சாரு நிவேதிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாரு நிவேதிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாரு பற்றி நினைவு நாடாக்கள் தொடரில் கவிஞர் வாலி மனம் திறந்தவை!!!

அருமை நண்பர்களே!!!
இதை நான் எப்படி தவறவிட்டேன் ?!!! என்று தெரியவில்லை, கீழ் வருபவை  சாரு பற்றி ஆனந்தவிகடன் , நினைவு நாடாக்கள்  -19 வது அத்தியாயத் தொடரில் கவிஞர் வாலி மனம் திறந்தவை!!! என்னைப் போல இதை தவற விட்டவர்களுக்காக   இங்கே பகிர்ந்திருக்கிறேன். தமிழகத்தில் சமகால இலக்கியவாதிகளை, கலைஞர்களை யாரும் இது போல மனம் திறந்து பாராட்டமாட்டார்கள், அந்த வகையில்  இது அதிசய நிகழ்வே!!! சாரு மெய்யாகவே சாதித்திருப்பதால் தான் வாலியிடமிருந்து இந்த ஏகோபித்த பாராட்டுக்கள் சாத்தியமாகியுள்ளது !!! இது கருணாநிதிக்கு அநேக பேரால் வேண்டாவெறுப்பாக கிடைக்கும் முறைவாசல், பதில் மொய் , வகைப் பாராட்டுக்கள் அல்ல.

வாலியின் விகடன் கட்டுரை பற்றி யாருமே அதிகம் கண்டுகொள்ளாத நிலையில் சாரு இப்படி எழுதுகிறார். 
வாலி ஆனந்த விகடனில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த ஆனந்தத்தில் அதைப் பற்றி சொல்வதற்காக மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் சென்றேன்.  இது போன்ற ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் கேட்டால் அல்பம் என்று நினைத்துக் கொள்வார் இல்லையா? அதனால் பல்வேறு அரசியல் விஷயங்களை அலசி விட்டு கடைசியில் எதேச்சையாகக் கேட்பது போல் விகடன் பார்த்தீர்களா என்று கேட்டேன்.  பார்த்தேனே என்றார் அசுவாரசியமாக.  அதற்கு மேல் எனக்கு எப்படி சுற்று வளைப்பது என்று தெரியாமல், வாலி என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்; படித்துப் பாருங்கள் என்றேன்.  உடனே ஆர்வமாக விகடனை எடுத்துப் படித்தார்.  படித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் பக்கத்தில் தூக்கிப் போட்டார்.  அதை செல்வி எடுத்துப் படித்தார்.  பிறகு ஏதோ பேசி விட்டுத் திரும்பி விட்டேன்.
போன இடத்தில் படுதோல்வியாகி விட்டதால் அவந்திகாவிடமாவது சொல்லலாம் என்று நினைத்தேன்.  அவள் ஆன்மீகம் தவிர வேறு எதுவுமே படிப்பதில்லை.  என்றாலும் இது விதி விலக்காக இருக்கட்டுமே என்று சொன்னேன்.  படித்தாள்.  படித்து விட்டு “என்ன பெரிய இது… உன் பெயரை ரெண்டு தடவைதானே எழுதியிருக்கிறார்?” என்று வருத்தத்துடன் கேட்டாள். அவள் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.  நான் ” அவர் என்ன என் பெயரை ஸ்ரீ ராமஜெயம் மாதிரியா எழுத முடியும்?” என்று கேட்டேன். அப்படியும் அவளுக்குப் புரியவில்லை.
இருப்பதே ஒன்றிரண்டு நண்பர்கள்.  மனைவியும் ஒரே மனைவி.  அவர்களும் இப்படி இருக்கிறார்கள்… எவ்வளவு சோகமான சூழலில் வாழ்கிறேன் பாருங்கள்?
பிறகு ஏதோ விஷயமாக மனுஷ்ய புத்திரன் எனக்கு போன் செய்த போது என் குரலில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்து என்ன என்று கேட்டார்.  நீங்கள்தான் விகடனைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே? என்றேன்.  அவர் அதற்கு சொன்ன பதில்: “சே, சே… அதை ஃப்ரேம் பண்ணித்தான் மாட்டலாம் என்று நினைத்தேன்.  செல்வி வந்ததால் படிக்கக் கொடுத்தேன்.”
 =====00000======
நினைவு நாடாக்கள் ஒரு Rewind...
உள்ளும் புறமும்!
நான் படித்ததில்லை; நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.சமீபத்தில்தான் என் நெருங்கிய நண்பர் திரு.கிருஷ்ணகுமார் கொண்டுவந்து என் முன் கொட்டினார் 'சாரு நிவேதிதா’வை! என்னை ஈர்த்தது அவர் எழுத்து; வசீகர நடை ஒருபுறமும், உலகளாவிய நுண்மாண் நுழைபுலமும் அவரெழுத்தில் விரவிக்கிடந்ததால் அல்ல.தன்னை, வரிக்கு வரி ஒரு திறந்த புத்தகமாகப் போட்டு - 'வாசி வாசி’ என்று வாசகனை வாசிக்கவைக்கும்...

அந்த மெய்ம்மை!!!! நான் பத்மஸ்ரீ வாங்கும்போது - என்னுடன் திரு.குஷ்வந்த் சிங் பத்ம விபூஷண் வாங்கினார்.அவர், illustrated Weekly-யில் இருந்த காலம் தொட்டு, அவர் எழுத்துகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். ஆசிரியராக இருந்தபோது எழுதியதைவிட - அவரது தனிப் படைப்புகள், ஒளிவு மறைவின்றி எதையும் ஒப்புவிக்கும். சுய விமர்சனங்களில் அவர் தன்னையே நடுமுள் நடுங்காத தராசில் அமர்த்தித் தன் எடையை அறிவிப்பார்! என்னளவில் ஒரு மானுடனின் உயர்ந்த பண்பு - Confession-தான்! கிறித்துவம் இதை ஏற்று பாவ விமோசனம் தருவதால், அந்த மதத்தினுடைய அளப்பருங் கருணை புலனாகிறது!

'குற்றம் புரிவாரைக்
கொடுநரகில் இடுவாயெனில் -
குற்றம் புரியாதார்
குவலயத்தில் யாருளரே?’

- இது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அற்புதமான பாடல்!...Sex - என்பது விஸ்வாமித்திரனே வழுக்கி விழுந்த இடம். எத்தகு விஸ்வாமித்திரன்?! வசிஷ்டரே, 'உன் மகனை அவனோடு அனுப்பு; அது உன் மகனுக்கு நலம் பயக்கும்!’ என்று -  தசரதனிடம் பேசும்படி தகவுகள் வாய்ந்த விஸ்வாமித்திரன். 'ஆவருந்தவத்தோன்!’ என்று கம்பனால் சுட்டப்பெற்ற அவன்தான் - மேனகையைக் கண்டதும், துவராடைகளைத் தூர எறிகிறான்! முனியாய் இருந்தாலென்ன; மூலக்கடை முனியாண்டியாய் இருந்தாலென்ன -மனிதன் பலவீனங்களால் ஆக்கப்பெற்றவனே; அதைப் பொத்திவைத்துத் தன்னைச் சுத்த சுயம்பிரகாசமாகக் காட்டிக்கொள்பவன் -

கண்ணதாசன் பாட்டு மாதிரி, 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவன்!’ Self Abuse எனப்படும் - Masturbation குரங்குகளிடம்கூட உண்டு; குரங்கிலிருந்து பிறந்த மனிதன், என்னணம் அதைத் தவிர்க்க ஏலும்? பிள்ளைப் பிராயத்தில் அதைப் பழகாதிருக்க - எவ்வுயிரையும் இயற்கை அனுமதிக்காது!.  ஓரினச் சேர்க்கையையே - இப்போது ஒவ்வாததல்ல என்று - இந்திரப் பிரஸ்தமே இயம்பிவிட்டது!  Gays are with gay now!...மேற்கண்ட விஷயங்களையெல்லாம் நான் இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் - சில தவறுகளை - அந்த அந்தப் பருவச் சூழல்களால் நேர்ந்தவற்றை - ஒப்புக்கொள்வது ஒரு புழுத்த சிந்தனையல்ல எனப் புரியவைக்கத்தான்!

நான் இந்த நினைவு நாடாக்களில் - கவிதா ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை - அதுவும் என்னைப் பற்றியதை ஒளிவு மறைவின்றி எழுதியதை -போற்றியோரும் உண்டு; தூற்றியோரும் உண்டு!என்னைச் சிலுவையில் நானே அறைந்துகொள்வதில், எவர்க்கென்ன வந்தது?  இன்று என் வயதுக்கும், எனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து -நான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உத்தமன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வது -  பித்தலாட்டத்தின் பிழிவாகும்.

இதனால்தான் - சாரு நிவேதிதாவின் எழுத்தில் உள்ள சத்திய தரிசனம், என்னை அவர்பால் மரியாதைகொள்ளச் செய்கிறது.புலனடக்கத்தைக் காவிகளே புறந்தள்ளிவிட்ட பிறகு - சராசரி மானுடன் அதனோடு சண்டை செய்து வெல்லல் சாத்தியமா?!!!! அறுபதனாயிரம் தசரதனுக்கு; அவன் மகனுக்கு, ஒன்றே ஒன்று.  இது எதைக் காட்டுகிறது? பலதாரப் பழக்கத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டது போல், ஓர் ஒருதாரப் பழக்கம் பரிணமித்திருக்கிறது என்பதைத்தானே! நம்முடைய பிழைகளே,  நம்முடைய நெறிகளுக்கு - நம்மை இட்டுச் செல்கின்றன!

திரு.கவிஞர் மாயவநாதனின் அற்புதமான பாட்டு இது:

'தப்பித்து வந்தானம்மா! - காலம்
கற்பித்த பாடத்தின் அடிதாங்க    
  முடியாமல்
தப்பித்து வந்தானம்மா!’

கொலை கொள்ளை பயின்ற வேடன், வால்மீகியானது இப்படித்தான்; திருடன், திருமங்கையாழ்வாராயானதும் இப்படித்தான்; கருப்புகழ் பாடியே காலங்கழித்தவன், திருப்புகழ் பாடுபவனாகக் கனிந்ததும் இப்படித்தான்; இதுபோல் அனேகம் சொல்லலாம்!  கண்ணதாசனும் நானும் - எங்களையே அழுக்குப் போகத் துவைத்துக் காயப் போட்டவர்கள்; தன்னையறிந்தவர்க்கே ஆன்மானுபூதி சித்திக்கும்!  இந்த அலைவரிசையிலேயே - சாரு நிவேதிதாவையும் வைத்துப் பார்க்குங்கால் - அவரது எழுத்து, ஒழுக்கத்தை ஓம்புகிறது எனலாம்!

'உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று பாடினான் -  தண்ணீரில் விளக்கெரித்துக் காட்டிய தவத்தோன்!  நெஞ்சுள் உள்ளது - நஞ்சாயினும், நறவம்ஆயினும், அதை வாய்வழி உமிழ்தலே வாய்மையாகும்!

பாண்டவர்கள் வனவாசம் புரிகையில் ஒருநாள் அசுரப் பசி; அடவி பூராவும் அலைந்தும் ஆகாரம் கிடைக்கவில்லை!ஒரே ஒரு மரத்தில் ஒரே ஒரு கனி, கிளையில் தொங்குவதைக் கண்டதும் - அதை உண்டு அனைவரும் ஓரளவு பசியாறலாம் என நினைத்து -யுதிஷ்டிரன், அதைப் பறிக்க யத்தனிக்கையில் -கண்ணன் வந்து தடுக்கிறான் - அந்தக் கனி ஆர் கைக்கும் அகப்படாது என்று!  'இத்துணை காலம் - உங்கள் இதயத்தின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் ஆசையை - நாகரிகம் கருதி வெளியே சொல்லாதிருக்கும் உண்மையை -எவர் உள்ளது உள்ளபடியே உரைக்கிறாரோ, அவருக்கே இந்தக் கனி கிட்டும்!’ என்கிறான் தேவகி மைந்தன்!

உள்ளத்தில் உள்ளதை உதட்டு வழி உமிழ ஒருவருக்கும் துணிவில்லாதபோது -ஐவரின் பத்தினியான பாஞ்சாலி - தன் உள்ளத்தில் வெகு காலமாக ஒளித்துவைத்திருக்கும் ஆசையைக் கூச்சமின்றிக் கூறுகிறாள்; கனி, அவள் கையில் விழுகிறது!'ஐவரின் மனைவியாய் இருந்தாலும், அந்தக் கர்ணனோடு ஒருநாள், பள்ளியறை புக வேண்டும் என்பதுதான் -என் நெடுநாள் ஏக்கம்!’  இப்படிச் சொன்ன, துரோபதியைத் தான் -போற்றப்பட வேண்டிய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாக, ஒரு வடமொழி ஸ்லோகம் வந்திக்கிறது!

'பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம்
மஹாபாதக நாசனம் -
அஹல்யா த்ரௌபதீசைவ
தாரா ஸீதா மண்டோதரீ!’

- சுழலும்...
நன்றி:- ஆனந்த விகடன்.

சரசம் சல்லாபம் சாமியார்-சாரு நிவேதிதா-உயிர்மை வெளியீடு

அருமை நண்பர்களே!!!

சாருவின் 'சரசம் சல்லாபம் சாமியார்' புத்தகம் தடை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இதுவரை படிக்காதவர்கள், அதனை வாங்கிப் படித்து, நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். ஏனெனில், தடை செய்யப்பட்டு விட்டால், அப்புத்தகம் இனிமேல் எங்கும் கிடைக்காது.  நூலகங்களிலும் படிக்கக் கிடைக்காது, மறு பதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.  

இந்த புத்தகம் படிக்கும் போதே நம் குடும்பத்தில் ஒருவர் இதுபோல ஆன்மீக காலிகுலாவின் ஆசிரமத்தில் மாட்டியிருந்தால் என்னாவா யிருக்கும்?!!! என்ற பதட்டம் ஆட்கொள்வதை தவிர்க்க இயலாது. அவ்வளவு நிஜமான சுவையான எழுத்து நடையைக் கொண்டது. ஆனால் இந்த உலகத்தில் யாரும் உண்மையை பேசவே கூடாதே? !!!! யாரையாவது விமர்சித்தால் கூட சார் போட்டு தானே விமர்சிக்க வேண்டும். ஐயகோ!!!

கேட் வின்ஸ்லேட் நடித்த ஹோலிஸ்மோக் என்னும் படம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஆஸ்திரேலிய இளம்பெண்  இந்திய போலி சாமியாரிடம் மாட்டிக்கொள்வாள், சாமியாரிணியும் ஆகிவிடுவாள். அவளை அவளின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று பகீரதபிரயத்தனம் செய்து டீ-ப்ரோக்ராமிங் கவுன்சிலிங் செய்வார்கள், அது எத்தனை கடினமானது?  கொடுமையானது? அவமானகரமானது? என்று படம் பார்த்தால் மட்டுமே ஒருவருக்கு புரியும். இந்திய போலிச் சாமியார்களால் ஆட்கொள்ளப்படும் வெளிநாட்டு இளம் பெண்களை திருத்துவதற்கே அமெரிக்காவில் நிறைய டீப்ரோக்காமர்கள் ஆஃபீஸ் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? !!!

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். என்ற மனுஷ்யபுத்திரனின்  பலம் வாய்ந்த மதிப்புரையைக் கொண்டிருக்கிறது

உலகில் மிகக்கொடியது எந்த வகையிலேனும் பிறரால் ஏமாற்றப்படுதலே ஆகும், ஆன்மீக பிராது நித்யானந்தன் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்டனர் என்றால் மிகையில்லை. சாமியார்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும்  காமக்களியாட்டங்கள், சாமியாரின்  ஊருக்கே உபதேசம் ரக  அபாயகரமான நிழல் நடவடிக்கைகள் . சொத்துக்குவிப்புகள்.

அவை அப்பாவி குடும்பஸ்தர்கள், மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகளது நம்பிக்கைகளை.வாழ்வில் எதிலும் நாட்டம் போய் நிம்மதி தொலைத்தவர்களின் அந்தரங்கங்களை வெகு ஆழமாய் காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு? சுய பச்சாதாபமுடையவர்களாக, மனப்பிறழ்வு  கொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக எடுத்தாண்டிருக்கிறார். இப் புத்தகம் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டுப்போய் விடக்கூடாது என்பதாலேயே அதைப்பற்றி  எழுத அவசரம் காட்டவில்லை. ஆனால் இந்த புத்தகம் ஆளும் கட்சியினரின் மிரட்டலின்  பேரில் மிகுந்த கெடுபிடிக்குள்ளாயிருக்கிறது .


தமிழில் மிக அபூர்வமான நெஞ்சுரத்துடன் எழுதப்பட்ட புத்தகம், கண்மூடித்தனமாக சாமியார்களின் மகுடிக்கு பாம்பாய் ஆடும் கார்பொரேட் பக்தர்களுக்கு இதை நான் பலமாய் சிபாரிசு செய்கிறேன். சாரு நித்தியானந்தனிடமிருந்து நிறைய பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு கொபச வேலை செய்தார் என்று பழி வந்தது, ஆனால் புத்தகம் படிக்கும் ஒருவருக்கு அது எவ்வளவு வடிகட்டிய பொய் என்று தெரியவரும்.

இந்த புத்தகம் படித்து முடித்த பின்னர் வாசித்தவருக்கு ஏற்படும் நித்தியின் மீதான் கொலைவெறி அடங்க நாளாகும், அவனுக்கு கால் கழுவிவிட கட்டணம் எவ்வளவு? அவனை வைத்து தங்கத்தேர்   இழுக்க கட்டணம் எவ்வளவு?அவன் ஆசிரமத்தில் சேர வாங்கப்படும் உறுதிமொழிப்பத்திரம் எவ்வளவு பயங்கரமானது? பிடதி ஆசிரமத்தில் விடிய விடியப் பாடப்படும் ? டாடி மம்மி வீட்டில் இல்லே,தடைபோட யாருமில்ல.? மெட்டிலமைந்த பிரச்சாரப்பாடல்களைப் பற்றிய அலசல்கள்.

அவன் பிரித்த குடும்பங்கள் எத்தனை? ஆசிரமத்துக்கு வரும் தம்பதிக்கு அவனின் ஆஸ்தான வழக்கறிஞர் வழக்காடி  விவாவகத்து வாங்கித்தர எவ்வளவு கட்டணம்? அவன் சாமியாரினியாக்கிய அழகிய, நன்கு படித்த பெண்கள் தான் எத்தனை? இதில் நித்தியானந்தன் தன் மோசடியை எப்படி துவங்கினான்? எப்படி நடிகைகளை வசமாக்கினான்?,

ஏன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின், பிடதியில் ஆசிரமம் துவங்கினான்? பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும் என ந்மக்கு தோன்றவைக்கும்.

சாருவின் மனைவி மற்றும் 300 பேர்,நித்தியானந்தனுடன் கும்பமேளாவுக்கு தலைக்கு 1லட்சம் கொடுத்து மாட்டிக்கொண்டது எப்படி? எல்லோரிடமும் ஓசியிலேயே ஓ** **** நித்தியானந்தனுக்கும் ,ஏனைய மகா அவதார் பாபாஜி, காசி மாநகரத்தின் அகோரிகள், சாய்பாபா,போன்ற மகான்கள் எப்படி வேறுபடுகின்றனர்?என்று அடி ஆணிவேரையே உருவி ஆராய்ந்திருக்கிறார். 

இது குமுதம் ரிப்போரில் வெளிவந்திருந்தாலும் தொகுப்பாக படிப்பதில் உள்ள சுகமே தனி, படிக்காத தொடர்களை அருமையாக தொடர்ச்சியாக படிக்க முடியும்.புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் இடையே நம் நண்பர் கருந்தேள் ராஜேஷைப்பற்றியும் அவரின் மனைவியை பிடதி ஆசிரமத்திலிருந்து மீட்க உதவியதாக மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.

எல்லவற்றிற்கும் மேலாக கடைசி 29வது அத்தியாயத்தில்  சாரு நித்தியானந்தனுக்கு முன்வைத்த 25 சாட்டையடி கேள்விகள், நித்தியானந்தனுக்கு நாக்கு என ஒன்றிருந்தால் அதைபிடுங்கிக்கொண்டு சாகட்டும், அவனை நடைபிணமாக்கும் இந்த சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம், இதற்கு யாரும் முன்னுரை எழுதாது என்பது மாபெரும் இழுக்கு, இதை ஆங்கிலத்தில் அதன் சாரம் கெட்டுப்போகாமல் மொழி பெயர்க்கவேண்டும் என்பதே என் அவா.நடக்குமா பார்ப்போம்?!!!!

இதை என் உறவினர்கள் அத்தனை பேருக்குமே சிபாரிசு செய்தேன், அத்தனை பேருமே அதை கண்கள் அகலக் கேட்டு நித்தியானந்தனை அஷ்டோத்திர கெட்டவார்த்தைகளால் திட்டி  மனதில் உள்ள பாரத்தை இறக்கினர், ஒரே புத்தகத்தை பல வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டிற்குள்  போட்டிப் போட்டு பறித்து படித்தோம் என்றால் அது இந்த புத்தகம் தான்.

இன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒரு ஆன்மீக பிராதுவை விமர்சித்து  இவ்வளவு ட்ரான்ஸ்பிரன்ஸியாக அதுவும் ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே, சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதை மிகுந்த நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பதிப்பித்த கவிஞர், மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வெளியீட்டிற்கு மிக்க நன்றிகள்.புத்தகம் விலை-ரூ85

எழுத்து சுதந்திரம் இல்லா ஜனநாயகம் ஒரு போலி ஜனநாயகம்?!!!
======00000=======

சென்னையில் ஓர் குளிர்காலம்!!!

அருமை நண்பர்களே!!!

நலம் தானே? இங்குதான் சென்னையில் விடுமுறைக்கு வந்துள்ளேன்,வேலையில் கூட நான் இத்தனை பிஸியாக இருந்ததில்லை, விடுமுறைக்கு வந்ததில் இருந்தே ஓயாத அலைச்சல்தான்.மதுரை சென்று வந்தேன், திருப்பத்தூர் சென்று வந்தேன்,ஹைதராபாத் சென்றுவந்தேன், சேலம் இன்று போகிறேன், இந்தமுறை 34நாட்கள் மொத்தம் விடுப்பு கிடைத்தது,மிகவும் அதிசயம்,எப்போதும் 2வாரம் மட்டுமே அதிகபட்சம் விடுமுறை தந்து அனுப்பும் நிர்வாகம் அதிசயமாக ஜனவரிக்குள் 2010 ஆண்டிற்கான விடுமுறையை செலவழிக்க சொல்லியது.எப்போதும் கடும் வெயிலில் விடுமுறைக்கு வந்து மாட்டிக்கொள்பவன் இந்தமுறை கடும்குளிரில் மாட்டிக்கொண்டேன், ஹைதராபாத் குளிர் வேறு ஆளையே புரட்டிப்போட்டது,கடும் இருமல் ஜலதோசம் ஆட்கொண்டது, ஜனவரி நான்காம் தேதி வரை விடுமுறை இன்னும் இருக்கிறது,

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு,சாருவின் 7புத்தகங்களையும் வாங்கினேன்,கனவுகளின் நடனம் என்னும் ஒரு புத்தகத்தில் அவர் கையெழுத்த்தும் போட்டு தந்தார்.அங்கே வைத்து நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் ராஜேஷையும் சந்தித்தேன்,மிகவும் மகிழ்ச்சியளித்தது,ஆயினும் சரியாக பேசமுடியாதபடிக்கு அவர் அவசர செல்போன் அழைப்பில் ஆழ்ந்துவிட்டார்,நண்பன் மயில்ராவணன்,அண்ணன் ஜாக்கி,அண்ணன் மணிஜி,தல கேபிள் சங்கர்,வண்ணத்துபூச்ச்சியார் என்று இன்னும் பல பதிவர்களை சந்திக்க முடிந்தது,காமராஜர் அரங்கில் சுமார் 900 இருக்கைகள் நிரம்பியிருந்தது,இதுபோல எந்த எழுத்தாளருக்கும் தமிழகத்தில் கூட்டம் திரண்டிருக்காது என்றே நினைக்கிறேன்.மயில் ராவணன் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டார்.வரும் வாரம் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவேண்டும்.

ஹைதராபாத் ரயில் பயணத்தில் வைத்து சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் என்னும் ஆன்மீக பிராது நித்தியானந்தன் பற்றிய புத்தகம் படித்தேன்,சும்மா சொல்லக்கூடாது,மிக அருமையான புத்தகம்,தேகம் படித்து மகா ஏமாற்றம் அடைந்திருந்த எனக்கும் அருமருந்தாயமைந்தது.புத்தகம் படித்து முடித்தபின்னர் வாசித்தவருக்கு ஏற்படும் நித்தியின் மீதான் கொலைவெறி அடங்க நாளாகும்,அவன் பிரித்த குடும்பங்கள் எத்தனை?சாமியாரினியாக்கிய பெண்கள் எத்தனை?பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும்.இதை என் உறவினர்கள் அத்தனை பேருக்குமே சிபாரிசு செய்தேன்,அத்தனை பேருமே அதை கண்கள் விரிய கேட்டு நித்தியானந்தனை 1008 அஷ்டோத்திர கெட்டவார்த்தைகளால் திட்டி  மனதில் உள்ள பாரத்தை இறக்கினோம்,
 
இன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒருவரை விமரசித்து ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே,சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதில் நித்தியானந்தன் தன் மோசடியை எப்படி துவங்கினான்?எப்படி நடிகைகளை வசமாக்கினான்?,ஏன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின்,பிடதியில் ஆசிரமம் துவங்கினான்?,அவரின் மனைவி மற்றும் 300 பேர்,நித்தியானந்தனுடன் கும்பமேளாவுக்கு தலைக்கு 1லட்சம் கொடுத்து மாட்டிக்கொண்டது எப்படி?நித்தியானந்தனுக்கும் ,ஏனைய மகா அவதார் பாபாஜி, காசி மாநகரத்தின் அகோரிகள், சாய்பாபா,போன்ற மகான்கள் எப்படி வேறுபடுகின்றனர்?என்று அடி ஆணிவேரையே உருவி ஆராய்ந்திருக்கிறார். இது குமுதம் ரிப்போரில் வெளிவந்திருந்தாலும் தொகுப்பாக படிப்பதில் உள்ள சுகமே தனி,படிக்காத தொடர்களை அருமையாக தொடர்ச்சியாக படிக்க முடியும்.புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் இடையே நம் நண்பர் கருந்தேள் ராஜேஷைப்பற்றியும் அவரின் மனைவியை பிடதி ஆசிரமத்திலிருந்து மீட்க உதவியதாக மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.

எல்லவற்றிற்கும் மேலாக கடைசி 29வது அத்தியாயத்தில் அவர் நித்தியானந்தனுக்கு முன்வைத்த 25 சாட்டையடி கேள்விகள், நித்தியானந்தனுக்கு நாக்கு என ஒன்றிருந்தால் அதைபிடுங்கிக்கொண்டு சாகட்டும், அவனை நடைபிணமாக்கும் இந்த சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம்,இதற்கு யாரும் முன்னுரை எழுதாது என்பது மாபெரும் துயரம், இதை ஆங்கிலத்தில் அதன் சாரம் கெட்டுப்போகாமல் மொழிபெயர்க்கவேண்டும் என்பதே என் அவா.நடக்குமா பார்ப்போம்?

இன்று இரவு சேலம் செல்கிறேன்,தேகம் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்,நான் இதுவரை சாருவின் எந்த புதினத்தையும் படித்ததில்லை,இது வேறு ஆட்டோஃபிக்‌ஷன் என்னும் வகை என்று சாரு சொல்கிறார்.முதன் முறை வாசித்ததில் இது சரோஜாதேவிக்கதை அல்ல என்று மட்டும் உணரமுடிந்தது,மிஷ்கின் இதை சரோஜாதேவி கதை என்று எப்படி ?உளரிக்கொட்டினார் என அறியேன்.

தேகம் புத்தகம் இலைமறைவு காய்மறைவாய் பேசும்,படிக்கும்,எழுதும் வெகுஜன வாசகர்களுக்கானது அல்ல,வீட்டில் வெளியில் கூட வைக்க முடியாதது,படித்தபின்னர் கூட யாராவது ஒத்த சிந்தனை உடைய நண்பருக்கு பரிசளித்துவிடவேண்டியது, இதில் எதுவுமே ஒளிவு மறைவில்லை,புட்டத்தை குண்டி என்றே சொல்கிறார்,விந்து,இந்திரியம்,ஸ்கலிதம் என்று தினத்தந்தியில் படித்ததை கொச்சையாக கஞ்சி என்றே சொல்கிறார்.தவிர ஆங்கில கலைச்சொற்களான கேட்டமைட்,சோடமைட்,குப்பியடித்தல்,குப்பி கொடுத்தல்,நாக்கில் இரும்பு குண்டுமணி மாட்டுவது எப்படி? ஆண்குறியில் வரிசையாக வளையங்கள் மாட்டுவது எப்படி?சென்னையில் உள்ள நவீன பார்கள் பற்றி என கலந்துகட்டி எழுதியிருக்கிறார், இதை ஆறு நாட்களில் எழுதியதாக படித்தேன், அதற்கான சத்து தான் தேகத்தில் இருந்தது. எனக்கு இந்த சிறு புதினம் தேகம் அவ்வளவாக தாக்கத்தை உண்டுபண்ணவில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.விரிவாக மீள்வாசித்தபின்னர் சந்தர்ப்பம்  கிடைப்பின் எழுதுவேன்,
 
அருமை நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டியிருப்பின் 09840419602வில் 4 ஆம் தேதிவரை பேசலாம், புகைப்படங்களை விரைவில் பகிர்கிறேன்.நன்றி

======0000======

கர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி? !!!

அருமை நண்பர்களே!!!
இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாருவின் மனம்கொத்திப்பறவை-13 ஆவது அத்தியாயமாக முழுக்க கர்நாடக இசைக்காக அற்பணிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நான் மிகவும் ரசித்த பத்தி |கர்நாடக இசைக் கச்சேரியில் தொடையில் தாளம் போடுவது எப்படி ?| என்பது தான் , சாரு அதை மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளார். இதை உங்களுக்கும் பகிரத்தோன்றியதால் பகிர்ந்தேன்.[நன்றி ஆனந்த விகடன்+கருந்தேள்]

சினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.

தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) உலக சினிமாபார்வை (269) தமிழ் சினிமா (261) ஆஸ்கர் (223) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (18) இலக்கியம் (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)