நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் [18+][2007]No Country for Old Men

ருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக  ஹாலிவூடின் "பெர்ஃபெக்‌ஷன்" வகை திரைப்பட பிரம்மாக்கள்.பளாக் ஹுயூமர் ராஜாக்கள்.சகோதர இயக்குனர்கள் கோயன் பிரதர்ஸ், இவர்கள் படைப்புகள்  நம்மை யூகிக்க தூண்டுபவை.  அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்று  நம்மை குழப்புபவை, ஆனால் பிடிப்பவை. என்ன அழகாக செயற்கையாக பின்னணி இசைசேர்ப்பே இல்லாமல், கார்மக் மெக்கார்த்தியின் நாவலை சுவை குறையாமல் படமாக்கியுள்ளனர்? ஷூ ஓசை, வாகன உறுமல், நாய் உறுமல், ரேடியட்டர் சத்தம்,சிலிண்டர் சத்தம்  போன்றவை மட்டும் உபயோகித்து இந்த அற்புத படைப்பை தந்து 4 ஆஸ்கரும் வாங்கியிருக்கிறார்கள்? நம்மை கதை செல்லுமிடமெல்லாம் கூட்டி செல்லும் காமிரா கோணங்கள். அருமையான எடிட்டிங். என்று ஒவ்வொரு பிரேம்களையும் பார்த்து பார்த்து செதுக்கிய தரம். எதை சொல்லுவது எதை விடுப்பது?
=============0000============== 
னைவரின் மனம் கவர்ந்த வில்லன் ஜேவியர் பர்டெம் இந்த படத்தின் கதையை கேட்டதும்.எனக்கு கார் ஓட்டத்தெரியாது!என் ஆங்கில உச்சரிப்பு  சுத்த மோசம். எனக்கு வன்முறையே வராது என்றதும். கோயன் சகோ சொன்னது.அதனால் தான் உன்னை அழைத்தோம்!! என்று. படத்தில் ஜேவியர் பர்டத்தின் அந்த பபூன் போன்ற தோற்றம் 1900 களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண் தரகனுடைய ஹேர் ஸ்டைலாம். அதை போலீஸ் டைரி ரெகார்டுகளில் கண்டு லயித்த கோயன் சகோ.இவருக்கு மேக்கப் டெஸ்டின் போது அதே தோற்றத்தில் மேக்கப் போட்டு பரம திருப்தியுற்றனராம். பின்னர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ஜேவியர் பர்டம், ஐயோ என்னக்கொடுமை!!!! இன்னும் 2 மாசத்துக்கு எவளும் என்கூட படுக்கமாட்டாளே!!! என்று விளையாட்டாய் சொன்னாராம்.
=============0000============== 
படத்தின் கதை:-
ண்பதுகளில் மேற்கு டெக்சாஸ் மாகணத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ஷெரீப் டாம் பெல் (டாமி லீ ஜோன்ஸ்) தன் 25 வருட  ஷெரிஃப் வேலையில் கண்ட மிக கொடூரமான சம்பவங்களை நமக்கு பகிர்வது போல துவங்குகிறது படம்.தன் தந்தையும் தாத்தாவும் வக்கிலுக்கு படித்துவிட்டு ஷெரிஃபாக இருந்தனர் என்றும் அவர்கள் காலத்தில் இது போல கொலை, கொள்ளை ,அக்கிரமங்கள் அதிகம் இல்லை,அவர்கள் துப்பாக்கி கூட வைத்துக்கொண்ட தில்லை , ஆனால் என் நிலைமை பாருங்கள் சமீபத்தில் 14வயது பெண்ணை கொன்ற இளைஞனை நான் மின்சார நாற்காலிக்கு அனுப்பினேன்.அவனை அப்படி அனுப்பவில்லை என்றால் அவன் மீண்டும் கொலை செய்வான்.இது போல நிறைய சம்பவங்கள்.அப்படி ஒருவன் தான் ஆண்டன் சிகர்.என நிறுத்த.

முன் தினம் இரவு பாரில் நடந்த கொலைக்காக சந்தேகத்தின் பேரில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட ஆண்டன் சிகர் (javier bardem)ஒரே போலீஸ்காரர் கொண்ட போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் தன் மேலதிகாரி  டாம் பெல்லுக்கு தொலைபேசுகையில் தன் கை விலங்கால் அவர் கழுத்தை நெறித்து கொன்று பின்னர் தன் பிரதான ஆயுதமான கேட்டில் கன் (அமெரிக்காவில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்துக் கொல்வதற்கு முன்னர் ஒரு தீயணைப்பான் போல உள்ள இதை வைத்து மாட்டை தொட்டு க்ளிக்கினால் மாடு நிலைகுத்தி நின்று பரலோகம் போய்விடும்.பின்னர் அறுக்க ஏதுவாயிருக்கும்) எடுத்துக் கொண்டு போலீஸ் காரை திருடிக் கொண்டு அகல்கிறான்.

நெடுஞ்சாலையில் முன்னே சென்ற காரை போலீஸ் ஹாரன்  தந்து நிப்பாட்டி,வயது முதிர்ந்தவரை வெளியில் வருமாறு அன்புடன் பணிக்க,அவர் பயத்துடன் என்னையா?ஆபீசர் என்கிறார்.அவர் வெளியே வந்ததும் இவன் அவரை அன்புடன் நெருங்கி கொஞ்சம் தலையை நிமிருங்கள்,கொஞ்சம் என்று பணிக்க அந்த குழாயை அவர் நெற்றியில் வைத்து அழுத்த பால்ரசு குண்டு வெளியேறி அவருக்கு நெற்றிக்கண் திறக்கிறது.பின்னர் குண்டு சிலிண்டருக்குளேயே திரும்புகிறது.இப்போது அந்த காரில் டல்லாஸ் நோக்கி போகிறான் அந்த வித்தியாச சைக்கோ.
காட்சி மாறி:-
றண்ட பாலைவனம்:மான் வேட்டைக்கு வந்த வெல்டர் மாஸ் ( ஜோஷ் ப்ரோளின்) தன் தொலைநோக்கியில் தூரத்தில் ஒருஉயர்ரக வேட்டை நாய் (பிட் புல்) குண்டடியுடன் நொண்டியடிப்பதை பார்த்து,அங்கு விரைய.நிறைய வேட்டை நாய்களும்,முன்னிறவு மெக்ஸிகன் பிரவுன் டோப் போதை மருந்து பரிமாற்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர் உடலுமாய் காட்சி தர,ஈ மொய்க்கிறது.ஒரு பிரவுன் டோப் பார்சல்கள் நிறைந்த ஃபோர்ட் பிக்கப் காரில் இருந்த டிரைவர் குற்றுயிராய் இருக்க, அவரிடம் நெருங்கி அவரின் விசை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு.அவரிடம் பணம் எங்கே?மற்றவர்கள் எங்கே?
என்று கேட்டவன்.அவர் அக்வா (தண்ணீர்) என்கிறார்.இவன் என்னைடம் நீரில்லை என்று சொல்லிவிட்டு அவனின் மேகசினையும் எடுத்த்டுக்கொண்டு விலகுகிறான்,பின்னர் மரத்தடியில் ஒருவன் ஒரு லெதர் சாட்செலுடன் அமர்ந்திருப்பதை கண்டு நோட்டமிட்டு,

நீண்ட நேரம் அசைவின்றி இருக்கவே ,அவன் இறந்திருக்க கூடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நெருங்கிச் சென்று.அவனின் சில்வர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு அவனருகில் இருந்த ஸாட்செல் ஐ (லெதர் சூட்கேஸ்)திறக்க அதில் இரண்டு மில்லியன் டாலர் புதிய நோட்டுக்கள் இருப்பதை காண்கிறான்.(உள்ளே பணம்செல்லுமிடம் சொல்லும் டிரான்ஸ்மீட்டர் இருப்பதை உணராமல் )அதை எடுத்துக் கொண்டு போய் தன் ட்ரெயிலரில் பதுக்குகிறான்.தன் மனைவி பணம் எப்படி வந்தது என்று கேட்டு இவன் சொன்னதும்.மனைவி கார்லா (கெல்லி மெக்டொனால்ட்) மருள்கிறாள்.

ரவு தூங்குகையில் அந்த கார் டிரைவர் நீர் கேட்டு தான் நீர் இல்லாததால் கொடுக்க இயலாமையை நொந்துகொண்டு அவருக்கு நீர் அளிக்க கேன் தண்ணீருடன் பாலைவனம் விரைகிறான்.மனைவியிடம் தான் ஒருவேளை திரும்பவில்லையென்றால் தன் அம்மாவை தான் மிகவும் நேசித்ததாய் சொல் என்கிறான்.அவள் குழம்பி அவள் தான் இறந்துவிட்டாளே? என கேட்க,அப்போது நானே அவளை நேரில் பார்த்தால் சொல்கிறேன் .என்கிறான். அந்த பாலைவனம் சென்றவன். அங்கே ட்ரக் டிரைவர் சுடப்பட்டு இறந்திருக்க.இவன் சுதாரிப்பதற்குள் ,தூரத்தில் இவனின் ட்ரக் டயர்கள் சுடப்பட்டு காற்று  வெளியேறும் ஒலி கேட்கிறது,

துங்கியவன் அங்கே மற்றொரு டிரக்கின் வெளிச்சத்திட்டு தெரிய ,அது நகர்ந்து மேலே ஒருவன் சுட்டுக்கொண்டே இவனை துரத்த.இவன் விழுந்து எழுந்து முட்டிபெயர்ந்து பல் உடைந்து தலை தெறிக்க ஒரு ஆற்றில் உருண்டு நீந்தி மறுகரை அடைந்து தன்னை கடைசிவரை பின்னால் துரத்தி வந்த வேட்டை நாயை நனைந்த ஸில்வர் துப்பாக்கியை சூடாக்கி ஊதி சுட.அதோ  குண்டு கிளம்பி நாய் சுருள்கிறது.பொழுதும் விடிகிறது.

டம்பை துளைத்த சிறு கற்களையும் ,முள்ளையும் எடுத்து சட்டையை கிழித்து காயத்திற்கு கட்டி வீடு வருகிறான்.பயந்து போன மனைவியிடம் 2 மில்லியன் டாலர் பணத்துக்காக நீ கொஞ்ச காலம் தலைமறைவாகமாட்டாயா? இனி நீ வால்மார்ட்டிற்கு வேலைக்கு போகவேண்டாம். என்று தேற்றியவன் மனைவியை ஒடெஸ்ஸா என்னும் ஊரில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்கு பஸ் ஏற்றிவிட்டு மாஸ் அகல்கிறான். புதையல் காத்த பூதமாகிறான்.

காட்சி மாறி:-

டெக்சாஸின் ஒரு பெட்ரோல் பங்கில் கல்லாவில் இருந்த முதியவர் சிகரை நோக்கி நட்புடன் நீங்கள் வந்த பாதையில் மழை போல?என்று வாயை விட.உங்களுக்கு எப்படி தெரியும் என்றவன்.இவர் நான் உங்களை பார்த்திருக்கிறேன் . என்றதும் உனக்கு அது பற்றி என்ன வந்தது என மடக்கியவன்.இவன் அவரை நெருங்கி சூரிய காந்தி விதைகளை மென்று கொண்டே நீங்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறீர்கள்?டல்லாசில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?இவர் நான் 20 வருடங்களாக இங்கே இருக்கிறேன்.இதற்கு முன்னர் டெம்பிள் டெக்ஸாஸில் இருந்தேன். திருமணமாகி என் மனைவின் அப்பாவுடைய இந்த பெட்ரோல் பங்கினை பார்த்துக்கொள்கிறேன் என மருண்டவர்.

என்றும் யாராலும் மறக்க முடியாத "கால் இட்" காட்சி காணொளி:-
-------------------------------------------

-------------------------------------------

னக்கு கடையை மூட வேண்டும் என சொல்ல.இவன் எப்போதும் எத்தனை மணிக்கு மூடுவீர்? இவர் இருட்டும் போது, இப்போது இருட்டி விட்டதா? எப்போது தூங்கப்போவீர்? இவர் 9-30 மணிக்கு. இவன் அப்டியென்றால் அந்த நேரம் வருகிறேன்.இவர் நான் தூங்கும் போது ஏன் வருகிறீர்.இவன் இந்த பங்கிற்கு பின்னால் இருப்பது தானே உன் வீடு.என்றவன், இவர் இன்னும் மருள.இதுவரை எவ்வளவு அதிகமான தொகையை காயின் டாஸில் பிணையாக வைத்திருப்பீர்? கிழவர்.நான் பிணையே வைத்ததில்லை.சரி இப்போ வையுங்கள். இதில் தான் உங்கள் வாழ்வே அடங்கியுள்ளது. பிரெண்டோ என்கிறான். நாணயத்தை சுண்டி போட்டு பூவா தலையா? சொல்லுங்கள் என காசை விரல்களால் பொத்த.(இந்த காட்சிக்கே இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கும்.எவ்வளவு ஆங்கில படம் பார்த்தாலும் இது போன்ற ஒரு நடிப்பு முன் நிறுத்தப்படவில்லை.ஈடு செய்ய முடியவில்லை .என்ன தெனாவெட்டு.சிரிப்பை வெளியிடா கண்களில் குறும்பு.தாடையை மென்று கொண்டே "கால் இட்" என்று கேட்க.


ந்த கிழவர் (gene jones) தான் வாழ்ந்த  கலைவாழ்க்கைக்கு  அர்த்தமாக இந்த ஒரு காட்சியை சொல்லிக் கொள்ளலாம்.அப்படி ஒரு மருட்சியை கண்களில் காட்டியிருப்பார்.இது போல சின்ன சின்ன விஷயங்களால் தான் இது படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது என்பேன். முடிவில் கிழவர் தலை என்று சொல்லி உயிர் பிச்சை பெறுகிறார்.குறும்பன் சிகர் அவரிடம் தான் தந்த காசை கல்லாவில் போடாதீர்,என்று சொல்ல,அவர் திகைத்து ,வேறு எங்கே போட? இது உங்கள் உயிரை காத்த காசு.இதை கல்லாவில் போடாதீர் ,பின்னர் அது சாதாரண காசுகளுடன் கலந்து விடும் என்று சொல்லி அகல்கிறான்.

ப்போது அந்த மெக்ஸிகன் பிரவுன் டோப்  கடத்தல் முதலாளி பணத்தை தேட சிகரை வாடகை கூலியாக அமர்த்துகிறான்.அவனுக்கு சம்பவ இடத்தை காட்ட சொல்லி தன் ஆள் இருவரை அனுப்ப,அங்கு விரைந்த சிகர் மாஸின் ட்ரக்கின்  விஐடி டேக்கை (காரை அடையாளம் காணும் பட்டை) நெம்பி எடுத்துக் கொண்டு,பணம் இருக்கும் இடம் காட்டும் டிரான்ஸ்பாண்டரையும் பெற்றுக் கொண்டு பின்னர்  அவர்கள் இருவரையும் சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் திருடிய காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுகிறான்.அந்த விஐடி டேகின் எண்ணை வைத்து மாஸை தேட புறப்படுகிறான்.

காட்சி மாறி:-
பொழுது விடிகிறது.ஷெரீப் டாம் பெல் தன் ட்ரக்கில் இணைக்கப்பட்ட  கூண்டில் குதிரையில் ஏறிக்கொண்டு கூட தன் சக அதிகாரியையும் கூட்டிக் கொண்டு.அந்த பாலைவனம் சென்று துப்பு துலக்குகின்றனர்.அங்கே அதற்குள்  அந்த ப்ரவுன் டோப் பார்சல்கள் இருந்த ட்ரக் காலி செய்யப்பட்டிருக்கிறது. அங்கே மாஸின் ட்ரக்கை கண்டதும் இது மாஸ் என்பவனுக்கு சொந்தமான வண்டி. என்று சொல்லி ஷெரிஃபும் அவரின் சகாவும்  மாஸின்  வீடு போகின்றனர்.

ப்போது சிகர், மாஸ் குடியிருக்கும் ட்ரெய்லர் செல்கிறான்,அங்கே  இவனுக்கு மாஸின் டெலிபோன் பில் கதவுக்கு அருகே கிடைக்க, எடுத்துக்கொண்டவன் ,ஃப்ரிட்ஜில் இருந்து பால் எடுத்து பருகுகிறான்.பின்னர் மாஸின் குடியிருப்பு  அஸோசியேஷன் அலுவலகம் செல்கிறான்.அங்கு ரிசெப்ஷனில் இருந்த  குண்டு பெண்மணியிடம் (கோயனின் படங்கள் அனைத்திலும் ஏன் ரிசப்ஷனிஸ்ட் பெண்கள் குண்டாக ஓவர் மேக்கப்புடன் நகைப்புக்கிடமாக இருக்கின்றனர்?) மாஸ் வேலை பார்க்கும் அலுவலக விபரம் கிடைக்காமல் போக ,அவளை சுட்டுக்கொல்ல நினைத்தவன்,உள்ளே கழிவறையில் ஃப்ளஷ் சத்தம் கேட்டு இரண்டு சாவு வேண்டாம் என விலகுகிறான்.டெலிபோன் பில்லில் இருந்த எண்களை வைத்து மாஸின் சொந்த ஊர் ஒடெஸ்ஸா என்று அறிகிறான்.அங்கிருந்து அகல்கிறான்.பின்னர் அவ்வூருக்கு காரை விடுகிறான்.

சிறிது நேரத்தில் ஷெரிப் டாம் பெல்லும் அவர் சகாவும் மாஸின் வீடு வந்து அப்போது தான் உடைக்கப்பட்ட கதவின் லாக்கை பார்த்து சிகர் வந்து போனதை கண்டு பிடிக்கின்றனர்.இப்போது இருவரையும் தீவிரமாக தேடுகின்றனர்.டாம் பெல் சிகர் விட்டுப்போன மிச்சப் பாலை பருகுகிறார்.

இப்போதுஆரம்பிக்கிறது பூனை சுண்டெலி ஆட்டம்:-

மாஸ் டாக்ஸி பிடித்து ஒரு மோட்டல் சென்று இரண்டு அறை எடுத்து ஒன்றில் தான் தங்கி,மற்றொன்றில் பணத்தை ஏசி ஷாப்டில் கிரில்லை கழற்றி உள்ளே தள்ளி ஒளித்து வைக்கிறான்.வேட்டை துப்பாக்கியும் ,ரவையும் ,கூடாரம் அடிக்கும் அலுமினிய குழாயும் வாங்கி வந்து அதில் யாருக்கும் சந்தேகம் வாரா வண்ணம் நவீன குழல் துப்பாக்கியும் ,சாட்செல்லை வெளியே எடுக்க தொரட்டியும்  தயாரிக்கிறான்.

காட்சி மாறி:-
ப்போது டாம் பெல்லுக்கு சிகரால் கொல்லப்பட்ட முதியவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வர,அதில் குண்டு துளைத்தது உண்மை,ஆனால் குண்டு காணவில்லை என இருக்க,குழப்பமடைகின்றனர்.அவனின் ஆயுதம் குறித்து ஆராய்கின்றனர்.பின்னர் மாஸின் மனைவியை ஒடிஸ்ஸா என்னும் ஊர் சென்று ஒரு உணவகத்துக்கு வரவழைத்து சந்திக்கிறார். உன் கணவனை சரணடைய சொல்,அந்த மாஃபியாக்காரர்கள் மிகப் பொல்லாதவர்கள்.மாடுகளை அறுப்பதற்கு முன்னர் ஒரு வகை ஆக்ஸிஜன்  சிலிண்டர் துப்பாக்கியைக் கொண்டு உடம்பில் சல்லடை போடுகின்றனர். அதை இப்போதெல்லாம் மனிதனை கொல்ல உபயோகிக்கின்றனர்.இன்னும் இதுபோல நிறைய கேஸுகள் என் அனுபவத்தில் என அவளுக்கு பயமூட்டுகிறார்.உங்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு.மாஸ் எப்போது போன் செய்தாலும் எனக்கு தெரிவி.என தன் அட்டையை கொடுத்து விட்டு செல்கிறார்.

காட்சி மாறி:-
ப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி சிகரின் நடவடிக்கையால் மிகவும் நொந்து போகிறார்.சிகர் தனக்கே வாழைப்பழம் கொடுத்ததை எண்ணி வியந்தவருக்கு,பணத்தை தேட கார்சன் வெல்ஸ் (வுட்டி ஹாரல்சன்-செவென் பவுண்ட்ஸ்) என்பவன்,தான் சிகரை பார்த்திருக்கிறேன்,அவனின் குணாதிசயம் எனக்கு தெரியும் என்றதும். பொறுப்பை ஒப்படைக்க அவன் சிகரையும் மாஸையும் தேடி புறப்படுகிறான்.அவன் போனதும் அதே பொறுப்பை மெக்ஸிக்கர்களான நான்கு பேர் கொண்ட கும்பலிடம் விட்டு மாஸின்  மனைவியை கண்காணி என்று சொல்லுகிறான்.

காட்சி மாறி:-

சிகர் மாஸின் மனைவி சொந்த ஊருரான ஒடெஸ்ஸாவுக்கு பயணிக்கையில்  மாஸ் தங்கியுள்ள மோட்டலை கடக்க, டிரான்ஸ்பாண்டர் அலறுகிறது, காரை உள்ளே செலுத்தி வேவு பார்த்து பார்க் செய்கிறான். இப்போது கையில் பெரிய நவீன சைலன்சர் குழல் துப்பாக்கியும் வைத்திருக்கிறான். உள்ளே சென்று அறை எடுக்கிறான். தன் பெரிய பூட்ஸுகளை கழற்றியவன்.பூனை போல காரிடரில்  நடக்க பணம் இருக்கும் அறை அருகே செல்ல சத்தம் அதிகரிக்க. ட்ரான்ஸ்பாண்டரை அணைத்தவன், ஒரு அறைக்குள் லாக்கை உடைத்தெறிந்து நுழைகிறான்,

ள்ளே கட்டிலில் ஒருவன் எழுந்து சுட இவன் விலகி அவனை சுடுகிறான்.பின்னர் கழிவறை மரசுவற்றை சுட்டுத்தள்ள ,ஒருவன் சுருண்டு மடிகிறான்.உள்ளே நுழைந்தவன் பாத்டப்பில் பயந்து பதுங்கிய ஹோமோ ஒருவன் என்னை விட்டுவிடு ”மேட்”என்று கெஞ்ச.உனக்கு எப்படி நான் ஹோமோ என தெரியும் ? என்று ஷவர் கர்டனை மூடி அவனை சுடுகிறான். பின்னர் அங்கு பணத்தை வெறியுடன் தேடுகிறான்.

க்கத்து அறையில் இருந்த மாஸ் சுதாரித்து பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு முதியவர் காரில் ஹிட்ச் ஹைக்கிங் செய்து (லிஃப்ட் கேட்டு) தொலைவில் உள்ள இன்னொரு ஹோட்டல் சென்று இறங்கி அறை பதிவு செய்து.மேனேஜருக்கு 100டாலர்  பணம் தந்து என்னை தேடி யார் வந்தாலும் எனக்கு தெரிவி.என்கிறான்.பணம் வந்ததும் தூக்கம் போன கதை தான்.ஸ்டாச்சலை பிரித்து பணக்கட்டை ஆராய்ந்தவன் அப்போது தான் பணக்கட்டுக்கு உள்ளே குடைந்து வைக்கப்பட்டிருக்கும் அந்த டிரான்ஸ்பாண்டர் எமனை கண்டு வெளியே வைக்கிறான்.தன் அறைக் கதவையே குறி பார்க்கிறான்.

ப்போது சிகர் இங்கும் வந்து விடுகிறான். ஹோட்டல் மேனேஜரை கொன்றுவிட்டு.மெல்ல காரிடாரில் நடந்து ட்ரான்ஸ்பாண்டர் கருவியின் உதவியுடன் ஒவ்வொரு கதவாக மோப்பம் பிடிக்கிறான்.இவன் மேனேஜருக்கு போன் செய்ய ரிங் போகிறது . இவன் அறை விளக்கை அணைக்கிறான்.

வன் அறை கதவிடுக்கில் சிகரின் கால் தெரிகிறது.மாஸ் ஆயத்தமாகிறான். சிகர் லாவகமாக அடுத்த கதவின் அருகே சென்றுவிட,மாஸ் அப்பா என்று மூச்சு விட ,அப்போது சிகர் கதவின் லாக்கை கேட்டில் கன்  வைத்து பிளக்க அந்த லாக் பறந்து இவன் மேல் விழ,இவன் திரும்ப சுட்டுவிட்டு பணத்துடன் சன்னல் வெழியே குதித்து ஓடி,அவன் துரத்த,இவன் ஒளிந்துகொண்டு ஹோட்டல் மேனேஜர் அறை வந்து பார்க்க,அங்கே பூனை மட்டும் அமைதியாய் பாலை குடிக்க,மேனேஜர் கொல்லப்பட்டிருக்கிறார்.

விரைந்து வெளியேறியவன், சுதாரித்து அங்கே வந்த காரை மறித்து,உள்ளே ஏற ,சிகர் அந்த ஓட்டுனரை தலையில் சுட்டுக்கொல்ல,மேலும் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்க,இவனுக்கு வயிற்றின் ஓரத்தில் குண்டு துளைத்து நிறைய ரத்தம் வெளியேற, இவன் லாவகமாய் காரை இயக்கி சாலையில் மெல்ல கடக்கிறான்,சிகர் சுட்ட குண்டுகளால் நிலைகுலைந்தவன் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த இன்னோரு காரின் மேல் வண்டியை மோத ,மெதுவாய் இறங்கி பதுங்கியவன்,சிகரின் மேல் வெறியேறி அவன் வர காத்திருந்து அவனை மூன்று ரவுண்டு சுட,சிகருக்கு தொடையில் பலத்த காயம் பட்டு அங்கேயிருந்து ஓடி ஒளிகிறான்.இப்போது மாஸ்அந்த காரில் ஏறி இயக்குகிறான்.

மிகுந்த வலியிலும் மெக்ஸிக்கோ எல்லை செல்ல,அங்கே ஆற்று பாலத்தில் நடந்து வந்த சிறுவரிடம் அவன் அணிந்திருந்த கோட்டை  500 டாலர் தந்து வாங்குகிறான்.அவர்களிடம் பீரையும் வாங்கி அருந்தியவன்.ஸாட்செல்லை மெதுவாக பாலத்தின் தடுப்பு வேலியில் ஏறி அங்கு இருக்கும் ஆற்றங்கரையில் அடையாளம் வைத்துக் கொண்டு வீசுகிறான்.மெல்ல இறங்குகிறான்.மயக்கம் வர , வாந்தி எடுக்கிறான்.
  1. மாஸ்  உயிர் பிழைத்தானா?
  2. அவனின் மில்லியனர் கனவு நனவானதா?
  3. மாஸ் தன் மனைவியுடன் சேர்ந்தானா?
  4. இடைத்தரகன் கார்சன் வெல்ஸ் என்ன ஆனான்?
  5. ஷெரீஃப்  டாம் பெல் நிம்மதியாக ஓய்வு பெற்றாரா?
  6. வித்தியாச சைக்கோ சிகர் என்ன ஆனான்?

    போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=============0000==============  
இனி படத்தின் முழுக்கதையை படிக்க விரும்புவோர் இக்காணொளியை தாண்டி வந்து படிக்கவும்:-

=============0000============== 
மெதுவாக மெக்ஸிகோவில் கள்ளத்தனமாய் காவலர் தூக்கத்தில் இருக்கும் போது நுழைந்தவன்,ஒரு சர்ச் வாசலில் சுருள்கிறான்.இவனருகில் ஒரு கரோல் பாடகர் குழு  கிடார் இசைத்து பாட விழிக்கிறான்.இவன் அவர்களுக்கு  100 டாலர் ரத்தக்கறை படிந்த பணம் தந்துவிட்டு மயங்க.போலீஸ்காரர்கள் இவனை மெக்ஸிக்கோ மாகாண மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

காட்சி மாறி:-

சிகர் இப்போது அடிப்பட்ட சிங்கமாக வலியில் துடிக்கிறான். எந்த மருத்துவமனைக்கும் போக முடியா சூழ்நிலை.ஒரு மருந்துக்கடை முன்னே நின்ற காரின் பெட்ரோல் டாங் மூடியை திறந்து. பஞ்சு உருண்டைகளை உள்ளே போட்டு தன் சட்டை கிழிசலை கிழித்து அதை பெட்ரோல் டாங்கில் முக்கி தீ வைக்க சிறிது நொடியில் கார் வெடிக்கிறது.கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க,மருந்து கடை உள் சென்று மிக சரியாக பார்த்து மரத்து போகும் ஊசி,பஞ்சு,கிருமி நாசினி,ஆல்கஹால் கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கிளினிக்கில் நுழைந்து,நோயாளி அறையின் கழிவறையில் புகுகின்றான்,

பிளாஸ்டிக் பேப்பர் விரித்து தன் பெரிய ஷூக்களை ரத்தம் வடிய கழற்றியவன்.தன் பேண்டை கிழித்து எறிகிறான்.பாத்டப்பில் தண்ணீரில் நீந்தியவன்,வெளியேறி கால்களை நீட்டி அம்மணமாக தரையில் அமர்ந்து ,அந்த குண்டு காயத்தை சுற்றி மூன்று முறை மரத்துப்போகும் ஊசி போட்டவன் ,ஸ்டெரிலைஸ் செய்த கத்தியை வைத்து குண்டை கீறி, லாவகமாக நெம்பி எடுத்து. கட்டு போடுகிறான். வலி குறைய ஊசி போட்டுக்கொள்கிறான். கிளினிக்கில் இருந்த பேஷன்ட் ஒருவரின் உடையை அணிந்து வீறு கொண்டு கிளம்புகிறான்.

காட்சி மாறி:-

கார்சன் வெல்ஸ் மருத்துவமனையில் மாஸை சந்தித்து பணம் எங்கே? அதை என்னிடம் தந்துவிடு,உனக்கு அதில் பங்கும் சிகரிடமிருந்து பாதுகாப்பும் தருகிறேன் என்று சொல்கிறான். மாஸ் தன்னிடம் இருந்த பணம் போதையிலும் பெண்களிடம் போனதிலும் செலவாகிவிட்டது, என்று சொல்லி மழுப்புகிறான். கார்சன் சிகரை பற்றி உனக்கு தெரியாது,அவன் எத்தனுக்கு எத்தன். அவன் யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன்.அவனை பார்த்தும் உயிரோடு இருப்பவர்கள் நான் ,அப்புறம் நீ,அவன் இப்போது உன் மனைவியை தேடி அவள் ஊருக்கு போவான், அவளையும் உன் மாமியாரையும் கொலைசெய்வான் என பயமுறுத்திவிட்டு  மாஸை மனம் மாறினால் பேசு என தன் ஹோட்டல் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு அகல்கிறான்.

பின்னர் கார்சன் வெல்ஸ், மாஸ் குண்டடிபட்டு மயங்கி விழுந்த இடம் சென்று சோதனையிட, தடுப்பு வேலிக்கு அப்பால் ஆற்றங்கரையில் புதருக்குள் ஒளிந்திருக்கும் சேட்செல்லை பார்க்கிறான். போலீசுக்கு தெரியாமல் எப்படி? அந்த எல்லையோர வேலியை தாண்டி ஆற்றை அடைவது? என யோசிக்கிறான். தன் ஹோட்டல் அறைக்கு போகிறான்.படியேற ,பின்னாலேயே  சிகர் துப்பாக்கியுடன் நிற்கிறான். மனதிற்குள் தன் கதை இன்று முடிந்தது என்று சொல்லிக்கொண்டே  அறைக்குள் நுழைகிறான்.

கார்சன் அவனிடம் தன் ஏடிஎம்ல் 14,000 டாலர்கள் பணம் உள்ளதாயும், தன்னுடன் வந்தால் அதை எடுத்து தருவதாயும் சொல்ல,அவன் ஏளனமாய் பிச்சைக்காசு வேண்டாம்.சாட்சலில் இருந்த பணம் எங்கே? என கேட்டவன், அது ஆற்றங்கரையில் இருப்பதாய் சொல்லியும் நம்பாமல், மாஸின் மருத்துவமனை எங்கே என அறிகிறான். பணத்தை அவனிடம் எப்படியும் வாங்கிவிடுவேன், என்கிறான்.அப்போது போன் மணியடிக்க, நான்காவது மணியில் கார்சனை  அவன்  எதிர்பாரா நொடியில் சைலன்சர் துப்பாக்கியால் சுடுகிறான்.

பின்னர் ரிசீவரை எடுத்தவன்.போனில் எதிர்முனையில் மாஸ் பேச.உனக்கு நான் யார் என்று இந்நேரம் தெரிந்திருக்கும், உன் மனைவி உனக்கு உயிருடன் வேண்டும் என்றால் அந்த பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடு என்று மிரட்ட.(சிகர் போன் பேசுகையில் தன காலடியில் ரத்தம் நகர்ந்து வருவதை கண்டு தன கால்களை தூக்கி மெத்தை மேல் வைப்பான், மீண்டும் பேச்சை தொடர்வான் கிளாஸிக்கான காட்சியது ) மாஸ் நான் அதற்கு முன் உன்னை கொன்று பின்னர் தூக்கில் போட்டு விடுவேன் என பதில் சொல்லி போனை பலமுறை அடித்து சாத்துகிறான்.


காட்சி மாறி:-

சிகர் இப்போது மெக்சிக்கன் ப்ரவுன் டோப் கடத்தல் முதலாளியின் அலுவலக கதவின் லாக்கரை  உடைத்து,உள்ளே நுழைந்து அவனை கழுத்தில் சுட்டு கொன்றவன்.அருகே இருந்த அக்கவுண்டண்டை,இன்னும் யார் அந்த பணத்தை தேடுகிறார்கள் என கேட்டு அவனுக்கு உயிர்பிச்சை அளித்து விட்டு வருகிறான்.போகும் வழியில் கார் பழுதாகிவிட.அங்கு உதவிக்கு வந்த ஒரு கோழிகள் வண்டி டிரைவரை கொன்று அந்த காரில் எல் பாசோ  என்னும் நகரம் போகிறான்.

காட்சி மாறி:-

மாஸ் இப்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறியவன், ஆற்றங்கரையில்  உள்ள செக்போஸ்டிற்கு மருத்துவ உடையுடன் வர,போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறான்.உன்னிடம் உடை கூட இல்லை நீ எப்படி அமெரிக்க எல்லை போகிறாய்.என அவர் கேள்விகள் கேட்க,இவன் தான் ஒரு எக்ஸ் மிலிட்டரி சர்வீஸ் மேன், இரண்டு முறை போரில் இருந்திருக்கிறேன், வியட்நாம் போரில் 1966 முதல் 1968 வரை இருந்தேன். எனசொல்லி அவரிடம் நம்பிக்கையை பெற்று, எக்ஸிட் பெற்று வெளியேறுகிறான். பின்னர் துணிக்கடை சென்றவன் ஆடம்பர துணிவகைகளும், தொப்பி, ஷூக்கள் வாங்குகிறான். அதை அணிந்தவன் ஆற்றங்கரை அருகே சென்று சாட்செல்லை எடுத்துக்கொண்டு பொது தொலைபேசியில் இருந்து கார்லாவுக்கு போன் செய்கிறான்.

தான் எல் பாசோவில் இருப்பதாகவும் அம்மாவை கூட்டிக் கொண்டு இங்கு வந்து விடு என்றும் கூறுகிறான்.அவள் இங்கு வந்தவுடன் அவளிடம் அந்த சாட்சலை தந்து அவளை ஒரு உல்லாசத்தீவிற்கு அனுப்பிவிடுவேன்,அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அங்கே அவளுடன் வந்து சேர்வேன் என்கிறான். தான் தங்கப்போகும் ஹோட்டல் முகவரியை கூறுகிறான்.அவள் தன் கணவனின் உயிரைக்காக்க பக்தி சிரத்தையுடன் செரிப் டாம் பெல்லிற்கு தகவல் சொல்ல அவர் அங்கு வர விழைகிறார்.

காட்சி மாறி:-

கார்லா தன் தட்டு முட்டு சாமான்களுடன் எல்பாஸோ செல்லும் பேருந்து நிலையத்துக்கு டாக்ஸியில் வர மெக்சிக்கர்களான நான்கு பேர்,கார்லாவை பின் தொடந்து  வந்து அவர்களின் சாமான்களை இறக்க உதவுகின்றனர் ,அழகாய் பேச்சு கொடுத்து அவர்கள் செல்லுமிடம்,ஹோட்டல் விலாசம் கேட்டுக்கொள்கின்றனர்.  நாங்களும் அந்த பகுதி வாசிகள் தான் என்று சொல்கின்றனர் , அன்புடன் இவர்களை ஒரு பேருந்தில்  ஏற்றி அனுப்புகின்றனர். கார்லாவின் புற்று நோயாளியான அம்மா  எல்பாசோ காரர்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்? என வியக்கின்றனர். இவர்களுக்கு முன் அந்த ஹோட்டலுக்கு மெக்சிக்கர்கள்  காரில் விரைகின்றனர்.

காட்சி மாறி:-

ப்போது மாஸ்  ஹோட்டல் அறையில் குதூகலமாய் மனைவிக்கும் அவள் அம்மாவுக்கும் காத்திருக்கிறான்.பணத்தை ஒரு வழியாக மீட்டு கொண்டு வந்து ஹோட்டல் அறையின் ஏசி ஷாப்டின் உள்ளே வைத்தாகி விட்ட மகிழ்ச்சி வேறு, மனைவியை எதிர்பார்த்து ஜாலிமூடில் இருந்தவனுக்கு பக்கத்து அறை அழகி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே பீர்  அருந்த கூப்பிட ,இவன் மறுக்கிறான்.பீரில் ஆரம்பிக்கும் வேறு எங்கோ போய் முடியும் என்கிறான்.

ங்கு வந்த மெக்சிக்க கும்பல் அவனை அடித்து உதைத்து பணம் எங்கே?என கேட்டு மாஸை துன்புறுத்தி ,நீச்சல் குள அழகியை அவன் காதலி என எண்ணி சுட்டுக்கொன்று குளத்தில் மிதக்க விடுகின்றனர்.அதில் நடந்த கைகலப்பில் மாஸ் மெக்ஸிக்கன் ஒருவனை கொல்ல ,மாஸிடம் பணம் பற்றிய பதில் வராததால் அவனையும் சுட்டும் கொன்று அறையை குலைத்து போட்டு தேடியும் பணம் கிடைக்காமல் போலீஸ் வரும் சத்தம் கேட்டு இடத்தை விட்டு அகல்கின்றனர்.இப்போது மூன்று பிணம், ஷெரிஃப்  டாம் பெல்  மாஸ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து துணுக்குறுகிறார். உள்ளூர் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து துப்பு துலக்குகிறார்.

ப்போது கார்லாவும் அவள் அம்மாவும் ஹோட்டலுக்குள் நுழைய.தன் கணவன் பிணமாய் கிடக்கும்  காட்சியை கண்டு கார்லா வெடித்து அழுகிறாள்.அப்போது  ஷெரிப் டாம் பெல் கார்லாவை தேற்ற வழியின்றி திகைக்கிறார்.பிரேத பரிசோதனை முடிந்து உள்ளூர் போலீஸ் அதிகாரியிடம் பணம் படுத்தும் பாட்டை பற்றி அங்கலாய்த்தவர், அன்று இரவு ஒரு அனுமானத்தில் சிகர் கண்டிப்பாக மாஸின் அறையில் பணம் தேட வருவான் என நினைத்தபடி நுழைகிறார்.

தே போல ஏசி கிரில் கழற்றி வைக்கப்பட்டுள்ளது.சிகர் இருட்டில் இவரை பார்க்கிறான்.ஆனால் சுடவில்லை.இவருக்கும் சிகர் உள்ளே தான் இருக்கிறான் என தெரியும்ஆனால் அவனை பிடிக்கவில்லை.உள்ளே நுழைந்தவர், கழிவறை விளக்கை போடுகிறார்.அறையை நோட்டமிடுகிறார். இன்னும் மூன்றே நாளில் விருப்ப ஓய்வு பெறும் தமக்கு எதற்கு? இந்த வீண் உயிர் பணயம் !!என கதவை மூடிவிட்டு நல்ல பிள்ளையாக ,தன் மாமா வீட்டிற்கு சென்று தாம் ஓய்வு பெறப்போகும் செய்தியை சொல்கிறார்.டாம் பெல்லின் மாமா முன்னாள் சிறை அதிகாரி,டாம் பெல்லின் இன்னொரு ஷெரிஃப் மாமாவுக்கு கடமையை செய்கையில் சமூக விரோதிகள் சுட்டு வீட்டு  வாசலிலேயே இறந்ததை  நினைவுகூர்கிறார்.

ல்ல வேளை உனக்கு அப்படி ஏதும் ஆகவில்லை என்று சொல்கிறார். இப்போது உள்ள கயவர்கள் நவீன ஆயுதங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் பணத்தை தேடி அலைந்து, நிறைய குற்றங்கள் செய்கின்றனர். இந்த விளையாட்டு நமக்கு சரிப்படாது. இப்போதெல்லாம் முதியோருக்கு காலமில்லை என்கிறார்.முத்தாய்ப்பாக.


காட்சி மாறி:-

புற்றுநோயாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து வேதனையிலும் இறந்த தன் தாயை  அன்று தான் சவ அடக்கம் செய்துவிட்டு  நிறைய கடன்களுடன்  மன வேதனையில் வீட்டுக்குள் ஓய்வெடுக்க கார்லா நுழைகிறாள், ஏற்கனவே படுக்கை அறையில் ஒயிலாக சிகர் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்கிறாள். அவனிடம் தன்னிடம் பணம் இல்லை, தான் இப்போது கடனாளி, தன் அம்மாவின் ஈமைச்சடங்கிற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என மன்றாட.

சிகர், அது பற்றி எனக்கு கவலையில்லை. உன் கணவனுக்கு நான் உன்னை கொல்வதாய் வாக்களித்திருக்கிறேன். அவன் பணத்தை தந்து உன்னை மீட்க தவறிவிட்டான். நான் அவனிடம் சொன்ன படி உன்னை கொல்லப்போகிறேன்.
என்று கூறி  காசை சுண்டி போட்டு பூவா தலையா? என கேட்கிறான்.அவள் மிகுந்த துக்கத்தில் பதில் சொல்லாமல் இருக்க. அவளை சுட்டு கொல்கிறான்.(படத்தில் இக்காட்சி கிடையாது,ஆனால் மெக்கார்த்தியின்  நாவலில் உண்டு)

பின்னர் பதட்டத்தில் காரை விரட்டிக் கொண்டு நான்கு ரோடு கூடும் சந்திப்பில் வேகமாய் இடம் வலம் பாராமல் செல்ல ,அங்கு வலப்புறம் வந்த  கார் இவன் காரில் மோதி அந்த கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரலோகம் போக ,இவனுக்கு முழங்கை உடைந்து எலும்பு வெளியே துருத்திக் கொண்டு வலிக்கத் தொடங்க.காரிலிருந்து வெளியேறுகிறான்.தூரத்தில் போலீஸ் சைரன் கேட்கிறது.

ங்கு வந்த இரு சைக்கிள் சிறுவர்களிடம் சிறுவன் அணிந்திருந்த டீ ஷர்டை கேட்கிறான். அவன் இவனுக்கு உதவ டீஷர்டை கழற்றி கொடுக்க , அதை முடிச்சு போடச் சொல்லி வாங்கியவன்  உடைந்த கைக்கு தூளி கட்டிக்கொண்டு நூறு  டாலர் தந்து யாரிடமும் தன்னைப்பற்றி சொல்லக்கூடாது என்று எதிர்திசையில் விந்தி விந்தி நடந்து , பணத்தை பாதுகாக்க கிளம்புகிறான். அந்த வித்தியாச சைக்கோ.இப்போது அந்த இரு சிறுவர்கள் பணத்துக்காக சண்டைபோட ஆரம்பிகின்றனர்.

=============0000============== 
ப்போது நிகழ்காலத்தில் (2007) முன்னாள் ஷெரிப் டாம் பெல் தன் மனைவியுடன் நல்ல நிம்மதியான வாழ்க்கையை ஒரு தேநீருடன் எதிர் கொள்வது போல் படம் முடிகிறது. முடிந்ததற்கான அடையாளமே இல்லை. எதோ வெறுமையாய் முடித்தது போல தோன்றினாலும்,அதுவே இவர்களின்  அடையாளம். இதில் இயக்குனர்கள் பல விஷயங்களை நம் யூகத்துக்கே விட்டு விட்டார்க்ள்.நம்மையும் யோசிக்க வைத்து படத்துக்கு கதை எழுத வைத்து விட்டார்.இது தான் ஐயா மிக நுட்பமான படைப்பு என்பது.

ந்த படம் பார்த்த அனைவரும் பபூன் போல தோற்றமளிக்கும் ஆண்டன் சிகருக்கு விசிறியாகவே ஆகிவிடுவார்கள்,என்றால் மிகை இல்லை.என்னை கேட்டால் இந்த நூற்றாண்டின் மனம் கவர் வில்லன் என்றே சொல்லுவேன்.என்ன நண்பர்களே சரி தானே?படத்தில் படுக்கையறை காட்சிகளே கிடையாது. ஆனால் கலை நுட்பத்துடன் கூடிய மிகைப்படுத்தப்பட்ட ரத்தம், வன்முறை, தத்ரூபமான சதை கிழிசல்கள்.காயங்கள்,உண்டு. ஆகவே சிறுவர்களுக்கு  ஆன  படம் இல்லை.என் உலக சினிமா தேடலுக்கு இந்த படமே ஆழமாக பிள்ளையார் சுழி போட்டது என்றால் மிகையில்லை.
=============0000============== 
இப்படம் 4 ஆஸ்கரையும்,ஏனைய 93 விருதுகளையும்,44 நாமினேஷன்களையும் பெற்றுள்ளது:-
Best Achievement in Directing
Ethan Coen
Joel Coen

Best Motion Picture of the Year
Scott Rudin
Ethan Coen
Joel Coen

Best Performance by an Actor in a Supporting Role
Javier Bardem

Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published
Joel Coen
Ethan Coen

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (350) தமிழ் சினிமா (249) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (129) மலையாளம் (79) சென்னை (76) கட்டிடக்கலை (72) கட்டுமானம் (66) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) வாஸ்து (44) கலை (42) ஆன்மீகம் (39) உலக சினிமா (33) சினிமா (33) ஃப்ராடு (28) தமிழ்சினிமா (24) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) இசை (12) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) பாலிவுட் (10) விருமாண்டி (10) அஞ்சலி (9) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) அரசியல் (8) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) மோசடி (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நகர வடிவமைப்பு (3) நகைச்சுவை (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சாதிவெறி (2) சிந்தனை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விஜய்காந்த் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)