
இப்படியும் ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா? என்று எதிர்கால உலகம் சந்தேகப்படும்.-என்று சொன்னார் விஞ்ஞானி ஐன்ஸ்டின்.
யாரைப் பற்றி ? அவர் அப்படி என்ன அற்புதங்கள் செய்தார்?
அவருக்கு எவரிடமும் பகை இல்லை.
ஆனால் பல சுயநலவாதிகள் அவரை பகைவராக எண்ணியதுண்டு.
ஒரு சமயம் இந்தியாவில் விளைநிலத்தின் ஒருபகுதியில் அவுரிச் (ஒரு வகை தானியம்) சாகுபடி செய்ய கட்டாயப் படுத்தினார்கள் வெள்ளையர்கள்.அந்த வெள்ளையர்களில் ஒருவன் காந்தியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்தான் .
காரணம்?
அவர் அந்த ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக கட்டாய அவுரிச் சாகுபடிக்கு எதிராக குரல் கொடுத்தது தான்.ஏழை விவசாயி ஒருவர் அவரிடம் வந்தார்.
பாபுஜி.அந்த வெள்ளைகார துரை.உங்களை கொன்று போட துடித்துக் கொண்டிருக்கிறான்.நீங்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்கிறார்.
அமைதியாய் கேட்ட பாபுஜி.நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.சிறிதும் பயமின்றி.அன்றிரவே புறப்பட்டார்.எங்கே?சொந்த ஊருக்கா?இல்லை.
அவரை கொன்று போட துடிக்கும் வெள்ளையன் மாளிகைக்கு.
அவன் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய பாபுஜி.
அவன் யார் நீ? என கேட்க.
என்னைத்தான் நீங்கள் தேடிக் கொண்டிருப்பதாக கேள்விபட்டேன்.உங்களுக்கு எதற்கு சிரமம் என்று நானே வந்துவிட்டேன் என்கிறார். அவர்.
நீ சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.என்றான் வெள்ளையன்.
ஐயா , நான் தான் நீங்கள் கொல்ல விரும்பும் மனிதன் ,தனியாகத்தான் ஆயுதம்
ஏதுமின்றி வந்திருக்கிறேன்.
நீங்கள் விரும்பியபடி என்னை கொன்று போடலாம் என்கிறார்.வெள்ளையன் பயந்து போனான்.'இப்படியும் ஒரு மனிதரா?என்று வாயடைத்து நின்றான்.
அவர் தாம் அண்ணல் காந்தியடிகள்.
அவர் வாழ்கையின் ஒரு பகுதியை முதன் முதலில் புத்தகமாக எழுதிய
கே.கே டோக் , என்ற கிறித்துவ பாதிரியாருக்கு தான் அண்ணல் மீது எத்தனை ஈடுபாடு?
அந்த நூலில் ரோமன் ரோலந்தை நினைக்கையில் டால்ஸ்டாயின் நினைவு வருகிறது.
லெனினை பற்றி நினைக்கும் போது மாவீரன் நெப்போலியன் நினைவு வருகிறது.
ஆனால் இவரைப் பற்றி நினைக்கும் போது ஏசு நாதர் நினைவு தான் வருகிறது.
ஏசுநாதரைப் போல வாழ்கிறார்.
அவர் பேசியதை போலவே பேசுகிறார்.
அதற்காக அவர் என்றாவது ஒருநாள் தம் இன்னுயிரையும் கொடுத்தாலும் கொடுப்பார்.என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவர் சொன்னதும் உண்மை ஆனது.
அண்ணல் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல்வாதிகளின்
அட்டூழியம் கண்டு நிச்சயம் உள்ளம் கொதித்திருப்பார்.

மஹாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில்
வசித்த காலம்...
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரைச் சிறையில் அடைத்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்திஜி படிப்பதற்காக, தமது நூலகத்தில் இருந்த சிறந்த நூல்களை சிறைசாலைக்கு அனுப்பி வைத்தார் ஸ்மட்ஸ்.
சிறையில் காந்திஜி காலணி தைக்கும் பணியைச் செய்து வந்தார். சிறையிலிருந்து அவர் விடுதலையானதும், ஜெனரல் ஸ்ம்ட்ஸை சந்தித்தார். அப்போது, தான் தயாரித்த ஒரு ஜோடி காலணியை ஜெனரலுக்கு பரிசளித்தார். நெகிழ்ந்து போனார் ஸ்மட்ஸ். பின்னாளில் காந்திஜியைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:-
இன்று என் அலுவலகத்தில் என் லைன் மேனேஜர் ஜஸ்டின் (பிரிட்) னிடம் பேசுகையில் :-
மகாத்மா காந்தியை பற்றி மிகவும் சிலாகித்தான்.
இங்கிலாந்தில் யாரையேனும் நல்லவரை பற்றி பிறருக்கு விளக்க வேண்டுமென்றால் "அவர் காந்தியைப்போல" என்று அடையாளம் காட்டுவார்களாம்.
ஆஹா .... அன்னார் இறந்து 61 ஆண்டுகள் ஆன பின்னும் நமக்கு என்ன பெருமை?
இதற்கு பெயர்தான் இறந்தும் பிறர் நினைவில் நீங்காமல் வாழ்தல் என்பது..