இர்ஃபான் கான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இர்ஃபான் கான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Bypass | பைபாஸ் |2003 |குறும்படம் | நவாஸுதீன் சித்திக்கி| மௌன குறும்படம்




Bypass 2003 ஆம் ஆண்டு வெளியான crime noir silent குறும்படம், அப்போதைய திரைப்படக் கல்லூரி மாணவர் அமித்குமார் இயக்கியது , ஒளிப்பதிவு கேரளத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இசை இத்தாலிய இசையமைப்பாளர் ஆஸ்கார் வென்ற Dario marianelli

படத்தின் கதைக்களம் ராஜஸ்தானின் ஒரு பாலைவனத்தின் ஊடே ஒரு பைபாஸ் சாலை , இதில் மூன்று தலைசிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர், 

இப்படம் மிகச்சிறந்த ஆக்கத்தைக் கொண்டுள்ளது, கதையின் மாந்தர்கள் ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடராக கருவருத்துக் கொள்கின்றனர், இந்தப் படம் இதன் பெயர் துவங்கி ஒவ்வொரு துறையிலும் ஜொலிக்கிறது.

இர்ஃபான்கான்,  நவாசுதீன் சித்திக்கி, சுந்தர் தன் தேத்தா என மூன்று நடிகர்களுக்கும் பெயர் இல்லை வசனம் இல்லை. இதில் இர்ஃபான்கான் கெட்ட போலீஸ், நவாசுதீன் மற்றும் வாய் பேச முடியாத சுந்தர் தன் தேத்தா இருவரும்  கொள்ளையர்கள்,

இந்த இரட்டையர்கள் ஈவு இரக்கமற்ற கொள்ளையர்கள். அந்த மணல்பாங்கான பைபாஸ் சாலையில் யார் வந்தாலும் பாறைகளை வீசி எறிந்து கார் கண்ணாடியை உடைத்து அவர்கள் பணம் நகை என கிடைப்பதை கொள்ளை அடித்து உய்ப்பவர்கள், 

அன்று ஹனிமூனுக்கு காரில் வந்த இளம் ஜோடி, இவர்கள் எறிந்த பாறையில் கண்ணாடி உடைந்து கணவன் ஸ்டியரிங்கில் தலை மோதி இறந்து விடுகிறான்,நீண்ட ஹாரன் ஒலிக்கிறது,மணல் மேட்டில் இருந்து இறங்கிய நவாசுதீன் ஹாரனை நிறுத்துகிறான், கணவனது பர்சை பறித்து பெரும் பணத்தை எடுத்துக் கொள்ள, 

குற்றுயிராக இருந்த மனைவியை சுந்தர் தன் தேத்தா அனுபவிக்க துடிக்கிறான்,அவள் கழுத்தில் கட்டாரியை பதிக்கிறான்.கணவனது கையில் புதிய தங்க வாட்ச் சரியாக ஸ்டியரிங் வளையத்தின் உள் இருந்த horn வளையத்தின் இடையில் மாட்டிக் கொண்டிருக்க வாட்சை அவிழ்க்க முடியவில்லை,

சற்றும்  தயங்காத நவாசுதீன் சித்திக்கி தன் வெட்டுக் கத்தியால் அவன் கையை வெட்ட ஓங்குகிறார், அப்போது connection ஆக கை துண்டாவதைக் காட்டாமல் தொலைவில் டீக்கடையில் மாமிசம் துண்டு போடுவதைக் காட்டுகின்றனர்.

நீண்ட ஹாரன் ஒலித்ததால் ரோந்தில் இருந்த இர்ஃபான்கான் இங்கு வரும் புல்லட் சத்தம் தொலைவில் கேட்க இவர்கள் காரை அப்படியே போட்டு விட்டு ஓடுகின்றனர்.

இர்ஃபான் இங்கு காரில் இருந்த பிணங்களைப் பார்க்கிறார், கீழே கிடந்த வெற்றுப் பர்சைப் பார்க்கிறார், ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில் கணவன் துண்டான கையில் இருந்து  வாட்சையும் கூலிங் கிளாஸையும் களவாடிக் கொண்டு வட்டாரத்தின் ஒற்றை டீக்கடைக்கு வருகிறார் .

டீக்கடைக்காரன் உணவு தந்து தாஜா  செய்ய அவன் கண்ணை ஊடுருவிப் பார்க்கிறார், அவன் சமீபத்தில் கடத்திய வழிப்போக்கப் பெண்ணை அடைத்து வைத்த அறையின் சாவியை மெதுவாகத் தர, இர்ஃபான் கண்ணில் வெறியுடன் அறைக்குள் செல்கிறார்.

இரண்டு கொள்ளையர்கள் எல்லைக்கு நடந்து அங்கிருக்கும் டீக்கடையில் மதிய உணவு கேட்கின்றனர். நவாசுதீனிடம் காசிருக்குமோ? என்று உணவு தர மறுத்த டீக்கடைக்காரன் கையில் நவாசுதீன் ஜநூறு ரூபாயைத் தர, வாங்கியவன் உணவு தருகிறான்.

இப்போது நவாசுதீன் அந்தப் பெண்ணுடன் டீக்கடைக்குள் பின் கதவு வழியே வர, போலீசைப் பார்த்த இரட்டையர்கள் நழுவி கைகழுவ, டீக்கடைக்காரன் வேறு ஐநூறின் மீதத்தை தர அழைக்க, இவர்கள் அதை சட்டை செய்யாமல் நழுவ எத்தனிக்க, இர்ஃபான் அதை வாங்கச் சொல்கிறார்.
நவாசுதீனுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறது.

இனி என்ன ஆகும்? என்ன ஒரு படம்.இது no country for old men (2007 ) படத்திற்கு முந்தி வந்துள்ளது, நேர்த்தியான படம், மனிதனின் வஞ்சம் பொல்லாதது, பெரியது, ஒன்றை ஒன்று விழுங்குவது, அதை இத்தனை நேர்த்தியாக காட்டியுள்ளார் இயக்குனர். #crime_noir,#silent_short,#short_film,#irfan_khan,#navasudin_siddiqui,#sundar_Dan_detha

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

சலாம் பாம்பே | மீரா நாயர் | இந்தி | 1988

 இயக்குனர் மீரா நாயரின் முதல் படைப்பான சலாம் பாம்பே! (1988) திரைப்படத்தின் Lobby Cards , போஸ்டர்கள் இவை,மீரா நாயர் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் இது. நிஜ சாலையோரச் சிறார்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை மிக இயல்பாக நடிக்க வைத்ததால் இப்படம் உலக அரங்கில் கவனம் பெற்றது,இது வரை உலகத் திரைப்பட விழாக்களில் பனிரெண்டு உயரிய விருதுகளை வென்றுள்ளது.


இர்ஃபான்கான்  ஜுராஸிக் பார்க் படத்தில் விஞ்ஞானியாக நடித்த பின்னர் அகில உலக அளவில் உச்சானிக் கொம்பிற்குப் போய் விட்டார்.


அவரின் அறிமுகப் படமான மீரா நாயரின் சலாம் பாம்பேவை ஒருவர்  மறக்க முடியாது, மீரா நாயர் கை மோதிரக் கை, அவர் அறிமுகம் செய்த நடிகர்கள் அடைந்த உலகப் புகழ் அளவிட முடியாதது.பல தோல்விகள் கண்ட டென்ஸல் வாஷிங்டன்னிற்கு இவரின் மிஸிஸிபி மஸாலா நல்ல ப்ரேக் த்ரூவைத் தந்தது.


சலாம் பாம்பே படத்தில் சிறுவன் கிருஷ்ணா என்ற சாய்பு தன் அண்ணனின் பைக்கை கோபத்தில் எரித்து விடுகிறான், வீட்டில் அம்மா திட்டி அதன் இழப்பீட்டுக்கு சம்பாதிக்க அனுப்ப , சர்கஸில் சில மாதங்கள்  வேலை செய்கிறான், ஒருநாள் அவர்கள் சம்பளம் தர இயலாமல் இவனுக்கு கல்தா கொடுத்து காலி செய்து போய்விட,இவன் மும்பையின் தாராவிக்கு வருகிறான்.அங்கே அனாதைத் தெருப் பொருக்கிகளின் சிநேகம்.இருந்தும் அவன் குழந்தைத்தனம் மாறாதவன், நெஞ்சில் ஈரம் உள்ளவன்.பீஜபூர் போவதையே சதா ஜெபிக்கிறான்.


கொடிய தாராவியில் அம்மா பாசம் அடிக்கடி அவனை ஆட்கொள்ளும், ஒவ்வொரு முறை சாய்புவின் சேமிப்பு ஐநூறைத் தொடுகையிலும் ஏதாவது மலைமுழுங்கிகள் அதை கபளீகரம் செய்திடுவர்.


அவன் அப்படி ஒரு தருணத்தில் அம்மாவுக்கு கடிதம் எழுதுவான், கல்லையும் கரைக்கும் காட்சி இது, இர்ஃபான் கான் கராரான எழுத்துக்காரன்.மிகுந்த சொற்சிக்கனக்காரன் போல பாவனை.


ஒரு வரிக்கு பத்து காசு வாங்கிக் கொண்டு சாய்புவின் அம்மா சுந்தரிக்கு கடிதம் எழுத அமருவான். சாய்பு அம்மாவிடம் நான் உறங்குகையில் உன் அருகாமைக்கு ஏங்குகிறேன் என எழுதச் சொல்வான். 


அதற்கு இவன் ஐம்பது காசு அதிகம் ஆகும் என்பான், சாய்பு பரவாயில்லை என்பான், இர்ஃபான் விலாசம் கேட்கையில் பெங்களூரின் அருகே உள்ள பீஜபூர் என்பான்.


பின்கோடு எதுவும் அறிந்திருக்க மாட்டான், அவன் போனதும் இர்ஃபான் மிகுந்த கல்நெஞ்சத்துடன் கடிதத்தை ஸ்டாம்புக்கு பிடித்த கேடு என்று கசக்கி எறிவான்.


மிக அருமையான அறிமுகக் கதாபாத்திரம், அதன் பின் அவர் அடைந்த உயரம் கணக்கில்லை, நடிப்பென்றால் எல்லா கதாபாத்திரமும் செய்ய வேண்டும்,  படம் வெளியாகி 29 வருடங்கள் ஆகிறது,நம்மாலோ  அவராலோ  இக்கதா பாத்திரத்தை என்றும் மறக்கவே முடியாது, 


சாய்புவாக இத்தனை அற்புதமாக நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் ஷஃபீக் ஸையத்துக்கு இரண்டாம் இன்னிங்ஸ் அமையவேயில்லை,  பெங்களூருவில் இன்று  ஆட்டோ ஓட்டுகிறார்.


https://en.m.wikipedia.org/wiki/Shafiq_Syed


அவரின் பேட்டி இங்கே


https://youtu.be/g_0CpMYjUYQ













ரோட் டு லடாக் குறும்படம்[2003][இந்தியா] [15+] [Road To Ladakh]

ண்பர்களே!!! சமீபத்தில் டாரண்ட் தளத்தை நோண்டிக்கொண்டிருந்த போது இந்த குறும்படம் கண்ணில் பட்டது,பெயர் நன்றாயிருக்கிறதே!!! என்ற ஆவல் மேலிட தரவிறக்கினேன், பார்க்க ஆரம்பித்தேன், நல்ல ஈர்ப்பு, அபாரமான காட்சியாக்கம், படபடப்பை எகிறவைக்கும் பிண்ணனி இசை, தவிர இர்ஃபான் கான் என்னும் இந்திய பேரலல் சினிமாவின் தலைக்கல் வேறு , மனிதர் இதிலும் கலக்கியிருக்கிறார், படத்தில் 7 வருடம் முன்பே துணிச்சலாக உடலுறவுக்கு பின்னான அசதியில் தன் புட்டத்தையும்  கேமராவுக்கு காட்டியிருக்கிறார்.

னிதர் சலாம் பாம்பே படத்தில் சிறுவன் சாய்ப்பாவுக்கு காசுக்கு கடிதம் எழுதித்தரும் வேடத்தில் அறிமுகமானவர்,அதில் ஒரு வார்த்தைக்கு 50 பைசா என்று சிறுவனிடம் கேட்டு, அவன் அம்மாவுக்கு என்னை நினைத்து கவலைப்படாதே!!! என எழுத எக்ஸ்ட்ரா 1.50 ரூபா ஆகும் என்று கதிகலங்க வைப்பார். சிறுவன்  சாய்ப்பா போனதும், இதெல்லாம் எங்கே போய் சேரப்போகிறது?  என்று அதை கசக்கி எறிவார். அதில் அழுத்தமாக பதிந்தவர், சரசரவென அகில உலக கவனத்தை, பேரலல் சினிமாவில் தன் உழைப்பை ஈந்ததின் மூலம் பெற்றிருக்கிறார். இவரின் உடல்மொழி, பார்வை, வசன உச்சரிப்பு  எந்த கதாபாத்திரம் செய்தாலும் இவருக்கு கைகொடுத்திருக்கிறது.

ஸ்லம்டாக் மில்லியனரில் இன்ஸ்பெக்டர் வேடம், நேம்சேக்கில் அமெரிக்கவாழ் வங்காள குடும்பதலைவன் வேடம், மைக்ரேஷன் என்னும் எயிட்ஸ் பிரச்சார குறும்படத்தில் ஒரு ஹோமோசெக்சுவல் ஆசாமி கணவன், மைட்டி ஹார்ட் படத்தில் பாகிஸ்தானிய இன்ஸ்பெக்டர்,கதை பறையும் போல் aka குசேலன் ஹிந்தி ரீமேக்கான பில்லுவில் தமிழ் பசுபதியின் வேடம் என்று நீங்காமல் மனதில் நிற்பார்.
 =====0000=====
ந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் குமாருக்கு முதல்படம், மிகக்குறைந்த பட்ஜெட், படத்துக்கு இரண்டே பிரதான  பாத்திரம், அருமையான ரோட்மூவி + ரொமாண்டிக் த்ரில்லர் குறும்படம்,  இதற்கு இர்ஃபான் கானும் அமெரிக்க மாடல் நடிகை கோயல் புரியும் பணமே வாங்கிக்கொள்ளவில்லையாம்,  தவிர அட்வென்சர் டூரிசம் செல்வதாக நினைத்துக்கொண்டு தங்கள் வாகனங்களிலேயே அந்த லே என்னும் இந்தியாவின் கடல்மட்டத்தின்  மிக உயரமான  மலைத்தொடருக்கு வந்து  போனார்களாம்.

ந்த லடாக் செல்லும் சாலை, எதிர்படும் சிறு தொங்கு பாலங்கள், சிற்றாறுகள், மிகக்குறுகலான ஹேர்பின் பெண்டுகள், அபாயகரமான பள்ளத்தாக்குகள் , தேநீர்கடை , இரவு தங்கும் தார்பாய் டெண்டு லாட்ஜுகள், அங்கே தங்கி ஓயாமல் சரணம் சொல்லும் புத்தலாமாக்கள்,  சிடுக்கெடுத்து பேன் வாரும் சீக்கியர்கள், மூனு சீட்டாடும் மங்கோலிய நாடோடிகள் என்று நாம் அதிகம் பார்த்திராத ஒரு லொக்கேஷன்.

குறும்படம் என்பதாலும் முழு சுவாரஸ்யத்தையும் நீங்கள் உணர வேண்டும் என்பதாலும் கதை சொல்லாமல் செல்கிறேன்.  இதில் அகோர தனிமையாலும் கோகெய்ன் போதையினாலும் வேட்டையாடப்பட்டு எதைத் தேடிப்போகிறோம்?!!!   என்றே தெரியாத,    மாடல் அழகி கோயல் புரி [ Koel Purie] செமத்தையான அழகு, என்னமா? துணைக்கு மிகவும் ஏங்கி, தேக்கிவைத்த விரகதாபத்தை கட்டுடைத்த வெள்ளமாய் பிரதிபலிக்கிறார்?!!! அருமையான நடிப்பு,   இவரை நான் சாமுராயில் வந்த அனிதா என்றே நினைத்தேன். அப்படி ஒரு உருவ ஒற்றுமை.  படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

து இந்திய பாகிஸ்தானிய எல்லை, கார்கில் போர் நடந்த  இடத்துக்கு மிக அருகில் வேறு இருப்பதால்,  அந்த இடங்களில் சென்று படம் பிடிக்க குழுவினர் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கவேண்டும், படம் முழுக்க கேமரா மேன் ராஜ்ஜியம் தான்.  தவிர கதையிலும் இராணுவ கேம்ப் சம்மந்தப்பட்டுள்ளது, ஒரு சிறந்த ஆர்மி ஆஃபிசர் வேடமும் உண்டு.  மொத்தம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம்,  லைவ் ரெகார்டிங்,  டப்பிங் இல்லை,  இதே இயக்குனரின் அடுத்த குறும்படமான த லிட்டில் டெரரிஸ்ட் 2005 ஆஸ்கர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டதாம்.  அதையும் பார்த்துவிட்டு பகிர்கிறேன்.

இது யூட்யூப் முன்னோட்ட காணொளி:-

=====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)