இயக்குனர் கே.பாலசந்தரின் சிக்னேச்சர் படங்கள் வரிசையாக பார்த்து வந்தேன்,அதில் அக்னிசாட்சி குறிப்பிடத்தக்க படைப்பு,அவரின் ஏனைய படங்களைப் போலவே அக்னிசாட்சி படமும் 2002ல் வரவேண்டிய படைப்பு, 20 வருடம் முன்பாக 1982ல் வந்த தமிழின் மிகப் புதுமையான முயற்சி, படத்தில் மையப் பாத்திரமான கண்ணம்மா [சரிதா] தன் இளம் பிராயத்தில் பார்த்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால், இலேசான மனநோயால் பீடிக்கப்படுகிறார், ஆண்களை, சுற்றத்தாரை வெறுக்கிறார்,
அப்படிப்பட்டவர் சிவகுமாரின் நவீன கண்ணகி நாடகத்துக்கு சென்றவர் ,அவரின் பெண்களின் மீதான மதிப்பை,நம்பிக்கையை கண்டு மெச்சி காதலுறுகிறார்,சிவகுமாரும் படபடவென மழைபோல வந்து விழும் கண்ணம்மாவின் கவிதைகளைக் கண்டு அவர் மேல் மையலுறுகிறார். கண்ணம்மா புனையும் கவிதைகளை வாலியின் பொய்க்கால் குதிரை என்னும் தொகுப்பில் இருந்து இயக்குனர் எடுத்தாண்டிருக்கிறார்,அதற்கு க்ரெடிட்டும் தரப்பட்டுள்ளது,எம்.எஸ்.விஸ்வநாதன் அக்கவிதைகளுக்கு பாடல் வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறார்,ஆனால் அது அத்தனை சோபிக்கவில்லை.
கண்ணம்மாவின் பாத்திரம் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலான பாத்திரம் அதை மிக லாவகமாக கையாண்டிருந்தார்,அதில் இன்றைய நடிகைகள் யாரையுமே பொருத்திப் பார்க்க சகிக்கவில்லை, அதை நிச்சயம் அரைலூசு கதாபாத்திரமாக ஆக்கிவிட்டிருப்பர். படம் A சர்டிஃபிகேட்டை கொண்டிருந்தாலும், படத்தில் எந்த ஆபாசமோ,விரசமோ,கெட்ட வார்த்தைகளோ கிடையாது, ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல இன்று கூட எந்த ஒரு சினிமா இயக்குனரும் வைக்க யோசிக்கும் ஒரு சிசு வன்முறை உண்டு,
அதனால் தான் அந்த Aசர்டிஃபிகேட் எனப் புரிந்தது,[மன உறுதி குன்றியோர் பார்க்க வேண்டாம்] இப்படத்தை நான் எந்த டிவியிலும் ஒளிபரப்பி பார்த்ததில்லை, ஆனால் அந்த கனாக்காணும் கண்கள் மெல்ல பாடல் மட்டும் நிறைய ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகளில் பார்த்ததுண்டு, ரேடியோவில் இன்னொரு அருமையான பாடலான அடியே கண்ணம்மாவும் நிறைய கேட்டதுண்டு, மன்மதலீலை படத்தில் கமல்ஹாசனின் கிளார்க்காக வரும் பாலக்காடு அய்யர் [அவர் பெயர் மன்மதலீலையில் போடாததால் தெரியவில்லை]ஆனால் இதில் ஹரிஹர சுப்ரமணியம் என்று பெயர் போடுகின்றனர். அவர் தான் சரிதாவின் அப்பா,
இவர் சென்னை வானொலியின் நிலைய வித்வான், வாயை திறந்தாலே கர்நாடக சங்கீதம் தான்,முதன் முதலாக சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கச்சேரி செய்யப்போகையில் இவர் சாணி கலரில் ஜிப்பாவை இஸ்திரி செய்வார்,அவர் மனைவி நகைக்க,சாணி கலர் தான் தொலைக்காட்சி கேமராவில் எடுப்பாய் காட்டும் என்பாரே பார்க்கணும், புக்ககத்தில் மாமியார் நாத்தனார் சண்டையால் சோர்வுற்று பிறந்தகம் வந்த மகளுக்க்காக இவர் பாடும் ஓடி விளையாடு பாப்பா என்னும் பாரதியார் பாடல் மிக நெகிழ்ச்சியான ஒன்று.பாரதியின் கண்ணம்மா நினைவாகத்தான் இவர் மகளுக்கும் கண்ணம்மா என பெயரிட்டிருப்பார்.
பூர்ணம் விஸ்வநாதன் அருமையான நடிகர்,இதில் இவருக்கு சரிதாவின் மாமனார் வேடம், மனைவி[S.R. சிவகாமி]க்கு பயந்த வேடம் நாத்தனாராக [k.s.ஜெயலட்சுமி ] இவர்கள் இருவரும் சேர்ந்து சரிதாவை கவுண்டர் அட்டாக் செய்யும் இடங்கள் எல்லாம் சான்சே இல்லை,படத்தில் சிவகுமார் வயிற்றை பந்தாய் உருட்டி யோகாசனம் செய்யும் ஒரு காட்சியையும் லாவகமாக வைத்திருந்தார் இயக்குனர்,தவிர சிவகுமார் இதில் ஒரு கண்டெம்பொரரி ஸ்டேஜ் ஆர்டிஸ்ட்,இவர் நடன இயக்கம் செய்ய வேண்டி வந்தாலும் இயக்குனர் இவருக்கு நடனம் வராது என நினைத்தாரோ ? என்னவோ,ஒரு நடன அசைவு கூட கிடையாது.
ஆனால் இதில் மிகவும் புதுமையாக அப்ஸ்ட்ராக்ட் நிழல் நடனங்களை புகுத்தியிருந்தார். மேலும் 1982ஆம் ஆண்டில், ஒட்டு போட்டதே தெரியாமல், சரிதாவின் 10 அடி உயர ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோவை டெவலப் செய்து வீட்டுக்குள்ளே, வால் பேப்பராக ஒட்டியிருந்தார்.
அடியே கண்ணம்மா பாடலில் சிவகுமார் ஒரு நிகான் எஸ் எல் ஆர் கேமராவை மாட்டிக்கொண்டு நடப்பார், ஓடுவார், [ஆனால் ஆடமாட்டார்] சரிதா உச்சரிக்கும் பாதி வசனங்கள் கவிதையாகவே இருக்கின்றன, இவையெல்லாமே படத்தில் புதுமை, இதில் அருமையான வேடம் சிவகுமாருக்கு, இப்படி ஒரு மாயப்பிறவியை இவர் தலையில் கட்டி வைத்து விட்டனரே!!! என நம்மிடம் பரிதாபத்தை அள்ளுகிறார் மனிதர்,வழக்கம் போலவே அடித்தொண்டையில் ஆத்தி ஆத்தி வசனம் பேசினாலும் மனிதர் அருமையான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கிறார்.
இவர் நிஜ வாழ்வில் ஒழுக்க சீலர் என்று சொன்னாலும், திரையில் நடிகைகளுடன் சரசம் செய்வதில் கில்லாடி,இதிலும் சரிதா தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆசை முத்தம் தர எண்ணியவர்,முத்தத்தை இவருக்கு நெக்குருகி தர, மனிதர் கிறங்கி முத்தம் வாங்கியவர்,அதை சிதறாமல் கண்ணம்மாவின் வயிற்றிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறார்,
படம் இது கொண்டிருக்கும் புதுமைகளுக்காகவும், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பிற்காகவும் அவசியம் பார்க்க வேண்டிய படமாகிறது, படத்தில் முதல் ரீலில் வரும் நவீன கண்ணகி பாடல் முடிந்தவுடனே நடிகர் கமல்ஹாசன்,சிவகுமாரின் நாடகத்தை வாழ்த்தி காமெடியாக பேசிவிட்டுப் போகிறார்,இவர் [நன்றிக்] கடனே என நடித்தது புரிந்தது.ஆனால் ரஜினி தன்குரு கேட்டதற்கிணங்க ஒரு நீண்ட காட்சியில் தோன்றி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆனால் இயக்குனர் பாலச்சந்தருக்கு கமலைத் தானே மிகவும் பிடிக்கும்?.
அக்னி
சாட்சி படத்தில் வரும் ரகளையான காட்சி இது,
சரிதா ஒரு வகையான மனநோயை
கொண்டிருப்பவர்,அவரை குணப்படுத்த டாக்டர் சாருஹாசன் திரைப்படங்களுக்கு
கூட்டிச்செல்ல அறிவுறுத்த,கணவர் சிவகுமார் போயும் போயும் ’’அவர்கள்’’ படத்துக்கா கூட்டிப் போக வேண்டும்?
அங்கே வைத்து வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது,சுஜாதாவை ரஜினிகாந்த் வார்த்தையாலே சாகடித்து விடுதலை பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் காட்சியில் சரிதா மிகவும் கொதித்தவர்,பின்னால் திரும்பி கூட்டத்தை பார்க்க எல்லார் வாயிலும் பிளாஸ்திரி[என்ன ஒரு சிம்பாலிசம்?] இன்னும் கொதிப்படைந்தவர் ஸ்க்ரீனை நோக்கி டேய் ராமநாதா என கத்துகிறார்.அங்கேயே சிவகுமாரின் மானம் மரியாதை போகிறது.
அன்று இரவே மிகவும் பினாத்தியவர்,போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினியின் வீட்டு கூர்க்காவை சத்தம் போடுகிறார் , ரஜினி நடுராத்திரியில் என்ன குழப்பம் என மாடியில் இருந்து எட்டிப்பார்க்க,ஒரு பெண் சண்டை பிடிப்பதைப் பார்த்து சரிதாவை மேலே அனுப்பச் சொல்கிறார்.அங்கே மேலே சென்றவர், நீ ரொம்ப கெட்டவன் ,உன் மனைவி அனுவுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா?என்று குய்யோ முறையோ என சரிதா ஆரம்பிக்க,ரஜினி வெலவெலக்கிறார்,அவர் என்ன சொல்லியும் கேட்கிறார் போல இல்லை கண்ணம்மா,செம காட்சி அது,
கணவர் சிவகுமார் சரியாக கணக்கு போட்டு அங்கே வந்தும் விடுகிறார்,ரஜினியிடம் மன்னிப்பு கேட்கிறார்,ரஜினி நிலைமையை புரிந்து கொண்டு ’’அவர்கள்’’ படம் பார்த்தீர்களா?[முடில,என குரு பாலச்சந்தரை கருவுகிறார். ]சிவகுமார் கண்ணம்மாவை அழைத்துப்போக,ரஜினி மனசு கேட்காமல் தன் கர்ப்பிணி மனைவி லதாவை அங்கே வரவழைத்து,இங்கே பாருங்கம்மா,நான் ராமநாதன் இல்லே,நான் ரஜினிகாந்த் , இது என் மனைவி லதா,என புளி போட்டு விளக்குகிறார்.
மிக அருமையான காட்சி அது.பாலசந்தர் தன் படங்களில் இப்படி திரைப்பிரபலங்களை தோன்ற வைப்பதில் ஜித்தர்,இப்படித்தான் அபூர்வ ராகங்கள் படத்தில் கவிஞர் கண்ணதாசனுக்கு சூரி,[நாகேஷ்] வைத்தியம் பார்க்க செல்வார்,அங்கேயிருந்து ஸ்ரீவித்யாவிற்கு போன் செய்து கவிஞரிடம் ரிசீவரை தந்து,சூரியை ரொம்ப பிடிக்கும் என சொல்ல சொல்லுவார்,கவிஞரோ எனக்கு சூரியை ரொம்ப பிடிக்கும்,குரங்கையும் ரொம்ப பிடிக்கும் என சிக்ஸர் அடிப்பார்,அதையும் தேடிப்பாருங்கள்