இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500 வீடுகள் தான் முன் பதிவாகியுள்ளதாம்.
ஏய்ப்பவன் ஏய்க்கவே செய்வான், ஏய்ப்பது அவனது இயல்பு, மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், படித்தவர்கள் தான் சென்று இவர்கள் வலையில் விழுகின்றனர், அடுத்த முறை எந்த ப்ராஜக்ட் லாஞ்ச் சென்றாலும் ப்ரெசன்டேஷனில், மாடல் வீட்டில், விசுவலில் மயங்கி 1 லட்சம் ₹ முன்பணம் தருவதற்கு உடனே க்ரெடிட் கார்டை எடுத்து நீட்டாதீர்கள், இன்று தான் இந்த விலை நாளை 500₹ கூடும், நாளை மறுநாள் 1000₹ கூடும் என எத்தனை அவசரப்படுத்தினாலும் அசராதீர்கள்.
நிதானமாக யோசித்து முன்பதிவு செய்யுங்கள்,மூல ஆவணங்கள் அடங்கிய கோப்பை உடனே கையோடு கேளுங்கள்,அதன் பிறகு காசோலை தாருங்கள்,அல்லது கிரெடிட் கார்ட் தாருங்கள்.
மூல ஆவணங்கள் அடங்கிய கோப்பில் அவசியம் இருக்க வேண்டிய ஆவணங்கள்.
1.பட்டா (Patta)
2.சிட்டா (Chitta)
3.அடங்கல் (Adangal)
4.அ' பதிவேடு ('A' Register)புதிய மற்றும் பழைய கிரயத்துக்கானது
5.நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) புதிய மற்றும் பழைய நில அளவைகளுக்கானது
6.40 வருடங்களுக்கான வில்லங்க சான்றிதழ்கள்
7.தாய் பத்திரங்கள் தொகுப்பு
8.சமீபத்தில் சொத்தை வாங்கி பத்திரம் செய்தவர் இதை மற்றவர்களிடமிருந்து திரட்டி கிரயம் செய்ததற்கான சரியாக லிங்க் கொண்ட பத்திரம்.
9.அடுக்ககம் கட்டி விற்கும் நிறுவனம் அந்த குறிப்பிட்ட நிலத்தின் மூன்று புறமுள்ள அண்டை நில உரிமையாளர்களுடன் கலந்து பேசி நில எல்லைக் கற்கள் நடுவதற்கு செய்து கொண்ட ,பதிவு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப் பத்திரம்.
10.சாலையின் அகலம், அடுக்ககம் விற்பவர்கள் 30 அடி (குறைந்தபட்சம்) அணுகுசாலையை அரசுக்கு பரிசாக விட்டுத்தந்த்தற்கு பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரம்.
உங்கள் அடுக்ககம் அமையும் நிலத்தின் வகை (land use) அது எத்தனை பேர்களின் பெயரில் இதன் முன்பு இருந்துள்ளது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா எத்தனை பரப்பளவு உள்ளது, அதை அவர்களிடமிருந்து விற்க பவர் வாங்கியது யார்? அல்லது கிரயம் செய்தது யார்? போன்ற முக்கியமான விபரங்கள், பவர் தந்தவர்களின் அல்லது விற்றவர்களின் விபரம், வாரிசு சான்றிதழ்,உயிருடன் இல்லாதவர்களின் இறப்பு சான்றிதழ் என அனைத்தும் இந்த பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் இருக்க வேண்டும், குறிப்பாக FMB சர்வே படத்தின் அசல் பிரதியை வாங்குபவர் கண்டிப்பாக பார்க்க வேண்டும், சர்வே அளவுகள் வரைபடத்தில் மீட்டரில் உள்ளதா?அடியில் உள்ளதா? லிங்கில் (1 survey link = 20.1 cm ) உள்ளதா, FMB வரைபடத்தில் all the dimensions are in meter, feet, link என்ற பிரத்யேக note உள்ளதா என சரி பார்க்க வேண்டும் , அதே அளவுகள் project brochure site plan ல் சரியாக காட்டப்பட்டுள்ளதா ? CMDA கட்டிட அனுமதி வரைபடங்களில் சரியாக FMB அளவின் படி காட்டி வரையப்பட்டுள்ளதா?
எனப் பார்க்க வேண்டும் , ஸ்டேஷனரி கடையில் பூதக்கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள் 100₹ வரும், மஞ்சள் நிற highlighter வாங்குங்கள் 25₹ வரும், பொறுமையாக ஒவ்வொரு cross reference ஐயும் high light செய்து படியுங்கள், ஐயங்களை சிகப்பு பேனா கொண்டு குறியுங்கள், அடுக்ககம் கட்டி விற்பவரிடம் "TTR " எனக் கத்தி அந்நியன் அம்பி போல தெளிவு பெறுங்கள் , படித்த பலரும் ஏமாறுவது UDS என்ற பரப்பளவில், அடுக்ககத்தை விற்கையில் ஒரு மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நிலத்தை பகிர்ந்து விற்பனைக் கிரயம் செய்துவிட்டு, அல்லது அந்த பரப்பளவுக்கு கட்டிடம் கட்ட திட்ட அனுமதி வாங்கி விட்டு, அந்த பெரிய நிலப்பரப்பில் புதிய தொகுப்பு வீடுகளை பேராசையுடன் திடீரென கட்டுகின்றனர், அல்லது தனியாக அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு கட்டுமானர் விற்பதும் கூட சாதாரணமாக நடக்கிறது.
இந்த project site plan ல் plot boundary உடன் FMB sketch ல் உள்ள எல்லைகள் அதன் அளவுகள் ஒத்துப் போகிறதா? என அவசியம் பாருங்கள்,அ பதிவேட்டில் உள்ள பெயர்கள் மற்றும் கிரயப் பத்திரத்தில் உள்ள பெயர்கள் மற்றும் இனிஷியல் வயது, பரப்பளவு இவை ஒத்துப் போகிறதா என ஆராய்ந்து பாருங்கள், பென்சிலில் பரப்பளவை எழுதி கூட்டுங்கள், மொத்த நிலப்பரப்பு கூட்டி வருவதுடன் பத்திரம் பதிந்த நிலப்பரப்பை சரி பாருங்கள், இதை லீகல் பார்க்கும் வழக்கறிஞர் பார்ப்பார் என மெத்தனமாக இராதீர்கள், அவர் 100% ,360° பார்க்க மாட்டார் ,இதை கடன் வழங்கும் வங்கி சரி பார்க்கும் என மெத்தனமாக இராதீர்கள்,அவர் 100% ,360° பார்க்க மாட்டார்கள் ,அதன் பிறகு விபரீதமாகி பல ஆண்டுகள் தீராத மன உளைச்சலில் சிக்கித் தவிக்க வேண்டி வரும்.
அப்படித்தான் தாழம்பூரில்
Casagrand Aspires,Casagrand Smart Town,Casagrand Laurels,Casagrand Elan,
Casagrand Ritz,Casagrand Amberley,Casa grand என வாழ்நாள் கனவு இல்லம் ,கனவு அடுக்ககம் வாங்கிய ஐயாயிரம் வீட்டு உரிமையாளர்களை தீராத கவலையில் ஆழ்த்தி உள்ளது இந்த பொல்லாத அனாதீன வில்லங்கம்,
யூட்யூபில் சென்று இங்கே வீடு வாங்கிய உரிமையாளர்கள் தந்த துயர் மிகு பேட்டிகளை தேடிப் பாருங்கள்.
நீங்கள் வாங்குவது அனாதீன நிலமா அதற்கு உங்கள் பெயரில் தனிப்பட்டா கிடைக்குமா? என ஆராய ஒரு வாரமாவது அவகாசம் எடுத்து அலசி ஆராயுங்கள், சிக்கிக் கொண்டால் போயிற்று, ஹவுஸிங் லோன் தந்த எந்த தேசிய வங்கி தனியார் வங்கி, உங்களால் பயன் பெறும் Rera என ஆபத்தில் எதுவும் வந்து உதவாது.
காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் பற்றி எழுதியது