சாகாதவருக்கு ஒரு அஞ்சலி

 பிரபலங்கள் இறந்து போனாலே சக பிரபலங்களுக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத கை பரபரக்கும் தான்,அதில் தவறில்லை,ஆனால் ஒரு அஞ்சலிக் கட்டுரையில் இறந்தவர் பற்றிய சரியான விபரம்,அவர் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்பு,செய்த சாதனைகள் இடம் பெறுகையில் ,ஒன்றுக்கு இரண்டு முறை எழுதியவற்றை சரிபார்க்க வேண்டாமா?

இன்று காலையில் முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட தோழர்கள் தினசரியான ஜனசக்தி யின் முதல் பக்க செய்தியைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டேன். தோழர்கள் காந்தியாக நடித்தவருக்கு மரியாதை செய்ததை எண்ணி சந்தோஷப்படுவதா? அல்லது தோழர்களின் அறியாமையையும் அவசரக்குடுக்கைத் தனத்தையும் எண்ணி திட்டுவதா என்று தெரியவில்லை..


 என்ன இது சத்திய சோதனை? காந்தியாக நடித்தவர் பென் கிங்ஸ்லி http://en.wikipedia.org/wiki/Ben_Kingsley காந்தி படத்தை இயக்கியவர் தான் ரிச்சர்ட் அட்டன்பரோ, பென் கிங்ஸ்லி இன்னும் திடகாத்திரமாக உலகில் ஜீவித்திருக்கிறார். அஞ்சலி கட்டுரையில் கூட தவறான புகைப்படமும் தகவலும் எத்தனை மெத்தனமாக இடம் பெறுகிறது பாருங்கள்,இது தான் இன்றைய செய்திப் பத்திரிக்கையின் லட்சணம், கணினி யுகத்தில் எத்தனை எளிதாக தகவல்களை சரிபார்க்க முடியும்?,அதைக்கூட செய்யாத தடித்தனத்தை என்ன சொல்வது?

எடிட்டர் என்ன புடுங்கறார்?என்று கேட்கிறேன், இப்படித்தான் நெல்சன் மண்டேலா இறந்த போது மார்கன் ஃப்ரீமேன் படத்தை போட்டு அஞ்சலி செய்தனர் ஆர்வக்கோளாறுகள். http://en.wikipedia.org/wiki/Richard_Attenborough அதற்கு மார்கன் ஃப்ரீமேன் தன் ட்வீட்டரில் வசை பாடியிருந்ததைப் பாருங்கள்.


சமஸ் எழுதும் நீர் நிலம் வனம் தொடர்கள்

இளம் சமூக எழுத்தாளர் சமஸ் எழுதி தமிழ் இந்துவில் வெளியாகிகொண்டிருக்கும் முக்கியமான 26 கட்டுரைகள்[இதுவரை] அவரது தளத்தில் நீர் நிலம் வனம் என்னும் லேபிலில் படிக்கக் கிடைக்கின்றன,

பழவேற்காடு துவங்கி ராமேஸ்வரம் வரையேயான 1000 கிலோமீட்டர் நீள கடற்கரை சமூக விரோதிகளால்,அரசியல் வாதிகளால், தரகர்களால், பேராசை கொண்ட தொழில் அதிபர்களால் சீரழிக்கப்படுவதை இவர் கட்டுரைகள் நேர்படப் பேசுகின்றன,

இன்றைய கடற்கரை கிராமங்கள் அதிக அளவில் எதிர்கொள்ளும் புற்றுநோய் மரணங்களை , குடிநீர் தட்டுப்பாட்டை, தாது மணல் திருட்டால் கடல் ஓரிடத்தில் உள்வாங்கி, வேறோர் இடத்தில் வெளிவாங்கி கிராமங்களின் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் அவலத்தைப் இவர் கட்டுரையில் படியுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமா மீனவர் குப்பம் என்றாலே ரவுடிகள் வசிக்கும் இடம்,எதிரியைக் கொன்று கடலில் வீசும் பிழைப்பைச் செய்பவர்கள் மீனவர்கள்,என்ற கருத்தை மாற்றும் கட்டுரைகள்,பாரம்பரியமான கடலோடிகளின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும் கட்டுரைகள் இவை.

காயல்பட்டணம்,தூத்துக்குடி,ராமநாதபுரம்,ராமேஸ்வரம், கன்யாகுமரியில் இருக்கும் நண்பர்கள் இப்பதிவுகளைப் படித்து அவருக்கு பின்னூட்டுங்கள்.அவர் அமைதியாக முன்னெடுத்துச் செல்லும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிரான போராட்டத்தில் தோள்கொடுங்கள்.

தமிழ் இந்து இந்த தொடரை எந்த உள்நோக்கத்தில் வேண்டுமானாலும் வெளியிடட்டும்,கவலையில்லை,ஆனால் நமக்கு இத்தனை அருமையான கட்டுரைகளை இதன் மூலம் நமக்கு தந்துள்ளது தமிழ் இந்து, அபாரமான நெஞ்சுரமும்,நடுக்கமில்லாத எழுத்தும் கொண்ட சமஸ்க்கு வாழ்த்துக்கள்.

நீர் நிலம் வனம்
http://writersamas.blogspot.ae/search/label/நீர்%20நிலம்%20வனம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த வீட்டைத் தேடி

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலை திருப்பதி நுழைவு வாயிலில்

மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களுக்கு திருப்பதியின் நுழைவாயிலில் தத்ரூபமான சிலை உண்டு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரலை இந்துக்கள் வீடுகளில் , நாளின் ஏதாவது தருணத்திலாவது கேட்காமல் இருக்க முடியாது,இவர் 1930களில் பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்தனை சக்தி வாய்ந்தது,அதை ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் கேட்டு வர ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் வரும் என்பது கண்கூடு.

காலஞ்சென்றும் எத்தகைய புகழ்?எல்லாம் இறையருள். இன்று இந்து தினசரியில் வெளிவந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த வீட்டைத் தேடிய வங்காள கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி என்னும் பதிவைப் படித்தேன், அந்தவீடு மதுரை சென்ட்ரல் சினிமாவை ஒட்டிய சந்தான மேல அனுமந்தராயன் கோவில் தெருவில்,தெரு முக்கிலிருந்து 4ஆம் வீடு,வீட்டின் வெளியே வீணை பொம்மை பதித்திருக்கும்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த வீட்டின் வெளித்தோற்றம்

நான் அந்த வீட்டின் மாடியில் இருக்கும் காஜா மெஷின் சென்டருக்கு,சிறு பிராயத்தில் அடிக்கடி காஜா அடிப்பதற்கும் பட்டன் அடிப்பதற்கும்,எம்ப்ராய்டரி அடிக்கவும் என்மாமா கடையில் இருந்து உருப்படிகளைக் கொண்டு செல்வேன். அங்கே மாட்டப்பட்டிருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா மற்றும் அவர் குடும்பத்தார் புகைப்படங்கள்,மற்றும் மு.கருணாநிதி,மற்றும் அவர் குடும்பத்தார் புகைப்படங்கள் எனக்கு மிகுந்த ஆச்சர்யமூட்டும்.

இசைவேளாளர் குலத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவும், மு.கருணாநிதியும் ஒருவகையில் தூரத்து உறவினர் என்று அப்போதே அந்த புகைப்படங்கள் மூலம் தெரியும்.

இன்னொரு செய்தி:- எம்.எல்.வசந்தகுமாரி[ஸ்ரீவித்யா தாயார்] சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்கு முன்னர் கீழ அனுமந்தராயன் தெருவில்,தான் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் என்று என் பாட்டி சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.அந்த வீடு இப்போது இடிக்கப்பட்டு கடைகளாக மாறிவிட்டது,அதற்கு நேரெதிரே கோமதி விலாஸ் என்னும் பிராமனாள் காபி டிஃபன் ஓட்டல் இயங்கியது,ம்ம்..மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாதது?

மேலும் இதே மேல அனுமந்தராயன் தெருவில் சென்ட்ரல் சினிமாவின் பின்னே தான் விஜயகாந்தின் வீடும் இருந்தது.கீழ அனுமந்தராயன் தெருவினை அடுத்த கழுதை அக்ரஹாரத்தில் தான் எழுத்தாளர் ஜி.நாகராஜன் வாழ்ந்தார்.கீழ அனுமந்தராயன் கோயில் தெருவின் அருகே உள்ள நேதாஜி ரோடு என்னும் திண்டுக்கல் ரோட்டில் இருக்கும் ஒய் எம் சி ஏ வில் தான் எழுத்தாளர் ப.சிங்காரம் வாழ்ந்தார். அடேங்கப்பா மதுரை டவுனுக்கு எத்தனை பெருமை?!!

கொசு ஒழிக்கும் நொச்சி செடி வேண்டுமா? மாநகராட்சி இலவசமாக வழங்குகிறது

கொசுக்களை விரட்டும் நொச்சிச் செடி

வீடுகளிலும் தெருக்களிலும் நொச்சி செடி வளர்க்க விரும்புவோருக்கு செடிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

கொசுக்களை ஒழிப்பதற்காக 2013-ம் ஆண்டு முதல் நொச்சி செடிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் நொச்சி செடிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொதுநலச் சங்கங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் நொச்சிக் கன்றுகளை நடவும், பகுதிவாசிகளுக்கு இலவசமாக விநியோகிக்கவும் எத்தனை செடிகள் வேண்டும் என்று தெரிவித்தால், அவற்றை மாநகராட்சி இலவசமாக வழங்கும். இதர நலச் சங்கங்கள், அமைப்புகள், பொதுமக்களும் எத்தனை நொச்சி செடிகள் வேண்டும் என்று தெரிவிக்கலாம்.

இந்த செடிகளை வார்டு அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். மழைக் காலம் என்பதால் நொச்சி செடி வேகமாக வளரும். எனவே, தேவை பற்றிய விவரத்தை மக்கள் விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நொச்சி செடிகள் வேண்டுவோர் mayor@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 044 25619300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You’ve tried many ways to do away with mosquitoes. Experts tell Geeta Padmanabhan that nochi leaves can act as a repellent

How do you get rid of those pesky insects with an uncanny ability to bite your elbows when your hands are busy? How do you combat mosquitoes? In what must be a multi-crore industry, we fend them off with nets, coils, liquids and electronic traps and in times of desperation, with deadly chemicals sprayed under tables and beds. But, for those who put their faith and money in harmless, biological warfare, Chennai Mayor Saidai Duraiswamy's budget for 2012-13 had cheery news. Instead of fogging the city with strange-smelling fumes, the Mayor proposes to shoo mosquitoes away with a bushy, ornamental plant.

“Distribution of nochi plants for mosquito control,” the Mayor said, catapulting the rurally well-known plant to urban stardom. Not that it is a total stranger to the city. “Anyone who has come from the village will be familiar with its properties,” he said. Add those who take interest in “natural” therapy and those who have a bush or two in their yard, you have enough members to start a nochi fan club.

One of them is biologist and member of Nizhal, T.D. Babu. Outside Nizhal's one-room office in Adyar, he fills me with the plant's profile while arranging nochi saplings to be distributed among kids at a summer camp. “It is nochi in Tamil, white-chaste tree in English. Botanically it's known as vitex trifolia or vitex nigundo,” he says. The names correspond to karu and vellai nochi.

Prevents soil erosion
The ones he is watering are small, but they grow to a height of 6 metres, Babu says. “Call it a small, bushy tree.” Fond of places that overlook water, nochi grows on the banks of canals, ponds, lakes and rivers across India. While it enjoys the ready water supply, it repays its debt by stopping soil erosion. Farmers have planted this bush along the borders of their fields to prevent precious soil from being washed away. When we let it grow to its natural size, nochi shows its gratitude by producing leaves, bark, fruit and roots with enough medicinal values to fill a fair-sized booklet.

“Growing nochi is an excellent idea,” said Sheela Rani Chunkath IAS, who writes on Indian traditional medicine. “It is a handy plant for several common ailments.” Boil a bunch of leaves and carefully add a heated brick to keep it bubbling. Inhale the vapour with a bed-sheet covering your head — a soothing remedy for respiratory infection and headaches. “I then use the nochi water in my bath to soothe bodyache.” Tie crushed leaves, pounded garlic and bran into a kizhi (bundle), heat it and apply it on joints with arthritic pain, she suggests. Extract the leaf juice, boil it with some oil, bottle it and rub it on the forehead and neck to relieve headache.

Our ancient texts have recorded nochi's medicinal properties, she said. Why do we rush for antibiotics when we have remedies with no side-effects? A village health nurse, trained in allopathy, will recite a thousand uses for nochi and aadathodai (adathoda vasica). We have to re-acquaint ourselves with our medical traditions, revive the Foundation for Revitalisation of Local Health Tradition, she said feelingly. “I once started a project to plant medicinal herbs in schools, so teachers could talk to kids about them.”

Traditionally, villagers have used the heated leaf-kizhi for fomentation (oththadam) for swellings, arthritis and body-pain caused by vaatham, said Babu. Some 20-30 grams of leaf-juice mixed with the same quantity of cow's urine is prescription for spleenomegaly. Leaf-paste is externally applied over the inflamed spleen area. Leaf decoction is a diuretic and a de-wormer. A nochi-leaf pillow is considered effective against headache and sinusitis. Don't throw away the fruit. Dry it, powder it and use it for de-worming and as a cure for headaches. The decoction of the root is taken for vatha diseases, burning sensation of urethra, abdominal pain and intestinal worms.

Insect repellent
Of great interest to Chennai Corporation and its mosquito-menaced citizens is the plant's ability to repel the winged invader. “The trees are considered insect/pest repellent, the twigs anti-bacterial,” said Corporation officials in-charge of the project. “Farmers believe nochi plants protect their crops and create a bio-fence with it. Leaves are added to stored rice to keep weevils away.” Farmers also string the leaves into a thoranam and brush crops with it to keep out pests, said Babu. To make it an effective weapon to kill mosquitoes, you need to smoke the leaves, he said. “Leaves can be repellents, but to wipe out mosquitoes completely you have to prevent water stagnation, garbage and pollution.”

திருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?திருட்டு விசிடியை ஒழிக்க,நடிகர்கள் பர்மா பஜாரில்,பாண்டி பஜாரில் ரெய்டு செய்தால் மட்டும் போதுமா?,அது நிரந்தரத் தீர்வா?இல்லவே இல்லை,

வெளிநாட்டு உரிமை என்ற பெயரில் விற்கப்படும் படங்களை, இங்கே படம் வெளியான அதே நாளில், அங்கேதியேட்டரில் படம் ஓடுகையில் எடுத்த மட்டி ப்ரிண்ட் இணையத்தில், படம் வெளியான 2 நாட்களில் டிசி ரிப்பாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது, ஒரே வார காலத்தில் அங்கே நல்ல டிவிடி வெளியானதும்  5.1 சேனல் சரவுண்ட் டிவிடி ரிப்பே இணையத்தில் டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது,

இணையத்தில் அப்லோட் டவுண்லோட் சர்வர்கள் இதற்கென்றே 50க்கும் மேலே வெற்றிகரமாக இயங்குகிறது, அவர்களுக்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் காவல்துறை மற்றும் சட்ட வல்லுனர்கள் மூலமாக முறையான கடுமையான எச்சரிக்கை மின்னஞ்சல் சென்ற ஒரே நாளில் யாரோ ஒருவர் அவர் தளத்தில் அப்லோட் செய்த புதிய தமிழ் படத்தை அந்த தளம் அழித்துவிடும்,

 இது தான் நடைமுறையில் அந்த சர்வர்கள் பின்பற்றும் தொழில்தர்மம், இதைக்கூட தமிழ்சினிமா பிரமுகர்கள் செய்வதில்லை, இதே போல எங்கெங்கேயெல்லாம் புதிய தமிழ்படம் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதோ, அந்த தளத்துக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படவேண்டும்,இது முதலாம் உத்தி

இது சிரங்கை சொறிதல் போன்றது, எரிச்சலான அதே சமயம் சுகமானது, அப்படி பலன் தராத பட்சத்தில் தமிழ் திரையுலகினரே ஃபேக்[fake] டாரண்டை தங்கள் கம்ப்யூட்டர் சவ்வி[savvy] உதவியாளர்கள் மூலம் மேற்கண்ட இணையதளங்களில் லோட்டஸ், உயிர்வாணி, ஐங்கரன்,என்ற பெயரில் அப்லோட் செய்து  புதுப்படம் டவுன்லோட் செய்து பார்ப்பவர்களை எரிச்சலுறச் செய்ய வேண்டும் இது இரண்டாம் உத்தி.

அப்படியும் பலன் தராவிட்டால், பிஎஸ் என் எல், ஏர்டெல்,டொக்கோமா, ஆக்ட் ப்ராட்பேண்ட் + காவல்துறை + சட்ட வல்லுனர்கள் துணையுடன் யார்? உள்ளூரிலிருந்து டவுன் லோட் செய்து புதிய படத்தைக் கண்டு களித்து, 
யூ எஸ்பி ட்ரைவில் காப்பி செய்து சக நண்பர்களுக்கு வழங்கி இன்புருகிறார் என்பதை ஐபி அட்ரெஸ் கொண்டு கண்டறிந்து ,அவர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்,

இது மூன்றாம் உத்தி,  இவை எல்லாம் கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், பாலிவுட்டில்   வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது குறித்து ஒன்றும் தெரியாதது போல எல்லோரும் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையளிக்கிறது,  இத்தனை விஷய ஞானம் கூட இல்லாதவர்களா? இங்கே படம் எடுக்கின்றனர் ?என ஐயமுறச் செய்கிறது.

இப்படித்தான் மற்ற மாநிலங்களில் திருட்டு விசிடியை அறவே ஒழித்திருக்கின்றனர்[அதாவது படம் வெளியான 5 மாதத்துக்கேனும் நல்ல ப்ரிண்ட் டவுன் லோட் செய்யக் கிடைக்காது] , சராசரியாக 100 பேரில் 50 பேர் திருட்டு விசிடியில் புதிய படம் பார்த்தால்,50 பேர் டவுன்லோட் செய்து தான் பார்க்கின்றனர்,அந்த சர்வர்களில் இருந்து தான் திருட்டு விசிடி,டிவிடிக்கள் தயாராகின்றன,அது தான் திருட்டு விசிடியின் ஊற்றுக்கண்,எனவே அதை கண்டறிந்து அகற்றும் வழியை தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.

இங்கே போய் பாருங்கள் நேற்று வரை எத்தனை புதுப்படங்களை கூவி கூவி டவுன்லோட் செய்ய அழைக்கின்றனர் என்று?
https://torrentz.eu/search?f=tamil

இங்கே சென்று பாருங்கள் எத்தனை இணையதள சர்வர்களில் ஞ்சான் படம் கிடைக்கிறது என்று?
https://torrentz.eu/ba694d15e1fff6668907b95a4e352874787b4504
இது சர்வரின் முதல் பக்க ஸ்க்ரீன் ஷாட் தான்
மலையாள திரைப்படங்களின் டிவிடி ரிப் படம் வெளியாகி 3 முதல் 5 மாதம் வரை அங்கே வெளியாவதில்லை,அதற்கு நல்ல உதாரணம் த்ருஷ்யம்,நல்ல டிவிடி ரிப் வர 5 மாதம் ஆனது,அதை இன்றும் இங்கே ஹைப்பர் மார்கெட்டுகளில் ஒரிஜினல் டிவிடி 30 திர்காமுக்கு குவித்து வைத்து விற்கின்றனர்,வாங்கியும் செல்கின்றனர், அதே போலவே இப்போது ஓடிகொண்டிருக்கும் பெங்களூர் டேஸ்,எங்கும் டிவிடி ரிப் கிடைக்காது,வைரஸ் ப்ரிண்ட் அல்லது ஃபேக் டாரண்ட் தான் கிடைக்கும்,அல்லது மூன்றாம் தரமான மழை பெய்வது போன்ற விசிடி தான் கிடைக்கும், அதன் நல்ல 5.1 சேனல் சவுண்ட் டிவிடிரிப் படத்தின் ஒரிஜினல் டிவிடி வந்து 1வாரம் கழித்தே டாரண்டுகளில் வரும்,

ஆனால் தமிழ் படத்தின் நிலை என்ன? லோட்டஸ்  நிறுவனத்தின் 5.1 சேனல் சவுண்ட் தரம் கொண்ட டிவிடி ரிப்கள் எந்த தமிழ்ப் படமும் வெளியான ஒரே வாரத்தில் டாரண்டில் கூவிக்கூவி கத்தரிக்காய் விற்பதுபோல கிடைக்கிறது,இதை ரசிகர்கள் தரவிறக்கிப்பார்க்காமல் என்ன செய்வார்களாம்?

இதை ஏன் தமிழ் திரையுலக தயாரிப்பாளர்,இயக்குனர் நடிகர் சங்கங்களால் தடுக்க முடியவில்லை? எங்கே தவறு நடக்கிறது? என்று கண்டுபிடிக்க இத்தனைக் காலம் ஏன்? ஏன் அதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை?

இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் வீட்டில் பிஎஸ் என் எல் அன்லிமிட்டட் கனெக்‌ஷன் இருந்தால் போதும் 8 ஜிபி வரை 2 எம்பிபிஎஸ் வேகம் தருகின்றனர், அதில் மாதத்துக்கு சுமார் 8 புதிய தமிழ்ப்படங்கள் வரை தரவிறக்கிப் பார்க்க முடியும்?

இவர்கள் அதை தடுப்பதில்லையே ஏன்?திருட்டு விசிடி,டிவிடி பார்ப்பது மற்றும் தான் குற்றமா?இப்போது அதிநவீன செல்போன்களில் நேற்று ஒளிபரப்பிய நாதஸ்வரம் சீரியலைக்கூட யூட்யூப் டவுன்லோடர் மூலம் தரவிறக்கி பஸ் பயணத்தில் பார்த்துக்கொண்டு செல்கின்றனர்.யாராலாவது தடுக்க இயலுமா?

இனியேனும், மலையாள சினிமா நண்பர்களிடம் இதை எப்படி ஒடுக்குவது என உதவி கேளுங்கள். திருட்டு விசிடியை ஒழிக்க இறங்கும் முன் திருட்டு டிவிடி ரிப்பை ஒழியுங்கள்.இணைய அப்லோடிங் டவுன்லோடிங்கை புதியபடம் தியேட்டரில் ஓடும் காலம் வரையிலேனும் வெளியாகாதவாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.

சென்னை 375


பறவைப் பார்வையில் சென்னை மாநகரம்
இன்று ஆகஸ்ட் 22, சென்னை தினம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு சென்னை என்று நிரந்தமாக அழைக்கப்பட்டு வரும் சென்னைக்கு 375 வயதாம், நினைக்கவே பெருமையாக இருக்கிறது, சென்னைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.எனக்கு உலகை புரிய வைத்த ஆசான் சென்னை,பணத்தை துரத்த வாய்ப்பளித்த சென்னை, 

சென்னையை அதன் ஆட்சியாளர்கள் ஏறிவரும் மக்கள் தொகைக்கு தகுந்தவாறு urban design [நகர்ப்புற வடிவமைப்பு] செய்து சரியாக grid pattern ல் வடிவமைத்திருந்தால் ,இன்று நாம் காற்றுக்கு ஜன்னலை திறந்து வைத்தாலும் காற்று வராமல் புழுக்கத்தில் இருக்கும் நிலை இருந்திருக்காது,இந்தியாவில் சரியாக நகர்ப்புற வடிவமைக்கப்பட்டவை 28 நகரங்கள் ,அவற்றை இங்கே போய் படிக்கலாம்   

இங்கே துபாயில் வீட்டு மனைக்கு plot கள் 45டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும், காற்று வரும் திசையில் நம்வீட்டின் வெளிப்புறச்சுவரும் அதிக ஜன்னல்களும் அமைக்க முடியும். தவிர சென்னையை இதன் சிஎம் டி ஏ திட்ட அதிகாரிகளும் சரிவர திட்டங்கள் இயற்றி சரியாக கடைபிடித்திருந்தால் , பல வீடுகளில் 2 அடி, 3அடி செட்பேக் கூட இல்லாமல் கட்டப்பட்டு காற்றும் வெளிச்சமும் புகமுடியாத நிலை இருந்திருக்காது. சென்னையில் தரைத்தளத்தில் குடியிருக்கும் மக்கள் படும் அவதி சொல்லில் வடிக்க முடியாது, முக்கிய தொல்லையாக நான் கருதுபவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்,ஆட்சியாளர்கள் நினைத்தால் இந்நிலை நிச்சயம் மாறும்.
  1. கொசுக்கடி ,
  2. சாக்கடை நாற்றம், 
  3. படபடப்பு கூட்டும் ஆட்டோ சைலன்சர் இரைச்சல். 
  4. கரண்ட் போகையில் காற்று வருமே என்று சன்னலை திறந்து வைத்துத் தூங்க முடியாது, பீரோ புல்லிங் திருடன் வந்து நேக்காக திருடிச்சென்று விடுவான். 
  5. சாலைகளும் சாக்கடைகளும் சரியாக திட்டமிட்டு வடிவமைக்கப்படாததால்  அடை மழை நாளில் வீட்டுக்குள் மழைநீருடன், சாக்கடை நீர் புகும் அவலம் சொல்லில் வடிக்க முடியாது.
இவையெல்லாம்,சாமானியன் சென்னையில் சந்திக்கும் துயரம். இருந்தும் எனக்கு எப்போதும் சென்னையில் வசிக்கவே பிடிக்கிறது.எதிர்காலத்தில் சென்னையிலேயே ஓய்வு பெற விரும்புகிறேன்.

சென்னையில் நான் நடந்த தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்.

நான் பிறந்தது சென்னை தான், சிலவருடங்கள் மதுரையில் கழித்துவிட்டு, 1986ல் சென்னைக்கு வந்துவிட்டோம்.பல்லாவரத்தில் தான் வாசம்.மதுரையில் இத்தனை பின்கோடு, தபால்நிலையம், ரயில்நிலையம் பார்த்ததில்லை துறைமுகத்தை சுற்றி வளர்ந்த வட சென்னையில் நான் கால்வைக்கவே 10 வருடம் பிடித்தது,மீட்டர் கேஜ் ஓடிய தாம்பரம் டு பீச் வரை தான் சென்னை என நினைத்திருந்த எனக்கு அதையும் தாண்டி ப்ராட்கேஜ் ஓடும் வடசென்னை மிகுந்த ஆச்சர்யமூட்டியது,பெரம்பூர் என்னும் பெயரிலேயே 3 ரயில்நிலையங்களா என வியந்தேன்.

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய ரயில் தான் உகந்தது என்பதால் ரயில் மார்கத்தில் அப்படி சுற்றியிருக்கிறேன்,கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி நடிகர் நடிகைகளின் வீடுகளை நேரில் பார்க்கலாம் என முயன்று களைத்திருக்கிறேன்.எனக்கு சென்னையில் மிகவும் பிரியமான இடம் பல்லாவரம் மலை,நிறைய படப்பிடிப்புகள் நடந்த இடம், 

அதற்கு 4 வழியாக போகலாம்,திரிசூலம் ரயிலடியில் இருந்து நடந்து 3கிமீ நடந்தால் மலைக்கு மேலே போய்விடலாம்,அல்லது பல்லாவரம் கல்லறை தோட்டம் வழியாக மேலே ஏறினால் 2 கிமீ,அல்லது ஈசுவரிநகர் மேடு வழியே ஏறீனால் 1.5கிமீ,அல்லது பழைய பல்லாவரம் பஞ்சபாண்டவர் மலை வழியே ஏறினால் 1.5கிமீ வரும்,சென்னையில் யாருமே போகத்துணியாத இடத்துக்கெல்லாம் நானும் நண்பனும் சைக்கிளில் போயுள்ளோம்.

அப்படி கீழ்கட்டளை,பெருங்குடி வழியாக போய் திருவான்மியூர் பீச்சுக்கு போனதை என்னவோ நாங்கள் பீச்சையே கண்டுபிடித்தது போல வகுப்பில் பேசுவோம்.தாம்பரம் அருகே தர்காஸ் என்று ஒரு இடம் உண்டு,அங்கு எல்லாம் போய் குட்டையில் ஆடியுள்ளோம்.அந்த இடத்துக்கருகே அதன் பின்னர் தான் கிஷ்கிந்தா எல்லாம் வந்தது.சென்னையில் எனக்கு பிடித்த இன்னொரு இடம் என்று சொன்னால் பட் ரோட்டில் இருக்கும் போர் நினைவுச்சின்னம்,அதை அத்தனை சுத்தமாக வைத்திருப்பர்,

அதற்கு பெரும் நிதி அகில உலக கல்லறைகள் நிதியம் வழங்குவதால் பளிங்கு போலான நிர்வாகம் சாத்தியமானது,அதை இன்னும் பார்க்காதவர்கள் போய் பாருங்கள். எனக்கு ரயில்நிலையங்களுக்கு பெயர் வைத்த வெண்ணைவெட்டிகளை அடிக்க ஆத்திரம் வரும்.பரங்கி மலை என பெயர் இருக்கும் ஆனால் அங்கேயிருந்து 4கிமீ நடந்தால் தான் புனித தோமையார் மலை வரும். பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரு பலகை மறக்க முடியாது. 

திருநீர்மலை போக இங்கே இறங்கவும் என்று,அங்கே இருந்து திருநீர்மலை போக சுமார் 8கிமீ வரும்.அதற்கு பழந்தண்டலம் போக ஒரு பஸ் இருந்தது,குடிகாரர்கள் மட்டுமே ஏறுவர்,அப்போது திருநீர்மலை சாராய சாம்ராஜ்ஜியமாக விளங்கியது,குடிமகன்கள் நல்ல ஊரல் போட்டிருக்கும் இடமாக ஏறுவது இறங்குவதுமாக இருப்பர்,பஸ்ஸே ஆடிஆடித்தான் பல்லாவரம் செல்லும்,சாலை அப்படி.நான் சிறுவனாயிருக்கையில் பார்த்த ஏரிகள்,குளங்கள் இன்று இல்லை,இருந்தாலும் சாக்கடையாகி உள்ளது.

மழைக்காலத்தில் மட்டுமே அடையாரில் வெள்ளம் கரைபுரண்டு வரும். அங்கே போய் அட்டகாசம் செய்திருக்கிறோம்.அப்போது கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் இருந்து கவுல்பஜார் போகும் வழியில் பெரிய 50அடி விட்டம் கொண்ட மிலிட்டரி கிணறு ஏணியுடன் இருந்தது, வீட்டுப்பாடம் எழுதாததால் தண்டிக்கப்பட்ட சிறுவர்களை அங்கே பார்க்கலாம்,அத்தனி பெரிய கிணற்றை அதற்கு பின் நான் பார்த்ததே இல்லை.

சென்னையில் திரிசூலம் ரயிலடி மட்டும் புதியதாக இருக்கும்,ஏனைய நிலையங்கள் 1930களில் கட்டிமுடிக்கப்பட்டிருக்க,திரிசூலம் மட்டும் 1984-85ல் திறக்கப்பட்டது,ராஜீவ் காந்திக்காக விமான நிலையம் செல்லும் சாலையை இணைக்க அவசர அவசரமாக சுரங்கப்பாதையும் போடப்பட்டது என்பார்கள்.நீண்டநாட்களாக நான் விமானநிலைய வளாகத்தில் இருக்கும் சந்தியம்மன் கோவிலினால் திரிசூலத்துக்கு அந்த பெயர் வந்திருக்கும் என நினைத்தேன்,ஆனால் அங்கே ஆயிரம் வருட பழமைவாய்ந்த திரிசூலநாதர் பெயரால் என்று பின்னர் தான் தெரியும்,இன்னும் சென்னை பற்றி நிறைய எழுதுவேன்.

கிண்டி கத்திபாரா மேம்பாலம்


நமது கிண்டி கத்திபாரா மேம்பாலம் க்ளோவர் லீஃப் வடிவ மேம்பாலம் ஆகும். இது க்ளோவர் செடியின் இலை [அம்மைக்கொடி] வடிவில் இருப்பதால் இந்தப் பெயர்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய க்ளோவர் லீஃப் மேம்பாலம் ஆகும். ஆசியா என்பது எத்தனை பெரிய கண்டம்,நாம் எவ்வளவு பெருமைப் பட வேண்டும்?இதை நாம் எத்தனையோ பேர் அனுதினம் உபயோகிக்கிறோம். இனி இதன் பெருமையை தெரிந்து உபயோகிப்போம்.எத்தனை பெருமை இருந்தாலும் இதை முறையாக பராமரிக்காவிட்டால் பலனில்லை.
க்லோவர்லீஃப் [அம்மைக்கொடி]
 இரவு வேளைகளில் இதன் மீது பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் பாதி எரியாது[மின் நிலையங்களின் எல்லை வரையறை பிரச்சனை போலும்], நம் வண்டியில் விளக்கு எரியாவிட்டால் போயிற்று. பயந்தபடி ஓட்டிச் செல்ல வேண்டும். மேலும் மேம்பால பராமரிப்பு சுத்த மோசமாக இருக்கும். வண்டல் அப்படியே தேங்கியிருக்கும்.அதை அள்ள மாட்டார்கள். எனவே மழை பெயதால் வடிகால்களில் மண் சென்று அடைத்துக் கொண்டு ,பாலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும்,

பாலத்தின் தரையில் பதிக்கப்பட்ட ரிஃப்லக்டர்கள் முறையான பராமரிப்பின்றி ஏகம் உடைந்து விட்டன.எனவே அவற்றால் பிரயோசனமே இல்லை,வண்டியின் டயரை தான் அவை கிழிக்கின்றன.

தவிர பாலத்தின் தடுப்பு சுவர்களுக்கு இடையே எக்ஸ்பேன்ஷன் ஜாயிண்ட் வரும் இடங்களில் அதை முறையாக ஃபினிஷ் செய்யாமல் விட்டிருப்பார்கள்.அந்த இடம் பார்க்க விகாரமாக காட்சியளிக்கும்.

கட்டி முடித்து 6 வருடங்களிலேயே பாலத்தின் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கும்.எந்த கட்டிடமோ மேம்பாலமோ பராமரிப்பு இல்லை என்றால் 10 வருடங்களில் பல்லிளித்து விடும்.இனியேனும் மாநகராட்சி இதை சரியாக பராமரிக்க வேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்
http://en.wikipedia.org/wiki/Kathipara_Junction
http://en.wikipedia.org/wiki/Cloverleaf_interchange
http://en.wikipedia.org/wiki/Asia
http://en.wikipedia.org/wiki/Clover

வேலையில்லா பட்டதாரிவேலையில்லா பட்டதாரி எல்லோரும் பார்க்க வேண்டிய அட்டகாசமான பொழுதுபோக்கு சித்திரம்,இயக்குனர் வேல்ராஜ் தன் 44 வயதில் கொடுத்த முதல் படைப்பு அம்சமாக அமைந்துவிட்டது,வேல்ராஜின் அற்பணிப்பான ஒளிப்பதிவுக்கு  நான் ரசிகன்,அவரின் பொல்லாதவன் ஒளிப்பதிவாகட்டும், ஆடுகளம் ஒளிப்பதிவாகட்டும் இரண்டுமே தனித்துவம் பொருந்தியவை. எத்தனை நாள் ஆகியிருக்கிறது அவரின் சொந்தப்படம் இயக்கும் கனவு பலிப்பதற்கு, அதுவும் இத்தனை அருமையான ஒரு ஜனரஞ்சக சினிமா. படத்தை பார்க்கத் துவங்கிய அரைமணி நேரத்திலேயே  என் விமர்சகன் என்னும் முகமூடியை கழற்றி வைத்துப் பார்க்க வைத்து விட்டது,சற்றும் தொய்வில்லாத திரைக்கதையும்,படத்தின் காஸ்டிங்கும். 

இயக்குனர்/ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
தனுஷ் மிகவும் மெச்சூரிட்டி கொண்டு களம் இறங்கியிருக்கும் படம்,தனுஷை இனி யாரும் சின்னப்பையன் சுள்ளான் என்று சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். படத்தில் பெரிய ரவுடிக்கும்பலையே போட்டு அவர் அடித்தாலும் அதை நம்பும் படி சாத்தியமாக்கியுள்ளனர். படத்தில் ஏகம் லாஜிக் மீறல்கள்,மற்றும் தகவல் பிழைகள் இருந்தாலும் ,படத்தின் ஓட்டத்தில் அவை நீர்த்துப் போகின்றன, ரசிகனை கடைசி நிமிடம் வரை ஒன்றவைத்து பார்க்க வைத்து விடுகிறது இப்படம்.  படத்தில் இருக்கும் மிக முக்கியமான சர்ச்சைக்குரிய குறைகளான, ராமகிருஷ்ண மிஷன்  பள்ளியில் படித்தேன்,தம்பி மெட்ரிக்குலேஷனில் படித்தான்,பொட்டை  என ஐந்தாறு இடங்களில் மூன்றாம் பாலினத்தை அவதூறு செய்யும் வார்த்தைகள், போன்றவற்றை இனி நிகழாமல் பார்த்துக்கொள்வார் என நம்புகிறேன்.  படத்தின் ஓட்டத்தில் அடித்துக்கொண்டு போன முக்கிய தவறுகள்

1.பல் மருத்துவர்கள் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குவர்[ஐந்து வருடம் அனுபவம் உள்ள என் நண்பருக்கு வாசனில் 28000 ரூபாய் தான் சம்பளம்]
2.கால் செண்டரில் எடுத்த எடுப்பில் பிடித்தம் போக 50 ஆயிரம் சம்பளம்.[இன்றைய சூழலில் எடுத்த எடுப்பில் கால்செண்டரில் 15 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலே அது பெரிய விஷயம்]

3.சைட் இஞ்சினியர் ஆர்கிடெக்சர் டிசைனிங்கையும் [கட்டிட வடிவமைப்பு], ஸ்ட்ரக்சுரல் டிசைனிங் வேலையையும் சேர்த்து செய்வார். [ஃப்ரெஷர்கள் சைட் சூப்ரவைசிங் செய்யவே நாக்கு தள்ளிவிடும்,படத்தில் சொன்னது போல ஒன்மேன் ஷோ சாத்தியமாகாத துறை சிவில் இஞ்சினியரிங் மற்றும் கட்டிடக்கலை துறை]

4.நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை படத்தில் வருவது போல ஜஸ்ட் லைக் தட் ஈஸியானது. [தனுஷின் அம்மா இறந்ததும் உறுப்புகள் தானத்துக்கு  வலு சேர்ப்பது போல காட்சிகள் சேர்த்திருந்தால் நம்பகத்தன்மை இருந்திருக்கும்]

முதல் படத்தில் வானார சாதித்த வேல்ராஜை கோடம்பாக்கத்தில் எந்த சினிமா பிரமுகரும் மனமார பாராட்டவில்லை என செய்தி படித்தேன். வேல்ராஜின் வெற்றி ஓவர்நைட்டில் கிடைக்கவில்லை,அவர் ஆளவந்தான் படத்திலேயே உதவி இயக்குனராக பணியாற்றியவர் பின்னர் வயிற்றுப் பிழைப்புக்காக இயக்குனர் கனவை மூட்டை கட்டிவிட்டு ,பல வருடங்கள் திருவிடம் உதவி கேமரா மேனாக பணியாற்றிவிட்டு, சொந்தமாக ஒளிப்பதிவு செய்து சாதித்துவிட்டு, தனுஷ் மூலம் இப்படி ஒரு நல்ல ப்ரேக் த்ரூ கிடைத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனராகியிருக்கிறார்.

அடுத்த படத்தில் இவரின் சகா வெற்றி மாறன் போல நன்றாக தீஸீஸ் செய்து இன்னும் சிறப்பாக படம் செய்து பிரமிக்க வைப்பார் என நம்புகிறேன். இந்தப் படத்தை தனுஷ் தான் இயக்கினார் என சிலர் அபாண்டமாக எழுதினர்,அவர் பின்னால் இருந்து இயக்கிய மரியானின் லட்சணம் எல்லோரும் அறிவோம் அல்லவா?.தனுஷ் இயக்குனரை நம்பி ஏமாந்த நையாண்டி என்னும் படம் என்ன ஆனது என அறிவோம் அல்லவா?தனுஷ் எப்போதுமே டைரக்டர்ஸ் டார்லிங்.இயக்குனர்கள் எப்படி மோல்ட் செய்கிறார்களோ? அவர் அப்படி மிளிர்வார்.

 தனுஷின் நடை உடை பாவனை எல்லாம் இப்படம் மூலம் மாறியிருக்கிறது ,நல்ல துவக்கம் இது.இண்டலெக்சுவல்கள் கூட தங்கள் விமர்சன முகமூடியை கழற்றி வைத்து விட்டு பார்க்க ஏற்ற படம்.

இப்பூமி மனிதன் மட்டுமே வாழப் படைக்கப்பட்டதல்ல!!!

 
Ecoduct Kikbeek in Hoge Kempen National Park, Belgium. Photo credit
இந்தியாவை வல்லரசாக்குவதற்கு காடுகளை அழித்து அதன் நடுவே மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைத்தால் மட்டும் போதாது, அங்கே இரண்டாகப் பிரிக்கப்பட்ட காடுகளில் வசிக்கும் விலங்குகள் இரை தேட, துணை தேட, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல பாலங்கள் அவசியம் அமைக்க வேண்டும்.இவற்றை ஆங்கிலத்தில் எகோடக்ட் என்றும் அழைப்பர்.

நெதர்லாந்து நாட்டில் இது போல 600க்கும் மேற்பட்ட பாலங்கள் [
wildlife crossing ] இருக்கின்றன. அதனால் அங்கே யானைகள் ரயில் பாதையில் கடக்கையில் ரயிலில் அடிபட்டுச் சாவதில்லை,நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களில் , ட்ரெய்லர் லாரிகளில் சிக்கியும் சாவதில்லை.
Elephant underpass in Kenya.

நம் இந்தியாவைத் தவிர எல்லா வளர்ந்த நாடுகளிலுமே இந்த விலங்குகளுக்கான மேம்பாலங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நம் நாட்டில் அனுதினமும் யானைகளும் ,சிறுத்தைகளும், புலிகளும் வன அழிப்பினால் ஊருக்குள் புகுவதும், வாகனங்களில் அடிபட்டுச் சாகும் நிலையில், அவற்றுக்கான மேம்பாலங்கள் அமைப்பது அவசியமாகின்றன.
Ecoduct Borkeld in the Netherlands. Photo credit

விலங்குகளின் வசிப்பிடத்தை அவற்றிடமிருந்து பிடுங்கும் பொழுது, அதற்கு சிறு பரிகாரமாவது செய்யுங்கள். பேராசை பெருநஷ்டம். இந்நிலை நீடித்தால் அடுத்த நூறாண்டுகளுக்குப் பின்னர் யானைகளையும் புலிகளையும் புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும். 
இப்பூமி மனிதன் மட்டுமே வாழப் படைக்கப்பட்டதல்ல!!!

மங்கோலியா நாட்டில் இருக்கும் ஒரு விலங்குகள் பாலம் பற்றிய விழிப்புணர்வு ஆவணப்படம்,அவசியம் பாருங்கள் பகிருங்கள்

வாட்டர்மார்க் ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் பற்றிய முக்கியமான ஆவணப்படம்

1500க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் பற்றிய முக்கியமான ஆவணப்படம் வாட்டர்மார்க், தமிழில், அவசியம் 
பாருங்கள், பகிருங்கள்.இயக்கம் ஸ்ரீமித்.N

இவர் கூடன்குளம் பிரச்சனை பற்றியும் ஆவணப்படம் இயக்கியுள்ளார்.
இவரின் முக்கியமான பேட்டி

http://www.dianuke.org/documenting-koodankulam-an-interview-with-film-maker-sreemith-n/

.
கூடன்குளம் பிரச்சனை குறித்த முக்கியமான GET UP STAND UP ஆவணப் படத்தின் ட்ரெய்லர்

ராட் ட்ராப் பாண்ட் என்னும் மாற்று தொழில்நுட்பம்: காலநிலைக்கு ஏற்ற கட்டிடக் கலை_தமிழ் இந்து கட்டுரை


கட்டிடங்களைக் கட்டுவதற்குப் புதுப்புதுத் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதைவிட நமக்கு உபயோகமானவை எவை என்பதைத் தீர ஆலோசித்து, அறிந்து அவற்றைப் பயன்படுத்தலாம். ஏழைகளின் பெருந்தச்சன் என கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஆங்கிலேயரான லாரி பேக்கர் வலியுறுத்திய எலிப் பொறி பாணியில் அமைந்த செங்கல் சுவர்களை அமைப்பது நமக்கு உகந்தது. 

எலிப் பொறிப் பாணியில் செங்கல்கள் நீளவாக்கிலும் அகலவாக்கிலும் வைக்கப்பட்டுச் சுவர் அமைக்கப்படும். இதனால் செங்கல் பயன்பாடும் குறையும் கட்டிடம் குளுமையாகவும் இருக்கும். வழக்கமாகச் செங்கல்லை ஒன்றின்மீது ஒன்று அடுக்கிக் கட்டாமல் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது கட்டிடம் பசுமைக் கட்டிட வரிசைக்கு நகர முடியும். 

இந்தப் பாணியில் சுவரை அமைக்கும்போது சுவரின் பூச்சுக்கு சாந்தாக சிமெண்டைப் பயன்படுத்தாமல் சுண்ணாம்பைப் பயன்படுத்துவது நல்லது. இதனுடன் ஃப்ளை ஆஷையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். சுண்ணாம்பு நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கும் பொருள், மேலும் அதன் விலையும் குறைவே. எனவே சிமெண்டால் ஆகும் அதிக செலவை இது வெகுவாகக் குறைத்துவிடும். 

தொழிற்சாலைக் கழிவுப் பொருளான ஃப்ளை ஆஷைப் பயன்படுத்துவதும் பசுமைக் கட்டிடத்தின் ஓர் அம்சமே. செங்கற்களிலும் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் வழக்கமான செங்கல்லின் உற்பத்தி முறை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும். செங்கல் சூளைகளில் செங்கல்லைச் சுடும்போது காற்று மாசுபடும். மாற்றுச் செங்கல்கள் வழக்கமான சூளைச் செங்கல்களைவிடத் திடமான, நீண்ட நாள் உழைக்கும் சுவரைத் தரும். 

பலன்கள்
எலிப் பொறி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு செங்கல்களைச் சேமிக்கலாம். பூச்சுக் கலவையின் செலவும் 30 முதல் 50 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே 9 அங்குல சுவரின் கட்டுமானச் செலவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க முடியும். 

வழக்கமான கட்டுமானத்தில் ஒரு கன மீட்டர் சுவரை அமைக்க சூளைச் செங்கல்கள் 550 தேவைப்படும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 470 செங்கற்களே போதும். 

எலிப் பொறி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுவரை அமைக்கும்போது கட்டிடத்தின் உள்ளே வெயில் காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். 

இந்தச் சுவரை அப்படியே விட்டுவிடலாம். மேற்பூச்சோ, வண்ணப்பூச்சோ அவசியமல்ல. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். 

இந்தக் கட்டுமானத் தொழில்நுட்பம் எடையும் தாங்கும். எனவே எடையைத் தாங்கக்கூடிய இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். அறைகளைப் பிரிக்கும் சுவர் எழுப்ப வேண்டிய இடங்களிலும் இந்தப் பாணி கைகொடுக்கும். 

எலிப் பொறிப் பாணியிலமைந்த சுவர்கள் வழக்கமான சுவர்களைவிட 20 சதவீதம் குறைவான எடையையே பூமிக்குக் கடத்தும். எனவே முறையாக இந்தச் சுவரை அமைக்கும்போது அஸ்திவாரச் செலவும் கொஞ்சம் குறையும்.
அதிகச் செலவு பிடிக்கும் பொருள்களான செங்கல், சிமெண்ட், இரும்பு போன்றவற்றின் உபயோகத்தைப் பெருமளவில் குறைக்க இத்தொழில்நுட்பம் உதவும். சுற்றுச்சூழல் நோக்கில், பசுமை வாயுக்களின் உற்பத்தியையும் எலிப்பொறி தொழில்நுட்பம் குறைத்துவிடும். 

அதிகப் பாதுகாப்பு தேவை என்று நினைத்தால் சுவரின் இடைவெளிகளில் அஸ்திவாரம் வரையிலும் வலுவூட்டப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் பார்க்கும்போது, ஒரு கன மீட்டர் சுவர் அமைப்பதில் சிமென்ட் செலவு ரூ. 288 குறையும்; செங்கல் செலவு ரூ. 576 குறையும், மணல் செலவு ரூ. 13 குறையும் என்கிறார்கள். செலவைக் குறைக்கும் எலிப் பொறித் தொழில்நுட்பத்தில் கட்டிடம் அமைத்தால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது; நமக்கும் நல்லது என்கிறார்கள் கட்டிடக்கலை நிபுணர்கள்

கட்டுரை ஆக்கம் :- ராகின்

சிட்டிலைட்ஸ்[ CityLights ] [2014 ] [இந்தியா ]


சிட்டிலைட்ஸ் என்னும் படம் சார்லி சாப்லினின் க்ளாஸிக் படத்தின் பெயரை கொண்டிருந்ததால் கொஞ்சம் அத்ருப்தியும் கோபமும் இருந்தது,ஆனால் படம் பார்த்து முடித்தவுடன் அது நீங்கிவிட்டது. அந்த பெயருக்கு உயர்ந்த மரியாதையே செய்திருந்தார் இயக்குனர் ஹன்சல் மேத்தா.இவரின் முந்தைய படமான ஷாஹித்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார்.

மெட்ரோ மனீலா என்னும் பிலிப்பைன்ஸ் நாட்டு தாகலாக் மொழிப் படத்தில் இருந்து மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, நம் நாட்டு பெருநகர சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக மாற்றியிருந்தார் இயக்குனர் ஹன்சல் மேத்தா.

ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் துணிக்கடை நடத்தி நொடித்துப் போன குடும்பத்தலைவன் தீபக் சிங் பாத்திரத்தில் [ராஜ்குமார் ராவ்], அவரின் மனைவி ராக்கி [பத்ரலேகா], அவரின் செக்யூரிட்டி பார்ட்னர் விஷ்ணுவாக  [மானவ் கவ்ல்], இவர்கள் இருவரும் வேலை செய்யும் ப்ரைவேட் விஜில் செக்யூரிட்டி நிறுவன முதலாளி காத்ரேவாக [ப்ரமோத் பதக் ] என காஸ்டிங்கில் பிரமிக்க வைத்து விட்டார் இயக்குனர் .

ஒரு படத்தை தத்ரூபமாக அமைப்பதற்கு காஸ்டிங் எத்தனை முக்கியம் என்று பார்வையாளருக்கு புரிய வைத்திருக்கிறார். மெட்ரோ மனீலா படத்தில் நாயகன் குடும்பம் பெரியது, அதில் ஏற்கனவே ஒரு மகளும் கைக்குழந்தையும், வயிற்றில் சில வாரங்களே ஆன சிசுவும் என நம்பிக்கை ஓளியே அற்றிருக்கும், எப்போதுமே ஒரு படைப்பை ஓவர்டோஸாக வைத்து துலாபாரம் படமாக்கக் கூடாது.

இதில் ஒரே மகள் தான், தவிர,அதில் நான் லீனியர் வடிவில் ஆங்காங்கே நாயகனின் வேலை இழந்த நண்பன், ஈஸி மனி செய்ய விமானத்துக்குள் பயணி போல நுழைந்தவன்,நடுவானில் துப்பாக்கி காட்டி மிரட்டி எல்லா பயணிகளிடமும் பணம் பறித்து , தானே தன் ஆலையில் பட்டுத்துணியில் செய்த பாரசூட் கொண்டு தரையிறங்கி அடிபட்டு செத்தும் போகிறான். அந்த காட்சிகளை நேட்டிவிட்டிக்கு ஒத்து வராது என்று வெட்டி எரிந்து விட்டார் இயக்குனர். அது பாராட்ட வேண்டிய அம்சம். சிட்டி லைட்ஸ் படத்தின் சிறப்பம்சம் அதன் கதாபாத்திரத் தேர்வுதான். மூலப்படத்தின் காஸ்டிங்கை தூக்கி சாப்பிட்டு விட்டனர்.

ராஜ்குமார் ராவ் நடிப்பு பற்றி உலகசினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை .இவரின் முதல் படமான லவ் செக்ஸ் அவ்ர் தோக்கா படத்தில் தன் பரீட்சார்த்தமான நடிப்பை துவங்கியவர் இன்று வரை வித்தியாசமான கதாபாத்திரங்களால் பிரமிப்பூட்டி வருகிறார்.

லவ் செக்ஸ் அவ்ர் தோக்கா_படத்தில் ஈஸி மனி செய்து தன் கடனை அடைத்தே ஆக வேண்டிய சல்லிப்பயல் பாத்திரம், தன் தோழியின் கௌரவக்கொலையால் நொந்துபோன ஏழைப்பெண்ணை, உஷார் செய்து சூப்பர் மார்கெட்டின் சிசிடிவி கேமராவில் ,ஒரு நைட் ஷிப்டில் வைத்து உடலுறவு கொண்டு அந்த ஃபுட்டேஜை விற்கும் கயவன் வேடம்.

அதே போன்ற பேராசையும் ஈஸிமனி செய்யும் ஆர்வமும் கொண்ட பாத்திரம் ராகினி எம் எம் எஸ் படத்திலும் , ஷைத்தான் படத்தில் தவறிழைத்த இளைஞர் பட்டாளத்தை மிரட்டி பணம் பறிக்கும் கான்ஸ்டபிள் பாத்திரம்.கை போச்சே படத்தில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞன், ஆனால் சந்தர்ப்பவசத்தால் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்று, நண்பனின் தங்கையுடனே ஒரு பண்டிகையின் இரவில் பாதுக்காப்பின்றி உடலுறவு கொண்டு விட்டு, அவளுக்கு நாள் தள்ளிப் போனவுடன் பயந்து தவிக்கும் பாத்திரம், அந்த இனப்படுகொலையின் உச்சக் காட்சியில் அதை நீர்த்துப் போவது போல இவரது போனுக்கு வரும் எஸ் எம் எஸ் நினைவிருக்கிறதா?!!!

மேலும்  பாம்பே மிரர் என்னும் இன அழிப்பு துவேஷம் களையும் குறும்படம் ஒன்றில் முஸ்லீம் இளைஞரான இவர் சவரம் செய்யச் சென்று அமருவார், வெளியே ஒரு சினிமா ஷூட்டிங்கில் இனக்கலவரக் காட்சிக்காக முஸ்லீம்கள் இந்துவை ஆண்குறியை சோதித்துப் பார்த்து விட்டு கழுத்தறுப்பது போல படமாக்குவர்,அதை உள்ளிருந்தபடி அதிர்ச்சியுடன்  பார்த்த வெகுநாள் பழகிய இந்து சவரத் தொழிலாளி, நடுங்கும் கரங்களில் பிடித்திருக்கும் ரேசரால் ராஜ்குமார் ராவின் கழுத்தை அறுத்தும் விடுவார், ஆனால் வெளியே படப்பிடிப்பு முடிந்து ஷாட் ஓக்கே,சொல்லி, இறந்தவரும் எழுந்து விடுவார், அப்போது தான் அந்த சவரத் தொழிலாளிக்கு உரைக்கும். அய்யோ கன நேரத்தில் ஒரு உயிரை அழித்துவிட்டோமே என்று, அப்படி பல அருமையான படைப்புகளுக்கு அது எத்தனை சிறியதாக இருந்தாலும் , உயிரூட்டியவர் ராஜ்குமார் ராவ்.
பாம்பே மிரர் குறும்படம் பாருங்கள் பகிருங்கள்


எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல ஷாஹித் என்னும் நிஜ ஆளுமையின் கதையின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அந்த காலம் சென்ற ஷாஹித் என்னும் வழக்கறிஞருக்கு கௌரவம் செய்தார் ராஜ்குமார், அப்பாவி முஸ்லீம்கள் மீது போடப்படும் பொய்வழக்குகளில் இருந்து, ஒரு ஏழை வழக்கறிஞர், நேர்மையாக போராடி விடுதலை பெற்றுத்தரும் பாத்திரம். அதற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஷாஹித் படத்தில் வரும் முக்கியமான வாதாடும் காட்சி,ஆங்கில சப்டைட்டில் இல்லை.மன்னிக்கவும்

இந்த சிட்டிலைட்ஸ் படத்தில் பிழைப்புக்காக குக்கிராமத்திலிருந்து மும்பை போன்ற பெருநகரத்துக்கு இடம்பெயரும் ஓர் அப்பாவி ஏழையின் குடும்பம் பெருநகர சூழலின் கோரப்பிடியில் சிக்கி எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.  

இந்தியாவில் இன்றைய கிராமங்களில் மக்கள் வாழ வழியின்றி எப்படி பெருநகரங்களுக்கு படையெடுக்கின்றனர் என்பதை ரத்தமும் சதையுமாக நாம் கண்ணுறுகிறோம்.உடன் பயணிக்கிறோம்.

மும்பையில்  இவர்கள் வந்து இறங்கியவுடன் வீடு பிடிக்க உதவுகிறேன் என்னும் பெயரில் இவரைக் கொண்டு போய் ஒரு வீட்டைக்காட்டும் ஒரு வீடு புரோக்கர் இவரிடமிருந்த சேமிப்பான பத்தாயிரத்தை சடுதியில் ஏமாற்றிவிட்டுச் செல்கிறான்,அவ்வீடு வீடோ யாரோ ஏற்கனவே வாடகைக்கு எடுத்தது எனப் பிறகு தான் தெரிகிறது. தெருவில் செய்வதறியாது தவிக்கும் இவர்கள் தஞ்சம் அடைவது அங்கே கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில், அதுவும் அங்கே உள்ள வாட்ச்மேனால் தின வாடகை 100 வாங்கிக்கொண்டு தான் தங்க அனுமதிக்கப் படுகின்றனர். 

மும்பையின் டான்ஸ் பார்கள் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது,அதில் சாந்தினி பார் மிகவும் குறிப்பிடத்தக்கது,நானே சுமார் 15 வருடங்கள் முன்பு ஒரு டான்ஸ் பாருக்கு என் உறவினரால் அழைத்துச் செல்லப்பட்டு,அங்கே மது ஊற்றித்தரும்,சிகரட் பற்றவைக்க உதவும், சைட் டிஷ் பறிமாறும் நடன மங்கையரைக் நேரில் கண்டிருக்கிறேன்,

அங்கே பார் டேன்சராக பணிபுரிவது ஒரு சாபம்,ஏழு மணிக்கு துவங்கும் பார்கள் 2மணி வரையிலும் இயங்கும்,பாலிவுட்டின் புகழ்பெற்ற ஐடம் நம்பர்கள் ஒலிக்க அதன் வரிகளுக்கு வலிக்காமல் நடனமாடி,அங்கே குடிக்க வரும் ஜாம்பவான்களை தொட்டும் தொடாமலும்,பட்டும் படாமலும் குஷிப்படுத்தி அவர்களிடமிருந்து ரூபாய் நோட்டுக்களை அன்பளிப்பாக,சிலசமயம் பண மழையாகக் கூட  பெறும் பிழைப்பு,

அவர்களுக்கு சம்பளம் மாதத்துக்கு 1000 ரூபாய் தான்,ஆனால் அன்பளிப்பு அப்போதே ஒரு நாளுக்கு 1000 ரூபாய் வரும்,அதில் அவனுக்கு கமிஷன், இவனுக்கு கமிஷன் ,மேக்கப்புக்கு இவ்வளவு,உடை வாடகைக்கு அவ்வளவு என 200ரூபாய் மிஞ்சினால் அதிகம் என்று கேட்டிருக்கிறேன், இப்படத்திலும் நாயகனின் மனைவி ராக்கி,பார் டான்சராக வேலைக்கு சேர்ந்தவள்,உள்ளம் குமைகிறாள்.

பிடிக்காமல் ஆடுகிறாள். அழுது அழுது மேக்கப் களைகின்றது,இவளுக்கு ஈடுபாடின்மையாலும்,அவளை வாடிக்கையாளர் தொட அனுமதிக்காததாலும் இவளுக்கு பணமே சேருவதில்லை,குழந்தை தினமும் பசியால் வாடுகிறது, மானத்தை விட்டு செய்யும் பிழைப்பு.அந்த பார் டான்சருக்காக நேர்முகத் தேர்விற்கு செல்லும் இடம் மிக அருமையான ஒன்று, அதில் பார் நடத்துபவனாக வரும் ஜெயேஷ் பாய்[வினோத் ராவத்] என்னும் பாத்திரமும் மிகத் தத்ரூபமான பாத்திரம்.

இப்படினான சூழலில் நாயகன் தீபக் , தனியார் ஆயுதப்படையின் பணி விளம்பரம் கண்டு நேர்முகத் தேர்வுக்கு சென்று,அங்கே விஷ்ணு என்பவனின் பார்வையில் பட, இவரின் வெள்ளந்தித் தனமும் ஏற்கனவே ராணுவத்தில் ட்ரைவராக இருந்ததும், ராஜஸ்தான் ஓட்டுனர் உரிமம வைத்துள்ளதும், அங்கே வேலை வாங்கித் தருகிறது, இருந்தும் அதற்குக் கூட ஆயிரம் கெடுபிடிகள்,இவரது பார்ட்னர் விஷ்ணுவுக்கு ஒரு கெட்ட உள்நோக்கம் அங்கே உள்குத்தாக இருந்து அவருக்கு வேலை வாங்கித் தருகிறது,மாதம் 15 ஆயிரம் சம்பளம்,ஆனால் உயிர் நேரமும் பிரியக்கூடிய ஆபத்து.

 இவரின் நிறுவன முதலாளிக்கு சீரியஸான பிரச்சனை செய்யக்கூடிய ஆட்களை பிடிப்பதில்லை,வேலைக்கு சேர்ப்பதுமில்லை,ஆட்டிட்யூட் இல்லாத டைம்பாஸ் ஜோக்குகள் சொல்லித்திரியும் ஆட்களே சேஃப் என்று எண்ணும் ஒரு பிறவி,அவரை திருப்தியுற வைக்க அங்கே தீபக் பொய்யாக அப்போது தான் விஷ்ணு சாரால் தான் அறிந்த ஒரு காரியதரிசி பற்றிய உப்புப்பெறாத ஜோக்கை சொல்கிறார், அந்த முதலாளியும் அல்லக்கையும் அந்த ஜோக்கிற்கு அப்படி விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்,ஆனால் அவர்கள் ஜோக்கை ரசித்து சிரிக்கும் அளவுக்கு லேசான இதயம் படைத்தவர்களில்லை,என்பது நமக்கு க்ளைமேக்ஸ் காட்சியில் புரிய வருகையில் ரத்தம் உறைகிறது.

மிக அருமையான பாத்திரப்படைபும்,காட்சியாக்கங்களும்,உலக சினிமா ரசிகர்கள் விரும்பிப் பார்க்க ஏற்ற படம் இது,இப்படம் பார்ப்பவர்கள் மெட்ரோ மனிலா படத்தையும் அவசியம் பாருங்கள்.படத்தில் ராஜ்குமார் ராவ் பேசும் ராஜஸ்தானி வாடை அடிக்கும் இந்தி மிகவும் அழகு,அத்தனை ராகமாக ஏற்ற இறக்கத்துடனும் அப்பாவித்தனத்துடமும் இருக்கும், சக ஊழியன் விஷ்ணுசாரை ஹுக்கும் [ஐயா] என கிராமவாசி பாஷையில் அழைக்கும் இடங்கள் மிகவும் அருமை.

இடது புறம் மானவ் கவ்ல் கைபோச்சே திரைப் படம்
விஷ்ணு சாராக வந்த மானவ் கவ்ல் ஒரு தேர்ந்த நாடக நடிகருமாவார்,இவர் காஷ்மீர் மாநிலத்தவர்.கைபோச்சே படத்தில் சங்பரிவார் கட்சியின் அல்லக்கையாக வருவாரே?நினைவிருக்கிறதா?இனப்படுகொலையை முன்னிருந்து நடத்துவார். மூன்று நண்பர்களின் ஒருவனுக்கு தாய்மாமன்,என்ன ஒரு சக்தி வாய்ந்த ஒரு பாத்திரம் அது?இதிலும் விஷ்ணு சாராக வந்து மிரட்டியிருக்கிறார்,கண்ணில் தெரிவது இரக்கமா?குரூரமா?என கண்டறிய முடியாத ஒன்றைக் கொண்டிருப்பார்.படம் பார்க்கையில் நீங்கள் உணர்வீர்கள்.

 என்றும் நினைவில் தங்கும் ஒரு உலகசினிமா சிட்டிலைட்ஸ், படத்தின் ஜீத் கங்குலி,ராஜு சிங்கின் இசையும்,தேவ் அகர்வாலின் ஒளிப்பதிவும் படத்தின் மாபெரும் பலம்.

சிட்டிலைட்ஸ் படத்தின் ட்ரெய்லர்:-

சூரிய சக்தியில் இயங்கும் தள்ளு வண்டி ஜூஸ் கடை!!!


 
Kanaga Raju's photo.
 
அருமை நண்பர்களே!!! ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இதைப் பகிர்ந்திருந்தார்,நாட்டுக்கு மிக அத்தியாவசியமான செய்தியாக தெரிந்ததால் இங்கே பகிர்கிறேன்.எல்லாவற்றிற்கும் அரசையே குற்றம் சொல்லாமல், மாற்று யோசனை செய்து அதற்கு செயல் வடிவம் கொடுத்த இந்த தள்ளுவண்டி ஜூஸ் கடைக்காரரை எத்தனை பாராட்டினாலும் தகும். நீங்களும் இதை படித்து விட்டு பகிருங்கள்.இதற்கு செயல்வடிவம் கொடுத்த ஜெர்மானிய சோலார் பேனல் கம்பெனியின் பெயர் போகோஸ் phocos அவர்களது செல்போன் நம்பர்கள் +91  8940482159 / +91 7708006882, நீங்களும் ராமதாஸ் போல மின்சாரத்தை சிக்கனம் செய்து வளம் பெற விரும்பினால் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்களுக்குத் தேவையான வகையில் சோலார் பேனல்களை வடிவமைத்துக்கொள்ள முடியும்.
 
Kanaga Raju's photo.
மின் தட்டுப்பாட்டால் அல்லாடும் தமிழகத்தில்... தில்லான தள்ளுவண்டிக்காரர்!  [நன்றி Kanaga Raju  ]

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நிற்கிறது தள்ளுவண்டி ஜூஸ் கடை. இந்த கடையின் மேல்கூரை சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கும் solar panel-களால் ஆனது. இந்தக் கடையின் உரிமையாளர் ராமதாஸ், தனக்கு வித்தியாசமாக தோன்றிய ஐடியாவை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சொல்லி செயல்வடிவம் கொடுத்துள்ளார்.

5 அடி அகலம், 10 அடி நீளம் என 50 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் solar panel மூலம் 1000 watts-க்கு உட்பட்ட மிக்ஸி, சிறிய அளவிலான பிரீசர் (Freezer) , மின் விளக்கு போன்ற கடைக்கு தேவையான சாதனங்கள் இயங்குகின்றன.

இதனால் வழக்கமாக வீட்டு மின்சாரத்தை உறிஞ்சி பிறகு கடையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தேவையில்லை. டீசலை உறிஞ்சும் ஜெனரேட்டர்களும் தேவையில்லை. சோலார் பேனல்களுக்கு 25 வருடங்கள் கியாரண்டி இருப்பதால், முதல்முறை செலவுசெய்தால் பிறகு 25 வருடங்கள் வரை செலவு செய்யத் தேவையில்லை.

‘மற்ற தள்ளுவண்டி கடைகளில் தினசரி 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மின் சக்திக்கென ஆகும். ஆனால் எனக்கு அந்தப்பிரச்சினை இல்லை. இந்த சோலார் பேனலுடன் கூடிய கடையை வடிவமைக்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகியது. காலப்போக்கில் நான் போட்ட பணம் வந்துவிடும். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மன நிம்மதியும் எனக்கு கிடைக்கும்’ என்கிறார் ராமதாஸ்.

Kanaga Raju's photo.
ஒரு நகரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் இதுபோன்று வடிவமைக்கப்பட்டால், சேமிக்கப்படும் மின்சாரம் மற்றும் டீசலின் அளவு எவ்வளவு இருக்கும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. குஜராத்தில் நர்மதா நதியின் மேல் போடப்பட்டுள்ள சோலார் திட்டத்தைப் பார்த்து அதிசயத்திருக்கிறோம். அதைவிட கூடுதலாக பல வாய்ப்புகள் தமிழக்த்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த தள்ளுவண்டி கடை ஒரு உதாரணம்.

2 ஸ்டேட்ஸ் [ 2 STATES] [2014]


2ஸ்டேட்ஸ் படத்தின் இயக்குனர் அபிஷேக் வர்மன் ஒரு ஆர்கிடெக்டாகத் தான் இருக்க வேண்டும் என யூகித்திருந்தேன், ஆம் அவர் ஆர்கிடெக்டேதான் மும்பை krvia கல்லூரி மாணவராம் . படத்தில் அவர் அமெரிக்க ஆர்கிடெக்ட் ஐகான் லூயிகான் வடிவமைத்த இந்திய பின்னவீனத்துவ கட்டிடக்கலை அதிசயமான ஐஐஎம் அகமதாபாதின் அழகை ரசித்து அள்ளி வந்திருந்தார்.ஒரு ஆர்கிடெக்டின் கண்ணோட்டத்தில் தான் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடத்தின் துல்லியமான டீடெய்ல்கள் வெளிப்படும்.

இன்றும் எந்தக் கட்டிடக்கலை பயிலும் மாணவரும் படிக்கும் காலத்தில் கல்விச் சுற்றுலா செல்லும் கட்டிடம் இது, ஐஐஎம் பெங்களூரும் இதே வடிவமைப்பைப் பின்பற்றி லூயிகானின் மாணவரான பிவி தோஷியால் [இந்தியாவின் ப்ரீமியர் ஆர்கிடெக்ட்] பின்னாளில் வடிவமைக்கப்பட்டது, லூயிகான் பற்றி நான் ஏற்கனவே எழுதிய சுவையான டாகுமெண்டரி பற்றிய பதிவான  மை ஆர்கிடெக்ட்

சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் ஐஐஎம் வளாகத்தில் எடுக்கப்பட்டது என்றால் அது 2 ஸ்டேட்ஸ் மட்டுமே. இத்தனைக்கும் இந்த கட்டிடம் கட்டி 53 வருடங்கள் [1961] நிறைவு பெற்று விட்டது, இன்னும் இந்த வளாகத்தை ஹெரிடேஜ் காம்பஸ் என்று போற்றிப்பாதுகாத்து வருகின்றனர். அதன் இணையதள சுட்டி

அந்தப்பாடலை இங்கே கண்டு களியுங்கள்:-


படத்தில் ப்ரிமேரிட்டல் செக்ஸை மிகவும் சாதாரணமாக பிரயோகித்திருந்தார் இயக்குனர்,படத்தில் இதைப் பார்ப்பதற்கு குஜாலாக இருந்தாலும் இக்கால சந்ததிகளை மெட்ரோ லைஃப் ஸ்டைலும், பணக்கார கல்வி மையங்களும் , மது குடிப்பதும் ,சிகரட் புகைப்பதும்,திருமணத்துக்கு முந்தைய உடலுறவு தவறே இல்லை என்ற நிலையில் வைத்திருப்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

 இதை எனக்கு சுமார் 10 வருடம் முன்பே அங்கு IIM மற்றும் CEPT ற்கு கல்விச் சுற்றுலா சென்று வந்து நேரில் பார்த்துவிட்டு கதை கதையாக சொன்ன ,என் ஆர்கிடெக்ட் நண்பனை இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.அங்கே எந்நேரமும் மாணவிகள் மாணவர்களின் ஹாஸ்டலுக்குள் வந்து க்ரூப் ஸ்டடி[!] செய்ய முடியும்,நல்ல குளிர்காலத்தின் ஒரு விடிகாலையில் என் நண்பன் அவனுடைய நண்பனின் அறைக்குச் சென்று பெட்டியை வைத்து விட்டு,போர்வையை விலக்கி நண்பனை எழுப்பினால் உள்ளே இருந்தது நண்பனின் தோழி,இது ஒரு உதாரணம் தான்.  அங்கே அபோதே ப்ரீமேரிடல் செக்ஸ் எல்லாம் மிகச்சாதாரணம். கேவலம் உடலுறவுக்காக வாழ்க்கை முழுவதும் கூட வருவேன் என்னும் காதலன் காதலி வேடம் எல்லாம் எடுபடாதவை,அதை இந்த 2 ஸ்டேட்ஸ் படத்தின் அனன்யா பாத்திரம் பிரதிபலிக்கிறது.
சேட்டன் பகத்தை இதைவிட கலாய்க்க முடியாது

இன்றும் சென்னையின் ஒரு சில உயர் அந்தஸ்து கல்லூரிகளில் ப்ரொஃபெஷனல் துறைகளின் , ஹாஸ்டல்களில் இது சகஜமான போக்கு தானாம், அவர்களின் லேப்புக்குள் 24 மணி நேரமும் மாணவர்கள் சென்று வர முடியும். நினைத்தவுடன் குற்ற உணர்வின்றி கலவி கொள்ள வசதியாகவே இருக்கும் அடர்ந்த வன சூழலும்.சில வருடங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு முந்தைய உடலுறவு தவறே இல்லை என்று வாதிட்ட நடிகை குஷ்பூவை கட்டம் கட்டி அடித்தனர், ஆனால் அது கோவிலின் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையைப் போல மிகச்சாதாரணமாக கருதும் காலம் தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

படத்தில் சென்னை பற்றியும் பிராமணர் கலாச்சாரம் பற்றியும் சில தகவல் பிழைகள் இருந்தாலும் சென்னை எக்ஸ்ப்ரஸ் போல இல்லை, தென் இந்தியர் என்றாலே நாயகிகளை கேரளா ஸ்டைல் கசவு புடவை அணிய வைத்து விடுகின்றனர்.இதிலும் அது நடந்தது.

அப்புறம் நம்முடைய பட்டினப்பாக்கம் - பெசண்ட் நகர் வரை இருந்த ப்ரோக்கன் ப்ரிட்ஜை யாரும் இத்தனை அழகாக காட்டியிருக்கமாட்டார்கள் ,அதை 1960களில் இருந்தது போன்றே , இன்றும்  மக்கள் உபயோகத்தில் உள்ளது போல காட்டி , அதில் ஒரு திருமண ஊர்வலத்தையே நடந்து போக வைத்து விட்டார்.மிக அழகான காட்சி, சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் தெரியும்,அது எப்படிப்பட்ட இடம் என்று.
அந்தப்பாடலை இங்கே கண்டு களியுங்கள்:-

மஹாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள் புராதான சிறப்பு மிக்க இடம்,என்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்திருப்பார்கள் போலும் ஆகவே அந்த கடைசி திருமணப் பாடலை , பாண்டிச்சேரியில் செட் போட்டு எடுத்திருக்கின்றனர். கடற்கரைக் கோவிலின் தோற்றத்தை  தழுவி அமைத்த செட் மிக அருமையாக வந்திருந்தது.இந்த தகவலுக்காக படத்தை கடைசி க்ரெடிட் ஸ்க்ரோல் வரைப் பார்க்க வேண்டியிருந்தது.

அந்தப்பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்:- 
படத்தின் அந்த முக்கியமான உள்ளம் பாடும் பாடல் என்னும் திருமணப் பாடலின் வீடியோ எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை,இந்த மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் அரங்கக் காட்சி செட்டிங் ஆகும்.இதன் ப்ரொடக்‌ஷன் டிசைனர்  Amrita Mahal Nakai என்னும் பெண்  ஆவார். மிகச்சிறந்த வேலைபாடுகளால் பிரமிக்க வைத்திருந்தார்.


 இப்படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படைப்பு, அலியா பட்டின் சொக்க வைக்கும் அழகுக்காகவும். அர்ஜுன் கபூரின் ஸ்மார்ட்னெஸ்ஸுக்காகவும், சேட்டன் பகத்தின் கதைக்காகவும்,அபிஷேக் வர்மனின் க்யூட் இயக்கத்துக்காகவும், நம் காலத்தைய கட்டிடக்கலைக்கு இவர் தந்த முக்கியத்துவத்துக்காகவும், சங்கர் எசான் லாயின் இசைக்காகவும், பினோத் ப்ரதானின் கேமராவுக்காகவும் பார்க்க பரிந்துரை செய்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)