ஸக்காரியாயுடே கர்ப்பிணிகள் படம் பார்த்தேன், படத்தின் தலைப்பை பார்த்தவுடன் லால் தான் ஸக்காரியா,அவரின் மனைவிமார் ஒரே சமயத்தில் கர்ப்பம் தரித்தனரோ? என குழப்பியது, நல்ல வேளை அப்படி இல்லை,ஸக்காரியா [லால்] ஒரு கைனகாலஜிஸ்ட்,தனியார் மகப்பேறு மருத்துவமனையும் வைத்திருக்கிறார்,அவரிடம் தற்சமயம் மருத்துவ ஆலோசனை செய்து வரும் 4 +1 பெண்களின் கதை இது,அந்த +1 என்று சொன்னது ஸக்காரியாவிடம் வேலை பார்க்கும் ஃபாத்திமாவின் உபகதை.
இந்த 5 கதைகளுமே கேரளாவில் உண்மையாகவே நடந்தவை என்பதும் ஒரு சிறப்பு, செவிலியர் ஜாஸ்மின் ஜெனிஃபர் [கீதா ] 40 வருடங்களாக கர்த்தரின் சேவையில் வாழ்ந்தவர் கன்னி மேரியைப் போல ஆடவருடன் கலக்காமலே தாயாக விரும்புகிறார்,கேரளம் முழுக்க இது தான் பேச்சாக இருக்கிறது, 52 வயதான பெண்மணியான இவர் செயற்கை பரிசோதனைக்குழாய் கருத்தரிப்பு [artificial insemination. ]மூலம் கருத்தரிக்கிறார்,இவருக்கு ஸக்காரியா தான் ஆலோசனையும் தொடர் சிகிச்சையும் வழங்குகிறார்.
இன்னொரு பெண்ணான அனுராதா கோடீஸ்வர மோட்டார் ரேஸ் வீரரின் மனைவி,அவர் முன்பே ஆண்மை இழந்தது தெரியாமல் பணத்துக்காக வயதான அவரை திருமணம் செய்து கொள்ள , அவரோ ஒர் ரேஸ் விபத்தில் தண்டுவடத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிவர,அவரின் நண்பன் ஒருவரின் கள்ளக்காதல் வலையில் விழுந்தவள் கருத்தரிக்கிறாள்,கரு 4 மாத வளர்ச்சி அடைந்துள்ள நிலை, இரட்டைக் குழந்தை வேறு, கருவை கலைக்கவே முடியாத நிலை,கணவன் இறந்தவுடன் அவரின் குழந்தையாக இதை வெளியுலகிற்கு அறிவிக்க எண்ணி அவரின் இறுதி நாட்களை எண்ணுகிறாள், ஆனால் அவர் அற்புதம் ஒன்று நிகழ தேறி வருகிறார், கள்ளக் காதலனோ கருவை கலைக்கவேண்டும் என்கிறான்,இவருக்கு ஸக்காரியா தான் ஆலோசனையும் தொடர் சிகிச்சையும் வழங்குகிறார்.
அடுத்த பெண்ணாக நம் ரேணிகுண்டாவில் பார்த்த சனுஷா,சாய்ராவாக வருகிறார்,இவர் 17 வயது +2 படிக்கும் பள்ளி மாணவி,தான் சுமக்கும் கருவுக்கு காரணமானவர் யார் எனக் கேட்கக்கூடாது, கருவைக் கலைக்க அறிவுருத்தக் கூடாது, கருவினால் தன் படிப்பு பாதிக்கக்கூடாது,பிள்ளை பெற்றவுடன் அதை பிள்ளைப்பேறு இல்லாத நல்ல தம்பதியருக்கு தத்து கொடுக்க உதவ வேண்டும் என்னும் நிபந்தனைகளுடன் ஸக்காரியாவிடம் சிகிச்சைக்கு வருகிறாள்,இவள் கதையையும் பத்மராஜன் எழுதிய முக்கியமான சிறுகதையான மூவந்திக்கும் இயக்குனர் ஒரு அற்புதமான கனெக்ஷனை வைத்திருக்கிறார், அந்த சிறுகதையை அனிமேஷன் ஃப்ரேம்களாக படமாக்கியிருந்தார்,
அது கடைசி ரீலில் வரும்,அதனால் காபிரைட் வழக்கு பிரச்சனையில் மாட்டி,சாட்டிலைட் உரிமத்தில் சமரசம் செய்து கொண்டு படத்தை வெளியிட்டுள்ளார்,ஆனால் அந்த கனெஷன் மிகவும் அற்புதமான ஒன்று,இந்தப் படத்தை உலகசினிமாவாக மாற்றும் ஒரு தரமான இணைப்பு அந்த கனெக்ஷன்.சனுஷாவின் அப்பாவை நோட் செய்து கொள்ளுங்கள்,இந்த பீடோஃபைல், இன்ஸெஸ்ட் தகப்பன் வேடத்தில் நடிக்க எத்தனை நெஞ்சுரம் வேண்டும்,அதை தயங்காமல் சாதித்துக் காட்டியுள்ளார் நம் ரவீந்தர் ,அவர் கண்ணாடி போட்டு சிகையலங்காரத்தையும் மாற்றியதால் முதலில் அடையாளமே தெரியவில்லை.
மற்றுமொரு பெண்ணாக டாக்டர் ஸக்காரியாவின் மனைவி ஸூஸன்[ஆஷா சரத்]இவர்களுக்கு மணமாகி 20 வருடங்களாகவே குழந்தை இல்லை,சனுஷாவை பிள்ளைப்பேறுக்காக தன் வீட்டிலேயே தங்க வைக்கும் இவர் சனுஷாவை தன் குழந்தையைப் போல எண்ணி தாயாகாமலே தாய்மை அடைகிறாள்.அது மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது,தன் வயிற்றில் தலையனையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக போட்டோவுக்கு போஸ் தரும் அந்த தருணம், பிள்ளையில்லாதவர் வேதனையை சொல்லாமல் சொல்லும்.
அடுத்த பெண்ணாக ஃபாத்திமா[ரீமா கல்லிங்கல்]இதில் கொச்சையாக மலையாளம் பேசுகிறார்[மெட்ராஸ் பாஷை போல],அதை அசல் மலையாளிகளுக்கு நன்கு இனம் காண முடியும், சூஸனைப் போன்றே இவரும் கர்ப்பிணி அல்ல, பெற்ற தந்தை விட்டு ஓடியிருக்க, வளர்த்த அம்மா நர்சிங் படிக்க வைத்து மரித்தும் போயிருக்க, தம்பியுடன் தனியாக வசிக்கிறாள், ஸக்காரியா கர்ப்பிணிகளுக்கு மட்டுமே மனமிறங்குபவர் , என்னும் உண்மையைக் கேட்ட மாத்திரத்தில் இவர் வேலைக்கு தாமதமாக வந்ததன் காரணத்தை கோபமாகக் கேட்கும் ஸக்காரியாவிடம் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமலே தான் கர்ப்பம் என்கிறார்,
இதனால் அவளுக்கு ஸக்காரியாவிடமும்,தன் வீட்டு எஜமானரிடமும், பேருந்திலும், சமூகத்திலும் பல சலுகைகள் கிடைக்கிறது, இவளுக்கு இரவுப் பணியே வழங்கப்படுவதில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக இவள் கணவன் விட்டு ஓடிப்போய்விட்டான் என்னும் பொய்யை நம்பிய சக ஊழியன் அஜ்மல் இவளுக்கும் இவளின் சிசுவுக்கும் வாழ்க்கை தர தயாராகிறான், அவையெல்லாம் மிகவும் யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.
படம் அவசியம் பாருங்கள்,ஆபாசம் எங்குமே இல்லை, ஆனாலும் வயது வந்தோர் மட்டும் பார்க்க வேண்டிய படம், படம் தரவிறக்க லின்க்,சப்டைட்டிலும் உடன் கிடைக்கிறது.
https://torrentz.eu/328243ce434d01d5e3a5a3af17c5938972ebe7b0