
1984ஆம் ஆண்டில் டிசெம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவில் வெடித்த யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பாய்லரில் இருந்து வெளிப்பட்ட மெத்தில் ஐசோசயனைடு (எம் ஐ சி ) methyl isocyanate (MIC) வாயு காற்றில் கலந்து இந்த கொடிய பேரழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட அரசின் அதிகாரபூர்வமான இறப்பு 2,259 பேர்களாம்.
முதல் கட்டமான இறப்பு விகிதம் புயல் வேகத்தில் உயர்ந்து 72மணி நேரத்தில் 10000 ஆக உயர்ந்ததாம் இது ஊடகங்களில் வந்த செய்தி. மத்திய பிரதேச அரசு வழக்கம் போல சுணக்கத்துடன் செயல் பட்டு இறுதியாய் கணக்கு காட்டியது வெறும் 3,787 இறப்புகளாம் . இதில் என்ன ஒரு துயரம் என்றால்?மருத்துவமனைகளில் இறப்பு சான்றிதழ் தராததாலும் அரசு அவசர அவசரமாக அனாதை பிணங்களை ஒன்றாக கொட்டி சவ அடக்கம் செய்ததாலும் 10000 பேர்களுக்கும் மேலான இறந்தோர் பெயர்கள் கணக்கிலேயே வரவில்லை என்பது வருத்தமான உண்மை.
இரண்டாம் கட்டமாக இறப்பு விகிதம் இதுவரை 25000 மேல் என்கின்றன ஊடகங்கள். இவர்கள் அனைவரும் விஷவாயு தாக்கி அதன் பக்கவிளைவுகளால் பீடிக்கப்பட்டு இதுவரை அற்ப ஆயுளில் உயிர்விட்டவர்கள். 40000 பேர்களுக்கும் மேலாக உடல் ஊனம். மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களாம்.


உலகின் எந்த மூலையிலாவது இது போல பேரழிவை நிகழ்த்திவிட்டு தப்பிக்க முடியுமா? பாதிக்கப்பட்ட 521,000 பேர்களுக்கு கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் கிடைத்த இழப்பீடு எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? தலைக்கு வெறும் 500 டாலர்கள் பிச்சைக்காசு (சுமார் 23000ரூபாய்) இதை வைத்து போன உயிரை திரும்பப் பெறமுடியுமா? இழந்த பார்வை கிடைக்குமா? செயழிழந்த உடல் அங்கங்கள் செயல் பெறுமா ? புற்று நோயால் பீடிக்கப்பட்டவர் ,குணமடைவரா? 20 வயதிலும் பூப்பெய்தாமல் போன இளம் பெண்கள் பூப்பெய்துவரா? கருப்பை கோளாறுகளை பிறப்பிலேயே கொண்ட 20 களிலுள்ள பெண்கள் தாய்மை அடைவரா? இழந்த சுகாதாரம், நல்ல சுற்றுச்சுழல் திரும்பவருமா? நிச்சயம் வரவே வராது.
முன்பே இதைப்பற்றி மேலோட்டமாக படித்திருந்தாலும் , விரிவாய் தெரிந்துகொள்ள உதவியது குரல் வலை என்னும் வலைதளம் தான், இதில் வெளிவந்த யார் முழித்திருக்கப் போகிறார்கள்? என்னும் தொடரின் 9 பாகங்களும் அந்த 1984 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கே உங்களை கைபிடித்து கூட்டிச்சென்று நடந்ததை நீயும் பார் என காட்டி உருக வைக்கும்.
அதை நீங்களும் படித்து பல உண்மைகளை உணருங்கள். விஷவாயுவின் கோரப்பிடியால் பலியான அப்பாவி உயிர்களுக்கு இந்த தருணத்தில்அஞ்சலி செலுத்துவோம், நம் குடியிருப்புப் பகுதியில் எதேனும் இடர் விளைவிக்கும் நிறுவனம் இருந்து,சமூக நிறுவனங்கள் அதை எதிர்த்து போராடுமே ஆனால் அதில் நாமும் முடிந்தவரை பங்கெடுத்துக்கொள்வோம். இனியொரு விஷவாயு தாக்குதல் தவிர்ப்போம்.

போபால் விஷவாயு பேரழிவு-மரித்த உயிர்களுக்கு 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவோம், இது பற்றிய மேலதிக தகவலகள் தெரிந்தால் மூத்த பதிவர்கள் நினைவு கூர்ந்து பின்னூட்ட்மிடுங்கள். அப்போது எனக்கு ஐந்து வயது. நாங்களும் அதை நன்கு உணர ஏதுவாய் இருக்கும்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
//////////////////////////////////////////////////
இது தொடர்பான பதிவர் ஜோதியின் சிறப்பான பதிவு -
இது தொடர்பான பதிவர் zero to infinity ன் சிறப்பான ஆங்கில பதிவு:-
இது தொடர்பான பதிவர் மணற்கேணியின் சிறப்பான பதிவு:-
இது தொடர்பான பதிவர் அதியமானின் சிறப்பான பதிவு:-
மேற்கண்ட அனைத்து பதிவுகளையும் தவறாமல் படித்து வாக்களித்து பின்னூட்டமிட்டு இந்த நினைவஞ்சலியில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.
===============
நம் நாட்டின் நீதியரசர்கள் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை,ஒவ்வொருவனுக்கும் ஆழ்மனதில் பழிவாங்கும் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்,சிலர் அதை தட்டி எழுப்பி இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கிவிடுவர்,பலர் இந்த உலக மகா நீதியரசர்களை நம்பி 26 வருடம் காத்திருப்பர்,இந்த கொலை பாதகத்தை ஒருவன் இஸ்ரேலில்
நிகழ்த்தியிருந்தால் கொலைகாரர்கள் எங்கே போய் பதுங்கினாலும் முனிக் படத்தில் வருவது போல அவனை தேடிப்போய் கருவருத்திருக்கும்.இது பாரத தேசமாயிற்றே!ஃப்ரீ கண்ட்ரி ஃபார் ஆல் சார்ட் ஆஃப் க்ரைம்.பெஸ் ஆஃப் லக்,கரப்டட் கார்பொரேட்ஸ்.
=========
இதையும் வலியுடன் படித்து விடுங்கள்,என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.