============0000=============
இது உண்மை சம்பவம்
ஐக்கிய அரபு நாடுகளில், ஏன் ? இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச ஓட்டுனர் உரிமம் செல்லாது!!!! அவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஓட்டுனர் பயிற்சி வகுப்புகளும், தேர்வுகளும் ? ஒரு அமெரிக்கனோ, ஐரோப்பியனோ, பிரிட்டோ ,ஆஸ்திரேலியனோ, சவுத் ஆப்ரிக்கனோ ஏர்போர்டில் இறங்கியவுடன் ரென்ட கார் (rent a car) எடுத்து தங்கள் வீடோ, ஓட்டலோ, அலுவலகமோ போகின்றனர். ஆனால் நாம்? டாக்சி தான் பிடிக்கணும். கண்ணிருந்தும் குருடன் கதை தான்...
ஐக்கிய அரபு நாடுகளில் வாகன ஓட்டுனர் உரிமம் எடுப்பது,கிழக்காசிய நாடுக்காரர்களான நமக்கெல்லாம் சிம்ம சொப்பனமே.!!! யாராலும் தேர்ச்சி அடைய முடியாத விதிமுறைகள். அதிர்ஷ்டம் வேண்டும் .தேர்வுகளில் .ஒழுக்கம் .நிதானம்,பொறுமை ,கவனம் மற்றும் விதிகளுக்கு கீழ்படிதல் வேண்டும் .ஏன் இந்த பாரபட்சம் என தெரியுமா?கீழே படியுங்கள்.
இப்படி உரிமத்துக்கு விண்ணப்பித்து ஆறுமுறை ஃபெயில் ஆகிய அன்பர் ஒருவர்.பொறுமை எல்லை மீறவே காவல்துறை உயரதிகாரியிடம் சென்று இந்தியர் மற்றும் எங்கள் அண்டை நாடுகள் என்ன அவ்வளவு கேவலமா? நாங்கள் நன்கு வாகனம் ஒட்டுவதில்லையா? அல்லது எங்கள் நாட்டில் நாங்கள் மாட்டு வண்டி ஒட்டுகிறோமா? ஏன் எங்கள் உரிமங்களை மதிக்க மாட்டேன் என்கிறீர்கள்? இத்தனை முறை ஏன் என்னை ஃபெயில் ஆக்க வேண்டும்?!!!என கொதித்தார்.
மேலும் நான் இண்டர்நேஷனல் உரிமம் வைத்துள்ளேன். இந்தியாவில் பத்து வருடங்கள் கார் ஒட்டியுள்ளேன். என்னை ஏன் உங்கள் தேர்வு அதிகாரிகள் ஆறு முறை பெயிலாக்கவேண்டும்? இதில் என்ன அரசியல் உள்ளது? என புலம்பினார்.
அதற்கு அந்த காவல்துறை உயரதிகாரி, அமைதியாக, உங்கள் எல்லா உரிம ,சான்றிதழ்களின் நகல்களையும் எனக்கு கொடுத்து செல்லுங்கள். நான் உங்களுக்கு இதற்கான பதிலை திங்கள் அன்று சொல்கிறேன் என்று சுலைமானி கொடுத்து உபசரித்து அனுப்புகிறார். திங்கள் அன்று அன்பர் மீண்டும் அந்த அதிகாரியை காண அலுவலகம் செல்ல. அரைமணி நேரம் அமரவைக்கப்படுகிறார்.
பெயர் அழைக்கப்படுகிறது. உள்ளே சென்ற இவரை எதிர்நோக்கிய அதிகாரி, உங்கள் நாட்டில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறதா? லேன் டிசிப்பிளின் என்னும் கொள்கை எல்லா சாலைகளிலும் பின்பற்றப்படுகிறதா? சாலை பாதுகாப்பை ஒரு பொருட்டாகத்தான் மதிக்கிறீர்களா?!!!!......................அறவே இல்லை.
என்று கேட்டவர்,கோபமாக ஒரு ப்ரவுன் கவரை தூக்கி அவர் முன் போட்டு பிரிக்க சொல்கிறார். பாருங்கள் உங்கள் நாட்டிலிருந்து உங்களுக்கு வேறொரு மாநிலத்தில் ஏஜெண்டு மூலமாக வெறும் 150 திர்காம் தந்து இண்டர்நேஷனல் உரிமம் மீண்டும் உங்கள் பெயரிலேயே எடுத்துள்ளேன்.அதற்கு எந்த ஆவனமும் தரவில்லை, வெறும், உங்கள்,மற்றும் தந்தை பெயரும் உங்கள் பிறந்த தேதியும் மட்டுமே தரப்பட்டது.அப்படி அழகாய் உள்ளது உங்கள் சட்டம் ஒழுங்கு.
என்ன?, சென்னை காரரான நீங்கள் இதில் ராஜஸ்தானில் வசிப்பதாக உள்ளது என்கிறார். உரிமம் பெறும் நபர் எந்த தேர்வோ,சோதனையோ இல்லாமல் ஓட்டுனர் உரிமம் பெறும் அவலம் உங்கள் நாடுகளில் நிதர்சனம். நாங்கள் வங்க தேசத்து, இலங்கை,பாகிஸ்தான் உரிமமாயிருந்தால் வெறும் 75 திர்காம் கொடுத்து பெற்றிருப்போம். இறந்தவர்களுக்கு கூட உரிமம் வழங்கும் கூத்தும் நடக்கிறது உங்கள் நாடுகளில். இப்படி ஒரு சூழலிலிருந்து வந்துவிட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்களிடம் கோபமாய் கேள்வி கேட்கிறீர்கள்?
இங்கு நாங்கள் சட்டத்தையும்,போக்குவரத்து விதியையும் மதித்து தான் நடப்போம்.இஷ்டமிருந்தால் கீழ்படியுங்கள், இல்லையென்றால் பேருந்தில், டாக்ஸியில் செல்லுங்கள் என்றவர் , பின்னர் கண்டிப்பான குரலில் , நீங்கள் அந்த 150 திர்காமை கட்டிவிட்டு இங்கிருந்து செல்லலாம். என்கிறார்.
நம்மாள் முகத்தில் ஈ ஆடவில்லை. பணத்தை கட்டிவிட்டு தீவிரமாக உழைத்து அடுத்த தேர்விலேயே உரிமம் எடுத்தார். அந்த அதிகாரியையும் நேரில் சென்று இனிப்பு தந்து நன்றி சொன்னார். இப்போது தெரிகிறதா? ஏன் அரபு நாடுகள் சட்டத்தை ,விதிமுறைகளை மாதாமாதம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று? நம் மற்றும் நம் அண்டை நாட்டு பிராடுகளிடமிருந்தும் , மற்ற ஒருசில ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் தங்கள் நாட்டை காப்பாற்றவே.!!! இதை எழுதும் எனக்கு இது நியாயமாகவே படுகிறது. என்னை எம்ப்ளாய்மென்ட் விசாவுக்காக எவ்வளவோ சோதனை செய்துள்ளனர்.செல்லாது செல்லாது , ரூல்ஸ் மாறிவிட்டது என சோதித்துள்ளனர். ஆனால் எனக்கு இந்த கதையை கேட்டவுடன் இவர்களின் செய்கைக்கு கோபமே வருவதில்லை.மாறாக பாராட்டவே தோன்றுகிறது.
அவ்வளவு ஏன்?இங்கே பணிபுரியும் நேர்மையான,ஒழுங்கான ஆண்கள் கூட சொந்த மனைவியையும் மகளையும் உள்ளே அழைக்க எவ்வளவு கெடுபிடிகள், எத்தனை சான்றிதழ்கள், அட்டஸ்டேஷன்கள்? சரிபார்ப்புகள், அலைச்சல்கள் !!! இவை இல்லை என்றால் நிறைய ஒழுக்கமற்ற விபச்சார புரோக்கர்கள் பெண்களை, மனைவி, சகோதரி, போன்ற போர்வையில் எளிதாக விசிட் விசாவில் கூட்டி வந்து அநியாயத்துக்கு விபச்சாரம் செய்கின்றனர். பணம் காய்ச்சி மரமாக இந்த நாட்டை இவர்கள் மாற்றாமல் இருக்கவே இந்த சட்டங்கள் என புரிந்த பின்னர் எனக்கு கோபமே வருவதில்லை. வெல்டன் ஆஃபீஸர்ஸ். ரோமில் ரோமனாய் இரு.
============0000=============