டாய் ஸ்டோரி 4 Toy Story 4 (2019)

பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான "டாய் ஸ்டோரி 4 ".

இப்படைப்பு முந்தைய பாகங்களின் உணர்ச்சிகரமான தொடர்ச்சியாக மட்டுமன்றி பொம்மைகளின் இருப்பியல் குறித்த புதிய தேடலாகவும் அமைந்தது.

 ஆண்டியிடமிருந்து போனி எனும் சிறுமிக்கு கைமாறிய பொம்மைகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை மையப்படுத்தும் இத்திரைப்படம் அனிமேஷன் உலகில் ஒரு மேதமை மிக்க படைப்பாகக் கருதப்படுகிறது.

 குப்பையிலிருந்து உருவான போர்க்கி எனும் கதாபாத்திரம் தன்னை ஒரு பொம்மையாக ஏற்க மறுப்பதும் வுடி அதற்கு வாழ்வின் உன்னதத்தைப் புரிய வைப்பதும் உலக சினிமா தரத்திலான ஆழமான திரைக்கதைக்கு சான்றாகும்.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  ஒரு கருவி அதன் பயன்பாடு முடிந்த பிறகு தேவையற்றதாக மாறும் தருணத்தில் எதிர்கொள்ளும் மனப்போராட்டம் மற்றும் சுய அடையாளத்தைக் கண்டடைவதாகும். 

முந்தைய பாகங்களில் ஒரு பொம்மையின் வாழ்நாள் நோக்கம் என்பது குழந்தையை மகிழ்விப்பது மட்டுமே என நிறுவப்பட்டிருந்தது. 

ஆனால் இப்படத்தில் அந்த வரையறை உடைக்கப்பட்டு உரிமையாளர் இல்லாத பொம்மைகளும் அர்த்தமுள்ள வாழ்வை வாழ முடியும் எனும் புதிய தத்துவம் முன்வைக்கப்படுகிறது.

ஆண்டியிடம் ஒரு நாயகனாக இருந்த வுடி போனியிடம் வரும்போது ஓரங்கட்டப்படுவதை ஏற்க முடியாமல் தவிக்கிறான்.

 போர்க்கி எனும் கதாபாத்திரம் தன்னை ஒரு குப்பை என்று கருதுவதும் வுடி அதை ஒரு பொம்மையாக மாற்ற முயல்வதும் ஒருவரது மதிப்பு என்பது மற்றவர் கொடுப்பதல்ல நமக்கான அடையாளத்தை நாமே தீர்மானிப்பது என்பதை உணர்த்துகிறது. 

போ பீப்பின் வருகை வுடிக்கு ஒரு மிகப்பெரிய திறப்பாக அமைகிறது. ஒரு சிறு அறைக்குள் அடைபட்டுக் கிடப்பதை விட பரந்த உலகில் யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழ்வதும் மற்றவர்களுக்கு உதவுவதும் உன்னதமான வாழ்வு என்பதை வுடி உணரும் இடமே கதையின் மையம்.

பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறி நிச்சயமற்ற  சுதந்திரமான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் வுடியின் முடிவு கடமைக்கும் விருப்பத்திற்கும் இடையிலான போராட்டத்தின் உச்சம். 

விசுவாசம்  ஒரு மனிதரிடம் அல்லது ஒரு குழந்தையிடம் மட்டும் காட்டும் ஒன்றல்ல அது நம் மனசாட்சிக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் காட்டும் உண்மைத்தன்மை என்பதை இப்படம் ஆழமாகப் பேசுகிறது. 

இறுதியில் தன் பழைய நண்பர்களைப் பிரிந்து போ பீப்புடன் வுடி இணையும் காட்சி ஒரு முடிவல்ல அது அவனது வாழ்வின் புதியதொரு தொடக்கமாக இருக்கிறது.

ஜோஷ் கூலி இப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். ஜான் லாசெட்டர் மற்றும் ஆண்ட்ரூ ஸ்டாண்டன் ஆகியோரின் கதைக்கருவை சிதையாமல் செதுக்கி பழைய மற்றும் புதிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை சமன்படுத்தியதில் இயக்குநரின் பங்கு முக்கியமானது.

 ஒளிப்பதிவாளர்கள் பேட்ரிக் லின் மற்றும் ஜீன் கிளாட் கலாச்சே ஆகியோரின் நுட்பமான காட்சி அமைப்பு மழையில் நனையும் காட்சிகள் மற்றும் பழங்கால பொருட்கள் விற்கும் கடையின் உட்புறங்களில் ஒளியின் தத்ரூபத்தை மிகச்சரியாகப் பிரதிபலித்தன.

டாம் ஹாங்க்ஸ் மற்றும் டிம் ஆலன் ஆகியோரின் குரல்கள் வுடி மற்றும் பஸ் லைட்டியர் கதாபாத்திரங்களுக்கு ஆன்மாவாகத் திகழ்ந்தன.

 அன்னி பாட்ஸ் குரலில் போ பீப் கதாபாத்திரம் ஒரு வலிமையான சுதந்திரமான ஆளுமையாக உருவெடுத்தது.

 மறைந்த நடிகர் டான் ரிக்லெஸின் குரலை பழைய பதிவுகளிலிருந்து எடுத்து மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட் கதாபாத்திரத்திற்குப் பயன்படுத்தியது தொழில்நுட்ப ரீதியான ஒரு மாபெரும் முயற்சி. 

கீனு ரீவ்ஸ் மற்றும் டோனி ஹேல் போன்றோரின் குரல் பங்களிப்பு நகைச்சுவையையும் உணர்ச்சியையும் சரிவிகிதத்தில் வழங்கியது.

ரேன்டி நியூமேன் தனது இசையமைப்பின் மூலம் இப்படத்தின் ஒவ்வொரு கணத்தையும் அழகாக்கினார்.

 தி பேலட் ஆஃப் தி லோன்சம் கவுபாய் போன்ற பாடல்கள் கதையின் ஆழத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. 

2019 ஜூன் மாதம் வெளியான இப்படம் ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்தது. 

92வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றதோடு அன்னி விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் போன்ற கௌரவங்களையும் பெற்று அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிலைத்து நிற்கிறது.

 இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி 2010 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஜான் லாசெட்டர் இதனை ஒரு காதல் கதையாக உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். 

பின்னர் ஜோஷ் கூலி இயக்குனராகப் பொறுப்பேற்றபோது வுடி மற்றும் போ பீப் இடையிலான உறவை மறுசீரமைத்து கதையின் மையக்கருவை மாற்றியமைத்தார். 

முந்தைய பாகத்தில் போ பீப் கதாபாத்திரம் இடம்பெறாத நிலையில் அதன் பின்னணியை விளக்க லாம்ப் லைஃப் எனும் குறுந்திரைப்படம் தனியாக உருவாக்கப்பட்டது.

நடிகர் டான் ரிக்லெஸ் இப்படத்தின் குரல் பதிவு தொடங்கும் முன்பே 2017 இல் மறைந்துவிட்ட போதிலும் மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட் கதாபாத்திரத்தை அவர் மூலமே உயிர்ப்பிக்க பிட்சார் நிறுவனம் முடிவு செய்தது.

 இதற்காக கடந்த 25 ஆண்டுகளில் அவர் பங்கேற்ற திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்களில் இடம்பெற்ற பயன்படுத்தப்படாத குரல் பதிவுகளைத் தேடி எடுத்து இப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

 இப்படத்தின் இறுதியில் வரும் ஒரு முக்கிய காட்சி மிக உணர்ச்சிகரமாக இருந்ததால் டாம் ஹாங்க்ஸ் மற்றும் டிம் ஆலன் ஆகியோரால் அந்த வசனங்களைப் பேசும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

பல்லாண்டு காலமாக பிக்ஸார் அனிமேஷன் திரைப்படங்களுக்கு முன்னால் ஒரு குறும் படம் திரையிடப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் 1995 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்குப் பிறகு குறும் படம் இன்றி உலகளவில் வெளியான முதல் பிக்ஸார் திரைப்படம் இதுவாகும்.

 இதற்கான உழைப்பு மற்றும் மனித வளத்தை முதன்மைத் திரைப்படத்திற்காகப் பயன்படுத்தியதே இதற்கு காரணமாகும். கீனு ரீவ்ஸ் இப்படத்தில் டியூக் கபூம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததுடன் அதன் உடல் அசைவுகள் மற்றும் வசன உச்சரிப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

இசை அமைப்பாளர் ரேன்டி நியூமேன் டியூக் கபூம் கதாபாத்திரத்தின் இசைக்காக அக்கார்டியன் மற்றும் மாண்டலின் போன்ற வாத்தியங்களைப் பயன்படுத்தி அதன் பின்னணியில் உள்ள ஏமாற்றத்தை இசையில் பிரதிபலித்தார். 

2019 ஆம் ஆண்டில் டிஸ்னி நிறுவனத்தால் ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்த ஐந்தாவது திரைப்படமாக இது வரலாற்றுச் சாதனை படைத்தது. 

இறுதியில் வுடி தனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் காட்சி ஒரு வரலாற்றுத் தருணமாகப் படக்குழுவினரால் கருதப்படுகிறது.

 இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் ஸ்டெபானி போல்சம் இணைந்த பிறகு முந்தைய எழுத்தாளர்களான ரஷிதா ஜோன்ஸ் மற்றும் வில் மெக்கார்மாக் எழுதிய மூலக்கதையின் முக்கால்வாசிப் பகுதியை அவர் முற்றிலுமாக மாற்றியமைத்தார். 

வுடியின் கதாபாத்திர வளர்ச்சியில் ஒரு முழுமையை எட்ட வேண்டும் என்ற நோக்கில் ஜான் லாசெட்டர் இப்படத்தின் ரகசியத்தை பிட்சார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் கூட அதன் முழுமையான வடிவம் உருவாகும் வரை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அறிமுகமான போர்க்கி கதாபாத்திரத்திற்காக நடிகர் டோனி ஹேல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் ஏற்கனவே நடித்த பதற்றமான கதாபாத்திரங்களின் குரல் வளமே முக்கிய காரணமாக அமைந்தது. 

அதேபோல் போனி கதாபாத்திரத்திற்கு கடந்த பாகங்களில் குரல் கொடுத்த எமிலி ஹானுக்கு பதிலாக கார்ஸ் 3 திரைப்படத்தில் பணியாற்றிய மேடலின் மெக்ரா புதிய குரலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 வுடிக்கு வாழ்வின் அடுத்த கட்டத்தைப் புரியவைக்கும் அனுபவம் வாய்ந்த பொம்மைகளாக மெல் ப்ரூக்ஸ் மற்றும் கரோல் பர்னெட் போன்ற பழம்பெரும் நகைச்சுவை கலைஞர்கள் கார்ல் ரெய்னர் மற்றும் பெட்டி ஒயிட் ஆகியோருடன் இணைந்து குரல் கொடுத்தனர்.

தொழில்நுட்ப ரீதியாக டியூக் கபூம் கதாபாத்திரத்தின் தோற்றம் புகழ்பெற்ற ஸ்டண்ட் கலைஞர் ஈவில் க்னீவலின் சாயலைக் கொண்டுள்ளதாகக் கூறி சட்டரீதியான சிக்கல்கள் எழுந்தன. 

இருப்பினும் நீதிமன்றம் இது அனிமேஷன் கலைஞர்களின் தனித்துவமான படைப்பு என தீர்ப்பளித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 இப்படத்தின் இறுதிப் பகுதியில் வரும் ஒரு சிறிய காட்சியில் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் காட்டப்பட்டது சில அமெரிக்க அமைப்புகளிடையே விவாதங்களை உருவாக்கியது.

வசூல் ரீதியாக இப்படம் வட அமெரிக்காவில் மட்டும் தி லயன் கிங் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து அதிக வசூல் செய்த ஜி ரேட்டிங் திரைப்படமாக உருவெடுத்தது. 

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு போர்க்கி கதாபாத்திரத்தை மையமாக வைத்து அதன் தேடல்களை விளக்கும் விதமாக பத்து எபிசோடுகள் கொண்ட கல்வி சார்ந்த தொடர் ஒன்றும் தனியாக வெளியிடப்பட்டது.

 இறுதியாக இப்படம் மறைந்த நடிகர் டான் ரிக்லெஸ் மற்றும் அனிமேட்டர் ஆடம் பர்க் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் இயக்குனர் ஜோஷ் கூலி ஒரு புதிய சவாலை எதிர்கொண்டார். 

வுடி கதாபாத்திரத்தின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்க ஒரு புதிய இயக்குனராகத் தான் உணர்ந்த அதே நிச்சயமற்ற தன்மையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உத்வேகமாகப் பயன்படுத்தினார்.

 இப்படத்திற்கான குரல் பதிவுகள் 2018 செப்டம்பர் மாதம் தொடங்கி 2019 ஜனவரி வரை நீடித்தன. 25 ஆண்டுகளுக்கு மேலான பிக்ஸார் வரலாற்றில் ஒரு பொம்மையின் குரலை உருவாக்க இவ்வளவு பெரிய கால இடைவெளியில் சேகரிக்கப்பட்ட காப்பகத் தரவுகள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

படத்தின் விளம்பர வணிக ரீதியான வெற்றியில் டிக்கெட் முன்பதிவு ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. டிக்கெட் விற்பனை தளமான ஃபேன்டாங்கோவில் முதல் 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த அனிமேஷன் திரைப்படம் எனும் சாதனையை இது படைத்தது. 

இது அதற்கு முந்தைய சாதனையான இன்க்ரெடிபிள்ஸ் 2 படத்தின் எண்ணிக்கையை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்.

 இப்படத்தின் ஒட்டுமொத்த லாபம் விளம்பரம் மற்றும் இதர செலவுகள் போக சுமார் 368 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் வரும் கார்னிவல் காட்சிகளில் இடம்பெறும் டக்கி மற்றும் பன்னி கதாபாத்திரங்களுக்கு கீகன் மைக்கேல் கீ மற்றும் ஜோர்டான் பீல் ஆகியோர் வழங்கிய நகைச்சுவை உரையாடல்கள் கதையின் ஓட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன.

 ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட துல்லியம் மற்றும் கதாபாத்திரங்களின் அசைவுகள் 2019 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பிளாக்பஸ்டர் பட்டியலில் இப்படத்தை ஆறாவது இடத்திற்கு உயர்த்தியது.

 ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்யம் போன்ற நாடுகளில் இப்படம் அனிமேஷன் வரலாற்றில் இன்றுவரை ஒரு வலுவான வணிக இடத்தைத் தக்கவைத்துள்ளது.

இந்த பாகத்துடன் வுடியின் பயணம் ஒரு முடிவை எட்டியதாகக் கருதப்பட்டாலும் இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது பாகம் 2026 ஜூன் 19 அன்று வெளியாக உள்ளது.

 இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு புதிய கதாபாத்திரமும் வுடியின் பழைய உலகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தன. 

ஒரு தற்செயலான குப்பை பொம்மையிலிருந்து தொடங்கி வுடியின் விடுதலை வரை பயணிக்கும் இந்தத் திரைக்கதை அனிமேஷன் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த முடிவாகப் பார்க்கப்படுகிறது.

==============

படத்தின் கதை:-

ஒரு பொம்மையின் நோக்கம் தன் எஜமானனாகிய குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். 

ஆனால் அந்தப் பொம்மை பழையதாகிவிட்டால் அல்லது அந்தக் குழந்தைக்கு அந்தப் பொம்மை பிடிக்காமல் போய்விட்டால் அந்தப் பொம்மையின் நிலை என்ன? இதுதான் இந்தக் கதையின் அடிப்படை.

இந்தக் கதை வுடி (டாம் ஹாங்க்ஸ்) என்ற ஒரு பொம்மை வீரனைப் பற்றியது. பொதுவாகப் பொம்மைகள் என்றால் குழந்தைகளுக்கு விளையாடப் பயன்படும் ஒரு பொருள். 

ஆனால், இந்தக் கதையில் பொம்மைகளுக்கு உயிர் இருக்கிறது, அவற்றுக்கென உணர்ச்சிகள் இருக்கின்றன. ஒரு குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே ஒரு பொம்மையின் வாழ்நாள் லட்சியம்.

கதையின் தொடக்கத்தில், வுடியின் உயிர்த்தோழியான போ பீப் (ஆனி பாட்ஸ்) என்ற பொம்மை, வேறொருவருக்குத் தானமாக வழங்கப்பட்டு வுடியைப் பிரிந்து செல்கிறது.

 காலங்கள் மாறுகிறது, வுடியின் பழைய எஜமானன் ஆண்டி (ஜான் மோரிஸ்) வளர்ந்து கல்லூரிக்குச் சென்றதால், தனது பொம்மைகளை போனி (மேட்லைன் மெக்ரா) என்ற சிறுமிக்குக் கொடுத்துவிடுகிறான்.

போனிக்கு வுடியை விட, அவள் கையால் செய்த போர்க்கி (டோனி ஹேல்) என்ற பொம்மையைப் பிடித்துப் போகிறது. 

இது ஒரு பிளாஸ்டிக் ஃபோர்க் ஸ்பூனால் செய்யப்பட்ட பொம்மை. ஆனால் போர்க்கி தன்னை ஒரு பொம்மையாக நினைக்காமல், ஒரு குப்பை என்று நினைத்துத் தப்பியோட முயல்கிறது. 

போனி வருத்தப்படக் கூடாது என்பதற்காக, வுடி அந்தப் போர்க்கியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறான்.

ஒரு பயணத்தின் போது போர்க்கி காணாமல் போக, அதைத் தேடிச் செல்லும் வுடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தனது தோழி போ பீப்பைச் சந்திக்கிறான். 

அவள் இப்போது யாரிடமும் அடிமையாக இல்லாமல், காடு மேடெல்லாம் சுற்றித் திரியும் ஒரு சுதந்திரமான பொம்மையாக இருக்கிறாள்.

 இவர்களுடன் கிகில் மெக்டிம்பிள்ஸ் (அலி மகி) மற்றும் டியூக் கபூம் (கீனு ரீவ்ஸ்) போன்ற புதிய நண்பர்களும் இணைகிறார்கள்.

வழியில் கேபி கேபி (கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்) என்ற ஒரு பொம்மை வுடியின் குரல் பெட்டியைத் திருட முயல்கிறது. 

கேபியின் நோக்கம் தீயது அல்ல, அவளது குரல் பெட்டி பழுதடைந்ததால், அதைச் சரிசெய்து ஒரு குழந்தையிடம் அன்பு பெற வேண்டும் என்பதே அவளது ஆசை.

 இதைப் புரிந்துகொண்ட வுடி, ஒரு கட்டத்தில் தனது குரல் பெட்டியையே அவளுக்குத் தியாகம் செய்கிறான். 

கேபி கேபி இறுதியில் ஒரு குழந்தையிடம் அடைக்கலமாகிறாள்.
கதையின் இறுதியில், எல்லாப் பொம்மைகளும் தங்களது எஜமானி போனியின் வீட்டுக்குத் திரும்புகின்றன. 

ஆனால் வுடி ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறான். இத்தனை காலம் மற்றவர்களுக்காக வாழ்ந்த வுடி, இப்போது தனது தோழி போ பீப்புடன் இணைந்து ஒரு சுதந்திரமான பொம்மையாக வாழ முடிவெடுக்கிறான்.

அவன் தனது பழைய நண்பர்களான பஸ் லைட்டியர் (டிம் ஆலன்), ஜெஸ்ஸி (ஜோன் குசாக்), ரெக்ஸ் (வாலஸ் ஷான்) மற்றும் பிற தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, எஜமானர் இல்லாத, ஆதரவற்ற பொம்மைகளுக்கு உதவி செய்யும் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறான்.

 இதற்கிடையே போனி தனது வீட்டில் கத்தி ஒன்றைக் கொண்டு போர்க்கிக்கு ஒரு ஜோடியை உருவாக்குகையில் படம் நிறைகிறது.

இப்படம் சொல்லும் செய்தி ஆழமானது மற்றும் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு கட்டத்தில் நாம் மிகவும் நேசித்த ஒரு உறவோ அல்லது நமக்கான முக்கியத்துவமோ குறையும்போது, அதை வருத்தத்துடன் பிடித்து வைத்துக் கொள்ளாமல் பக்குவமாக ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே வாழ்க்கை என்பதை வுடியின் கதாபாத்திரம் வழியாக இந்தப் படம் உணர்த்துகிறது.

 மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை என்பதையும், பழைய கதவு அடைக்கப்படும்போது புதிய கதவுகள் திறக்கும் என்பதையும் இது அழகாக விளக்குகிறது.

மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகச் செயல்படுவதில் ஒரு உன்னதம் இருப்பதை போர்க்கி மற்றும் வுடியின் உறவு காட்டுகிறது. 

தன்னைத் தேவையற்ற குப்பை என்று கருதும் ஒரு பொருளுக்குக் கூட இந்த உலகில் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும், மற்றவர்களுக்குப் பயன்படும்போதுதான் ஒரு உயிருக்கான முழுமையான மதிப்பு கிடைக்கிறது என்பதையும் படம் வலியுறுத்துகிறது. 

ஒரு தலைவனாக வுடி தனது சுயநலத்தை விட மற்றவர்களின் நலனுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

சுதந்திரம் மற்றும் சுய அடையாளத்தின் அவசியத்தை போ பீப்பின் வாழ்க்கை முறை நமக்குச் சொல்கிறது. 

ஒருவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வது மட்டுமே வாழ்க்கை அல்ல, யாருடைய தயவும் இன்றித் தனித்து நின்று உலகிற்குத் தொண்டு செய்வதிலும் ஒரு பெரும் நிம்மதி இருக்கிறது என்பதை அவள் வுடிக்குக் கற்றுத் தருகிறாள்.

 இது வழக்கமான சட்டதிட்டங்களை உடைத்து, நமக்கான புதிய பாதையை நாமே உருவாக்கிக் கொள்வதற்கான தூண்டுதலை அளிக்கிறது.

 எவரையும் அவரது குறைகளை வைத்து எடைபோடக் கூடாது என்ற செய்தியை கேபி கேபி கதாபாத்திரம் மூலம் நாம் அறியலாம். 

அன்பு கிடைக்காத ஏக்கத்தில் ஒருவன் செய்யும் தவறுகளுக்குப் பின்னால் இருக்கும் வழியைப் புரிந்துகொண்டு, அவனுக்குத் தியாகம் செய்து உதவுவதே உண்மையான மனிதநேயம்.

 நட்பு என்பது பிரிவே இல்லாத ஒன்றல்ல, நண்பனின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காக அவனை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைப்பதும் நட்பின் ஒரு சிறந்த இலக்கணம் என்பதை வுடி மற்றும் பஸ் லைட்டியரின் விடைபெறுதல் நமக்குக் கற்பிக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஆஸ்கர் (61) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)