சினிமா விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மகிழ்ச்சி [Magizhchi][2010]


ண்பர்களே!!!,
நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.
எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தலைமுறைகள் என்னும்  நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே நான் அறிவேன், அதன் கதையையும் அவரின் இந்த பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது.

சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.நிறைய பேர் இந்த படத்தை பார்க்க விரும்பியதையும் நான் அறிவேன்.யாரும் இவ்வளவு நல்ல திரைப்படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்களின் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக படிந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் ஒரு சமூகத்தாரை மையமாக வைத்து பின்னப்படும் குடும்பக்கதைகளை எடுக்க துணிவதேயில்லை, மாயாண்டி குடும்பத்தார், வம்சம் போல விதிவிலக்குகள் இருந்தாலும் அவை சாதிச்சண்டை, பங்காளிகளுக்குள் அடிதடி போன்றவையையே முன்னிறுத்தி பயணிக்கும்,

து போல அதிகம் கொண்டாடப்பட்ட  படைப்பிலக்கியத்தை திரையில் வடிக்கும் போது கூட எழுத்தாளரின் அசலான படைப்பை திருத்தியோ மாற்றியோ செய்யத்துடிக்கும் இயக்குனரின் அதிமேதாவித்தனமே தெரியும், இதில் அதிர்ஷ்டவசமாக தலைமுறைகள் நாவலே தெரிகிறது, இது எழுத்தாளர் நீல.பத்மனாபனுக்கு கிடைத்த மரியாதையாகவே கண்டேன். அவருக்கு முழுமையாக க்ரெடிட்டும் கொடுத்திருப்பது,இயக்குனர் வி.ஏ கௌதமனின் நேர்மையை பறை சாற்றுகிறது.  மேலும் இவர் தமிழில் பேசப்பட்ட இது போன்ற படைப்புகளை  திரையில் வடிக்கவேண்டும், இவரின் ப்ரொடக்‌ஷனுக்கு பெயரே அதிர்வு திரைப்பட்டரையாம், இயக்குனர் எல்லாவற்றையுமே சிறந்த கலை நுணுக்கத்துடன் அணுகியிருக்கிறார் என்பது படம் பார்த்தால் ஒருவருக்கு புரியும்.

டம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ,என்ற குறிப்புக்கு பிறகு வண்ண ஓவியங்களை வைத்துச் சொல்லப்படும் பலநூற்றாண்டு வருடத்துக்கு முன் வாழ்ந்த தங்கம்மை, தாயம்மை என்னும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய நேரேஷன் ஃப்ளாஷ்பேக்கை நாம் பார்க்கிறோம், இது மிக எளிமையும் அருமையாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம்  அரசனுக்கே குலஅபிமானத்தால் பெண் தரமறுத்து  தங்கம்மை, தாயம்மை  இருவரையும் உயிருடன் புதைத்த நகரத்தார் வம்சம் பற்றியும் அவர்களுக்கு தங்கள் சாதி எவ்வளவு உயரியது? என்றும் அறிகிறோம்.அதன் பின்னர் சமகாலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இரணியல் என்னும் சிற்றூரில் வந்து குடியேறிய ஏழூர்ச்செட்டி வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உண்ணாமலை ஆச்சியின் [சுகுமாரி] குடும்பத்திற்குள் நாம் நுழைகிறோம்.

ண்ணாமலை ஆச்சியின் பேரனாக திரவி என்னும் பாத்திரம்,டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கிறார்.,அவரைவிட ஒன்றரை வயது மூத்த அன்பு சகோதரி நாகு என்ற நாகம்மை  எனும் மற்றொரு பாத்திரம். திரவிக்கு தங்கையாக விசாலம் என்னும் இன்னொரு பாத்திரம். இயக்குனர் கௌதமனே திரவி என்னும் பிரதான பாத்திரத்தில் நடித்ததும் அழகு. ஏனைய நகரத்தார் இன ஆண்கள் ஆடை அலங்காரங்களில் ஆர்வமின்றி எளிமையாகவே இருப்பர். அவர்களுக்கு முக்கியம் குடும்பம், தொழில், இறைவழிபாடு. அதற்கு எளிய தோற்றமுள்ள இவர் பாந்தமாய் பொருந்தினார். 

குழலி என்னும் பாத்திரத்தில் நடிகை அஞ்சலி திரவிக்கு முறைப்பெண்ணாக வந்தார் நல்ல அழகும் குறும்புத்தனமான நடிப்பையும் இவர் கண்ஜாடைகளாலேயே வெளிக்காட்டியிருந்தும், அவருடன் நீரில் நனைந்து இயக்குனர் இரண்டு பாடல்களை செய்தும் தானே கதாநாயகன் எனும் ஆசையில், கதாநாயகியை நனையவிட்டு தோலுரித்து காட்டியும், தொன்று தொட்டு இயக்குனர்கள் செய்யும் தவறையே செய்துள்ளார்.இடுப்பு தொப்புள் காட்டினால் தான் விரசம் கிடையாது, கதைக்கு அவசியமில்லாத, அஞ்சலி  முதல் மரியாதை ராதா போல சீலை அணிந்து  ஆற்றில் அருவியில் நனைந்து புரண்டு பாடி ஆடும், இரண்டு பாடல்களுமே எனக்கு அநாவசியமாய் பட்டது, வினியோகஸ்தர்களுக்காக கூட வைத்திருக்கலாம், அதற்கு பதில் நாவலில் வரும்  சின்ன  சின்ன டீடெய்ல்களை படமாக்கியிருக்கலாம் என்பதே என் ஆதங்கம். விட்டுவிடுவோம். 

முக்கியமாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் கூணாங்கனிப்பாட்டா [வி.எஸ்.ராகவன்] இவரை எல்லோரும் பாட்டா என்கிறனர்,அப்படி ஒரு அன்பான யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் மனிதர், இவரை பாலச்சந்தர் தயாரித்த டீவி சீரியல்களில் பார்த்து எனக்கு  மிகவும் பிடிக்கும் ,மூத்த தலைமுறை மனிதராக இருந்தாலும் இளையதலை முறையின் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளிக்கிறார். இவரின் தங்கை தான் உண்ணாமுலை ஆச்சி. புதிய தலைமுறையின் முற்போக்கு கருத்துக்களே சற்றும் ஒவ்வாத ஆச்சிக்கு மெதுவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் மைய பாத்திரம் பாட்டாவுக்கு. பாட்டாவிற்கு பொணமு ஆச்சி, அணஞ்சிப்பிள்ளை ஆச்சி என இரு மனைவிகளும், ஊருக்கு வெளியே அம்முக்குட்டி எனும் மலையாளிப் பெண்மணியின் தொடர்பும் உண்டு. அம்முக்குட்டியின் மூலம் ஒரு அழகியபேத்தியும் உண்டு. அந்தப்பெண் திரவியை ஒருதலையாகக் காதல் செய்கிறாள். திரவி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்றிருக்கிறாள். தாத்தா பாட்டா தன் இளமைக்காலங்களில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, தன் சொத்துக்க்களை பெண்சுகத்திலேயே அழித்திருக்கிறார். இப்போது மத்தளம் போல இரண்டு மனைவிகளிடமும் ஏச்சுபேச்சுடன் அடிவாங்குகிறார்.

யக்குனர் சீமானுக்கு நடிப்பு மிக இயல்பாய் வருகிறது, அவர் இனிமுழுநேர குணச்சித்திர நடிகராகவே ஆகலாம். இதில் திரவியின் தாழ்த்தப்பட்ட சமூக நண்பன் குற்றாலமாக வருகிறார். ஒரு காட்சியில் இன்று மொச்சை மூட்டை சகாயவிலைக்கு கிடைத்தது அதுதான் வாங்கிவந்து தெருத்தெருவாய் போய் கூவி விற்றேன், என்று திரவியிடம்  சொல்லியபடி மொச்சை மூட்டை கட்டப்பட்ட சைக்கிளை தள்ளிக்கொண்டே சட்டையை அணிவார். நாவலை முழுக்க ஒன்றி படித்திருந்தால் ஒழிய , இப்படி கதாபாத்திரமாக  மாறமுடியாது. தன் ஆடி அடங்கிய பக்கவாதம் தாக்கிய அப்பாவை தனிஆளாக பார்த்துக்கொள்கிறார். சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதையுடனான முற்போக்கு சிந்தனைகளுடன்  வாழும் பாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தி வந்துள்ளது.கஞ்சா கருப்பும் உண்டு, இரண்டு மூன்று காட்சிகளில் வருகிறார்.அவ்வளவுதான்.

டத்தில் வரும் கொடியபாத்திரம் என்றால் அது புத்தன் தெருவைச் சேர்ந்த செவந்த பெருமாள் [சம்பத்] பாத்திரமே, இவன் திரவியின் சகோதரி நாகுவை  ஆறு மாதத்திற்கு முன்பு  தான் விமரிசையாக,சீர் செனத்தி வலியக்கேட்டு வாங்கி திருமணம் முடித்தான். மளிகைக்கடை நடத்தும் இவன் மைனர் போல உடுத்திக்கொள்கிறான், புல்லட்டிலும் வலம் வருகிறான். ஒரு நடிகன் வரைந்து கொள்வது போன்ற மீசையுடன்  இருக்கும் ஒரு தடிப்பயல், ஆண்மைக் குறைபாடுமுள்ளவன்.  ஊரார் முன்னர் தன் குறை எடுபடக்கூடாது என்று, நாகம்மையை வெறும் எட்டே மாதத்தில் வாழாவெட்டியாக திருப்பி அனுப்பிவிடுகிறான்.  நகரத்தார் சமூகத்தில் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதொ அதே போன்றே பெண்ணுக்கும் சம உரிமை உண்டு.ஆண் தொழிலை கவனித்தால்,பெண் வீட்டு நிர்வாகத்தை கவனிப்பாள்,விவாகரத்து என்பதே கேட்க முடியாத சமூகம்.அப்படி ஒரு சமூகத்தில் கட்டிய மனைவிக்கு செவந்த பெருமாள் கூசாமல் வன்கொடுமை செய்கின்றான்.

திரவியின் தந்தை நாகரு பிள்ளை எவ்வளவோ கெஞ்சியும் ஊரைக்கூட்டி பேசியும் நாகுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான் இந்த கிராதகன். அவன் அம்மாவோ படு கிராதகி, கொலைபாதகி,அரிசியில் கற்களை பொறுக்காமல்  தான் சோறு வடித்துவிட்டு, பழியை மருமகள் மேல் கூசாமல் சுமத்தி அடியும் சித்திரவதையும் மகனிடமிருந்து வாங்கித்தரும் இழிபிறவி. நாகம்மை பிள்ளை பெறவே தகுதியில்லாதவள் என்றும்,அவள் ஒரு பெண்ணே அல்ல,  என்றும் அவளை புண்படுத்தி நடைபிணமாக்கும் இவனின் பாத்திரம் , காணும் யாருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். திரவிக்கு அவன் படித்த அரசுப்பள்ளியிலேயே ஆசிரியர் வேலை கிடைக்கிறது, அதுவும் அவனுக்கு பாடம் நடத்திய   மோசஸ் வாத்தியார்[பிரகாஷ்ராஜ்] தலைமையிலேயே கிடைக்கிறது, அவருக்கும் பெருமையோ பெருமை. அது முதலே திரவிக்கு மிகுந்த பக்கபலமாய் ஆகிறார் மோசஸ் வாத்தியார்.

ரு நாள் மோஸஸ் வாத்தியாரும் திரவியும்  நாகுவை  ஊரின் பெண் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துப்போகிறார்கள். மருத்துவர் சகோதரி நாகுவை நன்கு பரிசோதித்த பின்னர்  நாகுவிடம் எந்த குறையும் இல்லை, செவந்தபெருமாள் தான் ஆண்மையற்றவன். என்னும் சுடும் உண்மையை இருவக்கும் உரைக்க கொதிக்கின்றனர். அதன் பின்னர் அக்காவின் கணவன் செவந்த பெருமாளிடம் வீறுகொண்டு எகிறும் திரவியின் கோபம் மிக மிக யதார்த்தம். பெண்களின் மீது படத்தில் பிரயோகிக்கப்படும் காலால் நெஞ்சில் மிதிப்பது, சோற்றில் கண்டெடுத்த கல்லைக்கொண்டே நாகுவின் கையை கீறி ரத்தம் வர காயப்படுத்துவது, உயிரோடு மண்ணை தள்ளிமூடுவது, போன்ற வன்முறை மிகுந்த ஆயாசத்தை தருகிறது, இருந்தாலும் நாவலில் இருக்கும் டீடெய்லை அவர் பின்பற்றியிருக்கக்கூடும் என்பதால் விட்டுவிடுவோம்.

வாழாவெட்டியான மூத்த சகோதரி நாகுவை மறுமணம் செய்து கொண்டு நல்லபடியாக வைத்து வாழத்துடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நண்பன் குற்றாலம். இதை துணிந்து ஏற்றுக்கொண்ட திரவியும் சகோதரி நாகுவும்.  இதை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மூத்த தலைமூறை பெரிசுகள் உண்ணாமுலை ஆச்சி, பாட்டா, நாகரு பிள்ளை அவர் மனைவி ஆகிய நால்வரும். அடுத்து திருமணத்துக்கு காத்திருக்கும் வயதுக்கு வந்த தங்கை விசாலம் வேறு,  நாகுவின் திருமணம் செய்ய வாங்கிய கடனில் அடமானத்தில் இருக்கும் வீடு ஒரு பக்கம்,  தன் பெண் குழலிக்கு திரவியுடன் உடனே திருமணத்தை நடத்தத்துடிக்கும் தாய்மாமன் மறுபக்கம், பொய்த்துப் போகும் அபாயத்தில் திரவி குழலியின் காதல்,!!! ....

இனி என்ன ஆகும்?!!! அருமையாக திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.  ஒருவருக்கு நாவலை படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. சில குறைகள் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. தமிழில் இது போல படைப்புகள் எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்து வருவது, இது போன்ற படங்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அமைகிறது.   படத்தின் ஒளிப்பதிவும் ,இரண்டு பாடல்களும்,இசையும் பிண்ணணி இசையும்  மிகமிக நன்றாக இருந்தது,நாம் வித்யாசாகரை மிகவும் இழக்கிறோம் அவர் இப்போது மலையாளத்தில் கோலோச்சுகிறார்.,  ஆகமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒரு குடும்பப்படம்.


ந்த பொருளுக்குமே விளம்பரம் அவசியமாகிறது, உணவுப்பண்டத்தை தவிர இன்றைய உலகில் எல்லாவற்றையுமே கூவிக்கூவி விற்க வேண்டியதாயுள்ளது. இலக்கியம் நிறைய மக்களை சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்படி பாடுபட்டு படம் எடுத்துவிட்டு அதற்கான மார்க்கெட்டிங்கை, விளம்பரத்தை அளிக்கத் தவறியது விந்தையும் வேடிக்கையாயும் உள்ளது, தமிழ் திரையுலகின் பகாசுரர்களான சன் குழுமம், அல்லது ரெட் ஜெயண்ட்டிடம் இதை விற்றிருந்தாலும் நிறைய மக்களை சென்று சேர்ந்திருக்குமே!!! என்ற ஆதங்கம் எழுந்தது . அவர்கள் நினைத்தால் காக்கை குருவியைக் கூட ஊர்ப்பருந்தாக்கி உயரப்பறக்கவைப்பார்களே?!!!, உலகமகா சாமர்த்தியசாலிகள்.

இது நண்பர் செ.சரவணகுமார் எழுதிய தலைமுறைகள் புத்தக விமர்சனத்தின்   சுட்டி. இதில் நாவலைப்பற்றிய சீரான அலசலையும் கதையையும் ஒருவர் படிக்கலாம்.
மகிழ்ச்சி=பெருமகிழ்ச்சி
=======00000=======
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=======00000=======

ஜஸ்ட் வாக்கிங் [2008] [Sólo quiero caminar][ஸ்பெயின்][15+]

ண்பர்களே!!!
இந்திய ஐகான் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை ஹிந்தியில், தமிழில்,தெலுங்கில் எடுப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
அது என்னவா?!!!

1.கடைசிவரை சஸ்பென்ஸை குலைக்காத,  டார்க்ஹ்யூமர் கோட்டிங்  செய்யப்பட்ட, பிரமாதமான ட்விஸ்டுகள் கொண்டதுமான நான் லீனியர் திரைக்கதை வடிவம்.

2.அமெர்ரோஸ் பெர்ரோஸ் படத்தில் நடித்த உங்கள் அபிமான நட்சத்திரங்கள் அங்கங்கே சிறு வேடங்களில் நடித்த படம். தவிர ஸ்பெயின் நாட்டின் அருமையான நட்சத்திரங்கள் பங்காற்றிய படம். எந்த கதாபாத்திரமும் இதில் திணிக்கப்பட்டதல்ல,எதாவது ஒரு செய்தியை சொல்லிச்செல்கிறது. கள்ளநோட்டு அடித்து அதை இஸ்திரி செய்வது எப்படி?!!! என்னும் டெமோவும்  கூட உண்டு.

3.மிக அழகாக வடிக்கப்பட்ட நான்கு மிகுந்த மனோதைரியம் கொண்ட பெண்கள் கதாபாத்திரங்கள், இதையே நவீன ராமாயணம் என்று மணி தன்னை தேற்றிக்கொண்டு இந்த நான்கு பெண்கள் தான் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருகனர், என்றும் மாற்றி அமைக்கலாம். பிரதான பாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா, ப்ரியாமணி, மூப்பு கொண்ட மூத்த சகோதரி வேடத்துக்கு சுஹாசினி [தேசிய விருது பெற்றவராயிற்றே!!!]

4.தவிர இதில் பேபிஃபேஸ் என்னும் செல்லப்பெயரில் வரும் பிரதான கதாபாத்திரம், ஏற்கனவே சூர்ய பார்வை என்னும் திருட்டுக்கதையில் அர்ஜுனும் , தலைநகரம் படத்தில் குஸ்புவின் கணவரும் செய்த, நியாயமான கேங்ஸ்டர் பாத்திரங்கள் கொண்டிருந்த சமூக சிந்தனையை கொண்டிருக்கிறார், அது என்னதா? அது தான் பெண்களை, குழந்தைகளை வதைக்க மாட்டேன், கொல்லமாட்டேன் என்பதே . இந்த பாத்திரத்தையே மணிரத்னம் ஹனுமனாக  சித்தரித்துக் கொள்ளலாம்.

5. நான்கு சகோதரிகளில் அனா என்னும் விலைமகள் கதாபாத்திரத்துடன்,  அவளின் அற்பணிக்கப்பட்ட வாய்புணர்ச்சியால் மனதைப் பறிகொடுத்து , மனைவியாக்கி கொள்ளும்   அட்டகாசமான. ஃபெலிக்ஸ் என்னும் வில்லன் கதாபாத்திரம்,  கதாநாயகன் பேபிஃபேஸும் இவனுடனேயே நட்புக்கு இலக்கணமாக கூடவே இருப்பதால் துரியோதனன், கர்ணணாக கூட இவர்களை சித்தரிக்கலாம். 

க அட்டகாசமான ராமாயணம் + மகாபாரதம் கலந்த கோம்போ ஆஃபராக மிளிரக்கூடும் இப்படம். ஃபெலிக்ஸ் என்ன ஒரு ஆர்ப்பாட்டமான கேங்ஸ்டர் அவன்?!!!, ஒரே ஒரு வசனம் சோற்றுப்பதமாக தருகிறேன், பெண்ணே இது மரக்கட்டையல்ல, உன் பற்களை பார்த்து பயன்படுத்து என்பதுதான் அது!!!. எத்தனையோ ஹாலிவுட் படங்களில் வாய்ப்புணர்ச்சி காட்சிகள் வந்திருந்தாலும், இது போல டார்க்ஹ்யூமர் பார்த்ததில்லை.

6.இதயத்துடிப்பு கூட்டும் பிண்ணணி இசை, ஸ்பானியர்கள் தங்கள் இசைக்கு பெயர் போனவர்களாயிற்றே,!!! இது சோடைபோகுமா  என்ன?!!! இதை இன்னும் எத்தனை படங்களில்  பிரதி எடுப்பார்களோ?!!!, ஆகவே மூலத்தை பார்த்துவிடுங்கள்,  அய்யா ஒரிஜினலை சொன்னேன்.

7.தவிர க்ளிஃப்ஃபாங்கர், பேங்க் ஜாப் படங்கள் போலவே பணக்கொள்ளையை சுற்றி பிண்ணப்பட்ட கதை, செம லாஜிக்கலாக உருவாக்கபட்ட காட்சிகள். நிறைய சிஜி வேலைகள் இருந்தாலும் அசல் எது? சிஜி எது என்றே தெரியாது!!! மற்றும் Marta Velasco இன் எடிட்டிங்.  பல மில்லியன் கணக்கான கொரிய நாட்டு கரன்சி அச்சடித்தல், மெக்ஸிக்கன் அண்டர்வேல்ட் வாழ்க்கை,  பழிதீர்த்தல், என அருமையான உள்ளடக்கம் கொண்டது. சகவாசத்துக்காக கருவருத்தல் சுப்ரமணியபுரத்தில்  மட்டுமல்ல  ஸ்பெய்னிலும் நடக்கும் என்றும் சொன்ன படம்.

8.இதில் மணிரத்னம் எல்லாவற்றையும் தேசிவெர்ஷனுக்கு மாற்றி விடமுடியும்,  ஆனால் அந்த ஃபெலாசியோ என்னும் வாய்புணர்ச்சி  மேட்டரை? அடடா,?!!! அதை கொஞ்சம் கூட பார்வையாளருக்கு அருவருப்போ, அதைச்செய்யும்  அந்த பெண்கள் மீது  களங்கமோ, அவப்பெயரோ?  வராத வண்ணம், அதையும் ஒரு தொழிலாகவே பாவித்து பார்த்து  கவனமாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

னால் நம்மூரில் எடுக்கப்படும் படங்களில், ஒரு கழிவறை துப்புறவாளனைக் கூட கண்ணியமாக சித்தரிக்க மாட்டார்களே!!! அதற்காக சொன்னேன்.  தவிர இதில் 4 பெண்களில் ஒரு சகோதரி , அவள் போய் தங்கும் ஹோட்டல் அறைகளிலெல்லாம்  ஆல்பம் வாங்கிப் பார்த்து, விபச்சாரன்களை [விபச்சாரியின் ஆண் வெர்சன்] அறைக்கே தருவித்து ஆசைதீர புணர்கிறார்.  இவ்வுலகில் தனித்து விடப்பட்ட பெண்களுக்கும் ஆசைக்கான வடிகால் தேவைதானே?!!நல்ல காட்சியாக்கமும் உருவகமும் அது.

மூகத்தில் பெண்களில் மட்டுமா விலைமாதுக்கள் உண்டு,?ஆண்களில் இல்லையா?!!! சுகம் கொடுப்பதும் எடுப்பதும் இரு பாலருக்குமே பொது தானே? பின்னே ஏன்? மற்ற படங்களில் மட்டும் ஒரு  தட்டையான பேத மனப்பானமை?!!! , இன்னும் ஏன் காலங்காலமாக  இங்கு பெண்களே விபச்சாரிகளாக, ஆண்களே வாடிக்கையாளர்களாக  காட்டப்படவேண்டும்? இது சமூகத்தில், பெருநகர, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வெளிப்படையாகவே நடந்தாலும், செலுலாய்டில், நான் தேடிப் பார்க்கும் சினிமாவில் புதிது.  இதன் மேக்கிங்குக்காகவே குறைந்தது 3 முறையாவது பார்க்க வைக்கும்.

ளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான், மற்றும் யூரோவில் செலவு செய்யும் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கிறது. உலகிலேயே அதிகம் சுற்றுலா செல்பவர்கள், சொகுசுக்கு அதிகம் செலவிடுபவர்கள் ஸ்பெயின் நாட்டினர். இவர்களுக்கு அடுத்து தான் ஏனைய நாட்டினர்.

ந்த நாட்டிலேயே நிறைய இளைஞர்கள்  போதிய கல்வியறிவை பெற, தொடர முடியாததாலும், நன்றாக சொகுசாக வாழ ஆசைப்பட்டும்  போர்னோகிராபிக் படங்களில் நடிப்பதையே தவறல்ல என்கின்றனர். நிறைய பேர் நிழல் உலக தொழில்களில் அபாயம் தெரிந்தும் நுழைகின்றனர். அதை அருமையாக இப்படத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குனர். வளர்ந்த நாடுகளை பற்றி தெரிந்துகொள்ள பிபிசி என்னும் பொய்+புரட்டு சேனலைப் பார்த்து ஏமாறாதீர்கள்,!!!  இது போன்ற உலக சினிமாக்களை தேடிப்பாருங்கள்.


9.இது கேமரா மேன்களுக்கான, புதிது புதிதாக ஷாட் யோசிப்பவர்களுக்கான  படம்,   இயக்குனர்     Agustín Díaz Yanes  ற்கும்       ஒளிப்பதிவாளர்  Paco Femenia  ற்கும் கற்பனைப் பஞ்சமே ஏற்பட்டிருக்காத படம்,    படத்தில் கேமராவும்  இன்னொரு கதாபாத்திரமே,   திரை வல்லுனர்களுக்கு ஆகச்சிறந்த ரெஃபரன்ஸ் மெடீரியல் இப்படம்,  

விர சரசரவென வெட்டப்பட்ட எடிட்டிங்,  மெதுவாக படம் நகர்ந்தாலும்  காட்சிகள் காண்போருக்கு அறுசுவை விருந்தே!!!.  பாலிவுட்டுக்கு செம டெம்ப்ளேட், ஆக்கம் மற்றும் அறிவுத்திருடர்களான, சஞ்சய் குப்தா[ஸிந்தா-ஓல்ட்பாய்] ,சுரேஷ் நாயர்,சஞ்சய் தத், நிதின் மன்மோஹன், மகேஷ் பட், இம்ரான் ஹஸ்மி , அனுராக் பாசு , கரன் ஜோஹர்,டேவிட் தவான் போன்றோர் முந்துவார்களா? அல்லது நமது இருட்டுக்கடை sorry !!! இருட்டுப்பட இயக்குனர்  மணி, அமீர், கௌதம் மேனன் போன்றோர் வெல்வார்களா? என்று!!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

படம் தரவிறக்க டாரண்ட் சுட்டிக்கு.

படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி அவசியம் பாருங்கள்!!!

=====0000======

ஃப்ரோஸன் ரிவர்[2008]உறைந்த நதி[அமெரிக்கா]Frozen River

 
தேவைக்கு ஏது எல்லைக்கோடுகள்?
இதுதான் இந்த படத்தின் ஒன் லைன்.


ணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த கைம்பெண்கள் பாடு இந்த சமூகத்தில் எவ்வளவு கொடியது? என அழுத்தமாக சொன்ன படம்.ஒரு பெண் தன் குடும்பக் கடமையாற்ற எந்த அளவுக்கு கீழே இறங்குவாள் என  நமக்கு பட்டவர்த்தனமாக விளக்குகிறது. நிறைய குடும்பங்களில் குடும்பத்தலைவன் கடமையை செய்யத்தவறியதால் அந்த கடமையை தங்கள் வாழ்வாதாரத்திற்காக  பெண்களே எடுத்து செய்து குடும்ப பாரத்தை தன் தோள்களில் சுமப்பது  நாம் கண்கூடாகக் காணும் நிதர்சனம்.

கோர்ட்னி ஹண்ட்டின்  தீர்க்கமான எழுத்து இயக்கத்தில் வந்த இந்த படம் அனைவரும் வாழ்வில் பார்க்க வேண்டிய ஒன்று. மிகப்பெரிய நடிகர்கள் என்று யாருமே இல்லை, இரண்டே வலுவான பெண்கள் கதாபாத்திரம்.

ரே எட்டி யாக வந்த தன் ஐம்பதுகளில் இருக்கும் மெலிசா லியோ வுக்கு   இதுபோன்ற திறமையை நிரூபிக்கும்  கதா பாத்திரம் கிடைக்க இவ்வளவு காலமாகியுள்ளது.அழகும் இளமையும் சுத்தமாக வடிந்து போன பெண் பாத்திரத்தில் இவரைத் தவிர யார் நடித்திருந்தாலும் பொருந்தியிருக்குமா? என்றால் சந்தேகமே!

அடுத்து  லிலா லிட்டில் வுல்ஃப்  (மிஸ்டி உபாம்நேடிவ் அமெரிக்கன் என்னும் செவ்விந்திய பழங்குடி இன பெண்ணாக வந்து  உணர்ச்சிகரமான் நடிப்பில் முன்னவரை தூக்கி சாப்பிடுகிறார்.இருவருக்கும்  நடிப்பில் சரியான போட்டி.குழந்தையைப் பிரிந்து ஏங்கும் தாய் வேடத்தில் இவர் கலக்கியிருந்தார். இந்த கதாபாத்திரம் மூலமாக  வளர்ந்த நாடான அமெரிக்காவும் கனடாவும் பழங்குடிகளை எந்த நிலையில் ஒடுக்கி வைத்துள்ளது என தெளிவாய் அறியலாம்.

இசை பீட்டர் கோலப்&ஷாஹத் அலி இஸ்மாய்லி ரொம்ப ரொம்ப அருமையான திகிலை , உணர்ச்சிகளை கூட்டும் ரகம். பார்ப்ப்வர் பல்ஸ் எகிற வைக்கும்.
காமிரா ரீட் டாசன் மொரானோ காட்சிகள் அவ்வளவு குளுமை.சரியான வைட் ஆங்கிள் காட்சிகள்.எங்கு நோக்கிலும் வெண்மையான தீம்.


பாகிஸ்தான் ,இலங்கை,சீனா,போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக, அமெரிக்காவுக்கு எந்த விதமான அடையாளமும் இல்லாமல் எப்படி?  மக்கள் குடும்பத்துடன் குடியேறுகிறார்கள் என   நமக்கு நன்கு விளக்கியும் விடும்.
பார்க்கும் போதே குலை நடுங்குகிறது,பிறந்த மண்ணின் அடையாளத்தை பணத்துக்காக ஒருவன் தொலைப்பது  எவ்வளவு கொடுமை?,அவர்கள் இறந்தாலோ நோய் வாய்பட்டாலோ உறவை பார்க்க நினைத்தாலோ தாயகமே திரும்ப முடியாத ஒரு நிலை!.


கதை நியூயார்க்குக்கும் கனடா எல்லைக்கும் நடுவில் உள்ள மசினா என்னும் இடத்தில் நடக்கிறது.படத்தின் தலைப்புக்கேற்ப கடுங்குளிர் பிரதேசம்,எங்கும் உறைபணி.

நகரின் பொம்மை கடையில் பகுதி நேரமாக வேலை செய்யும் ரே எட்டிக்கு இரண்டு மகன்கள், கணவன் ராட்டினங்கள் மற்றும் சிறுவர் பொம்மை வண்டிகளை வைத்து வித்தை காட்டி பிழைக்கிறான் , மகா சூதாடி வேறு , குடியிருக்கும் ட்ரெய்லரை பழுதுபார்க்க வைத்திருந்த பணம் 4000 டாலர்களை வீட்டிலிருந்து திருடிக் கொண்டு காரையும் ஒரு சூதாட்ட விடுதியில் அனாதையாக நிறுத்திவிட்டு ஊரைவிட்டே ஓடிப்போய் விட,இவள் நீண்ட தேடுதலுக்கு பிறகு கணவனின் காரை  பார்க்கிறாள் , அதை பழங்குடிப் பெண்ணான லிலா திருடி உபயோகிக்கிறாள். .

லிலா ஒரு விதவை , தன் கைகுழந்தையை மாமியார் பிடுங்கி வைத்துக் கொண்டு தர மறுக்க ,பணம் கொடுத்து குழந்தையை மீட்க பணம் சேர்க்கிறாள், ஏற்கனவே பலமுறை ஆள் கடத்தல் வழக்கில்  பழங்குடிக்கான சிறப்பு போலீசாரிடம் மாட்டி எச்சரிக்கப்பட்டதால் தற்போது இந்த செடான் ரக காரை ஒரு மெக்சிக கடத்தல் காரனுக்கு 1500 டாலருக்கு  விற்க எண்ணுகிறாள்.

ஆனால் ரே  லிலாவை பின் தொடர்ந்து அவள் வசிக்கும் சிறிய ட்ரெய்லருக்கே வந்து காரை கைப்பற்றுகிறாள்,அப்போது நடந்த வாக்குவாதத்தில் இவள் ட்ரெய்லரின் கதவை சுட்டுவிட,பெரிய துளை விழுந்துவிடுகிறது,இரவு குளிரில்
லிலா செய்வதறியாது தவித்து துளைக்கு துணியை அடைத்து வைக்கிறாள்.
அவளுக்கு கதவை பழுதுபார்க்க பணம் தேவைப்படுகிறது.அவ்வப்போது தன் குழந்தையை எட்ட நின்று கள்ளத்தனமாக பார்க்கிறாள்,கொஞ்சுகிறாள்.

ரேயின் வீட்டில் பெரிய மகனும் சிறிய மகனும் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.வீட்டில் கணவன் தவணையில் வாங்கிய ப்ளாஸ்மா டிவிக்கு தவணை பணம் கட்டவும் , மளிகை சாமான்கள்,சொந்த தொழில் தொடங்க என்று பணம் தேவைப்படுகிறது.மகன்கள் மூன்று வேளையும் பாப்கார்னும் டாங் பழச்சாறுமே சாப்பிட்டு மிகவும் அலுப்படைகின்றனர்.மூத்த மகன் தான் வேலைக்கு போய் பணம் கொண்டு வருகிறேன் என சொல்ல, ரே கண்டிப்புடன் அவனை பள்ளிக்கு அனுப்புகிறாள்.

ரேவுக்கு காலையில் லிலா தன்னிடம் காரை விலைக்கு கேட்டது நினைவுக்கு வர அங்கே மீண்டும் செல்கிறாள், லிலா அவளை உறைந்த  செயிண்ட் லாரன்ஸ் நதியை கவனமாக கடந்து உள்ளே தூர அழைத்துச் செல்கிறாள்,அங்கே சட்டவிரோதமாக இருக்கும் ட்ரெய்லர் குடியிருப்பில் ஒரு செவ்விந்தியனை சந்திக்க ,அவன் இவளது காரின் டிக்கியில் மூன்று சீனர்களை ஏற்றிவிட்டு தலைக்கு 600 டாலர் தருகிறான்,இவள் அவர்களை அமெரிக்க எல்லைக்குள் ஒரு மோட்டலில் சென்று இறக்கிவிட அந்த மோட்டல் உரிமையாளர் தலைக்கு 600 டாலர் தருகிறான்,பணத்தை இருவரும் சரிசமமாக பிரித்துக்கொள்கின்றனர்.வெற்றிகரமாக முதல் ஆள் கடத்தலை முடித்து விடுகின்றனர்.

ல்லை போலீசாரும் ரே ஒரு வெள்ளை இன பெண் என்பதால் சோதனை செய்யவில்லை,இப்படியே ஒவ்வொரு தேவைக்கும் பணம் திரட்ட ,இந்த தொழிலையே தொடர்ந்து செய்வோம் என ரேவுக்கு தோன்றித் தொலைக்கிறது.

ரு சமயம் காரின் டிக்கியில்  பாகிஸ்தானிய தம்பதிகளை அந்த ஏஜண்ட் ஏற்ற ,வழமையான பாகிஸ்தானியர்களைப்போல அவர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்க வில்லை,அவர்கள் உருவம் இவளுக்கு தீவிரவாதிகளோ என்னும் அச்சத்தை உண்டு பண்ணியதால் அவர்கள் வைத்திருந்த சோல்டர் பேக்கை அவர்களிடமிருந்து பிடுங்கி காரின் உள்ளே வைக்கிறாள், பை கணத்ததால் அதை வெடி குண்டாக இருக்குமோ என சந்தேகித்து உறைந்த ஆற்று பாதையிலேயே தூக்கி வீசி விட, நடக்கிறது விபரீதம்.

பின்பு மோட்டலில் டிக்கியை திறந்து விட,பாகிஸ்தானிய தம்பதிகள் இவளிடம் வந்து பை எங்கே என உருதுவில் கேட்க? மோட்டல் முதலாளி அதை மொழிபெயர்க்க,அவர்கள் சொன்ன செய்தி கேட்டு இவள் உறைகிறாள்.

அந்த பையில் இருந்தது 10 மாத கைக்குழந்தை,இவள் அந்த பையில் வெடி குண்டு இருக்குமோ என சந்தேகப்பட்டு தூக்கி வீசியதாகச் சொல்லிவிட்டு காரை கிளப்பிக் கொண்டு அந்த இடம் சென்று பார்க்க,அந்த பை  மூடுபனியால் மூடப்பட்டிருக்க,அதை எடுத்து காருக்குள் அமர்ந்து குழந்தைக்கு உள்ளங்கை சூடு கொடுத்து கைகளிலும் மார்பிலும் லிலா தாங்கிக் கொண்டு எல்லையை வேகமாக கடக்கையில், போலிசால் கார் நிறுத்தப்படுகிறது.

இவர்கள் பயந்து போகின்றனர்,அருகில் வந்து டார்ச் அடித்து பார்த்த போலீசு, ரேயின் காரின் பின்பக்க அபாய விளக்கு உடைந்திருப்பதையும், அவள் வலப்புறம் திரும்ப இடப்புறம் சமிக்ஜை விளக்கை போட்டதையும் சொல்லி அறிவுறுத்தி, லிலாவை பார்த்து யார் இவள்? என கேட்க,இவள் லிலாவை தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தாதி என்று சொல்கிறாள்,போலிஸ்காரர் ரேவின் வீட்டு விலாசத்தை வாங்கிக் கொள்கிறார்.இவள் பயத்துடன் மோட்டல் சென்று குழந்தையை பாகிஸ்தானிய பெற்றோரிடம் ஒப்படைக்க,அவர்கள் இவள் காலைப்பிடித்து  நன்றி சொல்கின்றனர்,குழந்தை கண் விழிக்கிறது.

ரே குற்ற உணர்விலிருந்து மீண்டு விட ,லிலா குழந்தை உயிர் பிழைத்ததை ஏற்க மறுக்கிறாள்.பினாத்திக் கொண்டே இருக்கிறாள் , இனி இந்த கடத்தல் வேலை வேண்டாமென முடிவு செய்து பழங்குடி அதிகாரி அலுவலகத்தில் அலுவலக பணிப்பெண் வேலைக்கு போகிறாள்.

இப்போது ரேவின் பெரிய மகன் தன் தம்பிக்கு கிருஸ்துமஸ் பரிசாக விலைஉயர்ந்த துப்பாக்கி பொம்மையை பரிசளிக்க எண்ணி, ஒரு வயதான மூதாட்டி வளர்ப்பு செடி தேவை என விளம்பரம் கொடுக்க,அதை பார்த்து தான் ஒரு செடி சப்ளையர் போல நடித்து அந்த மூதாட்டிக்கு போன் செய்து அவரின் க்ரெடிட் கார்டு எண்ணை வாங்குகிறான்,பின்னர் பொம்மை விற்கும் நிறுவனத்தின் டெலிமார்கெடிங்கிற்கு போன் செய்து  ,அந்த கார்டு எண்ணை சொல்லி பொம்மையை டோர் டெலிவரி செய்து வாங்குகிறான்.தம்பிக்கு பரிசளிக்கிறான்.

அப்போது ட்ரெய்லருக்கு அடியில் ஓநாய் ஒன்று துளை வழியாக புகுந்துவிட  வினோதமான உருட்டல் சத்தம் கேட்கிறது, மகன் கேஸ் வெல்டிங் கொண்டு போய் , ஓநாயை விரட்ட தெர்மல் இன்சுலேஷனுக்கு தீவைக்கிறான் , இதனால் வீட்டின் ஹீட்டிங் இன்சுலேஷன் சிஸ்டமே நாசமாகி விடுகிறது, வீட்டுக்கு வந்த ரேவுக்கு இந்த அதிர்ச்சி வேறு காத்திருக்க, எல்லாவற்றிற்க்கும் செலவு செய்ய  3000 டாலருக்கும் மேல் பணம் தேவைப்படுகிறது.வேறு வழி ,பழைய குருடி கதவை திறடி தான்.

மறு நாள் ஒரு போலிஸ்காரர் இவள் வீடு வந்து முதல் நாள் இரவு வீடு பாதுகாப்பாக வந்தீர்களா? என விசாரித்து விட்டு ,பின்னர்,லீலா ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவள், ஆள் கடத்தல்காரியும் கூட ,எனவே அவளை விட்டு தள்ளியிருக்குமாறு அறிவுறுத்துகிறார் , இவள் அவசர பணத்தேவை கொண்ட மனமோ ? மீண்டும் லிலாவை அழைக்க ஆரம்பிக்கிறது விபரீதம்.

மீண்டும் ஆற்றைக்கடந்து உள்சென்று மூன்று சீன பெண்களை டிக்கியில் ஏற்றிக்கொண்டு ஒரு  நைட் கிளப் செல்ல , அங்கே வைத்து அந்த பெண்கள் விபசாரத்திற்கு விருப்பமில்லாமல் விற்க்கப்பட்டதை அறிகிறாள்.

டிஸ்கோ கிளப்பின் முதலாளியோ பணம் தலைக்கு 300 டாலர் மட்டும் தர இவள் கடுப்பாகி துப்பாக்கி காட்டி அவனை மிரட்ட,அவன் இவளை தாக்க,இவள் திருப்பி முட்டியில் சுட்டுவிட்டு சீன இளம் பெண்களையும் காரில் கூட்டிக்கொண்டு சாலையில் விரைய. இனி என்ன ஆகும் என்று டிவிடியில் பாருங்கள்,முழுக்கதையும் படிக்க இந்த யூட்யூப் காணொளியை தாண்டி வந்து படிக்கவும்.
=======0000=========

=======0000=========
எல்லை போலிசார் இவள் வண்டியை கை காட்டி நிறுத்தச் சொல்ல,இவள் செய்வதறியாமல் காரை உறைந்த ஆற்றின் ஸ்திரமில்லாத ஐஸ்பாதைக்குள் செலுத்த,கார் ஐஸ் புதை குழிக்குள் மூழ்க,இவர்கள் சாதுர்யமாக தப்பிச் சென்று ஒரு பழங்குடியினரின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர்,

அங்கே ஒரு பழங்குடி தலைவர் வந்து போலீசுக்கு தகவல் சொல்லியபின்னர் இருவரில் யாராவது ஒருவரை சரணடைய சொல்கிறார்,

ரே தனக்கு 2 மகன்களை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தன்னை விட்டு விடும்படி கெஞ்ச,லிலா ஆறாத மனத்துயருடன் விட்டுக் கொடுக்கிறாள்.அதற்கு சம்மதிக்கிறாள்.

பழங்குடித் தலைவர் லிலாவை நோக்கி இந்த முறை நீ போலிசில் மாட்டினால் உன் மாமியாரிடமிருந்து  குழந்தை உன் கைக்கு இந்த ஜென்மத்தில் வராது, மேலும் நீ நம் பழங்குடியினர் பிரிவிலிருந்தும் தள்ளிவைக்கப்படுவாய் !என கடுமையாக அறிவுறுத்திவிட்டு.மேலும் அவரே.

இந்த பெண்மணி போலிசிடம் சரணடைந்தால் வெறும் ஆறே மாதம் சிறை தண்டனை,இவரது பிள்ளைகளை நீ பார்த்துக் கொள்ளலாம் ,என ஆலோசனை சொல்ல.இருவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்கின்றனர்.


இப்பொது ரே போலிசாரது காரில் இருந்து மகன்களுக்கு அழுது கொண்டே போன் செய்து ,அங்கே இன்னொரு அம்மா வருவாள்,அவளை மரியாதையாக நடத்தி அன்புடன் பழகவேண்டும் என சொல்லி வைக்கிறாள்.

லிலா மாமியாரிடமிருந்து தன் குழந்தையை மிகுந்த தைரியத்துடன் பிடுங்கிக் கொண்டு ரேவின் வீடு வருகிறாள்.அங்கு அவளும் ஒரு அங்கமாகிவிடுகிறாள்.
லிலாவின் பெண்ணை ரேவின் இளைய மகன் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான்.

மறு நாள் ரேவின் மூத்த மகன்  அம்மாவின் ராட்டினத்தை பழுது பார்த்து இயக்கிப் பார்க்கிறான்.அதை கொண்டு போய் உழைத்து காசு சம்பாதிக்க எண்ணுகிறான்.அதில் இரு குழந்தைகளையும் ஏற்றி சுற்றவிட ,அப்போது போலீசு வாகனத்தில் ரேவின் மூத்தமகனால் ஏமாற்றப்பட்ட மூதாட்டி வந்து இவன் குரலை கேட்டு போலிசாருக்கு அடையாளம் காட்ட ,இவனை  நோக்கி போலிசார் அன்புடன் ,மகனே நீ குற்றம் செய்தாயா? எனக் கேட்க?

இவன் ஆம் என சொல்லி தலை குனிய.இந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்பாய் தானே? என சொல்ல, இவன் சாரி என்று சொல்லி தலை குனிய.

போலீசார் அந்த அம்மாவை நோக்கி அம்மா நீங்கள் இந்த சிறுவனை மன்னிக்கிறீர்களா? என கேட்க,அந்த மூதாட்டி ஆம் ! என சொல்லி தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள ,போலீசார் இவன் முதுகில் தட்டி இனி இது போல செய்யாதே! மகனே! என அன்புடன் சொல்லிவிட்டுச் செல்ல படம் இனிதே முடிகிறது.எவ்வளவு கேள்விகள்? சொல்லாமல் சொன்ன பதிலகள் என மனம் கனக்கிறது.


து போல மென்மையான சட்டங்கள் ( Restorative Justice, ) கொண்ட மாகாணங்களும் கனடா மற்றும் அமெரிக்காவில் இருப்பதை பார்க்கையில் ஆச்சர்யம் மிஞ்சுகிறது. நான் படத்திலிருந்து  இங்கு சொன்ன விஷயங்கள் பாதி கூட இருக்காது.


படத்தின் ஒவ்வொரு விஷயத்திற்கும் யதார்த்தம் கொண்டு வர இயக்குனர் மெனக்கெட்டிருப்பது நன்கு புலப்படுகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

========================

படத்தில் மெலிசா லியோவுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைக்க இருந்து கை நழுவியதாம்.

ரேவின் கணவனைக் கடைசி வரை காட்டவே இல்லை,மகன்கள் இருவரின் நடிப்பும் மிக அருமை.
மேலதிக விபரங்கள் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Courtney Hunt
Produced by Heather Rae
Chip Hourihan
Written by Courtney Hunt
Starring Melissa Leo
Misty Upham
Charlie McDermott
Michael O'Keefe
Mark Boone Junior
Zack Rees
Music by Peter Golub
Shahzad Ali Ismaily
Cinematography Reed Dawson Morano
Editing by Kate Willams
Distributed by Sony Pictures Classics
Release date(s) August 1, 2008
Running time 93 minutes
Country United States
Language English
Gross revenue $4.7 million (Worldwide)[




இது என்னுடைய போன வருடம் எழுதிய மீள் பதிவு, இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.

மாஸ்கோவின் காவிரி

போஸ்டர் மட்டும் இண்டர்நேஷனல் ரேஞ்சுக்கு

நான் பார்த்ததில் பிடித்த படம் பற்றி மட்டுமே என் வலைப்பூவில் எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், இருந்தும் இது போல விதிவிலக்குகள் அமைந்துவிடுகின்றன. இதை விமர்சனம் என்னும் சொல்லுக்குள் என்னால் அடக்கமுடியவில்லை. ஒரு உள்ளக்குமுறல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

விகடனில் மிஸ்டர் மார்க்ஸ் என்றொரு சிறுகதை, செழியன் எழுதி படித்ததில் மனதை மிகவும் பாதித்தது, மார்க்ஸ் போன்று நல்ல தகுதியும்  திறமையும் பல வருட  திரைஅனுபவமும் இருந்தும், கல்லைகண்டால் நாயை காணோம் ,நாயை கண்டால் கல்லைக் காணோம் என்னும் அதிர்ஷ்டமின்மையால், சில இயக்குனர்கள் சமூகத்தில்  கடைசிவரை சாதிக்க முடியாமல், புள்ளியாய் குறுகி , மறைந்தும் போகின்றனர். அது ஏன்? என்பதற்கான விடை இந்த படத்திலேயே இருக்கிறது, 

மார்க்ஸ் போல திறமையான இயக்குனருக்கு போக வேண்டிய நல்ல வாய்ப்பை இதுபோல ரவிவர்மன்கள் நான் செய்வேன் என்று செய்தால் ஏன்? மார்க்ஸ் போல ஆட்கள் தெரு நாய் போல  ஏழ்மையில் வீழ்ந்து  கடைசி வரை சொந்தபடம் செய்யமுடியாமல் கூனிக்குறுகி செத்துப் போகமாட்டார்கள்?!!!

ல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமே கெட்டவனுக்கும் கிடைத்துவிடுகிறதே! என்ற கமல்ஹாசனின் ஆதங்கத்துக்கான காரணமும் படத்தில் உண்டு. வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம், என்று பேர் வச்சானாம். என்று எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் சொல்லுவார். அதற்கான அர்த்தமும் இதை பார்த்ததும் விளங்கிக்கொண்டேன்.

யக்குனர் ரவிவர்மன் தமக்கு தாமே இந்தபெயரை சூட்டிக்கொண்டிருந்தால் தயவுசெய்து அதை மாற்றிக்கொள்ளவேண்டும்,  ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் அகில உலக கவனத்தை பெற்றவை. சிறந்த கம்போசிஷன்கள், தனித்துவமான இந்தியக்கலை ஓவிய பாணிக்கு பெயர்போனவை, அவர் பெயரை வைத்துக்கொண்டு இது போல படம் கொடுத்திருப்பது  ஒரு உன்னத கலைஞனுக்கு செய்யும் அவமரியாதை.

மிழகத்தில் ஏனைய புறநகர் பகுதிகளில் வீடு கட்டும் சொந்தக்காரர்கள்,ஆர்கிடெக்டிடம்  போய் டிசைன் வாங்கினால் டிசைன் செய்ய ஃபீஸ் தரவேண்டும், என்று எண்ணி கொத்தனார் மேஸ்திரியிடமே வேலையை ஒப்படைத்து, மிகக் கண்ணறாவியாக ஒரு கட்டிடத்தையும் கட்டி சுற்றுப்புறத்தையும் அசிங்கப்படுத்தி, அதற்கு வாஸ்து வண்ணங்கள் என்று மிட்டாய் ரோஸ், ஊதாப்பூ வண்ணம் போன்ற வண்ணங்களை தான் தோன்றித்தனமாக அடித்து கிரஹப்பிரவேசம் செய்து  நாங்களே முன்ன நின்னு கட்டுனது என்பார்கள் , அந்த வீடு அக்கம்பக்கம்  போவோர் வருவோரை  துன்புறுத்தும் படி இருக்கும். அதுபோல ஒரு மோசமான உதாரணம் இந்த படம்.

லையாள பிட்டு படம் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஜெய் டே வான்[ஜெய தேவன்] என்னும் இயக்குனர் பற்றி தெரிந்திருக்கும். இவரின் மூலதனம் சில லட்சங்கள். ஷகிலா, ரேஷ்மா, மரியா, சிந்து, வெற்றி, ப்ரேம் குமார். ஒரு ஆம்னி வேன்,ஒரு அண்ணாநகர் அல்லது அடையார் பங்களா,மொத்தமே இவை தான் படத்துக்கான ப்ராப், அந்த வகைப் படம் கூட கதை என்ற ஒன்றை கொண்டிருக்கும், பார்ப்பவருக்கு அது ஸ்மூச்சிங் சீன்களுக்கான பிரதான படம் என்ற பிரக்ங்யை இருக்குமாதலால் லாஜிக் பார்க்க தோன்றாது, எப்போடா? சீன் வரும் என்றே பார்க்க தோன்றும், அந்த அளவுக்கு கூட லாஜிக் இல்லாத படத்தை என்ன?  ஒரு ஈகோவுடன் எடுத்து, எல்லோரின் நேரத்தையும் வீணாக்கி பொய்யான மாயை உண்டாக்கி மார்கெட்டிங் செய்து நம்மையும் ஏமாற்றியுள்ளார் ரவிவர்மன்.

டத்தை பற்றி இன்னும் என்னத்த சொல்ல?ஒரு திரைப்படக்கல்லூரி மாணவர் இயக்கும் தீஸீஸ் படம் கூட ஆத்மார்த்தமான அற்பணிப்பை கொண்டிருக்கும். ஒரு நல்ல இயக்குனருக்கு கிடைத்திருக்கவேண்டிய நியாமான வாய்ப்பை இந்த வீணர் பாழ்செய்திருக்கிறார். 

யக்குனர் சேரனின் டூரிங் டாக்கீஸ் தொடரின் ஒரு பகுதியில் பணக்கார பண்ணையார் ஊரிலிருந்து வாராவாரம் படம் எடுக்கிறேன் என்று வந்து ரூம் போட்டு ,டிபன் காபி, ஃபுல்மீல்ஸ் தான் மட்டும் சாப்பிட்டு , கதை கேட்டு, சேரனை ஒருவருடம் அலைக்கழித்ததைப் பற்றி சொல்லுவார், படிக்கையிலேயே உள்ளம் ரணமாகிவிடும். அப்படி சில தயாரிப்பாளர்கள் இருக்கும் உலகில் ,தனக்கு கிடைத்த ஒரு அருமையான தயாரிப்பாளரை இப்படியா ஒருவர் மொட்டையடிப்பது?!!!

க்கள் இனியேனும், போஸ்டர், ட்ரெய்லர், விகடன் பேட்டி, ப்ரொமோஷன், போன்றவற்றை நம்பி ஏமாறாமல், ஜாக்கிரதையாக படத்துக்கு போகவேண்டும், இல்லாவிட்டால் எதிர்ப்பார்த்துப்போகும் படம் இது போல திருஷ்டிப்பரிகாரமாக இருந்து தொலையும். இதுபோல ஹைபட்ஜெட் குப்பைகளால் களவாணி போன்ற நல்ல படைப்புகளை கூட தரவிறக்கி பார்த்துவிட்டு திரையில் பார்க்க வேண்டிய அவலத்தில் நாம் உள்ளோம்.

" இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அதன் கண் விடல்."
த்தகைய தன்மையுடைய செயலை, இந்தக் காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டபின், அப்பணியில் அவனை ஏவுதல் வேண்டும் - தெரிந்து வினையாடல்- குறள் - 517

ப்படி ஒருவர் செய்யத் தவறினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு சேற்றில் சிக்கிக்கொள்வதற்கு சமம்.  இது அந்த தயாரிப்பாளர், இயக்குனர், அந்த உப்புசப்பில்லாத முகம் செத்த ஹீரோ, எல்லோருக்கும் பொருந்தும், நாயகி சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா,பானாகாத்தாடி போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்திருப்பதால் எனக்கு  ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
======0000=======
மாஸ்கோவின் காவிரி=காண்போருக்கு கொலைவெறி

இதோ ஆட்டோ ஓரம்போ இயக்குனர்களிடமிருந்து மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி:-

வ-குவாட்டர் கட்டிங் பட முன்னோட்ட சலனப்படம்.

களவாணி-மீண்டும் ஒரு யதார்த்த சினிமா!!!

ண்பர்களே,போன வாரம் தான் களவாணி படம் பார்க்க முடிந்தது, இந்த படத்தின் 20க்கும் மேற்பட்ட விமர்சனங்களை வலையில் படித்திருந்தமையால் இது ஒரு ஓவர்ரேட்டட் படமாக இருக்குமோ?!!! என்னும் தயக்கம் இருந்தமையால் பார்க்கணுமா? என யோசித்து , அட பார்ப்போமே!!!.  என பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது , அற்பணிப்பு, என்ற ஒற்றை சொல்லுக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள் படத்தின் கலைஞர்கள்.

தை தியேட்டரில் பார்க்கவில்லையே!!!என மிகவும் வருத்தப்பட்டேன், பல பெரிய பட்ஜெட் குப்பைகளை தியேட்டரில் பார்த்து நொந்து போனதால் எது அசல?எது போலி? என்பதில் நிலவும் குழப்பத்துக்குள்ளேயே இதுபோல படங்களும் சிக்கிக்கொள்கின்றன. நான் கடைசியாக   4 முறை பார்த்த படம் என்றால் அஞ்சாதே, மற்றும் பொல்லாதவன், அதன் மேக்கிங்கில் மிரட்டியிருப்பார்கள், இயக்குனர்கள் மிஷ்கினும்,வெற்றிமாறனும். அதற்கு பின்னர், இந்த படம் தான் நான் அலுக்காமல் வெகுவாக  ரசித்து திரும்ப திரும்ப  பார்த்தது என்று சொல்லுவேன்.

ப்படி ஒரு வசீகரம் படத்தில். சற்குணம் இயக்குனராக கிடைத்ததற்கு தயாரிப்பாளர் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும், இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் கொடுப்பது எப்படி?!!! என அவர் ஒரு புத்தகமே போடலாம். இதை நண்பர் கருந்தேள் எழுதியிருந்தால் அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து மேய்ந்திருப்பார். பாராட்டுவதிலும், குறைகண்டால் குட்டி தீர்ப்பதிலும் மனிதர் தாராளம். இப்படம் சாரு எழுதி உயிர்மையில் வருகிறது, படிப்போம் என்றார். அட சூப்பர் மேட்டராச்சே !!! என்றேன். நான்.

ந்த படத்தை பற்றி அண்ணன் ஜாக்கி, நண்பர் செ.சரவணகுமார்,ண்பர் பின்னோக்கி, நண்பர் செந்தில்வேலன் மற்றும் நிறைய பேர் அருமையாக வித்தியாசமாக எழுதியிருந்தனர். ஆகவே நான் எழுதாமல் விடுவதில் எந்த குறுகுறுப்புமில்லை. அவர்களின் விமர்சனங்களை வரிக்கு வரி அப்படியே வழிமொழிகிறேன்.

விமல் போன்ற நடிகனை பசங்க,தூங்காநகரம் போன்ற படங்கள் பார்த்துவிட்டு குறைத்து மதிப்பிட்டு விட்டுவிட்டேனே!!!அடடா?!!! எனத் தோன்றியது.இவர் கூத்துப்பட்டறை நடிகர் என்று இப்போது தான் தெரியும்,18வருடங்கள் ஹீரோவாக தோன்றியும் இன்னும் முகபாவனை உடல்மொழி என்பதே தெரியாத ஒரு ஓவர்ரேட்டட் நடிகன்,அல்லக்கைகளின் எடுப்பார் கைப்பிள்ளை இ.தளபேதி விஜயை ஒப்பிடுகையில் விமல் யதார்த்த நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.  விமலும் அந்த நாயகியும் அமர்க்களமான பெர்ஃபார்மன்ஸ்.  விமல் இனி மிக கவனமாக இருக்க வேண்டும். இதே போல கதையமைப்புடன் கூடிய படங்களாய் நடிக்கசொல்லி வாய்ப்புகள் குவியும், அதிலிருந்து கவனமாக தெரிவு செய்து நடிக்க வேண்டும்,

ந்த நாயகி ஓவியா, மிக அழகு, அருமையான நடிப்பு, முதல படமா?!!! சான்சே இல்லை, த கேர்ள் நெக்ஸ்ட் டோர்!!! என்ற சொல் சிறப்பாயிருக்கும் , சற்குணம் படத்தின் கலைஞர்களிடம் வேலை வாங்கியதிலேயே மிளிர்கின்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, படம் பார்த்த அனுபவம். எல்லா படத்துக்கும் இது கிடைத்து விடாது. படம் முடிந்த  உடனே நான் செய்த முதல் வேலை என் ப்ளாக்கரின் ப்ரொஃபைலில் பிடித்த படங்கள் பகுதியில் இந்த படத்தையும் கையோடு இணைத்தது தான்.

பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட, பாத்திரங்கள் ரெண்டு பென்சிலாவது வாங்கி குடுண்ணே!!! என்று சொல்லும் தங்கச்சி, சரியான பொருத்தமான பாத்திர தேர்வு, பூரா பணத்தையும் கேக்காம மூணு பங்கோட விட்டானே!!! என்னும் அம்மா, 2500 திர்காம்ஸ் குடுத்து லாப்டாப் வாங்குனேன்,கட்டிட வேலை முடிக்காம கெடக்கு பாத்து போட்டுகுடுங்க பாய், என்னும் இளவரசு என வாழ்ந்திருக்கின்றனர்.

ஞ்சா கருப்பு, பாலைவனத்து மழையை போல என்பேன், ஸ்டீரியோ டைப் காமெடியைப் பார்த்து பார்த்து நொந்த நமக்கு ஆகச்சிறந்த மாற்றாக விளங்குகிறார், இவரை இன்னும் நாம் நன்கு பயன்படுத்தலாம்!!!, செம ரிசல்ட் தருவார். என்பது என் எண்ணம். வில்லனாக வந்தவர் , என் பள்ளியில் கூடப் படித்த எதிரி மாணவன் போலவே இருக்கிறார். பார்க்கும் போதே எரிச்சல் வரும் ஒரு  விரோதக்கார முகம். மனிதர் என்னமா பெர்ஃபார்ம் செய்திருக்கிறார் ?!!! .  எங்க பல்லாவரம்,  பம்மல் ஏரியாவில் சபரிமலை சீசனில் மாலை போட்டுக்கொண்டு தவ்ளத்தனம் செய்யும் பயபுள்ளைகளை நினைவு படுத்துகிறார்.

ற்றபடி குறை என்று சொல்லவே முடியவில்லை, இருந்தால் தானே? சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு குறை கண்டுபிடிக்க முயன்று தோற்ற இன்னொரு படம். வெல்டன் டீம். இயக்குனர் சற்குணத்தின்  படங்களை இனி தேடிப்பார்க்கும் ஆவலை உண்டு பண்ணிவிட்டார்.!!! இப்படம் , இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு காரணமே, இவ்வளவு நல்ல படத்தை ஊடகத்தில் சிலாகிக்காமல் இருப்பது குற்றம் என்பதால் தான்.

விர, படம் பற்றி எழுதிய நண்பர்களின் பதிவுகளில், படம் பார்த்திராததால் முன்பே பின்னூட்டியிருந்தாலும், ரசித்தவற்றை பகிர முடியவில்லை. இது போல நல்ல படங்களையும் அவ்வபொழுது தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் ,  இயக்கும் இயக்குனருக்கும், வெற்றிபெறச்செய்யும் ரசிகர்களுக்கும்  மிக்க நன்றி.

விமல்பற்றிய ஒரு செய்தி:- சமீபத்தில் மீண்டும் காஞ்சிவரம் படம் பார்தேன் அதில் நடிகர் விமல் மினி ரமேஷ் என்னும் பெயரில் பிரகாஷ்ராஜின் மருமகன் ரங்கனாக அவர் வருவதை உறுதி செய்துகொண்டேன்,விமலின் ஃபில்மோக்ராஃபியில் இந்த மிக முக்கியமான படம் இல்லாதது கண்டு ஆச்சர்யமடைந்தேன். நண்பர்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்,குரலும் விமலது குரல் தான் அவர் ஏன் மினிரமேஷ் என அறிமுகமானார் என குழப்பமாக இருக்கிறது.
களவாணி=நியாயமான கூலி
=========0000==========
சாதித்த களவாணி குழுவினரின் பேட்டி:-

த டின் ட்ரம்[1979] [மேற்கு ஜெர்மனி] [The Tin Drum] [ கண்டிப்பாக 18+]

ந்த படம் டின் ட்ரம் பார்த்து முடித்தபோது எத்தனையோ கேள்விகள் காட்டாற்று வெள்ளமாய் உயர்ந்து எழுந்தன?!!! நாம் வாழும்  பூமியில் தான் எப்படியெல்லாம் மனிதர்கள்?!!! எத்தனை ரகமான மொழி, மனிதர்கள்? மதங்கள்? என்ன மாதிரியெல்லாம் கலாச்சாரம், தெரியாத சமூகத்தில் அறியப்படாத கதைகள் தான் எத்தனை? எத்தனை?!!! ஒரு பெண்ணால் சமூகத்தில் ஒரே சமயத்தில் இருவருக்கு மனைவியாய் வாழமுடியுமா? அதை சமூகம் தான் ஏற்குமா?!!!சரி விடுங்கள் கணவனாவது ஏற்பானா? மாமா நேருவுக்கும் , மவுண்ட்பேட்டன் மனைவி இலியானாவுக்கும் இதேபோல வெளிப்படையான முக்கோணக்காதல் இருந்ததாய் படித்தது தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!!!

ரு சிறுவனால் தன் உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மூன்று வயதிலேயே நிறுத்துதல் என்பது தான் ஆகக்கூடியதா?!!!பின்னர் தன் 20 வயதில் இனிமேல் வளர்வேன் என தீர்மானித்தல் தான் இயலுமா? தான் இடைவிடாது வாசிக்கும் தகரமேளத்தை யாரேனும் பிடுங்கநேர்ந்தால்,அருகே உள்ள கண்ணாடி சாமான்களை பார்த்து அடித்தொண்டையில் நாராசமாய் அச்சிறுவன் கத்ததுவங்க,அந்த கண்ணாடி பொருட்கள்,சன்னல்கள் அடுத்த நொடியே பொடிபொடியாய் நொறுங்குவது இயலுமா?நம்மை கதை நடக்கும் இடத்துக்கே கைபிடித்து அழைத்துப்போய் ஆம்!!!சாத்தியமே என சொல்லுகிறது இப்படம்,..

தில் ஆஸ்கர் என்னும் சிறுவனாய் வந்த டேவிட் பென்னெண்ட்  பிரதான பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார், இப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு 11வயது, இப்படத்தில் இவரே 3வயது சிறுவனாயும் 16வயது சிறுவனாகவும்  20வயது இளைஞனாகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருப்பார்.

ரு படைப்பாளியின் கற்பனைத்திறனுக்கு உச்சமாய் இந்த ஜெர்மானிய சினிமாவை சொல்லுவேன்,
என்ன அருமையான விந்தையான் டார்க் ஹுயூமரை இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் கையாண்டிருக்கிறார்,

இப்படம் 1959ஆம் ஆண்டு வெளி வந்து  நோபல் பரிசு பெற்ற  , நாஜி போர் குற்றவாளியான கன்தர் க்ராஸின் [Günter Grass] டின் ட்ரம் என்னும் புதினத்தை மிக அழகாய் உள்வாங்கி, கவித்துவமாய் இயக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு வெளியானது, 1980 ஆம் ஆண்டின் சிறந்த வேற்று மொழித்திரைப்படத்துக்கான ஆஸ்கரையும், கோல்டன் பாம் உட்பட ஏனைய விருதுகளையும் வென்றது. 71 வயதான இயக்குனர் வோல்கர் ஸ்ச்லோண்டோர்ஃப் [Volker Schlöndorff  ] 38 படங்கள் இயக்கியுள்ளார். மிகச்சிறந்த படைப்பாளி, இவர் படைப்புகள் , மேற்கு ஜெர்மானிய திரையுலகின் பலமும் பெருமையும் ஆகும். அதில் ஆகச்சிறந்த படம் இது.
=======0000========
படத்தின் கதை:-
இந்த படம் மிகப்புதுமையாக,கருவில் இருக்கும் குழந்தை உற்சாகமான குரலில் தன்னை நமக்கு அறிமுகம் செய்து கொள்வதுடன் துவங்குகிறது, முதலில் சிறுவன் ஆஸ்கரின் பாட்டியை பற்றிய அறிமுகம்:-

தை 1925ல் ஃப்ரீ சிட்டி ஆஃப் டான்சிக் என்னும் குட்டி நாட்டில் துவங்குகிறது, அங்கே கஷுபிய கிருஸ்துவ இனத்தை சேர்ந்த நடுவயதுப்பெண் உருளைக்கிழங்கு விளையும் நிலத்தில் கிழங்கு அறுவடை செய்து கூடையில் சேகரித்து கொண்டிருக்க, அங்கே போலீசாரால் துரத்தப்படும் ஒரு குள்ளர் ஓடி வந்து, இந்த பெண்மணியிடம் கெஞ்சி அவளின் பாவாடைக்குள் ஒளிந்துகொள்கிறார்.

ள்ளே ஒளிந்த குள்ளர் சும்மாவா இருந்தார்?!!!.  சப்தமில்லாமல் மேற்படி விவகாரத்தையும் துவங்குகிறார். இந்த பெண்மணியிடம் தப்பி ஓடிய குள்ளரை பற்றி விசாரிக்க வந்த போலீசாரை வேறு வழியில் திசை திருப்புவதற்குள் அவளுக்கு தாவு தீர்ந்துவிடுகிறது, அதன் பின்னர் அவர்கள் இருவர் ஒரு வருடம் நெட்டையும் குட்டையுமாய் சேர்ந்து வாழ்ந்து,அவள் கருவில் இருக்கும் ஆஸ்கரின் அம்மா ஆக்னெஸ் ஐ  பெற்று எடுக்கிறாள்.

ரு நாள் மீண்டும் குள்ளரை போலீஸ் துரத்திபோய் சுட்டுவிட, அவர் குண்டடி பட்டு ஆற்றில் குதிக்கிறார். அதன் பின்னர் அவர் தென்படவேயில்லை, அவர் எங்கோ அமெரிக்காவில் போய் நடிகராகிவிட்டார், என ஒரு வதந்தி உலவுகிறது. அதன் பின் பாட்டி காய்கறி விற்கும் சந்தைக்கு, எப்போது போலீஸ் யாரையேனும் தேடிவந்தாலும், அப்பெண்மணியின் மூன்று தடித்த பாவாடைகளையும்  லஜ்ஜையில்லாது தூக்கிப்பார்த்து சோதிக்கிறது.,  ரொம்ப சோதனைடா சாமி!!!

ஸ்கரின் அம்மா ஆக்னெஸ் [ஏஞ்சலா வின்க்லர்], முறைப்படி ஒரு ஜெர்மானியன் ஆல்ஃப்ரெட்ஐ[மரியோ அடார்ஃப்] திருமணம் செய்திருந்தாலும், தன் போலந்து உறவுக்காரன் ஜேன்னிடம் [டேனியல் ஓல்ப்ரிடிஜிஸ்கி] காதலும்,காமமும் கொண்டிருக்கிறாள் , அந்த விடயம் அவள் கணவனுக்கும் தெரிந்தே இருக்கிறது, இருந்தும் அவன் தன் அழகிய மனைவியை தனக்கு கிடைத்த பொக்கிஷமாய் கருதுவதால் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். ஆக்னஸ், ஜேனிடம் உடலுறவு கொண்டு ஆஸ்கரை  சுமக்க ஆரம்பிக்கிறாள்.

பிரசவவலி எடுக்க,குழந்த வெளியே வர அடம் பிடிக்க, அவள் வேடிக்கையாக குழந்தை ஆஸ்கரிடம் நீ வெளியேற ரொம்ப அடம்பிடிக்காதே!!! உனக்கு மூன்று வயதாகும் போது சிகப்பும்,வெள்ளை வர்ணமும் அடித்த பளபளப்பான தகர மேளம் வாங்கித்தருகிறேன்!!!,என உறுதி கொடுத்தது தான் தாமதம், குழந்தை ஆஸ்கர் சறுக்கிக்கொண்டு வெளியே வந்து விழுகிறான், இவனை கல்லுளிமங்கன், விடாக்கண்டன் என  எத்தனை அழைத்தாலும் தகும்.மேலே படியுங்க!!!

ஆஸ்கருக்கு 3 வயது:-
வள் அம்மா வாக்களித்தபடியே ஒருஅழகிய தகரமேளத்தை இவனுக்கு பரிசளிக்கிறாள், மேசைமேலே சீட்டு ஆடிக்கொண்டிருக்கையிலேயே, ஆக்னஸின் காதலன் ஜேன் மேசைக்கடியில் காலகளை  ஆக்னஸின் தொடைக்குள் நுழைக்கிறான்,இதை மேசைக்கடியில் ஒளிந்திருக்கும் ஆஸ்கர் பார்க்கிறான்,பிஞ்சு மனதில் இது தவறு என்று படுகிறது,தானும் வளர்ந்தபின் இதுபோல கூடாக்காமம் பழகுவோமோ? என பயந்தவன், அவனின் ஜெர்மானிய தகப்பன் பீர் எடுக்க போன போது கதவு திறந்து வைத்த பாதாள அறைக்குள் படியில் இறங்குகிறான்,மேளத்தை கீழே எறிந்தவன்,செல்லார் அலமாரியை உதைத்து தள்ளிவிடுகிறான். பின்னர், முதுகு தெறிக்க கீழே விழுந்து அடிபட்டுகொள்கிறான், தன் வளர்ச்சியையும் அந்த புள்ளியிலேயே நிறுத்துகிறான்.ஜெர்மானிய கணவன் இருக்கும்போதே வீட்டுக்குள் எப்போ பார்த்தாலும் போலந்துகார ஜேன் இவளுக்கு தொட்டு தடவி பியானோ சொல்லித்தருகிறான்.

ஆஸ்கருக்கு 4 வயது:-
 ப்போது வீட்டுக்குள் சதா மேளம் வாசிக்கும் ஆஸ்கரிடமிருந்து அவனின் ஜெர்மானிய அப்பா மேளத்தை பிடுங்க,அது தகரம் கிழிந்திருந்தமையால் அவர் விரல் காயம் பட்டு ரத்தம் வர,அவர் அவனை ஏசியவர்,மேலும் வலுகூட்டி பிடுங்க,ஆஸ்கர் செய்வதறியாமல்,அறையில் இருந்த க்ராண்ட்ஃபாதர் கடிகாரத்தை பார்த்து கத்த,கண்ணாடி நொறுங்கி விழுகிறது, மேலும் விளக்கையும் கத்தியே உடைக்கிறான். எல்லோருக்கும் பயந்து வருகிறது,

ஆஸ்கருக்கு 6வயது:-
 ப்போது பள்ளிக்கு சென்றவன்,அங்கேயும் பாடத்தை கவனிக்காமல்,மேளம் அடிக்க,டீச்சர் அதை பிடுங்க,டீச்சரின் கண்ணாடியை பார்த்து வீல்ல்ல் என்று அடிக்குரலில் கத்தியவன், அது நொறுங்கி சிதறி ரத்தம் வெளியே தெறிக்க,புளங்காகிதம் அடைகிறான். இவனின் நிலையால் கவலையடைந்த ஆக்னஸ் இவனை பெரிய சிறப்பு மருத்துவரிடம் காட்ட,அவரும் மேளத்தை பிடுங்க,அங்கே இருந்த ஃபார்மாலின் திரவம் அடங்கிய புட்டிகளில் மிதக்கும் குழந்தை,பாம்பு,முதலை,ஆமை,நோக்கி இவன் கத்த,அத்தனையும் உடைந்து சிதறுகிறது. மருத்துவர் வியந்து இவனைப்பற்றி மருத்துவ ஜர்னல் பத்திரிக்கையில் எழுதுகிறார்.இவன் புகழ் பரவுகிறது.
ஆஸ்கருக்கு 11வயது:-

வ்வொரு வியாழன் அன்றும் ஆக்னஸ், நகருக்குள் அவசரமாய் சென்று, போஸ்ட்   ஆஃபீஸில் வேலை செய்யும் ஜேன், வாடகைக்கு எடுத்த விடுதி அறைக்கு செல்வாள், அங்கே காமவேட்கையுடன் காத்திருக்கும் அவனுடன் உடல்பசியை தீர்த்துக் கொண்டதும், நகரிலேயே பொம்மைக்கடை வைத்திருக்கும் யூத நண்பர் மார்கஸ்ஐயும் சந்திப்பாள், மார்கஸ் இவளின் மீதான ஒருதலைக்காதலால் இவளுக்கு சவுரிகள், பட்டு கையுறைகள்,  பட்டு காலுறைகள், செருப்புகள், தொப்பிகளை மலிவு விலைக்கு கொடுத்து ஜொள்ளுவது வழக்கம்.


க  ஏற்கனவே ஆன்லைனில் இருவருடன்  கடலை போடும் இவளுக்கு , மார்கஸ் ஆஃப்லைனில் மூன்றாவதாய்  கடலை போடுகிறார்.!!!இந்த வியாழன் ஆஸ்கருக்கு உடைந்த தகரமேளத்தை மாற்றித் தருகிறேன் என கூட்டிப் போகிறாள்,மார்கஸிடம் இவனுக்கு மேளம் வாங்கி கொடுத்து விட்டு ,பார்த்துக்கொள்ளச் சொன்னவள், 
ஜேனிடம் சென்று அவசர உடலுறவு கொள்ளப் போகிறாள்.மகன் ஆஸ்கர் அம்மாவை பின் தொடர்ந்து போனவன்,அம்மாவின் இந்த ஓடுகாலிப் போக்கிற்கு மிகுந்த சினம் கொள்கிறான். அங்கே உள்ள மணிக்கூண்டின் உச்சி மாடிக்கு ஏறியவன்,படபடவென மேளம் கொட்டிக்கொண்டே தொலைவில் உள்ள கண்ணாடி சன்னல்களை பார்த்து கத்த, அவை உடைந்து சிதறுகிறது.

ஆஸ்கருக்கு 12.5 வயது:-
ஸ்கர் இப்பொது ஆக்னஸ்,ஜெர்மானிய அப்பாவுடன் சர்கஸ் சென்றவன்,அங்கே குள்ளர்கள் வித்தைகள் செய்வதை ஆர்வமாய் பார்க்கிறான், காட்சி முடிந்தவுடன் 70வயதுதலைமை குள்ளரை சந்தித்தவன்,அவரிடம் தன் மேளம் அடிக்கும் திறமையையும்,கத்தி கண்ணாடி உடைக்கும் திறமையையும் பரிட்சித்து காட்ட அவர்கள்,வியந்து தங்களுடன் வருமாறு அழைக்க,இவன் மறுத்து தன் திறமை தன்னிடமே இருக்கட்டும் என்கிறான்.
 
ருநாள் ஆக்னஸ்,கணவன்,காதலன்,ஆஸ்கர் சகிதம் கடற்கரை செல்ல ,
அங்கே வைத்து ஜேனும் ஆக்னஸும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சில்மிஷம் செய்கின்றனர், அவளின் இன்னொரு கணவனும் அதை கண்டு கொள்ளவில்லை, அப்போது அங்கே கரை ஒதுங்கிய நீர்யானையின் தலை ஒருவரின் தூண்டிலில் சிக்க,அவர் அதை இழுக்கையில் , மூவரும் வேடிக்கை பார்க்க,நீர்யானையின் பெரிய தலைக்குள்ளே 20க்கும் மேற்ப்பட்ட விலாங்கு ரக மீன்கள் தலைக்குள்ளே இருந்து பாம்பாய் நெளிகின்றன, 
தைப்பார்த்த ஆக்னஸ் அருவருத்து வாந்தி எடுக்க, ஜெர்மானிய கணவர் தனக்கு ஈல் என்னும் விலாங்கு ரக மீன்கள் பிடிக்குமென்பதால் காசு தந்து கைநிறைய வாங்கி வந்தவர், அன்று முழுக்க மீன் உணவு கள் தயாரிக்கிறார்,இவளையும் வீணாக்காமல் சாப்பிட வற்புறுத்த, இவள் மறுக்கிறாள், சண்டை முற்ற, கைகலப்பாக அவள் வெடித்து அழுகிறாள், காதலன் ஜேன் உள்ளே சமாதானம் செய்ய வந்தவன் அவளுக்கு கிளர்ச்சியூட்டி புணர்ந்தும் விடுகிறான்,இந்த காட்சியையும் வார்ட் ரோபிற்குள் ஒளிந்திருக்கும் ஆஸ்கர் பார்க்கிறான்.உடலுறவு முடிந்தது ஆக்னஸ் வேகமாய் வந்து மீன் துண்டங்களை விழுங்குகிறாள்.
 
ப்போது டான்சிக்கில் முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்கிறது,இது போலந்தின் ஆளுகையிலிருந்த நகரமென்றாலும் இப்போது ஜெர்மனியின் போலந்தின் மீதான வெற்றியால் இங்குள்ள மக்களுக்கும் ஜெர்மானிய விசுவாசம் பிடிக்கிறது,ஆக்னஸின் ஜெர்மானிய கணவன் நாஜி கொ செ வாக  செயல்படுகிறான்,தன் இறைச்சி கடையை பகுதி நேரமாகவும்,கட்சிப்பணியை முழுநேரமாகவும் பார்க்கிறார். இது ஜேனுக்கு மிகவும் கவலையளிக்கிறது.

ஆஸ்கருக்கு 14 வயது:-
ப்போது ஆக்னஸ் ஜேன் மூலம் மீண்டும் கருத்தரிக்கிறாள்,தன் போலந்து காதலனை கடைசியாய் சந்தித்தவள், அவனுக்கு இனி எதிர்காலமில்லை என்றதால் மிகவும் நொறுங்குகிறாள், இனி பிடிக்காத கணவனுடன் வாழவேண்டுமே!!! என வெதும்பியவள்,தனக்கு பிடிக்காத ஏராளமான டின்னில் அடைக்கப்பட்ட மீன்களை அசுரத்தனமாய் விழுங்கத் தொடங்குகிறாள். அப்போதும் உயிருக்கு ஒன்றும் ஆகாமல் போக, சந்தையிலிருந்து விற்பனைக்கு வந்த மீன்களை அறுத்து பச்சையாய் விழுங்குகிறாள், 

ணவன் பயந்து போய் அவள் அம்மா பாவாடைக்காரியை அழைத்துவர அவள் இவளுக்கு அறிவுறை சொல்லியும் பலனில்லை,அவளின் அம்மா,வெளியே வந்து ஜெர்மானிய கணவனிடம் ஆக்னஸ் கருத்தரித்திருப்பதாய் சொல்ல, கழிவறைக்குள் நுழைந்து பூட்டிக்கொண்டு ரத்தவாந்தி எடுக்கும் ஆக்னஸிடம் இவர் கெஞ்சுகிறார், குழந்தை யாருடையது!!! என்றாலும் கவலையில்லை, நான் அதற்கு அப்பனாயிருக்கிறேன்,ஆனால் தற்கொலை செய்யாதே!!!  என்கிறார். ஆனால் அவள் செவிக்கு அது எட்டாமலேயே இறந்தும்விடுகிறாள்.

ப்போது இரு கணவர்களும், சவ வண்டியில் இவள் சவப்பெட்டியை வைத்துக்கொண்டு அழுதபடி வர, அருகே ஆஸ்கர் விடாமல் மேளம் அடிக்கிறான். அங்கே யூதகாதலரும் வந்து சேர்ந்துகொள்ள அவர் யூதர் என்பதால் எல்லோராலும் விரட்டப்படுகிறார். ஆஸ்கர் அவரிடம் சென்று தன் தகர மேளம் கிழிந்துவிட்டதாகவும் புதிது வேண்டும் என்று சொல்கிறான்,ஆக்னஸின் கல்லறையின் முன்பு மண்டியிட்டு அழுது தீர்த்தவர், கடைக்கு சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டு,கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலையும் செய்து கொள்கிறார்.ஜெர்மானிய ராணுவமும் கடைக்கு உள்ளே நுழைந்து பொருட்களை சூறையாடுகிறது.ஆஸ்கர் உள்ளே புகுந்தவன் ஒரு புதிய தகரமேளத்தை,எடுத்துக்கொண்டு அடிக்கதுவங்குகிறான்.
க்னஸின் போலந்துக்காதலன் ஜேன் தீவிரவாதப்படையில் இணைந்து போஸ்ட் ஆஃபீஸில் பதுங்கியபடி ஜெர்மானியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறான். அவனிடம் பாசத்துடன் தேடிப்போய் ஆஸ்கரும் இணைந்து கொள்கிறான்,அவனையும் அவன் கூட்டாளிகளையும் அலேக்காக கைது செய்த ஜெர்மானியர்,ஜேனை கூட்டிப்போய் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுவிட, ஆஸ்கர் அநாதையாகிறான், தன் இன்னொரு அப்பாவிடம் போனவன், எந்தவித ஒட்டுதலும்  இல்லாமலே இருக்கிறான்.

ஆஸ்கருக்கு 16 வயது:-
ப்போது ஜெர்மானிய அப்பாவின் இறைச்சி கடையை கவனிக்க விவசாய குடும்பத்தில் இருந்து 16 வயது  அழகிய பெண் மரியாவை[ காத்ரினா தால்பாக்] ஆஸ்கரின் பாட்டி அழைத்து வர,ஆஸ்கர் அவளுடன் ஒருதலைக்காதல் வளர்க்கிறான்,அவள் ஆஸ்கருக்கு 16 வயது என்பதை நம்ப மறுக்கிறாள்,ஒரு நாள் கடற்கரைக்கு இருவரும் குளிக்க போக,மணலில் படுத்திருக்கும் இவளிடம் ஆஸ்கார் சில்மிஷம் செய்ய தொடங்குகிறான்,இவள் கையில் சர்பத் தூள் கொட்டி,அதில் எச்சில் துப்புகிறான்,

து பொங்கி வர, அதை அவள் நக்க, இவனுக்கு கிறக்கமாகிறது,பின்னர் குளித்து உடைமாற்ற அறைக்குள் நுழைந்தவனுக்கு மரியாவே உடையை மாற்றிவிடுகிறாள், அவளும் ஆடைகளை அவிழ்த்துபோட்டு இவன் முன் அம்மணமாய் நிற்க, இவன் வெறியாகி விறுவிறுவென அவள் யோனியில் போய் முகம் புதைக்கிறான், சிறுவனிடம் இதை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனை ஓங்கித்தள்ள,அவன் முகம் வாடிப்போகிறான்.இவள் அவனுக்கு ஆறுதல் கூறி தேற்றியவள், இவன் விஷமக்காரன் என புரிந்துகொள்கிறாள், அவன் வாயில் ஒட்டியிருந்த ரோமத்தையும் துடைக்கிறாள்.


ன்று இரவு இவனின் ஜெர்மானிய அப்பா, ராணுவ நிகழ்ச்சிக்கு போக, ஆஸ்கரை அவள் துணைக்கு வைத்துக்கொண்டு ஒரே கட்டிலில் படுத்துக்கொள்கிறாள், ஆஸ்கர் அவளின் தொப்புளில் சர்பத் தூள் கொட்டி உமிழ்ந்தவன்,அது அமிலம் போல கொப்பளிக்க, அவளுக்கு கிளர்ச்சி ஊற்றெடுக்க,இன்னும் இருக்கு என்று மெல்ல சர்பத் தூளுடன் கீழே இறங்குகிறான், பின்னர் புணர்ந்தும் விடுகிறான்.பொல்லாத விஷமக்காரன்.


ஸ்கரின் அப்பா, ஆக்னஸ் இறந்த பின் காமத்துக்கு வடிகால் இன்றி தவித்தவர், 16 வயது மரியாவிடம் ஆசைவார்த்தைகள் காட்டி மயக்கி அநேக நேரம் வெறித்தனமாய் உடலுறவு கொள்கிறார்.இதை ஒருநாள் பார்த்த ஆஸ்கருக்கு கோபம் தலைக்கேற,அப்பனை பின்னால் சென்று பாய்ந்து மேளத்தால் அடிஅடியென்று அடிக்கிறான்.அப்பாவுக்கு இவனை பிடிக்காமல் போகிறது, இவனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்.இபோது அப்பா ஜெர்மானிய படையில் உயர் அதிகாரியாகிறார்.மரியாவையும் மணக்கிறார். 

ஸ்கரின் குழந்தையை மரியா வயிற்றில் சுமக்க ஆரம்பிக்கிறாள்,இது மரியாவுக்கு மட்டும் தெரியும்,அவன் முரட்டு அப்பா ,மரியா சுமக்கும் இக்குழந்தை தன்னுடையது என்று பெருமை கொள்கிறார். இப்போது மரியாவுக்கு ஆஸ்கரை சுத்தமாக பிடிக்காமல் போகிறது,அவன் ஒரு சமயம் சர்பத் தூளை பழைய படி அவள் கையில் கொட்டி எச்சில் உமிழ,அவள் அதை சுவைப்பதற்கு மாறாய் இவனை அடிக்க,அவன் அவளை வயிற்றில் ஓங்கி கையால் உதைக்கிறான்.

ப்போது தனிமையில் வாடும் ஆஸ்கர், ஆக்னஸின் தோழியின் வீட்டுக்கு செல்ல,அவள்.இவனை அழைத்து ஆறுதல் படுத்தவேண்டி ,ஆஸ்கரை மார்பில் சாய்த்துக்கொண்டு தேற்றுகிறாள்,குளிரெடுத்தால்,போர்வைக்குள் வா, என அவள் சொன்னது தான் தாமதம்,ஆஸ்கர் அங்கேயும் போய் மேற்படி வேலை செய்து விடுகிறான்.


ஆஸ்கருக்கு 17 வயது:-
இப்போது மரியாவுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது,அதை ஆஸ்கர் தன் மகனைபோலவே ஆசையாய் கவனித்துக்கொள்கிறான்,கொஞ்சுகிறான் . அவனின் 3ஆவது பிறந்த நாளுக்கு  சிகப்பும்,வெள்ளை வர்ணமும் அடித்த பளபளப்பான தகர மேளம் வாங்கித்தருகிறேன் என்று ஆசையாய் சொன்னவன் வீட்டை விட்டும் வெளியேறுகிறான்,!!! யார் கண்ணிலும் படாமல் வெறுத்து ஒதுங்குகிறான்.


1.ஆஸ்கர் எங்கே போனான்?போனவன் திரும்பினானா?
2.மரியாவை கைபிடித்தானா?
3.முரட்டு ஜெர்மானிய அப்பாவுக்கு என்ன ஆனது?
4.மீண்டும் அந்த சர்கஸ் கார குள்ளர்களை சந்தித்தானா?
5.ஆஸ்கர் வாழ்வில் காதல் குறுக்கிட்டதா?
6.மகனுக்கு மேளம் பரிசளித்தானா?மீண்டும் வளர்ந்தானா?

போன்றவற்றை டிவிடியில் பாருங்கள். கற்பனைக்கில்லை கட்டுப்பாடு , பிரம்மாண்டம் என்றால் என்ன என்று நிச்சயம் உணர்வீர்கள்!!!!.


லக சினிமா காதலர்கள் வாழ்வில் தவறவிடக்கூடாத ஒரு படம், இயக்குனரின் உழ்ளன்[Ulzhan -2007 ] படமும் விரைவில் பதிவாய் எழுதுகிறேன். படத்தின் முதுகெலும்பே இகோர் லூதெரின் மிக அருமையான ஒளிப்பதிவு தான், ரம்மியமான இசை மௌரிஸ் ஜேன்,என்னியோ மார்ரிக்கோனை ஒத்த படைப்பு. புதின ஆசிரியர் கந்தர் க்ராஸ்  முன்னாள் நாஜி போர்குற்றவாளி என்பதாலோ என்னவோ, ஒவ்வோரு காட்சியிலும் குரூரம்,வன்முறை,காமம் கொப்பளிக்கிறது!!! தனிமையில் காண வேண்டிய படம்!!!
=======0000========
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-






படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Volker Schlöndorff Produced by Franz Seitz Anatole Dauman Written by Volker Schlöndorff Jean-Claude Carrière Franz Seitz Adapted from the Novel The Tin Drum by Gunther Grass Starring David Bennent Mario Adorf Angela Winkler Daniel Olbrychski Katharina Thalbach Charles Aznavour Release date(s) (West Germany) May 3, 1979 (USA) 11 April 1980 Running time 142 min Country West Germany Yugoslavia Poland Language German Polish Russian Italian Kashubian =======0000========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)