம், ஆனால் அடுத்த வேளைக்கு உணவில்லை என்பது பற்றி அவருக்கு கவலையில்லை, அவர் கோப்பையை நீட்ட நீட்ட ஊற்றிக்கொண்டே இருக்கிறான் வேலைக்காரன், ஆளரவமற்ற தன் இசை அறையில் அங்குமிங்கும் நடந்து மாட்டப்பட்டிருக்கும் தந்தை,தாத்தா, பாட்டன் முப்பாட்டன் படங்களை  வெற்றிக் களிப்புடன் பார்க்கிறார் ஜமீந்தார், பரம்பரை புகழ் எல்லாம் என் ரத்தத்திலேயே இருக்கிறது, ஜமீன் ரத்தம் என்று முழக்கமிடுகிறார், தன் தந்தையின் ஓவியத்தை உற்று நோக்கியவர்,

அதில் ஒரு பெரிய சிலந்தி ஊர்வதை கண்ணுறுகிறார், அருவருப்படைந்தவர் அதை ஊன்றுகோலால் விரட்டுகிறார்,இப்போது ஷாண்ட்லியரில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்  கரைந்து முடிவுக்கு வந்தவை சுடர் விட்டு எரிந்து பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மரணிப்பதை பார்க்கிறார் ஜமீந்தார், அவருக்கு இப்போது ஏதோ உறைப்பது போல இருக்கிறது, பயம் கொண்டு பினாத்துகிறார் ஜமீந்தார், இருள் சூழ மருள்கிறார், வேலைக்காரன் பயம் வேண்டாம் மெழுகுவர்த்தி தானே முடிந்தது, இதோ விடிந்து விட்டதே என திரைச்சீலையை திறக்கிறான், அப்போது நிம்மதியானவர், அவரின் குதிரை பசிக்காக கனைக்க, அது தன்னை சவாரிக்கு அழைப்பதாக எண்ணி விருட்டென போதனியினூடே எழுந்து போய், அதில் எப்படியோ ஏறி விரட்டிப் பயணிக்கிறார்,

குதிரை ஆற்றங்கரையை நோக்கி மரணப்பாய்ச்சல் பாய்கிறது,அங்கே வைத்து ஒரு பள்ளத்தில் தன் முன்னங்கால்களை தூக்க, ஜமீந்தாரர் மிகுந்த போதை கொண்டிருந்தவர் தரையில் குப்பை போல வீசப்படுகிறார், அவரின் ஜமீன் ரத்தம் அங்கே வெளியேறி இளக்காரமாக சிரிப்பதை நாம் பார்க்கிறோம், அங்கே பின்னாலே ஓடி வந்த விசுவாசமான வேலைக்காரனும் , கணக்காளரும் ஜமீனுக்காக அழுவதா?, தம் வாழ்க்கைக்காக அழுவதா? எனத் தெரியாமல் தேம்பி அழுகின்றனர், இது ஒரு ஜமீனின் கதைதான்,இது போல பாரத தேசமெங்கும் ஏழை தொழிலாளிகளை சுரண்டி கொழுத்து திணவெடுத்த ஜமீன்கள் லட்சம் பேர் உண்டு,அவர்கள் வாழ்வும் இப்படித்தான் முடியும் என்பதை இப்படைப்பால் நமக்கு உணர்த்துகிறார் ரே,

படப்பிடிப்புக்காக ரே பயன்படுத்திய பங்களாவும் உண்மையானது, எங்குமே அவர் நாடகத்தனமாக செட் அமைக்கவில்லை, எங்குமே அவர் நாடகத்தனமான வசனங்களை அனுமதிக்கவில்லை, சினிமா காட்சிகளின் மீடியம் என்பதற்கேற்ப செழுமையை, பெருமையை, சிறுமையை, துக்கத்தை ரேவின் கேமரா  தான் பேசுகிறது, ஒரு ஒப்பற்ற பாசாங்கில்லாத உணர்வுரீதியான படைப்பு இது, கருப்பு வெள்ளையில் இப்படி கதா பாத்திரங்களின் உணர்ச்சிகளை ரேவால் மட்டுமே அற்பணிப்புடன் வெளிக் கொணர முடியும் என்னும் படியான படைப்பு, ரே படத்தில் உபயோகித்த இசைக்கலைஞர்கள், இசைத் தொகுப்பு, இசை வாத்தியங்கள், அனைத்துமே நாடகத்தனமில்லாதவை, எல்லாமே ப்ரொஃபெஷனலாக கையாளப்பட்டவை,

அதே 1950களில் சினிமாக்களில் நின்றால், நடந்தால் சிறிதும் உண்மைத்தன்மை இல்லாத பாடல்கள், சத்தம் போட்டு பக்கம் பக்கமாக வசனம் பேசும் படங்கள், அதீத சண்டைக் காட்சிகள்,மாயாஜாலக் காட்சிகள் நிரம்பிய படங்கள் வணிக ரீதியாக பெரும் வசூல் சாதனை செய்ய, அது போன்ற குப்பைக்கோளங்களே மீண்டும் மீண்டும் மறு சுழற்சி செய்யப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், எக்காலத்துக்கும் பொருந்துகிறபடியான சினிமாவை சிறிதும் சமாதானமில்லாமல் படைத்தவர் சத்யஜித் ரே என்றால் அது சற்றும் மிகை இல்லை

படத்தை க்ரைடீரியான் நிறுவனத்தார் மிகுந்த ஆத்மார்த்தமாக செப்பனிட்டு அருமையான டிவிடிக்களாக வெளியிட்டுள்ளனர்,அது குறித்த விபரங்கள் அடங்கிய சுட்டி

முழுப்படமும் யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கின்றது,அதன் சுட்டி

Cast

Biswambhar RoyChhabi Biswas
Mahamaya, his wifePadma Devi
Bireswar, his sonPinaki Sen Gupta
Mahim GanguliGangapada Bose
Taraprasanna, the stewardTulsi Lahiri
Ananta, the servantKali Sarkar
DurgabaiBegum Akhtar
Ujir KhanSalamat Ali Khan
KrishnabaiRoshan Kumari

Credits

DirectorSatyajit Ray
ScreenplaySatyajit Ray
ProducerSatyajit Ray
Based on the short story Jalsaghar byTarasankar Banerjee
CinematographySubrata Mitra
EditingDulal Dutta
Art directorBansi Chandragupta
SoundDurgadas Mitra
Music directorUlstad Vilayat Khan
Music and dance performed onscreen byBegum Akhtar, Roshan Kumari, Waheed Khan, Bismillah Khan and and company
Music performed offscreen byDaksinamohan Thakur, Asish Kumar, Robin Majumdar and Imrat Hussain Khan
Production managerAnil Choudhury

பன்முகக் கலைஞர் பாரதிமணி ஐயா கட்டுரைகளுக்கான சுட்டிகளின் தொகுப்புதன் எழுபதுகளில் இருக்கும் சமூக எழுத்தாளர்,பழுத்த நாடக நடிகர்,சிறந்த சமூக சேவகர் என பல முகங்கள் கொண்ட பாரதி மணி ஐயா பற்றிய மற்றும் அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பை எல்லோருக்கும் பயன் பட வேண்டும்,  என்ற உயரிய நோக்கில இங்கே தந்துள்ளேன், படிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், பாரதி மணி ஐயா ஃபேஸ்புக்கில் இருக்கிறார், அவரின் ஃபேஸ்புக் கணக்கின் சுட்டி.

பாரதி மணியைப் பற்றி சில பதிவுகள்….
பாரதி மணியின் மற்ற பதிவுகள்….
ஒரு நீண்ட பயணம் — பாரதி மணி
தில்லியில் நிகம்போத் காட் [சுடுகாடு]-பாரதி மணி
பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா? — பாரதி மணி
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! – பாரதி மணி
அசோகமித்திரனுக்கு சாரல் விருது! — பாரதி மணி
பாராட்டு விழாவுக்கு வராத நாயகன்: நான் அறிந்த லெனின்! — பாரதிமணி
செம்மீனும் தேசீய விருதுகளும்! — பாரதி மணி

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி
நீங்களும் இதை படித்தவுடன் முடிந்த வரையில் பகிர்ந்து உதவுங்கள்

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே  இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.

இரண்டு கண்களாலும் பார்க்கும் போது  இந்த குறைபாடு தெரியவதில்லை.   ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர்.  ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை.  எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர்.  கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில்,   என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது.  ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை....... கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர்.  அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி  வந்து சேர்ந்தேன். பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின்,  வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது. 
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன்.  அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள்.  எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற  எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை,  நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன்.  அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார். அழகான தனியறை.  குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது.  சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர். கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.  நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.  8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர்.  அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார். 

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார்.   நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம். செவ்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர்.  காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை.   நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர்.  முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன்.  முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது.  மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY
PHONE: 0413-2233659
EMAIL:  auroeyesight@yahoo.com
               auroeyesight@vsnl.net

இன்றைய தமிழ் சினிமாவில் படைப்பு சுதந்திரம்


டாகுடர் விஜய் தலைவா ரிலீசுக்காக தமிழ்நாட்டை தங்கநாடாக மாற்ற அயராது உழைக்கும் அம்மாவுக்கு நன்றி என்று வீடியோ மெசேஜில் சொன்னாலும் சொன்னார், அதையே பின்பற்றி எல்லா புதுப் படங்களுக்கும் அதை முகேஷ் விளம்பரத்துக்கு அடுத்தபடியாக தேங்ஸ் கார்டாக போட ஆரம்பித்து விட்டனர்,

இது நையாண்டி படத்தின் தேங்க்ஸ் கார்ட்.ஆக இயக்குனர்கள் இத்தனை தொடைநடுங்கிகளாக இருக்கின்றனர் ,தம் படம் ரிலீசாக என்னத்தை வேண்டுமானாலும் செய்வார்கள் எனப் புரிகிறது. கோடம்பாக்கத்தில் இதை டெம்ப்ளேட் போலவே வைத்திருப்பார்கள் போலிருக்கு,இது செக்லிஸ்டில் இருந்தால் தான் சென்சாரில் படம் அப்ரூவல் ஆகும் என அதிகாரிகள் காதை கடிப்பார்கள் போலிருக்கு, என்ன கொடுமை சார்?

தமிழ் நாட்டை தங்க நாடாக மாற்ற முடியுமா?கோலாரில் இருந்த ஒரு தங்க வயலும் கர்நாடகாவுக்குப் போய்விட, அதையும் செலவு அதிகம் என மூடி விட்டார்கள்,யார் இந்த கருமத்தை எல்லாம் யார் எழுதித் தருவது?முதலில் தமிநாட்டை துக்க நாடாக மாற்ற என படித்து விட்டேன்,என்னா தைரியம் என்று கண்ணை சுருக்கிப் பார்த்தால்,தங்கநாடு,அடேங்கப்பா?காலில் விழுவது போய்,இந்த நிலைக்கு சுயமரியாதை இழந்திருக்கிறோம்.  இந்த அடிப்படை கருத்து  சுதந்திரத்தையே பேணாத இயக்குனர் எப்படி படைப்பில் சுதந்திரத்தை பேணுவார் ? அயோ அயோ

இயக்குனர் சத்யஜித் ரேவின் அர்பணிப்பு - சீமாபத்தா[கம்பெனி லிமிட்டட்][1971]சத்யஜித்ரேவின் அற்பணிப்புக்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பீட்டர்ஸ் மின்விசிறி விளம்பரம், தன் கொல்கத்தா ட்ரலஜியின் 2ஆம் படமான சீமாபத்தாவில் [கம்பெனி லிமிட்டட்]வரும் ஷ்யாமல் (Barun Chanda) என்னும் லட்சியம் கொண்ட சேல்ஸ் மேனேஜர் கதாபாத்திரத்துக்காக,அவர் பீட்டர்ஸ் ஃபேன் & லைட்ஸ் என்று ஒரு ப்ராண்டையே மெனக்கெட்டு  உருவாக்கி,அதன் தலைமை அலுவலகம், தொழிற்சாலை, மின்விசிறி உருவாக்கம்,இராக்கிற்கு ஏற்றுமதி, அதிகாரிகளின் உல்லாச வாழ்க்கை என தத்ரூபமாக காட்டியிருப்பார், இந்த விளம்பர வீடியோவை பாருங்கள்.
படத்தில் இன்னுமொரு முக்கியமான விஷயம்,பீட்டர்ஸ் ஃபேன் கம்பெனியில்  சம்பள டிபார்ட்மென்டில் 40வருடங்களாக சீனியர் அக்கவுண்டன்டாக வேலை செய்யும் ராமலிங்கம் என்னும் ஒரு தமிழ் பிராமணர் கதாபாத்திரம், அப்போது தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக பம்பாய்,தில்லி,கொல்கத்தா என சென்று செட்டில் ஆனோர் ஒவ்வொரு பிராமண குடும்பத்திலும் இருப்பர், அவர்களை வைத்து அவரின் உறவினர் ,தூரத்து உறவினர் பிள்ளைகள் ஒவ்வொருவராக அங்கே சென்று காலூன்றுவர், அது எனக்கு நினைவுக்கு வந்தது,

ராமலிங்கம் பாத்திரம் ஆஃபீஸிலேயே சக அதிகாரிகளுக்கு இலவசமாக வேத உபநிஷத்துக்களில் இருந்து அறிவுரைகள், இலவசமாக ஆரூட பலன்கள், ராசிக்கல் மோதிரம் போன்றவற்றை தருகிறார், மேலும் ஷ்யாமலிடம் தன் தகப்பனார் 40 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதத்தை தமிழில் படித்துக் காட்டுகிறார் [அருமையான தமிழில்,கொலைத்தமிழில் அல்ல], சாராம்சம் இதுதான், ராமலிங்கம், மகனே, ஆங்கிலேயர் என்போர் குளிர்காய மூட்டப்பட்ட நெருப்பு போல, அவர்களை விட்டு விலகி இருந்தால் உனக்கு கதகதப்பு கிடைக்காது,மிகவும் நெருங்கினாலும் உடம்பை சுட்டுப் பொசுக்கிவிடும், எனவே அந்த நெருப்பின் கதகதப்பு உன் உடம்புக்கு பொருந்துகிறபடியான  அருகாமையில் அமர்ந்து அதில் குளிர் காய்வாயாக என முடிக்கிறார், இதை ஒவ்வொரு வரியையும் தமிழில் படித்து, பெங்காலியில் மொழி பெயர்ப்பு செய்கிறாரே பார்க்க வேண்டும்? அற்புதம், சத்யஜித் ரேயின் அந்த பாத்திரப்படைப்பு,வேற்று மொழி கதாபாத்திரத்தை தம் படைப்பில் காட்டவேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது,அதை படத்தில் கையாளுகையில் மொழியை ஒருமுறைக்கு இருமுறை அது நேட்டிவிட்டியுடன் பேசப்படுகிறதா?என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.அதில் ரே தமிழை பெருமை படுத்தியிருப்பார்.
 
சமீபத்தில்,சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை அயோக்கியத்தனம்?அந்த தடித்த எருமை மாடு போன்ற மூளை கொண்ட ரோஹித் ஷெட்டிக்கு,படத்தில் தமிழ் பேசும் ஜாம்பவானர்கள் இருந்தும் சில முக்கிய பாத்திரங்கள்,தப்பும் தவறுமாக தமிழில் பேசி தமிழ் கொலை நடத்தியிருக்கின்றார்கள்,ஒருவர் பொறுமை இழந்து நாசமாகப்போக என திட்ட வைக்கும் இடங்கள் அவை, இதில் ரோஹித் ஷெட்டி மற்றும் ஷாருக்கான்  தமிழை சிறுமைப் படுத்தியிருப்பர்.

சீமாபத்தவை நாம் டாகுமென்டரி வகையில் வைப்பதா?ஒரு நியோ ரியாலிச சினிமா வகையில் வைப்பதா? என உலகசினிமா ரசிகர்களுக்குக் குழப்பமாக இருக்கும். 1970 களில் ஒப்புக்கென சினிமா செய்யாமல் இப்படி பரீட்சார்த்தமாக செய்திருக்கிறார்,ஒரு அசல் கார்பொரேட் கலாச்சாரத்தை யாரேனும் காண விழைந்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம் சீமாபத்தா,கலை இயக்கம் என்பது செட் போடுவது மட்டும் அல்ல, நிழலை நிஜமாக்குவது, இந்த ஒப்பற்ற படைப்பின் மூலம்  ரே கலை இயக்குனர்களுக்கு எல்லாம் ஆசானாக திகழ்கிறார்.நான் பீட்டர்ஸ் ஃபேன் என ஒன்று நிஜமாகவே இருக்கும் போல என்று நம்பி, பீட்டர்ஸ் ஃபேன் என்று கூகுளில் அடித்து தேடிப் பார்த்தால் ஆங்கிலப் பாடகர் ஒருவரைப் பற்றி தான் தகவல்களாகக் கொட்டுகிறது.செய்நேர்த்தி என்றால் ரே,ரே என்றால் செய்நேர்த்தி

http://en.wikipedia.org/wiki/Seemabaddha

இரு ஒப்பற்ற இந்திய திரைப்படங்களும் அதன் ஒற்றுமைகளும்!!!

ரெயின் கோட்[2004] மனு,ஷீலா மற்றும் நண்பன் கதாபாத்திரங்கள்
 காலம் சென்ற இயக்குனர் ரிதுபர்ன கோஷின் ரெயின் கோட் திரைப்படம் ,இந்திய கலை சினிமாவின் முக்கியமான படைப்பு, இது எழுத்தாளர் ஓ.ஹென்ரியின் 1906ல் வெளிவந்த The Gift of the Magi என்னும் சிறுகதையைத் தழுவி வெளியான திரைப்படம், ரிதுபர்ன கோஷ் தன் மானசீக ஆசான் சத்யஜித் ரே வின் ஒப்பற்ற படைப்பான , 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன ஆரன்யா[ஆங்கிலத்தில் The Middleman] வில் இருந்து ஒரு காதல் தோல்வி திரியில் வரும் ஒரு முக்கியமான காட்சியை தன் ரெயின் கோட்டில் எடுத்தாண்டிருக்கிறார்,

ஆனால் இது காப்பி அல்ல ட்ரிப்யூட்.மூலத்தை விடவும் தழுவல் மேம்பட்டு நிற்கையில் அது ட்ரிப்யூட் ஆகிறது,மூலத்தை விடவும் தழுவல் கோணிக்கொண்டு பல் இளிக்கையில் அது காப்பி ஆகிறது,இது தான் கீ.இப்படித்தான் நான் காப்பியையும் ட்ரிப்யூட்டையும் வரையறுக்கப் பழகியுள்ளேன்.

ரெயின் கோட் படம் பற்றி நான் இதுவரை எழுதிய படங்களை எல்லாம் விட அது உயர்வாக இருக்க வேண்டும் என்பதால் அதை எழுதி முடிக்காமல் ட்ராஃப்டில் வைத்துள்ளேன், இன்று ஜன ஆரண்யா மீண்டும் பார்த்தேன்,கொல்கத்தாவின் நகர சூழலில் வேலை தேடி அலுத்துப்போய் காதலியை வேறொருவன் தட்டிக்கொண்டு போவதை தடுக்கமுடியாமல் மனதுக்குள் குமையும் சோம்நாத் [ப்ரதிப் முகர்ஜி] கதாபாத்திரம் தான் ரெயின் கோட் திரைப்படத்தில் ஊரக வங்காளத்தில் படிப்பை முடித்து,வேலை தேடிக்கொண்டிருக்கும் மனு [அஜய் தேவ்கன்]

ஜன ஆரண்யாவில் சோம்நாத் தன் அண்ணி கமலாவை உற்ற தோழி போலவே பாவிக்கிறான், தாயிழந்தவன் மனம் விட்டு அவரிடம் அப்படிப் பேசுகிறான்,கமலாவும் தன் கணவன், மாமனாருக்கு தெரியாமல் சோம்நாத்&அபர்னா சென் காதலுக்கு உதவுகிறாள், அபர்னா சென் பெற்றோரின் கட்டாயம் மற்றும் செட்டில் ஆக வேண்டிய சந்தர்ப்பவாதத்தால் ஒரு டாக்டரை மணந்து கொண்டு வெகு தொலைவுக்கு செல்ல நினைக்க, அண்ணி கமலா அவனுக்காக அப்படி வருந்துகிறாள்,

இதே போலவே ரெயின் கோட்டில் காதல் தோல்வியுற்று , சணல் கம்பெனியில் வேலையும் இழந்து,தன் முன்னாள் நண்பர்களிடம் பண உதவி பெற்று புதுவாழ்வை தேட கொல்கத்தா வரும் மனுவுக்கு, நண்பனின் மனைவியான ஷீலா [மவ்லி கங்குலி]அப்படி கரிசனம் காட்டுவார், அஜய் தேவ்கன் மிகுந்த தாழ்வு மனப்பான்மையால் நண்பனின் ஒயிலான அபார்ட்மெண்டில் புழங்க சிரமப்படுவார், இவர் தான் அப்படி ஓடி ஓடி உதவுவார்,மனு டாய்லெட்டில் ஷேவ் செய்கையில் அழுவதை வெளியில் இருந்து உற்றுக் கேட்டவர் , இனி அழும் போது ஷவரை திருகி ஓடவிட்டு அழுமாறு ஆலோசனை சொல்வார், மனு புது தைரியம் பெற்றவர், ஷீலாவிடம் தன் நண்பனுடனான திருமணத்தன்று அவள் ஏன் அப்படி அழுதாள் எனப் புரிகிறது என்று ஷீலாவை மடக்குவார். மிக அருமையான காட்சியாக்கம் அது,மனுவும் நண்பனின் மனைவி ஷீலாவை பாபி என்று தான் அழைப்பார்.


ஜன ஆரண்யா [1976] கமலா,சோம்நாத் கதாபாத்திரங்கள்
இக்காட்சியை சத்யஜித் ரே தன் ஜன ஆரண்யாவில் இப்படி வைத்திருந்தார்,தன் மைத்துனன் சோமநாத் காதல் தோல்விக்காக அண்ணி கமலா மிகவும் வருத்தம் கொண்டு, நாளை அவள் திருமணத்துக்கு போகமாட்டாய் தானே?!!!ஆனால் அவள் தேம்பித் தேம்பிஅழுவதை நீவிரும்புவாய் தானே?!!! கவலைப்படாதே ,அவள் நாளை திருமணத்தின் போது நிறைய அழுவாள்,என்கிறாள்,

சோம்நாத் அண்ணியை நிதானமாகப் பார்த்தவன்.அண்ணி, நீங்கள் ஏன் உங்கள் திருமணத்தின் போது அப்படி அழுதீர்கள் எனப் புரிகிறது!!! என்பான். இரு ஒப்பற்ற படைப்பாளிகள் அவர்கள் இயக்கிய இந்த காட்சியில், கலை அதன் உச்சத்திற்கு உயர்ந்து நிற்கிறது.இந்த இரு படங்களின் கனெக்‌ஷனையும் என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)