மஞ்சாடிகுரு [മഞ്ചാടിക്കുരു ] [Manjadikuru ] [2012]


நேற்று மஞ்சாடிகுரு படம் பார்த்தேன்,மனமே லேசாகிவிட்டது,ஒரு பக்கம் பாரமுமாகிவிட்டது,ஆனந்த கண்ணீரும்,கனக்கும் தொண்டையுமாக நம்மை அசைத்துப்பார்க்கும் படம்,இன்று மறு முறைப்பார்த்தேன் ஒவ்வொரு முறை பார்க்கையிலும் விடுபட்ட பல சங்கதிகளை சொன்னது படம்,நிஜமான கலையை ஒருவர் தரிசிக்கவேண்டுமென்றால் காணவேண்டிய படம். எப்படித்தான் கைவந்ததோ? யாரிடம் கற்றாரோ? அஞ்சலி மேனன்,முதல் படத்திலேயே இத்தனை வீர்யமான படைப்பு, தன் ஒட்டு மொத்த கலை ஆசான்களுக்கெல்லாம் இந்த படைப்பின் மூலம் மரியாதை செய்துள்ளார் அஞ்சலி.

மஞ்சாடிகுரு என்பது நம்ம ஊரில் பிள்ளையார் கண் என்பார்களே அந்த மணிதான்,குருவாயூர் முதலான கேரள கோவில்களில்,நம் ஊரில் நாம் எப்படி உப்பு கொட்டி வழிபடுவோமோ!!!,அங்கே அவற்றைக் கொட்டி கைகளால் களைந்து வழிபடுவர்,அளவில் சிறிய மணிகளைக்கொண்டு இத்தனை வீர்யமான ஒரு படைப்பை தந்துள்ளார் அஞ்சலி, சிறு வயதில் பிள்ளையார் கண் கொண்டு விளையாடாத பிள்ளைகள் நம்மில் மிகவும் சொற்பமாகத் தான் இருப்பர், என்ன பொருத்தமாய்? குழந்தைகளால் முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த அபாரமான படைப்புக்கு மஞ்சாடிக்குரு என்று பெயரிட்டிருக்கிறார்!!! என வியக்கிறேன்.

இப்படம் போன வருடம் இதே ஜூனில் வெளியாகியிருக்கிறது,திரைப்பட விழாக்களில் மட்டுமே வரவேற்பு கிடைத்தால் போதும்!!!, வெகுஜன சிலாகிப்பு அறவே வேண்டாம் என்றோ?!! நினைத்து எந்த வணிக ரீதியான சமரசமும் செய்து கொள்ளவில்லை அஞ்சலி,படத்தின் மக்கள் தொடர்புக்கும் ப்ரொமோஷனுக்கும் கூட பணம் செலவழிக்கவில்லை போலும்,படம் எல்லா திரைப்பட விழாக்களிலும் வெகுவாக சிலாகிக்கப்பட்டாலும் விருதுகளை வென்றாலும்,நிறைய ரசிகர்களின் பார்வைக்கு சென்று சேராமல் போய்விட்டது,சொல்லி வைத்தார் போல விமர்சகர்கள் அதிகம் பேர் இதைப்பற்றி பேசாமல் மவுனம் சாதித்து விட்டனரோ? என்று கூடத் தோன்றியது.

மினிமலிசத்தை சினிமாவில் எப்படி புகுத்தியிருக்கிறார் பாருங்கள் அஞ்சலி?, முத்தச்சனாக தோன்றும் திலகன் படத்தின் துவக்கத்திலேயே இறந்து விடுகிறார், படத்தில் அவருக்கு வசனமே கிடையாது, தேவைப்படுகிற இடத்தில் அவரின் ட்ரேட்மார்க் சிரிப்பு ஷாட்டுகள் தான் வைத்திருக்கிறார், கதா பாத்திரங்கள் உரையாடுகையில் அமானுஷ்யமாக அருகே அமர்ந்து அதை ஆதூரமாக உற்று நோக்குகிறார் முத்தச்சன், என்ன ஒரு செய்நேர்த்தி?!!!,

படத்தை முன்னெடுத்துச் செல்லும் குழந்தைகளான வேலைக்கார சிறுமி ரோஜா, அப்படி ஒரு சக்திவாய்ந்த மையப்படைப்பு, துபாயில் வசிக்கும் முத்தச்சனின் இரண்டாம் மகளின் மகன் விக்கி, முத்தச்சனிடம் வழக்கு தொடுத்து கௌஸ்துபம் என்னும் பாரம்பரிய நாயர் வீட்டின் பாத்யதை நிலத்திலேயே ஒண்டுக்குடித்தனத்தில் இருக்கும் அந்த  இளைய மகன் ரகுவின் குழந்தைகளான கண்ணன் மற்றும் அவன் குட்டித் தங்கை என மிக அற்புதமான காஸ்டிங். 1980ஆம் வருடம் நடக்கும் கதையின் ஒரிஜினாலிட்டி, நேட்டிவிட்டி அனைத்தும் கவனமாக உயிரோட்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இசை அப்படி ஒரு அற்புதமான மேஜிக்கையும் காட்சிகளுடன் இறுகிப்பிணைந்து பார்வையாளனை கட்டிப்போடும் ஜாலத்தையும் செய்கிறது, அஞ்சலி மேனன் புனே ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர் , மேற்படிப்பை லண்டன் ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்டிலும் தொடர்ந்திருக்கிறார், அதன் பிண்ணணியில் ஒரு உலக சினிமா இயக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்ற கலை இவருக்குத் தானே கைவந்திருக்கிறது, கேரளா கஃபே படத்தில் நித்யா மேனன் தோன்றும் ய ஜர்னி என்னும் எபிசோடை அருமையாக இயக்கி இருந்தார், உஸ்தாத் ஹோட்டல் படத்தில் திரைக்கதை எழுதி தேசிய விருதும் வென்றார், இப்படத்தில் பிண்ணணி இசை சேர்ப்புக்கு மட்டும் Francois Gamaury என்னும் ஜெர்மானிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளார், ரிசல்டை படத்தில் பாருங்கள்,

படத்தின் மையப் பாத்திரமான சிவகாசியில் இருந்து வந்து கௌஸ்துபம் என்னும் தரவாடு வீட்டில் உழைத்துக்கொட்டும் வேலைகாரச் சிறுமி ரோஜா, அந்த வைஜயந்தி என்னும் சிறுமி என்ன ஒரு தத்ரூபமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கிறாள், சத்யஜித் ரேயின் துர்காவின் சிரிப்பை தன்னுள்ளே கொண்ட பெண் அவள், அற்புதச் சிறுமி. குழந்தைகளின் பார்வையில் வெளியுலகத்தின் கல்மிஷத்தை சொன்ன படத்தில் தோன்றிய குழந்தைகள் தேவதைகள்,

அப்படி ஒரு சிறுவர் உலகம்,நாம் தொலைத்த நம் சிறுவயது வாழ்க்கையை அசைபோட்டுப்பார்க்க வைக்கும்,எந்த ஒரு குடும்பத்திலும் நிகழும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் சட்டென ஒட்டிக்கொண்டு சுற்றித்திரியும் அந்த மழலைகளை யாரேனும் உற்று நோக்கியதுண்டா?!!! அதை உள்ளூர உள்வாங்கியதன் வெளிப்பாடே இப்படம், இதைப் பார்த்தால் ஒருவருக்கு தன் கடந்த கால நினைவுகள் மேலெழும்பி நெஞ்சைத் தாலாட்டும்.

படத்தின் ஒளிப்பதிவு ஸ்விட்ஸர்லாந்தை சேர்ந்த Pietro Zuercher, படத்தில் முத்தச்சனுக்கு நடக்கும் ஈமைச்சடங்குகள் மொத்தம் 16 நாட்கள் நோஸ்டால்ஜியாவாகக் காட்டப்படும், ஒரு நாள் மட்டும் நிகழ்காலத்தில் காட்டப்படும், ஒளி ஓவியம் என்னும் சொல்லுக்கேற்ப செதுக்கப்பட்ட ஷாட்டுகள், பகல்,இரவு,மின்சாரம் இருக்கும் போது,மின்சாரம் போன நிலையில் காடா விளக்கு ஒளியில்,நிலவு ஒளியில் என அப்படி ஒரு செய்நேர்த்தி கொண்ட ஒளிப்பதிவு.தரவாடு வீட்டின் உள்புறங்களை நன்கு பயன்படுத்தி கலாச்சார பிரதிபலிப்பை ஓவியமாக்கியுள்ளார்.

முத்தச்சனின் மனைவியாக கவியூர் பொன்னம்மா,கூடவே வசிக்கும் கடன் பட்ட சித்தப்பா ,அவரின் இளம் வயது மகன்,முத்தச்சனின் டெல்லியில் ஐஏஎஸ் ஆஃபீசருக்கு வாக்கப்பட்ட மூத்த மகள்,அவளின் மாப்பிள்ளை முறுக்கு கணவர் ஜகதி ஸ்ரீகுமார்,இழவு வீட்டில் ஆம்லெட் கேட்கும் அவர்களின் செல்ல மகள், 10 வருடம் முன்பு நக்ஸ்லைட்டாக மாறி ஓடிப்போய் சன்யாசியாய் வாழும் முரளி,

 துபாயில் மெக்கானிக்குக்கு வாக்கப்பட்ட  இரண்டாம் மகள் ஜம்பப் பேய்#1 ஊர்வசி, அவளின் முந்தானையை சுற்றித்திரியும் அலப்பறைக் கணவன், வறுமையில் உழலும் இரண்டாம் மகன் ரகுமான்கான், அவரின் மனைவி, இரு குழந்தைகள், அமெரிக்கா காரனுக்கு [மாதவன்] வாக்கப்பட்டு அமெரிக்காவாசியாக மாறி, ஓவர் சவுண்டு விட்டு தாய்நாட்டை வெறுத்து தூற்றும் கடைசி மகள் சிந்து மேனன்இவள் ஜம்பப் பேய்#2, வேலைக்காரி ரோஜாவின் பேராசை கொண்ட மாமன், என்று செலுலாய்டில் நிஜமாய் நம்முடன் வாழும் பாத்திரங்கள். படத்தை அவசியம் பாருங்கள் நண்பர்களே!!!.

மினிமலிசத்துக்கு இன்னொரு உதாரணமாக பாலகன் விக்கி வளர்ந்த இளைஞனாகத் தோன்றும் ஒரே ஒரு காட்சி, வளர்ந்த பெரிய பெண் ரோஜாவாக பத்மப்ப்ரியாவின் சிறப்பு தோற்றத்தையும் சொல்லலாம், திரைப்படக்கல்லூரி மாணவர்கள்  காஸ்டிங்கை எப்படி வெட்டி நறுக்கவேண்டும் என கற்றுக்கொள்ள நல்ல உத்தி இது. ப்ரிதிவிராஜின் குரலில் இருக்கும் வசீகரமும் கம்பீரமும் எனக்கு மிகவும் பிடிக்கும்,தலப்பாவு படத்தைப் போன்றே அவரின் நேரேஷன் இப்படத்தையும் தாங்கிப்பிடித்து பயணிக்கிறது, அவரை கடைசி காட்சி வரை காட்டாமலேயே ஜீவனான குரலை மட்டும் வைத்துகொண்டு அசரடித்த பாங்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.

சமீபத்தில் நான் பார்த்த மூன்று பெண் இயக்குனரின் படங்களான மிட்நைட்ஸ் சில்ட்ரன்[தீபா மேத்தா],கொய்னார் பக்‌ஷோ[Goynar Baksho][அபர்ணா சென்], பின்னே மஞ்சாடிகுரு மூன்றும் ஆகச்சிறந்த படைப்புகள்,வெவ்வேறு காலகட்டத்தை,வாழ்வியலை,கலாச்சாரத்தை பேசும் படங்கள், மூன்றும் கலையை போற்றுபவை என்பது தான்  ஒரே ஒற்றுமை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது படத்தின் டிவிடி சப்டைட்டிலுடன் வெளியாகி உள்ளது விலை ரூ 125., முன்பதிவு செய்ய  விபரம் இங்கே:-

பேக்ஸ்டர் [ Baxter] [1989][15+][ஃப்ரான்ஸ்]


ன்று பேக்ஸ்டர் என்னும் ஃப்ரென்ச்சு டெரர் க்ளாஸிக் படம் பார்த்தேன், ஒண்ணேகால் மணி நேரம் விருட்டென பறக்கிறது,அவ்வளவு நேர்த்தி, பேக்ஸ்டர்  என்னு புல் டெர்ரியர் வகை பொசசிவ் நாயின் கதை தான் படம், தொய்வே இல்லாத திரைக்கதை அடுத்து என்ன நடக்கும்? என ஆவலைக்கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைக்கிறது, முதலில் புல் டெர்ரியர் வகை நாயைப் பற்றி பார்ப்போம், 

புல் டெர்ரியர் வகை நாய்கள் வேட்டைக்கென்றே வளர்க்கப்படுபவை,இதன் முகம் மாட்டின் முகம் போல முட்டையாக இருக்கும், கண்கள் முக்கோணமாக இருக்கும்,அநேகம் வெந்நிறமாக, கருப்பு திட்டுகள் கலந்தும்,கலப்பினத்தின் மூலம் இப்போது ப்ரவுன் நிறத்திலும் புல் டெர்ரியர்கள் உள்ளன,மிகவும் உயர்ந்த ரக நாய்கள் இவை, இதை வளர்க்கும் எஜமானர்கள் தனக்கு கட்டளையிட தகுதி இருந்தால் மட்டுமே ஒட்டுதலுடன் இருக்குமாம், இதற்கு குழந்தைகளை அதிகம் பிடிக்காது, எலிகள் அருகே ஓடினால் காலி, பூனை, குருவி,புறா என எதையுமே விட்டுவைக்காது,

வயதானவர்கள் வளர்க்க உசிதமான ரகம் அல்ல,இளம் ஜோடிகளிடம் இவை பிரியமாக இருக்குமாம்,மிகவும் பொசசிவ் குணம் கொண்டதால் இவை வசிக்கும் வீடுகளில் இன்னொரு ஆண் புல் டெரியரையோ அல்லது வேறு ரக நாய்களையோ வளர்ப்பது கூடாது என்கின்றனர்,சரி!!! படத்துக்குள் போவோம், இந்த புல் டெரியர் நாயின் பொதுவான கேரக்டர் ஸ்கெட்சை அப்படியே உள்வாங்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஃப்ரென்சு சினிமா இயக்குனர்’’Jérôme Boivin’’.இப்படம் 1989ல் வெளிவந்ததாம்,

டாரெண்டில் எங்கும் கிடைக்காத நிலையில் யூட்யூபில் முழுப்படமும் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்க ஆவலோடு பார்த்தேன்,மிக அருமையான படம்.நாய் பற்றிய கதை என்று குடும்பத்துடன் பார்க்க உகந்ததல்ல,இதே பெயரில் ஒரு காமெடி ஆங்கில படமும் உள்ளதால் நண்பர்கள் கவனமாக தேடிப்பார்க்கவும்,ஒரு நல்ல படம் இருந்தால் சனியன் அதே பேரில் இன்னொரு மொக்கைப்படங்கள் இருப்பது இயற்கை,ஏற்கனவே I AM [2010]என்றொரு அற்புதமான காம்போசிட் லிங்குஸ்டிக் படம் ஓநிர் இயக்கியது, அதை இணையத்தில் தேடினால், கண்ட கருமாந்திரங்கள் தான் கிடைக்கும், சப்டைட்டிலுக்கும் அதே கதிதான், இதே பேரில் சுமார் 5 படங்கள் வந்திருக்கிறது. இனி படம் எடுப்பவர்கள் இதையும் யோசிக்க வேண்டும் போல!!!

படத்தின் முதல் பத்து வினாடிக்குள்ளேயே பேக்ஸ்டரின் வாய்ஸ் ஓவரில் கதை துவங்கிவிடுகிறது, ஃப்ரான்ஸில் ஒரு குடியிருப்புப் பகுதியில் தன் 70களில் இருக்கும் மார்கரெட்டுக்கு பிறந்த நாள் பரிசாக தன் மகள் மற்றும் மாப்பிள்ளை மூலம் பேக்ஸ்டர்  பரிசாகத் தரப்படுகிறது,

மார்கரெட் கிழவி மிகுந்த சுயநலமி என பேக்ஸ்டர் கண்டுபிடித்து விடுகிறது, அவளின் உடல் நறுமணம் பேக்ஸ்டருக்கு பிடிப்பதில்லை, பேக்ஸ்டர் அரைமனதோடு மார்கரெட்டுடன் பழகுகிறது, வேறு வழியே இல்லை, பேக்ஸ்டர் இயற்கையிலேயே காம குரோதம் நிறைந்தவன், கிழவியின் உள் ஆடையை முகர்ந்து பார்த்து தன்னைத் தேற்றிக்கொள்கிறது, மார்கரெட் எப்போதும் நாய் முன்பாக ஆடை மாற்றுவதோ குளிப்பதோ கிடையாது ஆதலாலும் மிகவும் கோபத்தில் இருக்கிறது பேக்ஸ்டர், 

அது ஓடிச்சென்று மார்கரெட்டை நக்கினால் மார்கரெட் அருவருப்படைவதால் மேலும் கோபம் வருகிறது,ஒரு நாள் கிழவியை நக்க முயல்,அதை அவள் செருப்பால் அடிக்கிறாள்,அவள் பேக்ஸ்டரின் மேல் தூக்கிபோட்ட செருப்பை அது கவ்விக்கொண்டு வந்து தருகிறது,முதலில் பேக்ஸ்டரை பிடிக்காமல் இருந்த மார்கரெட்,அதன் எஜமானனைக் கவருகிற அந்த நடிப்பில் ஏமாந்து போகிறாள்,தனியாக இருக்கும் தனக்கு பேக்ஸ்டர் தான் இனி ஆதூர துணை என்று அதை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறாள்,தான் தூங்கும் போது பேக்ஸ்டரும் தூங்கவேண்டும் என்கிறாள்,

சாப்பிடும் போதும், அப்படியே, வெளியே கூட்டிப்போவதோ, தோட்டத்தில் நடமாட விடுவதோ மிகவும் அரிது,பேக்ஸ்டருக்கு பார்வை, செவித்திறன், முகரும் திறன் எல்லாமே உச்சத்தில், அது மார்கரெட்டிடமிருந்து இயற்கையாக தப்ப தருணம் பார்க்கிறது, இப்போது எதிர்வீட்டில் இளம் ஜோடிகள் குடி வருகின்றனர்,அந்த ஜோடிகள் தன் பெட்ரூமில் விளக்கை அணைத்து விட்டு அடிக்கும் கூத்தைக் கண்டும் கேட்டும் அக மகிழ்ந்திருக்கிறது பேக்ஸ்டர், எப்படியாவது அவர்களையே எஜமானராக அடைய ஆசை கொள்கிறது,

அன்றும் அப்படியே ஓசி காஜு அடித்து பேக்ஸ்டர் நைட் ஷோ பார்க்கையில், கிழவி பேக்ஸ்டரை கீழே தூங்க அழைக்க,பேக்ஸ்டர் வரவில்லை,கிழவி தன் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே? என்று மனதுக்குள் கோபம் கொண்டாலும்,கிழவி கீழே விழும்படி போக்கு காட்டுகிறது ,கிழவி கீழே விழும் தருவாயில் அதிக சேதாரம் ஆகா வண்ணம் கிழவின் கவுனை பிடித்து இழுத்து காப்பாற்றியும் விடுகிறது,இப்போது பேக்ஸ்டருக்கு செம லவ் டார்ச்சர் கிழவியிடமிருந்து, பேக்ஸ்டருக்கு தன் கிழவி எங்கே தன் கற்பை சூறையாடிவிடுவாளோ? என்ற பயமும் சேர்ந்து கொள்ள,இபோது கிழவியை விபத்தாக கொல்ல நேரம் பார்க்கிறது,

மார்கரேட்டுடன் அடிக்கடி ஒரு குடுகுடு கிழம் சோசியல் கிளப்பில் வந்து சீட்டு ஆடுகிறார்,அவள் தன் மனைவி இருந்த போதும் அவள் இறந்த பின்னரும் கூட மார்கரெட்டிடம் பைத்தியமாக இருக்கிறார்,அவரின் மகளுடன் வசிக்கும் அவர் எந்நேரமும் மார்கரெட்டை கவனம் எடுத்து நல்வார்த்தைகளாலே கழுவி குளிப்பாட்டுகிறார்,வழிகிறார்,இதனால் மார்கரெட்டுக்கு மிகவும் அவமானமாகவும், தொந்தரவாகவும் இருக்கிறது, தன்னிடம் அப்படி என்ன இருக்கிறது?, இக்கிழம் விடாமல் சுற்ற என்று கண்ணாடியில் அடிக்கடி சோதித்துக்கொள்கிறாள், தன்னம்பிக்கை கொள்கிறாள், எந்த 40 வயதுக்காரி தன்னை பார்த்தாலும் நிச்சயம் பொறாமை கொள்வாள் என்று இருமாந்திருக்கிறாள், 

பேக்ஸ்டருக்கு பொறுமை எல்லை மீறுகிறது,அன்று அப்படித்தான் தன் குளியல் அறைக்குள் பேக்ஸ்டரை கூட்டிச் சென்ற கிழவி,பேக்ஸ்டரின் ஆணுறுப்பை சைட் அடிக்கை,பேக்ஸ்டருக்கு எப்படி தப்பிப்போம்? என்னும் கவலை!!!கிழவி வெடுக்கென்று பேக்ஸ்டரை நீருக்குள் இழுக்க,பேக்ஸ்டர் விழுந்தடித்துக்கொண்டு மாடிக்கு ஓடி தப்பிக்கிறது,கிழவி அடிக்கடி பேக்ஸ்டர் மாடிக்கு போவதைத் தடுக்க,சிறு மரப்பலகைகள் கொண்டு அந்த ஸ்பைரல் வடிவ மாடிப்படியை மூடுகிறாள்,அதெல்லாம் பேக்ஸ்டருக்கு ஒரு பொருட்டா?ஒரே தவ்வு தவ்வி மாடிக்கு போய் விடுகிறது,பேக்ஸ்டருக்கு இனி அவகாசம் இல்லை,தன் ஆயுள் வெறும் 15 வருடம் தான்,தன் பொன்னான இளமைக்காலத்தை இந்த கிழவியுடன் கழிக்க விருப்பமின்றி இருக்கிறது.

அன்று கிழவி பேக்ஸ்டரை மாடியில் வந்து தேட முயல ,பேக்ஸ்டர் கிழவியின் மீது வலிக்காமல் பாய்கிறது, கிழவி படிகளில் உருண்டு உயிரை விடுகிறாள். கிழவியின் ஒருதலைக் காதலர் கிழவி இரண்டு நாளாக எங்கும் வராமல் இருக்க, வீட்டை சுற்றி சுற்றி வந்து வேவு பார்க்கிறார், பெல் அடிக்கிறார், கதவை தட்டுகிறார்,டெலிபோனும் செய்கிறார்,ம்ஹூம்,இப்போது வீட்டின் கண்ணாடிக்கதவை உடைக்கிறார்,தாழ்ப்பாளை நீக்கியது தான் தாமதம்,பேக்ஸ்டர் புயல் போல வெளியேறி எதிர் வீட்டு படுக்கை அறைக்குள் பிரவேசிக்கிறது,

அங்கே தன் புது எஜமானர்களை அவர்கள் புணர்ந்து கொண்டிருக்கையில் இன்ஸ்டண்டாக தேர்வு செய்கிறது, தன் கணவனைக்கூட அவள் அப்படி கொஞ்சியிருக்க மாட்டாள், பேக்ஸ்டர் காட்டில் அடை மழை,தொலைவில் இருந்து பார்த்த காட்சிகளை 3டி கண்ணாடி போட்டு பார்க்கிற சுகம், பாக்ஸ்டரின் பொற்காலம் என்றே நினைக்கிறது, இப்போது பேக்ஸ்டரின் உரிமம் இந்த இளம் ஜோடிகளிடம் தரப்படுகிறது, இப்போது அந்த இளம் பெண் சூல் கொள்கிறாள், கணவன் இதற்கென்ன அவசரம்? என்கிறான்,ஆனால் அவளுக்கு அது தேவையாக இருக்கிறது, அவளின் பேறு காலம் முழுக்க பேக்ஸ்டருக்கு மிகவும் அவஸ்தையாக உள்ளது, அவளின் மேனி பேறுக்காலத்தில் துவண்டு , பொலிவிழக்க பேக்ஸ்டர் அதை விரும்பவில்லை, அவளின் மீதிருந்து இரண்டு உடல்களில் நறுமணம் வீசுவது பேக்ஸ்டருக்கு அவஸ்தையாக உள்ளது,

 அந்த இளம் கணவன் தன் தோட்டத்தில் புதைந்து போயிருந்த ஃபவுண்டனை கிளறி மேலே கொண்டு வர பேக்ஸ்டருக்கு கொண்டாட்டம், மண்வாசனை,புழுக்கள்,பூச்சிகள் என்றால் பேக்ஸ்டருக்கு கொண்டாட்டம், அவற்றை வதைத்து குதியாட்டம் போடலாம் அல்லவா?!!! பேக்ஸ்டரின் வாழ்வில் மிகக் கொடுமையான காலகட்டம் வந்தே விடுகிறது 3 நாட்களாக அது கேரேஜின் இருட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறது, அதன் கிண்ணத்தில் தண்ணீர் கூட மாற்றப்படவில்லை,என்ன கருமம் நேர்ந்தது? என குழம்பியிருந்த பேக்ஸ்டரை அந்த கணவன் வந்து தன் படுக்கை அறைக்கு அழைத்துசெல்ல அங்கே தொட்டிலில் பல் இல்லாத தலை மொட்டையான பிடித்த மாவு போன்ற ஒரு ஜந்துவை பெருமையாக இருவரும் கொஞ்சுவதை பேக்ஸ்டர் பார்த்துவிட்டு,இருட்டில் கொழுக்கட்டை பிடித்து விட்டு பெருமையைப் பார் என கருவுகிறது,

 தன் இடம் போச்சு என பொறுமுகிறது, அக்குழந்தை வளர வளர,பேக்ஸ்டரின் மீதான அந்த ஜோடிகளின் அன்பு தேய்கிறது,அக்குழந்தையை மெல்ல விபத்து நிகழ்த்தி தீர்த்துக்கட்ட நேரம் பார்க்கிறது பேக்ஸ்டர்,குழந்தை புல்வெளியில் விளையாட,அந்நேரம் பார்த்து ஆபீஸுக்கு கிளம்பிய கணவனை ,நீ ஆபிஸில் ஆணி பிடுங்க வேண்டாம்,என்னைக்கவனி என்று காலையிலேயே படுக்கை அறைக்குள் அழைத்துபோகிறாள் மனைவி,சரியாக இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பேக்ஸ்டர் தவழும் குழந்தையை  நீர் நிலைக்குள் தள்ளிவிட்டு உதவி உதவி எனக் குலைக்கவும் செய்கிறது,அந்த ஜோடிகள் போட்டது போட்டபடி வந்து குழந்தையை தூக்க,அது சரியான நேரமாக அமைந்தபடியால் குழந்தை பிழைக்கிறது,அட வட போச்சே என பம்முகிறது பேக்ஸ்டர்,

கணவன் பேக்ஸ்டரை நன்றி கூர்ந்திருக்க,மனைவிக்கு மட்டும் பொறி தட்டுகிறது,பேக்ஸ்டருக்கு இப்போது அடுத்த எஜமானர் தயார்,இந்த எஜமானன் ஒரு சிறுவன்,இவன் ஒரு வளரும் சோஸியோ பாத்,ஹிட்லரின் ஃபனாடிக்கும் கூட,த்ரில்லுக்காக தன்னையே தினமும் சுய சேதம் செய்து கொள்ளும் ரகம்,பேக்ஸ்டருக்கெல்லாம் பாட்டன் குரூரத்தில்,அடிக்கடி ஹிட்லரை அவளின் காதலி ஈவாவை,ஹிட்லர் வளர்த்த ஜெர்மன் ஷெபர்டு நாயை,4 சிறு குட்டிகளை ,அவர் உயிர் விட்ட பங்கரை என்று தேடி தேடி படிப்பான்,ஹிட்லரின் ஆவியே இவனுள்ளே புகுந்து விட்டதோ என எண்ணும் படியான ஈடுபாடு,இவனின் வினோத படிப்பார்வம்,ஈடுபாடு,எல்லாம் பெற்றோருக்கு கவலை உண்டு பண்ணுகிறது, 

அப்பா மகன் மீது பாசம் வைத்து அவனிடம் நிறைய பேசத்துவங்குகிறார்,அவனை வெளியே கூட்டிப்போகிறார்,அன்று அப்படித்தான் உனக்கு அப்பா ஒரு பரிசு தருகிறேன் என்று பேக்ஸ்டரின் கேரேஜுக்குள் கூட்டிப்போகிறார்,பேக்ஸ்டர் இப்போது புது வீட்டுக்கு கிளம்பத் தயாராகிறான்,பேக்ஸ்டர் எதிர்பார்த்தது போல சிறுவன் கமாண்டிங்காக இருக்கவே அவனுக்கு அடிபணிகிறான் பேக்ஸ்டர்,அவன் வேகமாக சைக்கிள் மிதிக்க பேக்ஸ்டர் கூடவே ஆட்டி ஆட்டி ஓடுகிறான்,தசைகள் இன்னும் வலுவடைகின்றன பேக்ஸ்டருக்கு,

சிறுவன் ஊருக்கு ஒதுக்குபுறமாயிருக்கும் குப்பை மேட்டில் ஹிட்லரின் பங்கர் போலவே கிடைத்த பொருட்களைக் கொண்டு நிறுவ ஆரம்பிக்கிறான்,அங்கே வைத்து பேக்ஸ்டருக்கு மனித உருவ பொம்மைகளை கட்டி அதை  துரத்தவும் தாக்கவும் பேக்ஸ்டருக்கு ஆணையிட்டு வேலை வாங்குகிறான்.பேக்ஸ்டர் என்ன தான் சொன்னபடி கேட்டாலும் அதன் மீது அன்பு கொள்ள மாட்டேன் என்கிறான்,ஹிட்லரின் சித்தாந்தத்தை பின்பற்றுபவனாதலால் ஹிட்லர் சாகும் தருவாயில் தன் ஜெர்மன் ஷெபர்டு நாய்க்கும்,4 குட்டிகளுக்கும் சயனைடு புகட்டியதை மனதில் வைத்து பேக்ஸ்டரை வைத்து அதே போல பரிசோதனை நடத்த எண்ணுகிறான்.

இப்போது பேக்ஸ்டர் சிறுவன் தன்னை மதிக்க வைக்க திட்டம் தீட்டுகிறது,அந்த குப்பை மேட்டுக்கு ஒரு கருப்பு சடை நாய் வந்து இதனுடன் மோத வர,அதை கடித்தே கொன்று விடுகிறது பேக்ஸ்டர்,இது சிறுவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது,

பேக்ஸ்டரைப் பற்றி சிறுவன் இப்போது ஆராய ஆரம்பிக்கிறான்,இறந்து போன கிழவி மார்கரேட்டின் வீட்டுக்குள் கதவை உடைத்து நுழைகிறான்,அங்கே இருந்து எதிர் வீட்டின் இளம் ஜோடிகள் அடிக்கும் கூத்தை சன்னல் வழியே வேடிக்கை பார்த்து குரூர இன்பம் துய்க்கிறான்,பேக்ஸ்டர் அவர்களிடம் செல்லமாக சிலகாலம் இருந்ததால் பேக்ஸ்டர் மீது ஒரு வித பொறாமை கூட வருகிறது,தானும் அங்கே அவர்கள் வீட்டுக்குள் செல்லமாக நுழைய ஏக்கம் கொள்கிறான்,தருணம் பார்க்கிறான்.

இந்நிலையில் சிறுவனுக்கு  கூட படிக்கும் மாணவி பள்ளி பேருந்தில் வைத்து பழக்கமாகிறாள்,அவளின் அம்மா இவளையும் அவளின் குடிகார அப்பாவையும் விட்டு பிரிந்து சென்றிருக்கிறாள்,அவளின் நினைவாக இவளிடம் ஒரு ஸ்பானியல் ரக பெண் நாய் இருக்கிறது,அதை நடைபயிற்சிக்கு சிறுவனுடன் கூட்டி வருகிறாள்,அப்போது பேக்ஸ்டருடன் அந்த ஸ்பேனியல் ரக நாய் புணர விடப்படுகிறது,பேக்ஸ்டருக்கு தீராத ஆத்திரம்,ஸ்பேனியலை அதற்கு பிடிக்கவே இல்லை,ஆனாலும் வேறு வழியில்லை,இதை விட்டால் வேறு பெண் வாசனையே கிடைகாமலும் கூட போகலாமென்று,தன் இனத்தை விட தாழ்ந்த ஸ்பேனியலை வேண்டா வெறுப்பாக புணறுகிறது பேக்ஸ்டர்.

இப்போது சிறுவனின் நண்பன் ஒருவன் அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குப்பை மேட்டுக்கு வந்து அந்த பங்கரையும் ஆராய்கிறான்,அங்கே உள்ளே அடைக்கப்பட்டிருந்த பேக்ஸ்டர் அந்த பையனை துரத்தி கடிக்க எத்தனிக்கிறது,மேலே இருந்து சிறுவன் பேக்ஸ்ட்ரை நோக்கி அவனை கொல்,விடாதே!!! என்று ஹிட்லரை போல ஆணையிட,பேக்ஸ்டர் காரணமில்லாமல்,தனக்கு விருப்பமில்லாமல் தான் யாரையும் கொல்வதில்லை என்னும் கொள்கைக்கு ஏற்ப அவனின் கட்டளைக்கு அடிபணிய மறுக்க,சிறுவன் பேக்ஸ்டரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டியவன்,அதை பெல்டால் விலகி நின்று விளாசுகிறான்,

இப்போது ஸ்பேனியல் நாய்க்கு பேறுகாலம் ,அது நான்கு குட்டிகளை பேக்ஸ்டரின் சாயலிலேயே ஈன்றிருக்கிறது,உடம்பில் இரண்டு விதமான வாசம் வீசும் அக்குட்டிகளை பேக்ஸ்டருக்கு பிடிக்கவுமில்லை என்றாலும் பிடிக்காமலுமில்லை,அந்த குட்டிகளை சிறுவனின் தோழி கலப்பினம் என்பதால் அப்பா விரும்பமாட்டார்,ஆகவே அவற்றை வெளியே கொண்டு விடப்போகிறேன் என்கிறாள்,சிறுவனுக்கு அந்த குட்டியின் மீது ஒரு வெறுப்பு கலந்த மோகம், இவளுக்கு அவன் மீது மோகம்,தன் மார்பகங்களின் மீது அவனின் கையை எடுத்து வைத்து ,உனக்கு பிடித்திருக்கிறதா? என்கிறாள்,

அவன் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை என கல் போல காணப்படுகிறான், இவள் அவனை முத்தமிட்டு நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்,நான் உடன் படுகிறேன்,ஒத்துழைக்கிறேன் என்று சொல்ல,அப்படி என்றால் வாயை மூடு என்று சொல்லிவிட்டு அவளை புணர்ந்து விட்டு நாய்க்குட்டி ஒன்றை வீட்டுக்குள் கொண்டு வருகிறான்,பேக்ஸ்டரை அவன் 3 நாட்களாக சோறு தண்ணீர் வெளிச்சம் ஏதுமின்றி கேரேஜிலேயே கட்டி வைத்திருக்கிறான்,இருந்தும் தன்னுடைய குட்டியை அவன் இங்கே தூக்கி வந்ததை மோப்பம் பிடிக்கிறது பேக்ஸ்டர்,அதை அவன் என்ன செய்வான் என அவனுடன் பழகிய நாட்களைக்கொண்டு கணிக்கிறது,

மறு நாள் சிறுவன் பள்ளிக்கு சென்ற நேரம் பார்த்து,அந்த குப்பை மேட்டுக்கு சென்று அந்த பங்கரில் சென்று,இவன் தன் குட்டியை கழுத்தை அறுத்து புதைத்த இடத்தை மோப்பம் பிடித்து நோண்டி கிளறுகிறது,அதை நோண்டி வெளியே கொண்டு போட்டு சிறுவனைப் பழிவாங்க கறுவுகிறது,இப்பொது வலிமையுள்ளது தான் மிஞ்சும்,சிறுவன் பலசாலி மூர்க்கன் தான் என்றாலும் பேக்ஸ்டர் ஒரு போக்கிரி மிருகம்,நீயா நானா?பார்க்கலாம் என்று நிமிர்ந்து நிற்கிறது,அதோ அங்கே சிறுவன் பெரிய இரும்பு சக்கரத்தை தூக்கி பேக்ஸ்டர் மீது போட எத்தனிக்கிறான்.

இனி என்ன ஆகும்?
பேக்ஸ்டர் சிறுவனைக் கொன்றதா?
சிறுவன் பேக்ஸ்டரைக் கொன்றானா?


படம் பாருங்கள்,அத்தனை விறுவிறுப்பான காட்சிகளை தவற விட்டுவிடாதீர்கள்,கல்ட் க்ளாஸிக் படங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் இது போன்றதொரு டார்க் ஹ்யூமரும்,ஹாரரும்,இதே போன்றதொரு குறும்பான டார்க் ஹ்யூமர் படம் என்றால் டின் ட்ரம்மை சொல்லலாம்,அப்படி ஒரு ஹிஸ்டாரிக்கல் வார் மேஜிக்கல் ரியாலிசம் படம் அது,அதில் சிறுவன் ஆஸ்கர் எப்படி நம்மை களிப்பூட்டினானோ இதில் பேக்ஸ்டர் அந்த வேலையைச் செய்கிறது,எத்தனை வருடம் போனாலும் அப்படி ஒரு ஃப்ரெஷ்னஸ் படத்தில் இருக்கும் குறையாது.
யூட்யூபில் உள்ள முழுப்படத்தின் காணொளிக்கான சுட்டி.

ரஸ்ட் அண்ட் போன் [ Rust and Bone ][ஃப்ரென்சு+பெல்ஜியம்] [2012][15+]
ஸ்ட் அண்ட் போன் படம் இன்று பார்த்தேன்,எத்தனை நாளாகிறது? இதே போல ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி லெவல் கூட்டும் படம் பார்த்து?!!!சமீபத்தில் அன்னையும் ரசூலும் மலையாளம் படம் பார்த்து, அன்னாவால் ஒரே ஹாண்டிங்காக இருந்தது, ரசூலுக்காக மிகவும் கவலைப்பட வேண்டியதாகிவிட்டது, மகா நடிகனாக இருக்கிறார் ஃபஹாத் ஃபாஸில், இவனால் கதாநாயகி உதட்டை மட்டும் தான் கடிக்கத் தெரியும் என்று நிச்சயம் கேலி பேசியிருப்பார்கள், அதை ரசூல் ,நாதொல்லி  சாலமன் பாத்திரம் மூலம் பலமாக முறியடித்துள்ளார் ,சரி ரஸ்ட் அண்ட் போனுக்குள் வருகிறேன், என்னா படம்? என்னா படம்?இது ஃப்ரென்சு &பெல்ஜிய சினிமாவின் கூட்டு முயற்சியாம்,மிக அழகாக வந்துள்ளது படம்.

இன்றைய ஐரொப்பா,மிகவும் பொருளாதார மந்தத்தால் கெட்ட ஆட்டம் கண்டுள்ளது, அதை பறைசாற்றும் கண்ணாடியாக ஃப்ரேம்களை படத்தில் வைத்துள்ளார் இயக்குனர். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல வெளியே அழகாக தெரியும் ஐரோப்பிய ஒன்றியம் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள அங்கே வாழும் சாமானியர் ஒவ்வொருவரும் பகீரதப் பிரயத்தனப்படுவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது படம். இயக்குனர் Jacques Audiard ஏற்கனவே இயக்கிய ப்ரொப்பெட் என்னும் சிறைக்குள் இருக்கும் நிழல் உலக தாதாக்கள் படம் மிகச்சிறப்பான ஒன்று, இதிலும் குறையே வைக்கவில்லை. இன்செப்ஷன்,மற்றும் லாஸ்ட் நைட் இன் பாரீஸ் படத்தில் நடித்த Marion Cotillard ம்,பெல்ஜிய நடிகர் Matthias Schoenaerts ம் போட்டி போட்டு படம் காட்டியுள்ளனர்.அத்தனை ரியாலிட்டி!!!
படத்தின் கதை:-
அலி தன் போதைக்கு அடிமையான மனைவியைப் பிரிந்து கையில் மஞ்சள் பை இல்லாமல் பெல்ஜியத்தில் இருந்து ஃப்ரான்ஸுக்கு ரயிலில் தன் 5 வயது மகன் சாமுடன் வருகிறான், வருகையிலேயே மகன் பசி என்று சொல்ல காலி ரயிலின் இருக்கைகளுக்கு கீழே இருந்து உணவு பொட்டலங்களின் மீதம்,குளிர் பானங்களின் மீதத்தை பொறுக்கி உண்கிறான்,சாமுக்கும் ஊட்டுகிறான்.

இப்போது ஒரே நம்பிக்கை ஃப்ரான்ஸில் ஸூப்பர் மார்க்கெட் ஒன்றில் தற்காலிக வேலையில் இருக்கும் அக்கா அன்னாவும் அவளின் கணவன் லூயீஸும் தான், அக்கா ஸூப்பர் மார்க்கெட்டில் இருந்து எக்ஸ்பைரி ஆகும் உணவு டின்களை எடுத்து வந்து ஃப்ரிட்ஜில் அடுக்கிவைத்து ஒருவாரம் வைத்து உண்கிறாள், நாய்களை ப்ரீடிங் விட்டு விற்று சிறு பொளுளீட்டுகிறாள். இப்போது பாரமாக தம்பியும் ,அவன் மகனும் வந்து விட்டாலும் இன்முகத்தோடு அவர்களையும் பேணுகிறாள் அன்னா, அன்னாவின் கணவன் ஒரு ட்ரக் ட்ரைவர், அவர்கள் இருக்கும் நிலையில் ஒரு சிறுவன் வேறு பாரமா? என்று கேட்காத நல்ல மனிதர்.

அன்னா சிபாரிசு செய்து அலியை ஒரு டிஸ்கோ பாரில் பவுன்சராகவும், தன்னுடைய ஸூப்பர் மார்க்கெட்டில் இரவு செக்யூரிட்டியாகவும் பணியில் சேர்த்துவிடுகிறாள்.எத்தனை உழைத்தாலும் சேமிக்க முடியாத படிக்கு செலவினம் இருக்கிறது.

அலி பேலன்ஸ்டாக வாழ்க்கையை அனுபவித்து வாழும் ரகம்,சுயநலமியூம் அல்லன்,பொது நல விரும்பியும் அல்லன், குடிகாரனும் அல்லன், குடிக்காதவனும் அல்லன்,ஸ்திரி லோலனும் அல்லன் ஸ்திரியையே ஓலாதவும் அல்லன், மொத்தத்தில் தெளிவானவன், நன்கு உடற்பயிற்சி செய்து உடம்பை பேணிகிறான், வாய்ப்பு கிடைக்கும் போது வயது பெண்களிடம் கடலை போட்டு வகை வகையாக புணறுகிறான், அதில் குழப்பமே இருப்பதில்லை அவனுக்கு, அவனின் முன்னாள் மனைவி தன்னைப் பிரிந்து வாழ்ந்தவள் தன் மகனை ம்யூலாக போதை மருந்து கடத்தலுக்கு பயன்படுத்தியதை அறிந்து கொதித்து ,அவனை தன் கஷ்டத்திலும் அக்கா வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறான் என நாம் அறிகிறோம்.

ஓரிரவில் டிஸ்கோ பாரில் ஸ்டெஃபனி என்பவளை முரடர்களிடமிருந்து கைகலப்பின் முடிவில் காப்பாற்றி வீட்டில் கொண்டு சேர்க்கிறான்,அங்கே அவளுக்கு சைமன் என்னும் பாய்ஃப்ரெண்ட் இருப்பதை அறிகிறான்,இருந்தும் மனம் தளறாமல் ஏதாவது தேவை என்றால் கூப்பிடு என்று இவன் எண்ணை எழுதி ஒட்டிவிட்டு வருகிறான். ஸ்டெஃபனி ஒரு ராட்சத திமிங்கில[கில்லர் வேல்] காட்சியகத்தில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறாள், எத்தனையோ ஆண் நண்பர்கள் இருந்தாலும் இனி பாய்ஃப்ரெண்ட் ஒருவனாகவே இருக்கட்டும் என்று முயன்று கொண்டிருக்கிறாள்.

ஒரு நாள் ராட்சத திமிங்கில சாகசக் காட்சியின் போது இவள் இரையை திமிங்கிலத்துக்கு புகட்டி விட்டு விலகிய நேரம், ராட்சத திமிங்கிலம்,அந்த நடை மேடைக்குள்ளேயே பாய்ந்து உடைத்து துவம்சம் செய்தும் விடுகிறது, ஸ்டெஃபெனியின் இரு கால்களையும் தொடைக்கு கீழே முழுதாக அரைத்து தின்றும் விட்டிருக்கிறது, அப்படி ஒரு அவலமான நிலை தனக்கு நேரும் என ஸ்டெஃபனி நினைக்கவேயில்லை!!!, கையறுநிலை, பாய்ஃப்ரெண்டோ விட்டுச்சென்றுவிட்டான், அக்கா மட்டுமே வந்து பார்த்தாள், 4 மாதம் ஆகிறது வீட்டுக்கு திரும்ப. இவளின் இன்ஸூரன்ஸு பணத்தைக் கொண்டு தற்காலிகமாக மாற்று திறனாளிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வீட்டுக்கு குடி பெயருகிறாள். அப்போது அலியின் எண்ணை பார்த்தவள் மிகவும் கனிவான இதயம் கொண்ட அவனிடம் பேசுவோம் என்று அழைக்கிறாள்.


அலி ஸ்டெஃபனிக்கு நன்றாக உதவுகிறான், அவளை தூக்கிக்கொண்டு கடற்கரை மணிலில் நடக்கிறான், கடலில் நீந்த உதவுகிறான், உடை மாற்ற உதவுகிறான், குழந்தை போல சிறுநீர் கழிக்க கூட உதவுகிறான், ஆனால் எந்த கைமாறும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால அவனால் பண உதவி செய்ய முடியாத நிலை, உடலால் ஆன எந்த உதவியையும் செய்ய தயாராக இருக்கிறான் அலி..

அலி ஒரு அமெச்சூர் கிக் பாக்சரும் கூட,அவனுடன் பகுதி நேரமாக ஸூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் மார்ஷல் என்பவனுடன் நட்பாகிறான், மார்ஷல் பணத்துக்காக தொழிலாளிகளை முதலாளிகளுக்கு காட்டிக்கொடுக்கும் ஸபையிங் கேமரா நிறுவும் வேலையை செய்து வருகிறான்,  அது ஆபத்து என்று தெரிந்தும் அலியும் அவனுக்கு உதவுகிறான், அவன் அதற்கு கைமாறாக அலியை சட்ட விரோதமாக நடக்கும் கிக் பாக்ஸிங் மேட்சுக்கு அழைத்துப்போய் சண்டையிட்டு பணம் ஈட்ட வைக்கிறான்.

அலி தன் அக்காவிடம் இப்போது பட்ட கடனை அடைக்கத்  துவங்குகிறான், அக்கா மகனை மிக நன்றாக கவனித்துக் கொள்கிறாள், அக்காவின் ஒரு பழைய ஸ்கூட்டரை பராமத்து உபயோகிக்கிறான் அலி, மகன் சாமை பள்ளியில் சேர்க்கிறான், அவனை பள்ளி விட்டு கூட்டி வர இவனால்  பலசமயம் முடியாமல் போகிறது, ஒவ்வொரு முறை இவன் தாமதமாகப் போகும் போதும் சாமின் ஆசிரியையால் இதுவே கடைசி முறை, அடுத்த முறை போலீசுக்கு போன் செய்து விடுவேன் என எச்சரிக்கப்படுகிறான், இவன் என்ன செய்வான்? அந்நேரம் பார்த்து தான் ஏதாவது கிராக்கி மாட்டி அவளை தேற்றி புணர்ந்து கொண்டிருக்கிறான் அலி.

தன்னுடைய பிற பெண்களுடனான உடல் தொடர்பு பற்றி ஸ்டெஃபனியிடம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறான் அலி, இப்போது ஸ்டெஃபனி நவீன ப்ராஸ்தடிக் கால்களுக்கு அளவெடுத்து தருவித்து  வாங்கி அணிகிறாள், அதை அலிக்கு காட்ட விரும்பி அவனை அழைக்கிறாள், அலி அவளிடம் விளையாட்டாக சரி உனக்கும் புணரவேண்டுமா? உன் உறுப்பு அந்த விபத்துக்கு பிறகு எப்படி செயல்படுகிறது என பார்க்க விருப்பமா? என்று போட்டு வாங்குகிறான், அவளுக்குள் இருந்த குறுகுறுப்பை தூண்டி விடுகிறான் அலி, அவள் இப்போது வேண்டாம் என மறுக்க, சரி ஐ ஆம் ஆல்வேஸ் ஆபரேஷனல், [தீயா வேலை செய்பவன்] சுருக்கமாக ''OP'' என்கிறான், எப்போது வேண்டுமானாலும் கால் அல்லது எஸ் எம் எஸ் செய், நான் வேலை இல்லாமல் இருந்தேன் என்றால் உடனே வருவேன் என்கிறான்.

இவள் யோசித்தவள் அறைக்குள் சென்று இப்போது வரலாம் என்று மெல்ல அழைக்கிறாள், மிகவும் கவனமாகவும், அருமையாகவும் ரசித்து புணறுகின்றனர், ஒருகணம் அவளுக்கு தான் கால்களை இழக்கவேயில்லையோ? எனத் தோன்றும் படி அமைந்து விடுகிறது அந்த புணர்ச்சி, விடியலில் இவன் கண்விழித்துப் பார்க்க அவள் கீழே ஆடைகள் ஏதுமின்றி தவழ்ந்து செல்ல, இவன் அவளை தூக்கிச்சென்று சிறுநீர் கழிக்க வைக்கிறான். இவன் மீதான அபிப்பிராயத்தை பன்மடங்கு உயர்த்துகிறது, புணர்ச்சி முடிந்தவுடன் என்ன உன் உறுப்பு வேலை செய்கிறதா? திருப்தியா? என்கிறவனுக்கு,வெட்கத்துடன் ஒரு முறை தானே புணர்ந்தோம்!!! அதற்குள் சொல்லத் தெரியவில்லை என்கிறாள்,ஒரு முறை போதாதா? எனக்கு இப்போது முடியாது எனக்கு வேலைக்கு செல்லவேண்டும் என்று கலாய்த்துவிட்டு நகர்கிறான் அலி.

இப்போது ஸ்டெபனி புது அவதாரம் எடுத்திருக்கிறாள்,அடிக்கடி தன்னம்பிக்கையுடன் அலிக்கு ''OP''  என மெசேஜ் செய்கிறாள், அவளுக்கு அவனிடம் லஜ்ஜையே  இருப்பதில்லை, வெட்கம் வடிந்து போயிருக்கிறது, இப்போது தன் வலது தொடையில் "Droite" என்று டாட்டூ குத்திக்கொள்கிறாள், வலம் என்று பொருள் படும் அதற்கு தான் சரியான பாதையில் செல்கிறேன் என்று காட்ட ஸ்டெஃபனி அதை பொரித்திருக்கலாம் என நினைக்கிறேன், இப்போது டாட்டு இட்ட பின்னர் பல நிலைகளில் உடலுறவு கொண்டு உச்சம் கொள்கின்றனர்,

இப்போது ஸ்டெஃபனியை தன் வீட்டுக்கே கூட்டிச் சென்று புனர்கிறான் அலி, தன் அக்காவுக்கும் மகனுக்கும் அறிமுகம் செய்கிறான், இப்போது ஸ்டெஃபனி அலியுடன் எல்லா பாக்ஸிங் மேட்ச்களுக்குமே கூட செல்கிறாள், அவளுக்கு இவனால் தன்நம்பிக்கை கிடைக்க இவனுக்கு அவளைப் பார்க்கையில் தன்னம்பிக்கை கிடைத்து அடுத்தடுத்து வெற்றிகளை பெறுகிறான், ஆனால் இதெல்லாம் சட்ட விரோதமான பாக்ஸிங் தான் இப்போதும் ஒரு அமெச்சூர், நல்ல ப்ரொஃபெஷனலிடம் சென்று ட்ரெயின் செய்து தொழில்முறை  பாக்ஸராக வர எண்ணுகிறான் அலி.

ஒரு நாள் ஒரு பாக்ஸிங் போட்டியில் வென்ற களிப்பில் நண்பர்கள் அனைவரும் ஒரு பாருக்குச் செல்ல, அலி ஸ்டெஃபனியை மார்ஷலுடன் விட்டுவிட்டு நடனமாட செல்கிறான், அங்கே வைத்து ஒரு பெண்ணை இன்ஸ்டண்டாக  மடித்து தள்ளிக்கொண்டு செல்லும் முன்னர் ஸ்டெஃபனியிடம் சொல்லிவிட்டு நகர்கிறான், அது ஸ்டெஃபனிக்குள் எரிமலையை உண்டு செய்கிறது, அதற்கு  வடிகால் தேட நன்றாக மது அருந்த ஆரம்பித்தவள், அருகே ஒருவன் வந்து மது வாங்கித்தர குடிக்கிறாள், அவன் உடனே உடலுறவுக்கு அழைக்க இன்று வேண்டாம்,பின்னர் பார்க்கலாம் என்று ரிசர்வில் வைக்கிறாள், அப்போது அவன் ஸ்டெஃபனியின் ப்ராஸ்தடிக் கால்களை கவனித்துவிட்டு ,சாரி!!! ,என்று சொல்ல,மிகவும் ஆத்திரத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறாள் ஸ்டெஃபனி, அவனை மதுக்கோப்பையை கொண்டே முகத்தில் அடிக்கிறாள்.

மறுநாள், அலியிடம் இது குறித்து பேசுகிறாள்,இனி நாம் மிருகங்கள் போல உறவு கொள்ளாமல் மனிதர்களாக மாற முயல்வோம், நமக்குள் என்ன? நட்பா?அதை கொஞ்சமாவது மதி!!என்னை தனியே விட்டுவிட்டு இன்னொரு பெண்னுடன் போகும் தவறை மீண்டும் செய்யாதே!!! அதே தவறை நான் செய்தால் உனக்கு எப்படி இருக்கும்? என்கிறாள் ஸ்டெஃபனி. அலி இப்போதும் அதை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறான்.

இப்போது அலியின் நண்பன் மார்ஷல், தொழிலாளிகளை வேவு பார்க்க காமெரா வைத்ததை தொழிலாளிகள் கண்டுபிடித்துவிட, தர்ம அடி தான் விழவில்லை, போலீஸ் வருவதற்குள் தலைமறைவாக வேண்டி எல்லா கேமராவையும் அள்ளிக்கொண்டு செல்ல எத்தனிக்க, அவனுக்கு அலியும் உதவுகிறான், அதை அலியின் அக்காவின் தோழி ஒருத்தி தட்டிக் கேட்கிறாள், இவன் பதில் சொல்லாமல் வெளியேறுவதை,வீடியோ எடுக்கிறாள்,

ஒரிரு நாட்கள் கழிந்த நிலையில் அலியின் அக்கா அன்னாவை ஸூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தனியே அழைக்கிறது, அவள் எக்ஸ்பைரி டேட் நெருங்கும் உணவு டின்களை திருடுவதை கேமராவில் பதிவு செய்ததை காட்டி வேலைநீக்கமும் செய்கிறது, இப்போது அலியின் வீடியோ அன்னாவிடம் அவளின் தோழி மூலம் புகாராக காட்டப்படுகிறது, கொதிக்கிறாள் அன்னா, அலியை செவிட்டில் அறைந்தவள், வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாள், அலியும் அக்காவை எதிர்த்து கை ஓங்கி விடுகிறான், அந்த ஒரு துரதிர்ஷ்டமான நேரத்தில் ஸ்டெஃபனி அனுப்பிய ''OP''  ? என்னும் மெசேஜும் வருகிறது, உனக்கு இது தேவையா?!!! உன் லட்சியத்தை முதலில் நிறைவேற்று என்று உள் மனம் சொல்ல, தன் மகனைக்கூட கூட்டிக்கொள்ளாமல் எங்கேயோ கண்காணாத இடத்தை நோக்கி சென்று விடுகிறான் அலி.

அவன் லட்சியத்தை அடைந்தானா?
அக்கா அன்னா அவனுடன் ராசியானாளா?
ஸ்டெஃபனியுடன் மீண்டும் இணைந்தானா?
போன்றவற்றை படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு போர்க்களமாவதும் பூக்களமாவதும் நாம்  அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதற்கு இப்படம் ஒரு சான்று, அத்தனை பாசிட்டிவான எனர்ஜி லெவலை ஒருவருக்கு இப்படம் கொடுக்கும், உலக சினிமா திருவிழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு ஸ்டாண்டிங் ஓவேஷன்களை ஒருங்கே பெற்ற படம்,எத்தனையோ விருதுகளையும் அள்ளிய படம்.ஒவ்வொரு பாத்திரங்களும் அப்படி ஒரு பங்களிப்பை ஈந்த படம்,வாழ்க்கைப் புயல் ஒருவரை எப்படி புரட்டிப்போட்டாலும் தன்னம்பிக்கையால் ஒருவர் மேலே வரலாம் என சொன்ன படம்.அவசியம் படத்தைப்பாருங்கள்,

படத்தில் மிக அருமையாக சிஜி செய்து அசத்தியுள்ளனர்,சிஜி தொழில் நுட்பம் எந்த அளவுக்கு கைகொடுத்ததென்று லைஃப் ஆஃப் பை படத்தில் நாம் பார்த்திருப்போம்,இப்படத்தில் என்ன அழகாக கால்கள் இல்லாத ஸ்டெஃபனிக்காக உழைத்திருக்கிறது டீம்,ஹாட்ஸ் ஆஃப்!!! இந்த காணொளியில் சிஜி உருவான விதம் பாருங்கள்.
======0000000000=====
படத்தின் யூட்யூப் காணொளி:-

கில்லர் ஜோ [Killer Joe ] [2011] [18+][ ஹாலிவுட்]


கில்லர் ஜோ படம் பார்த்தேன், இது வரை வந்த கல்ட் நுவார்-க்ரைம் டார்க் ஹ்யூமர் வகைப் படங்களிலேயே அதிக டீடெய்ல்களும், வக்கிரமும், வன்முறையும் தன்னுள் ஒருங்கே கொண்ட படமாகத் தோன்றியது,இதற்கு முன்பு நான் பார்த்திருந்த இதே ஜானர் படங்களில் இந்த அளவுக்கு ஓவர்டோஸ் குரூரம் இருந்ததாக நினைவில்லை, இதற்கு கொஞ்சம் அருகே நிற்கும் ஓவர்டோஸ் படமாக லாஸ்ட் ஹவுஸ் ஆன் த லெஃப்ட், யு-டர்ன் மற்றும் கில்லர் இன்சட் மீ படத்தைச் சொல்லலாம்,
கில்லர் ஜோ படத்தில் எல்லாம் இருந்தும் எல்லாமே ஓவர் டோஸாக இருப்பதால் தான் இது நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட்மென், ஃபார்கோ, ஃப்ரோஸன் ரிவர், ஸ்ட்ரா டாக்ஸ், ப்ளட் சிம்புள், போஸ்ட் மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ், த மேன் ஹூ வாஸ் நாட் தேர், 13ட்ஸமெட்டி போன்ற படங்களின் க்ளாசிக் தர வரிசையில் சேராமல் போய்விட்டது என எனக்குத் தோன்றுகிறது.

இயக்குனர் வில்லியம் ஃப்ரைட்கின் ஏற்கனவே எடுத்த படங்களில் ஃப்ரென்ச் கனெக்‌ஷன் ,எக்ஸார்ஸிஸ்ட் தவிர அத்தனையுமே எரொட்டிக்,மற்றும் அதீத வன்முறையை பறைசாற்றும் படங்களே,இப்படத்தை அவர் 40 வருடங்கள் கழித்து இயக்கியுள்ளார்,இவருக்கு வயது77ஆம்,யாரால் நம்ப முடியும்?

கில்லர் ஜோ படத்தில் நாம் அமெரிக்காவின் ஊரக டெக்ஸாஸில் வசிக்கும் ஒரு நாரப்பயல் குடும்பத்தை பார்க்கிறோம்,எல்லோருமே குடிகேடிகள் தான், ஏன்சல் ஒரு கையாலாகாத தகப்பன்,இவனுக்கு விவாகரத்தாகி இப்போது ஷார்லா என்பவளுடன் ஒரு கண்டெயினர் வீட்டில் வசிக்கிறான்,கூடவே ஏன்சலுக்கும் அவன் முதல் மனைவிக்கும் பிறந்த டாட்டியும் வசிக்கிறாள்,அவளுக்கு 12 வயது,ஆனாலும் டேட்டிங்,பாய்ஃப்ரெண்ட் ஏதுமில்லை.அழுக்காக பரக்காவட்டி போல திறந்து போட்டு திரிகிறாள்,

சித்தி ஷார்லா எந்நேரமும் மேலேயோ,கீழேயோ ஆடையே இல்லாமல் வீட்டுக்குளேயே நடமாடும்.புதர் போன்ற யோனியை காற்றாட விட்டு விடும் ரகம்.

இப்போது க்ரிஸ் பற்றி பார்ப்போம்,ஏன்சலுக்கும் அவன் முதல் மனைவி ஏடிலுக்கும் பிறந்தவன் டாட்டியின் சகோதரன்,இவனுக்கு 22 வயது ,ஊதாரி,கஞ்சா,மற்றும் கோகெய்ன் வியாபாரி,இவன் தன் அம்மாவுடனே வேண்டா வெறுப்பாக வசிக்கிறான்,பெயருக்கு தான் அம்மா,அவளை யாருக்குமே பிடிப்பதில்லை,அதே போல க்ரிஸ்ஸையும் யாருக்குமே பிடிப்பதில்லை.

இந்த நிலையில் கிரிஸ் விற்பதற்காக வாங்கி வைத்திருந்த 6ஆயிரம் டாலர் மதிப்புள்ள கோகெயினை அவன் அம்மா ஏடெல் திருடிவிடுகிறாள்,அவளுக்கு இப்போது ரெக்ஸ் என்று ஒரு பாய்ஃப்ரெண்டும் உண்டு,அவன் க்ரிஸ்ஸிடம் உன் அம்மாவுக்கு 50ஆயிரம் டாலருக்கான இன்ஸூரென்ஸ் பாலிசி உள்ளது,அதற்கு நாமினியாக டாட்டியை நியமித்திருக்கிறாள் ,என ஒரு தருணத்தில் அடித்து விடுகிறான்.

இப்போது தன் கோகெய்னை திருடிவிட்டு திருடியதை மறுக்கும் தாயை மிகவும் வெறுக்கிறான் க்ரிஸ்,அதற்காக அவளை மிகவும் வெறுக்கும் தன் அப்பாவை அந்த கண்டெய்னர் வீட்டில் போய் சந்திக்கிறான்,.சித்தியின் காற்றாடவிட்ட புதரை கேலி செய்ததால் அங்கே வைத்து சித்தி ஷார்லாவுக்கும் இவனுக்கும் கைகலப்பாகிறது.

அப்பாவை தனியே ஸ்ட்ரிப்பர்ஸ் க்ளப்புக்கு கூட்டிப்போனவன் அம்மாவை கொலை செய்ய ஜோ என்னும் கெட்ட போலீஸை நியமிக்கப்போகிறேன் என்கிறான்,இவனுடன் ஒத்துழைத்தால் 50000டாலரில் அவனின் கமிஷன் 20000போக மீதமுள்ள 30000 டாலரை இருவரும் சரிசமமாக பகிரலாம் என்கிறான்,மறு நாள் ஜோவை ஒரு அழுக்கு கிளப்பில் வைத்து சந்திக்கின்றனர் அப்பாவும் மகனும்,அங்கே வரும் முன்னரே ஜோ இவர்களுடைய கண்டெயினர் வீட்டுக்கு போய் டாட்டியை கண்டு மையலுறுகிறான்,பெடோஃபைல் போல அந்த 12 வயது சிறுமியை அடைய நினைக்கிறான்.

அங்கே கிளப்பில் தன்னுடைய கமிஷனை 25000டாலராக உயர்த்தி விடுகிறான்,அதில் பாதி 12500த்தை முன் பணமாக கேட்கிறான்,அப்பாவும் மகனும் அதைக்கேட்டு அட்வான்சா?,என வழிய,அவன் கோபமாகி சாவுகிராக்கிகளா!!!! என வசைபாடுகிறான்,க்ரிஸ் மிகவும் கெஞ்ச,சரி அதற்கு எனக்கு பிணையாக உன் தங்கை டாட்டியை நீ எனக்கு கூட்டிக்கொடுக்கவேண்டும்,நீ இன்சூரன்ஸ் பணம் எனக்கு தரும் வரை அவளை தினமும் நான் உன் வீட்டிலேயே தங்கி அனுபவிப்பேன் சம்மதமா?என்கிறான்,இவர்களுக்கு வேறு வழி இல்லாததால் டாட்டியை இந்த 40வயது ஜோவுக்கு குடும்பமே கூட்டித்தர தயாராகின்றனர்.

அங்கே அவளுக்கு சித்தி புது ஆடை வாங்க பணம் தர,அப்பாவும் அண்ணனும் ஜோ அன்று டேட்டிங்கிற்கு வீடு வரும் நேரம் இங்கிதமாக வெளியேறிவிட்டிருக்கின்றனர்,சித்தி ஷார்லாவோ இன்னொரு காதலனை ஒரு மோட்டலில் வரவழைத்து புணருகிறாள்.இங்கே எருமை போன்ற ஜோ பூபோல,ஒரு அப்பாவி பூனை போல  உள்ள டாட்டியை ஆசைவார்த்தைகள் பேசி கிறங்கடித்து புணர ஆரம்பிக்கிறான்.சுமார் ஒரு மாதம் இப்படியே போகிறது.

இப்போது தன் தங்கையை ஜோவிடமிருந்து மீட்க ஞானோதயம் கொண்ட க்ரிஸ் ஏதாவது குறுக்கு வழியில் பணம் ஈட்டி அந்த கோகெயின் வியாபாரிக்கு 6000 டாலரை வட்டியுடன் தர முடியுமா என முயல்கிறான்,அவன் பணம் கட்டிய குதிரை தோற்க,அவனை துரத்திய இரண்டு பைக் ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க ஓடி ஒளிந்த கிரிஸ்ஸை அந்த ஆசாமிகள் விரட்டிப்பிடித்து அடித்து நொறுக்கி விடுகின்றனர்.

ரத்த களரி,மூக்கு முழி எல்லாம் பிதுக்கி வைத்துள்ளனர்,இவன் அபாய கட்டத்தில் அப்பாவீட்டு கதவை தட்ட,அங்கே முழு நிர்வாணமாக விருந்தாளி ஜோ கதவை திறக்கிறான்,இவன் அவனை எப்போது என் அம்மாவை கொலைசெய்வாய்,பார் என் கோராமையை எனக் கேட்கிறான்,வீட்டில் அனைவருக்கும் ஒரே ஆவல்,எப்போ வரும்,இன்சூரன்ஸ் பணம்? என்று.டாட்டி மட்டுமே அவளின் அம்மாவுக்காக வருந்துகிறாள்,சிறு வயதில் அம்மா அவளை தலையணை முகத்தில் வைத்து அமுக்கி கொல்லப்பார்த்த வருத்தம் மனதில் இருந்தாலும் அண்ணன் க்ரிஸ்ஸிடம் வேண்டாம்,எதிலும் மாட்டிக்கொள்ளாதே என்கிறாள்,அண்ணனுக்கு உதவ தன்னையே அந்த ஜோவிடம் இஷ்டப்பட்டு அடிமையாக அற்பணிக்கிறாள்.

மறுநாள் இவனது போலீஸ் ஸ்டேஷனில் சென்று க்ரிஸ் ஜோவை சந்திக்கிறான்,அவனை நடு நிசியில் ஒரு மோட்டலுக்கு ஜோ காரில் நீண்ட தூரம் பயணித்து அழைத்துப்போகிறான்,போகிற வழியில் நான் உன்னிடம் அம்மாவை கொலைசெய்ய சொன்னேன் அல்லவா?அது வேண்டாம்,என் அம்மாவை விட்டுவிடு,என் தங்கையை விட்டுவிடுஎன கெஞ்சுகிறான் ஜோ,இவன் எதுவும் பேசாமல் அந்த மோட்டலில் காரை நிறுத்தி,டிக்கியை திறந்தால் க்ரிஸ்ஸின் அம்மா டிக்கியில் பிணமாக இருக்கிறாள்,இவனுக்கு அழுகையும் ஆத்திரமும் பீரிடுகிறது,அவன் இவனை அதட்டி,அம்மாவின் பிணத்தை அங்கே நின்ற ஒரு காரின் இருக்கையில் திணித்து,மது புகட்டி,பின்னர் காரின் பெட்ரோல் குழாயை வெட்டி காரை கொளுத்தியும் விடுகிறான்,விபத்து போல ஜோடிக்கிறான்.இவன் போலீஸ் ஆதலால் போலீசாரின் பார்வையில் சந்தேகம் வரா வண்ணம் அக்கொலையை நிகழ்த்தியிருக்கிறான் ஜோ.

இப்போது இன்ஸூரன்ஸ் ஆபீஸுக்கு செக் வாங்கவந்த ஷார்லாவும்,ஏன்சலும் அதிகாரியை ஆவலுடன் பார்க்கின்றனர்,இவரின் அழுக்கு கோட்டில் ஒரு நூல் துருத்தியிருக்க அதை மிக ஒழுக்கமான மனைவி என அதிகாரிக்கு காட்ட அந்த நூலை பிடித்து இழுக்கிறாள், அப்போது அந்த கைப்பகுதி அப்படியே விண்டு போய் விடுகிறது,இவரின் பேஸ்பால் தொப்பிக்கும் அந்த கிழிந்த கோட்டுக்கும் அசல் பிச்சைக்காரன் போலவே அதிகாரிக்கு தென்படுகிறார் ஏன்சல்,ஆனால் உண்மையும் அதுதானே?

ஏன்செல் அடிப்படையிலேயே ஒரு சோம்பேறி,எச்சைத்தனம் அவரின் ரத்தத்திலேயே உண்டு.அதனாலேயே அவரின் மனைவியோ மக்களோ அவரை மதிப்பதேயில்லை.ஒரு காட்சியில் ஷார்லாவை பார்க்க அவள் வெய்ட்ரஸாக இருக்கும் நாலாந்தர பீட்ஸா கடைக்கு போகும் இவர் அங்கே டேபிளில் யாரோ குடித்து வைத்த மிச்சம் பீர் பாட்டிலை லபக்கி,கலக்கு கலக்கி குடித்தபடியே ஷார்லாவிடம் பீர் மணி கொடு என லஜ்ஜையில்லாமல் கேட்பார்.

அங்கே அப்போது தான் ஷார்லா தன் காதலன் ஜானி என்பவனுடன் அவர்கள் புணருகையில் எடுத்துக்கொண்ட அவனின் ஆண்குறி தோன்றும் படத்தை ரசித்தபடியே வேலை நேரத்தில் டெலிபோனில் கடலை போடுகிறாள்,அங்கே வந்த டாட்டி அதை கேட்டுவிட்டு அப்பாவுக்கு தெரியாமல் பாய்ஃப்ரெண்டா? எனக்கேட்க ஷார்லா மறுதலித்து,இது தன் முன்னாள் தோழி என்கிறாள், அங்கே ஒரு வாடிக்கையாளர் வேண்டாம் என கேன்சல் செய்த கறுப்புஆலீவ் டாப்பிங் பீட்ஸாவை இவளுக்கு கொடுத்து நைஸ் செய்கிறாள்.தான் பெரிய அழகி என்னும் கர்வம் ஷார்லாவுக்கு அதிகம் இருக்கிறது,க்ரிஸ் இவளின் ஃப்ரீக் போன்ற நடவடிக்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதால் அவனை மிகவும் வெறுக்கிறாள் ஷார்லா, ஆனால் க்ரிஸ்ஸின் முட்டாள்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த சமயம் பார்த்திருக்கிறாள், அதற்கு தோதாக இந்த இன்ஸூரன்ஸ் மேட்டர் வாய்த்தது ஷார்லாவுக்கு.

இப்போது இன்ஸூரன்ஸ் ஆபீஸில் இவர்களுக்கு திருநெல்வேலி அல்வா தரப்படுகிறது,வெல்லம் தின்பவன் ஒருத்தன் விரல் சப்புபவன் ஒருவன் என்பது போல , இவர்கள் அரும்பாடுபட்டு கூலியாள் அமர்த்தி ஏடில்லை கொலை செய்திருக்க, அவளின் இன்ஸூரன்ஸுக்கு நாமினியாக பாய்ஃப்ரெண்ட் ரெக்ஸை நியமித்திருக்கிறாள் அவள். அவளின் இன்ஸூரன்ஸ் பணம் 5000 டாலர்கள்,அது விபத்தாகவும் அமைந்தபடியால் ,இரட்டிப்பாக 100000டாலர்கலாக ஏடில்லின் பாய்ஃப்ரெண்ட் ரெக்ஸுக்கு வருகின்றது,நோகாமல் நோம்பு கும்பிட்டிருக்கிறான் ரெக்ஸ்.

இனி என்ன ஆகும்?க்ரிஸ் கோக் வியாபாரிகளுக்கு வட்டியும் முதலுமாக பணத்தை கொடுத்தானா?கில்லர் ஜோ தன் பிணையான டாட்டியை விட்டு விலகினானா?ரெக்ஸ் அந்த பணத்தை ஆண்டு அனுபவித்தானா?என்பதை சஸ்பென்ஸ் விலகாமல் படத்தில் பாருங்கள்.

இதில் ஒரு விசாரணை காட்சியில் அப்படி ஒரு அடியை சித்திகாரி ஷார்லா ஜோவிடமிருந்து வாங்குகிறாள்,அவளின் கள்ளக்காதலனின் ஆண்குறி தோன்றும் அந்த புகைப்படத்தை ஷார்லா, அது ஏன்செல்லுடையது தான் என சாதிக்கிறாள்,அவனை நோக்கி நீ கூட அன்று குடித்திருந்தாயே?!!! என்று மேலும் சாதிப்பாள் பாருங்கள்,ஊமைக்குசும்பி !!!ஏன்செல் அந்த புகைப்படத்தை வாங்கிப்பார்த்து என் குறி எனக்குத்தெரியாதா?என் குறி இத்தனை பெரிசெல்லாம் கிடையாது என மறுக்கும் காட்சி டார்க் ஹ்யூமரின் உச்சம்.

படத்தில் ஜீவனான ஒரு காட்சி உண்டு,அது கேஎஃப்ஸிக்கு விளம்பர யுக்தியா?அல்லது கேஎஃப்ஸி சிக்கன் லெக் பீஸும் ஆண்குறியும் ஒன்று எனக்கேலி செய்யும் யுக்தியா? தெரியவில்லை,வெறி கொண்ட ஜோ ஷார்லாவை புரட்டிப்போட்டு விசாரிக்கையில்,அவள் மேலும் வெறியாகி சீற,இவன் மூக்கு நெற்றி தாடை எல்லாவற்றையும் உடைத்து விடுகிறான்.பின்னர் ஷார்லா இவனுக்கு சாப்பிடக்கொடுத்த அந்த கேஎஃப்ஸி சிக்கன் லெக்கை எடுத்து தன் ஆண்குறிபோல இடுப்புக்கு கீழே வைத்துக்கொண்டு பொய்யாக முழங்குகிறான்,அவளை எச்சரித்த்து கவனமாக அந்த லெக் பீஸுக்கு வாய்ப்புணர்ச்சி செய்யச்சொல்லி கேட்டுப் பெறுகிறான்,அது மார்வலஸ்ஸான காட்சி,இயக்குனருடைய சிக் டார்க் ஹ்யூமரின் உச்சக்கட்டம் அந்த காட்சி.

இங்கே கில்லர் ஜோவாக தோன்றும் மேத்யூ மெக்கானகி சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர்,இவரின் டூ ஃபார் த மனி படத்தில் அல்பாசினோவுக்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டிய ஒரு பெட்டிங் டிப்ஸ் தரும் ஒரு இளைஞன் பாத்திரம்,அசத்தியிருப்பார்,அதன் பின் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்பு ஏதும் அமையாதிருக்க,40 வருட இடைவெளி விட்ட இயக்குனருடன் கூட்டணி போட்டிருக்கிறார்,குறையா அல்லது நிறையா எனத்தெரியவில்லை,ஆண்டர் சிகர் ஜேவியர் பர்டமின் வசன உச்சரிப்பு,மேனரிசம்,ஆட்டிட்யூட் நிறைய இவரின் பாத்திரம் மீது தென்பட்டது,அப்பா ஆன்செல்லாக வந்த தாமஸ் ஹேடன் சர்ச்சும் சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர்,இவரும் இந்த ஊதாரி தந்தை பாத்திரத்தில் நம்பி நடித்துள்ளார்..மகள் டாட்டியாக 12 வயது சிறுமியாய் வந்த ஜூனோ டெம்பிள் ப்ரில்லியண்டாக நடித்துள்ளார்,இவரின் பாத்திரம் முதிர்ச்சிகொண்டதா அல்லது முதிராததா?என்றே ஊகிக்க முடியாது,படத்தில் ஒரு சிறப்பு அம்மாவாக வந்த பாத்திரத்தையும்,அவளின் பாய்ஃப்ரெண்டாக வந்த ரெக்ஸ் பாத்திரத்தையும் நாம் பார்ப்பதே இல்லை,ஆனாலும் அவர்களை வைத்து தான் படத்தின் கதையே,

படத்தில் வரும் வசனங்கள் முழுக்க டார்க் ஹ்யூமர் விரவிக் கிடக்கின்றன.அனுபவித்து கேட்க வேண்டும் ஒருவர்.நோ கன்ரி ஃபார் ஓல்ட் மென்னின் பாதிப்பாகவோ அல்லது ட்ரிப்யூட்டுக்காகவோ இயக்குனர் இதிலும்
அந்த பிட் புல் வகை நாயை 4 ஃப்ரேமிலாவது காட்டுகிறார்,சிகர் மோஸ்ஸை தேடி வந்து பால்குடிக்கும் கண்டெயினர் வீடுகள் ,மோட்டல்கள்,இதிலும் உண்டு.கில்லர் ஜோ பாத்திரத்திடம் ஒருவர் ஆண்டன் சிகாரின் நகலை எளிதில் கண்ணுற முடியும்.

அந்த ஸ்டேச்சல் நிறைய பணத்துக்கு பதிலாக இதில் இன்ஸூரன்ஸு காசோலை,ஆனால் அது நாய் கையில் கிடைத்த தேங்காய் போன்ற நிலை போன்றவை உலகத்தரம்.இயக்குனர் யார் சொல்லியும் கேட்காமல் எந்த காம்ரமைஸும் செய்து கொள்ளாமல் படத்தை எடுத்து,NC-17 ,R-ரேட்டிங் வாங்கி வெளியிட்டிருக்கிறார்,படம் எதிர்பார்த்த வசூல் சாதனை செய்யாவிட்டாலும், மெச்சூர் ஆடியன்ஸ்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டுள்ளது.

உலகசினிமாவில் டார்க்ஹ்யூமர், கல்ட்,க்ளாஸிக், சோஸியோபாத் ,க்ரைம் ஜானர் வகை ரசிகர்களாக இருந்தால் அவசியம் காணவேண்டிய படம்.
படத்தின் யூட்யூப் காணொளி:-

கிளி போயி [Kili Poyi] [மலையாளம்] [2013] [15+]

கிளி போயி [getting mad] மலையாள திரைப்படம் பார்த்தேன்,இது  ஒரு முழு நீள ஸ்டோனர் மூவி என்கிறார்கள், நல்ல லீனியரான டார்க் காமெடி படம். சம்பத் ஆரண்ய காண்டம் படத்தில் கூட இப்படி கெட்ட வார்த்தைகள் பேசவில்லை,அதுவும் மலையாளிகளைப் பார்த்து மலையாளத்தில் ஒரு தமிழ் கார கெட்ட போலீஸ் ராணா பாத்திரம் தேவடியா பசங்களா!!! என்று முழங்குகிறது,இது முற்றிலும் புதுமையான இண்டிபெண்டண்ட் வகை படங்களில் மட்டுமே சாத்தியம்,மேலும் இது காம்போசிட் லிங்குஸ்டிக் படம் என்பதால் நேடிவிட்டியுடன் ஆங்கிலம், மலையாளம் தமிழ், கன்னடம் என பிழையில்லாமல்  வசனம் பேசச்செய்து படம் எடுத்ததற்கே ஸ்பெஷலாக பாராட்டவேண்டும். கோவாவை மையமாக வைத்து எத்தனையோ படம் வந்தாலும் அநேகம் குப்பையாக உள்ளது, இது விதிவிலக்கு.

பெங்களூர் லைஃபை லைம்லட்டில் நன்றாக கொண்டு வந்துள்ளனர். வாழ்க்கை திரைப்படத்தின் ராஜா சாரின் மெல்ல மெல்ல டிஸ்கோ பாட்டுக்கு அதே ரவீந்தரை வயதான கெட்டப்பில் டிஸ்கோ டக்ளஸாக ஆடவிட்டுக் காட்டியுள்ளனர். அவர் 80களில் தலையில் ஒரு பேண்ட் கட்டிக்கொண்டு ,கையில் மைக்குடன் டிஸ்கோ ஆடி எத்தனை பேரை கடுப்பேத்தியிருப்பார்?, அத்தனைக்கும் சேர்த்து வைத்து நொங்கு எடுக்கின்றனர், இவரை இயக்குனர் செம வாரு வாரியுள்ளார் சம்பத் பாத்திரம் மூலமாக!!!,

இங்குள்ள ரீமிக்ஸ் நாதாரிகள் போல பாடலை கெடுத்து பாழாக்கி நாறடிக்காமல் அப்படியே ஒலிக்க வைத்து மரியாதை செய்துள்ளனர். முக்கியமாக நல்ல தமிழில் நேட்டிவிட்டியுடன் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள் பேசுவது பாராட்டத்தக்கது. இயக்குனர் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தது அவருக்கு நல்ல நேட்டிவிட்டியுடன் தமிழ் வசனம் உச்சரிக்க வைக்க கைகொடுத்துள்ளது.  பெங்களூர் பார்ட்டி லைஃபை, கார்பொரேட் கல்ச்சரை நன்றாக பிரதிபளித்துள்ளார் இயக்குனர். படத்தில் ஆங்காங்கே பிங்க் ஃப்ளாயிட், பல்ப் ஃபிக்‌ஷன், டாக்ஸி ட்ரைவர் படத்தின் ராபர்ட் டிநீரோவின் துப்பாக்கி ஏந்திய ஸ்டில் கோண்ட தோள் பையில் அடைக்கப்பட்ட கோகெயின் என நிறைய குறியீடுகளும், ரசனையான கனெக்‌ஷன்களும் படத்தில் உண்டு.இது டேவிட் போல நான் லீனியர் அல்ல,ஆகவே எளிதாக ஒன்றிப் பார்க்க முடியும்.

படத்தில் முக்கியமாக அந்த மலையாள போலீஸ் இன்ஸ்பெக்டர் தோன்றும் காட்சி செம ரகளை,எப்போதும் ரவுடி வேடத்திலேயே வரும் ஸ்ரீஜித் ரவியை இத்தனை சுய எள்ளலான ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள், ஒரு டெரர் லுக் கொடுத்து விட்டு,யார் என்ன என்று முன்பே விசாரித்து விட்டு,உள்ளே கூட்டிக்கொண்டு போய் லாடம் கட்டப்போகிறான் போல என எண்ண வைத்துவிட்டு,மெதுவாக கையை பற்றிக்கொண்டு,நாமெல்லாம் ஒரே கம்யூனிட்டி,மலையாளிகள் கம்யூனிட்டி,அதற்கு களங்கம் வரலாமா?சத்தியம் செய் என கையை காட்டும் பாத்திரம்,கலக்கல்.

மலையாள சினிமா வாழ்கிறது ,அடுத்தடுத்து ஜாக்பாட் போல நல்ல படங்கள் பார்க்க கிடைத்தது,என்னமாய் ஒரு சுதந்திரத்துடன் படம் எடுக்கிறார்கள் சமீபத்தில் பார்த்த நாதொல்லி ஒரு செரிய மீனல்ல,அன்னாயும் ரசூலும், ஆமென், டேவிட் & கொலியாத், பாப்பின்ஸ் என ஒவ்வொன்றும் வித்தியாசமான முயற்சிகள். இங்கே தமிழில் படம் டெல்லியில் நடந்தாலும் பார்வையாளர்களின் வசதிக்காக கதாபாத்திரங்கள் தமிழிலேயே பேசுவார்களென்று டைட்டில் கார்டு போடுகிறார்கள்.நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம் உண்டு.

25 வயதான இயக்குனர் வினய் கோவிந்த் நிச்சயம் பிழையில்லாத ஒரு படைப்புக்காக பாராட்டப்படவேண்டியவர்.சம்பத்தின் பிழையில்லாத தே.பய்யா!!!ல.பால் ,இன்னும் பிற வார்த்தைகள் சம்பிரதாயமாக வெளிப்படாமல் உயிரோட்டமாக வெளிப்பட்டுள்ளது,உதயம் nh4 ல் வரும் அந்த குண்டான இளைஞன் ம்ரிதுள் நாயர் மலையாளி ஆட்டோ ஓட்டுனராக வருகிறார். ரவீந்தரை மீண்டும் காண நன்றாக இருந்தது.லீட் ரோலில் வந்த ஆசிஃப் அலியும் அஜு வர்கீஸும் வளர்ந்து வரும் நடிகர்கள் நல்ல பெர்ஃபார்மென்ஸை வழங்கியுள்ளனர், கிளி போயி நீண்ட நாட்களுக்கு பின்னர் மலையாளத்தில் Aசர்டிஃபிகேட் வாங்கிய படம் என்று படித்தேன்.கதை எல்லாம் இங்கே சொல்லத் தோன்றவில்லை,வித்தியாசமான மேக்கிங்கிற்காகவேனும் இப்படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள், நண்பர்களே!!!வித்தியாசமான மலையாளம் படங்கள் பார்க்கத்துவங்க  விரும்பும் நண்பர்கள் முதலில் ஆரம்பித்து துவக்க ஏற்ற படம்.
===========
படத்தின் காணொளி யூட்யூபில் இருந்து

Calm at sea [La mer à l'aube][2011][ஃப்ரென்ச்சு]அருமை நண்பர்களே!!!
நான் பெரிதும் மதிக்கும் ஜெர்மானிய இயக்குனர் வால்கர் [Volker Schlöndorff],அவரின் டின் ட்ரம் படம் ஒருவர் பார்த்திருந்தால் அதன் வீர்யம் புரிந்திருக்கும், அதன் இயக்குனர் வால்கர்[Volker Schlöndorff] இயக்கிய படம் காம் அட் ஸீ [La mer à l'aube] இன்று பார்த்தேன், இப்படத்திலும் டீடெய்லிங்குகளுக்கு பஞ்சமில்லை, உலக சினிமா ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்,

இப்படம் உண்மை வரலாற்று சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது, படத்தின் பலம் அதன் டீடெய்லிங் தான்,படம் முடிந்ததும் ஒருவருக்கு கிடைக்கும் அந்த பரமானந்தம் ஆத்ம திருப்தி உலக சினிமாவை மேலும் தேடிக் கொண்டாட வைக்கும்


Volker Schlöndorff
இப்படத்துக்கு முதலீடு அளித்தது ஜெர்மானிய மற்றும் ஃப்ரென்ச்சு டிவி சேனல்கள் ஆகும்,அந்த குறுகிய நிதியில் டிஜிட்டலில் படமாக்கப்பட்ட இந்த காவியம் பெரும் பொருள் ஈட்டுவதற்காக எடுக்கப்படவில்லை, வரலாற்றை ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு கடத்தும் ஒரு மாபெரும் முயற்சியே, அதில் தன் 80களில் இருக்கும் வால்கர் வெற்றியும் பெற்றுள்ளார். யாருக்குத் தெரியும் இதுவே வால்கரின் கடைசி படமாகக் கூட இருக்கக்கூடும், ஆனால் ஆட்டியர் என்று ஒருவர் மார்தட்டிக்கொள்ள , இறுமாப்பு கொள்ள எடுத்த படைப்பு, அப்படி ஒரு செய் நேர்த்தி கொண்ட படம், உலக சினிமாவில் இன்றியமையாதது காலகட்டம், மக்களின் வாழ்வியல் முறை, பேசும் மொழி, புவியியல் நம்பகத்தன்மை. பின்னர் வழங்கும் முறை, இவை அனைத்தும் தன்னுள் ஒருங்கே கொண்ட படம் இது.

நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் ஃப்ரான்ஸ் இருந்த போது ஃப்ரான்ஸ் நாட்டின்  போலீசார் நாஜிக்களுக்கு மலம் கூட அலம்பி விட்டுக்கொண்டிருந்தனர் என்றால் மிகையில்லை.அப்படி ஒரு தலைகுனிவு தன் ஃப்ரான்ஸுக்கு ஏற்படுமென்று நெப்போலியன் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.இரண்டாம் உலகப்போர் ஃப்ரான்ஸுக்கு அப்படி ஒரு சூழ்நிலையை உண்டு செய்தது.

ஜெர்மானிய நாஜிப்படைக்கு ஃப்ரென்ச்சுப் போலீஸ் படை தம் நாட்டு மக்களை கூட்டிகொடுத்ததை விளக்கும் படங்கள் ஏகம் உண்டு, அவற்றுள் இன்றியமையாத படம் மிஸ்டர் க்ளெய்ன் [Monsieur Klein][1976], அதற்கு அடுத்த படியாக இது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜிப்படையின் ஆட்டுழியங்களை மெல்லிய சோகத்துடன் சொன்ன மறக்கமுடியாத படம் இது என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மிஸ்டர் க்ளெய்ன் திரைப்படம் ஒரு மாபெரும் ஃப்ரென்ச்சு க்ளாசிக், ஜோசெப் லூஸீ இயக்கியது, நாஜி ஆதிக்க ஃப்ரான்ஸில் பாரீஸ் நகரத்தில் யூத மக்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை விலங்கியல் மருத்துவர்கள் கொண்டு மருத்துவ சோதனைகளை தமக்குத் தாமெ  செய்யவைத்து, அந்த அப்பாவி மக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் படி 13,152 பேர்களை ஃபில்டர் செய்து ஒன்று திரட்டி Vélodrome d'Hiver என்னும் ஒரு சதுக்கத்தில் வைத்து ஆஷ்விட்ஸ் கேம்புக்கு சரக்கு வேன்களில் ஏற்றி கூட்டித்தரும்  roundup of Parisian Jews என்னும் கருப்பு வரலாற்றைச் சொன்ன படம் மிஸ்டர் க்ளெய்ன், அதன் இயக்குனர் ஜோசப் லூசியும் ஒரு ஆட்டியர், ஃப்ரென்ச்சு உலக சினிமாவின் தீர்க்க தரிசி. அப்படத்தில் நடித்த ஆலன் டெலான் ப்ரென்ச்சு சினிமாவின் அழகிய ஈடற்ற நடிகர். நண்பர்கள் அந்த படமும் அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.

அந்த படத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவமும், அறிவும் ஈடுசெய்ய முடியாதவை, அதை ஈடுகட்டும் மற்றொரு படம் தான் வால்கரின் காம் அட் ஸீ.

இனி கதை:-
1941ன் நாஜி ஆக்கிரமிப்பு ஃப்ரான்ஸ், ஜெர்மானியப் படைக்கு பாண்டிச்சேரி போலீஸ் போன்றே தொப்பி அணிந்த ஃப்ரென்சு போலீசார் கைப்பாவை, உள்ளூர சுதந்திர தாகம் பொங்கினாலும், நாஜிக்களின் இசைக்கு இவர்கள் தாளம் போட வேண்டியதாக உள்ளது, அங்கே அரசியல் கைதிகளால் உள்ளூர் சிறைகள் நிரம்பி வழிகின்றன, அப்படி ஒரு சிறையைத் தான் நாம் கண்ணுறுகிறோம், அதாவது வரலாற்று சம்பவத்தில் 100 கிளர்ச்சியாளர்கள் ஒரே நாளில் நாஜிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட அந்த 100 ல் 27 பேர் தேர்வாகப் போகும் ஒரு சிறையின் கதை தான் இது.

முதல் நாள் பாரிசின் தெருவீதியில் வைத்து நாஜிப்படை அதிகாரி ஒருவன் ஃப்ரென்ச்சு கம்யூனிஸ்ட் பார்டி சகாக்கள் மூவரால் முதுகில் சுட்டுக் கொல்லப்படுகிறான். இதற்கு வஞ்சம் தீர்க்கவும் பதிலடி கொடுக்கவும் ஹிட்லரிடமிருந்து சர்குலர் வருகிறது. அதில், சிறையில் உள்ள அரசியல் கைதிகளில் 150 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 50,50,50,50 பேராக ஒரிரு நாளில் சுட்டுக்கொல்லப்பட வேண்டும், அவர்கள் பெயர்கள் எல்லா சதுக்கங்களிலும் ஒட்டப்படவும் பட வேண்டும், கொலை சம்பவத்துக்கு காரணகர்த்தா போலீசாரிடம் சரணடையும் வரை இந்த 50,50,50,50 தண்டனை தொடரவேண்டும் என்கிறது சர்குலர்.

ஃப்ரென்ச்சு போலீசாருக்கு காருண்யம், மனித உரிமை என்று பேச நிறைய இருந்தாலும் மனசாட்சியை கழற்றிவைத்து விட்டு ஹிட்லரின் கட்டளைக்கே அடிபணிந்து வேலை பார்க்கும் நாஜிக்களுடனான் கூட்டு அவர்களின் கைகளுக்கு விலங்கிட்டிருக்கிறது,

சுட வேண்டியவர்களின் 200 பெயர்கள் அடங்கிய பட்டியல் ஓவ்வொரு சிறைக்கும் வருகிறது, அந்த 200 பேரில் யாருமே செல்வந்தர்கள் பெரிய குடும்ப வாரிசுகள் இல்லாத படிக்கு பார்த்துக்கொள்ளப்படுகிறது. அந்த பட்டியல் வழங்கப்படும் சிறையில் நாம் கண்ணுறும் Nantes சிறையும் அடக்கம். கடவுளே ஒருக்கால் வந்தாலும் கூட  மாற்றி எழுதமுடியாத ஒரு பட்டியல், அந்த 200 பேர்களில் இதே சிறையைச் சேர்ந்த நாளையே விடுதலையாகப் போகும் ஒருவன் பெயரும் அடக்கம், என்றோ விடுதலையாக வேண்டியிருந்தும் சிற்சில காரணங்களால் விடுதலை தள்ளிக்கொண்டே போகும் ஒருவனது பெயரும் அடக்கம், அதில் 17 வயது சிறுவனது பெயரும் கூட அடக்கம். யாருக்கும் வெட்கமில்லை என்னும் பாரதி வரிகளை நினைவுருத்தும் நிலை.

மணல் குவாரி லொக்கேஷனும் பார்த்தாகிவிட்டது, 9 சவுக்கு கம்பங்கள் 10அடி இடைவெளியில் நடப்படுகின்றன, ராணுவத்தில் க்ளார்க்காக பணியாற்றுபவனைக்கூட அவசர வேலை என தருவித்தாயிற்று, ஒரே நாள் தான் ட்ரெயினிங் என்று அவசர கதியில் சுடவும் கற்றுக்கொடுத்தாயிற்று. கிளர்ச்சியாளர்கள் சாக வேண்டியவர்கள் என்னும் மூளைச்சலவையும் துவங்கியாகிவிட்டது.

அங்கே அன்று காலையிலேயே சமையல் காரர்களால் சாகப்போகிறவர்களுக்கு வழங்க வேண்டி ஆப்பிள்கள் மிகவும் சரிசமமாக ராணுவ நேர்த்தியுடன் நறுக்கப்படுகின்றன, சிகரெட்டுகள் பற்றாக்குறையால் அவை சரிபாதியாக நறுக்கப்பட்டு அடுக்கி வைக்கபடுகின்றன, விருந்துக்கு பின்னர் தாம்பூலம் வழங்கப்படுவது போல இங்கே மரணிக்கும் முன்னர் கிளர்ச்சியாளர்களுக்கு மேலே சொன்ன ரேஷன்கள் வழங்கப்படுவதற்காக தயாராகின்றன.

இன்று விடுதலையாக வேண்டியவனின் பெயரும் படிக்கப்பட்டு வெளியே அழைக்கப்படுகின்றான், அவன் தன் காதலி வெளியே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறாள், இன்று என் விடுதலை தினம் என உருகி மன்றாட, கண்டிப்பான ப்ரென்ச்சு அதிகாரி,இந்த லிஸ்டில் உன் பெயர் உள்ளது,மாற்றுவதற்கில்லை என்கிறார். அவன் தன் காதலியிடன் கொடுக்கச் சொல்லி தன் உடமையை தன் நண்பனான 17 வயது சிறுவனிடம் தர, அடுத்த படியாக பட்டியலில் இருந்து அந்த 17 வயது சிறுவனின் பெயரும் படிக்கப்படுகிறது, அவன் குழந்தை என்கிறார் ஒரு சக கிழவர். அவரின் பெயரும் பட்டியலில் உள்ளது.என்ன கொடுமை பாருங்கள்?,

அனைவரும் அந்த மணல் குவாரி ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துப்போகும் முன்னர் ஒரு மரத் தொழுவத்துற்குள் அடைக்கப்படுகின்றனர், அங்கே ஒரு பாதிரியாரும் பாவமன்னிப்புக்கு வரவழைக்கப்படுகிறார், என்ன ஒரு முரண் பாருங்கள்?, உள்ளே கடவுள் மறுப்பு காம்ரேடுகள்,வெளியே பாதிரி, ஜெர்மானிய அதிகாரியை எதிர்நோக்கிய பாதிரி கேட்கிறார், நீ கிருஸ்துவனா? ஆமாம் அதிலென்ன ஐயம், அவன் பதில் சொல்கிறான், மனசாட்சிக்கு வேலை செய்யாமல் கட்டளைக்கு வேலை செய்யும் நீ எப்படி ஒரு கிருஸ்துவனாக இருக்க முடியும்? எனக் கேட்கிறார் பாதிரி. அந்த மர அறைக்குள் இருந்த காவலர்களை வெளியே அனுப்பிய பாதிரி,

இதுவரை உங்களில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்காது, இனியும் வேண்டாம், ஆனால் நீங்கள் உலகுக்கு, உங்கள் உறவுக்கு சொல்ல வேண்டியவற்றை என்னிடம் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும் மணித்தியாலத்தை அதற்கு செலவிடுகிறேன். உங்களில் காகிதம் பேனா இருப்போர் உறவுகளுக்கு கடிதம் எழுதுங்கள், நான் சேர்ப்பிக்கிறேன் என்கிறார், அங்கே குழுமியிருக்கும் 27 சகாக்களில் ஏனையோர் எழுத ஆரம்பிக்கின்றனர், பேனா காகிதம் இல்லாதோர் மர லூவர்களில் தாம் சாகப்போவதை எழுத துவங்குகின்றனர்.

 உலக சினிமாக்களில் மட்டுமே நடக்கின்ற வரலாற்றை நிகழ் காலத்துக்கு கடத்தி தரும் பரவசம் நிகழ்கிறது திரையிலே. அங்கே ஒருவனுக்கு படிப்பறிவில்லை, அவன் வெளியே இருக்கும் தன் காதலியை எண்ணி மருகுபவனை அணுகி காகிதத்தை நீட்டி கடிதம் எழுதக் கேட்க,அவன் எழுதுகிறான், மனித தன்மை எவனோ ஒரு போலீஸ் காரனுக்கு கசிந்திருக்க அங்கே அந்த காதலன் தன் காதலியைப்பார்க்க 10 நிமிடம் நேரம் கொடுக்கப்பட்டு அவளைப்பார்க்க அனுமதிக்கப்படுகிறான்.அக்கடிதத்தை பாதிரி  வாங்கி மீதியை எழுதுகிறார்.

இன்னும் என்னன்னவோ காட்சிகள், மௌன சாட்சியாக நாம், அங்கே அந்த 27 பேரும் ராணுவ வண்டியில் ஏற்றி அந்த மணல்குவாரிக்கு கூட்டிச் செல்லப்படுகின்றனர், அங்கே அந்த 17 வயது சிறுவன், வேலி தாண்டி கதறும் தன் காதலிக்கு சீட்டு அவசர கதியில் எழுதி அங்கே குழுமியிருக்கும் போலீசின் கையில் திணித்து அங்கே அந்த பெண்களிடம் கொடு, அவர்களுக்கு இது யாருக்கு எனத் தெரியும் என்று சொல்லி ஏறுகிறான். அங்கே ஒரு மூத்த சகா ஃப்ரென்ச்சுபோலீசை பார்த்து நான் ஒரு துப்புறவாளன், ஆனால் உங்களின் சீருடையை விட என் உள்ளாடை சுத்தமாக உள்ளது என்கிறான்.அப்படி ஒரு வசனங்கள் படம் முழுதும் விரவிக்கிடக்கின்றன.

அங்கே நடப்பட்டுள்ள ஒன்பது சவுக்கு கம்பங்களில் 9 ,9, 9 பேர்களாக மூன்று தவணையாக அடுத்தடுத்து கட்டப்பட்டு, அவர்களின் இதயப் பகுதியின் மேலே சட்டைக்கும் மேலே ஒரு பெருக்கல் குறி வெள்ளை டேப்பால் ஒட்டப்படுகிறது, அதன் மேலே 3 சிப்பாய்கள் குறி வைத்து ஒரே தவணையில் சுட 9 பேரும் அடுத்ததுத்து செத்து விழுகின்றனர், அங்கே அவர்களின் நெஞ்சையும் கம்பத்தையும் பிணைத்து கட்டப்பட்ட கயிற்றின் ஸ்கவுட் முடிச்சு கணநேரத்தில் அவிழ்க்கப்பட்டு, அடுத்த தவணை சகாக்கள் கம்பங்களில் கட்டப்படுகின்றனர்,

தம் கண்களை கருப்பு துணியால் கட்டுவதை எந்த சகாவும் விரும்பவில்லை, அதை அவமானமாக கருதி தோட்டாவை கண்ணுறுகின்றனர் சகாக்கள். அங்கே ஒரு அற்புதமான டார்க் ஹ்யூமர் காட்சியை இயக்குனர் பொதித்து வைத்தார், அங்கே ஒரு சகா கம்பத்தில் கட்ட இழுத்து போகையில் அவன் ஒரு நாஜி அதிகாரியைப் பார்த்து நாக்கை சுழித்து பழிக்கிறான், அதைப் பார்த்து அந்த அதிகாரி ரசித்து சிரிக்கிறான். உலக சினிமா மட்டுமே தரும் சுகானுபவம் அது, கிஞ்சித்தும் வேறு வகை சினிமாக்களில் கிடைக்காத உண்மையின் தரிசனம் அது.

அங்கே நம்மையும் ஏன் நாஜிக்களையும் கூட  ஒருகணம் நெக்குருக வைக்கும் காட்சி அரங்கேறியது, ஒரு மரக்கால் அணிந்த ஊனமுற்ற காம்ரேட் ,அந்த 17 வயது சிறுவனது கைகளுடன் விலங்கிடப்பட்டு இழுத்து வரப்பட, அவர் அந்த பொய்க்காலை கழற்றி மணலில் நாஜிக்கள் முன்னே அனாதையாக விடுகிறார், தன் ஊன்று கோலால் கம்பம் நோக்கி நடந்து கட்டப்பட்டு சுடப்பட்டு உயிர்விடுகிறார். அந்த காலணிக்கு இயக்குனர் க்ளோஸ்-அப் வைக்கிறார். அப்படி ஒரு உயிரோட்டமான காட்சி அது.மணல் குவாரி காட்சி தான் இப்படத்தின் அடி நாதம், அது அத்தனை செய் நேர்த்தியுடம் எடுக்கப்பட்டுள்ளது, இசை ஞானி சிறைச்சாலை படத்துக்கு செய்த பிஜிஎம் எப்படி ஒருவரது வாழ்நாளில் மறக்க இயலாதோ? அப்படி ஒரு வரலாற்றை பார்வையாளருக்கு கடத்தும் ஜாலம் பொதிந்த இசை சேர்ப்பு. இசை மேதைகள் இருக்கும் திசைக்கு வந்தனம். அந்த இசையமைப்பாளர் Bruno Coulais திசை நோக்கி வந்தனம். காட்சியின் தன்மையை பார்வையாளனுக்கு கடத்தும் இசை இலக்கணம் எல்லோருக்கும் கைவராது, பிண்ணணி இசை என்பது ரெடிமேட் லூப்புகளில் இல்லை, அவற்றை வெட்டி தொகுப்பதே இசை அல்ல என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

படத்தின் ஒளிப்பதிவாளர் Lubomir Bakchev,மாபெரும் வரலாற்றுப் பிண்ணணி திரைப்படத்துக்கு இவர் ஆற்றிய பங்கு அதி உன்னதம் ,ப்ரேவோ!!!.

மீண்டும் மீண்டும் அசைப்போட்டுப்பார்க்க வைக்கும் படைப்பு, விளம்பரங்கள் ஏதுமின்றி உலக சினிமா ஆர்வலர்கள் கண்களுக்கு  மட்டுமே விருந்தாகி வெகுஜன பார்வைக்கே சென்று சேராமல் பெட்டிக்குளே முடங்குவது தான் கலையின் சாபமும் கூட, இருந்தும் கலைஞர்களுக்குள் எரியும் அந்த நெருப்பு தான் அடுத்த படைப்புக்கான விதை, ஒப்பற்ற கலைஞனின் கர்வம் அது, வாலகரின் அடுத்த படைப்புக்காக ஏங்கும் ஒரு உலகசினிமா ரசிகன் நான்.
படத்தின் ஒரு காட்சி யூட்யூபில் இருந்துபடக்குழு பட்டியல்:
Production companies: Provobis (in co-production with Les Canards Sauvages, Arte France, Bayerischer Rundfunk, Norddeutscher Rundfunk, Südwest-rundfunk)
Cast: Léo Paul Salmain, Ulrich Matthes, Marc Barbé, Martin Loizillon, Sébastien Accart, Jean-Pierre Daroussin
Director / Screenwriter: Volker Schlöndorff
Producer: Bruno Petit
Co-producers: Thomas Teubner, Martin Choroba
Director of photography: Lubomir Bakchev
Production designer: Stéphane Makedonsky
Costumes: Agnès Noden
Editor: Susanne Hartmann
Music: Bruno Coulais
Sales Agent: Provobis, Berlin
No rating, 94 minutes
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)