காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஹேராம் | காந்தி ஸ்மிரிதி வளாகம்

ஹேராம்  படப்பிடிப்பை நடத்த பிர்லா ஹவுஸ் என்ற காந்தி ஸ்மிரிதி வளாகத்தில் படக்குழுவுக்கு அனுமதி கிடைத்து விட்டது என்றாலும் , அதில் 1948 ஆம் ஆண்டிற்குப் பின் அமைக்கப்பட்ட அஸ்தி மண்டபம், காந்தியின் பாதச் சுவடு வார்ப்புகள் ஆகியவை கடந்த கால காட்சிகளை எடுக்க தடையாக இருந்தது, 

மேலும் படக்குழுவை அவசர அவசரமாக பணி செய்ய முடியாதபடி ஜீலை மாத 45டிகிரி கொடிய வெயில் வேறு, எப்போதும் படக்குழுவின் நலனைக் கருத்தில் கொள்ளும் இயக்குனர் கமல்ஹாசன் சற்றும் தாமதியாமல் Production Director சாபுசிரிலைக் கொண்டு ஊட்டியில் அதே போன்ற பிர்லா ஹவுஸை நிர்மானித்தும் விட்டார்,

 சுமார் 300 பேர் மொத்தம் பிரதான நடிகர்கள், துணை நடிகர்கள், தொழிற்நுட்பக்  கலைஞர்கள் என்று, அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை நடத்த முடியாத படிக்கு 150 பேருக்கு குளிர் ஜுரம் பிடித்து விட்டதாம், அவர்களுக்கு தொடர் சிகிச்சைகள்,சிருஷைகள், மருந்து மாத்திரை ஊசிகள் என சுமார் ஆறுநாட்கள் கால தாமதமாகியதாம், 

பின்னர் படக்குழு ஒருவழியாக படப்பிடிப்பை துவக்கினால் ஊட்டியில் கடும் மழை பீடித்ததாம் , கேமரா நனையாமல் காபந்து செய்து எடுக்கப்பட்ட காட்சிகளைத்தான் நாம் பார்த்தோம்,பிரம்மப் பிரயத்தனப்பட்டு தான் இந்த பிர்லா ஹவுஸ் படப்படிப்பை நடத்தி முடித்தார்.

அதில் ஒரு perfection ஐ கவனித்தேன், பிர்லா ஹவுஸ் இன்று காந்தி ஸ்மிரிதி ஆகிவிட்டது, பழைய முகவரி #5, Albuquerque Road, 

புதிய சாலையின் பெயர் தீஸ் ஜனவரி சாலை  (Teez January Road ) என்று மாறிவிட்டது அதாவது 30 ஜனவரி (காந்தி கொல்லப்பட்ட நாள் ), 

இந்த "ஜனவரி 30" என்று செக்யூரிட்டி கூடாரத்தின் உள் இருக்கும் pears soap 1948 ஆம் ஆண்டு வெளியிட்ட காலண்டர் காட்டும், அதை focus செய்து fade செய்திருப்பார்.

இப்படத்தில் அழகாக பழைய சாலையின் பெயர் பலகையை நொடியில் கடக்கிற ஒரு காட்சியில் மிகத் துல்லியமாக வைத்திருக்கிறார் பாருங்கள், இன்று எதையும் எளிதாக தேடி எடுத்து விட முடிகிறது, அன்று இத் தகவல்களை தேடி எடுக்க ஒருவர் பிரம்ம பிரயத்தனப் பட வேண்டும்.

வரலாற்றை திரிப்பது மிக எளிது, அதை இப்படி டிகிரி  சுத்தமான  perfection ல் காட்டுவது மிக மிக கடினம்.

ஹேராம் படம் எடுக்கையில் நீளம் ஆறு மணி நேரம் வந்துள்ளது, அதை எடிட்டிங்கில் பாதியாக குறைத்துள்ளனர், எவ்வளவு உழைப்பு எவ்வளவு தகவல்கள் அந்த வெட்டப்பட்ட  மூன்று மணி நேரத்தில் போயிருக்கும்?!

PS: கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது இது
Q: In which locations did you shoot the movie?
A: Delhi, Calcutta, Chennai and Ooty. In Ooty we recreated the Birla House by erecting a set which exactly resembles the Birla House (Art director Sabu Cyril). In July, Delhi is too hot so we opted for erecting a set in Ooty. Likewise we recreated the Calcutta streets in the airconditioned studio floors in Chennai.

#ஹேராம், #கமல்ஹாசன்,#heyram, #kamalhaasan, #birla_house,#gandhi_smriti

ஹேராம் | Direct Action Day


ஹேராம் படத்தில் நாம் பார்த்த direct action day சம்பவங்கள் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டது,அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  இந்திய தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைந்த இந்திய நாடு கேட்டனர், முஸ்லிம் லீக் கட்சியோ வடகிழக்கிலும்,வடமேற்கிலும் என இரு பிரிவினை பிரதேசங்கள் தங்களுக்குக் கேட்டனர்,

ஆங்கிலேய அரசுடனான  கடைசிக் கட்ட உடன்படிக்கை பேச்சு வார்த்தையில் சுதந்திர இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் கூட்டாட்சியை ஏற்படுத்தி விட்டு அவர்களிடம் நாட்டை கொடுக்கலாம் என்று தீர்மானம் ஆனது,

இதை எதிர்த்து ஜின்னாவின் முஸ்லிம் லீக் நாடு முழுக்க பந்த் அறிவித்தது, இஸ்லாமியர்கள் தங்கள் பலத்தை நிரூபனம் செய்யவேண்டும் என்பதே குறிக்கோள்,  வங்கத்தில் அன்று ஆட்சியில் இருந்தது முஸ்லீம் லீக் கட்சி,அக்கட்சி பத்து வருடங்களாக ஆண்டு கொண்டிருந்தது, அங்கே போலீசார், மாஜிஸ்த்ரேட்கள்  என பெரும்பான்மையினர் இஸ்லாமியர், அதன் வங்காள ப்ரீமியர் சுஹ்ராவர்தி ஒரு நிரூபனமான பிரிவினைவாதி, 

அவர்  ஆங்கிலேய ஆட்சியரிடம் பந்த் அன்று முழு விடுமுறை அறிவிக்க கேட்டு ஆங்கிலேய கவர்னரை அழுத்தம் தர, அதன்படியே விடுமுறை அறிவிக்கப்பட்டு கடைகள் முழுக்க அடைக்கப்பட்டன, அன்று பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுஹ்ராவர்தி மற்றும் பிற தலைவர்களின் பேச்சு பிரிவினையைத் தூண்டுவதாக அமைந்தது,இரும்புத் தடி ,மூங்கில் கழி என தருவிக்கப்பட்டு பாமர மக்களுக்கு வழங்கப்பட்டு நம் கை ஓங்கியிருந்தால் தான் தனி நாடு என்ற பிரிவினைவாத மூளைச் சலவையும் நடந்தது, 

தவிர போலீஸ் கன்ட்ரோல் ரூமில் எப்போதும் குடியிருக்கும் வழக்கம் கொண்ட சுஹ்ராவர்த்தி , ரேடியோ ரிசீவர் வழியாக போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தாராம், அதனால் தான் அவரை butcher of Bengal என்றே இன்றும் அழைக்கின்றனர்.
இப்படம் நடந்த வரலாற்றை தான் காட்டியது,ஆகஸ்ட் 16 ஆம் தேதி முழுக்க இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டால் ,ஆகஸ்ட் 17,18 ஆம் தேதி அவர்களுக்கு பதிலடி தருவதற்கு இந்து பிரிவினைவாதிகள்,சீக்கிய பிரிவினைவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர், ஒரு வாரம் வரை பிணங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவேயில்லை,

வன்முறை காட்டுத்தீயாக நவகாளி உள்ளிட்ட பக்கத்து நகரங்களுக்கு பரவிவிட்டது, கங்கையில் இருந்து பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டம் கூட்டமாக கல்கத்தாவில் தஞ்சம் அடைந்து வீதியில் இரைந்து  கிடந்த பிணங்களை சதா கொத்திக் கொண்டிருந்தன,இதை அமெரிக்க பத்திரிக்கையான Life பத்திரிக்கை புகைப்படக்கலைஞர் எடுத்துத் தள்ளிய படங்களில் இருந்து அறியலாம்.

இந்த நீண்ட Post Direct Action Day காட்சியை எடுப்பதற்கு இயக்குனர் கமல்ஹாசன் தேடிப் படித்த நடுநிலையான புத்தகங்கள் எண்ணிலடங்காதது, 

direct action day கழிந்து ஒரு வருடத்துக்குப் பின் படத்தின் ஒரு காட்சியில் வங்காள மக்களுடன்  சாகேத்ராம் சேர்ந்து கொண்டு வங்காள ப்ரீமியர் வசிக்கும் மாளிகையை முற்றுகை இடுவார்,அங்கே காந்தி பக்ரீத் பண்டிகை சமயத்தில் சமாதானம் மதநல்லிணக்கத்திற்கு வேண்டி வந்து தங்கியிருப்பார்  , 

பால்கனியில் சன்னலைத் திறந்து பெங்கால் ப்ரீமியர் சுஹ்ராவர்தியுடன் காந்தியும் தோன்றுவார்,

நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என பேசுவார்.

அப்போது சாகேத்ராம் சென்ற வருடம் நடந்த direct action day  படுகொலைக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா? என ஆத்திரத்துடன் நேரடியாகக் கேட்பார், கூட்டம் ஆமோதிக்கும்.

காந்தி முன்னிலையில் சுஹ்ராவர்தி அந்த துயர சம்பவத்துக்கு எச்சில் விழுங்கிய படி முழுப் பொறுப்பேற்பதாக அறிவிப்பார், காந்தி சுஹ்ராவர்தியை வேதனையுடன் பார்ப்பார்,மக்களைப் பார்த்து இன்னும் என்ன வேண்டும் என சைகை செய்வார்,அதைக் கேட்டு அதுவரை  ஒழிக  என்று சொன்ன கூட்டம் ,வாழ்க என்று சொல்லிவிட்டு கலையும்,.

அங்கே மறுபடியும் அப்யங்கரும் சாகேத்ராமும் சந்திப்பார்கள், அவர் போலீஸ் தேடுகையில் தப்பிச் சென்றதால் பத்து மாதங்கள் சந்தேக வழக்கில் சிறையில் இருந்ததாகவும் ஒன்றும் நிரூபிக்க முடியாததால் சிறை மீண்டதாகவும் சொல்வார்,

படத்தில் வங்காள ப்ரீமியர்  சுஹ்ராவர்த்தியை சாகேத்ராம் சந்திக்கும்  மூன்று கதாபாத்திரங்கள் குற்றம் சாட்டுவர், நொடியில் அவை வசனங்களாக கடக்கும் 

சாகேத்ராம் பயணிக்கும்  கல்கத்தா டாக்சி டிரைவர்,

சாகேத்ராம் வசிக்கும் நீல்கமல் மேன்சனில் வசிக்கும் வயதான தம்பதியரில் அந்த முதிய பெண்மணி

சாகேத் ராம் காப்பாற்றும் சீக்கிய வீட்டுப் பெண் வீட்டில் இருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு இவர் பேசுகையில் அங்கே போனில் எதிர்புறம்  பேசும் ஆங்கிலேய போலீஸ் ஆணையர்,

17 August 1947 Direct Action Day ன் மறுநாள் கல்கத்தா வீதிகளில் எங்கும் முன் இரவு கலவரத்தால் இறந்தவர்கள் பிணங்களின் குவியல், நொடியில் கடக்கும் காட்சிகள் தானே என்று இக்காட்சிகளில் எந்த சிறு  மெத்தனமும் காட்டப்படவில்லை,

ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா அது பாட்டிற்கு அலையும்,அது சுழலும் 360 டிகிரியிலும் detailகளால் அக்காட்சி நிரம்பியிருக்கும், முதல் நாள் நர வேட்டையின் போது எதிர்ப்பட்ட ஸ்ரீராம் அப்யங்கர் தான் edit செய்வதாக சொல்லித் தந்த bharath publications தினசரி அலுவலகத்தைத் தேடி சாகேத்ராம் வருகிற காட்சி இது,

ஒரு வங்காளக் குடும்பம்  தன் காணாமல் போன உறவினரை வீதியில் வரிசையாக கிடத்தப்பட்ட பிணக்குவியல்களில் தேடும், அங்கே தென்படாமல் போக பிணங்களை வாரிப்போட்டுக்கொண்டு கடக்கும் ஒரு ட்ரக்கின் பின்னால் உள்ள பிணக் குவியல்களில் தேடும்,

அங்கே பாகன் வயிற்றில் கத்தியால் குத்தி குடல்கள் வெளியேறியிருக்க, கையில்  அங்குசத்துடன் பிணமான பாகன், அனாதையான யானை,

அங்கே ஒரு நாய் பசியில் அலைந்து திரியும், பசியால் நரமாமிசம் சாப்பிட பழகியிருக்கும், வானம் முழுக்க பிணம் தின்னிக் கழுகுகள் வட்டமிடத் துவங்கும், அங்கே விளக்கு கம்பத்தில் ஒருவரை தூக்கில் ஏற்றிக் கொன்றிருப்பார்கள், அப்யங்கர் இவரை மாடிபடிப்பக்கம் கண்டவர் , என்னையா தேடுகிறாய் ? என்பார், 

ஆம் என்றவரை கைபிடித்து அழைத்துக் கொண்டு  தப்புகையில் , நீ ஏன் குளித்து உடை மாறவில்லை? என ரத்தக்கறை படிந்த சட்டையைப் பார்த்தவர் வங்காளத்தில் கேட்க, இவர் கற்றுக் கொண்டிருக்கும் புதிய மொழி ஆதலால் பதில் திணறி தமிழில் பதிலுரைப்பார், இது அத்தனையையும் தன்னிச்சையாக செய்வார், 

அப்போது தான் அப்யங்கர் தமிழா? நானும் தமிழ் தான்,தஞ்சாவூர் மராட்டா என்பார்,அங்கே காரிடாரில் ஒரு பிணம் தொங்கும் ,அங்கே தூண்களில் ஃபேன்ஸி ட்ரெஸ் விளம்பரம், கோல்ட் ஃபில்டர் சிகரட் விளம்பரம், கைரிக்‌ஷாக்கள்,தீ அணைக்க மாநகராட்சி நிறுவிய் fire hydrantகள், 

shell பெட்ரோல் kiosk என முடிந்தவரை detail களால் நிரப்பி 
ஒரு இயக்குனராக கமல்ஹாசன் இந்தக் காட்சிக்கு எப்படி நீதி செய்திருக்கிறார்?, எப்படி தொழிற்நுட்ப கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார்? பாருங்கள் , பிரமிப்பு மிஞ்சுகிறது,

PS: ஹேராம் படத்திற்கு கமல்ஹாசன் சம்பளம் எடுத்துக் கொள்ளாமல் மொத்தம் 16 கோடிகள் ஆகியுள்ளது , அதாவது அசல் 16 கோடிகள் ,இது பற்றி ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் இங்கே.
Q: How much are you pumping into the project?
A: As of now, without my remuneration (smiles) we've budgeted the project at Rs. 16 crores.

#ஹேராம்,#கல்கத்தா,#கமல்ஹாசன்,#heyram,#kamalhaasan,#சுஹ்ராவர்தி,#The_Vultures_of_Calcutta
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)