எங்கெங்கு காணிணும் கொலவெறிடா!!!l

பட்டாசு கடையும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும்!!!

அருமை நண்பர்களே!!!
நலம் தானே?!!!வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எல்லோரும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். ஐந்து வருடங்கள் கழித்து என் வீட்டாருடன் இந்த தீபாவளியை கொண்டாடுகிறேன், சென்னையில் புயல் வேறு உருவாயிருப்பதால் எங்கிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது,எங்கு நோக்கிலும் வாகனங்கள் எங்காவது போயும் வந்தும் கொண்டிருக்கிறது,இன்று கூட வேலை வைத்து பழி தீர்த்துக்கொண்ட முதலாளிகளை என்ன செய்தால் தீரும்?காலை 1மணி நேரம்,மாலை 1.5மணி நேரம் போக்குவரத்து நெரிசல். தீபாவளிக்கு துணிகள் முன்னமே வாங்கிவிட்டதால் கடைசி நேர அலைச்சல் எனக்கு இல்லை,எந்தப் படத்துக்கும் முன்பதிவும் செய்யவில்லை.

ன்று காலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் ஆர்மி கேம்பில் இருக்கும்   பட்டாசு கடையில் இருந்து 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன், அதே பட்டாசுகளை மாலை தி.நகரில் உள்ள மொத்த கடையில் சென்று மேலும் கொஞ்சம் வாங்கலாம் என விலை கேட்டேன்,இங்கே அதே பட்டாசின் மதிப்பு 2000 க்கும் மேலே வருகிறது,மகள் வெடித்துப்பார்த்ததில் மிக நன்றாக வெடிக்கிறது, யாருக்கேனும் பட்டாசு வாங்கவேண்டும் என்றால் அங்கே இருக்கும் 3க்கும் மேற்பட்ட ராணுவவீரர் நடத்தும் கடைகளில் சென்று வாங்குங்கள்.40வகை வெடிகள் கொண்ட கிஃப்ட் பாக்ஸ்450 தான்,1000 ரூபாய்க்கு வாங்கினாலே 3குழந்தைகள் வெடிக்கலாம்,சென்னை புறநகர்வாசிகளுக்கு இது ஒரு சின்ன தகவல் பகிர்வு.மீண்டும் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?

தீபாவளி திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான்.

ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்' என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும் பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத் தந்தாள்.

சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும். குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.
====0000====சிங்கார சென்னை!!!

அருமை நண்பர்களே!!!,
ஒரு வழியாக வேலை தேடும் படலம் வெற்றிகரமாக முடிந்து சென்னைக்கே திரும்பிவிட்டேன், அமீரகத்தில் கடந்த ஒரு மாத நேர்காணல்களில் கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே ,ஏதோ ஒருவகையில் மனதுக்கு ஒவ்வாததாகவே அமைந்தது, சரி சென்னைக்கே திரும்பி விடுவோம், என்று வந்தும் விட்டேன். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போல மனதுக்கு திருப்தியாக அமையுமா?!!! என்றால் சந்தேகமே!!! அத்தனை சிறப்பான ஒரு வேலை அது, கடந்த ஒரு வருடமாகவே அங்கே வேலை தீவிரமாக இருந்ததில்லை,மனதை மிகவும் வருத்திக்கொண்டிருந்த வீட்டுக்கடனை இறையருளால் முழுதாக அடைத்துவிட்டு திரும்பியதில் தான்  அதீத மனதிருப்தி எனக்கு, அமீரக மண்ணை விட்டு கிளம்பவே மனமில்லை, எனக்கு  எத்தனையோ வசதி வாய்ப்புக்களை அள்ளி வழங்கிய பூமி அது!!! நிச்சயம் நல்ல வாய்ப்புக்கள் வருகையில் திரும்ப போவேன்.

இப்போதைக்கு குடும்பத்தினருடன் ஓய்வை கழிக்கிறேன்.நல்ல மனதுக்கு பிடித்தமான வேலையாக ,ஆற அமர தேடிக்கொண்டு இருக்கிறேன்.எதுவும் ஒத்து வராத பட்சத்தில் படிக்கவும் எண்ணம் இருக்கிறது. இங்கே குடும்பத்தினருடனும்,உறவினருடனும் மனதுக்கினிய நண்பர்களையும் அடிக்கடி சந்திக்க முடியும் என்ற மகிழ்ச்சியும் நிரம்பவே உண்டு. நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள என் கைபேசி  எண்:-9840419602

நேரம் கிடைக்கையில் மீண்டும் உலகசினிமாக்கள் எழுத எண்ணம் உண்டு!!!

எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!

ருமை நண்பர்களே!!!
மச்சீர் கல்வி முறையில் அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்களில் தகுந்த வல்லுனர் குழுவைக் கொண்டு வேண்டிய மாற்றங்கள் செய்த பின் , அடுத்த கல்விஆண்டு முதல் புதுப்பொலிவுடன் புழக்கத்தில் விடப்போவதாகவும்,இந்த ஆண்டு பழைய பாடதிட்டமே தொடரும், என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இந்த முடிவு சரியா?!!!

ப்பாட புத்தகங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணம் என்னவென்று பார்ப்போம்!!!அவை கருணாநிதியின் துதி பாடுகின்றனவாம், பாடட்டுமே!!!அதை மட்டும் கிழித்து எறிந்தாலோ கேன்சல்டு என்று சிகப்பு ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு ஸ்கோர் செய்தாலோ அல்லது பக்கங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டிவிட்டாலோ போதாதா?!!! அதில் அசிங்கமாக துருத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியின் சகிக்கமுடியாத கவிதைகளுக்கும்,வெட்டிச்செலவு செம்மொழி மாநாட்டு கட்டுரைகளுக்கும் பதிலாக, ஜால்ரா போடாத நல்ல கல்வித்துறை வல்லுனர் குழு   பரிந்துரைக்கும், பாடங்களின் பகுதிகளை இணைத்தோ?அல்லது தனி இணைப்பாகவோ தந்து விடலாமே?!!!

ப்படி 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஏழு கோடி புத்தகங்கள் அச்சடிக்க     80 கோடி ரூபாய் செலவிட்டு. அச்சு காகிதத்திற்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவிட்டு. மேலும், பாடப் புத்தக வல்லுனர் குழுவினருக்கு சம்பளம், புத்தக வினியோகச் செலவு என பல வகைகளில் சுமார் 500 கோடி ரூபாய் செலவழித்த பின்னர்  .இன்றைய தேதியில் சுமார்  85 சதம் பாடபுத்தகங்கள் அச்சடித்த நிலையில் அவற்றை செல்லவே செல்லாது!!! ,என்று கூறி மீண்டும் பாட புத்தகம் அவசரகதியில் அச்சடிக்க டெண்டர் விட்டிருப்பது ,எதைக்காட்டுகிறது?!!!

முதல்வரின் இந்த  அறிவிப்பைக் கேட்ட மறுகனமே ஏழை மக்கள், அடடா!!! விக்கலை நிறுத்த விஷத்தைப் போய் அருந்தி விட்டோமே?!!! என்று நினைத்து வேதனைப்படத் துவங்கியிருப்பர் என்றால் மிகையில்லை, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளாகப் பெற்ற ஒரு முதல்வருக்கு இது அழகா?!!!, பகாசுர பணவெறி கொண்ட தனியார்  பள்ளிகளின் நிர்வாகங்களை திருப்திபடுத்த மட்டுமே மேற்கொண்ட நடவடிக்கையாக இதைப்பார்க்க துவங்கிவிட்டனர். முதல்வருக்கு எதையாவது மாற்ற வேண்டுமானால் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1க்கே மாற்றுங்கள், அதை யாருமே குறை சொல்லப்போவதில்லை, திமுகவின் முன்னாள் கொலைகார அமைச்சர்களின் மீதான, எல்லா வழக்குகளையும் தூசுதட்டி கடும் நடவடிக்கை எடுங்கள், அவர்களின் சொத்துக்களை சட்டத்துக்குட்பட்ட அல்லது உட்படாத வழிகளில் பறிமுதல் செய்யுங்கள், மக்கள் யாருமே அதை  குறை சொல்லப்போவதில்லை, இன்னும் போதவில்லையா?!!! கேபிள்  டிவியை நாட்டுடைமையாக்குங்கள். சில மாதங்களில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முதல்வர் எடுக்கும் இப்படிப்பட்ட அவசர முடிவுகள், அவருக்கே பாதகமாக அமையும் என்பது திண்ணம்.

முதல்வரின் இந்த முடிவு, யாரை பாதித்ததோ இல்லையோ?!!!! ஒரு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் கூலித்தொழிலாளியின்  மகனின், மகளின் கனவை, நிர்மூலமாக தகர்த்திருக்கிறது, அந்த ஏழை மாணவர்களின் ”எல்லா குழந்தைகளுக்கும் சமமான, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி” என்னும் ஆர்வத்தில், நம்பிக்கை ஒளியில், மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறது.

சென்ற மாதம் ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வை பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியில் எழுதிய மாணவன், இவ்வருடம் ஆறாம் வகுப்பை, மாநில அரசு பள்ளியில் , ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்து படித்திருந்தாலே [நானும் அப்படி படித்தவன் தான்], மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் அதே பாடத்தை குறைந்த கட்டணத்தில் அவன் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் படித்திருப்பான், ஏழைப்பெற்றோருக்கு அதைவிட பெருமையே இருக்க முடியாது, இதன் மூலம் பிள்ளைகளை பள்ளியில் படிக்கவைக்க முன்வராத கூலித்தொழிலாளிகளுக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும். 

எல்லோர்க்கும் சமகல்வி!!! என்ன ஒரு மாற்றத்தை உண்டாக்கக்கூடிய  மந்திரச்சொல் இது?!!! அதை மனதாற அனுபவித்தவர்களுக்கு தான் அந்த மகிழ்ச்சியும், சமமான கல்வி  உனக்கு  இல்லை என்கையில் ஏற்படும் வலியையும் ஒருங்கே உணரமுடியும், என்னால் அதை உணர முடிகிறது.  இது முதல்வர் ஜெயலலிதாவின்   அவசர முடிவே அன்றி வேறொன்றுமில்லை, பணம் இல்லாதவனுக்கு சாதாரண பண்டம் பணம் இருப்பவனுக்கு  வேறொரு தரமான பண்டம் என்றால், இது என்ன ஜனநாயக நாடு?!!!வெளியே சொன்னால் வெட்க கேடு!!!சமச்சீர் கல்வி மூலம் எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கவேண்டிய மாநிலம் தமிழகம்.அதை கருணாநிதிக்கு உதித்த யோசனையாயிற்றே!!! என்று புறந்தள்ளுவதா?!!!

ந்த முடிவை ஒரே வாரத்தில் இரண்டாம் தவணையாக  தரப்பட்ட கசப்பு மருந்தாகவே மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். முதல்வரின் மேலான மறுபரிசீலனைக்கு தமிழக ஏழை மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமமான ஏற்றத்தாழ்வில்லாத கல்வியை வெறுப்பவர்கள் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை,என்ன மனிதர்கள் அவர்கள்?, மொத்தத்தில் அவர்களை மனதால் ஊனமடைந்தவர்கள் என்பேன். [இவ்வார்த்தைக்கு என்னை மன்னிக்கவும்]. சமமான ஏற்றத்தாழ்வுகளில்லாத கல்வியே வலுவான வருங்கால தூண்களை உருவாக்கும்  என்பதை இங்கே ஆணித்தரமாக நான் பதிவு செய்கிறேன்.

மச்சீர் பாடத்திட்டத்தில் தப்பி பிழைத்த சிபிஎஸ்சி வழி பாடத்திட்டத்தையும் போராடி ஒருங்கிணைத்து சேர்க்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும். அப்படி ஆக்காவிட்டால்,தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாத தற்குறி மாணவர்கள் உருவாக அது காரணமாகிவிடும் என்பதே   நல்ல குடிமகன்களின் கவலையாக உள்ளது.

ப்போதும் இப்போதும் பல பொறுப்பில்லாத பெற்றோர், சிபிஎஸ்சி  மற்றும் தனியார்பள்ளி பாடத்திட்டத்தில் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழியாக கூட வைக்க முன் வருவதில்லை, அப்படி என்ன ஒரு தடித்தனம்?!!! இரண்டாம் மொழியாக இந்தியை தேர்வு செய்பவர்கள், மூன்றாம் மொழியாக ஃப்ரெஞ்சையோ அல்லது சமஸ்கிருதத்தியோ தேர்வு செய்கின்றனர், அப்படி அந்த இழவு இந்தியை கற்றே தீரவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில் மூன்றாம் மொழி என்று ஒன்று இருக்கிறதே?!!! அதில் இந்தியை தேர்வு செய்ய என்ன கொள்ளை?!!! தாய்மொழியை எழுதவும் , படிக்கவும் தெரியாதவன் படித்தால் என்ன?!!! படிக்காவிட்டால்  தான் என்ன?!!!நான் இங்கே பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் [தமிழ் மீடியம்] சேர்ந்து படிக்கவைக்கச் சொல்லவில்லை,என் பிள்ளையையும் நான் அப்படி செய்யவில்லை,என் குழந்தை ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் படிக்கிறாள். இதன் மூலம் ஒரு குழந்தைக்கு தாய்மொழியையும் அலுவல்மொழியையும் ஒருங்கே பயின்ற பலன் கிடைக்கும்.என் மகளின் பள்ளியில் அதே வகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஹிந்தியையே தேர்வு செய்துள்ளனர்.அவர்களைத் தான் இங்கே வன்மையாக சாடுகிறேன்.இப்போது தெரியாது,நாளைய சமுதாயம் தாய்மொழொயில் ஒரு முக்கிய ஆவணத்தை படிக்கவோ எழுதவோ கூட துபாஷ் என்னும் மொழிபெயர்ப்பாளனை நாடவேண்டிய நிலை வரக்கூடாது என்னும் கவலைதான் அது.இப்படி ஹிந்தியை தேடிப்படிக்கிறார்களே? அதுவாவது  ஒழுங்கா என்றால் மனனம் செய்து படிக்கும் ஹிந்தி அது. அனாதை மொழியை படிக்கத்தான் இங்கே ஆவல் எழுகிறது. ஹிந்தியைப்பற்றி எழுதிவிட்டாலே பொங்கிவிடுவார்கள் பொசைகெட்டவர்கள்.

துபோன்ற பொறுப்பில்லாத பெற்றோரை தண்டிக்க ஆவண செய்யவேண்டும். அவர்கள் தான் ”நாம் தமிழர்கள் ” என்னும் இனமானமில்லாத இளைய சமுதாயம் வளர முக்கிய காரணியாக, அவமான உதாரணமாகத் திகழ்பவர்கள்.இன்றைய பல மாணவர்கள் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை நாகரீகமாக நினைக்க தொடங்கிவிட்டனர். என்ன ஒரு திமிர்?!!! அவர்களுக்கு எக்காலத்திலும் எந்த கல்விச்சலுகையும் வழங்கப்படக்கூடாது, அவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம், கணக்கியல் என எந்த துறைசார் வல்லுனர் படிப்புக்கும் தகுதிபெற்றுவிட முடியாது என்னும் நிலையும் சட்டமும் வரவேண்டும், அந்த மாற்றத்தை படித்தவர்களாகிய புதிய தலைமுறையினர் முன்னின்று நடத்த வேண்டும்.அப்போது தான் அந்த கயவர்கள் திருந்துவார்கள்.இது நடக்குமா?!!  பார்ப்போம்!!!

ன்னதான் அடுத்த வருடம் முதல்  சமச்சீர் கல்வி தொடரும் என்றாலும்  ஏழைகளுக்கு சமச்சீர் கல்வி என்பது எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டது போன்றதோ? !!! என்னும் ஐயம் மனதினுள் ஆழமாக எழுகிறது.
=======0000=======

ஒப்பற்ற திரைப்படமான ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்!!!

ருமை நண்பர்களே!!!,
58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,இந்த முறை தேசிய விருது என்னும் அதிர்ஷ்ட மழை தமிழ்நாட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறது.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளி  வந்துள்ளது.இது தமிழராகிய நமக்கெல்லாம் எத்தனை பெருமை?!!!

சிறந்த நடிகர்-தனுஷ், சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன், சிறந்த திரைக் கதை- வெற்றி மாறன், சிறந்த நடன வடிவமைப்பு-தினேஷ்குமார், சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருதும் ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த எடிட்டிங்குக்கான விருது - கிஷோருக்கு  கிடைத்துள்ளது. பேட்டைக்காரன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தின்  மூலம்  பல லட்சம்     ரசிகர் நெஞ்சங்களில் ஒரே நாளில் குடி புகுந்த   புது முக நடிகரான ஈழக் கவிஞர்   ஐ . வெ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது!!!
மேலும் யார் யாருக்கெல்லாம் இவ்வருடம் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது என்பதை இந்த சுட்டியில் அறியலாம், இந்த பொன்னான தருணத்தில் இயக்குனர் வெற்றிமாறனை மனதார போற்றி வாழ்த்துகிறேன்.அவர் இது போல பல உலக சினிமாக்களை படைக்க இந்த விருது உந்துதலாக அமையுமென்பது திண்ணம்!!!இந்நேரத்தில் எனது ஆடுகளம் திரைப்பட விமர்சனத்தை மீள்பதிவாக இடுவதில் பெருமை அடைகிறேன்.நன்றி.

ஆடுகளம் [Adukalam] [இந்தியா][2011] தமிழில் ஓர் உலக சினிமா!!!


டுகளம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம், வெற்றிமாறன் உலக அளவில்  மதிப்பிடப்படும் தரமான தமிழ் சினிமாவின் நம்பிக்கை ஒளி . பொல்லாதவனுக்கும் ஆடுகளத்துக்கும் இடைப்பட்ட மூன்று வருடத்தில் இவர் நிச்சயம் நிறைய வீட்டுப் பாடங்கள் செய்திருப்பார் என நம்பினேன், அது பொய்க்கவில்லை. மேலும் ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம்  மரணக்கிணறு போன்றதாகும். நல்ல கதைக்களமும் சிறப்பான தொழில்நுட்பம் சார் இயக்கமும் இருந்தால் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னும்  அக் கிணற்றைத் தாண்ட முடியும். ஏனைய இயக்குனர்கள் வித்தியாசமாக படம் செய்யவேண்டும், புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் துவங்கி, படத்துக்கான கருவை தன்னுள் தேடாமல் காற்றில், குறுந்தகட்டில் அந்நிய திரைப்படங்களில் தேடுவர். அதை அப்படியே தூக்கி தமிழ் சினிமாவுக்காக மாற்றி களவாடுவர். அது பல சமயம் பிள்ளையார் பிடிக்கபோய்  குரங்கான கதை தான்!!!.

னால்,வெற்றிமாறன் இரண்டாம் படத்திலும் தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றிலேயே படத்தின் கதை வடிவமைக்க உந்துதலாய் அமைந்த திரைப்படங்களின் பெயர்களைப் போடுகிறார் பாருங்கள். அது மிக மிக அரிய பண்பு. தனக்கு சொந்த மண்ணின் கதையான சேவல்சண்டையை படமாக்க உந்துதல் அளித்தது அமெர்ரோஸ் பெர்ரோஸ்ஸின் நாய்ச்சண்டை தான் என்கிறார். பொல்லாதவன் திரைப்படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன்  என்றே தெரியாது . வெற்றிமாறன் சிரியஸாக பேரலல் சினிமா எடுப்பேன் என கிளம்பி பணம் போட்ட தயரிப்பாளரை இதுவரையில் மொட்டையடித்ததில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமா விரும்பிகளுக்கும், பேரலல் சினிமா விரும்பிகளுக்கும் ஏற்ற வகையில் படம் எடுத்து எல்லோரையும் இன்புற்று உய்ய வைத்திருக்கிறார்.

பொல்லாதவன் திரைப்படத்தை ஒருவர் பைசைக்கிள் தீவ்ஸுடன் ஒப்பிட்டால் அது மிகப்பெரிய நகைப்புக்கிடம், ஆது வேறு, இது வேறு, ஆடுகளமும் எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு ஆகச்சிறந்த படைப்பு!!!. எம்.டி வாசுதேவன் நாயர். மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பரதன், பாலா போன்றவர்களின் படைப்புகளுக்கு அடுத்து காலத்துக்கும் பேசப்படக்கூடிய படைப்பு . நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும் என்பதற்கேற்ப , இயக்குனர் வெற்றி மாறன் தலைக்கனமாக பேசி நான் இதுவரை  பார்த்ததில்லை. ஆனால் அவர் படைப்புகள் அவருக்காக பேசும். உணர்வு ரீதியாக திரைப்படங்கள் வடிக்கும் பாலாவின் புதிய படம் அவன் இவன் , அது ஆடுகளம் உண்டாக்கிய தாக்கத்தை தரவேண்டும்,  தந்துவிடுமா?!!! என நினைக்கத் தோன்றுகிறது. ஆடுகளத்தில் அவ்வளவு சக்திவாய்ந்த பாத்திரங்கள் வெற்றிமாறன் உருவாக்கியது, அவற்றை நிஜத்தில் உலவவிட்டது, அதை செலுலாய்டு அற்புதம் என்பேன்.

து நாயகனுக்காக பின்னப்பட்ட கதை அல்ல, கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே நாயகர்களாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் தான், அவர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களுக்கு மத்தியில் குறுக்கிடும் சேவல்சண்டை, அதனுடன் பின்னிப்பிணைந்த காதல், நட்பு, பாசம், அன்பு, வெற்றி, தோல்வி, புகழ்,  கவுரவம்,  துரோகம், இரட்டைவேடம்  வஞ்சம் என அன்றாடம் காய்ச்சி மனிதர்கள் நாம் வேடமிட்டு அரங்கேற்றிக்கொள்ளும் சம்பிரதாய நாடகங்களே!!!,

டத்தின் இறுதியில் சில புதிர்களை நமக்கு பொதித்து வைக்கிறார் இயக்குனர். குரு-பேட்டைக்காரன்  சிஷ்யன் கருப்புவின் கண்முன்னால் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு சரிகிறார். அது ஏன்?,   குட்டு வெளிப்பட்டதே என வெட்கப்பட்டு கூசியவர் மனம் திருந்தி  கழுத்தை அறுத்துக்கொண்டாரா? அல்லது தான் இறந்த பிறகும் கூட இந்த கருப்புக்கும் துரைக்குமான வஞ்சம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். கருப்பு நடைபிண வாழ்வு வாழவேண்டும், சேவற்கட்டாரியாக புகழ் பெறவேகூடாது என  வீம்புக்கென்று கழுத்தை அறுத்துக்கொண்டாரா? யோசித்துப்பார்க்கிறேன். சுவாரஸ்யமான புதிராய் தான் இருக்கிறது.இப்படித்தான் நிஜவாழ்வில் நமக்கு மிக பரிச்சயமான மனிதர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என கணிக்க முடிவதில்லை.


றுதியில் கருப்பு தன் குருவுக்கு காணிக்கையாக அவர் இறந்த பிறகும் அவர் புகழுக்கு கேடு நிகழக்கூடாது என்று ஊரைவிட்டே ஓடுகிறார் . ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம்  துரையின் ஆட்களும் தேட, நிராயுத பாணியாக காதலியுடன் ஓடுகிறார். இக்காட்சியிலும்  நம்மை சிந்திக்கவித்திருக்கிறார்  இயக்குனர். அது ஏன்?..ஓடுகையில் கருப்பு தன் குரு பேட்டைக்காரன் அவர் வீட்டில்  பதுக்கிவைத்திருந்த பணம்  2.5 லட்சத்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்தவர் அதை ஆட்டோவிலேயே விட்டு விட்டு  செல்வது தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல  எனக்காட்டவா ?!!! அல்லது தன் குருவின் வீட்டில் அப்பணம் இருந்தால் தன் குரு பேட்டைக்காரன் தான் குற்றவாளி என துரைக்கும் ஊராருக்கும் தெரிந்துவிடுமே எனக்கருதியா?!!! கருப்பு அந்த 2.5 லட்சம் பணத்தை குருவின் பணம்[பேட்டைக்காரன் பதுக்கியதால்] என்று தான்  கொண்டு போகாமல் தான் வந்த ஆட்டோவிலேயே  விட்டுட்டார் என நினைக்கிறேன். அவர் அதைக் கொண்டு போயிருந்தாலும் எந்த பாதகமில்லை. ஊராரின், போலீசாரின் பார்வையில் அவர் கொலைகாரனே!!!பொல்லாதவனில்  பல்சர் பைக்கும் ஒரு பிரதான பாத்திரம்,இதில் அந்த துணிக்கடை பாலீத்தீன் பைக்குள் இருக்கும் பணமும்  ஒரு பிரதான பாத்திரம்.  இயக்குனர் வெற்றிமாறன் தாராளமாக இந்த புள்ளியில் இருந்து ஆடுகளம் பாகம்-2ஐத் துவக்கலாம், அதுவும் வேறு ஒரு கதைக்களத்தில். பில்லா-2, மன்மதன் -2, நடுத்தெரு நாய்கள்-2 என பாகம்-2 எடுக்கையில் இதை தாராளமாக எடுக்கலாம்.


ர்  சாதாரணத்தை வைத்து அசாதாரணம் படைத்துள்ளார் இயக்குனர்.  தனுஷ் கருப்புவாக வந்து கல் நெஞ்சங்களையும் கூட கரைத்துவிடுகிறார். படிக்காத ஊதாரி இளைஞன் வேடம் என்றால் இவருக்கு சர்க்கரையாயிறே? !!! சிம்பு போன்ற தன் வயதை ஒத்த நடிப்பு அவமானங்களுக்கு எதிர்மாரான நடிகர் தனுஷ் . பொல்லாதவனில் இவரை பிடிக்காமல் போயிருந்தாலும் இதில் நிச்சயம் பிடித்து விடும். அப்படி கருப்பு கதாபாத்திரத்துக்குள்ளே காணாமல் போயிருக்கிறார். ஒரு காதல் பித்து பிடித்தவன் , குருவின் கடைசி செல்லப்பிள்ளையான சீடன். விதவை அம்மாவுக்கு வாய்த்த தத்தாரிப்பிள்ளை என எத்தனை பரிமாணம் தனுஷுக்கு?!!! . தோழி அய்லினிடம் இந்த இடத்துல ஒரு மவுத்கிஸ் அடிச்சி ஃபினிஷ் பண்ணிக்கலாமா?!!! என்று கேட்பதும், ஐஅம் லவ் யூ, என்பது, அவள் உனக்கு  என்ன வேண்டும்? என்றதும் பால்ஸ்!!!பால்ஸ்!!! என்பது, என்ன தொழில் செய்கிறாய்? என ஆங்கிலோ இந்திய மூதாட்டி கேட்க காக் , காக் ஓட்டிங் என்பதும் படு ஆரவாரம், அதுவும் சேவல் சண்டைக்காட்சிகளில் இவர் எதிராளி கட்டாரியிடம் பேசும் நகைச்சுவை கலாய்ப்பு வசனங்கள் அபாரம். தனக்கு  தானே பேசும் இளைஞர்களை உங்களுக்கு தெரியுமா?எனக்கு நிறைய பேரைத் தெரியும்.இதில் கருப்புவும் நிறைய கனவுகளை தனக்குள் இருக்கும் ஒருவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.யதார்த்தம்.

பேட்டைக்காரனாக வந்த ஜெயபாலன், என்னே ஒரு புதுமுகம்?!!! கடவுளே இப்படி ஒரு நடிகரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதற்கே  வெற்றி மாறனுக்கு கோடி நன்றிகள். இவர் சமகாலத்தின் சிறந்த புதுமுக குணச்சித்திர நடிகர் என்பேன். தமிழில் ஓர் சிறந்த நடிகர் ராஜ்கிரனுக்கு ஆகச்சிறந்த மாற்று கிடைத்துவிட்டார். இவருக்கு ராதாரவி குரல் கொடுத்ததன் மூலம் அவரும் ஓர் அங்கமாகிவிட்டார். அத்தனை பொருத்தம். துரையின் மீது கோபப்பட்டவர், மீனா சாரைப் போகசொல்லு முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை என்னும் இடமெல்லாம் க்ளாஸ்.  இந்த தத்ரூபமான ரிசல்ட் வருவதற்கு மாறன் எப்படி உழைத்திருக்க வேண்டும் ?!!! மலைப்பாக இருக்கிறது, பேட்டைக்காரன் சக்கை போடு போடுகிறார். இனி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கா விட்டாலும் வாழ்நாள் சாதனைக்கென்று சொல்லிக் கொள்ள இப்படம் ஒன்றே போதும்.

ன்ஸ்பெகடர் ரத்னசாமி பாத்திரம் அபாரம், நரேனுக்கு இன்ஸ்பெகடர் & சேவல்சண்டை கட்டாரி என இரட்டைச்சவாரி. எனக்குத் தெரிந்து இந்த அளவுக்கு யாரும் நிஜ வாழ்வில் நாம் காணும் போலீஸ் போன்றதோர் வேடத்துக்கு இப்படி பொருந்தியதில்லை, எப்படி? காய் நகர்த்தினால் பழைய சேவல்சண்டை கூட்டாளி பேட்டைக்காரன் ,தன்னிடம் மீண்டும் சேவல் சண்டைக்கு வருவான்,  என்று இவர் போடும் ஒவ்வொரு திட்டமும் தூள். ஒரு கட்டத்தில் சேவல் சண்டையில் பேட்டைக்காரனின் மற்றொரு சிஷ்யன் கருப்புவிடம் தோற்றுவிட்டதும் அதை பேட்டைக்காரனிடமே தோற்றதாய் கருதி சேவல் சண்டையை தலை முழுகுவது அற்புதம். சேவல்சண்டை போட்டிகளில் இப்படி ஒரு குலமானம் பொதிந்திருப்பது எந்த படத்திலும் இப்படி காட்டப்பட்டதில்லை. அவரின் அம்மா, மனைவி, உதவியாக வரும் வழுக்கை மண்டை போலீஸ்[புதுப்பேட்டையில் தனுஷின் அப்பா?] ஏட்டு என ஒவ்வொரு பாத்திரமும்  சிறப்பு.

துரையாக வந்த கிஷோர் அதகளம் செய்துள்ளார், இதில் ஆட்டோ சங்கர் போல கெட்டப்பில் கிராப் தலை, இரவல் குரல் அவருக்கு.  இதற்கு முன் நம்முள் பதிந்த பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம் போன்ற படத்தில் பார்த்த கிஷோரின் பாதிப்புகளை அழித்துவிட்டு, புதிய வடிவம் பெற்று துரையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு குருவின் முதன்மை சிஷ்யனுக்கு  தனக்குத்தான் எப்போதுமே குருவின் பாராட்டு கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதற்கு பங்கம் வந்தால் அவனிடம் கர்வமும் பொறாமையும்  குடிகொள்ளும்,  எவ்வளவு குணவான் ஆயினும் அவனுள் ஆத்திரம் குடிகொண்டால் அவன் புத்தி மட்டமாகிவிடும், அந்த நிலையை படத்தின் பிற்பாதிகளில்  மிகச்சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் இவர். இவருக்கு சமுத்திரக்கனி குரல் கொடுத்ததன் மூலம் சமுத்திரக்கனியும் ஒரு அங்கமாகிவிட்டார். இவரின் மதுரைத்தமிழ் மிகவும் சுத்தம். கருப்பு வாங்கித் தரும் மோதிரத்தை கையில் வாங்கியவர், எதுக்குடா வீண்செலவு?  என்று கேட்டு விட்டு அதை வாங்கி போட்டுக்கொண்டு நல்லாருக்குடா, என்று கருப்பை பாசத்துடன் பார்ப்பார். மிகவும் ரசித்தேன். அண்ணன் தம்பியாகவே பழகியவர்கள் கடைசிக் காட்சியில் நிலவொளியில் நிலத்தில் புரண்டு அடித்துக் கொள்ளும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது, கருப்புவின் அம்மாவின் சாவில் உண்மையிலேயே வருத்தத்துடன் வந்துவிட்டு, பேட்டைக்காரனின் திறமைரீதியான ஒப்பீட்டுதலால் கருப்புவின் மீது சடாரென ரஜோகுணம் கொண்டு, அக்ரீமெண்டு போட்டிருக்கு!!! நினைவிருக்குல்ல? சீக்கிரம் போட்டி நடக்கட்டும்!!! என்று கறாராய் சொல்வது எல்லாம் க்ளாஸ்.

பேட்டைக்காரனின் நண்பன் உதவியாளன் அயூப்பாக வந்தவர் பெரிய கருப்ப தேவர், படத்தின் மூன்று முக்கியபாத்திரமான ஆணிவேர் கதாபாத்திரங்கள் பேட்டைக்காரன், ரத்னசாமி பின்னே இவர். மொத்தமே ஐந்து அல்லது எட்டு நிமிடம் தான் காட்டப்படுவார் .   ஆனால் பாதி படம் முழுக்க இவரைப் பற்றி பேசுகின்றனர். அதன் மூலம் இவர் சேவல் சண்டைக்கு அளித்த பங்களிப்பை நாம் கண்கூடாக அறிகிறோம். நடக்கப்போகும் தன் மகள் திருமணத்துக்கு சீதனமாய் மோட்டார் பைக்கும் மொத்த திருமணச்செலவையுமே ரத்தினசாமி ஏற்பதாய் சொல்லியும், தடுமாறாமல் 40 வருடகால நட்பே முக்கியம் என்று சீறி விலகும் பாத்திரம். மிக முக்கியமானது.பணத்தால் எல்லோரையும் விலைக்கு முடியாது என சொன்ன பாத்திரம்.

28வயது மூத்த பேட்டைக்காரனுடன் அவரின் சேவல்சண்டை வெற்றிகளை ரசித்து, ஆசைப்பட்டு ஓடிவந்து சேர்ந்து வாழும் மீனாள் பாத்திரம், குறிப்பிடவேண்டிய ஒன்று. இவரின் தவமாய் தவமிருந்து அண்ணி பாத்திரம் கூட மறக்க முடியாதது, நாம் வாழும் சமூகத்தில் அடித்தட்டு வர்க்க மக்களிடையே மனதுக்கு பிடித்திருந்தால் இது போல ஓடிவந்து சேர்ந்து வாழும் சூழல் இருக்கிறது. அதை நம்பும் படி பிரதிபலித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அதிகம் பிடித்த பேட்டைக்காரன் மீது ,அதீத வெறுப்பு ஏற்பட்டு மண்ணைவாரி தூற்றிவிட்டு, இனிமேலும் நான் இங்கருந்தா எனக்கும் விஷம் வைத்து கொன்னுடுவே!!!!,என்று கதறி அழுது நைட்டியுடனேயே  வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகள்  சிறந்த சான்று.ஒரு ஆணின் சந்தேகம் எந்த அளவுக்கு அவனை விரும்பிய பெண்ணை உடையச்செய்யும் என விளக்கும் பாத்திரம்.

டுப்பல்லில் சொத்தையுடன் கருப்புவின் வலது கையாய் வரும் நண்பன் ஊளையை குறிப்பிட்டு சொல்லவேண்டும். அதிரடியான கருப்புவுக்கு எதையுமே பகுத்தறிந்து பார்க்கத் தெரியாது , ஆனால்? ஊளைக்கு தெரியும். இரவு 7மணிக்கு எந்த தெருடா வெறிச்சோடியிருக்கு?, தப்பா தெரியுதுடா, பணம் பூராத்தையும் அவர் தான் ஆட்டைய போட்டிருப்பாரோன்னு சந்தேகமாருக்குடா!!!! , எனச்  சொல்லி கருப்புவிடம் சத்து சத்தென அடி வாங்குகிறார். நண்பனுடன் நிழலாகவே நடந்திருக்கிறார். தூய நட்பு எதிர்பார்ப்பற்றது,  அத்தூய நட்புக்கு சான்று தான்  ஊளை பாத்திரம்.

னுஷின் அம்மாவாக வந்த பெண்மணி சுப்ரமணியபுரத்தின் அழகருக்கு அம்மாவாக வந்த பெண்மணி எனத் தெரிந்தது, அந்த அம்மா மிக மிக இயல்பான பாத்திரம், என் தலைவிதி ஆயுசுக்கும் கோழிப்பீயை அள்ளிச் சுமக்கனும்!!!! என அங்கலாய்க்கும் பாத்திரம். என் அம்மா நினைவுக்கு வந்தது. அம்மா என்பவள் எத்தனை மேலான படைப்பு, தெய்வத்துக்கும் மேலானவள் தாய் என நினைக்கத் தோன்றுகிறது. எப்போதோ இறந்த கணவரின் நினைவை அவர் வாழ்ந்த வீட்டு சுவற்றிலும் தரையிலும் உணர்ந்தவர், அது கணவன் கடன் வாங்கியதால் இன்னும் அடமானத்தில் இருப்பதால்  அவ்வீட்டிற்க்கு அடுத்த ஒரு சிறிய ரேழியியையே ஒத்திக்கு எடுத்து குடியிருக்கிறார். இது மதுரையில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். மதுரையின் மனிதர்கள், ஆடம்பரத்தை வெறுப்பவர்கள். 8 அடி அகலம் 20 அடி நீளம் இருந்தாலே அதில் 2 குடித்தனம் கூட இருக்கும். அந்த ரியாலிட்டிக்காக இதை சொல்லவந்தேன். பேட்டைக்காரன்  வசிக்கும் ஊருக்கு வெளியே அமைந்த  மலையடிவார வீடும் ஒரு ரியாலிட்டி காட்சியாக்கத்துக்கு சான்று. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், சேவற்சண்டை டோர்னமெண்ட் காட்சிகள். ஃபெளெக்ஸ் சைன் போர்டில் பேட்டைக்காரனுக்கும் துரைக்கும் ரத்னசாமிக்கும் வைக்கப்படும்  அரச தோரணை தீம்கள். ஆரவாரமான எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் சேவற் சண்டை காட்சிகள் என ஒவ்வொன்றும் அருமையாக பார்த்துப் பார்த்து இழைத்த ரகம்.
 
புறநகர அரசுப்பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களுக்கும் ஏனைய புற நகர் மக்களுக்கும் அடிக்கடி தங்கள் தெருவில் நடக்கும் ஒன்றைத் தெரிந்திருக்கும். கூடப்படிக்கும் அழகான பெண்ணுக்காக மாணவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சி தான் அது , அதை சால்வ் செய்வதற்க்கென்றே ஒரு பழைய மாணவரும், மிகவும் ஆடி முடித்த சித்தப்புவும் இருப்பார்கள், அது போல இப்படத்தில் ஒரு காட்சி, ”தங்கச்சி ரெண்டு பேர்ல நீ யாரை லவ் பண்றேன்னு சொல்லும்மா”!!!அண்ணங்க நாங்க பாத்துக்கறோம் என்கிறார்கள். செம நோஸ்டால்ஜியா கிளம்புகிறது.

ய்லினாக வந்த தப்ஸி மிகமிக அழகு, பெண் மனசு ஆழம் என்று சொல்லுவார்கள், பெண் மனம் மிகவும் புதிர், பேரழகனைக்கூட திரும்பிப் பார்க்காத சில பெண்கள் மிகவும் சாதாரணமாய் இருக்கும் பலருக்கு விருப்ப துணையாக அமைந்து விடுவதுண்டு, அதை நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதை வைத்து தான் விவேக் கூட வாடா நாமளும் நம்ம மூஞ்சியில் ஆசிட் ஊத்திக்கலாம், அப்போதான் பொண்ணுங்க நம்மையும் பார்க்கும்!!! என மின்னலேவில் லந்தாக சொலுவார். ஆகவே அய்லினுக்கு நாயகன் கருப்புவின் மீது காதல் வருவது என்னைப்பொறுத்த வரை நம்பும்படியாகத்தான் உள்ளது, தவிர பெண்களுக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாந்திருப்பவனை விட தனக்கு தெரியாது என்பவனை மிகவும் பிடிக்கும் போலும், அதனால் தான் படிக்காத குடிகாரன், சேவல் சண்டை கட்டாரி தன்னிடமே காசு பிடுங்கிய கருப்புவைக் கூட காதலிக்க வைக்கிறது.

து தவிர நான் பல்லாவரம் வெட்ரன் லைன்ஸ் [veteran lines] பகுதிகளில்  பால்யத்தில் அதிகம் சுற்றியிருக்கிறேன். அங்கே ஏனைய ஆங்கிலோ இந்திய இளம்பெண்கள் ஆங்கிலோ இந்தியரல்லாத மற்ற சாதி ஆண்களையே அதிகம் விரும்பி வீட்டை எதிர்த்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களையே திருமணமும் செய்து கொண்டு ஒண்டுக் குடுத்தனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டு, எதாவது நிறுவனமொன்றில் டெலிபோன் ஆபரேட்டராக இருப்பர். அவர்களின் கணவன் ஒன்று சூதாடியாகவோ, குடிகாரனாக இருப்பான், அல்லது எதாவது நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக இருப்பான்.  இதை வடசென்னையைப் பற்றி நன்கு அறிந்தவரான வெற்றிமாறன் அங்கே பெரம்பூரின் ஆங்கிலோ இந்தியக் குடியிருப்புகளில் அதிகம் புழங்கியிருப்பார் போல.அவர்களின் சமூகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பக்கா.

தை நன்கு அவதானித்து தான் அய்லின்  பாத்திரத்தையும் அய்லின் கருப்பு காதலையும் உருவாக்கி சேர்த்திருக்கிறார். இதில் திணிப்பு, செயற்கை இல்லவே இல்லை என்பேன். என் நண்பன் சீனி என்பவன் தன் வீட்டுக்கு அடுத்த ஆங்கிலோ இந்திய குடித்தனப் பெண்ணான ஆண்ட்ரியா என்பவளை 15 வயதிலேயே ஃபிகர் மடித்தது, அதைப்பார்த்து நாங்கள் நமக்கு உசாராகலையேடா!!! என வயிறெரிந்தது எல்லாம் என் வாழ்விலேயே நடந்த படியால் நான்  இந்தக் காதலை நம்புகிறேன்.

டத்தில் வந்த எல்லா பாத்திரங்களையுமே எழுத்தில் வடிக்க ஆசைதான் ஆனால்!!!, அது அவ்வளவு எளிதா என்ன? படத்தை ஏற்கனவே 4 முறை பார்த்தாகிவிட்டது , ஒவ்வொறு முறையும் பார்க்கையில் ஒவ்வொன்றைப் பார்க்கிறேன். குறைகள்?!!! படத்தில் குறைகள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு உள்ளன, அதை பெரிது படுத்தி, தானம் வந்த மாட்டை பல்பிடித்து பார்கப்போவதில்லை.நல்ல படம் வருவதே அரிது!!!

சை, பாடல்கள் அடடா அருமையோ அருமை,  ஜிவி பிரகாஷ்!!! வெகுநாளாகவே நீங்கள் சாதிக்க ஆசைகொண்டு சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை, அது எல்லா துறையினருக்குமே விதிவிலக்கல்ல. உங்களிடம் உள்ள குறையே நீஙகள் எல்லாமாகவும் ஆக ஆசைப்பட்டு எதாகவும் ஆக முடியாமல் போவது போல், உங்களை நீங்கள் நம்பாதது தான். இப்படத்திலேயே நிறைய பாபெல், அமெர்ரோஸ் பெர்ரோஸ்,  21 க்ராம்ஸ் பிண்ணணி இசை பாதிப்புகள். நிறைய அந்நிய படைப்புகள், இசைக்கோர்வைகள் சங்கீதம் கேட்கும் நீங்கள் அதை அதன் பாதிப்பை, ஒரு கொலாஜ் போல வெளிக்காட்டிவிடுகிறீர்கள், பல இடங்களில் எளிமையே அழகு, பல இடங்களில் சத்தமே தேவையில்லை, பாடல்களில் எந்த குறையுமில்லை, பிண்ணணி இசை பிரமாதமாக இருந்தும் எதற்கு எதைப் போடுவது என்ற தெரிவு  இல்லை, ஆனால் அது பலவருட தவம், இந்த உங்கள் இடத்தை  இளம் வயதில் அடைந்தமைக்கு பாராட்டுக்கள். இப்படத்தில் உங்கள் இசை தனுஷின், மீனாளின், அய்லினில் சிலபல  வசனங்களை கபளீகரம் செய்துவிட்டது, மற்றபடி எல்லா பாடல்களும், அதற்கு அளிக்கப்பட்ட இசைப்பங்களிப்பும், குரல் தெரிவையும் மிகவும் ரசித்தேன்.

வேல்ராஜின் கேமராவைப் பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு பதிவு போதாது, நான் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலுமே இரவு ஒளிஅமைப்பில் இப்படி ஒரு ஒளிஓவியத்தை பார்த்ததில்லை,கதாபாத்திரங்களின் மீது விழும் நிலவு ஒளி, அங்கே ஏறபடுத்தும் சையோகிராஃபியை [நிழல்குத்து] உற்று நோக்குங்கள். அந்த நகாசு வேலைய ரசியுங்கள். உங்களுக்கு இந்த வேல்ராஜ் என்னும் மனிதனை பிடித்துப் போய்விடும். சந்தோஷ் சிவனின் பிஃபோர் த ரெயின்ஸ் படத்தை விட நன்றாக இருந்த ஒளிப்பதிவு. இரவு நிலவொளி வீட்டுக்குள்ளே விழுகையில் மஞ்சள் டோன் சேபியாவும்.இரவு நிலவொளி வீட்டுக்கு வெளியே விழுகையில் நீல நிற டோன் சேபியாவும் சேர்த்திருந்தார். இன்னும் சூரிய ஒளி கதாபாத்திரங்களின் மீது உண்டுபண்ணும் சயோகிராஃபியை க்ளோஸப் காட்சிகளில் மிகவும் ரசித்தேன்,ஹாட்ஸ் ஆஃப் வேல்ராஜ்.

பொல்லாதவனுக்கு அடுத்து மூன்று வருடம் தீஸிஸ் செய்து அதிரடியாய் மீள் நுழைந்து சதம் அடித்த வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள். இவரின் பேட்டி த சண்டே இந்தியனில் வெளிவந்ததை என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மிக முக்கியமான பேட்டி அது!!!! ஆகவே உங்களுக்கும் அதைப் பகிர்கிறேன். படிக்கவும்.
=====0000=====

 தொடர்வது இயக்குனர் வெற்றி மாறனின் பேட்டி:-

"என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன்"
ஆடுகளத்தில் வெற்றிகரமாக ஆடிமுடித்த உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் மாணவர். காற்றில் கதைகளைத் தேடாமல் மக்களின் வாழ்க்கையில் கண்டடையும் இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சர்வதேசப் படங்கள், இலக்கியம், எழுத்து என தனது ஈடுபாடுகள் குறித்து த சன்டே இந்தியனிடம் பேசும்போது பகிர்ந்துகொண்டார்.
நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள். உங்களுடைய பின்னணி என்ன?
என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா Vetrimaranமேகலா சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ராஜநாயகம் கொடுத்தார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான் தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம் பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார். பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். வாழ்க்கையிலும் காத்திருத்தல் என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது.

பாலுமகேந்திராவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள். அவருடைய பாணியிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள்?
எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் வேறுபடுகின்றனவே. நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது.

தனுஷூடன் சேர்ந்தே இரண்டு படங்களை செய்துள்ளீர்கள். இருவரும் சேர்ந்தே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். ஒரு இயக்குனராக தனுஷை எப்படி பார்க்கிறீர்கள்?
அதுவொரு கனாக் காலம் படத்திலிருந்து தனுஷூடன் பழக்கமுண்டு. அவர் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட். ஒவ்வொரு காட்சியையும் நன்கு புரிந்துகொண்டு நடிப்பார். எல்லா படங்களிலும் அவர் கற்றுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ, ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் தருவார். ஒரு மில்லி மீட்டர் அளவுகூட ஸ்டார் என்பதை எந்த காட்சியிலும் வெளிப்படுத்த மாட்டார். இப்படி செய்துகொள்ளலாமா என்றும் கேட்டு காட்சிக்கு மெருகு சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். என்னுடைய மனோநிலை, உடலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து என்னுடைய ஹீரோவை வடிவமைக்கிறேன். 72 மணி நேரம் நான் தூங்காமல் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். எனவே எனது படங்களில் தூங்குவது போன்ற காட்சிகளை வைக்கமாட்டேன். என்னால் இரண்டுபேரை அடிக்க முடியும். அதுக்குமேலே முடியாது என்றால் என் ஹீரோவும் அப்படித்தான். தனுஷை மனதில் வைத்துக்கொண்டுதான் கதைகளை எழுதுகிறேன். இதுவரை 5 ஸ்கிரிப்டுகள் எழுதி, 2 படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். வேறொருவரை வைத்து எழுத எனக்கே பயிற்சி வேண்டும். ஆடுகளம் படத்தில் பட காட்சிகளில் வெறுமனே நிற்பார்; சும்மா உட்கார்ந்திருப்பார். படம் வெளிவந்ததும் யாரைப் பற்றிப் பேசுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.
கமர்ஷியல் பார்முலாக்களிலிருந்து விலகி தமிழ் சினிமா, தமிழ் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு குறித்த உங்கள் கருத்தை சொல்லுங்கள்?
தமிழர்களின் அடையாளங்களை தமிழ் வாழ்வியலை கூர்ந்துப் பார்த்து படங்கள் எடுப்பது புதியதல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நமக்குக் கிடைக்கத் தொடங்கிய சர்வதேசப் படங்களின் பரவலான அறிமுகம் நம்முடைய அடையாளங்களைத் தேடவைத்திருக்கிறது. அது 2002 வாக்கில் நிகழ்ந்தது. இப்படி டிவிடிக்களை மக்களிடம் ஜனநாயகப்படுத்திய பர்மா பஜார் வியாபாரிகளுக்கு ஒரு படத்தை அர்ப்பணிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். சில படங்களை படவிழாக்களில்தான் பார்க்கமுடியும். அவர்கள் அதையெல்லாம் எளிதாக்கிவிட்டார்கள்.
எந்த அளவு துல்லியமாக நம் மண்ணின் அடையாளங்களைச் சொல்கிறோமோ, அந்த அளவு அது சர்வதேச எல்லையைத் தொடும். சர்வதேசப் படங்கள் உள்ளே வரும்போது தன்னுடைய மண்சார்ந்த அடையாளங்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் அதிகரிக்கிறது. என் முதல் படத்தில் சென்னை வாழ்க்கையைச் சொன்னேன். அதைவிட சேவல் சண்டையின் மிகப்பெரிய பதிவாக ஆடுகளம் இருப்பதால், ஒரு சமூகத்தின் வாழ்க்கையைச் சொன்ன திருப்தி இருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு Ôஅமரோஸ் பரோஸ்Õ என்ற படம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அதில் ஒரு நாய்ச்சண்டையின் ஊடே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். சர்வதேசப் படங்களைத் திறந்துவிட்டதுதான் நம்முடைய வேர்களை நோக்கி பயணிக்கத் தூண்டுதலாக அமைந்தது.
ஒரு சினிமா இயக்குனர் என்பதற்கான உங்களது தனிப்பட்ட இலக்கணம் என்ன?
ஓர் உண்மையைச் சொல்வதென்றால் ஆக்ஷன், கட் சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான விழிப்புணர்ச்சியுள்ள நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு படிமேலே உயர்த்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் நாங்கள் எல்லோரும் ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.
வாசிப்பு அனுபவம் சினிமாவுக்கு எப்படி உதவுகிறது?
இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கிவிட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும். இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம். மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் 'உல்ஃப் டோட்டம்'என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக் கொடுத்தது. அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில் புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் Ôரூட்ஸ்Õ என்ற நாவல். என் வாழ்க்கையை ரூட்ஸ¨க்கு முன் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான் என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக் கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது.
உங்களுக்குப் பிடித்த சர்வதேச, இந்திய, தமிழ், இயக்குனர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
அகிரோ குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு, தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்.
தமிழ் சினிமாவின் வணிகக்கூறுகளை தக்க வைத்துக்கொண்டே இயல்பான ஒரு கதையைச் சொல்கிறீர்கள். அதுதான் உங்கள் பாணியா?
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு செய்கிற தயாரிப்பாளர், முதலில் அது கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்பார். அதுவும் கிடைக்காவிட்டால் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாது. அது நிறைவேற வேண்டும். வேறெதையும்விட சினிமா என்ற கலையில் மட்டும்தான் அறிவியலும் வணிகமும் சேர்ந்திருக்கிறது. மினிமம் கேரண்டி இல்லாவிட்டால் எப்படி அடுத்த படத்தை எடுக்க முடியும். அதற்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டால், நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொள்ளமுடியும். எனக்கு இரண்டு படவாய்ப்புகளும் அப்படித்தான் அமைந்தன. என் விருப்பங்களுக்கு குறுக்கீடாக யாருமே நிற்கவில்லை. பொல்லாதவன் படத்தில் ஒரு காமெடி காட்சியை மட்டும் விருப்பமில்லாமல் வைத்தேன்.
வஐச ஜெயபாலனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை அறிமுகப்படுத்தினார். 'ஒருமுறை அவரைப் பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார்' என்று சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது. நடிக்கிறீர்களா என்று கேட்டேன். உடனே சரி என்றார். பேட்டைக்காரராக உருவாக்கிவிட்டோம்.

உங்களுடைய அடுத்த ஆடுகளம் என்ன?
இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன் நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களனை மாற்றலாம் என்றிருக்கிறேன்.

சுந்தரபுத்தன்
நன்றி: த சன்டே இந்தியன்

த மெசெஞ்சர்[The Messenger][2009] [15+][அமெரிக்கா]

ருமை நண்பர்களே!!!
நீங்கள் எப்போதாவது உங்கள் நெருக்கமானவர்கள் அல்லது நெருக்கமல்லாதவர்களுக்கு சென்று சேர வேண்டிய துக்க செய்தி  உங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட அதை நீங்கள் அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறீர்களா?!!! அது !, அத்தனை எளிதானதா?!!! அது உங்களால் முடியுமா?!!!

மெசெஞ்சர் என்றொரு மிக அருமையான படத்தை சமீபத்தில் பார்த்தேன், வூடி ஹாரல்சனின் மிகச்சிறப்பான நடிப்பை மீண்டும் முன்னிறுத்தும் படம், ஹர்ட் லாக்கருடனே வெளியான  இப்படம் எத்தனையோ விருதுகளை குவித்திருந்தும்,  2ஆஸ்கர் நாமினேஷன் தகுதியிருந்தும் ஆஸ்கர் விருதை பெற முடியவில்லை. ஹர்ட்லாக்கர் போர்க்கள  சூழலில்,  போர் வீரர்களின் பார்வையில் அவரது வீட்டார் நினைவுகளை, விருப்பமில்லாமல் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போர்சூழலை பட்டவர்த்தனமாய் சொன்னது  , இப்படம்  ராணுவ வீரர்களை அனுப்பிய நாட்டுக்குள்ளே போர் வீரர்களின் உறவுகள் அவன் விடுமுறையில் நிச்சயம் வருவான் என்று  ஆவலாய் காத்திருக்கின்ற மன நிலையை , பிரிவுத் துயரை அவர்கள் கொஞ்சமும் ஆதரிக்காத போரை  , ஏதோ ஒரு சுபயோக சுப தினத்தில் அமெரிக்கப் படையினரிடமிருந்து பெறுகின்ற விருப்பத்துக்குரியவரின் இழவு செய்தியை, விரிவாகவும்,  வீர்யத்துடனும்  பேசுகிறது.
படத்தின் கதை:-
ர்ட் லாக்கரை விட இது உயர்ந்த படம்  என்பேன்.  வூடி ஹாரல்சன் இதற்கு முன் தன்னுடைய ஒப்பற்றை நடிப்பை, நேச்சுரல் பான் கில்லர்ஸ், செவன் பவுண்ட்ஸ், நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென், ட்ரான்ஸிபேரியன், வாக்கர் போன்ற படங்களில் நிரூபித்திருந்தாலும் அவரை மிகச்சிறந்த நடிகர் என்று ஆணித்தரமாக குறிப்பிட உதவும் படம் இது.

ப்படத்தில் இவர் போரில் இறந்து போன அமெரிக்க படை வீரர்களின் வீட்டுக்கு மரண செய்தி கொண்டு செல்லும் Casualty Notification குழுவின்  கேப்டன் டோனி ஸ்டோனாக நடித்துள்ளார்,  ஏன்?!!! வாழ்ந்துள்ளார் என்று சொல்லுவது தான்  அர்த்தமாக இருக்கும், அவருக்கு உதவும் சக ராணுவ சர்ஜண்டாக, ஈராக் படையில் பலத்த வெடிகுண்டு காயம் பட்டு படிப்படியாக குணமாகி வரும்  மோண்ட் கோமெரி என்னும்  பாத்திரத்தில் பென் ஃபாஸ்டர்  மிக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தன்  மகன் இறந்த துக்க செய்தியை இவர்களிடமிருந்து பெறும் ஒரு தந்தையாக ஸ்டீவ் பஸ்கமி [ஃபார்கோ] நடித்திருந்தார்.அவரது கேமியோ பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது . அவர் மகனை இழந்த ஆற்றாமையால் வெடித்து இவர்களிடம் பேசுகையில், தூரத்தில் ஒரு மரத்தை காட்டி அதோ அந்த மரத்தை பார்!!!, அதற்கு என்னுடைய மகனின் வயது தான், அது இன்னும் இருக்கிறது, ஆனால் ?!!! என்று குமுறுகிறார். கோபம் அடங்காமல் நீ ஏன் சாகவில்லை? நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ போரிட வேண்டியது தானே?!!! உனக்கென்ன வயது? என் மகனுக்கு வெறும் 20 தான், என்று உணர்ச்சி நிரம்ப பேசி முகத்தில் உமிழ்ந்தும் தன் காலணிகளை கழற்றி இவரின் முகத்தில் எறிந்தும் விரட்டுகையில் நம்   மனதில் தங்கிவிடுகிறார்.
ஒரு தந்தையும்[ஸ்டீவ் ப்ஸ்கமி] மரணசெய்தியாளனும்[பென் ஃபாஸ்டர்]

ரணசெய்தியை கொண்டு சேர்ப்பவனுக்கு  கடமை ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் ,அவன் யாரிடமும் நட்பும் குழைவும் கருணையும் பாராட்டக்கூடாது என்னும் கேப்டன் டோனியின் கட்டளையும் மீறி  மோண்ட் கோமெரி   அந்த வீரர்களின் குடும்பத்தாருக்காக துக்க செய்தி  கொடுக்க செல்கையில் மனம் கரைவதும் வீரர்களின் பெற்றோர்களை தந்தையாக தாயாக பாவித்து தொட்டுத் தேற்றுவதும் அருமையான காட்சிகள்.  தனியனாக உறுதி படைத்த நெஞ்சினனான கேப்டன் டோனிக்கும் இவருக்கும்  நட்பு பூக்கும் காட்சிகள் அபாரம்,  படத்தின் முதல் காட்சியில் வரும் உடலுறவு காட்சி தவிர வேறு எந்த விரசமான காட்சியும் படத்தில் கிடையாது, அக்காட்சி கூட போரில் காயம் பட்ட இவர் தேறி வருவதை குறிப்பதற்காகவே வைக்கப்பட்டதாக எனக்கு தோன்றியது, இவரின் முன்னாள் காதலி கெல்லி , சக வசதியான நண்பனை திருமணம் செய்ய முடிவெடுத்ததால், இவர் அவளை திருமணம் செய்ய விருப்பம் இருந்தும், காதல் தோல்வியில் உழலும் காட்சிகள் மிக நன்றாக செதுக்கப்பட்டுள்ளன.

டத்தில் ஓர் ராணுவ வீரனின் அழகிய விதவை மனைவி , ஒலிவியாவாக வரும் சமந்தா மார்ட்டனின் பங்களிப்பும் அபாரம்.  அவளின் மீது மையல் கொள்ளும் மோண்ட் கோமெரி அவளுக்காக சின்ன சின்ன உதவிகள் செய்து அவளிடம் மெல்ல நெருங்கும் காட்சிகளும், அவர்களுக்குள் உண்டாகும் திடீர் நெருக்கமும் , அவர்கள் காரில் இருந்து இறங்கி,அக்கம் பக்கத்தார் பார்க்கும் முன்னர் அவளின் வீட்டுக்குள்  சமயலறைக்குள்ளே பின் வழியாக வேகமாக நுழைந்து கலவிக்கு தயாரவதற்குள்ளேயே, ஒலிவியா இது தவறு!!! என்று உணர்ந்து சுதாரிப்பதும் , கூடாக்காம  எண்ணத்தை சட்டென உதறுவது  அத்தனையையுமே கைதேர்ந்த லாவகத்துடன் படமாக்கியுள்ளார் இயக்குனர்.அந்த காட்சியை இயக்குனர் 11 நிமிடங்கள் நீளும் ஒரே ஷாட்டாக மிக அழகாக படமாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கதவை தட்டப் போகும் முன்னர்

டம் பார்க்கும் போதே நம்மையும் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. படத்தில் எந்த வீட்டுக் கதவை இவர்கள் தட்டப் போனாலும் அக்காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. படத்தில் சண்டை காட்சி, சேஸிங் காட்சி, கொலை, துப்பாக்கி சூடு எதுவுமே இல்லை, ஆயினும் திரைக்கதையும் வசனமும் நம்மை கட்டிப் போடுகிறது கைதேர்ந்த நடிப்பும், நேர்த்தியான இயக்கமும் உற்ற துணையாக உடன் வருகிறது.

னிதர்களின் வாழ்வில் இரண்டு கடினமான தருணங்கள் தவிர்க்கமுடியாதது, தம் குடும்ப உறுப்பினர் மரணத்தை ஒருவர் அறியும்  தருணம்  , குடும்ப உறுப்பினர் மரணத்தை அறியத் தரும் தருணம்,  என்ற இரண்டே அது!!!.  படம் பார்க்கையில் நம்மால் தாங்க முடியாத துக்கம் சில காட்சிகளில் தொண்டையை அடைக்கச் செய்கிறது. கிட்டத்தட்ட இந்த இருவருடனே நாமும் இழவு செய்தியைத் தாங்கிச் செல்வது போலவே இருக்கிறது, சுமார் ஆறு முறை இழவு செய்தியைச் சொல்லப் நாமும் கூடப் போகிறோம், இதையும்  ஒரு வகை அமெரிககவுக்கு எதிரான சர்க்காசிசம், டார்க் ஹ்யூமர்   என்பேன். அந்த மரணச் செய்தியை  பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு பெற்றோரும், உற்றாரும் துடிதுடித்து  அமெரிக்காவை தூற்றுகின்றனரே?!!!, பார்க்க வேண்டும்?!!!, அமெரிக்காவின் கோர முகத்தை இப்படி அமெரிக்க படங்களே கிழித்து தொங்கவிடுவது வரவேற்கத்தக்கது.
வேற்று நாட்டில் பலியான ஒரு வீரனின் சவ அடக்கத்தின் போது

டம் பார்க்கையிலேயே அமெரிக்கா  ராணுவ வீரர்களை உற்பத்தி செய்யும் ஒரு பெரிய தொழிற்சாலை என்பதும் நமக்கு புரிகிறது, ஒரு சாராரின் நலவாழ்வுக்காக மறுசாராரின் நலவாழ்வை பிடுங்கி கபளீகரம் செய்து தரும் வேலையையே அமெரிக்க ராணுவம் செய்கிறது, நம் நாட்டுக்கு விவசாயம் செய்தால் தான் உணவு , அமெரிக்காவுக்கு போர் செய்தால் தான் உணவு என்னும் இழி நிலை!!!  . அமெரிக்க அரசாங்கத்தின் மீது காரி உமிழும்  நிலைப்பாடுகளை கதையின் மாந்தர்கள் கொண்டிருந்ததில்  கூடுதல் அக மகிழ்ச்சி எனக்கு.

லகில் நம் அண்டை நாடுகளில் அமெரிக்க அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட   தீவிரவாதத்துக்கு எதிரான  போர் எனும் அக்கப் போர்களுக்கு, நாமே சாட்சியாக இருந்திருக்கிறோம், அவை அத்தனையுமே நம் வீட்டுக்குள்ளே திடீரென நுழையும் போலீசாரால் கஞ்சா அடங்கிய மஞ்சள் பை அவர்களே வைத்து அவர்களே எடுப்பது போன்ற உள்நோக்கம் கொண்ட போர்களே !!!, எனக்கு நினைவு தெரிந்தே, அமெரிக்கா வெறும் 20 வருட காலத்தில் லைபீரியா, ஈராக், சவுதி அரேபியா, குவைத், யுகோஸ்லேவியா, போஸ்னியா, ஹைதி, ஸைரே [காங்கோ], சூடான், ஆஃப்கானிஸ்தான், ஏமன், மாசிடோனியா, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, பாகிஸ்தான், சோமாலியா, சிரியா, இப்போது லிபியா போன்ற நாடுகளை தன்னுடைய மலைப்பாம்பு வாயால் மெல்ல விழுங்கியிருக்கிறது.

ஸ்ரேலுக்கும் மறைமுகமாக உதவி பாலஸ்தீனத்தையும்  விழுங்கி வருவதும் கண்கூடு. இத்தனை நாடுகளிலுமே அமெரிக்க ராணுவ வீரன் சென்று போர் செய்திருக்கிறான், கொலைகள் செய்திருக்கிறான். பிணமாகியிருக்கிறான். நிறைய பெண்களின் கற்பை சூறையாடியிருக்கிறான், நிறைய குடும்பத் தலைவிகளை விதவைகளாக்கியிருக்கிறான், விபச்சாரியாக்கியிருக்கிறான், நிறைய உள்ளூர் மக்களை உயிருடன் குழவாக சவ அடக்கம் செய்திருக்கிறான்.

த்தனையோ முதியவர்களை மனநிலை பிழற வைத்திருக்கிறான். எத்தனையோ குழந்தைகளை அனாதையாக்கியிருக்கிறான், அனாதையாக்கப்பட்ட அந்த குழந்தை பயங்கரவாதியாக உருவெடுக்க காரணத்தையும் விதைத்து விட்டு , மிச்சம் யாரும் உயிருடனில்லாத போது போர் முடிந்தே விட்டது என்று கூறிய அவன்!!! ஒன்று வெளியேறியிருக்கிறான், அல்லது வெளியேறியது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு, அங்கேயே தங்கி பாதுகாப்பு வரியை வாங்கிக் கொண்டிருக்கிறான் [குவைத்,சவுதி அரேபியா  உதாரணம்].

மெரிக்க அரசின்  இந்த வெட்கம் கெட்ட பிழைப்பை படத்தில் பிணமான ராணுவவீரர்களின் பெற்றொர்களின் கதறல்கள் மூலமும், அரசுக்கு அவர்கள் விடும் சாபங்கள் மூலம் நாமும் உணர்கிறோம். உலக சினிமா காதலர்கள் வாழ்வில் தவற விடக்கூடாத ஒரு படம். வூடி ஹாரல்சனின் ஒப்பற்ற நடிப்பை எத்தனை முறை பதிவில் சுட்டிக் காட்டினாலும் தகும்,ராணுவ வீரர்கள் மட்டும் நடை பிணங்கள் அல்ல,ராணுவ வீரகளின் இழவு செய்தியை தாங்கிச்செல்லும் செய்தியாளர்களுமே நடை பிணங்கள் தான் என்று சொல்லாமல் சொன்ன இயக்குனர்-ஓரன் மோவர் மேன் இஸ்ரேலைச் சேர்ந்த   யூத பத்திரிக்கையாளருமாவார்.

டத்தில் பிண்ணணி இசை  கிடையாது, பிண்ணணியில் ஒலிக்கும் ஆல்பத்தின் ட்ராக்குகள் மட்டுமே  உண்டு, ஒளிப்பதிவு Bobby Bukowski , பக்கபலமான Alexander Hall ன் எடிட்டிங் படு நேர்த்தி , Oren Moverman-ன்  நறுக்கென்ற திரைக்கதை, வசனம், இயக்கம் அத்தனையுமே நன்கு மெச்சத்தக்கது. படத்தில் லைவ் ரெகார்டிங் தான் என்பதால் நம்மால் மிக எளிதாக கதையுடன் ஒன்ற முடிகிறது என்பதும் மற்றொரு சிறப்பு.
அமெரிக்க ராணுவம் ஈராக்கின் ஃபலூஜா என்னும் நகரத்தில் நடத்திய இனப்படுகொலை பற்றிய ஆவணப்படம் :-Loose Change - Fallujah (Operation Phantom Fury 11.8.2004


படத்தின் முன்னோட்ட காணொளி யூயூபிலிருந்து:-
உலகின் மிகப்பெரிய பொய் புரட்டு பயங்கரவாதிகள் யார் என்று பார்க்க அழுத்தவும்:-

வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!

ருமை நண்பர்களே!!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று கட்டிய காரணித்தினாலேயே இன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  தனிப்பட்ட கோபம் ,விரோதம் பூண்டு அவரின் இடது கையால் புறக்கணிக்கப்படும்  இந்த சட்டசபைக் கட்டிடம்,  எத்தனை ஆயிரம் ? தொழிலாலர்களின், பொறியாளர்களின், கட்டிடக் கலைஞர்களின், உழைப்பை, வியர்வையை, தொழில்நுட்ப அறிவை, திட்டமிடுதலை, கட்டிட வடிவமைப்பாற்றலை, உலகத்தரமான கட்டிட விதிகளை , சிறப்பம்சங்களை,  தன்னுள் வாங்கி இறுதியாக இவ்வடிவத்தை பெற்றிருக்கிறது  என்று தெரியுமா?!!!

1200 கோடிகள் செலவழித்து இந்த நவீன சட்ட சபையை கட்டிவிட்டு அதைப் பயன்படுத்த வில்லை என்றால் யாருக்கு நட்டம்?!!! மக்களுடைய வரி பணம் தானே விழலுக்கு இறைத்த நீராகும்?!!!. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு  பரம விரோதி தான், ஆனால் அந்த கட்டிடம் கருணாநிதியின் பணத்தில் கட்டவில்லையே ?!!!, ஜெயலலிதா பெருந்தன்மையுடன் தன் பிடிவாதத்தை துறந்து சட்டசபையின் கூட்ட தொடரை   புதிய சட்டமன்றத்தில் கூட்ட வேண்டும் என்பதே, உழைக்கும் வர்க்கத்தின் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

து நடக்குமா?!!! கனவிலும் நடக்கவே நடக்காது  , இதே முதல்வர் ஜெயலலிதாவின்  நிலையில் கருணாநிதியை வைத்துப் பார்ப்போம், அவர் ஒரு வேளை இத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயித்து வந்திருந்தால் எதிரி ஜெயலலிதாவே இதைக் கட்டியிருந்தாலும், அரசுப் பணம் தானே?! ,  என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு  நிச்சயம் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் ஜம்மென்று  இதே சட்டசபையில் தன் நாற்காலியில் போய் அமர்ந்திருப்பார்.   பின்னர் அவர், அவரின் விருப்பத்திற்கேற்ப வண்ணங்களையும் உள் அலங்காரங்களையும் வேண்டுமானால் மாற்றியிருப்பார். இது போல ஒரே அடியாக சட்டசபையையே புறக்கணித்து பழைய சட்டசபையை 100 கோடி ரூபாய் கொண்டு புதுப்பிக்கும்  செயலை அவர் ஆரம்பித்திருக்கவே மாட்டார். இந்த விஷயத்தை கேள்விப்படும் வேற்று மாநிலத்தவர்   யாருமே வாயால் சிரிக்க மாட்டார்கள்!!! , கட்சிக்கொரு சட்டசபை வேண்டுமென்றால் இடத்துக்கும், பொருளுக்கும் எங்கே போவது?!!! சில நண்பர்கள் இந்த கட்டிடத்தின் அருமை பெருமைகளை சிறப்பம்சங்களை முழுக்க உணராது அது தண்ணீர் தொட்டி போல இருக்கிறது , பெட்ரோல் ரிஃபைனரியைப் போல இருக்கிறது, பாண்டிச்சேரி மாநில போலீசாரின் தொப்பியைப் போல இருக்கிறது என்று ஏளனம் செய்வது நகைப்புக்கிடமே. நல்லவை எங்கிருந்தாலும்  எடுத்துக்கொள்வது தான் நல்ல பண்பு.
சரி!,புதிய சட்டசபை கொண்டிருக்கும் சிறப்பம்சங்களை சற்று பார்ப்போமா?.
சென்ற ஆண்டு திறக்கப்பட்ட, தமிழக புதிய சட்டசபை கட்டடம், உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் [க்ரீன் பில்டிங்] என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகங்களின், "தங்க தர நிர்ணயச் சான்றிதழும்' [கோல்ட்] இந்த கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது பசுமை விதிமுறைகளை   தீவிரமாக கடைபிடித்து 100 க்ரெடிட்டுகளுக்கும் மேலாக வருமாறு பார்த்துப்பார்த்து வடிவமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.

30 க்ரெடிட்டுகள் [பாயிண்டுகள்] வருவதற்கே லீட் கன்சல்டண்ட்களும் ஏனைய பொறியாளர்களும் மண்டையை உடைத்துக் கொள்வர், 100 பாயிண்டுகள் வாங்குவது அத்தனை சுலபமல்ல, இது க்ரீன் பில்டிங்காக அதுவும் 100 க்ரெடிட்டுகளுடன் திகழ்வதால் தான் இதை கட்ட இத்தனை செலவு பிடித்திருக்கிறது,ஆனால் அத்தனையும் இயற்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடையே, 100 இயற்கைக்கு கேடு விளைவிக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது, கார்பனை வெளியேற்றத்தை எவ்வளவு முடியுமோ  அவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டிடம் இது. அங்கே கட்டிட நிலப்பரப்பில் இருந்து  கட்டிட வேலைகளின் பொழுது அகற்றப்பட்ட மரங்கள், அதே சட்டசபை நிலப்பரப்பில் கட்டிடம் எழும்பிய பின்னர் மாற்று இடத்திலோ அல்லது தோட்டத்திலேயோ திரும்ப நடப்பட்டுள்ளன.

ட்டசபை கட்டடத்தில் 3.4 லட்சம் சதுர அடியில் பசும்புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கட்டிடத்தின் கூரைகள் எல்லாவற்றிலும்  லேண்ட்ஸ்கேப்ட் கார்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. "ரீ-சைக்கிளிங்' முறைப்படி தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் செடிக்கு பாசனக்காரர்கள்  தேவையில்லை, குறித்த நேரத்திற்கு பாசனக்கருவிகள் இயங்கி செடிகளுக்கு நீரைப் பாய்ச்சும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கட்டிட உபயோகத்துக்கு கிடைக்கும். 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அருமையாக இக்கட்டிடத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படும் வகையில், ஆட்டோ சென்சார் முறைகொண்டு இயங்கும் யூரினல்கள்,வாஷ்பேசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தண்ணீர் தேவை 52 சதவீதம் குறையும்.கட்டிடத்தின் வெளிப்புற வார்ப்பு பலகைகளில் நவீன கோலங்கள் கொண்ட டிசைன் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

கோலங்களில் உள்ள சிறிய புள்ளிகள் மூலம் வெளிச்சம் உட்புகும்; வெப்பம் உள்ளே வராதவாறு அமைந்ததும் இதன் சிறப்பு. 60 சதவீத வெப்பத்தை உட்புக விடாமல் வெளியேற்றும் வகையில், கட்டிடத்தின் ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. கட்டிட வளாகத்தில் இயற்கையாகவே வெளிச்சம் நிறைந்திருக்கும்.பகலில் மின்சார விளக்குகளுக்கு தேவையே இருக்காது என்பதும் இன்னொரு சிறப்பு.


ந்த அறையிலுமே ஆட்கள் இல்லை என்றால் ஐந்து நிமிடத்திற்குள், விளக்குகள், மின்விசிறிகள்  தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். மின் சிக்கனத்தை மனதில் கொண்டு, இந்த நடைமுறை எல்லா பகுதிகளிலுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் தேவை குறையும். சென்னையின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூரில் உள்ள செடிகளே லேண்ட்ஸ்கேப்டு கார்டன்களில்  வைக்கப்படுகின்றன.

ச்செடிகள் இரண்டு ஆண்டுகள் வளர்ந்தபின்னர் தண்ணீர் தேவைப்படாது. கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றி 800 கி.மீ., தூரத்திற்குள் வாங்கப்பட்டவை என்பதும் சிறப்பு. சுகாதாரம் பேணுதல், மின், குடிநீர் சிக்கன முறை கையாளுதல் என ஒவ்வொன்றுமே பசுமை விதிகளின் படியே கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே பசுமை விதிகளின் கீழ் கட்டப்பட்ட ஆட்சி மன்ற கட்டடம் என்ற பெருமை, இந்த வகை சிறப்பம்சங்களால் தான் தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகத்தின் நீண்ட ஆய்வுக்கு பின்னர், "தங்க தர நிர்ணயச் சான்றிதழ்' கிடைத்துள்ளது.  தலைமைச் செயலக கட்டிடம் வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுளளது என்பது மற்றொரு சிறப்பம்சம். 

து தமிழகத்தின்  பிரமாண்டமான கட்டுமானப் பணி ஆகும். கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி 5.9.08 அன்று திறக்கப்பட்டது. 12.11.08 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 18 மாதங்களுக்குள், அதாவது 11.5.10-க்குள் புதிய சட்டசபையை கட்டி முடிப்பதற்காக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.2010-11-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டினை புதிய சட்டசபையில் தாக்கல் செய்துவிடவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக சட்டமன்ற மண்டபத்தை மட்டுமாவது முழுவதுமாக கட்டிமுடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.அதன்படியே மார்ச் 10-ம் தேதி முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. தலைமைச் செயலகம் கட்டிடத்தின் இறுதிகட்ட  பணிகளும்  துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

ப்போது புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. முதல் பகுதி ஏ பிளாக் என்று அழைக்கப்படுகிறது.  ஏ பிளாக், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 4 பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  இது 9 லட்சம் சதுர அடிபரப்பில், ரூ.425.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்து மத கோட்பாடின் படி, கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவும் வட்ட வடிவிலான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. பொது விதிகளின் படி,  உலகின் எந்த ஒரு மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம் போன்றவை வட்ட வடிவத்தில்தான் கட்டப்படுகின்றன. அது போலவும், இந்துமத தர்மப்படி சக்கரம் என்பதை அடிப்படையாக வைத்தும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள 4 கட்டிடங்களும் சக்கரம் போல் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

கூவம் ஆற்றை ஒட்டிய சுவாமி சிவானந்தா சாலையின் (சென்னை தொலைக்காட்சி நிலைய சாலை) அருகில் முதல்-அமைச்சர் வட்டத்தில் (சி.எம். சர்க்கிள்) தொடங்கி, நூலக வட்டம் (லைப்ரரி சர்க்கிள்), சட்டப்பேரவை வட்டம் (அசம்ப்ளி சர்க்கிள்) என தொடர்ந்து, வாலாஜா சாலை அருகே பொது வளாகம் (பப்ளிக் பிளாசா) என நீள்வட்ட வடிவத்தில் இந்த ஏ பிளாக் பகுதி போய் முடிவது இதன் சிறப்பு. இரண்டாவது பகுதியான பி பிளாக்கில், தலைமைச் செயலக அலுவலகங்கள் அமைந்திருக்கின்ற். 7 மாடிகளை கொண்ட ஏழு தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பி பிளாக் கட்டுமானப் பணிகள் இந்த 2011 மே மாதத்தில் முடிக்கப்படவுள்ளது.

பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களும் 6 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை அமையவுள்ள சட்டப்பேரவை வட்டத்தில் 100 அடி உயரம் கொண்ட 6 மாடி கட்டிடத்தின் மீது, அதே அளவு உயரம் (100 அடி) கொண்ட பிரமாண்ட மேற்கூரை (டோம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டோமின் மீது கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற அரங்கினுள் நேரடியாக சூரிய வெளிச்சம் கிடைக்கும். இந்த கூரையை சட்டமன்ற அரங்கில் தரைத்தளத்தில் அமர்ந்தபடியே பார்த்து ரசிக்கமுடியும். இது ஒரு ஆட்ரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மேற்கூரையை, துருப்பிடிக்காத வகையில் தயாரித்துள்ளதும் மற்றொரு சிறப்பு, ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து  மற்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகளும்,  இந்த மாத இறுதியில் முடிக்கப்பட்டுவிடும். 

ட்டப் பேரவை கட்டிடத்தின் தரைத்தளத்தில் சட்டசபை (285 எம்.எல்.ஏ. இருக்கைகள்), சபாநாயகர் அறை, சட்டமன்றக் கட்சி அலுவலக அறைகள் (5 அறைகள்), முதல்வரின் செயலக அறை, கொறடா அறை, சார்புச் செயலாளர் அறை, எதிர்கட்சித் தலைவர் அறை, துணை சபாநாயகர் அறை, ஒப்பனை அறை ஆகியவைஅமைந்துள்ளன.முதல் தளத்தில் கூட்ட அரங்கு, பொதுப்பணித் துறை பராமரிப்பு அலுவலகம், பிரிவு அலுவலகம், பத்திரிகையாளர் கேலரி, சார்புச் செயலாளர் பிரிவு, உணவுக் கூடம், ஒப்பனை அறை;2-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பார்வையாளர் கேலரி, ஒப்பனை அறை.3-வது தளத்தில் சார்புச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, கூடுதல் துறைச் செயலாளர் அறை, பிரிவு அலுவலகம், பார்வையாளர் அறை, வெளிநாட்டவர் பதிவு செய்யும் அறை, உணவுக் கூடம், ஒப்பனை அறையும் அமைக்கப்பட்டிருக்கிறது..

4-வது தளத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பிரிவு அலுவலகம், சார்புச் செயலாளர் அலுவலகம், ஒப்பனை அறை.5-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, இணைச் செயலாளர் அறை, ஒப்பனை அறை. 6-வது தளத்தில் செயலாளர் அறை, இணைச் செயலாளர் அறை, முதல்-அமைச்சர் செயலக அலுவலகம், கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறையின் மின்பராமரிப்புப் பிரிவு, பார்வையாளர்கள் அறை, ஒப்பனை அறை ஆகியவை அமைந்துள்ளன. இதுபோல், முதல்வர் வட்டம், நூலக வட்டம், பொது வளாகம் ஆகியவற்றிலும் பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும் வகையில் தனித்தனி 6 மாடி கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி, இந்த மாபெரும் வளாகத்துக்குள் வந்துசெல்லவேண்டும் என்று முதல்வர் விரும்பியதால், வாலாஜா சாலையை ஒட்டிய பகுதியில் பொது வளாக பகுதி (பப்ளிக் பிளாசா) அமைகிறது. இதில் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்லலாம்.

பொதுமக்கள் இங்கே வந்து சுற்றிப்பார்த்து விட்டு உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களும்   நீர்நிலைகளும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தாண்டி சட்டசபைக்குள்ளே நுழைய முடியா வகையில் உறுதியான உடையாத கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் ஒவ்வொரு தளமும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் இணையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் உடன் கூடிய சோதனை வாசல்கள் உள்ளன.  சோதனைக்குப் பிறகே அடுத்த கட்டிடத்துக்குள்ளே செல்ல முடியும். அதிகாரிகளுக்கான நுழைவு வாயில், சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்திருக்கிறது.இக்கட்டிடம் மிகவும் இன்றைய முக்கிய தலைவலியான, பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழாவண்ணம் பலத்த பாதுகாப்பு  நடவடிக்கைகளை  கருத்தில்  கொண்டு உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளன .

புதிய சட்டசபை வளாகத்துக்கு (ஏ பிளாக்) தனி துணை மின்நிலையம், தனி தொலைபேசி இணைப்பகம், தகவல் தொழில்நுட்ப வசதிகளை நிர்வகிப்பதற்காக எல்காட் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கை அமைப்பதற்கு மட்டுமே இரவு பகல் பாராமல் நாள் ஒன்றுக்கு  4 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் ஒரு வருடம்   உழைத்துள்ளனர். முதல்வர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் சுவாமி சிவானந்தா சாலை-அண்ணா சாலை சந்திப்பு அருகே அமைந்திருக்கிறது. முதல்வரின் அலுவலக அறை, இந்த மாடியின் 6-வது தளத்தில் அமைந்துள்ளது. அவர் அறையின் வலது பக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கும், இடது பக்கத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கும் அமைந்திருக்கிறது.

பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை, திட்டங்கள் துறை, சட்டத் துறை ஆகிய முக்கியத் துறையின் செயலாளர்களில் அலுவலக அறைகள் ஏ பிளாக்கில் அமைந்திருக்கிறது. சட்டசபை செயலாளரின் அலுவலக அறை சட்டசபைக்கு அருகே தரைத் தளத்தில் அமைந்திருக்கிறது. மற்ற செயலாளர்களின் அலுவலக அறை, 6-வது தளத்தில் அமைந்திருக்கிறது.முதல்வரின் அறைக்கு எதிரே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அழகிய மாடிப் பூந்தோட்டம் அமைந்திருக்கிறது. பூங்கா போல் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்படும். ஓய்வு எடுப்பதற்கும், காற்றோட்டமாக உரையாடுவதற்கும் இத்தோட்டத்தை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. இந்த தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பிற்காக கண்ணாடிச் சுவரும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ற்றொரு ரூப் கார்டன் நூலக வட்டத்துக்கான கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 9 ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம் வந்தாலும்., சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக் கட்டிடங்கள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.தீவிபத்துக்கள் முற்றிலுல் தவிர்க்கும் வண்ணம் அபாரமான பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில், இந்த கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற கட்டிடமாகும். இதை புறக்கணிப்பது மிகவும் நகைப்புக்குரிய செயல் அன்றி வேறில்லை.
 
 கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff
ருவரை,ஒருவரின் படைப்பை பற்றி குறை சொல்லும் முன்னர் அவரின் படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு பேசத்துவங்குவதே சாலச்சிறந்தது.சென்னை சட்டசபை வளாகத்தை திறம்பட வடிவமைத்தவர் இந்த படத்தில் இருக்கும் பெர்லினைச் சேர்ந்த  தலைமை கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff  என்பவராவார். அவரது gmp- von Gerkan, Marg und Partner Architects இணையதளத்தின்  சுட்டி  இது. உள்ளே சென்று சிறிது நேரம் செலவிட்டு அவர்களின் போர்ட் ஃபோலியோவையும்,கேலரியையும் பார்வையிடுங்கள். இந்த நிறுவனத்தினர் உலகெங்கிலும் இது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டசபை வளாகங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது , சட்டசபை கட்டிட வடிவமைப்பில் இவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றால் மிகையில்லை. முன்னாள் அமைச்சர் உரை முருகன் செய்த உருப்படியான செயல் இவர்களை வடிவமைக்க கூட்டிக் கொண்டுவந்தது தான். சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் இந்த வடிவமைப்பு வேலைக்கு உள்நாட்டு வல்லுனரை அழைக்காமல் இப்படி அந்நியரை கூட்டி வந்துள்ளனரே?!!! என்று எனக்கு மிகுந்த கோபம் இருந்தது. ஆனால் அதன் கண்டெம்பொரரியான,கார்பொரேட் லுக் பொருந்திய தோற்றத்தையும் ஏனைய ஒப்பில்லாத சிறப்பம்சங்களையும் எண்ணிப் பார்க்கையில் இக்கட்டிட வல்லுனர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புரிகிறது. 

ஒரு கட்டிடத்தை இவ்வளவு துரிதமாக வடிவமைப்பதும், அதை இவ்வளவு துரிதமாக சிறப்பாக கட்டி முடிப்பதும் அத்தனை எளிதல்ல என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்கிறேன்!!!
=====0000=====
சட்டசபையின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!!!

View Larger Map
 

=====0000=====

தொடர்புள்ள என் மற்றொரு பதிவு:- எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!

எண்டோசல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனம்!!!


ருமை நண்பர்களே!!!

'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’  என்னும் அதிபயங்கரமான பூச்சிக் கொல்லி மருந்தைப்பற்றி அறிவீர்கள் தானே?!!!.இந்த பூச்சிக்கொல்லி மருந்து உலகின் 81 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. நார்வே நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், கடந்த மாதம் நடந்த உலக சுகாதார மாநாட்டில், 2012 மத்தியில் எண்டோ சல்ஃபானுக்கு உலக அளவில் தடை விதிக்கத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் மக்கள் விரோத போக்குடைய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடைசெய்ய ஆனவரை சுணக்கம் காட்டி வருவது தான் கண் கூடு. 

லகே வெறுத்து ஒதுக்கும் இம்மருந்தை  இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்   உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்து இருக்கிறார்கள்,ஆனால் தீர்ப்பும் அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு சாதகமாக வருமா?!! அல்லது பூச்சி மருந்து முதலாளிகளுக்கும், அவர்களிடம்  கையூட்டு பெற்று வயிற்றை கழுவும் அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக வருமா?!!! என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

ண்டோ சல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனத்தை முந்திரி, பருத்தி, புகையிலை உள்ளிட்ட பணப் பயிர்களை தின்று அழிக்கும் சிறியவகைப் பூச்சிகளை கொல்ல அதிகம் பயன்​படுத்துகிறார்கள். 1950-ல்  அமெரிக்காவில் அறிமுகப்​படுத்தப்பட்ட இந்த பூச்சிக் கொல்லி, 1970-ல் இந்தியாவுக்கு வந்தது. இங்கு நிரந்தரமாக தங்கிவிட்ட இம்மருந்து நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலைகளையும் திறந்தது ,இங்கே ஆண்டுக்கு 8,500 டன் எண்டோ சல்ஃபான் உற்பத்தி செய்யப்பட்டு 4,000 டன் வெளிநாடுகளுக்கும் செல்கிறது, எஞ்சியது இந்தியாவுக்குள்ளேயே சந்தைப்படுத்தப்படுகிறது . கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரிக் காடுகள் அதிகம். இங்கு ஹெலிகாப்டர் மூலம் இந்த மருந்தைத் தொடர்ந்து முந்திரிப்பண்ணை முதலாளிகள் தெளித்து வந்ததில், இதுவரை 400க்கும் பேருக்கு மேற்பட்டோர் கொடூரமாக இறந்து விட்டார்கள்.

து மனித உடலுக்குள் போய்விட்டால், முதலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வலிப்பு, நடை தடுமாற்றம், மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, நினைவு இழத்தல் எனத் தொடங்கி இறுதியில் கோமா நிலைக்குக் கொண்டுபோய்விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் எட்டு வாரங்களிலேயே இது கருவைப் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பதில் சிக்கலை உண்டாக்குவதால், ஆண் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி பெண் சுரப்பிகளை அதிகப்படுத்தும். அதனால், பிறக்கும் ஆண் குழந்தைகள்கூட அதிகப் பெண்மைத்தன்மையுடன் இருப்பார்கள்.

ந்த பகுதியில் நிறைய குழந்தைகள் விகாரமாக பூசணிக்காய் அளவு கொண்ட பருத்த தலையுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு தைராய்டு ஒழுங்காக இருக்காது. இன்சுலினும் சுரக்காது. வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு விரைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். இவர்களுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டு பிறவியிலேயே இவர்கள் பார்வையும் இழக்க நேரிடும். 

பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் இந்த பூச்சிக்கொள்ளியின் வீரியம் பிறக்கும் குழந்தைகள் மீது தொடுக்கும் வெறியாட்டம்   சொல்லி மாளாது மேலே உள்ள படங்களே காண்போருக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். இதனால் எண்டோ சல்ஃபானுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரி, ஆளும் மார்க்சிஸ்ட்களே கேரளத்தில் தொடர்ந்து போராடுகிறார்கள்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், சொர்க்கா என்ற கிராமத்தில்  நிறைய குழந்தைகள்  எண்டோ சல்ஃபானின் வீரியத்தால் பாதிக்கப்​பட்டு பிறக்கும்போதே குருடாகப் பிறக்கின்றனர்.

நான்கு வயதான நிறைய குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பை வயிற்றுக்கு வெளியே தொங்கியபடி இருக்கிறது. 20 வயதான நிறைய இளைஞர்கள் வலிப்பு நோயினால் பீடிக்கப்பட்டு  வாழ்கையையே தொலைத்துவிட்டு கிடக்கிறார்கள். 28 முதல் 30 வயதுகளிலுள்ள  நிறைய பேர்களுக்கு, நான்கு வயது குழந்தைக்கான மன வளர்ச்சிகூட இல்லை. மனித உடலில் கலக்கும் எண்டோ சல்ஃபான் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் ஈரல் மூலம் வெளியேறுவதால், அவையும் பாதிக்கப்பட்டு இதயம் பலவீனமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

பொது நல வழக்குத் தொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்'' எண்டோ சல்ஃபானுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து கேரள அரசு இதுவரை 11 கமிட்டிகளை நியமித்தும், இந்த பூச்சிக்கொல்லியை தடை செய்ய முடியவில்லை. எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படும் உற்பத்தி ஆலைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து இருக்கிறார்கள். ஆனாலும் இம்மருந்து  நீக்கமற எல்லா ஊர்களிலுமே விற்கப்படுகிறது, கேரளாவின் தட்பவெப்ப நிலையால் இம்மருந்தின் வீர்யம் சொல்லொனாத்துயரை இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொறுப்பது ஆகாது என்னும் அயற்சியும் கோபமும் பகுதி மக்களிடையே ஒருசேர ஏற்பட்டதால் தான்  நீதிமன்றத்தை மக்கள் அணுகி இருக்கின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெரும்பாலான மாநிலங்களும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்...'' என்றார்.
எண்டோசல்ஃபானுக்கு ஒத்து ஊதும் மத்திய      சுற்றுச்சூழல் மற்றும்   வனத்துறை அமைச்சர்     ஜெய்ராம் ரமேஷ்

ண்டோ சல்ஃபான் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு  குணப்படுத்தும் மருந்துகள் இல்லவே இல்லை என்பது மற்றொரு துயரம்,திருடனாய் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும், அது போல கறை படிந்த அரசியல் வாதிகள், இனியேனும் மக்களை சோதனைச்சாலை எலியாக மாற்றி விளையாடாமல் இருத்தல் வேண்டும்,இந்தியாவில் இன்னொரு போபால் விஷவாயு சம்பவம் போன்றதோர் பேரிடர் வேண்டுமா?!!!, பாரதத்தில் நூற்று இருபது கோடி மக்கள் இருக்கிறார்களே அதில் ஐந்து ஆயிரம் பேர் செத்தால் ஒன்றும் குடி முழுகிபோய்விடாது என்னும் மெத்தனப்போக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சியாளர்களிடையே மறையவேண்டும், மக்களாகிய நாமும் அது கேரளத்து மக்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்துக்கு கேடு வருகையில் பார்த்துக் கொள்வோம் என்று பாராமுகம் காட்டாமல், இதை கண்டித்தும் எதிர்த்தும் ஃபார்வர்டு மெயில்களும், ஃபேஸ்புக்குகளில், ட்விட்டர்கள், பஸ் போன்ற ஊடகங்களில் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் வரவேண்டும்.செய்வீர்களா?!!!

=====0000=====

ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ? !!!மார்வின் ஹாரிஸ்

 
அருமை நண்பர்களே!!!
திண்ணை.காமில் வெளியான இக்கட்டுரை சிறந்த மானுடவியலையும் அனுபவ விஞ்ஞானத்தையும் முன்னிறுத்துகிறது. இக்கட்டுரை எழுதப்பட்டு 35 ஆண்டுகள் ஆனாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்டது இதன் சிறப்பு.பெரிய கட்டுரையாக இருந்தாலும் படிக்க தொய்வில்லாத நடை,அவசியம் எல்லோரும் படியுங்கள். ஆக்கபூர்வமான பாதையில் பயணிப்பது பாரதமா?அல்லது பகாசுர வயிறு கொண்ட அமெரிக்காவா  என்று புரியும். (மிகச்சிறந்த மானுடவியலாளரான மார்வின் ஹாரிஸ், தனது புகழ் பெற்ற 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ' என்று தலைப்பிட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் இந்தக் கட்டுரை. இந்தப் புத்தகம் கல்லூரி மானுடவியல் படிப்புக்கு பாடப்புத்தகமாக இருக்கிறது.) 

நடைமுறையில் இருக்கும் சில விஷயங்கள் எப்படி நம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பது பற்றி நான் பேசும்போதெல்லாம், யாராவது ஒருவராவது 'இந்தியாவில் இருக்கும் பஞ்சத்தில் அடிப்பட்ட விவசாயிகள் ஏன் அங்கிருக்கும் பசுக்களைச் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் ? ' என்று கேட்பது நிச்சயம். பஞ்சத்தில் அடிப்பட்ட வறுமை நிரம்பிய ஒரு விவசாயி, பக்கத்தில் கொழுத்த மாட்டை வைத்துக்கொண்டு, பசியால் இறப்பது என்பது மேற்கத்தியர்கள் கற்பனை செய்யும் மர்மம் நிரம்பிய காட்சிதான். பல இடங்களில் மேற்கோள் காட்டப்படும் இந்தக் காட்சி, கிழக்கத்தியர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி நாம் கொண்டிருக்கும் உறுதியான எண்ணங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது. 'எப்போதும் இங்கிலாந்து இருக்கும் ' என்பது போல, இந்தியாவில் மக்களின் உயிர்களை விட இந்தியாவின் ஆன்மீக விஷயங்கள் முக்கியமானவை என்ற நம் கருத்தாக்கம் நம் எண்ணங்களை சாந்தப்படுத்துகிறது. அதே நேரம் இது நம்மை வருத்தப்பட வைக்கிறது. நம்மை விட மிகவும் வித்தியாசமான மக்களை நாம் எப்படி புரிந்து கொள்வது என்றும் நம்மை வியக்க வைக்கிறது. இந்துக்கள் பசுக்களின் மீது அன்பு செலுத்துவதற்கு, ஏதேனும் நடைமுறை காரணங்கள் இருக்கும் என்பது, இந்துக்களைவிட, நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. இந்த புனிதப்பசு - வேறெப்படி சொல்வது - நமது புனிதப்பசுக்களில் ஒன்று. 

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் புனிதப்பசு sacred cow என்ற வார்த்தை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயத்தை குறிக்க உபயோகப்படுகிறது. அதிலும் ஒரு விஷயத்தை விமரிசிக்க வேண்டுமென்றால் அதனை 'புனிதப்பசு என்று இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்;அது தவறு 'என்று தொனியில் உபயோகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக 'ராணுவத்துக்கு நாடு நிறையச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை, அது என்ன புனிதப் பசுவா ? ' என்பது போல)

இந்துக்கள் பசுக்களை கும்பிடுவதற்குக் காரணம் பசு உயிர்வாழும் எல்லா விஷயங்களுக்கும் குறியீடாக இருப்பதால். மேரி கடவுளின் அம்மா என்று கிரிஸ்துவர்கள் பார்ப்பது போல, இந்துக்களுக்கு, பசு என்பது உயிர்வாழும் எல்லாவற்றும் தாய். ஆகவே ஒரு பசுவைக் கொல்வது போல பெரும் பாவம் இந்துவுக்குக் கிடையாது. ஒரு மனித உயிரை எடுப்பதற்குக்கூட, ஒரு பசுக்கொலைக்கு இருப்பது போல ஆழ்ந்த பொருளும், பெரும் பாவமும், மிகுந்த கீழ்த்தரமும் கிடையாது.

இந்தியாவின் பசிக்கும், வறுமைக்கும் முதலாவது காரணம் இந்த பசுவை வணங்குவதுதான் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள். பசுக்கொலை தவறு என்று கருதுவதால், சுமார் 10 கோடி உபயோகமில்லாத விலங்குகள் உயிரோடு வைத்திருக்கப்படுகின்றன என்று மேற்கத்திய விவசாய அறிஞர்கள் கூறுகிறார்கள். பசுவைக் கும்பிடும் இந்தப்பழக்கம், பாலுக்கோ மாமிசத்துக்கோ உதவாத இந்த விலங்குகளை உயிரோடு வைத்திருந்து, அவைகளை பிரயோசனமான மற்ற விலங்குகளோடும், மனிதர்களோடும் உணவுக்குப் போட்டிப் போட வைத்து இந்திய விவசாயத்தையே வீணடிக்கின்றன என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் கால்நடையில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவை உணவு உற்பத்திக்கு தேவையற்றவை என்று 1959இல் ஃபோர்ட் பெளண்டேஷன் உதவிய ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. 1971இல் பென்ஸில்வேனியா பல்கலைக்கழக பொருளாதார அறிஞர், இந்தியாவில் சுமார் 3 கோடி உதவாத பசுக்கள் இருக்கின்றன என்று சொன்னார்.

இவ்வளவு தேவையற்ற, பொருளாதாரத்துக்கு பயன்படாத பசுக்கள் அதிக அளவில் இருப்பதற்குக் காரணம் நேரடியாக மூடத்தனமான இந்துக் கொள்கைகள் மூலமே என்று தோன்றுகிறது. தெருவெங்கும் அலையும் இந்தப்பசுக்களுக்கு இருக்கும் சுதந்திரம் டெல்லி, கல்கத்தா, சென்னை, மும்பாய் போன்ற பெரு நகரங்களுக்கு வரும் உல்லாசப்பயணிகளுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். இந்த விலங்குகள் தெருவெங்கும் அலைகின்றன. கடைகளில் சுதந்திரமாகப் போய் தின்கின்றன. தனியார் தோட்டங்களுக்குள் உடைத்துக்கொண்டு செல்கின்றன. எல்லா நடைபாதைகளிலும் கழிந்து வைக்கின்றன. கார்கள் போகும் பெரும் தெருக்களின் நின்றுகொண்டு எந்தக்காரையும் போகவிடாமல் அமைதியாக அசை போட்டுக்கொண்டு நிற்கின்றன. கிராமப் புறங்களிலும், பசுக்கள் எல்லாத்தெருக்களிலும் நின்றுகொண்டு இருக்கின்றன. ரயில் தண்டவாளத்தின் அருகே மெதுவாக நடந்து போகின்றன.

பசுக்கள் மீது அன்பு செலுத்துவது வாழ்க்கையை பல விதங்களில் பாதிக்கின்றது. வயதாகிப் போன பசுக்கள் இருப்பதற்காக அரசாங்கம் தனி வாரியங்களையும் கூடாரங்களையும் கட்டுகின்றது. சென்னையில் தெருவில் அலையும் நோயுள்ள பசுக்களை வளைத்து அவைகளுக்கு சிகித்சை செய்து ஆரோக்கியமாக்கி அவைகளுக்கென்று தனி வயல்களைக் கொடுத்து மேய விடுகின்றது அரசாங்கம். விவசாயிகள், பசுக்களை, தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவைகளுக்கு மாலைகள் போட்டு அலங்காரம் செய்கிறார்கள். அவைகள் நோயுற்றால் அவைகளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். புதிய கன்று பிறந்தால், பூசாரியையும், பக்கத்துவீட்டுக்காரர்களையும் கூப்பிட்டு கொண்டாடுகிறார்கள். அலங்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தலையுடன் பசுவின் உடலுடன் உள்ள ஒரு பெண்ணின் படத்தை இந்தியாவின் எல்லா இந்துக்களின் வீட்டிலும் காலண்டராகப் பார்க்கலாம். இந்தப்பசுவின் ஓவ்வொரு காம்பிலிருந்தும் பால் சொரிகிறது.

அழகான பெண்ணின் முகத்திலிருந்து ஆரம்பித்து, படத்தில் இருக்கும் கொழுத்தப்பசுவுக்கும், நிஜத்தில் பார்க்கும் பசுவுக்கும் அதிக ஒற்றுமைகள் இல்லை. நிஜப்பசுவுக்கு எலும்புகள்தான் பிரதானமான விஷயம். காம்பிலிருந்து பால் சொரிவது இருக்கட்டும், இந்தப்பசு ஒன்று தன் கன்றையே வளரும் வரைக்கும் பால் கொடுக்க இயலாது. இந்தியாவில் இருக்கும் ஜெபு பசு ஒன்று தரும் சராசரி பால், வருடத்துக்கு சுமார் 210 லிட்டருக்கும் குறைவு. சராசரி அமெரிக்க பசு ஒன்று சுமார் 2500 லிட்டர் பால் தருகிறது. சாம்பியன் பால் தரும் பசுக்கள், ஒரு வருடத்தில் சுமார் 10000 லிட்டர் வரைக்கும் தருவது சாதாரணம். ஆனால் இந்த ஒப்புமை முழுக்கதையையும் சொல்வதில்லை. எந்த வருடத்தை எடுத்தாலும், இந்தியாவின் ஜெபு பசுக்களில் பாதி, பாலே தருவதில்லை. ஒரு சொட்டுக்கூட தருவதில்லை.

விஷயங்களை மோசமாக்க வேண்டுமென்றால், இந்த பசுக்கள் மீது இருக்கும் அன்பு, மற்ற மனிதர்கள் மீது அன்பு தோன்றும் படி தூண்டுவதில்லை என்பதையும் பார்க்க வேண்டும். முஸ்லீம்கள் பன்றிக்கறியை வெறுப்பவர்களாக இருப்பதால், அவர்கள் மாட்டிறைச்சி உண்பதால், பல இந்துக்கள் அவர்களை பசுக்கொலைக்காரர்களாகப் பார்க்கிறார்கள். இந்தியப்பிரதேசம் பிரிந்து இந்தியாவாகவும், பாகிஸ்தானாகவும் பிரிவதற்கு முன்னால், முஸ்லீம்கள் பசுக்களை கொல்வதை தடுக்க வேண்டி வருடாவருடம் மதக்கலவரங்கள் நடந்து வந்திருக்கின்றன. 1917இல் பீகாரில் நடந்த பசுக்கலவரத்தில் சுமார் 30பேர் இறந்ததும், 170 முஸ்லீம் கிராமங்கள் கொளுத்தப்பட்டதும், இன்னும் இந்தியா பாகிஸ்தான் எதிர்ப்புணர்வுக்குக் காரணமாக இருக்கின்றன.

கலவரத்தை மிகவும் கண்டித்தாலும், மோகன் தாஸ் கே காந்தி மிகவும் தீவிரமாக பசுக்களின் மீது அன்பு செலுத்துபவராக இருந்தார். அவர் பசுக்கொலையை முழுமையாக தடுக்க வேண்டினார். இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, பசுக்களுக்கு தனியாக உரிமைகளையும், பசுக்கொலையை தடுக்கவும் சட்டம் எழுதப்பட்டிருந்தது (கடைசியில் நிறைவேறவில்லை). சில மாநிலங்கள் பசுவதையை முழுமையாகத் தடைசெய்திருக்கின்றன. சில மாநிலங்கள் சில விலக்குகளை அளித்திருக்கின்றன.இந்த பசு சம்பந்தமான கேள்வி, இந்துக்களுக்கும், இந்தியாவில் மீதமிருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மட்டும் கலவரங்களையும், சண்டைகளையும் உருவாக்குவதில்லை. 

ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், தீவிரவாத இந்து குழுக்களுக்கும் இடையேயும் போராட்டங்களை தோற்றுவிக்கின்றன. 1966, நவம்பர் 7 ஆம் தேதி, மஞ்சள் பூக்கள் அணிந்து பசுசாண சாம்பலை உடல் முழுவதும் பூசிய நிர்வாணமான சாமியார்கள் தலைமை தாங்க, சுமார் 12000 பேர்கள், பசுக்கொலை தடைச்சட்டம் கோரி, இந்திய பாராளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு அப்புறம் அங்கு நடந்த கலவரத்தில் 8 பேர்கள் இறந்தார்கள்; 48 பேர் காயமடைந்தார்கள். இதன் பின்னர் தேசம் முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பசு பாதுகாப்பு பிரச்சார கமிட்டியின் தலைவரான முனி சுஷில் குமார் என்பவர் தலைமை தாங்கினார்.
நவீன தொழில்மயமான உபாயங்களைக் கையாளும் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நன்கு அறிந்த மேற்கத்திய பார்வையாளர்களுக்கு, இது போன்ற பசுக்களின் மீது அன்பு, பொருளற்றதாகவும், ஏன் தற்கொலைக்கு ஒப்பானதாகவும்கூட தென்படும். இந்த நிபுணர்கள் இந்த உபயோகமில்லாத விலங்குகளை எல்லாம் பிடித்து அது போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு அனுப்பிவைக்க மிகவும் ஆசைப்படுவார்கள். 

இருப்பினும், பசுக்கள் மீது அன்புசெலுத்துவதை கண்டிப்பதில் சில முரண்பாடுகளைக் காணலாம். இந்த புனிதப்பசுவுக்கு ஏதேனும் நடைமுறைக்காரணம் இருக்குமா என நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வித்தியாசமான இந்திய அரசாங்க அறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. இந்தியாவில் பசுக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன ஆனால் காளைகள் தேவைக்குக் குறைவாக இருக்கின்றன என்று கூறுகிறது இந்த அறிக்கை. இவ்வளவு பசுக்கள் இருக்கும்போது எப்படி காளைகள் குறைவாக இருக்கும் ? காளைமாடுகளும், எருமைகளுமே இந்தியாவின் வயல்களை உழப் பயன்படுகின்றன. பத்து ஏக்கர் அல்லது குறைவாக இருக்கும் வயல்களுக்கு, இரண்டு காளைகளோ அல்லது இரண்டு எருமைகளோ போதுமானவை. உழுவதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்தால், உண்மையில் தேவைக்கும் குறைவாகவே காளை மாடுகள் இருக்கின்றன என்பது தெரியும். இந்தியாவில் சுமார் 6 கோடி பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் சுமார் 8 கோடி உழு மாடுகளே இருக்கின்றன. ஒவ்வொரு பண்ணைக்கும் சுமார் 2 உழுமாடு இருக்கும் பட்சத்தில், 12 கோடி உழுமாடுகள் அல்லவா இருக்க வேண்டும் ? 

விவசாயிகள் உழுமாடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வதால், நிலைமை அவ்வளவு மோசமில்லை. இருப்பினும், சில நேரங்களில் நடைமுறைக்கு ஒத்துவராது. பருவ மழைக்கு தகுந்தாற்போல உழவேண்டும். சில நேரங்களில் உழும் நேரம் தப்பிவிட்டால், மாடு இருந்தும் பிரயோசனமில்லை. உழுவது முடிந்தாலும், தனது மாட்டு வண்டியை இழுக்க விவசாயிக்கு இரண்டு மாடுகள் வேண்டும். இந்தியாவில், மாட்டு வண்டியே பொருட்களை விநியோகம் செய்யும் முக்கியமான விஷயம். சிறிய பண்ணைகளும், கால்நடைகளும், ஏர்களும், மாட்டுவண்டிகளும் இந்திய விவசாயப் பொருளாதாரத்தைக் கீழே இழுக்கின்றனவாக இருக்கலாம், ஆனால் இவைகள் பசுவின் மீது அன்பு செலுத்துவதால் வந்தவை அல்ல.

இந்தியாவின் விவசாயக்குடும்பங்களின் மேல், இந்த உழவுமாடுகள் எண்ணிக்கைக் குறைபாடு ஒரு பெரும் பயமுறுத்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு உழவு மாடு வியாதி வந்து இறந்தால், ஒரு ஏழை விவசாயி தன்னுடைய பண்ணையையே இழக்க வேண்டி வரும். அந்த மாட்டுக்கு பதிலாக இன்னொன்று இல்லையென்றால், இன்னொன்று வாங்க, பணம் கந்து வட்டியில் கடன் வாங்க வேண்டி வரும். இப்படிப்பட்ட கடன்களால் தாக்குண்ட பல குடும்பங்கள், தங்கள் நிலங்களை விற்றுவிட்டோ, அல்லது மற்றவர்களிடன் குத்தகைக்கு விட்டுவிட்டோ, தினக்கூலிகளாகவும் பஞ்சம் பிழைக்க நகரத்துக்கும் செல்கின்றன. வேலையற்றவர்களும், வீடற்றவர்களும் நிரம்பி வழியும் நகரங்களுக்கே ஏராளமான ஏழை விவசாயிகள் போகும்படிக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு அமெரிக்க விவசாயி தன்னுடைய டிராக்டரை மாற்றவோ அல்லது ரிப்பேர் செய்யவோ முடியாமல் இருப்பது போலத்தான், தன்னுடைய உழவு மாடு இழந்த ஒரு இந்திய விவசாயியின் நிலையும். ஆனால் இதில் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. டிராக்டர்கள் தொழிற்சாலைகளில் செய்யப்படுகின்றன. காளை மாடுகள் பசுக்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. பசு வைத்திருக்கும் ஒரு விவசாயி தன்னுடன் காளை மாடு செய்யும் தொழிற்சாலையையே வைத்திருக்கிறான். பசுவின் மீது அன்பு இருக்கிறதோ இல்லையோ, இது ஒன்றே அவன் அந்தப் பசுவை மாட்டுக்கறி பண்ணாமல் இருப்பதற்கு போதுமான காரணம். 210 லிட்டர் பால் கொடுக்கும் பசுவின் மீது ஏன் ஒரு இந்திய விவசாயி அன்பு செலுத்துகிறான் என்பதை இப்போது ஒருவர் பார்க்க ஆரம்பிக்கலாம். காளை மாடுகளை உருவாக்குவதே பசுவின் முக்கிய பொருளாதார வேலையாக இருக்கும் பட்சத்தில் அதனை பால் கொடுப்பதற்காகவே வளர்க்கப்படும் அமெரிக்கப் பசுக்களோடு ஒப்பிடுவது சரியல்ல என்பதையும் பார்க்கலாம். 

இருப்பினும், ஜெபு பசு கொடுக்கும் பால் பெரும்பாலான ஏழைக்குடும்பங்களின் உணவு தேவையை முக்கியமான முறையில் தீர்க்கிறது. பசியின் மூலையில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு சிறிதளவு பால் கூட அவர்களது ஆரோக்கியத்துக்கு முக்கியமான விஷயம்.இந்திய விவசாயிகளுக்கு பால் தேவைப்படும்போது அவர்கள் எருமையிடம் போய்விடுகிறார்கள். எருமை நீண்டகாலத்துக்கு பால் கொடுக்கும். அதன் பாலில் ஜெபு மாட்டுப் பாலைவிட அதிகம் கொழுப்பும் இருக்கும். வெள்ளம்போல இருக்கும் நெல்வயல்களில் ஆண் எருமை மாடுகளால் நன்றாக உழ முடியும். 

ஆனால், ஜெபு காளைமாடுகள் பல வேலைகள் செய்யக்கூடிய மாடுகள். அவை புஞ்சை நில விவசாயத்துக்கு மிகவும் ஏற்றவை. அதை விடவும் முக்கியம், ஜெபு மாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் நீண்ட வறட்சிக்காலங்களைத் தாங்கக்கூடியவை என்பது. இந்த நீண்ட வறட்சிக் காலங்கள் அடிக்கடி இந்தியாவின் பல பகுதிகைளைத் தாக்குவது அறிந்ததே.விவசாயம் என்பது, மனிதர்களும், இயற்கையும், விலங்குகளும் உறவாடும் பெரும் அமைப்பின் பகுதி. அமெரிக்க விவசாயத்தை மட்டும் மனதில் கொண்டு, இதன் முழுமை புரியாமல், தனித்தனியாக விஷயங்களைப் பார்த்து முடிவுக்கு வருவது ஆபத்தானது. தொழில்மயப்படுத்தப்பட்ட, அதிக சக்தி உபயோகிக்கும் மேற்கத்திய நாடுகளின் பார்வையாளர்கள் பார்க்காமல் போய், கேவலப்படுத்தப்பட்டதையும் தாண்டி, இந்திய விவசாயத்தில் கால்நடைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உரமாக கால்நடைச்சாணம் இந்திய விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இந்த இடத்தை முழுமையாக வேதிப்பொருட்கள் பிடித்துவிட்டன. 

அமெரிக்க விவசாயிகள் குதிரைகளையும் கோவேறுகழுதைகளையும் விட்டுவிட்டு டிராக்டருக்குச் சென்ற பின்னர் அவர்கள் முழுமையாக சாணத்தை உபயோகப்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அதன் பிறகு, டிராக்டர்கள் உரத்துக்குப் பதிலாக விஷத்தை வெளியேற்றுவதால், விவசாயிகள் முழுமையாக வேதிப்பொருட்களை நம்பவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இன்று உலகம் முழுவதும், மிகப்பெரிய, பெட்ரோ கெமிக்கல், டிராக்டர்கள், டிரக் தொழிற்சாலைகள் பேரமைப்பு உருவாகி அது விவசாயத்துக்கு வேண்டிய இயந்திரங்களையும், பெட்ரோலையும், வேதி உரங்களையும், வேதி பூச்சிக்கொல்லிகளையும் உருவாக்குகிறது. இதுவே அதிக அளவில் உற்பத்தி செய்யும் விவசாய முறைக்கு அடித்தளமாக இருக்கிறது.

நல்லதற்கோ, கெட்டதற்கோ, இந்திய விவசாயிகள் இந்த பேரமைப்பில் பங்கு பெற முடியவில்லை. அதன் காரணம் அவர்கள் பசுக்களை நேசிப்பதல்ல. அவர்களால் டிராக்டர்களை வாங்கப் பணமில்லை என்பதால்தான். மற்ற வளரும் நாடுகளைப் போலவே, இந்தியாவால் வெளிநாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளைப் போல பெரும் தொழிற்சாலைகளைக் கட்ட முடியவில்லை. அந்தப் தொழிற்சாலைப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையான பணமும் இல்லை. விலங்குகளிடமிருந்தும், சாண உரத்திடமிருந்தும் டிராக்டர்களுக்கும், வேதி உரங்களுக்கும் இந்திய விவசாயத்தைக் கொண்டு செல்வதற்கு நம்பமுடியாத அளவுக்கு மூலதனம் வேண்டும். மேலும், விலையுயர்ந்த இயந்திரங்களை, விலைகுறைந்த மாடுகளுக்குப் பதிலாக பயன்படுத்துவதன் தவிர்க்க முடியாத விளைவு, விவசாயத்தை நம்பி வாழும் மனிதர்கள் வெகுவாகக் குறைவதும், ஒரு சராசரி பண்ணையின் அளவு அதிகரிப்பதும் தான். பெரும் அளவு தொழிற்சாலை முறைப்பட்ட விவசாயம் அமெரிக்காவில் வளர்ந்ததும், சிறு விவசாயப் பண்ணைகள் சுத்தமாக அழிக்கப்பட்டது நாம் அறிந்ததுதான். அமெரிக்க மக்களில் சுமார் 5சதவீதமே விவசாயப்பண்ணைகளில் வாழ்கிறார்கள். 100 வருடங்களுக்கு முன்னர் சுமார் 60 சதவீத அமெரிக்க மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தார்கள். இதே போல இந்தியாவிலும் விவசாயம் மாறியது என்றால், சுமார் 25 கோடி வேலை இழந்த விவசாயிகளுக்கு நகரங்களில் வேலைகளையும் அவர்கள் வசிப்பதற்கான வீடுகளையும் கட்ட வேண்டும். (மொ.கு. இந்தக்கட்டுரை 1974இல் எழுதப்பட்டது)

வேலையில்லாமையும், வீடற்ற நிலைமையும் பொங்கி வழியும் இந்திய நகரங்களில், இதன் மூலம் நகரத்து மக்கள் அதிகமாவது பெரும் போராட்டங்களையும் அழிவையுமே உருவாக்கும்.இந்த விளைவுகள் நம் பார்வையில் இருந்தால், சிறு அளவுப் பண்ணை, குறைந்த சக்தி உபயோகிக்கும், விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய விவசாய முறையை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். நான் முன்னமேயே சொன்னது போல, பசுக்களும், காளை மாடுகளும், குறைந்த சக்தி உபயோகிக்கும் டிராக்டர்களாகவும் டிராக்டர் தொழிற்சாலைகளாகவும் இருக்கின்றன. அவைகள் ஒரு பெட்ரோகெமிக்கள் தொழிற்சாலை செய்யும் வேலையையும் செய்கின்றன. இந்தியாவின் கால்நடைகள் சுமார் 70 கோடி டன்கள் உரத்தை சாணமாகக் கொடுக்கின்றன. 

இதில் பாதி உரமாகவும், மற்றப்பாதி சமையல் எரிபொருளாகவும் பயன்படுகிறது. ஒரு இந்திய இல்லத்தரசியின் முக்கியமான எரிபொருளான இந்த வறட்டிகள் (காய்ந்த சாணம்) மூலம் வெளிப்படும் வெப்பத்தின் மொத்த அளவு சுமார் 2.7 கோடி டன் மண்ணெண்ணெய்க்கும், 3.5 கோடி டன் நிலக்கரிக்கும், 6.8 கோடி டன் விறகுக்கும் சமமானது. இந்தியாவில் பெட்ரோலும், நிலக்கரியும் மிகச்சிறிய அளவிலேயே கிடைப்பதாலும், ஏற்கெனவே இந்தியாவில் காடுகள் அழிப்பு ஒரு பிரச்னையாக இருப்பதாலும், மேற்கண்ட எந்த எரிபொருள்களும் நடைமுறையில் மாட்டுச்சாணத்து வறட்டியை ஈடுகட்ட முடியாது. ஒரு அமெரிக்கப் பெண், சாணத்தை எரிபொருளாக கருத முடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு இந்தியப் பெண்ணுக்கு இந்திய உணவுவகைகளை சமைப்பதற்கு வறட்டி ஒரு அட்டகாசமான எரிபொருள். பெரும்பாலான இந்திய உணவுவகைகள் வெண்ணெயை உருக்கிச் செய்யும் நெய்மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு வறட்டியே சிறந்த எரிபொருள். ஏனெனில், வறட்டி மெதுவாக, சுத்தமாக நெடுநேரம் வெப்பத்தை வெளியிடுவதால், சாப்பாட்டை கரித்துவிடாது. இதனால், இந்திய இல்லத்தரசி சமையலை ஆரம்பித்துவிட்டு, அந்தச் சமையலைப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதும், வயலில் உதவி செய்வதும், மற்ற வேலைகளைச் செய்வதும் இயலும். அமெரிக்கப் பெண்கள், இதே விளைவை, சிக்கலான எலக்ட்ரானிக் சமாச்சாரங்களாலும், விலையுயர்ந்த லேட்டஸ்ட் மாடல் அடுப்புகளாலும் அடைகிறார்கள்.

மாட்டுச்சாணத்துக்கு இன்னொரு முக்கியப் பயனும் இருக்கிறது. இதை தண்ணீருடன் கலந்து பசைபோல ஆக்கி, தரையை மெழுகவும் பயன்படுகிறது. அழுக்கான தரையில் தடவப்பட்டு மென்மையான தரையாக காய்கிறது. இது புழுதிஇல்லாத துடைப்பத்தால் கூட்டக்கூடிய அழகான தரையாகவும் ஆகிறது.
கால்நடைகளின் சாணத்துக்கு இவ்வளவு பலவகைப்பட்ட பயன்கள் இருப்பதால், ஒவ்வொரு சிறு துண்டும் கவனமாக சேகரிக்கப்படுகிறது. கிராமத்துச் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் குடும்பத்து மாட்டின் பின்னேயே சென்று அதன் சாணத்தை சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவரும் வேலை கொடுக்கப்படுகிறது. நகரத்தில், தோட்டிகள் சாதியினர் இந்த சாணத்தை சேகரிக்கும் உரிமையை வைத்துக்கொண்டு அதனை சேகரித்து, மீண்டும் வீட்டுப்பெண்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஒரு விவசாயத்தொழில்சாலை பார்வையில், காய்ந்த, பிரயோசனமற்ற பசு ஒரு பொருளாதார வீண்செலவு. ஆனால் ஒரு கிராமத்து விவசாயியின் பார்வையில், அதே பசு கந்துவட்டிக்காரரிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் கடைசி ஆயுதம். எவ்வளவுதான் காய்ந்தபசுவாக இருந்தாலும், ஒரு நல்ல பருவமழைக்காலம் வந்தால், அதே பசு கொழுத்து, பழைய சக்தி பெற்று ஒரு கன்று ஈன்று பாலும் கொடுக்க ஆரம்பிக்கலாம். அதற்காகவே ஒரு விவசாயி பிரார்த்திக்கிறான். சில நேரங்களில் அந்தப் பிரார்த்தனைக்கும் பதில் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில், சாணம் கிடைப்பது தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, எலும்பும் தோலுமாக இருக்கும் ஒரு காய்ந்த கிழட்டுப் பசு, ஏன் ஒரு விவசாயிக்கு அழகாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெபு மாடுகளுக்கு சிறிய உடல்கள். அவைகளுக்கு முதுகில் கொழுப்பு சேர்த்து வைக்கும் திமில்கள் இருக்கின்றன. இவைகளுக்கு எவ்வளவு நாள் சாப்பிடாமல் இருந்தாலும் மீண்டும் சாப்பாடு கிடைத்ததும், மீண்டும் வலிமை பெரும் குணம் இருக்கிறது. இந்தக் குணங்கள் இந்திய விவசாயத்துச் சூழ்நிலைகளுக்கு அழகாகக் பொருந்துகின்றன. இந்தியாவின் இந்த ஜெபு மாடுகள், எந்த நீண்டகாலப் பஞ்சத்தையும் மிகச் சிறிய அளவு நீர் குடித்துக் கொண்டும், சிறிய அளவு உணவு உண்டுகொண்டும் கடத்தும் வல்லமை பெற்றவை. பூமத்தியக்கோடு பிரதேசங்களில் வரும் பல வியாதிகளை எதிர்த்து வாழும் திறமை பெற்றவை. ஜெபு காளை மாடுகள் மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கடைசிக் காலம் வரை உழைக்கும் திறமை பெற்றவை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்குமருத்துவராக இருந்த ஸ்டூவர்ட் ஓடொன்னால் இந்தியக் கால்நடைகளை பிணப்பரிசோதனை செய்திருக்கிறார். இந்த மிருகங்கள் சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கூட நன்றாக வேலை செய்து கொண்டிருந்தன. ஆனால் இதன் உள்ளே முக்கியமான உடலுறுப்புகள் மிகுந்த சேதம் அடைந்திருந்தன. இந்த விலங்குகளின் ஏராளமான தன்னுடலை சரிசெய்துகொள்ளும் திறமையால், இந்த மிருகங்களை எந்தக்காலத்திலும் வீண் என்று உதறிவிடமுடியாது.

ஆனால், ஒருவழியில் இந்த விலங்குகள் பிரயோசனமே இல்லாமல், ஏன் சாணம்கூட கிடைக்காமல் போகும் முதுமையை அடைந்து விடலாம். இருந்தும் அப்போதும், இந்த விவசாயி அந்த விலங்கைக் கொல்லவோ, அல்லது அதனை மாட்டுக்கறி பண்ணும் இடத்துக்கு விற்கவோ செய்வதில்லை. பசுக்கொலைக்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் எதிரான மூடத்தனமான மதசிந்தனையால் விளைந்த தீய பொருளாதாரச் சிந்தனையின் எதிர்க்கமுடியாத தடயம் என்று சொல்லமில்லையா ? 

பசுக்கள் மீது அன்பு செலுத்துவது, மாட்டுக்கறிக்கு எதிரானவர்களாகவும், பசுக்கொலைக்கு எதிரானவர்களாகவும் ஒன்று சேர்க்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், பசுக்கொலை, மாட்டுக்கறி எதிர்ப்பு என்பது மனித உயிர்ப்புக்கும், சிறப்பான வாழ்க்கைக்கும் எதிரானது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. முதுமை அடைந்த, எலும்பும் தோலுமான மாடுகளை விற்பதன் மூலம், ஒரு விவசாயிக்கு கொஞ்சம் காசு கிடைத்து தன் குடும்பத்துக்கு இன்னும் கொஞ்சம் காலம் சோறு போடலாம். ஆனால், முதுமை அடைந்த மாட்டை கறி போட்டு விற்காத விவசாயியின் மறுப்பு, நீண்ட கால நோக்கில், நல்ல விளைவுகளைக் கொண்டிருக்கலாம். சராசரியான நிலைமைகளுக்கல்லாமல், தீவிரமான நிலைமைகளுக்கே, உயிர்களின் சமூகங்கள் தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பது நன்றாக நிறுவப்பட்ட சூழ்நிலை ஆராய்ச்சிகள் சொல்வது. இந்தியாவைப் பொறுத்த வரை இந்த தீவிரமான நிலைமை என்பது நீண்டகாலங்கள் பருவமழை பொய்ப்பதும், இவ்வாறு பருவமழை பொய்ப்பது அடிக்கடி நடப்பதும். மாட்டுக்கறி சாப்பிட இருக்கும் எதிர்ப்பையும், பசுக்கொலை எதிர்ப்பையும், நாம் பொருளாதார ரீதியில் ஆராய, அடிக்கடி வரும் வறட்சியையும் பஞ்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜெபு மாடுகளின் சின்ன உடலும், அவைகளது அட்டகாசமான உடல்தேறும் திறமையும் எப்படி இயற்கைத் தேர்வின் உற்பத்தியோ, அதுபோல, பசுக்கொலை எதிர்ப்பும், மாட்டுக்கறி உண்ணாத சமுதாயத்தடையும் இயற்கைத் தேர்வின் (Natural Selection) உற்பத்தியாக இருக்கலாம். பெரும் வறட்சியும் பஞ்சமும் வரும்போது, விவசாயிகள் தங்களிடமிருக்கும் பசுக்களைக் கொன்று தின்பதற்கு ஆசைப்படுவது இயற்கைதான். இந்த ஆசைக்கு இணங்குபவர்கள் தங்கள் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கிறார்கள். ஏனெனில் பஞ்சம் முடிந்ததும், அவர்களது நிலத்தை உழ மாடுகள் இருக்காது. நான் இன்னும் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நல்ல காலங்களில் சில விவசாயிகள் தங்கள் குறுகிய கால எண்ணப்படி மாடுகளின் உபயோகத்தை தப்புக்கணக்குப் போடுவதை விட, பஞ்ச காலத்தில் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் கால் நடைகள், எல்லோருக்கும் பொதுவான நன்மைக்கு எதிரியாக இருக்கின்றன. இப்போது பசுக்கொலையை மாபெரும் பாவம் என்று சொல்வதன் ஊற்றுக்கண், நீண்டகால நோக்கில் மனிதக் குலம் வாழ்வதற்கும், குறுகியகால பிரயோசனத்துக்கும் இடையேயான முரண்பாட்டில் இருக்கிறது. பசுவின் மீது அன்பும், அதனை புனிதமாக்கும் மத சம்பிரதாயங்களும், விவசாயியை குறுகியகால 'பகுத்தறிவின் ' விளைவுகளிலிருந்து காப்பாற்றுகின்றன.

மேற்கத்திய நிபுணர்களுக்கு இது 'இந்திய விவசாயி பஞ்சத்தில் தானே இறந்தாலும், அவனது பசுவைக் கொல்லமாட்டான் ' என்று தோன்றும். இதே நிபுணர்கள் 'புரிந்து கொள்ள முடியாத இந்திய மனம் ' என்றும், 'உயிர் என்பது கிழக்கத்தியர்களுக்கு முக்கியமானதாக இல்லை ' என்றும் பேசுவதற்கு எளியதாக இருக்கிறது. இந்திய விவசாயி பசி வந்திட அந்தப் பசுவையும் தின்பான் என்றும், அப்படி அந்தப் பசுவைத் தின்றால், அவன் இன்னமும் பசியால் இறப்பான் என்றும் இவர்களுக்குத் தெரியாது.

மதச் சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் பசுவின் மீது அன்பும் இருந்தாலும், கொடுமையான பஞ்ச காலத்தில் மாட்டுக்கறியை தின்ன இந்திய விவசாயி முனைவது தவிர்க்க முடியாதது. இரண்டாம் உலகப்போரின் போது, வறட்சியாலும், பர்மாவை ஜப்பானியர்கள் பிடித்ததனாலும், வங்காளத்தில் மிகப்பெரும் பஞ்சம் வந்தது. 1944இல் பசுக்களைக் கொல்வதும், காளை மாடுகளை மாட்டுகறி பண்ணுவதும் ஒரே அதிகமாகி உச்சத்தை அடைந்து, பிரிட்டிஷ் ராணுவம் தனது துருப்புக்களைக் கொண்டு பசுவதைத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்றியது.

1967இல் நியூயார்க் டைம்ஸ் இதழ் கீழ்வருமாறு செய்தி வெளியிட்டது.பீகாரில் இந்துக்கள் பெரும் பட்டினி பஞ்சத்தில் சிக்கி பசுக்களையும் காளை மாடுகளையும், இந்துமதத்தில் இவ்விலங்குகள் புனிதமாக கருதப்பட்டாலும், கொன்று தின்கிறார்கள்.பார்வையாளர்கள் இதனை 'கற்பனைக்கும் எட்டாத கொடும் துயரம் ' என்று வர்ணித்தார்கள்.நல்ல காலங்களிலும் கிழடான, வரண்ட பசுக்களை கொல்லாமல் இருப்பது என்பது, கெட்டகாலங்களில் பசுக்கொலையை தடுக்க வேண்டி நாம் கொடுக்கும் விலையில் ஒரு பகுதி. பசுக்கொலையை தடுப்பதன் மூலமும், மாட்டுக்கறி சாப்பிடாததன் மூலமும் உண்மையிலேயே எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது என்று நான் யோசிக்கிறேன். மேற்கத்திய விவசாய தொழிற்துறையின் பார்வையில், இந்தியாவில் மாட்டுக்கறி உற்பத்திச் செய்யும் ஒரு தொழிற்சாலை என்பது இல்லாமல் இருப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது போலத் தோன்றும். ஆனால், அப்படிப்பட்ட தொழிற்சாலைக்கு இந்தியாவில் வாய்ப்பு குறைவு. மாட்டுக்கறி உற்பத்தி அதிகமாக்குவது இந்தியாவின் சுற்றுச்சூழலையே (eco system) பாதிக்கும். அதற்குக் காரணம் பசுக்களின் மீதுள்ள அன்பு அல்ல, வெப்ப இயங்கியல் விதிகள் (Laws of thermodynamics) காரணமாக. ஒரு சுற்றுச்சூழலில், நிறைய விலங்குகளைச் சேர்ப்பது என்பது, உணவு உற்பத்தியின் திறமையை குறைக்கிறது. ஒரு விலங்கு சாப்பிடும் உணவு, அதன் மூலம் கிடைக்கும் உணவை விட கலோரிக்கணக்குப் படி குறைவு. அதாவது, ஒரு உணவை விலங்குகளுக்குக் கொடுத்து, அந்த விலங்குகளை உண்பதை விட, அந்த உணவை நேரடியாக மனிதர்கள் உண்ணும் போது அதிகமாக உணவு கிடைக்கும்.
அமெரிக்காவில் அதிகமாக மாட்டிறைச்சி உண்பதன் மூலம், அமெரிக்காவின் வயல்களில் நாலில் ஒரு பங்கு, மனிதர்களுக்கு அல்லாமல், இந்த மாடுகளுக்கு உணவு அளிக்கவே விளைக்கப்படுகிறது. இந்தியாவின் சராசரி உணவு கொள்ளும் அளவு, ஏற்கெனவே குறைவு என்பதை யோசித்தோமானால், இந்தியாவின் வயல்கள் மாடுகளுக்கு உணவளிக்க திசை திருப்பப் படுமேயானால், உணவின் விலை இன்னும் அதிகரிக்கும். இதனால், ஏழைகளது வாழ்க்கைத் தரம் இன்னும் கீழிறங்கும். அவர்கள் பசுக்களின் மீது அன்பு செலுத்துகிறார்களா இல்லையா என்பதை விட்டுவிட்டால், சுமார் 10 சதவீதம் இந்திய மக்களே மாட்டிறைச்சியை தினசரி சாப்பிடும் அளவுக்கு பணக்காரர்களாக இருப்பார்கள்.
வயதான வரண்ட விலங்குகளை, கசாப்புக் கடைகளுக்கு அனுப்பினால், அதன் மூலம், உண்மையிலேயே சக்தி தேவைப்படும் மக்களுக்கு ஆதாயம் கிட்டுமா என்பதிலும் எனக்குச் சந்தேகம்தான். இவைகளை கசாப்புக் கடைக்கு அனுப்பாமல் இருந்தாலும் இவைகள் தின்னப்பட்டு விடுகின்றன. ஏனெனில், இந்தியா முழுவதும், இறந்த கால்நடைகளை துப்புரவு செய்யும் உரிமை உள்ள கீழ்சாதி மக்கள் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வழியில், சுமார் 2 கோடி கால்நடைகள் வருடாவருடம் இறக்கின்றன. இந்த விலங்குகளின் பெரும்பாலான பகுதிகள், மாட்டிறைச்சி சாப்பிடும் கீழ்சாதி மக்களால் சாப்பிடப்பட்டு விடுகின்றன.

என் நண்பர், டாக்டர் ஜோன் மென்செர் மானுடவியலாளராக பலவருடம் இந்தியாவில் வேலை செய்தார். அவரது கூற்றின் படி, இருக்கும் கசாப்புக் கடைகள் பெரும்பாலும் நகரத்திய மத்தியதர வர்க்க இந்து அல்லாதவர்களுக்கே பயன்படுகின்றன. 'கீழ்சாதியினர் தங்களது உணவை பல வழிகளில் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கீழ்சாதியினரைப் பொறுத்த வகையில், ஒரு விலங்கு கிராமத்தில் இறப்பது என்பது, அந்த விலங்கு நகரத்திய கசாப்புக்கடைக்கு அனுப்பப்பட்டு அந்த விலங்கு கிரிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விற்கப்படுவதை விட நல்லது. ' டாக்டர் மென்செர் அவர்களுக்கு விஷயங்கள் சொன்னவர்கள், முதலில் எந்த இந்துவும் மாட்டுக்கறி சாப்பிடமாட்டார்கள் என்று அடித்துப் பேசினார்கள். பின்னர் 'மேல்சாதி ' அமெரிக்கர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டதும், தங்களுக்கும் மாட்டிறைச்சி ருசி பிடிக்கும் என்று ஒப்புக்கொண்டார்கள்.

நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளும் மற்ற விஷயங்கள் போலவே, கீழ்சாதிமக்கள் மாட்டிறைச்சி உண்பதும் நடைமுறைக்காரணங்களோடு ஒத்துப் போவது. இந்த மாட்டிறைச்சி உண்ணும் சாதியினர், அவர்களுக்கு இறந்த கால்நடைகளை துப்புரவு செய்யும் தொழிலில் இருப்பதால், தோல்தொழில் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, இந்த பசுவின் மீது அன்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் பெரிய தோல்வேலை தொழில்துறை இருக்கிறது. இறந்த பின்னர் கூட இந்த 'பிரயோசனமற்ற ' விலங்குகள், மனிதர்களின் சுயநலத்துக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன.

கால்நடைகள் எப்படி வண்டி இழுக்கவும், எரிபொருளுக்கும், பாலுக்கும், தரை மெழுகவும், உரமாகவும், மாமிசமாகவும், தோலாகவும் பயன்படுகிறது என்பது பற்றிச் நான் சொன்னது சரியாகவே இருந்தாலும், சுற்றுச்சூழல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நான் இந்த சிக்கலான அமைப்பை தவறாகவே எடை போட்டிருக்கலாம். வேறுவழிகளில் இதே பொருளாதார பயனை அடைய எவ்வளவு இயற்கைச் செல்வங்களும் மனித உழைப்பும் செலவாகும் என்பதைப் பொறுத்தே நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த செலவுகள் பெரும்பாலும் இந்த கால்நடைகள் என்ன சாப்பிடுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். பல நிபுணர்கள் மனிதனும், பசுவும் ஒரே உணவுக்கு அடித்துக் கொள்கிறார்கள் என்று அனுமானம் செய்கிறார்கள். அமெரிக்க விவசாய தொழில்நுட்பவியலாளர்களை பின்பற்றி இந்திய விவசாயியும் மனிதன் சாப்பிடும் உணவை மாடுகளுக்குக் கொடுத்தால் இது உண்மையாக இருக்கலாம். வெட்கமில்லாத உண்மை என்னவென்றால், இந்த புனிதப் பசு என்பது தோல்வியடையாத தெருப்பொறுக்கி என்பதுதான். மிக மிகக் குறைவான உணவே மனிதனும், மாடும் இணையாகச் சாப்பிடக்கூடிய உணவு. 

தெருவெங்கும் அலைந்து, போக்குவரத்தை நிறுத்தும் மாடுகளைப் பார்த்து இந்த உண்மை தெளிவாகி இருக்க வேண்டும். மார்க்கெட்டுகளிலும், ரயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் ஏன் மாடுகள் அலைகின்றன ? எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் புற்களையும், குப்பையையும், மனிதனால் சாப்பிடமுடியாத அழுகிய காய்கறிகளையும் உண்டு பாலாகவும் இன்னும் மற்ற பயனுள்ள பொருட்களாகவும் மாற்றித் தருகின்றன! டாக்டர் ஓடென்ட்ஹால் கண்டுபிடித்ததுபோல, கால்நடைகளின் முக்கியமான உணவு மனிதன் சாப்பிடமுடியாத உணவுகளின் மிச்சங்கள்தான். உதாரணமாக, வைக்கோல், கோதுமை வைக்கோல், உமிகள் போன்றவை. ஃபோர்ட் பெளண்டேஷன் இந்தியாவின் கால்நடைகளில் பாதி கிடைக்கும் மாட்டுத்தீவனத்துக்கு அதிகமானவை என்று சொன்னது. சொல்லியிருக்க வேண்டியது, பாதி கால்நடைகள் மாட்டுத்தீவனங்கள் இல்லாமலேயே உயிர்வாழ்கின்றன என்பதுதான். இதுவும் குறைந்த மதிப்பீடுதான். சுமார் 20 சதவீத கால்நடைகளே மனிதனால் உண்ணக்கூடியப் பொருட்களை உண்டு வாழ்கின்றன. இதுவும் எருமைக்கும், வேலைசெய்யும் காளை மாடுகளுக்குமே செல்கின்றன. காய்ந்த மாடுகளுக்கும் வயதான பசுக்களுக்கும் செல்வதில்லை. 
மனிதனுக்கும், கால்நடைகளுக்கும், இடத்துக்கோ, உணவுக்கோ, எந்த வித போட்டியும் இல்லை என்பதையும் கண்டறிந்தார் டாக்டர் ஓடென்ட்ஹால். 'அடிப்படையில், கால்நடைகள், மனிதனுக்கு நேரடியாக பிரயோசனமில்லாத பொருட்களை உண்டு மனிதனுக்கு நேரடியாக பிரயோசனமாகும் பொருட்களைத் தருகின்றன 'பசுவின் மீது அன்பு என்பது அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதன் ஒரு காரணம், இதன் விளைவு எப்படி பணக்காரர்களாலும் ஏழைகளாலும் பார்க்கப்படுகின்றது என்பது. ஏழை விவசாயிகள் மாடுகள் தெருப்பொறுக்க கிடைக்கும் அனுமதிச்சீட்டாக இந்த பசு அன்பைப்பார்க்கிறார்கள். பணக்கார விவசாயிகள் இதனை ஏமாற்று வேலையாகப் பார்க்கிறார்கள். ஏழை விவசாயிக்கு பசு புனிதமான பிச்சைக்காரன். பணக்கார விவசாயிக்கு பசு திருடன். சில காலங்களில் பசு மற்றவர்கள் தோட்டத்தில் புகுந்து அவர்களது வயல்களையும் தோட்டத்தையும் அழித்துவிடுகிறது. பணக்கார விவசாயிகள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் ஏழை விவசாயிகள் தான் அப்பாவி என்று கூறி, பசுவின் மீதுள்ள அன்பை உபயோகித்து பசுக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். போட்டி இருந்தால், அது மனிதனுக்கும் மனிதனுக்கும்தானே தவிர மனிதனுக்கும் விலங்குக்கும் அல்ல.

நகரத்து பசுக்கள் கூட இவ்வாறு பகல் முழுவதும் தெருப்பொறுக்கவும், இரவில் கூட்டிக்கொண்டுவந்து பால்கறக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. 

நகரத்தில் பால் வாங்குவதற்கு சிறந்த உபாயம், மாட்டை வீட்டின் முன் கொண்டுவந்து நேரடியாகக் கறந்து அங்கெயே பெற்றுக்கொள்வதுதான். இதுதான் சில சமயங்களில் தண்ணீர் கலக்காத பால் பெற வழி.இவைகளை வீணான, பொருளாதாரத்துக்கு எதிரான இந்துப் பழக்க வழக்கங்களாகப் பார்ப்பது என்பதை விட ஆச்சரியமானது, இந்தப் பழக்கங்கள் 'ப்ரொடெஸ்டெண்ட் ' வழி சேமிப்பும், கால்நடைப் பராமரிப்பைவிடவும் மிகவும் சிக்கனமானவை, அதிகமான சேமிப்புள்ளவை என்பதுதான். பசுக்களின் மீது பாசம் என்பதும், இரக்கமின்றி (உண்மையிலேயே) மாட்டின் கடைசிச் சொட்டுப்பாலை உறிஞ்சி எடுப்பதும் ஒன்றுக்கொன்று நெருங்கியவை. மாட்டை எடுத்துக்கொண்டு வரும் மனிதன் ஒரு சின்ன கன்றுக்கு வைக்கோல் அடைத்து எடுத்துக் கொண்டுவந்து அதை நிறுத்தி பால் கறக்கிறான். அதுவும் வேலை செய்யவில்லை என்றால், இன்னும் சில் கொடுமையான வேலைகளைச் செய்து பால்கறக்கிறான். 'உலகத்தின் வேறெந்த நாட்டை விடவும் இந்தியாவில்தான் பசுக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றன ' 
என்று காந்தி நம்பினார். 'எப்படி அவளிடமிருந்து கடைசிச் சொட்டுப் பாலையும் ரத்தத்தையும் உறிஞ்சி எடுக்கிறோம் ' என்று புலம்பினார். 'எப்படி அவளை பட்டினி போட்டு வற்ற அடிக்கிறோம். எப்படி கன்றுகளை மோசமாக நடத்துகிறோம். எப்படி அந்தக் கன்றுகளுக்குச் செல்லவேண்டிய பாலை கவர்ந்து கொள்கிறோம். எப்படி கொடுமையாக காளைகளை நடத்துகின்றோம்.எப்படி அவைகளை காயடிக்கிறோம். எப்படி அவைகளை அடிக்கிறோம், எப்படி அவைகள் மீது அதிகப் பாரம் ஏற்றுகிறோம் ' என்றும் புலம்பினார்.

பசுவின்மீது அன்பு என்பது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் வெவ்வெறு விதமான பாதிப்புகளைக் கொண்டது என்பதை காந்தியைவிட வேறுயாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை உண்மையான தேசமாக விழித்தெழ வைப்பதற்கான அவரது போராட்டத்தில், மைய குவியமாக பசு இருந்தது. பசு அன்பு என்பது சிறு பண்ணை விவசாயம், கைத்தறியில் பருத்தி நூல் நூற்பது, தரையில் கால் மடித்து உட்கார்வது, பருத்தியாடையை இடுப்பில் கட்டுவது, சைவ உணவு, உயிர்கள் மீதான மரியாதை, நிச்சயமான அஹிம்சை என்பதோடு இணைந்திருந்தது. மாபெரும் ஏழை விவசாயிகள், நகரத்து ஏழைகள், தீண்டத்தகாதவர்கள், கீழ்சாதிகள் மத்தியில் அவருக்கு இருந்த பெரும் செல்வாக்குக்கும் பின்பற்றுதலுக்கும் இந்தக் கருத்துக்களே காரணம் என்பதை அறிந்திருந்தார். தொழில்மயமாக்குதலின் தீய விளைவுகளிலிருந்து, அவர்களைக் காப்பாற்ற அவர் இந்த முறைகள் மூலமே முயன்றார்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருந்த அஹிம்சையின் வித்தியாசமான பாதிப்புகளை பொருளாதார நிபுணர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் இந்தியாவின் உபரி விலங்குகளை கொன்று விவசாயத்தை 'efficient ' ஆக்க முனைகிறார்கள். பேராசிரியர் ஆலன் ஹெஸ்டன், உதாரணமாக, கால்நடைகள் செய்யும் வேலைகளை வேறு முறைகள் மூல செய்ய போதுமான பதில் காரணிகள் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அவர் 3 கோடி பசுக்களை எடுத்துவிட்டால் மீதமிருக்கும் பசுக்களே போதும் என்றும் கூறுகிறார். 

இன்றைய தேதிக்கு இருக்கும் 100 காளைகளை திரும்பப் பெற 40 பசுக்களே போதும் என்று கணக்குப் போடுகிறார். ஏற்கெனவே 7.2 கோடி காளைகள் இருப்பதால், இந்தக் கணக்குப் படி 2.4 கோடி பசுக்கள் இருந்தால் போதும். உண்மையில் 5.4 கோடி பசுக்கள் இருக்கின்றன. 2.4 கோடியை 5.4 இல் கழித்தால் மீதம் சுமார் 3 கோடி பசுக்கள் தேவையற்றவையாக இருக்கின்றன. இவைகளை கொன்று விடலாம். இந்தப் பசுக்களுக்குச் செல்லும் உணவை மீதமிருக்கும் பசுக்களுக்குக் கொடுத்தால், அவை நன்றாக புஷ்டியாகவும் வளரும் நன்றாகவும் பால் கொடுக்கும். 

ஆனால் யாருடைய பசுக்கள் தியாகம் செய்யப்படும் ? சுமார் 43 சதவீத கால்நடைகள் சுமார் 62 சதவீத பண்ணைகளில் இருக்கின்றன. இந்த பண்ணைகள் சுமார் 5 ஏக்கருக்கும் குறைவானவை. இந்த நிலங்கள் சுமார் 5 சதவீத வயல் மற்றும் மேய்ப்பு நிலங்களையே கொண்டிருக்கின்றன. அதாவது காய்ந்த வற்றிப்போன பசுக்களும் காளைகளும், ஏழைகளிடமும், சிறிய பண்ணை வைத்திருப்பவர்களிடமே இருக்கின்றன. ஆகவே இந்தப் பொருளாதார நிபுணர்கள் பேசும் கொல்லவேண்டிய அதிகப்படி 3 கோடி மாடுகள் ஏழை விவசாயிகளுடையவை. பணக்காரர்களின் மாடுகளை அல்ல. மிகவும் பெரும்பாலான ஏழைக்குடும்பங்கள் ஒரே ஒரு பசுவையே வைத்திருக்கின்றன. ஆகவே இந்த 3 கோடி பசுக்களைக் கொல்வது என்பது கோடிக்கணக்கான மக்களை தத்தாரியாக்கி நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு நகரங்களுக்குத் துரத்தும் வேலைதான்.

பசுவை கொல்லும் ஆர்வத்தில் இருப்பவர்கள் அவர்களது ஆலோசனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தவறின் மீது கட்டுகிறார்கள். விவசாயிகள் விலங்குகளைக் கொல்ல மறுக்கிறார்கள்; காரணம் கொல்லக்கூடாது என்று மதக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆகவே இந்த மதக்கட்டுப்பாடே தேவைக்கு அதிகமான பசுக்கள் இருப்பதற்குக் காரணம். சுமார் 70 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. பசுவின் மீது இருக்கும் அன்புதான் அதிகமான பசுக்கள் இருப்பதற்குக் காரணம் எனில் எப்படி 30 சதவீதம் குறைவாக பசுக்கள் இருக்கின்றன ? ஏறத்தாழ சரிசமமாகவே பசுக்களும், காளைகளும் பிறப்பதால், பசுக்கன்றுகள் இறப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். இதற்குக் காரணம், விவசாயி கத்தி எடுத்து அல்லது கோடாலி எடுத்து பசுக்கன்றைக் கொல்வதில்லை என்றாலும், மறைமுகமாக தனக்குத் தேவையில்லாத பசுக்கன்றுகளை கொல்ல வழிகள் வைத்திருக்கிறார். சின்ன பசுக்கன்றுகள் கழுத்தில் முக்கோண மரச்சட்டம் கட்டப்படுகிறது. கன்று பால்குடிக்க பசுவின் மடியை முட்டும்போது இந்த மரச்சட்டம் பசுவை காயப்படுத்த அது ஒரு உதை விட பசுக்கன்று உதை பட்டுச் சாகின்றது. வயதான பசுக்கள் சின்ன கயிற்றால் வயலில் கட்டப்பட்டு பட்டினி போட்டு சாகடிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வயதாகி நோயுற்ற பசு இப்படி இறப்பதற்கு நேரம் பிடிக்காது. முஸ்லீம், கிரிஸ்தவ இடைத்தரகர்கள் மூலம் ரகசியமாக பசுக்கள் விற்கப்பட்டு நகரத்து கசாப்புக்கடைகளுக்குச் செல்கின்றன.

காளைகளுக்கும் பசுக்களுக்கும் இடையேயான சரியான விகிதாச்சாரம் பார்க்க வேண்டுமெனில் நாம் மழை, காற்று, தண்ணீர், நிலம் பயிர்பண்ணும் முறைகள் போன்றவற்றையே ஆராயவேண்டும். பசுவின் மீதான அன்பை அல்ல. இந்திய விவசாயத்தின் முறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதே போல, காளைகளுக்கும் பசுக்களுக்கும் இருக்கும் விகிதாச்சாரமும் அதற்க்கேற்றாற்போல மாறுபடுகிறது. முக்கியமான விஷயம், நெல் பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது; எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்பது. எங்கெல்லாம் அதிகமான அளவு தண்ணீர் இருக்கும் ஈர நெற்வயல்கள் இருக்கிறதோ, அங்கு தண்ணீரில் இருக்கும் எருமையே அதிகம் விரும்பப்படும் விலங்கு. அங்கு பெண் எருமை, ஜெபு பசுவுக்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வடக்கில் வற்றாத நதியான கங்கை ஓடும் வயல்வெளிகளில் 47 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. இந்தியப் பொருளாதார நிபுணர் கே என் ராஜ், வருடம் முழுவதும் நெல் பயிரிடக்கூடிய கங்கை பள்ளத்தாக்கில் பசுவுக்கும் காளைக்கும் இருக்கும் விகிதாச்சாரம் லட்சிய விகிதாச்சாரத்தை தொடுகிறது என்று சொல்கிறார். இந்த இடமே இந்து மதத்தின் முக்கியமான இடமாகவும் முக்கியமான கோவில்கள் இருக்கும் இடமாகவும் இருப்பதால், இந்த உண்மை இன்னும் வலுப்பெறுகிறது. 

மதமே பசுக்களுக்கும் காளைகளுக்கும் இருக்கும் அசாதாரணமான விகிதாச்சாரத்துக்குக் காரணம் என்னும் எண்ணம், இந்து இந்தியாவையும், முஸ்லீம் பாகிஸ்தானையும் ஒப்பிடும்போது இன்னும் தெளிவாகிறது. மேற்கு பாகிஸ்தானில், மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்களாகவும், பசுவின் மீது அன்பை உதறித்தள்ளுபவர்களாகவும் இருந்தாலும், அங்கே 60 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. இது தீவிர இந்து பகுதியாக இருக்கும் உத்தரபிரதேசத்தை விட அதிகமான பசுக்களை கொண்டிருப்பது தெளிவு. எந்த அளவுக்கு தண்ணீர் எருமைகள் இருக்கின்றன, எந்த அளவு கால்வாய் பாசனம் இருக்கிறது என்ற வகையில் சில மேற்குபாகிஸ்தானைச் சேர்ந்த மாவட்டங்களையும் உத்தர பிரதேச மாவட்டங்களையும் சரியாக தேர்ந்தெடுத்தால் இந்த மாவட்டங்களில் பசுக்கள்-காளைகள் சதவீதம் ஒரே அளவில் இருப்பதையும் காணலாம்.

பசுவின் மீதான் அன்பு என்பது எந்த வகையிலும் காளைமாடு-பசு விகிதாச்சாரத்தையோ, மற்ற விவசாய அமைப்பையோ பாதிக்கவில்லை என்று சொல்கிறேனா ? இல்லவே இல்லை. பசுவின் மீதான அன்பு என்பது மிகவும் சிக்கலான, நுண்ணிய பொருளாதார, கலாச்சார அமைப்பின் ஒரு முக்கியமான தேவையான அங்கம். பசுவின் மீதான அன்பு மனிதர்களை சிறிய அளவு சக்தி செலவிடும், பொருள்களை வீணாக்காத, ஆடம்பரமற்ற சுற்றுச்சூழலை தக்கவைக்க மனிதர்களை உந்துகிறது. பசுவின் மீதான அன்பு, காய்ந்து போன உதவாததாகக் கருதப்படும் விலங்குகளை உயிரோடு தக்கவைக்க உதவுகிறது. மிகவும் சக்தி தேவைப்படும் மாட்டிறைச்சி தொழிற்சாலைகள் வராமல் தடுத்து நிறுத்துகிறது. பொதுவில் உண்டு கொழுக்கும் பசுக்களையும், பணக்கார பண்ணைகளில் புகுந்து தின்னும் பசுக்களையும் பாதுகாக்கவும் உதவுகிறது. பஞ்ச காலத்தில் பசுக்களை கொல்லாமல் காப்பாற்றி பருவமழை வரும்போது வெகுவிரைவில் தேவைப்படும் பசுக்களையும் காளைகளையும் உற்பத்திசெய்துகொள்ளவும் பயன்படுகிறது. எந்த ஒரு இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பைப் போலவே, இந்த அமைப்பிலும், சில தவறுகளும், சில உரசல்களும், சில வீண்களும், சிக்கலான கொடுக்கல் வாங்கல்களில் நடக்கலாம். 50 கோடி மக்கள் (மொ.கு: அப்போது), விலங்குகள், நிலம், உழைப்பு, அரசியல் பொருளாதாரம், மண், தட்பவெப்பம் ஆகிய அனைத்தும் இதில் பங்கு பெறுகின்றன. பசுக்கொலை செய்யும் ஆர்வமுள்ளவர்கள், பசுக்களை அளவுக்கடங்காமல் கன்றுகளை பிறக்கவைத்து, அந்தக் கன்றுகளை கவனிக்காமல் கொன்று, பஞ்சத்தில் அடித்து கொலை செய்வது வீணானது என்றும், திறனற்றது என்றும் வாதிடலாம். குறுகிய மற்றும் முக்கியமற்ற நோக்கில் இது சரியானதாக இருக்கலாம். பசுவின் மீதான அன்பு இல்லாமல் போயிற்றென்றால், பெரும் பட்டினி பஞ்சம் வரும்போது, விளிம்பு நிலை விவசாயிகள் தாங்கக்கூடிய அழிவை கணக்கெடுக்கும் போது, விவசாய பொறியியலாளர் தேவையில்லாத பசுக்களைக் கொன்று பெறும் திறனான விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பயன் குறைவானதாகவே இருக்கும். 

ஒரு அமைப்பின் உள்மனத்தை தாக்குவதன் மூலம், முழு அமைப்புமே மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கலாம் என்று கருதுவது அறைகுறைத்தனமும், ஆபத்தானதும் ஆகும். பெரும்பாலான இந்தியாவின் பிரச்னைகளை, அதன் மனித மக்கள் தொகையை நிலைப்படுத்துவதன் மூலமும், நிலங்களையும், தண்ணீரையும், மாடுகளையும், எருமைகளையும் நிறைய அளவில் நிறையப்பேருக்கு சமமான அளவில் கிடைக்கும்படிச் செய்வதன் மூலமும் குறைக்கலாம். அதற்குப் பதில், இருக்கும் இன்றைய அமைப்பை முழுமையாக அழித்து, புதிய தொழில்நுட்பத்தையும், புதிய அரசியல் பொருளாதார உறவுமுறைகளையும், சொல்லப்போனால் புதிய சுற்றுச்சூழலை உருவாக்குவதன் மூலம் செய்வது. 

இந்துமதம் சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு தக்கவைக்கும் சக்தி(conservation force). இது 'முன்னேற்ற ' நிபுணர்களும், 'நவீனப்படுத்தும் ' நிபுணர்களும் பழைய அமைப்பை உடைத்து, வீணான அதிக சக்தி சாப்பிடும், விவசாய வியாபார தொழிற்சாலை அமைப்பை புகுத்துவதை அது கடினமாக்குகிறது.
ஆனால் நீங்கள் அதிக சக்தி சாப்பிடும், விவசாய வியாபார தொழிற்சாலை அமைப்பு 'பகுத்தறிவு 'க்கு ஒப்பானது என்றும் 'திறனானது ' என்றும் நீங்கள் கருதுவீர்களேயானால் அது போன்ற தவறு இருக்க முடியாது.

எதிர்பார்ப்புக்கு மாறாக, சக்திக்கான செலவையும், அது கொடுக்கும் சக்தியையும் ஒப்பிட்டால், இந்தியா தனது கால்நடைகளை அமெரிக்காவை விட அதிக திறனான முறையில் உபயோகப்படுத்துகிறது என்று பார்க்கலாம். ஒரு மாடு சாப்பிடும் உணவில் இருக்கும் கலோரிகளையும், அதனிடமிருந்து கிடைக்கும் உபயோகப்பொருள்களின் கலோரிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், அது 17 சதவீதமாக இருக்கிறது என்று டாக்டர் ஓனென்ஹால் கூறுகிறார். இது அமெரிக்க மாட்டிறைச்சி மாடுகளை ஒப்பிட்டால் அது 4 சதவீதம் எனத் தெரியும். இந்த சிறப்பான திறனான மாடுகள் மிகவும் அதிகமான பால்தருவதால் அல்ல, மனிதர்கள் மிகவும் அதிகமாக சிக்கனமாகவும் வீண் செய்யாமலும் இருப்பதால் வருகிறது என்று கூறுகிறார். 'கிராமங்கள் மிகவும் பயனீட்டுகின்றன. இங்கு எதுவும் வீணடிக்கப்படுவதில்லை '

வீணடிப்பது என்பது நவீன விவசாய வியாபார கூட்டமைப்பின் குணாம்சம். அது கிராம விவசாயப் பொருளாதாரத்தில் கிடையாது. அமெரிக்காவில் இருக்கும், இயந்திரமயமாக்கப் பட்ட தீவனம் கொடுக்கும் மாட்டுக்கறி தொழிற்சாலைகளில் மாட்டுச் சாணம் உபயோகப்படுத்தப்படாமல் போவது மட்டுமல்ல, அந்த சாணம் மலை போலக் குவிந்து நிலத்தடி நீரையும் பாழ்படுத்துகிறது. இதனால் தூரத்தில் இருக்கும் நீர்நிலைகள் கூட பாதிக்கப்பட்டு குடிதண்ணீர் கெட்டுப்போகின்றது.

தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் உயர்ந்த வாழ்க்கைத்தரம், குறைந்த செலவில் அதிகமான உற்பத்தித்திறனின் காரணமாக அல்ல. ஒவ்வொரு ஆளுக்கும் செல்விடப்படும் சக்தியின் அளவு மிக அதிகமாக இருப்பதால்தான். 1970இல் அமெரிக்கா, ஒவ்வொரு பிரஜைக்கும் சுமார் 12 டன் அளவுள்ள நிலக்கரி வெளியிடும் சக்தி செலவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு பிரஜைக்கும் சுமார் 1/5 டன் அளவு தான் செலவிடப்பட்டது. இந்த வழியில் அமெரிக்க பிரஜை வீணாக்கும் சக்தியின் அளவு இந்தியப் பிரஜை வீணாக்கும் சக்தியின் அளவை விட பல மடங்கு அதிகம். கார்களும், விமானங்களும், ஒரு மாட்டு வண்டியைவிட, வெகு விரைவில் ஒரு இடத்துக்குச் சென்று விடலாம். ஆனால் அவை மிகத்திறனான முறையில் எரிபொருளை உபயோகிப்பதில்லை.

அமெரிக்காவில் ஒரு நாளில் போக்குவரத்து நெரிசலிலும், சாலைத்திருப்பங்களிலும் நிற்கும் வண்டிகள் மட்டும் புகையாக செலவிடும் சக்தி, ஒரு வருடம் முழுவதும் இந்தியாவின் பசுக்கள் வீணாக்கும் சக்தியை விட அதிகம். நின்ற இடத்தில் சக்தியை வீணாக்கும் இந்த வாகனங்கள் செல்விடும் சக்தி, பல கோடிக்கணக்கான வருடங்களாக பூமிக்குள் சேமிக்கப்பட்ட பெட்ரோல் என்னும்போது, இந்த ஒப்பிடல் இன்னும் மோசமாகிறது.உண்மையான ஒரு புனிதப்பசுவைப் பார்க்க வேண்டுமென்றால், வீட்டுக்கு வெளியே நிற்கும் குடும்பத்து காரைப் பாருங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)