பாரிஸ்,டெக்ஸாஸ்[Paris, Texas][அமெரிக்கா][1984]

ரோட் மூவீஸ் என சொல்லப்படும் வகையான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மக்களின் மொழியை,வாழ்வை, சுற்றுச்சூழலை, கலாச்சாரங்களை சாலை வழியே  பயணித்து செல்லுலாய்டில் பதிவு செய்வதில் மிக முக்கிய பங்கு ரோட் மூவி ஜெனர்களுக்கு உண்டு,

ந்தியாவின் சிறந்த ரோட் மூவியாக அன்பே சிவத்தை சொல்வேன். இப்போது ஹிந்தியில் வெளிவந்த தேவ் பெனகலின் ரோட். மூவியும் ஒரு நல்ல உதாரணம். உலகின் சிறந்த ரோட் மூவிகளாக ப்லேன்ஸ்,ட்ரெய்ன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ், தெல்மா &லூயிஸ், த ட்ரான்ஸ்போர்டர் த லாஸ்ட் ரைட்,லிட்டில் மிஸ் சன்ஷைன்,த ட்ரூஸ் - முக்கியமாக பாரீஸ் , டெக்ஸாஸ் ஐ சொல்வேன்.

பாரீஸ் டெக்ஸாஸ் விம் வேண்டர்ஸ் என்னும் கைதேர்ந்த உலக-சினிமா இயக்குனரின் சிறந்த கல்ட் க்ளாஸிக் போர்ட் ஃபோலியோ என சொல்லப்படுகிறது  , இவர் படிப்பால் டாக்டர், ஆனால் சினிமாவின் மீதான காதலால் இயக்கத்தை உயிரினும் மேலாய் சுவாசித்து படங்கள் தருகிறார். இவர் பிறப்பால் ஜெர்மானியர் என்றாலும் உயிரோட்டமான அமெரிக்க படங்களைப் படைத்துள்ளார், எண்ணற்ற அமெரிக்க பேரலல் சினிமா ரசிகர்களையும் உலக சினிமா காதலர்களையும் கொண்டுள்ளார். 

வர் படங்களில் பெரிய நடிகர்கள் இருக்க மாட்டார்கள்,ஆனால் இவரின் அறிமுகங்களிடம் பெரிய நடிகர்களே,பாடம் கற்கலாம்,அப்படி இருக்கும் இவரின் ட்ரெய்னிங்கும், டெடிகேஷனும். ஒவ்வொரு ஃப்ரேமையும் பெர்ஃபெக்‌ஷனாய் செதுக்கும் சிற்பி = வி ம் வே ண் ட ர் ஸ்.

ளர்ந்த நாடுகளில் தான் எப்படியெல்லாம்? பொழுது போக்க வழியிருக்கிறது!
சூதாட காஸினோக்கள், பார்கள், காமெடி ரொட்டின் பேச்சாளர் பேசும் உணவகங்கள் , கேளிக்கை விடுதிகள், எல்லா வகை சினிமாக்கள், பூங்காக்கள், கே-பப் எனப்படும் ஓரினச்சேர்க்கையாளர் விடுதிகள், ஸ்ட்ரிப் டீஸ் பார்லர்கள்,  செக்ஸ் டாய் கடைகள், விபச்சார விடுதிகள், செக்ஸ் படம் பார்க்க தனி பார்லர்கள்,மாலை நேரம் கிராக்கி பிடிக்கும் சாலையோர விலைமாதுக்கள் என எத்தனையோ வழிகள். 

ந்த படத்தில் நாம் பார்க்கப்போவது பீப்ஹோல் பார்லர்கள் எனப்படும். தீண்டாமை விபச்சாரம் , அதை இயக்குனர் விம் வாண்டர்ஸ் இந்த படத்தின் ஃப்ரேமுக்குள் கொண்டு வந்த விதமும், டீடெய்லும், பாத்திரப்படைப்பும், படத்தின் கடைசி வரை நம்மை அமர வைத்த சஸ்பென்ஸும், அட!!!! என  வயிற்றில் இனம் புரியா கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. இத்தனைக்கும் எங்கும் கத்தியில்லை, ரத்தமில்லை.பக்கம் பக்கமாய் வசனமில்லை,சோகமும் பிழியவில்லை.1980 களின் நோஸ்டால்ஜியாக்களை இப்படம் ஒவ்வொரு அமெரிக்கவாசிக்கும் தரவல்லது,

படத்தின் கதை:-

ணர்வுரீதியாக மனதில் வெற்றிடம் ஏற்பட்டு எதைத்தேடி போகிறோம்? என்றே தெரியாத 40 வயது ட்ராவிஸ் [ஹாரி டீன் ஸ்டாண்டன்], சிகப்பு பேஸ்பால் தொப்பி, ஒரு அழுக்கு ஓவர்கோட், சூட் , டை அணிந்து நான்கு ஆண்டுகளாக அசுரத்தனமாக நடக்கிறார். ஓரிடத்தில் வெயில் கொடுமையால் பாருக்குள் நுழைந்தவர், ஐஸ் கட்டிகளை தின்றுவிட்டு விழுந்து மயங்குகிறார்,

ருத்துவமனையில் இவரை சோதித்த டாக்டர் இவர் பையில் இருந்த கசங்கிய விலாச அட்டைவைத்து இவர் தம்பிக்குஅழைத்து பேச,   தம்பி வால்டுக்கோ [டீன் ஸ்டாக்வெல் ] ஆனந்தம்,  அவரின் அன்பான மனைவி ஆனியிடம்   [அரோர் கிலிமெண்ட்] விடயம் சொல்லி இறந்துபோனதாய் தான் நினைத்த அண்ணனைத்தேடி விமானம் ஏறி, பக்கத்து நகரில் இருந்து டெக்ஸாஸ் பாலைவனத்துக்கு, காரை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்,

ண்ணனின் இருப்பிடம் சென்றவர்,விடியலில் மயங்கி எழுந்த  அண்ணன் யாரிடமும் சொல்லாமல் போய்விட்டதை அறிகிறார்,டாக்டருக்கு  ஃபீஸை தந்துவிட்டு ,பாலைவனத்திலேயே தளராமல் காரில் சென்று தேட, அண்ணன் சித்தாந்தத்தால் உந்தப்பட்டவன் போல வெறிகொண்டு எங்கோ நோக்கி நடப்பதை பார்த்து,கெஞ்சி கூத்தாடி காரில் எற்றி கதவடைத்து,அண்ணனை மோட்டலுக்கு கூட்டிப்போகிறார்.

ழியில் இவர் சாதுர்யமாக பின்சீட்டில் கோழிபோல உடம்பை குறுக்கிக்கொண்டு இருக்கும் அண்ணணிடம் என்னகேட்டாலும் பதிலில்லை, அவருக்கு பேச்சு போய்விட்டதோ?செவிடா? அண்ணனை விட 15 வயது இளைய அண்ணிக்கு என்ன ஆனது?  என்ன அற்புதமான ஜோடிப்பொருத்தம்!!! என்று அனைவரும் வியந்தது!! இப்படியா ஆகவேண்டும்? அண்ணன் ஒரு சந்தேகப்பேர்வழி என தெரியும், அண்ணியை கொன்றிருப்பாரோ? எது கேட்டாலும் மௌனமாயிருக்காரே? அறையலாம் போலிருக்கே,அண்ணி நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்து அவர்களின் ஆசைமகன் ஹண்டரை விட்டிச்சென்றவள் என்ன ஆனாள்? அண்ணனுக்கு தெரியுமா?அண்ணன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

மோட்டலில் அண்ணனை தங்க வைத்துவிட்டு, பக்கத்து துணிக்கடையில் போய் அண்ணனுக்கு அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜீன்ஸ்,சர்ட்,புதிய தொப்பி,பூட்ஸுகள் வாங்கிவந்து பார்த்தால் கதவு திறந்துபோட்டு ஆள் எஸ்கேப், குழப்பத்தில் மறுபடியும் அலைந்து திரிந்தால்,தொலைவில் ரயில் போக அதே பாதையில் மராத்தான் ஓட்டம் ஓடும் அண்ணன்,இவர் ஓடிப்போய் , கெஞ்சி,கூத்தாடி, தரதரவென இழுத்து வந்து காரிலேற்றி கதவும் சார்த்தியாகிவிட்டது.அப்பா!!!

விமானம் ஏறும் போதா? அண்ணன் இப்படி முரண்டுபிடிக்கனும்? சின்னக்குழந்தை மாதிரி ,விமானத்தில் எல்லோரும் வால்டை செம திட்டு திட்ட, லாஸ் ஏஞ்சலஸுக்கா  கார் பயணமா? ஐயகோ 2 நாள் ஆகுமே, தொடர்ந்து ஓட்டனும், கொலைவெறி இருந்தாலும் அண்ணன் அவிழ்க்கப்போகும் புதிர் முடிச்சுக்காக பொறுத்த வால்ட் பொறுமை எல்லை மீறவும்!!!,எதாவது பேசேன் ,என சீறுகிறார் ,படம் ஆரம்பித்து 25ஆம் நிமிடம் பாரீஸ் என ட்ராவிஸ் மெதுவாக வாய் திறக்கிறார்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பாரீஸ் டெக்ஸாஸில் இடம் வாங்கியவர் அதை ஒரு போலராய்டு போட்டொவில் உள்ள ஹோர்டிங்கின் வாசகத்தை வைத்து தேடுகிறாராம்., மனைவியைப் பற்றி மனிதர் வாயே திறக்கவில்லை, பழைய வேலை, இவரின் கார், இவரின் மகன் எது பற்றியும் குசலம் விசாரிக்கவில்லை, எதோ புதிதாய் பிறந்தவர் போல இருக்கிறார்.தம்பி வால்ட் அண்ணனிடம் தான் சாலையோரம் உள்ள பெரிய ஹோர்டிங்குளில் உள்ள விளம்பர காண்ட்ராக்டுகள் எடுத்து செய்வதாய் சொல்கிறார்,இவர்,எனக்கு அவற்றில் சில மிகவும் பிடிக்கும் என்கிறார்.இருவரும் மொஜாவி பாலைவனம் வழியே சாலையில் பயணிக்கின்றனர். பசிக்கு உணவருந்தி, மோட்டலில் தங்கி மீண்டும் பயணிக்கின்றனர்.


ரவில் வீட்டுக்கு வந்தவர்,மகனிடம் அறிமுகப்படுத்தப்பட, மகன் ஹண்டர் கோபத்தில் சரியாய் பேசாமல் ஹை என்கிறான்.இவர் வீட்டில் சும்மா இல்லாமல் எல்லோரின் பூட்ஸுகளுக்கும் பளபளவென பாலீஷ் போட்டு வைக்கிறார், பாத்திரம் கழுவுகிறார். மிக வசதியான வீடு, தொலைவில் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்போர்ட் வேறு.அங்கே சென்று விமானங்களை வேடிக்கை பார்க்கிறார். புதிய இடம்,உடை,மக்கள்,அன்பான மைத்துனி ஆனி ,இவரின் மகன் 7 வயது ஹண்டர் என குற்ற உணர்வு நீங்கி தலையை நிமிர்ந்து பார்க்கிறார்.

கன் ஹண்டர் தன் அப்பாவையும் அம்மாவையும் 8எம் எம் வீடியோ டேப்பில் பார்த்து வளர்ந்தவன், இருவர் மீதும் அப்படி ஒரு பாசத்தை வைத்துள்ளான், என்ன தான் சித்தப்பாவும் சித்தியும்,தாலாட்டி சீராட்டினாலும்,சிறுவயதிலேயே பெற்றோரை பிரிந்த துக்கம் அவனுக்கு அதிகம் உண்டு. அப்பாவிடம் மெல்ல நெருங்குகிறான்.ஒரு விடுமுறை நாளில் எல்லோரும் குழுமியிருக்க, இவர்கள் சுற்றுலா போன அந்த 8எம் எம் டேப்பை ப்ரொஜெக்டரில் தம்பி ஓட்ட, அண்ணன் ட்ராவிஸ்கு மனைவியை  அதில் கண்டவுடன் கண்கள் கலங்குகிறது, மகனை ஆறத்தழுவிக்கொள்கிறார். இவர் மனதில் ஏற்பட்ட வெற்றிடத்தால் மகனிடம் எப்படி பாசத்தை வெளிப்படுத்துவது?!!!, அவனிடம் எப்படி ஒரு பொறுப்பான தந்தையாக நடந்துகொள்வது ?!!! என நிறைய யோசிக்கிறார், வீட்டு பணிப்பெண்ணும் நிறைய டிப்ஸுகள் தர அதை பின்பற்றுகிறார், தம்பியிடமிருந்து கோட்டு சூட்டுகள், தொப்பி, லாங் பூட்சுகள் கடன் வாங்கி போட்டுக்கொண்டு ஒயிலாகப் போய் மகனை பள்ளியில் இருந்து கூட்டி வருகிறார்.

சைமகனும் அப்பாவும் வாழ்வில் ஒன்று சேர்ந்துவிட்டனர்,அம்மா? !!! அம்மாவை மகனும்,ட்ராவிஸும் மறக்கவில்லை.இதற்கிடையே தம்பிக்கும் அவனின் மனைவிக்கும் பதட்டம் உருவாகிறது,பிள்ளையில்லாத இவர்கள்  ஹண்டரை சொந்த மகனாகவே வளர்த்துவிட்ட நிலையில் அண்ணன் வந்து அவனை அழைத்தால் அவன் போய்விடுவதா?என்று,

ம்பியின் மனைவி ஆனி, இவரை தனிமையில் சந்தித்து,  4 வருடங்களுக்கு முன் ஹண்டரின் அம்மா  ஜெனி [நடாஷ்ஜா கின்ஸ்கி] ஒரு விடியலில் ஹண்டரை[ஹண்டர் கார்சன்] ஒப்படைத்துவிட்டு,கேள்விகள் எதுவும் கேட்கக்கூடாது என சொல்லிவிட்டு, எக்காரணம் கொண்டும் ட்ராவிஸிடம் ஹண்டரை ஒப்படைக்க கூடாது என சென்று விட்டாள் என்றும்.

தன் பின்னர்,ஒவ்வொரு மாதம் ஐந்தாம் தேதியும் ஹண்டரின் பேரில் அவள் திறந்த சேமிப்பு கணக்கில் குறைந்தது 5 டாலர் முதல் அதிகபட்சம் 100 டாலர் வரை போட்டும் வருகிறாள், அது என்ன வங்கி கிளை? என அறிந்து சொல்கிறேன், இவர் விரும்பினால் அவளை சென்று சந்திக்க வேண்டும் என்கிறாள். தான் விபரம் தந்ததாய் சொல்லக்கூடாது என்கிறாள்.

றுநாளே,தம்பியிடம் மனைவியை தேடிப்போவதாய் சொல்லிவிட்டு,இவர் தம்பியிடமிருந்த பிக்கப் காரை எடுத்துக்கொண்டு , மகன் பள்ளி விட்டதும், அவனிடம் சொன்னவர், மகனும் வருவேன் என அடம் பிடிக்க, அவனையும் அழைத்துக்கொண்டு ஹூஸ்டன் என்னும் நகர் நோக்கி பயணம் தொடங்குகின்றனர். என்ன ஒரு பாசப்பிணைப்பான காட்சிகள் இனி,?!!!

யணத்தினூடே வாக்கி டாக்கிகள், டிஷர்டுகள், டூத் ப்ரஷுகள், உணவு, பானங்கள் வாங்கிக் கொள்கின்றனர்.  மகன் தூங்கி விழ அவனை அழகாக தன் சீட்டிலேயே வைத்து இடுக்கிகொண்டு கார் ஓட்டும் அந்த காட்சியும், மகன் இவருக்கு தான் பள்ளியில் கற்றுக்கொண்ட விடயங்களைப்பகிர அவற்றை ஆவென வாய் பிளந்து கேட்டுக்கொள்ளும் ட்ராவிஸ்,என்ன ஒரு இயல்பான நடிப்பை முன்நிறுத்தியுள்ளார்?!!,

பிரிந்த மனைவியை பார்க்கப்போகும் பரிதவிப்பையும் ,பயத்தினால் வந்த படபடப்பையும் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். வழியில் தம்பிக்கும், ஆனிக்கும் போன் செய்தவர், பேச பயந்து போனை  சாதுர்யமாக ஹண்டரிடம் தர, ஹண்டர் லாவகமாய் சமாளிக்கிறான், போனை ட்ராவிஸிடம் கொடுக்க சொல்லி அவள் பதற, ஹண்டர் ரிசீவரை எளிதாய் சாத்தியும் விடுகிறான்.

ழியில் மோட்டலில் தங்கியவர்கள், அழகாய் அம்மாவை கண்டுபிடிக்கும் திட்டத்தை போடுகின்றனர். அம்மா அடுத்த நாள் ஐந்தாம் தேதி காலை எப்படியும் வங்கிக்கு வருவாள், ட்ராவிஸ் தான் காரிலேயே இருப்பேன் என்றும், ஹண்டர் வங்கி வாசலில் நின்று அம்மா வந்தவுடன் வாக்கி டாக்கியில் அழைக்க வேண்டும் என்றும்  சொல்ல,நீண்ட நேரமாகியும் வாக்கி டாக்கியில் மகன் பேசாததால்,ட்ராவிஸ் நன்கு தூங்கியும் விடுகிறார்,

ங்கே  சரியாக ஹண்டரின் அம்மா ஜெனி வந்து பணம் டெபாசிட் செய்துவிட்டு வெளியேறி, தன் காரில் புறப்பட, மகன் பதறி அப்பாவுக்கு பேச, ஒரு வழியாய் தூக்கத்தில் இருந்து எழுந்தவர், மகனின்,வழிகாட்டுதலின் பேரில் சாலையில் கலந்த அந்த சிகப்பு செவ்ரோலெட் காரை மகனுடன் தொடர்கின்றார், தவறாகி விட்டால் அடுத்த ஐந்தாம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என இவர் சொல்ல .

வன் அப்போது எனக்கு எட்டு வயதாகிவிடும்,என்கிறான் குறும்பாய் .!!! பெரிய நெடுஞ்சாலை 10,000 காரில் எந்த கார் அவளது கார்?குழப்பத்தில், தேடி சந்தேகமேற்படாதவகையில் சரியாக பின் தொடர்கிறார்.அவளுக்கு இரண்டு கார் பின்னே சென்றவர்,அவள் க்ளீவ் லாண்ட் செல்லும் சாலையில் சென்று, ஷெபர்ட் ட்ரைவிற்குள் நுழைந்து சந்தில் புகுந்து ஒரு பழைய பப் கட்டடம் போன்ற ஒன்றில் நுழைந்து,இவர்கள் அவளை பார்ப்பதற்குள் மறைகிறாள். இருவரும் அவள் விட்டுச்சென்ற காரை ஆசையாக தடவிப்பார்க்கின்றனர்.

கனை காருக்குள் வைத்து பத்திரமாய் இருக்கும் படி சொல்லிவிட்டு பப்பின் கதவை திறந்து படியேறி மேலே போனால் அது ஒரு ஸ்டாஃப் ரூம். விலைமாதுக்களுக்கென்றே பிரத்யேக பாரும், ஓய்வு அறையும்,அங்கே டைம் கீப்பரின் குரலும் கேட்கிறது, 22ஆம் நம்பர் பூத்தில் கஸ்டமர் வெயிட்டிங், உடனே ஆள் போகவும் என்று. இவர் அங்கே தொலைவில் தன் மனைவியை பார்த்து விடுகிறார்,

வள் அப்படி ஓர் அழகு,இன்னமும் அவள் சிறு பெண்ணைப்போலவே இருக்கிறாள். இவருக்கு பதட்டம், அவளையே பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை, இவரிடம் ஒரு சிப்பந்தி, நீங்கள் இடம் மாறி வந்துவிட்டீர்கள், கீழே தான் பூத்கள் உள்ளது, என சொல்லி மரியாதையாய் அனுப்ப. கீழே வந்தவர்,  அங்கே இருந்த 8ஆம் எண் பூத்தில் உள்ளே போய் கதவை திறந்து சேரில் அமர, அங்கே டெலிபோனும் உள்ளது, pool side என்பது இவர் நுழைந்த பூத்தின் பெயர். விந்தையாக மெனுகார்டும் இருக்கிறது,


[இது ஒரு நவீன தீண்டாமை விபச்சார மையம்,ஆம்ஸ்டர்டாமில் உள்ளது போலவே வடிவமைத்துள்ளனர்! வாடிக்கையாளர்கள் அங்கே சென்று பணம் செலுத்திய பின்னர் அங்கே இருக்கும் 20க்கும் மேற்பட்ட இருட்டு அறைகளில் நுழைந்துகொண்டு, அறையின் ஒன்வே மிரர் வழியாக அறையின் கண்ணாடியின் அடுத்த பக்கம் இருக்கும் விலைமங்கையிடம், மெனுகார்டு பார்த்து அவளை நிர்வாணமாக்கி பாடவோ, ஆடவோ, கொஞ்சவோ, பாலியல் ஜோக்குகள் சொல்லவோ கேட்கவோ, கரமைதுனம் செய்யவோ சொல்லலாம், அப்படி ஒரு பார்லர் அது.]

ரிசீவர் எடுத்தவர், மறுமுனை  ஆண்குரல் யாரை அனுப்பனும்? என கேட்க, இவர் 25 வயதுள்ள ப்ளாண்ட் கேர்ள் எனக்கு முன்பே தெரியும்,அவளை அனுப்பு என சொல்ல, வேறொறு பெண் நர்ஸ் உடையில் உள்ளே வருகிறாள், இவர்,எடுத்ததும் நான் எதிர்பார்த்தது நீயில்லை,என்னை நீ பார்க்கிறாயா ? என கேடக? அவள் இல்லை, என் முகம் தான் எனக்கு கண்ணாடியில் தெரிகிறது என சொல்ல, இவர் மன்னிக்கவும்,என்று வெளியேறியவர்.

டுத்த 4ஆம் எண் அறைக்குள் நுழைய அங்கே ஹோட்டல் என எழுதியிருக்கிறது. அங்கே போய் இவர் ரிசீவர் எடுத்தவுடன் சில நொடிகளில் இவரின் மனைவி ஜெனி சிரித்துக்கொண்டே இவரை வரவேற்று ஆசை வார்த்தைகள் பேசுகிறாள் ,தான் அமரலாமா? என அனுமதி கேட்கிறாள், தனக்கு மிகவும் அசதியாய் உள்ளது என்கிறாள். இவர் என்ன சொன்னாலும் கேட்கத் தயார் என்கிறாள். உடையை அவிழ்க்கப்போனவளை இவர் வேண்டாம் என நிறுத்த திகைக்கிறாள்.?!!!

1. என்ன கொடுமை பாருங்கள்? 4வருடங்கள் கழித்து ஒருவர் தன் மனைவியை இப்படி ஒரு நவீன விபச்சாரியாய் பார்த்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இனிதான் 80 நிமிட முக்கியமான காட்சிகள் உள்ளன, இது போல படம் எடுக்க முடியுமா?!!! எனக்கேட்க வைக்கும் காட்சியமைப்பும், உணர்வுரீதியான் ட்ரீட்மெண்டுகளும், படத்தின் சுவாரஸ்யத்தை நீங்கள் முழுதும் அனுபவிக்க  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

2.ட்ராவிஸ் தன் மனைவி ஜெனியிடம் தன்னை வெளிப்படுத்தினாரா?

3.மனைவி ஜெனிக்கும் ட்ராவிஸ்கும் அப்படி என்னதான் பிரச்சனை?

4.இவர்களின் பிரிவுக்கு , உண்மையில் யார் மீது தவறு இருக்கிறது?

5.ட்ராவிஸ்,ஜெனி,மகன் ஹண்டர் இணைந்தார்களா?

6.ட்ராவிஸ் எதற்காக பாரீஸ் டெக்ஸாஸ் பாலைவனத்தில் நிலம் வாங்க வேண்டும்?  போன்ற விபரங்களை படத்தின் டிவிடியில் பாருங்கள். படத்தில் ராப்பி முல்லரின் ஒளிப்பதிவை ஒருவர் ஆயுளுக்கும் மறக்க முடியாது, அப்போதைய பராண்டிங்குகளும், ஆடைகளும், நாகரீகமும், நிச்சயம் நல்ல நோஸ்டால்ஜியா இந்த படம். படத்தின் உயிரோட்டமான இசை-ரைகூடர் என்பவரின் கைவண்ணம், வாவ்!!!.மொத்தத்தில் உலக சினிமா காதலர்கள் தவற விடக்கூடாத படம் இது!!
========0000==========
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

======================
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Wim Wenders
Produced by Chris Sievernich, Don Guest, Pascale Dauman, Anatole Dauman
Written by L.M. Kit Carson, Sam Shepard
Starring Harry Dean Stanton, Nastassja Kinski, Hunter Carson
Music by Ry Cooder
Cinematography Robby Müller
Distributed by 20th Century Fox
Release date(s) 19 May 1984 (Cannes premiere)
France: 19 September 1984
USA: 9 November 1984
West Germany: 11 January 1985
Running time 147 minutes
Country United States
Language English
========0000==========
சிறு குறிப்பு:- இந்த படத்தைப்பற்றி கோணங்கள் என்னும் வலைப்பூவில் வெளியான அற்புதமான ஆங்கில பதிவை இங்கே காண்க:-


 ========0000==========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)