பப்பேட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பப்பேட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூணாம்பக்கம் | பி.பத்மராஜன் | திலகன் | அமரத்துவமான தாத்தா பாசம்


மூணாம்பக்கம் ( மூன்றாம் நாள்) இயக்குனர் பத்மராஜனின் கிரீடத்தில் வைரக்கல், இப்படத்தை முன்பு விக்கி இல்லா காலத்தில் மொழி தெரியாமல் ஏசியாநெட்டில்  பார்த்து விட்டு பேரன் பாச்சு  என்ற பாஸ்கிக்காகவும் தாத்தா அப்பூப்பனுக்காகவும் இரு தினங்கள் வரை அழுததுண்டு, படத்தின் பெயர் கூட மறந்திருப்பேன், ஆனால் அக்கதாபாத்திரங்கள் மறக்காது

இப்போது பாப்பேட்டாவின் படைப்புகளை மொழி தெரிந்து திரும்பவும் ரசித்துப் பார்க்கையில் ஆனந்தமும் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமான உணர்வுகளுக்குள் ஏகாந்தமாய்  பயணிக்க வைக்கிறது

இந்த கன்னியாகுமரி அருகே இருக்கும் வட்டக்கோட்டை கடல் தான் பாச்சுவை பறித்துக் கொண்டு மூன்றாம் நாள் கரை ஒதுக்கியது, 

இதே கடலில் தான் அப்பூப்பன் தன் பேரனுக்கு பிண்டம் தரச் சென்றவர் தன் உயிரை மாய்த்து அந்த கொலைகாரக் கடலை பழி தீர்த்தார்

இசைஞானி இப்படத்துக்கு உயிரோட்டமான பின்னணி இசையை நல்கினார், அவரின் உணருமீ கானம் மற்றும் தாமரக்கிளி பாடும் என்ற இரு அற்புதமான பாடல்கள் வட்டக்கோட்டை ரஸ்தாவில் இன்னும் எதிரொலித்துககொண்டிருக்கக்கூடும்

#மூணாம்பக்கம்,#அப்பூப்பன்,#திலகன்,#தம்பி,#பாச்சு,#பப்பேட்டா,#இசைஞானி,#பத்மராஜன்

இயக்குனர் பி.பத்மராஜன் அவர்கள் படைப்புகள் பற்றி எழுதியவைக்கான சுட்டிகள்

P.Padmarajan | பி.பத்மராஜன் 
(23 May 1945 – 24 January 1991) 

பத்மராஜனின் கதைகள் முக்கியமாக வஞ்சம், கொலை, காதல், மர்மம், பேரார்வம், பொறாமை, சுதந்திரவாதம், அராஜகம், தனித்துவம், சமூக அமைப்பு, மனித உளவியல் மற்றும் சமூகத்தின் புற கூறுகளின் வாழ்க்கை ஆகியவற்றை தீர்க்கமாகப் பேசுகின்றன. 

 அவர் படைப்புகள்  சில மலையாள இலக்கியத்தில் சிறந்தவையாக கருதப்படுகின்றன.  

அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் பத்மராஜனே திரைக்கதை எழுதியுள்ளார்.  

1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது முதல் நாவல் நக்ஷத்திரங்களே காவல் புதினம் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றது (1972).[6]

பாலுமகேந்திராவின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில்  பரதன் இயக்குனராக அறிமுகமான பிரயாணம் (1975) திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி மலையாள சினிமா உலகில் நுழைந்தார் பப்பேட்டா என்ற பத்மராஜன்.

ராப்பாடிகளுடே கதா (1978) திரைக்கதை எழுத்தாளராக அவரது மூன்றாவது திரைப்படமாகும், 
இது 1978 ஆம் ஆண்டில் சிறந்த கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது. 

திரைக்கதை எழுத்தாளராக அவரது அடுத்த படைப்பு erotic கிளாசிக்  திரைப்படமான ரதிநிர்வேதம் (1978) , இது இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு cult classic அடையாளமாகவே கருதப்படுகிறது.  

மேலும் மூன்று படங்களுக்கு திரைக்கதை எழுதிய பிறகு, பத்மராஜன் 1979 ஆம் ஆண்டில்  பெருவழியம்பலம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  

பெருவழியம்பலம் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது , IBN லைவ் இன் எல்லா காலத்திலும் 100 சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டில் ஓரிடத்தொரு பயல்வான் திரைப்படத்தை அடுத்ததாக இயக்கினார். பத்மராஜன் இந்தப் படத்தின் எடிட்டிங்கையும் தானே செய்தார்.  கோலாலம்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும், ஆசிய திரைப்பட விழாவில் தங்கப் பதக்கத்தையும் ஓரிடத்தொரு பயல்வான் திரைப்படம் வென்றது.  

1982 இல் அவர் இயக்கிய நவம்பரிண்டெ நஷ்டம் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது, கிராமிய சூழலில் அண்ணன் தங்கை பாசத்தை எத்தனையோ படங்களில் பார்த்திருப்போம், இதில் நகரிய சூழலில் பாசம் மிகுந்த அண்ணனாக ராமசந்திரன், தங்கை மாதவி , அண்ணியாக சுரேகா,  காதல் ஆசை காட்டி கைவிடும் லட்சியம் மிகுந்த கல்லூரி சீனியர் பிரதாப் போத்தனால் மனப்பிசகிற்கு ஆளாகிறார் தங்கை மாதவி.மூன்று வருடத்தில் பிரதாப் போத்தன் நகரில் பெயரெடுத்த ஹிப்னாடிஸ்ட் ஆகிறார்,தங்கை மாதவி மனநோயால் அழுந்தப்படுகிறார், அண்ணன் அண்ணி அவளைக் கைவிடுவதில்லை, பிரதாப் போத்தனால் மீண்டும் தங்கைக்கு மனப்பிழற்வு துவங்க அண்ணன் எடுக்கும் முடிவு அதற்கு பிரதிபலனாக தங்கை எடுக்கும் முடிவு என அற்புதமான படைப்பு இது.

பத்மராஜனின் கூடெவிடே?  (1983) பிரபலமான முறையீடு மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது.  

1984 ஆம் ஆண்டில், சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்ற ஐ.வி.சசியின் கணமறையத்து திரைப்படத்திற்கு அவர் திரைக்கதை எழுதினார்.

 1986 ஆம் ஆண்டில் அவர் தேஷாடனக்கிளி கரையாரில்லா திரைப்படத்தை இயக்கினார், இது திரையில் பெண் உள்ளத்தை ஆராய்ந்த முதல் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகும்.

1985 ஆம் ஆண்டு திங்களாழ்சே நல்ல திவசம் மூலம் இரண்டாவது தேசிய விருதை வென்றார். 

பத்மராஜனின் கரியிலக்காட்டு போலே (1986) மலையாளத்தின் உன்னதமான புலனாய்வு திரில்லர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 அதே 1986 ஆம் ஆண்டு அவர் இயக்கிய அரப்பெட்டா கெட்டிய கிராமத்தில் திரைப்படம் வெளியானது,இன்றும் இது கல்ட் அந்தஸ்தை தக்க வைத்திருக்கும் படமாக விளங்குகிறது, ஒரு விபச்சார விடுதி மற்றும் அதன் தலைவி, அதில் உள்ள பாலியல் தொழிலாளிகள் அங்கு சுகிக்கச் செல்லும் மூன்று நண்பர்கள் ,முரட்டு ஊரார் இவர்களைச்  சுற்றி நடக்கும் இத்திரைப்படத்தின் கதையானது இன்றும் கூட புதுமையானது.

 நடிகர் மோகன்லால் முக்கிய பாத்திரத்தில் நடித்த  நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் (1986) தூவானத்தும்பிகள் (1987) மற்றும் சீசன் (1989) போன்ற சில உன்னதமான  திரைப்படங்களை கலாசிருஷ்டியாக இயக்கினார் பப்பேட்டா.

தூவானத்தும்பிகள் ஐபிஎன் லைவ் அதன் எல்லா காலத்திலும் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் மலையாளத்தில் இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அபரன் (1988)  பப்பேட்டாவின் உன்னதமான மர்ம உளவியல் த்ரில்லர் , இதில்  ஜெயராம் இரட்டை வேடத்தில்  அறிமுகமானார்.இது 1988 ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது.

 மூனாம்பக்கம் (1988)  விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்ட பப்பேட்டாவின்  திரைப்படமாகும்.

இந்நலே 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், முக்கியமாக சுரேஷ் கோபியின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது.

பத்மராஜனின் கடைசித் திரைப்படம் ஞான் கந்தர்வன் (1991) ஆண்டு வெளியானது , அதன் அழகியல் மற்றும் கதைசொல்லல் காரணமாக இப்படம் பின்னர் ஒரு கல்ட் அந்தஸ்தை உருவாக்கியுள்ளது.
இப்படம்  வெளியான ஒரே வாரத்தில், இயக்குனர் பத்மராஜன் கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இறந்தார்.

 பத்மராஜன் தான் இயக்கிய 18 படங்களில் 37 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மலையாள சினிமாவில்  மாபெரும் படைப்பாளி, இவர் படைப்புகள் பற்றி எத்தனை பேர் எழுதினாலும்  முழுதும் சொல்லி விட முடியாது,அத்தனை விஷயம் மீதமிருக்கும்.

பப்பேட்டா படைப்புகளை ஒருமுறை பார்ப்பதோடு நிறுத்தியதில்லை, எதோ பெயரெடுத்த எடிட்டர்  ஒரு படத்தை ஓட்டி ஓட்டி பார்ப்பது போலவே பார்ப்பேன், எப்போதும் அதில் எதாவது ஆச்சர்யம் மீதமிருக்கும், அவர் படைப்புகள் பற்றி முன்பு ஆற அமர அசைபோட்டு எழுதியவை இவை.

இதா இவிட வரெ (திரைக்கதை)

பெருவழியம்பலம் 

கள்ளன் பவித்ரன் 1

கள்ளன் பவித்ரன் 2

ஒரிடத்தொரு பயல்வான்

நவம்பரிண்டெ நஷ்டம் 

நமுக்கு பார்க்கான் முந்திரிதோப்புகள் 1

நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 2

நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 3

நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 4

தூவானத்தும்பிகள் 1

தூவானத்தும்பிகள் 2

தூவானத்தும்பிகள் 3

மூணாம்பக்கம் 1

மூணாம்பக்கம் 2

மூணாம்பக்கம் 3

மூணாம்பக்கம் 4

மூணாம்பக்கம் 5

மூணாம்பக்கம் 6

திங்களாழ்ச்சே நல்ல திவசம்

தேஷாடனக்கிளி கரையாரில்லா

இந்நலே

கொச்சு கொச்சு தெற்றுகள் (திரைக்கதை)

லோரி (திரைக்கதை)

கரிம்பின்பூவின்அக்கரே

சாவித்திரி தமிழ் (திரைக்கதை)
#பப்பேட்டா,#பி_பத்மராஜன்

பெருவழியம்பலம் | நெடுஞ்சாலை உறைவிடம் |1979| பி.பத்மராஜன்


பெருவழியம்பலம் (நெடுஞ்சாலை உறைவிடம்)(1979 )பப்பேட்டா என்ற பி.பத்மராஜனின்வின் முதல் படம்,1978 ஆம் ஆண்டு வெளியான தன் பெருவழிஅம்பலம் நாவலையே எந்த சமரசமுமின்றி படமாக்கினார், இப்படத்திற்கு அவ்வாண்டிற்கான சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வென்றார்.

தன் படங்களுக்கு படப்படிப்பு செய்கையில் அதை ஒரு சுற்றுலா போலவே கருதுவார் பப்பேட்டா, சக நடிகர் ,தொழிற்நுட்ப கலைஞர்களிடம் ரசமாக உரையாடி வேலை வாங்குபவர் அவர்.

இப்படத்தில் நடிகர் அசோகனை அறிமுகம் செய்தார், அசோகன் சிறு வயது என்பதால் இத்தனை கனமான கதாபாத்திரம் அவரை செய்ய வைக்க மிகவும் தன்மையாக கனிவுடன் நடந்து கொண்டு இக்காட்சிகளுக்கான ஆக்ரோஷத்தை அவரிடம் கொண்டுவந்து பதுக்க படமாக்கினாராம், 

மலையாள நடிகர் அசோகனுக்கு  தன் நடிப்பு வாழ்க்கை முழுவதற்குமான கதாபாத்திரம் செந்கிறோம் என அப்போது தெரிந்திருக்கவில்லை.

படத்தின் கதை: 

தன் மற்றும் தன் தமக்கைகளின் தற்காப்புக்காக சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆகியிருக்கிறான் ராமன் ,

இவன் அவ்வூரின் எண்ணெய் செக்கு வாணிய குடும்பத்தின் ஒரே மகன், 15 வயது சிறுவன்,பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டிருக்க, இவனது மூத்த அக்காள் அவ்வூரின் ஒரே வஸ்தாதான பிரபாகரன் பிள்ளையால் வன்புணர்வு செய்யப்படுகிறாள், 

அதன் பின்னர் அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். ஊரில் இதை தட்டிக்கேட்க ஒற்றை ஆண் இல்லை, பிரபாகரன் பிள்ளையின் பராக்கிரமத்தை ஊரார் பெருக்கி வளர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதையே பொழுது போக்காக வைத்துள்ளனர்.

பிரபாகரன் பிள்ளைக்கு வன்புணர்வு என்பது ஒரு  பதிவான பரிவாடி, ஒவ்வொரு முறையும் சிறைக்குச் சென்று குற்றம் ருசுவாகாமல் சொற்பகாலத்தில் வெளிவரும் கட்ஷி இவன், 

இம்முறையும் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நேராக தனக்கு எதிராக சாட்சியம் உரைத்த படகோட்டியை சென்று பார்த்து,ஊரார் முன்னிலையில் ஒரே மிதியில் கொன்று வீழ்த்துகிறான்,இது தான் படத்தில் முதல் காட்சியாக வருகிறது.

 ஊருக்குள் வந்து தன்னை எதிர்த்து பராதி கொடுத்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அன்று இவளை மறைவாக வன்புணர்ந்தேன்,இன்று ஊரார் முன்பாக இவளை வன்புணரட்டுமா? பார்க்கிறாயா? என அவன் தந்தையிடம் கெக்கலிக்கிறான்.

மறுநாள் ராமன் வீட்டிற்கு வெளியே நின்று ஒன்றுமே நடக்காதது போல நின்று எஞ்சியிருக்கும் தமக்கைகளிடம் குசலம் விசாரிக்கிறான் பிரபாகரன் பிள்ளை.

அங்கே வீறு கொண்டு எழுகிறான் ராமன், ஊரார் இருவரையும் பிடித்து விலக்க, பிரபாகரன் பிள்ளை ராமனை நோக்கி ஊர்திருவிழா முழுதாய் காணமாட்டாய்?அதற்கு முன் உன்னை முடிப்பேன் என சூளுரைக்கிறான்.

தன் தமக்கைகளை தனியே வெளியே விடாமல் இரவு முழுக்க  நடக்கும் ஊர் கோயில் திருவிழா இசை கச்சேரிக்கு பொத்தி பாதுகாத்து கூட்டிச் செல்கிறான் ராமன்.

பெற்றொரும் அக்காளையும் பறிகொடுத்தபின் எஞ்சியிருக்கும் இரு தமக்கைகளை பொத்திப் பொத்தி  தூங்காமல் விழித்திருந்து காவல் காக்கிறான் ராமன், 

அப்படியும் ஓநாய் குணமுள்ள பிரபாகரன் பிள்ளை ராமனை தனிமையில் வருவது கண்டு மடக்கி ,பின்னால் சென்று வாயைப் பொத்தி ,காயலில் கட்டிய படகுக்கு தூக்கிச் சென்று கொல்ல ஆயத்தமாகிறான்.

ராமன் அங்கே சுதாரித்துக் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த சிறிய கட்டாரியால் பிரபாகரன் பிள்ளையின் வயிறு குடல் என சரமாரியாக குத்தி சிதைக்கிறான்,ஆனாலும்  பிரபாகரன் பிள்ளையின் மரண அடி தாங்காமல் காயல் நீரில் விழுந்து கரை ஒதுங்கி மயங்கிக் கிடக்கிறான் ராமன்.

மறுநாள் விடியலில் அவனைக் காப்பாற்றிய பிரபாகரன் பிள்ளையை வெறுக்கும் ஒரு உள்ளூர்காரரான பரமுநாயர் (ஜோஸ்பிரகாஷ்), ராமனைத் தன் வீட்டுக்கு தூக்கி வந்து சில தினங்கள் சிகிச்சை அளித்துத் தேற்றுகிறார்,

ஆனால் இந்த கொலைகாரனைப் போற்றி சிருஷை செய்வதை அவர் மனைவி சுகுமாரி மிகவும் வெறுக்க, அவர் ராமனை அவ்வூரில் டீக்கடை நடத்தும் விஸ்வாம்பரன் ( பரத் கோபி) வசம் ஒப்படைக்கிறார்,

விஸ்வாம்பரனுக்கும் பிரபாகரன் பிள்ளை ( கேபிஏஸி.ரஷீத் )மீது மிகுந்த பயம், அவனையே கத்தியால் 17முறைக்கும் மேல் குத்தி சாய்த்த இந்த எலி போல இருக்கும் பாலகனை போஷிக்க எண்ணி தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார்,

அவனை ஆதூரமாக நடத்துகிறார், இதனால் அவருக்கு டீக்கடையை கவனிக்க முடியாதபடி பல சிக்கல்கள் வருகிறது,

ஊராரும் போலீசாரும் மேலும் ஐயமுறாதிருக்க, தனக்கு பிடித்தமான பக்கத்து ஊரின் விலைமங்கையான தேவயானியிடம் (கே.பி.ஏ.ஸி.லலிதா ) ராமனைக் கொண்டு போய் சேர்க்கிறார் விஸ்வாம்பரன்,

 தேவயானியிடம் அவர், ராமன் அவ்வூரில் ஒரு சிறு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகி இங்கே வந்துள்ளான் என அபாண்டமான புழுகை அவிழ்த்துவிட இந்தப் பழியை சுமந்து நடக்கும் ராமனுக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.

சில தினங்களில் தேவயானியின் நிஷ்களங்கமில்லாத அன்பில் கட்டுண்டவன் அவளிடம் தான் ஒரு கொலையாளி என ஒப்புக் கொள்கிறான், 

இருந்தும் அவள் ராமனைக் கைவிடுவதில்லை,தனக்கு கிடைத்த அனாதை ரட்சகனாகவே நினைக்கிறாள், ரட்சிக்கிறாள்.

அவளின் குடிலுக்கு வரும் ஒரு கள்ள மூதாட்டி , அந்நியன் இவனுக்கு முதல் பார்வையிலேயே தோப்பில் கவர்ந்த ருசியான மாம்பழம் ஒன்றைத் தருகிறாள், அவனிடம் அவள் எதுவும் எதிர்பார்ப்பதில்லை, அடுத்த முறை அவனுக்கு என்ன பிடிக்கும் எனச் சொன்னால் அதை கொண்டு வந்து தருவதாகச் சொல்கிறாள்.இப்படி அடுத்தடுத்து  அந்நியர் அன்பினால் திக்குமுக்காடுகிறான் ராமன்.

அங்கே தேவயானியிடம் வரும் ஒரு வாடிக்கையாளர் ராமனை அடையாளம் கண்டு தனிமையில் கண்டு,என் முன் வந்தது போல யார் முன்னும் போய் நிற்காதே பையா !!! இங்கிருந்து வேறு இடம் விரைந்து செல், தேவயானியையும் உன்னால் சிக்கலில் மாட்டி வைக்காதே என அறிவுறை சொல்ல அன்றிரவே அங்கிருந்து அகல்கிறான் ராமன்.

ஊரே தன்னை மகிழ்ந்து கொண்டாடும் அந்த  கொலைபாதகத்துக்குப் பின்னான நீண்ட தலைமறைவுக்குப் பின்னர் எதையும் நேர்கொள்ள பிரயத்தனப்பட்டு  தன் சொந்த ஊருக்குள் வருகிறான் ராமன்,

படத்தின் கடைசிக் காட்சியின் படங்கள் இவை, பப்பேட்டா எத்தனை அருமையாக இதை உருவாக்கியுள்ளார் பாருங்கள், படத்தின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு கண்ணன் நாராயணன்.

முதலில் தன்னைப் பயத்துடன் பார்க்கும் ஊராரை ஏறிடுகிறான் ராமன், பின்னர் வீட்டுக்குச் சென்றவன், இனி என்ன ஆவானோ? சகோதரன் என்று விக்கித்திருக்கும் மூத்த, இளைய தமக்கைகளை கண்ணுறுகிறான்.எதுவும் பேசுவதில்லை.

பின்னர் ஆத்மவிசாரத்தின் உந்துதலால் தள்ளப்பட்டு அவன் குத்திக் கொன்ற அவ்வூரின் பெரிய வஸ்தாது பிரபாகரன் பிள்ளை வீட்டு வேலிப்படலுக்குள்ளேயே நுழைந்தவன் , அங்கே இளநீர் படையல் வைக்கப்பட்ட சமாதியைக் கண்ணுறுகிறான்.

முகத்தில் எந்தச் சலனமுமின்றி அவன் மனைவியை  நேர்கொண்டு பேசியவன்,வெளியேறி நின்றவன் சன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் பிரபாகரன் பிள்ளையின் குழந்தைகளைப் பார்க்கிறான்,

அச்சிறாரின் கண்களில் தந்தையின் இழப்பின் வலியை காண சகிக்க முடியாத ராமன்  தன்னையும் அறியாது தாரை தாரையாக கண்ணீர் வடிப்பதாக படம் முடிகிறது.

இதே படம் பின்னாளில் பல உன்னதமான திரைக்கதைகளை தோற்றுவித்தது,அதில் ஒன்று கிரீடம் ,செங்கோல் படங்களின் சேதுமாதவன் கதாபாத்திரம்,

ரஷீத் செய்த  பிரபாகரன் பிள்ளை கதாபாத்திரம் போன்றே மோகன்ராஜ் செய்த கீரிக்காடன் ஜோஸ் கதாபாத்திரமும் நிலைத்து நிற்கிறது.

Peruvazhiambalam=Master Craft

படத்தில் பாடல்கள் இல்லை, படத்தின் பின்னணி இசை எம்.ஜி.ராதாகிருஷ்ணன், படம் யூட்யூபில் கிடைக்கிறது,அவசியம் பாருங்கள்.

கொச்சு கொச்சு தெட்டுகள் | பி.பத்மராஜன்|மோகன் | 1980 | மலையாளம்




பப்பேட்டா என்ற P. பத்மராஜன் ரசிகர்கள் தவற விடக்கூடாத திரைப்படம் கொச்சு கொச்சு தெட்டுகள் (சின்ன சின்ன தவறுகள்)(1980)

ரவிக்கு (சுகுமாரன் )ஜெயஸ்ரீ (சுபா ) மிகப்பெரிய உதவி செய்திருக்கிறாள்,வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த லைசென்ஸ் ராஜ் யுகத்தில் தான் ஆசைநாயகியாக இருப்பவரிடம் சொல்லி அவரின் சொந்த  நிறுவனத்தில் வேலை சரியாக்கி தந்திருக்கிறாள் ஜெயஸ்ரீ, 

காரணம் அவன் கல்லூரி முதல வருடம் படிக்கும் லதாவுடன் பழகி வீட்டை விட்டு ஒளித்தோடி அழைத்து வந்துவிட்டான், மணமாகாமலே அவளுடன் குடும்பம் நடத்துகிறான்,லதாவின் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தவள், தன்னையும் ஒருவன் ஏமாற்றியதால் இப்படி ஒரு முதலாளிக்கு ஆசைநாயகியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என வருந்தி அந்த பேருதவியை செய்தாள், 

அதற்கான நன்றியை நன்னடத்தையை ரவியிடம் எதிர்ப்பார்த்திருந்தவள் , அவன் ஒரு Casanova ,அவன் சந்தர்ப்பம் கிடைத்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் சுகிப்பான் எனத் தெரிந்து கொள்கிறாள், 

ரவி வேலை செய்யும் அலுவலகத்திற்கு போன் செய்து அழைத்து தன்னை உடனே வந்து பார்க்கச் சொல்கிறாள்.
ரவி நேரில் வர அவனிடம் லதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறாயே? உனக்கு நன்றி இல்லையா ? என குரலெடுத்து முதலாளித்துவம் காட்டுகிறாள், அவன் இதனால் உங்களுக்கு என்ன வந்தது?மரியாதை காட்டுவதால் குனிய வைத்து குட்டப்பார்க்காதீர்கள், உங்கள் நிலை (concubine) என்ன என்று நான் அறிவேன் மிஸஸ் பணிக்கர்  என்று அலட்சியமாக பேசியதும் அவமானம் தாளாமல் அவனை சட்டென அறைகிறாள் ஜெயஸ்ரீ, நன்றியில்லாத ஜென்மம் நீ, நாளை முதல் வேலைக்கு வரக்கூடாது ,நீ போகலாம் என்கிறாள், ரவி அவளை நிதானமாகப் பார்த்தவன் .

அவளிடம் பேசும் வசனங்களைக் கேளுங்கள், ஆகா, பப்பேட்டாவின் பேனா எத்தனை வல்லமை கொண்டது, நடிகர் சுகுமாரனுக்கு எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

மிஸஸ் பணிக்கர் ,உங்கள் emotions நன்று, அதன் sprit எனக்கு புரிகிறது,ஆனால் எஜமானியம்மாள் வேஷம் உங்களுக்கு சற்றும் எடுபடவில்லை அது தான் கொஞ்சம் கூடுதலாகிவிட்டது, என்று பதிலுக்கு அறைந்து விடுகிறான்.

நான்கு பேர் முன்னிலையில் எனக்கு லதாவை திருமணம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை, ஆனால் திருமணம் என்ற ஏற்பாட்டில் நம்பிக்கையற்றவன் நான்,அந்த சுமையை வெறுப்பவன் நான்.

என்ன நாளை முதல் வேலைக்கு வரக்கூடாதா? இந்த வேலை  எனக்கு புல்லைப்போன்றது,இந்த லதா இல்லை என்றால் வேறொரு லதா, இந்த உஷா தங்கச்சி இல்லை என்றால் வேறொரு உஷா தங்கச்சி, இந்த வேலை இல்லை என்றால் வேறொரு வேலை, நீ என்ன சொல்வது நாளை முதல் நான் அந்த வேலைக்கு போகப்போவதில்லை

 என்று கர்ஜித்துவிட்டு அகல்கிறான் ரவி.

இந்தக் காட்சியில் மட்டுமல்ல படம் முழுக்க  நடிகர் சுகுமாரனும், நடிகை சுபாவும் அப்படி போட்டி போட்டு நடித்துள்ளனர், ஷ்யாம் மாஸ்டரின் பின்னணி இசை எழுந்து அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு வந்ததைச் சொல்கிறது.

படத்தின் இயக்கம் மோகன், பப்பேட்டாவின் casanova ஒருவன் மீது இரு பெண்கள் காதல் கொள்ளும் கதையை அற்புதமாக இயக்கியிருக்கிறார், இவர் இயக்கிய ஆலோலம் என்ற திரைப்படமும் மிக நன்றாக இருக்கும்.

படம் முழுக்க மூணார் மற்றும் எர்ணாகுளத்தில்  படமாக்கப்பட்டுள்ளது, 

படத்தின் ஒளிப்பதிவு U.ராஜகோபால், 

YouTube ல் சப்டைட்டில் இல்லாத படம் கிடைக்கிறது,

#சுகுமாரன்,#சுபா,#P_பத்மராஜன்,#மோகன்,#ஷ்யாம்_மாஸ்டர், #casanova

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)