Seven Pounds செவென் பவுண்ட்ஸ்

இரு வருடங்களுக்கு முன், தன் கவனக்குறைவால், வருங்கால மனைவி "சாரா" ( robinne lee) மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்த ஆறு பேரின் வாழ்வை ஒரு விபத்தில் பலி கொண்ட முன்னாள் ஏரோநாடிகல் எஞ்சினியர் "டிம் தாமஸ்"(வில் ஸ்மித்) குற்ற உணர்வின் உச்சமாக தற்கொலைக்கு முயன்று முடியாமல், தன்னால் பாதிக்கப்பட்ட ஏழு பேரின் உயிர்களுக்கு இணையாக ஏழு நல்ல காரியங்களை நிகழ்த்துகிறார். அவை என்ன ?     செவென்  பவுண்ட்ஸ்  என்றால்             என்ன?
பதிலை பின்னர் சொல்கிறேன்

டிம் தனக்கு தாமே தண்டனை கொடுக்க நினைக்கிறார். விபத்திற்கு பின்னர் ஒரு வருடம் கழித்து நுரை ஈரல் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ,வருமான வரித்துறை அதிகாரியான , தன் அண்ணன் பென் தாமசுக்கு தன் "lung lobe" ஐ தானம் செய்கிறார். இனி புகை பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறார் . ஆறு மாதங்கள் கழித்து ஒரு நல்ல உள்ளம் கொண்ட, குழந்தைகள் நல தொண்டு நிறுவன அதிகாரி ஹோலீக்கு தன் "liver" இன் ஒரு பகுதியை தானம் செய்கிறார். மேலும் தன் ஒரு கிட்னியை நல்ல உள்ளம் கொண்ட "ஜார்ஜ்" என்னும் ஜூனியர் ஹாக்கீ பயிர்ச்சியாளருக்கு தானம் செய்கிறார். 


அதன் பின்னரும் தொடர்ந்து தன்னால் உயிருடன் இருக்கும் போதே தானம் தரக் கூடிய அவயங்களுக்கு உகந்த நல்ல பண்பாளர்களை தேடுகின்றார். அப்போது ரத்த புற்று நோயால் அவதிப்படும் ஒரு மருத்துவருக்கு ஒரு முறை "தன் எலும்பு மஜ்ஜையை தானம் செய்கிறார்.
அவரை நல்லவரென்று நம்பியிருக்கையில், அவரது ஆஸ்பத்திரியில் திடீர் விஜயம் செய்து ஒரு மூதாட்டியிடம் அவரை பற்றி விசாரிக்கிறார்.


அந்த மூதாட்டி மருத்துவர் தம்மை எப்போதும் (நீரை மிச்சம் செய்ய)குளிக்க வைக்க மாட்டேன் என்கிறார்,என்றும், தனக்கு அவர் பரிந்துரைக்கும் மருந்துகள் குணப்படுத்துவதற்கு மாறாக தூக்கத்தை வரவழைக்கின்றது என அழுதபடி கூற, இவர் அந்த மூதாட்டியை இரு கைகளிலும் ஏந்தி "பாத்ரூம் "எங்கே? எனக்கேட்டு அங்கு சென்று குளிக்க வைக்கிறார். அங்கு வந்த டாக்டர் சமாதானம் செய்ய முயற்சிக்க, இவர் நான் உன்னை நம்பினேன், நீ சக உயிரை மதிக்காதவன்,உனக்கு போய் நான் என் அறிய எலும்பு மஜ்ஜையை தானம் செய்தேனே? இனி அது உனக்கு இல்லை. என்று அவர் தலையை ஒரு மோதுமோதுவாறே?அப்பா... வில்ஸ்மித் ,வில்ஸ்மித் தான் ... 

பின்னர் ஒரு ஏழை சிறுவன் நிக்கொலசுக்கு தன் எலும்பு மஜ்ஜையை தானம் செய்கிறார்.(முதுகு தண்டில் இருந்து திரவம் எடுக்கின்றனர்) அவ்வப்பொழுது, அரசின் உயர் பதவியில் இருக்கும் தன் உயிர் நண்பன் "dan" ஐ சந்தித்து. தன் இதயம் நன்கொடைக்கும் விழித்திரை நன்கொடைக்கும் உகந்த நல்ல மனிதரை காட்டுமாறு கேட்கிறார். அவரை தான் தாம் "executor" ஆக நியமித்துள்ளதாக சொல்லுகிறார். இதற்கு சம்மதிக்காத அவரை உரிமையுடன் கடிந்து கொள்கிறார். தன்னுடைய அழகிய கடற்க்கரை பங்களாவை காலி செய்து, பின் சுத்தம் செய்து பூட்டி நகரின் மையத்தில் ஒரு மோட்டல் விடுதியில் அறை எடுக்கிறார். 


தன் கண்ணாடி சிலிண்டர் வடிவ மீன் தொட்டியில் தனக்கு பிடித்த ஜெல்லி மீனை போட்டு நீந்த விடுகிறார். ஒருநாள் குழந்தைகள் நல தொண்டு நிறுவன அதிகாரி ஹோலீயை அணுகி மிகுந்த வறுமையில் உதவிக்கு வாடும் நல்ல மனிதரை தனக்கு பரிந்துரைக்க வேண்டுகிறார். அவர் நெகிழ்ந்து போய் , தன் குடிகார ,அசிங்கமாக பேசி,துன்புறுத்தும் காதலனால் இரு முறை தற்கொலைக்கு முயன்ற மெக்சிக்க பெண்மணியான "கோநீ டேப்போஸ் "இன் விலாசம் தர, இவர் அங்கு சென்று தன்னால் அவளுக்கு உதவ முடியும் என்று சொல்கிறார்.


அவள் தன் காதலனுக்கு பயந்து இன்னொரு ஆளை நம்ப தயாராக இல்லை.ஆகவே இவரின் உதவி வேண்டாம் என்றும். வீட்டை விட்டு வெளியேறும் படியும் சொல்கிறாள். இவர் விடாப்பிடியாக விசிடிங் கார்டை கொடுத்து விட்டு வருகிறார்.

மேலும் இவர் தன் அண்ணன் பென் தாமஸ் என்னும் பெயர் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி இதயம் மாற்று சிகிச்சைக்கு இதயம் வேண்டி காத்திருக்கும் "எமிலி போசா"என்னும் "hand made" greetings தயாரிப்பாளரை,கண்டுபிடித்து அவர் நல்லவர் என்று உணர்கிறார்.எமிலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கும் போது , அவரின் தோட்டத்திற்கு விதை போட்டு களை எடுக்கிறார். பூக்கள் பூக்கச் செய்கிறார்.அவளின் கிரேட்டேன் ரக உயரமான நாயை நன்கு பராமரித்து நண்பனாகிறார்.அவளின் நின்று போன வருமானத்திற்கு தன்னால் முடிந்த ஏதேனும் செய்ய நினைக்கிறார்.

ஒரு நாள் "கோநீ டேப்போஸ் " இவரின் கைபேசிக்கு அழுத படி போன் செய்து இனி இந்த நரகம் வேண்டாம் என்றும் தன்னை மன்னித்து தனக்கு உதவும் படியும் சொல்ல. இவர் தன் காரையும் அழகிய கடற்க்கரை பங்களாவையும் அவளுக்கு தானமாக எழுதிக் கொடுத்து , அவளின் இரு குழந்தைகளுடன் அங்கு சென்று நிம்மதியாய் இருக்கும் படியும் சொல்லி அனுப்புகிறார். பின்னர் பார்வையற்ற மாட்டிறைச்சி விற்பனையாளன் மற்றும் பகுதி நேர பியாநிஸ்டான "எஸ்ரா டர்னர்" (வூடி ஹாரேல்சொன்)ஐ வெறுப்பேற்றி அவர் நல்லவர் என கண்டுபிடிக்கிறார். 


தன் விழித்திரைகள் அவருக்கு தான் என முடிவெடுக்கிறார். ஒருநாள் வழக்கம் போல சிறுவன் நிகொலசுக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்து விட்டு வலியில் படுத்திருக்க, எமிலி ஆசையுடன் "இரவு விருந்துக்கு அழைக்க, மறுக்காது வருகிறார். அங்கு எமிலி பரிசாக தரும் புத்தாடைகளை அணிகிறார். எமிலி இதய நோயின் காரணமாக அச்சு வேலைகளை நிராகரிக்க , இவர் முன்னமே "எமிலி போசா" வின் 150 வருட பாரம்பரிய கை விசை அச்சு எந்திரத்திற்கு, இவள் எளிதாய் இயக்கும் வண்ணம் மோட்டார் பொருத்தி அதை இயக்கி வாழ்த்து அட்டைகளில் அதே "hand made" தரம் வரச் செய்கிறார். அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து , அதை இயக்கி காட்ட 


மகிழ்ச்சி பிடிபடவில்லை அவளுக்கு. அவள் இவரை மிகுந்த ஆசையுடனும்,ஆனந்த கண்ணீருடனும் படுக்கைக்கு அழைத்துச் செல்கிறாள் . முதலில் தயங்கிய இவர், ஒரு இதய நோயாளி முதிர் கன்னி நல்ல உள்ளம் நோகக் கூடாது என்று அவளை கூடுகிறார். பின்னர் அவளுடன் பேசுகையில் , அவளுக்கு தன் இதய தான பேஜரில் அழைப்பு வரும் என்ற நம்பிக்கை போய் விட்டது,என்றும் தனக்கு வாழும் வரை இவரின் துணை போதும் என்று என்ன என்னவோ கனவுகளை அவருடன் இவள் பகிர , இவர் பதறி துடிக்கிறார். 


நல்ல உள்ளம் கொண்ட இவள் உயிர் வாழ வேண்டும் என அங்கிருந்து கிளம்புகிறார். தன் மோட்டலுக்கு செல்கிறார். தன் அண்ணன் பென் தாமசுக்கு ஒரு கடிதமும் எமிலி , எஸ்ராவுக்கு ஒவ்வொரு கடிதமும் எழுதி வைக்கிறார். குளியல் தொட்டியில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 2 மூட்டை ஐஸ் கட்டிகளை கொட்டுகிறார். தன் உயிர் நண்பன் "dan" ற்கு போன் செய்து "
It's time." என்று கூறி போனை வைக்கிறார். 

பின் எஸ்ராவிற்கு போன் செய்து தான் அவரை வார்த்தைகளால் காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு ,அவருக்கு, விரைவில் விழித்திரை தானத்திற்கு அழைப்பு வரும் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். பின்னர் "911" இற்கு போன் செய்து இங்கு தற்கொலை நடக்கப் போகிறது என்று விலாசம் சொல்கிறார். தொட்டியில் இறங்குகிறார். தன் செல்ல வளர்ப்பு ஜந்துவான ஜெல்லி மீனை தன் மேல் விட்டுக் கொள்கிறார். அது தீண்டியதும் துடித்து உயிர்விடுகிறார். நண்பர் "dan" கதறியபடியே முன்னின்று இதயமாற்று மற்றும் விழித்திரை மாற்று சிகிச்சைகளை நடத்துகிறார். 

சில தினங்கள் கழித்து அவர் அண்ணன் பென் தாமஸ் எமிலி போசாவை சந்தித்து உண்மைகளை விளக்கி டிம் தாமசின் கடிதத்தை கொடுக்கிறார். அதில் நல்ல மனிதரான எஸ்ராவை இவள் மணந்தால் இவர் மகிழ்வேன் என்றிருக்க. ஒரு பியானோ இசை நிகழ்ச்சியில் எமிலி எஸ்ராவை சந்தித்து அவர் விழிகளில் டிம்மின் விழிகளை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறாள். இருவரும் மண வாழ்க்கையில இணைகின்றனர். இதில் நடித்த ஒவ்வொருவரும் அப்படி ஒரு இயல்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.   நம் ரசனைக்கு ஒரே தீனி தான். 


இந்த குழு முன்பே இணைந்து "pursuit of happiness" படம் கொடுத்திருந்தனர். வில்ஸ்மித் மீண்டும் நிரூபித்துவிட்டார். நாமெல்லாம் கருப்பாய் பிறக்கவில்லையே ?என்று ஏங்க வைக்கிறார். இவரின் நடிப்பு அபாரம். எமிலி போசா (rosario dawson)என்னவொரு பெண்மணி?
என்ன ஒரு அழகு ?என்ன ஒரு உடற் மொழி? ஒரு காட்சியில் முகம் அப்படியே தரையில் படுமாறு தொப்பென விழுவார் பாருங்கள்?அப்பா? பார்வை அற்றவராக வந்த "எஸ்ரா டர்னர்"(woody haarelson) he is the man , (இவர் நடித்த natural born killers பார்த்திருக்கிறேன்) என்ன ஒரு தேர்ந்த நடிப்பு. "iam trying to help you sir " என்பாரே பார்க்கணும்? 


அந்த மூதாட்டி மற்றும் அந்த கிரேட்டேன் ரக நாய் என்று நடிப்பு படையலே போட்டு விட்டனர். .செவென் பவுண்ட்ஸ் என்றால் என்ன? செவென் பவுண்ட்ஸ் என்பது அவரின் உடலில் இருந்து தானம் கொடுக்கப்பட்ட அவயங்களின் மொத்த எடையை குறிக்கும்.
-------------------------------------------------------------------------------------------
remarkable phrases
Ben Thomas: It is within my power to drastically change his cirumstances, but I don't want to give that man a gift he doesn't deserve.
Ben Thomas: I haven't treated myself very well.
Emily Posa: Start now.
Ben Thomas: In seven days, God created the world. And in seven seconds, I shattered mine.
Emily Posa: Why do I get the feeling you're doing me a really big favor?
Ben Thomas: Because I get the feeling that you really deserve it.
Dan: [Answering his phone] Hello?
Ben Thomas: [Ben on the other line] It's time.
Ben Thomas: I was planning on dying here.
Larry: Then you'll have to pay in advance!
Ezra Turner: [Last lines] You must be Emily. It's so nice to meet you.
----------------------------------------------------------------------------------
Directed by
Gabriele Muccino
Produced by
Todd Black
Jason Blumenthal
James Lassiter
Will Smith
Steve Tisch
Written by
Grant Nieporte
Starring
Will Smith
Rosario Dawson
Woody Harrelson
Michael Ealy
Barry Pepper
Music by
Angelo Milli
Cinematography
Philippe Le Sourd
Editing by
Hughes Winborne

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.

இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)