ஃபியர் அண்ட் டிஸையர் Fear and Desire 1953
தாசி 2 | தெலுங்கு | கொக்கு தலையில் வெண்ணெய்
கபாலி
எங்கள் மூன்று பேருக்காக கபாலி ,மகிழ்வதா? வேதனைப்படுவதா? ,நான் hand rest ஐ தூக்கிவிட்டு படுத்துக் கொண்டு பார்த்தேன்.பக்கத்து திரையிலும் கபாலி தான் அது அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பித்தது , ஆனால் அக்காட்சிக்கு அரங்கு நிறைந்ததா தெரியவில்லை,இன்று பகல்காட்சிக்கு சீட் ஹவுஸ் ஃபுல் அதற்கு டிக்கட் கிடைக்கவில்லை.
காலை 5 மணிக்கு படம் முடிந்தது, இது அதிகாலை 2-00 மணிக்கு துவங்கியக் காட்சி, ஆன்லைனில் புக் செய்கையில் இந்த இரண்டும் கெட்டான் காட்சிக்கு 400 சீட்களில் 100 ஆவது புக் ஆகியிருந்த்து,
ஆனால் ஏன் புக் செய்தவர்கள் வரவில்லை எனத் தெரியவில்லை ?, இணைய விமர்சனங்களால் நொந்து போய் ஏன் ரெண்டும் கெட்டான் காட்சிக்கு போக வேண்டும் என நினைத்தனரா? தெரியவில்லை.
இது போல அரங்கு நிறையாத காட்சிகள் மிகவும் ஆபத்தானவை, முழுப்படத்தையும் ஒரு விஷமி தன் மொபைல் போனில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி விட வழி வகுப்பவை, இனிவரும் நாட்களில் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் திரையுலகம்.
=====
கபாலி நல்ல படம், இந்த பில்லா1 , 2 ,மங்காத்தா போன்ற படங்களையே ஹைப் ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் இந்த நல்ல படத்தை முதல்நாளே கழுத்தைத் திருகிக் கொல்லத் துடிப்பது ஏன் ? எனத் தெரியவில்லை,
படத்தை வாய்ப்பு கிடைத்தவர்கள் தியேட்டரில் மட்டும் பாருங்கள், அது தான் இந்த கம்ப்ளீட் ஆக்ஷன் த்ரில்லரை முழுதாய் ரசிக்கும் வழி, படம் முழுக்க ரஜினி,படம் முழுக்க ஸ்டைல், படம் முழுக்க ஆக்ஷன், படம் முழுக்க டீடெய்ல் என கபாலிக்குழுவே நன்கு உழைத்துள்ளது, அதை மதித்தால் தான் தமிழ் சினிமாவின் தரம் உயரும், இனி ரஜினி படம் என்றால் தளபதி அல்ல, கபாலி தான் பெஞ்ச் மார்க்.
தவிர இது வேற்று நாடான மலேசியாவில் தமிழர் இரண்டாம், மூன்றாம் குடிமக்களாக நடத்தப்படுவதை, அதற்கான துணிச்சலான எதிர்ப்பை திறம்பட இப்படி ஒரு முழுமையான தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ளது,ரஜினி போன்ற ஒரு நடிகர் தமிழர் பிரச்சனையைப் பேசுவது, இப்பிரச்சனை என்ன? என்று தெரியாதவர்களுக்கும் இதைக் கொண்டு சேர்த்துள்ளது.
நம் தமிழ் நாட்டுக்கு டாஸ்மாக் போல மலேசியாவில் போதை மாத்திரை, பவுடர் ஆகியவை பொது மக்களுக்கு கடும் அச்சுருத்தல் என்பதை புரிந்து படம் பாருங்கள், அதன் காரணமாக அங்கே பல நூறு மறுவாழ்வு மையங்கள் உண்டு, பல்லாயிரம் சோகக் கதைகள் உண்டு, அங்கே உள்ள கேங்ஸ்டர்கள் எண்களால் தான் அழைக்கப் படுகின்றனர் என்பதையும் அறிக,இதில் வரும் 43 கேங் என்பதும் அப்படி ஒன்று தான்.
கூடவே திருமணத்துக்கு முந்தைய பாலுறவு,டீன் ஏஜ் குழந்தைப்பேறு, பெண் கேங்க்ஸ்டர்கள், எட்டாக்கனி உயர் கல்வி,தமிழருக்கு மறுக்கப்படும் வேலைவாய்ப்பு, சமத்துவமற்ற வாழ்க்கை முறை, போன்ற தலையாய அச்சுருத்தல்கள்.
அவற்றை ஆனவரை ஒரே திரைப்படத்தில் நம்பகத் தன்மையுடன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.கூடவே மிதமான தலித்தியமும் உண்டு.ரஜினியின் உயிர் நண்பர் அமீர் (ஜான் விஜய்) கதாபாத்திரத்தின் நடை உடை பாவனை அனைத்தும் திருமாவளவன் பாதிப்பிலேயே உருவாகியுள்ளது.
மலேயத் தமிழர் கலாச்சாரம் நம் நாட்டைப் போன்றதே, கடல் கடந்தும் அந்த விளக்கு அணைந்து விடாமல் நூற்றாண்டுகளாக காத்து வருகின்றனர்,அங்கும் மாரியம்மன் கோவில்கள், தீமிதி, கிடாவெட்டு, படையல், குறி சொல்லுதல்,முதல் மரியாதை, மசானக் கொள்ளை, ஜோதிடம், சூனியம் வைத்தல் ,தீட்டுக் கழித்தல் என எல்லாம் உண்டு. அதைக் கூட சிறப்பாக அந்தந்த இடங்களில் காட்சிப் படுத்தியுள்ளார் ரஞ்சித்.
இதெல்லாம் ரஜினியின் படங்களில் முன்பு அவர் செய்யாதது, அவரை வைத்து படம் இயக்கிய எந்த மூத்த இயக்குனருமே இதன் முன் யோசிக்காதது,
மிகுந்த துணிச்சலான, மலேய ,சீன பிரதிநிதிகளை எதிர்க்கும் வசனங்கள் , காட்சிகள்,அதில் சற்றும் சமரசம் கிடையாது, படம் பிடிக்க உதவினார்களே என்று அவர்களுக்கு முதுகு சொறியவில்லை, மிகுந்த ப்ரொஃபஷனலிஸம் ததும்பும் காட்சிகள், செய்நேர்த்தி,
கோட்டூர்புரம் அடையார் ஹவுஸின் உள்ளே முதன் முறையாக ஒரு காட்சி படமாக்கியுள்ளனர், பாண்டிச்சேரி ஆலோவில்லின் மண் சாலையில் முதல் முறையாக படமாக்கியிருக்கின்றனர், இது போல நிறைய தீஸிஸ் உண்டு, சிறு குறைகள் இருந்தாலும் வெளியே தெரிவதில்லை.
இதையே மெதுவான படம் என்பவர்கள் ரீனோ சீசன் படத்தின் ஆமை வேகத்தில் படம் எடுத்திருந்தால் என்ன சொல்லுவார்கள்?
நாம் அந்நிய உலகப் படங்களான 22 புல்லட்ஸ், ரீனோ ஸீஸன்,ட்ஜாங்கோ அன்செயின்ட், கில்பில், ப்யூட்டிஃபுல் , 21 க்ராம்ஸ் ,அமோர்ரஸ் பெர்ரோஸ், , Rosario Tijeras போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்து வியப்போம், ஆனால் நம் தமிழில் அதே தரத்தில் ஒரு நல்ல படம் வந்தால் அதைக் கொண்டாடாமல் சேறு வாரிப் பூசுவோம்.என்ன மாதிரி நண்டுகள் நாம்?!!!
ரங் ரஸியா (rang rasiya ) (2008)
19 ஆம் நூற்றாண்டு ஓவியரான ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் நிரம்பியது, அவர் மீதான புனித பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது நிலைத்துவிட்டதால் அவர் மீதான உண்மையான மதிப்பீடுகள் நம்மிடம் இல்லை, இத்தனைக்கும் அவர் வரைந்த இறைவியர் படம் இல்லாத வீடுகள் குறைவு
ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாற்று நாவல், மராத்தி எழுத்தாளர் ரஞ்சித் தேசாய் எழுதி 1960களில் வெளியானது, அதை இயக்குனர் கேத்தான் மேத்தா ( மங்கள் பாண்டே படத்தின் இயக்குனர்) திரைக்கதை வடிவம் தந்து இயக்கி ரங் ரஸியா என்று இந்தியிலும், colours of passion என்று ஆங்கிலத்திலும் உருவானது, இது 2008 ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் வெளியானது, பொருளாதார நெருக்கடியால் அதன் பின் 6 வருடங்கள் கழித்தே 2014 ல் இந்தியாவில் வெளியானது
இப்படத்தில் ரவிவர்மாவின் பிறப்பு, வளர்ப்பு, ஐரோப்பிய தைல பாணி ஓவியத்தின் மீதான நாட்டம்,அப்பாணியில் புராதான கதை மாந்தரையும், இந்து கடவுளரையையும் முயன்று பார்த்து அவர் பெற்ற நிபுனத்துவம் , அதனால் அவர் பெற்ற அகில உலக கவனம், அவர் வரைந்த ஓவியங்கள் உருவான பின்னணி, அவர் சந்தித்த சங்பரிவார் அமைப்புகளின் அச்சுருத்தல்கள், தாக்குதல்கள், வழக்குகள் , இவரின் ஓவித்திற்கான மாடல்கள், அவர்கள் மீதான மையல், பெற்ற விருதுகள், இவரது இறைவியர் ஓவியங்களை வெற்றிகரமாக லித்தோக்ராஃப் பிரதிகளாக சந்தைப் படுத்திய விதம், ப்ளேக் நோய் இந்தியாவில் பரவிய போது, இவர் இறைவியரை ஆடையின்றி வரைந்தது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு இவர் அடித்து துவைக்கப்பட்டு இவரின் அச்சுக்கூடம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், இவர் இந்திய திரை மேதை பால்கேவுக்கு முதல் திரைப்படம் உருவாக பொருளுதவி செய்தது என நிஜ சம்பவங்களை மிகுந்த அழகியலுடனும், காதல் காட்சிகளில் சரசம், விரசம் ததும்பவும் படமாக்கியிருக்கிறார் கேத்தான் மேத்தா
ஜிஸ்ம் புகழ் நடிகர் ரந்தீப் ஹூடா ராஜா ரவி வர்மாவாக தோன்றியுள்ளார்,
நடிகை நந்தனா சென் மிகவும் துணிந்து இவரின் காதலி சுகந்தா வேடத்தில் தோன்றியுள்ளார், அவரின் துணிச்சலுக்கும் அற்பணிப்புக்கும் இந்த காஹே சத்தாயே ரெப்பியா என்னும் பாடலே சான்று
ரவிவர்மாவின் வாழ்க்கையை இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இயக்கி 2011ல் மலையாளத்தில் வெளியான மகரமஞ்சு ஒரு முழுமையில்லா முயற்சியாக அமைந்தது, அதில் ரவி வர்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை விட அவரின் காதல் களியாட்டங்களுக்கே முக்கியத்துவம் இருந்தது, சந்தோஷ்சிவன் அதில் ரவிவர்மா, கார்த்திகா அவரின் காதலி சுகந்தா, காஸ்டிங்கில் சொதப்பிய படம், அதைவிட ரங்ரஸியா பல வகையிலும் முன்னோடியும், முழுமையான படைப்பும் ஆகும்.
இப்படத்தில் சந்தோஷ் சிவன், பல்கேரிய ஒளிப்பதிவாளர் Christi bakalov, rali raltchev ஆகிய மூவரின் ஒளிப்பதிவு இப்படத்தை நூற்றாண்டு காலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றால் மிகையில்லை,அதே போன்றே சந்தேஷ் ஷாண்டில்யாவின் இசையும்
காஹே சத்தாயே ரெப்பியா பாடல் இங்கே,வயது வந்த கலா ரசிகர்களுக்கு மட்டும்,
இவ்வருடம் மட்டும் ரந்தீப் ஹூடாவுக்கு சரப்ஜித், சுல்தான், லால்ரங், Do Lafzon Ki Kahani என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன, வித்தியாசமான சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் தன்னை அற்பணிக்கும் நடிகர் இவர், இவர் படங்களை தேடிப் பாருங்கள்.
https://youtu.be/shMisppv_yE
முழுப்படமும் யூட்யூபில் உண்டு,
டாரண்ட் இங்கே
https://torrentz.eu/fbec0ce7aba36def218f409b55fafc84eb2b1b48
புரவ்ருதம் ( puravrutham ) மலையாளம் (1988)
இயக்குனர் லெனின் ராஜேந்திரனின் புரவ்ருதம் puravrutham (1988) இடதுசாரி சிந்தனைகள் பேசிய அருமையான படம்,
நக்ஸலைட் புரட்சி உருவாவதற்கு முந்தைய கேரளத்தின் குக்கிராமத்தில் , தம் கூலியாட்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளியை, கடைசி வரை எதிர்த்து நின்று போராடும் ஓர் உண்மை வீரனின் கதை,
ராமன் என்ற மைய கதாபாத்திரத்தில் ஓம்புரி, அவரின் மனைவியாக ரேவதி, இவர் தன் மனைவியை முதலாளிக்கு புரிந்துணர்வுடன் கூட்டித் தராத காரணத்தால் இவர் ப்ரஷ்டு செய்யப்பட்டு ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப் படுகிறார்.இவருக்கு தங்க இடம் தரக்கூடாது, அருந்த கள் தரக்கூடாது, மளிகை தரக்கூடாது, சவரம் செய்யக்கூடாது, வைத்தியம் பார்க்கக் கூடாது என ஆயிரம் கெடுபிடிகள்.
இவர் அதையும் மீறி மனைவியுடன் விவசாயம் செய்கிறார்.யார். வந்தாலும் வீழ்த்துகிறார்.
இவரை அடக்கி ஒடுக்க வெளியூரில் இருந்து கூட்டி வரப்படும் களரிவீரனாக முரளி,ஊருக்குள் வந்தவர் ராமனின் அசல் வீரம் பார்த்து பிரமித்து அவனின் நண்பனாகிறார்,
அங்கே முதலாளியால் வன்புணர்ந்து விதவையாக்கப்பட்ட மாப்ளமார் சமுதாயப் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்,அப்பெண்ணை மணமுடிக்க விழைகிறார்.
இவர்கள் முன்னெடுத்தப் புரட்சி என்னவாகிறது? என்பது தான் மீதக் கதை, இது முதலாளி வர்க்கத்தின் வேடகைக்கு பலியான ஆயிரமாயிரம் ஏழைக் கூலிகளின் உண்மைக்கதை
ஓம்புரி, முரளி, ரேவதி, பாபு நம்பூதிரி,கூலிகள் யார் திருமணம் செய்தாலும் நைச்சியமாகப் பேசி முதல் ராத்திரியில் முதலாளிக்கே கூட்டித் தரும் கணக்காளனாக இன்னசன்ட்,
முதலாளியாக பாலன் கே நாயர் , மற்றும் கேபிஏஸி லலிதா என அருமையான காஸ்டிங்கைக் கொண்ட படம்,
ராமசந்திரபாபு ஒளிப்பதிவு மிகுந்த ரசனையுடன் இருக்கும், வனக்காட்சிகள், வயல் பரப்புகள், மின்சாரமில்லாத ஓர் கிராமம், அதன் மனிதர்கள் என அச்சு அசலாக காட்டியிருப்பார், கவளம் நாராயண பணிக்கர் நாட்டார் பாணியில் இசையமைத்துள்ளார்.
முதலாளிமார்கள் தங்களிடம் வேலை செய்த கூலிகளின் மனைவிமாரைப் பெண்டாள்வதை விதேயன், தலப்பாவு, பரதேசி போன்ற திரைப்படங்கள் பேசியது, இது அதற்கெல்லாம் முன்னோடி
முழுப்படமும் இங்கே, சப்டைட்டில் இல்லை, ஆனாலும் புரியும், அவசியம் பாருங்கள்
https://youtu.be/vknslLCjjWs




