மகாநதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாநதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மகாநதி கதாபாத்திரங்கள் நதிகள் நீர்நிலைகள் காவல் தெய்வங்கள்

மகாநதி திரைப்படத்தில் ஒவ்வோரு கதாபாத்திரங்களுக்கும் நதிகளின் பெயர் அல்லது புண்ணிய தீரங்களின் பெயர் ,நீர் தொடர்புடையை பெயர்கள்  மிக நுட்பமாக சூட்டப்பட்டதை எண்ணி வியக்கிறேன்.

பிரதான கதாபாத்திரங்களான கிருஷ்ணா, மகள்  காவேரி , மகன் பரணி, இறந்து போன  மனைவி நர்மதா, மாமியார் சரஸ்வதி, (my name is kaveri like the river kaveri ல் இப்பெயர்கள் வரும்) வருங்கால மனைவி யமுனா என அநேகம் பேர் அறிவோம்.

கல்கத்தா சோனாகாச்சியில் காவேரியை விடுதலை செய்ய சக விலைமாதர்களிடம் பணம் வசூல் செய்து தரும் அந்த பரதேவதையின் மகள் பெயர் ஜலஜா, (நீரில் பூத்த தாமரை)

மஞ்சு (துளசி) என்ற  கதாபாத்திரப் பெயரில் கிழக்கு சிக்கிம்  முதல் திபெத் போகும் வழியில் இமயமலை தொடரில் 13615 அடி உயரத்தில்  மஞ்சு ஏரி உள்ளது.

இதே போலவே யமுனா தந்தை பஞ்சாபகேசன் கதாபாத்திரம் கூட நதிகளை சடையாக கொண்ட சிவனைக் குறிப்பது தான், திருவையாறு என்பது திரு ஐ(ந்து) ஆறாகும் , இங்கே காவிரி ஐந்து கிளை  ஆறுகளாக பிரிந்து கடலில் சென்று கலக்கிறது, இங்குள்ள மிகப்பழமையான சிவன் கோயிலின் பெயர் ஸ்ரீ ஐயாரப்பன் திருக்கோயில், ஐயாரப்பன் என்பது சமஸ்கிருதத்தில்  பஞ்சநதீஸ்வரர், நதிகளை கேசமாக கொண்டவர் என்றால் பஞ்சாபகேசன் ஆகும்,திருவையாற்றில் இந்த பஞ்சாபகேசன் என்ற பெயரில் நிறைய பேர் இருப்பார்கள்,  அத்தனை பிரசித்தமானது, .
திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இது போல சிறைக்காவலர் முத்துசாமி பெயருக்கும் காவிரி தீரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு, திருவாரூரில் பிறந்து  சென்னை மணலியில் வாழ்ந்து எட்டயபுரத்தில் முக்தி அடைந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பெயர் இந்த கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.

பெண் தரகன் தனுஷ் கதாபாத்திரத்தின்  பெயர் கூட தனுஷ்கோடி தீரத்தை குறிக்கிறது, 

பசுந்தோல் போர்த்திய புலி 
பிள்ளைக்கறி தின்னும் பீடோஃபைல் கதாபாத்திரமான வெங்கடாசலம் கூட பத்ராசலம் போல கிழக்கு கோதாவரி நதி தீரம் தான்.

கான்விக்ட் வார்டர் துலுக்கானம் என்ற பெயர் பழைய சென்னை வாசிகளுக்கு பரீட்சயமான பெயர் ஆகும், கோடம்பாக்கத்தில் புலியூர் சாலையில் ஆதி துலுக்காணத்தம்மன் கோயில் அமைந்துள்ளது, நூறு வருடங்களுக்கு முன்பு மாம்பலம் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது இந்த  உக்கிரமான அம்மன் தலை சிலைவடிவம், அதை ஆதி துலுக்கானத்தம்மன் என்று கோயில் கட்டி வழிபடுகின்றனர், அந்நாளில் மரத்தடியில் இருந்த அம்மன் சிலையை  இஸ்லாமிய பெண்மணி ஒருவர் மகனுக்கு அம்மை நோய்கண்டு  கண்பார்வை பறிபோய் விட, மனதார  வேண்டிக் கொண்டு பார்வையை திரும்பப் பெற்றார், இஸ்லாமியர் வழிபட்டு அம்மனின் மகிமை முதலில் ஊருக்கு வெளிப்பட்டதால் இந்த அம்மனுக்கு பெயர் ஆதிதுலுக்காணத்தம்மன், இன்றும் பெரிய வழிபாட்டு தலமாக திகழ்கிறது,பழைய பூர்வகுடி சென்னை வாசிகளின் குழந்தைகளுக்கு இந்தப்பெயர் ஆண் பெண் என இருபாலருக்கும் சூட்டப்பட்டது.

மகாநதி மேலும் 

மகாநதி | துலுக்கானம் கதாபாத்திரம்


மகாநதி திரைப்படத்தில் துலுக்காணம் கதாபாத்திரம் அத்தனை அற்புதமான ஒன்று, கான்விக்ட் வார்டர் என்ற மிதப்பில் திரிபவன்,  சிறைக்குள் வருகிற பாவிகள் , அப்பாவிகள் என அனைவரையும் ஆட்டிப்படைக்கிறவன், அவன் நோக்கம் அத்தனை பேரையும் பயத்தில் வைத்திருக்க வேண்டும், பரமசிவன் கழுத்து பாம்பு போல ஜெயிலரின் செல்லப்பிள்ளை, விசுவாசத் துடுக்கன், சிறைக்கைதிகளை கான்விக்ட் வார்டர் தன் துணையின்றி அடக்கி வழிக்கு கொண்டு வர முடியாது என்ற தைரியத்தில் ஜெயிலர் தந்ததை விடவும்   கூடுதல் அதிகாரம் எடுத்து அள்ளி அனுபவிக்கிறவன், பஞ்சாபகேசன் உணவில் மண்ணைப் போடுகிறான்,தடுத்த கிருஷ்ணாவை அடித்துப் புடைக்கிறான், முகத்தில் எச்சில் உமிழ்கிறான்,  

சிறைக்குள் யாருக்கும் நல்ல பெயர் எடுக்க விடாதவன், சிறை வார இறுதி நேர்காணல் சமயத்தில் கைதிகளுக்கு விருந்தினர் தருவதை வலுக்கட்டாயமாக பிடுங்கி பரிசோதிப்பவன்,தனக்கு என அதில் ஒதுக்குகிறவன், சிறைக்குள் கைதிகள் தன்னிடம் மட்டும் பீடி சிகரட் கஞ்சா வாங்க வேண்டும் என்ற சுயநலம் அதில் தெரியும் , கிருஷ்ணா மகள் தந்த அல்வாவை அவள் சொன்னபடியே கொஞ்ச கொஞ்சமாக சாப்பிட்டு தட்டில்  மீதம் வைத்திருக்கிறார் கிருஷ்ணா, விடிகாலை தொரட்டி கொண்டு இழுத்து அதில் மூத்திரம் பெய்து கொக்கரித்து அகல்கிறான் துலுக்காணம்,

கையாலாகாத மனக்குமுறலில் கழிவிரக்கத்தில் சாம்பார் கிளறியபடி இருக்கும் இருக்கும் கிருஷ்ணா காதுபடவே ,சாம்பார் கையில் ஊற்றி  சுவைக்கையில் என்ன ஐயரே? பெருங்காயம்  மூத்திர நாத்தம் அடிக்கிது? என வெறுப்பேற்றுகிறான் துலுக்காணம், சாது கிருஷ்ணா மிரண்டு விடும் தருணம் அது, தோளைத் தொட்டு அழைத்து திரும்ப முகத்தில் சரமாரியான குத்துகள்,நெஞ்சில் மிதி,  கட்டிப்பிரண்டு உண்டக்கட்டி அடுக்கிய தகர மேஜையை தூக்கி அவன் முகத்தில் எறிந்து பிண்டம் வைத்து , மேலே பாய்ந்து தாக்கும் அத்தனை அபாரமான நிஜ தெருச்சண்டை  போன்ற கைகலப்பு அது, 

சாது மிரண்டதை தாங்காத மிருகம் கொம்பு தீட்டுவது போல துலுக்காணம் அங்கே நெற்றியில் அடித்துக் கொண்டு தன்னையே உசுப்பேற்றிக் கொண்டு தவளை பாய்வது போல கிருஷ்ணா மீது பாய்வான் பாருங்கள்.இந்த காட்சி கோழைக்கு கூட உத்வேகம் தரும் காட்சி, சாக இருப்பவன் கூட பார்த்துவிட்டு சாகிறேன் என சொல்லும்படி படமாக்கப்பட்ட காட்சி.

லெச்சுமணா என கண்ணியில் மாட்டி துடிக்கும் பன்றி போல துலுக்காணம் அலறுவதை நம்மால் மறக்க முடியுமா? 
லெச்சுமணன் வரும் முன் பிடித் துணியால் துலுக்காணத்தின் முகத்தை மூடி முறுக்கி கொதிக்கும் சாம்பார் டேக்ஸாவில்  நன்கு முக்குவார் கிருஷ்ணா , துலுக்காணம் கையில் காய்கறி வெட்டும் கத்தியைப் பற்றியவன் காற்றில் கண்டபடி சுற்றுவான், கிருஷ்ணா அந்த கத்தி ஏந்திய கையை விறகடுப்பின் எரிதழலில்  வைத்து சுடவும், அலறியபடி கத்தியை கைவிடுவான், அவனை சுழற்றி ஒற்றைக்கல் சுவரில் தூக்கி அடித்து விடுவார் கிருஷ்ணா,கண்ணெரியுது என குழந்தை போல அழுவான் துலுக்காணம்,  வெட்டுரூம் உளி ஒன்று வாகாக கைக்கு சிக்க,அதைக் கொண்டு இறக்கிவிடப் போகையில் சக கைதியர் குத்து குத்து என ஆகோஷிக்க, பஞ்சாபகேசன் நல்ல மருமகன் கொலைக்குற்றவாளி ஆகக்கூடாதே என அலறித் தடுக்க, அந்த இரும்புளியை தூர எறிந்து விட்டு, உலக்கையால்  அரிசி நொய் குத்துவார்.

உள்ளே வந்த லச்சுமணன் பார்க்கும்  பார்வையிலேயே துலுக்காணத்தின் எதிர்காலம் விளங்கிவிடும்,வழுக்கி விழுந்திட்டேன் என சொன்னவனை போய்யா போய்  டாக்டர பாரு என அனுப்பி வைத்து கைதிகள் எல்லோரையும் திரும்பிப் பார்க்க  , கிருஷ்ணாவின் முதுகு சட்டைப்புறம் பிசுக்காயிருக்கும், அதை வைத்து ஆட்சித்தலைமை மாற்றத்தை அங்கே கணித்துவிடுவான் லச்சுமணன்.

துலுக்காணத்தின் அடிப்படை முதலீடே பிறருக்கு பயம் காட்டும் தவ்லத்தனம் தான்,அந்த தெனாவட்டு போன பின் அவன் ஒரு செத்தபாம்பு, கிருஷ்ணாவின் முன்னால் திரண்டு வந்து அடுத்த தலைவன் நீ என நிற்கும் சிறைக்கைதிகளைப் பார்த்து கிருஷ்ணா கலங்கிப் போவார், இது எனக்கு தேவையில்லாத மரியாதை, நான் வெளியில் போகனும், என்னை என்வழியில் போகவிடுங்கள் என சொல்லாமல் சொல்லி  உலக்கையைப் பற்றி தலையை குனிந்து கொள்கையில் அக்காட்சி நிறையும்,

இந்த காட்சி முழுக்க நிலைகொள்ளாத M.S.பிரபுவின் கேமரா அடுத்த காட்சியில் தச்சு பட்டறையில் நிலை கொண்டுவிடும். துலுக்காணம் மேஜை மேல் அமர்ந்து வேலையை வேடிக்கை பார்க்க அவன் அங்க அசைவில் அடிபட்ட  தெருநாயின் நுட்பமான பம்மும் உடல்மொழி காணலாம், துலுக்காணம் எழுந்து விலக , கிருஷ்ணா அங்கே வேலை செய்ய நுழைவார், எல்லோரும் வணக்கம் தலைவா என்பர், கையில் ரம்பம் வைத்து அறுக்கும்  கரகர குரல் கொண்ட பழுத்த கைதி ஒருவரும் கூட வணக்கம் தலைவா என்பார்.

சினிமாவில் ஒரு காட்சி எத்தனை வீர்யமாக பார்வையாளர்களுக்குள் அங்கு சிறையில் நடந்து முடிந்த  ஆட்சித்தலைமை மாற்றத்தை நுட்பமாக சொல்லி விடுகிறது பாருங்கள்.

அது நாள் வரை துலுக்காணத்தின் முகத்தில்  எண்ணெய்ப் பளபளப்பை காணலாம்,செல்வத்தின் பளபளப்பு, அதிகாரத்தின் பளபளப்பு, ஆனால் எல்லாம் அங்கே வற்றி முடிந்து முகத்தில் கொதிக்கும் சாம்பார் ஏற்படுத்திய வெந்தபுண் தழும்புகளையே நாம் பார்ப்போம், துலுக்காணம் தன்னிடம்  கைதிகளுக்கு பயம் போனதை நன்கறிந்தவன் என்பதால் இனி தன்னை விட வல்லவனின் துணை கோருகிறான்,

தேங்கி உள்ள பீடி சிகரெட் உரம் என்ற கஞ்சா இவற்றை சிறைக்குள் விற்று காசாக்குதல் பெரிய கலை, விற்பனைக்கு இடையூராக உள்ளவர்களை வேவு பார்த்து களையெடுக்க வேண்டும், வாங்கிப் புகைபவனுக்கு கடனுக்கு தந்து சரியாக வசூல் செய்து வாங்க வேண்டும், 

பயம் போனால் பாக்கி வசூலாகாது,மொத்தத்தில் டாஸ்மாக் ஊழியர் மரியாதையாக பேசி மது விற்றால் சரிவராதே, அது போல ஒரு பிடிமானம் வேண்டும், அந்த பிடிமானம் தான் கைதிகனின் பயம், மரியாதை.

அதனால் தான் எஜமானன் லச்சுமனனிடம் இதை முறையிட்டு கிருஷ்ணாவை இதில் பிரதான  பங்குதாரராக ஆக்க கேட்கிறான் துலுக்காணம்.

லச்சுமணன் லாவகமாக லத்திக்கொம்பால் ஜன்னல் கம்பியில் தட்டி அதிகாரம் கலந்த நட்புடன் கிருஷ்ணாவை கிசுகிசுத்த குரலில் வாய்யா என தன்னுடன் அழைத்து போகும் காட்சியை பாருங்கள், 

மேலும் துலுக்காணம் எஜமானன் லச்சுமணனை ஏன் நிஜமாகவே அடித்து காயப்படுத்த வேண்டும்? என வெகுஜன பார்வையாளர்களுக்குத் தோன்றும்,

சிறைத்துறையில், பொய்யைக் கூட நம்பும்படி சொல்ல வேண்டும், அப்போது தான் எடுபடும்,  அடி நிஜமாக இருந்தால் தான் அரசு சிறை மருத்துவர் மருத்துவச் சான்றளிப்பார், அப்படித்தான் 
திமு திமுவென காவலர்படை சுழற்படிகளில் இறங்கி வந்து தச்சு பட்டறையில் மரம் இழைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவை கொத்தாக தூக்கிப் போய் மிதித்து லாடம் கட்டியது அங்கே நிகழ்ந்தது.

எத்தனை அற்புதமாக சிறை வாழ்வியலை மகாநதி பேசியிருக்கிறது  பாருங்கள்.

மகாநதி மேலும் 
https://m.facebook.com/story.php?story_fbid=10159890096401340&id=750161339&mibextid=Nif5oz

மகாநதி | தனுஷ் கதாபாத்திரம்

உச்ச நட்சத்திரமா? my foot , நடிகன் நடிக்கையில் கௌரவம் பார்க்கக்கூடாது என்பது நடிகர் கமல்ஹாசன்  கற்ற பாலபாடம்,மைக்கேல் மதனகாமராஜனில் மரவீட்டில் வைத்து  சந்தானபாரதி மயங்கி கிடக்கும் மதன் முகத்தில் ரப்பர் செருப்பு காலால் மிதிப்பார் .

மகாநதி திரைப்படத்தில் கிருஷ்ணா முகத்தில் நீர் ஊற்றி எழுப்பி ஹல்லோ சொல்லி தனுஷ் (ஹனீஃபா) ஷூகாலால் முகத்தில்  மிதிக்கையில், நமக்கு உள்ளம் பதைபதைக்கும்.

இப்போது மட்டும் இது ரஜினி படமாக இருக்கக் கூடாதா? என ஒவ்வொருவரும் ஏங்கிய தருணம் அது, 

காரியமா? வீரியமா? என்கையில் காரியமே பெரிது என தனுஷின் கால் பிடித்து , தன் மகளின் இருப்பிடத்தை அறிவார் கிருஷ்ணா, ஹனீஃபா மிதித்தவை நிஜமாகவே மிதித்தது, கிருஷ்ணாவுக்கு வலித்து நெறிக்கட்டி கன்றியது, நிஜமாகவே  நெறிக்கட்டி கன்றியதே, அப்படி புத்திரசோகத்தின் ஆழ்ந்த வலியை, தந்தைமையின் தவிப்பை , துரோகத்தின் ஆழ்ந்த வலியை , துரோகி தனுஷ் கால் பிடித்து கெஞ்சுகையில் காட்டியிருப்பார் கிருஷ்ணா, 

காரியம் ஜெயித்து கடமை ஆற்ற முற்படுகையில் சம்மட்டியால் அடித்து டிரம்மில் வைத்து காங்க்ரீட் கொட்டி இறுகியதும் கடலில் எறிய இருப்பார்கள்,  சுதாரித்து, குட்டியை காக்க தாய் நாய் எப்படி சீறி விழுமோ அப்படி அல்லக்கைகளை தற்காப்புக்கு தாக்கிவிட்டு ஸ்தலம் விடுவார் கிருஷ்ணா,

அங்கிருந்து சிறைக்காவலர் முத்துசாமி வீடு, கல்கத்தா பயணம் அறிவித்து வெறும் இரண்டாயிரம் ரூபாயோடு கல்கத்தா ரயில் ஏறி  சோனாகாச்சி என்றால் என்ன என அறியாமல் அங்கே செல்வார்கள் கிருஷ்ணா மற்றும் பஞ்சாபகேசன்.அதுவரை பரணி யமுனா இருவரும் சிறை அதிகாரி முத்துசாமி வீட்டில் பாதுகாப்புக்காக தங்கி இருப்பர்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த கொச்சின் ஹனீஃபா அணிந்துள்ள கட் ஷூ மாடல் போல தோரணம் டிசைன் அலுவலகத்தில் யார் அணிந்தாலும் குறுகுறுவென பார்ப்பேன்,இது தனுஷ் அணிந்த ஷூ என கிண்டல் செய்வேன்,எனக்கு பிடிக்காத ஷூ மாடலில் இதுவே முதன்மையானது,அதே போலவே தனுஷ் அணிந்த பிரத்யேக ப்ரிண்டட் சட்டைகள்,  இது போல டிஷர்ட் என எது கண்டாலும் இந்த தனுஷ் கதாபாத்திரம் எனக்கு நினைவு வந்து விடும்.

மகாநதி | சிறை அதிகாரி முத்துசாமி கதாபாத்திரம்

கிருஷ்ணாவுக்கு திருநாகேஸ்வரம் பூர்வீக வீடு விட்டபின் நாய்பிழைப்பு, நரி ஊளையிடும் மடிப்பாக்கம் வீடு, மத்திய சிறை, யமுனாவின் ரேழி வைத்த வீடு, சிறை அதிகாரி முத்துசாமியின் காவலர் குடியிருப்பு வீடு

கிருஷ்ணாவும் பஞ்சாபகேசனும் மகள் காவேரியை சோனாகாச்சியில் இருந்து  மீட்டு வரப்போன ஐந்து நாளும் சிறை அதிகாரி முத்துசாமி வீட்டில் தான் யமுனா பரணி   தங்கியிருப்பார்கள்,வீட்டில் காவலர் கவாத்து புகைப்படம் மாட்டியிருப்பதைப் பார்க்கலாம்.

மீட்டு வந்தவுடன்  புது மனிதர்களால் அந்த வீடே நிரம்பியிருக்கும், இதனால் யமுனாவிடம் காவேரியின் துரத்தும் கோர கனவுகள் பற்றி மாடிப்படிகளில் அமர்ந்து புலம்பி அரற்றுவார் கிருஷ்ணா.

மிகச் சிறிய காவலர் குடியிருப்பு வீடு அது, அந்த வீட்டில் பஞ்சாபகேசன் நீண்ட ரயில் பயணக் களைப்பில் சோஃபாவில் அசௌகர்யமாக  உறங்குவார்,

 ஐந்து நாட்களாக முத்துசாமி பணிக்குச் செல்லமாட்டார், காரணம் மிகவும் நேர்மையான அதிகாரி முத்துசாமி ,சீருடை அணிந்தால் தன்னால் கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய முடியாது, பாதுகாப்பு தரமுடியாது என்பதால் தான், 

கிருஷ்ணா பெயரில் வெங்கடாசலம் ஆளை அடித்ததாக கொலைவழக்கு குற்றப்பத்திரிக்கை பதிவானதால், மறுநாள் விடியலில் கிருஷ்ணா சரண்டைந்தால் தான் தன்னால் வேலைக்கு போகமுடியும் என்பதை கிருஷ்ணாவை தனியே அழைத்து ரகசியமாக சொல்வார் முத்துசாமி, 

படித்துக் கொண்டிருக்கும் தன் மகன் முருகேசனை வெளியே போகச் சொல்ல வேண்டி சிகரட் வாங்கி வரக் கேட்பார், அப்பயே வாங்கி வச்சுட்டேன்பா என்றவனிடம் அப்படின்னா வாழைப்பழம் வாங்கிவா என வெளியே அனுப்புவார் முத்துசாமி,

அவன் அப்பாவுக்காக அலுத்துக் கொண்டே  போனாலும் உடனே எழுந்து போவதில் செய்தி உள்ளது, பின்னாளில் அப்பாவின் நண்பர் கிருஷ்ணாவின் மகள் காவேரியை மணமுடிப்பவன் முருகேசன், முத்துசாமிக்கு மகன் இருப்பதை காட்டியது போலவும் ஆயிற்று , அவன் அப்பா சொல் தட்டாத பிள்ளை என்பதை அந்த காட்சியில் நிறுவியது போலவும் ஆயிற்று.

மகாநதி | ஆய்வுப் பதிவுகள்

"என் சட்ட தான் அழுக்காயிடுச்சே"

மகாநதி திரைப்படத்தில் நேப்பியர் பாலத்தின் மீது கிருஷ்ணாவும் பஞ்சாபகேசனும்  பேசிக் கொண்டே வரும் காட்சி, அவர்கள் சென்ட்ரல் ஜெயிலில் சப்ஜெயிலர் முத்துசாமியைப் பார்த்து விட்டு நடந்து வருகின்றனர், கூவம் நதி சாக்கடையாகி வங்கக்கடலில் கலக்கும் அவலத்தை வசனங்களில் நன்கு வெளிப்படுத்தியதைப் பாருங்கள்,

முத்தாய்ப்பாக சாக்கடையில் இவர்களின் நிழலும் பாலத்தின் நிழலும் விழுவதை காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு.

இக்காட்சியில் அப்போது வானில் தோன்றி மறைய இருந்த வானவில்லைக் காட்ட வேண்டியது, அது கடைசி நேர களேபரத்தில் நிகழாமல் போனது என இயக்குனர் சேரன் பேட்டியில் பகிர்ந்திருந்தார், கடைசி உதவி இயக்குனராக பேய்களை நம்பாதே பாட்டுக்குள் தொலைக்காட்சிக்குள் வரும் ஜலதரங்கரங்கம்  கலைஞர் மற்றும் props தேடி மயிலையில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைச் சொன்னார், கமல்ஹாசனிடம் அன்று வாங்கிய திட்டுகள் தன்னை perfectionist ஆக செதுக்கியதை உளமாறச் சொன்னார் சேரன்.

 இக்காட்சிக்கு பின் அண்ணா சமாதி அருகே நடக்கும் தெருக்கூத்தில் கிருஷ்ணாவின் மகன் பரணியைக் கண்டடைவதில் merge ஆகும்.

மகாநதி என கூகுளில் யூட்யூபில் ஆங்கிலத்தில் தேடினால் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் தான் வருகிறது,மிகவும் எரிச்சலடைய வைக்கிறது.

மகாநதி மேலும்,

ஹில்ஸா மீன் உணவு

கிருஷ்ணாவின் அமெரிக்க நண்பர் trivia

மாதங்கி தாரா ஹோ மா படகோட்டியின் குரல் 

எங்கேயோ திக்கு திசை

திருநாகேஸ்வரம் ரயிலடி இந்தி எதிர்ப்பு கருப்பு பெயிண்ட் 

ஒரு விதவனின் தடுமாற்றம்

மகாநதி மக்களின் வெற்றி

மகாநதி பூஜை

மகாநதி பாராட்டு கடிதங்கள்

மகாநதி தந்தைமையின் இலக்கணம்

மகாநதி பஞ்சாபகேசன் கதாபாத்திரம்

மகாநதி Own Personal Money

மகாநதி தெலுங்கு வெளியீடு

மகாநதி தன்னம்பிக்கையின் உச்சம்

மகாநதி Avid எடிட்டிங் அறிமுகம்

மகாநதி கிருஷ்ணா காவேரி பரணி சரஸ்வதி

#மகாநதி,#கூவம்,#சாக்கடை,#கழிமுகம்,#மெரினா,#கமல்ஹாசன்

மகாநதி | கதாபாத்திரங்கள் நதிகள் தீரங்கள் நீர் நிலைகளின் பெயர்கள்

மகாநதி திரைப்படத்தில் ஒவ்வோரு கதாபாத்திரங்களுக்கும் நதிகளின் பெயர் அல்லது புண்ணிய தீரங்களின் பெயர் ,நீர் தொடர்புடையை பெயர்கள்  மிக நுட்பமாக சூட்டப்பட்டதை எண்ணி வியக்கிறேன்.

பிரதான கதாபாத்திரங்களான கிருஷ்ணா, மகள்  காவேரி , மகன் பரணி, இறந்து போன  மனைவி நர்மதா, மாமியார் சரஸ்வதி, (my name is kaveri like the river kaveri ல் இப்பெயர்கள் வரும்) வருங்கால மனைவி யமுனா என அநேகம் பேர் அறிவோம்.

சோனாகாச்சியில் காவேரியை விடுதலை செய்ய சக விலைமாதர்களிடம் பணம் வசூல் செய்து தரும் அந்த பரதேவதையின் மகள் பெயர் ஜலஜா, நீரில் பூத்த தாமரை.

மஞ்சு (துளசி) கதாபாத்திரப் பெயரில் கிழக்கு சிக்கிம்  முதல் திபெத் போகும் வழியில் இமயமலை தொடரில் 13615 அடி உயரத்தில்  மஞ்சு ஏரி உள்ளது.

இதே போலவே யமுனா தந்தை பஞ்சாபகேசன் கதாபாத்திரம் கூட நதிகளை சடையாக கொண்ட சிவனைக் குறிப்பது தான், திருவையாறு என்பது திரு ஐ(ந்து) ஆறாகும் , இங்கே காவிரி ஐந்து கிளை  ஆறுகளாக பிரிந்து கடலில் சென்று கலக்கிறது, இங்கு உள்ள மிகப்பழமையான சிவன் கோயிலின் பெயர் ஐயாரப்பன் திருக்கோயில், ஐயாரப்பன் என்பது சமஸ்கிருதத்தில்  பஞ்சாபகேசன் ஆகும்.
திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இது போல சிறைக்காவலர் முத்துசாமி பெயருக்கும் காவிரி தீரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு,  திருவாரூரில் பிறந்து  மணலியில் வாழ்ந்து எட்டயபுரத்தில் முக்தி அடைந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பெயரை இந்த கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.

பெண் தரகன் தனுஷ் கதாபாத்திரத்தின்  பெயர் கூட தனுஷ்கோடி தீரத்தை குறிக்கிறது, 

பசுந்தோல் போர்த்திய புலி 
பிள்ளைக்கறி தின்னும் பீடோஃபைல் கதாபாத்திரமான வெங்கடாசலம் கூட பத்ராசலம் போல கிழக்கு கோதாவரி நதி தீரம் தான்.

துலுக்கானம் என்ற பெயர் பழைய சென்னை வாசிகளுக்கு பரீட்சயமான பெயர் ஆகும்,  கோடம்பாக்கத்தில் புலியூர் சாலையில் ஆதி துலுக்காணத்தம்மன் கோயில் அமைத்துள்ளது, நூறு வருடங்களுக்கு முன்பு மாம்பலம் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது இந்த  உக்கிரமான அம்மன் தலை சிலைவடிவம், அதை ஆதி துலுக்கானத்தம்மன் என்று கோயில் கட்டி வழிபடுகின்றனர், அந்நாளில் மரத்தடியில் இருந்த அம்மன் சிலையை  இஸ்லாமிய பெண்மணி ஒருவர் மகனுக்கு அம்மை நோய்கண்டு  கண்பார்வை பறிபோய் விட, மனதார  வேண்டிக் கொண்டு பார்வையை திரும்பப் பெற்றார், இஸ்லாமியர் வழிபட்டு அம்மனின் மகிமை முதலில் ஊருக்கு வெளிப்பட்டதால் இந்த அம்மனுக்கு பெயர் ஆதி துலுக்கானத்தம்மன், இன்றும் பெரிய வழிபாட்டு தலமாக திகழ்கிறது,பழைய சென்னை வாசிகளுக்கு இந்தப்பெயர் ஆண் பெண் என இருபாலருக்கும் சூட்டப்பட்டது.

மகாநதி | எங்கேயோ திக்கு திசை காணாத | மகாநதி | 1994 | கமல்ஹாசன்











https://youtu.be/Ze-VovuJh7I

மகாநதி திரைப்படத்தின் தமிழ் வடிவ பாடல்கள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதினார்,பிறர்வாடப் பல செயல்கள் கவிதை  மட்டும் மகாகவி பாரதி எழுதியது,  

எத்தனை வலி தோய்ந்த சக்தி மிகுந்த வரிகள் இவை, இப்படத்தை சோகப் படம் என்று பார்க்காமல் தவிர்த்து விட்டவர்களை அறிவேன், இது மனதை புடம் போடுகிற படைப்பு, அனைவரும் பார்க்க வேண்டும், கண்ணீர் விட்டு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். இந்த எங்கேயோ திக்கு திசை பாடலின் prelude பற்றி தனிப்பதிவாக இட்டுள்ளேன், பல்லவி சரணத்தில் இரண்டு வேற்று மொழிப் பாடல்களில் கங்கையையும் காவிரியையும் சங்கமிக்க வைத்த வியத்தகு சாதனை இது.

படகில் போகையில் துவங்கும் மாதங்கி தாரா ஹோ மா பாடல் நிறைவு பெற்றதும் அங்கு ஹவ்ரா பாலத்தின் மீது செல்லும் ரயிலை மகள் காவேரி , கிருஷ்ணாவுக்கு கைகாட்டுகிறாள், அவள் சோனாகாச்சி வந்த பின் பார்க்கும் முதல் வெளியுலகம்,  பார்க்கும் முதல் ரயில், இன்னும் மனதளவில் குதூகலத்துடன் தந்தை கிருஷ்ணாவிடம் காட்டுகிறாள் , திரு நாகேஸ்வரத்தில் கிருஷ்ணா பார்க்கும் பாசெஞ்சர் ரயில் நமக்குள் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும், சென்னை மத்திய சிறையில் பார்க்கும் local ரயில் பிரிவினைத் துயரைச் சொல்லும்,   இந்த கல்கத்தா ரயில் நம்பிக்கை ஒளியைச் சொல்கிறது.

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
எம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணாற நானும் காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

இப்பாடலில் எடிட்டர் N. P. Satish ஆற்று நீருக்கடியில் மூச்சடக்கி  சுழன்று நீந்தும் கிருஷ்ணாவைக் காட்டியவர் , அடுத்த காட்சியில் சீட்டுக்கம்பெனியில் முதலீடு செய்த மக்கள் கிருஷ்ணாவை அதே போல சுழற்றி பந்தாடுவதை தொகுத்திருக்கிறார் Technical brilliance editing .

 நம்மூரில் 1994 ஆம் ஆண்டு மகாநதி திரைப்படத்தை ஊன்றிப் பார்த்த யாரும் 1996 ல் புற்றீசலாக பரவிய தேவி கோல்ட் ஹவுஸ், ரமேஷ்கார்ஸ், PTBF, RBF  போன்ற நிதி நிறுவனங்களில் பணத்தை முடக்கியிருக்க மாட்டார்கள், கமல்ஹாசன் ஒரு தீர்க்கதரிசி.

பாடலின் வங்காள மொழி prelude இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159635424461340&id=750161339

#மகாநதி,#கமல்ஹாசன்,#இசைஞானி, #கங்கை, #C_Ashwath, #Jaanapada,#Baul_sangeet,#MS_பிரபு_DOP,#NP_Satish_editor


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)