ஹோட்டல் ருவாண்டா[ 2004]Hotel Rwanda [யூகே+யூஎஸ் ஏ][15+]

து பல சர்ச்சைகளுக்கு உள்ளான படம். இது ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுத்திருந்தாலும், நடந்த சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல் விட்டுவிட்ட உணர்வே படம் பார்த்த எனக்கு கொடுத்தது!!!, ஏன்? இதை பற்றிய நிறைய கட்டுரைகளை முன்னமே தேடித்தேடி படித்திருந்தமையாலும், இது பார்க்கும் முன்னரே ஜானி மேட் டாக் என்னும்  படம் பார்த்த வியப்பினாலும். சம் டைம்ஸ் இன் ஏப்ரல் என்னும் தொலைக்காட்சி படத்தை பார்த்ததாலும் எனக்கு ஒரு வரலாற்று ஆவணப்படம் கொடுக்கவேண்டிய தாக்கத்தை இப்படம் கொடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே  குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ந்த சம்பவத்தை ஒரு குடும்பத்தின் குடும்பத்தலைவரின் பார்வையில் சுட்டிக்காட்டுவது போல மட்டுமே உள்ளது.படம் தயாரித்தது உலக அண்ணன் அமெரிக்காவும்,இங்கிலாந்தும்,படம் இயக்கியது டெர்ரி ஜார்ஜ் என்னும் அயர்லாந்து இயக்குனர். ஆகவே!! ஏதோ யாருக்கோ பயந்து பயந்தது சொல்ல வந்ததை சொல்லியிருக்கின்றனர்,என்ற எண்ணமே மேலோங்குகிறது .  இதில் காட்டியது எள்ளளவு, நிகழ்ந்ததோ மலையளவு. நாயகன் நாயகி,குழந்தைகள் மற்றும் தோன்றிய மக்கள் அனைவரும் நன்கு நடித்திருந்தனர்.வேறென்ன சொல்ல,சரி உண்மையில் ருவாண்டாவில் அந்த நூறு நாட்கள் என்ன நடந்தது என்று கொஞ்சம் அசைபோட்டு பார்ப்போமா?!!!!


ந்த துத்சி மக்களைப்பற்றி படித்தவுடன் ரொம்ப நாட்கள் தூங்கவில்லை, பார்க்கும் நண்பரிடமெல்லாம் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்கவுமில்லை, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவுமில்லை,என்பது வேறு கதை.!!! இந்த ஹுது என்னும் கொலைகாரர்கள் இன்னும் உயிருடன் தானே உள்ளனர்? என்ற அங்கலாய்ப்பு மட்டும் வருவது நிற்கவில்லை.
கிரிகோரி கயிபண்ட[Grégoire kayipanda]என்ற சண்டாளன், ருவாண்டாவின் முன்னாள் ஹுது இன அரசியல் தலைவன்,நீண்டகாலம் கொழுந்துவிட்டு எரிந்த இனவன்முறைக்கு நெய்யூற்றியவன். 1994 ஆம் ஆண்டு துத்சி இன மக்களுக்கு(கருப்பாக ,உயரமாக ,நீண்ட மூக்குடன் காணப் படுவர்) எதிராக ஹுது இன மக்களை (கருப்பாக ,குள்ளமாக ,சப்பை மூக்குடன் காணப்படும் மக்கள்)தூண்டி விட்டு வெறும் நூறே நாட்களில் சுமார் பத்து லட்சம் பேரை கொன்று குவித்தவன்.
 
னப்படுகொலைக்கான வானொலி சேவையை சிறப்பாய் தொடங்கி நேர்முக வர்ணனையை தொகுத்து வழங்க ஆணையிட்ட கொடூரன், வானொலியில் தொடர்ந்து மூளைச்சலவை செய்தவன்,(எத்தனை துட்சி மக்களை கொன்றாலும் அவர் உடைமைகள் கொன்றவருக்கு சொந்தம் என்று )

கிட்டத்தட்ட மூன்று லட்சம் துத்சி இன பெண்களை 24 மணி நேரமும் இயங்கும் கற்பழிப்பு முகாம்களில்(பள்ளிக்கூடங்கள் மற்றும் சர்ச் தான் முகாம்கள்) வைத்து தீவிரமாக பலபேரால் கற்பழிக்க பட்டு பின் அவளது இடுப்பெலும்பை உடைத்து ,அல்லது கீழ் பாகத்தை சிதைத்து கூழாக்கி மிக குரூரமாக கொலை செய்ய ஆணை இட்ட மாபாதகன் ,

ற்போது ஐநாவின் உபசரிப்பில் விஐபி அந்தஸ்த்து சிறையில் இவனுக்கு ஆயுள் தண்டனையாம், (ஏனென்றால் அன்னாரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் அல்லவா?) முடிவு!!! இப்போது 60 சதம் துத்சி இன மக்கள் உயிருடன் இல்லை,கொன்று குவித்து குதூகளித்த ஹுது இன மக்கள் 1 லட்சம் பேர் போர் கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில்,மீதமுள்ள மக்கள் காட்டில் சரணடைய பிடிக்காமல் இப்போதும் ஐநாவுடன் ஒளிந்து சண்டையிட்டு வாழ்கின்றனர், சம்பவம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆன நிலையில், யாரும் இதை நினைத்து கூட பார்ப்பது கூட அரிதாகிவிட்டது,ஏனென்றால் தனக்கு நடந்தால் விபத்து,பிறர்க்கு நடந்தால் வெறும் செய்தி என்னும் சராசரி மனிதர் தானே நாம்!!!?:(

க்களை கொல்ல உபயோகிக்கப்பட்ட ஆயுதம்-நம்மூரில் மீன்காரர்கள் பயன்படுத்தும் கத்தி போன்றது (சீனத் தயாரிப்பாம்) பெண்களை கற்பழித்த பின் அவளின் உறுப்பை சிதைக்க உபயோகிக்கப்பட்ட ஆயுதம்-நம்மூரில் சக்தி வழிபாட்டுக்கு பயன்படுத்தும் சூலம் போன்றது (சீனத் தயாரிப்பாம்)

து தவிர மெஷின் கண்கள்,ஏவுகனை,பீரங்கிகளை பெல்ஜியம் ,சீனா போன்ற நல்லவர்கள் கொடுத்து உதவினார்களாம். இன்னும் இனப்படுகொலைகள் இலங்கையிலும் ,காசாவிலும் ,செர்பியாவிலும் திபெத்திலும்,துருக்கியிலும் ,மியான்மாரிலும்,லெபனானிலும் தொடர்ந்து வருகின்றது, ஐ நாவும் ,உலக போலீஸ் அமெரிக்காவும் இன்ன பிற முன்னணி நாடுகளும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றன,(எல்லாம் ஆயுத வியாபாரம்,கட்டை பஞ்சாயத்து,பாதுகாப்பு வரி,ஒப்பந்த முறை போர் வீரர் மற்றும் ராணுவ தள வாடங்கள் சப்ளை ,போன்ற மேலதிக காரணங்களால் தான் என சொல்லவும் வேண்டுமா?!!!.)

ஆனால் நாரப்பயல்கள் பதினாறாம் நாள் காரியம் செய்ய மட்டும் சொம்போடு தவறாமல் வந்துவிடுவர் .மேலதிக விபரங்களுக்கு
===========0000============
போருக்கு பின் இன்றைய ருவாண்டா
மிக மோசமான ஒரு இனப்படுகொலையை நடத்திவிட்டு குற்ற உணர்வுடன் வசிக்கும் ஹுடுக்கள் ஜெர்மானியர்களை விட படு கேவலமானவர்கள்  என்பதில் ஐயமே இல்லை,அவர்களை கடந்த 15 வருடங்களாக துத்சிக்கள் ஆளுவது மிகச்சரியே.

துவும் இல்லாமல் பெல்ஜிய நாட்டவர் அங்கு ஆண்ட போதே சில சுத்தம் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட விஷயங்களை விட்டு சென்றுள்ளனர் , அதனால் இன்றைய ருவாண்டா ஐரோப்பிய நாடுகள் போல மிக சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் காணப்படுகிறது.. ஆனால்?!!!

ன வெறியை மட்டும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ப்ரிட்டனும் ஐநாவும்,நெய்யூற்றி தொடர்ந்து வளர்த்துள்ளனர்.அதற்க்கு சாட்சி படம் முழுக்க வானொலியில் தொடர்ந்து கேட்கும், இனவெறிக்கு மூளைச்சலவை செய்யும் ஒரு மாபாதகன் ஜார்ஜெஸ் ரக்கியூ [Georges_Ruggiu ] வின்  கொடூரக் குரல்,இந்த இழிமகன் ஒரு பெல்ஜியன் , இவன் செய்த வானொலி சேவைக்கு சொற்ப தண்டனையாக 12 ஆண்டுகளை முடித்துவிட்டு விரைவில் வெளியில் வரப்போகிறான்.இந்த வேசிமகனை எவனாவது எதாவது செய்ய முடியுமா?!!! இவன் இருப்பது விஐபி அந்தஸ்து சிறையே!!!.அங்கே இவனுக்கு மது முதல் மாது வரை பெல்ஜிய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது எனப்படித்தபின்னர், போர்கைதிகளாக பிடிபடுவர்களை உடனே பின்னந்தலையில்  சுட்டுக்கொல்வது எவ்வளவு சரி?!! என உணர்ந்தேன்.சல்லிப்பயல்,முடிந்தால் இவன் போட்டோவிலாவது துப்பிவிட்டு போகவும்.
===========0000============
ஹோட்டல் ருவாண்டா திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-


சம்டைம்ஸ் இன் ஏப்ரல் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-




ஜானி மேட் டாக்  திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-




நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி விக்கிபீடியா,நன்றி கூகுள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)