ஃபஹாத் ஃபாஸில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபஹாத் ஃபாஸில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வரத்தன் | Varathan | 2018 |மலையாளம்| ஸ்ட்ரா டாக்ஸ் | ஒப்பீடு

.



மனிதனுக்குள் தூங்கும் மிருகம் சில அத்தியாவசிய தருணங்களில் தட்டிஎழுப்பப்பட்டே ஆகவேண்டும் , இதை மிக அழகாக உலகெங்கும் செல்லுலாய்டில் பதிவு செய்துள்ளனர், செய்து கொண்டே இருக்கின்றனர், 

நிஜ வாழ்வில் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு நீதி விரைந்து கிடைக்காததால் , சினிமாவில் கெட்டவன் வீழ்கையில் நம்மை அறியாமல் கைதட்டுகிறோம், உணர்ச்சிவயப்பட்டு அந்த நிழலின் நடிப்பில் கட்டுண்டு லயித்து குத்து வெட்டு என்கிறோம்.

1971 ஆம் ஆண்டு டஸ்டின் ஹாஃப்மேன் மற்றும் ஸூஸன் ஜார்ஜ் நடித்து வெளியான கல்ட் கிளாஸிக் படம் ஸ்ட்ரா டாக்ஸ் , 

இது ஊரக  இங்கிலாந்துக்குள் விடுமுறையைக் கழிக்க வரும் கணக்கு ப்ரொஃபஸர் மற்றும் அவரின் அழகிய காதல் மனைவி உள்ளூரில் ஸெக்சுவல் ஸ்டார்வேஷனில் காய்ந்து கிடந்து வெட்டிப் பஞ்சாயத்து பேசிக்கொண்டு நடக்கும் இளைஞர்கள் மற்றும் கிழவர்கள் தொல்லையில் சிக்கி, தப்பிப் பிழைத்து ஜெயிக்கும் கதை. 

எத்தனை அருமையான பெயர் இந்த ஸ்ட்ராடாக்ஸ்,சீனாவில் அறுவடைத் திருவிழாவில் வைக்கோலால் செய்த சொக்கப்பனை  நாய் பொம்மைகளை ஊர்மக்கள் நரகாசுரனை கொளுத்துவது போல கொளுத்துவர்.இதில் நாயகன் அப்படி சொக்கப்பனை கொளுத்துவது போல பலி கொடுப்பதால் இப்படத்துக்கு ஸ்ட்ராடாக்ஸ் என பெயரிட்டுள்ளனர்.இதன் பொருள் டஸ்டின் ஹாஃப்மேன் மனைவியிடம் பேசும். வசனம் ஒன்றின் மூலம் அறிந்தேன்.

ஸ்ட்ராடாக்ஸ் படத்தை வடிவம் கெடாமல் அப்படியே தழுவி மலையாளத்தில் மேம்பட்ட வடிவமாக்கி ட்ரிப்யூட் செய்திருக்கிறார் இயக்குனர் அமல் நீரட்.கார்பன் படத்தைத் தொடர்ந்து இதிலும் கேரளத்தின் அழகிய மலைப்பிரதேசமான வாகமன்  தான் கதைக்களம்.இசையும் ஒளிப்பதிவும் குறிப்பிடவேண்டிய அம்சங்கள்.

மூலப்படைப்புக்கு தன் படைப்பால் மரியாதை செய்த அமல்நீரட் நன்றி மட்டும் எங்கும் சொல்லவேயில்லை. அது மட்டும் நெருடல்.

படத்தில் ஃபஹாத் ஃபாஸில் ,ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி நடிப்பு மிகவும் அருமை , மிகவும் யதார்த்தம்.ஃபஹாத்திடமிருந்து ஜெம் போன்ற ஒரு ஃபெர்ஃபார்மன்ஸ்.மிக அழகிய இளம் கணவன் மனைவியாக அசத்தியிருந்தனர்.

ஸ்ட்ராடாக்ஸ் 1971 மூலப்படம் R ரேட்டிங்கைக் கொண்டது, இப்படத்தை 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஹாலிவுட்டில் மீள் உருவாக்கம் செய்தனர் , அது பூனைக்கு புலி வேஷம் போட்டது போல இருந்தது, ஆனால் ஃபஹாத் பாஸில்  டஸ்டின் ஹாஃப்மேனைப் போன்றே அந்த கணவன் கதாபாத்திரத்தில் ட்ரான்ஸ்ஃபார்மாகி வாழ்ந்திருக்கிறார்.

வரத்தன் (வேற்றூரான் அல்லது வெளியூர்காரன்) மலையாளத்தில்  முக்கியமான முயற்சி, அந்த கடைசி 20 நிமிடக் க்ளைமேக்ஸ் நமக்கு அட்ரிலினை நரம்புக்கு ஏற்றும்.

இப்படம் பெண்கள் அவசியம் பாருங்கள், நம் சமூகம் பெர்வர்டுகள், பீடோஃபல்கள், இன்செஸ்டுகள்  , செக்சுவல் ஸ்டார்வேஷனல் சைக்கோக்களால் நிரம்பியுள்ளது, இந்த சாக்கடையில் உழலும் பன்றிகளுக்கு வெடி வைத்துப் பிடிக்கும் துணிவையும்  உத்வேகத்தையும் படம் நமக்குத் தருகிறது. 

படம் தவறவிடாதீர்கள்.ஒரிஜினல் வெர்ஷனில் நிரம்பியிருந்த எரோடிக்கல் ரொமான்ஸ் தேஸி வெர்ஷனில் subtle ஆக குறைக்கப்பட்டு இது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக எடுபட்டுள்ளது,

 இது மிகப் பெரிய வித்தை.திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கல்ட் படங்களுக்கு எப்படி தரமாக ட்ரிப்யூட் செய்யலாம் என இதைப் பார்த்துப் படியுங்கள். 2011 ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ராடாக்ஸின் மீள் வெர்ஷனும் ஒரு திரைப்பாடம்  தான்.அதையும் பாருங்கள்.

ஸ்ட்ரா டாக்ஸ் படம் பற்றி இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10154307994591340&id=750161339

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

தொண்டிமுதலும் த்ருக்‌ஷாக்‌ஷியும் | கள்ளன் பிரசாத் s/o புருஷன் கள்ளிப்பரம்பில்

 









தொண்டிமுதலும் த்ருக்‌ஷாக்‌ஷியும் படம் இந்திய ரியாலிச சினிமாவில் மிக முக்கியமான படைப்பு, அதற்கு  இந்த கள்ளன் பிரசாத்.P.K ன் பங்களிப்பு அபாரமானது. பிரசாத்தின் தந்தை பெயர் புருஷன்.கள்ளிப்பரம்பில்.இவன் ஊர் அண்டத்தோடு po, சாவக்காடு.ரஸம் வேண்டி இளம் வயதில்  வீடு விட்டிருப்பான். கன்னடமும் அறிந்திருப்பான்.


இந்தப் படத்தில் எல்லாக் காட்சிகளுமே  அழகியல் பொருந்தியதாக இருந்தாலும் இது பெஸ்டு.


தப்பி ஓடி மீண்டும் பிடிபட்டு இனி பிடித்து நிற்க வாய்ப்பேயில்லை என்றாகும் போது பிரசாத்தின் முகம் எந்த சலனமும் இன்றி தெளிவாக மாறும். கால் வேதனை மட்டும் பிண்ணி எடுப்பதால் பக்கத்து செல் கைதி கருணாகரனிடம் கால் பிடித்துவிடச் சொல்லி உதவி கேட்பான்.


அப்போது இத்தனை அடி அடித்த போலீசாரைப் பற்றி கடுகளவே குறை பட்டுக்கொள்வான்.கூடவே 

தன் களவுத் தொழிலை அதன் நேர்த்தியை பெருமை பொங்க விவரிப்பான்.

அந்த ஒற்றையடி ஷாட் அழகிய கவிதை . ஃபஹாத்தின் நொடிக்கு நொடி மாறி ஜாலம் செய்யும் முகபாவங்களை இங்கே பாருங்கள்.


கருணாகரா!!! , இந்த போலீஸுக்கு எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் போல, நம் காலில் முள் குத்திவிட்டதென்றால் காலை வெட்டியா  முள்ளை எடுப்போம், பதுக்க மெல்ல அந்த முள்ளை மட்டும் தானே கிள்ளி எடுக்க வேண்டும்.என் கேஸ் ஒரு தெஃப்ட் கேசு, இதைப் போய் ராபரியாக  பதிந்துள்ளனர். இந்த ராபரி என்றால் என்ன தெரியுமா? 


சிங்கப்பூர் டிசைன் செயின் மிகவும் ஷார்ப்பானது, அதை பைக்கில் சென்றுத் திருடுகையில் உறுதியாகப் பிடித்து இழுக்கையில் கழுத்து நரம்பே அறுந்து உயிர் போகும்.அது தான் சரிக்கும் ராபரி.எண்டது  தெஃப்ட் கேசு.


நான் தொழிலுக்குப் போகும் போது பூப் போல பதுக்க நெயில் கட்டரால் பின்னங்கழுத்தில் ஒத்தியெடுப்பேன், பெண் சிணுங்கவில்லை என்றால் மட்டும் முன்னெடுப்பேன்.மெல்ல மாலையை கட் செய்து, லயமாக லாவகமாக இதோ இப்படி விரலில் சுற்றி மெல்ல மெல்ல இழுத்து அந்த செயினை சொந்தமாக்குவேன் என்று சொல்லி விட்டு, கொஞ்சம் பாதத்தையும்  அமுக்கேன் என கேட்பான்.


4 months 3 weeks 2days and later என்ற ருமானிய படம் ஒரு சிறந்த ரியாலிச பாணி த்ரில்லர் சினிமா அகராதி, அதை ஊன்றிப் படிக்கையில் ஓராயிரம் ரியாலிச சினிமாக்களுக்கான கரு நமக்கு கிடைக்கும்.

நார்த் 24 காதம் [North 24 Kaatham ] [നോർത്ത് 24 കാതം ] [2013][மலையாளம்]

 
நார்த் 24 காதம் இன்று தான் பார்க்க முடிந்தது,ஃபஹாத்தின் போர்ட் ஃபோலியோவில் மேலும் ஒரு தரமான படம்,இப்படியே போனால் ஃபஹாதின் படங்களைத் தான் வெரைட்டியானவை ,  தரமானவை என முத்திரை குத்த வேண்டியிருக்கும், அப்படி நல்ல படங்களாக அமைகிறது, படத்தில் நெடுமுடி வேணு என்னும் மகா நடிகரை வைத்துக் கொண்டே ஃபஹாத் சத்தமில்லாமல் நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்,

ஹாலிவுட்டின் நடிப்பு ப்ரம்மா ஜாக் நிக்கல்சனின் As Good as It Gets (1997) படத்தின் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஸார்டர்  பேஷண்ட் கதாபாத்திரத்தை நினைவூட்டும் படியான கதாபத்திரம்,ஆனால் தன் பாணியில் நேட்டிவிட்டியுடன் நடித்துப் பின்னிப் பிணைந்திருக்கிறார் ஃபஹாத்,இவர் இந்தப் படத்துக்காக எத்தனை ஹோம் ஒர்க் செய்திருக்க வேண்டும்? என மலைக்க வைக்கிறது,

மனிதர்.படத்தின்  கடைசி ரீலில் சுவாதி கேட்கும் எப்போவுமே இப்படித் தானா? சுத்த ராட்சதன் போல? என்னும் கேள்விக்கு மட்டும் தான் முதன் முதலாக படத்தில் சிரிக்கிறார்,[இவர் தன் சிகிச்சைக்காக செய்யும் லாஃபிங் தெரபி கணக்கில் சேராது] இப்படி ஒரு நசை போன்ற கதாபாத்திரத்தை லட்டு போல சாப்பிட்டுவிட்டார்.

இம்மானுயேல் படத்திலும் ஃபஹாத் ஏற்றது ஒரு சிடுமூஞ்சி மேலதிகாரி கதாபாத்திரம் தான்,அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம் காட்டியுள்ளார் ஃபஹாத்? இவருக்கு இப்படி ரோல்கள் அமைகிறதா?அல்லது இவர் இப்படி அமைத்துக்கொள்கிறாரா?என சந்தேகமாக இருக்கிறது.

ரகுவரன் ஒரு டிவிப் பேட்டியில் கதாநாயகனாக நடித்தால் 4 பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும்,4 சண்டைக்கு டிஷ்யூம் டிஷ்யூம் செய்வதைத் தவிர வித்தியாசம் எதுவும் காட்ட முடிவதில்லை என்பதால் ஹீரோ வேடம் வேண்டாம் என மறுத்தவர் தானே விரும்பி கதாபாத்திரங்கள் கேட்டு வாங்கி செய்ததாக சொன்னார்.அவருக்கு அமையாத வெரைட்டியான நாயகன் கதாபாத்திரங்கள் ஃப்ஹாத்துக்கு அடுத்தடுத்து அமைவது மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

சுவாதி ரெட்டிக்கு என்ன ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் நானி கதாபாத்திரம்? ஃப்ஹாத்துக்கு சமமான ஒரு பாத்திரம், பல சமயங்களில் ஃப்ஹாத்தையே தூக்கி சாப்பிடுகிறார் அம்மணி,ஃப்ஹாத்தின் ஹரிக்ரிஷ்ணன் என்னும் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான குணாதிசயமுள்ள கதாபாத்திரம் இவருக்கு,காம்ரேட் கோபாலனுக்கு ஒரு பேத்தியைப் போல ஒரு நலம்விரும்பிபோல வாஞ்சையுடன் உதவ களமிறங்கும் இடம் எல்லாம் இன்னும்  மனதில் நிற்கிறது.கேரளாவில் ஹர்த்தால் என்னும் கடையடைப்பு எத்தனையோ படங்களில் காட்டப்பட்டிருந்தாலும், இந்தப்படம்  சாமான்யனின் வாழ்க்கை ஹர்த்தாலினால் இன்னலுறும் கணங்களை பேசியது போல எந்தப் படமும் பேசியதில்லை.

மூத்த நடிகரான நெடுமுடிவேணு காம்ரேட் கோபாலனாக,கலங்கடிகிறார், இளம் நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்,காம்ரேட் சகாவான நெடுமுடிவேணு அன்பேசிவத்தின் கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கேரக்டர் ஸ்கெட்சையும், ஃப்ஹாத் ஃபாஸில் மாதவனின் கேரக்டர் ஸ்கெட்சையும் நினைவூட்டினர்,இதுவும் ஒரு ரோட் மூவியே.

நம் தலைவாசல் விஜய் மலையாளத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவது நமக்கு இழப்பே,அவருக்கு அது நிறைவைத் தருகிறது போலும்,இதில் ஃப்ஹாத்தின் அப்பாவாக வருகிறார்,ஃப்ஹாத்தின் அம்மாவாக கீதா.

படத்தில் ப்ரேம்ஜி அமரன் அவருடைய சரோஜா ஜீப்புடன் லம்பாடி வேடத்தில் தமிழில் பேசி நடித்திருக்கிறார்.தமிழரான இவர் மனைவி கட்ச் வளைகுடாவைச் சேர்ந்தவர்,அவர் கட்ச் மொழி மட்டுமே பேசுவார்,அவரிடம் பல மொழி வித்தகரான காம்ரேட் கட்ச் மொழியில் பேசுவது சின்ன ஆச்சர்யம்,காம்ரேட்டுக்கு 83 வயது நடக்கிறது எனச் சொல்வது தான் நம்ப முடிவதில்லை,ஒரு 10 கொல்லம் குறைத்திருக்கலாம்,

படம் எல்லோரும் அவசியம் பாருங்கள்,ஒரு அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் பேஷண்டை ஒரு ரயில் பயணமும் அதன் போக்கும் எப்படி நோயற்றவனாக மாற்றுகிறது,புதிதாய் எந்த மனிதருடனும் பழக  வெறுக்கும் ஒருவனுக்குள் எப்படி காதல் வந்து நுழைகிறது?எப்படி அவன் புதுப் பிறவி எடுக்கிறான் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கின்றனர்,படத்தின் இயக்குனர் அனில்ராதாகிருஷண மேனோனுக்கு இது முதல் படமாம்,மிக அருமையாக களமிறங்கியிருக்கும் அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். படத்தின் அருமையான இசை கோவிந்த் மேனோன்,ரெக்ஸ் விஜயன்.படத்தின் அருமையான ஒளிப்பதிவு ஜெயேஷ்நாயர்.

வடக்கு நோக்கி 384 கிமீ [1காதம்=16கிமீ]செல்ல பஸ், ஆட்டோ, கால்நடை, வல்லம், பைக், கப்பல்,ஆட்டோ  என பயணிக்கும் அருமையான ரோட் மூவி இது,டோண்ட் மிஸ் இட்

http://subscene.com/subti.../north-24-kaatham/english/838464 சப்டைட்டிலுக்கு

https://torrentz.eu/34977fd5fba70b1c42a66d7c157808318e6aa206
டாரண்டுக்கு


படத்தின் ஒரு பாடல் யூட்யூபிலிருந்து

ரெட் ஒயின் റെഡ്‌ വൈൻ [ Red Wine][2013][மலையாளம்]


ரெட் ஒயின் திரைப்படம் இன்று பார்த்தேன்,சமீபத்தில் வந்த க்ரைம் திரில்லரில் இன்னொரு நல்ல படம்,ஃப்ஹாத் ஃபாசில் ஒரு பிஇ படித்த,அமெச்சூர் நாடக நடிகன்+ கம்யூனிச பார்டியின் இளம் சகாவுமாக நடித்துள்ளார்,தலப்பாவு ப்ரித்விராஜின் சகாவு வர்கீஸ் பாத்திரத்தை போல ஒரு கனமான பாத்திரம், ஃபஹாத்தும் பாத்திரத்தோடு ஐக்கியமகியிருக்கிறார், 33 வயதான சமூகத்தில் நன்கு மதிக்கப்படக்கூடிய சகாவு அனூப் ஒரு நடுத்தரமான லாட்ஜில் வைத்து நடுநிசியில் கத்தியால் குத்தி கொல்லப்படுகிறார்,தன் சுற்றத்தாருக்கும், வயநாட்டின் பழங்குடிகளுக்கும் நம்பிக்கை ஒளியான சகாவு அனூப்பிற்கு எத்தனையோ அரசியல் எதிரிகள், யார் கொன்றிருப்பார்?!!!இங்கே இக்கொலையை விசாரிக்க வரும் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதீஷ் பாத்திரமாக மோகன்லால்,இவரின் நடிப்பை இப்படி இருந்தது,அப்படி இருந்தது என விவரிப்பது மடமை,

இன்னொரு முக்கிய பாத்திரம் ரமேஷ் குமாராக ஒழிமுறியில் நடித்த ஆசீஃப் அலி,தன்னை நம்பி ஓடி வந்த பணக்கார காதல் மனைவியை நன்றாக வைத்து காப்பாற்ற போராடும் ஒரு நடுத்தர குடும்ப கணவன்.இவர் ஒரு டூவீலர் சேல்ஸ் ரெப்,கேரளாவில் கார் மோகம் அதிகமாகி,பைக் விற்பனை சரிந்து வருவதால் இவரால் டார்கெட் முடிக்க முடியாமல்,வேலைக்கும் பிரச்சனை வருகிறது,ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் லோன் போட்டு ஒரு ஃப்ளாட்டை வாங்கி விட்டு அதற்கு மாத தவணை கட்ட முடியாமல் தவிக்கும் எத்தனையோ இளைஞர்களைப் போல இவரும் ஒரு ஃப்ளாட்டை வாங்கிவிட்டார்,

கடந்த 8 மாதமாக ஒரு தவனையையுமே கட்டவில்லை,இவரது அப்பாவின் சொத்து வழக்கில் இருப்பதால் அதன் முடிவில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்கலாம் என்ற இவரது எண்ணம் ஈடேறவில்லை.இவரின் கர்ப்பவதி மனைவியிடம் மிகுந்த காதல் இருந்தாலும்,அவளின் பிரசவத்துக்கு கூட அருகே இருக்க முடியாத படிக்கு ஒரு வேலை விஷயமாக வெளியூர் போகிறார்.போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது,அவரும் மனைவிக்கு அழைக்கவில்லை,இந்நிலையில் மனைவி ஒரு பெண்குழந்தையை பிரசவிக்கிறாள்,கணவன் 1வாரத்துக்கு மேலாக காணவில்லையே என்று பயந்து போலீசாரிடம் புகார் அளிக்கிறாள்,

அவளிடமிருந்த ஒரே ஒரு கல்யாண போட்டோவைக்கூட போலீசார் அதில் அவனை கத்தரிக்கும் போது மிகவும் கலங்குகிறாள்.இவளின் அண்ணனும் அப்பாவும் இவள் மீது உள்ள கோபம் குறைந்து ஏற்றுக்கொள்வார்கள் என்றாலும் இவள் அவர்களிடத்தில் எந்த சூழ்நிலையிலும் உதவி கேட்டுப்போவது,கணவன் ரமேஷுக்கு பிடிக்காது என்பதால் தனியே பச்சைக்குழந்தையுடன் வாடுகிறாள்.

இப்போது கொலைக்கான விசாரனையை சகாவு அனூப்பின் நண்பன் நவாஸ் பரம்பன்[சாஜு குருப்]இடமிருந்து துவங்குகிறார் ரதீஷன்,பல்ப் ஃபிக்‌ஷன் படத்தில் ஒரு பாத்திரமான வின்செண்ட் வேகா சுட்டுக்கொல்லப்பட்டாலும் படம் முழுக்கவே வியாபித்திருப்பார்,அதே போல இதில் மூன்றாவது ரீலிலேயே அனூப் கொல்லப்பட்டிருந்தாலும்,படம் முழுக்க ரதீஷனது புலன் விசாரனைகளின் மூலம் படம் முழுக்க வியாபித்துள்ளார்,தமிழில் விஜய்யோ,சிம்புவோ,சூர்யாவையோ இப்படி படம் துவங்கியவுடனே மார்சுவரியில் பிணமாக ஸ்ட்ரெட்சரில் வைத்து வெளியே இழுத்து வர முடியுமா?!!! தனுஷ்  மட்டுமே 3 படத்தில் இது போல துர்மரணத்தை தழுவிய ஒரே ஹீரோவாக இருப்பார்.

அது ஒரு சாபக்கேடு,ஃப்ஹாத் போல ஈகோவே இல்லாத ஒரு நடிகன் மூலம் தான் இப்பாத்திரம் சாத்தியாமாகியுள்ளது,இதற்கு மற்றொரு உதாரணம் காட்ட பர்ன் ஆஃப்டர் ரீடிங் என்னும் படத்தில் ஹாலிவுட்டின் உச்ச நடிகர் ப்ராட்பிட்டின் சுயஎள்ளல் கொண்ட CHAD என்னும் ஒன்றை சொல்லுவேன்,விளையாட்டாய் வேவு பார்க்க ஜார்ஜ் க்ளூனியின் வார்ட் ரோபுக்குள் போய் இவர் ஒளிய,உடைமாற்ற கதவை திறக்கும் ஜார்ஜ்க்ளூனி,இவரைப்பார்த்து பயந்து தான் 20வருடங்களாக எப்போதுமே உபயோகித்திராத தன் துப்பாக்கியை இயக்கி,ப்ராட் பிட்டின் மூளை சிதறி அங்கேயே இறந்து விடுவார்,24 கேரட் டார்க் ஹ்யூமரின் உச்சம் அது.அது போல எந்த ஸ்க்ரிப்டானாலும் ஏற்றுச்செய்யும் நல்ல நடிகனாக ஃபஹாத் இருக்கிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக,சகாவு அனூப்பின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஊரெங்கும் அதிகாலையிலேயே ஒட்டப்பட்டு,டிவிக்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத்துவங்க,அதன் மூலமாக நாம் அநூப் சடுதியில் கொல்லப்பட்டதை அறிகிறோம்,அது ஒரு மார்ச்சுவரி ,சகாவுக்கள் வெளியே அனூப்பின் உடலுக்காக காத்திருக்க,அங்கே அனூப்பை தூக்கி வளர்த்த மூத்த சகாவு நாராயணட்டன்[டி.ஜி.ரவி]கண்ணில் தாரையாக கண்ணீருடன் நடுங்கும் கைகளில் பால்பாயிண்ட் பேனா கொண்டு அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் அனூப்பின் வயது 34 என்றிருப்பதை,33 என்று திருத்தி எழுதுவார், மிகவும் உணர்ச்சிகரமான காட்சியது, பின்னொரு சந்தர்ப்பத்தில் அவர் ரதீஷனிடம் உரையாடும் போது சகாவு அனூப்பை பள்ளியில் சேர்க்கும் போது அட்மிஷன் பொருட்டு தானே ஒரு வயது கூட்டி சேர்த்துவிட்டேன்,அவன் மிடுக்கன், படிப்பாளி, என்று விவரிக்கும் காட்சியும் நெகிழவைக்கும்.

படத்தில் ஒரு மெடிக்கல்காலேஜ் சான்சிலராக பசங்க ஜெயப்ப்ரகாஷும் உண்டு ,இன்றைய சமூகத்தின் தவிர்க்க முடியாத அவலமாக நிலவும் தனியார் வங்கி வைப்பு திட்டம்,கோல்டு லோன்,கார் பைக் லோன்,பெர்சனல் லோன் போன்றவை எப்படி அப்பாவி நடுத்தர மக்களை விட்டில் பூச்சி கணக்காய் விளக்கில் விழ செய்கின்றன என்று காட்டின.மேலும் இப்போது ஊரெங்கும் ஆயுர்வேத கிளப்,ரிசார்டுகள் என்று பழங்குடியினரின் பூர்வ நிலங்கள் எத்தனை பகாசுரத்தனமாக கபளீகரம் செய்யப்படுகின்றன,மெடிக்கல் காலேஜில் கேப்பிடேஷன் ஃபீஸாக வாங்கப்படும் 25 லட்சம் பணம் எப்படி வருகிறது, எப்படி கணக்கில் காட்டாமல் மறைக்கப்பட்டு கருப்பு-வெள்ளையாக மாற்றப்படுகிறது, அதில் தனியார் வங்கியின் பங்கு என்ன என்று டீடெய்லாக சொல்லியிருக்கின்றனர்,முக்கியமாக மருத்துவர்கள் எப்படி ? தம் புனிதமான  தொழிலை உபயோகித்து ஒரு வி ஐ பி கொலைகாரனுக்கு கடந்த 10 வருடமாக அல்செய்மர் நோய் இருக்கிறது என்று வண்டையாக புளுகி ஒரு 200 பக்கத்துக்கு மருத்துவ அறிக்கை தயாரிக்கின்றனர் ,அந்த குற்றம் சாட்டப்பட்ட கொலைகார விஐபியை போலீசார் தகுந்த சாட்சி இருந்தும் கைது செய்ய முடியாத படிக்கு செய்தல் போன்றவை மிக முக்கியமானவை. அது போன்ற மருத்துவர்கள் சமூகத்தில் களையெடுக்கப்படவேண்டியவர்கள் அவர்களை வெளிசமிட்டு காட்டியது அருமை,

இதெல்லாம் ஒரு சாம்பிள் தான்,படத்தில் முடிவில் சில குறைகள், இருந்தாலும் அது இன்றைய சமூகத்தில் நடக்காதது ஒன்றுமில்லை, எத்தனையோ கோர்டுகளில் பெரும்புள்ளிகளின் மேலே போடப்பட்ட வழக்குகளுக்கு இன்னும் தீர்ப்போ நியாயமோ கிடைத்தபாடில்லை, ஆகவே அதை பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டது போல தோன்றியது.நல்ல சினிமா காண விழைவோர் அவசியம் காணவேண்டிய படம்,மோகன் லாலுக்கு எங்குமே பன்ச் டயலாக் கிடையாது,ஒரு யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக பங்களித்திருப்பதே அதன் சிறப்பு.ரெட் ஒயின் ஃபாசிலின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்.படத்தில் கதாபாத்திரங்கள் 40க்கும் மேலே உண்டு,அதில் எதுவுமே திணிக்கப்பட்டதில்லை,படத்தோடு ஜீவனாக ஒன்றியுள்ளனர்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-

ஆமென்[Amen][மலையாளம்][2013]

மென் மலையாளப் படம் மூன்றாம் முறையாக இன்று பார்த்தேன்,இன்னும் பார்ப்பேன்,சமீபத்தில் பார்த்த ஃபீல்குட் படங்களில் மிகவும் வசீகரித்த படம்,நண்பர் உலக சினிமா ரசிகன் என்னை ஆமென் என்னும் போப்பின் மௌனத்தைப் பற்றிய படம் பார்க்க சொன்னார்,நான் இந்த ஆமென் நினைவாகவே இருந்து விட்டேன்.

எந்த படத்தைப் போலவும் இல்லாத முற்றிலும் மாறுபட்ட காட்சியமைப்பும்,டைட் க்ளோஸ் அப் ஷாட்டுகளும்,கேமரா மேனுக்கு பறக்கத் தெரியுமோ என எண்ணும் படியுமான டாப் வியூ ஷாட்டுகளுமாக  கண்களுக்கு விருந்து படத்துள்ளார் இயக்குனர்.படத்தின் டைட்டில் பாடலான ஆத்மாவின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
இப்படத்துக்கு அபிநந்தனின் ஒளிப்பதிவும் பிரசாந்த் பிள்ளையின் இசையமைப்பும் இருகண்கள்,படத்தின் கதாபாத்திரங்கள் அப்படி ஒரு பங்களிப்பை ஈந்துள்ளனர், ஃபஹாத் ஃபாஸிலின் மணி மகுடத்தில் இப்படம் மேலும் ஒரு வைரம்,அண்டர்ப்ளேயில் ஃபஹாத் போல இனி ஒரு நடிகன் இல்லை என்னும் ட்ரெண்டை உருவாக்கிவிட்டார், மனிதர் முற்றிலும் புதியதான தோற்றத்துடனும் உடல்மொழி,பாவனையுடன் வருகிறார், 

படத்தின் முற்பாதி முழுக்க தோற்றுக்கொண்டே இருக்கிறார்,பைட்டொ யாரிடமாவது முறைத்துக்கொள்ளும் சவடால் காட்சியோ எதுவுமே கிடையாது, காதலியின் அண்ணனிடம்,பேண்ட் மாஸ்டர் கலாபவன் மணியிடம், காதலி சுவாதியிடம் சரமாரியாக அடியும் அறையும் வாங்கி நடித்துள்ளார், ஒரு நடிகன் எந்த ஒரு ஸ்க்ரிப்டிலும் நடிக்க முன்வரவேண்டும்,நடிப்பில் கௌரவம் பார்க்கவே கூடாது என்னும் ட்ரெண்டை உருவாக்கிய ட்ரெண்ட் செட்டர் என்றே சொல்லுவேன்,இவரின் தன்னடக்கம் இவரை எங்கோ உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

ஜிகினா தாளில் மலம் மடிக்கப்பட்ட பொட்டலம் சசி கலிங்காவின் வீட்டுக்கு வெளியே தோன்றும் அந்த முதல் காட்சியிலேயே நமக்கு அப்படி ஒரு சிரிப்பும் உற்சாகமும் தொற்றிக்கொள்கிறது ,அதிலேயே  அந்த காயலுடன் கூடிய கிருஸ்துவ கிராமம் குமரன்கிரியும்,அதன் மக்களும்,அவர்களின் ஏட்டிக்கு போட்டி கௌரவமும் காட்டப்படுகிறது,

ஏற்கனவே குட்டி ஸ்ராங்க்,படத்தில் இத்தனை எழிலான காயலும் பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்த சர்சும்,அதன் திருவிழா ஏற்பாடுகளும்,அதில் தொன்று தொட்டு போடப்பட்டு வரும் நாடகமும் நாம் கண்டிருந்தாலும் ஆமெனின் முற்றிலும் புதிய ஒளிப்பதிவு தொழில்நுட்பமும் நேர்த்தியும் கிறங்கடிக்கிறது, இது வரை மலையாளக்கரையின் காயலின் பிண்ணணியில் வெளியான எந்த ஒரு படத்தையும் விஞ்சி நிற்கிறது படம்,அப்படி எல்லாம் கூடிவந்த ஒரு படம்.

குமரன்கிரி என்னும் அவ்வூரின் புகழ்பெற்ற காலம்சென்ற  ஏழை கிளாரினெட் கலைஞனின் மகனான சாலமனாக ஃபஹாத் ஃபாஸில், அவனை பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே தீவிரமாக காதலித்து வரும் அவ்வூரின் செல்வந்தர் மகளான சூசன்னாவாக சுப்ரமண்யபுரம் சுவாதி,சாலமனின் தந்தையின் நண்பர் இன்றைய பேண்ட் மாஸ்டராக கலாபவன் மணி,நீண்ட நாட்களுக்கு பின்னர் கலாபவன் மணியின் நடிப்புக்கு தீனி போட்ட படம் இது,

தந்தையின் அகால மரணத்தாலும் தன் ஏழ்மையாலும் மிகவும் தன்னம்பிக்கை குறைவால் உழலும் சாலமன் கிளாரினெட்டை தன் காதலி சூசன்னா முன்னர் நன்றாக வாசிக்க தெரிந்தும் தான் சார்ந்து இருக்கும் டி.வர்கீஸ் பேண்ட் சங்கம் முன்பும்,திருச்சபையினர் முன்பும் வாசிக்க முடியாமல் திணறுகிறார். அவ்வப்பொழுது இவரின் காலம் சென்ற தந்தை களாரினெட் கலைஞன் எஸ்தப்பன் இவரின் கனவில் இரு சிறு தேவதைப் பெண்களுடன் வந்து இவருக்கு தைரியமூட்டிச் செல்கிறார்.அருமையான மேஜிக்கல் ரியாலிச வேலை அது, அந்த 400 வருட தொன்மையான சர்ச்சின் இப்போதைய அருட் தந்தை ஆப்ரஹாம்[ஜாய் மேத்யூ] இவரின் வாசிப்பு திறமையை நம்ப மறுக்கிறார்,

இவருக்கு வாய்ப்பு கொடுக்காமலே மட்டம் தட்டுகிறார்.இவர் கோவில் மணி அடிக்க கூட லாயக்கு அற்றவர் ,இருந்தும் அவரின் ஏழ்மைக்கு இறங்கி அந்த வேலையை தருகிறேன் என்று எள்ளல் செய்கிறார்.தன் தந்தையின் ஒரே சொத்தான ஓட்டு வீட்டையும் சொந்தம் கொண்டாட முடியாத படிக்கு அந்த ஊர் சர்ச்சின் கப்பியார் அந்த வீட்டு பத்திரத்தை இவர்கள் குடும்பம் வாங்கிய சொற்ப கடனுக்காக கைப்பற்றி வைத்திருக்கிறார்,அதை கேட்கும் துணிவும் சாலமனுக்கு இல்லை.

இந்நிலையில் இந்த சர்ச்சுக்கு புதிய சிறிய தந்தையாக வந்து சேர்கிறார் வின்செண்ட் வட்டோளி [இந்திரஜித் சுகுமாரன்]. அவரின் சகோதரியும், மைத்துனரும்  அடுத்த ஊர் காயல் கரையைச் சேர்ந்த போட்டி பேண்ட் மாஸ்டர்கள், அவர் மைத்துனர் டி.வர்கீஸ் பேண்ட்டில் இருந்து பிரிந்து போனவர்,அப்படி  இருந்தும் இவரின் பால்ய நாட்களில் இவர் மனம் லயித்த இந்த டி.வர்கீஸ் பேண்ட் சங்கத்தையே  இவர் பெரிதும் விரும்புகிறார்,அதை மீண்டும் உயிர்ப்பித்து வரும் திருவிழாவில் ஜெயிக்க வைக்க  இவரால் ஆன எல்லா உதவிகளையும் முன்னின்று நடத்துகிறார். சிறிதும் தலைக்கனம் இல்லாத ஒரு நல்ல ஆத்மா இந்த சிறிய தந்தை நடை உடை பாவனையில் மிகவும் மாடர்னாக இருக்கும் இவரை பழைய பெரிய தந்தைக்கு பிடிக்காமல் போகிறது,

பழைய தந்தை ஆப்ரகம் செய்யும் சில திரமறைவு வேலைகளுக்கு சிறிய தந்தை வின்செண்ட் முட்டுக்கட்டை போடுவது மேலும் எரிச்சலூட்டுகிறது, இப்போது சாலமனின் காதலி சூசன்னாவை சர்ச்சை புதுப்பிக்கப்போகும் வேலையை செய்யப்போகும் காண்ட்ராக்டரின் அமெரிக்கா ரிட்டன் மகனுக்கு முன்னின்று நிச்சயம் செய்கிறார் பெரிய தந்தை ஆப்ரஹம்,கையாலாகாத சாலமன் என்ன செய்து எல்லா பிரச்சனையையும் முறியடித்தார்,என்பதை அத்தனை சுவையாக சிரிப்பும் களிப்பும் கும்மாளத்துடன் சொல்லியுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ்.அந்த பேண்ட் வாத்தியக்குழுவில் சாலமனுக்கு பக்கபலமாயிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுமே அருமை.

அந்த வருட புத்தாண்டின் பேண்ட் வாத்திய கச்சேரிக்கு ஊரே தயாராகும் காட்சிகள் கொண்டாட்டமான மனநிலையை தரும்,படத்தில் வரும் அந்த குசும்பு பிடித்த சிண்டு முடியும் பால் காரன் கம் பேண்ட் வாசிப்பவன் பாத்திரம் அருமை,தென்னை மரத்திலேயே இருந்தபடிக்கு நியாயம் உதிர்க்கும் பாத்திரம், தன் வீட்டு வாசலில் மலப்பொட்டலம் வைத்தவனை பழிவாங்க அதை தேக்கு இலையில் பார்சலாக்கி தானே அதை எடுத்துச்சென்று அயிரை மீன் என்று சொல்லி சாச்சப்பன் [சசிகலிங்கா] பரிசாக தரும் இடம்,அது திரும்ப அவர் வீட்டு டைனிங் டேபிளுக்கே வரும் இடம் எல்லாமே அருமை.

மிகவும் பிடித்த காட்சியாக அந்த வாய்க்காலுக்கு மேலே 2 அடி அகல மரப்பாலம்,அதில் பாதிரியார் படிப்பிற்காக கப்பியாருடன் பெட்டியுடன் கிளம்பிப்போகும் சாலமனை வழி மறித்து அவன் பள்ளியில் இவளிடம் செய்த சில்மிஷங்கள்,இவள் அவனுக்கு கொடுத்த முத்தங்கள்,என்று நினைவூட்டி அவனை மிரட்டி தன் வழிக்கு கொண்டு வரும் சூசன்னா நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்,அத்தனை குறும்புத்தனம் மிளிரும் காட்சி அது.கப்பியாரை தண்ணீரிலும் தள்ளிவிட்டு விடுவார்.ஃபாதர் வின்செண்டும் அவரின் கொள்கைகளும் மிக அருமை,அவரின் ஃப்ரென்சுக்கார பெண் மிச்சேலுடனான அந்த நட்பு மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

இதில் பாப்பச்சனாக வரும் சசி கலிங்கா மலையாள சினிமாவின்
நடிகர் சசி கலிங்கா
அண்டர்ரேட்டட் நடிகர், ஃப்ரைடேன்னு ஒரு மலையாள படம் அதில் போட் ரிப்பேர் செய்யும் பப்பன்,அந்த பப்பன் அப்படி ஒரு அலும்பன்,யாரும் அவரிடம் ஒரு வேலை வாங்கிட முடியாது,வெறும் தகரம் கொண்டு படகிலே விழுந்த பெரிய ஓட்டையை அடைப்பார்,கதாமாவில் இன்னும் கலக்கலாக செய்திருப்பார்,அதில் சீனிவாசன் வீட்டில் அழையா விருந்தாளியாக டேரா போட்டு பெரும் இம்சையை கூட்டுவார் சசி கலிங்கா,பாலேரிமாணிக்கத்தில் உயர்சாதி போலீஸ் இன்ஸ்பெக்டர்,பணம் வாங்கிக்கொண்டு ஹாஜியாருக்கு சாதகமாக கேஸை மூடிவிடுவார்,கேரளா கஃபேவில் ரேவதி எடுத்த எபிசோடில் ஒரு பெண் தரகன் ,நம்மை கணப்பொழுதில் உறைய வைத்து விடுவார்,ஒரு நடிகன் என்றால் இப்படித்தான் மல்டி டைமென்ஷனிங்காக இயங்க வேண்டும்,ப்ராஞ்சியேட்டனில் இங்க இன்று நீ சாப்பிடுவியா?,நான் பொங்கப்போறேன்,இங்க இன்று நீ சாப்பிடுவியா?,நான் பொங்கப்போறேன்,என்று படம் முழுக்க எதிர்படுவோரை கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு உஸ்தாத் வேடம் சசி கலிங்காவுக்கு,இவரை யாரவது இயக்குனர் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலையை செவ்வனே செய்தால் புண்ணியமாகப் போகும்.
                                         
கள்ளுக்கடை முதலாளியாக  குலப்புள்ளி லீலா மற்றும் அவரின் மகன் தோன்றும் காட்சிகள் அருமை,ஒரு காட்சியில் எதிரி பேண்ட் ஆட்கள் விட்டெறியும் காலி பாட்டில் எங்கே தன் மேல் படாமல் போய்விடுமோ என்று தானே குதித்து எழும்பி பாட்டிலுக்கு தலையை கொடுக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது , போட்டி பேன்ட் க்ரூப்பில் புதிதாக களமிறக்கப்படும்  கண்ணாடி சில்லை தின்னும் வாத்திய கலைஞர், அந்த ஃப்ரெஞ்சுப் பெண்மணி மிச்சேல் ,சாலமனின் அழகிய தங்கையான க்ளாரடா[ரச்சனா] கதா பாத்திரம்,அவளின் காதலன் பாத்திரம் என ஒவ்வொன்றும் நேர்த்தியான படைப்புகள். குடும்பத்தோடு பார்க்கவேண்டிய மலையாள திரைப்படங்களில் ஆமெனுக்கே முதலிடம், இதே போன்ற சர்ச், சிற்றூர் மக்கள் சார்ந்த கதையமைப்பில் நல்ல வெடிசிரிப்புடன் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ரோமன்ஸ்,அதையும் நேரம் கிடைத்தால் பாருங்கள் நண்பர்களே!!!.

இப்போது திருஷ்டி போல சிலபடங்கள் மலையாளத்தில் புதுமையான சினிமா என்ற போலி வேஷத்துடன் வெளியாகி மண்ணை கவ்வியது, ரேடியோ,தல்சமயம் ஒரு பெண்குட்டி, ப்ரேக்கிங் நியூஸ் லைவ், க்ளைமேக்ஸ் போன்ற படங்கள் தான் அவை, மலையாளப் படங்கள் விரும்பி பார்க்கும் நண்பர்கள் அவற்றில் இருந்து பத்தடி தள்ளியே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (146) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)