அமீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துபாயில் கடற்கரை சுத்தம் |கடற்கரை மணல் ஓவியம்

துபாயில் எப்படி சுத்தம் பேணுகிறார்கள்? நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எப்படி சுற்றுலாவை வளர்க்க பிரயத்தனப்படுகிறார்கள் என்பதற்கு சிறு உதாரணம் இது, 

ஜுமேய்ரா பீச் மணல் பகுதி இது ,அதிக ஆளரவம் இருக்காது ,நான் துபாயில்  வேலை செய்கையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சென்று மணிக்கணக்கில் ஆழமில்லா கடல் பகுதியில் மிதந்து கொண்டிருப்பேன், 

இங்குள்ள மணலில் குப்பை அள்ளும் எந்திரம்( beach raking machine )சுத்தம் செய்து செல்கையில் துபாயின் iconic landmark ஆன புர்ஜ் கலிஃபா மற்றும்  கடல் வளங்களை இப்படி ரப்பர் ஸ்டாம்ப் போல கடற்கரை மணலில் சில கிலோ மீட்டருக்கு அச்சடித்து விட்டு செல்கிறது,கடற்கரை மணலில் சிகரெட் துண்டு, கண்ணாடி துண்டு,சிப்பிகள், தலைமுடி, குளிர்பான மூடிகள் ,சாக்லேட் காகிதம்  என ஒன்றும் தட்டுப்படாது,ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

PS:இங்கு மெரினாவில் சிறுவனாக இருக்கையில் வெண்மையான பொடிமணல் நிறைய இருக்கும், அதில் நிறைய விளையாடியுள்ளேன்,  இப்போது மணல் வெளி முழுக்க பெருமணலாக உள்ளது,

அதுவும் அத்தனை அழுக்காக உள்ளது , காந்தி சிலை அருகே உள்ள மணல்வெளி இன்னும் மோசம்,

 பலகாலமாக அங்கு சிறுநீர் கழித்து நாசம் செய்துள்ளனர், இங்கும் மணலில் குப்பை அள்ளும் எந்திரம் உள்ளது,ஆனால் மக்கள் கூட்டம் போடும் குப்பை கட்டுக்கடங்காமல் உள்ளதால், எத்தனை முறை அந்த எந்திரம் சென்று வந்தாலும் குப்பைகள் குறைவதில்லை, 

மக்கள் ஒரு சாக்லேட் உறை ஆனாலும் குப்பை தொட்டியில் தான் இடுவேன் என உறுதி பூண்டால் தான் மெரினாவில் சுத்தம் என்பது நிகழும்.

http://www.worldsweeper.com/Industry/CherringtonDubai5.16.html

#துபாய்,#ஜுமேய்ரா_கடற்கரை,#மணல்_ஓவியம்

அமீரகத்தின் கழிவு நீர் மேலாண்மையும் இந்திய நகரங்களில் கழிவு நீர் பாதை அடைப்பது ஏன்?

அமீரகத்தில் வாழும் அஷ்ரஃப் தாமரசேரி என்ற மகாத்மா

அஷ்ரஃப் தாமரசேரி அவர்கள் அற்புதமான மனிதர் , கல்ஃப் செல்லும் ஒவ்வொருவரும் தன் மொபைலில் பதிந்து  வைத்துக்கொள்ள வேண்டிய எண் இவருடையது,நானும் அமீரகத்தில் இருக்கையில் இவரது எண்ணை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள என சேமித்திருந்தேன் ,நடிகை ஸ்ரீதேவி பூத உடலையும் இவரிடம் தான் நேரிடையாக மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டி ஒப்படைத்தனர்,காரணம் அமீரகத்தில் வந்து இறந்த  ஆயிரக்கணக்கானோரின் இறுதி சவமரியாதைகள்  சொந்த நாட்டில் நடக்க பின் நின்று உழைத்தவர், அமீரகத்தில் ஏழை பாவங்களின் இறுதி சவ மரியாதை அவர்களது சொந்த நாட்டில் நிகழ்வதற்கு காரணகர்த்தா, எந்த கைமாறும் எதிர்பாராதவர்,

கதாமா மலையாள திரைப்படத்தில் நடிகர் சீனிவாசன் அஷ்ரஃப் தாமரசேரி போன்ற தயாள குணம் கொண்ட PRO கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

அஷ்ரஃப் தாமரசேரி அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன்  நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை வழங்குவதற்கு பிரார்த்திக்கிறேன் .

அமீரகத்தில் இருப்பவர்கள் இவரின் பக்கத்தை follow செய்து தொடர்பில் இருங்கள்,அமீரகத்தில் சொந்த சகோதரன் கைவிட்டாலும் கூட அஷ்ரஃப் கைவிடமாட்டார்.

அமீரகம் | UAE | ஃகாஃப் மரம் | Ghaf tree | வன்னி மரம் | அமீரகத்தின் தேசிய மரம்


Ghaf Trees இவை பாலைவனத்தில் சுயம்புவாக வளரும் மரங்கள்,இதன் அறிவியல் பெயர் Prosopis Cyneraria மணல் புயல் ஏற்படுகையில் ஒரு சல்லடை போல மணல் துகள்களை தன் நெருக்கமான இலைகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன, மணல் புயலின் போது மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை மணலால் மூடுவதையும் இம்மரங்கள் தடுக்கின்றது, 

தொலைவில் இருந்து பார்த்தால் சடை சடையாக தொங்கும் இலைகள், நெருங்கிச் சென்று பார்க்க நம் புளிய மரத்தின் இலைகள் , தொட்டாச் சிணுங்கி இலைகள் போன்ற இலைகளைக் கொண்டுள்ளது, 

இது அமீரகத்தின் தேசிய மரமாகும், பனைமரம், வேப்ப மரம் , உரிஞ்சும் நீரை விட 350 மடங்கு குறைவாக நீர் உரிஞ்சுமாம், இது மணலில் வேர் பிடித்து ஆழமாகச் சென்று 50 மீட்டர்  விட்டம் வரை வளரும், அமீரகத்தின் பெரிய Ghaf மரம் ஷார்ஜாவில் வனவிலங்கியல் பூங்காவில் உள்ளது.

இதன் இலைகள் அத்தனை லேசில் உதிர்வதில்லை, இந்த மரம் துபாயின் ஷேக் ஸாயேத் ரோட்டின் அருகே ஸத்வா பகுதியில் இருக்கும் அல் கஸான் (Al Khazzan ) பூங்காவில் உள்ளது, வயது சுமார் 100 வருடங்கள், 

இவற்றில் உங்கள், காதலி பெயர் , பரீட்சை எண் எழுதி  சேதப்படுத்தினால் 1000 திர்காம் வரை அபராதம், இவ்வகை புராதான மரத்தை கிளையை ஒடித்தாலோ மரத்தையே வெட்டினாலோ 50000 திர்காம் அபராதம் மற்றும் சிறைவாசம், 

நாம் வீடு கட்ட உள்ள காலி இடத்தில் இவ்வகை Ghaf tree இருந்தால் முறையாக அதை படம் வரைந்து அனுமதி வாங்கி அரசு சொல்லும் இடத்தில் மாற்றி நட வேண்டி வரும்.படத்தில் உள்ள மரத்திற்கு லைசன்ஸ் எண் உள்ளதைப் பாருங்கள்.

இம்மரத்தின் குளிர்ச்சியில் அப்படியே உறங்கிப் போகலாம், நமக்கு எப்படி வேப்பமரக் காற்றோ  அப்படி அரபிகளுக்கு Ghaf மரம் , இதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்கா.

இதன் பட்டையில் இருந்து கோடைகாலத் துவக்கமான மே ஜூன் மாதங்களில் பிசின் வடியும், அதைக் கொண்டு தொழுநோய்க்கு மருந்து தயாரிக்கின்றனர், மரத்தின் பட்டை, இலை என எல்லாமே வயிற்றுப்போக்கு, வாதம் , கபம் , சளி , இருமல்,ஆஸ்துமா, தோல் வியாதிகள், தசைப் பிடிப்பு போன்ற வியாதிகளுக்கு நிவாரணி, இதன் இலையைப் புகை போட்டு கண் சம்மந்தமான வியாதிகளை பண்டைய அரபி மருத்துவத்தில் குணப்படுத்தி வந்துள்ளனர்.

அடுத்த முறை இந்த மரங்களை நீங்கள் அமீரக மண்ணில் எங்கேனும் பாரத்தால் நின்று அதனடியில் இளைப்பாறிச் செல்லுங்கள், இதன் அருமை பெருமைகளை நண்பர்களுக்குச் சொல்லுங்கள்.

Ghaf Trees #

இரண்டு வயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்!!!

சென்ற இருவாரங்களாக,ஏன்?இப்போதும் கூட முழுக்க மிகுந்த பணிச்சுமை, இரவு வீடு திரும்பவே நடுநிசி 2-00 ஆகிறது,மறுநாள் 9-00 மணிக்கு மீண்டும் வேலை ஆரம்பிக்கும். இப்போதும் அப்படியே, ஒரு குழுவாக இப்படி இயங்குவதால் அயற்சிக்கே இடமில்லை.நான் மட்டும் இப்படி உழைக்கிறேனே என்ற பேச்சுக்கே இடமில்லை, முதலாளி கூட அருகே ஒரு கணிணியில் வேலைசெய்து கொண்டிருப்பார். தனக்கு காஃபி ஃபிக்ஸ் செய்யும் போது நமக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதங்கள்,இங்கே அமீரகத்தில் நிகழ்கின்றன.

து போல எல்லாம் உழைத்து பல வருடங்கள் ஆகின்றன,சென்னையில் தான் இப்படி அதிகம் 24மணிநேரம் தொடர்ந்து  வேலை செய்தது,சுமார் 6 வருடங்கள் முன்பு சென்னை ஓஎம்ஆர்-ஐடி காரிடாரில் ஐடி பார்க்குகள் அதிகம் வரத்துவங்கியபோது, எங்கள் ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சுமார் 20 ஐடி பார்க்குகள்,கால் செண்டர்கள் டிசைன் செய்து கொண்டிருந்தோம், அதில் சான்சா,[xanza] சத்யம், டிசிஎஸ்,சதர்லேண்ட் என அடக்கம். , எங்களுடையது பேஸ்மெண்ட் ஆஃபீஸ் ஆகையால் வெளியே கலவரமே நடந்தாலும் தெரியாது, மரம் செடி,கொடியே இருக்காது. சதா ஏசியில் இருந்து உடம்பே உஷ்ணமாயிருக்கும், நேரத்துக்கு சாப்பிட முடியாததால், பசியெடுக்காது, பசித்தபோது சாப்பிடமுடியாதபடி பணிச்சுமை அழுத்தும்.

ண்கள் செவசெவ என எரிந்தபடி இருக்கும். விட்டில் மதியம் சென்று தூங்கும் போது யாராவது ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும். குழந்தையை கொஞ்சக்கூட நேரமிருக்காது.விடிகாலையில் அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டியை எடுக்கும் போது தான், முந்தைய நாள் அடித்த வெயிலுக்கு டயரே பஞ்சர் ஆயிருப்பது தெரியும். இதையெல்லாம் நிறைய அனுபவித்திருக்கிறேன். குறையே சொன்னதில்லை.

2006 டிசம்பரில் இங்கே ஒரு துடிப்பில்,கட்டாயத்தில் அமீரகம் வந்தவுடன், மனம் கிடந்து துள்ளியது, வேலை பிடித்திருந்தது, ஆனால் 10 பேர் செய்யும் வேலையை 100 பேர் செய்தனர். செம சிரிப்பாய் இருந்தது.என்ன தான் உலகின் உயரமான கட்டிடத்தில் வேலை என்றாலும் சம்பளம் குறைவாதலால், மனம் லயிக்கவில்லை,நல்ல பெயர் எடுத்தும்,வெறும் ஒரு வருடத்தில் ,மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து, வேலை மாறிவிட்டேன்.

னால் அந்த செப்டம்பர் 15, 2008 இப்படி வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைக்கவே இல்லை. வீடு வாங்கினேன். மறுமாதமே வேலை போனது, மறுவாரமே இறைவன் சித்தத்தில் வேறு வேலை கிடைத்தது. இதோ இப்போது உள்ள ஆஃபீஸிலும் 80சதம் ஆட்குறைப்பு நடந்தேறிவிட்டது. ப்ராஜக்டுகளே சுத்தமாக இல்லை. மனம் சென்னையில் செய்தது போன்ற அயராத உழைப்பை  எப்பொதும் நிகழ்த்த துடிக்கிறது.  ஆகவே சலிக்காது காம்பெடிஷன் ப்ராஜக்டுகள் எடுத்து செய்கிறோம்,வென்றால் வேலை உண்டு, இல்லையேல் இல்லை. தொடர்ந்து வேலை இருக்குமா?பார்ப்போம்.

மீரகத்தில், செலவு செய்யும் ஒவ்வொரு திர்காமுமே தகும். சில ஆஃபீஸ்களில் வெள்ளி,சனி இரு வாரநாட்கள் விடுமுறை. வாரத்துக்கு 45 மணி நேரம் மட்டுமே வேலை. குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும்,தரமான சுற்றுப்புறம், தரமான கல்வி, தரமான வாழ்க்கைத்தரம் எல்லோருக்கும் நிச்சயம்.ஆனால் கடந்த இரு வருடங்களாக வேலை நிரந்தரமின்மை என்னும் அச்சுறுத்தல் மனதுக்குள் புகுந்து கொண்டு மணிஅடிக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும். இதை இன்னும் இரு வருடம் கழித்து நினைத்துப்பார்க்கையில் சிரிக்கவும் நேரிடலாம்.அல்லது நினைவுக்கே வராமலும் போகலாம்.

ன் கண் முன்னாலேயே என் பல நண்பர்கள் வேலை இழந்து தாயகம் சென்றனர். அதில் வடலூரான் கலையரனும் அடக்கம்.  எனக்கு கையறு நிலை. யாருக்கும் உதவக்கூட முடியவில்லை.ஊரில் உள்ள நண்பர்களுக்கும் சிவி மூவ் செய்து உதவமுடியாத நிலை. எங்காவது வேலைக்கு ஆள் உள்ளே எடுத்தால் தானே?

ப்போது உள்ள நிலையில் பெரும்பானோர் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள், ஆனால் வேலையை விட்டு அனுப்பாதே,என்னால்  இந்த சூழலில் வேலைதேடி அலைய முடியாது என்கின்றனர். என்னுடன் வெறும் பாஸ்போர்ட் காப்பி கொடுத்து 250,000 திர்காம்  வரை [ரூ31லட்சம்] வங்கிக்கடன் வாங்கிய ஏனைய பேர் இன்னும், ஒரு தவணை கூட கட்டாமல் மிகுந்த மனோ தைரியத்துடன் இருக்கின்றனர். வங்கிகள் போன்செய்து கேட்டால் ஜென்டில் மேன் ஸ்டைலில் பணம் செல்வாயிடுச்சு , வேலை கிடைத்தால் கொடுக்கிறேன்!!! என்கின்றனர். எப்பா என்னா தைரியம்? என்றே நினைக்க தோன்றுகிறது.ஏகம் பேர் 2 வருடம் முன்பே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர்.

ன் போன்ற எப்படியாவது தவணையை  ஒழுங்காகக்கட்டும் ஆட்களுக்கு வங்கிகள் மேலும் அபராதமும், வட்டிக்கு, வட்டியும். போட்டுவருகின்றன, தவணை தொகையை குறைக்கமுடியாது, தவணைகாலத்தை நீட்டிக்கமுடியாது,நோ லோன் ரீஸ்ட்ரக்சர் ஃபார் யுவர் கைண்ட் ஆஃப்  ஸ்கீம் என்னும் தேய்ந்து போன பதிலையும் திரும்ப திரும்ப சொல்லிவருகின்றனர். ஐயா வங்கிகளே!!! உங்களை வட்டியை குறைக்க சொல்லி பிச்சை கேட்கவில்லை, உங்கள் தேய்ந்துபோன தட்டையான வங்கி விதிகளை மாற்றுங்கள். அப்போது தான் சில விடாக்கண்டர்களிடம் எதாவதாவது பெயரும். ஹி ஹி சின்ன குமுறல். சொந்தக்கதை யூ சீ.இன்னும் 12 மாதம் தவணை பாக்கி உள்ளது.அது தான் கீழே கவுண்ட்ட் டவுன் விட்ஜெட் எல்லாம்  வைத்து ஓயாமல் தேய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னை கார்பொரேஷன் தண்ணீர் குழாய் போல 2மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் வருகிறது, அதுவும் போன மாதத்தின் போன மாத பாக்கி. எப்படியோ இழுத்து பிடித்து ஓட்டும் எனக்கு, ஊருக்கு போக வேண்டும் என்றாலே பதட்டம் தொற்றிக்கொள்கிறது, சில நண்பர்கள் என் நிலைமை புரியாமல், சோனி நோட்புக். சாம்சங் ஆண்ட்ராய்ட் செல்போன், ஹார்ட்டிஸ்க், ஐபாட், ஏன்? ஐபோன்.கூல்வாட்டர் பாடிஸ்பெரே,14 மெகா பிக்ஸல் டிஜிட்டல்  கேமரா, எல் சிடி டிவி என பெரிய லிஸ்டையே  மெயில் அனுப்பி வாங்கி வரச்சொல்லுவதால் [பணம் அங்கே வந்ததும் தருவார்களாம்] என் பயணத்தை அடுத்த வருடம் மே மாதத்துக்கு ஒத்தி வைத்து விட்டேன்.

தனாலேயே என் மகளுக்கோ மனைவிக்கோ கூட எதுவுமே வாங்கி செல்வதில்லை. அங்கேயே எல்லாம் கிடைப்பதால் கூட்டிப்போய் வாங்கி கொடுத்து விடுகிறேன். சில சென்னை நண்பர்கள், ரிசெஷனா? அப்படின்னா? ஈரோடு பக்கமோ?தூத்துக்குடி பக்கமோ என்று எகத்தாளம் செய்கின்றனர்.

ல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு  வலிய வந்து கடன் கொடுக்க தேடிவந்து கேன்வாஸ் செய்த பேங்க் சேட்டனை வெறியோடு தேடினேன்.அவருக்கும் வேலை போய்விட்டதாம். அவர் இப்போது இன்சூரன்ஸ் ஏஜெண்டாம். இன்சுயூரென்ஸ் எடுங்கள், உங்க வீட்டுக்கு நல்லது என்றார். நான் உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அதுவும் உங்கள் வீட்டுக்கு நல்லது தான், என பல்லை கடித்தேன். வெறியோடு போன் செய்தால் இன்சூரன்ஸா போடச் சொல்ற? இருடி மகனே என்று நினைத்துக்கொண்டேன். அவர், பேடிக்கண்டா,பேங்க் ஒண்ணும் ஆக்‌ஷன் எடுக்கப்பற்றாது என்றார். அடங்கொய்யால, நேர்மையா  கட்றவனையும் கெடுக்க நீ ஒருத்தன் போதும்!!!!  என்று போனை கட்செய்தேன்.

வார இறுதிநாட்களில் எங்காவது மாலுக்கு விண்டோ ஷாப்பிங் செய்யலாம் என்று பார்த்தால் கண்ணில்படுவதெல்லாம்,இரண்டாம், மூன்றாம் தரமான சீன கம்பெனிகளின் எலக்ட்ரானிக் பொருட்கள். பிரபல பிராண்டுகளின் புதிய வரவுகளை ஷோகேஸில் அடுக்கி வைக்க கடைக்காரர்களிடமே காசு இல்லை போலும் , எல்லா இடங்களிலும் ஷாப் க்ளோசிங் சேல் என்று போட்டு காலிபண்ற விலைக்கு ஷர்டு முதல் அந்துருண்டை வரை விற்கின்றனர் . ஏனைய பேர் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம். நிறைய மால்கள் சென்ற வருடம் இந்தியர்களை நீக்கிவிட்டு சம்பளம் குறைவென்று பிலிப்பினோக்களை பணிக்கு அமர்த்தியது, இப்போது அதுவும் போய், நேபாளிகளை கவுண்டர் சேல்சுக்கு அமர்த்தியுள்ளது.

தே கதைதான் ஹாஸ்பிடல்களிலும், பள்ளிகளிலும், ரிசெஷனால் பாதிக்கப்படாத துறையினரே இல்லை எனலாம். அத்தை எப்போ செத்துப்போவா? திண்னை எப்போடா காலியாகும்னு சொல்வதுபோல எப்போடா லோனை முடிப்போம் என்றிருக்கு, இதே போல யாராவது லோன் வாங்கி தவணை கட்டிக்கொண்டிருந்தால், அதுவும் அமீரகத்தில் இருந்தால்,தொடர்பு கொள்ளவும், சேர்ந்து கும்மிஅடிக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ரிசெஷன் ஒழிய  இறைவனை வேண்டிக்கொள்வோம், இனி வரும் காலத்தில் ஒருவனுக்கு எகனாமிக் பூமும் வேண்டாம், ரிசெஷனும் வேணாம்டா சாமி. யாரேனும் இப்போது கடன் வாங்குவதாக இருந்தால் நூறு முறை யோசித்து வாங்குங்கள். கடன் இருந்தால் கண்ணுக்கு தெரியாத பேய் உங்கள் தோள் மேல் உட்கார்ந்து தொல்லை கொடுப்பதை போன்றது.அனுபவஸ்தன் சொல்கிறேன்.

இனி யாராவது மாமனார், மச்சினர். பெரியப்பா, சித்தப்பா, என்னைப்பார்த்து காசை வேஸ்ட் பண்ணாதப்பா, நிலம் வாங்கு, நீச்சு வாங்குன்னு சொன்னா,கவுண்டமணி ஸ்டைலில் எவனாருந்தாலும் வெட்டுவேன்.எவனாருந்தாலும் வெட்டுவேன்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

====0000====

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)