நாயகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாயகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாயகன் (1987) பதிவு 3


நாயகன் 3

மீண்டும் நாயகன் படம் பற்றி, எந்த படத்தின் டைட்டில் ஸ்க்ரோலையும் நான் விருப்பத்துடன் பார்ப்பேன்,நாயகன் படத்தின் டைட்டில் ஸ்க்ரோல் அட்டகாசமான கதை திருப்பத்தின் போது வருகிறது,

தந்தையை சுட்டுக்  கொன்ற போலீசை கொன்றுவிட்டு பம்பாய்க்குத் தப்பும் வேலு நாயகரின் இளம் பிராயம் , மும்பையின் பரபர நெரிசல்,  தாராவியில் தமிழ் மக்கள் வசிக்கும்  சூழல்,நாயகனை கடத்தல் தொழிலுக்கு வரச்செய்யும் சூழ்நிலை என  மிக அழகாக நம்முள் பதிய வைக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை யூனியன் லீடர், 1950 களில் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களை கம்யூனிச அனுதாபிகளை மற்ற முதலாளிமார்கள் வெறுத்தனர்.

அது போல ஒரு போராட்டத்தில் தந்தை குற்றவாளியாக தேடப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார், தந்தை கிட்டியின் அறிமுகமும் முடிவும் வெறும் வெறும் இரண்டே நிமிடங்கள் தான் வரும், ஆனாலும் மிகுந்த அழுத்தமாக நம்முள் பதியும் காரணம்  பின்னணியில் ஒலிக்கும் சூழலுக்கேற்ப மாறி மாறி பயணிக்கும் இசை , அபாரமான நேச்சுரல் லைட்டிங் ஒளிப்பதிவு,பின்னர் வேலு ஊர் விட்டதும் ஒரு அகண்ட மௌனம்.

அது கழிந்து இசைஞானி குரலில் ஐந்து நொடிகள் வரும் ஆலாபனை முடிந்து இசை எதுவுமற்ற தென் பாண்டிச் சீமையிலே பாடல் சரியான இடத்தில் பாடலாக ஒலிக்கும்,பின்னர் கமல் பாடலை வாங்கிப் பாடுகையில் இசை கூடவே ஒலிக்கும், இசைஞானி எழுதிய ஒரு சிறிய தாலாட்டு பாணி பாடலை விஸ்தரித்து படத்திலும் ஆடியோ வெளியீட்டிலும் மாற்றங்களை செய்து எத்தனை ஆப்ஷன்களை பரீட்சித்துள்ளனர் பாருங்கள், விசுவல் மற்றும் இசை  ப்ளெண்ட் ஆகி அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

கமல்ஹாசனின் வளர்ப்புத் தந்தையாக வரும் ஹுசைன் பாய் இந்திய பேரலல் சினிமாவின் முக்கியமான நடிகர் , அவரின் பெயர் எம்.வி. வாசுதேவராவ், இவர் மணி ரத்னத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்திலும் வந்திருந்தார், 

இவர் ஷ்யாம் பெனகல் இயக்கிய தெலுங்குப் படமான கொண்டுராவில் பிரதான கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.மிருனாள் சென் இயக்கிய தெலுங்குப் படமான ஒக்க ஊரி கதா படத்திலும் பிரதான கதாபாத்திரம், ஷிவ்ராம் காரந்த் இயக்கிய சோமனா தேதி படத்துக்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர், இவரை மணிரத்னம் விரும்பி மீண்டும் இந்தக் கதாபாத்திரத்துக்கு சிபாரிசு செய்தாராம்.

இப்படத்தின் ஸ்க்ரோலில் டைட்டில்ஸில் புதுமை செய்திருந்தனர்.கம்ப்யூட்டர் எழுத்துக்களை ஸ்க்ரோலுக்கு உபயோகித்திருந்தனர், இதை மீடியா மென் என்ற நிறுவனம் செய்திருந்தனர்.
எழுத்துக்கள் சரியாக Rule of Thirds இலக்கில் அமைந்திருக்கும்.

மணிரத்னத்தின் முந்தைய படமான மௌனராகத்துக்கு கரிசல்ராஜா Handwritten டைட்டில்ஸ் செய்திருந்தார்.

இப்படம் உருவான சமயத்தில்  கமல் விவாகரத்து ஆகியிருந்ததால் அவரின் முந்தைய படங்களுக்கு உடையமைத்த வாணி பெயர் இல்லை, கமல்ஹாசனின் உடைகளை ரவி வடிவமைத்திருந்ததாக க்ரெடிட் இருக்கிறது, ஆனால் அன்க்ரெடிட்டாக காஸ்ட்யூம் டிசைனராக சரிகா இதில் பணியாற்றத் துவங்கி விட்டாராம், ஒரு முறை அவரால் கமல் குறிப்பிட்ட ஒரு அத்தரை தேடி வாங்க முடியவில்லை என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

இளம் கமல் அணிந்து வரும் narrow pant அட்டகாசமாக இருக்கும், அந்த தீபாவளிக்கு நேரோ பேண்ட் தைத்துவிட்டு படம் பாரத்தவர்களை அறிவேன்.

இப்படத்தின் கோர்ட் காட்சிகள் அண்ணா யுனிவர்சிட்டி வளாகத்திலேயே எடுக்கப்பட்டிருக்கும், அட்மோஸ்பியர் மட்டும் பாம்பே மக்கள் போல மேட்ச் செய்திருப்பார்கள், நன்றி கார்டில் கிண்டி இஞ்ஜினியரிங் காலேஜ் என்றே வருகிறது.
#நாயகன்

நாயகன் | மணி ரத்னம் | பாகம் 1



நாயகன்1

நாயகன் படத்தின் 1080 p HD தரத்தில் அமைந்த ப்ரிண்ட் பார்க்க கிடைத்தது.
 ஆங்கில சப்டைட்டிலுடன் இருக்க மலையாள நண்பர்களுக்கும் இந்தி நண்பர்களுக்கும் தந்தேன் ,படத்தை மிகவும் சிலாகித்தனர்(வெளிநாட்டு , வெளிமாநில இந்தியப் பட ரசிகர்களுக்குத் தந்து பார்க்க சொல்லலாம் )

இப்படம் வெளியாகையில் விகடன் விமர்சனக்குழுவில் இருந்த தற்குறிகள் இளையராஜாவை மிகவும் மட்டம் தட்டி விமர்சனம் எழுதியிருந்தனர்.

(விகடனில்  கவிக்குயில் 1977 படம் தொடங்கி தான் இந்த சினிமா விமர்சனத்துக்கு  மதிப்பெண் தரும் வேலையைத் தொடங்கினார்களாம், அவர்களிடம் இரண்டு பேர் விமர்சகர்கள் இருந்தனராம், கிராமப் படங்களுக்கு, எழுதுபவர் நகர படங்களுக்கு எழுதுபவர், எல்லா படங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட மானே தேனே டெம்ப்ளெட் பின்பற்றப்படும், சில படங்களில் க்ளைமேக்ஸ் ஸ்பாய்லர் கூட உடைக்கப்படும்,ஏனைய நம்மாட்களுக்கு வெறும் ப்ரெசன்டேஷன் இருந்தால் போதும் டீடெய்ல் வேண்டாம்.)

படத்தில் இசைஞானி இசை முற்றிலும்  புதுமையான வேறொரு பரிணாமத்தில் அமைந்திருக்கும், ஒளிப்பதிவு மிகுந்த தொலைநோக்கானது, புதுமையானது, நிறைய கேன்கள் பிலிம் செலவு செய்து பரீட்சார்த்தம் செய்து இன்டஸ்ட்ரிக்கு ஸ்டாண்டர்ட் உருவாக்கிவிட்டு, இனி மேல் அப்படித்தான் என ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்,

கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தில் கிடைத்த   பட்டறிவே இதற்கு முக்கிய காரணம். ஒரு படம் வெற்றியோ தோல்வியோ அதை சமரசமின்றி தரவேண்டும், நல்ல குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நல்ல காலத்தால் அழியாத படங்களைத் தர வேண்டும் என நினைத்தார்.

 1986 பொங்கலுக்கு வெளியான கமலின் சொந்தத் தயாரிப்பான விக்ரம் படத்துக்கு வி.ரங்கா அவர்கள் ஒளிப்பதிவு,படத்தின் இயக்கம் ஃபார்முலா பட மன்னரான ராஜசேகர் அவர்கள், அவரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வி. ரங்கா , இருவரும் அத்தனை வேகத்தில் படத்தை முடித்து குறித்த நேரத்தில்  ரிலீஸ் செய்வதில் ஜித்தர்கள்.

இயக்குனர் ராஜசேகர் + வி.ரங்கா அதே ஆண்டில் விக்ரம் படத்துடன் படிக்காதவன் காக்கிசட்டை, இந்தி கங்குவா உட்பட முன்று படங்கள் முடித்து வெளியிட்டுள்ளனர், விக்ரம் படத்தின் நீளம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் எத்தனை விறுவிறுப்பான கதை, விதவிதமான லொக்கேஷன்கள், எத்தனை  நடிகர்கள்.படம் 1984ம் ஆண்டு துவங்கி ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக 1986 ஆம் ஆண்டு தான் வெளிவந்தது

 நாயகன்  படமும் உருவாக நீண்ட காலம் எடுத்ததை நாம் அறிவோம், பார்த்துப் பார்த்து , மொத்தமாக சுமார்  4 மணி நேரம் படமாக்கியதில் எது வேண்டாம் என களையவே இத்தனைக் காலம் எடுத்துள்ளது.படத்தின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் பேட்டியையும் தேடிப்படியுங்கள், ஒரு தரமான, பிரம்மாண்டமான  படமாக நாயகன் எத்தனை தடைகளைத் தாண்டி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது

நான் பார்த்த நாயகன்  படத்தின் நீளம் 2-மணி 35 நிமிடங்கள்,  ஏ சான்றிதழ் பிரதி இது 

பிஸி.ஸ்ரீராம் நாயகன் செய்வதற்கு முந்தைய வருடம் மௌனராகம் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றினார், அதற்கு முன் மீண்டும் ஒரு காதல் கதை, பூவே பூச்சூடவா, நீதானா அந்தக் குயில், போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார், 

இந்திய சினிமாவில் நாயகன் படத்தின் ஒளிப்பதிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆத்மார்த்தமாக உழைத்தனர்,அந்த உழைப்புக்கு அபாரமான பலன் கிடைத்தது. இதில் டைட்டில் ஸ்க்ரோலில் ஒளிப்பதிவாளர் பி.ஸி.ஸ்ரீராம் அவர்களின் உதவி ஒளிப்பதிவாளர்கள் பெயர்களைப் பார்த்தேன், 

அதில்  ஜி.பி.கிருஷ்ணா ( தசரதன் , துறைமுகம் பட ஒளிப்பதிவாளர்) மற்றும் ஒளிப்பதிவு பேராசிரியர், இவரின் விரிவுரை கானொளிகள் யூட்யூபில் கிடைக்கின்றன.

இரண்டாமவரான கோபால் லவ்டுடே மற்றும் துள்ளித்திரிந்த காலம் , மகாபிரபு படங்களின் ஒளிப்பதிவாளர் ( தகவல் நன்றி இயக்குனர் அஜயன் பாலா ,ரெவித்தம்பி பொன்னன்)

ஜீவன் எ ஜீவா நம் மனம் கவர்ந்த 12பி, உள்ளம் கேட்குமே காதலன் , இந்தியன் படங்களின் ஒளிப்பதிவாளர், 

பாலு எ பாலமுருகன் சின்னஜமீன் , சீமான், சமஸ்தானம் படங்களின்  ஒளிப்பதிவாளர்,

மீதம் ஒருவரான அப்துல் ரஜீத் பற்றி தகவல் கிடைக்கவில்லை, விளம்பரப் படத்துறையில்,  சீரியல் ஒளிப்பதிவாளர்களாக மாறினாரா? தெரியவில்லை, யாருக்கேனும் தெரிந்தால் குறிப்பிடவும்.

இது ஒளிப்பதிவு தகவல்களுக்கு மட்டுமான பதிவு, வேறு பதிவுகளில் படக்குழுவின் மற்ற துறைகளை விவாதிக்க எண்ணமுண்டு
#நாயகன்

இந்திய சினிமாவில் தலையில் உடையும் பாட்டில் | நாயகன் | கமல்ஹாசன்











இந்திய சினிமாவில் நாயகன் இப்படி வில்லன் தலையில் வைத்து உடைக்கும் break away bottles (candy glass/sugar glass ) ஐ முதன் முதலில் அறிமுகப்படுத்தியது கமல்ஹாசன் தான், 

இது நாயகன் (1987) படத்தில் வரும் வெந்நிற breakaway சாராய bottle, இதை தன் வாப்பாவைக் கொன்ற ப்ரதீப் சக்தி தலையில் வைத்து உடைப்பார், அவர் போகும் போக்கில் எடுத்த எடுப்பில் இப்படி பிறர் தலையில் வைத்து உடைத்து பரிசோதனை செய்து விடவில்லை.

1984 ஆம் ஆண்டில் ஏக் நய் பஹலி (அபூர்வ ராகங்கள் - இந்தி) படத்தில் காரில் தன் மீது சேறு அடித்துப் போனவர்களை இவர் அசிங்கமாய் திட்ட, அவர்கள் இவரைத் தாக்கி , 
தங்கள் கையில் உள்ள பீர் பாட்டிலை இவர் தலையில் அடித்து உடைக்கிறார்கள்.

இந்த பாட்டில்கள் எளிதில் நொறுங்கக் கூடிய சர்க்கரைப் பாகில்  உச்ச  கொதி நிலையில் ஊதிப் பெருக்கி வேண்டிய வடிவத்தில் வேண்டிய வண்ணத்தில் செய்யப்படுபவை, 

அப்போது 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் ஹாலிவுட் அல்லது ஐரோப்பாவில் இருந்து தான் இவை இறக்குமதி செய்யப்பட்டது, அதை தன் கைக்காசு போட்டு படங்களில் தன்னார்வத்துடன் பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.

நான் நாயகன் பார்க்கையின் இதில் தான் முதலில் break away bottle உபயோகித்து மண்டையை உடைத்தார் என எண்ணினேன், ஏக் நய் பஹெலி பார்க்கையில் அதில் முன்பே செய்திருக்கிறார் என வியந்தேன்.

இன்று இந்த break away bottles அமேஸான் போன்ற  ஆன்லைன் தளங்களில் எளிதில் ஐநூறு ரூபாய்க்கு வாங்கலாம்

#candy_glass,#sugar_glass,#break_away_glass,#நாயகன்,#ஏக்_நய்_பஹெலி,#Realism,#stunt


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (168) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)